இயல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இயல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 3 நவம்பர், 2014

" மறைந்த புதன் நிறைந்த கலை " என்பதற்கு ஏற்ப சுய ஜாதகத்தில் புதன் பலன் தருமா ?



 கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 6ம் பாவகமாக வருவது கன்னி ராசி இதன் அதிபதி புதன், இங்கு புதன் ஆட்சி மற்றும் உச்ச நிலையை பெறுகிறார், மேலும் உபய மண் தத்துவ அமைப்பை கன்னி ராசி பெறுகிறது, பொதுவாக ஒருவரது சுய ஜாதகத்தில் 6ம் பாவகத்தை மறைவு ஸ்தானமாக பாவிப்பார்கள், மேலும் 6ம் பாவகம் சத்ரு ஸ்தானமாக வர்ணிப்பதும் உண்டு, சுய ஜாதகத்தில் ஒருவரின் 6ம் பாவகம் வலிமை பெரும் பொழுது ஜாதகர் 6ம் பாவக வழியில் இருந்து அபரிவிதமான நோய் எதிர்ப்பு சக்தியையும், பங்கு பெரும் போட்டி பந்தையங்களில் எதிர்பாராத வெற்றியையும், எதிரிகளின் சதியை முறியடிக்கும் அபரிவிதமான ஆற்றலையும், வழக்குகளில் பெரும் வெற்றியையும் குறிக்கும், மேலும் ஜாதகர் அரியகலைகளில் அபரிவிதமான அறிவு திறனையும், செயல் திறனையும் வாரி வழங்கும், இந்த விஷயம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 6ம் பாவகமாக கன்னி ராசி வருவதாலும், இங்கே உபய மண் தத்துவம் சிறப்பாக செயல்பட்டு, புதன் ஆட்சி உச்சம் பெறுவதாலும் " மறைந்த புதன் நிறைந்த கலை " என்ற வாக்கு பொருத்தமானதாகவே இருக்கும் என்று ஜோதிடதீபம் கருதுகிறது.


ஒருவரின் சுய ஜாதகத்தில் புதன் 6ம் பாவகத்தில் அமர்வது அந்தஜாதகருக்கு பலவகையான தனி திறமைகளை வாரி வழங்கி விடுகிறார் ( 6ம் பாவகம் நல்ல நிலையில் வலிமை பெற்று இருந்தால் மட்டுமே இது சாத்தியம் ) மேலும் ஜாதகருடன் தொடர்பில் இருக்கும் அவரது நண்பர்கள்,உறவுகள், எதிர்பாலினரின் தன்மையை தெளிவாக தெரிவிப்பது, ஜாதகரின் 6ம் பாவகமே, மேலும் ஜாதகரின் சூட்சம அறிவாற்றலை மேம்படுத்தும் தன்மை இந்த ஆறாம் பாவகத்திர்க்கே உண்டு என்பதால், நுண்ணறிவுக்கு அதிபதியான புதன் இங்கு வலிமை பெரும் பொழுது ஜாதகரின் சிந்தனை,அறிவாற்றல்,செயல்பாடுகள் அனைத்தும் மற்றவர்கள் மெச்சும் வண்ணம் மிகவும் சிறப்பாக அமையும் என்பதை யாராலும் மறுக்க இயலாது, சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற 6ம் பாவகத்தில் அமரும் புதன் ஜாதகருக்கு தனது வழியில் இருந்து எவ்வித யோகங்களை வழங்குகிறார், என்பதை இனி சிந்திப்போம்.

6ம் பாவகம் சர ராசியாக இருப்பின் ஜாதகரின் செயல்பாடுகள் அனைத்தும் துரித கதியில் மிக சிறப்பாக செயல்படும், 6ம் பாவகம் ஸ்திர ராசியாக இருப்பின் ஜாதகரின் செயல்பாடுகள் அனைத்தும் மிக நிதானமாக ஸ்திர தன்மையுடன் நீண்ட நாட்கள் பலன் தரும் அமைப்பில் செயல்படும், 6ம் பாவகம் உபய ராசியாக இருப்பின் ஜாதகரின் செயல்பாடுகள் அனைத்தும் தனக்கும் மற்றவருக்கும் குறுகிய காலத்திற்கு மட்டும் பலன்தரும் அமைப்பை தரும், இந்த விஷயம் சுய ஜாதகத்தில் அவரவர் லக்கினத்திற்கு ஏற்ப சில மாறுபட்ட பலன்களை தந்த போதிலும், அதிக சதவிகிதம் பொருத்தமாகவே இருக்கின்றது.

மேலும் 6ம் பாவகம் ஜாதகருக்கு நெருப்பு தத்துவமாக இருப்பின் ஜாதகருக்கு அரிய கலைகளில், போர் முறைகள் சார்ந்த விசயங்களில் ஞானம் உண்டாகும், எதிரிகளை தாக்கும் சூட்சம கலைகளில் சிறந்து விளங்குவார்கள், குறிப்பாக வில் அம்பு எய்தல், துப்பாக்கி சுடுதல், ரகசிய போர் முறைகளை அறிந்து வைத்திருக்கும் ஆற்றல், வீரம் சார்ந்த ரகசிய கலைகளில் அபரிவிதமான தேர்சியை தரும், தற்காப்பு கலைகளில் சிறந்து விளங்கும்  வல்லமை ஜாதகருக்கு மிக எளிதாக கைவர பெறுவார், நெருப்பு தத்துவத்துடன் 6ம் பாவகத்தில் வலிமை பெரும் புதன் ஜாதகருக்கு மேற்கண்ட யோக பலன்களை வாரி வழங்கி விடுவார்.

6ம் பாவகம் மண் தத்துவமாக இருப்பின் ஜாதகர் மருத்துவ கலையில் சிறந்து விளங்குவார் , ஒருவரை பார்த்த உடனே அவரின் உடல் நிலையை மிக சிறப்பாக புரிந்து கொள்ளும் ஆற்றல் இருக்கும், மருத்துவத்தில் குறிப்பாக சித்த மருத்துவத்தில் சிறந்து விளங்கும் தன்மையை தரும், பல மூலிகை ரகசியங்களை அறிந்திருக்கும் பலரது ஜாதகங்களில் இந்த அமைப்பு இருப்பதை பார்க்க முடிகிறது, மேலும் சித்த மருத்துவ முறையில் சிறந்த வைத்திய  ரகசியங்களை அறிந்துகொள்ளும் யோகத்தையும் இங்கு அமரும் புதன் வாரி வழங்கி விடுகிறார்.

6ம் பாவகம் காற்று தத்துவமாக இருப்பின் ஜாதகருக்கு கணிதம்,ஜோதிடம்,எதிர்காலத்தை  துல்லியாமாக கணிதம் செய்யும் அனைத்து ஜோதிட கலைகளிலும் அபரிவிதமான ஞானத்தையும், தெளிவான கலை நுணுக்கத்தையும் வழங்குகிறது, மேலும் எண்கணிதம், ஜோதிடம், வாஸ்து போன்ற  கலைகளில் சிறந்து விளங்கும் யோகத்தை தருகிறது, மேலும் இயல் இசை நாடகம் மற்றும் சிற்ப கலையில் சிறந்து விளங்கும் நுண் அறிவாற்றல் ஜாதகருக்கு இயற்கையாகவே கிடைத்து விடுகிறது, ஜாதகரின் அறிவாற்றல் பலரது வாழ்க்கையில் யோகங்களை வாரி வழங்கும் தன்மையை, காற்று தத்துவத்துடன் 6ம் பாவகத்தில் வலிமை பெரும் புதன் ஜாதகருக்கு வாரி வழங்கி விடுவார்.

6ம் பாவகம் நீர் தத்துவமாக இருப்பின் ஜாதகர் சிறந்த மனோதத்துவ நிபுனாராக விளங்குவார், ஜாதகரின் மனம் இந்த பிரபஞ்சத்தில் உள்ள ரகசியங்களை அறியும் தன்மையை சிறு வயதிலேயே பெற்று விடும், குறிப்பாக நல்ல மனோதத்துவ நிபுணர் தனது மனதை ஒருநிலை படுத்தி இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளின் உள்ளுணர்வுகளையும் புரிந்துகொள்ளும் வாய்ப்பை பெறுவார், சரித்திரத்தில் சில பாத்திரங்களை மிருக பாஷை அறிந்தவராக சிததரித்து இருப்பார்கள், அதற்க்கு பொருத்தமானவர்கள் என்று இவர்களை சொல்லலாம், டெலிபதி, கிரகங்களின் தன்மையை உள்ளுணர்வாக புரிந்து கொள்ளும் மன ஆற்றல் இவர்களுக்கு இயற்கையாகவே அமைந்திருக்கும், மேலும் மண்ணில் புதையுண்ட ரகசியங்களை அறிந்துகொள்ளும் தன்மையையும், பின்னல் நடக்க இருப்பதை துல்லியமாக கணித்து கூறும் வல்லமையை, நீர் தத்துவத்துடன் 6ம் பாவகத்தில் வலிமை பெரும் புதன் ஜாதகருக்கு வாரி வழங்கி விடுவார்.

மேலும் சுய ஜாதகத்தில் 6ம் பாவகத்தில் சாய கிரகமான ராகு அல்லது கேதுவோ ஆளுமை செய்து 6ம் பாவகத்தை வலிமை பெரும் தன்மையில் இருக்குமாயின், புதனின் அபரிவிதமான சக்தியை சாயா கிரகங்கள் பெற்று பன்மடங்கு அதிகரித்து தரும் என்பது குறிப்பிட தக்கது, ராகு கேதுவுடன் சேர்ந்த புதனின் தன்மை பன்மடங்காக அதிகரிக்கும், குறிப்பக கேதுவுடன் சேரும் பொழுது அபரிவிதமான அறிவாற்றலையும், ராகுவுடன் சேரும்பொழுது அளவில்லா உடல் வலிமையையும் ஜாதகருக்கு வாரி வழங்கி விடுகிறது  என்பது கவனிக்க தக்க ஒரு சிறப்பு விஷயமாக ஜோதிடதீபம் கருதுகிறது.

எனவே " மறைந்த புதன் நிறைந்த கலை " என்ற வாக்கு நிச்சயம் உண்மையானதே, இதை வேறுஒரு பதிவில் உதாரண ஜாதகம் கொண்டு உறுதி செய்வோம் அன்பர்களே.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வெள்ளி, 16 நவம்பர், 2012

இயல் இசை நாடகம் மற்றும் கலை துறையில் சிறந்து விளங்கும் ஜாதக அமைப்பு !




ஒருவருடை ஜாதகத்தில் லக்கினம் சர ராசியில் அமைந்து , லக்கினத்திற்கு ஐந்தாம் பாவகமான பூர்வ புண்ணியம் ஸ்தானம் ஜீவன ஸ்தானதுடன் சம்பந்தம் பெற்றால் , ஜாதகர் கலை துறையில் சிறந்து விளங்கும் யோகம் உண்டாகும் அல்லது ஜீவன ஸ்தானம் பூர்வ புண்ணிய ஸ்தானம் எனும் ஐந்தாம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றாலும் மேற்கண்ட அமைப்பில் கலை  சிறந்து விளங்கும் யோகம் உண்டாகும்.

இந்த முறையில் பூர்வ புண்ணியம் ஜீவன ஸ்தானதுடன் சம்பந்தம் பெற்று ஜீவன ஸ்தானம் மேஷ ராசியாக இருப்பின் , ஜாதகர் சிறந்த இயக்குனாராக இருக்க வாய்ப்பு அதிகம் , மேலும் தனது படைப்பாற்றல் மூலம் மற்றவர்களிடம் இருந்து தனித்து தெரியும் தன்மை  உண்டாகும் , சிறந்த கதை அம்சம் கொண்ட திரை படத்தையோ , நாடகத்தையோ ஜாதகர் தனக்கே உரிய பாணியில் எடுக்கும் ஆற்றல் அதிகமாக இருக்கும் , அந்த படைப்புகள் அனைத்தும் மக்களிடையே மிகவும் சிறப்பாக பேசப்படும் , மேலும் மக்கள் மனதில் தெளிவான சிந்தனையையும் , விழிப்புணர்வையும் நிச்சயம் ஏற்ப்படுத்தும் , சிறந்த முறையில் கட்சி அமைப்புகளுக்காக இடப்படும் செட்டுகளை சிறப்பாக வடிவமைக்கும் திறமையை ஜாதகர் பெற்றிருப்பார் , சண்டை கட்சிகளை வடிவமைப்பதில் சிறந்து விளங்கும் தன்மை பெற்றவர்களின்,  ஜாதக அமைப்பிலும் மேற்கண்ட பூர்வ புண்ணியம் ஜீவன ஸ்தானதுடன் சம்பந்தம் பெற்று இருக்கும் , இதன் மூலம் ஜாதகருக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் வந்து குவியும் , இயக்கம் சம்பந்த பட்ட துறையில் ஜாதகர் சிறந்து விளங்குவதை மேற்கண்ட பாவக தொடர்பு இருப்பின் நிச்சயம் அந்த ஜாதகர் சிறந்த இயக்குனராக வருவார் என்பதில் சந்தேகம் இல்லை .

இதுவே பூர்வ புண்ணியம் ஜீவன ஸ்தானதுடன் சம்பந்தம் பெற்று ஜீவன ஸ்தானம் கடக  ராசியாக இருப்பின் , ஜாதகருக்கு இயற்கையாகவே இசை ஞானம் அமைந்திருக்கும் , இசை துறையில் சாதிக்கும் அன்பர்களின் ஜாதக அமைப்பில் நிச்சயம் இந்த நிலை இருக்கும் , குறிப்பாக வாத்தியங்களில் சிறந்து விளங்கும் தன்மை உண்டாகும் , இசை கருவிகளை சிறப்பாக கையாளும் தன்மை  ஜாதகருக்கு இயற்கையாக அமையபெரும் , நல்ல கற்பனை வளம் ஜாதகருக்கு சிறப்பாக அமைந்து விடும் , கவி புனையும் திறமை , இசை கோர்க்கும் தனி திறமை , தனது இனிமையான குரலின் தன்மையால் மக்களை கட்டி போடும் தன்மை , சங்கீதத்தில் சிறந்து விளங்கும் ஆற்றல் , தனது கற்பனையால் மக்கள் விரும்பும் படைப்புகளை சிறப்பாக வடிவமைக்கும் ஆற்றல் , நகை சுவை திறமையால் மக்களை மகிழ்ச்சி அடைய செய்யும் ஆற்றல் , கலை நயம் மிக்க படைப்பாற்றல் மூலம் மக்களை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும்  ஆற்றல் என திரை இசை துறையில் உலக புகழ் பெரும் அளவிற்கு  ஜாதகரை மிக பெரிய இடத்திற்கு எடுத்து செல்லும் அமைப்பாக இருக்கும் மேற்கண்ட பாவக தொடர்பு  இருந்தால் .  

இதுவே பூர்வ புண்ணியம் ஜீவன ஸ்தானதுடன் சம்பந்தம் பெற்று ஜீவன ஸ்தானம் துலாம் ராசியாக இருப்பின் , ஜாதகர் தனது நடிப்பு ஆற்றலினால் உலக மக்கள் அனைவரையும்  கவரும் தன்மை ஏற்ப்படும் , நடிப்பு மற்றும் நடன திறமையினால் மக்களை தன்பால் ஈர்க்கும் வல்லமை பெற்றவராக ஜாதகர் இருப்பார் , மேலும் நடிப்பில் பல பரிமாணங்களை காட்டும் திறமை இயற்கையாக  ஜாதகரின் பிறவியிலேயே அமைத்து விடும் , கலை துறைக்காக தன்னை அர்ப்பணிக்கும் ஆற்றல் கொண்டவர் , ஜாதகர் செய்யும் ஒவ்வொரு புதிய விஷயங்களும் பொது மக்களால்  விரும்பப்படும் , ஜாதகரின் நடிப்பு திறமைக்கு பல விருதுகளை பெரும் யோகம் உண்டாகும் , இதன் மூலம் ஜாதகருக்கு அபரிவிதமான செல்வாக்கும் , முன்னேற்றமும் உண்டாகும்  , காலங்கள் மறைந்தாலும் , ஜாதகரின் புகழ் என்றும் மறையாமல் நிலைத்து நிற்கும் யோகம் உண்டாகும் , மேலும் இது துலாம் ராசியாக இருப்பதால் ஜாதாகர் எப்பொழுதும் புதுமை  விரும்பியாக காணப்படுவார் , புதிய விஷயங்களை மக்களுக்கு எடுத்து செல்வதில் ஜாதகருக்கு எப்பொழுதும் அதிக ஆர்வம் மேலோங்கி நிற்கும் .

இதுவே பூர்வ புண்ணியம் ஜீவன ஸ்தானதுடன் சம்பந்தம் பெற்று ஜீவன ஸ்தானம் மகர  ராசியாக இருப்பின் , ஜாதகர் திரை துறை சார்ந்த தொழில்கள் அனைத்தும் செய்யும் யோகம் பெற்றவர்  , பொழுது போக்கு விஷயங்களை வைத்து பணம் ஈட்டுவதில் வல்லவராக காணப்படுவார் , கலைத்துறை சம்பந்தபட்ட அனைத்து விஷயங்களையும் நிர்வாகிக்கும் ஆற்றல் ஜாதகர் பெற்றிருப்பார்  , இருப்பினும் நேர்மை மாறாமல் நடந்து கொள்ளும் சுபாவம் ஜாதகருக்கு இயற்கையாக அமைத்திருக்கும் , கலை துறையில் அதிக முதலீடுகளை செய்து அளவில்லா  வருமானத்தை குறுகிய காலங்களில் பெரும் யோகம் ஜாதகருக்கு நிச்சயம் சுய ஜாதகத்தில் அமைந்திருக்கும் , வெளிநாடு , மற்றும் வெளியிடங்களில் சென்று திரை காவியங்களை  படைக்கும் ஆற்றல் ஜாதகருக்கு உண்டு , மேலும் வியாபார யுக்தி ஜாதகருக்கு மற்றவரிடம் இருந்து சற்றே வித்தியாசமாக காணப்படும் , தோல்வி நிலையில் இருக்கும் திரை படங்களை  கூட ஜாதகர் தனது வியாபார யுக்தியினால் மிகப்பெரிய வெற்றியை பெறும் அளவிற்கு செய்யும் ஆற்றல் பெற்றவராக கானப்படுவார் மேலும் இவற்றை நம்பி வருபவர்கள்  அனைவரும் நன்மையே அடைவார்கள் என்பது உறுதி .

மேற்கண்ட பலன்கள் எல்லாம் சுய ஜாதகத்தில் ஜாதகருக்கு சரியான வயதில் பலனை தர வேண்டும் அப்பொழுதுதான் , மேற்கண்ட பலன்கள் நடை முறைக்கு வரும் , ஒரு ஜாதகருக்கு மேற்கண்ட யோக அமைப்புகள்  இருந்தாலும் பலன்கள் திசை புத்தி அந்தரம் சூட்சமத்தில் நடை முறைக்கு வரவில்லை என்றால் நிச்சயம் எவ்வித பலன்களும் நடை பெறாது , எனவே நடப்பு திசை  மேற்கண்ட வீடுகளின் பலனை நடத்தினால் , சம்பந்த பட்ட ஜாதகர் திரை துறையில் சிறந்து விளங்கும் யோகம் நிச்சயம் உண்டு .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443306969