பூர்வ புண்ணியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பூர்வ புண்ணியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

சுய ஜாதக அமைப்பில் பாதிக்க பட்ட பாவகங்களில் இருந்து, நன்மை பெற ஜாதகர் என்ன செய்ய வேண்டும் ! பாகம் 1





பொதுவாக ஒருவருடைய ஜாதக அமைப்பில் நவக்கிரக அமைப்பால் , லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்கள் பாதிப்படைந்து இருக்கும் எனில் , அந்த  பாவகங்களின் பலன்களை நடப்பு திசை அல்லது எதிர்வரும் திசை தருமாயின் , இதனால் ஜாதகர் குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து துன்பங்களையும் , கெடுதலான பலன்களையும் அனுபவிக்க வேண்டி வரும் , இதையே பல ஜோதிடர்கள் தோஷம் என்று சொல்கின்றனர் , மேலும் அப்படி வரும் தீமையான பலன்களில் இருந்து ஒரு ஜாதகர் எப்படி தப்பிப்பது , தீமையான பலன்களில் இருந்து விடுபட்டு கர்ம வினை பதிவினை கழித்து கொள்வது , சம்பந்தபட்ட பாவக வழியில் இருந்து நன்மை பெறுவது எப்படி என்று இந்த பதிவில் காணலாம் . அதாவது பரிகாரம் தேடிக்கொள்வது எப்படி என்பதை பார்க்கலாம் )

லக்கினம் பாதிக்க பட்டு நடப்பு திசை பலனை தருமாயின் :


ஜாதகர் சுயமாக முடிவெடுக்காமல் , குடும்பத்தில் வயது முதிர்ந்தவர்கள் , அனுபவசாலிகளிடம் ஆலோசனை பெற்று செய்வது காரியங்களில் 100 சதவிகித வெற்றியை தரும் , போதை வஸ்துகளின் பக்கம் தலை வைத்து படுக்காமல் இருப்பது நல்லது , உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது மிகுந்த நன்மையை தரும் , மேலும் மனதை அலைய விடாமல் ஒருநிலை படுத்தி தன்னம்பிக்கையை வளர்த்துகொல்வதும் , சுய கட்டு பாட்டுடன் வாழ்க்கையை நடத்துவதும் , நல்ல பழக்க வழக்கங்களை கடை பிடித்து வாழ்வதும் நிச்சயம் தீமையான பலன்களில் இருந்து காப்பாற்றி , நன்மை தரும் , மேலும் விழிப்புணர்வுடன் இருப்பது ஜாதகருக்கு மிகப்பெரிய வெற்றியை தரும் .


இரண்டாம் பாவகம்  பாதிக்க பட்டு நடப்பு திசை பலனை தருமாயின் :


ஜாதகர் அளவறிந்து செலவு செய்வதும் , தேவையற்ற செலவுகளை குறைத்து கொள்வதும் ,வீண் ஆடம்பரங்களை களைந்து எளிமையான வாழ்க்கையை வாழ பழகி கொள்வது அவசியம் , இல்லையெனில் அதிக துன்பம் வந்து சேரும் , மேலும் தாம்பத்திய வாழ்க்கையில் வாழ்க்கை துணையுடன் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் அவர்களுக்கு நன்மை மட்டுமே செய்ய வேண்டும் , வாழ்க்கை துணை தங்களை மனம் நோகும் படி செய்தாலும் அவர்களை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு நன்மை செய்து வாழ்க்கை நடத்த வேண்டும் , குறிப்பாக தேவையில்லாமல் பேசகூடாது , இதனால் மன நிம்மதி கெடும் , யாரிடமும் அதிகம் பேசாமல் அமைதி காப்பது தங்களுக்கும் நல்லது , தங்களை சார்ந்தவருக்கும் நல்லது .


மூன்றாம்  பாவகம்  பாதிக்க பட்டு நடப்பு திசை பலனை தருமாயின் :


சகோதர வழயில் இருந்து வரும் இன்னல்களையும் , துன்பங்களையும் ஏற்றுகொள்வது ஜாதகரீதியாக மிகப்பெரிய நன்மைகளை வாரி வழங்கும் , குறிப்பாக எடுக்கும் முயற்ச்சிகளில் சரியாக கவனம் செலுத்துவது குறிப்பிட்ட காரியத்தில் வெற்றியை தரும் , தேவையில்லாமல் பெண்களிடம் பேசுவது ஜாதகருக்கு அதிக சிக்கல்களை உருவாக்கும் , மன நிம்மதி கெடும் தேவையில்லாத வீண் முயற்ச்சிகள் எடுத்து தோல்வியை தழுவ வேண்டி வரும் , திட்டமிடாத செயல்களால் நிறைய தோல்விகளை சந்திக்க வேண்டிவரும் , மேலும் சரியான உண்மை  தகவல்களை ஜாதகர் புரிந்துகொள்ள முடியாத நிலைக்கு ஆட்ப்படலாம் , இதனால் தவறான முடிவு அவசரப்பட்டு எடுத்து சிக்கல்களை உருவாக்கி கொள்ள கூடும் எனவே எதிலும் நிதான போக்கை கடை பிடிப்பது அவசியம் , பொறுமையுடன் இருப்பது சகல நலன்களையும் தரும் .

நான்காம் பாவகம்  பாதிக்க பட்டு நடப்பு திசை பலனை தருமாயின் :

ஜாதகர் குடியிருக்கும் வீடு தனக்கு உகந்த அமைப்பில் இருக்கிறதா என்று சரியான ஜோதிடரின் மூலம் ஆலோசனை பெற்று , தனக்கு உகந்த வாயிர்ப்படி அமைந்த வீடுகளில் இருப்பது சகல நலன்களையும் தரும் , தனது பெயரில் , வீடு , வண்டி , வாகனம் ஆகியவற்றை வைத்து கொள்ளாமல் இருப்பது நல்லது , தனது தாய்க்கு ஏதாவது உடல் நிலை பிரச்சனை ஏற்ப்பட்டால் உடனடியாக ஓடி சென்று கவனித்துகொள்வது நான்காம் வீட்டு பாதிப்பான பலனில் இருந்து காப்பாற்றும் , மேலும் வாகனங்களில் செல்லும்பொழுது அதிக கவனமுடன் வாகனத்தை இயக்குவது நலம் தரும் , அல்லது வாகன ஓட்டுனரை பணிக்கு நியமித்து கொள்வது சால சிறந்தது , மற்றவரிடம் பழகும் பொழுது கோப உணர்வை காட்டாமல் , அன்பாக பேசுவது நலம் தரும் .

ஐந்தாம் பாவகம்  பாதிக்க பட்டு நடப்பு திசை பலனை தருமாயின் :

ஜாதகர் தனது பூர்வீகம் எதுவோ அந்த இடத்தை விட்டு வெகு தொலைவில் சென்று ஜீவனம் செய்வது மிகுந்த நன்மை தரும் , ஐந்தாம் பாவகம் பாதிக்க பட்டால் ஜாதகர் தனது பூர்வீகத்தை விட்டு வெளியில் செல்வது ஒன்ற சரியான தீர்வாக இருக்க முடியும் , மேலும் தனது குழந்தைகளால் வரும் இன்னல்களை ஜாதகர் ஏற்றுக்கொள்வதும் , முறையாக குலதெய்வ வழிபாட்டினை மேற்க்கொல்லுவதும் நிச்சயம் இந்த பாவக வழியில் இருந்து அதிக நன்மைகளை வாரி வழங்கும் , குறிப்பாக அமாவசை தினங்களில் குலதெய்வ கோவில்களுக்கு சென்று முன் பின் தெரியாத மக்களுக்கு அண்ண தானம் செய்து வழிபடும் பொழுது ஜாதகருக்கு மேற்கண்ட பாவக வழியில் இருந்து நிச்சயம் நன்மை தரும் , இதனால் பூர்வ புண்ணிய ஸ்தானம் விரைவில் வலிமை பெரும் .

ஆறாம் பாவகம்  பாதிக்க பட்டு நடப்பு திசை பலனை தருமாயின் :

ஜாதகர் யாரிடமும் தேவையின்றி கடன் வாங்காமல் , கொடுக்காமல் இருப்பது மிகுந்த நன்மை தரும் , உடல் நிலையில் அதிக கவனம் செலுத்துவது பெரிய உடல் நிலை பாதிப்பில் இருந்து காப்பாற்றும் , இந்த கால கட்டங்களில் சிறு முதலீடு செய்வது நிச்சயம் இழப்பையே தரும் , மன நலம் கெடும் , இந்த காலகட்டங்களில் ஜாதகர் தீய பழக்க வழக்கங்களுக்கு ஆட்ப்படாமல் இருப்பது நன்மை . இல்லையெனில் மீள தீய பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகும் சூழ்நிலையை தரும் , யாவரிடமும் பகைமை பாராட்டாமல் சுகுமுமான போக்கை கடைபிடிப்பது சால சிறந்தது , மேலும் மற்றவருக்கு ஜாமீன் ஏற்காமல் இருந்தால் ஜாதகரின் பெயருக்கு எவ்வித களங்கமும் வர வாய்ப்பிருக்காது .




வாழ்க வளமுடன்

ஜோதிடன் வர்ஷன்
9443355696


செவ்வாய், 4 செப்டம்பர், 2012

ஜோதிட ஆலோசனை : கேந்திர பாவகங்கள் எனும் 1 , 4 , 7 , 10 வீடுகள், வலிமையாக இருந்தும் யோக வாழ்வினை பெற முடியாத ஜாதக அமைப்பு !?



மேற்கண்ட ஜாதகருக்கு கேந்திர பாவகங்கள் எனும் லக்கினம் , நான்காம் பாவகம், களத்திர பாவகம் , ஜீவன ஸ்தானம் ஆகியன , மிகவும் சிறப்பாக அமைந்து இருக்கிறது , குறிப்பாக 1) லக்கினம்  களத்திர பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது , 2 )  சுக ஸ்தானம் நான்காம் வீட்டுடன் தொடர்பு பெறுவது , 3 ) களத்திர பாவகம் ஏழாம் வீட்டுடன் தொடர்பு பெறுவது , 4 ) ஜீவன ஸ்தானம் பத்தாம் வீட்டுடன் தொடர்பு பெறுவது , ஜாதக அமைப்பில் மிகவும் சிறப்பான நிலையை காட்டுகிறது .

மேலும் லக்கினம் சர கடக ( நீர் ) ராசியுடன் சம்பந்தம் பெறுவதும் , சுக ஸ்தானம் சர மேஷ ( நெருப்பு ) ராசியுடன் சம்பந்தம் பெறுவதும் , களத்திர ஸ்தானம் சர கடக ( நீர் ) ராசியுடன் சம்பந்தம் பெறுவதும் , ஜீவன ஸ்தானம் சர துலாம் ( காற்று ) ராசியுடன் சம்பந்தம் பெறுவதும் , 100 சதவிகித நன்மையான பலனையே தரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை , மேலும் உண்மையில் இதை போன்ற யோக ஜாதக அமைப்பை காணுவது அரிதிலும் அரிது , ஜாதகரின் வாழ்க்கையில் சகல யோகங்களும் பரிபூரணமாக அமையப்பெற்ற ஜாதகம் இதுவென்று நிச்சயம் சொல்ல முடியும் , மேலும் அடிப்படை கல்வி , உயர்கல்வி , தொழில் , திருமணம் , வீடு, வண்டிவாகன யோகம் , சகல வசதி வாய்ப்புகள் அனைத்தையும் அனுபவிக்க வேண்டிய ஜாதகரின் தற்ப்பொழுதைய நிலை நேருக்கு மாறாக இருக்கிறது , ஜாதகத்தில் இருக்கும் யோக நிலையை சிறிதுகூட ஜாதகரால் இன்னும் அனுபவிக்க முடியவில்லை, இதற்க்கு என்ன காரணம் என்று இந்த பதிவில் காணலாம் , மேலும் ஒரு யோக ஜாதக அமைப்பை சார்ந்தவருக்கு , நடை முறையில் யோகங்கள் பலன் தராமல் இருப்பதற்கு காரணம் என்னவென்பதையும் காணலாம் .

ஜாதகத்தில் சுப யோகம் தடைபட காரணம் :

மேற்கண்ட ஜாதகருக்கு கேந்திர பாவகங்கள் மிகசிறப்பான நிலையில் இருந்தாலும் , பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம் , 200 மடங்கு தீமையை செய்யும் பாதக ஸ்தானதுடன் சம்பந்தம் பெற்று , ஜாதகர் தனது பூர்வீகத்திலேயே குடியிருப்பதும் , பாதக ஸ்தானத்திற்கு சம்பந்தம் பெற்ற கிழக்கு திசை வாயிற்படி அமைந்த வீட்டில் ஜீவனம் செய்வதுமே, கேந்திர பாவகங்களின் யோக பலன்களை அனுபவிக்க இயலாத அமைப்பிற்கும்,  கேந்திர பாவக யோக நிலை பலன் தடைக்கும்  முக்கிய காரணம் , இதன் காரணமாக ஜாதகத்தில் கேந்திர பாவக அமைப்பில் இருந்து கிடைக்க வேண்டிய நன்மைகள் எதுவுமே இதுவரை ஜாதகருக்கு கிடைக்கவில்லை , எடுத்துகாட்டாக கல்வியில் சிறந்து விளங்க வேண்டிய ஜாதகருக்கு , அடிப்படை கல்வியிலேயே தடை ஏற்ப்பட்டது . சிறப்பான ஜீவனம் அமைய வேண்டியது , இதுவரை நிலையான தொழில் இல்லை , சரியான காலத்தில் திருமணம் அமைய வேண்டியது , ஜாதகருக்கு 3o வருடங்கள் ஆகியும் இன்னும் திருமணம் அமைய வில்லை , பல தொழில் செய்ய வேண்டிய ஜாதக அமைப்பு இதுவரை அடிப்படை வருவாயினை பெறுவதற்கே வாழ்க்கையில்  போராடிக்கொண்டு இருக்கிறார் .


ஜாதகத்தில் இருக்கும் யோகங்கள் அனைத்தையும் அனுபவிக்க வழி :

நிச்சயம் ஜாதகர் பூர்வீகத்தில் குடியிருக்க கூடாது , தனது பூர்வீகத்தை விட்டு 100 km தொலைவுக்கு அப்பால் சென்றுவிடுவது சாலசிறந்தது , பூர்விகம் பாதிக்க பட்டாலே அதிக பாதிப்புகளை ஜாதகர் அனுபவிக்க வேண்டும் , இந்த ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் பாதக ஸ்தானதுடன் சம்பந்தம் பெறுவது மிகவும் சிரமத்தின் பேரில் வாழ்க்கையை நடத்தும் சூழ்நிலையை தந்துவிடும்,  மேலும் பூர்விகத்தில் குடியிருந்தால் ஜாதகரின் கதி அதே கதிதான் , எனவே ஜாதகரை பூர்வீகத்தை விட்டு அதிக  தொலைவில் சென்று வாழ்க்கை நடத்த சொல்லி அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தோம் , இதற்க்கு சரியான வழி இது ஒன்றே . பூர்வீகத்தை விட்டு ஜாதகர் வெளியே வந்தாலே ஜாதகரின் வாழ்க்கை மிகப்பெரிய வெற்றியை பெரும் வாழ்வாக நிச்சயம் மாறிவிடும் , மேற்கண்ட கேந்திர பாவகங்கள் யோக  பலன்களை 100 சதவிகிதம் தடை இன்றி தர ஆரம்பித்து விடும் , மேலும்  ஜாதகருக்கு ஏற்ற வடக்கு திசை வாயிர்ப்படி கொண்ட வீடாக அமைந்து விட்டால்,  நிச்சயம் முழு யோகமும்,  அதிக நன்மைகளும்  கேந்திர பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை .

வாழ்க்கையில் முன்னேற்றம் பெற இயலாதவர்கள் , ஜாதக ரீதியாக யோகம் இருந்தும் ,யோக நிலை பாதிக்கபட்டவர்கள் , சரியான ஜோதிட ஆலோசனை மூலம் ,  தனது ஜாதக நிலையை தெளிவாக தெரிந்துகொண்டு சுய  ஜாதக அமைப்பின் படி , வாழ்க்கையில் முன்னேற்றம் பெற சரியான வழி முறையை கடை பிடித்து,   வாழ்க்கையில் வெற்றி பெறுங்கள் .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696