#rahuketu2022 #rahuketupeyarchi2022 #rahuketu #sarpadosam #nagadosam லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
#rahuketu2022 #rahuketupeyarchi2022 #rahuketu #sarpadosam #nagadosam லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 25 மார்ச், 2022

ரிஷபம் 2022-2023 ராகுகேது பெயர்ச்சி பலன்கள் !




மேஷ ராசியில் ராகுபகவான் சஞ்சாரம் :

ரிஷப லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு அயன சயன ஸ்தானமான 12ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் சாயா கிரகமான ராகு பகவான், தான் சஞ்சாரம் செய்யும் 12ம் பாவகத்தை 100% விகிதம் வலிமை சேர்க்கும் அமைப்பில் தனது இயக்க நிலையை செயல்படுத்தும் காரணத்தால், ரிஷப லக்கினத்தை சாந்த அன்பர்களுக்கு மனநிறைவு என்பது வெகு சிறப்பாக அமையும், பொதுவாகவே ரிஷப லக்கின அன்பர்கள் தன்னை சார்ந்தவர்களின் முன்னேற்றத்தில் அதிக அக்கறை கொண்டவர்கள், மற்றவர்களை பராமரித்து காப்பதில் வல்லவர்கள் இவர்களின் கண்காணிப்பில் பாதுகாப்பில் இருக்கும் அன்பர்களின் வாழ்க்கை 100%விகிதம் பாதுகாப்பானது என்பதில் சந்தேகம் இல்லை, ராகுவின் சஞ்சாரம் ரிஷப லக்கின முதலீட்டாளர்களுக்கு செய்த முதலீடுகள் வழியில் இருந்து வரும் லாபம் என்பது மிக பெரிய அளவில் மகிழ்சியை தரும், திருப்திகரமான மனநிலையுடன் செய்யும் காரியங்கள் யாவிலும் வெற்றிமேல் வெற்றி உண்டாகும், தாம்பத்தியம் மகிழ்ச்சிகரமானதாக அமையும், இல்லற வாழ்க்கையில் தனது வாழ்க்கை துணை உடனான அன்னியோன்னியம் அதிகரிக்கும், புதிய தொழில்களிலும், புதிய சொத்துக்கள் மேலேயும் முதலீடு செய்யும் யோகம் உண்டாகும், புதிய இயந்திரங்கள் தொழில் சார்ந்த அமைப்புகளில் வாங்கும் யோகம் உண்டாகும், புதிய தங்க ஆபரங்கள் சேர்க்கை உண்டாகும், ஆன்மீக பயணங்கள் மேற்கொள்ளும் சந்தர்ப்பமும், ஆன்மீக பெரியோர்களின் ஆசிர்வாதமும் முழுமையாக கிடைக்கப்பெறுவீர்கள், ராகு பகவான் தங்களுக்கு புதிய முதலீடுகள் சார்ந்த அறிவையும் அந்த முதலீடுகள் வழியிலான மிக பெரிய லாபங்களை தன்னிறைவாக வாரி வழங்குவர் என்பதில் சந்தேகம் இல்லை. 

சில ரிஷப லக்கின அன்பரக்ளுக்கு போக வாழ்க்கையில் அதீத நாட்டத்தை  தரும் ராகுவின் சஞ்சாரம் மனமகிழ்ச்சிக்கு குறைவே வைக்கவாய்ப்பில்லை என்பது கவனிக்கத்தக்கது, தன்னுடைய பிதுரதிபதிகளின்  சொத்துக்களை ஏக காலத்தில் சுவீகரிக்கவும் ஆளுமை செய்யவும் தற்போழுது வாய்ப்புகளை வாரி வழங்குவர், கனவுகள் கற்பனைகள் ஆசைகள் அனைத்தும் முழுமையாக நிறைவேறும் யோகத்தை தரும், புதையல் யோகமும் கிடைக்க வாய்ப்பு உண்டு, தொழில் நுட்பம் சார்ந்த அமைப்புகளில் முதலீடு செய்யும் ரிஷப லக்கின அன்பர்களுக்கு இனிவரும் காலம் அதி அற்புதமான  சுபயோகங்களை வாரி வழங்க தயார் நிலையில் உள்ளார் என்பது  கவனிக்க தக்கது, கலைத்துறையில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கும் அன்பர்களுக்கு இது ஓர் அற்புதமான  நேரமாக கருதலாம், தனது மனதின் லட்சியங்களை நடைமுறைப்படுத்தும் அற்புதமான நேரமாக இது அமையும், இயக்குனர்கள் இணை இயக்குனர்கள் வாழ்க்கையில் ஒரு புதிய வாய்ப்புகளை ராகுபகவான் வாரி வழங்குவர், தொழில் துறையில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்துவார், அதிகாரம் செய்யும் யோகமும் தான் பணியாற்றும் துறையில் சிறந்த நிர்வாக திறனை  வெளிப்படுத்தும் யோகத்தையும் தன்னிறைவாக வாரி வழங்குவார். 

 வெளிநாடு யோகம் ரிஷப லக்கின அன்பர்களுக்கு தற்ப்பொழு வெகு சிறப்பாக அமையும், வெளிநாடுகளில் இருந்து வரும் தொழில் வாய்ப்பு என்பது அபரிவிதமான தன்மையில் பொருளாதார சேர்க்கையை நல்கும், எதிர்பார்ப்புகள் பூர்த்தி அடையும் நேரமிது, குறிப்பாக தகவல் தொழில்நுட்பம் சார்ந்த துறையில் உள்ள அன்பர்களுக்கு இனிவரும் காலம் நீடித்த நன்மைகளை பெறுவதற்கான நல்ல அடித்தளத்தை அமைத்து தரும், எந்த ஒரு செயலையும் முழு மனதோடு செய்து வெற்றி பெறுவார்கள், தனது மேலதிகாரிகளின் முழு ஆதரவையும் அவர்களின் பரிபூரண ஒத்துழைப்பையும் பெற்று தனது வாழ்க்கையில் பல அற்புதமான முன்னேற்றங்களை சந்திக்க இருக்கின்றார், இளம்வயதினர் இனிவரும் காலங்களில் ராகு பகவான் தரும் இமாலய வெற்றிகளை சுவீகரிக்க இருக்கின்றனர் கல்வி உடல்நலம் விளையாட்டு தனித்திறன் முற்போக்கு சிந்தனை விழிப்புணர்வு தெளிந்த நல்லறிவு சிறந்த ஒழுக்கம் என  வாழ்க்கையில் இவர்களுக்கு வரும் சிறப்புகள் என்பது மிக அதிக அளவில் உண்டு, மனம் ஒருநிலையில் இயங்க ஆரம்பிக்கும், தன்னை சார்ந்தவர்களுடன் உறவுகளுடன் கருத்து ஒற்றுமையுடன் எதிர்பாராத சுபயோகங்களை சுவீகரிப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை, எதிர்பாராத தன்மையில் இவர்களுக்கு கிடைக்கும் நல்ல வாய்ப்புகள் என்பது சமூகத்தில் நல்ல அந்தஸ்த்தை நல்குவதுடன் அரசு கவுரவத்தையும் பெற்றுத்தரும்.

ராகுவின் அயன சயன சஞ்சாரம் திருமண தடைகளை தகர்த்து எரிவதுடன், மனதிற்கு இசைந்த நல்ல இல்லறவாழ்க்கையை திடீரென அமைத்துத்தருவார், ரிஷப லக்கின அன்பர்களுக்கு முன் பின் அறிமுகம் இல்லாத நபர்கள் வழியில் இருந்து வாழ்க்கை துணை அமையலாம் அல்லது தனது தந்தை வழியில் இருந்து வரும் சொந்தங்கள் மூலம் அமையலாம், ராகு பகவானின் 12ம் இட சஞ்சாரம் ரிஷப லக்கின அன்பர்களுக்கு சிறந்த முதலீடுகளையும், எதிர்பாராத பொருளாதார முன்னேற்றத்தையும் இனிவரும் 18மாதமும் வழங்க இருக்கின்றார் என்பது கவனிக்கத்தக்கது.

துலாம் ராசியில் கேது பகவான் சஞ்சாரம் :

ரிஷப லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் சாயா கிரகமான கேது பகவான், தான் சஞ்சாரம் செய்யும் பாவகத்தை 100% விகிதம் பாதிப்பிற்க்கு ஆளாக்கும் காரணத்தால் உடல்நலம் மற்றும் கடன் சார்ந்த பிரச்சனைகள் அதிக அளவில் நடைமுறைக்கு வரும், எதிர்ப்புகளும் எதிரிகளும் தங்களை அதிக அளவில் சோதனைகளை தருவார்கள், வீண் வம்பு வழக்குகள் தங்களின் உடல்நலம் மனநலம் இரண்டையும் வெகுவாக பாதிக்கும், புதிய எதிரிகள் தங்களின் பொருளாதார முன்னேற்றத்தை கேள்விக்குறி ஆக்குவதுடன், அதீத சிக்கல்களையும் தருவார்கள், அதிக அளவில் கடன் பெரும் சூழ்நிலைகளை கேதுபகவான் தருவார் என்பதால் கடன் பெற்று முதலீடு  செய்யும் விஷயத்தை மட்டும் செய்துவிடாதீர்கள் இது தங்களின் முதலீட்டை முழுவதுமாக கபளீகரம் செய்து கடனை மட்டும் பரிசாக தந்துவிடும், முடிந்த அளவு யாரிடமும் பகைமை பாராட்டாமல் இணக்கமாக இருப்பது நல்லது. 

ரிஷப லக்கின அன்பர்களுக்கு கேதுபகவானின் 6ம் இட சஞ்சாரம் தனது சுய முயற்சி மற்றும் கடுமையான உழைப்பு ஆகிய இரண்டையும் பாதிப்படைய செய்வார் என்பதுடன் அனைத்திலும் சலிப்பையும் சகிப்பு தன்மை அற்ற மனநிலையும் தருவார், திடீர்  செலவினங்களை கடன் பெற்று நடத்த வேண்டிய கட்டாயத்தை தருவார், பூர்வீகத்தில் இருந்து தங்களுக்கு வரவேண்டிய சில வருவாய் சார்ந்த விஷயங்களை முடக்குவதுடன் பூர்வீகம் சார்ந்த சொத்து பிரச்சனைகளை அதிக அளவில் தருவார், தங்களின் நுண்ணறிவு திறன் பாதிக்கும், குலதெய்வ வழிபாடு ஒன்றே தீர்வாக அமையும், தனது ரத்த சம்பந்தஉறவுகள் மற்றும் தாய் மாமன் ஆகியோரின் வழியில் இருந்து வீண் செலவினங்களும், தவிர்க்க இயலாத தொல்லைகளையும் தரக்கூடும். 

கடினஉழைப்பு வீணாகும் சுய முயற்சி தடைகளை சந்திக்கும், அறிவு சார்ந்த செயல்பாடுகள் தங்களுக்கு பலன்தராது, ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்வோர் ஏதாவது ஒரு வகையில் சிக்கல்களை சந்திக்கவேண்டி வரும் அல்லது முன்னேற்ற தடைகளை எதிர்கொள்ள வேண்டி வரும், ஊடக துறையில் உள்ளோர் சந்திக்கும் இன்னல்கள் என்பது மிகுந்த மனஅழுத்தத்தை தருவதுடன் எதிர்மறையான விமர்சனங்களுக்கு பதில் சொல்லும் சூழ்நிலையை தரும், இயர்கையாகவே பயந்த சுபாவம் கொண்ட ரிஷப லக்கின அன்பர்களுக்கு இந்த கேதுவின் சஞ்சாரம் மிகுந்த மனபயத்தையும், மனக்கிலேசத்தையும் தரும் என்பதால் தேவையற்ற விஷயங்களில் தர்க்கம் செய்வதை தவிர்த்து, விழிப்புணர்வுடன் செயல்பட்டு நலம் பெறுங்கள்.  

குறிப்பு :

மேற்சொன்ன ராகுகேது பெயர்ச்சி பலன்கள் என்பது தங்களது சுய ஜாதகத்தில் தற்போழுது நடைபெறும் திசா புத்தி அயன சயன ஸ்தானம் மற்றும் சத்ரு ஸ்தான பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைபெறும் திசா புத்தி அயன சயன மற்றும் சத்ரு  ஸ்தான பலனை ஏற்று நடத்தவில்லை எனில் கோட்சார ரீதியாக யாதொரு நன்மை தீமையும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில்கொள்க 

வாழ்க வளமுடன் 

ஜோதிடன் வர்ஷன் 

09443355696

புதன், 23 மார்ச், 2022

மேஷம் 2022-2023 ராகுகேது பெயர்ச்சி பலன்கள் !



மேஷ ராசியில் ராகுபகவான் சஞ்சாரம் :

மேஷ லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு ஜென்ம லக்கினத்தில் சஞ்சாரம் செய்யும் சாயா கிரகமான ராகு பகவான், தான் சஞ்சாரம் செய்யும் பாவகத்தை 100% விகிதம் வலிமை சேர்க்கும் அமைப்பில் தனது இயக்க நிலையை செயல்படுத்தும் காரணத்தால், மேஷ லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு உடல்நலம் சிறப்பாக அமையும், மனவலிமை அதிகரிக்கும், ஜீவிக்கும் சூழ்நிலையில் பல அற்புதமான வெற்றிகளை வாரி வழங்க ஆரம்பிப்பார், பொதுவாக சாயா கிரகங்களான ராகு கேது ஒரு ராசியில் அதவாது ஒரு பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் பொழுது தனது முழு சக்தியையும் பிரயோகித்தது சம்பந்தப்பட்ட பாவகத்தை அல்லது ராசியை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு நன்மையையே தீமையையே முழுமையாக வழங்குவார்கள், தன்னுடன் சேர்ந்த கிரகங்கள், தன்னுடன் சேர்ந்து சஞ்சரிக்கும் கிரகங்கள் மற்றும் பார்த்த கிரகங்களின் ஜீவகாந்த சக்தியையும் தனது பலனாக வழங்கும் சிறப்பு தகுதி பெற்றவர்கள் இந்த சாயா கிரகங்கள், அந்த வகையில் தற்போழுது மேஷ ராசியில் சஞ்சாரம் செய்யும் ராகு பகவான், மேஷ லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு முழு அளவில் நன்மைகளை மட்டுமே வழங்குவதால், இவர்கள் பெரும் சிறப்புகள் மற்றும் முன்னேற்றம் என்பது வியக்கத்தக்க வகையில் அமையும் என்பதில் சந்தேகம் இல்லை,

குறிப்பாக காவல்துறை, ராணுவம், தீயணைப்பு துறை, மருத்துவம், அரசியல் பொது வாழ்க்கையில் உள்ள மேஷ லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு அபரிவிதமான நன்மைகளும் முன்னேற்றங்களும் வந்து சேரும் யோகமான நேரமிது, புதிய சிந்தனை, புதிய திட்டமிடுதல்கள், புதிய வாய்ப்புகள் அனைத்தும் இந்த நேரத்தில் வெகு சிறப்பாக அமையும், சொத்து சுக சேர்க்கை வண்டி வாகன யோகம், புதிய தொழில் வாய்ப்புகள், புதிய வீடு போன்றவற்றை வெகு சிறப்பாகவும் வெகு விரைவாகவும் சுவீகரிக்கும் வல்லமையை தரும், தன்னம்பிக்கை அதிகரிக்கும், மனோதைரியம் செயல்பாடுகளில் வெற்றியை தரும், தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களில் ஈடுபடும் அன்பர்களுக்கு வெற்றிவாய்ப்புகள் அதிக அளவில் வந்து குவிய ஆரம்பிக்கும், பொறியியல் துறை சார்ந்த மாணவர்கள் மற்றும் தொழில் நுட்ப வல்லுநர்களுக்கு ஏற்றம் மிகுந்த நல்ல காலம் இதுவென்றே சொல்லலாம்.

தொழில் அதிபர்கள், தொழில் முனைவோர், சிறு தொழில் செய்யும் அன்பர்களின் வாழ்க்கையில் வெகு சிறப்பான பொருளாதார முன்னேற்றங்களை தன்னிறைவாக வாரி வழங்க ஆரம்பிப்பார், எதிர்பார்ப்புகள் மற்றும் லட்சியங்கள் நிறைவேற ஆரம்பிக்கும், மனதிலும் உடலிலும் அதீத புத்துணர்ச்சி உண்டாகும், தெளிவான சிந்தனையும் சமயோசித புத்திசாலித்தனமும் இவர்களது வாழ்க்கையில் தொடர் வெற்றிவாய்ப்புகளை வாரி வழங்க ஆரம்பிக்கும், இதுவரை முடங்கி இருந்த தொழில்கள் அனைத்தும் வீறுநடை போட ஆரம்பிக்கும், தொழில் முதலீடுகள் என்பது இவர்களுக்கு தேடி வரும், பலதொழில் செய்யும் யோகமும், செய்கின்ற தொழில் வழியில் அபரிவிதமான முன்னேற்றமும் தன்னிறைவாக வந்து சேரும், பொதுமக்கள் ஆதரவு தொழில் ரீதியான வெற்றிகளை பன்மடங்கு உயர்த்துகின்ற அற்புதமான வாய்ப்பை இந்த ராகு கேது பெயர்ச்சி மேஷ லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு வெகு சிறப்பாக வழங்குவதுடன், வெற்றி புகழ் கீர்த்தி, அரசு வழி ஆதாயம், புதிய தொழில் யோகம், அந்நிய நபர்களின் உதவி என்ற வகையில்  மிகுந்த நன்மைகளை மட்டுமே வாரி வழங்குவது வரவேற்க்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

மேஷ லக்கினத்தை சார்ந்த பெண்களுக்கு இல்லற வாழ்க்கை சிறப்பாக அமையும், திருமணத்தடைகளை சந்தித்துக்கொண்டு இருந்த இளம்பெண்களுக்கு சரியான வாழ்க்கை துணை அமைவதுடன், நல்ல சந்தானபாக்கியமும் அமையும், புதிய சொத்துக்கள் ஆடை ஆபரண சேர்க்கை வெகு சிறப்பாக அமையும், சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிப்பதுடன், அரசு மற்றும் தனியார் துறையில் பணியாற்றும் பெண்களுக்கு நல்ல பதவி உயர்வும், ஊதிய உயர்வும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில் அமையும், சுய தொழில் செய்ய விருப்பம் உள்ள பெண்களுக்கு இதுவே சரியான நேரமாக அமையும் என்பதில் மாற்று கருத்து இல்லை, எனவே அதிக புத்துணர்ச்சியுடன் வாழ்க்கையில் வெற்றிகாணுங்கள்.

துலாம் ராசியில் கேது பகவான் சஞ்சாரம் :

மேஷ லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் சாயா கிரகமான கேது பகவான், தான் சஞ்சாரம் செய்யும் பாவகத்தை 100% விகிதம் பாதிப்பிற்க்கு ஆளாக்கும் காரணத்தால் வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் துன்பங்கள் அதிகரிக்கும், தேவையற்ற வாக்குவாதம் இல்லற வாழ்க்கையில் பிரிவு வரை எடுத்து செல்லும் சந்தர்ப்பம் உள்ளதால், மேஷ லக்கினத்தை சார்ந்த அன்பர்கள் இனிவரும் 18மாதமும் வாழ்க்கை துணையுடனான இணக்கத்தை மிக கவனமாக கையாள வேண்டும் என்பது கட்டாயமாகிறது, குறிப்பாக தங்களின் அறிவு சார்ந்த முயற்சிகளை வெகுவாக தடை செய்யும், தனி திறமை சார்ந்த விஷயங்களில் ஒரு சுய விழிப்புணர்வுடன் நடந்துகொள்வது தங்களின் வாழ்க்கையில் சகல நலன்களையும் வழங்கும், தொழில் முறை கூட்டாளிகள் நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரிடமும் மிக கவனமாக நட்புணர்வை பேணுவது அவசியமாகிறது, இது தங்களது வாழ்க்கையில் அதீத முன்னேற்றத்திற்க்கான வாய்ப்புகளை வாரி வழங்கும் என்பதை கவனத்தில் கொள்க.

வெளிநாடு வெளியூர் பயணங்களை சற்று கவனமாக பரிசீலனை செய்து மேற்கொள்வது நல்லது, பயணங்களின் பொது சற்று பாதுகாப்புடன் இருப்பது நல்லது, எதிர்பாலின சேர்க்கை வழியில் இருந்து அதீத துன்பம் வரும் என்பதால் சற்று கவனமாக செயல்படுவது நல்லது வீண் அவப்பெயரை தவிர்க்க அதுவே சரியான தீர்வாக அமையும், முன் பின் அறிமுகம் இல்லாத அன்பர்களிடம்  சற்று கவனமுடன் பழகுவது நல்லது, ஏற்றுமதி இறக்குமதி தொழில் வழியில் இருக்கும் சிக்கல்களை மிக கவனமாக எதிர்கொண்டு தங்களின் தொழில் வெற்றியை உறுதி செய்துகொள்ளவும், ஏதாவது கவனக்குறைவாக செய்யக்கூடிய காரியங்கள் வழியில் இருந்து வரும் நஷ்டம் என்பது தங்களது தொழில் வாழ்க்கையையே கேள்விக்குறியானதாக மாற்றிவிடும் வாய்ப்பு உள்ளது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

மணவாழ்க்கையில் மேஷ லக்கினத்தை சார்ந்த அன்பர்கள் மிக கவனமுடனும், அதிக அக்கறையுடனும் செயல்படவேண்டிய நேரமிது, குடும்பத்திற்க்காக அதிக நேரம் செலவிடுவது மேற்சொன்ன கேது பகவான் தரும் பாதிப்புகளில் இருந்து தங்களை வெகு சிறப்பாக மீட்டு எடுக்கும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள், ஆண் என்றால் தனது மனைவிமீது அதிக அக்கறையும், பெண் என்றால் தனது கணவன் மீது அதீத அன்பையும் செலுத்துவது மிக மிக நல்லது, இது தங்களது இல்லற வாழ்க்கையில் வரும் அனைத்து இன்னல்களையும் தீர்க்கும் அருமருந்து, கேதுபகவானின் துலாம் ராசி சஞ்சாரம் தங்களின் வாழ்க்கையில் களத்திர ஸ்தான வழியில் இருந்து சற்று நெருக்கடிகளை அதிக அளவில் தரும் என்பதை கவனத்தில் கொள்க.

குறிப்பு :

மேற்சொன்ன ராகுகேது பெயர்ச்சி பலன்கள் என்பது தங்களது சுய ஜாதகத்தில் தற்போழுது நடைபெறும் திசா புத்தி ஜென்ம லக்கினம் மற்றும் களத்திர ஸ்தான பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைபெறும் திசா புத்தி ஜென்ம லக்கினம் மற்றும் களத்திர ஸ்தான பலனை ஏற்று நடத்தவில்லை எனில் கோட்சார ரீதியாக யாதொரு நன்மை தீமையும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில்கொள்க 

வாழ்க வளமுடன் 

ஜோதிடன் வர்ஷன் 

09443355696