புதன், 8 மார்ச், 2017

காலதாமதமாக திருமணம் செய்துகொள்வது யோக வாழ்க்கையை வழங்குமா ?


பொதுவாக சுய ஜாதகத்தில் காலதாமத திருமணம் பரிந்துரை செய்யும் சூழல் லட்சத்தில் ஒன்று அல்லது இரண்டு வரக்கூடும் அதற்க்கு காரணம் ஜாதகருக்கோ, ஜாதகிக்கோ சுய ஜாதகத்தில் 2,5,7,8,12ம் பாவகங்கள் அனைத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டு, நடைபெறும் திசாபுத்திகள் பாதிக்கப்பட்ட பாவக பலனை ஏற்று நடத்திக்கொண்டு இருக்கும் பொழுது, சம்பந்தப்பட்ட ஜாதகரோ, ஜாதகியோ திருமணத்திற்கு உண்டான முயற்சிகளை மேற்கொள்ளும் பொழுது, திருமணம் அமையாது, வீண் விரையம் மற்றும் மனஉளைச்சல்தான் அதிகரிக்கும், ஆனால் சுய ஜாதகத்தில் மேற்கண்ட பாவகங்கள் நல்ல வலிமையுடன் இருந்து, ஜாதகரை தாமத திருமணத்திற்கு பரிந்துரை செய்வது என்பது முற்றிலும் தவறான அணுகுமுறை, ஏனெனில் சுய ஜாதகத்தில் மேற்கண்ட பாவகங்கள் வலிமை பெற்று இருக்கும் பொழுதும், தற்போழுது நடைமுறையில் உள்ள திசை புத்தி வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் பொழுதும், ஜாதகருக்கு சரியான பருவ வயதில் திருமணம் கூடி வரும், இதை உணர்ந்து சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு திருமணம் செய்து வைப்பதே உகந்த நடைமுறையாகும், ஒருவேளை சில விஷயங்களை காரணம் கூறி திருமண வாழ்க்கையை தள்ளிப்போடுவது, விரும்பத்தகாத உறவுகளை உருவாக்கி விடும், ஏனெனில் காலமும் நேரமும் எவருக்கும்  காத்து இருக்காது.

( பொதுவாக தொழில்,வீடு,வசதி,வாய்ப்புகள், வண்டி வாகனம், சொத்து, நிலம், பொருளாதார விஷயங்களை நாம் எந்த வயதிலும் சம்பாதித்து கொள்ள இயலும், ஆனால் திருமணம் என்பது பருவ வயதில் செய்துகொள்வதே உகந்தது, இந்த விஷயத்தில் தாமதம் செய்ய செய்ய நிச்சயமாக சுய ஜாதகத்தில் உள்ள அனைத்து யோகங்களும் பாழ்படும். )

சுய ஜாதகத்தில் 2,5,7,8,12ம் பாவகங்கள் அனைத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தால் மட்டுமே சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு கால தாமதத்தை பரிந்துரை செய்ய வேண்டும், மேற்கண்ட பாவகங்கள் பாதிக்கப்பட்டு இருந்தாலும், திருமணத்திற்கு உகந்த வயதில் நடைபெறும் திசாபுத்திகள் வலிமை பெற்ற பாவாக பலனை ஏற்று நடத்தினால், சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு காலதாமதம் செய்யாமல் திருமண வாழ்க்கையை அமைத்து தந்துவிடுவது, சிறந்த யோகம் நிறைந்த வாழ்க்கை துணையை பெறுவதற்கு வழிவகுக்கும், நடைபெறும் திசாபுத்தி ஜாதகருக்கு அந்த வாய்ப்பை நல்கிவிடும், சுய ஜாதகத்தில் மேற்கண்ட பாவகங்கள் யாவும் பாதிக்கப்பட்டு, நடைபெறும் திசாபுத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை தரவில்லை என்ற சூழ்நிலையில் மட்டுமே தாமத திருமணத்தை பரிந்துரை செய்ய வேண்டும், அதுவும் பாதிக்கப்பட்ட பாவக பலன்கள் நடைமுறையில் உள்ள காலம் வரையில் மட்டுமே இந்த விஷயம் பொருந்தும், இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம்.


லக்கினம் : விருச்சகம்
ராசி : கடகம்
நட்ஷத்திரம் : பூசம் 3ம் பாதம்

ஜாதகருக்கு சுய ஜாதகத்தில்   2,5,7,8,12ம் பாவகங்களில் 8,12ம் பாவகத்தை தவிர மற்ற பாவகங்கள் மிகவும் வலிமையுடன் இருப்பது வரவேற்க தக்க அம்சமாகும், மேலும் 8ம் பாவகம் உபய ராசி தொடர்பை பெறுவதால் அதனால் யாதொரு இன்னல்களும் வாராது, 12ம் பாவகம் பாதிக்கப்படுவது மட்டுமே சற்று இன்னல்களை தர கூடும், ஜாதகர் தேர்வு செய்யும் வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் 12ம் பாவகம் பாதிக்கப்படாமல் இருப்பதுடன், 2,5,7,8ம் பாவகங்கள் வலிமையுடன் இருக்கும் ஓர் வதுவை தேர்வு செய்தால் போதும், ஜாதகரின்  திருமண வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமையும், குறிப்பாக வதுவின் ஜாதகத்தில் 2,5,7,8,12ம் பாவகங்கள் வலிமை பெற்று இருப்பதுடன், தற்போழுது நடைபெறும் திசா புத்தி, எடுத்துவரும் திசா புத்தி வலிமை பெற்ற பாவக பலனை  ஏற்று நடத்தும் அமைப்பில், பொருத்தமான வரனை தேர்வு செய்து  கொடுப்பது மட்டுமே ஜோதிடரின் கடமை.

மேற்கண்ட ஜாதகருக்கு தற்போழுது  நடைபெறும் திசை கேது என்பதால், அது இன்னல்களை  தரும் என்ற குருட்டு நம்பிக்கையில் ஜாதகருக்கு 31 வயதுக்கு மேல் திருமணம் செய்வது உகந்தது என்று பரிந்துரை செய்து இருக்க  கூடும் என்று  நம்புகிறேன், நடைபெறும் திசாபுத்திகள் எதுவென்ற போதிலும், சமபந்தப்பட்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்ற விஷயம் தெரியாத நிலையிலேயே மேற்கண்ட குழப்பங்கள்  ஏற்படுகிறது, ஜாதருக்கு தற்போழுது நடைபெறுவது  கேது  திசை ( 02/01/2014 முதல் 02/01/2021 வரை ) என்ற  போதிலும் அவர் ஏற்று நடத்தும் பாவக  தொடர்பு என்பது, 5,10,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் லாப ஸ்தான பலனை ஏற்று நடத்துவது வரவேற்கத்தக்க அம்சமாகும், மேலும் கேது திசை ஜாதகருக்கு 5,10,11ம் பாவக வழியில் இருந்து  யோகங்களையே வாரி வழங்குகிறது.

தற்போழுது கேது திசையில் நடைபெறும் ராகு புத்தியும்  ( 02/12/2016 முதல் 21/12/2017 வரை ) ஜாதகருக்கு 10ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் லாப ஸ்தான பலனை ஏற்று நடத்துகிறது என்பதால் ஜாதகர் திருமண வாழ்க்கையை தள்ளிப்போடாமல், உடனடியாக திருமணத்திற்கு உண்டான முயற்சிகளை மேற்கொண்டு வாழ்க்கையில் நலம்  பெறுவது அவசியமாகிறது,

குறிப்பு :

வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் பொழுது வதுவின் ஜாதகத்தில் 2,5,7,8,12ம் பாவகங்கள் மிகவும் வலிமை பெற்று இருப்பது, ஜாதகருக்கு யோகம் மிகுந்த வாழ்க்கையை வாரி வழங்கும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

தொழில் வெற்றிகளை வழங்கும் ஜீவன ஸ்தான வலிமை - 1



சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் எனும் 10ம் வீடு வலிமை பெறுவது சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையில், தொழில் மற்றும் வேலை வாய்ப்பினை சிறப்பாக அமைத்து தரும், சுய ஜாதகத்தில் 10ம் வீடு பாதிப்பது சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையில் ஜீவன ரீதியான சிரமங்களை தரக்கூடும், சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவதும் , சரியான இளம் வயதில் நடைபெறும் திசாபுத்திகள் வலிமை பெற்ற ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்துவதும், ஜாதகருக்கு ஜீவன ரீதியாக யாதொரு தடையும் இன்றி, அவருக்கு உகந்த தொழில் வாய்ப்பினை சுயமாகவோ, அடிமை தொழிலாகவோ இயற்கையாக அமைத்து தந்துவிடும், ஜாதகர் ஜீவன ரீதியாக யாதொரு இன்னல்களையும் சந்திக்கமால், தனது வாழ்க்கையில் வெற்றிநடை போட ஆரம்பித்து விடுவார், மேலும் ஜீவன முன்னேற்றம் என்பது ஜாதகருக்கு தன்னிரைவாகவும், பொருளாதார ரீதியான வசதி வாய்ப்புகளையும் வாரி வழங்கி விடும்.

மாறாக சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் எனும் 10ம் வீடு வலிமை அற்று காணப்படுவது ( 6,8,12ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது அல்லது பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெறுவது ) ஜாதகரின் வாழ்க்கையில் ஜீவன ரீதியான கடுமையான போராட்டங்களை தந்து விடும், குறிப்பாக ஜீவன ஸ்தானம் எனும் 10ம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது என்பது ஜாதகரின் வாழ்க்கையில் மிகப்பெரிய அளவிலான இன்னல்களை தந்துவிடும், அடிப்படையில் ஜாதகருக்கு சரியான வயதில் ஓர் வேலை அல்லது தொழில் அமைவது குதிரை கொம்பாக மாறிவிடும், தனக்கு ஏற்ற வேலை எது என்று உணர்ந்துகொள்ளவே ஜாதகருக்கு பல வருடங்கள் பிடிக்கும், தனக்கு உகந்த வேலையைதான் செய்து வருகிறோமா ? என்று அறியாமலே சூழ்நிலை கைதி போல் மற்றவருக்காக தனது உழைப்பை சிந்தும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவர், சுய கவுரவம் வெகுவாக பாதித்த போதிலும், ஜீவனத்தை கருத்தில் கொண்டு, அடிமை சேவகம் செய்யும் சூழ்நிலையை தரும், அடிப்படையிலேயே ஜாதகருக்கு பரதேஷ ஜீவனம் வாய்த்துவிடும், தனது குடும்பம், பெற்றோர், உடன் பிறப்பு, குழந்தைகள் மற்றும் உறவுகளை விட்டு  வேறு இடத்தில் சென்று ஜீவிக்கும் சூழ்நிலையை தரும்.

சுய ஜாதகத்தில் மற்ற பாவகங்கள் வலிமை பெற்று இருந்தாலும், அதன் வழியிலான பலாபலன்களை ஜாதகர் அனுபவிக்க இயலாது சூழ்நிலையை தரும், தனது தகுதிக்கு உகந்த வேலை இல்லை என்று தெரிந்தும் ஜாதகர்  அதில்  இருந்து வெளிவர ஜாதகரின் பொருளாதாரம் இடம் தாராது, ஜாதகர் செய்யும்  சுய முயற்சிகள் யாவும் கடும் தோல்வியை தரும், பொதுவாக ஜீவன ஸ்தான வலிமை பெறுவது என்பது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு, சுய தொழில் செய்தாலோ, அல்லது அடிமை தொழில் செய்தாலும் குறுகிய காலத்தில் ( 3 வருடங்களில் இருந்து 5 வருடங்களுக்குள் ) தன்னிறைவான பொருள் வசதியையும், மிகப்பெரிய தொழில் முன்னேற்றங்களையும் வாரி வழங்கி விடும், ஜீவன ஸ்தான பாதிப்பு என்பது கிணற்றில் போட்ட கல் மாதிரி யாதொரு சிறு அசைவும் இன்றி துவங்கிய நிலையில் ஜாதகர் எப்படி இருந்தாரோ அதே நிலையில் வைத்திருக்கும், ஜீவன ரீதியான முன்னேற்றங்கள்  என்பது ஜாதகருக்கு சிறிதும் ஏற்படாது, இந்த சூழ்நிலையில் உள்ள அன்பர்கள் தனது சுய ஜாதக வலிமையை பற்றி தெளிவாக உணர்ந்து கொண்டு மாற்று வழிகளை நடைமுறைக்கு கொண்டுவந்து வாழ்க்கையில் வெற்றி பெறலாம், அதற்க்கு உறுதுணையாக அமைவது அவர்களது சுய ஜாதகத்தில்  உள்ள பாவக வலிமையே என்றால் அது மிகையில்லை.

சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை குன்றும் பொழுது ஜாதகர் பெரும் இன்னல்களை பற்றி ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !


லக்கினம் : தனுசு
ராசி : கடகம்
நட்ஷத்திரம் : புனர்பூசம் 4ம் பாதம்

மேற்கண்ட ஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் எனும் 10ம் வீடு திடீர் இழப்பை தர கூடிய  ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பது ஜாதகரின் ஜீவன ரீதியான இன்னல்களை தரும், குறிப்பாக தொழில் அல்லது வேலை வழியிலான சங்கடங்கள், அதிக வேலை பளு, திருப்தி அற்ற வேலை, வேலை செய்யும் இடத்திலும், பொது வாழ்க்கையிலும் கடுமையான சிக்கல்கள், ஓர் ஸ்திரமான முடிவு எடுக்க இயலாமல் தடுமாறும் சூழ்நிலை, செய்யும் காரியங்கள் யாவிலும் ஏமாற்றம், அடிக்கடி வேலையை ராஜினாமா செய்துவிட்டு வேறு வேலையை தேடிக்கொண்டு இருப்பது, ஜீவன ரீதியான ஸ்திர தன்மை இல்லாமல் வீண் அலைச்சல் அலையும் தன்மை என்ற வகையில் கடுமையான இன்னல்களை தரும்.

மேற்கண்ட ஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் மட்டும் அல்ல கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன வீடான மகரம் தொடர்பு பெறுவது பாதக ஸ்தானத்துடன் என்பது மிகுந்த இன்னல்களை தொழில் மற்றும் ஜீவன ஸ்தான வழியில் இருந்து தரும், சுய ஜாதகத்திலும் ஜீவன ஸ்தானம் பாதிக்கப்பட்டு, கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ராசியான மகரமும் பாதிக்கப்படுவது ஜாதகரின் அடிப்படை ஜீவனத்தை கேள்விக்குறியாக மாற்றும், ஜாதகருக்கு கிட்டத்தட்ட 27 வயது நெருங்கிவிட்டது இருப்பினும் நல்லதொரு சிறு வேலையும் இதுவரை  கிடைக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது, சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் பாதிக்கப்படுவது ஜாதகருக்கு எவ்வித பலன்களை தருகிறது என்பது  மேற்கண்ட ஜாதகமே ஓர் சரியான உதாரணம்.

சரி சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் எனும் 10ம் வீடும், கலபுருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ஸ்தானமான மகரமும் கடுமையாக பாத்திக்கப்பட்டு விட்டது, நடைபெறும் திசா புத்தியாவது ஜாதகருக்கு யோக பலன்களை தருகின்றதா? என்பதை கவனத்தில் கொண்டு ஆய்வு செய்யும் பொழுது, தற்போழுது  நடைபெரும் புதன் திசை ஜாதகருக்கு 4,6,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 4,6,7ம் பாவக வழியில் இருந்து 200% விகித இன்னல்களை தந்து கொண்டு இருக்கின்றது, புதன் திசையில் தற்போழுது நடைபெறும் சந்திரன் புத்தி ஜாதகருக்கு 12ம் வீடு பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று, அவமானம், உடல் நல பாதிப்பு, அனைத்திலும் நஷ்டம், அமைதி இல்லா மனம், தேவையற்ற சவகாசம் மற்றும் பூர்வீகத்தை விட்டு பரதேச ஜீவனத்தை தந்து கொண்டு இருக்கின்றது .

ஜாதகரின் சுய ஜாதக வலிமையின் அடிப்படையில் மற்றவர்களை நம்பி முதலீடு செய்து தொழில் செய்ய விரும்பினால் திடீர் இழப்பு நிச்சயம் உண்டு, கூட்டு முயற்சி செய்து தொழில் செய்யலாம் என்றால் சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது கூட்டாளிகள் வழியில்  கோவணம் வரை உருவிவிட்டு விடும், பொருட்களை வைத்து ( வீடு நிலம் வண்டி வாகனம், தொழில் உபகரணம் ) தொழில் செய்யலாம் என்றால் அடிப்படையே ஆட்டம் காணும், எனவே ஜாதகருக்கு உள்ள ஜீவன ரீதியான வாய்ப்புகளை ஆய்வு செய்வோம் (3,9) பாக்கிய ஸ்தானம் வலிமை பெறுவது சிறு வியாபாரம் செய்யலாம், அல்லது கல்வி நிறுவனத்தில் வேலை செய்யலாம், (11 கால புருஷ தத்துவ அமைப்பிற்கு களத்திர ஸ்தானம் ) லாப ஸ்தானம் வலிமை பெறுவதால் ஒருவேளை திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை துணையின் ஜாதக வலிமையை கருத்தில் கொண்டு தொழில் முயற்சிகளில் இறங்கலாம், இருப்பினும் திருமணம் நடைபெறவே மிகுந்த  கால  தாமதம் ஆக கூடும், ஆனால் குருட்டு அதிர்ஷ்டம் ஜாதகருக்கு உண்டு என்பதால் 11ம் பாவக வழியிலான ஜீவனத்தை ஆய்வு செய்து, 11ம் பாவக சம்பந்தம் பெற்ற தொழில்களை செய்து வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.

ஜாதகருக்கு 3,9,11ம் பாவகங்களை தவிர மற்ற அனைத்து பாவகங்களும் பாதிக்கப்பட்டு உள்ளது, குறிப்பாக 2,4,5,6,7ம் வீடுகள் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு மேற்கண்ட பாவக வழியில் இருந்து 200% விகித இன்னல்களை வாரி வழங்கும், ஜாதகர் பாதிக்கப்பட்ட பாவக வழியிலான பிரீதி பரிகாரங்களை மேற்கொண்டு நலம் பெறுவது அவசியமாகிறது.

குறிப்பு :

 சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை அற்ற ஜாதகர்கள் சுய தொழில் செய்ய சிறிதும் யோகம் அற்றவர்கள் என்பதை அவர்களது ஜீவன ஸ்தானம் வலிமையே நன்றாக உணர்த்துகிறது என்பது கவனிக்கத்தக்க அம்சமாகும்.

அடுத்த பதிவில் ஜீவன ஸ்தானம் வலிமை பெற்ற ஓர் ஜாதகத்தை சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

செவ்வாய், 7 மார்ச், 2017

தம்பதியர் ஜாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தான வலிமையையும், வாரிசு ( ஆண் ) யோகமும் !

 
 
தம்பதியரின் சுய ஜாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் வீடு பெரும் வலிமையின் அடிப்படையிலும், திருமணத்திற்கு பிறகு தம்பதியருக்கு நடைபெறும் திசா புத்திகள் ஏற்று நடத்து பாவக வலிமையின் அடிப்படையிலும், குழந்தைபாக்கியம் சிறப்பாக அமைகிறது, தம்பதியரின் சுய ஜாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தானம் வலிமை பெறுவதும், நடைமுறையில் உள்ள திசாபுத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் பொழுது, குறுகிய காலத்தில் புத்திரபாக்கியமும், தனது சந்ததி விருத்தி பெற நல்ல ஆண் வாரிசும் அமைகிறது.

 மாறாக தம்பதியர் ஜாதகத்தில் புத்திர ஸ்தானம் எனும் 5ம் பாவகம் வலிமை அற்று இருப்பதோ, பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெறுவதோ, நடைபெறும் திசா புத்திகள் வலிமை அற்ற பாவக பலனை ஏற்று நடத்துவதோ, புத்திர பாக்கியத்தில் தடைகளையும், ஆண் வாரிசு அற்ற தன்மையையும் ஏற்ப்படுத்துகிறது, குறிப்பாக தம்பதியர் ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானம் எனும் 5ம் வீடு பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெறுவது என்பது, புத்திர பாக்கியத்தில் கடுமையான தடைகளையும், தாமதங்களையும் வாரி வழங்குகிறது, தனது சந்ததி விருத்தி பெற தம்பதியர், பல வேண்டுதல்கள் வழிபாடுகள் மற்றும் மருத்துவ சிகிச்சைகளை மேற்கொண்டு அவதியுற நேருகிறது, இத்தனை இன்னல்களை கடந்து ஓர் குழந்தை கிடைத்தாலும், அந்த குழந்தை வழியிலான இன்னல்களை தம்பதியர்கள் அதிக அளவில் சந்திக்கும் சூழ்நிலையை தருகிறது.

தம்பதியர் ஜாதகத்தில் பூர்வபுண்ணியம் எனும் 5ம் வீடு வலிமை பெற்று இருப்பின், நிச்சயம் அவர்களுக்கு தனது குலம் தழைக்க, நல்ல ஆண்வாரிசு அமையும், குழந்தை பிறந்த பிறகு அந்த குழந்தை வழியில் இருந்து சிறப்பான யோகங்களை தம்பதியர் நிச்சயம் பெறுவார்கள், தம்பதியர் ஜாதகத்தில் புத்திர ஸ்தானம் வலிமை பெற்றும், சந்தானபாக்கியம் அமையவில்லை எனில், நடைபெறும் திசை அல்லது புத்தி தம்பதியருக்கு பாதிக்கப்பட்ட பாவக பலனை ஏற்று நடத்திக்கொண்டு இருக்க கூடும், காலதாமதம் ஆனாலும் நிச்சயம் அவர்களுக்கு நல்ல ஆண்வாரிசு உண்டு என்பதால், பாதிக்கப்பட்ட பாவக பலன்கள் முடிவுக்கு வரும்வரை தம்பதியர் அவசரபடாமல் பொறுமையை கடைபிடிப்பதே சால சிறந்தது, இயற்கைக்கு  முரணாக மருத்துவ சிகிச்சை மேற்கொள்வது குழந்தை பிறப்பில் சிக்கல்களையும், தம்பதியருக்கு இன்னல்களையும் தர வாய்ப்பு உள்ளது, சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமையாக இருப்பின் எந்த ஒரு பயமும் இல்லமால், சற்று பொறுமை காப்பதே சரியான வழி, இதை ஓர் தம்பதியர் சுய ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம்..

கணவர் :


லக்கினம் : ரிஷபம்
ராசி : விருச்சகம் 
நட்ஷத்திரம் : கேட்டை 1ம் பாதம் 

மனைவி :

லக்கினம் : கடகம் 
ராசி : கடகம் 
நட்ஷத்திரம் : பூசம் 1ம் பாதம் 

தம்பதியர் இருவரது சுய ஜாதகத்திலும் புத்திர பாக்கியத்தை குறிக்கும் 5ம் பாவக வலிமை நிலை :

ஜாதகருக்கு 5ம் வீடு அதிர்ஷ்டம், லாபம் எனும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிக வலிமையுடன் இருப்பது ஜாதகருக்கு நல்ல புத்திர பாக்கியத்தை நல்கும் என்பது தெளிவாகிறது, மேலும் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் வீடான சிம்மம் ஜீவன ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று மிக மிக வலிமையுடன் இருப்பது வரவேற்க தக்க அம்சமாகும், ஜாதகருக்கு பிறக்கும் குழந்தை  வழியில் இருந்து ஜாதகர் ஜீவன முன்னற்றம் மற்றும் அதிர்ஷ்டகரமான யோக வாழ்க்கையை பெறுவார் என்பது 100% விகிதம் உறுதியாகிறது.

ஜாதகிக்கு 5ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது இறை அருளின் கருணை மூலம் நல்ல வாரிசை பெறுவார் என்பது உறுதியாகிறது, மேலும் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் வீடான சிம்மம் குடும்பம் ஸ்தானமான 2ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது பிறக்கும் குழந்தைகள் வழியில் இருந்து நார்ப்பெயரும், சமுதாய அந்தஸ்த்தையும் நல்ல அறிவு திறனையும் பெறுவார், பிறக்கும் குழந்தையும் மேற்கண்ட யோக பலன்களை அனுபவிக்கும், மேலும் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்ட குழந்தையாக திகழும்.

தம்பதியர் இருவரது சுய ஜாதகத்திலும் பூர்வபுண்ணிய ஸ்தானம் வலிமை பெறுவதுடன், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் வீடான சிம்மம் மிகவும் வலிமை பெற்று இருப்பது வரவேற்கத்தக்க அம்சமாகும்.

தம்பதியர் இருவருக்கும் தற்போழுது நடைபெறும் திசைபுத்தி தரும் பலன்கள் :

ஜாதகருக்கு நடைபெறும் சுக்கிரன் திசை 6,8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 6,8,12ம் பாவக வழியில் இன்னல்களை தருகிறது, சுக்கிரன் திசையில் தற்போழுது நடைபெரும் ராகு புத்தி வலிமை பெற்ற 2,10ம் பாவக பலனை தருவது சிறப்பான அம்சமாகும்.

ஜாதகிக்கு நடைபெறும் புதன் திசை 5ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று புத்திர ஸ்தான பலனை ஏற்று நடத்துவது, நல்ல ஆண் வாரிசை புதன் திசையில் தரும், புதன் திசையில் தற்போழுது நடைபெறும்  ராகு புத்தி ஜாதகிக்கு 8,11ம் வீடுகள் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று பாதக ஸ்தான பலனை தருவது இன்னல்களை தரும் என்ற போதிலும், 6,10ம் வீடுகள் புத்திர ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ராகு புத்தி காலத்திலேயே நல்ல ஆண் வாரிசு உருவாகும் என்று உறுதியாக சொல்லலாம். 

கணவரின் ஜாதகத்தில் 6,8,12ம் பாவகம் பாதிப்பதும், மனைவியின் ஜாதகத்தில் 8,11ம் பாவகங்கள் பாதிப்பது மட்டும் இன்னல்களை  தரும் அமைப்பாகும், எனவே மேற்கண்ட பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை தவிர்க்க முறையான பிரீதி பரிகாரங்களை தம்பதியர் இருவரும் மேற்கொள்வது  சாலச்சிறந்தது, மேற்கண்ட பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை வெகுவாக குறைக்கும், தம்பதியரின் வாழ்க்கையில் யோகங்களை வாரி வழங்கும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

திங்கள், 6 மார்ச், 2017

தசா சந்திப்பும் ( ஏக திசை நடப்பு ) திருமண வாழ்க்கையும் !

 

 திருமண பொருத்தம் காணும் பொழுது தற்போழுது திசாசந்திப்பு அல்லது ஏக திசை நடப்பு பார்த்து திருமணம் செய்வது மிக முக்கியம் என்ற கருத்து திருமண பொருத்தம் காண்பதில், தற்போழுது பிரபல்யம் பெற்று இருக்கின்றது, இதன் தாக்கம் என்பது ஜாதக பொருத்தம் காணவரும் வரன்,வதுவின் பெற்றோரின் கேள்விகளில் இருந்தே உணர முடிகிறது, பொதுவாக திசாசந்திப்பு அல்லது ஏக திசை நடப்பு சார்ந்து இவர்கள் முன் வைக்கும் கேள்விகள், வரன், வது இருவருக்கும்  ஒரே நேரத்திலோ, சிலகால இடைவெளியிலோ திசாசந்திப்பு அல்லது ஏகதிசை நடப்பு ஆகிவற்றை சந்தித்தால், தம்பதியரின் வாழ்க்கையில் இன்னல்கள் வரும், இது பொருத்தம் அற்ற நிலை என்பதால் திருமணம் செய்வது உகந்தது அல்ல என்ற கருத்தை முன் வைக்கின்றனர், இதனால் இல்லற வாழ்க்கை பாதிக்கும் என்கின்றனர், இதைப்பற்றி இன்றைய பதிவில் ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !

அடிப்படையில் திசாசந்திப்பு அல்லது ஏகதிசை நடப்பு பொருத்தம் என்பது சுய ஜாதகத்தில் வரனுக்கும், வதுவுக்கும் நடைபெறும் ( ஒரே கிரகத்தின் திசை என்ற போதிலும் ) திசை சம்பந்தப்பட்ட இருவருக்கும், எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்ற உண்மை நிலை அறியாத போதே மேற்கண்ட திசாசந்திப்பு அல்லது ஏகதிசை நடப்பு பொருத்தம் என்ற குழப்பம் ஏற்படுவதாக "ஜோதிடதீபம்" கருதுகிறது, வரனுக்கும் வதுவுக்கும் தற்போழுதும் , எதிர்காலத்திலும் நடைபெறும் திசாபுத்திகள் ( ஒரே திசையாக இருப்பினும் ) சுய ஜாதகத்தில் உள்ள வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துகிறதா? வலிமை அற்ற பாவக பலனை ஏற்று நடத்துகிறதா? என்ற உண்மை நிலையை அறிந்து பொருத்தம் காண்பதே சரியான அணுகுமுறையாக இருக்கும் என்று கருதுகிறோம், கீழ்கண்ட தம்பதியரின் சுய ஜாதகத்தில் நடைபெறும் திசை,எதிர்வரும் திசைகள் தரும் பலாபலன்களை சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

வரன் ஜாதகம் :

லக்கினம் : துலாம் 
ராசி : தனுசு 
நட்ஷத்திரம் : பூராடம்4ம் பாதம் 

வது ஜாதகம் :
லக்கினம் : ரிஷபம் 
ராசி : மிதுனம்
நட்ஷத்திரம் : திருவோணம்2ம் பாதம்.

மேற்கண்ட தம்பதியர் இருவரது ஜாதகத்திலும், தற்போழுது மற்றும் எதிர்வரும் திசை தரும் பலன்கள் :

ஜாதகருக்கு தற்போழுது ராகு திசை ( 09/05/2007 முதல் 08/05/2025 வரை ) நடைமுறையில் உள்ளது,  தற்போழுது நடைபெறும் ராகு திசை ஜாதகருக்கு 7ம் வீடு  பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், 10ம் வீடு ஜீவன  ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும் யோக பலனை வழங்கி கொண்டு இருக்கின்றது, எனவே ஜாதகருக்கு நடைபெறும் ராகு திசை களத்திர ஸ்தான வழியில் இருந்தும், ஜீவன ஸ்தான வழியில் இருந்தும் வலிமை  பெற்ற யோக பலன்களை தருவது சிறப்பான விஷயம்.

ஜாதகிக்கு தற்போழுது நடைபெறும் ராகு தசை ( 18/05/2001 முதல் 18/05/2019 வரை ) தனது திசையில் 3,6,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று கடுமையான அவயோக பலனை, பாதக ஸ்தான வழியில் இருந்து வழங்கிக்கொண்டு இருக்கின்றது, எனவே ஜாதகிக்கு தற்போழுது நடைபெறும் ராகு திசை அவயோக பலன்களை தருவது மிகுந்த இன்னல்களை  வீர்யம்,சத்ரு மற்றும் பாக்கிய ஸ்தான வழியில் இருந்து தரும் என்பது கவனிக்கத்தக்க  விஷயம்.

ராகு திசைக்கு அடுத்து வரும் குரு திசை தரும் பலன்கள் :

ஜாதகருக்கு ராகு திசைக்கு அடுத்து குரு தசை ( 08/05/2025 முதல் 08/05/2041 வரை ) நடைபெற இருக்கின்றது, நடைபெற இருக்கின்ற குரு திசை ஜாதகருக்கு 1,3,5,9ம் வீடுகள் சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தர இருக்கின்றது, மேலும் ஜாதகர் குரு திசை காலத்தில் 1,3,5,9ம் பாவக வழியில் இருந்து யோக பலன்களை அனுபவிக்கும் தன்மையை பெறுவது வரவேற்க தக்க அம்சமாகும்.

ஜாதகிக்கு ராகு திசைக்கு அடுத்து குரு தசை ( 18/05/2019 முதல் 18/05/2035 வரை ) நடைபெற இருக்கின்றது, நடைபெற இருக்கின்ற குரு திசை ஜாதகிக்கு 2,4,8,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தர இருக்கின்றது, மேலும் ஜாதகி 2,4,8,10ம் பாவக வழியில் இருந்து ஸ்திரமான யோக பலன்களை அனுபவிக்கும் தன்மையை பெறுவது வரவேற்க தக்க அம்சமாகும்.

குரு திசைக்கு அடுத்து சனி தசை ( 08/05/2041 முதல் 08/05/2060 வரை ) நடைபெற இருக்கின்றது, நடைபெற இருக்கின்ற சனி திசை ஜாதகருக்கு 4ம் வீடு விரைய  ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று, ஜாதகருக்கு அவயோக பலன்களை தர இருக்கின்றது, மேலும் ஜாதகர் சனி திசையில் சுக ஸ்தான வழியில் இருந்து கடுமையான நெருக்கடிகளை சந்திக்கும் சூழ்நிலையை தரும், சுகபோக வாழ்க்கையில் இன்னல்களை அதிக அளவில் எதிர்கொள்வர் என்பது சனி திசையில் ஜாதகருக்கு இருக்கும் நெருக்கடி ஆகும்,

குரு திசைக்கு அடுத்து சனி தசை ( 18/05/2035 முதல் 18/05/2054 வரை ) நடைபெற இருக்கின்றது, நடைபெற இருக்கின்ற சனி திசை ஜாதகிக்கு 5,11ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், 12ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும் ஜாதகிக்கு மிகுந்த அவயோக பலன்களை தர இருக்கின்றது, மேலும் ஜாதகி சனி திசையில் பூர்வபுண்ணியம், லாபஸ்தானம் மற்றும் அயனசயன ஸ்தான வழியில் இருந்து கடுமையான இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலையை தரும்.

மேற்கண்ட தம்பதியர் இருவருக்கும் முறையே தொடர்ந்து நடைபெறும் ராகு,குரு,சனி திசை தரும் பலன்கள் என்ன என்பது தெளிவாக தெரிந்து விட்டது, இனி திசாசந்திப்பு மற்றும் ஏகதிசைநடப்பு சார்ந்த குழப்பம் தீர்ந்து  ஓர் தெளிவு கிடைக்கும் என்று நம்புகிறோம்.

தம்பதியர் இருவருக்கும் நடைபெறும் திசை எதுவென்றாலும் சரி இருவருக்கும் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவது வாழ்க்கையில் முன்னேற்றத்தை தரும், அல்லது ஒருவருக்காவது வலிமை பெற்ற  பாவக பலனை ஏற்று நடத்த வேண்டும், சில விட்டுக்கொடுத்து செல்லும் மனபக்குவத்தால் மணவாழ்க்கை சிறப்பிக்கும், இருவருக்கும் வலிமை அற்ற பாவக பலனையே, பாதக ஸ்தான பலனையே ஏற்று நடத்தினால், திசாசந்திப்பு ஏகதிசை நடப்பு இல்லாத சூழ்நிலையிலும், திருமண  வாழ்க்கை நீடிக்காது மணமுறிவுக்கு அழைத்து செல்லும் என்ற உண்மையை அனைவரும் உணர்வது அவசியமாகிறது.

திசை தரும் பலாபலன்கள் பற்றி ஓர் தெளிவு ஏற்பட்டு இருக்கும் என்று நம்புகிறோம், இனி மேற்கண்ட தம்பதியரின் ஜாதகத்தில் திருமண வாழ்க்கைக்கு உகந்த பாவக பொருத்தங்கள் உண்டா ? என்பதை சற்று சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் 

திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய தம்பதியரின் சுய ஜாதகத்தில் வலிமை பெற்று இருக்க வேண்டிய பாவகங்கள் ( 2,5,7,8,12 )

ஆணின் ஜாதகத்தில் களத்திர ஸ்தானத்தை ( 7ம் வீடு ) தவிர மற்ற பாவகங்கள்  (2,5,8,12 ம் வீடுகள் ) கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றது.

பெண்ணின் ஜாதகத்தில் குடும்பம்,களத்திரம் மற்றும் ஆயுள் பாவகத்தை ( 2,7,8 ம் வீடுகள் )  தவிர மற்ற பாவகங்கள் ( 5,12ம் வீடுகள் ) கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றது.

எனவே அடிப்படையிலேயே பாவக பொருத்தம் இல்லை என்பதுடன், ஜாதகிக்கு தற்போழுது நடைபெறும் ராகு திசை பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துவது இல்லற வாழ்க்கையில் பிரிவை நோக்கி அழைத்து சென்றுள்ளது, இதற்க்கு துல்லியமற்ற ஜாதக ஆலோசனை காரணமாக அமைந்துவிட்டது ( நட்ச்சத்திர பொருத்தம் 10க்கு ஒன்பது உண்டு என்று நிர்ணயம் செய்ததே தம்பதியரின் திருமணம் வாழ்க்கை தடுமாற காரணமாக அமைந்துவிட்டது.

குறிப்பு : 

சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையையும், நடைபெறும் எதிர்வரும் திசைபுத்தி தரும் பலாபலன்களை கருத்தில் கொள்ளமல் திருமண பொருத்தம் நிர்ணயம் செய்வது தம்பதியரின் இல்லற வாழ்க்கையை கடுமையாக பாதிக்கும் என்பதால், சுய ஜாதக வலிமையை கருத்தில் கொண்டு திருமண பொருத்தம் காண்பது இனிமையான இல்லற வாழ்க்கையை வழிவகுக்கும், தாம்பத்திய  வாழ்க்கையும் பரிபூர்ண நிலைய அடையும்.

வாழ்த்துக்கள் 

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

ஞாயிறு, 5 மார்ச், 2017

1 நிமிடத்தில் திருமணம் பொருத்தம் பார்க்கலாம் !


கேள்வி :

1 நிமிடத்தில் திருமணம் பொருத்தம் பார்க்கலாம், என்ற புத்தகத்தை பார்த்து  பத்துக்கு ஒன்பது  பொருத்தம் உண்டு என்பதை உறுதி செய்தபின் ( பெண் நட்சத்திரம் திருவோணம் 2ம் பாதம், எனது நட்சத்திரம் பூராடம் 4ம் பாதம் ) , கடந்த நான்கு வருடத்திற்கு முன்பு  பெரியோர் முடிவு செய்து திருமணம் செய்துகொண்டோம், கடந்த மாதம் விவாகரத்து நடந்துவிட்டது, திருமண வாழ்க்கை மணமுறிவுக்கு அழைத்து சென்றது ஏன் ? சுய ஜாதக விபரம் அனுப்பி உள்ளேன்... விளக்கம் தர வேண்டுகின்றேன்.

பதில் :

  காக்க பிரியாணி சாப்பிட்டா காக்க குரல் வரமா ?  " உன்னிகிருஷ்ணன் " குரலா வரும்? என்ற திரைப்பட நகைச்சுவைதான் நினைவுக்கு வருகிறது அன்பரே தங்களின் கேள்வியை படிக்கும் பொழுது,  திருமண வாழ்க்கையை தசவித பொருத்தம் எனும் நட்ச்சத்திர பொருத்தம் 10 பொருத்தங்கள் மட்டுமே நிர்ணயம் செய்கிறது என்ற தங்களின் அறியாமையை எண்ணி சற்று வருத்தமாக உள்ளது, தம்பதியரின் திருமண வாழ்க்கையை வெற்றியடைய சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை, நடைபெறும் திசை, எதிர்வரும் திசை ஏற்று நடத்தும் பாவகங்களின் தன்மை, சம்பந்தப்பட்ட பாவகங்களுக்கு கோட்சர கிரகங்கள் தரும் தாக்கம் போன்றவை மிக முக்கியமானதா அமையும் என்பதை கருத்தில் கொள்ளாமல், நட்ச்சத்திர பொருத்தம் மட்டுமே இல்லற வாழ்க்கையை சிறப்பிக்கும் என்று கருதுவது முற்றிலும் ஜோதிட உண்மைக்கு புறம்பானதாகவே கருத வேண்டி உள்ளது, தங்களது இருவரின் சுய ஜாதக வலிமையை பற்றியும், தங்களது  திருமண வாழ்க்கை பிரிவை தந்தது ஏன்?  என்பது பற்றியும் இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொண்டு தெளிவு பெறுவோம் அன்பரே

ஜாதகர்



லக்கினம் : துலாம்
ராசி : தனுசு
நட்ஷத்திரம் : பூராடம் 4ம் பாதம்


ஆண் ஜாதகத்தில், திருமண வாழ்க்கையை நிர்ணயம் செய்யும் பாவகங்கள் ( 2,5,7,8,12 )

தங்களது ஜாதகத்தில் 2.8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

5ம் வீடு  சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று உடல்  ரீதியான இன்னல்களை தருகின்றது.

7ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று வலிமை பெறுவது, தங்களுக்கு வரும் வாழ்க்கை துணை மிகவும் உயர்ந்த குணம் உடையவர், தங்களுக்கு நன்மைகளை தருபவர் என்பதை உறுதி செய்கிறது.

தங்களது ஜாதகத்தில் இல்லற வாழ்க்கையை சிறப்பிக்கும் பாவகங்களான ( 2,5,7,8,12 ) வீடுகளில் 7ம் வீடு மட்டும் வலிமை பெற்று இருக்கின்றது, மற்ற பாவகங்கள்  மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அடிப்படையிலேயே தங்களது சுய ஜாதகம் பாதிக்கப்பட்டு உள்ளது சற்று கவலை தரும் விஷயமாகும், சுய ஜாதகத்தில் லாப ஸ்தானம் எனும் 11ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மிக மோசமான விளைவுகளை தரும் அமைப்பாகும்.

தங்களுக்கு ஆறுதலான விஷயம் யாதெனில் தற்போழுது நடைபெறும் ராகு திசை வலிமை பெற்ற களத்திரம் மற்றும் ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்துவது மட்டும் மிகுந்த நன்மைகளை தரும் அமைப்பாகும், களத்திர ஸ்தானம் வலிமை பெற்றது தங்களுக்கு நல்ல வாழ்க்கை துணையை அமைத்து  தந்து இருக்கின்றது.

ஜாதகி


லக்கினம் : ரிஷபம்
ராசி : மகரம்
நட்ஷத்திரம் : திருவோணம் 2ம் பாதம்

பெண் ஜாதகத்தில், திருமண வாழ்க்கையை நிர்ணயம் செய்யும் பாவகங்கள் ( 2,5,7,8,12 )

தங்களது வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் 2,8ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகவும் வலிமையுடன் காணப்படுகிறது, இது தங்களது வாழ்க்கை துணை வழியில் இருந்து இனிமையான பேச்சு, சிறப்பான குடும்ப வாழ்க்கை, நல்ல வருமானத்தை தரும், வாழ்க்கை துணையின் மூலம் நல்ல பொருளாதார உதவி, செல்வ செழிப்பை தரும்.

தங்களது வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் 5ம் வீடு திடீர் இழப்பை தரும்  ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன்  சம்பந்தம் பெற்று வலிமை அற்று காணப்படுகிறது ( தங்களது ஜாதகத்திலும் புத்திர ஸ்தானம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது, தங்களது வாழ்க்கை துணையின் ஜாதகத்திலும் புத்திர ஸ்தானம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது, இது தங்களுக்கு குழந்தை பாக்கியத்தில் மிகுந்த தடைகளை தரும். )

தங்களது வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் 7ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடனே சம்பந்தம் பெறுவது, தங்களுக்கு வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் ஆதரவு, அன்பு மற்றும் அன்னியோனிய இல்லற வாழ்க்கையை வழங்கும்.

தங்களது வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் 12ம் வீடு  விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது, தங்களது  ஜாதகத்திலும் 12ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது, இது தங்களது அந்தரங்க வாழ்க்கையில்  மகிழ்ச்சி அற்ற தன்மையையும், திருப்தி இல்லாத இல்லற வாழ்க்கையையும் தரும்.

தங்களது வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் தற்போழுது நடைபெறும் ராகு திசை 3,6,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் பாதக ஸ்தான பலனை நடத்திக்கொண்டு இருப்பது தங்களது வாழ்க்கை  துணைக்கு மேற்கண்ட பாவக வழியில் இருந்து 200% விகித இன்னல்களை வாரி  வழங்கும்.

தங்களுக்கு நடைபெறும் ராகு திசை சிறப்பான நன்மைகளையும், தங்களது  வாழ்க்கை துணைக்கு நடைபெறும் ராகு திசை கடுமையான பாதிப்புகளையும் தருகின்றது என்பது கவனிக்கத்தக்க விஷயமாகும், ( இதில் ஏக திசை பொருத்தம் என்பதை கருத்தில் கொள்ள கூடாது ) மேலும் தங்களுக்கு தற்போழுது நடைபெறும் புதன் புத்தி களத்திர ஸ்தான பலனை ஏற்று நடத்தி நன்மையை செய்த போதிலும், தங்களது வாழ்க்கை துணைக்கு நடைபெறும் சந்திரன் புத்தி விரைய ஸ்தான பலனையே ஏற்று நடத்துகிறது.

தங்களது சுய ஜாதகத்தில் 2,5,8,12ம் பாவகங்கள் வலிமை இல்லை, இருப்பினும் நடைபெறும் திசாபுத்தி நன்மையை தருகின்றது.

தங்களது வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் 2,7,8ம் வீடுகள் வலிமை பெற்று இருக்கின்றது நடைபெறும் திசாபுத்தி கடுமையான இன்னல்களை தருகிறது.

தங்களின் திருமண வாழ்க்கை பிரிவுக்கு காரணமாக தங்களது வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் நடைபெறும் திசாபுத்தியே காரணமாக அமைந்தாலும், தங்களது நடவடிக்கைகளும், சுய ஜாதக வலிமை இன்மையும் அதற்க்கு  மூல காரணமாக அமைந்து விட்டது, தங்களது வாழ்க்கை துணைக்காக தங்கள் நிறைய விஷயங்களை விட்டுக்கொடுத்து சென்று இருக்க வேண்டும் என்பதே "ஜோதிடதீபத்தின்" கருத்து.

குறிப்பு :

சுய ஜாதகத்தில் ( 2,5,7,8,12 ) பாவகங்கள் வலிமை குன்றி இருப்பின், தனக்கு வரும் வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் ( 2,5,7,8,12 ) பாவகங்கள் மிகவும் வலிமை பெற்று இருப்பதுடன், இருவருக்கும் நடைபெறும் திசை எதுவென்றாலும், வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் அமைப்பில் இருக்குமாறும் தேர்வு செய்வது, திருமண வாழ்க்கை வெற்றிகரமாக நடத்த வழிவகுக்கும், என்பதை கருத்தில் கொள்வது நல்லது, இதற்க்கு முரணாக வாழ்க்கை துணையை தேர்வு செய்தால் இல்லற வாழ்க்கை வெகு விரைவில் கசந்து இன்னல்களை அதிக அளவில் தந்து, திருமண வாழ்க்கையில் பிரிவை தந்துவிடும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

சுய ஜாதக ஆலோசணை : சுக்கிரன் திசையும் பாதக ஸ்தான தொடர்பும் !



சுய ஜாதக வலிமையை கருத்தில் கொண்டு, சுய ஜாதக பலாபலன்கள் காண்பது என்பது சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையில், சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும், சுய ஜாதகம் என்பது மூன்று காலங்களையும் உணர்த்தும் அட்சய பாத்திரம் என்றால் அது மிகையில், நாம் அனைவரும் நமது சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமை, வலிமை அற்ற தன்மை ஆகியவற்றை தெளிவாக உணர்ந்துகொண்டு, அதற்க்கு ஏற்றார் போல் தமது எதிர்காலத்தை சிறப்பித்து வெற்றிகரமாக வாழ்க்கை நடத்தலாம், நமது சுய ஜாதக வலிமையை பற்றி தெளிவான கண்ணோட்டம் இல்லாத சூழ்நிலையிலேயே, புலன் இன்பங்களுக்கு ஆர்ப்பட்டு விதி தரும் இன்னல்களில் சிக்கிக்கொண்டு துன்பம் அனுபவிக்கிறோம்.

ஒருவரின் சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமையே, சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு வாழ்வையும் தாழ்வையும் தருகின்றது, உதாரணமாக சுய ஜாதகத்தில் லக்கினம் வலிமை பெற்று இருப்பின் ஜாதகரின் வளரும் சூழ்நிலை சிறப்பானதாக அமையும், சிறு வயது முதல் நல்ல உடல் ஆரோக்கியம், நல்ல மனநலம், கல்வியில் தேர்ச்சி, பெற்றோருடன் ஜீவித்து இருக்கும் யோகம், நீண்ட ஆயுள், புகழ் கீர்த்தி, சுய அந்தஸ்து என லக்கினம் சார்ந்த நன்மைகளை ஜாதகர் தங்கு தடையின்றி பெறுவார், லக்கினம் வலிமை அற்று இருப்பின் அடிப்படையில் ஜாதகரின் வளரும் சூழ்நிலையே சிறப்பாக அமையாது, ஒவ்வொரு விஷயத்தையும் போரடி பெரும் சூழ்நிலைக்கு ஜாதகர் தள்ளபடுவார், உடல்நலம் பாதிக்கும், தெளிவற்ற சிந்தனை ஜாதகருக்கு சிறப்பான வாழ்க்கையை தாராது, கல்வியில் தடை, பெற்றோரை விட்டு மற்ற இடத்தில் ஜீவித்து இருக்கும் சூழ்நிலை, நல்லோர் சேர்க்கை இன்றி வாழ்க்கை பாதை முரண்பட்ட திசையில் பயணிக்கும் சூழ்நிலையை தரும்.

லக்கினம் வலிமை பெறுவது ஜாதகருக்கு நன்மைகளையும், வலிமை அற்று காணப்படுவது ஜாதகருக்கு இன்னல்களையும் நல்கும் எனும் பொழுது மற்ற பாவகங்கள் வலிமை பெறுவதும் வலிமை அற்று காணப்படுவதும் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து நன்மை தீமை பலாபலன்களை எவ்விதத்தில் தரும் என்று நாம் சொல்லி தெரிவதில்லை, நாம் நமது ஜாதகத்தை மூன்று விஷயங்களை ஆய்வு செய்வதின் மூலம் யோக ஜாதகமா ? அவயோக ஜாதகமா ? என்று தெளிவாக உணர்ந்துகொள்ள இயலும்.

1 சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு வீடுகள் எந்த எந்த பாவகங்களுடன் தொடர்பு பெறுகின்றது, அப்படி தொடர்பு பெரும் வீடுகள் வலிமை பெற்று இருக்கின்றதா? வலிமை அற்று இருக்கின்றதா ?

2 நடைபெற்ற திசை சுய ஜாதகத்தில் எந்த பாவக தொடர்பு பெற்ற வீடுகளின் பலன்களை ஏற்று நடத்தியது? நடைபெறும் திசை சுய ஜாதகத்தில் எந்த பாவக தொடர்பு பெற்ற வீடுகளின் பலன்களை ஏற்று நடத்துகிறது ? எதிர்வரும் திசை சுய ஜாதகத்தில் எந்த பாவக தொடர்பு பெற்ற வீடுகளின் பலன்களை ஏற்று நடத்த இருக்கின்றது ?

3 நவகிரகங்களின் திசாபுத்திகள் ஏற்று நடத்தும் பாவக தொடர்புகளுக்கு அல்லது  வீடுகளுக்கு கோட்சார கிரகங்கள் பெறும் தொடர்பு என்ன ? கோட்சார கிரகங்கள் தொடர்பு பெரும் நிலையில் இருந்து ஜாதகருக்கு தரும் நன்மை தீமை என்ன ?

மேற்கண்ட விஷயங்களில் நாம் தெளிவு பெரும் பொழுது, சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு  மிக துல்லியமான பலாபலன்களை மிக எளிதாக காண முடியும், சுய ஜாதக வலிமையின் அடிப்படையில், ஜாதகர் செய்யும் திட்டமிடுதல்கள், செயல்பாடுகள்  தங்கு தடையின்றி வெற்றிகளை வாரி வழங்கும், மேற்கண்ட விஷயங்களை அடிப்படையாக கொண்டு ஓர் ஜாதகத்தை நாம் இன்று சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே !


லக்கினம் : விருச்சகம்
ராசி : மீனம்
நட்ஷத்திரம் : பூரட்டாதி 4ம் பாதம்.

ஜாதகத்தில் வலிமையான பாவக தொடர்புகள் :

1,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகவும்  வலிமையுடன் இருப்பது ஜாதகருக்கு 1,7ம் பாவக வழியில் இருந்து ஸ்திரமான நன்மைகளையும் யோகங்களையும் வாரி வழங்கும், லக்கின வழியில் சிறப்பான வளரும் சூழ்நிலை, புகழ் கீர்த்தி, நீண்ட ஆயுள் என்ற வகையில் நன்மைகளை பெறுவார்.

5ம் வீடு பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு பூர்வபுண்ணிய ஸ்தான வழியில் இருந்து சகல நன்மைகளையும் தரும், ஜாதகரின் அறிவு திறனும், சமயோசித புத்திசாலித்தனமும் சிறப்பான யோக வாழ்க்கையிற் தரும், தமது குழந்தைகள் வழியில் இருந்து நன்மைகளை பெறுவார்.

10,11ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 10ம் பாவக வழியில் இருந்து நல்ல தொழில் முன்னேற்றத்தையும், கவுரவம், அந்தஸ்து சுய மரியாதையும் பெறுவார், மதிப்பு மிக்க செயல்களால் வாழ்க்கையில் ஜீவன ரீதியான முன்னேற்றங்களை தங்கு தடையின்றி பெறுவார் .

ஜாதகத்தில் வலிமை அற்ற பாவக தொடர்புகள் :

3,9ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு சகோதரம் மற்றும் பாக்கிய ஸ்தான வழியில் இருந்து கடுமையான இழப்புகளை  நல்கும்.

6,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு சத்ரு ஸ்தான வழியில் இருந்து கடன் தொல்லைகளையும், அயனசயன ஸ்தான வழியில் இருந்து  நிம்மதி இழப்பு, மற்றவர்களால் மற்றவர்களை நம்பி செய்யும் காரியங்களில் திடீரென பேரிழப்பை சந்திக்கும் சூழ்நிலையை தரும்.

ஜாதகத்தில் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட பாவக தொடர்புகள் :

2,4,8ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, குடும்ப ஸ்தானம் மற்றும் வருமானம் சார்ந்த இன்னல்களையும், சொத்து,வண்டி வாகனம், வீடு நிலம், சுகபோகம் சார்ந்த வகையில் கடுமையான இன்னல்கள் மற்றும் இழப்புகளையும், ஆயுள் பாவக வழியில் இருந்து நீண்ட ஆயுளை பெற்ற போதிலும் அதற்க்கு நிகரான திடீர் பொருள் இழப்புகளையும், நஷ்டங்களையும் வாரி வழங்கும், மேற்கண்ட ஜாதகத்தில் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெரும் பாவகங்கள் வழியில் இருந்து ஜாதகர் 200% விகித இன்னல்களை தவிர்க்க இயலாமல் அனுபவிக்கும் சூழ்நிலையை தரும்.

பொதுவாக ஒருவரது சுய ஜாதகத்தில் பொருளாதார ரீதியான நன்மைகளை பெறுவதற்கு  அவரது ஜாதகத்தில் 2,4,6,7,8,10,12ம் வீடுகள் வலிமை பெற்று இருப்பது அவசியமாகிறது, மேற்கண்ட ஜாதகத்தில் 7,10ம் பாவகங்களை தவிர மற்ற பாவகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பது ஜாதகரின் பொருளாதார ரீதியாக ஜாதகர் படும் இன்னல்களை தெளிவு படுத்துகிறது, சுய ஜாதகத்தில் 2ம் பாவகம் வலிமை பெறுவது நிலையான வருமானத்தையும், 4ம் பாவகம் வலிமை பெறுவது சொத்து, வீடு, நிலம், வண்டி வாகனம் சார்ந்த வருமானத்தையும், 6ம் பாவகம் வலிமை பெறுவது குறுகியகால வருமானத்தையும், 7ம் பாவகம் வலிமை பெறுவது வியாபார வழியிலான வருமானத்தையும், 8ம் பாவகம் வலிமை பெறுவது திடீர் என வரும் புதையல் யோகம் அல்லது அதற்க்கு நிகரான வருமானத்தையும், 10ம் பாவகம் வலிமை பெறுவது செய்யும் தொழில் மற்றும் வேலை வழியிலான வருமானத்தையும், 12ம் பாவகம் வலிமை பெறுவது செய்த முதலீடுகளில் இருந்து வரும் பெரிய அளவிலான வருமானத்தையும் குறிக்கும்.

மேற்கண்ட ஜாதகத்தில் ஜாதகர் 7,10ம் பாவக வழியிலான வருமானத்தை மட்டுமே எடுக்க இயலும் எனும் பொழுது ஜாதகரின் திட்டமிடுதல்கள் யாவும் களத்திரம் மற்றும் ஜீவனம் சார்ந்த அமைப்பில் இருப்பது மட்டுமே நலம் தரும் மேலும் ஜாதகரின் களத்திர ஸ்தானம் கால புருஷ தத்துவத்திற்கு 2ம் ராசியாகவும், ஸ்திர மண் தத்துவ அமைப்பில் இருப்பதால், ஜாதகர் அது சார்ந்த  ( நிலம், இடம்,நிலையான உலோக பொருட்கள், தனம் சார்ந்த வியாபாரம், தனது வாக்கின் வழியில் பொதுமக்களுடன் தொடர்பு பெரும் தொழில்கள் )  வியாபாரத்தையும், ஜீவன ஸ்தானம் ஜாதகருக்கு காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு ஸ்திர நெருப்பு தத்துவ அமைப்பில் இருப்பதால் அது சார்ந்த தொழில்களையும் ( தொழில் நுட்பம், மின்சார சாதனம், விவசாய உபகரணம், உணவு தொழில், வீட்டு மின்சாதன பொருட்கள், கலை துறை, ஜோதிடம், கணிதம் ) ஜாதகர் தேர்வு செய்து முன்னேற்றம் காணலாம்.

ஜாதகருக்கு கடந்த கேது திசை வழங்கிய பலன்கள் ( 17/01/1995 முதல் 17/01/2002 வரை )  :

கேது திசை ஜாதகருக்கு 1,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று ஸ்திரமான வெற்றிகளையும், வியாபர விருத்தியையும் வழங்கி இருக்கின்றது, மேலும் 10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று தொழில் ரீதியான முன்னேற்றங்களை தங்கு தடையின்றி வாரி வழங்கி இருக்கின்றது, எனவே கேது திசை ஜாதகருக்கு களத்திர ஸ்தான வழியில் இருந்தும், ஜீவன ஸ்தான வழியில் இருந்தும் சுபயோகங்களை சிறப்பாக வழங்கி இருக்கின்றது.

ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் சுக்கிரன் திசை வழங்கும் பலன்கள் ( 17/01/2002 முதல் 17/01/2022 வரை )  :

தற்போழுது நடைபெறும் சுக்கிரன் திசை ஜாதகருக்கு 2,4,8ம் வீடுகள் பாதகஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 2ம் பாவக வழியிலும், பாதக ஸ்தான வழியிலும் 200% விகித இன்னல்களை வழங்கி கொண்டு இருப்பது ஜாதகருக்கு உகந்தது அல்ல, சுய ஜாதகத்தில் நடைமுறையில் உள்ள  திசை அல்லது புத்தி பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தினால் ஜாதகர் ஏற்று நடத்தும் பாவக வழியில் இருந்து கடுமையான நெருக்கடிகளை சந்திக்க சூழ்நிலைக்கு தள்ளப்படுவர், மேலும் ஜாதகரின் 2ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பாக்கிய ஸ்தானமாக வருவதும், உபய நெருப்பு ராசியில்  அமைவதும் ஜாதகரின் வாழ்க்கையை கேள்வி குறியாக மாற்றும், உதவி செய்ய யாரும் அற்ற சூழ்நிலை, தெளிவற்ற முடிவுகளால் வாழ்க்கையில் அதிக இன்னல்களை தந்துவிடும், எனவே ஜாதகர் முறையான பிரீதி பரிகாரங்களை மேற்கொண்டு வாழ்க்கையில் நலம் பெறுவது அவசியமாகிறது.

சுக்கிரன் திசையில் தற்போழுது நடைபெறும் சனி புத்தியும் ஜாதகருக்கு 6,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இன்னல்களை தருவது ஜாதகருக்கு 6ம் பாவக வழியில் இருந்து எதிரி தொல்லை, வழக்கு, கடன், உடல் நல பாதிப்பையும், 12ம் பாவக வழியில் இருந்து வீண் விரையம் அனைவராலும் தொல்லை, மன நிம்மதி இழப்பு, மன அழுத்தம் என இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலையை தரும். கோட்சார கிரகங்கள் மேற்கண்ட பாவகங்களுக்கு வலிமை சேர்ப்பது ஜாதகருக்கு ஒருவகையில் சில நன்மைகளை ஸ்திரமாக வாரி வழங்கும்.


வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

சனி, 4 மார்ச், 2017

பாதக ஸ்தானம், பாதக ஸ்தான அதிபதி தனது திசையில் தரும் பலன்கள் !


 சர லக்கினத்திற்கு 11ம் வீடு பாதக ஸ்தானமாகவும், ஸ்திர லக்கினத்திற்கு 9ம் வீடு பாதக ஸ்தானமாகவும், உபய லக்கினத்திற்கு 7ம் வீடு பாதக ஸ்தானமாகவும் இறைநிலை நிர்ணயம் செய்து உள்ளது, ஒருவரது ஜாதகத்தில் பாதக ஸ்தான அதிபதியின் திசை நடைமுறைக்கு வரும் பொழுது, இன்னல்களை மட்டுமே தரும் என்று கருதுவது, முற்றிலும் ஜோதிட கணிதத்திற்கு புறம்பானதாகவே "ஜோதிடதீபம்" கருதுகிறது, மேலும் நடைபெறும் பாதக ஸ்தான அதிபதி திசை, சுய ஜாதகத்தில் எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறார் என்ற அடிப்படை விஷயமே அறியாமல், பாதக ஸ்தான அதிபதி திசை என்பதால் இன்னல்களை மட்டுமே தருவார் என்று கற்பனை செய்துகொண்டு ஜாதகபலன் காண முற்படுவதாகவே தோன்றுகிறது, இதைப்பற்றி இன்றைய பதிவில் சற்று சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

அடிப்படையில் நாம் ஒரு விஷயத்தில் தெளிவு பெறுவது அவசியமாகிறது, ஒருவரது ஜாதகத்தில் பாதக ஸ்தானத்திற்கு அதிபதியாக வரும் கிரகம் தனது திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சம காலங்களில் பாதக ஸ்தான அதிபதி என்ற ஒரே காரணத்திற்க்காக இன்னல்களை தரும் என்று கருதுவது மிக மிக தவறான அணுகுமுறை ( ஒரு வேலை பாதக ஸ்தான அதிபதியின் திசை,  பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே ஜாதகருக்கு கடுமையான இன்னல்கள்  நடைமுறைக்கு வரும்)  , ஏனெனில் சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமையையே தனது திசா புத்தி காலங்களில் நவகிரகங்கள் ஏற்று நடத்தும், எனவே ஒருவரது ஜாதகத்தில் பாதக ஸ்தான அதிபதியின் திசை,புத்தி சுய ஜாதகத்தில் எந்த பாவகத்தின் பலனை ஏற்று நடத்துகிறது என்பதில் தெளிவும், அப்படி ஏற்று நடத்தும் பாவகத்தின் வலிமையையும் கருத்தில் கொண்டே பலன் காண முற்பட வேண்டும், குத்துமதிப்பாக பாதக ஸ்தான அதிபதி திசை என்பதால் அவர் இன்னல்கள்தான் தருவார் என்று கருதுவது "குண்டு சட்டியில் குதிரை ஓட்டுவதற்கு " பொருத்தமானதாக மாறிவிடும்.

ஒருவரது சுய ஜாதகத்தில் பாதக ஸ்தான அதிபதியின் திசை வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால், சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு பாதக ஸ்தான அதிபதியின் திசை நடைபெற்றாலும் சுபயோக பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை பாதிக்கப்பட்ட பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே ஜாதகர் சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து இன்னல்களை சந்திக்க நேரும், மேலும் சுய ஜாதகத்தில் யோகாதிபதியின் திசை நடைபெறும் பொழுது, அந்த திசை பாதிக்கப்பட்ட பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தினால் யோகாதிபதியின் திசை என்ற போதிலும் சம்பந்தப்பட்ட ஜாதகர் பாதக ஸ்தான பலாபலன்களையே அனுபவிக்கும் சூழ்நிலையை தரும், தொடர்பு பெரும் பாதக ஸ்தான வழியில் இருந்து, யோகாதிபதி திசையிலும் ஜாதகர் கடுமையான இன்னல்களை சந்திக்க நேரும்.

இதை உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம்:


லக்கினம் : துலாம் 
ராசி : துலாம் 
நட்ஷத்திரம் : ஸ்வாதி 1ம் பாதம்

மேற்கண்ட ஜாதகத்தில் பாதக ஸ்தானம் : சிம்மம் 
மேற்கண்ட ஜாதகத்தில் பாதக ஸ்தான அதிபதி : சூரியன் 
( உண்மையில் மேற்கண்ட ஜாதகத்திற்கு பாதக ஸ்தான அதிபதி வேறு என்பது நன்கு ஜோதிடத்தில் புலமை உள்ளவருக்கு தெளிவாக  தெரியும் )

பாதக ஸ்தான அதிபதியான சூரியன் தனது திசையில் ஏற்று நடத்தும் பாவக தொடர்புகள் அயன சயன ஸ்தானமான 12ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவக பலனை ஏற்று நடத்துவது ஜாதகருக்கு வெளிநாடுகளில் யோக வாழ்க்கை, பயணம் மூலம் நல்ல லாபங்கள், உல்லாசம், சுக போகம், தொழில் மற்றும் இடமாற்றத்தில் விருப்பம், தெய்வீக அனுபவம் என்ற வகையில் சுபயோகங்களை நல்குகிறது.

எனவே சூரியன் பாதக ஸ்தான அதிபதி என்ற போதிலும், தனது திசாபுத்திக்காலத்தில்  வலிமை பெற்ற அயன சயன ஸ்தான பலனை ஏற்று நடத்தி ஜாதகருக்கு சுப யோகங்களை வாரி வழங்குகிறார்.

ஜாதகரின் பாதக ஸ்தானம் 11ம் வீடாகிய சிம்மம், எனவே ஜாதகருக்கு பாதக ஸ்தானத்துடன்  தொடர்பு பெரும் பாவகங்கள் எவை எவை? பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தும் நவக்கிரகத்தின் திசைபுத்தி எது? என்பதில் தெளிவு பெறுவது அவசியமாகிறது, இதை கருத்தில் கொண்டு பார்க்கும் பொழுது மேற்கண்ட ஜாதகருக்கு....

1,3,5,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுகின்றது .

நவகிரகங்களில் ( குரு ) திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் மட்டுமே பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துகிறது, தற்போழுது நடைபெறுவது குரு திசை என்பதால் ( 03/09/2013 முதல் 03/09/2029 வரை ) ஜாதகர் லக்கின பாவக வழியில் இருந்து, வளரும் சூழ்நிலையில் இன்னல்கள் , முரட்டு சுபாவம், அசட்டை தனம், அறிவுபூர்வமற்ற செய்கைகள் மூலம் தானே தன்னை கெடுத்து கொள்ளுதல், தன்னம்பிக்கை அற்ற மனநிலை, பிற்போக்குத்தனமான எண்ணங்கள் என ஜாதகர் பாதக ஸ்தான வழியில் இருந்து கடுமையான இன்னல்களை அனுபவித்து கொண்டுள்ளார் , மேலும் பாதக ஸ்தான வழியில் இருந்து ஜாதகர் 200% விகித இன்னல்களை அனுபவிக்கும் சூழ்நிலையில் இருக்கின்றார் என்பதே உண்மை நிலை, இதை கருத்தில் கொள்வது பாதக ஸ்தானம் தரும் இன்னல்கள் பற்றி தெளிவு பெற உதவும்.

பாதக ஸ்தான அதிபதியின் திசை இன்னல்களை தரும் என்று கருதுவது அடிப்படை ஆதாரம் அற்ற விஷயமாகவே  "ஜோதிடதீபம்" கருதுகிறது எனவே சுய ஜாதக வலிமை உணர்ந்து ஜாதக பலன்காண முற்படுவதே மிக சரியானதாக அமையும்.

குறிப்பு :

நடைபெறுவது பாதக ஸ்தான அதிபதியின் திசை என்றாலும், அவர் ஏற்று நடத்துவது வலிமை பெற்ற பாவகம் எனில், சம்பந்தப்பட்ட ஜாதகர் வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து பாதக ஸ்தான அதிபதியின் திசையில் சுபயோகங்களையே அனுபவிப்பர், இதில் ஏதும் மாற்று கருத்து இல்லை அன்பர்களே.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வெள்ளி, 3 மார்ச், 2017

சனி பெயர்ச்சி பலன்கள் ( 2017 - 2020 ) லக்கினம் கன்னி !


 சுய ஜாதகத்தை ஆளுமை செய்வதில் உயிர் என்று வர்ணிக்கப்படும் இலக்கின பாவகாத்திற்க்கே முதல் உரிமை உண்டு, மேலும் லக்கினத்தை அடிப்படையாக கொண்டும் 12 பாவகங்களின் வலிமையை கருத்தில் கொண்டும் சுய ஜாதகத்திற்கு பலன் காணும் பொழுது துல்லியமான பலாபலன்களை சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு மிக தெளிவாக கூற இயலும், எனவே நவ கிரகங்களின் பெயர்ச்சியை சுய ஜாதக  பாவக வலிமையின் அடிப்படையில் கணிதம் செய்து பார்க்கும் பொழுது சம்பந்தம் பட்ட ஜாதகருக்கு நவ கிரகங்களின் பெயர்ச்சியினால் வரும் நன்மை தீமை பலாபலன்களை பற்றி துல்லியமாக கணிதம் செய்ய இயலும், ( 2017 முதல் 2020 வரை )  கால புருஷ தத்துவத்திற்கு பாக்கிய ஸ்தானமான தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் சனி பகவான்,  தனது சஞ்சார நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கினங்களுக்கு தரும் யோக அவயோக நிகழ்வுகளை பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

கன்னி :

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஆறாம் ராசியான கன்னி ராசியை லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, இந்த சனி பெயர்ச்சி, சுக ஸ்தானமான 4ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார், சஞ்சாரம் செய்யும் இரண்டறை வருட காலத்திற்கு சஞ்சார நிலையில் இருந்தும், 6,7,10 என்ற திருஷ்டி நிலையில் இருந்தும், கன்னி லக்கின அன்பர்களுக்கு வழங்கும் பலன்களை பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம், மானுடம் பயன்பெற வாழ்க்கையில் பல தியாகங்களையும், தன்னுள் இருக்கும் இருக்கும் அணைத்து விஷயங்களையும் தனது குழந்தைக்கு தந்து அவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை தேடும் தாயின் குணத்தை பெற்ற கன்னி இலக்கின அன்பர்களுக்கு, இதுவரை வீர்ய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்து வெற்றிகளை வாரி வழங்கிய சனி பகவான், தற்பொழுது சுக ஸ்தானமான 4ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்வது  மாத்ரு ஸ்தான வழியில் இருந்து சில இன்னல்களை தரக்கூடும், இருப்பினும் சுக போக வாழ்க்கைக்கு குறைவு இருக்காது.

4ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் சனி பகவான் தங்களுக்கு, வண்டி வாகனம், வீடு நிலம் சார்ந்த சிறு மாற்றங்களை தரக்கூடும், பழைய வீடு, வண்டி வாகனம்  போன்றவற்றை மாற்றிக்கொள்ள இது சிறந்த கால நேரமாக கருதலாம், மேலும் உயர்கல்வி சார்ந்த முயற்சிகளை மேற்கொள்வதற்கும் சரியான நேரம் இதுவே, புதியதாக வண்டி வாகனம் வீடு நிலம் வாங்க விரும்புவார்கள், அதற்குண்டான முயற்சிகளை மேற்கொள்ளும் பொழுது உடனடியாக நல்ல பலன் தரும், இருப்பினும் தங்களது உடமைகளை, சொத்துக்களை மற்றவர்களை நம்பி கொடுக்கும் பொழுது சற்று கவனம் தேவை, நம்பிக்கைக்கு உகந்த நபர்களிடம் மட்டுமே தாங்கள் தங்களது உடமைகளையும் சொத்து, வண்டி வாகனத்தையும் தரலாம், இல்லை எனில் தவிர்த்து விடுவது தங்களுக்கு மிகுந்த நன்மைகளையும், திடீர் இழப்புகளையும் தவிர்க்க உதவும், அரசு துறைகளில் பணியாற்றும் அன்பர்களுக்கு நல்ல பதவி உயர்வு உண்டாகும், கல்வி மற்றும் கலைத்துறையில் உள்ள நபர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டமும், யோக வாழ்க்கையும் கிடைக்க பெறுவார்கள், தங்களது வாழ்க்கையில் கவுரவம் அந்தஸ்த்து போன்றவை வெகுவாக மக்கள் மத்தியில் பிரபல்யம் அடையும் யோக காலமாக அமையவிருக்கிறது என்பதால், சனியின் சுக ஸ்தான சஞ்சாரம் தங்களுக்கு நன்மையையே தரும்.

9ம் பாவகத்தை தனது 6ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் கன்னி லக்கின அன்பர்களுக்கு, கல்வி கேள்விகளில் நல்ல அதிர்ஷ்டத்தையும், குடும்ப வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தையும் நல்கும், வெகுநாள் லட்சியங்கள் தங்களுக்கு விரைவாக நிறைவேறும், தனபிராப்பர்த்தி சரளமாக வரும் வாய்ப்பு உண்டாகும், ஆன்மீகத்தில் வெற்றி, சிறந்த பேச்சு திறமை, சமூகத்தில் சிறந்த அந்தஸ்து ஆகியவை தங்களை தேடிவரும், ஆன்மீக அன்பர்களுக்கு சிறப்பு மிக்க யோகங்களை வாரி வழங்கும், தங்களின் தேடுதல்களுக்கு சரியான குரு அமைவார், சகல செல்வாக்கும் மக்களின் ஆதரவு மூலம் பெருகி வரும், தெய்வ அனுகிரகம் மூலம் தங்களின் வாழ்க்கையில் சுபயோகங்கள் பன்மடங்கு பெருகி வளரும், விவசாயம் செய்வோருக்கு திடீர் யோகம் உண்டாகும், விளைச்சல் அதிகரிக்கும், அரசு சார்ந்த  உதவிகள் தங்களை தேடிவரும் வாய்ப்பும் உண்டு, திருமண வாழ்க்கையில் பிரிந்து இருந்த தம்பதியர், ஓர் பெரிய மனிதரின் ஆசியினால் ஒன்று கூடும் வாய்ப்பு உண்டாகும், தங்களின் வேண்டுதல்கள் எதிர்பார்ப்புகள்  நிறைவேறும், குறிப்பாக பொருளாதார வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும்.

 10ம் பாவகத்தை தனது  7ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் கன்னி லக்கின அன்பர்களுக்கு, இதுவரை தொழில் ரீதியாக இருந்த இன்னல்களுக்கு நல்ல தீர்வுகளை வழங்குவார், அதன் அடிப்படையில் முடங்கி கிடந்த தொழில்கள் இனி வரும் காலங்களில் சிறப்பாக ஏற்றமிகு லாபத்துடன் நடைபெறும், சுய தொழில் செய்வோர்க்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும், தொழில் மற்றும் வேலை வாய்ப்பு சார்ந்து எடுக்கும் முயற்ச்சிகளில் நிச்சய வெற்றி கிட்டும், குறிப்பாக கமிஷன், தரகு, எஜென்ஜி தொழில்களில் உள்ள அன்பர்களுக்கு சரளமான பண வசதியும், செல்வாக்கும் அதிகரிக்கும், தங்கள் நினைக்கும் காரியங்கள் நல்ல வெற்றி வாய்ப்பினை நல்கும், தேவைகள் அனைத்தும் பூர்த்தி ஆகும், எதிர்ப்பவர்கள் அனைவரும் தங்களுக்கு பணிந்து போவார்கள், வியாபாரத்தில் வெற்றி, பன்முக  திறமை மூலம் வாழ்க்கையில் ஜீவன ரீதியான வெற்றிகளை பெறுவதற்கு நல்ல வாய்ப்புகள் தங்களை தேடி வரும், குறிப்பாக தங்களின் அறிவு திறன்  மிக சிறப்பாக செயல்படும், தொழில் முன்னேற்றம் என்பது இரண்டு மடங்கு பல்கி பெருகும்.

1ம் பாவகத்தை தனது  10ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் கன்னி  லக்கின அன்பர்களுக்கு, வயிறு சார்ந்த இன்னல்களை சற்று அதிகமாக தரக்கூடும், இதனால் வரும் தொந்தரவுகள் தங்களுக்கு சற்று செலவினத்தை தரகூடும், இருப்பினும் உடல் ரீதியாக வரும் தொந்தரவுகளுக்கு நல்ல தீர்வும், சிறந்த மருத்துவமும் கிடைக்க பெறுவீர்கள், கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும், கடன் சார்ந்த இன்னல்கள் உடனடியாக முடிவுக்கு வரும், எதிர்ப்புகள் அனைத்தையும் சிறப்பாக எதிர்கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெரும் நேரம் இது, தங்களின் செயல்பாடுகளில் சற்று வீரியம் அதிகரிக்க வேண்டிய நேரம் இது, அதிக விழிப்புணர்வுடன் ஒவ்வொரு காரியத்திலும் ஈட்டுபட்டு, நன்மைகளை மட்டும் தேர்வு செய்து முன்னேற்றங்களை தன்னிறைவாக பெரும் யோகம் உண்டாகும், தங்களின் உடல் நலனில் மட்டும் கொஞ்சம் அதிக அக்கறை கொள்ளுங்கள், இதனால் தங்களின் ஜீவன மேன்மை என்பது பலமடங்கு உயர அதிக வாய்ப்பு உள்ளது.

குறிப்பு :

கன்னி லக்கின அன்பர்களுக்கு தற்போழுது நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் 4,9,10,1ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள்  4,9,10,1ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் கன்னி லக்கின அன்பர்களுக்கு மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

சனி பகவான் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் காலங்கள் :

( 26/01/2017 முதல் 21/06/2017 ) வரை
சனி பகவான் தனுசு ராசியிலும்.

( 21/06/2017 முதல் 26.10.2017 ) வரை
சனி பகவான் மீண்டும் வக்கிரக கதியில் விருச்சிக ராசியிலும்.

( 26/10.2017 முதல் 24/01/2020 ) வரை
சனி பகவான் தனுசு ராசியிலும் சஞ்சாரம் செய்கின்றார்.


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

திர்ஷ்டம் அதிர்ஷ்டம் வழங்கும் யோக வாழ்க்கை !


அதிர்ஷ்டம் என்றால் புலன் அறிவுக்கு, புலப்படாமல் வரும் யோக வாழ்க்கை , திர்ஷ்டம் என்றால் புலன் அறிவு மூலம் உணரப்பட்டு வரும் யோக வாழ்க்கை, சுய ஜாதகத்தில் அதிர்ஷ்டம் உண்டா ? என்ற கேள்வி அனைவர் மனதிலும் தோன்றுவது இயற்கையே, அதிர்ஷ்டம் பற்றி அனைவரும் அறிந்தது உண்டு, திர்ஷ்டம் பற்றி யாரும் கேள்விகளை வினவியது இல்லை, சுய ஜாதகத்தில் அதிர்ஷ்டத்தை வழங்குவது லாப ஸ்தானம் எனும் 11ம் பாவகம் எனில், திர்ஷ்டத்தை வழங்குவது மற்ற அனைத்து பாவகங்களும் என்றால் அது மிகையில்லை.

 திர்ஷ்ட லாபங்களை நல்குவதில் முதலிடம் வகிப்பது வீர்ய ஸ்தானம் எனும் 3ம் பாவகமே, அதற்க்கு அடுத்து 1,4,7,10 பாவகங்கள் வலிமை பெறுவது திர்ஷ்ட பலன்களை சிறப்பாக வழங்கும் பாவகங்கள் ஆகும், தனது கடின உழைப்பின் மூலம் தனது புலன் அறிவு மூலம் உணரப்பட்டு வரும் யோக வாழ்க்கை என்பது நிலையாக நிலைத்து இருக்கும், அதிர்ஷ்டத்திற்கு அந்த நிரந்தரம் உண்டா என்பது கேள்விக்குறியே, சுய ஜாதகத்தில் திர்ஷ்ட யோகங்களை பெற்றவர்கள் ஒரு வகையில் கொடுத்து வைத்தவர்களே, ஏனெனில் இது தொடர் வெற்றிகளை வாரி வழங்கி கொண்டே இருக்கும், அதிர்ஷ்டம் போன்று குறுகிய கால நன்மைகளை மட்டும் தருவதல்ல, குறிப்பாக வீர்ய ஸ்தானமான 3ம் பாவக வழியில் இருந்து வரும் திர்ஷ்ட யோக வாழ்க்கை என்பது சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும், மேலும் நிரந்தரமான யோக வாழ்க்கையை நல்குவதில் வீர்ய ஸ்தான வலிமையை விட, லாப ஸ்தான வலிமை குறைவு என்றே சொல்லலாம்.

சுய ஜாதகத்தில் 1,4,7,10ம் பாவகங்கள் வலிமை பெற்றவர்கள் எவரும் அதிர்ஷ்டத்தை விரும்புவதில்லை, ஏனெனில் திர்ஷ்டமாக அவர்களுக்கு வரும் யோகம் அவர்களுக்கு தெளிவாக தெரியும், அதற்க்கு உண்டான திட்டமிடுதல்களுடன் செயல்பட்டு வாழ்க்கையில் தொடர் முன்னேற்றங்களையும், யோகங்களையும் பெறுவார்கள், அதிர்ஷ்டம் அப்படிப்பட்டதல்ல, வருவதும் தெரியாது, செல்வதும் தெரியாது, சுய ஜாதகத்தில் சில பாவகங்கள் வலிமை இழந்து காணப்படும் பொழுது, அவர்களுக்கு அதிர்ஷ்டம் எனும் விஷயம் மிக பெரியதாக தெரியவரும், மேற்கண்டவற்றில் திர்ஷ்டம் அதிர்ஷ்டம் ஆகிய இரண்டு விஷயங்களையும் கலந்து தருவது சுய ஜாதகத்தில் 2,6,8,12ம் பாவகங்கள் என்றால் அது மிகையில்லை.

 சுய ஜாதகத்தில் 2,6,8,12ம் பாவகங்கள் வலிமை பெற்ற அன்பர்கள் ஒரு வகையில் கொடுத்து வைத்தவர்கள், இவர்களுக்கு எதுவும் நிகரில்லை எனலாம், தனது வாழ்க்கையை திர்ஷ்டம், அதிர்ஷ்டம் இரண்டு நிலைகளில் இருந்தும் யோகங்களை பன்மடங்கு பெரும் வல்லமை பெற்றவர்கள், எந்த ஒரு விஷயத்தையும் மிக எளிதாக கையாண்டு வாழ்க்கையில் வெற்றிகளை மட்டுமே சிறப்பாக பெற்றுகொண்டே இருப்பார்கள், 2,6,8,12ம் பாவகங்கள் மறைவு ஸ்தானங்கள் என்ற பொழுதிலும் வலிமை பெரும் பொழுது நிறைவான யோகங்களை வாரி வழங்கும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

சுய ஜாதக ரீதியான தெளிவும், ஜாதக பலாபலன் துல்லியமாக அறிந்து கொள்வதற்கு வழிமுறைகள்..


ஒருவரது சுய ஜாதக பலன் பற்றி தெளிவு பெற நிறைய கணிதங்களும், ஜோதிட கணிதத்தில் நல்ல புலமையும் தேவை, கிரகங்கள் நின்ற நிலையை வைத்தும், நடைபெறும் திசைபுத்தியை வைத்தும், சந்திரன் நின்ற ராசிக்கு கோட்சார கிரக சஞ்சார நிலையை வைத்தும் பலன் சொல்லிவிட முடியும் என்று நினைப்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது, கிழ்கண்ட முறையை கையாண்டால் மட்டுமே சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு தெளிவான ஜாதக பலாபலன்கள் காண இயலும் என்ற அடிப்படை உண்மையை அனைவரும் உணர்வது அவசியமாகிறது.

சுய ஜாதக பலன் காண :

1 சம்பந்தப்பட்ட ஜாதகரின் பிறந்த தேதி, நேரம், இடம் ஆகியவை தெளிவாக தெரிவது மிக முக்கிய அமசமாகும்.

2 ஜாதகரின் பிறந்த குறிப்பின் அடிப்படையில், அவர் பிறந்த நேரம் சரியானதா ? என்பதில் தெளிவு பெறுவது ஜோதிடர்களின் கணித திறமை உள்ளது.

3 ஜாதகரின் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்கள் ஆரம்பிக்கும் நிலை, பாவங்கள் முடிவு பெரும் பாகை ஆகியவை பற்றி தெளிவு வேண்டும்.

4 ஜாதகரின் பாவக நிலை உணர்ந்து நவகிரகங்கள் எந்த பாவகத்தில் அமர்ந்து இருக்கின்றது ( கிரகங்கள் பாவக மாறுதல் அடைந்திருக்க கூடும் என்பதால் ) என்ற தெளிவு பெறுவது மிக மிக முக்கியமாக அமைகிறது.

5 ஜாதகருக்கு ( ஜெனன நேரத்தில் ) லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்கள் பெரும் வலிமை, வலிமை அற்ற நிலை பற்றி துல்லியமாக அறிந்து கொள்வது அவசியமாகிறது, ஏனெனில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்கள் பெரும் வலிமையின் அடிப்படையிலே ஜாதக யோக அவயோக பலன்களை அனுபவிக்க அருகதை உடையவர் ஆகிறார்.

6 நவகிரகங்களின் திசாபுத்திகள் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் உள்ள எந்த எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்ற மிக முக்கியமான விஷயம் தெரிந்திருப்பது ஜோதிடனுக்கு மிக முக்கிய தகுதியாக அமைகிறது ( பெரும்பாலும் இந்த இடத்தில் தவறு நடப்பதால் சுய ஜாதக பலன்கள் துல்லியமாக காண இயலாமல் போய்விடும் ) மேலும் நவ கிரகங்கள் திசாபுத்திகள் தனிப்பட்ட முறையில் நன்மை தீமைகளை வழங்குவதில்லை, சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையையே தனது திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சம காலத்தில் ஏற்று நடத்துகிறது என்பதால், இந்த இடத்தில் ஜாதக பலன் கூறும் பொழுது யாதொரு தவறும் நடைபெறாமல் பார்த்து கொள்வது அவசியமாகிறது.

7 நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஏற்று நடத்தும் பாவகங்களுக்கு கோட்சாரத்தில் நவகிரகங்கள் தரம் பலாபலன்களை கருத்தில் கொள்வது, சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு முக்காலங்களையும் துல்லியமாக உணர்த்த இயலும், இந்த இடத்தில் சந்திரன் நின்ற ராசிக்கு கோட்சார பலன் காண்பது முற்றிலும் தவறான அணுகுமுறை என்பதை உணர்வது அவசியமாகிறது.

8 கால புருஷ தத்துவ அமைப்பிற்கும் சுய ஜாதக லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களுக்கு உண்டான தொடர் பற்றியும் தெளிவு பெறுவது சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையில் சகல வழிகளில் இருந்தும் முன்னேற்றங்களை பெற ஆலோசனை வழங்க முடியும்.

9 கிரக தத்துவம், காலபுருஷ தத்துவம் ஆகியவற்றில் தெளிவு பெற்று இருப்பதும், சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை பற்றி தெளிவு பெற்று இருப்பதும், சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு உடல்நலம், மனநலம்,கல்வி,பொருளாதாரம்,வேலை,தொழில்,ஜீவனம்,வாழ்க்கை துணை, குழந்தைகள், வீடுசொத்துசுகம், வண்டிவாகனம்,யோகம்,அவயோகம்,நோய்நொடி,நிகழ்காலம்,எதிர்காலம் ஆகியவற்றில் மிக துள்ளியாமான பலாபலன்களை எடுத்து உரைக்க உதவி புரியும்.

10 மேலும் சுய ஜாதகத்தில் பாதிக்கப்பட்ட பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை தவிர்க்கவும், வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து நன்மைகளை பெறவும் மிக சரியான கால நேரத்தையும், பாவகங்கள் வழியில் இருந்து யோக வாழ்க்கையை பெற முறையான தீர்வுகளையும் மிக துல்லியமாக வழங்க முடியும் என்பதில் சந்தேகம் இல்லை.

"ஜோதிடம்" என்பது விளையாட்டு காரியமல்ல என்பதில் அனைவரும் தெளிவு பெறுவது அவசியமாகிறது, மேலும் நமது வாழ்க்கையை சிறப்பிக்க இறையருளால் வழங்கப்பட்ட ஓர் அட்சய பாத்திரம் என்பதில் மாற்று கருத்து இல்லை அன்பர்களே! தங்களுக்கு நல்ல "ஜோதிடம்" கிடைப்பதே இறை அருளின் கருணை என்றால் அது மிகையில்லை, எனவே சுய ஜாதக வலிமையை உணர்ந்து செயல்படுங்கள், வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் பெறுங்கள்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

செவ்வாய் தோஷம் திருமண வாழ்க்கையில் இன்னல்களை தருமா ?


கேள்வி :

 8ல் செவ்வாய் தோஷம் திருமண வாழ்க்கையில் இன்னல்களை தருமா ? கீழ்கண்ட செவ்வாய் தோஷம் அற்ற ஜாதகரை திருமணம் செய்துகொண்டால் எனது வாழ்க்கை எப்படி இருக்கும் ?

பதில் : 

ஒருவரது சுய ஜாதகத்தில் நவகிரகங்கள் யாதொரு தோஷத்தையும் தருவதாக கருதவில்லை, ஏனெனில் சுய ஜாதகத்தை இயங்குவதே லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமையே, சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்கள் வலிமை பெரும் பொழுது ஜாதகர் யோக பலன்களையும், லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்கள் வலிமை அற்று இருக்கும் பொழுது ஜாதகர் அவயோக பலாபலன்களையம்  அனுபவிக்கும் நிலையை தருகின்றன, இதுவே எதார்த்தமான உண்மை நிலை, இதில் செவ்வாய் தோஷம் என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒரு விஷயமாகவே  " ஜோதிடதீபம் " கருதுகிறது, இதை பற்றி கிழ்கண்ட ஜாதகங்களை கொண்டு தெளிவு பெறுவோம்.


லக்கினம் : தனுசு 
ராசி : மேஷம் 
நட்ஷத்திரம் : கிருத்திகை 1ம் பாதம் 

தங்களது ஜாதகத்தில் செவ்வாய் பகவான் ஆயுள் பாவகமான 8ம் பாவகத்தில் உள்ளது போல் தேற்றம் இருந்தாலும், பாவக கணிதம் கொண்டு காணும் பொழுது உண்மையில் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்திலே அமர்ந்து இருக்கின்றார், எனவே அவர் 8ம் வீட்டில் உள்ளார் என்பதே தவறான கணிதமாகவும், 7ல் அமர்ந்த செவ்வாய் பகவானால் தங்களுக்கு இன்னல்கள் உண்டா என்பதை பார்க்கும் பொழுது, சுய ஜாதகத்தில் 7ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று மிகவும் வலிமையுடன் காணப்படுகிறது, எனவே களத்திர ஸ்தானம் மிகவும் வலிமை பெறுவது சிறப்பான யோக அமைப்பாகும், அங்கே அமரும் செவ்வாய் பகவானும் தங்களுக்கு யாதொரு தோஷத்தையும், வலிமை இழப்பையும் தரவில்லை என்பதே உண்மை நிலை.

செவ்வாய் தோஷம் என்பது அடிப்படை ஆதாரம் அற்ற ஓர் விஷயமாகவே ஜோதிடதீபம் கருதுகிறது, செவ்வாய் தோஷம் என்று சொன்னதினால் நிறைய திருமணம் நின்று இருக்க கூடுமே அன்றி, செவ்வாய் 2,4,7,8,12ல் அமர்ந்து இருப்பதால் திருமணம் நின்று இருக்க வாய்ப்பு இல்லை, எனவே இனிவரும் காலங்களில் செவ்வாய் தோஷம் என்பதை கருத்தில் கொள்ளாமல், சுய ஜாதக வலிமையை கருத்தில் கொண்டு திருமண வாழ்க்கையை அமைத்துக்கொள்வது சிறப்பான இல்லற வாழ்க்கையை நல்கும், மேலும் தற்போழுது நடைபெறும் ராகு திசை தங்களுக்கு 7ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களையும், 11ம் வீடு வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களையும் தருவது சிறப்பான யோக வாழ்க்கையை சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து வாரி வழங்கும், அடுத்து வரும் குரு திசையும் 7ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களையும், 11ம் வீடு வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களையே தருவதால், எதிர்கால வாழ்க்கை மிகவும் சிறப்பானதாக அமையும்.

தங்களது ஜாதகத்தில் இல்லற வாழ்க்கையை சிறப்பாக அமைத்து தரும்  1,2,5,7,8,12ம் வீடுகளில் 1,7ம் வீடுகள் வலிமை பெற்று இருப்பது யோகங்களையும்,  2,5,8,12ம் வீடுகள் பாதிக்கப்பட்டு இருப்பது சற்று சிரமத்தை தரக்கூடும், எனவே தங்களது வாழ்க்கை துணையாக தேர்வு செய்யும் அன்பரது சுய ஜாதகத்தில் மேற்கண்ட பாவகங்கள் வலிமையாக இருப்பதை கருத்தில் கொண்டு, தங்களது இல்லற வாழ்க்கையை அமைத்து கொள்வது சிறப்பான யோக வாழ்க்கையை தரும், இதை கருத்தில் கொண்டு கீழ்கண்ட வரனின் ஜாதகத்தை ஆய்வு செய்து தெளிவு பெறுவோம்.


லக்கினம் : சிம்மம் 
ராசி : ரிஷபம் 
நட்ஷத்திரம் : மிருகசீரிடம் 1ம் பாதம்.

 இந்த ஜாதகருக்கு இல்லற வாழ்க்கையை சிறப்பாக அமைத்து தரும்  1,2,5,7,8,12ம் வீடுகளில் 1,5ம் வீடுகள் பூர்வ புண்ணிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 2,8,12ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், குறிப்பாக 7ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், தங்களின் இல்லற வாழ்க்கையை சிறப்பிக்கும் அம்சமாகும், எனவே தாங்கள் தேர்வு செய்த ஜாதகம் தங்களின் ஜாதகத்தை விட மிகவும் வலிமையாக இருப்பது வரவேற்க தக்க அம்சமாகும்.

தற்போழுது ஜாதகருக்கு நடக்கும் குரு திசை 2,6,8,12ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் ஜாதகருக்கு ஜீவன ஸ்தான பலனையே ஏற்று நடத்துவது வரவேற்க தக்க அம்சமாகும், அடுத்து வரும் சனி திசையும் 2,6,8,12ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் ஜாதகருக்கு ஜீவன ஸ்தான பலனையே ஏற்று நடத்த இருப்பது சிறப்பான யோகத்தை தரும் அம்சமாகும், எனவே தங்களது தேர்வு மிசிறந்ததாக கருதுகிறோம், மேலும் இருவருக்கும் தற்போழுது, எதிர்வர இருக்கும் திசாபுத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை நடத்துவது  இல்லற வாழ்க்கையில் யோகங்களை வாரி வழங்கும் அமைப்பாக கருதலாம்.

மேலும் தங்களின் ஜாதகப்படியும், தாங்கள் தேர்வு செய்த ஜாதகப்படியும் முறையான பிரீத்தி பரிகாரங்களை செய்து கொண்டடு, வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும்  பெறலாம், வாழ்த்துகள்.

குறிப்பு :

 சுய ஜாதகம் வலிமை பெற்று இருப்பின், ராகுகேது தோஷம், செவ்வாய் தோஷம், களத்திர தோஷம் போன்ற எந்த ஒரு தோஷமும் யாதொரு இன்னல்களையும் தாராது, சுய ஜாதக வலிமை இழக்கும் பொழுது, சுய ஜாதகத்தில் எவ்வித கிரக சேர்க்கை, கிரகயோகம், பரிவர்த்தனை யோகம் இருந்தாலும் யாதொரு பயனும் இருக்காது என்பதில் தெளிவு பெறுங்கள், தங்களது ஜாதகத்தில் களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் இருந்தாலும், அதனால் எந்த ஒரு தோஷமும் தங்களுக்கு இல்லை, சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் வலிமை பெறுவது தங்களின் வாழ்க்கையில் இனிமையான, பொருத்தமான இல்லற வாழ்க்கையை அமைத்து தரும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

காதல் கண்ணை மறைத்தால், வாழ்நாள் முழுவதும் கண்ணீர்தான் மிஞ்சும் !



இன்றைய இளைஞர்களின் அசட்டு துணிச்சலும், தான் திறமையானவன் என்ற எண்ணமும் தனது இளைமை பருவத்திற்கே உண்டான அறியாமையினாலும், வாழ்க்கை துணையை தேர்வு செய்வதில் மிகப்பெரிய தவறுகளை செய்கின்றனர், குறிப்பாக தனது விருப்படி வழக்கை துணையை தேர்வு செய்துகொள்வது என்பது ( ஆண் பெண் ) பேதம் இன்றி நடைபெறுகிறது, இனகவர்ச்சியை மட்டும் கருத்தில் கொண்டு தனக்கு பொருத்தமற்ற காதல் துணையை தேர்வு செய்து, தனது வாழ்க்கைக்கே தானே தீவிணையை தேடிக்கொள்கின்றனர், தனது வாழ்க்கை துணையாக கிழ்கண்ட ஜாதகியை காதலித்து திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும், இந்த ஜாதகியை திருமணம் செய்துகொண்டால் தனது வாழ்க்கையில் முன்னேற்றம் எப்படி இருக்கும் என்று தனது கேள்வியை ஒரு அன்பர் முன்வைத்து இருக்கின்றார், முதலில் பெண்ணின் ஜாதகத்தை ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே, ஜாதகத்தில் உள்ள நிறை குறைகளை சிந்தனைக்கு எடுத்து கொள்வோம்.


லக்கினம் : கடகம்
ராசி : சிம்மம்
நட்சத்திரம் : உத்திரம் 1ம் பாதம் 

திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய பெண்களின் ஜாதகத்தில் வலிமை பெற்று இருக்க வேண்டிய பாவகங்கள் ( 1,2,5,7,8,12 ) ஆகும் பெண்களின் சுய ஜாதகத்தில் மேற்கண்ட 1,2,5,7,8,12ம் பாவகங்கள் வலிமை பெற்று இருப்பது தாம்பத்திய வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றத்தையும், நன்மைகளையும் வாரி வழங்கும், குறிப்பாக பெண்களின் ஜாதகத்தில் மேற்கண்ட பாவகங்கள் மிகவும் வலிமை பெறுவது கணவனுக்கும், குடும்பத்திற்கும் மிகுந்த யோக பலன்களை நல்கும், லக்கினம் வலிமை பெறுவது ஜாதகியின் குணநலன்களையும், உடல் ஆரோக்கியம் மற்றும் ஜாதகியின் செயல்திறனையும் சிறப்பிக்கும், குடும்ப ஸ்தானம் வலிமை பெறுவது, இனிமையான பேச்சு, குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி, நிறைவான வருமானம், கணவருடன் அன்னியோன்னியம், மற்றும் சந்தோஷத்தை தரும், பூர்வ புண்ணியம் வலிமை பெறுவது ஜாதகியின் அறிவு, சமயோசித புத்திசாலித்தனம், குழந்தை பாக்கியம், சூழ்நிலைகளை சிறப்பாக கையாளும் வல்லமை என்ற வகையில் சிறப்புகளை தரும், களத்திர ஸ்தானம் வலிமை பெறுவது, கணவனுக்கு யோகத்தையும், இணக்கமான நல்லுறவையும், ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் வல்லமையையும் தரும், திருமண பந்தத்தின் புனிதத்தை காக்கும், ஆயுள் பாவகம் வலிமை பெறுவது ஜாதகியின் மூலம் அவரது கணவர் பெரும் யோகங்களையும், தீர்க்க சுமங்கலி யோகத்தையும், நீண்ட ஆயுள் மற்றும் திடீர் அதிர்ஷ்டம் மூலம் சிறப்பான வெற்றிகளையும் வாரி வழங்கும், அயனசயன ஸ்தானம் வலிமை பெறுவது தாம்பத்திய இன்பத்தையும், திருப்தியான யோக வாழ்க்கை, மனநிறைவுடன் கூடிய சந்தோஷத்தை தரும், திருமண பந்தத்தில் பிரிவு இல்லா நிலையை தரும், ஆக வாழ்க்கை துணையாக வரும் பெண்ணின் ஜாதகத்தில் மேற்கண்ட பாவகங்கள் வலிமையை உறுதி செய்து கொண்டு அதன் பிறகு, திருமண பந்தத்தில் இணையும் அன்பர்களுக்கு, திருமண வாழ்க்கையில் வெற்றி மேல் வெற்றி நிச்சயம், இனி மேற்கண்ட ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையை பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

1,2,7ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகிக்கு லக்கின வழியில் இருந்து அதிக மனஉளைச்சலுக்கும், போராட்டத்திற்கும் ஆளாக்கும், எதிலும் திருப்தி அற்ற நிலை, மனக்கிலேசம், நம்பிக்கை அற்ற தன்மை, உறுதியில்லா மனப்பாண்மையை தரும், குடும்ப ஸ்தானம் பாதிக்கப்படுவது, குடும்ப வாழ்க்கையில் திருப்தி இல்லை, வீண் வாக்குவாதம், பொருளாதார நெருக்கடி, நிம்மதியின்மை, எப்பொழுதும் சண்டை சச்சரவு, குடும்ப வாழ்க்கையில் கடுமையான பாதிப்புகள் என்ற வகையில் இன்னல்களை தரும். களத்திர ஸ்தானம் வலிமை இழப்பது ஜாதகி தனது கணவர் வழியில் இருந்து கடுமையான மனபோராட்டத்தை சந்திக்கும் சூழ்நிலையை தரும், ஒற்றுமை இன்மை, தாம்பத்திய வாழ்க்கையில் இன்னல்கள், வீண் வெறுப்பு, திருப்தி அற்ற நிலை, அனைத்திலும் குற்றம் காணும் சுபாவம் என ஜாதகியை இல்லற வாழ்க்கையில் இணக்கம் காண்பதற்கு உண்டான வாய்ப்பை தாராது, எனவே ஜாதகியின் இல்லற வாழ்க்கை துன்பத்தின் விளிம்பில் வந்து நிற்கும்.

5ம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது நல்ல புத்திர சந்தானத்தை தாராது, ஜாதகியின் அறிவு திறனும் மட்டுப்படும், முட்டாள்தனமான செய்கைகள் மூலம் ஜாதகி தனது வாழ்க்கையை தானே கெடுத்துக்கொள்வார், அனைத்திலும் தோல்வி என்ற நிலையை தரும், குல தேவதையின் ஆசியை பெற ஜாதகி பகிர்தனா முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலையை தரும், தனக்கு வரும் இன்னல்களை ஜாதகியால் தவிர்க்க இயலாது, புத்திர பாக்கியத்திலும் இன்னல்களை தரும்.

8ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகிக்கு பரதேச ஜீவனத்தை தரும், தனது பூர்வீகத்தை விட்டு வெளியில் சென்று ஜீவிக்கும் தன்மையை தரும், குறிப்பாக இந்த அமைப்பு ஜாதகிக்கு நன்மையை தரும் அமைப்பு அல்ல, கணவன் வழியில் இருந்து தானும், தனது வழியில் இருந்து கனவரும் கடுமையான இழப்புகளை சந்திக்கும் நிலையை தரும்.

12ம் வீடு குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, குடும்ப வாழ்க்கையில் வரும் கடுமையான பாதிப்புகளை உறுதிப்படுத்துகிறது, குறிப்பாக தனம் சார்ந்த தொந்தரவுகள் கடுமையான நெருக்கடிகளை தரும், அயனசயன சுகம் என்பது ஜாதகிக்கு பெரும் நெருக்கடிகளை தரும், வாழ்க்கையை கேள்விக்குறியாக மாற்றும் தன்மை பெற்றது மேற்கண்ட பாவக தொடர்பு, எனவே ஜாதகியை காதல் திருமண செய்து கொள்ள விரும்பும் அன்பரது நிலை மிகுந்த கவலைக்கிடமாக மாற அதிக வாய்ப்பு உள்ளது, ஒருவேளை ஜாதகியை காதல் திருமணம் செய்துகொள்ள விரும்பும் அன்பரது சுயஜாதகம் மிக மிக வலிமையுடன் இருந்தால் மட்டுமே, இல்லற வாழ்க்கை ஓரளவிற்கு நலம் பெரும்.

குறிப்பு :

திருமணம் செய்வதற்கு முன்பு தம்பதியர் இருவரும், தமது சுய ஜாதக வலிமையை உணர்ந்து இல்லற வாழ்க்கையில் இணைவது, சகலவிதங்களில் இருந்து நன்மைகளை தரும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வியாழன், 16 பிப்ரவரி, 2017

ஆருடம் வழங்கும் தீர்வு ( தீர்ப்பு )


"ஜோதிடதீபம்" ஆருடம் கூறியபடியே சரியாக அமைந்த தீர்ப்பு ....

கடந்த 13ம் தேதி தமிழக மக்களின்  மனதில் முக்கியஸ்தர் ஒருவருக்கு வரும் தீர்ப்பு எப்படி இருக்கும்? என்று எழுந்த கேள்விகளுக்கு உண்டான பதிலாக குருவின் ஆசியுடன் ஒரு ஆருடத்தை " ஜோதிடதீபம்" பதிவு செய்து இருந்தது, அதற்க்கு அடுத்தநாளே ஆருடத்தை மெய்பிக்கும் தன்மையாகவும், அவரது எதிர்காலத்தை நிர்ணயம் செய்யும் விதமாகவும், சம்பந்த பட்ட நபருக்கு தீர்ப்பு அமைந்து இருந்தது, ஆருடம் கேட்ட நேரமும் அதில் இருந்த சிறப்பு சாராம்சங்கள் பற்றியும், ஆருட லக்கினத்திற்கு அமைந்த பாவக தொடர்புகள் பற்றியும், இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே !



ஆருட கேள்வி :

சம்பந்தப்பட்ட நபருக்கு வரும் தீர்ப்பு எப்படி அமையும்? அவரின் எதிர்காலம் என்னவாகும் ?

ஆருட பதில் :

ஆருட நேரத்தில் அமைந்த லக்கினம் : கடகம்
ஆருட நேரத்தில் அமைந்த ராசி : கன்னி
ஆருட நேரத்தில் அமைந்த நட்சத்திரம் : உதிரம் 2ம் பாதம்.
ஆருட நேரத்தில் அமைந்த பாவக தொடர்புகள்

1,3,4,6,7,9,10,12ம் வீடுகள் விறைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம்.
2,8ம் வீடுகள் திடீர் இழப்பை தரும் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம்.
5,11 வீடுகள் 200 % விகித இன்னல்களை தரும் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம்.

1,3,4,6,7,9,10,12ம் வீடுகள் விறைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது  லக்கின வழியில் கலையில் நாட்டம், தனிமை விரும்பி ( சேராமாரி ) முதலீட்டில் விருப்பம், அதிக தொல்லை, பொறாமை, மறைமுக எதிரி, தடங்கல், அடிக்கடி வைத்திய செலவு, சிறை செல்லுதல், ஏமாற்றம், கொள்ளை அடித்தல், இராஜ துரோகம், சதி செய்தல் என்றவகையில் பலனை தரும்,எனவே ஆருட லக்கினம் என்பதே கடுமையாக பாதிக்கப்படுகிறது ( ஆரூடத்தில் லக்கினம் மிக முக்கியமாக கருதப்படும் ) , மேலும் ஆருட லக்கினாதிபதியான செவ்வாய், லக்கினத்திற்கு 8ல் மறைவு அடிப்படையிலேயே லக்கினமும் பாதிக்கப்பட்டு, லக்கினாதிபதியும் பாதிக்கப்படுவது, அவர் அனுபவிக்கும் இன்னல்களுக்கு கட்டியம் கூறுகிறது, 3ம் பாவகம் பாதிக்கப்படுவது அவரது முயற்சியில் பெரும் தோல்வியையும், 4ம் பாவகம் பாதிக்கப்படுவது விபத்து, சொத்துக்களை இழத்தல், தடங்கல், வறுமை, துரதிர்ஷ்டம், மனக்குழப்பம், ஜெயில் வாழ்க்கை, அதிக வேலைப்பளு, விஷ பாதிப்பு என்ற வகையிலும், 6ம் பாவகம் பாதிக்கப்படுவது கடன் கொடுத்தவர்களால் தொல்லை, கடன் பெற்றவர்களால் இன்னல்கள், வேலையாட்கள் விசுவாசிகள் மூலம் அதிக தொல்லை, வேலை நிறுத்தம், தேவையற்ற செலவு, எதிர்பாராத மருத்துவ செலவு, 7ம் பாவகம் பாதிப்படுவது நோயுற்ற வாழ்க்கை துணை, அரசியல் சிக்கல்கள், கூலியாட்கள் மூலம் அதிக தொல்லை, அனைத்திலும் தோல்வி, அதிக இன்னல்கள் என்ற வகையிலும், 9ம் பாவகம் பாதிக்கப்படுவது பித்ருக்கள் ஆசி இன்மை, சரியான நேரத்தில் அனைவரும் காலைவாரிவிடும் சூழ்நிலை, முட்டாள் தனமான செய்கைகள் மூலம் தன்னை ஓர் அறிவிலி என்று நிரூபித்தால், மற்றவர்களை நம்பி சோரம் போகுதல், உடன்பிறப்பை விட்டு, பிறந்த ஊரை விட்டு பிரிதல் என்ற வகையில் இன்னல்களையும், 10ம் பாவகம் பாதிக்கப்படுவது வெளியூர், வெளிநாட்டில் ஜீவனம், அடிக்கடி ஜீவன மாற்றம், வரவைவிட செலவுகள் அதிகம், தவறான வழியில் பணம் ஈட்டுதல், கவுரவ குறைவான காரியங்களில் ஈடுபடுதல், என்றவகையில் இன்னல்களையும், 12ம் பாவகம் பாதிக்கப்படுவது, நிறைய வீண் செலவு, சூது மூலம் பேரிழப்பு, திருப்தி இல்லா வாழ்க்கை, அனைவராலும் தொல்லை, விபத்து  என்ற வகையில் கடுமையான இன்னல்களை தரும், 12ம் வீடு மிதுனத்தில் ஆரம்பித்தாலும் பெரும்பாலும்   கடக ராசியிலே வியாபித்து இருப்பது ஆருடத்தால் சம்பந்தப்பட்ட்டவர் அனுபவிக்கும் மன ரீதியான கடுமையான போராட்டங்களை எடுத்துக்காட்டுகிறது, குறிப்பாக மனபயம், மனப்போராட்டம், மனக்குழப்பம் ஆகியவற்றை தெளிவு படுத்துகிறது.

2,8ம் வீடுகள் திடீர் இழப்பை தரும் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, 2ம் பாவக வழியில் இருந்து இன்ஷுரன்ஸ் மூலம் லாபம், குடும்பத்தில் இன்னல்கள்,  வாக்கு தவறும் தன்மை, வருமான பாதிப்பு என்ற வாழ்க்கையிலும், 8ம் பாவக வழியில் இருந்து நல்ல ஆயுள், வாழ்க்கையில் ஏமாற்றம், துயரம், விபத்து, வியாதி, திருப்தி அற்ற மன நிலை, அனைத்தையும் திடீரென இழக்கும் தன்மை எல்லாவகையிலும் இன்னல்களை தரும்.

5,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்நதம் பெறுவது, (  எதிர்காலம் ஒன்று இல்லை என்பதை பாதக ஸ்தான தொடர்பு தெளிவுபடுத்துகிறது ) சமயோசித புத்திசாலித்தனம் இல்லாத தன்மை, வாய்ப்புகளை பயன்படுத்த தெரியாமல் வீணடிக்கும் தன்மை, தனது வாழ்க்கைக்கு தானே எதிர்ப்புகளை உருவாக்கி கொள்ளும் தன்மை, குலதெய்வ ஆசிர்வாதம் இல்லாததால் வரும் இன்னல்களுக்கு தீர்வு காண இயலாமல் சிரமப்படும் தன்மை, விதி தரும் இன்னல்களில் இருந்து விடுபட முடியாமல் இன்னலுறும் தன்மை, சுய அறிவு இன்றி  மற்றவர்கள் அறிவுரையை கேட்டு வாழ்க்கையில் இன்னலுறும் தன்மை என்ற வகையில் இன்னல்களை தரும், 11ம் பாவக வழியில் இருந்து அதிர்ஷ்டம் இன்மை, துரதிர்ஷ்ட வாழ்க்கை, எதிர்காலம் சூன்யம் ஆகுதல், பிற்போக்கு தனமான செய்கைகள், தன்னம்பிக்கை இன்மை, அவநம்பிக்கையினால் எதிர்கால வாழ்க்கையினை எதிர்கொள்ள இயலாமல் வாழ்க்கையில் இன்னலுறும் தன்மை, அனைத்திலும் தோல்வி என்ற வகையில்  அவயோகத்தையும் வழங்கு, மேலும் பாதக ஸ்தானம் என்பதால் 200 சதவிகித இன்னல்களை தரும்,  ஆரூடத்தில் 1,5,9ம் பாவகங்கள் வலிமை அற்று  இருப்பது மிக மோசமான விளைவை தரும் அமைப்பாகும், இந்த நிலை 17/12/2020 வரை நீடிக்கிறது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696