சனி, 25 ஆகஸ்ட், 2012

சுய ஜாதக அமைப்பில் கேந்திர பாவகங்கள் வழங்கும் யோக பலன்கள் !

 


பொதுவாக கேந்திர பாவகங்கள்  எனும் லக்கினம், நான்காம் பாவகம் , களத்திர பாவகம் , ஜீவன ஸ்தானம் எனும் பத்தாம் பாவகம் ஆகியன சுய ஜாதக அமைப்பில் வலுவடையும் பொழுது , ஜாதகரின் வாழ்க்கை சம சீரான முன்னேற்றத்தை தந்துகொண்டே இருக்கும் , மேற்கண்ட நான்கு பாவகங்களும் ஒரு ஜாதகருக்கு நல்ல நிலையில் அமையும் பொழுது வாழ்க்கையின் வெற்றி பாதை ஜாதகருக்கு சிறு வயது முதலே நிர்ணயம் செய்து விடுகிறது .


ஜாதகருக்கு சிறு வயதில் தேவையான தாயின் அன்பும் , தகப்பனாரின் ஆதரவும் நிச்சயம் கிடைக்கும் , ஒரு குழந்தை வளரும் காலத்தில் தேவையான அடிப்படை வசதிகள் இயற்கையாக அமையும் , தாயின் அன்பிலும் , தகப்பனின் அன்பு கலந்த கண்டிப்பிலும் குழந்தை நல்லஉடல் ஆரோக்கியத்துடன்  ஒழுக்கமான பழக்க வழக்கங்களை கற்றுக்கொள்ளும் யோகம் உண்டாகும்  மேலும் அறிவு கூர்மையுடன் சிறப்பான 
வளர்ச்சியை பெறுவார்கள் ,வளரும் சூழ்நிலை மிகவும் சிறப்பாக அமைந்திருக்கும் அடிப்படை கல்வி ஜாதகருக்கு சிறப்பான கல்வி நிலையங்களில் இருந்து கற்றுக்கொள்ளும் யோகம் உண்டாகும் , தனது கல்விகாலங்களில் ஜாதகருக்கு எவ்வித தீய பழக்க வழக்கங்களுக்கு ஆட்ப்படாமல், நன்றாக உடல் நிலையையும் , மன நிலையையும்  பாதுகாக்கும் அறிவை இயற்கையாக ஜாதகர் பெற்றிருப்பார் , இது முதல் கேந்திரமான லக்கினம் வலுப்பெருவதானால் ஜாதகருக்கு கிடைக்கும் யோக நிலை .


அடிப்படை கல்வியை நிறைவு செய்தபின் ஜாதகருக்கு சரியான   உயர்நிலை தொழில் அல்லது பட்டம் சார்ந்த கல்வி சரியாக அமைய வேண்டும் எனில் 2 வது கேந்திரமான நான்காம் வீடு நல்ல நிலையில் அமைய வேண்டும் , இந்த நான்காம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு உயர்நிலை கல்வி மிகவும் சிறப்பாக அமையும் , உயர்நிலை கல்வியில் எவ்வித தடையும்  இன்றி தேர்ச்சி பெரும் யோகம் உண்டாகும் , மேலும் நல்ல நண்பர்கள் சேர்க்கையும் , தொழில் வகையில் நல்ல முன்னேற்றமும் , சிறப்பான வேலை வாய்ப்பினை  சுயமாக ஏற்ப்படுத்தி கொள்ளும் தன்மையும் ஜாதகருக்கு யோகம் உண்டாகும் , பல தரப்பட்ட மக்களிடம் பழகும் சூழ்நிலையும் , சமுதாயத்தில் எப்படி வாழ்வது என்ற படிப்பினையும் , நல்லது எது , தீயது எது என்று பிரித்து பார்க்கும் மன பக்குவமும் ஜாதகருக்கு உண்டாகும் , ஜாதகர் வாழ்க்கையின் அடுத்த படிக்கட்டில் வெற்றிகரமாக  காலடி எடுத்து வைக்க இந்த இரண்டாவது கேந்திரமான நான்காம் வீடு வலுப்பெருவதானால் ஜாதகருக்கு  மேற்கண்ட நன்மையான பலன்கள் நடைபெறும் .


மக்கள் செல்வாக்கு , மக்கள் ஆதரவு , தனக்கு அமையும் இல்லற வாழ்க்கை, பொது  மக்களிடம் 
ஜனரஞ்சகமாக  பழகும் வாய்ப்பு , நல்ல நண்பர்கள் , சிறந்த தொழில் கூட்டாளிகள் , செய்யும் தொழில் வெற்றி வாய்ப்பு , வாழ்க்கை துணையின் வழியில் இருந்து வரும் ஆதாரவு , வாழ்க்கை துணையின் உறவு முறையில் இருந்து ஜாதகருக்கு கிடைக்கும் அதரவு , நண்பர்களின்  மூலம் தொழில் முன்னேற்றம் , கூட்டு தொழில் மூலம் அபரிவிதமான வெற்றி வாய்ப்பு என ஜாதகரை , வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும்  இந்த மூன்றாவது கேந்திரம் , மேலும் சமுதாயத்தில் ஜாதகருக்கு நல்ல அந்தஸ்து , மதிப்பு மரியாதை அனைத்தையும் வாரி  வழங்குவது இந்த களத்திர பவகமே , எந்த ஒரு சூழ்நிலையும் சமாளிக்கும் தன்மை இந்தபாவகம் நல்ல நிலையில் இருந்தால் நிச்சயம்  கிடைக்க பெறுவார்கள் வாழ்கையில் சொந்தம் பந்தம் , உறவு, நண்பர்கள் சொத்து சுகம் என வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் பாவகம் இந்த மூன்றாவது கேந்திரமான களத்திர பாவகம் வலுப்பெருவதானால் ஜாதகருக்கு  மேற்கண்ட நன்மையான பலன்கள் நடைபெறும் .


ஜாதகரின் பிறப்பு முதல் இறப்பு வரை ஜாதகர் செய்யும் வினை பதிவிற்கு உட்ப்பட்ட நன்மை தீமை பலன்களை வழங்குவது , ஜீவன வழியில் மிகுந்த நன்மைகளை வழங்குவது , தொழில் வளர்ச்சியினை பெற்றுத்தரும் அமைப்பு , தனது தந்தையின் வழியில் இருந்து வரும் தொழில் அமைப்புகளை நிர்வாகம் செய்யும் யோகம் , தனது தகப்பனார் வழி சொத்து சுகம் அனைத்தையும் அனுபவிக்கும் யோகம் , மற்றவரிடம் அடிமை ஜீவனம் செய்யாமல் சுயமாக வாழ்க்கையில் முன்னுக்கு வரும் தன்மை , யாருடைய உதவியின்றியும்  ஜாதகர் சுயமான முன்னேற்றம் காணும் அமைப்பு , செய்யும் தொழில் படிப்படியான வளர்ச்சி , தொழில் நேர்மையாக இருந்து நல்ல பெயர்  பெரும் யோகம் , பல தொழில் செய்யும் யோகம் , தனது வாழ்க்கை துணையின் வழியில் இருந்து கிடைக்கும் சொத்து , பணம் ,நகை , வண்டி , வாகனம் போன்ற யோகமான பலன்களை , இந்த நான்காவது கேந்திரமான 10  ம் வீடு  வலுப்பெருவதானால் ஜாதகருக்கு  மேற்கண்ட நன்மையான பலன்கள் நடைபெறும் .


ஒரு நாற்காலிக்கு  நான்கு கால்களும் நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே அதை பயன்படுத்த முடியம் அது போல் , ஒரு ஜாதக அமைப்பில் இந்த நான்கு கேந்திர பாவகங்களும் நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே அந்த ஜாதகர் மிகவும் சிறப்பான வாழ்க்கை அமையும் , இந்த நான்கு கேந்திரமும் நல்ல நிலையில் அமைவதை நிர்ணயம் செய்யும் ஒரே பாவகம் பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் வீடு மட்டுமே , மேலும் ஒரு ஜாதக அமைப்பில் கேந்திர பாவகங்கள் வலுவிழந்தாலும் , பூர்வபுண்ணியம் மட்டும் நல்ல நிலையில் இருந்தால் நிச்சயம் கேந்திர வீடுகளை நாம் சரி செய்துகொள்ள முடியும் , ஒருவருடைய சிறப்பான வாழ்க்கை மேற்கண்ட ஐந்து வீடுகள் தன்மையை வைத்து நிர்ணயம் செய்துவிட முடியும் , எனவே உண்மை ஜாதக நிலையை தெரிந்து கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் காணுங்கள் .


வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
 9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக