வெள்ளி, 10 ஜூலை, 2015

ரஜ்ஜு பொருத்தமும் திருமண வாழ்க்கையும் !



 திருமண பொருத்தம் காண்பதில் பெரும்பாலான ஜோதிடர்களின் கருத்து நட்சத்திர பொருத்ததில் "ரஜ்ஜு" பொருத்தம் இல்லை எனில், பொருந்தாது திருமணம் செய்வதை தவிர்ப்பது நலம், மீறி திருமணம் செய்தால் தாம்பதியரின் வாழ்க்கை கடுமையாக பாதிக்கும், உயிருக்கு கண்டம் ஏற்ப்படும், கணவனை இழந்து வாழும் சூழ்நிலைக்கு மணப்பெண் தள்ளபடுவார் என்ற ஒரு வாதத்ததை கூறுவது வழக்கமாக கொண்டுள்ளது வருந்ததக்கது, இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான விஷயமாகவே ஜோதிடதீபம் கருதுகிறது, ஏனெனில் ரஜ்ஜு பொருத்தம் அற்ற நட்சத்திரங்களை பெற்ற தம்பதியரின் ஜாதகங்களில் 12 பாவகங்கள் வலிமை பெற்று இருப்பின், திருமண வாழ்க்கை சிறிதும் பாதிப்பதில்லை, ரஜ்ஜு பொருத்தம் இருந்தாலும் சுய ஜாதகத்தில் 2,5,7,8 வீடுகள் பாதிக்க பட்டு இருப்பின் தாம்பத்திய வாழ்க்கையில் நீடிப்பது இல்லை, கணவன் மனைவி பிறிவு, விவாகரத்து, ஒற்றுமை இன்மை, வாரிசு இன்மை, குடும்பத்தில் நிம்மதியில்லாமல் வாழ்க்கையில் போராட்டத்துடன் வாழும் சூழ்நிலையை தருவது, என்ற வகையில் தீய பலன்களையே செய்கிறது, மேற்கண்ட விஷயங்கள் அனுபவ ரீதியாகவும், உதாரண ஜாதகங்களை கொண்டு உறுதி செய்யபட்ட விஷயம் என்பதை ஜோதிடதீபம் இங்கு ஆணித்தரமாக பதிவு செய்கிறது.


பொதுவாக நட்சத்திர பொருத்தம் என்பது ஒருவரின் திருமண வாழ்க்கையில் வரும் யோக அவயோக நிகழ்வுகளை 100% விகிதம் நிர்ணயம் செய்வதில்லை, திருமணத்திற்கு பிறகு தம்பதியரின் வாழ்க்கையை நிர்ணயம் செய்வதில் அதிக பங்கு வகிப்பது சுய ஜாதகத்தில் உள்ள 12 பாவகங்களின் வலிமை நிலையே, நட்சத்திர பொருத்தங்கள் 10க்கு 10 அமைந்தாலும் சுய ஜாதகத்தில் 2ம் வீடு எனும் குடும்ப ஸ்தானமும், 7ம் வீடு எனும் களத்திர ஸ்தானமும் நல்ல நிலையில் வலிமை பெற்று அமையவில்லை எனில், திருமண வாழ்க்கை அவ்வளவு சிறப்பாக அமைவதில்லை, மன வாழ்க்கையும் தம்பதியருக்கு மகிழ்ச்சியை தருவதில்லை, நட்சத்திர பெருத்தம் என்பது இருவரின் குண நலன்களை வேண்டுமானால் நிர்ணயம் செய்யலாம், ஆனால் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் யோக வாழ்க்கையை 100% விகிதம், தம்பதியர் இவற்றின் சுய ஜாதகத்தில் உள்ள 12 பாவகங்களின் வலிமையே நிர்ணயம் செய்கிறது என்பதே முற்றிலும் மறுக்க இயலாத உண்மை, இதற்க்கு பல உதாரண ஜாதகங்கள் நம்மிடம் உண்டு அன்பர்களே !

ரஜ்ஜு பொறுத்தம் ஒன்று இல்லை என்ற காரணத்தினால், மனம் ஒத்து போன பல ஆண்கள் பெண்களின் திருமணங்கள் தடை ஏற்ப்பட்டுள்ளது. ஏற்ப்படுத்தபட்டுள்ளது, இதற்க்கு இவர்கள் சொல்லும் காரணம் அதிக வியப்பாக தருகிறது அதாவது மணமகன் இறந்துவிடுவான், இதனால் மணப்பெண் விதவை ஆகும் சூழ்நிலை உண்டாகும் என்பதாக உள்ளது, எமது அனுபவத்தில் இது உண்மைக்கு புறம்பானதாகவே தெரிகிறது, ஏனெனில் ரஜ்ஜு பெருத்தம் இல்லாத ஒரு பெண்ணை திருமணம் செய்தால் கண்டம் ஏற்ப்பட்டு மரணம் நிகழும் என்பது ஜோதிடர்களால் மிகைபடுத்தி காட்டபட்டதாகவே ஜோதிடதீபம் கருதுகிறது .

தம்பதியரின் சுய ஜாதகம்  இரண்டிலும் களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகம், அல்லது ஆயுள் பாவகம் எனும் 8ம் பாவகம் பாதகஸ்தானதுடன் தொடர்பு பெற்று தொடர்பு பெற்ற பாதக ஸ்தானம் சர மண் தத்துவமாக அமைந்து , திருமணத்திற்கு பிறகு நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் மேற்கண்ட பாவக பலனை ஏற்று நடத்தினால், ஒருவேளை இதற்கு சாத்தியம் உண்டு, அதுவும் அவர்களது சுய ஜாதகத்தில் மற்ற பாவகங்களின் வலிமையை கொண்டே இந்த விஷயத்தை நிர்ணயம் செய்ய இயலும், பொத்தம் பொதுவாக ரஜ்ஜு பொருத்தம் இல்லை எனில் மணமகனுக்கு மரணம் நிகழும் என்று நிர்ணயம் செய்வது,  ஜோதிட கணிதம் தெரியாத ஜோதிடர்கள் செய்யும் தவறாகவே கருதவேண்டி உள்ளது.

கிழ்கண்ட ஜாதகத்தை ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே, இந்த இரண்டு ஜாதகங்களுக்கு திருமண பொருத்தம் உண்டா இல்லையா ? இவர்கள் திருமணம் செய்துகொண்டால் வாழ்க்கையில் வரும் ஜாதக பாதகங்களை ஆய்வு செய்வோம், பல ஜோதிடர்கள் கிழ்கண்ட ஜாதகத்திற்கு பொருத்தமில்லை, ரஜ்ஜு பொருத்தம் இல்லாதது மணமகனுக்கு கண்டத்தை தரும் என்று பலன் கூறியுள்ளனர், 

1) நாம் இந்த ஜாதகங்களை குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகத்தையும், களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகத்தையும், ஆயுள் பாவகமான 8ம் பாவகத்தையும், ஆய்வுக்கு எடுத்துகொள்வோம்.

2) தற்பொழுது இருவருக்கும் நடைமுறையில் உள்ள திசை எவ்வித பலன்களை தருகிறது என்பதையும்,

 3) குழந்தை பாக்கியத்தை குறிக்கும் 5ம் பாவகத்தையும் ஆய்வுக்கு எடுத்து கொள்வோம் அன்பர்களே !

ஜாதகரின் லக்கினம் : துலாம்     
ராசி : சிம்மம் 
நட்சத்திரம் : மகம் 4ம் பாதம் 


ஜாதகியின் லக்கினம் : கன்னி  
ராசி : தனுசு  
நட்சத்திரம் : மூலம் 4ம் பாதம் 


2ம் பாவக வலிமை நிலை :

ஜாதகருக்கு குடும்ப ஸ்தானம் எனும் 2ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகர் கல்வியில் நல்ல வெற்றியை பெற்று தந்து இருக்கும், நல்ல உத்தியோகம் கிடைத்திருக்கும், சுய கௌரவம் மற்றும் அந்தஸ்த்தில் நல்ல முன்னேற்றத்தை வாரி வழங்கி இருக்கும், பேச்சில் இனிமையும் குடும்பத்தில் நல்ல மகிழ்ச்சியையும், குடும்ப ஒற்றுமையையும் கௌரவம் குறையாத குடும்ப வாழ்க்கையையும் பெற்று தரும், வாழ்நாள் முழுவதும் எவ்வித தடையும் இல்லாமல் கை நிறைவான வருமானத்தை ஜாதகர் பெறுவார் என்பது உறுதியான விஷயமாக கருதலாம், மேலும் ஜாதகர் திருமணதிற்கு பிறகு அமையும் குடும்ப வாழ்க்கைக்கு பிறகே ஜீவன வழியில் இருந்து அபரிவிதமான முன்னேற்றம் உண்டாகும் என்பது கவனிக்க தக்க விஷயம்.

ஜாதகிக்கு குடும்ப ஸ்தானம் எனும் 2ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகிக்கு கல்வியில் நல்ல  வெற்றியையும், எதிர்பாராத தனவரவையும் பெற்று தரும், குடும்பத்தில் குறைவற்ற வாழ்க்கையையும், தன்னிறைவான வருமான வாய்ப்பையும் பெற்று தரும், எடுக்கும் முயற்ச்சிகள் யாவிலும் வெற்றி மேல் வெற்றியை பெற்று தரும், மேலும் ஜாதகியின் திருமணத்திற்கு பிறகே ஜீவன ரீதியாகவும், சமூக ரீதியாகவும் மிகப்பெரிய நன்மைகளை வாரி வழங்கும், மேலும் ஜாதகியின் ஜீவன ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 3ம் ராசியாக வருவது குடும்ப வாழ்க்கையில் ஜாதகி அனுபவிக்கும் யோகங்களையும், சுக போக வசதிகளையும் குறிக்கிறது.

7ம் பாவக வலிமை நிலை :

ஜாதகரின் 7ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகர் தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து சிறு சிறு இன்னல்களை தந்த போதிலும், மணவாழ்க்கையில் நல்ல மகிழ்ச்சியை தரும், ஜாதகரின் 12ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 6ம் ராசியாக வருவது அனைவருடனும் அன்பாக பழக வேண்டிய கட்டாயத்தை அறிவுறுத்துகிறது, தனது உடல் நிலையில் வயிறு சார்ந்த பிரச்சனைகளில் ஜாதகர் சிறு சிறு இன்னல்களை தரும் அமைப்பாக உள்ளது, மேலும் 12ம் பாவகம் உபய ராசியாக இருப்பதால், ஜாதகர் களத்திர ஸ்தான வழியில் இருந்து, 25% விகித இன்னகளை தரக்கூடும் என்பது கவனிக்கத்தக்கது.

ஜாதகியின் 7ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது, தனது  கணவனுக்கு 100% அதிர்ஷ்டத்தையும் யோகத்தையும் வாரி வழங்குபவர் என்பது உறுதியாகிறது, தாம்பத்திய வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் வெற்றிகரமான யோக வாழ்க்கையை அனுபவிக்கும் தன்மையை தரும், வாழ்க்கை துணை பொதுமக்கள் மற்றும் நண்பர்கள் வழியில் இருந்து 100% யோகத்தை பரிபூர்ணமாக அனுபவிக்கும் தன்மையை பெற்று உள்ளார் என்பது வரவேற்க்கதக்கது, மேலும் 7ம் பாவகம் வலிமை பெறுவது ஜாதகி திருமண வாழ்க்கையில் பெற போகும் யோக வாழ்க்கையை தெளிவு படுத்துகிறது.

8ம் பாவக வலிமை நிலை :

ஜாதகருக்கு 8ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது, ஜாதகரின் பூரண ஆயுளை உறுதி செய்கிறது, மேலும் தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து பெரும் தொழில் முன்னேற்றத்தையும், கௌரவம் மற்றும் அந்தஸ்த்தையும் குறிக்கிறது, தாமத திருமணம் இருப்பினும் வாழ்க்கை துணை வழியில் இருந்து செல்வ வளத்தை குறைவில்லாமல் தரும், குறுகிய காலத்தில் அபரிவிதமான சொத்து சுக சேர்க்கையை ஜாதகர் புதையலுக்கு நிகராக தொழில் ரீதியாவும், அதிர்ஷ்டத்தின் மூலமும் பெறுவார் என்பது கவனிக்க தக்கது, ஜாதகரின் உடல் நிலையில் எவ்வித குறையும் இல்லாத தன்மையை ஆயுள் முழுவதும் தரும் என்பது கவனிக்க தக்கது, ஜாதகருக்கு பூரண ஆயுள் என்பது மறுக்க இயலாத உண்மை.

ஜாதகிக்கு 8ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது, ஜாதகியின் பூரண ஆயுளை உறுதி செய்கிறது, மேலும் ஜாதகி தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து ஆயுள் முழுவதுமான யோகங்களை பரிபூர்ணமாக அனுபவிக்கும் தன்மையை தரும், மேலும் சீக்கிரமாக அந்தஸ்த்தையும் திடீர் அதிர்ஷ்டத்தின் மூலம் பொருளாதார முன்னேற்றத்தையும் வாரி வழங்கும், அரசியலில் வெற்றி, திடீர் பதவி உயர்வு, திடீர் தொழில் முன்னேற்றம், வாழ்க்கை துணை வழியில் இருந்து பொருளாதார உதவிகளை பெறும் யோகம், வாழ்க்கை துணையின் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவை பரிபூரணமாக பெரும் யோகத்தை தரும்.

தற்பொழுது நடைபெறும் திசை தரும் பலன்கள் :

ஜாதகருக்கு தற்பொழுது நடைபெறும் சந்திரன் திசை ( 05/09/2013 முதல் 06/09/2023 வரை ) 2,4,8,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று, 2ம் பாவக வழியில் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும், நல்ல வருமான வாய்ப்பையும், இனிமையான பேச்சு திறனையும் வாரி வழங்கும், 4ம் பாவக வழியில் இருந்து சொந்த வீடு, சொத்து சுகங்களை சுயமாக  வாங்கும் யோகத்தை தரும், சுக போக வாழ்க்கைக்கு குறைவில்லா நிலையை தரும், வண்டி வாகன யோகமும் நல்ல குணத்தின் மூலம் சகல நிலைகளில் இருந்தும் முன்னேற்றத்தையும் வாரி வழங்கும்.

ஜாதகிக்கு தற்பொழுது நடைபெறும்  சந்திரன் திசை ( 15/03/2015 முதல் 14/03/2015 வரை ) 1,3,5,7,9,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இலக்கின வழியில் இருந்து நீண்டஆயுள், சிறப்பான அதிர்ஷ்டங்களை அடையும் யோகம், முற்போக்கு சிந்தனையுடன் செயல்படும் குணம், எந்த ஒரு விஷயத்திலும், நேர்மறையான எண்ணங்கள் மூலம் வெற்றியை பெரும் யோகத்தை தரும், 3ம் பாவக வழியில் இருந்து ஜாதகி எடுக்கும் முயற்ச்சியில் நல்ல வெற்றிகளையும், என்ன ஈடேறும் வாய்ப்பையும் பெறுவார், 5ம் பாவக வழியில் இருந்து நல்ல அறிவு திறனையும், சிறந்த குழந்தை பாக்கியத்தையும், அந்த குழந்தை வழியில் இருந்து அதிர்ஷ்டத்தை அனுபவிக்கும் யோகத்தை தரும்,7ம் பாவக வழியில் இருந்து வாழ்க்கை துணையின் ஆதரவும், நண்பர்கள் பொதுமக்கள் ஆதரவும் உண்டாகும், வாழ்க்கை துணை வழியில் இருந்து ஜாதகி மிகப்பெரிய அதிர்ஷ்டங்களை அனுபவிக்கும் தன்மையை தரும், 9ம் பாவக வழியில் இருந்து ஜாதகி செல்லும் இடங்களில் நல்ல மதிப்பு மரியாதையும், கௌரவம் அந்தஸ்தையும் பெறுவார், நல்ல அறிவு திறன் ஜாதகிக்கு எப்பொழுதும் யோகத்தை வாரி வழங்கும்,11ம் பாவக வழியில் இருந்து நீடித்த அதிர்ஷ்டத்தையும், நல்ல குணத்தையும் வாரி வழங்கும், அனைத்திலும் லாபம் உண்டாகும்.

இருவரின் ஜாதகத்திலும் 5ம் பாவகம் வலிமை பெற்று இருப்பது நல்ல புத்திர பாக்கியத்தை வாரி வழங்கும் .

ஆக இருவரின் சுய ஜாதகமும் நல்ல வலிமையுடன் இருப்பதாலும், 2,5,7,8 பாவகங்கள் சிறப்பான வலிமையுடன், யோக வாழ்க்கையை தரும் என்பதாலும், இருவருக்கும் திருமணம் செய்வது 100% நன்மையை தரும், ரஜ்ஜு பொருத்தம் இல்லை என்பதை பற்றி எவ்வித கவலையும் பட தேவையில்லை, ஜாதகிக்கு மூல நட்சத்திரம் என்ற போதிலும் சுய ஜாதகம் வலிமையுடன் இருப்பது திருமண வாழ்க்கையில் சந்தோசம், தம்பதியர் ஒற்றுமை, நல்ல வாரிசு, 16 வகை செல்வமும் பெற்று வாழ்வாங்கு வாழும் யோகத்தையே தரும்.

குறிப்பு :

இந்த இரண்டு ஜாதக அமைப்பிற்கும் ஜாதக ரீதியான பொருத்தம் மிகவும் சிறப்பாக இருப்பதால் நட்சத்திர பொருத்தத்தை கருத்தில் கொள்ளாமல், திருமணத்தை சிறப்பாக நடத்துவது சால சிறந்து, எந்த காரணத்தை கொண்டு தம்பதியரின் வாழ்க்கையில் இன்னல்கள் வர வாய்ப்பில்லை, மேலும் ஆண் பெண் இருவருக்கும் மனசு பொருந்தினால் போதும் ஜாதக பொருத்தமும் தேவையில்லை, நட்சத்திர பொருத்தமும் தேவையில்லை, மன பொருத்தமே மன மகிழ்வான வாழ்க்கையையும், சகல செல்வ வளங்களையும் வாரி வழங்கும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

குரு பெயர்ச்சி பலன்கள், சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான் இலக்கின வாரியாக தரும் பலன்கள் - மேஷம்


பிரகஸ்பதி எனும் தேவ குரு கடகத்தில் இருந்து, குரு வட்டமான சிம்ம ராசிக்கு பெயர்ச்சி பெற்று இருப்பது, வரவேற்க்கதக்க அம்சமாகவே ஜோதிடதீபம் கருதுகிறது, எனவே குரு பகவானின் இந்த கோட்சார மாற்றம் சகல நிலைகளில் இருந்தும் நன்மையை வாரி வழங்கும் என்பது தெளிவாகிறது, குறிப்பாக கல்வி, அரசு,மழை வளம், தொழில் முன்னேற்றம், விவாசாய விருத்தி, மக்கள் நலம், மருத்துவத்தில் முன்னேற்றம், புதிய கண்டுபிடிப்புகள், நோய் குணமடைதல், ஆன்மீக வளர்ச்சி, கலைகளில் லாபம், ஆன்மீக பெரியோர்களின் ஆசிவாதம் மூலம் உலக நலன்கள் சிறப்புறும் தன்மை, இயற்க்கை வளங்கள் செழிக்கும் யோகம்,  தன்னிறைவான பொருளாதார முன்னேற்றங்கள், கால்நடைகள் விருத்தி பெரும் யோகம், கல்வியில் புதுமை, அரசியலில் நல்ல மாற்றங்கள் உண்டாகும்.

ராசியை அடிப்படையாக கொண்டு இந்த குரு பெயர்ச்சி பலன்களை சிந்திப்பதை விட, சுய ஜாதகத்தை இயக்கும் லக்கினத்தை அடிப்படையாக கொண்டு, நடைபெறும் திசை புத்தி அந்தரம் மற்றும் சூட்சமம் ஏற்று நடத்தும் பாவகங்களுடன் குரு பகவானின் தொடர்புகளை ( அமர்வு மற்றும் பார்வை ) கொண்டு சுய ஜாதக பலனை கணிதம் செய்யும் பொழுது ஜாதக ரீதியான துல்லியமான பலன்களை காண இயலும், இனி மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கினங்களுக்கு குரு பகவான் வழங்கும் பலன்களை ஆய்வுக்கும் சிந்தனைக்கும்  எடுத்துகொள்வோம் அன்பர்களே!

மேஷ லக்கினம் :

 முதல் குரு வட்டமான மேஷ லக்கினத்தை சார்ந்த அன்பர்களே ! தங்களுக்கு தற்பொழுது நடைபெறும் திசை புத்தி அந்தரம் மற்றும் சூட்சமம் 1,5,9,11 பாவக பலனை ஏற்று நடத்தினால் கிழ்கண்ட பலன்கள் குரு பெயர்ச்சியின் காரணமாக குரு பகவான் தங்களுக்கு வாரி வழங்குவார், முதலில் லக்கினத்தில் இருந்து 5ல் அமர்ந்த குரு தங்களின் அறிவு திறனையும், புத்திசாலிதனமான செயல்பாடுகளையும் அதிகரிக்க செய்வார், கலை துறையில் உள்ள அன்பர்களுக்கு இது ஒரு யோக காலமாக கருதலாம், ஆய கலைகள் 64ல் தனது துறையாக கொண்டு செயல்படும் அன்பர்களுக்கு, நல்ல புகழும் வெற்றியும் உண்டாகும், தன்னிறைவான பொருளாதார வசதிகள், செல்லும் இடங்களில் நல்ல வரவேற்ப்பு மற்றும் வெற்றி வாய்ப்புகள், குடும்பத்தில் மகிழ்ச்சி, புத்திர பாக்கியம் உண்டாகும்.

 இனிமையான பேச்சின் மூலம் அனைவரையும் கவரும் தன்மை, விளையாட்டுபோட்டி மற்றும் பந்தையங்களில் வெற்றி, காதலில் வெற்றி, இதுவரை திருமண தடை மூலம் இல்லற வாழ்க்கையில் இணைய இயலாத அன்பர்களுக்கு, இனிவரும் காலங்கள் நல்ல திருமண யோகத்தை அமைத்து தரும், கல்வியில் நல்ல முன்னேற்றமும், தொழில் மற்றும் வேலை வாய்ப்பில் புதிய வாய்ப்புகளும், கை நிறைவான வருமான யோகத்தை தங்கு தடையின்றி வாரி வழங்கும் என்பதால்  மேஷ லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு இந்து ஒரு யோக காலம் என்பதில் சந்தேகம் இல்லை, மேஷ இலக்கின அன்பர்களுக்கு இதுவரை இருந்து வந்த குறைகள் யாவும் நீங்கி, தனது சுய முயர்ச்சியினாலும், சுய உழைப்பினாலும் மிகப்பெரிய லாபங்களை தனது புத்திசாலிதனத்தால் பெறுவார்கள், அடிப்படையில் அறிவு திறனின் செயல்பாடுகள் மூலமே மிக பெரிய நன்மைகளை மேஷ லக்கினத்தை சார்ந்தவர்கள் இந்த குரு பெயர்ச்சியின் மூலம் பெறுவார்கள்.

5ல் அமர்ந்த குரு தனது 5ம் பார்வையாக பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்தை வசீகரிப்பது மேஷ லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு, சமூகத்தில் மிகப்பெரிய அந்தஸ்தில் உள்ள பெரிய மனிதர்களின் அறிமுகமும் ஆதரவும் பரிபூரணமாக கிடைக்க பெற்று, திடீர் அந்தஸ்த்தையும் வசதி வாய்ப்புகளையும் பெறுவார்கள், உயர்கல்வி சார்ந்த விஷயங்கள் தங்களுக்கு மிகப்பெரிய வெற்றிகளையும் முன்னேற்றத்தையும் வாரி வழங்கும், எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளிக்கும் வல்லமை இயற்கையாகவே தங்களுக்கு அமையும், திருமணம் தடை நீங்குதலும், திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் உண்டாகும், பல ஆன்மீக திருத்தலங்களுக்கு சென்று வரும் யோகமும், அதன் வழியில் நல்ல யோக பலன்களையும் அனுபவிக்கும் தன்மையையும் மேஷ இலக்கின அன்பர்களுக்கு இனிதே அமையும்.

மேலும் விரைவாக முடிவெடுக்கும் தன்மையும், அதன் வழியில் இருந்து 100% வெற்றி வாய்ப்புகளையும் தங்குதடையின்றி அனுபவிக்கும் யோகத்தை தரும், ஜோதிடம், கணிதம் மற்றும் ஆய்வு சார்ந்த கல்விகளில் மேஷ இலக்கின அன்பர்கள் தேர்ச்சி பெற்று பெயரும் புகழும் பெரும் யோகம் உண்டாகும், சுய அறிவு திறன் மிக சிறப்பாக செயல்படும், வருமுன் உணர்ந்து செயல்படும் முன்னேச்சிரிக்கை நடவடிக்கைகளில் ஜாதகர் செயல்பட்டு, மிகப்பெரிய இன்னல்களில் இருந்து விடுபடும் யோகத்தையும், தேவையற்ற வீண் விரையங்களை தவிர்க்கும் தன்மையையும் தரும், எங்கு சென்றாலும் முன்பின் தெரியாத நபர்களும் ஜாதகருக்கு உதவிகரமாக இருப்பார்கள், தெளிவான சிந்தனை, நல்ல அறிவு திறன், சிறப்பான செயல் திறன் மூலம் தொடர் வெற்றிகளை குவிக்கும் யோக காலத்தை இந்த குரு பெயர்ச்சி மேஷ லக்கினத்திக்கு 9ம் பாவக வழியில் இருந்து வழங்குவது கவனிக்கத்தக்கது.

5ல் அமர்ந்த குரு தனது 7ம் பார்வையாக லாப ஸ்தானமான 11ம் பாவகத்தை வசீகரிப்பது மேஷ லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு, அளவில்லா அதிர்ஷ்ட வாய்ப்புகளை வாரி வழங்கும், ஜாதகரின் எண்ணமும் செயலும் முற்போக்கு சிந்தனையுடன் பல வெற்றிகளையும், லாபங்களையும் குவிப்பார்கள், எப்பொழுதும் உணர்ச்சி மிகுந்த வேகத்துடன் செயலாற்றுவார்கள், சரியான நேரத்தில் சரியான காரியங்களை செய்து மிகுந்த செல்வ வளத்தை பெரும் யோகத்தை தரும், அயல் நாடுகளில் இருந்து வரும் நல்ல வாய்ப்புகள் ஜாதகரின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை வாரி வழங்கும், ஜாதகரின் திட்டமிடுதல்கள் யாவும் சரியான திசையில் சென்று, ஜாதகரின் லட்சியங்களை யாவும் பரிபூரனதுவத்தை அடையும், எப்பொழுதும் மகிழ்ச்சி, அனைத்து வசதி வாய்ப்புகளும் ஜாதகருக்கு தங்குதடையின்றி கிடைக்கும், லாட்டரியில் யோகம், புதையலுக்கு நிகரான சொத்து சுக சேர்க்கை, பங்கு வர்த்தகத்தில் கைநிரைவான லாபங்களை வாரி வழங்கும்.

மேஷ இலக்கின அன்பர்களுக்கு 11ம் பாவகம் வலிமை பெறுவதால், மனதில் நினைத்த காரியங்கள் யாவும் நடைபெறும் என்பதால், இது வரை நிறைவேறாத நெடுநாள் ஆசைகள் யாவும் இனி வரும் காலங்களில் நடைபெற்று மன மகிழ்ச்சியை உண்டாக்கும், நல்ல உடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியம் ஜாதகரை செயல்கரிய விஷயங்களில் ஈடுபட செய்து வெற்றிகளை வாரி வழங்கும், அதிக லாபம் மற்றும் செல்வ செழிப்பை வாரி வழங்கும் யோக காலம் இது என்பதால், ஜாதகர் தனக்கு வரும் நல்ல வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் பெற விழிப்புணர்வுடன் நடந்துகொள்வது நல்லது, மேலும் ஸ்திரமான லாபத்தை தொடர்ந்து தரும் என்பதால் இனிவரும் ஒரு வரும் மேஷ லக்கினத்திற்கு யோககாலமே.

5ல் அமர்ந்த குரு தனது 9ம் பார்வையாக முதல் பாவகமான லக்கினத்தை வசீகரிப்பது மேஷ லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு, நல்ல சிந்தனையையும் அறிவு திறனையும் வாரி வழங்கும், சோர்வு அறிய உழைப்பு மற்றும்  உடல் வலிமையை தரும், தனது செயல்கள் அனைத்திலும் மேஷ இலக்கின அன்பர்களுக்கு நல்ல நற்ப்பெயரும், பாராட்டுகளும் கிடைக்கும், தனிப்பட்ட முன்னேற்றத்தில் அதிக கவனம் எடுத்துகொள்ள வேண்டிய நேரமிது, உடல் நலனில் எவ்வித தொந்தரவும் ஏற்ப்படாது, இதற்க்கு முன் உடல் நல குறைவுடன் இருந்த அன்பர்களுக்கு விரைவான குணமும் உடல் ஆரோக்கியமும் உண்டாகும், மனோ ரீதியான பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு, தெளிந்த நல்லறிவும், சுய சிந்தனையும் உண்டாகும், உயர் கல்வி சார்ந்த முயற்ச்சிகள் யாவும் வெற்றி பெரும், தன்னிறைவான வசதி வாய்ப்புகள் மேஷ லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு தேடிவரும், குறுகிய காலத்தில் சகல விஷயங்களிலும் நல்ல முன்னேற்றமும் லாபமும் தங்கு தடையின்றி கிடைக்கும்.

குறிப்பு : 

மேஷ  இலக்கின  அன்பர்களே ! தற்பொழுது தங்களுக்கு நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் மேற்கண்ட 1,5,9,11ம்  பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே, தங்களுக்கு மேற்கண்ட குரு பகவானின், கோட்சார நன்மைகள் அல்லது தீமைகள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைபெறும்  திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் 1,5,9,11ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் எவ்வித நன்மையும், தீமையும் நடைபெறாது என்பதை கவனத்தில் கொள்க.

 இந்த குரு மாற்றத்தின் மூலாம் 100% யோக பலன்களை அனுபவிக்கும் லக்கினத்தை சார்ந்தவர்கள் என்ற முறையில் தங்களது மேஷ லக்கினமே முதல் இடத்தை பெறுகிறது, வாழ்த்துகள் .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696  

செவ்வாய், 7 ஜூலை, 2015

சுய ஜாதகத்தில் பனிரெண்டு பாவகங்களின் வலிமையையும், நவகிரகங்கள் தனது திசையில் வழங்கும் பலன்களும் !


ஒருவரின் சுய ஜாதகத்தில் பனிரெண்டு பாவக வலிமையின் அடிப்படையில், தற்பொழுது நடைமுறையில் உள்ள திசையும், எதிர்வரும் திசையும் ஜாதகருக்கு வழங்கும் பலாபலன்களை பற்றி கிழ்கண்ட பதிவில் சிந்தனைக்கு எடுத்துகொண்டு ஆய்வு செய்வோம் அன்பர்களே !



லக்கினம் : சிம்மம் 
 ராசி : விருச்சிகம் 
நட்சத்திரம் : கேட்டை 2ம் பாதம் 

மேற்கண்ட சிம்ம இலக்கின ஜாதகருக்கு முதலில் சுய ஜாதக அமைப்பின் படி, 12 பாவகங்களின் வலிமை மற்றும் வலிமை அற்ற நிலையை சிந்திப்போம்.

ஜாதகத்தில் வலிமையுள்ள பாவகங்கள் :

1,3,9,11ம் வீடுகள் லாபம் மற்றும் அதிர்ஷ்டத்தை வழங்கும் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம், எனவே ஜாதகர் இலக்கின வழியில் இருந்து அதிர்ஷ்டங்களை பரிபூரணமாக அனுபவிக்கும் யோகத்தை தரும், மேலும் ஜாதகருக்கு 11ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 3ம் பாவகமாக அமைவதும், உபய காற்று தத்துவத்தில் இயக்கம் பெறுவதாலும், ஜாதகரின் செயல்கள் மற்றும் முயற்ச்சிகள் யாவும் அறிவுத்திறன் சார்ந்ததாக அமைந்திருக்கும், ஜாதகரின் அறிவு திறன் எடுக்கும் முயற்ச்சிகளில் இருந்து நல்ல வெற்றி வாய்ப்பினையும், அதிர்ஷ்டத்தையும் வாரி வழங்கும், விடா முயற்சியுடன் எந்த ஒரு காரியத்திலும் ஈடுபட்டு ஜாதகர் நல்ல லாபத்தையும், அதிர்ஷ்டத்தையும் அடையும் நிலையை தரும், ஜாதகரின் முற்போக்கு சிந்தனையும், செயல்பாடுகளும் வாழ்க்கையில் சகல நிலைகளில் இருந்தும் முன்னேற்றத்தை வாரி வழங்கும், கமிஷன், தரகு, ஏஜென்சி துறைகளில் ஜாதகருக்கு நல்ல வெற்றி வாய்ப்பை பெற்று தரும், செல்வ செழிப்பு, சகலருக்கும் உதவி செய்யும் யோகம் தன்னம்பிக்கை, விடா முயற்ச்சி என்ற வகையில் நல்ல யோகத்தை ஜாதகருக்கு தொடர்ந்து வாரி வழங்கிகொண்டே  இருக்கும் என்பது சிறப்பான விஷயம் எனலாம்.

3ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் நினைத்த விஷயங்கள் பலிதம் பெரும் யோகத்தை தரும், சிறந்த வியாபர விருத்தி, சகோதர வழியில் இருந்து வரும் சிறப்பான யோகங்கள், சொகுசு வாகனங்களை பயன்படுத்தும் யோகம், பண்ணை மற்றும் விவசாய பொருட்கள் மூலம் லாபம், கை நிறைவான வருமானம், அதிக சொத்து சுக சேர்க்கை, வீரியமிக்க செயல்களில் வெற்றி, குறிகோள்களை வெற்றிகரமாக அடையும் யோகம், தர்மத்தில் நம்பிக்கை, நேர்மையான குணம், ஜோதிடம் மற்றும் கணிதத்தில் புலமை பெரும் யோகம், திருமணம் வாழ்க்கைக்கு பிறகு யோகம், பயணங்களில் அதிக லாபம், தனிப்பட்ட முன்னேற்றத்தில் ஆர்வம் என்ற வகையில் நன்மைகளை வாரி வழங்கும்.

9ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு நல்ல தெய்வீக அனுபவங்கள் மூலம் அதிர்ஷ்டங்களை அனுபவிக்கும் யோகம், நல்ல ஆன்மீக பெரியவர்களின் சந்திப்பின் மூலம் வாழ்க்கையில் சகல நிலைகளில் இருந்தும் முன்னேற்றம் பெரும் யோகம், எளிதில் அனைத்தும் கிடைக்கும் யோகம், சிறந்த புத்திகூர்மை, எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் வல்லமை, தன்னம்பிக்கை குறையாத  செயல்திறன், சமூகத்தில் நற்ப்பெயர், பொதுமக்களிடம் நற்ப்பெயர், திடீர் அந்தஸ்து, உயர் பதவிகளை அலங்கரிக்கும் யோகம், ஆன்மீகத்தில் வெற்றி புதிய ஆராய்ச்சிகள் மூலம் நல்ல வருமான வாய்ப்புகளை பெரும் யோகம், புதிய சிந்தனைகளை பரீசித்து வெற்றிகாணும் யோகம், அதிர்ஷ்டகரமான வாய்ப்புகளை ஆன்மீக பெரியோர்களின் ஆசிர்வாதத்தால் பெரும் யோகத்தை ஜாதகர்ருக்கு வாரி வழங்கும்.

11ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் தனது  திட்டமிடுதல் மூலம், வாழ்க்கையில் பெரும் தன்னிறைவான பொருளாதார முன்னேற்றம், எந்த ஒரு விஷயத்திலும் உள்ள நன்மையை எடுத்துகொண்டு வாழ்க்கையை சிறப்பாக அமைத்துகொள்ளும் யோகம், மிதமிஞ்சிய தன்னம்பிக்கை  மூலம் பெரும் முன்னேற்றம் மற்றும் பொருள் வரவு, மிகுந்த அதிர்ஷ்டம், அனைத்திலும் நன்மையையும் லாபத்தையும் பெரும் யோகம், சிறந்த நற்குணங்களின் மூலம் சமூக அந்தஸ்தை குறுகிய காலத்தில் பெரும் யோகத்தை தரும், தான் எடுத்துக்கொண்ட விஷயத்தில் விடா முயற்சியுடன் போராடி வெற்றியை பெரும் யோகத்தை தரும்.

2,4,6,12ம் வீடுகள் பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகுக்கு 2ம் பாவக வழியில் இருந்து கலை துறையில் நல்ல ஈடுபாட்டையும் வெற்றியையும் வாரி வழங்கும், அறிய கலைகளில் புலமையையும் தேர்ச்சியையும் வாரி வழங்கும், கற்ற கல்வியும் பேச்சு திறனும் ஜாதகரின் வாழ்க்கையில் கை நிறைவான வருமான வாய்ப்பை பெற்று தரும், குழந்தைகள் மற்றும் கல்வி கலை துறை சார்ந்த விஷயங்களில் நல்ல வெற்றி வாய்ப்பை பெற்று தரும், எங்கு சென்றாலும் உதவி செய்ய ஜாதகருக்கு நல்ல மனிதர்களும், நண்பர்களும் கிடைப்பார்கள், தன்னைவிட வயதில் அதிகம் உள்ள நபர்கள் மூலம் அபரிவிதமான நன்மைகளையும், வருமான வாய்ப்புகளையும் ஜாதகர் பெறுவது இயற்கையானது, உடல்  உழைப்பை விட புத்திசாலிதனத்தால் ஜாதகருக்கு தன்னிறைவான பொருளாதார வளர்ச்சியை பெற்று தரும்.

4ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் இசை, சினிமா, நாடகம் மற்றும் கலைத்துறை சார்ந்த விஷயங்களில் நல்ல ஈடுபாட்டையும் லாபத்தையும்  வாய் வழங்கும், இது சார்ந்த தொழில் அமைப்புகளில் இருந்து ஜாதகருக்கு நல்ல லாபத்தை பெற்று தரும், அறிய கலைகளை போதிப்பது, சொந்த வீடு, வண்டி வாகனம் தனது சுய உழைப்பின் மூலம்  பெரும் யோகத்தை தரும், வீடு மற்றும் நிலம் மூலம் வாடைகை வருமானம் பெரும் யோகத்தை தரும், வடக்கு சார்ந்த  திசைகளில் அமைந்த வீடுகளில் ஜீவனம் செய்வதால் ஜாதகருக்கு அபரிவிதமான நன்மைகள் வந்து சேரும், சுக போக வாழ்க்கைக்கு தேவையான பொருளாதார வசதிகளை ஜாதகர் குறுகிய காலத்தில் பெரும் யோகத்தை தரும், ஜாதகர் செய்யும் காரியங்களில் வெற்றி நிச்சயம்.

6ம் பாவக வழியில் இருந்து நல்ல உடல் ஆரோக்கியம், குழந்தைகள் மூலம் அதிர்ஷ்டம், வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் அதிர்ஷ்டம் மற்றும் யோக வாழ்க்கை, பொதுமக்களின் பணம் தன்வசம் இருக்கும் யோகம், தொடர்ந்து வரும் வருமான வாய்ப்பு, பொதுமக்கள் ஆதரவின் மூலம் உயரிய பதவிகளை பெரும் யோகம், யாரிடமும் பகைமை பாராட்டாத தன்மை, சிறு சிறு அதிர்ஷ்டங்கள் ஜாதகருக்கு தொடர்ந்த வண்ணம் வரும் அமைப்பு, விரைவில் குணம் பெரும் உடல் அமைப்பு, வயிறு சார்ந்த சிறு சிறு தொந்தரவுகள், எதிரியின் மூலம் லாபம் பெரும் யோகம், தொழில் வழியில் திடீர் முன்னேற்றங்களை தரும்.

12ம் பாவக வழியில் இருந்து தேவையில்லாத அவ பெயர், உடல் நல பாதிப்பால் சிறு சிறு தடங்கல்கள்,  பங்கு வர்த்தகம், லாட்டரி சூது மூலம் திடீர் இழப்பை தரும் என்ற போதிலும் இதற்க்கு இணையான வருமானத்தையும் வாரி வழங்கும், மனதை கட்டுபாடாக வைத்துகொள்ள ஜாதகர் அதிக போராட்டங்களை சந்திக்க வேண்டி வரும், திடீர் இழப்பை தவிர்க்க ஜாதகர் அதிக முன் எச்சரிக்கையுடன் இருப்பது நலம் தரும், சரியான திட்டமிடுதல் ஜாதகருக்கு நல்ல வெற்றி வாய்ப்பை பெற்று தரும்.

10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 10ம் பாவகம் ஜாதகருக்கு கால புருஷ  தத்துவ அமைப்பிற்கு 2ம் வீடாக வருவதும் மிகுந்த யோகத்தை ஜீவன ரீதியாக வாரி வழங்கும், மேலும் 10ம் பாவகம் அதிக வலிமையுடன் இருப்பது ஜாதகர் சுய தொழில் செய்வதால் பெரும் யோக வாழ்க்கையை குறிக்கிறது, ஜாதகர் தனிப்பட்ட முறையில் தொழில் செய்வது சிறந்த நன்மைகளை வாரி வழங்கும், மேலும் ரிஷபம்  ஸ்திர நில தத்துவ அமைப்பை பெறுவதால்  நிலையாக ஓர் இடத்தில் செய்யும் தொழில்களில் நல்ல வெற்றிகளை பெறலாம், ஜாதகருக்கு வாக்கின் மூலம் வருமானம் வரும், பேச்சு திறன் சார்ந்த தொழில்கள் ஜாதகருக்கு வெற்றிகளை வாரி வழங்கும், வியாபாரம் மூலம் ஜாதகருக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும், பல தொழில்களை நிர்வகிக்கும் யோகத்தை தரும், பொதுமக்களை சார்ந்து செய்யும் தொழில்கள் ஜாதகருக்கு தொடர்ந்து வருமானத்தை வாரி வழங்கிகொண்டே இருக்கும்.

ஜாதகத்தில் பாதிக்க பட்ட பாவகங்கள் :

5,7ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவக்த்துடன் சம்பந்தம் பெறுவது, 5ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு பூர்வீக அமைப்பில் அதிக சிக்கல்களை உருவாக்கும், வெளியில் சென்று ஜீவனம் தேடும் பரதேஷ ஜீவனத்தை வழங்கும், குல தெய்வத்தின் நிந்தனைக்கு ஆளாகும் சூழ்நிலையை தரும், பூர்வீகத்தில் ஜாதகருக்கு வெற்றி வாய்ப்புகள் குறையும், சிந்தனையும் செயல்திறனும் வெகுவாக ஜாதகருக்கு பாதிக்கும், வெளியூர் அல்லது வெளிநாட்டில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்,  மற்றவர்களுக்கு ஜாமீன் தருவது ஜாதகரின் வாழ்க்கையில் மிகப்பெரிய பிரச்சனைகளை தரக்கூடும், மன அமைதி வெகுவாக பாதிக்கும், கற்ற கல்வி ஜாதகருக்கு பயன் தாரது, எனவே ஜாதகர் பூவீகத்தில் இருப்பது அவ்வளவு நல்லதல்ல.

7ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் கூட்டாளிகள் மூலம் நல்ல வருமான வாய்ப்பை பெற கூடும், கூட்டு முயற்ச்சி பலிதம் தந்த போதிலும், ஜாதகரின் முன்னேற்றம் சிறிது பாதிப்பை தரும், வாழ்க்கை துணை வழியில் இருந்து இன்னல்கள் வந்த போதிலும் ஜாதகருக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகளுக்கு குறைவு இருக்காது 7ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 11ம் பாவக அமைவது ஜாதகரின் முன்னேற்றம் என்பது ஜாதகரின் வாழ்க்கை துணை, நண்பர்கள், கூட்டாளிகள் மற்றும் பொதுமக்கள் மூலம் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது, 7ம் வீடு 12ம் பாவக்த்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகர் மேற்கண்ட அமைப்புகளில் இருந்து அதிர்ஷ்ட வாய்ப்பை வழங்கிய போதிலும், மன நிம்மதியை வெகுவாக குறைக்க கூடும், எனவே ஜாதகர் தனது மன ஆளுமை திறனை அதிக அளவில் வளர்த்துகொள்வது சிறந்தது, சமயத்தில் இவர்கள் வழியில் ஜாதகருக்கு இன்னல்கள் வந்த போதிலும், அந்த இன்னல்கள் மூலம் ஜாதகர் மிகுந்த யோகத்தையே பெறுவார் என்பது குறிப்பிட தக்கது.

8ம் வீடு ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு நீண்ட ஆயுளை தரும், இருப்பினும் திடீர் இழப்புகளை ஜாதகர் தவிர்க்க இயலாது, அதிக முதலீடுகளை தவிர்ப்பதும், சேமிக்கும் பழக்கத்தை கையாள்வதும் ஜாதகருக்கு மிகுந்த நன்மைகளை தரும், வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் இன்னல்களை ஜாதகர் ஏற்றுகொள்வது, சகல நிலைகளில் இருந்தும் முன்னேற்றம் தரும், பாதுகாப்பான பயணமும், முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும், ஜாதகரை பெரிய சிரமங்களில் இருந்து காப்பாற்றும்.

மேற்கண்ட பலன்கள் ஜாதகரின் சுய ஜாதக அமைப்பின் படி 12 பாவகங்களின் தன்மை, பெரும்பாலான பாவகங்கள் ஜாதகருக்கு மிகுந்த நன்மையை தரும் அமைப்பில் இருப்பது ஜாதகருக்கு சாதகமான விஷயமே, இனி ஜாதகருக்கு தற்பொழுது நடைபெறும் திசை, எதிர்வரும் திசை எவ்வித பலன்களை தருகிறது என்பதை ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே!

தற்பொழுது ஜாதகருக்கு நடைபெறும் திசை சுக்கிரன் திசை :  ( 02/08/1996 முதல் 02/08/2016 வரை )

தற்பொழுது நடைமுறையில் உள்ள சுக்கிரன் திசை ஜாதகருக்கு 5,7ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று பலனை தருவது  ஜாதகர் படும் துன்பத்தின் தன்மையை தெளிவாக விளக்குகிறது, ஜாதகர் தற்பொழுது நடைமுறையில் உள்ள சுக்கிரன் திசையின் அவயோக பலன்களை 12ம் பாவக வழியில் இருந்து கடுமையாக அனுபவித்து வருவது தெளிவாகிறது, மேலும் 12ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 4ம் வீடாகவும், சர நீர் தத்துவ ராசியாக  கடகத்தில் அமைவதும், ஜாதகர் பெரும் மன அழுத்தம் மற்றும் மன போராட்டங்களை தெளிவு படுத்துகிறது, மனம் பாதித்தால் ஜாதகருக்கு சுக வாழ்க்கை எது என்பது போல், ஜாதகர் சுக்கிரன் திசையில் அதிக இன்னல்களுக்கு ஆர்ப்பட்டு, தெளிவற்ற குறிக்கோள் இல்லாத வாழ்க்கையை அனுபவிக்கும் தன்மையை தந்தது, பொதுவாக சுக்கிரன் திசை மிகுந்த யோகத்தை தரும் என்பர், இங்கு ஜாதகருக்கு நடப்பதோ 5,7ம் பாவக வழியில் இருந்து மன நிம்மதி இழப்பு மற்றும் மனபோரட்டமே, ஆக ஜாதகர் சுக்கிரன் திசையில் கடந்து வந்த பாதை அவ்வளவு நன்றாக அமையவில்லை என்பதே முற்றிலும் உண்மை.

மேலும் தற்பொழுது நடைமுறையில் உள்ள சுக்கிரன் தசை கேது புத்தியும் 8ம் வீடு ஆயுள் பாவகமான 8ம் பாவக பலனை ஏற்று நடத்துவது ஒரு வகையில் இன்னல்களை தரும் என்ற போதிலும், கோட்சார நன்மைகளை ஜாதகர் பெறுவதில் எவ்வித தடையும் இல்லை என்பது வரவேற்க தக்கது, கேது புத்தி ஜாதகருக்கு திடீர் நிகழ்வுகள் மூலம் நல்ல வெற்றி வாய்ப்பை கொடுக்கும் என்பது வரவேற்க தக்கது, ஜாதகருக்கு இனிவரும் காலம் நன்மைகளை செய்வதில் தடையில்லை .

ஜாதகருக்கு அடுத்து வரும் சூரியன் திசை தரும் பலன்கள் : ( 02/08/2016 முதல் 03/08/2022 வரை ) 

ஜாதகருக்கு அடுத்து வரும் சூரியன் திசை 10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவதும், 10ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 2ம் வீடாக வருவதும், அபரிவிதமான தொழில் முன்னேற்றத்தையும், அளவில்லா செல்வாக்கையும் வாரி வழங்கும் என்பது உறுதியாகிறது, தன்னிறைவான வருமான வாய்ப்புகள் ஜாதகருக்கு நிலையாக நின்று வருமானத்தை வாரி வழங்கும், பொருளாதார ரீதியான வெற்றிகளை ஜாதகர் பரிபூரணமாக அனுபவிக்கும் யோக காலமாக இதை கருதலாம், ஜாதகரின் பேச்சுக்கும் சொல்லுக்கும் மதிப்பு மரியாதை கிடைக்கும், ஜீவன வழியில் இருந்து மிகுந்த யோக பலனை ஜாதகர் தங்குதடையின்றி  சூரியன் திசையில் பெறுவார் என்பது 100% விகிதம் உறுதி, என்பதால் சூரியன் திசையில் ஜாதகர் தனது திட்டமிடுதல்களுக்கு முழு வடிவம் தரலாம், சகல நிலைகளில் இருந்தும் வெற்றிகள் ஜாதகருக்கு கைகொடுக்கும், மேலும் குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது, வாழ்த்துகள்.


குறிப்பு :

சுய ஜாதகத்தில் ராஜ யோகங்கள் ( பாவகங்கள் வலிமை பெற்று இருப்பது ) இருந்த போதிலும், நடைபெறும் திசை எதிர்வரும் திசை யோகம் பெற்ற பாவகங்களின் பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே ஜாதகர் நன்மைகளையும், அதிர்ஷ்டங்களையும் அனுபவிக்க இயலும், மாறாக நடைபெறும் திசை அவயோக பலனை தரும் பாவகங்களின் தொடர்பை ஏற்று நடத்தினால் ஜாதகருக்கு துன்பமே மிஞ்சும் என்பதற்கு நல்ல உதாரண ஜாதகமாக மேற்கண்ட ஜாதகத்தை எடுத்துகொள்லாம்.

ஜாதகருக்கு 1,3,9,11ம் வீடுகள் லாப ஸ்தானத்துடன் சம்பந்தம், 2,4,6,12ம் வீடுகள் பூர்வ புண்ணியமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம், 10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோகத்தை வழங்கிய போதிலும், தற்பொழுது நடைபெற்று கொண்டு இருக்கும் சுக்கிரன் திசை 5,7ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பலனை நடத்தியதால், ஜாதகர் வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து எவ்வித யோக பலன்களையும் அனுபவிக்க இயலவில்லை, மேலும் ஜாதகருக்கு சுக்கிரன் திசை சரியான பருவ வயதில் வந்தது, ஜாதகரின் கல்வி, தொழில், வேலை மற்றும்  திருமணம் என பல நிலைகளில் அதிக இன்னல்களை வழங்கியது, வருந்தத்தக்க ஒரு விஷயமாகவே கருத வேண்டியுள்ளது, அடுத்து வரும் சூரியன் திசை, சந்திரன் திசை, செவ்வாய் திசை முறையே சூரியனும் செவ்வாயும் ஜீவன ஸ்தான வெற்றிகளையும், சந்திரன் பூர்வபுண்ணிய ஸ்தான அமைப்பில் இருந்தும் யோகங்களை தந்து ஹாட்ரிக் அடிப்பது, ஜாதகரின் யோக வாழ்க்கையை உறுதி செய்கிறது.

20 வருட சுக்கிரன் திசையில் அனுபவித்த இன்னல்களுக்கு நிகரான யோகங்களை ஜாதகர் தன்னிறைவாக பெற்று பின்யோக ஜாதகராக திகழ்வது வரவேற்க்கதக்கதே வாழ்த்துகள் அன்பரே !

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வியாழன், 2 ஜூலை, 2015

ராகு பகவான் தரும் யோகமும், சுய ஜாதகத்தில் பலன் தரும் காலநேரமும் !




ராகு பகவான், ஒருவரது சுய ஜாதகத்தில் தனது திசையில் சிறப்பான பலன்களை தர ஆரம்பித்துவிட்டால், குறிப்பிட்ட ஜாதகரின் வாழ்க்கை தரம் எதிபாராத பல சுபமான திருப்பங்களுடன், அபரிவிதமான வெற்றி வாய்ப்புகளை பெரும் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் மிகவும் பிரகாசமாக தெரியும், ஜாதகருக்கு ராகு பகவான் தான் தொடர்பு படுத்தும் பாவக வழியில் இருந்து தங்குதடையின்றி யோக பலன்களை வாரி வழங்க ஆரம்பித்துவிடுவார். மேலும் சுய ஜாதகத்தில் ராகு பகவான் எங்கு அமர்ந்தாலும், எப்படி பட்ட யோக அவயோகத்தை தான் அமர்ந்த பாவகத்திற்கு தந்தாலும் சரி, தனது திசையில் வலிமை பெற்ற பாவகத்தின் பலனை ஏற்று நடத்தினால் போதும் ஜாதகருக்கு மிகுந்த நன்மைகளே நடைபெறும், இதை ஓர்  உதாரண ஜாதகம் கொண்டு காண்போம் அன்பர்களே !


லக்கினம் : துலாம் 
ராசி : தனுசு 
நட்சத்திரம் : பூராடம் 3ம் பாதம் 

ஜாதகருக்கு தற்பொழுது நடைமுறையில் உள்ள ராகு திசை, லக்கினத்திற்கு 8ல் அமர்ந்து, 2,4,8,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தருவது வரவேற்க தக்கது, ஏனெனில் ஜாதகருக்கு ராகு பகவான் தொடர்பு படுத்துவது 2,4,8,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் எனவே ஜாதகர் குடும்ப ஸ்தானமான 2ம்  வீடு அமைப்பில் இருந்து நல்ல குடும்ப வாழ்க்கையையும், தன்னிறைவான பொருளாதார வரவையும் பெறுவார், இனிமையான பேச்சு திறன், வாக்கின் வழியில் இருந்து வரும் வருமானம், குடும்பத்தில் மகிழ்ச்சி, செல்வ செழிப்பு, சந்தோசம் என்ற வகையில் யோகத்தை அனுபவிக்கும் தன்மையை தரும்.

4ம் பாவக வழியில் நல்ல சுகபோகமான யோக வாழ்க்கை, வண்டி வாகன வசதிகள், புதிய வீடு மற்றும் பொருட்கள் வாங்கும் யோகம், வியாபர விருத்தி, நல்ல மன நிலை, சிறப்பான சிந்தனை ஆற்றால், மனதில் நினைக்கும் காரியங்களை வெற்றிகரமாக முடிக்கும் தன்மை என மிகுந்த யோக பலனை தரும், ஜாதகர் வாழ்க்கையில் நினைத்து பார்த்திராத வசதி வாய்ப்புகளை வாரி வழங்கும், 4ம் வீடு கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ஸ்தானமாக வருவது ஜாதகர் தான் செய்யும் தொழில் அமைப்பில் இருந்து மேற்கண்ட யோக பலன்களை நிறைவாக பெறுவார் என்பது மறுக்க இயலாத உண்மை, ஜாதகரின் தொழில் அமைப்பும் சர மண் தத்துவ ராசியான மகரம் சார்ந்ததாக அமையும் பொழுது வெற்றியின் சதவிகிதம் 100% ஆக இருக்கும் என்பது மறுக்க இயலாத உண்மை.

8ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் தனது வாழ்க்கை துணை மூலம் சகல யோகங்களையும் பரிபூரணமாக அனுபவிக்கும் யோகத்தை தரும், மேலும் 8ம் பாவகம் புதையலுக்கு நிகரான சொத்து சுக சேர்க்கையை திடீரென வாரி வழங்கும் என்பதால், ஜாதகரின் வருமான வாய்ப்புகள் மிகவும் அபரிவிதமானதாக அமையும் என்பது குறிப்பிட தக்கது, ஜாதகர் செய்யும் தொழில் முதலீடுகள் பன்மடங்கு வாருமானத்தை வாரி வழங்கும், மேலும் வாழ்க்கை துணை வழியில் இருந்தும் வாருமன வாய்ப்புகளும் யோக வாழ்க்கையும் உண்டாகும் என்பது கவனிக்க தக்கது.

10ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு, அபரிவிதமான தொழில் வாய்புகள் குறுகிய கால வெற்றிகளை வாரி வழங்கும், வண்டி வாகனம், சொத்து சுகம், மண் மனை யோகம் தங்கு தடையின்றி கிடைக்க பெறுவார், அதிர்ஷ்டத்தின் முழு சக்தியும் ஜாதகர் செய்யும் தொழில் அமைப்பில் இருந்து கிடைக்கும், இதன் மூலம் தன்னிறைவான பொருளாதார வசதிகளை ஜாதகர் பெறுவது என்பது உறுதியான நிலைபாடாக கருதலாம், மேலும் பண்ணை தொழில் , கால்நடைகள் மூலம் நல்ல முன்னேற்றம் உண்டாகும், மனதில் நினைத்த காரியங்கள் யாவும் நல்ல முறையில் நடைபெறும், ஆசைகள் யாவும் நினைத்தபடி பூர்த்தியாகும், 

மேற்கண்ட யோக பலன்கள் யாவும் நடைமுறைக்கு கொண்டு வருவது தற்பொழுது  நடைமுறையில் உள்ள ராகு பகவானின் திசையே ( 07/12/2012 முதல் 07/12/2030 வரை ) என்றால் அது  மிகையில்லை, மேலும் தொடர்பு படுத்தும் ஜீவன ஸ்தானம் சர நீர் ராசியான கடகத்தில் அமைவது ஜாதகருக்கு வர இருக்கும் யோக வாழ்க்கையை உறுதி செய்கிறது, மேலும் தான் தர வேண்டிய யோக பலன்களை 100% விகிதம் எவ்வித தடையும் இல்லாமல் வாரி வழங்கும் என்பது இவரது சுய ஜாதக ரீதியாக கவனிக்கப்படவேண்டிய விஷயம்.

இந்த ஜாதகத்தில் ராகு பகவான் தான் அமர்ந்த இடத்திற்கு நல்ல நிலையில் இல்லாத போதும், தனது திசையில் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவதால் ஜாதகரின் வாழ்க்கை ராகு திசையில் பன்மடங்கு முன்னேற்றம் பெற்று கொண்டு இருக்கிறது என்பது வரவேற்க்கதக்கது, வாழ்த்துகள்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696


செவ்வாய், 30 ஜூன், 2015

திருமணம் மூலம் யோக வாழ்க்கையும், களத்திர பாவக வலிமையையும் !


 சில ஜாதகங்களில் திருமணத்திற்கு பிறகு வாழ்க்கையில் நல்ல முன்னேற்றமும், அளவில்லா சொத்து சுக சேர்க்கையும், சமுதாயத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும், உயர்தரமான யோக வாழ்க்கையும் அமைவதுண்டு, நேற்றுவரை சாதாரண மனிதராக இருந்த நபர்கள்கூட, திடீரென அந்தஸ்த்து மற்றும் புகழ் பெறுவது, வாழ்க்கை துணை அமைந்தால் வந்த யோகமகவே  கருதலாம், இந்தநிலை முரண்பட்டதாகவும் அமைவதுண்டு நேற்று வரை சுகவாசியாக இருந்தவர் திருமணதிற்கு பிறகு ஆதாலபாதலத்திர்க்கு செல்வதும் உண்டு, இவை அனைத்தையும் நிர்ணயம் செய்வது ஒருவரது ஜாதகத்தில் உள்ள வலிமை மற்றும் வலிமை அற்ற களத்திர ஸ்தான பலனே, பொதுவாக சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் மிகவும் வலிமையுடன் இருப்பது ஜாதகருக்கு மிகுந்த யோகத்தை தரும்.

 குறிப்பாக களத்திர ஸ்தானம் லாப ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று, லாப ஸ்தானம் சர ராசியாக அமைவது ஜாதகருக்கு அபரிவிதமான யோகத்தை 100% விகிதம் வாரி வழங்கும், மேலும் லாப ஸ்தானம் கடகமாக அமைந்தால் ஜாதகரின் யோக போக சுக  வாழ்க்கையின் தரத்தை யாராலும் நிர்ணயம் செய்ய இயலாது இந்த வாய்ப்பு இரண்டு லக்கினத்திற்கு மட்டுமே பொருந்தும் 1) சிம்மம் 2) கன்னி இந்த இரண்டு லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு மட்டுமே லாப ஸ்தானம் கடகத்தில் அமையும். ( கன்னி லக்கினத்திற்கு கடகம் 11ம் பாவகமாக வருவது இயற்க்கை, சிம்ம லக்கினத்திற்கு கடகத்தில் 11ம் பாவகம் அமைவது பற்றி பின்பு விளக்கப்படும் ) 

பொதுவாக இன்றைய சூழ்நிலையில் திருமண வயதில் உள்ள ஆண் பெண் இருபாலரின் எண்ணமும் நல்ல வேலை நல்ல சம்பாத்தியம், அதன் பிறகே திருமணம் என்ற சிந்தனையிலேயே உள்ளது, இது வரவேற்க தக்கதல்ல, மேலும் சுய ஜாதகத்தில் ஒருவருக்கு நல்ல தொழில் அமைவதற்கும் சமூகத்தில் நல்ல  மதிப்பு மரியாதை கிடைப்பதற்கும், களத்திர ஸ்தானம் வழிவகுக்கும் என்ற உண்மை வெகுவாக எவருக்கும் புரிவதில்லை, திருமணம் என்பது  " பருவத்தே பயிர் " என்ற முதுமொழிக்கு ஏற்ப சரியான வயதில் அமைந்தால் ஜாதகருக்கோ ஜாதகிக்கோ 100% விகித தொழில் வாய்ப்புகள் மிக சிறப்பாக அமையும் என்பதில் மாற்று கருத்து இல்லை, மேலும் களத்திர பாவக வழியில் இருந்து ஜாதகர் அனுபவிக்க வேண்டிய யோகங்களை திருமணத்திற்கு பிறகே அனுபவிக்க இயலும், களத்திர பாவக வழியில் இருந்து யோகங்கள் திருமணத்திற்கு பிறகே செயல்படும்.

ஒருவரது ஜாதகத்தில் ( ஆண் அல்லது பெண் ) களத்திர பாவகம் நல்ல வலிமையுடன் இருப்பின் ஜாதகர், திருமணத்தை தள்ளி போட போட, ஜாதகர் களத்திர பாவக வழியில் இருந்து வரும் யோகங்களை அனுபவிக்க இயலாமல் போக நேரலாம், தொழிலை காரணம் காட்டி மறுக்கப்படும் திருமணங்கள்  மூலம் வதுவும், வரணும் மிகப்பெரிய யோக வாழ்க்கையை இழக்கின்றனர் என்பது கண்கூடான உண்மை, மேலும் சாதரணமாக ஜாதகருக்கு கிடைக்க வேண்டிய விஷயங்கள் கூட கிடைக்க பெறாமல், வாழ்க்கையில் அதிக அளவில் போராட்டங்களை கடுமையாக சந்தித்து கொண்டு இருக்கு பல ஜாதகங்களை ஜோதிடதீபம் கண்டுள்ளதால், சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் வலிமை பெற்று இருப்பின் சம்பந்த பட்ட ஜாதகரோ, ஜாதகியோ எந்த காரணத்தை கொண்டும், திருமணத்தை தள்ளிபோடாமல் மணவாழ்க்கையை அமைத்து கொண்டு வாழ்க்கையில் மிக பெரிய அதிர்ஷ்டங்களையும், யோகங்களையும் பெறுவதே சாலசிறந்தது.

களத்திர வழியில் அவயோக ஜாதக நிலை :

கிழ்கண்ட ஜாதகருக்கு குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானம் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பது, ஜாதகர் திருமணத்திற்கு பிறகு எதிர்கொள்ளும் இன்னல்களை கட்டியம் கூறுகிறது.


ஜாதகருக்கு அமையும் வாழ்க்கை துணையின் மூலமாக மிகப்பெரிய இன்னங்களையும் துன்பங்களையும் சந்திக்கும் சூழ்நிலையை தரும், தந்துகொண்டு இருப்பது கண்கூடான உண்மை, இருப்பினும் ஜாதகரால் அந்த பாதிப்பில் இருந்து மீண்டு வர இயலவில்லை என்பது கவனிக்கத்தக்கது, சரியான வாழ்க்கை துணை அமையாத காரணத்தால், ஜாதகர் வாழ்க்கை மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறியுள்ளது வருந்ததக்கது.

களத்திர வழியில் யோக ஜாதக நிலை :

கிழ்கண்ட கன்னி இலக்கின ஜாதகருக்கு களத்திர பாவகம் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம், இருப்பினும் ஜாதகர் தனக்கு வரும் நல்ல திருமண வாய்ப்புகளை தவிர்த்து கொண்டு இருப்பது, ஜாதகருக்கு களத்திர பாவக  வழியில் இருந்து வரும் நல்ல வாய்ப்புகள் அனைத்தும் வீணாவது தனது சுய ஜாதக வலிமையை உணராத தன்மையே அன்றி வேறு இல்லை.



 இதனால் ஜாதகருக்கு வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் யோகமும் கிடைக்கவில்லை, நண்பர்கள்,கூட்டாளிகள் மற்றும் பொதுமக்கள் வழியில் இருந்து கிடைக்கும் யோகமும் தவிர்க்கபடுவது ஜாதகராலேயே என்றால் அது மிகையில்லை, எனவே சுய ஜாதகத்தில் உள்ள வலிமையின் நிலையை சிறந்த ஜோதிடர் மூலம் உணர்ந்து வாழ்க்கையை சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் அமைத்துகொல்வதே சிறந்தது என்று ஜோதிடதீபம் இன்றைய இளைஞர் இளைஞிகளுக்கு வலியுறுத்துகிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

திங்கள், 22 ஜூன், 2015

சுய ஜாதகத்தில் திருமண யோக நிலையும், குருபலமும், நடைபெறும் திசை வழங்கும் பலன்களும்!


 திருமண வாழ்க்கையை நிர்ணயம் செய்வதில், சுய ஜாதகத்தில் குருபலம் பெறுவது அவசியமானதாக பெரும்பாலான ஜோதிடர்கள் கருதுகின்றனர், அதாவது சுய ஜாதகத்தில் ராசிக்கு குருபகவான் 2,5,7,9,11ம் ராசிகளில் சஞ்சாரம் செய்யும் பொழுது, ஜாதகருக்கு திருமண வாழ்க்கை கைகூடிவரும், இதுவரை திருமண வாழ்க்கை அமையாத அன்பர்களுக்கு, குருபகவான் ராசிக்கு 2,5,7,9,11ம் ராசிகளில் சஞ்சாரம் செய்யும் பொழுது நிச்சயம் திருமணம் மிகவும் சிறப்பாக நடைபெறும் என்பதும், சுய ஜாதகத்தில் நடைபெறும் திசை புத்திகள் வழங்கும் பலன்களை கருத்தில் கொள்ள தேவையில்லை என்பது போன்ற மாய தோற்றம் உள்ளது, இதை பற்றி இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்ர்களே !




லக்கினம் : சிம்மம் 
ராசி : கன்னி 
நட்சத்திரம் : உத்திரம் 3ம் பாதம் 

 மேற்கண்ட சிம்ம இலக்கின ஜாதகருக்கு  ( 21/03/2001 முதல் 22/03/2019 வரை ) ராகு திசை நடைமுறையில் உள்ளது, நடைபெறும் ராகு திசை 2,4,8,10,12 ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 12ம் பாவகம் சர ராசி என்றமுறையில் 100% அவயோக பலன்களை வாரி வழங்கிக்கொண்டு இருக்கிறது, மேலும் இந்த ஜாதகருக்கு ராகு திசையில் கடந்த 15 வருடங்களில் குருபகவான் சந்திரன் நின்ற ராசிக்கு 2,5,7,9,11ம் ராசிகளில் 1முறைக்கு மேல் கோட்சார சஞ்சாரம் செய்துவிட்டார், அதாவது குரு பலம் பெற்று சஞ்சாரம் செய்துவிட்டார், ஜாதகருக்கும் வயது 35 ஆகிவிட்டது, ஆனால் திருமணம் மட்டும் கைகூடி வரவில்லை, மேலும் சிம்ம லக்கினத்திற்கு குருபகவான் யோகத்தை செய்பவர் என்ற நிலைவேறு உள்ளது, ஆக இந்த ஜாதகருக்கு குரு பலம் பலன் தர இயலாமைக்கு காரணம் ஏன் ? என்பதை இனி ஆய்வு செய்வோம் அன்பர்களே.

பொதுவாக சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் 12 பாவகங்களின் வலிமை, நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் ஏற்று நடத்தும் பாவகங்களின் தன்மை, திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் ஏற்று நடத்தும் பாவகங்களுடன் தொடர்பு பெரும் கோட்சார கிரகங்கள் வழங்கும்  பலாபலன்கள் என்ற விஷயங்களை கருத்தில் கொண்டால் மட்டுமே ஒருவருடைய சுய ஜாதகத்தில் நடைபெறும் நடைமுறை பலன்களை துல்லியமாக கூற இயலும் அன்பர்களே! மாறாக சந்திரனை அடிப்படையாக கொண்டு கோட்சார கிரக நிலைகளின் பலன்களை காண முற்படும் பொழுது, சுய  ஜாதகத்திற்கு உண்டான பலன்களை நிச்சயம் தெளிவாக கூற இயலாது என்பது மட்டும் உறதி, மேலும் முரண்பட்ட பலன்களையே ஜாதகருக்கு சொல்லவேண்டி வரும், உதாரணமாக மேற்கண்ட ஜாதக பலன்களை ஆய்வு செய்வோம்.

ஜாதகருக்கு தற்பொழுது நடைமுறையில் உள்ள ராகு திசை எவ்வித யோக பலன்களையும் வழங்கவில்லை 2,4,8,10,12 ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 12ம் பாவக பலனை ராகு திசை ஏற்று நடத்துகிறது, ராகு திசையில் குரு புத்தியை தவிர நடைபெற்ற அனைத்து புத்திகளும் ஜாதகருக்கு 12ம் பாவக பலனையே ஏற்று நடத்தியிருக்கிறது.

 மேலும் தற்பொழுது நடைமுறையில் உள்ள சுக்கிரன் புத்தியும் ( 08/10/2012 முதல் 09/10/2015 வரை ) 12ம் பாவக வழியில் இருந்து மிகுந்த அவயோக பலன்களையே வாரி வழங்குவது கவலைக்கு உரிய விஷயமாகவே படுகிறது, மேலும் சுய ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம் எனும் 2ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 100% அவயோக பலன்களை தருவது ஜாதகரின் குடும்ப வாழ்க்கையை கேள்விக்குறியாக மாற்றுகிறது, களத்திர ஸ்தானம் எனப்படும் 7ம் பாவகம் மட்டும் 30% வலிமையுடன் இருப்பது ஜாதகருக்கு திருமணம் நடக்கும் என்பதை உறுதி செய்கிறது, திருமண வாழ்க்கை அமையும் காலம் எது ? என்ற கேள்விக்கு அடுத்து வரும் சூரியன் புத்தி திருமண வாழ்க்கையை அமைத்து தரும் என்பது பதில், ஏனெனில் அடுத்து வரும் சூரியன் புத்தி சுய  ஜாதக   ரீதியாக 7ம் பாவக பலனை ஏற்று நடத்துவதால் இந்த வாய்ப்பை நிச்சயம் வழங்கும், ஜாதகர்  விழிப்புணர்வுடன் செயல்பட்டு திருமண வாழ்க்கையை அமைத்து கொள்வது சால சிறந்தது.

இந்த ஜாதகருக்கு சுய ஜாதக அமைப்பின் படி குரு பகவான், தற்பொழுது நடைமுறையில் உள்ள ராகு திசையில் கடந்த 15 வருடங்களில் ஒன்னே கால் சுற்று வந்து விட்டார், இந்த கால கட்டங்களில் ராசிக்கு குரு பகவான் 6 முறைக்கு மேல் குரு பலம் பெற்று சஞ்சாரம் செய்த போதிலும், சுய ஜாதகத்தில் பாவகம் வலிமை அற்ற காரணத்தினாலும், நடைபெறும் ராகு திசை விரைய ஸ்தான பலனை தந்தாலும், ஜாதகருக்கு திருமணம் நடைபெறவில்லை, ராகு திசையில் ஜாதகருக்கு வந்த சில திருமண வாய்ப்புகளை ஜாதகரே தவிர்த்தது ஜாதகரின் குடும்ப ஸ்தானம் வலிமை அற்ற தன்மையை தெள்ள தெளிவாக காட்டுகிறது.

எனவே சுய ஜாதகத்தில் 2,7 ம் பாவகங்கள் வலிமை அற்று இருந்தாலும், நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் வலிமை அற்ற பாவக பலனை ஏற்று நடத்தினாலும், ஜாதகருக்கு எவ்வித குரு பலமும் வாழ்க்கையில் திருமணத்தை அமைத்து தந்துவிடாது, சுய ஜாதகத்தில் 2,7ம் பாவகங்கள் வலிமை பெற்று, நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் வலிமை பெற்ற பாவகங்களின் பலனை ஏற்று நடத்தினால், குரு பலம் இல்லாவிட்டாலும் திருமண வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமையும் என்பதில் எவ்வித மாற்று கருத்துக்கும் இடமில்லை அன்பர்களே!

ஆக திருமண வாழ்க்கையை நிர்ணயம் செய்வது கோட்சார கிரகங்களின் பலன்கள் அல்ல சுய ஜாதகத்தில் பாவக வலிமையின் அடிப்படையிலேயே நடைபெறுகிறது என்பது உறுதி, மேலும் சந்திரனை ( ராசியை ) அடிப்படையாக கொண்டு ஜாதக பலன் காண முற்படுவது கணிப்பாகவே அமையுமோ அன்றி சுய ஜாதக கணிதமாக அமைய வாய்ப்பில்லை என்பது நிதர்சனமான உண்மை,  ஜாதக கணிதம் மூலம் லக்கினத்தை அடிப்படையாக கொண்டு பலன் காணும் பொழுது ஜாதக ரீதியான தெளிவான பலன்களை 100% துல்லியமாக காண இயலும் என்பது ஜோதிடதீபத்தின் கருத்து.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

ஞாயிறு, 21 ஜூன், 2015

திசை மற்றும் புத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினாலும் ஜாதகர் தீமையான பலன்களையே அனுபவிப்பது ஏன் ?

 
 ஒருவரது சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களும் வலிமை பெற்று, நடைபெறும் திசை,புத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை நடத்திய போதும் ஜாதகரால் யோக பலன்களை அனுபவிக்க இயலாத நிலை ஏன் ஏற்ப்படுகிறது? என்பதை இந்த பதிவில் சிந்திப்போம் அன்பர்களே! மேலும் கிழ்கண்ட உதாரண ஜாதகம் மூலம் மேற்கண்ட கேள்விகளுக்கு தெளிவான பதிலை பெற இயலும்.


லக்கினம் : மகரம் 
ராசி : மேஷம் 
நட்சத்திரம் : அஸ்வினி 1ம் பாதம் 

ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவகங்கள் :

1,2,3,6,7,12ம் வீடுகள் களத்திர பாவகமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம்.
4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம்.
9ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம்.
10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம்.

ஜாதகத்தில் வலிமை அற்ற பாவகங்கள் :

5,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம்.
8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம்.

ஜாதகத்தில் தற்பொழுது நடைபெறும் செவ்வாய் திசை ( 02/12/2014 முதல் 02/12/2021 வரை )ஏற்றுநடத்தும் பாவக பலன்கள் 
10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் ஜீவன ரீதியான யோக பலனை தந்துகொண்டு இருப்பது மிகவும் சிறப்பான நிலையாக கருதலாம், மேலும் ஜாதகருக்கு ஜீவன ஸ்தனமானது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 8ம் ராசியாகவும், ஸ்திர நீர் தத்துவ அமைப்பிலும் அமைவதாலும், ஜாதகருக்கு நிலையான தனது மனதில் நினைத்த எண்ணங்களுக்கு ஏற்ப, புதையலுக்கு நிகரான சொத்து சுக சேர்க்கையையும், எண்ணத்தின் வலிமைக்கு ஏற்ற வகையில் பொருளாதார முன்னேற்றத்தையும், தங்கு தடையின்றி வாரி வழங்கும், ஆனால் ஜாதகருக்கு நடப்பது முற்றிலும் முரண்பட்ட  வாழ்க்கையாக இருப்பது கவனிக்க தக்கது, நிறைய கடன் சுமை, வாழ்க்கை துணை வழியில்  இருந்து இன்னல்கள் மற்றும் பிறிவு என நடைபெறும் திசைக்கு ஏற்ற யோக பலன்கள் நடைபெறாமல், மிகுந்த இன்னல்களுக்கும் துன்பத்திற்கும் ஆளாகும் சூழ்நிலை தந்துள்ளது, சுய ஜாதகத்திற்கு ஒத்து வாராத முரண்பட்ட பலன்களாக இருப்பது கவனிக்கத்தக்கது.

பொதுவாக இதை போன்ற ஜாதக அமைப்பில் ஜாதகத்தில் பலன்கான முற்படும் பொழுது, ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் என்று அழைக்க பெரும் 5ம் பாவக நிலையை கருத்தில் கொண்டு பலன் காணுவதே  ஜாதகருக்கு  தெளிவான பலன்களை 100% சொல்ல இயலும், இவரது ஜாதகத்தில் பெரும்பாலான பாவகங்கள் வலிமை பெற்று அமர்ந்த போதிலும், பூர்வ புண்ணியம் எனும் 5ம் பாவகம் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 200% இன்னல்களை தரும், மேலும் ஜாதகருக்கு தற்ப்பொழுது நடைபெறும் திசை மிகவும் வலிமை பெற்ற ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்திய போதும் , ஜாதகரால் ஜீவன ஸ்தான அமைப்பில் இருந்து எவ்வித யோக பலனை அனுபவிக்க இயலாத சூழ்நிலைக்கு காரணமாக அமைவது, பூர்வ புண்ணியம் பாதக ஸ்தனத்துடன் சம்பந்தம் பெறுவதும், ஜாதகர்  தனது பூவீகத்தில் குடியிருந்து கொண்டு தனது ஜீவன வாழ்க்கையை மேற்கொள்வதுமே என்றால் அது மிகையில்லை.

ஒரு ஜாதகர் தனது ஜாதகத்தில் உள்ள வலிமைக்கு ஏற்ப யோக பலன்களை அனுபவிப்பது எப்படி ? என்பதை ஜாதகரின் லக்கினமும், பூர்வ புண்ணியமான 5ம் பாவகம் நிர்ணயம் செய்கிறது என்றால் அது மிகையில்லை அன்பர்களே! சுய ஜாதகத்தில் லக்கினம் மற்றும் 5ம் பாவகம் வலிமை இழக்கும் பொழுது ஜாதகர் தனது பூர்வீகத்தில் குடியிருப்பது, ஜாதகத்தில் உள்ள யோக நிலைகளை பரிபூரணமாக அனுபவிக்க இயலாத சூழ்நிலையை தரும், மேலும் லக்கினமும், பூர்வ புண்ணியமும் ஜாதகரின் புத்திசாலிதனத்தையும், சமயோசித அறிவுத்திறனையும் வெளிபடுத்தும் பாவகம் என்பதால், இந்த பாவக நலன்களை அனுபவிக்க இயலாத சூழ்நிலையை தரும்,  ஜாதகர் தனக்கு வரும் நல்ல நல்ல வாய்ப்புகளையும், அதிர்ஷ்டத்தையும் வேண்டாம் என உதறும் சூழ்நிலையை தரும் , எனவே சுய ஜாதகத்தில் யோக பலன்கள் தரும் திசா புத்திகள் நடைபெற்றாலும், அதானால் ஜாதகருக்கு யாதொரு நன்மையும் விளையாது, துன்பமே மிச்சும்.

மேற்கண்ட ஜாதகர் தனது பூர்வீகத்தில் இருந்து வெளியேறி வேறு இடத்தில் தனது ஜீவனத்தை மேற்கொண்டால் ஜாதகர் தனது ஜீவன ஸ்தான பாவக வழியில் இருந்து 100% யோக பலன்களை வாரி வழங்கும், ஜாதகரின் சிந்தனை திறனும், அறிவு ஆற்றலும் பன்மடங்கு விருத்தியை வாரி வழங்கி, ஜாதகத்தில் உள்ள யோக பலன்களை பரிபூரணமாக அனுபவிக்கும் தன்மையை தரும், பெரும்பாலும் 5ம் பாவகம் வலிமை குன்றிய ஜாதகர்கள், சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து எவ்வித யோக பலன்களையும் அனுபவிக்க இயலாமல் போவதற்கு இதுவே காரணம் என்பது ஜோதிடதீபத்தின் ஆணித்தரமான கருத்து.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696 

லக்கினதிபதியின் திசை ஜாதகருக்கு நன்மையை மட்டுமே தருமா ?



சுய ஜாதகத்தில் லக்கினாதிபதி எந்த நிலையில் இருந்தாலும் சரி, அவர் தனது திசையில் நன்மையை மட்டுமே தருவார் என்ற கருத்து முற்றிலும் முரண்பட்டதாகவே
" ஜோதிடதீபம் " கருதுகிறது, பொதுவாக ஒருவரது ஜாதகத்தில் எந்த பாவகத்திர்க்கு அதிபதி என்றாலும் சரி தனது திசையில் எந்த பாவகத்தின் பலனை ஏற்று நடத்துகிறாரோ, அந்த பாவக பலனை தங்கு தடையின்றி 100 % செய்வார் இதில் மாற்று கருத்துக்கு இடமில்லை, இதில் லக்கினாதிபதி,கேந்திராதிபதி, கோனாதிபதி என்ற விதி விளக்கு கிடையாது, இதை சரியான உதாரண ஜாதகம் கொண்டு காண்பது, தெளிவை தரும்.


லக்கினம் : மகரம் 
ராசி : துலாம் 
நட்சத்திரம் : சித்திரை 3ம் பாதம்
 
ஜாதகருக்கு அடுத்து வரும் திசை சனி திசை ( 04/08/2016 முதல் 04/08/2035 வரை ) இந்த ஜாதகருக்கு லக்கினம் மற்றும் இரண்டாம் பாவகத்திர்க்கு அதிபதியாக சனி பகவான் வருவாதல், சனிபகவானின் திசை ஜாதகருக்கு மிகுந்த யோகத்தையும் தான வரவையும் ஏற்ப்படுத்தும் என்பதாக பலன் சொல்லபட்டு இருக்கிறது, பொதுவாக பாரம்பரிய ஜோதிடத்தில் ஒரு பாவகத்திர்க்கு அதிபதியை நிர்ணயம் செய்யும் பொழுது, அந்த ராசிக்கு அதிபதியை பாவக அதிபதியாக நிர்ணயம் செய்வது வழக்கத்தில் உள்ள ஒரு முறையாகும், மேலும் இது சரியான பலனை நிர்ணயம் செய்ய உதவாது, இந்த ஜாதகருக்கு  லக்கினத்திற்கு அதிபதி சனி அல்ல குரு என்பதே ஜாதக கணிதம் அறிந்த  அனைவருக்கும் தெளிவாக புரியும்.

மேலும் ஜாதகருக்கு சனி திசை வழங்கும் பலன்களை இனி ஆய்வுக்கு எடுத்து கொள்வோம், சனிபகவான் ஜாதகருக்கு 6,9,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பலனை தர எதுவாக உள்ளது, பாதக ஸ்தானம் என்பது ஜாதகருக்கு காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு ஸ்திர  நீர்ராசியாக அமைவதும், கால புருஷ அமைப்பிற்கு 8ம் ராசியாக   அமைவதும் ஜாதகர் சனி திசையில் எதிர்கொள்ள இருக்கும், வீண் விரையங்களையும், திடீர் இழப்புகளையும் காட்டுகிறது, மேலும் ஜாதகர் மனதளவில்  அதிக போராட்டங்களையும் துன்பங்களையும் எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும் என்பதில் மாற்று கருத்து இல்லை, எனவே ஜாதகர் எதிர்வர இருக்கும் சனி  திசையை மிகவும் கவனமாக எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்பது மட்டும்   உறுதி, லக்கினாதிபதி திசை தனக்கு நன்மை தரும் என்று ஜாதகர் கவனம் இன்றி இருப்பின் ஜாதகருக்கு வரும் இழப்புகள் மிக மிக அதிகமாகவே இருக்கும்  என்பது மட்டும் நிச்சயம்.

பொதுவாக சுய ஜாதகத்தில்  நடைபெறும் திசை புத்திகள், எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்ற விஷயம் தெரிந்தால் எதிர்காலத்தை ஜாதகர் மிக தெளிவாக மிக எளிதாக எதிர்கொள்ள இயலூம், மாறாக நடைபெறும் திசை புத்தி எந்த பாவக பலனை வழங்குகிறது என்ற விஷயம் தெரியாத பொழுது , ஜாதகர் உண்மைக்கு புறம்பான ஆலோசனைகளின் பேரில் மிக பெரிய  பாதிப்புகளை சந்திக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட கூடும், மேற்கண்ட ஜாதகத்தில் எதிர்வரும் சனி திசை ஜாதகருக்கு லக்கினாதிபதி என்ற முறையிலும், 2ம் பாவக அதிபதி என்ற முறையிலும், லக்கினத்திற்கு 8ல்  மறைவு நிலையில் அமர்ந்த போதிலும், ஜாதகருக்கு லக்கினத்திற்கு அதிபதியாக வருவதால் மிகுந்த நன்மையை செய்வார் என்று  கணிப்பது மிக மிக தவறு, மேலும் சனி பாகாவன் திசை ஜாதகருக்கு 6,9,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவக பலனை ஏற்று நடத்துவது நிச்சயம் நன்மையை தர  வாய்ப்பில்லை.

 எனவே ஜாதகர் 6,9,11ம் பாவக வழியில் இருந்து இன்னல்களை எதிர்கொள்ள வேண்டி வரும் என்பது மட்டும் ஊறுதி, ஆக மேற்கண்ட வீடுகள்  அமைப்பில் இருந்து வரும் இன்னல்களில் இருந்து ஜாதகர் தன்னை தற்காத்து கொள்வது மிகுந்த  நலன்களை தரும், 6ம் பாவக வழியில் இருந்து கடன்,நோய் மற்றும்  எதிரிகள் தொந்தரவு, 9ம் பாவக வழியில் இருந்து தனது நர்ப்பெயருக்கு களங்கம், மற்றவர் விஷயங்களில் தலையீடு செய்யாமல் இருப்பது, அறிவு திறன் மங்குதல், 11ம் பாவக வழியில் இருந்து தன்னம்பிக்கை குறைதல், பிற்போக்கு எண்ணங்கள், நம்பிக்கை இல்லாமல் செயல்படுதல் என்ற வகையில் பலன்களை தரக்கூடும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

புதன், 20 மே, 2015

ஜாதகத்தில் பாவக வலிமையையும்! நடைபெறும் திசை மற்றும் புத்திகள் வழங்கும் பலன்களும்!



சுய ஜாதகத்தில் பாவக வலிமையை பொறுத்தே நடைமுறையில் உள்ள திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் ஜாதகருக்கு யோக அவயோக பலன்களை வாரி வழங்குகிறது என்பது மறுக்க இயலாத உண்மை, சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் 12 பாவகங்களும் வலிமை பெற்று அமரும் பொழுது ஜாதகருக்கு யோக பலன்கள் நடைமுறைக்கு வருகின்றது, மாறாக லக்கினம் முதல் 12 பாவகங்களும் வலிமை அற்று அமரும் பொழுது ஜாதகருக்கு அவயோக பலன்கள் நடைமுறைக்கு வருகின்றது, உதாரணமாக கிழ்கண்ட ஜாதகத்தை ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே !


லக்கினம் : கன்னி
ராசி : சிம்மம் 
நட்சத்திரம் : மகம் 1ம் பாதம் 

ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவகங்கள் :

1,3ம் வீடுகள் குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவதும், 
2ம் வீடு வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவதும், 
5ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவதும்,
6,9,10,12ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவதும், 
11ம் வீடு அதிர்ஷ்டம் மற்றும் இலாப ஸ்தானம் எனும் 11ம் பாவகத்துடனே தொடர்பு பெறுவதும், ஜாதகத்தில்  வலிமை மற்றும் யோக நிலையாகும்.

ஜாதகத்தில் வலிமை அற்ற பாவகங்கள் :

4,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவதும்,
7ம் வீடு பாதக  ஸ்தானமான 7ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவதும், ஜாதகத்தில் வலிமை அற்ற மற்றும் அவயோக நிலையாகும்.

இதில் 7ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது ஜாதக அமைப்பிலேயே மிகுந்த இன்னல்களுக்கும் துன்பங்களுக்கும் ஆளாக்கும் தன்மையில் உள்ளது கவனிக்க தக்கது.

இனி ஜாதகருக்கு தற்பொழுது நடைபெறும் திசை மற்றும் புத்திகள் தரும் பலன்களை பற்றி  சிந்தனைக்கு எடுத்துகொள்வோம்.

ஜாதகருக்கு நடைபெறும் திசை : 

செவ்வாய் ( 04/11/2008 முதல் 04/11/2015 வரை ) செவ்வாய் திசை ஜாதகருக்கு  5ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றும், 11ம் வீடு அதிர்ஷ்டம் மற்றும் இலாப ஸ்தானம் எனும் 11ம் பாவகத்துடனே தொடர்பு பெற்றும் யோக பலன்களை தருவது மிகுந்த சிறப்பான நன்மைகளை செய்யும், குறிப்பாக ஜாதகர் 5,11ம் பாவக வழியில் இருந்து சிறந்த நன்மைகளை பெறுவதற்கு உண்டான வாய்ப்புகளை வாரி வழங்கும்.

ஜாதகருக்கு செவ்வாய் திசையில் நடைபெறும் புத்தி :

சந்திரன் ( 05/04/2015 முதல் 04/11/2015 வரை ) செவ்வாய் திசையில் சந்திரன் புத்தி ஜாதகருக்கு 7ம் வீடு பாதக  ஸ்தானமான 7ம் பாவகத்துடன் தொடர்பு  பெற்று பலனை தருவதும், இதற்க்கு முன் நடந்த சூரியன் புத்தியும் 7ம் வீடு பாதக  ஸ்தானமான 7ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று பலனை நடத்தியதும், ஜாதகரின் வாழ்க்கையை மிகப்பெரிய வீழ்ச்சிக்கு வழிவகுத்து இருக்கும், ஜாதகர் 7ம் பாவக வழியில் இருந்து சொல்ல இயலாத துன்பங்களையும் இன்னல்களையும் அனுபவித்து, வாழ்க்கையில் பல போராட்டங்களை                எதிர்கொண்டு சமூகத்தில் எதிர்நீச்சல் அடிக்கும் சூழ்நிலைக்கு ஆளாகியிருக்க கூடும், பாதக ஸ்தானத்தின் பலனை ஜாதகர் எதிர்கொள்வது என்பது நித்தியகண்டம் பூரண ஆயுசுக்கு சமாமான ஒன்றாகவே ஜோதிடதீபம் கருதுகிறது.

மேலும் தற்பொழுது நடைமுறையில் உள்ள சந்திரனும் பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துவது ஜாதகரை வெகுவாகவே பாதிக்கும் என்பதில்  மாற்றுகருத்து இல்லை, குறிப்பாக ஜாதகர் வாழ்க்கை துணை வழியில் இருந்தும், நண்பர்கள், உறவினர்கள், வெளிவட்டார பழக்க வழக்கங்கள், பெரியமனிதர்கள், என்ற அமைப்புகளில் இருந்து தேவையில்லாத இன்னல்களுக்கும், துன்பங்களுக்கும் ஆளாக்கும், மேலும் கோட்சார கிரகங்களின் சஞ்சாரமும் 7ம் பாவகத்திர்க்கு சாதகமாக இல்லாத காரணத்தால் இன்னல்களின் சதவிகிதம் அதிகரிக்கும், எனவே ஜாதகர் மேற்கண்ட பாவக வழியில் இருந்து வரும் பிரச்சனைகளை கவனமாக எதிர்கொள்வது, ஜாதகருக்கு சகல நிலைகளில் இருந்தும் நன்மையை தரும்.

குறிப்பாக ஜாதகருக்கு நடைமுறையில் உள்ள செவ்வாய் திசை அமைப்பில் இருந்து 5,11ம் பாவக வழியில் சிறந்த நன்மைகளை பெறுவதற்கு உண்டான வாய்ப்புகளை வாரி வழங்கிய போதிலும், தற்பொழுது நடைமுறையில் உள்ள புத்திகள் பாதக ஸ்தான பலனை ஏற்று  நடத்துவதால் ஜாதகர் 5,11ம் பாவக வழியில் இருந்து எவ்வித யோக பலன்களையும் அனுபவிக்க இயலாது 

ஜாதகருக்கு எதிர்வரும் திசை : 

ராகு ( 04/11/2015 முதல் 04/11/2033 வரை ) ராகு திசை ஜாதகருக்கு 2ம் வீடு வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று யோக பலன்களை வாரி வழங்குவதும், ஜாதகரின் 3ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 8ம் ராசியாக வருவதாலும் திடீர் அதிர்ஷ்டங்களை பெறுவதற்கு உண்டான வாய்ப்புகளை ராகு திசை வழங்கும், குறிப்பாக ஜாதகர் ஏஜென்சி துறையில் புதையலுக்கு நிகரான சொத்து சுக சேர்க்கையை பெறுவார், 3ம் பாவகம் நீர் தத்துவ ராசியில் செயல்படுவதால் ஜாதகரின் மனம் தெளிவடையும், ஜாதகருக்கு உணவு சார்ந்த தொழில்களில் அளவில்லா வருமான  வாய்ப்பையும், திடீர் அதிர்ஷ்டங்களையும் வாரி வழங்கும், ராகு திசையில் உணவு சார்ந்த தொழில்களில் ஏஜென்சி எடுத்து நடத்துவதால் அளவில்லா யோகமும் முன்னேற்றமும் உண்டாகும்.

ராகு திசை ஜாதகருக்கு மிகுந்த நற்பலன்களை ஸ்திரமாக வாரி வழங்க காத்து   இருக்கிறது என்பதை  நினைத்து ஜாதகர் மகிழ்ச்சி உடன் எதிர்கால வாழ்க்கையை எதிர்கொண்டு வெற்றி பெறலாம், வாழ்த்துகள்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

செவ்வாய், 12 மே, 2015

திருமண வாழ்க்கை எனக்கு சிறப்பாக அமையுமா ? வாழ்க்கை துணை வழியில் இருந்து யோகம் உண்டா ?



 கேள்வி :

எனது முதல் திருமணம் கருத்து வேறுபாடு காரணமாக மணமுறிவை சந்தித்து பலவருடங்கள் ஓடிவிட்டது, பெற்றோரின் நிர்பந்தம் காரணமாக இரண்டாவது திருமணம் செய்துகொள்ளவேண்டிய கட்டாயத்தில் உள்ளேன், இரண்டாவதாக அமையும் திருமண வாழ்க்கை எனக்கு வெற்றியை தருமா? இரண்டாவதாக வரும் வாழ்க்கை துணை வழியில் இருந்து யோகம் உண்டா ?

பதில் :

 பொதுவாக ஒருவரது சுய ஜாதகத்தில் திருமண வாழ்க்கையை குறிக்கும் குடும்ப ஸ்தானமான 2ம் பாவகமும், களத்திர ஸ்தானமான 7ம் பாவகமும் ஏதாவது ஒரு வகையில் பாதிக்கபட்டு இருப்பின், அந்த ஜாதகருக்கு திருமண பொருத்தம் காணும் பொழுது மிகவும் சிறப்பு கவனம் எடுத்து வாழ்க்கை துணைவரை அமைத்து தருவது, சம்பந்தபட்ட ஜாதகருக்கு திருமண வாழ்க்கையில் வரும் இன்னல்களை வெகுவாக குறைக்கும், பாதிக்க பட்ட பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களில் இருந்து ஜாதகரை கரையேற்றும், மேலும் திருமண வாழ்க்கை பிரிவை தாராமல், தாம்பத்தியத்தில் ஒற்றுமையும், நல்ல இணக்கமும் கருத்து வேறுபாடற்ற இல்லற வாழ்க்கையை உறுதிபடுத்தும்.

சுய ஜாதகத்தில் திருமண வாழ்க்கையை குறிக்கும் குடும்ப ஸ்தானமான 2ம் பாவகமும், களத்திர ஸ்தானமான 7ம் பாவகமும் ஏதாவது ஒரு வகையில் பாதிக்கபட்டு இருப்பின், ஜாதகரின் திருமண வயது வந்தவுடன் ஜாதகருக்கு நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் மேற்கண்ட பாதிக்க பட்ட பாவகங்கலான 2,7ம் பாவக பலனை ஏற்று நடத்துகிறதா? என்பதை கவனத்தில் கொள்வது அவசியம், ஒருவேளை நடைமுறையில் பாதிக்க பட்ட பாவகங்கலான 2,7ம் பாவக பலனை ஏற்று நடத்தினால், ஜாதகருக்கு திருமணம் தடை ஏற்ப்படும் அல்லது பொருத்தம் அற்ற வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்து திருமண வாழ்க்கை கசந்து, ஜாதகரை மணமுறிவை நோக்கி விரைவில் அழைத்து செல்லும், எனவே ஜாதகர் திருமணம் செய்யும் முன் தனது ஜாதக வலிமையை பற்றிய தெளிவும், தனக்கு வர இருக்கும் வாழ்க்கை துணையின் ஜாதக வலிமையை பற்றிய தெளிவும் சிறந்த ஜோதிடரின் வழிகாட்டுதலின் பெயரில் பெறுவது அவசியம்.

இனி பதிவின் ஆரம்பத்தில் வினவபட்ட கேள்விக்கு உண்டான பதிலை பற்றி சிந்திப்போம் அன்பர்களே !



லக்கினம் : தனுசு 
ராசி : துலாம் 
நடசத்திரம் : சித்திரை 3ம் பாதம் 

ஜாதகிக்கு தனுசு லக்கினம், சுய ஜாதகத்தில் குடும்ப ஸ்தானமான 2ம் வீடு திடீர் இழப்பை தரும் ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம், களத்திர ஸ்தானமான 7ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம், சுய ஜாதகத்தில் மேற்கண்ட பாவக பலனை ஏற்று நடத்தும் திசாபுத்தியில் ஜாதகிக்கு திருமணம் நடைபெற்றது, திருமணம் நடைபெற்ற சில நாட்களிலேயே திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்து, விகாரத்து பெற்றனர், ஜாதகியின் வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் மேற்கண்ட 2,7ம் வீடுகள் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்றது விதியின் வலிமையை ஜாதகிக்கு தெள்ள  தெளிவாக உணர்த்தியது.

இனி அடுத்து நடப்பதை பற்றி சிந்திப்போம், ஜாதகியின் கேள்வி இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டால் வாழ்க்கை சிறப்பாக இருக்குமா? 

நிச்சயம் வெகு சிறப்பாக அமையும் ஏனெனில் ஜாதகின் சுய ஜாதக அமைப்பின் படி, இரண்டாவது திருமண வாழ்க்கையை பற்றி தெரிவிக்கும் 9ம் பாவகம் மிகவும் வலிமையுடன் இருப்பது சிறப்பான அமைப்பாக கருதலாம், 9ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடனே சம்பந்தம் பெறுவது ஜாதகிக்கு இரண்டாவது திருமண வாழ்க்கையின் மூலம் சிறப்பான கணவனை பெறுவதற்கு உண்டான வாய்ப்பை நிச்சயம் பெறுவார், தற்பொழுது நடைமுறையில் உள்ள சனி திசை புதன் புத்தி ஜாதகிக்கு 11ம் வீடு அதிர்ஷ்டம் மற்றும் லாபத்தை குறிக்கும் 11ம் பாவகத்துடனே சம்பந்தம் பெற்று 100% விகித யோக பலனை தருவதும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் பாவகமான துலாம் ராசியாக 11ம் பாவகம் அமைவதும், சர காற்று தத்துவ நிலையில் செயல்படும் தன்மையை பெற்ற துலாம் ராசி, 11ம் பாவகமாக ஜாதகிக்கு நின்று யோக பலனை வாரி வழங்குவதும் சிறப்பனாதாக கருதலாம்.

எனவே ஜாதகி தாமதம் செய்யாமல் சிறந்த வாழ்க்கை துணையை தேடி ( இயற்கையாகவே நல்ல மணமகன் அமைவார் ) இரண்டாவது திருமணம் மூலம் 100% விகித யோக வாழ்க்கையை பெறலாம், இதில் எவ்வித தடைகளும் இல்லை, மேலும் ஜாதகி இரண்டாவது திருமணத்தின் மூலம் சகல நிலைகளில் இருந்தும் முன்னேற்றம் பெறுவார், குறிப்பாக தொழில் மற்றும் ஜீவன மேன்மை ஜாதகிக்கு நிச்சயம் உண்டாகும்.

வாழ்த்துகள் 

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வெள்ளி, 8 மே, 2015

ஆயுள் பாவகமான 8ம் வீடு சுய ஜாதகத்தில் பாதிக்க படும் பொழுது ஜாதகர் எச்சரிக்கையுடன் கையாள வேண்டிய விஷயங்கள்!



ஒருவரின் ஜாதகத்தில் மறைவு ஸ்தானமாக கருதப்படும் 6,8,12ம் வீடுகளில், 8ம் வீடு ஆயுள் பாவகமாக வருகின்றது, பாரம்பரிய ஜோதிடத்தில் 6,8,12ம் வீடுகள் பாதிப்படைவதும்,வலிமை பெறுவதும் மிகுந்த இன்னல்களையே வழங்கும் என்பது பொதுவான கருத்து, இது முற்றிலும் தவறானதாகவே "ஜோதிடதீபம்" கருதுகிறது, ஒருவரின் சுய ஜாதகத்தில் 12 பாவகங்களுக்கும் நன்மை தீமை பலன்களை வழங்கும் தன்மை உண்டு, ஒவ்வொரு பாவகமும் வலிமை பெரும் பொழுது ஜாதகர் குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து யோக பலன்களையும், ஒவ்வொரு பாவகமும் வலிமை இழக்கும் பொழுது ஜாதகர் குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து மிகுந்த அவயோக பலன்களையும் எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும்.

குறிப்பாக, ஒருவரது சுய ஜாதகத்தில் லக்கினம் எனும் முதல் பாவகம் பாதிக்கப்படும் பொழுது ஜாதகர் தனது வாழ்க்கையை தானே பாதிப்பிற்கு ஆளாக்குவார், தனது உடலையும் மனதையும் பாதுகாக்க இயலாமல் தானே கெடுத்து கொண்டு, தன்னை சார்ந்தவர்களுக்கும் இன்னல்களை தருவார், இதை போன்றே 12 பாவக வழியில் இருந்து ஒவ்வொருவரும் யோக அவயோக பலன்களை அனுபவிக்கும் தன்மையை பெறுகின்றனர்.

நாம் இந்த பதிவில் சுய ஜாதகத்தில் ஆயுள் பாவகமான 8ம் வீடு சுய ஜாதகத்தில் பாதிக்கப்படும் பொழுது ஜாதகர் 8ம் பாவக வழியில் இருந்து எவ்வித இன்னல்களை எதிர்கொள்ள நேரும் என்பதை சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே !

அடிப்படையில் 8ம் பாவகம் சுய ஜாதகத்தில் பாதக ஸ்தானத்துடனோ, அல்லது தொடர்பு பெற கூடாத வீடுகளுடனோ தொடர்பை  பெற்றால், ஜாதகர் ஆயுள் பாவகமான 8ம் பாவக வழியில் இருந்து இன்னல்களை அனுபவிக்கும் சூழ்நிலையை தரும், நடைமுறையிலோ அல்லது எதிர்வரும் திசாபுத்திகள் பாதிக்கபட்ட 8ம் பாவக பலனை ஏற்று நடத்தினால், ஜாதகரின் பாடு படு திண்டாட்டம் தான், குறிப்பாக பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெற்று திசாபுத்திகள் 8ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் ஜாதகர் நெருப்பில் இட்ட புழுபோல தவிக்கும் சூழ்நிலையை தரும்.

பொதுவாக ஆயுள் பாவகம் என்றவுடன் அனைவருக்கும் நியாபகம் வருவது, ஜாதகரின் ஆயுளுக்கு பங்கம் அல்லது கண்டம் ஏற்ப்படும் என்றுதான், பெரும்பாலும் இது நடைமுறையில் ஒத்து வருவதில்லை, ஜாதகரின் ஆயுள் பாவகம் எந்த தத்துவத்தில் இயங்குகிறது என்பதை கவனத்தில் கொண்டு பலன் காண்பதே சிறப்பு, மாறாக 8ம் பாவக வழியில் இருந்து வேறு சில இன்னல்களும் வரக்கூடும், அதாவது தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் வருமான இழப்பை முதலாவதாக சொல்லாம், ஜாதகர் தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து அதிக அளவு இன்னல்களையும், கருத்து வேறுபாடு காரணமாக மன வாழ்க்கையில் பிரிவும், கணவன் மனை வழியில் இருந்து, தாங்க இயலாத வண்ணம் வரும் துன்பங்களையும் ஆயுள் பாவகமே நிர்ணயம் செய்கிறது, மேலும் எதிர்பாராத திடீர் செலவுகள், விபத்துகளை தவிர்க்க இயலாது, மற்றவர்களை நம்பி செய்யும் பணம் மற்றும் பொருள் முதலீடுகள் திடீர் இழப்பை சந்திக்கும், ஜாதகர் வெளிநாடுகளிலோ அல்லது வெளியூரிலோ இருப்பின் எதிர்பாராத திடீர் இழப்புகளை சந்திக்கும் தன்மையை தரும், ஜாதகர் முன்னேற்றம் கடுமையாக பாதிக்க படும், கூட்டு தொழில் செய்பவர்களுக்கு தனது கூட்டாளி வழியில் இருந்து எதிர்பாராத திடீர் இழப்புகளை சந்திக்கும் சூழ்நிலையை தரும்.

ஜாதகரின் சிந்தனை திறனும், செயல்பாடுகளும் கடுமையாக பாதிக்க படும், இதனால் உடல் நிலையும் மன நிலையம் வெகுவாக பதிக்கப்படும், உடல் ரீதியாக ஜாதகருக்கு கடுமையான பாதிப்பை தரக்கூடும், உடல் நிலை வெகுவாக பாதித்து உருமாற்றம் பெரும் சூழ்நிலைக்கும் ஜாதகர் தள்ளபடுவார், மேலும் மற்றவர்களுக்காக ஜாமீன் மற்றும் ஒப்பந்த கையெழுத்து செய்து கொடுத்திருந்தால் அதன் வழியில் ஜாதகர் கடுமையான இன்னல்களையும், பொருள் இழப்பையும் சந்திக்கும் சூழ்நிலையை பெற கூடும், தனது நண்பர்களுடனும் உறவுகளுடனும் சுமுகமான போக்கை கடைபிடிக்காமல், கருத்து வேறுபாடு காரணமாக பல இன்னல்களை ஜாதகர் சந்திக்கும் சூழ்நிலையை உருவாக்கும்.

சுய ஜாதகத்தில் ஒருவருக்கு ஆயுள் பாவகமான 8ம் பாவகம் பாதிக்க பட்டு இருப்பின் ஜாதகர் தனது வாழ்க்கை துணையை தேர்ந்து எடுக்கும் பொழுது அதிக கவனமாக இருப்பது நலம், அதாவது தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து ஜாதகர் பெரும் வருமானம் மற்றும் வருமான இழப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றம் மற்றும் முன்னேற்றம் அற்ற நிலை ஆகியவற்றை மிக தெளிவாக குறிப்பிடுவது ஆயுள் பாவகமே, மேலும் வாழ்க்கை துணையின் பேச்சு மற்றும் ஆதரவு போன்ற விஷயங்களையும் ஒருவரது சுய ஜாதகத்தில் உள்ள ஆயுள் பாவகமே நிர்ணயம் செய்வதால், ஜாதகர் தனது வாழ்க்கை துணையின் ஜாதக வலிமையை கருத்தில் கொண்டே தேர்ந்தெடுக்க வேண்டும், மாறாக அவசர கதியில் வாழ்க்கை துணையை தேர்ந்து எடுப்பின் ஜாதகரின் திருமணத்திற்கு பிறகு வரும் வாழ்க்கையில் பல இன்னல்களையும் துன்பங்களையும் தவிர்க்க இயலாது.

மேலும் மற்றவர்களை நம்பி செய்யும் முதலீடுகள் அனைத்தும் ஜாதகருக்கு இழப்பை தரக்கூடும் என்பதால், முதலீடு செய்யும் முன் அதிக கவனத்துடன் இருப்பது நலம், தனது முடிவில் உறுதியாக மற்றும் பிடிவாதமாக நில்லாமல் பெரியோரின் பேச்சை மதித்து நடந்துகொள்ளும் பொழுது ஜாதகருக்கு ஆயுள் பாவக வழியில் இருந்து வரும் திடீர் இழப்புகளையும், எதிர்பாராத விபத்துகளையும் தவிர்க்க இயலும், விபத்தின் மூலம் வரும் துன்பங்களையும், வீண் விரையங்களையும் தவிர்க்க ஜாதகர் மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் அனைத்து விஷயங்களிலும் நடந்துகொள்வதும், அதிக கவனமுடனும் பொறுமையுடனும், அறிவில் விழிப்பு நிலையுடன் இருப்பது நலம் தரும்.

ஆயுள் பாவகமான 8ம் வீடு சுய ஜாதகத்தில் தனது பாவகத்துடன் தொடர்பு பெறுவது ஜாதகருக்கு நீண்ட ஆயுளை தரும் என்ற போதிலும், உடல் நிலையில் சிறு சிறு தொந்தரவுகளை தர தவறுவதில்லை, மேலும் காய தழும்புகள் உடலில் நிச்சயம் உண்டாகும், சிலருக்கு அறுவை சிகிச்சை மற்றும் ரண சிகிச்சை மேற்கொள்ளும் தன்மையை தருகிறது, மேற்கண்ட அமைப்பு சுய ஜாதகத்தில் உள்ளவர்களுக்கு, பெரிய அளவில் வாழ்க்கை துணை வழியில் இருந்து வீண் செலவுகளை தர தவறுவது இல்லை, வாழ்க்கை துணைக்கு இது நல்ல நிலை என்ற போதிலும், ஜாதகரின் வங்கி கணக்கில் வறட்ச்சி என்ற நிலையே  எப்பொழுதும் நிலைத்திருக்கும்.

சுய ஜாதகத்தில் அனைத்து பாவகங்களும் வலிமை பெற்று இருந்த போதும் ஆயுள் பாவகம் ஒன்று மட்டும் பாதிக்க பட்டதால் ஜாதகர் வாழ்க்கை துணை வழியில் இருந்து பெறும் இன்னல்கள் பற்றி அடுத்த பதிவில் விளக்கமாக காண்போம் அன்பர்களே !

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696


வெள்ளி, 1 மே, 2015

திருமணத்திற்கு பிறகு அவயோக பலன்களை அனுபவிக்கும் ஜாதக நிலை !


தனது வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் முன் ஓவ்வொருவரும் தனது ஜாதக நிலையை கருத்தில் கொண்டு தேர்வு செய்வது, ஜாதகரின் வாழ்க்கையில் ஏற்ப்படும் இன்னல்களில் இருந்து வெகுவாக காப்பாற்றும், ஒருவரின் சுய ஜாதகத்தில் உள்ள பலன் தான் நடைமுறைக்கு வரும் என்றாலும் கூட, தன்னுடன் சேர்ந்து இல்லற வாழ்க்கையை மேற்கொள்ளும் ஜாதகத்தை பொருத்தும் சிலரது வாழ்க்கை நிர்ணயம் செய்யபடுகிறது, உதாரணமாக பொருத்தம் காணும் பொழுது வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகமும், களத்திரம் எனும் 7ம் பாவகமும், ஆயுள் ஸ்தானம் எனும் 8ம் பாவகமும் , வலிமையுடன் இருப்பது திருமண வாழ்க்கையில் சீரும் சிறப்பையும் வாரி வழங்கும்.

இதில் வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் 2,7,8ம் பாவகங்கள் 6,8,12ம் பாவகங்களுடன் தொடர்பு பெற்று இருப்பது ஜாதகருக்கு 2,7,8ம் பாவக வழியில் இருந்து இன்னல்களை தந்த போதிலும் அது பெரிய அளவில் ஜாதகரை பாதிப்பதில்லை, மாறாக ஒருவரது ஜாதகத்தில் 2,7,8ம் பாவகங்கள் பாதக ஸ்தானம் எனும் 11,9,7 ( சரம் 11, ஸ்திரம் 9, உபயம் 7 ) பாவகங்களுடன் தொடர்பு பெரும் பொழுது ஜாதகரின் திருமண வாழ்க்கைக்கு பிறகு வரும் காலங்களை சோதனைக்கு ஆளாக்கும், தம்பதியரின் ஒற்றுமை குறைவு, விபத்து, பொருள் இழப்பு, மனோரீதியான போராட்டம் மற்றும் மன அழுத்தம், நிம்மதியின்மை, உடல் மனம் இரண்டும் வெகுவாக பாதிக்கும் தன்மை, தனது ஜாதகத்தில் யோக நிலை இருந்த போதிலும், அதை அனுபவிக்க இயலாத தன்மை, முரண்பட்ட கருத்து வேறுபாடு, மன வாழ்க்கையில் பிரிவு, தவறான உறவுகள், அதன் வழியில் இருந்து வரும் தொல்லைகள் துன்பங்கள், உறவுகள் மற்றும் சமூக அமைப்பில் இருந்து வரும் எதிர்ப்புகள், தனது குழந்தைகளின் எதிர்காலமும் கடுமையாக பாதிக்கும் தன்மை, சுமுகமாக தீர்வு காணும் பிரச்சனைகளை பெரிதாக்கி அதன் வழியில் துன்பம் காணும் மன நிலை, வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் சுமைகள், மற்றும் துன்புறுத்தல், உதவி செய்பவரின் மூலம் பெரும் அவயோக நிலை என ஜாதகரை வாட்டி வதைத்து விடும், இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவடைவது சிறப்பானதாக "ஜோதிடதீபம்" கருதுகிறது.

  
ஜாதகி லக்கினம் : மிதுனம் 
ராசி : மகரம் 
நட்சத்திரம் : திருவோணம் 3ம் பாதம் 

அடிப்படையில் இந்த ஜாதகத்தில் குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானத்தை குறிக்கும் 2,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது சுய ஜாதக ரீதியாக ஜாதகி திருமணத்திற்கும் குடும்ப வாழ்க்கைக்கும் யோகம் அற்றவர் என்பது 200% விகிதம் உறுதியாகிறது, ஆனால் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு களத்திர ஸ்தானமான துலாம் நல்ல வலிமை பெறுவது, ஜாதகிக்கு திருமணம் செய்யும் வாய்ப்பை வழங்கியது, ஆயுள்  பாவகமான 8ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று வலிமை பெற்று இருப்பது, ஜாதகிக்கு தன் கணவர் வழியில் இருந்து வரும் நல்ல யோக வாழ்க்கையையும், பெருளாதார வசதியும், நல்ல வருமான வாய்ப்பையும் வாரி வழங்கியது, இருப்பினும் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு குடும்ப ஸ்தானம் ஆனா ரிஷபம் ஜாதகிக்கு 12ம் வீடாக அமைந்து விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடனே சம்பந்தம் பெற்று இருப்பது குடும்ப வாழ்க்கையில் ஜாதகி பெரும் மன நிம்மதி இழப்பையும், வீண் விரையங்களையும், உடல் மற்றும் மன நலமின்மையையும்,  அனைவராலும் தொல்லைக்கு ஆளாகும் சூழ்நிலையை  உறுதி செய்தது.

ஆக ஜாதகிக்கு சுய ஜாதகத்தில் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு களத்திர ஸ்தானமான துலாம் வலிமை பெற்றது திருமண வாழ்க்கையை சர காற்று தத்துவ அமைப்பில் நின்று 100% யோகமுள்ள கணவனை ( ஜாதகியின் கணவர் அரசு துறை பணியாளர் ) திருமணம் செய்யும் வாய்ப்பை வழங்கிய போதும், சுய ஜாதகத்தில் பாதிக்க பட்ட 2,7ம் பாவகமும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு குடும்ப ஸ்தானமான ரிஷபமும், ஜாதகியின் திருமண வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியது, மேலும் பாதக ஸ்தான பலனை நடத்தும் ராகு திசையில் ஜாதகிக்கு திருமணம் நடந்தது மிகுந்த துன்பத்தை அனுபவிக்கும் சூழ்நிலையை தந்தது, 6,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவக பலனை ஏற்று நடத்தும் குரு திசையில் குரு புத்தியில் ஜாதகியின் கணவருக்கு விபத்து ஏற்ப்பட்டு, கணவருக்கு வைத்தியம் செய்யும் சூழ்நிலையை தந்தது, வைத்தியம் பலன் தாராமல், 2,7ம் வீடுகள் பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தும் குரு திசை கேது புத்தியில் ஜாதகி கணவனை இழக்கும் சூழ்நிலையை தந்தது, அவரது மறைவுக்கு பிறகு ஜாதகியின் ஜீவன ஸ்தானம்  நல்ல நிலையில் இருப்பதால் அவரது அரசுப்பணி ஜாதகிக்கு கிடைத்தது.

இந்த சூழ்நிலையில் ஜாதகிக்கு வேறு தொடர்புகள் ஏற்ப்பட ( 3,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் தொடர்பு  ) தேவையில்லாத அவ பெயர்களை சந்திக்கும் சூழ்நிலையை தந்தது, இதனால் உறவுகளுடன் இணக்கமில்லாத சூழ்நிலை, மன நிம்மதி இழப்பு, பொருள் இழப்பு உடல் நலக்குறைவு ஏற்ப்பட்டது, ஜாதகிக்கு எத்தனை சிரமங்கள் வந்த போதிலும், சுய ஜாதகத்தில் 5ம் பாவகம் வலிமை பெற்று இருப்பதால் ஜாதகியின் குழந்தைகள் ஜாதகிக்கு அதரவாக நின்றது, இறை அருளின் கருணையும், சமயோசித புத்திசாலித்தனமும் பாதக ஸ்தான வழியில் இருந்து வரும் இன்னல்களை களையும் வாய்ப்பினை ஜாதகிக்கு வாரி வழங்கியது.

ஜாதகிக்கு 2,7ம் வீடுகள் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று அவயோக பலன்களை வழங்கிய போதும், தன் கணவன் மூலம் பெரும் வருமானம் மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை குறிக்கும் ஆயுள் பாவகமான 8ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது, தனது கணவனின் மறைவுக்கு பிறகும் வசதி வாய்ப்புடன் வாழும் யோகத்தை தந்தது, மேலும் தற்பொழுது நடைபெறும் குரு தசை ஜாதகிக்கு 6,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவக பலனை ஏற்று நடத்துவது ஸ்திரமான மன கவலை, குடும்ப வாழ்க்கையில் இன்னல்களை தந்த போதிலும், எதிர் வரும் சனி திசை 11ம் வீடு பாக்கிய ஸ்தான பலனை ஏற்று நடத்துவதும், பாக்கய ஸ்தானம் ஜாதகிக்கு மகரம் மற்றும் கும்ப ராசிகளுடன் சம்பந்தம் பெறுவது சிறந்த யோக வாழ்க்கையை வாரி வழங்கும் என்பதும், 5ம் பாவக வழியில் இருந்து தான் பெற்ற குழந்தைகள் ஜாதகிக்கு முழு ஆதரவாக நிற்பார்கள் என்பது வரவேற்க தக்கதே, மேலும் இந்த ஜாதகி களத்திர வாழ்க்கைக்கும், குடும்ப வாழ்க்கைக்கும் யோகம் அற்றவர் என்பது உறுதியாகிறது.

இந்த ஜாதகியின் வாழ்க்கை துணைவரின் ஜாதகத்திலும், 2,7ம் வீடுகள் கடுமையாக பாதிக்கபட்டு இருப்பதும், 8ம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பதும் கவனிக்க தக்கது, லக்கினம் அல்லது ஆயுள் பாவகம் பாதக ஸ்தானதுடன் சம்பந்தம் பெற்ற ஜாதகத்தை பெற்றவர்கள், எவ்வித தீய பழக்கத்திற்கும் ஆற்ப்படாமல் இருப்பது நல்லது ( ஜாதகர் குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்தை சந்தித்தார் ) ஏனெனில் இவர்களது வாழ்க்கை முடிவிற்கு இவர்களது செய்கையே காரணமாக அமைந்துவிடும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696