கடகராசி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கடகராசி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 28 பிப்ரவரி, 2025

கடகம் சனிப்பெயர்ச்சி பலன்கள் ( 29.03.2025 முதல் 03.06.2027 )

 


குறிப்பு : சனிதிசை, சனிபுத்தி, சனிஅந்தரம் மற்றும் சனிசூட்டசமம் நடைபெறும் கடகராசி அன்பர்களுக்கு மட்டும் இது பொருந்தும். 

கடக ராசிக்கு 29.03.2025 அன்று இரவு 07:25க்கு கும்ப ராசியில் இருந்து மீனராசிக்கு பெயர்ச்சி அடையும் "சனிபகவான்" 03.06.2027 அன்று நள்ளிரவு 01:54 வரை, கால புருஷ தத்துவ அமைப்பிற்க்கு பத்து மற்றும் பதினொன்றுக்கு அதிபதி என்ற நிலையில் கடக ராசியினருக்கு பாக்கிய சனியாக தரும் பலன்கள் என்ன என்பதை இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

எதிர் வர்க்க கிரகமான சனி பகவான் கடக ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9ல் சஞ்சரிக்கு காலம் "அஷ்டம சனியின்" பாதிப்பில் இருந்து கடக ராசியினர் அனைவரையும் மீட்டு எடுத்து பாக்கியங்களை நல்கும் சுப நேரமாகும், தங்களின் மனரீதியான கவலைகளும், அழுத்தங்களுக்கும் அறிவுபூர்வமான தீர்வுகளை முன்னெடுக்கும் காலம் இது, எதிர்ப்புகள் சார்ந்த பிரச்சனைகள் தங்களுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கும், எதிராளிகள் வழியில் இருந்தும் நன்மைகள் கைகூடிவரும், மனதில் தெளிவு பிறக்கும், குழப்பங்கள் நீங்கி சரியான முடிவுகளை முன்னெடுக்கும் வாய்ப்பு உண்டு, பலபுண்ணிய திருத்தலங்களுக்கு சென்று வருவதன் மூலம் ஆன்மீக வெற்றி, ஆன்மீக பெரியோர்களின் ஆசிர்வாதம் முழுமையாக பெறுவீர்கள், வெளிநாடுகளில் முதலீடு செய்து அதன் வழியில் இருந்து நல்ல வருமானம் பெறுவதற்கு வாய்ப்பை நல்கும்.


புதிய முதலீடுகள் புதிய தொழில் வாய்ப்புகள் புதிய சந்தர்ப்பங்கள் யாவும் இனிவரும் காலங்களில் தங்களுக்கு முழுமையான வெற்றிகளை வாரி வழங்கும், உறவுகள் அனைவரும் தங்களுக்கு உதவி புரியும் நேரமிது, தம்பதியர் இருவரிடமும் இருந்து வந்த பிணக்குகள் நீங்கி ஒற்றுமையுடன் வாழ்க்கையை வெற்றிகரகமாக எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து குடும்பத்தை வெகு சிறப்பாக நடத்தும் வாய்ப்பு தங்களுக்கு அதீத மனமகிழ்ச்சியை ஏற்படுத்தும், பெற்றோர்கள் தங்களுக்கான நலம்தரும் விஷயங்களை சிறப்பாக முன்னெடுப்பார்கள், சொத்து வீடு வண்டி வாகனம் போன்ற விஷயங்களை தங்களது உடைமையாக்கி மகிழ்ச்சி பெற செய்வார்கள், ஆன்மீகத்தில் நாட்டத்தையும் இறையருளின் கருணையையும் பரிபூர்ணமாக சுவீகரிக்கும் அற்புதமான நேரமிது  என்பதை கடக ராசியினர் உணரும் நேரமிது, தங்களது கல்விஞானம் சமயோசித அறிவுத்திறன் சிறப்பாக செயல்பட்டு எதிர்பாராத வெற்றிகளை வாரி வழங்கும்.

தனது 6ம் பார்வையால் கடகராசி அன்பர்களுக்கு குடும்பஸ்தானமான 2ம் பாவகத்தை வசீகரிக்கும் ( சிம்ம ராசியை ) சனிபகவான் தங்களுக்கு வருமான வாய்ப்பை மிக பெரிய அளவில் வழங்குவது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சம் ஆகும், பேச்சில் உறுதி, குடும்பத்தில் மகிழ்ச்சி, திடீர்திருமண யோகம், காதலில் வெற்றி, கலைத்துறையில் மிகப்பெரிய சாதனைகளை முன்னெடுக்கும் யோகம், திடீர் பிரபல்யம், பொதுமக்கள் வழியிலான செல்வாக்கு, பொதுமக்கள் ஆதரவு வழியிலான பதவிகள், அரசியல் ரீதியான வெற்றிகள் அதிகார பதவிகளை மிக எளிதாக சுவீகரிக்கும் யோகம் என்ற வகையில் அளவிலா நன்மைகளை வாரி வழங்குவார், சத்ரு மற்றும் களத்திர ஸ்தான அதிபதி என்ற வகையில் மிகுந்த சுபயோகங்களை தன்னிறைவாக  மேற்கண்ட பாவக வழியில் முழுமையாக வாரி வழங்குவார், இருப்பினும் தங்களது குழந்தைகள் வாழ்வில் அதீத அக்கறையுடன் செயல்படுவது அவசியம், அவர்களது உடல் ஆரோக்கியம், மனவலிமை சார்ந்த விஷயங்களில் ஆறுதல், நடவடிக்கை சார்ந்த விஷயங்களில் கண்காணிப்பு, ஒழுக்கம் சார்ந்த விஷயங்களில் கண்டிப்பு, கல்வி மற்றும் உயர்கல்வி சார்ந்த விஷயங்களில் சரியான வழிகாட்டுதல்கள் இவையனைத்தும் அவர்களின் எதிர்கால வாழ்க்கையை வெகு சிறப்பாக மேம்படுத்தும், குடும்பத்தில் வீண் வாக்குவாதம் தவிர்த்தல், வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை தங்களுக்கு வெகு சிறப்பான எதிர்காலத்தை நல்கும்.

தனது 7ம் பார்வையால் கடகராசி அன்பர்களுக்கு வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்தை வசீகரிக்கும் ( கன்னி ராசியை ) சனிபகவான் தனது வர்க்க வீடு என்பதால் முதல்தரமான யோகங்களை வாரி வழங்குவார், சுய முயற்சி சார்ந்த விஷயங்களில் எதிர்பாராத வெற்றிகள், தைரியம் தன்னம்பிக்கை விடாமுயற்சி மூலம் அபரிவித முன்னேற்றம், கல்வியில் ஆர்வம், நேர்த்தியான செயல்பாடுகள், தெளிவான சிந்தனை திறன், கற்பனை வளம், கலைத்துறையில் புகழ் பெரும் யோகம், தான் ஏற்றுக்கொண்ட காரியங்களில் திட்டமிட்டு செயல்படும் யோகம், எதிர்ப்புகளை துச்சமாக கருதி வெற்றிகொள்ளும் அமைப்பு, சர்வ சாதாரணமாக பல காரியங்களை சாதிக்கும் யோகம், பூமிக்கு கீழ் இருந்து கிடைக்கும் கனிம பொருட்கள் வழியில் இருந்து மிகுந்த லாபம், விவாசாயம் சார்ந்த தொழில்கள் வழியில் கிடைக்கப்பெறும் அதீத முன்னேற்றம், உணவு பொருட்கள் மற்றும் மருந்து பொருட்கள் வழியில் இருந்து வரும் லாபங்கள், அன்றாட தேவைகள் வழி பொருட்கள் மூலம் கிடைக்க பெரும் லாபங்கள் என மிகப்பெரிய தனசேர்க்கையை பெறுவீர்கள், மேலும் பிரச்சனைக்கான சரியான தீர்வுகளை முன்மொழிவதன் மூலம் கிடைக்க பெரும் பிரபல்ய யோகம், சரியான திட்டமிடல் மூலம் கிடைக்க பெரும் வெற்றி என தங்களின் வாழ்க்கையில் இதுவரை இல்லாத சுபயோகங்கள் யாவும் நடைமுறைக்கும் வரும், இளைய சகோதரன் சகோதரி வழியில் கிடைக்க பெரும் அதிர்ஷ்டம், ஒத்துழைப்பு, பாகப்பிரிவினை சார்ந்த நன்மைகள் தங்களுக்கு அதீத தைரியத்தை தரும், எதிலும் வெற்றிபெறும் யோகம் உண்டு என்பதால் தன்னம்பிக்கை குறையாமல் வாழ்க்கையை எதிர்கொள்ளுங்கள் வாழ்த்துக்கள்.

தனது 10ம் பார்வையால் கடகராசி அன்பர்களுக்கு சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்தை வசீகரிக்கும் ( தனுசு ராசியை ) சனிபகவான், செய்யும் தொழில் அல்லது வேலை சம்பந்தப்பட்ட நிலைகளில் சற்று கடுமையான சிக்கல்களை தந்து வெற்றிபெரும் யோகத்தை நல்குவார், மற்றவர்கள் விஷயங்களில் தேவையின்றி தலையீடு செய்வதன் மூலம் தங்களின் கவுரவம் கடுமையாக பாதிக்கப்படும் என்பதால், சற்று விலகி நிற்பது நன்மையை தரும், தெய்வீக அனுகிரகம் தங்களின் கடுமையான உழைக்கும் திறனுக்கான அங்கீகாரத்தை வெகு சிறப்பாக நல்குவார், பதவி உயர்வு ஊதிய உயர்வு, அதிகாரம் சார்ந்த விஷயங்களில் தங்களின் கருத்துக்கள் இல்லாமல் வெற்றிகாண முடியாத வாய்ப்புகள், எதிலும் தனிமரியாதை, அயலதேச பயணங்கள் வழியிலான முன்னேற்றங்கள், உயர்கல்வி பட்டய படிப்பு போன்ற விஷயங்களில் மிகப்பெரிய வெற்றிகள், உடல்நலன் சார்ந்த விஷயங்களில் நல்ல முன்னேற்றம் ஆரோக்கியம் மேம்படுதல், கடன் சார்ந்த இன்னல்களில் இருந்து விரைவாக மீண்டு வரும் யோகம், தனது தேவைகளுக்கான நிதியை எந்த தடையும் இன்றி பெரும் வல்லமை, வங்கி கடன் பொருளாதார உதவிகள் தேடிவரும் யோகம் என்ற வகையில் சகல சௌபாக்கியங்களையும் 10ம்  சனிப்பார்வை தங்களுக்கு வெகு சிறப்பாக வாரி வழங்கும் என்பதை கருத்தில் கொண்டு நலம் பெறுங்கள். 

இனிவரும் காலங்களில் கடக ராசி அன்பர்களுக்கு சமூகத்தில் மதிப்பு மிக்க உயர்பதவிகளை அலங்கரிக்கும் யோகம் உண்டு, உறவுகள் வழியில் ஆதாயம் உண்டு, உண்மையான உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைப்பதுடன், அதிகாரம் மற்றும் நிர்வாகம் சம்பந்தப்பட்ட பதவிகள் தங்களை தேடி வரும் என்பதை கருத்தில் கொள்க, எதிர்காலம் மிகவும் பிரகாசமாக இருப்பதால் வாழ்க்கையை மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்கொள்ளுங்கள்.

ஜோதிடன் வர்ஷன்

9443355696

திங்கள், 15 ஜனவரி, 2024

கடகராசி ஆயில்யம் நட்சத்திரம் - ராஜயோக வாழ்வை தரும் ரகசிய இறைவழிபாடு!

 


கடகராசி "ஆயில்யம்" நட்சத்திரம் பொதுநல வாழ்வில் புகழ் பெரும் யோக நட்சத்திரம், தனித்திறமை கொண்டு எவராலும் சாதிக்க இயலாத சாதனைகளை மிக எளிதாக சாதிக்கும் வல்லமை பெற்ற நட்சத்திரம், பொதுமக்கள் ஆதரவு என்பது மிக குறுகிய காலத்தில் கிடைக்கப்பெற்று வாழ்வில் மிகப்பெரிய அதிகார பதவிகளை சுவீகரிக்கும் நட்சத்திரம், தெய்வீகத்தில் ஆன்மீகத்தில் அதீத ஈடுபாடு கொண்டுள்ள நட்சத்திரம்,  சுயநலம் இன்றி செயல்படும் பொழுது இறையருளின் கருணையினை பரிபூர்ணமாக பெரும் நட்சத்திரம், அன்பு கருணை மற்றும் அனைத்து உயிர்களையும் தனது உயிர்போல் பாவிக்கும் மனப்பான்மை, எதிர்ப்புகளை கண்டு அஞ்சாத மனநிலை, அறிவில் விழிப்புணர்வு பகுத்தறிதல் உணர்வுக்கு முக்கியத்துவம் தராமல் அறிவுக்கு முக்கியத்துவம் தருதல், பொறுப்பான செயல்பாடுகள், கவனம் கனிவாக நடந்துகொள்ளுதல், அனைவரையும் சரியான வழிப்பாதையில் நடத்திச்செல்லும் அறிவாற்றல், இன்னலுறும் அனைவரையும் தனது அரவணைப்பின் மூலம் மீட்டு எடுக்கும் வலிமை, எதையும் சிறப்பாக செய்யும் வல்லமை என்ற வகையில் மேன்மையை தரும்,  இவர்களது  தமது வாழ்வில் சகலவிதமான சௌபாக்கியமும், உடல் நலம் மனோவலிமை, கல்வியில் மேன்மை, தொழில் விருத்தி, புத்திரபாக்கியம், பொருளாதார வளர்ச்சி என்றவகையில் பரிபூரணமான சுகபோகங்களையும், தன்னிறைவாக சுவீகரிக்க, மிக எளிமையான ரகசிய இறைவழிபாடு என்பது கீழ்கண்டவாறு அமையும். 

 ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள "திருக்காளத்தி " கோவிலில் அருள்பாலிக்கும்  "காளத்தியப்பர்" பெருமானை ராகு கால வேளையில் அபிஷேகம் வெந்நிற பட்டு சாற்றி வழிபாடு செய்யும் ஆயில்ய நட்சத்திர அன்பர்களுக்கு ஒரு மண்டல காலத்தில் சகல ஐஸ்வர்யங்களும் வந்து சேரும், பிறவியின் அருமை உணர்ந்து அறிவுக்கு முக்கியத்துவம் தந்து செயற்கரிய காரியங்களை மிக சிறப்பாக செயலாற்ற வைக்கும், தனது ஆன்ம ஒளி பிரகாசிக்கும், அறிவில் தெளிவு, விழிப்புணர்வு, விளைவறிந்து செயல்படுதல், வருமுன்காக்கும் வல்லமை, தெய்வீக அனுகிரகம், அனைவரையும் வசீகரிக்கும் யோகம், மனிதசக்தியை பயனுள்ளதாக மாற்றும் வல்லமை, பொதுமக்களின் வாழ்வை மேம்படுத்தும் தன்மை, மருத்துவத்தில் தேர்ச்சி, கலைகளில் புகழ்மிக்க பொறுப்புகளை பெறுதல், அரசியல் வழி ஆதாயம், சமூக செயல்பாடுகள், பொதுவாழ்வில் வெற்றி, தனது தனித்திறமையை முழுவதுமாக பிரயோகம் செய்வதால் வரும் வெற்றி வாய்ப்புகள், பல்வகைத்தொழில் புரிதல், மிதமிஞ்சிய வருமான வாய்ப்புகள், பொதுநலம் சார்ந்த காரியங்களில் புகழ்மிக்க பொறுப்புகள் தேடி வருதல், எந்த தொழில் செய்தாலும் அதில் முதன்மை பெறுதல், அதிகாரமும் ஆளுமை திறனும் ஒருங்கே அமையப்பெற்று மக்களுக்கு வழிகாட்டியாக திகழும் யோகம் உண்டாகும்.

ஆயில்யம் நட்சத்திர அன்பர்கள் வருடம் ஒருமுறை "காளத்தியப்பர்" பெருமானை ராகு கால வேளையில் தரிசனம் செய்யும் பொழுது வாழ்வில் முன்னேற்றம் என்பது படிப்படியாக உயர்ந்து உச்சநிலையை அடைவார்கள், மனித வாழ்விற்கு தேவையான அனைத்தும் பரிபூரணமாக கிடைக்கும், உடல்நலம் மனவலிமை, கல்வியில் தேர்ச்சி தொழில்யோகம், திருமணத்தடை அகன்று தனக்கான பொருத்தமான வாழ்க்கை துணையை பெறுதல், சந்ததி தழைக்க நல்லதொரு வாரிசுகள், வசதிவாய்ப்புகள், வண்டி வாகன யோகம், சொத்தது சுக சேர்க்கை, குடியிருக்க நல்ல வசதியான சொந்த வீடு, உறவுகள் ஆதரவு பொதுமக்கள் பேராதரவு, உயர்கல்வி பட்டைய படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்பு, சுய தொழில் புரிவதற்கான சந்தர்ப்பங்கள், துறைசார்ந்த ஞானம், எதையும் முற்போக்கு சிந்தனை மற்றும் நேர்மறை எண்ணம் கொண்டு வெற்றி பெறுதல், மக்கள் சக்தியை ஒருங்கிணைக்கும் வல்லமை, சாதனை புரிவதன் மூலம் பொதுவாழ்வில் வெற்றிபெறுதல் என்றவகையில் மிகுந்த சிறப்புகளை வாரி வழங்கும்.

 குறிப்பு :

கடகராசியில் "ஆயில்யம்" நட்சத்திரத்தை தனது ஜென்ம நட்ஷத்திரம் அல்லது லக்கினமாக பெற்ற அன்பர்கள், ஆன்மிகம் மற்றும் பொதுவாழ்வில் மிகப்பெரிய உச்சத்தை தொடும் யோகம் உண்டு, சுய தொழில் மற்றும் அரசியலில் சார்ந்த அமைப்புகளில் நிச்சய வெற்றிபெறுவார்கள், திடீர் தனயோகம் அதிர்ஷ்ட வாய்ப்புகள், பல்வகை தொழில் வழியிலான லாபங்கள், தனது நிர்வாக திறமை கொண்டு தொழில் வளர்ச்சி  பெரும் வல்லமை, எதிர்பாராத செல்வாக்கு, பொது சேவையை செய்வதின் வழியில் வரும் புகழ்மிக்க பொறுப்புகள், உடல் ஆரோக்கியம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, தெய்வீகஅனுகூலம், தன்னிறைவான பொருளாதார முன்னேற்றம் என்ற வகையில் மிகுந்த சுபயோக பலாபலன்களை சுவீகரிக்க, மேற்சொன்ன இறை வழிபாடு இவர்களது வாழ்வில் ராஜயோகத்தை தன்னிறைவாக வாரி வழங்கும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை அன்பர்களே ! 

ஜோதிடன்வர்ஷன் 

9443355696

செவ்வாய், 9 ஜனவரி, 2024

கடகராசி பூசம் நட்சத்திரம் - ராஜயோக வாழ்வை தரும் ரகசிய இறைவழிபாடு!

 

 கடகராசி "பூசம் நட்சத்திரம்" உற்பத்தி  தொழில் ரீதியான ஞானமும், பாதுகாப்பு, நிதி மேலாண்மை, நிர்வாக திறன் சார்ந்த நிலைகளில் தனித்தன்மையையும் வெளிப்படுத்தும் அபரிவிதமான ஆற்றல் மிக்க சிறப்பு நட்சத்திரமாகும், கல்வி போதிப்பதிலும், அறிய கலைகளில் சிறந்த ஞானமும், தெய்வீக வழிபாடு மூலம் தனது வாழ்வை பிரகாசமாக மாற்றிக்கொள்ளும் யோகமும், மற்றவர்கள் துன்பத்தை தனது ஆறுதலான வார்த்தைகள் மூலம் சரிசெய்யும் வலிமையையும், எதிர்காலம் சார்ந்த விஷயங்களை கண்டுணரும் ஆற்றலும், அறிவார்ந்த பெரியோர்கள் சேர்க்கையும், ஆன்மீக பெருமக்கள் ஆசிர்வாதமும், வருமுன் உணர்ந்து செயல்படும் யோகமும், துணிச்சலான காரியங்களை மிகச்சிறப்பாக செய்துமுடிக்கும் வல்லமையும் இவர்களுக்கு பிறவியிலே அமையப்பெற்று இருக்கும், இவர்களது  தமது வாழ்வில் சகலவிதமான சௌபாக்கியமும், உடல் நலம் மனோவலிமை, கல்வியில் மேன்மை, தொழில் விருத்தி, புத்திரபாக்கியம், பொருளாதார வளர்ச்சி என்றவகையில் பரிபூரணமான சுகபோகங்களையும், தன்னிறைவாக சுவீகரிக்க, மிக எளிமையான ரகசிய இறைவழிபாடு என்பது கீழ்கண்டவாறு அமையும். 

 ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவிலில் அருள்பாலிக்கும் குருபகவானை வளர்பிறை வியாழன் அல்லது மாசி மாதம் மூன்றாவது வியாழக்கிழமை அன்று குரு ஹோரையில் மஞ்சள் பட்டு, மஞ்சள் வர்ண புஷ்பம், வெண்சுண்டல் மாலை சாற்றி வழிபடுவோருக்கு 3நாட்களில் வியக்கத்தக்க சுபயோகங்களும், சிறப்பான முன்னேற்றங்களும் நிச்சயம் உண்டாகும், குறிப்பாக திருமண தடை அகல அனைவரும் இந்த வழிபாட்டு முறையை பின்பற்றலாம், இதனால் திருமண யோகம் கைகூடுவதுடன், சந்ததி தழைக்க நல்ல ஆண் வாரிசு அமையும், மேலும் கல்வியில் வெற்றி, விளையாட்டு துறையில் சாதனை புரியும் யோகம், புதிய கண்டுபிடுப்புகள் சார்ந்த விஷயங்கள் மூலம் உலக புகழ், தெய்வீக அனுகூலம், வெளிநாடு பயணங்கள் அல்லது வெளிநாடுகளில் தொழில் யோகம், ஏற்றுமதி இறக்குமதி தொழில் வழியிலான முன்னேற்றங்கள், உணவு தொழில் சார்ந்த நிலைகளில் மிகப்பெரிய வெற்றி வாய்ப்புகள், புதிய தொழில் யோகங்கள், உயர்கல்வி, பட்டப்படிப்பு, பட்டைய படிப்பு போன்றவற்றில் தேர்ச்சி, வருமான உயர்வு, அரசியல் பதவிகள், அரசுத்துறை சார்ந்த பணிகள், நிரந்தரமான வேலைவாய்ப்புகள், மனதில் உள்ள கவலைகள், துன்பங்கள், அழுத்தங்கள் நீங்கி தெளிவான சிந்தனை, தொலைநோக்கு பார்வை, பல தொழில் செய்யும் யோகம், சரியான முடிவுகளை மேற்கொண்டு வாழ்வில் தன்னிறைவான பொருளாதார  முன்னேற்றத்தை பெறுதல், ஆன்மிகம் மூலம் அபரிவிதமான வளர்ச்சி, உறவுகளின் ஓத்துழைப்பு, கூட்டு தொழில் வழியிலான மிகப்பெரிய வளர்ச்சி, வாழ்க்கை துணை நண்பர்கள் மூலம் அரியபல சாதனைகளை சாதிக்கும் யோகம், தனது தனித்திறமை கொண்டு வாழ்க்கையில் மிகப்பெரிய அதிகார பதவிகளை அலங்கரிக்கும் யோகம் என்றவகையில் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்குவர்.

 பூச நட்சத்திர அன்பர்கள் சுயமாக வாழ்வில் முன்னேற்றம் பெற வேண்டுமெனில் அவர்களுக்கு ஆபத்பாண்டவராக "ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரரும் குரு பகவனும்" அருளாசியை பரிபூர்ணமாக வழங்குவார்கள் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை, பொதுவாழ்வில் பொறுப்பு மிக்க பதவிகள், சுய தொழில் வழியிலான மிகப்பெரிய முன்னேற்றங்கள், அரசு துறை சார்ந்த ஆதங்கள், யாரையும் சார்ந்து வாழாமல் தனித்து இயங்கும் பேராற்றல், சுய ஜாதகத்தில் தடைபட்ட ( யோக பங்கம் ) சுபயோகங்களை முழுமையாக சுவீகரிக்கும் தன்மை, தொழில் சார்ந்த அமைப்புகளில் குறுகியகால வெற்றி வாய்ப்புகள், தனது தனித்திறனை வெளிஉலகிற்க்கு வெளிப்படுத்தி உலக புகழ் பெரும் யோகம், மனநிலையில் தெளிவு மற்றும் மாற்றங்கள், கணவன் மனைவி பிரிவு நிலையில் இருந்து மீட்டுஎடுக்கும் யோகம், புதிய சிந்தனை, புதிய வாய்ப்புகள், அறிவார்ந்த புத்திர பேரு, எதிர்காலத்தை மிக சிறப்பாக அமைத்துக்கொள்ளும் யோகம், குலதெய்வத்தின் அருளாசியின் மூலம் வாழ்வில் முன்னேற்றம் பெரும் யோகம் ஆகிவற்றிற்க்கு அடிப்படை வழிபாடாக இது அமையும்.

குறிப்பு :

கடகராசியில் "பூசம்" நட்சத்திரத்தை தனது ஜென்ம நட்ஷத்திரம் அல்லது லக்கினமாக பெற்ற அன்பர்கள், கல்வி மற்றும் உற்பத்தி துறையில் மிகப்பெரிய உச்சத்தை தொடும் யோகம் உண்டு, சேவை தொழில் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த அமைப்புகளில் நிச்சய வெற்றிபெறுவார்கள், திடீர் தனயோகம் அதிர்ஷ்ட வாய்ப்புகள், கமிஷன் தொழில், ஏற்றுமதி இறக்குமதி தொழில் வழியிலான லாபங்கள், நிர்வாக திறமை கொண்டு அரசு ஆதாயம் பெரும் வல்லமை, எதிர்பாராத செல்வாக்கு, பொது சேவையை செய்வதின் வழியில் வரும் புகழ்மிக்க பொறுப்புகள், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, தெய்வீகஅனுகூலம், தன்னிறைவான பொருளாதார முன்னேற்றம் என்ற வகையில் மிகுந்த சுபயோக பலாபலன்களை சுவீகரிக்க, மேற்சொன்ன இறை வழிபாடு இவர்களது வாழ்வில் ராஜயோகத்தை தன்னிறைவாக வாரி வழங்கும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை அன்பர்களே ! 

ஜோதிடன்வர்ஷன் 

9443355696

ஞாயிறு, 24 டிசம்பர், 2023

கடகராசி புனர்பூசம் நட்சத்திரம் - ராஜயோக வாழ்வை தரும் ரகசிய இறைவழிபாடு!

 

 கடகராசி "புனர்பூசம் நட்சத்திரம்" கல்வியில் மேன்மையையும், நிர்வாக திறனில் புதுமையையும் வெளிப்படுத்தும் தனித்திறன் வாய்ந்த நட்சத்திரம், கற்றுஉணர்வதிலும் கல்வியை போதிப்பதிலும் சிறப்பான நடைமுறையை கையாளும் வல்லவர்கள், தெய்வீக சக்தி இயற்கையாக அமைந்திருக்கும், பாதுகாப்பது பராமரிப்பது இரண்டும் இவர்களுக்கு "கைவந்தகலை" நினைத்த காரியங்களை சாதிக்கும் வல்லமை பெற்றவர்கள், தொலைநோக்கு பார்வையுடன் எந்த ஓர் விஷயத்தையும் மிக சிறப்பாக அணுகுவார்கள், பொருளாதார அறிவாற்றல் அதிகம் உள்ளவர்கள், பயணங்கள் மூலம் மிகப்பெரிய தனசேர்க்கையை சுவீகரிக்கும் யோகம் பெற்றவர்கள், எண்ணத்தின் வலிமை அதிக அளவில் வெற்றிகளை பெற்றுத்தரும், களங்கமற்ற மனநிலையை பெற்றவர்கள், குழந்தை வளர்ப்பில், குடும்ப பராமரிப்பில், வாழ்க்கை துணை தேவைகளை நிறைவு செய்வதில், தாய் தந்தையர் மற்றும் பெரியோர்களை மனநிறைவு செய்து கவனித்து கொள்வதில் சிறந்தவர்கள், இவர்களது  தமது வாழ்வில் சகலவிதமான சௌபாக்கியமும், உடல் நலம் மனோவலிமை, கல்வியில் மேன்மை, தொழில் விருத்தி, புத்திரபாக்கியம், பொருளாதார வளர்ச்சி என்றவகையில் பரிபூரணமான சுகபோகங்களையும், தன்னிறைவாக சுவீகரிக்க, மிக எளிமையான ரகசிய இறைவழிபாடு என்பது கீழ்கண்டவாறு அமையும். 

அலர்மேல் மங்கை "ஸ்ரீ பத்மாவதி தாயார்"  புனர்பூசம் நட்சத்திர அன்பர்களுக்கு பரிபூர்ண நன்மைகளையும் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும் திருக்கோவிலாகும், திருமலை திருப்பதி செல்லும்பொழுது அலர்மேல் மங்காபுரம் சென்று, வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று அதிகாலை சுக்கிர ஹோரையில் ( காலை 6:00 முதல் 7:00 வரை ) வெண் வர்ண பட்டு, தாமரை மலர் மாலை சாற்றி வழிபடுவோருக்கு 10நாட்களில் வெகு சிறப்பான சுபயோக பலாபலன்கள் நடைமுறைக்கு வரும் என்பது உறுதி, புனர்பூசம் நட்சத்திர அதிபதி தேவர்களின் தாயான "அதிதி" என்பதால் "ஸ்ரீ பத்மாவதி தாயார்" கடகராசியில் புனர்பூச நட்சத்திரத்தில் உதித்த அன்பர்களின் வாழ்வில் வியக்கத்தக்க சுபயோகங்களை வாரிவழங்குவார், தாயாரின் தரிசனமும் வழிபாடும் புனர்பூசம் நட்சத்திர அன்பர்களுக்கு நிலையான சௌபாக்கியங்களை நல்கும், சிறந்த அறிவுத்திறனும், பொருளாதார முன்னேற்றமும், இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சியும், திருமண வாழ்வில் கணவன் மனைவி ஒற்றுமையும், குழந்தை பாக்கியமும், புகழ்மிக்க பொறுப்புகளை அலங்கரிக்கும் யோகமும் உண்டாகும். 

 அரசியல் ரீதியான நிர்வாகம், அரசு பதவிகள், அரசு சம்பந்தப்பட்ட தொழில்களில் தங்களுடைய பங்களிப்பை வெற்றிகரமாக வழங்கும் வலிமை பெற்றவர்கள், நிர்வாகத்தில் தனது தனித்துவமான செயல்பாடுகள் மூலம் வியக்கத்தக்க வெற்றிகளை பெறுபவர்கள், கல்வி நிலையங்கள், கல்லூரிகள், விளையாட்டு துறையில் மாணவர்களின் சிறப்பு திறன் உணர்ந்து அவர்களை சரியான பாதையில் வழிநடத்தும் வல்லமை பெற்றவர்கள், உணவு பொருள் சம்பந்தப்பட்ட ஞானமும், உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட முழுமையான புரிதலும் கொண்டவர்கள், ஒருவரை உடல் ரீதியாகவும் மனோ ரீதியாகவும் பண்பட்டவர்களாக மாற்றும் வல்லமை பெற்றவர்கள். அன்பு, பாசம், கருணை மனம்  கொண்டு அனைவரையும் அனுசரித்து செல்வதில் இவர்களுக்கு நிகர் இவர்களே என்றால் அது மிகையாகாது, எந்த ஒரு சூழ்நிலையிலும் தனது சுயகட்டுப்பாட்டையும், கடமை கண்ணியத்தையும் விட்டுக்கொடுக்காமல் மற்றவர்களுக்கு முன் உதாரணமாக வாழும் யோகம் பெற்றவர்கள் கடகராசி புனர்பூச நட்ச்சத்திர அன்பர்கள், தெய்வீக அனுக்கிரகமும் பல புண்ணிய திருத்தலங்களுக்கு மிக எளிதாக சென்றுவரும் யோகமும், ஆன்மீக பெரியோர்களின் பரிபூரண நல்லாசிகளை மிக எளிதாக சுவீகரிக்கும் யோகமும் இவர்களுக்கு இறைஅருள் வழங்கிய நன்கொடையாகும்.

 குறிப்பு :

கடகராசியில் "புனர்பூசம்" நட்சத்திரத்தை தனது ஜென்ம நட்ஷத்திரம் அல்லது லக்கினமாக பெற்ற அன்பர்கள்,நிர்வாக துறையில் மிகப்பெரிய உச்சத்தை தொடும் யோகம் உண்டு, கலை மற்றும் கல்வியில் நிச்சய வெற்றிபெறுவார்கள், திடீர் தனயோகம் அதிர்ஷ்ட வாய்ப்புகள், கமிஷன் தொழில், ஏற்றுமதி இறக்குமதி தொழில் வழியிலான லாபங்கள், நிர்வாக திறமை கொண்டு அரசு ஆதாயம் பெரும் வல்லமை, எதிர்பாராத செல்வாக்கு, பொது சேவையை செய்வதின் வழியில் வரும் புகழ்மிக்க பொறுப்புகள், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, தெய்வீகஅனுகூலம், தன்னிறைவான பொருளாதார முன்னேற்றம் என்ற வகையில் மிகுந்த சுபயோக பலாபலன்களை சுவீகரிக்க, மேற்சொன்ன இறை வழிபாடு இவர்களது வாழ்வில் ராஜயோகத்தை தன்னிறைவாக வாரி வழங்கும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை அன்பர்களே ! 

ஜோதிடன்வர்ஷன் 

9443355696

சனி, 14 ஜூலை, 2012

சகல யோகம் தரும் சந்திரன் !



 

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு இறை நிலை சந்திர பகவானை கடக ராசி 4 ம் வீட்டுக்கு அதிபதியாக அமர்த்தி  தாய் , மண் , மனை , வாகனம் , சுகம் போன்ற அமைப்புகளில் இருந்து நன்மைகளை செய்ய பணித்திருக்கிறார், கடக சர ராசி நீர் தத்துவ அமைப்பிற்கு சந்திரன் தரும் யோக பலன்களை பற்றி சற்றே பார்ப்போம் , " எண்ணம் போல் வாழ்க்கை " என்று நமது கிராமங்களில் ஒரு செலவாடை உண்டு , ஒருவர் நன்மை , தீமை பலன்களை அனுபவிக்கும் பொழுது , வயதான பெரியோர்கள் உதிர்க்கும் வார்த்தை இதுவாகும் , இதற்க்கு 100 சதவிகிதம் பொருத்தமானவர் சத்திர பகவானே ஒருவரது சுய ஜாதக அமைப்பில் இவர் நல்ல நிலையில் இருக்கும் பொழுதும் , கடக ராசி வலுப்பெறும் பொழுதும் ஜாதகருக்கு குறுகிய காலத்தில் சகல யோகத்தையும் வாரி வழங்கிவிடும் தன்மை கொண்டவர் இந்த சந்திர பகவான் , இவரின் அனுமதின்றி ஒருவருக்கு எவ்வித எண்ணங்களும் பலிதம் பெறுவதில்லை .

ஒருவருக்கு தாய் வழியிலும் , குடியிருக்கும் வீடு அமைப்பிலும் , சொகுசான வாகன யோகமும் , சுகமான வாழ்க்கை அமைய , சுய ஜாதகத்தில் சந்திரன் நல்ல நிலையிலும் , கடகம் நல்ல பலமும் பெறவேண்டும் , ஒருவருக்கு எந்த லக்கினம் என்றாலும் சரி கடகம் நல்ல வீடுகளுடன் தொடர்பு பெற்றால் அந்த ஜாதகருக்கு மேற்கல்வி , தாய் வழி உதவி , சொகுசான வீடு வாகனம் , போன்ற யோக அமைப்புகள் நிச்சயம்  கிடைக்கும் , மேலும் ஜாதகர் நல்ல குண நலன்களுடன் , பெருந்தன்மையான அமைப்பை இயற்கையாகவே பெற்று இருப்பார் , சொத்து சுகம் நிறைய அமைந்து இருக்கும் , மக்கள் செல்வாக்கு , கலை துறையில் இறந்து விளங்கும் யோகம் , மன நிம்மதி , மன உறுதியான செயல் பாடுகள் , தன்னம்பிக்கை , வாழ்க்கையில் மற்றவர்களுக்கு முன் உதரணாமாக வாழும் யோகம் , மனதளவில் நல்ல எண்ணங்கள் கொண்டவராகவும் , அனைவருக்கும் நன்மை செய்யும் தன்மை உள்ளவராகவும் ஜாதகர் காணப்படுவார் .

வளர் பிறை சந்திரனாக அமரும் பொழுது ஜாதகருக்கு வழங்கும் யோகம் :

ஒருவருக்கு ரிஷபம் , கடகம் , துலாம் , தனுசு , மீன ராசியில் வளர் பிறை  சந்திரன் நல்ல நிலையில் , அமரும் பொழுது ஜாதகருக்கு , நல்ல வசதி மிக்க வீடு , வண்டி வாகன யோகம் , பொருளாதார முன்னேற்றம் , சமுக வாழ்க்கையில் எதிர்பாராத முன்னேற்றம் , மக்கள் செல்வாக்கு , ஜாதகருக்கு திடீர் அதிர்ஷ்டம் , மன வாழ்க்கையில் நிம்மதி , சந்தோசம் , யோகம் , உறவினர் ஆதரவு, சொந்த பந்தங்கள் ஜாதகருக்கு ஓடிவந்து உதவி செய்யும் யோகம் , நல்ல குழந்தைகள் , அவர்களால் அதிர்ஷ்டம் என மிகவும் சிறப்பான யோக பலன்களையே வாரி வழங்குகிறார் , இதனால் ஜாதகரின் வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமைந்து விடுகிறது .மேலும் தாய் மூலம் வரும் யோகம் , தாய் மூலம் நல்ல வளர்ப்பு, அவர்களின் அன்பும் ஆதரவு எல்லா காலங்களிலும் கிடைக்க பெரும் யோகம் என ஜாதகருக்கு அடிப்படை வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமையும் .

தேய்பிறை சந்திரனாக அமரும் பொழுது ஜாதகருக்கு வழங்கும் யோகம் :

ஒருவருக்கு மேஷம் , மிதுனம் , கடகம் , சிம்மம் ,கன்னி ,விருச்சகம் ராசிகளில் தேய்பிறை சந்திரனாக
நல்ல நிலையில் , அமரும் பொழுது ஜாதகருக்கு வியாபார துறையில் சிறந்து விளங்கும் யோகமும் , கற்ற கல்வியினால் மேன்மை பெரும் அமைப்பும் , அரசு துறையில் பணியாற்றும் யோகமும் , மக்கள் செல்வாக்கால் அரசியல் பதவிகளில் முன்னேற்றம் பெரும் யோகமும் , வெளிநாடுகளில்  இருந்து அதிக வருமானமும் , யோக வாழ்க்கையையும் , தொழில் முறை யோகமும் ஜாதகருக்கு நிறை கிடைக்கின்றது, மேலும் விவசாயம் , பண்ணை தொழில் , நான்கு கால் ஜீவன் வளர்ப்பு , குடிநீர் விற்பனை செய்யும் தொழில்களில் சிறந்து விளங்கும் நிலையை ஜாதகருக்கு மிக விரைவாக தந்து விடுகிறார் . ஒருவருடைய ஜாதக அமைப்பில் லக்கினம் எதுவென்றாலும் , கடகம் எந்த எந்த பாவகமாக வந்தாலும் நல்ல நிலையில் இருக்கும் பொழுது ஜாதகருக்கு மேற்கண்ட நல்ல பலன்கள் நிச்சயம் கிடைக்க பெறுகின்றது ,

சந்திர பகவான் ஒருவரின் மனதையும் , எண்ண ஆற்றலையும் , யோகமான வாழ்க்கை நிலையையும் , நிர்ணயம் செய்கிறார் , கடக ராசி சர ராசியாக வருவதால் இந்த அமைப்பு நல்ல நிலையில் அமர்ந்தால் மிக குறுகிய காலத்தில் சகல யோகங்களையும் வாரி வழங்குகிறார் , இதுவே மாறி அமைந்தால் இதற்க்கு நேர்மாறாக பலனை வாரி வழங்கி விடுகிறார் , அதிகம் குடிப்பழக்கத்திற்கு அடிமை ஆகும் சூழ்நிலைக்கு ஆட்படுபவர்களுக்கு இந்த சந்திர பகவானும் , கடக ராசியும் நல்ல நிலையில் இருப்பதில்லை , இதன் காரணமாக ஜாதகரே தனது உடல் நிலையை கெடுத்துக்கொண்டு வாழ்க்கையையும் கெடுத்து கொள்கிறார் .


சந்திரனால் ஏதாவது ஒரு வகையில் பாதிக்க படும் ஜாதக அமைப்பை பெற்றவர்கள் மன போராட்டம் , மன நிம்மதி இழப்பு , தன்னம்பிக்கை அற்ற நிலை , தனிமையில் மன வேதனை படும்  நிலை , செல்வ நிலையில் விருத்தி அற்றவர்கள் , குடியிருக்க நல்ல வீடு அமையாதவர்கள் , சிறப்பான வண்டி வாகன யோகம் இல்லாத நிலையில் இருப்போர் , வண்டிவாகன தொழில்களில் பல சிரமங்களை அனுபவித்து கொண்டு இருப்போர்கள் , மணவாழ்க்கையில் துன்பத்தை அனுபவித்து கொண்டு இருப்பவர்கள் , என அனைவரும் வளர் பிறையில் வரும் , திங்கள் அன்று திருப்பதி சென்று ஸ்ரீ வாரி தீர்த்தத்தில் நீராடி , வெங்கடாசலபதியை தரிசனம் செய்து வருவோர்க்கு நிச்சயம் சந்திரனால் முழு யோகம் கிடைக்க பெறுவார்கள் .

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696