ஆட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 31 ஆகஸ்ட், 2018

நவ கிரகங்கள் ஜெனன ஜாதகத்தில் ஆட்சி, உச்சம் பெற்று இருப்பது யோகத்தை தருமா ? தனது திசாபுத்திகளில் சுபயோகங்களை வாரி வழங்குமா?



கேள்வி : 

 நவ கிரகங்கள் ஜெனன ஜாதகத்தில் ஆட்சி, உச்சம் பெற்று இருப்பது நமக்கு யோகத்தை தருமா ? தனது திசாபுத்திகளில் சுபயோகங்களை வாரி வழங்குமா?

பதில் :

 தங்களது கேள்வி " சிகப்பாக இருப்பவர் பொய் சொல்லமாட்டார் " என்ற வடிவேலின் திரைப்பட நகைச்சுவைக்கு இணையானதாக இருக்கின்றது, தாங்கள் மட்டுமல்ல பெரும்பாலானோர் தமது ஜாதகத்தில் ராசியிலோ அல்லது அம்சத்திலோ நவகிரகங்கள் ஆட்சி உச்ச நிலையில் இருப்பது சிறப்பு மிக்க சுபயோகங்களை வாரி வழங்கும் என்றும், அதன் திசா புத்தி காலத்தில் சுபயோக நிகழ்வுகள் நடைமுறைக்கு வரும் என்றும் ஓர் தவறான கண்ணோட்டத்தை பெற்று இருக்கின்றனர், மேலும் பகை நீசம் பெற்ற கிரகம் தமக்கு இன்னல்களை தரும் என்றும், அதன் திசா புத்தி காலங்கள் மிகுந்த துன்பத்தையும் அவயோக பலாபலன்களை தரும் என்றும் கருதிக்கொண்டு இருக்கின்றனர்.

இது முற்றிலும் தவறான கருத்தாகும் ஏனெனில் சுய ஜாதகத்தில் நவகிரகங்கள் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பெரும் ஆட்சி,உச்சம்,நட்பு,சமம், பகை, நீசம் போன்றவை சுய ஜாதகத்திற்கு யோக அமைப்பையோ, அவயோக அமைப்பையோ வழங்குவதில்லை, மாறாக பிறந்த தேதி நேரம் மற்றும் இடம் ஆகிவற்றை அடிப்படையாக கொண்டு கணிதம் செய்யப்படும் சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்கள் பெரும் வலிமையே ஜாதகருக்கு யோக அவயோக பலாபலன்களை வாரி வழங்குகிறது, எடுத்துக்காட்டாக சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் ஜாதகருக்கு யோக பலனையும், வலிமை அற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் திசா புத்திகள் ஜாதகருக்கு தான் சம்பந்தம் பெரும் பாவக வழியில் இருந்து அவயோக பலன்களையும் தருகின்றது என்பதே உண்மை நிலை, இதை கருத்தில் கொண்டு சுய ஜாதக பலாபலன் காண முற்படுவதே நமது வாழ்க்கையில் ஜாதக ரீதியான நன்மைகளையும், சுபயோகங்களையும் சுவீகரிக்கும் தன்மையை தரும், கீழ்கண்ட உதாரண ஜாதகத்தை இன்றை பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !


லக்கினம் : மீனம்
ராசி : விருச்சிகம்
நட்ஷத்திரம் : அனுஷம் 1ம் பாதம்

ஜாதகருக்கு தற்போழுது கேது திசை ( 05/11/2017 முதல் 05/11/2024 வரை )  நடைமுறையில் உள்ளது, சுய ஜாதகத்தில் ஜாதகருக்கு கேது பகவான் மேலோட்டமாக பார்க்கும் பொழுது 9ல் அமர்ந்து இருப்பதை போன்று தெரிந்தாலும் பாவக கணிதத்தின் அடிப்படையில் விருச்சிக ராசியில் உள்ள 8ம் பாவகத்தில் அமர்ந்து உள்ளது, ஜாதகருக்கு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகம் துலாம்  ராசியில் 205:09:09 பாகையில் ஆரம்பித்து விருச்சிக ராசியில் உள்ள 233:05:10 பாகையில் முடிவடைகிறது, இதற்க்கு உற்ப்பட்ட பாகையான 222:16:35 பாகையில் கேது பகவான் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு உச்சம் பெற்று அமர்ந்து இருக்கிறார், எனவே ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் கேது திசை யோக வாழ்க்கையை வாரி வழங்கும் என்ற தவறான புரிதல் ஜாதகருக்கு இருப்பது அவரது அறியாமையை காட்டுகிறது.

தற்போழுது நடைபெறும் கேது திசை ஜாதகருக்கு விருச்சிக ராசியில் உச்சம் பெற்று தனது திசையினை நடத்தினாலும், சுய ஜாதகத்தில் அவர் ஏற்று நடத்தும் பாவக தொடர்பு என்பது கவனிக்கத்தக்க விஷயமாக அமைகிறது, ஜாதகருக்கு  தற்போழுது நடைபெறும் கேது திசை 8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடனே சம்பந்தம் பெற்று ஆயுள் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு திடீர் பொருள் இழப்பு, வீண் மருத்துவ செலவுகள், வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் மனஅழுத்தம், மனப்போராட்டம் மற்றும் விபத்து, திடீர் செலவினங்கள், எதிர்பாராத இன்னல்கள் என்ற வகையில் பாதிப்பை தந்துகொண்டு இருக்கின்றது, சுய ஜாதகத்தில் கேது உச்சம் பெற்று இருப்பினும் தனது திசையில் வலிமையற்ற பாவக பலனை ஏற்று நடத்துவது ஜாதகருக்கு உகந்ததல்ல.

அடுத்து வரும் சுக்கிரன் திசை ரிஷபத்தில் உள்ள 3ம் பாவகத்தில் ஆட்சி பெற்று, தனது திசையில் 9ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவக தொடர்பை பெற்று யோக பலனை தருவது வரவேற்கத்தக்கது, இது ஜாதகருக்கு தனது அறிவு திறன், பயணம், உயர்கல்வி, ஆராய்ச்சி மற்றும் அதிர்ஷ்டத்தின் வழியில் இருந்து சுபயோக வாழ்க்கையை சுக்கிரன் திசை முழுவதும் நடைமுறைக்கு கொண்டு வரும், ஜாதகருக்கு சுக்கிரன் ரிஷபத்தில் ஆட்சி பெற்று அமர்வதும், தனது திசையில் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவதும் மிகுந்த நன்மைகளை தரும் அமைப்பாகும், எனவே சுய ஜாதகத்தில் நவகிரகங்கள் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு  ஆட்சி,உச்சம்,நட்பு,சமம், பகை, நீசம் போன்ற நிலையை பெறுவது யோக வாழ்க்கையை வாரி வழங்காது, நவ கிரகங்கள் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு எப்படிப்பட்ட நிலையில் அமர்ந்தாலும், சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவதே ஜாதகருக்கு சம்பந்தப்பட்ட பாவக வழியில் சுபயோக வாழ்க்கையை வாரி வழங்கும் என்பதை கருத்தில் கொள்வது  அவசியமாகிறது.

குறிப்பு :

 கால புருஷ தத்துவ அமைப்பிற்கு நவகிரகங்கள் பெரும் வலிமையை கருத்தில் கொண்டு பலன் காண முற்படுவது முற்றிலும் தவறான அணுகுமுறையாக " ஜோதிடதீபம் " கருதுகிறது, சுய ஜாதகத்தில் நவகிரகங்கள் வலிமை பெற்ற பாவக பலனை தனது திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷம காலங்களில் ஏற்று நடத்துகிறதா ? வலிமை அற்ற பாவக பலனை  தனது திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷம காலங்களில் ஏற்று நடத்துகிறதா ? என்பதில் தெளிவு பெற்று இருப்பதே சுய ஜாதக பலாபலனை தெளிவாக  அறிந்துகொள்ள வழிவகுக்கும், " வாழ்த்துக்கள் "

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

வெள்ளி, 4 டிசம்பர், 2015

சுய ஜாதகத்தில் ஆட்சி உச்சம் பெற்ற கிரகங்களின் திசா புத்திகள் யோகபலன்களை வாரி வழங்குமா?


தங்களின் கேள்விக்கு ஜோதிட அன்பர்களின் கருத்து பெரும்பாலும் யோக பலன்களை வாரி வழங்கும் என்பதாகேவே இருக்கும், இந்த கேள்வி தங்களின் ஜாதகத்தை அடிப்படையாக வைத்தே கேட்கபட்டதாக "ஜோதிடதீபம்" கருதுகிறது, எனவே தங்களின் ஜாதகத்தையே உதாரணமாக கொண்டு விளக்கம் தருகிறோம் அன்பரே !

பொதுவாக ஒருவரின் சுய ஜாதகத்தில் நவகிரகங்கள் ஆட்சி,உச்சம் பெற்று ( ராசி அல்லது அம்சம் ) அமர்ந்து இருந்தால் ஆட்சி,உச்சம் பெற்ற கிரகத்தின் திசா புத்திகள் யோக பலன்களை வாரி வழங்கும் என்று முடிவு செய்வது மிகவும் தவறு என்றே கருதுகிறோம், பொதுவாக ஒரு ஜாதகர் யோக பலன்களை அனுபவிப்பதும், அவயோக பலன்களை அனுபவிப்பதும் சுய ஜாதகத்தில் 12 பாவகங்களின் வலிமை நிலையும், வலிமை பெற்ற பாவகத்தின் பலனை ஏற்று நடத்தும் திசா புத்திகளுமே என்றால் அது மிகை இல்லை, உதாரணமாக தங்களது ஜாதகத்தையே ஆய்வு செய்வோம் அன்பரே!



லக்கினம் : துலாம் 
ராசி : கடகம் 
நட்சத்திரம் : ஆயில்யம் 4ம் பாதம் 

தங்களது ஜாதகத்தில் நவ கிரகங்கள் ராசி அமைப்பில், சந்திரன் சனி  ஆட்சி பெற்றும், சுக்கிரன் ராகு  உச்சம் பெற்றும், சூரியன் செவ்வாய் பகை பெற்றும், குரு நட்பு நிலையிலும், புதன் சம நிலையிலும், கேது நீசம் பெற்றும் அமர்ந்து இருக்கின்றனர்.

தங்களது ஜாதகத்தில் நவ கிரகங்கள் நவாம்ச நிலையில், புதன் ஆட்சி பெற்றும், சூரியன் சனி உச்சம் பெற்றும், குரு ராகு கேது பகை பெற்றும், சந்திரன் சம நிலையிலும், செவ்வாய் சுக்கிரன் நட்பு நிலையிலும் அமர்ந்து இருக்கின்றனர்.

தாங்கள் பிறந்த பொழுது நடந்தது புதன் திசை, இந்த புதன் தங்களது சுய ஜாதகத்தில் ராசியில் சம நிலையிலும், நவாம்சத்தில் ஆட்சி பெற்றும் இருக்கின்றது எனவே தங்களுக்கு யோக பலன்களை தந்திருக்கும் என்று கணிப்பது சரியாக இருக்குமா ? நிச்சயம் இல்லை அன்பரே ஏனெனில் தங்களது லக்கினத்தை அடிப்படையாக கொண்டு 12 பாவகங்களின் வலிமை நிலையை தெளிவாக உணர்ந்தால் மட்டுமே தங்களுக்கு புதன் திசை எந்த பாவக பலனை ஏற்று நடத்தியது என்பது தெரிய வரும்.

எனவே தங்களது ஜாதகத்தில் பாவகன்களின் தொடர்புகளை அறிவது அவசியமாகிறது, அதன் அடிப்படையில் கிழ்கண்டவாரு தங்களது சுய ஜாதகத்தில் 12 பாவகங்களின் தொடர்பு நிலையும் அமைகிறது.

1,2,5,6,7,10,11,12 ம் வீடுகள் பாதக ஸ்தானமான ( சர லக்கினத்திற்கு பாதக ஸ்தானம் 11ம் பாவகம் ஆகும் ) 11ம் பாவகத்துடன் தொடர்பு.
3,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் தொடர்பு.
4,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் தொடர்பு.

பிறப்பில் தங்களுக்கு நடந்த புதன் திசை ( ராசியில் சமம், நவாம்சத்தில் ஆட்சி ) 2,6,10,12ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவக பலனை ஏற்று நடத்தியிருக்கிறது,

அடுத்து வந்த கேது திசை ( ராசியில் நீசம்,நவாம்சத்தில் பகை ) தங்களுக்கு 4,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று 8ம் பாவக பலனை ஏற்று நடத்தியிருக்கிறது.

தற்பொழுது நடைமுறையில் உள்ள ( 23/07/2002 முதல் 23/07/2022 வரை ) சுக்கிரன் திசை ( ராசியில் உச்சம், நவாம்சத்தில் நட்பு ) தங்களுக்கு 1,5,7,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவக பலனை ஏற்று  நடத்தி கொண்டு இருக்கிறது, எனவே தற்பொழுது நடைமுறையில் உள்ள சுக்கிரன் திசை தங்களுக்கு எவ்வித பலனை தருகிறது என்பதை ஆய்வு செய்வோம் அன்பரே! மேலோட்டமாக தங்களது ஜாதகத்தை காணும் அன்பர்கள் சுக்கிரன் உச்சம் பெற்று தனது திசை நடத்துவதால் தங்களுக்கு மிகுந்த யோகமும் நன்மையையும் உண்டாகும் என்பதாக கருதக்கூடும், ஆனால் தங்களது சுய ஜாதக அமைப்பின் படி, சுக்கிரன் தனது திசையை 1,5,7,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு படுத்தி நடத்துவது வருந்தத்தக்கதே.

சுய ஜாதகத்தில் எந்த ஒரு வீடுகளும் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெறுவது நல்லதல்ல, அப்படி தொடர்பு பெற்றாலும், நவ கிரகங்கள் தனது திசையில் பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தாமல் இருந்தால் ஜாதகருக்கு நல்லது, ஆனால் தங்களது சுய ஜாதகத்தில் பிறப்பில் வந்த புதன் திசையும், தற்பொழுது நடைமுறையில் உள்ள சுக்கிரன் திசையும் தங்களுக்கு பாதக ஸ்தான பலனையே ஏற்று நடத்துகிறது.

 எனவே தாங்கள் 1,5,7,11ம் பாவக வழியில் இருந்து அதிக அளவில் சுக்கிரன் திசையில் அவயோக பலன்களை அனுபவிக்கும் சூழ்நிலை உருவாக கூடும், குறிப்பாக இலக்கின வழியில் இருந்து உடல் மனம் பாதிக்கும், 5ம் பாவக வழியில் இருந்து கற்ற கல்வியும், சிந்தனையும் அறிவு திறனும் பாதிக்கும், தனது பூர்வீகத்தை விட்டு பரதேச ஜீவனம் மேற்கொள்ளும் தன்மையை தரும், 7ம் பாவக வழியில் இருந்து நண்பர்கள் மற்றும் வெளிவட்டார பழக்க வழக்கங்களில் இன்னல்களையும், எதிர்பால் அமைப்பில் இருந்து துன்பங்களையும், 11ம் பாவக வழியில் இருந்து தன்னம்பிக்கை குறைவையும், வீண் அலைச்சல் மற்றும் அதிக போராட்டங்களையும் சந்திக்கும் சூழ்நிலையை தரக்கூடும்.

பாதக ஸ்தானம் என்பது ஒருவருக்கு 200% சதவிகித இன்னல்களை தங்குதடையின்றி வாரி வழங்கும் என்பதை கவனத்தில் கொள்வது அவசியமாகிறது, எனவே சுக்கிரன் திசை முழுவதும் தாங்கள் 1ம் பாவக வழியில் இருந்து சுய கட்டுபாடு நல்ல ஒழுக்கம் மற்றும் பழக்க வழக்கங்களை கையாள்வதும், 5ம் பாவக வழியில் இருந்து குல தேவதை வழிபாடும், எந்த ஒரு காரியத்தையும் பொறுமையாக கையாளும் தன்மையையும், 7ம் பாவக வழியில் இருந்து நண்பர்கள்,பெண்கள் மற்றும் பொதுமக்கள் என்ற அமைப்பில் எச்சரிக்கையுடனும், 11ம் பாவக வழியில் இருந்து மூடநம்பிக்கைகளை விட்டுவிட்டு தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்டும், அதிர்ஷ்டத்தை நம்பாமல், தீவிர உழைப்பை நம்பி செயல்படுவதும் தங்களுக்கு சுக்கிர திசை பாதக ஸ்தான பலன்களில் இருந்து காப்பாற்றும், குறிப்பாக தனது பூர்வீகத்தை விட்டு வெகு தொலைவு சென்று ஜீவனம் செய்தாலே 90% சதவிகித இன்னல்கள் குறைந்துவிடும்.

தங்களது ஜாதகத்தில் சுக்கிரன் உச்சம் பெற்று திசையை நடத்துகிறது, எனவே இனி மிகுந்த யோகத்தை தரும் என்று யாரவது சொல்வதை கேட்டுக்கொண்டு தங்களது பூர்வீகத்திலேயே ஜீவனம் செய்தீர்களா என்றால், அன்றாட வாழ்க்கைக்கே திண்டாடும் சூழ்நிலையை தந்துவிடும் என்பதால், தங்களது பூர்வீகத்தை விட்டு வெளியேறி, சிறப்பாக திட்டமிட்டு வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பதே புத்திசாலித்தனம்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வியாழன், 3 டிசம்பர், 2015

நீசம் பெற்ற கிரகம் அவயோக பலன்களையும், ஆட்சி உச்சம் பெற்ற கிரகம் யோக பலன்களையும்தான் வழங்குமா ?

