கிழக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கிழக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 21 ஜனவரி, 2017

வாஸ்து சாஸ்த்திரமும் சுய ஜாதக பாவக வலிமையும் !


" எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம் " என்பதற்கு இணங்க சுய ஜாதகத்தில் லக்கினமே அடிப்படையாக விளங்குகிறது, மேலும் பனிரெண்டு பாவகங்களின் வலிமை சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு யோக வாழ்க்கையை நல்கிறது, இதில் ஒருவர் வசிக்கும் வீடு வாஸ்து சாஸ்த்திர முறைப்படி இருப்பின், சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு யாதொரு இன்னல்களும் வர வாய்ப்பில்லை என்பதும், ஜாதகர் சுய ஜாதக ரீதியாக வரும் இன்னல்களில் இருந்து விடுபடுவார் என்பதும் ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்றாகவே " ஜோதிடதீபம் " கருதுகிறது, " அவனின்றி ஓர் அணுவும் அசையாது " என்ற இறைஅருளின் கருணைக்கு இணங்க ஒருவரின் வாழ்க்கையில் நடைபெறும் சகல நிகழ்வுகளையும் சுய ஜாதக வலிமையே நிர்ணயம் செய்கின்றது, சுய ஜாதகத்தில் ஒருவருக்கு சுக ஸ்தானம் எனும் 4ம் பாவகமும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 4ம் ராசியான கடகமும் மிகவும் வலிமையுடன் இருப்பின், சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு குடியிருப்பதற்கு, நிறைவான வசதி மற்றும் சரியான வாஸ்து  கொண்ட வீடு இயற்கையாகவே அமைந்துவிடும்.

 எனவே ஒருவருக்கு நல்ல வாஸ்து அமைந்த வீடு கிடைப்பதற்கு, சுய ஜாதக பாவக வலிமையே அடிப்படையாக விளங்குகிறது, சுய ஜாதகத்தில் இல்லாத ஓர் விஷயத்தை வாஸ்து முறைப்படி அமைந்த வீடு கொடுத்துவிட வாய்ப்பு இல்லை, அனைத்திற்கும் மூலஆதரமாக அமைவது சுய ஜாதக வலிமையே என்றால் அது மிகையில்லை, மேலும் சுய ஜாதகத்தில் 4ம் பாவகம் பெரும் வலிமையின் அடிப்படையிலும், 4ம் வீடு தொடர்பு பெரும்  பாவகம் குறிப்பிடும் திசை சார்ந்த வாயிற்படி கொண்ட வீடுகளில் குடியிருப்பது, சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையில் சகல நலன்களையும் வாரி வழங்கும், தனக்கு உகந்த திசை அற்ற வாயிற்படி கொண்ட வீடுகளில் குடியிருக்கும் அன்பர்களுக்கு ( சம்பந்தப்பட்ட வீடு வாஸ்து பிரகாரம் அமைந்து இருப்பினும் ) கடுமையான நெருக்கடிகளையும் அதிக அளவிலான இன்னல்களையும் வாரி வழங்கி விடும், ஜாதகர் தமது வாழ்க்கையில் சுய ஜாதகப்படி அனுபவிக்க வேண்டிய இன்னல்களில் இருந்து வாஸ்து நன்றாக அமைந்த வீடு நிச்சயம் காப்பாற்ற வழியில்லை, ஏனெனில் சுய ஜாதக வலிமையின் அடிப்படையிலேயே நாம் குடியிருக்கும் வீடுகளையும், நாம் புதிதாக கட்டும் வீடுகளையும் நிர்ணயம் செய்வது சாலச்சிறந்தது, இதை கருத்தில் கொண்டே நமது முன்னோர்கள் 2 தலைமுறைக்கு பிறகு வீடுகளை மாற்றி அமைத்துக்கொண்டு இருந்தனர் அல்லது புதிய வீடுகளை தமது சந்ததிகளுக்கு அவர் அவர்களுக்கு உகந்தபடி புதிதாக கட்டி கொடுத்தனர், இதனால் யாதொரு இன்னல்களும் இன்றி அவர்களது சந்ததிகளும், அவர்களும் சுகபோக வாழ்க்கையில் யாதொரு நெருக்கடியும் இன்றி சிறப்பாக வாழ்ந்தனர்.

 தகப்பனாருக்கு உகந்த கிழக்கு திசை வாயிற்படி மகனுக்கு ஏற்றதாக இல்லை எனில் சம்பந்தப்பட்ட குடும்பத்தில் மகனின் ஆதிக்கமும் வெற்றியும் தட்டி பறிக்கப்படும், மகனின் உழைப்பு திறமை யாவும் குடத்தில் இட்ட விளக்குபோல் பயனற்றதாக மாறிவிட அதிக வாய்ப்பு உண்டு, எனவே சுய ஜாதகத்தில் 4ம் பாவக வலிமையை அடிப்படையாக கொண்டு, அவரவருக்கு உகந்த திசை கொண்ட வீடுகளில் குடியிருப்பதே சகல நன்மைகளையும் தரும், ஜாதகரின் உழைப்பும் வீணாகாது, சகல விதங்களில் இருந்தும் நன்மைகளை பெறலாம், தனக்கு பொருத்தம் இல்லாத வீடுகளில் ( அது அரண்மனையாக இருந்தாலும் கூட ) குடியிருப்பது சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையில் 100% சதவிகித இன்னல்களையே வாரி வழங்கும், வாஸ்து சாஸ்த்திரத்தை தனக்கு உகந்த வகையில் ( சுய ஜாதக வலிமைக்கு ஏற்ப )  பயன்படுத்திக்கொண்ட அன்பர்களே, வாழ்க்கையில் சகல யோகங்களையும் மிகசிறந்த  முன்னேற்றங்களையும் பெற்று உள்ளனர்.

உதாரணமாக ஒருவரது சுய ஜாதத்தில் லக்கினம் மற்றும் நான்காம் பாவகம் களத்திர  ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது ஜாதகர் மேற்கு திசை சார்ந்த வாயிற்படி கொண்ட வீட்டில் குடியிருப்பது சகல யோகங்களையும் வாரி வழங்கும், மேலும் தனது ஜீவனம் சார்ந்த விஷயங்களை மேற்கு திசை சார்ந்த வாயிற்படி கொண்ட அலுவலகமாக பார்த்துகொள்வது சிறப்பு மிக்க ஜீவன முன்னேற்றத்தை தரும், மேற்கண்ட விஷயம் சர லக்கினத்தாருக்கும், ஸ்திர லக்கினத்தாருக்கும் பொருந்தும் ஆனால் உபய லக்கினத்தாருக்கு முற்றிலும் பொருந்தாது, ஏனெனில் உபய லக்கினத்தாருக்கு 7ம் பாவகம் பாதக ஸ்தானமாக அமையும் என்பதால், சுய ஜாதகத்தில் உபய லக்கினம் பெற்றவர்களுக்கு 1,4ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பின் அவர்கள் மேற்கு திசை சாந்த வீடுகளில் குடியிருப்பது உகந்தது அல்ல ஏனெனில் 200% சதவிகித இன்னல்களையும் துன்பங்களையும் தரும்.

சுய ஜாதகத்தில் 4ம் பாவகம் தொடர்பு படுத்தும் திசை சார்ந்த வீடு மற்றும் அலுவலகங்களை பயன்படுத்தும் பொழுது சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையில் சகல நன்மைகளும் தேடிவரும், இதில் யாதொரு மாற்றமும் இல்லை ஆனால் தொடர்பு பெரும் வீடு பாதக ஸ்தானமாக அமைந்து, பாதக ஸ்தானம் குறிக்கும் திசையில் குடியிருப்பது சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையை கடுமையாக பாதிப்பிற்கு ஆளாக்கும்.

பொதுவாக சுய ஜாதகத்தில் சுக ஸ்தானம் என்கின்ற 4ம் பாவகமும், காலபுருஷ தத்துவத்திற்கு  4ம் ராசியான கடகமும் வலிமை பெற்று இருப்பின் சம்பந்தப்பட்ட ஜாதகர் வாஸ்து சார்ந்த கவலைகளை விட்டுவிடலாம், ஏனெனில் இயற்கையாகவே அவர்களுக்கு வசிப்பதற்கு சரியான வாஸ்து அமைந்துள்ள வீடு கிடைத்துவிடும், சுய ஜாதகத்தில் 4ம் பாவகம் பாதிக்கப்பட்டும் காலபுருஷ தத்துவத்திற்கு 4ம் ராசியான கடகமும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் மட்டுமே மிகுந்த எச்சரிக்கையாக தான் குடியிருக்கும் வீட்டினை தேர்வு செய்ய வேண்டி வரும், சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவகம் குறிப்பிடும் திசை சார்ந்த வீடுகளை தேர்வு செய்து வசிப்பது, பாதிக்கப்பட்ட 4ம் பாவாக கெடுதல்களை வெகுவாக குறைக்கும், யோக வாழ்க்கைக்கு சரியான வழிகாட்டும்.

குறிப்பு :

ஒருவருக்கு சரியான வாஸ்து அமைந்த வீடு கிடைப்பதும் சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையே, எனவே சுய ஜாதக வலிமையை அடிப்படையாக கொண்டு தமக்கு உகந்த வீட்டை தேர்வு செய்வதே சாலச்சிறந்தது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வியாழன், 9 அக்டோபர், 2014

புதிதாக வீடு கட்டும் பொழுது ஜெனன லக்கினத்தை வைத்து வீட்டிற்கு வாயிற்படி வைப்பதா ? ஜெனன ராசியை வைத்து வீட்டிற்கு வாயிற்படி வைப்பதா ?





இதற்கு கண்ணதாசனின் வரிகள் பொருத்தமானதாக இருக்கும்,
"இருக்கும் இடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சௌக்கியமே" என்ற வார்த்தைக்கு இணங்க சுய ஜாதக அமைப்பின் படி லக்கினத்தை அடிப்படையாக கொண்டு வீடு நிலம், சொத்து சுகம், வண்டி வாகனம் அமைப்பை குறிக்கும் நான்காம் பாவக வலிமை உணர்ந்தும், காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு நான்காம் பாவகமான கடக ராசியின் நிலை உணர்ந்தும் ஜாதக ரீதியாக நன்மை தரும் திசை அமைப்பை தெரிந்துகொண்டு வீட்டிற்கு வாயிற்படி அமைப்பது சால சிறந்தது, ஜோதிடதீபம் இதை முந்தைய பதிவிலேயே தெளிவாக அறிவுறித்தி இருக்கிறது, இருப்பினும் இந்த பதிவில் விரிவாக காண்போம் அன்பர்களே!

" வீடு " இது ஒருவருக்கு சரியாக அமைந்துவிட்டால் இதற்க்கு பிறகு வரும் நிலம்,சொத்து,சுகம்,வண்டி,வாகனம் மற்றும் தொழில் ஆகியவை ஜாதகருக்கு சரியாக அமைந்துவிடும், புதிதாக வீடு கட்டுவதற்கு முன் அல்லது வாங்குவதற்கு முன்  ஒருவரின் ஜாதகத்தில் நாம் கவனத்தில் எடுத்துகொள்ளவேண்டிய பாவகம் பூர்வ புண்ணியம் எனும் 5ம் பாவகம், ஏனெனில் ஒரு ஜாதகர் சிறப்பாக ஜீவித்து இருக்க உகந்த இடத்தை தெள்ள தெளிவாக உணர்த்துவது, இந்த பூர்வ புண்ணியம் என்றால் அது மிகையில்லை, உதாரணமாக ஒருவரின் சுய ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் எனும் 5ம் பாவகம் நல்ல நிலையில் இருப்பின், ஜாதகர் தனது பூர்வீகம் சார்ந்த பகுதிகளில் ( அதாவது 100 கிலோமீட்டர் சுற்றளவில் ) வீடு கட்டவோ அல்லது வாங்கவோ முயற்ச்சிக்கலாம், அப்படி கட்டும் அல்லது வாங்கும் வீட்டில் ஜாதகர் ஜீவிக்கும் பொழுது சகல செல்வங்களும் நிறைந்து நிற்கும்.

ஒரு வேலை சுய ஜாதகத்தில் 5ம் பாவகம் பாதிக்கபட்டு இருப்பின் ஜாதகர், தனது பூர்வீகத்தின் அப்பால் ( அதாவது 100 கிலோமீட்டருக்கு அப்பால் ) சென்று ஜீவித்து இருப்பதே சகல நலன்களையும் வாரி வழங்கும், இந்த விஷயம் குடும்ப தலைவன் ஒருவரின் ஜாதகத்தையே கட்டுபடுத்தும் என்பதால், அந்த குடும்ப தலைவனின் ஜாதகத்தை அடிப்படையாக கொண்டு நிர்ணயம் செய்வதே சால சிறந்தது, எனவே முதலில் ஒரு ஜாதகர் எங்கு வசிப்பது என்ற விஷயத்தை முடிவு செய்துகொள்வது சிறந்தது.

இதற்க்கு பிறகு குடும்ப தலைவன் என்ற பொறுப்பில் இருக்கும் ஜாதகரின் லக்கினத்தை அடிப்படையாக கொண்டு, அவரின் நான்காம் பாவக வலிமையை அறிந்துகொள்வதும், அவரின் ஜாதகத்தில் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 4ம் பாவகமான கடகம் எப்படி பட்ட நிலையில் இருக்கின்றது என்பதை கருத்தில் கொள்வதும், ஜாதகர் குறிப்பிட்ட ஊரில் எந்த திக்கில் குடியிருக்கலாம் என்பதை நிர்ணயம் செய்துவிடலாம், இதற்க்கு அடுத்து குறிப்பிட்ட ஜாதகருக்கு நான்காம் வீடு தொடர்பு பெரும் பாவக அமைப்பை கருத்தில் கொண்டு, ஜாதகருக்கு அமையும் வீட்டின் தலைவாயிற்படியின் திசையை மிக துல்லியமாக அறிந்து கொள்ள முடியும்.

இதன் அடிப்படையில் ஒருவரின் ஜாதகத்தில் நான்காம் வீடு லக்கினம் எனும் முதல் பாவகத்துடன் தொடர்பு பெரும் பொழுது, ஜாதகர் தனது வீட்டின்  வாயிப்படியை கிழக்கு முகமாக அமைத்து கொள்வது சகல நிலைகளில் இருந்தும் முன்னேற்றத்தை வரி வழங்கும், இதை போன்றே ஜாதகர் செய்யும் தொழில் அமைப்புகளையும் நிறுவனங்களையும் கிழக்கு திசையில் வாயிர்ப்படி அமைந்து கொள்வது அபரிவிதமான வளர்ச்சியை வாரி வழங்கிவிடும், அடிப்படையில் ஒருவர் குடியிருக்கும் வீட்டின் அமைப்பில் இருந்தே முன்னேற்றமும், பொருளாதார வளர்ச்சியும், உடல் நலனும், உறவுகள் ஆதரவும் கிடைக்க பெறுவதால், வீடு என்ற ஒரு விஷயத்தில் ஜாதகர் சரியான முடிவு எடுத்து அமைத்துகொண்டால், ஜாதகரின் முன்னேற்றமும் அபரிவிதமான வளர்ச்சியையும் எவராலும் தடுத்து நிறுத்த இயலாது அன்பர்களே !

சுய ஜாதகத்தில் ஒருவருக்கு நான்காம் வீடு சுக ஸ்தானமான நான்காம் பாவகத்துடனே சம்பந்தம் பெறுகிறது என்று வைத்து கொண்டால், ஜாதகருக்கு ஏற்ற வாயிற்படி வடக்கு திசை என்பதை உறுதி செய்துவிடலாம், எனவே இந்த அமைப்பை பெற்ற ஜாதகரின் வீட்டின் வாயிபடியும் சரி, தொழில் நிறுவனத்தின் வாயிற்படியும் சரி வடக்கு திசையில் அமைவது சால சிறந்தது, ஜாதகரின் அதிரடியான முன்னேற்றத்தை எவராலும் தடுத்து நிறுத்த இயலாது, மேலும் பொருளாதார வளர்ச்சியும், சொத்து சுக சேர்க்கையும் மிகவும் அபரிவிதமாக அமைந்துவிடும் என்பது உறுதி, ஆக நான்காம் வீடு சுக ஸ்தானமான  நான்காம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றால் ஜாதகர் வடக்கு திசை வாயிற்படியை தனது வீட்டிற்கு அமைத்து கொள்வது சால சிறந்தது ஜாதகரின் முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக இது அமையும்.

சுய ஜாதகத்தில் ஒருவருக்கு நான்காம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுகிறது என்று வைத்துகொண்டால், ஜாதகருக்கு ஏற்ற வாயிற்படி மேற்கு திசை என்பதை உறுதி செய்துவிடலாம், மேலும் ஜாதகரின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் என்பது தனது வாழ்க்கை துணை வழியில் இருந்தும், பொதுமக்களின் ஆதரவில் இருந்து கிடைக்கும் கூடுதல் யோகம் என்பதை மறுப்பதற்கில்லை, இந்த அமைப்பை பெற்ற ஜாதகர் அனைவரும் தனது திருமணதிற்கு பிறகு சில காலங்களிலேயே வீடு கட்டும் யோகத்தையோ, வீடு வாங்கும் யோகத்தையோ, பெறுகிறார்கள் என்பது கவனிக்க தக்கது, இவர்களுக்கு மேற்கு திசையில் வாயிற்படி கொண்ட தொழில் நிறுவனங்கள் இருந்து அபரிவிதமான வெற்றிகள் குவிகிறது என்பதை கவனிக்க வேண்டிய விஷயமாக ஜோதிடதீபம் கருதுகிறது.

சுய ஜாதகத்தில் ஒருவருக்கு நான்காம் வீடு ஜீவன ஸ்தானமான 10 ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுகிறது என்று வைத்துகொண்டால், ஜாதகருக்கு ஏற்ற வாயிற்படி தெற்கு  திசை என்பதை உறுதி செய்துவிடலாம், மேலும் ஜாதகரின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் என்பது தான் செய்யும் தொழில் அமைப்புகளில் இருந்து அபரிவிதமாக பெறுவார், மேலும் ஜாதகரின் வீடு மற்றும் தொழில் நிறுவனங்கள் தெற்கு திசை வாயிற்படி கொண்டதாக அமைத்து கொள்வது சால சிறந்தது, மேற்கண்ட அமைப்பை பெரும் ஜாதகர்கள் தனது குழந்தை பருவத்திலேயே சரியான திசையில் வாயிற்படி கொண்ட வீடுகளில் ஜீவனம் செய்யும் யோகத்தை தந்துவிடுகிறது, அதாவது தனது முன்னோர்களின் வீடு மற்றும் சொத்து ஜாதகருக்கு, இயற்கையாக அமைந்துவிடுகிறது, எனவே ஜாதகருக்கு ஜீவனம் செய்ய வீடு இல்லை என்ற நிலை ஏற்படுவதில்லை, மேலும் ஜாதகரின் முன்னேற்றமும் வளர்ச்சியும் எவ்விதமும் பாதிக்க  படுவதில்லை.

 எனவே சுய ஜாதகத்தில் லக்கினத்தை அடிப்படையாக கொண்டு தனது வீட்டின் வாயிற்படியை நிர்ணயம் செய்வதே சகல நிலைகளில் இருந்தும் முன்னேற்றம் தரும் , தன்னிறைவான பொருளாதார வளர்ச்சி, சுய முன்னேற்றம் மற்றும் சுக வாழ்க்கைக்கு உறுதியளிக்கும், தனது லக்கினத்தின் அடிப்படையில் நான்காம் பாவக தொடர்பு அறிந்து, தனது வீட்டிற்கு வாயிற்படி அமைக்கும் பொழுது ஜாதகர் 16 வகை செல்வங்களையும் பரிபூரணமாக சம்பந்தபட்ட ஜாதகர் அல்லது குடும்ப தலைவர் பெறுவார் என்பது உறுதி.

ஆக சுய ஜாதகத்தில் நான்காம் வீடு லக்கினத்துடன் தொடர்பு பெற்றால் ஜாதகர் கிழக்கு  திசை வாயிற்படியும், நான்காம் வீடு சுக ஸ்தானத்துடன் தொடர்பு பெற்றால் வடக்கு திசை வாயிற்படியும், நான்காம் வீடு களத்திர ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்றால் மேற்கு திசை வாயிற்படியும், நான்காம் வீடு ஜீவன ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்றால் தெற்கு திசை வாயிற்படியும் கொண்ட வீடுகளில் குடியிருப்பதும், வீடு கட்டி குடியிருப்பதும் சம்பந்தபட்ட ஜாதகருக்கு சகல விதங்களில் இருந்தும் நன்மை தரும், ஒருவரின் ராசியை வைத்து வீட்டின் வாயிற்படியை நிர்ணயம் செய்வது சரியான யோக பலன்களை தராது என்பதே ஜோதிடதீபத்தின் அறிவுரை.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696