வியாழன், 16 ஜூன், 2016

திருமணத்திற்கு முன் வரன் மற்றும் வதுவின் ஜாதகத்தில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் !


" திருமணம் ஆயிரம் காலத்து பயிர் " என்ற பெரியோர்களின் முதுமொழிக்கு  ஏற்ற இல்லற வாழ்க்கை அமைய வேண்டும் எனில் அவரவர் சுய ஜாதகங்களில் சில முக்கியமான பாவகங்கள் வலிமையுடன் இருப்பது அவசியமாகிறது, இதற்க்கு மாறாக அமையும் பொழுது சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையில் பொருத்தமில்லா வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார், இல்லற வாழ்க்கையும் இனிமை தருவதில்லை, சுய ஜாதகத்தில் இல்லற வாழ்க்கையை நிர்ணயம் செய்யும், 2,5,7,8,12 ம் பாவகங்கள் ஒருவருக்கு வலிமையுடன் அமைந்தால் நிச்சயம் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு திருமண வாழ்க்கை சிறப்பாக அமையும், தமக்கு பொருத்தமான இல்லற வாழ்க்கை சரியான வயதில் அமைந்துவிடும், மேற்கண்ட பாவகங்கள் பாதிக்கப்படும்பொழுது, சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு பொருத்தமான வாழ்க்கை துணை அமைவது என்பது குதிரை கொம்பாக மாறிவிடும், தமது சுய ஜாதகத்தில் மேற்கண்ட பாவகங்கள் பாதிக்க பட்டு இருப்பின் சம்பந்தப்பட்ட ஜாதகர், தமக்கு வரும் வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் பொழுது மிகுந்த கவனமுடன் இருப்பது நலம் தரும்.


லக்கினம் : விருச்சிகம் 
ராசி : மகரம் 
நட்சத்திரம் : அவிட்டம் 1ம் பாதம் 

ஜாதகிக்கு வயது 26 இதுவரை திருமணம் செய்வதற்கு எடுத்த 100க்கு மேற்ப்பட முயற்ச்சிகள் யாவும்  தோல்வியில் முடிந்தது, சுய ஜாதகத்தில் பாவக வலிமையை ஆய்வு செய்வோம் அன்பர்களே!

1,3,7,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம்.
2,5,6,8,10,11ம் வீடுகள் சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம்.
4,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம்.

ஜாதகிக்கு பெரும்பாலான பாவக தொடர்புகள் வலிமை அற்ற நிலையில் காணப்படுவது வரவேற்க தக்கது அல்ல, இதில் பாதக ஸ்தான தொடர்பு என்பது ஜாதகிக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்பை தரும், இலக்கின வழியில் இருந்து ஜாதகி எடுக்கும் முடிவுகள் யாவும் மிகப்பெரிய பின்னடைவை தரும், நல்ல உடல் நலம் மற்றும் மன நலம் அமைவதும், வளரும் சூழ்நிலை சிறப்பாக அமைவதும் கேள்விக்குறியே, ஜாதகியின் எண்ணமும் நடவடிக்கையும் மற்றவர்கள் விமர்சனத்திற்கு வழிவகுக்கும், ஜாதகியின் ஆசைகள் நிராசைகளாக மாறிவிடும், நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும், 3ம் பாவக வழியில் இருந்து எடுக்கும் முயற்ச்சிகள் யாவும் மிகப்பெரிய தோல்வியை தரும், தன்னம்பிக்கை குறையும், வீரியமற்ற தன்மையும், அசட்டு துணிச்சலும் ஜாதகியின் வாழ்க்கையை திசைமாறி  செல்லும் தன்மையை தரும்.

7ம் பாவக வழியில் இருந்து ஜாதகியின் நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் ஜாதகியை வெகுவாக தமது சுயலாபத்திற்காக பயன்படுத்திகொல்வார்கள், எதிர்பால் அமைப்பினரிடம் இருந்து ஜாதகி சொல்ல இயலா துன்பத்திற்கும் ஆளாகும் சூழ்நிலையை தரும், வாழ்க்கை துணையை சரியாக தேர்வு செய்யவில்லை எனில் வாழ்க்கை  நரகத்திற்கு ஒப்பான நிலையை தரும், 9ம் பாவக வழியில் இருந்து தமது அறிவார்ந்த செயல் என்று நினைத்துகொண்டு செய்யும் சில முட்டாள்தனமான நடவடிக்கைகள் ஜாதகியை படுகுழியில் தள்ளும், உதவி செய்ய யாரும் அற்ற சூழ்நிலையை தரும், பெரியோரை மதிக்கமால் செய்யும் ஒவ்வொரு காரியமும் ஜாதகியின்  நற்ப்பெயருக்கும் புகழுக்கும் மறையாத களங்கத்தை ஏற்ப்படுத்தும், தனது வாழ்க்கைய தானே பாதிப்பிற்க்கு உள்ளாக்கும் சூழ்நிலையை தரும்.

1,3,7,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகியின் வாழ்க்கையில் 200% விகித இன்னல்களை வாரி வழங்கும், மேலும் பெரும்பாலான பாவக தொடர்புகள் சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, சம்பந்தம் பெற்ற பாவக வழியில் இருந்து எதிர்ப்பையும், வீண் விரோதங்களையும், பகைமையையும் வளர்க்கும், இதனால் ஜாதகிக்கு பெரிய அளவில் மன நிம்மதி இழப்பையும், துன்பத்தையும் வாரி வழங்கும், சுக ஸ்தானமான 4ம் வீடும், அயன சயன சுகம் தரும் 12ம் வீடும் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகிக்கு சுகபோகங்களையும், இல்லறவாழ்க்கையில் இன்பத்தையும் தடை செய்யும், மேலும் ஜாதகியின் விரைய ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு களத்திர ஸ்தானமாக அமைவது, வாழ்க்கை துணை வழியில் இருந்து சுகமற்ற தன்மையையும், வீண் மன கவலைகளையும், அதிக மன உளைச்சல் மற்றும் மன போராட்டத்தை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், எனவே ஜாதகி மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் வாழ்க்கையை எதிர்கொள்வது  சாலசிறந்தது, சுய ஜாதகத்தில் வெகுவான பாவக தொடர்புகள் பாதிப்பை தரும் அமைப்பில் உள்ளது ஜாதகியின் வாழ்க்கைக்கு உகந்தது அல்ல என்பது கவனிக்க தக்க விஷயமாகும்.

ஜாதகியின் களத்திர ஸ்தானம், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு குடும்ப ஸ்தானமாகவும், ஜாதகியின் குடும்ப ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பாக்கிய ஸ்தானமாகவும் அமைவது, ஜாதகியின் பேச்சு வாக்கின் வழியில் இருந்து மிகப்பெரிய துன்பமும், அவபெயரும் உண்டாகும், ஜாதகியின் வாக்கு வன்மை பெரிய அளவில் ஜாதகிக்கும், ஜாதகியை சார்ந்தோருக்கும் பாதிப்புகளை வாரி வழங்கும், சுய ஜாதகத்தில் 2,7ம் வீடுகள்  கடுமையாக பாதிக்கபடுவதும், காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு  குடும்பம் மற்றும் களத்திர பாவகங்கள் பாதிப்பிற்கு உள்ளகுவதும், நல்ல இல்லற வாழ்க்கையை அமைத்து தர வாய்ப்பில்லை, மேலும் ஜாதகியாக தேர்வு செய்வது மிகப்பெரிய இன்னலுக்கும், மனமுறிவுக்கும் வழிவகுக்கும், எனவே  ஜாதகி வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் பொழுது, வாழ்க்கை துணையையின் ஜாதகத்தில் மேற்கண்ட ( 1,2,5,7,8,12 ) பாவகங்கள் வலிமையுடன் இருப்பதை கவனத்தில் கொண்டு தேர்வு செய்வது நலம் தரும், மேலும் தமது நலம் விரும்பும் பெரியோர்களின் வாக்கை மதித்து நடந்து கொள்வதும், தமக்கு வரும் வாழ்க்கை துணையின் வழியில் இருந்து வரும் இன்னல்களை ஏற்றுக்கொண்டு, திருமண வாழ்க்கையை சிறப்பாக வாழ்வதற்கு தயாராக இருப்பதும் சகல நலன்களையும் தரும்.

தற்பொழுது ஜாதகிக்கு நடக்கும் குரு திசை ஆயுள் பாவகமான 8ம் வீடு சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று சில நன்மைகளை தந்த போதிலும், வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் எதிர்ப்புகளை தவிர்க்க இயலாது, தமக்கு வர இருக்கும் வாழ்க்கை துணையின் ஜாதகமே தமக்கு இல்லற வாழ்க்கையில் நன்மையை தரும் என்பதால், ஜாதகி தமக்கு வரும் வாழ்க்கை துணையின்  ஜாதகத்தை வலிமை மிக்கதாக தேர்வு செய்வது சகல நலன்களையும் தரும்.

குறிப்பு :

தமது சுய ஜாதகம் வலிமை அற்று இருக்கும் பொழுது, தமது கூட்டாளிகள் மற்றும் வாழ்க்கை துணையின் ஜாதக வலிமை, தமக்கு நன்மைகளை தரும் என்பதில்  மாற்று கருத்து இல்லை, மேலும் திருமண வாழ்க்கையில் சுய ஜாதக வலிமையை விட, தமது வாழ்க்கை துணையின் ஜாதக வலிமையே மிகுந்த நன்மையை தரும் என்பதில் அனைவரும் கவனம் கொள்வது நலம் தரும், வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் பாவக வலிமை அற்ற தன்மை தம்மையும் பெரிய பாதிப்பிற்கு ஆளாக்கும் என்பதில் எச்சரிக்கையுடன் இருப்பது நலம் தரும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக