திங்கள், 31 ஆகஸ்ட், 2015

தொழில் நிர்ணயம் : சுய ஜாதக வலிமைக்கு பொருத்தமான தொழில் அல்லது வேலையை தேர்வு செய்வது எப்படி ?


" உத்தியோகம் புருஷ லட்சனம் " என்ற பழமொழிக்கு வலிமையை சேர்ப்பது அனைவரின் ஜாதகத்தில் உள்ள ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகமே, ஒரு ஜாதகரின் தொழில் அல்லது வேலைய நிர்ணயம் செய்வதில் லக்கினம் முதல் 12 பாவகங்களும் பங்கு வகித்தாலும், ஜீவன ஸ்தானமே முக்கிய பங்குவகிக்கிறது, சுய ஜாதகத்தில் ஜாதகருக்கு உண்டான சரியான தொழில் தேர்வு செய்யவும், சரியான நேரத்தில் ஜாதகருக்கு ஜீவன ரீதியான அறிமுகங்களையும் தேர்ச்சியும் தந்து வாழ்க்கையில் தொழில் ரீதியான முன்னேற்றங்களை வாரி வழங்குகிறது.

அடிப்படையில் ஒருவர் தொழில் அல்லது வேலையை தேர்வு செய்யும் முன் தனது சுய ஜாதகத்தில் உள்ள ஜீவன ஸ்தான வலிமையையும், மற்ற பாவகங்களின் வலிமையையும் கருத்தில் கொண்டு சரியான தொழில் அல்லது வேலையை தேர்வு செய்து வெற்றி பெறலாம், சுய தொழில் செய்ய விருப்பமுள்ள ஒவ்வொருவரும் தனது ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகம் மிக மிக வலிமையாக இருப்பது அவசியமாகிறது, ஒருவரது சுய ஜாதகத்தில் 10ம் பாவகம் 6,8,12ம் வீடுகளுடனோ, பாதக ஸ்தானத்துடனோ சம்பந்தம் பெற்று இருந்தாலோ, நடைபெறும் அல்லது எதிர் வரும் திசை ஜாதகருக்கு பாதிக்க பட்ட பாவகத்தின் பலனை ஏற்று நடத்தினாலோ, ஜாதகர் எக்காரணத்தை கொண்டும் சுய தொழில் செய்வதை தவிர்ப்பதே நல்லது, சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெற்று இருந்து, நடைபெறும் திசை எதிர்வரும் திசை வலிமை பெற்ற ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்தினால் ஜாதகரின் தொழில் மற்றும் ஜீவன மேன்மை மிகவும் சிறப்பாக அமையும்.

உதாரணமாக கிழ்கண்ட ஜாதகிக்கு, ஜாதக ரீதியாக தொழில் நிர்ணயம் செய்வது  பற்றி ஆய்வு செய்வோம் அன்பர்களே!


லக்கினம் : கன்னி 
ராசி : கன்னி 
நட்சத்திரம் : அஸ்தம் 3ம் பாதம் 

ஜாதகிக்கு 10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகி ஒரு இடத்தில் வேலை செய்வதை விட சுய தொழில் செய்வதே சிறப்பான வெற்றிகளை தரும் என்பது உறுதியாகிறது, ஜாதகியின் ஜீவன ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 3ம் வீடாக அமைவதும், உபய காற்று தத்துவத்தில் இயக்கம் பெறுவதாலும், ஜாதகிக்கு ஏஜென்சி துறையிலும், தரகு சார்ந்த தொழில்களிலும் வெற்றியை தரும், தனது அறிவு திறனை பயன்படுத்தி செய்யும் தொழில்களில் ஜாதகிக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

ஜாதகிக்கு வருமானம் எங்கிருந்து வருகிறது என்பதை ஆய்வு செய்வோம், ஜாதகியின் குடும்பம் மற்றும் வருமானத்தை குறிக்கும் 2ம் பாவகம் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் வீடாக வருவது ஜாதகி வாழ்க்கை துணை, நண்பர்கள், பொதுமக்கள் வழியில் இருந்து வருமான வாய்ப்பை தனது அறிவு சார்ந்த விஷயங்களில் இருந்து பெறுவார் என்பது தெளிவாகிறது, வரும் வருமானம்  ஜாதகிக்கு மீண்டும் தொழில் முதலீட்டில் பயன்படும் என்பதை 2ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது உறுதிபடுத்துகிறது, பொதுவாக சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவது சம்பந்தபட்ட ஜாதகருக்கு சுய தொழில் வாய்ப்பை வழங்கும், லாப ஸ்தானமான  11ம் பாவகம் வலிமை பெறுவது செய்யும் தொழிலில் நல்ல லாபத்தை தரும்.

மேற்கண்ட ஜாதகிக்கு ஜீவன ஸ்தானம் வலிமை பெற்று உபய ராசியில் அமைவது செய்யும் சுய தொழில் சிறு முதலீடு செய்வதையும், லாப ஸ்தானம் வலிமை பெற்று சர ராசியில் அமைவது செய்யும் தொழிலில் பெரும் அபரிவிதமான லாபத்தையும் தெளிவுபடுத்துகிறது, ஜாதகி தான் செய்யும் தொழிலை தனிப்பட்ட முறையில் செய்ய வேண்டும் என்பதையும், கூட்டு தொழில் ஜாதகிக்கு பெரிய இழப்பை தரும் என்பதை 7ம் வீடு ஆயுள் மற்றும் திடீர் இழப்பை தரும் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மிக தெளிவாக ஜாதகம் அறிவுறுத்துகிறது.

நடைபெறும் குரு திசை ஜாதகிக்கு பாக்கிய ஸ்தான பலனை செய்வது யோகம் என்ற போதிலும், குரு திசை சனி புத்தியே ஜாதகிக்கு 2,6,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தருவதால், குரு திசை சனி புத்தியே ஜீவன ரீதியான முன்னேற்றத்தையும், தொழில் துவக்கத்தையும் தரும் என்பது கவனிக்க தக்கது, ஆக ஜாதகிக்கு எதிர்வரும் சனி புத்தி சுய தொழில் துவங்கவும், தொழில் ரீதியான வெற்றிகளை பெறுவதற்கும் வாய்ப்பை தரும் என்பது தெளிவாகிறது.

சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெற்று இருப்பின் ஜாதகர் சுய தொழில் செய்ய யோகம் பெற்றவராகிறார், சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை இழக்கும் பொழுது ஓரிடத்தில் பணியாற்றும் யோகத்தையே பெறுகிறார், மேலும் 7ம் பாவகம் வலிமை பெற்றால் மட்டுமே ஜாதகருக்கு கூட்டு தொழில் முன்னேற்றம் தரும், சுய ஜாதகத்தில் 7,10ம் வீடுகள் பாதிக்கப்படும் பொழுது ஓரிடத்தில் பணிபுரிவதே சால சிறந்தது என்பதை கவனத்தில் கொள்வது நல்லது.

குறிப்பு :

ஜீவன ஸ்தானம் ஜாதகிக்கு வலிமை பெற்று மிதுனத்தில் அமைவதால், சிறிய முதலீட்டின் மூலம் ஒரு ஏஜென்சி எடுத்து நடத்துவது மிகுந்த லாபத்தை தரும் என்பது கவனிக்க தக்கது, தரகு சார்ந்த வியாபாரங்கள் மூலமும் நல்ல வருமானம் கிடைக்கும், இருப்பினும் ஜீவன ஸ்தான அதிபதியை கருத்தில் கொண்டு தொழிலை தேர்வு செய்யும் பொழுது தொழில் ரீதியான வெற்றி 100% விகிதம் உறுதிபடுத்தப்படும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன்
9443355696    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக