சனி, 16 ஏப்ரல், 2022

துலாம் 2022-2023 ராகுகேது பெயர்ச்சி பலன்கள் !


மேஷ ராசியில் ராகுபகவான் சஞ்சாரம் : 

 சாயா கிரகங்களான ராகுகேது பெயர்ச்சியின் மூலம் 100%சதவிகிதம் சுபயோக பலன்களை மட்டுமே சுவீகரிக்கும் லக்கினங்களில் ஒன்றான துலாம் ராசி மற்றும் லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு இனிவரும் காலம் சுபயோக காலமே என்றால் அது மிகையில்லை, துலாம் லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் சாயா கிரகமான ராகு பகவான், தான் சஞ்சாரம் செய்யும் 7ம் பாவகத்தை 100% விகிதம் வலிமை சேர்க்கும் அமைப்பில் தனது இயக்க நிலையை செயல்படுத்தும் காரணத்தால், துலாம் லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு திருமண யோகம் வெகு சிறப்பாக அகைகூடி வரும், கூட்டு தொழில் வழியில் இருந்து அபரிவிதமான சுபயோகங்களும் லாபங்களும் வந்து சேரும், தனது தனி திறனை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் இனிவரும் காலங்களில் வெகு சிறப்பாக  அமையும், ஜாதகரின் செயல்திறனும் சுறுசுறுப்பும் மிகப்பெரிய வெற்றி வாய்ப்புகளை வாரி வழங்கும், அரசியல் ராணுவம் காவல் பாதுகாப்பு தீயணைப்பு மருத்துவம் போன்ற துறைகளில் பணியாற்றி கொண்டு இருக்கும் அன்பர்களுக்கு இனிவரும் காலம் அதீத வெற்றிவாய்ப்புகளுடன் கூடிய நன்மைகளையும் முன்னேற்றங்களையும் வாரி வழங்கும், தனது சுய சிந்தனை திறன் மேலோங்கும், மற்றவர்களை சார்ந்து  வாழாமல் தனது சுய உழைப்பின் மூலம் வெற்றிக்கொடி நாட்டும் யோகம் உண்டாகும், புதிய வாய்ப்புகள், புதிய சிந்தனைகள் தங்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை, எதிர்பாராத அதிர்ஷ்டம் தங்களின் வாழ்க்கையை பன்மடங்கு முன்னேற்றத்தை நோக்கி அழைத்து செல்லும், தன்னம்பிக்கை, மனோதைரியம், எதிர்ப்புகளை வெற்றிகொள்ளும் தன்மை, சுய முன்னேற்றத்தில் அதிக ஆர்வம், தொழில் நுட்பம் சார்ந்த அறிவு விருத்தி பெரும் தன்மை என்ற வகையில் சகல சௌபாக்கியங்களையும் ராகுவின் களத்திர ஸ்தான சஞ்சாரம் வழங்கும்.

 துலாம் லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு 7ம் பாவக வழியில் இருந்து தனது  வாழ்க்கை துணை மூலம் மிக பெரிய நன்மைகள் நடைமுறைக்கு வரும், இல்லற வாழ்க்கையில் இன்னல்களை சந்தித்துக்கொண்டு இருந்த அன்பர்களுக்கு சிறப்பான இல்லற வாழ்க்கை அமையும், பிரிந்து இருந்த தம்பதியர் ஒன்று சேர்ந்து வாழ்க்கையை வெற்றிகொள்ளும் தருணம் இது புது வாழ்க்கை தங்களின் மகிழ்ச்சிக்கு அடிப்படை ஆதாரமாக அமைவதுடன், எதிர்பாராத நன்மைகளையும் பெறுவீர்கள் குறிப்பாக நல்ல புத்திர பாக்கியம், புதிய சொத்துக்களை வாங்கும் யோகம், புதிய தொழில் அல்லது வேலைவாய்ப்பை பெரும் யோகம் உண்டாகும், நண்பர்கள் உதவி, தொழிலாளர்கள் ஒத்துழைப்பு, கூட்டாளிகள் ஆதரவு என சிறப்பான யோக வாழ்க்கையை பெறுவதுடன், தனது திட்டமிடுதல்களை வெகு சிறப்பாக நிறைவேற்றும் யோகம் உண்டாகும், சுய சிந்தனை வழியிலான நடவடிக்கைகள் வெகு அற்புதமான நன்மைகளை முழுமையாக வாரி வழங்கும், எதிர்பார்ப்புகள் நிறைவேறும், முயற்சிக்கான பலன்கள் முழுமையாக வந்து சேரும், பொதுமக்கள் ஆதரவு வழியிலான வெற்றிகள் தங்களின் சமூக அந்தஸ்த்தை அதிகரிப்பதுடன் உயர் பதவிகளையும் அலங்கரிக்கும் யோகம் உண்டாகும், தன்னிடம் உள்ள தொழில்நுட்ப அறிவு துலாம் லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு எதிர்பாராத புதிய வாய்ப்புகளை வழங்குவதுடன், பொருளாதார முன்னேற்றத்தை வெகு சிறப்பாக வாரி வழங்கும் என்பதில் சந்தேகமில்லை, வெளிநாடு பயணங்கள் மூலம் மிக பெரிய அளவிலான நன்மைகளையும் திறமைக்கான அங்கீகாரமும் நிச்சயம் கிடைக்க பெறுவீர்கள், ஏற்றுமதி இறக்குமதி தொழில் வழியிலான நன்மைகள் என்பது வெகு அற்புதமாக அமைவதுடன், அதீத லாபமும் உண்டாகும், தொழில் வழியிலான நன்மைகள் பன்மடங்கு தங்களுக்கு முன்னேற்றத்தை வாரி வழங்கும், தனி திறமை கொண்டு இனிவரும் 18மாதமும் வெற்றிகளை சுவீகரிப்பீர்கள், ராகு பகவானின் களத்திர ஸ்தான சஞ்சாரம் தங்களுக்கு ராஜயோக பலன்களை தன்னிறைவாக வாரி வழங்கும்.

துலாம் ராசியில் கேது பகவான் சஞ்சாரம் :

துலாம் லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு ஜென்ம லக்கினமான 1ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் சாயா கிரகமான கேது பகவான், தான் சஞ்சாரம் செய்யும் பாவகத்தை 100% விகிதம் வலிமை சேர்ப்பது வரவேற்கத்தக்கது, பொதுவாக ஜென்ம லக்கினத்தில் சாய கிரகமான ராகு மற்றும் கேது சஞ்சாரம் செய்தால் முழு அளவில் நன்மைகளை மட்டுமே வழங்கும், அது பிறப்பு ஜாதகம் என்றாலும் சரி, கோட்சார ரீதியாக என்றாலும் சரி, அந்த வகையில் ஜென்ம லக்கினத்தில் சஞ்சாரம் செய்யும் கேது பகவான் துலாம் லக்கின அன்பர்களுக்கு உடல் நலம் வெகு சிறப்பாக அமையும், மனவலிமை அதிகரிக்கும், சுய ஞானம் வெளிப்படும், அறிவு சார்ந்த முயற்சிகள் வெற்றியை வழங்கும், சமயோசித புத்திசாலித்தனம் வெகு அற்புதமாக வேலை செய்யும், இயற்கையாகவே சுய நலத்துடன் பொதுநலன் கலந்து சிந்திக்கும் துலாம் லக்கின அன்பர்களுக்கு கேதுவின் சஞ்சாரம் தானும் நலன் பெற்று தன்னை சார்ந்தவர்களும் நன்மை பெரும் அமைப்பிலான காரியங்களில் ஈடுபடுவார்கள், வியாபாரிகளுக்கு அற்புதமான ராஜயோக பலன்களை வழங்குவது கவனிக்கத்தக்கது, தொட்டது அனைத்தும் துலங்கும், வெற்றிபடிக்கட்டுகளில் வீறுநடையிட்டு செல்லும் யோகம் உண்டாகும், தன்னிறைவான வருமான வாய்ப்பை பெறுவதுடன், அனைவரையும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் அற்புதமான வாய்ப்பை பெற்று மகிழ்வார்கள், இவர்களின் பேச்சுக்கு அனைவரும் செவி சாய்ப்பார்கள், மாற்று மதத்தினர் மூலம் மிகப்பெரிய அளவிலான ஜீவன  முன்னேற்த்தை பெரும் யோகம் உண்டாகும், அயல்நாடுகளில் தொழில் ரீதியான நடவடிக்கைள் மூலம் புதிய தொழில் முதலீடு செய்யும் யோகம், நீண்ட கால லட்சியங்களை தன்னிறைவாக வெற்றிகொள்ளும் வாய்ப்பு, கடல் கடந்து ஜீவனம் செய்யும் வாய்ப்பு, திரைகடல் ஓடி திரவியம் தேடும் தன்மை என்றவகையில் அபரிவிதமான யோகங்களை கேது பகவான் தனது ஜென்ம லக்கின சஞ்சார நிலையில் இருந்து வாரி வழங்குவர் என்பதில் சந்தேகம் இல்லை.

 ஜென்ம லக்கினத்தில் வலிமை பெற்று சஞ்சாரம் செய்யும் கேதுபகவான் துலாம் லக்கின அன்பர்களுக்கு நினைத்த காரியங்களில் வெற்றியை தருவதுடன் ஆன்மீகத்தில் அபரிவிதமான நன்மைகளையும் வழங்குவார், பல புண்ணிய திருத்தலங்களுக்கு மிக எளிதாக சென்றுவரும் யோகம் உண்டாகும், மனமும் உடலும் தங்களுக்கான ஒத்துழைப்பை வெகு அற்புதமாக வாரி வழங்கும், எதிரிகள் தொந்தரவு அகன்று அவர்களின் ஆதரவும் தங்களுக்கு கிடைக்கும், நேற்றுவரை எதிரியாக இருந்தவர்கள் இன்று நண்பர்களாவர், உதவி செய்ய யாருமற்ற நிலை மாறி சகல நிலைகளில் இருந்தும் உதவிகள் தேடிவரும், உடலிலும் முகத்திலும் புத்துணர்ச்சி அதிகரிக்கும், வருமுன் யூகிக்கும் அறிவுத்திறன் அதிகரிக்கும், விழிப்புணர்வு சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு மேலோங்கும், பல தொழில் செய்யும் யோகமும், தெய்வீக ஆற்றல் மூலம் சுபயோகங்களை சுவீகரிக்கும் சந்தர்ப்பமும் தேடி வரும், பொது வாழ்க்கையில் வெற்றி உண்டு பொதுமக்கள் ஆதரவும் உண்டு, சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும், நிலையான அதிகார பதவியும் இந்த நேரத்தி கிடைப்பதற்கான யோகம் உண்டு, எதிர்பாலின சேர்க்கை வழியில் பல முன்னேற்றங்களை தாங்கள் சுவீகரிக்க முடியும், குழந்தைகள் வழியில் இருந்தும், வாழ்க்கை துணை வழியில் இருந்தும் சுபயோகங்கள் நடைமுறைக்கும் வரும், இருப்பினும் தோல் மற்றும் ஒவ்வாமை போன்ற தொந்தரவுகள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு, நோய் எதிர்ப்பு திறன் அதிகரிப்பதுடன், உடல் நலம் வெகு அற்புதமாக அமையும், இதுவரை இருந்துவந்த உடல் வருத்தங்கள் யாவும் நீங்கும் என்பது கவனிக்கத்தக்கது, கேதுவின் ஜென்ம  லக்கின சஞ்சாரம் வியாபார விருத்தியை தருவதுடன், உடல் நலம் மனவலிமை மேம்பட செய்வார் இனிவரும் 18 மாதமும்.

குறிப்பு :

மேற்சொன்ன ராகுகேது பெயர்ச்சி பலன்கள் என்பது தங்களது சுய ஜாதகத்தில் தற்போழுது நடைபெறும் திசா புத்தி களத்திர ஸ்தானம் மற்றும் ஜென்ம லக்கின பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைபெறும் திசா புத்தி களத்திர ஸ்தானம் மற்றும் ஜென்ம லக்கின பலனை ஏற்று நடத்தவில்லை எனில் கோட்சார ரீதியாக யாதொரு நன்மை தீமையும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில்கொள்க 

வாழ்க வளமுடன் 

ஜோதிடன் வர்ஷன் 

0944335569

வியாழன், 7 ஏப்ரல், 2022

கன்னி 2022-2023 ராகுகேது பெயர்ச்சி பலன்கள் !

 


மேஷ ராசியில் ராகுபகவான் சஞ்சாரம் : 

 கன்னி லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் சாயா கிரகமான ராகு பகவான், தான் சஞ்சாரம் செய்யும் 8ம் பாவகத்தை 100% விகிதம் வலிமை சேர்க்கும் அமைப்பில் தனது இயக்க நிலையை செயல்படுத்தும் காரணத்தால், கன்னி லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டங்கள் வந்து சேரும், புதையலுக்கு நிகரான சொத்து சுக சேர்க்கை உண்டாக அதிக வாய்ப்பு உள்ளது என்பதை எண்ணி கன்னி லக்கின அன்பர்கள் மகிழ்ச்சி கொள்ளலாம், தனது வாழ்க்கை துணை, தனது நண்பர்கள் கூட்டாளிகள், பொதுமக்கள், தனது தனி திறமை கொண்டு சுபயோகங்களை முழுமையாக சுவீகரிக்கும் யோகத்தை ராகு பகவான் வாரி வழங்குவது வரவேற்கத்தக்கது, மேலும் கன்னி லக்கினத்தை சார்ந்த அன்பர்களின் தொழில்நுட்ப அறிவு இவர்களுக்கு மேலைநாடுகளில் அதீத செல்வாக்கையும் வரவேற்பையும் தன்னிறைவாக வாரி வழங்கும் என்பதால் பொறியியல் துறை மற்றும் தகவல் தொழிநுட்ப துறை சார்ந்தவர்களுக்கு இது ஒரு அற்புதமான நேரம், தங்களின் புதிய முயற்சிகள் யாவும் மிகப்பெரிய அளவிலான வெற்றிகளை தரும், ராணுவம், காவல், தீயணைப்பு, மருத்துவம் மற்றும் பாதுகாப்பு துறையை சார்ந்த கன்னி லக்கின அன்பர்களுக்கு திடீர் பதவி உயர்வும், எதிர்பாராத அதிர்ஷ்டவாய்ப்பும் மிகப்பெரிய நன்மைகளை வாரி வழங்கும், போராட்ட வாழ்க்கையை எதிர்கொண்டு இன்னல்களை அனுபவித்த கன்னி லக்கின அன்பர்களுக்கு இனிவரும் காலம் மிகுந்த சுபயோகங்களை நல்கும், தங்களது வாழ்க்கை துணை மற்றும் நண்பர்கள் வழி ஆதரவும் ஒத்துழைப்பும், இனிவரும் காலங்களில் தங்களை ஓர் சாதனையாளராக மாற்றும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை, ஆயுள் விருத்தி பெரும், உடல்நலம் மேலோங்கும், எதிர்பாராத சுப நிகழ்வுகள் தங்களுக்கு அதீத மனமகிழ்வை தரும். 

 எதிர்பாலின சேர்க்கை வழியிலான பொருளாதார முன்னேற்றமும், தனது வாழ்க்கை துணையிலான வருமான வாய்ப்பும் தேடிவரும், தனது உறவுகள் வழியில் இருந்து வரும் சொத்துக்களை ஆளுமை செய்யும் யோகம் உண்டாகும், உயில் கிரசுவிட்டி போனஸ் போன்ற நிலைகளிலும் காப்பீடு மற்றும் லாட்டரி யோகம் போன்றவற்றில் இருந்தும் பொருளாதார முன்னேற்றம் உண்டாகும், புதிய நிலையான சொத்துக்களை வாங்கும் யோகம் உண்டு, அதிகாரம் கொண்டு அனைத்தையும் சாதிக்கும் வல்லமையை ராகு பகவான் இனிவரும் காலங்களில் தங்களுக்கு வாரி வழங்குவார், எதிர்ப்புகள் அனைத்தும் தங்களுக்கு சாதகமான பலன்களை வழங்கும், சுரங்கம் மற்றும் கனிம பொருட்கள், கனரக வாகன பொருட்கள், எரிபொருள் சார்ந்த அனைத்து பொருட்கள் வழியில் இருந்தும் தங்களுக்கு வருமானம் அபரிவிதமானதாக வந்து சேரும் , பொது வாழ்க்கையில் உள்ள அன்பர்களுக்கு தாங்களே எதிர்பாராத வண்ணம் பொறுப்புகளை வழங்கி தங்களுக்கான அங்கீகாரத்தை உறுதி செய்வதுடன் அதிகாரத்தையும் சிறந்த நிர்வாக திறனையும் மேம்படுத்துவார், வெளிநாடுகளில் இருந்து வரும் தொழில்நுட்ப கருவிகள் மூலம் தொழில் வளர்ச்சியுடன் கூடிய வருமான வாய்ப்பும் அதிகரிக்கும், மருத்துவ உபகரணம் சார்ந்த தொழில் செய்வோருக்கான யோககாலம் இதுவே, மறைமுக தொழில்களில் பணவரவையும், சட்டவிரோத செயல்கள் மூலம் செல்வசேர்க்கையையும் தன்னிறைவாக வாரி வழங்குவதுடன், புராதான பொருட்கள் மூலம் அதிர்ஷ்ட வாய்ப்பை வாரி வழங்குவார், ரத்தினம் தங்கம் வெள்ளி போன்ற பொருட்கள் மூலம் தங்களின் வாழ்க்கை வெகு பிரகாசம் அடையும்.

அந்தரங்க வாழ்க்கை தங்களுக்கு எதிர்பாராத நன்மைகளை செய்வதுடன், ரகசியங்கள் காக்கப்படும், ஆழ்மனம் தியானம் போன்றவற்றால் வாழ்க்கையில் உண்மையான ஆன்மீகத்தை கண்டுணரும் வாய்ப்பும் உண்டாகும், செய்தொழிலில் வழியிலான முன்னேற்றம் வெகு சிறப்பாக அமையும், தங்களின் செயல்பாடுகள் அனைத்தும் மற்றவர்களின் பரராட்டுக்குரியதாக மாறும், தெய்வீக அனுக்கிரகம் தங்களுக்கு அனைத்து தடைகளையும் தகர்த்தெறிந்து புத்தம் புது நல்வாழ்க்கையை வாரி வழங்கும், தன்னிலை உணர்ந்தாலும், சுயமதீப்பீடு சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு காட்டும் யோகமும் உண்டாகும், குழப்பம் அற்ற சூழ்நிலைகள் தங்களின் முன்னேற்றத்திற்கு உதவிகரமானதாக அமையும், அருங்கலைகளில்  அதீத நாட்டமும், வருமுன் உணரும் மனநிலையும் தங்களின் முன்னேற்றத்திற்கு அடிப்படை ஆதாரமாக அமையும், தங்களின் உடல்நலம் சார்ந்த அனைத்து இன்னல்களும் விரைவாக குணமாகி, சமூகத்தில் மீண்டும் வெற்றிநடை போடும் யோகத்தை ராகு பகவான் வாரி வழங்குவார், தங்களின் சரித்திரத்திற்க்கு முடிவுரை காணவிரும்பிய எதிர்ப்பாளர்களுக்கு பேரிடியாகவும், அவர்களுக்கு  சிம்மசொப்பனமாகவும் திகழ்வதற்க்கான வாய்ப்பை ராகுபகவான் நிச்சயம் தங்களுக்கு தருவார் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம், செயல்களில் அதீத சுறுசுறுப்பு, தீர்க்கமான முடிவுகளை கையாளும் தன்மை, சமயோசித அறிவு திறன் போன்றவை இனிவரும் காலங்களில் வெகு அற்புதமாக பிரகாசிக்கும், தெய்வீக ஆற்றல் தங்களின் வாழ்க்கையை வெகு அற்புதமாக ஆளுமை செலுத்தும், குறிப்பாக காளி துர்க்கை போன்ற உக்கர தெய்வங்களின் ஆசிர்வாதம் தங்களது வாழ்க்கையில் வியக்கத்தக்க மாற்றங்களை தன்னிறைவாக வாரி வழங்கும்.

துலாம் ராசியில் கேது பகவான் சஞ்சாரம் :

கன்னி லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் சாயா கிரகமான கேது பகவான், தான் சஞ்சாரம் செய்யும் பாவகத்தை 100% விகிதம் பாதிப்பிற்க்கு ஆளாக்கும் காரணத்தால், குடும்பத்தில் பிரச்சனை, வருமானத்தில் பாதிப்பு, பேச்சில் தடுமாற்றம், வாக்குறுதியை நிறைவேற்ற இயலாத சூழ்நிலை, உறவுகளுடன் சுமூக போக்கை கடைபிடிக்க இயலாத தன்மை, கண்களில் பாதிப்பு, பார்வை குறைபாடு தலை சம்பந்தப்பட்ட நோய் தொந்தரவுகள், குழப்பம் நிறைந்த இல்லற வாழ்க்கை, புரிந்துகொள்ளாத வாழ்க்கை துணை, ஞானம் அற்ற வார்த்தைகள், வீண் வாக்குவாதம், வருமானம் அனைத்தும் வீணாகும் சூழ்நிலை, பொருளாதார சிக்கல்கள், வாழ்க்கையில் வரும் இன்னல்கள், அறிவு சார்ந்த முயற்சிகள் யாவும் பின்னடைவை தரும் சூழ்நிலை, குடும்பத்தில் உள்ள நபர்கள் மூலம் மனநிம்மதி இழப்பு போன்ற இன்னல்களை எவ்வித பார்ப்பட்டசமும் பார்க்காமல் கேது பகவான் வாரி வழங்குவார் என்பதால் கன்னி லக்கின அன்பர்கள் சற்று கவனமாக இருப்பது சிறப்பை தரும், பொதுவெளியில் காரசாரமான விவாதம் மற்றும் வார்த்தை பிரயோகத்தை தவிர்த்து விடுவது நல்லது, ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்யும் அன்பர்கள் இனிவரும் காலங்களில் அதீத எச்சரிக்கை உடன் ஜீவனத்தை மேற்கொள்வது நல்லது, அந்நிய நபர்கள் மூலம்  தங்களின் வாழ்க்கை முடங்கிவிடும் அபாயம் உண்டு என்பதால், முன்பின் அறிமுகம் இல்லாத நபர்கள் அனைவரிடமும் கவனமாக இருப்பது நல்லது குறிப்பாக பணம் சம்பத்தப்பட்ட  விஷயங்களில் அதீத கவனம் தேவை, கேதுவின் சஞ்சாரம் தங்களின் வருமானம் அனைத்தையும் முடக்குவதற்கான அனைத்து வேலைகளையும் செய்யும் என்பதால், மாற்று வருமானம் சார்ந்த அமைப்புகளில் தங்களின் ஆர்வத்தை செலுத்துவது நல்லது, இதனால் தங்களின் வாழ்ககையில் வரும் பொருளாதர சிக்கல்களுக்கு சரியான தீர்வுகளை தாங்கள் பெற இயலும், நிம்மதி அதிகரிக்கும். 

கன்னி லக்கின அன்பர்களுக்கு இனிவரும் காலங்களில் தங்களின் குலத்தொழில் முடங்கும் அபாயகர உள்ளதால், சிறு கவன குறைவும் தங்களுக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தும், மற்றவர்களின் குறுக்கீடுகளை தங்களது சொந்த விஷயங்களில் அனுமதிக்க வேண்டாம் என்பதை தங்களுக்கு அறிவுறுத்த விரும்புகிறோம், மேலும் தங்களின் குடும்ப விவகாரங்களில் மற்றவர்களின் தன்னிலையீடு என்பது தங்களுக்கு பிரிவினையை தருவதுடன், இல்லறவாழ்க்கையை கடுமையாக பாதிக்கும், எனவே தங்களின் பிரச்சனைகளை தாங்களே பேசி ஒரு சுமுகமான முடிவுக்கு வருவதும், மற்றவர்களுக்காக சற்று விட்டுக்கொடுத்து செல்வதும் குடும்பம் மற்றும் இல்லற வாழ்க்கையை வெகு சிறப்பாக நடத்தி செல்ல ஓர் வாய்ப்பாக அமையும், கருத்து வேறுபாடு என்பது தங்களுக்கு இந்த நேரத்தில் வீண் வாக்குவாதத்தை பெரிய அளவிலான சண்டை சச்சரவுக்கு காரணமாக அமைந்துவிடும், எனேவ நாவடக்கம் என்பதை  கையாள்வதே சாலச்சிறந்தது, ஆன்மீகத்தில் ஈடுபாடு, ஆன்மீக பெரியோர்களின் ஆசிர்வாதம் போன்றவை தங்களின் வாழ்க்கையில் புது புத்துணர்ச்சியை தந்து, அகமகிழ்வின் மூலம் சுபயோகங்களை வாரி வழங்கும், எதிர்பார்ப்புகளை வெகுவாக  குறைத்துக்கொள்வதும், இருப்பதை வைத்து திருப்தி அடைவதும் தங்களுக்கான மனநிம்மதியை அதிகரிக்கும், இந்த நேரத்தில் தாங்கள் வைக்கும் அகலகால் மீண்டுவர முடியாத ஆதாளபாதாளத்தில் தள்ளிவிடும் என்பதால் எவரின் கருத்துக்கும், ஆசை வார்த்தைக்கும் செவிசாய்க்காமல், தங்களின் அறிவு சொல்லும் வழியில் நேர்மையாக நடைபோடுவது நல்லது, பொது வாழ்க்கையில் உள்ளோர் மிக கவனமாக இயங்குவது நல்லது இல்லையெனில் வீண் அவப்பெயர் உண்டாக வாய்ப்பு உள்ளது.

குறிப்பு :

மேற்சொன்ன ராகுகேது பெயர்ச்சி பலன்கள் என்பது தங்களது சுய ஜாதகத்தில் தற்போழுது நடைபெறும் திசா புத்தி ஆயுள் ஸ்தானம் மற்றும் குடும்ப ஸ்தான பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைபெறும் திசா புத்தி ஆயுள் ஸ்தானம் மற்றும் குடும்ப ஸ்தான பலனை ஏற்று நடத்தவில்லை எனில் கோட்சார ரீதியாக யாதொரு நன்மை தீமையும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில்கொள்க 

வாழ்க வளமுடன் 

ஜோதிடன் வர்ஷன் 

0944335569

சனி, 2 ஏப்ரல், 2022

சிம்மம் 2022-2023 ராகுகேது பெயர்ச்சி பலன்கள் !



மேஷ ராசியில் ராகுபகவான் சஞ்சாரம் : 

 சிம்ம லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் சாயா கிரகமான ராகு பகவான், தான் சஞ்சாரம் செய்யும் 9ம் பாவகத்தை 100% விகிதம் பாதிப்பிற்கு ஆளாக்கும் அமைப்பில் தனது இயக்க நிலையை செயல்படுத்தும் காரணத்தால், சிம்ம லக்கின அன்பர்களுக்கு இனி வரும் 18 மாதமும் உடல் மனம் தனித்திறன் மற்றும் செயல்பாடுகள் போன்றவற்றில் பாதிப்பை தரக்கூடும், சிந்தனை திறன் பாதித்து அவசரகதியில் செய்யக்கூடிய காரியங்களில் பெரிய பாதிப்புக்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், பித்ரு தோஷம் குலதெய்வ சாபம் போன்றவை தங்களுக்கு நிகழவிருக்கின்ற சுபகாரியங்களை வெகுவாக பாதிக்கும் என்பதால், பித்ரு வழிபாடு, குலதெய்வ வழிபாடு போன்றவற்றில் ஈடுபடுவது நல்லது, எதிர்பாராமல் வரும் தொல்லைகள் தங்களின் மனதை வெகுவாக பாதிக்கும், இயந்திரங்களில் வெகு பாதுகாப்பாக பணியை மேற்கொள்வது நல்லது இல்லை எனில் விபத்தின் மூலம் மருத்துவ செலவினங்களை சந்திக்க நேரும், கவனம் இல்லாமல் வாகனங்களை இயக்குவதும் தங்களுக்கு இன்னல்களை தருவதுடன் வீண் விரயங்களை ஏற்படுத்தும், அதீத கோபமும், அதிக மனஉளைச்சலும் தங்களின் அன்றாட செயல்பாடுகளை கடுமையாக பாதிப்பதுடன் உடல்நலத்தையும் சீர்குலைக்கும் என்பதை கருத்தில் கொள்க, மற்றவர்கள் பிரச்சனைகளில் தலையீடு செய்வது என்பது தங்களுக்கு யானை தன் தலையில் தானே மண்ணை அள்ளி போட்டுக்கொண்டதற்கு சமமான பலன்களை தரும், சம்பந்தம் இல்லாமல் வீண் அலைச்சல், வீண் அவப்பெயர் உண்டாகும், எதிர்ப்புகள் எதிராளிகள் தொல்லை தங்களை கடுமையாக பாதிப்பதுடன், சமூகத்தில் மதிப்பு மரியாதையை கெடுக்கும், எந்த சூழ்நிலையிலும் மற்றவர்களுக்கு ஜாமீன் தருவது, தங்களின் குடும்ப வாழ்க்கையை வெகுவாக பாதிப்பதுடன், வாழ்க்கை துணையின் வழியில் விரிசல்களை ஏற்படுத்தும், ராகுவின் சஞ்சாரம் தங்களுக்கு குடும்ப அன்பர்கள், பெரிய மனிதர்கள், ஆன்மீக பெரியோர்களின் வெறுப்புக்கும், சாபத்திற்கும் ஆளாக்கும் என்பதால், பொறுமையை கடைபிடிப்பதுடன் நாவடக்கத்தையும் கையாள வேண்டும் என்பதை தங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

 ராகுவின் பாக்கிய ஸ்தான சஞ்சாரம் சிம்ம லக்கின அன்பர்களுக்கு ஞானம் அறிவார்ந்த செயல்பாடுகளில் பாதிப்பை தருவதுடன், ஆன்மீக வழியில் வெறுப்புணர்வை தரும், இறைநம்பிக்கை பாதிக்கும், நாத்தீக எண்ணங்கள் மேலோங்கும், வாக்குவாதங்களில் ஈடுபாடும் அதனால் வரும் இன்னல்களும் அதிகரிக்கும், பிற்போக்கு தனமான எண்ணங்கள் மேலோங்குவதுடன் மூடநம்பிக்கைகளில் மனம் ஈடுபாடுகாட்டும், ஞானத்தின் தன்மை வெகுவாக பாதிக்கும், அனைவராலும் தொல்லை துன்பங்கள் உண்டாகும், பெரியோர்கள் சொல்லும் அறிவுரைகளை ஏற்பது தங்களுக்கு வரும் இன்னல்களில் இருந்து மீட்டு எடுக்கும், செயற்கரிய காரியங்களை செய்து வெற்றி பெரும் சிம்ம லக்கின அன்பர்களுக்கு இனிவரும் காலம் சற்று சோதனைகளை தரக்கூடும் என்பதை கருத்தில் கொள்க, தாங்கள் நினைத்ததை போல காரியங்கள் நடைபெறாது வெகு தாமதம் ஆகும், தொழில்நுட்பம், பொறியியல், மருத்துவம் போன்ற துறைகளில் உள்ள அன்பர்களுக்கு இந்த நேரம் சிறிதும் நன்மையை தர வாய்ப்பில்லை என்பதை கருத்தில் கொள்க, முன்னேற்பாடுகள் சிறப்பாக இல்லை எனில் அனைத்தும் தோல்வியில் முடியும் என்பதை கருத்தில் கொள்க. 

 பாக்கியஸ்தானம் 100% பாதிப்படைவதால் பித்ரு வழிபாடு தங்களுக்கான நெருக்கடிகளை குறைப்பதுடன், சுபகாரியங்கள் வெகு சிறப்பாக நடைமுறைக்கு வரும் குறிப்பாக கல்வியில் வெற்றி, நல்ல வேலைவாய்ப்பு தொழில் முன்னேற்றம், திருமணயோகம், புத்திரபாக்கியம், புதிய வீடு வண்டிவாகனம் சொத்து சுக சேர்க்கை போன்றவை பரிபூர்ணமாக கிடைக்க ஆரம்பிக்கும், தூர தேச பிரயாணங்களை முற்றிலும் தவிர்த்துவிடுவது நல்லது, வெகுதூர பயணங்களை அவசியம் இருந்தால் மட்டும்  மேற்கொள்ளவும், பயணங்களில் பாதுகாப்பு என்பது முக்கியமானது என்பதை கருத்தில் கொள்ளுங்கள், சிறு கவனக்குறைவும் தங்களின் வாழ்க்கையை வெகுவாக பதம்பார்த்துவிடும், மீண்டுவருவதற்கு வெகு காலம் பிடிக்கும் என்பதால் மிக கவனமாக செயல்படுங்கள், பெரியோர் சொல்லும் அறிவுரைகளை ஏற்பதும் ஆன்மீக பெரியோர்கள் ஆசிர்வாதமும், பேராசிரியர்கள் வழங்கும் தீட்சையும் தங்களுக்கு சுபயோகங்களை நல்கும், ராகு தரும் பாதிப்பை வெகுவாக குறைக்கும், கூரிய ஆயுதங்களால் பாதிப்பு உண்டு என்பதால் மிக கவனமுடன் இருப்பது நல்லது, விளையாட்டாக செய்யும் காரியம் பெருவினையமாக முடிந்துவிடும் என்பதை கருத்தில் கொள்க, பொறுமை மற்றும் சகிப்புத்தன்மை மட்டுமே தங்களுக்கு சிறப்புகளை தரும்.

துலாம் ராசியில் கேது பகவான் சஞ்சாரம் :

சிம்ம லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் சாயா கிரகமான கேது பகவான், தான் சஞ்சாரம் செய்யும் பாவகத்தை 100% விகிதம் வலிமை சேர்ப்பதால், சிம்ம லக்கின அன்பர்களுக்கு தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும், துணிச்சல் மேலோங்கும், எதையும் எதிர்த்து போராடும் குணம் அதிகரிக்கும், எண்ணத்தின் வலிமை மேலோங்கும் மதிப்பு மிக்க செயல்கள் மூலம் நல்ல அங்கீகாரம் கிடைக்கும், எதிர்பாலின சேர்க்கை வழியில் இருந்து பெரும் லாபம் மிக அதிக அளவில் இருப்பதுடன், தங்களின் திட்டமிடுதல்கள் சிறப்பாக நடைமுறைக்கு வரும், வெகு நாள் லட்சியங்கள் யாவும் தங்களுக்கு நிறைவேறும் அற்புதமான நேரமிது, கூட்டுத்தொழில் வழியில் இருந்து வரும் அபரிவிதமான முன்னேற்றம் வெகு சிறப்பாக அமையும், ஏற்றுமதி இறக்குமதி தொழில் சார்ந்த அன்பர்களுக்கு இனிவரும் காலம் அபரிவிதமான முன்னேற்றத்துடன் கூடிய வருமான வாய்ப்பை பெரும் அளவில் வாரி வழங்கும், தனித்திறமை வெகு சிறப்பாக வெற்றிகளை வாரி வழங்கும், கூட்டு முயற்சி கூட்டுத்தொழில் போன்றவற்றில் அபரிவிதமான லாபமும் எதிர்பாராத அதிர்ஷ்டமும் வந்து சேரும், வெளிநாடுகளில் இருந்துவரும் தொழில் வாய்ப்புகள் தங்களுக்கான அங்கீகாரத்தை உறுதி செய்யும், தங்களின் உழைப்புக்கான உயர்வும் பொருளாதார சிறப்புகளும் கைகூடி வருவதுடன் புதிய வாய்ப்புகள் தங்களுக்கு வெகுவாக கைகொடுக்கும்.

கமிஷன், எஜென்ஜி, தரகு, காப்பீடு துறை சார்ந்த அன்பர்களுக்கு வருமானம் என்பது கைநிறைவானதாக அமையும், புதிய நபர்கள் மூலம் தொழில் முன்னேற்றம் என்பது தன்னிறைவாக அமைவதுடன் எதிர்பார்த்த லாபமும் வந்துசேரும், பெண்களுக்கான ஆடை ஆபரண தொழில்களில் உள்ள அன்பர்களுக்கு நல்ல விருத்தியை தரும், வரவேற்புடன் கூடிய வருமானம் வெகு சிறப்பாக வந்து சேரும், புதிய தொழில் முனைவோர், புதிய தொழில் செய்ய விருப்பம் கொண்டோருக்கான அற்புதமான நேரம் இது அதற்க்கான சந்தர்ப்பம் மற்றும் வாய்ப்புகள் முழு அளவில் கைகொடுக்கும், இதுவரை இல்லாத முன்னேற்றம் இனிவரும் காலங்களில் தொடர்ச்சியான வெற்றி வாய்ப்புகளை வாரி வழங்கும், பொதுவாக சுய ஜாதகத்தில் வீரிய ஸ்தானமான 3ம் பாவகம் வலிமை பெற்று இருப்பின் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு சகல சௌபாக்கியத்தையும் தனது எண்ணத்தின் வலிமையின் அடிப்படையில் சுவீகரிப்பார்கள், சிம்ம லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு தற்போழுது கோட்சார ரீதியாக கேதுபகவான் 3ம் பாவகத்தை வலிமை சேர்ப்பதால் தங்களின் திட்டமிட்ட செயல்கள் யாவும் முழுமையாக நடைமுறைக்கு வர ஆரம்பிக்கும், கண்ணுக்கு தெரிந்து வரும் சுபயோகங்கள் அனைத்தும் தங்களின் ஆசைகளை நிறைவேற்றும், புதிய சொத்து, புதிய வீடு, புதிய வண்டி வாகனம் யாவும் தங்களுக்கு பரிபூர்ணமாக கிடைக்கும், தனது இளைய சகோதர வழியில் இருந்து வரும் உதவிகள் என்பது தங்களின் வாழ்க்கையில் அடுத்தகட்டத்துக்கு எடுத்துச்செல்லும், உறவுகளின் அரவணைப்பு தங்களுக்கு புதிய நம்பிக்கையையும், புதிய உத்வேகத்தையும் முழுமையாக தரும, தொழில் முயற்சி வெற்றி, வேலைவாய்ப்பில் வெற்றி, கல்வியில் வெற்றி என்ற அமைப்பில் தங்களுக்கான சுபயோகங்களை கேதுபகவான் வாரி வழங்க தவறமாட்டார் என்பது உறுதி.

 விளையாட்டு மற்றும் தகவல் தொழில் நுட்பம் சார்ந்த துறைகளில் உள்ள சிம்ம லக்கின அன்பர்களுக்கு எதிர்பார்த்த வெற்றி வாய்ப்புகள்  முழுமையாக கிடைப்பதுடன், மனவிருப்பங்கள் நிறைவேறும், கேதுவின் சஞ்சாரம் தங்களுக்கு ஒரு வீரியமிக்க செயல்திறனை முழுமையாக வழங்குவதுடன் வெற்றிக்கான அனைத்து கதவுகளையும் திறந்து வைக்கும், துணிச்சல் மிக்க மனோநிலையை பெற்ற சிம்ம லக்கின அன்பர்களுக்கு எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும், பதவி உயர்வு, சமூக மதிப்பு, அரசு அங்கீகாரம் மற்றும் உலகப்பிரபல்யம் ஆகியவை தங்களை தேடிவரும் என்பதால் சற்று பொறுமை காப்பது மட்டுமே தங்களுடைய கடமை என்பதை கருத்தில் கொள்க, எதிர்பாராமல் நிகழும் சிறு மாற்றம் தங்களை வானளவு உயரத்திற்கு எடுத்து செல்லும் என்பதில் சந்தேகம் இல்லை, கடின உழைப்பை முன்னெடுக்கும் சிம்ம லக்கின அன்பர்களுக்கு அதற்கான முழு பலன்களையும் கேதுபகவான் வாரி வழங்குவார், தொழில் நுட்ப அறிவை தன்னிறைவாக வாரி வழங்கும் கேது தங்களை விளையாட்டு மற்றும் தகவல் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட துறைகளில் ராஜாவாக பரிணமிக்க செய்வார் என்பதில் சந்தேகம் இல்லை, வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வது தங்களின் விழிப்புணர்வு சார்ந்த விஷயம் என்பதை அறிவுறுத்த "ஜோதிடதீபம்" கடமைப்பட்டுள்ளது.

குறிப்பு :

மேற்சொன்ன ராகுகேது பெயர்ச்சி பலன்கள் என்பது தங்களது சுய ஜாதகத்தில் தற்போழுது நடைபெறும் திசா புத்தி பாக்கிய ஸ்தானம் மற்றும் வீரிய ஸ்தான பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைபெறும் திசா புத்தி பாக்கிய ஸ்தானம் மற்றும் வீரிய ஸ்தான பலனை ஏற்று நடத்தவில்லை எனில் கோட்சார ரீதியாக யாதொரு நன்மை தீமையும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில்கொள்க 

வாழ்க வளமுடன் 

ஜோதிடன் வர்ஷன் 

09443355696

புதன், 30 மார்ச், 2022

கடகம் 2022-2023 ராகுகேது பெயர்ச்சி பலன்கள் !

 


மேஷ ராசியில் ராகுபகவான் சஞ்சாரம் : 

 கடக லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் சாயா கிரகமான ராகு பகவான், தான் சஞ்சாரம் செய்யும் 10ம் பாவகத்தை 100% விகிதம் வலிமை சேர்க்கும் அமைப்பில் தனது இயக்க நிலையை செயல்படுத்தும் காரணத்தால், கடகலக்கின அன்பர்களுக்கு தொழில் மேன்மை என்பது அபரிவிதமான தன்மையில் பிரகாசிக்கும், இதுவரை ஜீவன ரீதியாக போராடிக்கொண்டு இருந்த கடகலக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பை பெறுவதற்கான சந்தர்ப்பம் தேடி வரும், அரசு வேலைவாய்ப்பை எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்த அன்பர்களுக்கு எதிர்பாராமல் அரசு பணியை அலங்கரிக்கும் யோகம் உண்டாகும், தனியார் துறையில் தனது தகுதிக்கான சரியான வேலைவாய்ப்பும், திறமைக்கான பதவி உயர்வும் உறுதியாக கிடைக்க பெறுவார்கள், குறிப்பாக தொழில்நுட்பம், பொறியியல், மருத்துவம், மக்கள் சேவை, வண்டி வாகனம், வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு, பயண சேவை, உணவு தானியம், கனிம பொருட்கள், சுரங்க தொழில்கள், எரிபொருள் போன்ற துறைகளில் உள்ள கடகலக்கின அன்பர்களுக்கு காய் நிறைவான வருமான வாய்ப்பும், பதவி உயர்வும், பொருளாதர முன்னேற்றமும் உண்டாகும், பாதுகாப்பு துறை, ராணுவம், காவல்துறை, தீயணைப்பு துறை, உயிர்காக்கும் மருத்துவ துறையில் உள்ள அனைவருக்கும் எதிர்பாராத வகையிலான பதவி உயர்வும், ஊதிய உயர்வும் நிச்சயம் உண்டு, தான் பணிபுரியும் இடத்தில் நல்ல கவுரவமும் அந்தஸ்தும் தேடிவரும், இதுவரை இல்லாத மதிப்பும் மரியாதையும் தங்களுக்கான இடத்தை உறுதி செய்வதுடன் மேலிடத்தில் நம்பிக்கைக்கு உரிய அன்பராக திகழ்வதற்க்கான சந்தர்ப்பங்கள் உண்டு, அரசு கவுரவமும், அரசு மரியாதையுடன் கூடிய அங்கீகாரமும் தங்களுக்கு தேடிவரும் என்றால் அது மிகையில்லை.

 ராகுவின் ஜீவன ஸ்தான சஞ்சாரம் முழு அளவில் நன்மைகளை வாரி வழங்குவது மேஷ லக்கின அன்பர்களுக்கு முன் எப்பொழுதும் இல்லாத சுறுசுறுப்பையும், உடல் ஆரோக்கியத்தையும் வாரி வழங்கும், தனக்கு வழங்கப்பட்ட கடமையை வெகு சிறப்பாக கையாளும் சந்தர்ப்பம் உண்டாகும், தொழில் ரீதியாக இதுவரை இருந்த தடைகள் நீங்கி வெற்றிகள் கைகூடும், தங்களின் மனதில் உள்ள திட்டமிடுதல்கள் அனைத்தும் இந்த நேரத்தில் செயல்பாட்டுக்கு வருவதற்கான சந்தர்ப்பங்களை அதிக அளவில் வழங்கும், இயற்கையாகவே அதீத கருணை உள்ளம் கொண்ட கடகலக்கினத்தை சார்ந்த அன்பர்களின் மனம் வெகுவாக பரோஉபகரமான செயல்களில் தீவிரம் காட்டும் நல்ல வாய்ப்பை தரும், உறவுகள், நண்பர்கள், தன்னை சார்ந்த தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கான சேவையை வெகு சிறப்பாக செய்வதற்கான சந்தர்ப்பங்கள் கைகூடும், தங்களால் பலரது குடும்பம் தழைத்து ஓங்கும் வாய்ப்பை பெறுவார்கள், இது தங்களுக்கான புண்ணிய பதிவை அதிகரிக்கும், தொழில் முறையில் உள்ள கூட்டாளிகள் தங்களால் லாபம் பெறுவதுடன் தங்களுக்கான அங்கீகாரத்தை உறுதி செய்வார்கள், தங்களை அதிகார பதவியில் அமரவைத்து அழகு பார்க்கும் யோகம் உண்டாகும், தன்னை சார்ந்தவர்கள் தரும் உற்சாகமும், உத்வேகமும் தங்களின் செயல்திறனை தொழில் வழியில் இருந்து வெகு சிறப்பான வெற்றிகளை பெற்றுத்தரும் என்பதில் யாதொரு சந்தேகமும் இல்லை என்பதை கருத்தில் கொள்க. 

 கடக லக்கினத்தை சார்ந்த ஆண் அன்பர்களுக்கு தனது தகப்பனார் வழியில் இருந்தும், பெண் அன்பர்களுக்கு தனது தாயார் வழியில் இருந்தும், சுபயோகங்கள் கைகூடிவரும் தனது பரம்பரை தொழிலை தான் முன் நின்று நிர்வகிக்கும் யோகம் அமைவதுடன், அதில் தனது தனித்திறனை வெளிப்படுத்தும் சந்தர்ப்பமும் உண்டாகும், தொழில் முறை பணியாளர்களுடன் ஒரு இணக்கமான சூழ்நிலையில் வெகு அற்புதமான முன்னேற்றங்களை சுவீகரிப்பதற்கான ஒரு அற்புதமான வாய்ப்பாக அது அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை, ராகு ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த 18 மாதமும் கடகலக்கின அன்பர்கள் அனைவரும் ஏதாவது ஒருவகையில் பதவி உயர்வு அல்லது முன்னேற்றம் போன்ற சுபயோக பலன்களை சிறப்பாக பெறுவதற்கான சந்தர்ப்பத்தை தருவதுடன், அதிகாரமிக்க பதவிகளை மிக எளிதாக பெறுவதற்கான வாய்ப்பையும் வழங்குவார், மிகவும் விழிப்புணர்வுடன் இருந்து சாயா கிரகம் தரும் இந்த சுபயோக பலனை சிறப்பாக சுவீகரித்து நலம் பெறுக, தனது துறை சார்ந்த கவுரவம் அந்தஸ்து சிறப்பு அங்கீகாரம் போன்றவற்றை வெகு எளிதாக பெற்றுத்தருவார் இந்த ராகு பகவான், எங்கும்  வெற்றி எதிலும் வெற்றி என்ற அமைப்பில் எண்ணத்தின் வலிமையின் தன்மை கடகலக்கின அன்பர்களுக்கு விண்ணளவு உயர்வை பெறுவதற்கான அற்புதமான சந்தர்ப்பங்களை வாரி வழங்கும் நேரமிது, எதிர்பாராத சுபயோகங்கள் தங்களுக்கு அதிகார பதவியை பெறுவதற்கு உறுதுணையாக அமைவதுடன், புதிய தொழில், புதிய வேலைவாய்ப்பு, கூட்டு தொழில் யோகம், அரசு பதவி, வெளிநாடுகளில் இருந்துவரும் தொழில் வாய்ப்புகள் என்ற அமைப்பில் சிறப்புகளை கடக லக்கினத்தை பெற்ற தங்களுக்கு 100%விகிதம் வாரி வழங்கும்.

துலாம் ராசியில் கேது பகவான் சஞ்சாரம் :

கடக லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு சுக ஸ்தானமான 4ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் சாயா கிரகமான கேது பகவான், தான் சஞ்சாரம் செய்யும் பாவகத்தை 100% விகிதம் பாதிப்பிற்க்கு ஆளாக்கும் காரணத்தால், ஆண்கள் என்றால் தனது தாயார் வழியில் இருந்து வரும் இன்னல்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும் குறிப்பாக தாயராது உடல் ஆரோக்கியத்தில் அதீத அக்கறை எடுத்துக்கொள்ளும் சூழ்நிலை தரும், அவர்களது தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் கடமை தங்களுக்கு உண்டு என்பதை கவனத்தில் நிலை நிறுத்துவது அவசியமானது, ஏனெனில் தாயாரின் வாழ்த்துக்கள் தங்களுக்கான சுகபோகங்களை அதிகரிப்பதுடன், தற்போழுது கேதுபகவானின் சஞ்சார நிலையில் இருந்துவரும் இன்னல்களுக்கு சரியான தீர்வாகவும் அமையும், தாயாரை பேணிப்பாதுகாப்பது கேது தரும் இன்னல்களுக்கு பரிகாரமாக அமையும், தங்களது பெயரில் உள்ள சொத்துக்கள் வண்டி வாகனங்கள் இடம் பொருள்கள் ஏதாவது விரைய செலவுகளை தரக்கூடும், குறிப்பாக தனது பெயரில் உள்ள சொத்துக்களை பாதுகாப்பதில் அதிக அக்கறை கொள்வது நல்லது ஏதாவது வில்லங்கம் பிரச்சனைகள் இருப்பின் மிக நேர்த்தியாக கையாண்டு அந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடுவது நல்லது இல்லை எனில் சொத்துக்களை இழந்து நிற்கும் சூழ்நிலையை தரும், புதிய சொத்துக்களை வாங்கும் பொழுது அதிக விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது, தேவையற்ற வீண் செலவுகளை அது தவிர்க்க உதவும், மேலும் தனது குணநலன் சார்ந்த விஷயங்களில் ஒரு சுய மதிப்பீடு செய்து கொள்வது நல்லது இல்லை எனில் தன்னை சார்ந்தவர்கள் வழியில் இருந்து வெறுப்புக்கும் ஏளனத்துக்கும் ஆளாகும் சூழ்நிலையை தரக்கூடும், குறிப்பாக அனைவரிடமும் அன்பு பாராட்டுவது அவசியமானது, தங்களின் கருத்தை திணிப்பதற்கு பதிலாக தங்களை சார்ந்தவர்களுடன் கருத்து ஆலோசனையில் ஈடுபடுவது தங்களின் தனி திறமையை வெகு அற்புதமாக வெளிப்படுத்தும், அனைவரின் கருத்துக்கும் மதிப்பளித்து அரவணைத்து செல்லுங்கள். 

 கேதுவின் 4ம் பாவக சஞ்சாரம் பெண்களுக்கு தனது தகப்பனார் வழியில் இருந்து கிடைக்க வேண்டிய நன்மைகளை தாமதப்படுத்தும், தனது தந்தைக்கும் தனக்கும் கவுரவ குறைவான செயல்களில் ஈடுபடாமல் இருப்பது அவசியமானது, கேதுவின் சஞ்சாரம் தங்களை வெகு விரைவில் பிரச்சனைகளை தந்து வீண் அவப்பெயரை தந்துவிடும் என்பதால் சற்று விழிப்புணர்வுடன் இருப்பது அவசியமானது, அந்நியர்களிடம் எச்சரிக்கை உணர்வுடன் பழகுவது நல்லது, இல்லை எனில் உடலுக்கும் மனதுக்கும் துன்பம் இழைப்பதுடன் தங்களின் எதிர்கால வாழ்க்கையை பாழாக்கிவிடுவார், இதில் ஆண் பெண் பாகுபாடு இல்லை என்பதை கவனத்தில் கொள்க, தகப்பனாரின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்க, பெற்றோர்கள் தங்களுக்கு வழங்கிய அன்பையும் பாசத்தையும் பன்மடங்கு திருப்பி தரவேண்டிய அருமையான சந்தர்ப்பம் இது என்பதை கவனத்தில்  கொள்ளுங்கள், இது தங்களுக்கான கவுரவம் மற்றும் தொழில் மேன்மையை  வாரி வழங்கும்.

கடக லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு இனிவரும் 18 மாதமும் வண்டி வாகனங்களில் பாதுகாப்பான பயணங்களை மேற்கொள்ளும் தன்மையை உறுதி செய்ய வேண்டி வரும், எந்த ஒரு சந்தர்ப்பத்தையும் கையாள்வதற்கான ஆயத்த நிலையில் தாங்கள் இருப்பது அவசியமானது, துணிவும், தெளிவான மனநிலையும் தங்களுக்கு அதிக அளவில் தேவைப்படும், கேது தரும் சோதனை சுகஸ்தான நிலையில் இருந்து வருகின்றது என்பதால் தங்கள் அதிக அளவிலான சுகபோகங்களில் ஈடுபாடு பாடு  காட்டுவதை விடுத்து, உணவு கட்டுப்பாடு, உடல் ஆரோக்கியத்தில் கவனம், புலன் இன்பங்களில் அதீத கட்டுப்பாடு, ஒழுக்கம், கடமை உணர்வு, சரியான புரிதல், வீண் வாக்குவாதத்தில் ஈடுபடாமை, தன்னை பற்றிய சுய மதிப்பீடு ஆகியவை தங்களின் வாழ்க்கையில் கேது பகவான் தரும் இன்னல்களில் இருந்து மீட்டு எடுக்கும், கடகலக்கின அன்பர்களே இனிவரும் 18 மாதம் தாங்கள் அனைவரும் ஆன்மீக (MODE) "மோடுக்கு" சென்றுவிடுவது நல்லது, இது தங்களை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும்.

குறிப்பு :

மேற்சொன்ன ராகுகேது பெயர்ச்சி பலன்கள் என்பது தங்களது சுய ஜாதகத்தில் தற்போழுது நடைபெறும் திசா புத்தி ஜீவன ஸ்தானம் மற்றும் சுக ஸ்தான பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைபெறும் திசா புத்தி ஜீவன ஸ்தானம் மற்றும் சுக ஸ்தான பலனை ஏற்று நடத்தவில்லை எனில் கோட்சார ரீதியாக யாதொரு நன்மை தீமையும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில்கொள்க 

வாழ்க வளமுடன் 

ஜோதிடன் வர்ஷன் 

09443355696