திசாசந்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திசாசந்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 19 ஜூன், 2024

கூட்டுதிசை - திசாசந்தி ராகுதிசை இருவருக்கும் ஏக காலத்தில் நடைபெறுவது திருமண வாழ்க்கையை பாதிக்குமா?

 

 கூட்டுதிசை அல்லது திசாசந்தி (மணமகன் மணமகள்) இருவருக்கும் ஏக காலத்தில் நடைபெறுவது திருமண பொருத்தம் அற்ற நிலையையோ அல்லது இல்லற வாழ்க்கையில் பாதிப்பையோ தருமா ?

 கூட்டுதிசையோ அல்லது திசாசந்தியோ மணமகன் மணமகள் ஜாதகத்தில் இருவருக்கும் ஏக காலத்தில் நடைபெறும் பொழுது இருவருக்கும் நடைபெரும் தசா அல்லது எதிர்வரும் தசைகள் சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் திருமண வாழ்க்கை அல்லது இல்லற வாழ்க்கை எவ்விதத்திலும் பாதிப்பை தாராது, மாறாக வலிமை அற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மிகுந்த பாதிப்பை தரும், தசாசந்தி அல்லது ஏகதசை நடைபெறாத சூழ்நிலையிலும் வரன் வதுவுக்கு நடைபெறும் தசா புத்திகள் சுய ஜாதகத்தில் வலிமை அற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் பொழுது திருமண வாழ்க்கையில் இன்னல்களையும், இல்லற வாழ்க்கையில் கடுமையான பாதிப்பையும் தரக்கூடும் என்பது உண்மை நிலை, எனவே தம்பதியர் இருவரின் சுய ஜாதகத்திலும் நாம் கவனிக்க வேண்டியது சுய ஜாதக வலிமையோ அன்றி, ஏகதிசை, கூட்டுதிசை, திசாசந்தி, செவ்வாய் தோஷம், ராகுகேது தோஷம், களத்திரதோஷம், மாங்கல்யதோஷம் போன்ற சுய ஜாதக வலிமைக்கு புறம்பான விஷயங்கள் அல்ல என்பதை அன்பர்கள் உணருவது அவசியம், இதை ஓர் உதாரண ஜாதகங்கள் கொண்டு உண்மையையும் தெளிவையும் பெறுவோம் அன்பர்களே !

மணமகள் ஜாதகம் : 
 

லக்கினம் : ரிஷபம் 
ராசி : மேஷம் 
நட்ஷத்திரம் : பரணி 4ம் பாதம் 

 ஜாதகிக்கு சுய ஜாதகத்தில் இல்லற வாழ்க்கையை குறிக்கும் 2,5,7,8,12ம் வீடுகள் மிக வலிமையாக இருப்பதுடன் தற்போழுது நடைபெறும் செவ்வாய் தசை சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற 5ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவக பலனை ஏற்று நடத்துவது சிறப்பான அமைப்பாகும், ஜாதகிக்கு செவ்வாய் தசை தான் கற்ற கல்வி வழியில் இருந்தும், குலதெய்வ ஆசிகள் வழியில் இருந்து  மிகப்பெரிய அளவிலான யோக வாழ்வை நல்கும் என்பது கவனிக்க தக்கது மேலும் எதிர்வரும் ராகு தசையும் வலிமை பெற்ற 5ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவக பலனை ஏற்று நடத்துவது, ஜாதகிக்கு தொடர்ந்து சுபயோகங்களை 5,11ம் பாவக வழியில் வாரி வழங்கும், அதன் பின் வரும் குருமகா தசையும் 2,6,8ம் வீடுகள் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவக வழியில் சுபயோகங்களை வாரி வழங்குவது இல்லற வாழ்க்கையில் தன்னிறைவான யோக வாழ்வையே நல்கும் அமைப்பாகும், அடுத்து மணமகன் ஜாதக நிலையை கருத்தில் கொள்வோம்.

மணமகன் ஜாதகம் :


லக்கினம் : மகரம் 
ராசி : தனுசு 
நட்ஷத்திரம் : உத்ராடம் 1ம் பாதம் 

ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் இல்லற வாழ்க்கையை குறிக்கும் 2,5,7,8,12ம் வீடுகள் மிக வலிமையாக இருப்பதுடன், ஜென்ம லக்கினம் முதல் பனிரெண்டு பாவகமும் மிக மிக வலிமையாக இருப்பது கவனிக்க தக்க விஷயம், இது ஜாதகருக்கான சுபயோக வாழ்வை உறுதி படுத்தும் அம்சமாகும், தற்போழுது ஜாதகருக்கு நடைபெறும் ராகு தசை 1ம் வீடு ஜென்ம லக்கினமான 1ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சுபயோக வாழ்வை நல்குவது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும், ஜாதகர் வாழ்வில் சுயமாக வெற்றி பெறுபவராகவும், ஆரோக்க்கியம் கல்வி தொழில் போன்ற அமைப்புகளில் சுய ஆளுமைத்திறன் நிறைந்தவராகவும் காணப்படுவார், மேலும் எதிர்வரும் குரு மகா தசையும் 1ம் வீடு ஜென்ம லக்கினமான 1ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக வாழ்வை தொடர்ந்து நல்குவதுடன், அதன் பின் வரும் சனி மகாதசை 1ம் வீடு ஜென்ம லக்கினமான 1ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று நன்மைகளையும். 2,8ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவக பலனையும் ஏற்று நடத்துவது மிகுந்த சுபயோகங்களை இல்லற வாழ்க்கையில் நல்கும், எனவே மணமகள் மற்றும் மணமகன் இருவரது சுய ஜாதகமும் மிக மிக  வலிமையுடன் இருப்பதுடன், நடைபெறும் எதிர்வரும் தசை புத்திகள் சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவது வெற்றிகரமான இல்லற வாழ்வை வழங்கும் யோக அமைப்பாகும் என்பதை தெளிவாக பதிவு செய்கிறோம்.

இப்படி பட்ட யோக ஜாதக அமைப்பை தசாசந்தி கூட்டுதசை ஏகதசை நடப்பு என்று உண்மைக்கு புறம்பான விஷயங்களை பதிவு செய்வது சுயஜாதக வலிமை நிலையை கருத்தில் கொள்ளாமல்  கூறப்படும் தவறான கருத்துக்கள் என்பதை பொதுமக்கள் உணர்ந்து விழிப்புணர்வு பெறுவது அவசியமாகும்.

 சுய ஜாதக வலிமையை கருத்தில் கொண்டு நிர்ணயம் செய்யப்படும் திருமணபொருத்தம் இல்லற வாழ்க்கையில்  சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும் என்பதே உண்மை நிலை அன்பர்களே "வாழ்த்துக்கள்"

ஜோதிடன் வர்ஷன் 
9443355696 

வெள்ளி, 25 அக்டோபர், 2013

திசாசந்திப்பும் திருமண வாழ்க்கையும் ?!

திசாசந்திப்பு என்றால் என்ன ?  இதானால் திருமண வாழ்க்கையில் சாதக பாதம் உண்டா ? 




மேற்கண்ட கேள்வியை தம் பிள்ளைகளுக்கு வாழ்க்கை துணை தேடும் அன்பர்களும், பொருத்தம் காண வரும் பெற்றவர்கள் பலர் கேட்பதுண்டு, சிலகாலமாகவே இந்த திசாசந்திப்பு என்பது பரவலாக பேசபட்டு வருகிறது, அதிலும் சில ஜோதிட அன்பர்கள் வரன், வது  இருவருக்கு சமகாலத்தில் ஏக திசை நடந்தால் திருமணம் செய்ய கூடாது! என்று அறிவுருத்துவதும், மீறி திருமணம் செய்தால் தம்பதியர் வாழ்க்கை மிகுந்த பாதிப்பை தரும் என்று பயமுறுத்துவதும் கூட,  தற்பொழுது நடந்துகொண்டு இருப்பது, எம்மை ஜோதிட ஆலோசனைக்காக காண வரும் அன்பர்கள் பேச்சில் இருந்து உணர முடிகிறது . 

எடுத்து காட்டாக கிழ்கண்ட ஜாதகம் இரண்டை ஆய்வுக்கு எடுத்து கொள்வோம் அன்பர்களே, இந்த இரண்டு ஜாதகத்தை பொருத்தம் பார்த்த பல ஜோதிடர்கள் ஜாதக பொருத்தம் என்பது முற்றிலும் இல்லை என்ற கருத்தை கூறியிருக்கின்றனர் , இந்த இரண்டு ஜாதகமும் திருமண வாழ்க்கைக்கு ஏற்ற அமைப்பை பெறுகிறதா? இல்லையா ? என்பதை இறுதியில் தெரிந்து கொள்வோம் .

ஆண் ஜாதகம் :



மேற்கண்ட ஆணின் ஜாதகத்தில் தற்பொழுது சூரியன் திசை நடந்து வருகிறது (16/12/2015) வரை, தற்பொழுது நடைபெற்று வரும் சூரியன் திசையானது ஜாதகருக்கு 3,9ம் வீடுகள் முறையே பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று மிகுந்த யோக பலன்களையே தந்து கொண்டு இருக்கிறது, மேலும் ஜாதகரின் சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் மட்டும் 12ம் பவகத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பது ஜாதகரின் திருமண வாழ்க்கை 32 வயதுக்கு மேல் அமையும் என்பதை தெரிவிக்கிறது, இதை தவிர ஜாதகத்தில் வேறு எந்த பாவகமும் பாதிப்படையவில்லை என்பது ஜாதகருக்கு மிகுந்த யோகமே.

பெண்ணின் ஜாதகம் :



மேற்கண்ட பெண்ணின் ஜாதகத்தில் தற்பொழுது சூரியன் திசை நடந்து வருகிறது (19/03/2014 ) வரை, தற்பொழுது நடைபெற்று வரும் சூரியன் திசையானது ஜாதகிக்கு 2,5,11ம் வீடுகள் அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும் 11ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று மிகுந்த யோக பலன்களையே தந்துகொண்டு இருப்பது சிறப்பான ஒரு விஷயமே , ஆக மேற்க்கண்ட இரண்டு ஜாதகத்திலும் நடை பெற்று கொண்டு இருக்கும் சூரியன் திசையானது மிகுந்த நன்மையான பலன்களையே தருகிறது என்பது உறுதியாகிறது.

ஆனால் மேற்கண்ட இரண்டு ஜாதகத்திற்கும் , இதற்க்கு முன் பொருத்தம் பார்த்த ஜோதிடர்கள் அனைவரும் ஜாதகம் பொருந்தாது என்றும் இருவருக்கும் ஒரே திசை நடப்பதால் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்காது என்று அச்சுருத்தியதாகவே தெரிகிறது , இதை போன்றே நன்றாக பொருந்தி வரும் பல ஜாதகங்களை பல ஜோதிடர்கள் திசா சந்திப்பை காரணம் காட்டி பல திருமணங்களை நடைபெறாமல் கால தாமதம் ஏற்ப்படுவதிர்க்கும், தடுப்பதிர்க்கும்  ஜோதிடர்களே காரணமாக இருப்பது வருத்தத்திற்கு உரிய ஒன்றாகவே ஜோதிடதீபம் கருதுகிறது, இந்த குழப்பங்கள் ஏன் ? ஏற்படுகிறது .

பொதுவாக பாரம்பரிய ஜோதிடத்தில் திசைகளின் பலன்கள் என்ற தலைப்பில் பல ஜோதிட நூல்களில் எழுதியிருக்கும் விஷயங்களை கருத்தில் வைத்துகொண்டு பொருத்தம் காணும் பொழுது இதை போன்ற பல தவறுகள் ஏற்ப்பட வாய்ப்புகள் உண்டு, மேலும் திசா புத்தி பலன்கள் என்ற தலைப்பில் பல ஜோதிட நூல்களில் எழுதியிருக்கும் விஷயங்கள் அனைத்தும் பொது பலன்களே அன்றி, அவை சுய ஜாதகத்தை கட்டுபடுத்த வாய்ப்பில்லை என்பதே முற்றிலும் உண்மை .

ஒருவரின் ஜாதகத்தில் நடைபெறும் திசை மற்றும் புத்தி அவரின் ஜாதகத்தில் எந்த பாவகத்தின் பலனை ஏற்று நடத்துகிறது என்று அறியாத பொழுதும், குறிப்பிட்ட ஜாதகத்தில் ஒவ்வொரு பாவகத்தின் தன்மை எப்படிபட்ட நிலையில் இருக்கிறது  என்ற உண்மை நிலை அறியாத பொழுதுமே மேற்கண்ட திசா சந்திப்பு என்ற குழப்பம் ஏற்ப்பட்டு , பொருத்தம் காண வந்தவர்களுக்கு சரியான பதிலை தெரிவிக்காத நிலையை தருகிறது, ஆக ஒருவரின் ஜாதகத்தில் எவ்வித தவறும் இல்லை, அரை குறை ஜோதிடர்களிடம் ஆலோசனை கேற்கும் பொழுது வரும் வினையே இது என்றால், அது மிகையில்லை .

ஒருவரின் ஜாதகத்தில் நடைமுறையில் நடந்துகொண்டு இருக்கும் திசையானது எந்த பாவகத்தின் பலனை தருகிறது என்று தெரியாத ஜோதிடனிடம் தனது ஜாதகத்தை தந்து பொருத்தம் பார்க்கும் அன்பர்களின் நிலையை பற்றியே ஜோதிடதீபம் அதிக கவலை கொள்கிறது, பலரது திருமணத்திற்கு தடையாக மேற்கண்ட திசாசந்திப்பு மட்டுமா காரணமாக அமைகிறது, மக்களை பயமுறுத்த மேலும் பல விஷயங்கள் அரைகுறை மற்றும் ஜோதிட கணிதத்தில் தேர்ச்சி அற்ற போலி ஜோதிடர்களிடம் நிறைய உண்டு அவையாவன, 1 ராகு கேது தோஷம், 2 செவ்வாய் தோஷம், 3 சர்ப்ப தோஷம், 4 நாக தோஷம், 5 ஏழரை சனி, 6 களத்திர தோஷம் என வகைக்கு 5,6 தோஷங்களை சொல்லி பொதுமக்களை குழப்பம் ஏற்ப்படுத்தி அதில் குளிர் காயும் போலி ஜோதிடர்களே கலிகாலத்தில் அதிகம் .

ஒருவரின் ஜாதகத்தில் திருமண வாழ்க்கையை பற்றியும், அவர்களுக்குள் இருக்கும் பொருத்தங்கள் பற்றியும் பாவக வலிமையின் நிலையை கருத்தில்  கொண்டு பலன் காணும் பொழுதே சிறப்பான திருமண வாழ்க்கை அமையும், இதில்  தச வித பொருத்தமான நட்சத்திர பொருத்தம் 10ம் கூட தேவையில்லை என்பதே ஜோதிடதீபத்தின் கருத்து .

இதை அடிப்படையாக வைத்து பார்க்கும் பொழுது, பல ஜோதிடர்களால்  திசா சந்திப்பு ஏற்ப்படுவதால் பொருத்தம் அற்ற ஜாதகம் என்று ஒதுக்கிய மேற்கண்ட இரண்டு ஜாதகத்திற்கும்  திருமண பொருத்தம் என்பது பாவக வலிமை  கொண்டு காணும் பொழுது மிக சிறப்பாக இருக்கிறது, மேலும் இவர்கள் திருமணம் செய்து கொள்வதால் திசா சந்திப்பு என்ற ஒரு விஷயம், இவர்களை எந்த விதத்திலும் சிறு பாதிப்பையும் கூட, தர வாய்ப்பில்லை என்பதே உண்மை என்ற விஷயத்தை உணர வைத்து இருவருக்கும் சிறப்பாக திருமணம் நடக்க ஜோதிடதீபம் ஆலோசனை வழங்கியதை நினைத்து ஜோதிடதீபம் பெருமை கொள்கிறது. 

குறிப்பு :

ஆண் பெண் இருவரின் ஜாதகத்தில் திசாசந்திப்பு என்பது இல்லாத நிலையிலும் கூட அவர்களின் சுய ஜாதகத்தில் குடும்பம் எனும் 2ம் பாவகம் பாதிக்கபட்டு இருந்தாலோ, களத்திரம் எனும் 7ம் பாவகம் பாதிக்கபட்டு இருந்தாலோ, அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் பொழுதுதான் திருமண வாழ்க்கை என்பது மன முறிவு வரை  எடுத்து செல்கிறது என்ற உண்மையை பொதுமக்கள் உணருவது அவசியம் .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696