பிரகஸ்பதி எனும் தேவ குரு கடகத்தில் இருந்து, குரு வட்டமான சிம்ம ராசிக்கு பெயர்ச்சி பெற்று இருப்பது, வரவேற்க்கதக்க அம்சமாகவே ஜோதிடதீபம் கருதுகிறது,ராசியை அடிப்படையாக கொண்டு இந்த குரு பெயர்ச்சி பலன்களை சிந்திப்பதை விட, சுய ஜாதகத்தை இயக்கும் லக்கினத்தை அடிப்படையாக கொண்டு, நடைபெறும் திசை புத்தி அந்தரம் மற்றும் சூட்சமம் ஏற்று நடத்தும் பாவகங்களுடன் குரு பகவானின் தொடர்புகளை ( அமர்வு மற்றும் பார்வை ) கொண்டு சுய ஜாதக பலனை கணிதம் செய்யும் பொழுது ஜாதக ரீதியான துல்லியமான பலன்களை காண இயலும், இனி மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கினங்களுக்கு குரு பகவான் வழங்கும் பலன்களை ஆய்வுக்கும் சிந்தனைக்கும் எடுத்துகொள்வோம் அன்பர்களே!
மகர லக்கினம் :
கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 10ம் ராசியான மகர ராசியை லக்கினமாக கொண்ட அன்பர்களே! தங்களுக்கு தற்பொழுது நடைபெறும் திசை புத்தி அந்தரம் மற்றும் சூட்சமம் 8,12,2,4ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் கிழ்கண்ட பலன்கள் குரு பெயர்ச்சியின் காரணமாக குரு பகவான் தங்களுக்கு வாரி வழங்குவார், 8ல் அமர்ந்த குரு பகவான் தங்களுக்கு, அவசர கதியில் செய்யும் காரியங்களில் தடைகளையும் தாமதங்களையும் தருவார், சுய கட்டுபாடு மற்றும் தன்னம்பிக்கை இழக்கும் சூழ்நிலைகளை தரக்கூடும், பதட்டத்தில் செய்யும் காரியங்கள் மிகப்பெரிய இழப்புகளை ஏற்ப்படுத்தும், வண்டி வாகனங்களில் செல்லும் பொழுது அதிக கவனமுடன் இருப்பது நலம் தரும், எதிர்பாராத விபத்துகளை சந்திக்கும் சூழ்நிலையை தரும், வெளிநாடுகளில் இருந்து நல்ல வருமான வாய்ப்பை பெற்று தருவார், அதிக அளவில் முதலீடு செய்யும் பொழுது மிகுந்த கவனம் தேவை, வாழ்க்கை துணை மற்றும் தொழில் முறை கூட்டாளிகள் வழியில் இருந்து சிறு சிறு வீண் விரையங்கள் ஏற்ப்பட வாய்ப்பு உண்டு, மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் மூக்கை நுழைக்காமல் இருப்பது தங்களுக்கும் தங்களை சார்ந்தவர்களுக்கும் மிகுந்த நன்மையை தரும், வெளிவட்டார பழக்க வழக்கங்கள் அதிகரிக்கும், வேற்று மதத்தினர் மற்றும் வேற்று மொழி பேசும் அன்பர்கள் வழியில் இருந்து யோக வாழ்க்கை உண்டாகும், தொழில் அமைப்பில் இருந்து எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் உண்டாக அதிக வாய்ப்பு உண்டு, உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை, புதிய சொத்துகள் மற்றும் புதிய பொருட்கள் வாங்க சந்தர்ப்பங்கள் அதிக அளவில் ஏற்ப்படும்.
10ல் அமர்ந்த குரு தனது 5ம் பார்வையாக விரைய ஸ்தானமான 12ம் பாவகத்தை வசீகரிப்பது மகர லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு, பெரிய முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் வந்த போதிலும் மிகுந்த எதிர்ப்புகளையும் போராட்டங்களையும் சந்திக்கும் சூழ்நிலையை தரும், தேவையில்லாத அவப்பெயர் ஜாதகரை தேடி வரக்கூடும் என்பதால், அனைத்து தரப்பு மக்களிடமும் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்துகொள்வது நல்லது, தன்னை விட வயதில் அதிகம் உள்ள பெரிய மனிதர்களின் மிகுந்த மரியாதையுடன் நடந்துகொள்வதும், பணிவு காட்டுவதும் முன்னேற்றத்தை தரும், மேலும் பெரியோர்களின் ஆலோசனை படி ஜீவன வாழ்க்கை மேற்கொள்வதும், காரியங்கள் ஆற்றுவதும் சீரான வளர்ச்சியை தரும், பொது வாழ்க்கையில் உள்ள அன்பர்கள் எதிர்பால் அமைப்பினரிடம் அதிக கவனமும் எச்சரிக்கையுடன் நடந்துகொள்வது வீண் அவ பெயரை தவிர்க்க உதவும், முன்னோர்களின் ஆசியை நாடுவது காரியங்களில் ஏற்ப்படும் தடைகளை தகர்த்தெறியும், ஆன்மீக பெரியோர்களின் ஆசிர்வாதமும், புனித திருத்தலங்களின் வழிபாடும் தங்களின் வாழ்க்கையில் சகல நிலைகளில் இருந்தும் முன்னேற்றத்தை வாரி வழங்கும்.
10ல் அமர்ந்த குரு தனது 7ம் பார்வையாக குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்தை வசீகரிப்பது மகர லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு, கை நிறைவான வருமான வாய்ப்பை வாரி வழங்கும், இதுவரை வாரா நிலுவை தொகைகள் திடீரென கைக்கு வந்து சேரரும், நிலபுலன்கள், சொத்துகளை விற்று அதிக லாபம் பார்க்கும் யோகம் உண்டாகும், முதலீடு செய்த இடங்களில் இருந்து அதிக படியான வருமானங்கள் வந்து சேரும், குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும், சுப நிகழ்சிகள் தங்குதடையின்றி நடைபெறும், பிரிவு நிலையில் இருந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள், குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும், மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும், முற்போக்கு சிந்தனையுடன் சகல காரியங்களிலும் வெற்றியை பெரும் யோக காலமாக இந்த குரு பெயர்ச்சி அமையும், மனதில் நினைத்த எண்ணங்கள் யாவும் நடைபெறும், நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும், பொழுதுபோக்கு கேளிக்கை அம்சங்களில் அதிக ஈடுபாடு, பல இடங்களில் இருந்து வரும் ஆதரவு , உறவுகளின் ஒத்துழைப்பு, கூட்டு முயற்ச்சியின் மூலம் தொழில் வெற்றி மற்றும் விருத்தி பெரும் யோகம், நல்ல வேலையாட்கள் மூலம் அபரிவிதமான் தொழில் வளர்ச்சி மற்றும் தன்னிறைவான வருமானம் என 2ம் பாவக வழியில் இருந்து அறிவு சார்ந்த வெற்றிகளை குவிக்கும் யோகம் உண்டாகும்.
10ல் அமர்ந்த குரு தனது 9ம் பார்வையாக சுக ஸ்தானமான 4ம் பாவகத்தை வசீகரிப்பது மகர லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு, புதிய சொகுசு வண்டி வாகனம் மற்றும் புதிய வசதி மிக்க வீடு வாங்கும் யோகத்தை தரும், தொழில் நுட்பம் சார்ந்த துறைகளில் பணியாற்றும் அன்பர்களுக்கு அபரிவிதமான முன்னேற்றமும், வருமான வாய்ப்புகளும் உண்டாகும், கனரக தொழில் மற்றும் உலோகம் சார்ந்த தொழில்களில் உள்ள அன்பர்களுக்கு அபரிவிதமான முன்னேற்றம் உண்டாகும், பொது வாழ்க்கையில் உள்ள அன்பர்களுக்கு திடீர் பதவிகள் தேடிவரும், அரசு துறையில் குறிப்பாக கல்வி,மருத்துவம்,நிர்வாகம் சார்ந்த துறைகளில் பணியாற்றும் அன்பர்களுக்கு, எதிர்பாராத அதிர்ஷ்டங்களும் வருமான வாய்ப்புகளும் வந்து குவியும், பயணங்களின் மூலம் நல்ல லாபமும் முன்னேற்றமும் உண்டாகும், சுகபோக வாழ்க்கைக்கு உண்டான வசதி வாய்ப்புகள் அனைத்தும் இந்த குரு பெயர்ச்சியின் மூலம் தாங்கள் தடையின்றி பெறும் யோகம் உண்டாகும், கனிம பொருட்கள் ரசாயன பொருட்கள் மூலம் நல்ல லாபமும் முன்னேற்றமும் உண்டாகும், இதுவரை போராடிய விஷயங்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும், பல தொழில் செய்யும் வாய்ப்புகள் வந்து சேரரும், ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான துறையில் உள்ள அன்பர்களுக்கு எதிர்பாராத தன சேர்க்கையும் முன்னேற்றமும் உண்டாகும்.
குறிப்பு :
மகர லக்கின அன்பர்களே ! தற்பொழுது தங்களுக்கு நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் மேற்கண்ட8,12,2,4ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே, தங்களுக்கு மேற்கண்ட குரு பகவானின், கோட்சார நன்மைகள் அல்லது தீமைகள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் 8,12,2,4ம் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் எவ்வித நன்மையும், தீமையும் நடைபெறாது என்பதை கவனத்தில் கொள்க.
இந்த குரு மாற்றத்தின் மூலாம் 90% யோக பலன்களை அனுபவிக்கும் லக்கினத்தை சார்ந்தவர்கள் என்ற முறையில் தங்களது மகர லக்கினமே மூன்றாவது இடத்தை பெறுகிறது, வாழ்த்துகள் .
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களும் தொடர்பு பெற கூடாத ஸ்தானம் பாதக ஸ்தானமே, ஏனெனில் மறைவு ஸ்தானம் என்று வர்ணிக்கப்படும் 6,8,12ம் பாவகங்களுடன் தொடர்பு பெரும் பாவகங்கள் தனது பாவக வழியில் இருந்து சில நன்மைகளை செய்யக்கூடும், ஆனால் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெரும் எந்த ஒரு வீடு ஜாதகருக்கு எவ்வித சிறு நன்மையையும் செய்ய வாய்ப்பில்லை, அதன் பாதிப்பில் இருந்து தப்புவதற்கும் சந்தர்ப்பங்களை தாரது என்பது கவனிக்க தக்கதுஇந்த , மேலும் ஒருவரது சுய ஜாதகத்தில் தற்பொழுது நடைபெறும் திசை அல்லது எதிர்வரும் திசை, பாதக ஸ்தான பலனை நடத்தும் பொழுது ஜாதகரின் வாழ்க்கை குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து 200% சதவிகித இன்னல்களை எவ்வித பாகுபாடும் அனுபவிக்கும் தன்மையை தரும், இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு ஆய்வு செய்வோம் அன்பர்களே !
லக்கினம் : சிம்மம்
ராசி : மகரம்
நட்சத்திரம் : அவிட்டம் 1ம் பாதம்
இந்த சிம்ம இலக்கின ஜாதகருக்கு, பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகமே பாதக ஸ்தானமாக அமைகிறது, மேலும் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெறுவது சகோதர பாவகமான 3ம் வீடு, பூர்வபுண்ணியத்தை குறிக்கும் 5ம் வீடு, பாக்கியத்தை குறிக்கும் 9ம் வீடு, எனவே ஜாதகர் ஜாதகர் 3,5,9ம் பாவக வழியில் இருந்து 200% விகித இன்னல்களை அனுபவிக்க வேண்டும் என்பது விதி அமைப்பு, ஆக ஜாதகர் மேற்கண்ட பாவக வழியில் இருந்து பெரும் இன்னல்கள் எவ்விதம் அமையும் என்பதை சற்றே சிந்திப்போம் அன்பர்களே !
3ம் பாவக வழியில் இருந்து ஜாதகரின் முயற்ச்சிகள் யாவும் பெரிய பின்னடைவை தரும், சகோதர வழியில் இருந்து வரும் இன்னல்களை தவிர்க்க இயலாது, தன்னம்பிக்கை மற்றும் சுய கட்டுபாடு வெகுவாக குறையும், கமிஷன் தரகு தொழில்கள் ஜாதகரின் பொருளாதார வாழ்க்கையை கேள்விக்குறியாக்கும், திட்டமிடுதல்களும் செயல்திறனும் வெகுவாக குறையும், மிக முக்கியமாக தனது அறிவு திறனும் புத்திசாலித்தனமும் ஜாதகரின் வாழ்க்கைக்கு பலன் தாராது, பொதுமக்கள் சார்ந்த விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்துகொள்வது நல்லது, பொது காரியங்களில் இறங்கினால் தோல்வியே மிஞ்சும், நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும், எதையும் திட்டமிட்டு செயல் வடிவம் பெற இயலாது, திறமை இருப்பினும் ஜாதகருக்கு பலன் தாராது.
5ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு உதவி செய்யும் ஆட்கள் மிக குறைவே எனலாம், அனைத்தையும் தானே எதிர்கொண்டு சமாளிக்க வேண்டி வரும், குல தெய்வத்தின் ஆசியை பெற ஜாதகர் மிகுந்த பிரயத்தனம் செய்யவேண்டி வரும், தனது பூர்வீகத்தில் உள்ள வரை ஜாதகரின் முன்னேற்றம் கடுமையாக பாதிக்கும், தன்னை சார்ந்தவர்கள் மூலம் மிக பெரிய இன்னல்களுக்கு ஆளாக்கும், சுய அறிவும் சமயோசித புத்திசாலித்தனமும் சரியான நேரத்தில் கைகொடுக்காது, வீண் விவகாரங்களில் ஈடுபடும் சூழ்நிலையை தரும், பொது வாழ்க்கையில் அளவில்லா இன்னல்களை வாரி வழங்கும், முரண்பட்ட சிந்தனையும் செயல்பாடுகளும் ஜாதகரின் வாழ்க்கையில் மிக பெரிய ஏமாற்றங்களையும், தொல்லைகளையும் வாரி வழங்கும், கற்ற கல்வி ஜாதகருக்கு எவ்வித நன்மையையும் தாரது, சுய அறிவு திறனும் வெகுவாக பாதிக்க படும், சூழ்நிலை கைதியாக தனிமையில் போராடும் சந்தர்ப்பங்களை ஜாதகரே ஏற்ப்படுத்தி கொண்டு தனது வாழ்க்கை முன்னேற்றத்தை தானே பாதிப்பிற்கு உள்ளாக்குவார் என்பது கவனிக்கத்தக்கது.
9ம் பாவக வழியில் இருந்து சமுதாயத்தில் அவப்பெயர், பொதுமக்கள் வழியில் இருந்து வரும் எதிர்ப்புகள், நம்பிக்கைகள் வீணாகும் சூழ்நிலை, சரியான சந்தர்பங்களை தவறவிடும் தன்மை, அவசர கதியில் செய்யும் செயல்கள் யாவும் ஜாதகரின் வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்ற தடையாக அமையும் தன்மை, எதிர்பாராத இழப்புகள் நஷ்டங்கள், மற்றவர்களின் ஆலோசனையின் பேரில் செய்யும் செயல்கள் யாவும் ஜாதகரின் வாழ்க்கையை பாதிக்கும் தன்மை, பொருளாதார முன்னேற்றத்தில் ஏற்ப்படும் இடையூறுகள், மற்றவர்களின் தவறான வழிகாட்டுதல்கள் மூலம் தனது வாழ்க்கையை தானே கெடுத்து கொள்ளும் அமைப்பு, அனைத்து விஷயங்களை உணர்ந்த போதிலும் சூழ்நிலைக்கு அடிமை ஆகும் தன்மை, ஆன்மீக வாழ்க்கையில் ஏற்ப்படும் இடைஞ்சல்கள், சரியான குரு அமையாத தன்மை, முன்னோர்களின் ஆசிர்வாதமும் வழிகாட்டுதல்களும் இல்லாமல் சுயமாக வாழ்க்கையில் போராடும் சூழ்நிலை, பக்குவம் இல்லாத நடைமுறைகள், சுய கட்டுபாடு இன்றி வீண் பிடிவாதம் என ஜாதகரின் வாழ்க்கையை வெகுவாக பாதிக்கும் .
