திங்கள், 5 ஜனவரி, 2015

ராகு கேது வலிமை பெற்ற ஜாதக நிலை ( உதாரண ஜாதகம் )



ராகு கேது வலிமை பெரும் பொழுது ஜாதகர் குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து எவ்வித யோக பலன்களை பெறுகிறார் என்பதை இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே !



லக்கினம் : கும்பம் 
ராசி : மேஷம் 
நட்சத்திரம் : அஸ்வினி 3ம் பாதம் 

ஜாதகருக்கு லக்கினத்தில் அமர்ந்த ராகு, இலக்கின அமைப்பில் இருந்து சிறந்த சிந்தனை திறன் அறிவுபூர்வமான செயல்பாடுகள், தனம்பிக்கையான மன நிலை, முற்போக்கு சிந்தனையுடன் அனைத்தையும் அணுகும் மன இயல்பு , எடுத்த  காரியத்தில் வெற்றிபெறும் யோகம், நிலைதன்மையான செயல்கள், நம்பிக்கைக்குரிய வெளிப்படையான நடைமுறைகள், மற்றவர்களாலும் உறவுகளாலும் மெச்சும்படியான செய்கைகள், சுய கட்டுபாடு, ஒழுக்கம், மெய் பொருள் காணும் அறிவு திறன், எந்த ஒரு விஷயத்தையும் நேர்மறையாக அணுகும் ஆளுமை திறன், உடல் மற்றும் மன வலிமை, நல்ல பரந்த மனபக்குவம், எங்கு சென்றாலும் வரவேற்ப்பை பெரும் யோகம், எவரையும் எதிர்பாராமல்  சுயமாக வாழ்க்கையில் முன்னுக்கு வரும் தன்மை, விட்டுகொடுக்கும் மனப்பான்மை, பரோபகரமான செயல்பாடுகள், ஒளிமறைவின்றி செயல்படும் போக்கு, நீண்ட ஆயுள் , நிறைவான செல்வ வளம்  என ஜாதகரை, இலக்கின வழியில் இருந்து 100% விகித யோக பலன்களை ராகு பகவான் தருகிறார்.

லக்கினத்திற்கு கேந்திர பாகமான 7ம் பாவகத்தில் அமர்ந்த கேது பகவான், ஜாதகருக்கு சிறந்த வாழ்க்கை துணையை பெற்று தருகிறார், பொதுமக்கள் மற்றும் அரசியலில் மிகப்பெரிய செல்வாக்கையும், புகழ் மிக்க பொறுப்புகளையும் வாரி வழங்குகிறார், பல திருத்தலங்களுக்கும், தனது குல தேவதைக்கு உண்டான கடமைகளையும் செவ்வன செய்யும் யோகத்தையும், உலக புகழ் பெரும் அளவிற்க்கான ஏற்றுமதி இறக்குமதி தொழில் வெற்றி வாய்ப்பை வாரி வழங்குகிறார், திருமணதிற்கு பிறகான முன்னேற்றத்தை அபரிவிதமாக வழங்குவது கவனிக்க தக்கது, ஸ்திர நெருப்பு தத்துவத்தில் செயல்படும் கேது ஜாதகருக்கு சுய கட்டுப்பாட்டையும், பொதுமக்கள் வழியில் இருந்து நிரந்தரமான ஆதரவையும், அரசியலில் அபரிவிதமான பொறுப்புகளை ஏற்று நடத்தும் யோகத்தையும் வழங்குவது ஜாதக அமைப்பிலேயே மிகவும் சிறப்பான யோக பலன்களாக கருதலாம், வெளிவட்டார பழக்க வழக்கத்தையும், சிறந்த வாழ்க்கை துணையையும், தன்னலம் கருத நண்பர்களையும், அபரிவிதமான வியாபர விருத்தியையும், புகழ் மிக்க மக்கள் செல்வாக்கையும் ஜாதகருக்கு வாரி வழங்குவதே கேது பகவான் தான் என்றால் அது மிகையில்லை.

இந்த ஜாதகத்தை பல ஜோதிடர்கள் சர்ப்ப தோஷம், நாக தோஷம் என்று குழப்பி உள்ளனர், உண்மையில் லக்கினம் மற்றும் களத்திர ஸ்தானத்தில் அமர்ந்த ராகு கேது ஜாதகருக்கு தடையில்லா யோக வாழ்க்கையையே 100% சதவிகிதம் வாரி வழங்குகின்றனர் என்பதை எவராலும் மறுக்க இயலாது .

மேற்கண்ட ஜாதக அமைப்பை போல் உள்ள ஜாதகங்களை நிறைய ஜோதிடர்கள் சர்ப்ப தோஷம் உள்ளதாக நிர்ணயம் செய்கின்றனர், ஜாதகத்தில் ராகு கேது எவ்வித பலன்களை தருகிறது என்பதை நிர்ணயம் செய்த பிறகே ஜாதகருக்கு உண்டான பலன்களை சொல்வது சால சிறந்தது.

லக்கினத்தில் அல்லது களத்திர ஸ்தானத்தில் ராகு கேது அமர்ந்தாலே அது சர்ப்ப தோஷ ஜாதகம் என்று முடிவு செய்வது ஜோதிடத்தின் அடிப்படையே தெரியாத நபர்கள் சொல்லும் வாக்காகவே"ஜோதிடதீபம் " கருதுகிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக