#நட்சத்திரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
#நட்சத்திரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 10 டிசம்பர், 2023

ரிஷபராசி மிருகசீரிடம் நட்சத்திரம் - ராஜயோக வாழ்வை தரும் ரகசிய இறைவழிபாடு!


"மிருகசீரிடம் நட்சத்திரம்"
அதிகாரமும் ஆளுமைத்திறனும் ஒருங்கே அமையப்பெற்ற அருமையான நட்சத்திரம், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு இரண்டாவது ஸ்திர நிலதத்துவ ராசியான ரிஷப ராசியில் வியாபித்து இருக்கும் "செவ்வாயின்" மிருகசீரிடம் நட்சத்திரத்தை தனது ஜென்ம நட்சத்திரமாக பெற்ற அன்பர்கள் இயற்கையிலேயே அதீத திறமைசாலிகள் என்றால் மிகையாகாது, பேச்சு திறன், அனைவரையும் ஒன்றிணைக்கும் தன்மை, சேமிப்பில் அதீத ஆர்வம், சிறந்த நிதி மேலாண்மை, பொருளாதர ரீதியான வெற்றிகளை குறுகிய காலத்தில் நடைமுறைப்படுத்தும் ஆற்றல், புலனுக்கு அப்பாற்பட்ட அறிவாற்றல் என்ற வகையில் சிறப்பை தரும், இவர்களது  வாழ்வில் சகலவிதமான சௌபாக்கியமும், உடல் நலம் மனோவலிமை, கல்வியில் மேன்மை, தொழில் விருத்தி, புத்திரபாக்கியம், பொருளாதார வளர்ச்சி என்றவகையில் பரிபூரணமான சுகபோகங்களையும், தன்னிறைவாக சுவீகரிக்க, மிக எளிமையான ரகசிய இறைவழிபாடு என்பது கீழ்கண்டவாறு அமையும். 

  காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள சோமாஸ்கந்தர் வழிபாடு மிருகசீரிடம் நட்சத்திர அன்பர்களுக்கு வேண்டும் வரங்களை 27நாட்களுக்குள் வாரிவழங்கும் வல்லமை பெற்றவர், வளர்பிறை செவ்வாய் அல்லது வெள்ளி கிழமைகளில் செவ்வாய் சுக்கிர ஹோரையில் சிகப்பு பட்டு, செவ்வரளி மாலை சாற்றி வழிபாடு செய்யும் மிருகசீரிடம் நட்சத்திர அன்பர்கள் தங்களது வாழ்க்கையில் நிறைவான சுபயோகங்களை பெற்று மகிழ்வார்கள், அறுபத்து நான்கு சிவ உருவத்திருமேனிகளில் ஒன்றாக சைவர்களால் வணங்கப்படும் வடிவமாகும் "சோமாஸ்கந்தர்" சிவன் பார்வதி தம்பதிகள் தங்கள் குழந்தையான கந்தனுடன் காட்சியளிப்பதை "சோமாஸ்கந்தர்" என்று அழைக்கிறோம். இவ்வடிவத்தில் சைவம் (சிவன்), சாக்தம் (உமை), கௌமாரம் (கந்தன்) ஆகிய மூன்று இறைநிலையின் தன்மையை மிருகசீரிடம் நட்சத்திரத்தை ஜென்ம நட்சத்திரமாக பெற்ற அன்பர்கள் சுவீகரிப்பது சகல சௌபாக்கியங்களையும் தன்னிறைவாக வாரி வழங்கும்.

 மிருகசீரிடம் நட்சத்திர அன்பர்கள் வாக்கு வன்மையும், வீரதீர செயல்களில் அதீத ஆர்வமும், தற்காப்புக்கலைகளில் சிறப்பான தேர்ச்சியும், கலைத்துறையில் ( நடிப்பு ) மிகப்பெரிய வெற்றிவாய்ப்புகளையும், நிலையான பொருளாதர முன்னேற்றத்தையும் சுயமாக சுவீகரிக்கும் வல்லமை பெற்றவர்கள், மற்றவர்களை சார்ந்து வாழாமல் தனக்கான தனித்துவத்தை உலகுக்கு பறைசாற்றி மற்றவர்கள் பயனுற வாழும் யோகம் கொண்டவர்கள், தனது குடும்ப உறுப்பினர்கள் மீது அதீத அக்கறை கொண்டவர்கள், முரட்டுசுபாவம் கொண்டவர்களாக வெளிகாட்டிக்கொள்ளும் இவர்கள், உண்மையில் பாசம் அதிகம் உள்ளவர்களாக இருப்பார்கள், ஆண் பெண் இருபாலரும் அழகிய தோற்றம் கொண்டவர்களாக இருப்பது கவனிக்கத்தக்கது, தனது அழகாலும் செயல்பாடுகளாலும் மற்றவர்களை மிக எளிதாக வசீகரிக்கும் வல்லமை பெற்றவர்கள், கடவுள் அருளாசியும், ஆன்மீகத்தில் அதீத பற்றும் கொண்டவர்கள், தமது புதிய கண்டுபிடிப்புகள் வழியில் உலகின் பார்வையை தமது பக்கம் திரும்பிப்பார்க்க வைக்கும் தன்மை பெற்றவர்கள், பல அறிய சாதனைகளுக்கும், ஆளுமை திறன் தேவை படும் துறைகளில் மிகப்பெரிய வெற்றிகளுக்கும் தமது வாழ்வை அர்ப்பணிக்கும் யோகம் பெற்றவர்கள், இவர்களது அறிவுரைப்படி நடக்கும் பொதுமக்கள் சமூகத்தில் மிகப்பெரிய அந்தஸ்த்தையும் கவுரவத்தையும் மிக எளிதாக பெறுவார்கள் என்பது கவனிக்கத்தக்கது.

குறிப்பு :

 ரிஷபராசியில் "மிருகசீரிடம்" நட்சத்திரத்தை தனது ஜென்ம நட்ஷத்திரம் அல்லது லக்கினமாக பெற்ற அன்பர்கள், சாஸ்திர வல்லுனர்களாகவும், தொழில்நுட்ப அறிவுத்திறன் அதிக அளவிலும், தற்காப்பு கலைகளில் சிறப்பான தேர்ச்சியையும், மருத்துவம், ஜோதிடம், கட்டிட கலை, ஆகம சாஸ்திரம், இரத்தின கற்களை பிரயோகிக்கும் வல்லமை, தலைமை பொறுப்பு ஏற்கும் யோகம், சரியான திட்டமிடுதல், அனைவரையும் அனுசரித்து செல்லும் யோகம், கூட்டு அமைப்பு, பொதுமக்களை தனது பேச்சு திறனால் ஒன்றிணைக்கும் தன்மை, அதிகாரம் செய்வதன் மூலம் சமுதாயத்திற்க்கு பயனுள்ள காரியங்களை செய்வது, வருமுன் காப்பது, மற்றவர்களை துன்பத்தில் இருந்து காக்கும் வல்லமை, தனது வாழ்நாள் மற்றும் அதன் பிறகும் பெயரும் புகழும் கொண்ட பயனுள் வாழ்க்கையை வாழும் யோகம் பெற்றவர்கள், இவர்களுக்கு மேற்சொன்ன இறை வழிபாடு இவர்களது வாழ்வில் ராஜயோகத்தை தன்னிறைவாக வாரி வழங்கும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை அன்பர்களே ! 

ஜோதிடன் வர்ஷன் 

9443355696

வெள்ளி, 8 டிசம்பர், 2023

ரிஷபராசி ரோஹிணி நட்சத்திரம் - ராஜயோக வாழ்வை தரும் ரகசிய இறைவழிபாடு!

"ரோஹிணி நட்சத்திரம்" அதிர்ஷ்டமும் அறிவாற்றலும் ஒருங்கே அமையப்பெற்ற அற்புதமான நட்சத்திரம், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு இரண்டாவது ஸ்திர நிலதத்துவ ராசியான ரிஷப ராசியில் வியாபித்து இருக்கும் "சந்திரனின்" ரோஹிணி நட்சத்திரத்தை தனது ஜென்ம நட்சத்திரமாக பெற்ற அன்பர்கள் இயற்கையிலேயே அதிர்ஷ்டசாலிகள் என்றால் அது மிகையாகாது, ஏனெனில் இவர்கள் நினைக்கும் விஷயங்கள் யாவும் நிச்சயம் நடைமுறைக்கு வரும், அது நன்மை தரும் காரியங்கள் என்றாலும் சரி, தீமை தரும் காரியங்கள் என்றாலும் சரி, எனவே ரோஹிணி நட்சத்திர அன்பர்கள் அனைவரும் தனது மனதில் நேர் மறை எண்ணங்களை மட்டுமே சிந்திப்பது அவசியமானது, இவர்களது  வாழ்வில் சகலவிதமான சௌபாக்கியமும், உடல் நலம் மனோவலிமை, கல்வியில் மேன்மை, தொழில் விருத்தி, புத்திரபாக்கியம், பொருளாதார வளர்ச்சி என்றவகையில் பரிபூரணமான சுகபோகங்களையும், தன்னிறைவாக சுவீகரிக்க, மிக எளிமையான ரகசிய இறைவழிபாடு என்பது கீழ்கண்டவாறு அமையும். 

"திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்" இக்கோயில் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டத்தில் உள்ள திருப்பட்டூர் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது. ரோஹிணி நட்சத்திர அதிதேவதை "பிரம்மா" என்பதனாலும், பிரம்மாவிற்கு சாப நிவர்த்தி செய்த திருத்தலம் என்பதாலும், பிரம்மாவிற்கு தனிச்சன்னதி வழங்கிய இறைவன் இத்திருத்தலம் நாடி வரும் அன்பர்களுக்கு மறுபிறவி நல்க பணித்ததாலும், இங்கு வரும் அனைத்து அன்பர்களின் வாழ்விலும் நல்மாற்றங்கள் 48நாட்களுக்குள் நிகழும் என்பது கவனிக்கத்தக்கது, பிரம்ம தீர்த்தத்தில் நீராடி "இறைவன் பிரம்மபுரீசுரவரர் இறைவி பிரம்மநாயகி" வழிபாடு செய்த பிறகு, பிரம்மாவை வளர்பிறை திங்கள் அன்று வெண் நிற மலர்கள் வெண்பட்டு சாற்றி வழிபடும் ரோஹிணி நட்சத்திர அன்பர்களுக்கு, வாழ்வில் வியக்கத்தக்க மாற்றங்கள் நிகழும் என்பது கண்கூடான உண்மையாகும்.

பிறப்பின் அருமை, பிறவிப்பயன், உடல் ரீதியான மாற்றங்கள், அறிவுபூர்வமான செயல்பாடுகள், கல்வியில் அபரிவிதமான முன்னேற்றம், கலைகளில் தேர்ச்சி, பிரபல்ய யோகம், அரசு பதவிகளை அலங்கரிக்கும் யோகம், தெய்வீக அனுகூலம், தீர்க்கமான வாதத்திறமை, வாக்குபலிதம், மற்றவர்களை தமது வார்த்தைக்கு கட்டுப்படுத்தும் தன்மை, மதிப்பு மரியாதை, மற்றவர்களை சார்ந்து வாழாமல் தனித்து புகழ் பெறுதல், ஆயகலைகளில் மிகப்பெரிய வெற்றி வாய்ப்பு, இயல் இசை நாடகம் போன்ற துறைகளில் சிறப்பான வெற்றிகள், வருமானத்திற்க்கு குறைவில்லா நிலை, பற்றாக்குறை என்பது இல்லாமல் தன்னிறைவான பொருளாதார வளர்ச்சி, முற்போக்கு சிந்தனை, கலைத்துறையில் அதீத ஆர்வம் அதன்வழியிலான அதிர்ஷ்டவாய்ப்புகள், தனது படைப்பு திறன் கொண்டு அனைவரையும் தனது பக்கம் ஈர்க்கும் வல்லமை, அரசியலில் புகழ் பெரும் யோகம், சரித்திரம் படைக்கும் பேராற்றல் என்ற வகையில் சிறப்புகளை வாரி வழங்கும்.

குறிப்பு :

 ரோஹிணி நட்சத்திரத்தை தமது ஜென்ம நட்ஷத்திரம் அல்லது லக்கினமாக பெற்ற அன்பர்கள் இயற்கையாவே மற்றவர்களை கவரும் தன்மை பெற்றவர்கள், எதிலும் தனித்து தெரியும் தன்மையும், தனது சுய முயற்சி வழியிலான சாதனைகளை மிக சிறப்பாக முன்னெடுக்கும் பேராற்றல் பெற்றவர்கள் என்றால் அது மிகையாகாது, அரசியல், கலைத்துறை, விளையாட்டு, புதிய கண்டுபிடிப்புகள், சாஸ்திர ஞானம், தெய்வீக தன்மை, முற்போக்கு சிந்தனை, எதிர்பாலின கவர்ச்சி, தன்னிறைவான பொருளாதார வளர்ச்சி என்ற வகையில் சிறப்பை பெறுவார்கள், இவர்களுக்கு மேற்சொன்ன இறை வழிபாடு இவர்களது வாழ்வில் ராஜயோகத்தை தன்னிறைவாக வாரி வழங்கும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை அன்பர்களே ! 

ஜோதிடன் வர்ஷன் 

9443355696