மேற்கண்ட பாதிப்புகளை ஜாதகர் தவிர்க்க இயலாது என்றாலும் கூட, நடைபெறும் எதிர்வரும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் மேற்கண்ட 3,5,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவக பலனை ஏற்று நடத்தாமல் இருப்பின் ஜாதகரின் வாழ்க்கையல் நன்மை உண்டாகும், நடைபெறும் திசை எதிர்வரும் திசை தரும் பலன்களை பற்றி இனி சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே !
தற்பொழுது நடைமுறையில் உள்ள திசை சனி ( 27/10/2013 முதல் 27/10/2032 வரை )
ஜாதகருக்கு தற்பொழுது நடைபெறும் சனி தசை 3,5,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றும், 1,7,11ம் வீடுகள் லாபம் மற்றும் அதிர்ஷ்ட ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றும் பலன்களை தருவது லாப ஸ்தான வழியில் இருந்து நல்ல அதிர்ஷ்டமும் லாபமும் கிடைத்த போதிலும், பாதக ஸ்தான வழியில் இருந்து வரும் இன்னல்களை தவிர்க்க இயலாது, மேலும் ஜாதகர் 3,5,9ம் பாவகங்களுக்கு உண்டான பிரீதி பரிகாரங்களை தேடிகொள்வது பாதக ஸ்தான கர்மவினை பதிவுகளை கழித்து கொள்வதற்கு உண்டான வாய்ப்பை வழங்கலாம்.
குறிப்பு :
ஒருவரது சுய ஜாதகத்தில் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெரும் பாவகங்களின் பலனை நடைமுறையில் அல்லது எதிர் வரும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் ஏற்று நடத்தாமல் இருப்பின் ஜாதகருக்கு பாதக ஸ்தானத்தல் எவ்வித இன்னல்களும் நடைமுறைக்கு வாராது, ஆனால் நடைமுறையில் அல்லது எதிர் வரும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் ஏற்று நடத்தினால் ஜாதகர் பாதக ஸ்தான அமைப்பில் இருந்து வரும் இன்னல்களை தவிர்க்க இயலாது அனுபவித்து கழித்து கொள்வதே சால சிறந்தது.
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
பிரகஸ்பதி எனும் தேவ குரு கடகத்தில் இருந்து, குரு வட்டமான சிம்ம ராசிக்கு பெயர்ச்சி பெற்று இருப்பது, வரவேற்க்கதக்க அம்சமாகவே ஜோதிடதீபம் கருதுகிறது,ராசியை அடிப்படையாக கொண்டு இந்த குரு பெயர்ச்சி பலன்களை சிந்திப்பதை விட, சுய ஜாதகத்தை இயக்கும் லக்கினத்தை அடிப்படையாக கொண்டு, நடைபெறும் திசை புத்தி அந்தரம் மற்றும் சூட்சமம் ஏற்று நடத்தும் பாவகங்களுடன் குரு பகவானின் தொடர்புகளை ( அமர்வு மற்றும் பார்வை ) கொண்டு சுய ஜாதக பலனை கணிதம் செய்யும் பொழுது ஜாதக ரீதியான துல்லியமான பலன்களை காண இயலும், இனி மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கினங்களுக்கு குரு பகவான் வழங்கும் பலன்களை ஆய்வுக்கும் சிந்தனைக்கும் எடுத்துகொள்வோம் அன்பர்களே!
