கிருத்திகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கிருத்திகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 10 ஜனவரி, 2024

மேஷம் - அதிபதி செவ்வாய் ஜென்ம ராசியில் நின்று தரும் யோக பலன்கள் !

 


 மேஷ லக்கினம் அல்லது ராசி அதிபதி செவ்வாய் ஜென்ம ராசியில் அமர்வது என்பது ஜாதகருக்கு மிகுந்த நன்மைகளை தரும் அமைப்பாகும், ஜாதகரின் உடல்நலம், மனவலிமை, வளரும் சூழ்நிலை, பெயரும் புகழும் தனதாக்கி கொள்ளும் யோகம், சுறுசுறுப்பும்  வேகமும் ஜாதகருக்கு சிறுவயது முதலே வெற்றிகளை வாரி வழங்கும், அனைத்தையும் அறிந்துகொள்ளும் ஆர்வமும், சுய முன்னேற்றத்தில் அதிக ஈடுபாடும் உண்டாகும், சரியான விஷயங்களையும் சிறப்பான செய்கைகளையும் முன்னெடுக்கும் யோகம் பெற்றவர்கள், சிறந்த ஒழுக்கம், சுயகட்டுப்பாடு, நேர்மை நிறைந்த செயல்பாடுகள், அபரிவிதமான நிர்வாக திறமை, புதிய சிந்தனை, எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் உடல் மற்றும் மனோவலிமையை பெற்று சாதனை புரியும் வல்லவர்கள்.

அசுவினி ( கேது ) நட்சத்திரத்தில் செவ்வாய் அமர்வது : 

 ஜாதகரின் ஞானம் போற்றுதலுக்கு உரியதாக அமையும், விரைவாக முடிவெடுக்கும் தன்மை, அனைவரையும் அனுசரித்து செல்லுதல், சார்ந்து இருப்பவரை காப்பாற்றும் வலிமை, நினைத்ததை நடத்தி முடிக்கும் பேராற்றல், செய்தொழில் நேர்த்தி, சிறந்த திட்டமிடுதல்கள், ஆன்மீகத்தில் வெற்றி, ஆன்மீக பெரியோர்களின் அருளாசியை பெறுதல், சிறந்த தொழில்நுட்ப அறிவாற்றல், சிக்கலான பிரச்சனைகளுக்கு எளிமையான தீர்வுகளை முன்னெடுப்பது, பாரம்பரியம் மிக்க விஷயங்களை மிக சிறப்பாக கையாண்டு தனது புகழை உலகிற்க்கு உணர்த்துவது, அடுத்தது என்ன என்பதை அறிவு மேற்றும் செயல்பாடுகள் கொண்டு தீர்மானிப்பது, சில நொடிகளில் மிகப்பெரிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது, எந்த சூழ்நிலையிலும் மனதைரியத்தை இழக்காமல்  செயல்படுவது, சுய திறமை மூலம் அனைத்தையும் வெற்றி கொள்வது, புலனுக்கு அப்பாற்பட்ட அறிவாற்றலும், சமயோசித புத்திசாலித்தனமும் இவர்களுக்கு இறை அருள் வழங்கிய அற்புதமான கொடையாகும்.

பரணி ( சுக்கிரன் ) நட்சத்திரத்தில் செவ்வாய் அமர்வது : 

  ஜாதகரின் வாழ்க்கை சிறுவயது முதலே நேர்த்தியான தன்மையிலான முன்னேற்றங்களை வாரி வழங்கும், உடலும் மனமும் ஜாதகருக்கு விரும்பியபடி ஒத்துழைப்பை நல்கும், எதிர்பாலினர் ஜாதகரின் வெற்றிகளுக்கு அடிப்படை காரணமாக அமைவர், எளிதில் அனைத்தையும் சுவீகரிக்கும் யோகத்தை தரும், கல்வியில் தனது விருப்பம், தொழிலில் தனது விருப்பம் முழுமையாக நிறைவேறும், கற்பனையும் கலைத்திறனும் ஜாதகருக்கு சிறப்பான வெற்றிகளை வாரி வழங்கும், கலாரசனையும் கல்வியில் மிகப்பெரிய வெற்றிகளையும் குவிக்கும், சிறந்த மருத்துவ அறிவாற்றல் ஜாதகரின் வாழ்வில் புகழ்மிக்க மருத்துவராக திகழச்செய்யும், இயல் இசை நாடகம் போன்ற கலை துறைகளில் குறுகிய காலங்களில் அபரிவிதமான வெற்றிகளை வாரி வழங்கும், தன்னம்பிக்கை விடாமுயற்சி, கடின உழைப்பில் அதீத ஆர்வம், லட்சியங்களை வெற்றி கொள்ளும் யோகம், பொதுமக்கள் மீதான அக்கறை, சமுதாய ரீதியான செயல்பாடுகள், ஜாதகரின் இனிமையான வார்த்தைகள் மிகப்பெரிய மாற்றங்களை மக்களுக்கு நல்கும், தோல்வியில் இருந்து விரைவில் விடுபட்டு வெற்றியை சுவீகரிக்கும் யோகம் பெற்றவர்கள், தன்முனைப்பும் சுய முன்னேற்றமும் இவர்களுக்கு சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும்.

கிருத்திகை ( சூரியன் ) நட்சத்திரத்தில் செவ்வாய் அமர்வது : 

 ஜாதகருக்கு அதிகாரமும் ஆளுமைத்திறனும் வாழ்நாள் முழுவதும் மிகப்பெரிய  முன்னேற்றங்களை வழங்கிக்கொண்டே இருக்கும், தனது வலிமையை உணர்ந்து செயற்கரிய காரியங்களை சாதிப்பார்கள், பிறப்பின் அருமையை உணர்ந்து செயல்படும் யோகம் உண்டு, உடல் ஆரோக்கியம் மற்றும் மனவலிமை சார்ந்த விஷயங்களில் அதீத அக்கறையுடன் செயல்படுவார்கள், தனிமைவிரும்பி என்பதுடன், தனித்து வெற்றிபெறும் யோகம் பெற்றவர்கள், எதிர்ப்பது யாரென்றாலும் அஞ்சாமல் துணிந்து செயலாற்றி வெற்றி பெறுவார்கள், ஆட்சி அதிகாரத்தில் இவர்களது பங்கு அதிகம் இருப்பதுடன், அரசியல் ரீதியான ஆளுமை என்பது இவர்களுக்கு மிகப்பெரிய பொறுப்புகளை பெற்றுத்தரும், மிகசிறந்த அறுவைசிகிச்சை நிபுணராகவும், பொறியியல் துறையில் சாதனை செய்யும் வல்லவர்களாகவும், சுய தொழில் செய்வதன் மூலம் குறுகிய காலத்தில் மிகப்பெரிய முன்னேற்றங்களை பெரும் யோகம் பெற்றவர்கள், லட்சியமும் கனவுகளும் இவர்களுக்கு மிக எளிதாக கைகூடும், வாழ்வில் நினைத்ததை சாதிக்கும் வல்லமை என்பது இவர்களுக்கு இறைஅருள் வழங்கிய அற்புதமான கொடையாகும்.

ஜோதிடன் வர்ஷன் 

9443355696

வெள்ளி, 21 டிசம்பர், 2012

சகல யோகமும், வாழ்க்கையில் மிக பெரிய வெற்றியை பெரும் ஜாதக நிலை !



ஜாதக பொது பலன்கள் 

லக்கினம் : கன்னி 
ராசி : ரிஷபம் 
நட்சத்திரம் : கிருத்திகை 4 ம் பாதம் 

ஜாதக அமைப்பில் நல்ல நிலையில் உள்ள பாவகங்கள் :

1,2,3,5,6,7,8,9,11,12 வீடுகள் லாபஸ்தானம் மற்றும் அதிர்ஷ்ட ஸ்தானம் எனும் பதினொன்றாம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, தங்களது ஜாதகத்தில் மிகுந்த வலிமையை பெற்று காணப்படுகிறது , குறிப்பாக லாப ஸ்தானம் கடகமாக இருப்பது மிகுந்த அளவில்லா அதிர்ஷ்டத்தை தரும் .

1 ம் பாவக அமைப்பில் இருந்து அதிக லாபம் , செல்வா செழிப்பு , பரஸ்பர உதவி , நோய் குணமடயும் தன்மை , வருமுன் உணர்ந்து செயல்படும் தன்மை , நினைத்த எண்ணங்கள் பலிதமாகும் யோகம் , திருமணம் மூலம் யோக வாழ்க்கை , அதிக குழந்தைகள் , நல்ல வளரும் சூழ்நிலை , சிறந்த அறிவாற்றல் , வெற்றி மேல் வெற்றி பெரும் யோகம் , தன்னம்பிக்கை , சுய கட்டுபாடு , பொதுமக்கள் ஆதரவு என்ற அமைப்பில் லாப ஸ்தான பலனை தரும் .

ம் பாவக அமைப்பில் இருந்து அதிர்ஷ்டம் , நண்பர்கள் உதவி மூலம் வாழ்க்கையில் மேன்மை பெரும் யோகம் , செல்வ நிலையில் செழிப்பு , இனிமையான வாக்கு , அதிக வருமானம் பெரும்  யோகம் , ஜாதகரின் பேச்சுக்கு மக்களிடம் மதிப்பு மரியாதை ஏற்ப்படும் தன்மை , செல்லும் இடங்களிலெல்லாம் நல்ல செல்வாக்கும் , முன்னேற்றமும் உண்டாகும் , இருப்பினும் வாழ்க்கை துணை  வழியில் இருந்து சிறு சிறு இன்னல்கள் ஏற்ப்பட கூடும் , அதனால் பெரிய பாதிப்பு எதுவும் வர வாய்ப்பு இல்லை .

ம் பாவக அமைப்பில் இருந்து நினைத்த எண்ணங்கள் ஈடேறும் தன்மை , நல்ல வியாபாரம் , அதிக வாகன யோகம் , விவசாயத்தில் முன்னேற்றம் , சொகுசு  வண்டி வாகனம் , வீடு , மண் மனை  வாங்கும் யோகம் , எடுக்கும் காரியங்களை முடிக்கும் திறமை , முயற்ச்சி வெற்றி பெரும் அமைப்பு , நிறைய சொத்து சுக சேர்க்கை , தர்ம சிந்தனை , ஜோதிடம் மற்றும் கணிதத்தில் புலமை ஏற்படுதல் , திருமணத்திற்கு பின் அதிர்ஷ்ட வாழ்க்கையை தரும் .

ம் பாவக அமைப்பில் இருந்து லாட்டரியில் யோகம் , தனது சுய அறிவாற்றல் , புத்திசாலித்தனத்தால் ஆதாயம் , எப்பொழுதும் மகிழ்ச்சி , குழந்தை மனைவி குடும்பத்தாருடன் நல்லுறவு , தனது  குல தேவதையின் பரிபூரண ஆசிகள் ஜாதகருக்கு எப்பொழுதும் கிடைக்கும் யோகம் , ஆன்மீக வாழ்க்கையில் வெற்றி , நல்ல நினைவாற்றல் , சிறப்பான சிந்தனை மூலம் வாழ்க்கையில் அதிர்ஷ்ட  அமைப்பை பெரும் யோகம் என்ற அமைப்பில் லாப ஸ்தான பலனை தரும் .

ம் பாவக அமைப்பில் இருந்து சுலபத்தில் வெற்றி பெரும் தன்மை , புத்தி கூர்மை , பங்கு சந்தை , லாட்டரி மூலம் அதிர்ஷ்ட யோகம் , கூலி ஆட்கள், தொழிலாளர்கள் மூலம் லாபம் , நான்கு கால்  ஜீவன்கள் மூலம் லாபம் , விவசாயத்தில் வெற்றி , கடன் கொடுப்பது , வாங்குவதால் லாபம் என்ற அமைப்பில் லாப ஸ்தான பலனை தரும் .

ம் பாவக அமைப்பில் இருந்து நல்ல வாழ்க்கை துணை , நன்மை செய்யும் நண்பர்கள் , திருப்தியான கூட்டாளி கூட்டு தொழில் மெல்லாம் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றி பெரும் யோகம் , வாழ்க்கை துணை வழியில் இருந்து அறிவு வழியில் அல்லது பொருளாதார அமைப்பில் இருந்து ஆதரவு , பொதுமக்கள் செல்வாக்கு , அரசியலில் வெற்றி வாய்ப்பு , வெளிநாடுகளில்  இறந்து வரும் நல்ல வாய்ப்புகள் மற்றும் செல்வ விருத்தி , பல தொழில் செய்யும் யோகம் , மக்களை நம்பி செய்யும் தொழில்கள் யாவும் வெற்றி மேல் வெற்றி தன்மை என்ற  அமைப்பில் லாப ஸ்தான பலனை செய்யும் .

ம் பாவக அமைப்பில் இருந்து நீண்ட ஆயுள் , நல்ல உடல் ஆரோக்கியம் ,குறுகிய காலத்தில் திடீர் என அதிர்ஷ்ட வாழ்க்கையை பெரும் தன்மை , வழக்குகளில் வெற்றி பெரும் தன்மை , சேமிப்பின் மூலம்  முன்னேற்றம் பெரும் யோகம் , சுய தொழில் மூலம் அதிர்ஷ்ட வாய்ப்புகள் , பங்கு வர்த்தகத்தில் அதிர்ஷ்ட யோகம் , போதும் என்ற மன நிலை , மக்கள் செல்வாக்கு , திருப்தியான  வாழ்க்கை என்ற அமைப்பில் லாப ஸ்தான பலனை செய்யும் .

ம் பாவக அமைப்பில் இருந்து தெய்வீக அனுபவம் , தான் செய்த புண்ணியத்தின் பலனை முழுவதுமாக பெரும் யோகம் , இறை நிலையின் அருள் ஆற்றல் ஜாதகருக்கு பரிபூரணமாக வாழ்நாள் முழுவதும் கிடைக்கும் பேரு , சுற்று பயணம் செல்வதாலும் , பயனங்களினாலும் அதிக லாபம், அறிவாளி , நல்ல சிந்தனையாளர் , ஒழுக்கம் , சுய கட்டுப்பாடு , தன்னம்பிக்கை அதிகம் கொண்டுள்ள  ஜாதகர் , வெளிநாடுகளில் யோக வாழ்க்கை , ஆராய்ச்சி மூலம் அதிர்ஷ்ட வாழ்க்கை , எல்லா நன்மைகளும் எளிதில் கிடைக்கும் யோகம் என்ற அமைப்பில் லாப ஸ்தான  பலனை செய்யும் .

11 ம் பாவக அமைப்பில் இருந்து நீடித்த அதிர்ஷ்டம் வாழ்நாள் முழுவதும் கிடைக்கும் , அனைத்திலும் லாபம் , நல்ல குணம் , பல அறிய பொருட்கள் ஜாதகருக்கு கிடைக்கும் யோகம் , தன்னை விட  வயதில் மூத்தவர்களின் வழியில் இருந்து வரும் யோகம் மற்றும் நல்வாய்ப்புகள் , என்ற அமைப்பில் லாப ஸ்தான பலனை செய்யும் .

4,10 ம் வீடுகள் ஜீவன ஸ்தானம் எனும் 10 ம் வீட்டுடன் தொடர்பு பெறுவது நான்காம் பாவக அமைப்பில் இருந்து நல்ல தொழில் முன்னேற்றம் , பெயரும் புகழும் கிடைக்கும் யோகம் , மண் மனை வண்டி வாகன யோகம் , ஆள் வசதி , சிறந்த நிர்வாக திறமை , சரியான தீர்ப்பு சொல்லும் தன்மை , அரசு ஆதரவின் மூலம் வாழ்க்கையில் நன்மை பெரும் யோகம் , பெரிய சொத்து சுக சேர்க்கை , விளையாட்டு துறையில் ஆர்வம் , அரசு கௌரவம் , சமுக வாழ்க்கையில் வெற்றி , அரசியலில் மிகப்பெரிய வெற்றி என்ற அமைப்பிலும் , உத்தியோகம் , வியாபாரம் , தொழில் முதலியவற்றில்  மிகப்பெரிய வெற்றியை பெரும் யோகம் , கம்பீரமான வாழ்க்கை , தீர்க்கமான வாதம் , தனது பேச்சாற்றல் மூலம் அனைத்தையும் சாதிக்கும் யோகம் , வாழ்நாள் முழுவதும்  அதிர்ஷ்ட தொழில் வாய்ப்புகள் வந்துகொண்டே இருக்கும் தன்மை , சுய தொழில் மற்றும் கூட்டு தொழில் செய்வதால் வெற்றி மேல் வெற்றி பெரும் யோகம் , என்ற அமைப்பிலும்  ஜாதகருக்கு முன்னேற்றத்தை தரும் , ஜாதகர் சுய தொழில் செய்வதாலேயே முன்னேற்றம் என்பதை பெற முடியும் , வேலைக்கு செல்வதால் ஜாதகரின் யோக நிலைகள் வெகுவாக  பாதிக்க பட கூடும் .

ஜாதக அமைப்பில் பாதிக்க பட்ட பாவகங்கள் :

தங்களது ஜாதகத்தில் ஒரு பாவகமும் பாதிக்க படவில்லை .


பரிகாரம் :

1 தினமும் சூரிய நமஸ்காரம் அதிகாலை 5 மணிக்கே எழுந்து செய்து வருவது சகல யோகத்தையும் தரும் .
2 வருடம் ஒரு முறை வளர் பிறை திங்கள் அன்று திருப்பதி சென்று ஸ்ரீ வாரி பெருமானை தரிசித்து வருவது சகல நன்மைகளையும் தரும் .
3 தாங்கள் குடியிருக்கும் இடத்தில் இருந்து தெற்கு திசையில் இருக்கும் ஒரு அம்மன் கோவிலுக்கு பௌர்ணமி திதிகளில் சென்று வழிபடுவது அவசியம்.



வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443306969