கேள்வி :

மதிப்பிற்குறிய ஐயா,
                    
எண் பெயா்  ராஜேஷ் குமார்  date of birth 14/02/1985,11.10 AM,cumbum (theni dist).  மூன்று மாதங்களுக்கு முன் என் நண்பா் அதா்வன  ஜோதிடா் ஒருவரிடம் என்னை அழைத்துச் சென்றாா்.என் ஜாதகத்தை பாா்த்த அவா் 9 ஆம் அதிபதி நீசம் ஆகி உள்ளாா் அதனால் நீங்கள் மிகவும் சிரமப்பட்டு தான் வாழ்க்கை நகா்த்த முடியும் பாிகாரமும் எதுவும் இல்லை உங்கள் குல தெய்வம் தான் உங்களை காப்பாற்ற வேண்டும் என்று கூறி முடித்துக் கொண்டாா்.
     +2 வில் 94% மதிப்பெண் பெற்றும் என்னால் கல்லூரி படிப்பை தொடர முடியவில்லை எனக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது ஆனாலூம் மிகவும் சிரமப்பட்டு கொண்டு இறுக்கிறேன் எல்லாம் விதிப்படி தான் நடக்கும் என்பதால் கடவுளின் பாதங்களை பணிந்து வாழ்க்கையை நகா்த்தி கொண்டிருக்கிறேன், ஐயா தயவு செய்து எனக்கு அறிவுரை கூறுங்கள்.


பதில் :

அன்பரே வணக்கம் பொதுவாக சுய ஜாதகங்களில் ஒரு கிரகமோ அல்லது ஒரு பாவக அதிபதியோ ராசி மற்றும் அம்ச கட்டங்களில் ஆட்சி அல்லது உச்ச நிலைகளில் இருந்தால், ஜாதகருக்கு மிகுந்த யோக பலன்களை வாரி வழங்கும் என்று கணிப்பதும்

சுய ஜாதகங்களில் ஒரு கிரகமோ அல்லது ஒரு பாவக அதிபதியோ ராசி மற்றும் அம்ச கட்டங்களில் நீசம் அல்லது பகை நிலைகளில் இருந்தால் மிகுந்த அவயோகத்தை வாரி வழங்கும் என்று கணிப்பதும்


சுய ஜாதகங்களில் ஒரு கிரகமோ அல்லது ஒரு பாவக அதிபதியோ ராசி மற்றும் அம்ச கட்டங்களில் நட்பு அல்லது சமம் என்ற நிலைகளில் இருப்பின் ஜாதகருக்கு மிதமான பலன்களை வழங்கும் என்று கணிப்பதும், முற்றிலும் ஜோதிட விதிகளுக்கும், ஜோதிட கணிதத்திற்கு சம்பந்தம் இல்லாத கற்பனையே அன்றி  வேறு எதுவும் இல்லை, மேலும் இதன் அடிப்படையில் ஒருவரது ஜாதகத்திற்கு பலன் காண முற்ப்பட்டால், சுயஜாதாக பாவக வலிமைக்கும், நடைமுறையில் வரும் பலாபலன்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இருக்க சிறிதும் வாய்ப்பில்லை என்பதே முற்றிலும் உண்மை.

பொதுவாக சுய ஜாதகங்களில் ஒருவரின் லக்கினத்தை அடிப்படையாக கொண்டு ஜாதக கணிதம் செய்யும் பொழுது ஜாதகரின் லக்கினத்திற்கும், 12 பாவக அமைப்பிற்கும் நவ கிரகங்கள் எவ்வித வலிமையை பெறுகின்றது என்று கணிதம் செய்வதே சுய ஜாதகத்தில் உண்மையான பாவக வலிமையை அறிய உதவும், மாறாக காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு நவ கிரகங்கள் பெற்ற ஆட்சி,உச்சம்,நட்பு,சமம்,பகை மற்றும் நீசம் நிலைகளை கருத்தில் கொண்டு சுய ஜாதகத்துடன் ஒப்பிட்டு பலன்கான முற்படுவது, முற்றிலும் தவறான பலாபலன்களை ஜாதகருக்கு கூறும் சூழ்நிலையை தந்துவிடும்.

உதாரணமாக :




தங்களது ஜாதகத்தில் 9ம் பாவகத்திற்க்கு அதிபதியான குரு பகவான் மகர ராசியில் நீசம் பெற்று அமர்ந்து இருப்பது ஜாதக கணிதம் அறியாத அன்பர்கள் மேலோட்டமாக காணும் பொழுது 9ம் பாவகம் 100% விகிதம் பாதிப்படைந்து விட்டதாகவும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு குரு பகவான் நீசம் அடைந்ததை, தங்களது ஜாதகத்திற்கு அவயோக பலன்களை 9ம் பாவக வழியில் இருந்து வாரி வழங்கும் என்று உண்மைக்கு புறம்பாக கூறியிருக்க வேண்டும்.


ஆனால் தங்களது லக்கினத்தை அடிப்படையாக கொண்டு காணும் பொழுது 9ம் வீடு கோண வீடு, அதன் அதிபதியான குருபகவானும் கோண அதிபதி, அவர் அமர்ந்திருப்பது மகர ராசியில் உள்ள 9ம் 
( நீசம் ) பாவகத்தில், எனவே குரு பகவான் திரிகோண வீடான 9ம் பாவகத்தில் ( தனது வீட்டில் சுய பலம் பெற்று அமர்வது ) 9ம் பாவகத்தை 100% விகிதம் வலிமை பெற செய்யும்.

தங்களது லக்கினம் 

மேஷ ராசியில் 18:04:39 பாகையில் ஆரம்பித்து ரிஷப ராசியில் 45:35:29 பாகையில் முடிவடைகிறது, 
இதை அடிப்படையாக கொண்டு தங்களது 9ம் பாவக நிலையை ஆய்வு செய்யும் பொழுது, 
9ம் பாவகம் தனுசு ராசியில் 253:06:19 பாகையில் ஆரம்பித்து மகர ராசியில் 280:37:08 பாகையில் முடிவடைகிறது, 
இந்த 9ம் பாவகத்திற்க்கு உற்பட்ட 253:06:19 முதல் 280:37:08 வரை ) 
278:09:51 பாகையில் குரு பகவான் கோண பலம் பெற்று அமர்வது,
 தங்களது ஜாதகத்தில் 9ம் பாவகத்தை 100% சதவிகிதம் வலிமை பெற செய்துவிடும்,  எனவே தங்களது சுய ஜாதகத்தில் 9ம் பாவகம் மிகவும் வலிமை பெற்றே இருக்கிறது,
ஆக குரு பகவான் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு மகர ராசியில் நீசம் பெற்று இருப்பது, தங்களது சுய ஜாதகத்தில் எவ்வித அவயோக பலன்களையும் வழங்க வாய்ப்பில்லை என்பதை மிகவும் உறுதியாக ஜாதக கணிதம் கொண்டு சொல்ல இயலும். 

மேலும் சுய ஜாதகத்தில் ஆட்சி உச்சம் பெற்ற கிரகம் மட்டுமே ஒருவருக்கு நன்மையை தரும் என்பதும், பகை நீசம் பெற்ற கிரகங்கள் தீமையை செய்யும் என்பதும், சுய ஜாதக கணித உண்மைக்கு புறம்பான அம்சமாகவே கருத வேண்டி உள்ளது, மேலும் ஆட்சி உச்சம் பெற்ற கிரகத்தின் திசா புத்திகள், சில அன்பர்களை படுகுழியில் தள்ளியிருக்கிறது, பகை நீசம் பெற்ற கிரகத்தின் திசா புத்திகள், பல அன்பர்களுக்கு ராஜயோக பலன்களை வாரி வழங்கி இருக்கிறது என்பது எதார்த்தமான உண்மை,  சுய ஜாதகத்தில் 12 பாவகங்களின் வலிமை நிலையும், நவகிரகங்கள் தனது திசை மற்றும் புத்திகளில் வலிமை பெற்ற பாவகத்தின் பலனை ஏற்று நடத்தியதுமே இதற்க்கு அடிப்படை காரணமாக அமைகிறது என்றால், அது மிகையில்லை.


ஒருவரின்  சுய ஜாதகத்தை முழுமையாக ஆளுமை செய்வது லக்கினம் உற்பட 12 பாவகங்களின் வலிமை நிலையும், 

வலிமை பெற்ற பாவகங்களின் பலனை ஏற்று நடத்து நவகிரகங்களின் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமும் என்றால் அது மிகையில்லை, 
ஒரு குறிப்பிட்ட  நாளில் பிறந்த பல அன்பர்களுக்கு கிரகங்கள் ஆட்சி உச்ச நிலையில் இருந்த போதிலும், அனைவரும் ஒரே விதமான யோக பலன்களை அனுபவிப்பது  இல்லை, அவரவர் லக்கினம் மற்றும் பாவக வலிமைக்கு ஏற்ப பலாபலன்களை தருகிறது, மேலும் ஆட்சி உச்சம் பெற்ற ஒரே மாதிரியான ஜாதக அமைப்பை கொண்ட அன்பர்களும், ஒரே மாதிரியான யோக பலன்களை அனுபவிக்க இயலாத நிலைக்கு காரணமாக அமைவதும் அவரவர் சுய ஜாதக பாவக வலிமையின் தன்மையே, எனவே ஒருவரின் சுய ஜாதகத்தில் 12 பாவகங்களின் வலிமையே, அவர் அனுபவிக்கும் யோகம் அவயோகம், நன்மை தீமை பலன்களை நிர்ணயம் செய்கிறது என்ற அடிப்படை உண்மையை அனைவரும் உணர்வது அவசியமாகிறது.

தங்களது சுய ஜாதகத்தில் 9ம் அதிபதி மகர ராசியில் நீசம் பெற்று இருப்பினும், லக்கினத்திற்கு 9ம் பாவகத்திலே கோண பலம்பெற்று அமர்ந்து இருப்பது தங்களுக்கு பெரிய மனிதர்களின் ஆதரவையும், நல்ல அறிவு திறனையும், சிறந்த ஆன்மீக பெரியோர்களின் ஆசிகளையும் நிச்சயம் பெற்றுத்தரும், தங்களின் துன்பத்திற்கும், இன்னல்களுக்கும் சுயஜாதகத்தில் மற்ற பாவகங்களின் வலிமை அற்ற நிலையும், வலிமை அற்ற பாவகத்தின் பலாபலன்களை தற்பொழுது நடைமுறையில் உள்ள திசை மற்றும் புத்திகள் ஏற்று நடத்துவதே காரணமாக இருக்கலாம் என்பதால், தங்களது சுய ஜாதகத்துடன் முறையாக நேரில் ஜாதக ஆலோசனை பெற்று தெளிவு பெறுங்கள்.


வாழ்க வளமுடன் 

ஜோதிடன் வர்ஷன் 
9443355696

புதன், 18 மார்ச், 2015

சுய ஜாதகத்தில் ஆட்சி உச்சம் பெற்ற கிரகத்தின் திசாபுத்தி நடைமுறைக்கு வரும் பொழுது யோகபலன்களை வாரி வழங்குமா ?




 ஒருவரின் சுய ஜாதகத்தில் ராசி அல்லது அம்ச நிலையிலோ  ஆட்சி, உச்சம் பெற்று இருக்கும் கிரகங்களின் திசாபுத்திகள் நடைமுறைக்கு வரும்பொழுது, ஜாதகர் யோக பலன்களை அனுபவிப்பார், பகை நீச்சம் பெற்று இருக்கும் திசாபுத்திகள் நடைமுறைக்கு வரும்பொழுது, ஜாதகர் அவயோக பலன்களை அனுபவிப்பார், என்பது பொதுவான கருத்தாக உள்ளது, கிரகங்களின் ஆட்சி,உச்சம்,சமம்,நட்பு,பகை,நீச்ச நிலைகளுக்கும், சுய ஜாதகத்தில் தனது திசாபுத்தி காலங்களில் அவர்கள் தரும் பலாபலன்களுக்கும் சம்பந்தம் இல்லை என்பதே உண்மை.

 மேலும் கிரகங்களின் ஆட்சி,உச்சம்,சமம்,நட்பு,பகை,நீச்ச நிலைகள் யாவும் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு உண்டான வலிமை அமைப்பே அன்றி, சுய ஜாதகத்திற்கு அவர்கள் தரும் பலன் அல்ல வலிமையையும் அல்ல, ஒருவரின் சுய ஜாதக அமைப்பில் லக்கினத்தை அடிப்படையாக கொண்டே கிரகங்களின் வலிமையை நிர்ணயம் செய்ய இயலும், மேலும் 12பாவகங்களின் தன்மையை நிர்ணயம் செய்ய இயலும், பொதுப்படையாக சுய ஜாதகத்தில் நவகிரகங்கள் ஆட்சி உச்ச நிலையில் உள்ளதால் யோகத்தை செய்யும் என்று முடிவு செய்வதும், பகை நீச்சம் பெற்று உள்ளதால் தீமையை செய்யும் என்று முடிவு செய்வதும் சரியான ஜாதக கணித பலனாக இருக்க வாய்ப்பில்லை என்பதே ஜோதிடதீபத்தின் கருத்து.

மேற்கண்ட கருத்தை உறுதி செய்யும் விதத்தில் சரியான உதாரண ஜாதகம் கொண்டு விளக்கம் தர ஜோதிடதீபம் கடமைபட்டுள்ளது.

உதாரண ஜாதகம் 1



லக்கினம் : மகரம் 
ராசி : கடகம் 
நட்சத்திரம் : ஆயில்யம் 4ம் பாதம் 

இந்த மகர இலக்கின ஜாதகருக்கு தற்பொழுது நடைபெறும் சுக்கிரன் திசை மீனத்தில் உச்சம் பெற்று  தனது  திசாபுத்தி  பலன்களை 17/03/1997 முதல் 17/03/2017 வரை வழங்குகிறார், பொதுவாக இவரது ஜாதகத்தை ஆய்வு செய்யும்  அன்பர்கள் அனைவரும் 5,10க்கு உடைய சுக்கிர பகவான் திசை 3ம் பாவகமான மீனத்தில் உச்சம் பெற்று நடத்துவதால் ஜாதகருக்கு சகல நிலைகளில் இருந்தும் முன்னேற்றம் உண்டாகும் 5,10ம் பாவக வழியில் இருந்தும் 3ம் பாவக வழியில் இருந்து மித மிஞ்சிய யோக பலன்களை, மகர லக்கினத்திற்கு யோக காரனான சுக்கிரன்  வாரி வழங்குகிறார் என்ற கருத்தை பலனாக சொல்லியிருக்கின்றனர், ஜாதகரும் இதை நம்பி செய்த காரியங்கள் யாவும் தோல்வி மேல் தோல்வியே கிடைத்து இருக்கின்றது, ஜீவன வழியில் இருந்து அதிக சிரமங்கள், திடீர் சொத்து இழப்புகள், சுய தொழில் செய்யும் நோக்கத்தில்  வாங்கிய கடன் தொல்லைகள், மூட நம்பிக்கையின் பெயரில் இழந்த பொருள் இழப்புகள் என ஜாதகர் தற்பொழுது நடைபெறும் சுக்கிரன் திசை, ஜோதிடர்கள் கூறிய பலனுக்கு நேர்எதிரான பலாபலன்களை அனுபவித்து கொண்டு  இருக்கிறார், ஜாதகரின் இந்த நிலைக்கு காரணம் என்ன ?

சுய ஜாதகத்தில் சுக்கிரன் உச்ச நிலையில் இருந்தாலும் கூட, அவர் தனது திசாபுத்தி காலங்களில் ஏற்று நடத்தும் பாவக பலன்களை பற்றி தெரியாமல் பலன் கண்டதே இதற்க்கு காரணம், இந்த ஜாதகருக்கு உண்மையில் சுக்கிரன் மீனத்தில் உள்ள 2ம் பாவகத்தில் அமர்ந்து  தனது திசையில் 6,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றும், 4,10ம் வீடுகள் திடீர் இழப்பை தரும் ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றும் பலன்களை தருவது, ஜாதகருக்கு வந்த இந்த மோசமான சூழ்நிலைக்கு காரணமாக கொள்ளலாம்.

ஜாதகருக்கு 4,10ம் வீடுகள் 8ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது 4ம் பாவக வழியில் இருந்து தனது சொத்து வண்டி வாகனம் என அனைத்தையும் திடீரென இழந்து வாடும் சூழ்நிலையை தந்தது, சுக போக வாழ்க்கைக்கு ஆசைபட்டு சொத்து சுகத்தை அனைத்தையும் இழக்கும் தன்மையையும், தனக்கு உள்ள சொத்துகளை துச்சமென மதித்து, அதன் மதிப்பு தெரியாமல் ஜாதகர் அனைத்தையும் இழந்து நிற்கும் தன்மையை தந்தது, 10ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் சொந்த தொழில் செய்யும் உத்தேசத்தில் செய்த காரியங்கள் யாவும் பெரிய பின்னடைவையும், பெருத்த நஷ்டத்தையும் தந்தது, தனது முன்னோர்கள் சேர்த்து வைத்திருந்த ஜீவன கௌரவத்தையும் இழந்து, தொழில் முறையில் ஜாதகர் மிகப்பெரிய தோல்விகளை சந்தித்தார், உச்சம் பெற்ற சுக்கிரன் திசை என்று உசுபேத்திய ஜோதிடர்களின் வழிகாடுதல்களின் பெயரில் அகல கால் வைத்து மிகப்பெரிய நஷ்டங்களை ஜாதகர் சந்தித்தை இவரது நலம் விரும்பிகாளால் கூட தடுக்க இயலவில்லை, மேற்க்கண்டவை  சுக்கிரன் திசை ஜாதகருக்கு 4,10ம் வீடுகள் 8ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றதால் ஏற்ப்பட்ட 80% விகித இழப்புகள்.

ஜாதகருக்கு 6,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றதே 200% சதவிகித இன்னல்களை வாரி வழங்கியது, அதாவது ஜாதகர் 6ம் பாவக வழியில் இருந்து ஜீவனம் மேற்கொள்வதற்காக வாங்கிய கடனே  வட்டி குட்டி போட்டு கடன்தொகையை விட 10 மடங்கு அதிகரித்து நின்றது, இதன் காரணமாக ஜாதகர் தனது முன்னோர்களின் ஜீவன சொத்துகளையும், பாரம்பரிய சொத்து, பூர்வீக பூமி ஆகியவற்றை அனைத்தும் இழந்து செய்வது அறியாமல் திகைக்க வைக்க, உடல் ரீதியான பிரச்சனைகளுக்காக மருத்துவ செலவுகள் ஒருபக்கம் ஜாதகரை வேறு வழியில் இன்னல்களை வாரி வழங்கியது, 11ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் எவ்வித அதிர்ஷ்ட வாய்ப்புகளையும் பெற இயலாமல், பிற்போக்கு சிந்தனையுடனும், அறிவார்ந்த செயல்பாடுகள் இல்லாமலும், எவர் எதை சொன்னாலும் அதை உண்மை என நம்பி செய்த காரியங்களில் ஏற்ப்பட்ட பொருள் இழப்புகள் என்பதும் மிக மிக அதிகம், ஜாதகரின் சிந்தனை திறனின் செயல்பாடுகள் முடங்கியதற்கு இதுவும் ஓர் காரணமாகவே கருதலாம், ஆக உச்சம் பெற்ற சுக்கிரன் திசை ஜாதகருக்கு பாதிப்படைந்த பாவக தொடர்புகளை பெற்றதால் ஜாதகருக்கு எவ்வித யோக பலன்களையும் சுக்கிரன் திசை வழங்க வில்லை என்பதே முற்றிலும் உண்மை , பொதுவாக சுய ஜாதகத்தில் கிரகங்கள்  ஆட்சி உச்ச நிலையை கருத்தில் கொண்டு பலன் காணாமல், தனது திசாபுத்தி காலங்களில் எந்த பாவகத்தின் பலனை தருகிறது என்ற உண்மை நிலையை உணர்ந்து ஜாதக பலன் காணும் பொழுதே, சம்பந்தபட்ட ஜாதகருக்கு மிக துல்லியமான ஜாதக கணித பலன்களை சொல்ல இயலும் என்பது மறுக்க இயலாத உண்மை.

 உதாரண ஜாதகம் 2

லக்கினம் : மிதுனம் 
ராசி : மகரம் 
நட்சத்திரம் : அவிட்டம் 2ம் பாதம் 

இந்த மிதுன இலக்கின ஜாதகருக்கு மகரத்தில் நீச்ச நிலையில் அமர்ந்த குரு பகவானின் திசை 26/05/2007 முதல் 26/05/2023 வரை நடைபெறுகிறது, தற்பொழுது நடைபெறும் குரு திசை ஜாதகருக்கு 1,5,7,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று, ஜாதகருக்கு 1ம் பாவக வழியில் இருந்து நல்ல உடல் நலம், மன நலம், புகழ், வெற்றி, கீர்த்தி ஆகியவற்றை வாரி வழங்குவதுடன், ஜாதகர் தனக்கு வரும் அதிர்ஷ்ட வாய்ப்புகளை முறையாக பயன்படுத்திக்கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் பெரும் யோகத்தை தருகிறது, 5ம் பாவக வழியில் இருந்து இறை அருளின் கருணையை பரிபூரணமாக பெரும் யோகத்தையும், தனது பூர்வீகத்தில் இருந்துகொண்டே வாழ்க்கையில் சகல யோகத்தையும் பெரும் தன்மையை தருகிறது, ஜாதகரின் நுண்ணறிவு திறன் ஜாதகர் செய்யும் சுய தொழில் அமைப்பில் மிகுந்த அதிர்ஷ்டத்தை வாரி வழங்குகிறது, ஜாதகரின் புதிய சிந்தனையும் செயல்பாடுகளும், மிகப்பெரிய வெற்றி வாய்ப்பை உறுதி செய்கிறது.

7ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு வாழ்க்கை துணை வழியில் இருந்து அதிர்ஷ்ட வாய்ப்புகள் வந்து குவிந்த வண்ணம் இருக்கிறது, ஜாதகரின் நண்பர்கள் தொழில் முறை கூட்டாளிகள் மூலம் மிகுந்த அதிர்ஷ்ட வாய்ப்பையும், சிறந்த உதவிகளையும், எதிர்பாராத வருமான வாய்ப்பையும் பெரும் யோகத்தை தருவது சிறப்பான விஷயமாக கருதலாம், ஜாதகர் செய்யும் ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில் சிறந்து விளங்கும் தொழில் திறமைகளை பெற்று இருப்பது மேற்க்கண்ட 7ம் பாவக வழியில் இருந்தே என்றால் அது மிகையில்லை. 

11ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் நீடித்த அதிர்ஷ்டத்தையும், முற்போக்கு சிந்தனையுடன் அனைத்தையும் எதிர்கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் பெரும் யோகத்தை தருவது கவனிக்க தக்கது, ஜாதகர் நினைக்கும் எண்ணங்கள் யாவும் நடைமுறைக்கு வருவதும், செய்யும் காரியங்கள் யாவும் நல்ல அதிர்ஷ்ட வாழ்க்கையை தருவது 11ம் பாவக வழியில் இருந்தே, மேலும் ஜாதகருக்கு உதவி செய்ய பலர் காத்து இருப்பது வரவேற்க தக்கது, ஜாதகரின் தேவையும், ஜாதகருடைய தேவைகளையும் நிறைவேற்றும் விதத்தில், ஜாதகரை சுற்றி உள்ளவர்கள் இருப்பது 11ம் பாவகத்தின் வலிமையே, ஆக நீச்சம் பெற்ற குரு திசை ஜாதகருக்கு 1,5,7,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று, மிக பெரிய  யோக வாழ்க்கையை தனது திசையில் வாரி வழங்குவது ஆட்சி,உச்சம்,பகை,நீச்சம் என்ற வலிமையின் நடைமுறையில் வழங்கும், முரண்பட்ட பலாபலன்களின் தன்மையை மேற்கண்ட உதாரண ஜாதகம் மூலம் நாம் உணர்ந்து கொள்ள இயலும் அன்பர்களே!

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

புதன், 19 நவம்பர், 2014

எண்கணிதம் ஒருவரின் வாழ்க்கையில் நடத்தும் மாயாஜாலங்கள் ! தொடர்ச்சி.....


இனி 2 வது உதாரண பிறந்த தேதியை ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே :

தமிழகத்தை முதல்வரகளாக ஆட்சி செய்த மூன்று தலைவர்களின் பிறந்த தேதியை எடுத்து கொள்வோம், அதில் இரண்டாவதாக புரச்சி தலைவர் MGR அவர்களின் பிறந்த தேதி மற்றும் பலன்கள்  



புரட்சி தலைவர் எம்ஜிஆர் பிறந்த தேதி ( 17/01/1917 )
நமது எண்கணித முறைப்படி    8-1-9-9

பிறந்த தேதியில் 8ம் எண் வந்தது ஜாதகரை சிறு வயதிலேயே பல சிரமங்களுக்கு ஆளாக்கியது, வறுமையின் கோர பிடியில் சிக்கி ஜாதகர் சிறு வயது முதல் தனது 15வது வயது வரை பல சிரமங்களை எதிர்கொள்ளும் தன்மையை தந்தது, அடிப்படையில் ஜாதகரின் கல்வி வாழ்க்கையை கேள்விக்குறியானது, ஜாதகர் தனது பெற்றோர் வழியில் இருந்து பெரும் நன்மையில் சிறிதேனும் அனுபவிக்க இயலாத தன்மையை தந்தது, அவரது பெற்றோருக்கும் பல சிரமங்களை வாரி வழங்கியது, ஜாதகரின் முயற்சிகள் யாவும் மிகப்பெரிய தோல்விகளையே வழங்கியது, பால்ய பருவத்திலே பசியின் கொடுமையை உணர்ந்தவர் என்பதால் பின்னாளில் தனது வீட்டுக்கு வரும் எவரும் வெறும் வயிற்றுடன் செல்லக்கூடாது என்ற கொள்கையை வைத்திருந்தார், பொதுவாக 8ம் எண் ஒரு மனிதருக்கு உலக பிரபலத்தை தந்த போதிலும் சுய வாழ்க்கையில் பிரகாசிக்காத தன்மையை தந்துவிடுகிறது, ஊருக்கு உத்தமன் வீட்டிற்கு ஊதாரி என்ற பழமொழியை நினைவுகூர வைத்துவிடுகிறது, 8ம் எண்ணில் பிறந்த ஒவ்வொருவரின் உழைப்பும் மற்றவருக்கே பலன் தருகிறது சம்பந்தபட்டவருக்கு பெரிய நன்மைகளை தருவதில்லை, தலைவர் இறுதி வரை தனக்காக எதையும் எடுத்துக்கொள்ளவில்லை என்பதை நினைவு கூர்வது அவசியம், 8ம் எண்ணை சார்ந்தவர்கள் பல சிரமங்களை அனுபவித்த போதிலும் நேர்மை மாறாத குணம் அவர்களை புகழின் உச்சிக்கே எடுத்து செல்கிறது என்பதை மறுக்க இயலாது.

பிறந்த தேதியில் மாதத்தில் 1ம் எண் வந்தது ஜாதகரை இளம் வயதிலேயே சோர்வு அறியாத கடின உழைப்பாளியாக நிலைநிறுத்தியது, தான் எடுத்துக்கொண்ட கொள்கையிலும், லச்சியத்திலும் குறிக்கோளாக இருந்து வெற்றி கனியை பறிப்பதற்கு உண்டான ஆளுமையை தந்தது, இளம் வயதில் சிரமபட்ட போதிலும், 15 வருடங்களுக்கு பிறகு ஜாதகர் தனது 30வது வயது வரை சகல விஷயங்களிலும் தேர்ச்சியும், நுண்ணறிவையும் பெரும் யோகத்தை தந்தது, சூரியனுக்கு உரிய 1ம் எண் ஜாதகருக்கு 15 முதல் 30 வயது வரை தனி திறன்களை வளர்த்துகொள்ளும் வாய்ப்பையும், தடை பட்ட கல்வியை தனது சுய முயற்ச்சியின் மூலமே கற்றுகொள்ளும் யோகத்தை தந்து, ஜாதகருக்கு அரசியில், கலைத்துறை, பொதுமக்களின் ஆதரவு இதற்குண்டான அறிமுகங்களை வழங்கிய காலம் இதுவென்றால் அது மிகையில்லை, ஒரு சிறந்த புகழ் பெற்ற மனிதராக பரிணமிக்க அடிப்படை அடித்தளம் அமைந்த காலம் இதுவே, எனவே ஜாதகர் சகல விஷயங்களையும் கற்று தேர்ந்த காலம் இதுவென்றால் அது மிகையில்லை.

பிறந்த தேதியில் வருடத்தில் 9ம் எண் வந்தது ஜாதகரை படி படியாக வெற்றிபடிகளில் கால் வைக்கும் யோகத்தை தந்தது எனலாம், ஜாதகர் தனது 30 வது வயது முதல் 45 வது வயது வரை வெற்றி படிகட்டுகளில் ஏற ஆரம்பித்த காலம் என்றால் அது மிகையில், தொடர் வெற்றிகளை கொடுக்கும் எண்ணான 9ம் எண்ணில் பயணம் செய்த புரட்சி தலைவர் தனது தனிப்பட்ட திறன்களையும், நல்ல குணங்களையும் பொதுமக்களுக்கு கலை துறை மூலம்  பிரதிபலித்தார், மேலும் மக்களின் பேர்அன்பிற்கும், பெரும் மதிப்பிற்கும் உரியவர் என்ற நிலையான நம்பிக்கையை மக்கள் மனதில் பசுமரத்தில் பதித்த ஆணி போல் மக்களின் மனதில் உயர்ந்து நின்றார், 9ம் எண்ணான செவ்வாயின் ஆதிக்கம் மக்கள் மனதில் நிலையான கதாநாயகன் அந்தஸ்தை பெற்று தந்து, இவரின் முகம் பார்க்க மக்கள் ஏங்கி கிடந்தனர், இவரின் வார்த்தைக்கு தமிழகமே கட்டுபட்டது, இவர் பயணம் செய்த 9ம் எண் ( 30 முதல் 45 வயது வரை ) தனது துறையிலும் தனிப்பட்ட வாழ்கையிலும்  பிரகாசிக்க வைத்த காலம் இதுவென்றால் அது மிகையில்லை.

பிறந்த தேதியில் கூட்டு எண்ணாக மீண்டும் 9ம் எண் வந்ததே ஜாதகரின் அபரிவிதமான வெற்றிக்கும், பொருளாதார ரீதியான உச்சத்திற்கும் கொண்டு சென்றது, ஜாதகரின் 45 வயது முதல் வாழ்வின் இறுதி வரை தொடர் வெற்றிகளையே வாரி வழங்கியது, ஜாதகருக்கு பிறந்த எண்களில் வெற்றிகளை குவிக்கும்  9ம் எண் மீண்டும் வந்தது, கலைத்துறை, அரசியல், பொதுவாழ்க்கை ஆகிய அமைப்பில் உச்ச நிலையை பெற வைத்தது, ஜாதகருக்கு பிறந்த தேதியில் வந்த 8ம் எண் வறுமையின் உச்சத்தை பார்க்க வைத்தது, வருடம் மற்றும் கூட்டு எண்ணில் வந்த 9ம் எண்கள் ஜாதகரை வசதி வாய்ப்பு மற்றும் புகழின் உச்சத்தை பார்க்க வைத்தது, ஜாதகருடன் மோதிய பலரது வாழ்க்கை கேள்விக்குறியாக மாறியது, வெற்றி தேவதையின் பரிபூரண பிடியில் ஜாதகர் உலா வந்த காலம் இதுவென்றால் அது மிகையில்லை, ஜாதகரை புகழின் உச்சிக்கும் உலக அளவில் பிரபலம் பெரும் யோகத்தையும் தந்த காலம் இதுவே, ஜாதகர் கலை துறையில் பல வெற்றிகளை குவிக்கவும், அரசியலில் கொடிகட்டி பறக்கவும் மேற்கண்ட செவ்வாயின் ஆதிக்கம் பெற்ற 9ம் எண்ணே வழிவகுத்தது எனலாம், ஒருவரின் பிறந்த தேதியில் 9ம் எண் வருவது வெற்றிகரமான வாழ்க்கையை உறுதி செய்யும், பெயரும் 9ம் எண்ணில் அமைந்தது  ( MGR ) வெற்றியின் சதவிகிதத்தை 200% வாரி வழங்கியது என்பதை நாம் இதன் மூலம் தெளிவாக உணரலாம்.

அன்பர்களே ! எண்களின் வலிமை பலன் தருவது, அதன் ஆதிக்கத்தின் கிழ் பயணம் செய்யும் பொழுது மட்டுமே என்பதை உணர்வது அவசியம் ஒருவரின் பிறந்த தேதியில் இருக்கும் எண் மற்றும் கூட்டு எண் ஆகியவை மற்றுமே ஒருவரின் வாழ்க்கையை நிர்ணயம் செய்து விடாது நமது எண்கணித முறைப்படி பிறந்த தேதி, மாதம், வருடம் மற்றும் கூட்டு எண் ஆகியவை அனைத்தும் ஒருவரின் வாழ்க்கையில் அதன் ஆதிக்கத்தின் கிழ் பயணம் செய்யும் வயதுகளில் யோக அவயோக பலன்களை எண்களின் தன்மைக்கு ஏற்றார் போல் பலன் தரும், பொதுவாக இவரது பிறந்த தேதியை வைத்து பலன்களை நிர்ணயம் செய்யும் எண் கணித நிபுணர்கள் இவரது வெற்றிக்கு காரணம் 8ம் எண்ணாக வர்ணிப்பது உண்டு, உண்மை அதுவல்ல இவரது பிறந்த தேதியில் வருடம் மற்றும் கூட்டு எண்ணில் இருக்கும் 9ம் எண்ணுக்கே அந்த பெருமையெல்லாம் சாரும் என்பதை எண்கணித ஆர்வலர்கள் புரிந்துகொள்வது சிறப்பு, 8ம் எண் ஜாதகருக்கு கடமை,கண்ணியம்,கட்டுப்பாட்டுடன் நேர்மையையும் வழங்கியது என்பதை மறுக்க இயலாத போதிலும், இவரது புகழ் மிக்க வெற்றிகரமான வாழ்க்கையை நிர்ணயம் செய்தது நிலையான வெற்றிகளை வாரி வழங்கும் 9ம் எண் என்றால் அது மிகையில்ல அனபர்களே !

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

திங்கள், 7 மே, 2012

ஜாதகத்தில் பலன் தருவதில் அதிக பங்கு வகிப்பது நவ கிரகமா? பனிரெண்டு பாவகமா?



 ஒரு சுய  ஜாதகத்தில்  பலனை நடத்துவதில் முக்கிய பங்கு வகிப்பது கிரகங்களா?  பாவகங்களா?  என்றால்  நிச்சயம் பாவகங்களே !  இதில் எவ்வித சந்தேகமும் இல்லை காரணம் சில ஜாதக அமைப்பில் சில கிரகங்கள் ஆட்சி , உச்சம் என்ற நிலையில் வீற்றிருக்கும் , ஆனால் ஜாதகருக்கு அந்த கிரக அமைப்பில் இருந்து எந்தவிதமான நன்மையையும் கிடைத்து இருக்காது .


 அந்த மாதிரி ஜாதகத்தை பார்க்கும் சில ஜோதிடர்கள்  "அப்பா உனக்கு சுக்கிரன் உச்சம் எனவே மண்ணில்  அனைத்து சுக போகங்களும் நிச்சயம் கிடைக்கும்" என்று உசுப்பேத்தி விடுவார்கள் ஜாதகர் அப்படியே சந்தோஷ வானில் சிறகடித்து பறக்க துவங்கி விடுவார் ஆனால் நடப்பது வேறு மாதிரி இருக்கும் ஜாதகருக்கு சுக்கிரன் பேக்கை கிழித்துக்கொண்டு இருப்பார் , இதுமாதிரியான ஜாதக அமைப்பை நாங்கள்  நிறைய பார்த்திருக்கிறோம் .


இதற்க்கு காரணம் என்ன ?


ஜாதகத்தில் கிரகங்கள் எந்த நிலையில் இருந்தாலும் , லக்கினம் உட்ப்பட  12 பாவகங்களும் நன்றாக இருப்பின் ஜாதகர் நிச்சயம் வெற்றிகரமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருப்பார் , இதில் சுக்கிரன் நீச்சமானாலும் சரி , குரு நீச்சமானாலும் சரி .

 காரணம் லக்கினம் உட்பட 12 பாவகங்களும் குடம் மாதிரி , அதில் நிரப்ப படும் நீரே கிரகங்களின் சக்தி . இதில் ஒவ்வொரு மனிதரின் கர்ம வினை பதிவிற்கு ஏற்றார் போல் இந்த குடங்கள் நல்ல நிலையிலும் , சிறு ஓட்டை முதல் பெரிய ஓட்டை வரை வித விதமாக , வினை பதிவிற்கு ஏற்றார் போல் இறை அருளால் வழங்க படுகிறது .


 இந்த குடங்களில் அனைவருக்கும் சம விகிதத்தில் விழும்  நீர்
 ( கிரக சக்தி ) நல்ல குடங்களில் ஆயுள் முழுவதும் நிறைந்து இருக்கிறது , ஓட்டை குடங்களில் விழும் நீர் ஓட்டைக்கு தகுந்தார்  போல் விரையம் ஆகிறது ஆவறவர் வினை பதிவிற்கு ஏற்றார் போல், மனிதர்கள் சில பேர் மட்டும்  இறைநிலை தத்துவத்தை உணர்ந்து கர்மவினை பதிவை அகற்றி தமது குடங்களின் ஓட்டைகளை தாமே அடைத்துக்கொண்டு இறைநிலையை அடைகின்றனர் , பெரும்பாலானோர் இதை பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் தன்னிடம் உள்ள ஜீவ சக்தியை 
( கிரக சக்தியை ) விரையம் செய்கின்றனர் .


இது தொடர்ந்து நடக்கும் பொழுது மனிதனுக்கு அனைத்து கஷ்டங்களும் , துன்பங்களையும் அதிகமாகிறதோ தவிர நன்மை ஏற்ப்படுவதில்லை , இதில் விழிப்புணர்வை அனைவரும் பெற வேண்டும் என்பது எனது ஆவல் ,


மேலும் விண்வெளியில் சஞ்சாரம் செய்யும் நவகிரகங்கள் ( சாயா கிரகமான ராகு கேது உட்ப்பட ) அனைத்தும் பூமிக்கு ஒரே அமைப்பில் , சரிவிகிதமாக  ஜீவ சக்தியை அனுப்பிக்கொண்டுதான் இருக்கிறது , அந்த ஜீவ சக்தி அனைவருக்கும் ( ஓரறிவு ஜீவன் முதல் ஆறறிவு ஜீவன் வரை ) சரிவிகிதத்தில் தான் கிடைக்கிறது, தமக்கு கிடைத்திருக்கும் பாத்திரத்திற்கு ஏற்ப கிரக ஜீவ சக்தி சேமிக்க படுகிறது அந்த அமைப்பில் நன்மையோ தீமையோ ஜீவன்கள் அனுபவிக்கின்றன இதுவே உண்மை .


இதற்க்கு நாம் நவகிரகத்தின் மீது அந்த தோஷம் , இந்த தோஷம் என்று பலி போடுவது எப்படி சரியாகும் , சற்றே சிந்திக்கவும்.

இதற்க்கு மாறாக வர்ஷன் ஜோதிடன் அவனுக்கு கிரக ஜீவ சக்தியை அதிகம் கொடு என்றும் , குழந்தை கணினி பொறியாளர் அவருக்கு இன்னும் அதிகம் கொடு என்றும் நவகிரகங்கள் பாகு பாடு கட்டுவதில்லை , அவரவர் குடத்திற்கு ( பாவக வலிமைக்கு  ) ஏற்றார் போல் நன்மை தீமை பலன் நடக்கிறது .


அனைவரும் கர்ம வினை பதிவை ( குடத்தின் ஓட்டையை அடைக்கும் வழி ) போக்கிக்கொள்ளும் தேடுதல் இருப்பின் அனைவருக்கும் நன்மையே நடக்கும்.


வாழ்க வளமுடன்

ஜோதிடன் வர்ஷன்

9443355696 .

செவ்வாய், 24 ஏப்ரல், 2012

லக்னாதிபதி மறைந்தாலோ,நீசமடைந்தாலோ,அஸ்தங்கம் அடைந்தாலோ




வணக்கம்,
எனது
கேள்விகளுக்கு சிறப்பான பதில்களை வழங்கிக்கொண்டிருப்பமைக்கு நன்றி.

கேள்வி :
1.
ஒரு பாவம் கெட்டுவிட்டது என்பதற்கும் பாதிக்கப்பட்டது என்பதற்கும் என்ன
வித்யாசம்
?

 பதில் :

ஒருவருக்கு  சுய ஜாதகத்தில் ஒரு பாவத்துக்குண்டான கிரகம் தனது வீட்டுக்கு சுப பலனை பெறாமலும் , அந்த பாவகத்துடன் சம்பந்தம் பெரும் கிரகங்களும் சம்பந்தம் பெற்ற பாவத்துக்கு நன்மையை செய்யவில்லை என்றால், அந்த பாவகம் 100   சதவிகிதம்  கெட்டு விட்டதாக நிர்ணயம் செய்ய முடியும். 

மேலும் இந்த அமைப்பில் பாவகத்துக்கு அதிபதி நன்றாக இருந்து, சம்பந்தம் பெற்ற  பாவத்தை  பார்க்கும் கிரகங்கள்  தீமை செய்தாலும் . பார்க்கும் கிரகங்கள் நன்மை செய்து , பாவ அதிபதி மட்டும் தீமை செய்தாலும். அந்த பாவகம் பாதிக்க பட்டுள்ளதாக நிர்ணயம் செய்ய முடியும் . மேலும் எவ்வளவு சதவிகிதம் பாதிக்க பட்டுள்ளது என்று சுய ஜாதகத்தை வைத்து எளிதாக கண்டுபிடித்துவிட முடியும் .  


 கேள்வி :
2. பூர்வபுண்ணியத்தில் ராகு இருந்தால் ஏற்படும் தோஷத்திற்கும்,ராகுவோடு
சூரியன்
சேர்ந்து இருக்கும் தோஷத்திற்கும் என்ன வித்யாசம்?இதில் எது
கொடியது
?



பதில் : 

ராகு சுய ஜாதகத்தில் எந்த பாவகத்தில் உள்ளாரோ அந்த பாவகத்திர்க்கு உண்டான முழு பலனையும் தானே செய்வார் ஆகவே அவருடன் சேர்ந்த கிரகம், அந்த பாவகத்தை பார்த்த கிரகம் பற்றிய கவலை நமக்கு தேவையே இல்லை அது எந்த கிரகமானாலும், ஒரு ஜாதகத்தில் மிகுந்த வலிமை உடைய கிரகம் ராகுவும் , கேதுவுமே ஆகும் என்பதனை நான் இங்கு நினைவு கூறுகிறேன் . 

பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு இருப்பாரே ஆயின் அவருடன் சேரும் சூரியனால் மற்ற கிரகங்களால் பெரிய கெடுதல் எதுவும் நிகழ்ந்து விட வாய்ப்பு இல்லை, சூரியனையும் சந்திரனையும் மறைக்கும் தன்மை ராகு கேதுவுக்கு உண்டு . இந்த இடத்தில் நாம் கவனிக்க வேண்டியது ஐந்தாம் பாவத்தில் அமரும் ராகுவோ அல்லது கேதுவோ நன்மை செய்கின்றனர அல்லது தீமை செய்கின்றனர என்பது மட்டுமே .




கேள்வி :
3.
லக்னாதிபதி மறைந்தாலோ,நீசமடைந்தாலோ,அஸ்தங்கம் அடைந்தாலோ என்ன மாதிரியான பலன் ஏற்படும்?இதை அறிவியல் மற்றும் சாஸ்திர ரீதியாக எப்படி சரிசெய்வது?



பதில் : 

லக்னாதிபதி மறைந்தாலோ,நீசமடைந்தாலோ,அஸ்தங்கம் அடைந்தாலோ, சுய ஜாதகத்தில் லக்கினம் கெட்டு விட்டதாக நிர்ணயம் செய்வது பெரிய தவறு , மேலும் லக்னாதிபதி ஆட்சி, 
உச்சம் , நட்பு , சமம் என்ற நிலையில் இருந்தால் ஜாதகருக்கு நன்மை செய்வதாக நிர்ணயம் செய்வது பெரிய தவறு. 

எடுத்துகாட்டாக : 


சிம்ம லக்கின ஜாதகருக்கு சூரியன் துலாம் ராசியில் நீச்ச நிலையில் அமர்ந்தாலோ , கும்பத்தில் அல்லது ரிஷபத்தில் பகை பெற்று அமர்ந்தாலோ லக்கினத்திற்கு நன்மையே செய்வார், மேலும் சிம்மத்தில் ஆட்சி பெற்று அமருவது லக்கினத்தை தானே 100  சதவிகிதம் கெடுத்து விடுவார், மேஷத்தில் உச்சம் பெற்று அமருவது பாதிப்பையே செய்வார்.

  ஒருவேளை சிம்மத்தில் ராகுவோ அல்லது  கேதுவோ அமர்ந்தால், லக்கினாதிபதி எங்கு இருந்தாலும் அவரை பற்றி நாம் கவலை கொள்ள தேவை இல்லை ஏனெனில் லக்கினத்திற்கு உண்டான முழு பலனையும் ராகுவோ அல்லது  கேதுவோ மட்டுமே செய்வார் அதுவும் 100 சதவிகிதம் நன்மையாக ! 

லக்கினம் எந்த கிரகத்தால் பாதிக்க பாதிக்க படுகிறதோ அந்த கிரகத்தின் மீது தவம் இயற்றலாம், அந்த கிரகத்திற்கு உண்டான உறவுகளுடன் பகைமை பாராட்டாமல் நல்லுறவை பேணலாம் . அந்த கிரகத்திற்கு உண்டான ரத்தினங்களை சுத்தி செய்து பயன் படுத்தி உயிர்கலப்பு பெறலாம், இந்த அமைப்பின் மூலம் ஜாதகர் 100  சதவிகித  நன்மை பெற முடியும் .

 கேள்வி :
லக்னாதிபதி பாவகிரகத்தோடு சேர்ந்தாலோ,பாவகிரகத்தால்
பார்க்கப்பட்டாலோ,6,8,12ம் வீட்டின் தொடர்பை பெற்றிருந்தாலோ என்ன
மாதிரியான பலன் ஏற்படும்?அதை சரிசெய்வது எப்படி?

நன்றிகளுடன்.

By
ஜோதிட பித்தன்

பதில் :
 லக்னாதிபதி பாவகிரகத்தோடு சேர்ந்தாலோ,பாவகிரகத்தால்
பார்க்கப்பட்டாலோ லக்கினம் பாதிக்க பட வாய்ப்பு இல்லை , ஒரு வேலை
6,8,12ம் வீடுகளில் மறைவு பெற்றால் வேண்டுமானால் லக்கினம் பாதிக்க பட வாய்ப்பு அதிகம் உண்டு , அப்படி பாதிக்க பட்டாலும் லக்கினத்தில் ராகுவோ கேதுவோ அமர்ந்தால் லக்கினம் 100  சதவிகிதம் வலுப்பெறும் .


ஜோதிடன் வர்ஷன்
9443355696 

அற்ப ஆயுளும் 8 ம் இடமும் !?



தனது ஆயுள் அமைப்பை பற்றி தெரிந்து கொள்ள விரும்பம் இல்லாத மனிதரே கிடையாது எனலாம், பிறப்பு என்று ஒன்று இருந்தால் இறப்பு என்ற ஒன்று நிச்சயம் இது இயற்க்கை நியதி .

 கடந்த மாதம் ஜோதிட ஆலோசனை பெற வந்த ஒருவரின் மரணம்  என்னை வெகுவாக பாதித்து விட்டது, காரணம் ஜாதகர்  நன்கு படித்தவர் நல்ல அனுபவம் பெற்றவர்  வயதும் இளம் வயதே ஆனாலும் ஜாதகரின் மன கவலை மிகுதியால், தனது குடும்பத்தை பற்றி சிறிதும் கவலை கொள்ளாமலும்  தன் உயிரை தானே மாய்த்து கொண்டார் . 

தனது உயிரை தானே போக்கி கொண்டாலும் கர்ம வினை பதிவுகளில் இருந்து தப்பித்து கொள்ள இயலாத நிலையே ஏற்ப்படும், கர்மவினை பதிவினை முழுவதும் தமது வாழ்க்கையில் வரும் இன்ப துன்பங்களை அனுபவித்து போக்கி கொள்வதே மிகவும் சரியான வழி , இதை விடுத்து  தனது உயிரை மாய்த்து கொண்டால் அந்த ஆன்மாவுக்கு முக்தி கிடைக்காமலும் , சாந்தி அடையாமலும், அடையும் துன்பத்திற்கு ஒரு அளவு கிடையாது , மேலும் ஆன்மாவை கட்டுப்படுத்தும் சில மந்திர வாதிகளிடம் அந்த ஆன்மா சிக்கி விடுமாயின் அதை விட கொடுமை எதுவும் இல்லை .

இவர்களிடம் சிக்கும் ஆன்மாவை தமது காரியத்திற்கா ஏவிவிட்டு சுயலாபம் காண்பார்கள்,  இதனால் ஏற்ப்படும் கர்ம பதிவுகளையும் அந்த ஆன்மா மறு பிறவியில் கழிக்க வேண்டி வரும் , இந்த வாழ்க்கையை விட அது மிகவும் துன்பம் தருவதாக இருக்கும்,  மேலும் இந்த பிறவியில் போக்கி கொள்ள வேண்டிய கர்ம வினை பதிவையும்  சேர்த்து அனுபவிக்க வேண்டி வரும் . 

மனிதனாக பிறவி கண்டதே தனது அறிவின் வழி நடந்து நன்மையை மட்டும் தமது வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டு,  தீமையை தவிர்த்து தாமும்  தம்மை சார்ந்தவர்களுக்கும் துன்பம் எந்த விதத்திலும் தராமல் வாழ்க்கையை நடத்தி இறை நிலையை அடைவதே பிறவி பயன் ஆகும் .

 வரும் துன்பங்கள் யாவும் நிரந்தரம் அல்ல என்பதை மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் உணர்வது மிக முக்கியம் , இந்த மன நிலையும் தன்னம்பிக்கையும் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையில் ஏற்ப்படும் துன்பத்திலிருந்து வெகு விரைவில் மீட்டெடுத்து சரியான  பாதையில் நடத்தி செல்லும் .

உங்களுக்கு வரும் துன்பங்கள் யாவையும் கண்டு பயம் கொள்ளாமல் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள் ஏனெனில் கர்ம வினை பதிவை போக்கி கொள்ள இறைநிலை உங்களுக்கு தரும் ஒரு வாய்ப்பாக நினைத்து வாழ்க்கையை செம்மையாக நடத்துங்கள் உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டுமே.

 அதே போல் தன்னம்பிக்கை என்பதும் உங்களை சார்ந்ததே அதை மற்றவரால் தர முடியாது , உங்களின் நம்பிக்கையே தன்னம்பிக்கை இதை நீங்களாகவே உணர்வது முக்கியம், பிறகு பாருங்கள் உங்களின் வாழ்க்கை ஒவ்வொரு நாளும் , ஒவ்வொரு மணித்துளியிலும் நம்பிக்கை மிகுந்ததாகவும் , ஒரு சிறப்பான எதிர்காலத்தி நோக்கி நீங்கள் பயணம் செய்வது தெளிவாக தெரியும் பிறகு உங்களை எதிர்க்க எந்த  எமனாலும் முடியாது .

தற்கொலை செய்து கொள்ளும் தன்மை உள்ள ஜாதக நிலைகள் :

ஜாதகருக்கு 8  ம் வீடு, லக்கினம் ஆகியவை சர மண் தத்துவமாகவோ அல்லது சர நீர் தத்துவமாகவோ அமைந்து 8  ம் வீட்டுடன் சம்பந்தம் பெற்றால் , ஜாதகர் தனது மரணத்தை தானே தேடிக்கொள்ளும் துர் பாக்கியத்திற்கு ஆளாகும் நிலை ஏற்ப்படும் . மக்களின் நலன் கருதி வேறு அமைப்புகள் பற்றி எழுதவில்லை

 இந்த நிலை பெற்ற ஜாதகர்கள் அனைவருக்கும் தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை நேசிக்க கற்று கொள்வது மிகுந்த நன்மையை தரும் . இந்த அமைப்பை சேர்ந்தவர்களுக்கு குடும்ப உறவுகளும் , அவர்களது  வாழ்க்கை துணையும் ஆறுதலாக இருப்பது வாழ்க்கையை வெற்றிபெற செய்ய உறுதுணை புரியும் .

இதில் வளரும் இளம் பருவத்தினர் மிகவும் கவனமுடன் வாழ்க்கையை சவாலாக ஏற்றுக்கொண்டு வாழ்வது முக்கியம் .

இறை நிலையின் கருணையினால்  இறந்த அந்த ஆன்மா சாந்தி பெறட்டும் வரும் காலங்களில் இதுமாதிரியான ஜாதகங்களை எங்களின் கணிதத்திற்கு வராமல் இருக்க  இறைநிலை கருணை புரியட்டும் .


ஜோதிடன் வர்ஷன் 
9443355696