வெள்ளி, 4 மார்ச், 2016

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - கடக லக்கினம்


சாய கிரகங்கள் என்று போற்றப்படும் " ராகு கேது" பெயர்ச்சி, கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 4ம் ராசியான கடக ராசியை, லக்கினமாக கொண்ட அன்பர்களுக்கு, லக்கினத்திற்கு 2ல் ராகு பகவானும், 8ல் கேதுபகவானும் சஞ்சாரம் செய்து, இனி வரும் 18 மாதங்களுக்கு வழங்கும் பலாபலன்களை பற்றி ஆய்வு செய்வோம் அன்பர்களே!

கடக இலக்கின சிறப்பு இயல்புகள் :

கடக ராசியை ஜென்ம லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு லக்கினம் வலிமை பெரும் பொழுது, ஜாதகரின் அதிர்ஷ்டம் மற்றும் யோக வாழ்க்கை சிறப்பாக அமையும், பொதுமக்களின் ஆதரவில் மிகப்பெரிய வெற்றிகளை மிக எளிதாக பெரும் யோகம் பெற்றவர்கள், தனிப்பட்ட வாழ்க்கையில் மன வருத்தங்கள் இருந்த போதிலும் பொதுவாழ்க்கையில் பிரகாசிக்க செய்யும், ஜாதகரின் மனோபலம் என்பது மிதமிஞ்சிய அளவில் இருக்கும் என்பது மட்டும் குறிப்பிட தக்க அம்சமாகும், தனது எண்ணங்களின் சக்தியை மிகவும் சிறப்பாக பிரயோகிக்கும் வல்லமையை தரும், புலன்களுக்கு எட்டாத விஷயங்களில் தேர்சியையும், புதுவித உணர்வு பூர்வமான சக்திகளையும் ஜாதகர் இயற்கையாகவே பெற்று இருப்பார், சொத்து சுக போகம், வண்டி வாகன யோகம், தோட்டம் பண்ணை, நான்கு கால் ஜீவன்கள் வழியில் இருந்து லாபம், விவசாயம் விவசாயம் சார்ந்த தொழில்களில் இருந்து அபரிவிதமான லாபம், எதிர்பார்த்த உதவிகளை ஜாதகர் தங்கு தடையின்றி பெரும் யோகம், பொதுமக்கள் வழியில் இருந்து லாபம், அரசியல் பொது வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம், சிறப்பு மிக்க பதவிகள் ஜாதகரை தேடிவரும் தன்மை, பரிசுத்தமான மன நிலை, கலை துறையில் பெயரும் புகழும் கிடைக்கும் தன்மை, தனது கற்பனைகள் மூலம் உலகின் பார்வையை தனது பக்கம் திருப்பும் வல்லமை, இயல் இசை நாடகம் போன்ற துறைகளில் குறுகிய கால வெற்றியை பெரும் யோகம், பரந்த மனபக்குவம், எல்லைக்கு அப்பாற்ப்பட்ட கற்பனை திறன் என ஜாதகரின் வாழ்க்கை மிகுந்த சுவாரஸ்யமும், பல திருப்பங்களையும் கொண்டதாக அமையும்.

கடந்த ராகு கேது பெயர்ச்சி கடக இலக்கின அன்பர்களுக்கு 9ல் கேதுவின் சஞ்சாரமும், 3ல் ராகுவின் சஞ்சாரமும், 9ம் பாவக வழியில் இருந்து சிறப்பான நன்மையையும், 3ம் பாவக வழியில் இருந்து எடுக்கும் முயற்சிகளில் நல்ல வெற்றிகளையும் வாரி வழங்கியது, தற்பொழுது பெயர்ச்சி அடைந்துள்ள சாய கிரகத்தின் சஞ்சாரமும் கடக இலக்கின அன்பர்களுக்கு யோகத்தை வாரி வழங்குவது, மிகுந்த நன்மைகளை தரும் விதத்தில் இருப்பது வரவேற்க தக்க அம்சமாகும், 2ல் சஞ்சாரம் செய்யும் ராகு பகவான் கை நிறைவான வருமான வாய்ப்புகளை வாரி வழங்குவார், குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும், ஜாதகரின் பேச்சு செயல்கள்  யாவும்  தன்னிகரில்லா லாபங்களை பெற்று தரும், வாக்கின் வழியில் ஜீவனம் மேற்கொள்ளும் அன்பர்களுக்கு தன்னிகரில்லா வருமானங்கள் வந்து சேரும், இறை அருளின் கருணையும், ஜாதகரின் வாக்கு வன்மையும் தொடர் வெற்றிகளை  பெற்று தரும், இறை வழிபாட்டில் அறிய திருத்தலங்களுக்கு சென்று வரும் யோகம் உண்டாகும், ஜாதகரின் மதிப்பு மரியாதை சமூகத்தில் அதிகரிக்கும், எவ்வித சூழ்நிலையையும் சிறப்பாக எதிர்கொள்ளும் வல்லமை உண்டாகும், பொது வாழ்க்கையில் உள்ள அன்பர்களுக்கு தன்ப்பட்ட பேச்சு திறன் மூலம் அரசியலில் பிரகாசிக்கும் யோகம் உண்டாகும், ஆன்மீகத்தில் வெற்றியும், ஆன்மீக பெரியோர்களின் ஆசியும் பரிபூர்ணமாக ஜாதகருக்கு கிடைக்கும் யோகம் உண்டு, சுய தொழில் புரியும் அன்பர்களுக்கு  ஸ்திரமான வருமான வாய்ப்புகளை தொடர்ந்து பெரும் யோகம் உண்டு, ராகு சஞ்சாரம் கை நிறைவான வருமானத்தையும், எதிர்பாராத யோகங்களையும் வாரி வழங்கும்.

8ல் சஞ்சாரம் செய்யும் கேது பகவான் கடக இலக்கின அன்பர்களுக்கு, திடீர் அதிர்ஷ்டங்களை வாரி வழங்குவார், ஜாதகரின் புத்திசாலித்தனமும், அறிவு திறனும் மிகப்பெரிய லாபங்களை பெற்று தரும், தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து மிகுந்த யோகத்தையும், தன்னிறைவான வருமான  வாய்ப்புகளையும் ஜாதகர் பெறுவார், நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் வழியில் இருந்து ஜாதகர் அபரிவிதமான அதிர்ஷ்டங்களை பெரும் யோகம் உண்டு, பொதுமக்கள் ஆதரவு ஜாதகருக்கு திடீர் பதவிகளை வாரி வழங்கும், எதிர்பார்த்த முன்னேற்றம் தங்கு தடையின்றி அமையும், பல வெளிநாடு வெளியூர் சென்று வரும் யோகம் உண்டாகும், ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்து வரும் அன்பர்களுக்கு திடீர் அதிர்ஷ்டத்தின் மூலம் அபரிவிதமான செல்வாக்கு அமையும், திடீர் அதிர்ஷ்டத்தின் பலாபலன்களை கேதுவின் சஞ்சாரம் தங்களுக்கு ஸ்திரமாக வாரி வழங்குவது தங்களின் வாழ்க்கையில் சகல நிலைகளில் இருந்தும் அந்தஸ்த்தையும், கௌரவத்தையும் அதிகரிக்கும், புதிய கூட்டு தொழில் செய்யும் யோகம் உண்டாகும், தொழில் விஷயமாக செய்யும் பயணங்கள் யாவும் தங்களுக்கு மிகுந்த  லாபத்தையும் தொழில் விருத்தியையும் அதிகரிக்கும், திருமண தடைகள் நீங்கும், குடும்பத்தில் மகிழ்ச்சியும் புதிய வரவுகளால் சுபிட்சமும் அதிகரிக்கும், தங்களுக்கு இந்த சாய கிரகங்களின் பெயர்ச்சி மிகுந்த யோகத்தை தரும்.

மொத்தத்தில் எதிர்வரும் ராகுகேது பெயர்ச்சி கடக இலக்கின அன்பர்களுக்கு 2ம் பாவக வழியில் இருந்து கை நிறைவான வருமானமும், 8ம் பாவக வழியில் இருந்து திடீர் அதிர்ஷ்டத்தையும் வாரி வழங்கும், கடக  இலக்கின அன்பர்கள் அனைவரும் ராகுகேது பெயர்ச்சியால் 2ம் பாவக வழியில் இருந்து வருமானத்தையும், 8ம் பாவக வழியில் இருந்து புதையல் யோகத்தையும் பெறுகின்றனர்.

குறிப்பு :

மேற்கண்ட பலாபலன்கள் கடக இலக்கின அன்பர்களுக்கு, தற்பொழுது நடைபெறும் திசாபுத்திகள் 02 மற்றும் 08 ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே யோக அவயோக  பலன்கள் 100% சதவிகிதம் நடைபெறும், எனவே கடக  இலக்கின அன்பர்கள் சுய ஜாதகத்தில் தற்பொழுது நடைபெறும் திசாபுத்திகள் 02,08ம் பாவக பலனை ஏற்று நடத்துகிறதா? என்பதில் தெளிவு பெறுவது அவசியமானதாக "ஜோதிடதீபம்" கருதுகிறது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

1 கருத்து:

  1. ஐயா வணக்கம். சூரியனால் ஏற்படும் கிரகங்களின் வக்கிரம் சந்திரனுக்கு இல்லை. புதன் மற்றும் சுக்கின் சூரியனை ஒட்டியே சற்றுப்பாதையில் வலம் வருவதால் இருவருக்கும் வக்கிர தோஷம் அவ்வளவாக பாதிக்காது. ஆனால் ராஜ கிரகங்களான குரு, சனி, செவ்வாய் இவற்றில் ஒன்றோ இரண்டோ அல்லது மூன்றும வக்கிரத்தில்க் உள்ளபோது பிறப்பவற்கள் வாழ்க்கையை எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தும். இவற்களுக்கு ஏற்றம்மா இறக்கம்மா ? பரிகாரம் உண்டா? விளக்கம் அளித்தால் பலருக்கும் பயன்படும்.

    பதிலளிநீக்கு