பொதுவாக ஒருவரின் சுய ஜாதகத்தில் எந்த ஒரு கிரகத்தின் திசையும் தான் ஏற்று நடத்தும் பாவக பலனை தங்குதடையின்றி வாரி வழங்கும், இதன் அடிப்படையில் தங்களின் சுய ஜாதக அமைப்பின் படி 5ம் பாவகத்தில் அமர்ந்துள்ள ராகு பகவான் தங்களுக்கு தனது திசையில் தரும் பலாபலன்களை இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பரே!
5ம் பாவகத்தில் அமர்ந்த ராகு என்றவுடனே தங்களுக்கு ஒரு ஐயம் ஏற்படலாம், சுய ஜாதகப்படி மேஷ ராசியில் தானே ராகு அமர்ந்து இருக்கிறார், இது எப்படி 5ல் ராகு அமர்ந்தாக ஆகும் என்ற கேள்வி தங்களுக்குள் ஏற்ப்படுவது இயல்பே, அடிப்படியில் தங்களது ஜாதகத்தில் 5ம் பாவகம் மீன ராசியில் 351:21:13 பாகையில் ஆரம்பித்து மேஷ ராசியில் 20:34:02 பாகையில் முடிவடைகிறது, இந்த 5ம் பாவகத்திர்க்கு உற்பட்ட 11:16:13 பாகையில் ( மேஷ ராசியில் ) ராகு பகவான் அமர்ந்து இருப்பதை கவனித்தால், ராகு பகவான் தங்களின் சுய ஜாதகத்தில் 5ம் பாவகத்தில் அமர்ந்திருப்பது தெளிவாகும், எனவே தங்களது ஜாதகத்தில் 5ம் பாவகத்தில் அமர்ந்த ராகு பகவான் தனது திசை 18 வருட காலங்களில் தங்களுக்கு வழங்கும் பலாபலன்கள் என்ன என்பதை இனி ஆய்வு செய்வோம் அன்பரே !
தங்களின் சுய ஜாதக அமைப்பின் படி தற்பொழுது நடைபெறும் ராகு திசை தங்களுக்கு 11ம் வீடு, அதிர்ஷ்டம் மற்றும் லாப ஸ்தானமாகி 11ம் பாவகத்துடனே சம்பந்தம் பெற்று யோக பலனை தருவது வரவேற்க்கதக்க அம்சமாக கருதலாம், 11ம் பாவக வழியில் இருந்து தாங்கள் அதிக தன்னம்பிக்கை, முற்போக்கு சிந்தனை , நேர்மறை எண்ணங்கள் மூலம் வாழ்க்கையை யோகமனதாக மற்றும் வல்லமை, அனைவராலும் லாபம் மற்றும் ஆதரவு கிடைக்க பெறுதல், எடுக்கும் காரியங்களில் வெற்றி, எதிர்பாராத உதவிகள், திடீர் முன்னேற்றங்கள், அதிர்ஷ்டகரமாக நிகழும் நிகழ்வுகள், பன்முக திறன்கள் மூலம் வாழ்க்கையை மிகவும் எளிமையாக நடத்தும் வல்லமை, அதிர்ஷ்டத்தின் பரிபூரணதுவத்தை அனுபவிக்கும் நிலையை தரும்.
மேலும் தங்களின் ஜாதகத்தில் 11ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 6ம் ராசியான கன்னியில் 8 பாகைகளும், 7ம் ராசியான துலாமில் 20 பாகைகளையும் கொண்டு இருப்பது உபய மண் தத்துவத்தில் இருந்தும், சர காற்று தத்துவத்தில் இருந்தும் லாப ஸ்தான பலன்களை வாரி வழங்கும், தங்களின் அறிவு சார்ந்த செயல்பாடுகள் மக்களிடம் சென்றடையும், மக்கள் செல்வாக்கு உண்டாகும், இதன் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றமும் அதிர்ஷ்டமும் தங்கு தடையின்றி கிடைக்க பெறுவீர்கள்.
பொது வாழ்க்கையிலும் அரசியலிலும் நல்ல முன்னேற்றம் உண்டாகும், வியாபாரத்திலும் ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில் எதிர்பாராத முன்னேற்றமும் லாபமும் கிடைக்கும், தன்னிறைவான பொருளாதார வசதி வாய்ப்புகள் பொதுமக்கள் வழியில் இருந்தும், நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் வழியில் இருந்தும் கிடைக்க பெறுவீர்கள், நினைக்கும் காரியங்கள் யாவும் வெற்றி பெரும், தேடுதல் தங்களுக்கு சிறந்த வாழ்க்கையை அமைத்து தரும், அதிக அளவில் தங்களின் 11ம் பாவகம் துலாம் ராசியிலேயே வியாபித்து இருப்பதால், அறிவு சார்ந்த தொழில்களும் நிர்வாக திறமையும் தங்களுக்கு எதிர்பாத வெற்றிகரமான யோக வாழ்க்கையை அமைத்து தரும்.
வாழ்க்கை துணை வழியில் இருந்து நல்ல அதிர்ஷ்டங்களையும் ஆதரவுகளையும் இனிவரும் காலங்களில் தாங்கள் அனுபவிக்க கூடும், சிறந்த கூட்டாளிகள் நல்ல நண்பர்கள் தங்களுக்கு வெகுவாக தாமாகவே முன்வந்து உதவுவார்கள், கேட்க்கும் இடங்களில் இருந்து நல்ல பதில் கிடைக்கு சிறப்பான உதவிகளும் தேடிவரும், தங்களுக்கு வரும் நல்ல வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுவது தங்களின் சாமர்த்தியத்திலும் புத்திசாலிதனத்திலும் உள்ளது என்பதால், அதிக விழிப்புணர்வு இனிவரும் காலங்களின் தங்களுக்கு அதிக அளவில் தேவைப்படும்.
தங்களுக்கு தற்ப்பொழுது நடைமுறையில் உள்ள ராகு திசை லாப ஸ்தான பலனையே ஏற்று நடத்துவதால் மிகுந்த நன்மைகளையும் யோக பலன்களையும் தங்குதடையின்றி வாரி வழங்கும்
வாழ்த்துகள்.
கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் :
1) கூட்டு முயற்ச்சியில் எச்சரிக்கை தேவை
2) தாம் மேற்கொள்ளும் முயற்ச்சியில் எந்த காரணத்தை கொண்டும் பின்வாங்குவது நல்லதல்ல.
3) பல முறை சிந்தனை செய்து ஒரு காரியத்தில் இறங்கவும்.
4) வீண் மன கவலையும், மன போராட்டத்தையும் தாங்கள் தவிர்ப்பது நல்லது, 1,9ம் வீடுகள் பாதிப்பதால் உடல் மன நலத்தில் அதிக அக்கறை கொள்வது சிறப்பான யோகத்தை தரும்.
5) வடக்கு திசை வாயிற்படி கொண்ட வீடு, வியாபர ஸ்தலங்கள் தங்களுக்கு அபரிவிதமான யோகத்தை வாரி வழங்கும்.
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696



