2016 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
2016 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 5 பிப்ரவரி, 2016

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷ லக்கினம்




சாய கிரகங்கள் என்று போற்றப்படும் " ராகு கேது" பெயர்ச்சி, கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 1ம் ராசியான மேஷ ராசியை, லக்கினமாக கொண்ட அன்பர்களுக்கு, லக்கினத்திற்கு 5ல் ராகு பகவானும், 11ல் கேதுபகவானும் சஞ்சாரம் செய்து, இனி வரும் 18 மாதங்களுக்கு வழங்கும் பலாபலன்களை பற்றி ஆய்வு செய்வோம் அன்பர்களே!

மேஷ இலக்கின சிறப்பு இயல்புகள் :

மேஷ ராசியை  ஜென்ம லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, லக்கினம் வலிமை பெறும் பொழுது, ஜாதகரின் செயல்பாடுகளில் வேகமும் சுய கட்டுபாடும் அதிகரிக்கும், எந்த ஒரு விஷயத்தையும் சிறப்பாக கையாளும் திறமை பிறவியிலேயே அமைந்திருக்கும், சிறந்த நிர்வாக திறமையின் மூலம் வாழ்க்கையில் தனது லட்சியங்களில் வெற்றி பெரும் யோகத்தை தரும், அரசு சார்ந்த நிர்வாக துறையில் பணியாற்றும் யோகமும், பொதுமக்களின் பாதுகாப்பில் ஈடுபடும் காவல்துறை, ராணுவம், தீயணைப்பு துறை போன்ற பாதுகாப்பு  துறைகளில் சிறந்து விளங்கும் வல்லமையை தரும், மேஷ இலக்கின அன்பர்களின் இலக்கு என்பது எப்பொழுதும் வெற்றியை தவறாமல் தரும், குறுகிய காலங்களில் தான் செய்யும் தொழில் எதுவாயினும் அதில் சிறப்பான வெற்றிகளை பெரும் யோகம் உண்டாகும், சக தொழில் செய்பவர்களுக்கு இவர்களின் முன்னேற்றமும் வெற்றியும் மிகப்பெரிய ஆச்சரியத்தையும், வியப்பையும் ஏற்ப்படுத்தும், தனது வாழ்க்கையின் வெற்றி தோல்விகளை தானே நிர்ணயம் செய்யும் வல்லமை மேஷ இலக்கின அன்பர்களுக்கு இயற்கையாகவே அமைந்திருக்கும், மேஷ இலக்கின அன்பர்களின் எதிரிகளே அவர்களது முன்னேற்றத்திற்கு காரணமாக அமைத்துவிடுவார்கள் என்பது கவனிக்க தக்க அம்சமாகும், எப்பொழுதும் தர்மத்தின் வழியில் நடக்கும் பேராண்மை கொண்டவர்கள், சில நேரங்களில் இவர்களது வேகமான செயல்பாடுகள் பலரது விமர்சனங்களுக்கு ஆளாகும் தன்மையை தரும், சுதந்திர பிரியர்கள், தனிப்பட்ட முன்னேற்றத்தில் எப்பொழுதும் ஆர்வம் கொண்டு இருப்பார்கள், வியக்கத்தகு அறிய சாதனைகளை படைக்கும் வல்லமை பெற்றவர்கள், விளையாட்டு மற்றும் சாகச நிகழ்வுகளில் வெற்றியை மிக எளிதாக பெரும் யோகம் பெற்றவர்கள், தான் மேற்கொண்டுள்ள லட்சியங்களில் பின்வாங்காமல் முழு முயற்சியுடன் வெற்றியை ஈட்டும் யோகம் பெற்றவர்கள்.

கடந்த ராகு கேது பெயர்ச்சி மேஷ இலக்கின அன்பர்களுக்கு 12ல் கேதுவின் சஞ்சாரமும், 6ல் ராகுவின் சஞ்சாரமும், 12ம் பாவக வழியில் இருந்து மன நிம்மதி இழப்பையும், வீண் விறையங்களையும், எதிர்பாராத திடீர் இழப்பையும் மிகவும் பலமாகவே தந்தது, 6ம் பாவக வழியில் இருந்து கடன் தொந்தரவுகள், உடல் நல பாதிப்பு, சூழ்நிலைக்கு கட்டுபட்டு செய்லபடவேண்டிய சந்தர்ப்பங்களையும், எதிரிகளின் சதிக்கு ஆளாகும் சந்தர்ப்பங்களையும் தந்தது,  தற்பொழுது 5ல் சஞ்சாரம் செய்யும் ராகுவினால் பெரிய யோக பலன்கள் இல்லை என்றே கூற வேண்டும், குறிப்பாக ஜாதகரின் வாரிசுகள் வழியில் இருந்து சிறு சிறு இன்னல்கள், மற்றவர்களின் உதவி இல்லாமல் தாமாகவே தனித்து போராடும் சூழ்நிலை, குல தெய்வ வழிபாட்டில் குறைகள், மிதமாக போராடி வெற்றி பெரும் யோகம், அந்நிய நபர்களால் தொல்லைகள், பித்தம் சார்ந்த உடல் தொந்தரவுகள், நம்பிக்கை குறையும் விதமாக நடைபெறும் நிகழ்வுகள், எதிர்பாராத சிக்கல்கள், எடுக்கும் முயற்ச்சிகளில் வரும் தொய்வு, கவன சிதறல்கள், நோக்கம் நிறைவேற அதிகமாக உழைக்க வேண்டிய சந்தர்ப்பங்கள், பூர்வீக சிக்கல்கள் அதிகரிக்கும் தன்மை, பூர்வீக ஜீவனத்தால் அதிக இன்னல்கள் மற்றும் நஷ்டம், வெளியில் சென்று ஜீவனம் தேடும் நிலை அதிக  மன உளைச்சல்கள் என மேஷ இலக்கின அன்பர்களுக்கு தற்பொழுது 5ல் சஞ்சாரம் செய்யும் ராகு பகவான் கடுமையான சோதனைகளை தருவார், எனவே குல தெய்வ வழிபாட்டில் அதிக ஈடுபாட்டை காட்டுவது தங்களின் இன்னல்களை வெகுவாக குறைக்கும்.

11ல் கேதுவின் சஞ்சாரம் மேஷ இலக்கின அன்பர்களுக்கு அளவில்லா அதிர்ஷ்டத்தையும், லாபத்தையும் வாரி வழங்கும், செய்யும் தொழிலில் எதிர்பாராத லாபங்களை பெரும் யோகம் உண்டாகும், பயணங்களினால் அதிர்ஷ்டமும் லாபமும் கிட்டும், லாட்டரி, பங்கு வர்த்தகம், யுக வணிகம் மூலம் அளவில்லா அதிர்ஷ்டங்களை பெரும் தன்மையை தரும், தன்னை விட வயதில்  அதிகமுள்ள பெரியவர்கள் வழியில் இருந்து  மிகுந்த அதிர்ஷ்டத்தையும் லாபத்தையும் பெற இயலும், புதிய சொத்துகள் வாங்கும் யோகமும், சூழ்நிலை மாற்றத்தில் விருப்பமும் உண்டாகும், பல சுற்றுல ஸ்தலங்களுக்கு சென்றுவரும் சந்தர்பங்கள் தேடிவரும், திருமண வயதில் உள்ள அன்பர்களுக்கு சிறப்பான இல்லற வாழ்க்கை அமையும், பல காலமாக திட்டமிட்டு கிடப்பில் போடபட்ட விஷயங்களில் முன்னேற்றமும் லாபமும் உண்டாகும், செய்யும் தொழில் மற்றும் வியாபரத்தில் அளவில்லா லாபமும், புதிய தொழில் வாய்ப்புகளும் உருவாகும், அறிமுகம் இல்ல புதிய நபர்கள் தங்களின் வாழ்க்கையில் வியக்கத்தகு மாற்றங்களை நிகழ்த்துவார்கள், ஆன்மீக தேடுதல்களுக்கு வெற்றி கிட்டும், வெளிநாட்டினர் அந்நிய மதத்தினர் மூலம் லாபம் மற்றும் ஜீவன முன்னேற்றம் உண்டாகும்,  வெளிநாடு வாய்ப்புகளை எதிர்நோக்கியுள்ள அன்பர்களுக்கு, எதிர்பாராத திடீர் வாய்ப்புகள் வந்து சேரும், மேஷ இலக்கின அன்பர்களின் அறிவு திறனும் தன்னம்பிக்கையும் ஒன்று சேர்ந்து வெற்றி வாய்ப்புகளை வாரி குவிக்கும் யோக காலமாக, கேதுவின் 11ம் பாவக சஞ்சாரம் அமையும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.

மொத்தத்தில் எதிர்வரும் ராகுகேது பெயர்ச்சி மேஷ இலக்கின அன்பர்களுக்கு 5ம் பாவக வழியில் அதிக அளவில் இன்னல்களும், 11ம் பாவக வழியில் அளவில்லா அதிர்ஷ்டத்தையும் வாரி வழங்கும், மேஷ இலக்கின அன்பர்கள் அனைவரும் ராகுகேது பெயர்ச்சியால் 5ம் பாவக வழியில் இருந்து தடைகளையும், 11ம் பாவக வழியில் இருந்து மிகுந்த நன்மைகளை பெறுகின்றனர் என்பது  கவனிக்க தக்க அம்சமாகும்.

குறிப்பு :

மேற்கண்ட பலாபலன்கள் மேஷ இலக்கின அன்பர்களுக்கு, தற்பொழுது நடைபெறும் திசாபுத்திகள் 05 மற்றும் 11ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே 100% சதவிகிதம் நடைபெறும், எனவே மேஷ  இலக்கின அன்பர்கள் சுய ஜாதகத்தில் தற்பொழுது நடைபெறும் திசாபுத்திகள் 05,11ம் பாவக பலனை ஏற்று நடத்துகிறதா? என்பதில் தெளிவு பெறுவது அவசியமானதாக "ஜோதிடதீபம்" கருதுகிறது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

வியாழன், 4 பிப்ரவரி, 2016

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - மீன லக்கினம்




சாய கிரகங்கள் என்று போற்றப்படும் " ராகு கேது" பெயர்ச்சி, கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 12ம் ராசியான மீன  ராசியை, லக்கினமாக கொண்ட அன்பர்களுக்கு, லக்கினத்திற்கு 12ல் ராகு பகவானும், 6ல் கேதுபகவானும் சஞ்சாரம் செய்து, இனி வரும் 18 மாதங்களுக்கு வழங்கும் பலாபலன்களை பற்றி ஆய்வு செய்வோம் அன்பர்களே!

மீன இலக்கின சிறப்பு இயல்புகள் :

மீன ராசியை  ஜென்ம லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, லக்கினம் வலிமை பெறும் பொழுது, ஜாதகரின் பொறுமையும் சுய கட்டுபாடும் அதிகரிக்கும், எண்ணத்தில் தெளிவும், சிறந்த செயல்திறனும் ஜாதகரின் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றங்களை வழங்கும், தனிப்பட்ட செயல்திறனும், மற்றவர்களை பின்பற்றாமல் சுய முயற்ச்சியின் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் பெரும் யோகம் பெற்றவர்கள், கலைகளில் சிறந்து விளங்கும் யோகமும், சாஸ்திர ஞானமும் இயற்க்கையாவே அமைய பெற்றவர்கள், கல்வி கேள்விகளில் நல்ல அறிவும், மேற்கொள்ளும் லட்சியங்களில் வெற்றியையும் தங்கு தடையின்றி பெறுவார்கள், சுதந்திர மனபாண்மையும், விசாலமான அறிவு திறனும் ஜாதகரின் வாழ்க்கையில் பல வெற்றி வாய்ப்புகளை வாரி வழங்கும், ஆன்மீகத்தில் வெற்றியும் பொது வாழ்க்கையில் தூய்மையையும் கடைபிடிக்கும் நல்லவர்கள், கலை துறையில் குறுகிய காலத்தில் பெயரையும் புகழையும் சம்பாதிக்கும் யோகத்தை  தரும், மீன இலக்கின அன்பர்களுக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் என்பது ஒரே சீராகவும், சரியான திட்டமிடுதல்களுக்கு ஏற்ப்ப சிறப்பாகவும் அமையும், மனதிற்கு எட்டாத விஷயங்களில் புலமை பெற்றவர்களாக திகழ்வார்கள், நல்ல மனோதத்துவ நிபுணர்களாக செயல்படும் தன்மை பெற்றவர்கள், சூழ்நிலையை சிறப்பாக கையாளும் வல்லமையை இயற்கையாகவே பெற்று இருப்பார்கள்.

கடந்த ராகு கேது பெயர்ச்சி மீன இலக்கின அன்பர்களுக்கு லக்கினத்தில் கேதுவும், 7ல் ராகுவும் சஞ்சாரம் செய்து இலக்கின பாவக வழியில் இருந்து நன்மைகளையும் களத்திர ஸ்தான வழியில் இருந்து அதிக அளவில் இன்னல்களையும் வாரி வழங்கியது, ஆனால் தற்பொழுது 12ல் சஞ்சாரம் செய்யும் கேது பகவானால் தங்களின் வாழ்க்கையில் மன நிம்மதி மற்றும் சந்தோசம் அதிகரிக்கும், புதிய முதலீடுகளில் ஆர்வமும் லாபமும் உண்டாகும், இதுவரை வாழ்க்கையில் போராட்டங்களை சந்தித்து கொண்டு இருந்த அன்பர்களுக்கு நல்ல தீர்வுகளும், சிறப்பான விருத்திகளும் கிட்டும், தேவையற்ற வீண் செலவினங்கள் குறையும் மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும், இதுவரை கனவாக இருந்த லட்சியங்கள் யாவும் பூர்த்தி அடையும்,  நிம்மதியான உறக்கம் தங்களின் மனதில் தெளிவான  சிந்தனையை தரும், குறைகள் அனைத்தும் விலகி வாழ்க்கையில் அனைத்து வசதி வாய்ப்புகளையும் அனுபவிக்கும் யோகம் உண்டாகும், வெகுநாள் மன குறைகள் தீரும், உறவுகள் வழியில் இருந்து நல்ல ஆதரவும் உதவியும்  கிடைக்க பெறுவீர்கள், அதிரடியான தொழில் முன்னேற்றங்கள் தங்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்களை வாரி வழங்கும், பல ஆன்மீக திருத்தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பும், ஆன்மீக பெரியோர்களின் ஆசியும் தங்களுக்கும் தங்களது குடும்பத்திற்கும் பரிபூரணமாக கிடைக்க பெறுவீர்கள், புதிய சொத்துகள், மற்றும் புதிய வண்டி வாகனம்  வாங்கும் யோகம்  உண்டாகும், வழக்குகளில் வெற்றி கிட்டும், தாம்பத்திய வாழ்க்கையில் சந்தோசம் மிகும், தம்பதியர் ஒற்றுமை மேலோங்கும், எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும், கேதுபகவானின் சஞ்சாரம் தங்களின் வாழ்க்கையில் பல அதிர்ஷ்டங்களை வாரி வழங்கும்.

6ல் சஞ்சாரம் செய்யும் ராகு பகவான்  தங்களின் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ செய்வார், எதிரிகளின் செயல்களே தங்களுக்கு மிகப்பெரிய வெற்றி வாய்ப்பை வாரி வழங்கும், தன்னிறைவான தொடர் பொருளாதார வெற்றி, வீரியமிக்க செயல்பாடுகள் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் பெரும்  யோகம் என்ற போதிலும், வயிறு சார்ந்த தொந்தரவுகள் தங்களின் முன்னேற்றத்தை சிறிது பாதிக்க கூடும், பூர்வீகம் சார்ந்த சொத்துகள் கிடைக்க வாய்ப்புண்டு, செய்யும் தொழில் சிறப்பான முன்னேற்றத்தை பெரும் யோக காலமாக இந்த ராகு கேது பெயர்ச்சியை கருதலாம், உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி படிப்பு போன்றவற்றில் தேர்ச்சியும், அரசு உத்தியோகமும் கிடைக்க வாய்ப்புண்டு, காவல் துறையில் பணியாற்றும் அன்பர்களுக்கு திடீர் பதவி உயர்வும், திறைமைக்கு   உண்டான பரிசும் கிடைக்க பெறுவார்கள், அரசியலில் உள்ள அன்பர்களுக்கு நல்ல பதவி தேடிவரும், எதிர்பார்ப்புகள் நிறைவேறும், மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும், வெளியூர் வெளிநாடுகளில் இருந்து நல்ல வருமானமும் தொழில் விருத்தியும் உண்டாகும், எடுக்கும் முயற்ச்சிகள் திடீர் வெற்றியையும் எதிர்பாராத அதிர்ஷ்டத்தையும் வாரி வழங்கும், இதுவரை   பகைமை பாராட்டிய அன்பர்கள் இனிவரும் காலங்களில் நண்பர்களாக மாற வாய்ப்புண்டு, தங்களின் மனதில் எண்ணிய காரியங்கள் யாவும் வெற்றி மேல் வெற்றியை தரும், புதிய வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் தங்களுக்கு சிறந்த எதிர்காலத்தை அமைத்து தரும்.

மொத்தத்தில் எதிர்வரும் ராகுகேது பெயர்ச்சி மீன  இலக்கின அன்பர்களுக்கு 100% விகிதம் மன நிம்மதியையும், எதிர்பாராத தொழில் முன்னேற்றம் மற்றும் பதவி  உயர்வை வாரி  வழங்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை, மீன  இலக்கின அன்பர்கள் அனைவரும் ராகுகேது பெயர்ச்சியால் 12ம் பாவகம் மற்றும்  சத்ரு ஸ்தான வழியில் இருந்து மிகுந்த நன்மைகளை பெறுகின்றனர் என்பது  கவனிக்க தக்க அம்சமாகும்.

குறிப்பு :

மேற்கண்ட பலாபலன்கள் மீன இலக்கின அன்பர்களுக்கு, தற்பொழுது நடைபெறும் திசாபுத்திகள் 12 மற்றும் 06ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே 100% சதவிகிதம் நடைபெறும், எனவே மீன இலக்கின அன்பர்கள் சுய ஜாதகத்தில் தற்பொழுது நடைபெறும் திசாபுத்திகள் 12,06ம் பாவக பலனை ஏற்று நடத்துகிறதா? என்பதில் தெளிவு பெறுவது அவசியமானதாக "ஜோதிடதீபம்" கருதுகிறது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

புதன், 3 பிப்ரவரி, 2016

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - கும்ப லக்கினம்




சாய கிரகங்கள் என்று போற்றப்படும் " ராகு கேது" பெயர்ச்சி, கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 11ம் ராசியான கும்ப ராசியை, லக்கினமாக கொண்ட அன்பர்களுக்கு, லக்கினத்திற்கு 1ல் ராகு பகவானும், 7ல் கேதுபகவானும் சஞ்சாரம் செய்து, இனி வரும் 18 மாதங்களுக்கு வழங்கும் பலாபலன்களை பற்றி ஆய்வு செய்வோம் அன்பர்களே!

கும்ப இலக்கின சிறப்பு இயல்புகள் :

கும்ப  ராசியை ஜென்ம லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, லக்கினம் வலிமை பெறும் பொழுது, ஜாதகரின் தன்னம்பிக்கையும், சமயோசித புத்திசாலித்தனமும் அதிகரிக்கும், எந்த ஒரு சூழ்நிலையையும் தனது அறிவு திறனால் சமாளிக்கும் யோகம் பெற்றவர்கள், தன்னிறைவான சுக போக வாழ்க்கையை தனது சுய முயற்ச்சி  மூலம் ஈட்டும் வல்லமை பெற்றவர்கள், தனது சிந்தனைக்கும் அறிவு திறனுக்கும் வரும் சவால்களை சிறப்பாக எதிர்கொண்டு வெற்றி பெரும் அன்பர்கள், எப்பொழுதும் சுறு சுறுப்பான இயக்கத்துடனும் புதிய உத்வேகத்துடனும் செயலாற்றும் தன்மை பெற்றவர்கள், தனது அறிவு திறன், விடா முயற்ச்சி, கடின உழைப்பின் மூலம் வாழ்க்கையில் சகல நலன்களையும் தன்னை தேடி வரசெய்யும் வல்லமை பெற்றவர்கள், வருமுன் உணரும் சக்தியும், செய்யும் செயல்களின் முடிவினையும் தெளிவாக தெரிந்து வைத்திருப்பார்கள், சரியான திட்டமிடுதல்கள் இவர்களின் வெற்றிகரமான வாழ்க்கையை 100% விகிதம் நிர்ணயம் செய்யும், மனதில் நினைத்த எண்ணங்களையும், லட்சியங்களையும் தமது வாழ்க்கையில் நடைமுறைக்கு கொண்டுவரும் திறமை இயற்கையாகவே அமைய பெற்றவர்கள், வாழ்க்கையில் நடந்ததை மறந்து "வந்தது வரட்டும் வருவதை எதிர்கொள்வோம்" என்று எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துகொள்ளும் மன தைரியமும், தன்னம்பிக்கையும் இவர்களது சிறப்பு என்றால் அது மிகையல்ல.

கடந்த ராகு கேது பெயர்ச்சி கும்ப இலக்கின அன்பர்களுக்கு 2ல் கேதுவும்,  8ல் ராகுவும்,  சஞ்சாரம் செய்து குடும்ப ஸ்தான அமைப்பில் இருந்து அதிக இன்னல்களையும், துன்பங்களையும், வருமான இழப்புகளையும் வழங்கியது, 8ல் கேது சில சமயம் தவிர்க்க இயலாத திடீர் இழப்பையும், உடல்நல குறைவையும் தந்தது, முதலீடுகளில் இருந்து வீண் விறையங்களையும் எதிர்பாராத சந்தர்பங்களில் வழங்கியது, ஆனால் தற்பொழுது பெயர்ச்சி அடைந்துள்ள ராகு கேது பெயர்ச்சியினால் மிகுந்த யோக பலன்களையே வாரி வழங்குகிறது, லக்கினத்தில் கேது பகவானின் சஞ்சார நிலை தங்களுக்கு அறிவு திறன், புத்திசாலித்தனம் மூலம்  வரும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் பெரும் யோகத்தை தரும், திடீர் அதிர்ஷ்டம், எதிர்பாராத உதவிகள், சுய தொழில் முன்னேற்றம், அனைவரின் ஆதரவு கிடைத்தல்,  முற்போக்கு சிந்தனையுடன் அனைத்தையும் எதிர்கொள்ளும் வாய்ப்பு, சிந்தித்து சரியான விஷயங்களை கையாளும் வல்லமை, எதிர்ப்புகள்    அனைத்தும்  அகன்று வெற்றி வாய்ப்பினை மிக எளிதாக பெரும் யோகம், உடல் மற்றும் மன நலனில் ஆர்வம், இதுவரை தீராத உடல் தொந்தரவுகளுக்கு சரியான மருத்துவம் மூலம் நலம் உண்டாகுதல், சிறந்த  ஆன்மீக குருவின் ஆசி மூலம் வாழ்க்கையில் நலம் பெறுதல், சிறப்பு வாய்ந்த ஆன்மீக திருத்தலங்களுக்கு சென்று வரும் யோக, புதிய மாற்றங்களையும் புதிய வாய்ப்புகளையும் சரியாக பயன்படுத்தி கொண்டு வாழ்க்கையில் லாபமும், அதிர்ஷ்டமும் பெரும் யோகம், செல்லும் இடங்களில் நல்ல வரவேற்ப்பு, அன்னியர்கள் மூலம் அளவில்லா லாபமும் அதிர்ஷ்டமும் உண்டாகும், எனவே லக்கினத்தில் கேது சஞ்சாரம் தங்களின் வாழ்க்கையில் புதிய மாற்றங்களை வாரி வழங்கும்.

7ல் சஞ்சாரம் செய்யும் ராகுவினால், தங்களின் வாழ்க்கை துணை வழியில் இருந்து 100% விகித ஸ்திரமான நன்மைகளை பெற இயலும், குறிப்பாக இதுவரை திருமண தடைகளை சந்தித்து கொண்டு இருந்த அன்பர்களுக்கு, அதிஷ்டம் மிகுந்த சிறப்பான வாழ்க்கை துணை பெரும் யோகம் உண்டாகும், காதலில் வெற்றியும், திருமண வாழ்க்கையில் சந்தோஷமும் உண்டாகும், நண்பர்கள் கூட்டாளிகள் தங்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு உதவிகரமான செயல்களில் ஈடுபடுவார்கள், கூட்டு தொழில் மூலம் லாபமும் அதிர்ஷ்டமும் உண்டாகும், வெளிநாடுகளில் உள்ள அன்பர்களுக்கு இது ஒரு யோக காலமாக கருதலாம், ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில் உள்ள அன்பர்களுக்கு அளவில்லா லாபமும் அதிர்ஷ்டமும் உண்டாகும், தொழில்   விருத்தி தங்களுக்கு தங்கு தடையின்றி அமையும், மருத்துவ துறையில் உள்ள அன்பர்களுக்கு இது ஒரு பொற்காலம், மருத்துவம் சார்ந்த கல்வி கற்றுகொண்டு  இருக்கும் மாணவர்களுக்கு சிறந்த முன்னேற்றமும், நல்ல வேலை வாய்ப்பும் அமையும், வெளிநாடு வாய்ப்புகள் தங்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றங்களை வாரி வழங்கும்,  எதிர்பார்ப்புகள் நிறைவேறும், சமூக அந்தஸ்தும்,கௌரவமும் அதிகரிக்கும், அரசியலில் உள்ள அன்பர்களுக்கு ஸ்திரமான வெற்றி கிட்டும், வெளிவட்டார பழக்க வழக்கங்கள் மூலம் அதிர்ஷ்டமும், லாபமும் அதிகரிக்கும், கூட்டு தொழிலில் உள்ள அன்பர்களுக்கு அபரிவிதமான லாபம் நிச்சயம் கிடைக்கும்.

மொத்தத்தில் எதிர்வரும் ராகுகேது பெயர்ச்சி கும்ப இலக்கின அன்பர்களுக்கு 100% விகிதம் சுய முன்னேற்றத்தையும் எதிர்பாராத மக்கள் செல்வாக்கையும் வாரி  வழங்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை, கும்ப  இலக்கின அன்பர்கள் அனைவரும் ராகுகேது பெயர்ச்சியால் லக்கினம் மற்றும்  களத்திர ஸ்தான வழியில் இருந்து மிகுந்த நன்மைகளை பெறுகின்றனர் என்பது  கவனிக்க தக்க அம்சமாகும்.

குறிப்பு :

மேற்கண்ட பலாபலன்கள் கும்ப இலக்கின அன்பர்களுக்கு, தற்பொழுது நடைபெறும் திசாபுத்திகள் 01 மற்றும் 07ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே 100% சதவிகிதம் நடைபெறும், எனவே கும்ப இலக்கின அன்பர்கள் சுய ஜாதகத்தில் தற்பொழுது நடைபெறும் திசாபுத்திகள் 01,07ம் பாவக பலனை ஏற்று நடத்துகிறதா? என்பதில் தெளிவு பெறுவது அவசியமானதாக "ஜோதிடதீபம்" கருதுகிறது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

செவ்வாய், 2 பிப்ரவரி, 2016

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - மகர லக்கினம்


 சாய கிரகங்கள் என்று போற்றப்படும் " ராகு கேது" பெயர்ச்சி, கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 10ம் ராசியான மகர ராசியை, லக்கினமாக கொண்ட அன்பர்களுக்கு, லக்கினத்திற்கு 8ல் ராகு பகவானும், 2ல் கேதுபகவானும் சஞ்சாரம் செய்து, இனி வரும் 18 மாதங்களுக்கு வழங்கும் பலாபலன்களை பற்றி ஆய்வு செய்வோம் அன்பர்களே!

மகர இலக்கின சிறப்பு இயல்புகள் :

மகர ராசியை ஜென்ம லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, லக்கினம் வலிமை பெறும் பொழுது, ஜாதகரின் செயல்பாடுகளில் பொறுமையும், சுய கட்டுபாடும் அதிகரிக்கும், தன்னம்பிக்கை கூடும், நேர்மை மாறாத குணமும், சத்தியத்திற்கு கட்டுப்படும் யோகமும் உண்டாகும், சிறந்த உழைப்பாளியாகவும், மற்றவர்களுக்கு உதவும் நற்குணமும், பகுத்தறிந்து செயல்படும் தன்மையையும் அதிகரிக்கும், பொதுவாழ்க்கையில் நேர்மையையும், சுய ஒழுக்கத்தையும் கடைபிடிக்கும் நல்லவர்களாக திகழ்வார்கள், சிந்தனையும் செயல்பாடுகளும் ஜாதகரின் தனித்தன்மையை சிறப்பாக எடுத்துக்காட்டும், உடல் ஆரோக்கியமும் மனதில் தெளிவும் ஜாதகரின் வாழ்க்கையில் சிறப்பான வெற்றிகளை ஈட்டுவதற்கு உதவி புரியும், எவரின் உதவியும் இன்றி சுயமாக முன்னேற்றம் பெரும் திறமையையும் வல்லமையும் ஒருங்கே அமைய பெற்றவர்கள் மகர இலக்கின அன்பர்கள் என்றால் அது மிகையில்லை, மேலும் ஜாதகரின் கௌரவம் அந்தஸ்து மற்றும் சுய மரியாதை குறைவில்லா வாழ்க்கை, தொழில் வெற்றிகளை ஜாதகரே சிறப்பாக நிர்ணயம் செய்வது, போன்றவை கவனிக்கத்தக்க சிறப்பு அம்சங்களாகும்.

கடந்த ராகு கேது பெயர்ச்சி மகர இலக்கின அன்பர்களுக்கு 9ல் ராகுவும், 3ல் கேதுவும் சஞ்சாரம் செய்து பாக்கிய ஸ்தான வழியில் இருந்து சிறு சிறு இன்னல்களையும் மன போராட்டங்களையும், வீர்ய ஸ்தான அமைப்பில் இருந்து சீரிய வெற்றிகளையும் தந்து கொண்டு இருந்தது ஆனால் தற்பொழுது பெயர்ச்சி அடைந்துள்ள ராகு கேது, குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்தில் கேது பகவானின் சஞ்சாரம், தங்களுக்கு சிறப்பான வாக்கு வன்மையையும், குடும்பத்தில் மகிழ்ச்சியையும் வாரி வழங்கும், கை நிறைவான வருமானம் ஸ்திரமாக வந்தவண்ணம் இருக்கும், தங்களின் எண்ணங்கள் மற்றும் லட்சியங்கள் யாவும் தங்கு தடையின்றி நிறைவேறும், எதிர்ப்புகள் அகலும், தங்களின் பேச்சுக்கு அனைத்து இடங்களிலும், மதிப்பு மரியாதை உண்டாகும், வாத திறமையால் செய்யும் தொழிலில் நிகரற்ற வருமானங்களை பெரும் யோகம் உண்டாகும், வேற்று மதத்தினர் மற்றும் வெளிநாட்டினர் மூலம் வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றங்களை சந்திக்கும் யோகம் உண்டாகும், புதிய தொழில் வாய்ப்புகள் மற்றும் கூட்டு தொழில் முயற்ச்சிகள் தங்களுக்கு அபரிவிதமான யோகங்களை தங்கு தடையின்றி வாரி வழங்கும், பொது வாழ்க்கையில் உள்ள அன்பர்களுக்கு இது ஒரு பொற்க்காலம் என்றே சொல்லாம், அரசியலில் வெற்றி பதவி உயர்வு, கௌரவ பதவிகள் தேடிவரும் வாய்ப்பு என தங்களின் வாழ்க்கையில் புதிய மாற்றங்களையும், புதிய நம்பிக்கையையும் குடும்ப ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யும் கேது பகவான் வாரி வழங்குவார், மேலும் இதுவரை திருமண தடைகளை சந்தித்து கொண்டு இருந்த அன்பர்களுக்கு சிறப்பான இல்லற வாழ்க்கை அமையும், வருமானம் பல வழிகளில் இருந்து வரும்.

8ல் சஞ்சாரம் செய்யும் ராகுவினால் தங்களின் வாழ்க்கையில் மிக பெரிய அதிர்ஷ்ட வாய்ப்புகள் வந்து குவியும், புதையலுக்கு நிகரான சொத்து சுக சேர்க்கை உண்டாகும், வாழ்க்கை துணை வழியில் இருந்து திடீர் அதிர்ஷ்டங்களை அனுபவிக்கும் யோகம் உண்டாகும், கூட்டாளிகள் மற்றும் நண்பர்களின் உதவியும், ஆதரவும் தங்களுக்கு மிகப்பெரிய அளவிலான வெற்றிகளை  வாரி வழங்கும், புதிய சொத்துகள் அல்லது புதிய வண்டி வாகனங்கள் வாங்கும் யோகமும், அதிரடியான முன்னேற்றங்களையும் தவிர்க்க இயலாது, வெளிநாடுகளில் இருந்து வரும் வருமானம் தங்களின் வாழ்க்கையில் மிக பெரிய அந்தஸ்தையும், அதிர்ஷ்டத்தையும் வாரி வழங்கும், இன்சூரன்ஸ் துறையில் உள்ள அன்பர்களுக்கு, எதிர்பாராத வருமானங்களும், தன்னிறைவான பொருளாதார முன்னேற்றமும் உண்டாகும், அதிகபடியான உடல் உழைப்பை தவிர்க்க இயலாது  இருப்பினும் உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும், புதிய சூழ்நிலைகளும் புதிய மனிதர்களின் அறிமுகமும் தங்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய யோகத்தை வாரி வழங்கும், பங்கு சந்தையில் முதலீடு செய்த அன்பர்களுக்கு திடீர் வரவு உண்டாகும், இதுவரையில் நிலுவையில் இருந்த கடன் அடைபடும், உயில் மூலம் லாபமும் அதிர்ஷ்டமும் உண்டாகும், புதிய தொழில் வாய்ப்புகள் அறிமுகமாகும், 8ல் ராகுவின் சஞ்சாரம் தங்களின் வாழ்க்கையில் எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளை வாரி வழங்கும்.

மொத்தத்தில் எதிர்வரும் ராகுகேது பெயர்ச்சி மகர இலக்கின அன்பர்களுக்கு 100% விகிதம் வருமான வாய்ப்பினையும், எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டத்தையும் தங்கு தடையின்றி வாரி வழங்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை, மகர இலக்கின அன்பர்கள் அனைவரும் ராகுகேது பெயர்ச்சியால் குடும்ப ஸ்தானம் மற்றும் ஆயுள் ஸ்தான வழியில் இருந்து மிகுந்த நன்மைகளை பெறுகின்றனர் என்பது  கவனிக்க தக்க அம்சமாகும்.

குறிப்பு :

மேற்கண்ட பலாபலன்கள் மகர இலக்கின அன்பர்களுக்கு, தற்பொழுது நடைபெறும் திசாபுத்திகள் 02 மற்றும் 08ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே 100% சதவிகிதம் நடைபெறும், எனவே மகர இலக்கின அன்பர்கள் சுய ஜாதகத்தில் தற்பொழுது நடைபெறும் திசாபுத்திகள் 02,08ம் பாவக பலனை ஏற்று நடத்துகிறதா? என்பதில் தெளிவு பெறுவது அவசியமானதாக "ஜோதிடதீபம்" கருதுகிறது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

சனி, 30 ஜனவரி, 2016

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - தனுசு லக்கினம்



 சாய கிரகங்கள் என்று போற்றப்படும் " ராகு கேது" பெயர்ச்சி, கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 9ம் ராசியான தனுசு ராசியை, லக்கினமாக கொண்ட அன்பர்களுக்கு, லக்கினத்திற்கு 9ல் ராகு பகவானும், 3ல் கேதுபகவானும் சஞ்சாரம் செய்து, இனி வரும் 18 மாதங்களுக்கு வழங்கும் பலாபலன்களை பற்றி ஆய்வு செய்வோம் அன்பர்களே!

தனுசு இலக்கின சிறப்பு இயல்புகள் :

தனுசு ராசியை ஜென்ம லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, லக்கினம் வலிமை பெறும் பொழுது,  ஜாதகரின் அறிவு திறனும், புத்திசாலித்தனமும் அதிகரிக்கும், அறிவுபூர்வமான செயல்களில் ஆர்வத்தையும், புதிய சிந்தனைகள் மூலம் வாழ்க்கையின் முன்னேற்றங்களை நிர்ணயம் செய்துகொள்ளும் வல்லமையை தரும், பிடிவாதம் மிகும் இலகுவான வழிமுறைகளை கையாண்டு வெற்றிகளை பெரும் யோகம் உண்டாகும், சிறந்த நிர்வாக திறமையும், திட்டமிடுதல்களுடன் செயல்களை செய்து தொடர் வெற்றிகளை பெரும் தன்மையை தரும், ஜாதகரின் செயல்பாடுகள் அனைத்தும் மற்றவர்களுக்கு உபயோகம் மற்றும் நன்மையை தரும் விதத்தில் அமையும், உடல் ரீதியான உழைப்பைவிட அறிவு ரீதியான உழைப்பை அதிகம் விரும்பும் அன்பர்கள், பாரம்பரியம் ரகசியம் உணர்தல், புலனுக்கு அப்பாற்ப்பட்ட அறிவு திறன், வரைமுறைக்கு உற்பட்ட சுய கட்டுபாடு, தன்னம்பிக்கை குறையாத மன நிலை, ஆரோக்கியமான உடல் நிலை, முற்ப்போக்கு சிந்தனையுடன் அனைத்தையும் எதிர்க்கொள்ளும் தன்மை என ஜாதகரின் வெற்றிகரமான வாழ்க்கைக்கு ஜாதகரே காரணமாக அமைவார், ஜன வசீகரம் எப்பொழுதும் உண்டு.

கடந்த ராகு கேது பெயர்ச்சி தனுசு இலக்கின அன்பர்களுக்கு 10ல் ராகுவும், 4ல் கேதுவும் சஞ்சாரம் செய்து ஜீவன ஸ்தான வழியில் இருந்து சிறு சிறு நன்மைகளையும், சுக ஸ்தான அமைப்பில் இருந்து அதிக அளவில் இன்னல்களையும் தந்து கொண்டு இருந்தது ஆனால் தற்பொழுது பெயர்ச்சி அடைந்துள்ள ராகு கேது, வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்தில் கேது பகவானின் சஞ்சாரம், தங்களுக்கு எடுக்கும் முயற்சிகள் யாவிலும் வெற்றி மேல் வெற்றியை ஈட்டி தரும், சுய அறிவு திறன் சிறப்பாக செயல்படும், கமிஷன் மற்றும் தரகு தொழில் செய்து வரும் அன்பர்களுக்கு நல்ல லாபமும் அதிர்ஷ்டமும் உண்டாகும், புதிய வாய்ப்புகள் தங்களுக்கு வந்து குவிந்த வண்ணமே இருக்கும், சகோதர ஆதரவு பயணங்களில் லாபம், வியாபாரத்தில் விருத்தி, ஏஜென்சி துறையில் தன்னிறைவான வருமானம், புதிய வேலை வாய்ப்புகள், தனது திறமைக்கு உரிய மரியாதை அரசு கௌரவம் கிடைத்தல், தனிப்பட்ட முறையில் முன்னேற்றம் காணுதல், காரியங்கள் யாவும் தடையின்றி நிறைவேறும் யோகம், திருமண முயற்ச்சிகள் பெரியவர்கள் மூலம் நிறைவேறுதல்,  உயர் கல்வியில் வெற்றியும் முன்னேற்றமும் உண்டாகும், இடம் மாறுதல் மற்றும் புதிய சூழ்நிலைகளில் பணியாற்றும் யோகம் உண்டாகும், எங்கு சென்றாலும் தங்களுக்கு வெற்றி கிடைக்கும், மனதில் எண்ணிய எண்ணங்கள் யாவும் நடைமுறைக்கு வரும் இதனால் அதிர்ஷ்டமும் யோகமும் அதிகரிக்கும்.

9ல் சஞ்சாரம் செய்யும் ராகுவினால் தங்களுக்கு அதிக அளவில் இன்னல்களே வரக்கூடும் என்பதால், தன்னை விட வயதில் அதிகம் உள்ள பெரியவர்களிடம் கவனமாக பழகுவது நல்லது, தேவையில்லாமல் மற்றவர்கள் விஷயங்களில் தலையிடுவது மிகப்பெரிய அவமானங்களையும், அவபெயரையும் தரும், சரியான  நேரத்தில் அறிவு திறன் செயல்படாது, ஆன்மீக பெரியோர்களின் ஆசியையும் தீட்சையையும் பெறுவது தங்களின் வாழ்க்கையில் சகல யோகங்களையும் வாரி வழங்கும், சிறப்பு வாய்ந்த ஆன்மீக திருத்தலங்களுக்கு அடிகடி சென்று வருவது தங்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களையும், புத்துணர்வையும் தரும், கல்வி காலங்களில் உள்ள மாணவர்கள் அதிக அளவில் படிப்பில் கவனம் செலுத்துவது அவசியமாகிறது, உடல் ரீதியான வரும் சிறு சிறு தொந்தரவுகளையும் உடனடியாக மருத்துவம் செய்துகொள்வது நல்லது, எந்த காரணத்தை கொண்டு மற்றவர்களிடம் பகைமை பாராட்டுவது நல்லதல்ல, அதிக அளவில் அலைச்சல் தரும் என்பதால் சரியான திட்டமிடுதல்களுடன் செயல்படுவது தங்களின் வாழ்க்கையில் சகல நன்மைகளையும் தரும், பொது வாழ்க்கையில் உள்ள  அன்பர்களுக்கு இனிவரும் காலம் அவ்வளவு சிறப்பாக இருக்க வாய்ப்பில்லை என்பதால் அதிக கவனமுடன் செயல்படுவது தங்களுக்கும் தங்களை சார்ந்தவர்களுக்கும் நன்மையை தரும்.

மொத்தத்தில் எதிர்வரும் ராகுகேது பெயர்ச்சி தனுசு இலக்கின அன்பர்களுக்கு 50% விகிதம் முயற்ச்சிக்கு உண்டான வெற்றிகளை வாரி வழங்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை, தனுசு இலக்கின அன்பர்கள் அனைவரும் ராகுகேது பெயர்ச்சியால் வீரிய ஸ்தான வழியில் இருந்து நன்மைகளை பெறுகின்றனர் என்பது  கவனிக்க தக்க அம்சமாகும்.

குறிப்பு :

மேற்கண்ட பலாபலன்கள் தனுசு இலக்கின அன்பர்களுக்கு, தற்பொழுது நடைபெறும் திசாபுத்திகள் 03 மற்றும் 09ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே 100% சதவிகிதம் நடைபெறும், எனவே தனுசு இலக்கின அன்பர்கள் சுய ஜாதகத்தில் தற்பொழுது நடைபெறும் திசாபுத்திகள் 03,09ம் பாவக பலனை ஏற்று நடத்துகிறதா? என்பதில் தெளிவு பெறுவது அவசியமானதாக "ஜோதிடதீபம்" கருதுகிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

செவ்வாய், 12 ஜனவரி, 2016

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - விருச்சிக லக்கினம்



சாய கிரகங்கள் என்று போற்றப்படும் " ராகு கேது" பெயர்ச்சி, கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 8ம் ராசியான விருச்சிக ராசியை, லக்கினமாக கொண்ட அன்பர்களுக்கு, லக்கினத்திற்கு 10ல் ராகு பகவானும், 4ல் கேதுபகவானும் சஞ்சாரம் செய்து, இனி வரும் 18 மாதங்களுக்கு வழங்கும் பலாபலன்களை பற்றி ஆய்வு செய்வோம் அன்பர்களே!

விருச்சிக இலக்கின சிறப்பு இயல்புகள் :

விருச்சிக ராசியை ஜென்ம லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, லக்கினம் வலிமை பெறும் பொழுது, ஜாதகரின் இயக்கம் உணர்ச்சிபூர்வமானதாக அமையும், மனதின் எண்ணங்களும் சிந்தனையும் ஸ்திர தன்மையான வேகத்துடன் இயங்கிக்கொண்டே இருக்கும். அறிவுக்கு எட்டாத, புலனுக்கு அப்பாற்பட்ட சக்தியை தன்னகத்தே கொண்டவர்களாக காணப்படுவார்கள், வருமுன் காக்கும் சக்தி பெற்றவர்கள், இவர்களின் கணிப்பு பெரும்பாலும் தவறுவதில்லை, தனிப்பட்ட வாழ்க்கையில் நேர்மையையும், ஒழுக்கம் நிறைந்த கட்டுபாட்டினையும் கட்டிக்காக்கும் யோகம் பெற்றவர்கள், தமக்கு வரும் நன்மை தீமையை தாமே ஏற்றுகொள்ளும் மனபக்குவம் நிறைந்தவர்கள், தீவிர சிந்தனை விருச்சிக இலக்கின அன்பர்களுக்கு புதிய கண்டுபிடிப்புகளுக்கு சொந்தகாரர்களாக மாற்றும் வல்லமையை தரும், எதிர்பாராத புதையலுக்கு நிகரான சொத்து சுக சேர்க்கையை, தனது அறிவு திறன் மூலம் பெரும் யோகம் பெற்றவர்கள், குடும்ப வாழ்க்கையில் இன்னல்கள் வந்த போதிலும், பொது வாழ்க்கையில் நல்ல முன்னேற்றமும், பதவிகளும் தேடிவரும், தனது மனநிலையை ஒருநிலை படுத்துவது செயற்கரிய காரியங்களை மிக எளிதாக சாதிக்கக் வைக்கும் என்பது விருச்சிக இலக்கின அன்பர்களுக்கு இறையருள் வழங்கிய "வரம்" எனலாம்.

கடந்த ராகு கேது பெயர்ச்சி விருச்சிக இலக்கின அன்பர்களுக்கு 11ல் ராகுவும், 5ல் கேதுவும் யோக பலன்களை வழங்கிய போதிலும், பெருவாரியான நன்மைகளை பெற இயலவில்லை, ஆனால் தற்பொழுது பெயர்ச்சி அடைந்துள்ள ராகு கேது, சுக ஸ்தானமான 4ம் பாவகத்தில் கேது பகவானின் சஞ்சாரம், தங்களுக்கு புதிய சொத்துகள், புதிய வீடு, வண்டி வாகன யோகம், சுகபோகமான வாழ்க்கை, என மிகுந்த நன்மைகளை தர காத்திருக்கிறார், தங்களின் மேலான எண்ணங்கள் யாவும் வெற்றி பெரும், புதிய சொத்துகள் மூலம் லாபம் உண்டாகும், பெற்றோர் வழியில் இருந்து மிதமிஞ்சிய நன்மைகள் உண்டாகும், மகிழ்ச்சி பொங்கும் நிகழ்வுகள் அதிக அளவில் நடைபெறும், சொந்த பந்தம், உறவுகள் வழியில் இருந்து உதவிகள் கிடைக்கும், குல தெய்வ அனுகிரகம் உண்டாகும், எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும், இதுவரை வாகன வசதி இல்லாமல் இருந்தவர்களுக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும், வீடு கட்ட அல்லது வாங்க முயற்ச்சித்த நடவடிக்கைகள் உடனடியாக வெற்றி பெரும், அனுபவம் மிக்க பெரியோர்களின் வழிகாட்டுதல் தங்களுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டகரமான யோக வாழ்க்கையை தங்கு தடையின்றி வழங்கும், மனதிற்கு இனி நிகழ்வுகள் தங்களுக்கு சிறப்பான நல்ல மாற்றங்களை வாரி வழங்கும்.

10ல் ராகு பகவான் தங்களுக்கு தொழில் ரீதியான அபிவிருத்திகளை தன்னிறைவாக வாரி வழங்கும், ஸ்திரமான லாபங்கள் தங்களுக்கு சீறிய இடைவெளியில் வந்துகொண்டே இருக்கும், தங்களின் அதிதீவிரமான அறிவு திறன் காரணமாக செய்யும் தொழிலில் நிர்வாக திறைமை மேலோங்கும், செல்லும் இடங்களில் எல்லாம் வரவேற்ப்பும், லாபமும் கிடைக்க பெறுவீர்கள், ஏற்றுமதி இறக்குமதி வணிகம் புரியும் அன்பர்களுக்கு இந்த ராகுகேது பெயர்ச்சி அளவில்லா தனலாபத்தை வாரி வழங்கும், புதிய தொழில் வாய்ப்புகள் தங்களை தேடிவரும், கூட்டு முயற்ச்சி தங்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டங்களை வாரி வழங்கும், தங்களின் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் நிச்சயம் கிடைக்க பெறுவீர்கள், வலிமை பெற்ற ராகு பகவான் தங்களின் ஜீவன ஸ்தானத்திற்கு பரிபூர்ணா நன்மைகளை வழங்குவதால், தொழில் ரீதியான கௌரவம் மற்றும் அந்தஸ்து மற்றும் லாபங்கள் திடீரென அதிகரிக்கும், இதுவரை முன்னேற்றம் இல்லாமல் தத்தளித்துக்கொண்டு இருந்த தொழில்கள் குறுகிய காலத்தில் மிகப்பெரிய வெற்றிகளை பெரும், அரசு உதவிகள் மற்றும் அரசு கௌரவங்கள் தங்களுக்கு கிடைக்க வாய்ப்புண்டு, மேலும் இதுவைரை வேலை வாய்ப்பற்ற அன்பர்களுக்கு சிறப்பான வேலையும், பதவி உயர்வும் கிடைக்க பெறுவீர்கள், ஜீவன ஸ்தானத்தில் ராகுவின் சஞ்சாரம் தங்களுக்கு மிகப்பெரிய தொழில் முன்னேற்றங்களை வாரி வழங்கும்.

மொத்தத்தில் எதிர்வரும் ராகுகேது பெயர்ச்சி விருச்சிக இலக்கின அன்பர்களுக்கு 100% விகித "அதிர்ஷ்ட ராஜயோக" பலன்களை வாரி வழங்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை, விருச்சிக இலக்கின அன்பர்கள் அனைவரும் ராகுகேது பெயர்ச்சியால் மிகுந்த நன்மைகளை பெறுவதில் மூன்றாம் இடம் வகிக்கின்றனர் என்பது  கவனிக்க தக்க அம்சமாகும்.

குறிப்பு :

மேற்கண்ட பலாபலன்கள் விருச்சிக இலக்கின அன்பர்களுக்கு, தற்பொழுது நடைபெறும் திசாபுத்திகள் 04 மற்றும் 10ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் 100% சதவிகிதம் நடைபெறும், எனவே விருச்சிக இலக்கின அன்பர்கள் சுய ஜாதகத்தில் தற்பொழுது நடைபெறும் திசாபுத்திகள் 04,10ம் பாவக பலனை ஏற்று நடத்துகிறதா? என்பதில் தெளிவு பெறுவது அவசியமானதாக "ஜோதிடதீபம்" கருதுகிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வெள்ளி, 8 ஜனவரி, 2016

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - துலா லக்கினம்



 சாய கிரகங்கள் என்று போற்றப்படும் " ராகு கேது" பெயர்ச்சி, கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் ராசியான துலாம் ராசியை, லக்கினமாக கொண்ட அன்பர்களுக்கு, லக்கினத்திற்கு 11ல் ராகு பகவானும், 5ல் கேதுபகவானும் சஞ்சாரம் செய்து, இனி வரும் 18 மாதங்களுக்கு வழங்கும் பலாபலன்களை பற்றி ஆய்வு செய்வோம் அன்பர்களே!

துலா இலக்கின சிறப்பு இயல்புகள் :

துலா ராசியை ஜென்ம லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, லக்கினம் வலிமை பெறும் பொழுது, ஜாதகரின் செயல்பாடுகள் மிகவும் நேர்த்தியான தன்மையில் காணப்படும், அபரிவிதமான மக்கள் செல்வாக்கினையும், முகமதிப்பையும் பெரும் யோகம் உண்டாகும், மக்கள் தொடர்பு மூலம் வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றங்களை பெரும் அன்பர்களின் ஜாதகத்தில் துலாம் வலிமை பெற்று இருப்பது கவனிக்க தக்கது, இயல்பாக மிதமிஞ்சிய அறிவு திறனையும், சமயோசித புத்தியையும் குறைவின்றி தரும், மற்றவர் வழியை பின்பற்றாமல் தனிப்பட்ட வழிமுறையை கையாளும் யோகம் பெற்றவர்கள், எந்த ஒரு சூழ்நிலையையும் தனது அறிவு திறன் கொண்டு மிக எளிதாக கையாண்டு சரியான தீர்வுகளை தரும் யோகம் பெற்றவர்கள், புதுமை விரும்பிகள், மனதிற்கு எட்டாத விஷயங்களில் தேர்ச்சி பெற்றவர்கள், தன்னம்பிக்கையும் மன உறுதியையும் ஒருங்கே அமைய பெற்றவர்கள், ஆராய்ச்சி மூலம் பல அறிய புதிய கண்டுபிடிப்பிற்கு சொந்தகாரர்கள், எந்த ஒரு விஷயத்திலும் சத்தியத்தின் தன்மையை கடைபிடிக்கும் உத்தமர்கள், அறிவு சார்ந்த தொழில்நுட்பங்களில் கைதேர்ந்தவர்கள், புதிய கருவிகளை கையாளும் வல்லமையும், அதன் செயல்பாடுகளையும் விரைவாக உணர்ந்துகொள்ளும் மதிநுட்பமும் கொண்டவர்கள், நஷ்டத்தில் இயங்கும் எந்த ஒரு தொழிலிலும் சிறந்த நிர்வாக திறமையின் மூலம் மிகப்பெரிய  முன்னேற்றத்தை தரும் வல்லமை பெற்றவர்கள், "புத்தியே துணை" என்பது துலா இலக்கின அன்பர்களுக்கு மிக சரியாக பொருந்தும்.

கடந்த ராகு கேது பெயர்ச்சி துலா இலக்கின அன்பர்களுக்கு, 12ல் ராகுவும், 6ல் கேதுவும் மிகுந்த இன்னலகளை வழங்கி இருக்க கூடும், 12ம் பாவக வழியில் இருந்து அதிக வீண் விரையங்களையும், மன உளைச்சல்களையும், உடல்  நல பாதிப்புகளையும் தந்திருக்க கூடும், மேலும் மன நிம்மதி இழப்பு, கடன் சுமை, எதிரிகள் தொந்தரவு என வெகுவான பாதிப்புகள் தங்களை பாதித்து இருக்க வாய்ப்புண்டு, ஆனால் தற்பொழுது பெயர்ச்சி அடைந்துள்ள ராகு கேது, 11ம் பாவக வழியில் இருந்து ராகுவின் சஞ்சாரம் தங்களுக்கு மிகுந்த ஸ்திர  தன்மையான லாபங்களை வாரி வழங்கும், எதிர்பாராத அதிர்ஷ்டங்களும், முன்னேற்றங்களும் தங்களுக்கு அபரிவிதமாக அமையும், மனதில் எண்ணிய எண்ணங்கள் யாவும் நடைமுறைக்கு வரும், திட்டமிடுதல்கள் யாவும் செயல்முறை காணும், தொழில் ரீதியான முன்னேற்றம் என்பது ஸ்திர தன்மையில் லாபகரமாக அமையும், பொது வாழ்க்கையில் பெயரும் புகழும் உண்டாகும், ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்யும் அன்பர்களுக்கு மிகுந்த லாபம் கிடைக்கும்,  வெளிநாடுகளில் இருந்து நல்ல செல்வாக்கு உண்டாகும், புதிய வாய்ப்புகள் தங்கள் இல்லம் தேடி வரும், திருமண தடைகள் நீங்கி மணவாழ்க்கை சிறப்பாக அமையும், மனதிற்கு இசைந்த வாழ்க்கை துணை அமையும், தங்களின் மனதில் உள்ள ஆசைகள்  அனைத்தும் நிறைவேறும் யோக காலமாக இனிவரும் 18 மாதங்கள்  அமையும், தன்னம்பிக்கை மற்றும் முற்போக்கு சிந்தனையுடன் செயல்பட்டு யோக பலன்களை பெற "ஜோதிடதீபம்" வாழ்த்துகிறது.

5ல் சஞ்சாரம் செய்யும் கேதுபகவான் தங்களுக்கு 5ம் பாவக வழியில் இருந்து எதிர்பார்த்த நன்மைகளை தங்களுக்கு வழங்கும் என்பது கேள்விக்குறியே, எனவே தங்களது முயற்ச்சிகள் யாவும் பூர்வீகத்திற்கு அப்பார்ப்பட்டு அமைவது உசிதமானத "ஜோதிடதீபம்" கருதுகிறது, தங்களது வாரிசுகளுடன் மிதமான கருத்து பரிமாற்றத்துடன், அறிவுரைகளையும் வழங்குவது அவர்களின் வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றங்களை வாரி வழங்கும், எந்த ஒரு காரியத்திலும் தங்களின் செயல்பாடுகள் ஆழ்ந்த சிந்தனைக்கு பிறகு அமைவதே தங்களுக்கு நன்மையை தரும், நிறைய கேட்பதும் நிறைய சிந்திப்பதும், குறைவாக பேசுவதும் தங்களின் வாழ்க்கையில் இனிவரும் காலங்களில் மிகுந்த நன்மைகளை வாரி வழங்கும், தமக்கு வரும் நல்ல வாய்ப்புகளை மிக கவனமாக பயன்படுத்தி கொண்டு முன்னேற்றம் பெறுவது அவசியமானதாகும், தங்களது வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையையும், அதிசயத்தக்க மாற்றங்களையும் எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையை தர கேதுபகவான் தயார் நிலையில் இருப்பது மட்டும் கண்கூடான உண்மை, இனிவரும் காலங்களில் தங்களின் குல தெய்வத்தின் அருளாசி தங்களுக்கு வெகுவாக தேவை படும் என்பதால், குல தேவதை வழிபாட்டினை சிறந்த முறையில் மேற்கொள்வது தங்களின் வாழ்க்கையில் சிறப்பான நன்மைகளை வாரி வழங்கும்.

மொத்தத்தில் எதிர்வரும் ராகுகேது பெயர்ச்சி துலா இலக்கின அன்பர்களுக்கு 50% விகித "அதிர்ஷ்ட யோக" பலன்களை வாரி வழங்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை, துலா இலக்கின அன்பர்கள் அனைவரும் ராகுகேது பெயர்ச்சியால் சிம்ம ராகுவின் மூலம் அதிர்ஷ்டத்தையும், கும்ப கேதுவின் மூலம் நல்ல ஞானத்தையும் பெறுவது கவனிக்க தக்க அம்சமாகும்.

குறிப்பு :

மேற்கண்ட பலாபலன்கள் துலா இலக்கின அன்பர்களுக்கு, தற்பொழுது நடைபெறும் திசாபுத்திகள் 11 மற்றும் 5ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் 100% சதவிகிதம் நடைபெறும், எனவே துலா இலக்கின அன்பர்கள் சுய ஜாதகத்தில் தற்பொழுது நடைபெறும் திசாபுத்திகள் 11,5ம் பாவக பலனை ஏற்று நடத்துகிறதா? என்பதில் தெளிவு பெறுவது அவசியமானதாக "ஜோதிடதீபம்" கருதுகிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

செவ்வாய், 5 ஜனவரி, 2016

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - கன்னி லக்கினம்


 சாய கிரகங்கள் என்று போற்றப்படும் " ராகு கேது"  கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பூர்வ புண்ணிய ஸ்தானமான சிம்ம ராசியில் "ராகு" பகவானும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு அதிர்ஷ்டம் மற்றும் லாப ஸ்தானமான கும்பராசியில் "கேது" பகவானும் சஞ்சாரம் செய்து, கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 6ம் ராசியான, கன்னி ராசியை லக்கினமாக கொண்ட அன்பர்களுக்கு, லக்கினத்திற்கு 12ல் ராகு பகவானும், 6ல் கேதுபகவானும் சஞ்சாரம் செய்து, இனி வரும் 18 மாதங்களுக்கு வழங்கும் பலாபலன்களை பற்றி ஆய்வு செய்வோம் அன்பர்களே!

கன்னி இலக்கின சிறப்பு இயல்புகள் :

கன்னி ராசியை ஜென்ம லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு லக்கினம் வலிமை பெரும் பொழுது, தமது தனிப்பட்ட செயல்பாடுகளில் யாரும் தலையீடு செய்வதை சிறிதும் விரும்பாதவர்கள், ஒரு முடிவு செய்யும் முன் நிறையவே சிந்தனை செய்து செயல்படுவார்கள், இயற்கையாகவே அதித தன்னம்பிக்கையும் மன உறுதியும் பெற்றவர்கள், முற்போக்கு சிந்தனையும் சுதந்திர சிந்தனையும் ஒருங்கே அமைய பெற்றவர்கள், தாம் எடுக்கும் செயல்களில் எந்த விதத்திலாவது வெற்றியை பெற்றுவிடுவார்கள், புதிய வாய்ப்புகளையும் மற்றவர்களின் தனி திறமைகளையும் தனக்காக சிறப்பாக பயன்படுத்திகொள்ளும் வல்லமை பெற்றவர்கள், தனது கொள்கைகளிலும், லட்சியங்களிலும் சிறிதும் பிறளாது வெற்றியை பெற இறுதிவரை போராடும் குணம் கொண்டவர்கள், குறுகிய கால லாபங்களை அடிகடி பெரும் யோகம் பெற்றவர்கள், மக்கள் சக்தியை சரியான பாதையில் பரிணமிக்க செய்யும் யோகம் பெற்றவர்கள், வாழ்க்கையில் பல திருப்புமுனைகளை சந்திக்கும் தன்மையை தரும்.

தங்களுக்கு இதுவரை லக்கினத்தில் சஞ்சாரம் செய்து வந்த ராகு பகவானும், 7ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்து வந்த கேது பகவானும், இலக்கின வழியில்  இருந்து யோக பலன்களையும், களத்திர பாவக வழியில் இருந்து அவயோக பலன்களையும் தந்திருக்க கூடும், ஆனால் இனி வரும் 18 மாதங்களும் சாய   கிரகங்களான ராகுகேதுவினால் 12ம் பாவக வழியில் இருந்தும், 6ம் பாவக வழியில் இருந்தும் யோக பலன்களை தாங்கள் தங்கு தடையின்றி அனுபவிக்கலாம், "அனைத்து ஜோதிடர்களும் 12,6ம் வீடுகள் துர் ஸ்தானங்கள்  ஆயிற்றே தீமையை தானே தரும், மேலும் 12ம் பாவகத்திற்கு வரும் ராகு விரையத்தையும், 6ம் பாவகத்திர்க்கு வரும் கேது ஆரோக்கிய குறை மற்றும் கடன் சுமையை அல்லவே அதிகாரிக்கு என்ற கேள்வி தங்களுக்கு வரக்கூடும், இந்த கருத்து முற்றிலும் உண்மைக்கு புறம்பானதே.

 சுய ஜாதகத்தில் 12ம் பாவகம் மற்றும் 6ம் பாவக வலிமை பெரும் பொழுது ஒரு ஜாதகர் அனுபவிக்கும் யோக பலன்கள் என்னவென்பதை இனி காண்போம் அன்பர்களே !

தங்களுக்கு 12ல் சஞ்சாரம் செய்யும் ராகு பகவான், பெரிய முதலீடுகளில் ஈடுபடும் யோகத்தை தருவார், நல்ல அயன சயன சுகத்தையும், நிம்மதியான மன நிலையையும், திருப்தியான மன சந்தோஷத்தையும் வாரி வழங்குவார், தாங்கள் செய்யும் காரியங்களில் இறை நிலையின் அருளாசி பரிபூர்ணமாக காணப்படும், தன்னிறைவான பொருளாதார முன்னேற்றம் என்பது திடீரென ஏற்ப்படும், எதிர்பாராத வெளிநாடு வாய்ப்புகளும், வருமானங்களும் வந்து சேரும், தங்களது தொழில் சிறப்பான வருமான வாய்ப்புகளையும், திடீர் முன்னேற்றங்களையும் பெரும், ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் யோகம் மிகுந்த காலம் எனலாம், தங்களது ஆன்மீக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை சந்திக்கும் யோகம் உண்டாகும், இறை நிலையுடன் ஜீவசங்கமம் பெரும் யோகம் உண்டாகும், இறை அருளின் பரிபூர்ணதுவம் தங்களுக்கு புது வாழ்க்கையை வாரி வழங்கும், பல ஆன்மீக திருத்தலங்களுக்கு சென்று வரும் யோகம் உண்டாகும்.

தங்களுக்கு 6ல் சஞ்சாரம் செய்யும் கேது பகவான், குறுகிய கால அதிர்ஷ்டங்களையும், தங்களது சத்ரு வழியில் இருந்து யோக வாழ்க்கையை வாரி வழங்குவார், கேட்க்கும் இடத்தில் இருந்து பண உதவிகள் வந்துசேரும், தொழில் லாபங்கள் குறுகிய கால இடைவெளியில் வந்தவண்ணமே இருக்கும், உடல் நலம் மேம்படும், நீண்ட நாள் ஆரோக்கிய குறைகள் விரைவாக நிவர்த்தி பெரும், புதிய நபர்கள் தங்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு உதவி செய்வார்கள், நல்ல வேலையாட்கள் அமைவார்கள், பொருளாதார உதவிகளும், வங்கி கடன்களும் உடனடியாக கிடைக்க பெறுவீர்கள், வாராகடன்கள்  வசூல் ஆகும், தேவைகள் யாவும் பூர்த்தியாகும், தங்களுக்கு வரும் எதிர்ப்புகளே தங்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு பெரிய அளவில் உதவி புரியும், பயணங்களில் "ராஜயோக விருந்து" மற்றும் உணவு உபசரிப்பை போகும் இடங்களில் எல்லாம் அனுபவிக்கும் யோகம் உண்டாகும், நேர்மறையான எண்ணங்களால் தங்களின் வாழ்க்கையின் லட்சியங்களை குறுகிய காலங்களில் தங்குதடையின்றி அடைவீர்கள்.

 மொத்தத்தில் எதிர்வரும் ராகுகேது பெயர்ச்சி கன்னி இலக்கின அன்பர்களுக்கு 100% விகித "திடீர் விபரீத ராஜயோக" பலன்களை வாரி வழங்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை, கன்னி இலக்கின அன்பர்கள் அனைவரும் ராகுகேது பெயர்ச்சியால் மிகுந்த நன்மைகளை பெறுவதில் இரண்டாம் இடம் வகிக்கின்றனர் என்பது  கவனிக்க தக்க அம்சமாகும்.

குறிப்பு :

மேற்கண்ட பலாபலன்கள் கன்னி இலக்கின அன்பர்களுக்கு, தற்பொழுது நடைபெறும் திசாபுத்திகள் 12 மற்றும் 6ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் 100% சதவிகிதம் நடைபெறும், எனவே கன்னி இலக்கின அன்பர்கள் சுய ஜாதகத்தில் தற்பொழுது நடைபெறும் திசாபுத்திகள் 12,6ம் பாவக பலனை ஏற்று நடத்துகிறதா? என்பதில் தெளிவு பெறுவது அவசியமானதாக "ஜோதிடதீபம்" கருதுகிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

சனி, 2 ஜனவரி, 2016

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - சிம்ம லக்கினம்




சாய கிரகங்கள் என்று ஜோதிடத்தில் போற்றப்படுவதும், தாம் அமர்ந்த ராசியை ( பாவகம் ) தனது முழு கட்டுபாட்டில் எடுத்துகொண்டு யோக அவயோக பலன்களை வாரி வழங்கும் வல்லமை பெற்றதுமான ராகு கேது கிரகங்கள், 29.1.2016 தேதி நள்ளிரவு 2 மணி 3 நிமிடத்திற்கு, கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பூர்வ புண்ணிய ஸ்தானமான சிம்மராசியில் ராகு பகவானும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு அதிர்ஷ்டம் மற்றும் லாப ஸ்தானமான கும்பராசியில் கேது பகவானும் சஞ்சாரம் செய்து பலாபலன்களை வாரி வழங்க தாயராக உள்ளனர், ஒருவரின் சுய ஜாதகத்தில் பலன்கள் காண "லக்கினமே" அடிப்படையாக அமைவதால், ஒவ்வொரு லக்கினத்தை சார்ந்தவர்களும், இனிவரும் 18 மாதங்களில் சாய கிரகங்களான ராகு கேது வின் சஞ்சார நிலையில் இருந்து பெரும் யோக அவையோக பலன்கள் பற்றி இனிவரும் பதிவுகளில் சிந்திப்போம் அன்பர்களே!

29.1.2016 தேதி நள்ளிரவு 2 மணி 3 நிமிடத்திற்கு நடைபெறும் ராகு கேது பெயர்ச்சி கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் ராசியான சிம்மத்திலும், 11ம் ராசியான கும்பத்திலும் சஞ்சாரம் செய்ய இருப்பதால் ராகு சஞ்சாரம் செய்யும் சிம்ம ராசியை லக்கினமாக கொண்டவர்களுக்கு முன்னுரிமை தந்து, சிம்ம லக்கினத்திற்கு சாய கிரகங்கள் வழங்கும் பலாபலன்கள் எப்படி?இருக்கும் என்பதில் இருந்து இலக்கின வாரியாக தொடர்ச்சியாக காண்போம் அன்பர்களே !

சிம்ம லக்கினம் :

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 5 ம் ராசியான, சிம்ம ராசியை லக்கினமாக கொண்ட அன்பர்களே ! தங்களது லக்கினத்தில் ராகு பகவானும், களத்திர ஸ்தானமான கும்பத்தில் கேதுபகவானும் சஞ்சாரம் செய்து, இனி வரும் 18 மாதங்களுக்கு வழங்கும் பலன்களை பற்றி ஆய்வு செய்வோம் , 

சிம்ம இலக்கின சிறப்பு இயல்புகள் 

 கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பூர்வபுண்ணிய ஸ்தானம், ஸ்திர நெருப்பு தத்துவ சிம்ம ராசியை ஜென்ம லக்கினமாக கொண்ட அன்பர்களுக்கு லக்கினம் வலிமை  பெற்று அமைய பெற்றால், ஜாதகர் பெருதன்மை மிக்க குணங்களுடன், சிறப்பு மிக்க நிர்வாக திறமை கொண்டவராக காணப்படுவார், ஜாதகரின் திட்டமிடுதல்கள் யாவும் செவ்வனே நிறைவேறும், உடல் உறுதியும் மன உறுதியும் ஜாதகருக்கு இயற்க்கையாவே அமைய பெரும், தான் செய்யும் காரியங்கள் யாவிலும் தமது அறிவுத்திறனை மிக சிறப்பாக பயன்படுத்தும் வல்லமை கொண்டவர்கள், அதிக அளவில் நகைசுவை உணர்வு கொண்டவர்கள், சாஸ்திர ஞாணமும், தியானம் ஆன்மீக மற்றும் யோக பயிற்ச்சியில் தேர்ச்சி பெரும் அதிர்ஷ்டம் பெற்றவர்கள், சிறந்த ஆன்மீக பெரியோர்கள் அவதரித்த லக்கினம் சிம்மமே என்றால் அது மிகையில்லை, மேலும் சிம்ம இலக்கின அன்பர்களுக்கு இயற்க்கையாவே மனதிற்கு எட்டாத புலன் அறிவை பிறவியிலேயே பெற்றிருப்பார்கள்.

இதுவரை தங்களுக்கு 2ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்த ராகு பகவான், குடும்பம், வாக்கு தனம் என்ற வகையில் அதிக அளவில் இன்னல்களையும் போராட்டங்களையும் சந்திக்க வைத்திருக்க கூடும், மேலும் உடல் நிலையில் பாதிப்பும் வீண் விரையங்களும் ஏற்ப்பட்டிருக்க வாய்ப்புண்டு.

 ஆனால் இனி தங்களது லக்கினத்தில் சஞ்சாரம் செய்யும் ராகு பகவான் தங்களுக்கு ஸ்திர தன்மையான வெற்றிகளை வாரி வழங்குவார் என்பதில் சந்தேகம் இல்லை, கலைகளில் தேர்ச்சி, கல்வியில் மேன்மை, எதிர்பாராத திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும் யோகம், தன்னம்பிக்கை புத்திசாலித்தனம் மூலம் சிறந்த நன்மைகளை அனுபவிக்கும் யோகம், குல தெய்வத்தின் ஆசியினால் சகல காரியங்களிலும் வெற்றி, உயர் கல்வி சார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் என இனிவரும் 18 மாதங்களும் தங்களுக்கு ஏறுமுகமாகவே அமையும், பித்தம் சார்ந்த தொந்தரவுகள் வந்த போதிலும் பெரிய பாதிப்புகளை தாரது, வயிறு சார்ந்த பிரச்சனைகளுக்கு மட்டும் அதிக கவனம் எடுத்துகொள்வது நல்லது, பொதுவாக சிம்மத்தில் ராகு சஞ்சாரம் சிம்ம ராசிக்கு உண்டான பலாபலன்களை முழுவதும் தாமே சுவீகரிக்கும் என்பதால், லக்கினம் சார்ந்த யோக பலன்களை தங்களுக்கு தங்கு தடையின்றி தரும்.

 வெற்றி புகழ் கீர்த்தி என ராகு பகவான் தரும் நன்மைகளின் தரம் மிகவும் சிறப்பானதாகவும், நீடித்து நன்மைகளை தரும் அமைப்பிலும் இருக்கும் என்பதில் ஐயமில்லை, பொது வாழ்க்கையில் உள்ள அன்பர்களுக்கு மிகுந்த நன்மைகளையும், திடீர் பதவிகளையும் அலங்கரிக்கும் யோகம் உண்டாகும், உடலும் மனமும் தங்களுக்கு முழுவதும் ஒத்துழைக்கும், எண்ணிய எண்ணங்கள் யாவும் நடைமுறைக்கு வரும், அறிவு திறனும், சமயோசித புத்திசாலித்தனமும் தங்களுக்கு தன்னிறைவான பொருளாதார முன்னேற்றத்தையும், வாழ்க்கையில் புதிய மாற்றங்களையும் வாரி வழங்கும், புதிய மனிதர்கள் மற்றும் புதிய சூழ்நிலைகள் தங்களுக்கு மிகுந்த யோகத்தையும் நன்மையையும் வாரி வழங்கும்.

தங்களது களத்திர ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யும் கேது பகவான், இது வரை திருமணம் ஆகாத அன்பர்களின் வாழ்க்கையில் திடீரென திருமண வாழ்க்கையை சிறப்பாக அமைத்து தருவார், தங்களின் மனதிற்கு இசைந்த வாழ்க்கை துணையை கைபிடிக்கும் யோகம் உண்டாகும், காதல் திருமணம் கைகூடும், திருமண வாழ்க்கையில் இணைந்த தம்பதியரின் வாழ்க்கையில் மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடும், பொது வாழ்க்கையில் இருக்கும் அன்பர்களுக்கு இனிவரும் 18 மாதங்கள் "ராஜயோக" பலன்களை வாரி வழங்கும், தங்களது கற்பனையிலும் நினைத்திறாத யோக வாழ்க்கையை எதிர்கொள்ள முனைப்புடன் தயாராக சிம்ம இலக்கின அன்பர்கள் இருக்கலாம்.

பொது மக்களின் ஆதரவும், அரசியலில் செல்வாக்கும் அதிகரிக்கும் தங்களின் களத்திர  பாவகம் ஸ்திர காற்று தத்துவ ராசியான கும்பத்தில் அமைவதால், தங்களின் அறிவு  திறனும் அதிர்ஷ்டமும் ஒன்று சேர்ந்து செயல்படும், மனதில்  தன்னம்பிக்கையும் உற்சாகமும் அதிகரிக்கும், பெண்கள் வழியில் இருந்து ஆண்களும், ஆண்கள் வழியில் இருந்து பெண்களும் மிகுந்த நன்மைகளையும், யோகங்களையும் தங்கு தடையின்றி பெறுவார்கள், நுண்ணறிவு சார்ந்த துறைகளில் உள்ள அன்பர்களுக்கு உலக புகழ் பெரும் யோகம் உண்டாகும், கலைத்துறையில் உள்ள அன்பர்களுக்கு மிகப்பெரிய பெயரும் புகழும் உண்டாகும், ஆசைகள் அனைத்தும் நிறைவேறும், வெளிநாடுகளில் இருந்து தொழில் மற்றும் வேலை வாய்ப்புகள் தங்களை தேடிவரும், ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில் உள்ள அன்பர்களுக்கு இனிவரும் 18 மாதங்கள் அபரிவிதமான லாபங்களை வாரி வழங்கும், வெளிநாடுகளில் வசித்து வரும் அன்பர்களுக்கு புதிய வாய்ப்புகள், குடியுரிமை, அரசு ஆதரவு, அரசு சலுகைகள் அனைத்தையும்  அனுபவிக்கும் யோக உண்டாகும்.

 மொத்தத்தில் எதிர்வரும் ராகுகேது பெயர்ச்சி சிம்ம இலக்கின அன்பர்களுக்கு 100% விகித "ராஜயோக" பலன்களை வாரி வழங்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை, சிம்ம இலக்கின அன்பர்கள் அனைவரும் ராகுகேது பெயர்ச்சியால் மிகுந்த நன்மைகளை பெறுவதில் முதலிடம் வகிக்கின்றனர் என்பது  கவனிக்க தக்க அம்சமாகும்.

குறிப்பு :

மேற்கண்ட பலாபலன்கள் சிம்ம இலக்கின அன்பர்களுக்கு, தற்பொழுது நடைபெறும் திசாபுத்திகள் லக்கினம் மற்றும் களத்திர ஸ்தான பலனை ஏற்று நடத்தினால் 100% சதவிகிதம் நடைபெறும், எனவே சிம்ம இலக்கின அன்பர்கள் சுய ஜாதகத்தில் தற்பொழுது நடைபெறும் திசாபுத்திகள் 1,7ம் பாவக பலனை ஏற்று நடத்துகிறதா? என்பதில் தெளிவு பெறுவது அவசியமானதாக "ஜோதிடதீபம்" கருதுகிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

செவ்வாய், 29 டிசம்பர், 2015

தாமத திருமணமும் சுயஜாதகத்தில் களத்திர ஸ்தான வலிமை நிலையும்!


“ திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயம் செய்யபடுகிறது “ என்ற பழமொழிக்கு ஏற்ப திருமணம் என்பது ஒவ்வொரு தம்பதியருக்கும், யோகங்களை வாரி வழங்கும் தன்மையில் அமையவேண்டும், எந்த ஒரு ஜாதகருக்கும் திருமண வாழ்க்கையை நிர்ணயம் செய்வதில் முக்கிய பங்கு வகிப்பது சம்பந்தபட்ட ஜாதகரின் களத்திர ஸ்தானம் என்று அழைக்கப்படும் 7 ம் பாவக வலிமையே, சரியான வயதில் எவ்வித தங்கு தடையும் இன்றி திருமண வாழ்க்கை சிறப்பாக அமைவது சம்பந்தபட்ட ஜாதகத்தில் களத்திர பாவக வலிமையின் அடிப்படையிலே என்றால் அது மிகையில், சுய ஜாதகங்களில் களத்திர ஸ்தானம் வலிமை பெரும் பொழுது சம்பந்தபட்ட ஜாதகருக்கு பொருத்தமான வாழ்க்கை துணையை ( வது, வரன் ) சரியான பருவ வயதில், சரியான நேரத்தில், மிகவும் சிறப்பாக திருமணம் நடைபெறும், தாம்பத்திய வாழ்க்கையும் மணமக்களின் எதிர்பார்புகளை நிறைவேற்றி மிகவும் மகிழ்ச்சிகரமானதாக அமைத்துவிடும் என்பதில் சந்தேகம் இல்லை அன்பர்களே!

சுய ஜாதகங்களில் களத்திர ஸ்தானம் எனப்படும் 7 ம் பாவகம் எந்த விதத்திலாவது பாதிக்கப்படும் பொழுது, ஜாதகர் அல்லது ஜாதகியின் திருமண வாழ்க்கை வெகுவாக பாதிக்க படுகிறது, பொருத்தமற்ற வரன்கள் வருவது, திருமணம் தாமதம், திருமணதிற்கு பிறகு இன்னல்கள், தாம்பத்தியத்தில் மனகசப்பு, மன வாழ்க்கையில் பிரிவு என திருமண வாழ்க்கையையே மிகப்பெரிய கேள்விக்குறியாக மாற்றிவிடும், பொதுவாக களத்திர ஸ்தான வலிமையை பெரும்பாலும் 7ம் பாவகத்தில் அமர்ந்த கிரகம், பார்த்த கிரகம், 7ம் பாவகத்திற்கு அதிபதியான கிரகம், அவர் அமர்ந்த வீடு என நிர்ணயம் செய்வது, களத்திர ஸ்தான வலிமையை துல்லியமாக நிர்ணயம் செய்ய இயலாது அன்பர்களே!

 உதாரணமாக ஒருவரின் சுய ஜாதகத்தில் சாய கிரகங்களான ராகு அல்லது கேது களத்திர ஸ்தானத்தில் அமர்வது ஜாதகருக்கு களத்திர தோஷத்தை வழங்கும் என்று முடிவு செய்வது மிகவும் அபத்தமான விஷயம், களத்திர பாவகத்தில் அமர்ந்த ராகு அல்லது கேது சம்பந்தபட்ட பாவகத்திற்கு வலிமை பெற்று யோக பலன்களை தருகின்றனர? வலிமை அற்று அவயோக பலன்களை தருகின்றனர? என்று தெளிவு பெற்ற பின்பு ஜாதக பலன் காண முற்படுவதே சரியானதாக அமையும், சாய கிரகங்களுக்கு மட்டும் தாம் அமர்ந்த பாவகத்தை தனது கட்டுபாட்டில் கொண்டவரும் வல்லமை உண்டு, மேலும் சம்பந்த பாவகத்திற்கு 1௦௦ சதவிகித வலிமை பெற்று யோக பலன்களையோ, 1௦௦ சதவிகித வலிமை அற்று அவயோக பலன்களையோ தங்கு தடையின்றி வழங்கும் தனிப்பட்ட வலிமை உண்டு.

களத்திர ஸ்தான வலிமையை துல்லியமாக அறிந்துகொள்ள, 7ம் வீடு தாம் தொடர்பு பெரும் பாவகத்தின் அடிப்படையில் களத்திர ஸ்தான வலிமையை நிர்ணயம் செய்வது மிகவும் துல்லியமாக அமையும், உதாரணமாக 7ம் வீடு 6,8,12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது களத்திர ஸ்தான வலிமை அற்ற நிலையையும், 7ம் வீடு பாதக ஸ்தானத்துடன் ( சர லக்கினத்திற்கு 11ம் பாவகமும், ஸ்திர லக்கினத்திற்கு 9ம் பாவகமும், உபய லக்கினத்திற்கு 7ம் பாவகமும் ) சம்பந்தம் பெறுவது களத்திர ஸ்தான வழியில் இருந்து  கடுமையான பாதிப்புகளை தரும் என்பதை தெளிவாக உணரலாம், இதை தவிர்த்து வேறு எந்த பாவகத்துடன் 7ம் வீடு தொடர்பு பெறுவது சம்பந்தபட்ட ஜாதகருக்கு, மிகுந்த யோக பலன்களையே வாரி வழங்கும் என்பதில் சந்தேகமில்லை, ஒருவரது சுய ஜாதகத்தில் களத்திர பாவக வலிமையின் அடிப்படையில் பலாபலன்களை ஓர் உதாரணா ஜாதகம் கொண்டு விளக்கம் பெறுவோம் அன்பர்களே!



லக்கினம் : கடகம்
ராசி : மகரம்
நட்சத்திரம் : உத்திராடம் 2ம் பாதம்

மேற்கண்ட ஜாதகியின் திருமண தாமதத்திற்கு, ஜாதக ரீதியாக ஜோதிடர்கள் சொன்ன காரணங்கள் :

காரணம் 1) 
களத்திர ஸ்தானத்தில் ராகு, லக்கினத்தில் கேது எனவே கால சர்ப்ப தோஷம், திருமணம் தாமதம் ஆகிறது.

உண்மை நிலை :

 ஜாதகிக்கு லக்கினம் கடக ராசியில் 109:28:14 பாகையில் ஆரம்பித்து சிம்ம ராசியில் 137:56:07 பாகையில் முடிவடைகிறது, கேது பகவான்  கடக ராசியில் உள்ள 12ம் பாவகத்தில் 107:38:27 பகையில் மிகவும் வலிமை பெற்று அமர்ந்திருக்கின்றது.

 ஜாதகிக்கு களத்திர ஸ்தானம் மகர ராசியில் 289:28:14 பாகையில் ஆரம்பித்து கும்ப ராசியில் 317:56:07 பாகையில் முடிவடைகிறது, ராகு பகவான்  மகர  ராசியில் உள்ள 6ம் பாவகத்தில் 287:38:27 பகையில் மிகவும் வலிமை பெற்று அமர்ந்திருக்கின்றது.

எனவே சுய ஜாதகத்தில் திருமண தாமதத்திற்கு சாயா கிரகங்களான ராகுகேது காரணம் இல்லை என்பது 100% விகிதம் உறுதியாகிறது.

காரணம் 2) 
செவ்வாய் தோஷம், 8ம் பாவகத்தில் செவ்வாய் அமர்ந்து இருப்பது தோஷத்தை தரும் எனவே திருமணம் தாமதம் ஆகிறது.

உண்மை நிலை :

8ம் பாவகத்தில் அமர்ந்த செவ்வாய் எந்த ஒரு விதத்திலும் களத்திர ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறவில்லை என்பதாலும், செவ்வாய் தான் அமர்ந்த பாவக அமைப்பில் இருந்து மேஷம் விருச்சிகம் இரண்டு பாவகங்களுக்கும் நன்மை தருவது சிறப்பானதே, எனவே திருமண தாமதத்திற்கு செவ்வாய் காரணம் இல்லை என்பது உறுதியாகிறது.

காரணம் 3) 
சனி பகவான் 7ம் வீட்டில் அமர்ந்து இருப்பது, திருமணம் தாமதமாக காரணமாக உள்ளது.

உண்மை நிலை : 

ஜாதகிக்கு களத்திர ஸ்தானம் மகர ராசியில் 289:28:14 பாகையில் ஆரம்பித்து கும்ப ராசியில் 317:56:07 பாகையில் முடிவடைகிறது, சனி பகவான்  மகர  ராசியில் உள்ள 6ம் பாவகத்தில் 271:32:32 பகையில் மிகவும் வலிமை பெற்று அமர்ந்திருக்கின்றது.

காரணம் 4) 
களத்திர ஸ்தானத்தில் 3 பாவ கிரக சேர்க்கை எனவே திருமணம் அமைய தாமதமாகிறது.

உண்மை நிலை :

ஜாதகிக்கு களத்திர ஸ்தானம் மகர ராசியில் 289:28:14 பாகையில் ஆரம்பித்து மகர ராசியில் 317:56:07 பாகையில் முடிவடைகிறது, ராகு பகவான்  மகர  ராசியில் உள்ள 6ம் பாவகத்தில் 287:38:27 பாகையிலும், சனி பகவான்  மகர  ராசியில் உள்ள 6ம் பாவகத்தில் 271:32:32  பகையிலும், சந்திர பகவான்  மகர  ராசியில் உள்ள 6ம் பாவகத்தில் 270:25:14 பகையிலும் அமர்ந்து இருப்பதால், 3 பாவ கிரக சேர்க்கை 6ம் பாவகத்திலேயே அமைகிறது, எனவே திருமண தாமதத்திற்கு இதுவும் சரியான காரணமல்ல.

திருமண தாமதத்திற்கு உண்மையான காரணம் :

ஜாதகிக்கு 3,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், ஜாதகியின் 11ம் பாவகம் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு குடும்ப ஸ்தானமான ரிஷப ராசியில் அமைவதாலும், தற்பொழுது நடைமுறையில் உள்ள ராகு திசை விரைய ஸ்தான பலனை ஏற்று நடத்துவதும், விரைய ஸ்தானம் ஜாதகிக்கு கால புருஷ தத்துவத்திற்கு முயற்ச்சி ஸ்தானமாக  அமைவது திருமனத்திற்க்காக எடுக்கும் முயற்சிகளில் தோல்வியையும்  வாரி  வழங்குகிறது.

வாழ்க வளமுடன் 
 ஜோதிடன் வர்ஷன் 
9443355696