தனுசு லக்கினம் :
கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 9ம் ராசியான தனுசு ராசியை லக்கினமாக கொண்ட அன்பர்களே! தங்களுக்கு தற்பொழுது நடைபெறும் திசை புத்தி அந்தரம் மற்றும் சூட்சமம் 9,1,3,5ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் கிழ்கண்ட பலன்கள் குரு பெயர்ச்சியின் காரணமாக குரு பகவான் தங்களுக்கு வாரி வழங்குவார், தனுசு லக்கினத்திற்கு 9ல் அமர்ந்த குரு பகவான் தங்களது வாழ்க்கை முன்னேற்றத்திற்கு பெரிய அளவிலான உதவிகளை இனிவரும் வருடத்தில் தங்களுக்கு வழங்குவார் குறிப்பாக ஆன்மீக தேடுதல்களுக்கு நல்ல விருத்தியை தருவார், பெரிய மனிதர்களின் ஆதரவும், ஆன்மீக பெரியோரின் ஆசிர்வாதமும் நிறைவாக பெரும் யோகத்தை தரும், தன்னம்பிக்கையும் அறிவுத்திறனும் மேம்படும், பயணங்களில் நல்ல லாபமும் அதிர்ஷ்டமும் உண்டாகும், பொது வாழ்க்கையில் உள்ள அன்பர்களுக்கு பெருவாரியான ஆதரவு கிடைக்கும், கல்வி துறை சார்ந்த அன்பர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்புகள் வந்து சேரும், சுய சிந்தனையும், செயல்திறனும் வாழ்க்கையில் அபரிவிதமான நன்மைகளை வாரி வழங்கும், தங்களது வாழ்க்கையில் சிறந்த முன்னேற்றங்களை பெறுவதற்கு உண்டான அடித்தளத்தை அமைக்க சரியான நேரமிது, ஆராய்ச்சி மற்றும் உயர்கல்விகளில் சிறந்த வெற்றிகளை பெரும் யோகத்தை தரும்.
9ல் அமர்ந்த குரு தனது 5ம் பார்வையாக உயிர் ஸ்தானமான 1ம் பாவகத்தை வசீகரிப்பது தனுசு லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு, உடல் மனம் இரண்டு வலிமை பெரும், சிந்தனையும் அறிவுத்திறனும் பல முன்னேற்றங்களை தரும், கல்வியில் வெற்றி, சாஸ்திரத்தில் தேர்ச்சி, கணித அறிவு, ஜோதிடத்தில் புலமை, வாதத்திறமை, பெரிய மனிதர்களின் ஆதரவு, எண்ணிய நினைவுகள் பலிதம் பெரும் யோகம், உடல் ஆரோக்கியம் மேம்படும் தன்மை, எதிர்பாராத உதவிகள், கற்ற கல்வியின் மூலம் பெரும் யோக வாழ்க்கை, திடீர் முன்னேற்றம், பொருளாதார ரீதியான முன்னேற்றத்திற்கு எடுக்கும் நடவடிக்கைகள் மூலம் கை நிறைவான வருமானம், என சுய முன்னேற்றத்திற்கு ஏதுவான நேரமிது, மேலும் பொதுமக்கள் ஆதரவின் மூலம் புதிய பொறுப்புகள் மற்றும் பதவிகளும் தேடிவரும் வாய்ப்பை தரும், ஆன்மீக திருத்தலங்களுக்கு சென்றுவரும் வாய்ப்பும், அதன் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றமும் உண்டாகும்.
9ல் அமர்ந்த குரு தனது 7ம் பார்வையாக வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்தை வசீகரிப்பது தனுசு லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு, எடுக்கும் காரியங்களில் அபரிவிதமான வெற்றி வாய்ப்பை வாரி வழங்கும், அதிர்ஷ்டத்தின் தன்மையை 100% விகிதம் அனுபவிக்கும் யோகத்தை தரும், மனதில் நினைக்கும் எண்ணங்கள் யாவும் பலிதம் பெரும், கமிஷன் மற்றும் தரகு தொழில் செய்துவரும் அன்பர்களுக்கு அளவில்லா லாபமும் முன்னேறமும் உண்டாகும், விளையாட்டு வீரர்களுக்கு புதிய வாய்ப்புகளும், எதிர்பாராத வெற்றிகளும் வந்து குவியும், சுய தொழில் புரிவோருக்கு படிப்படியான ஸ்திரமான முன்னேற்றமும், மக்களிடம் அபரிவிதமான வரவேற்ப்பும் உண்டாகும், புதிய முயற்ச்சிகளில் ஈடுபடும் அன்பர்களுக்கு எதிர்பாராத முன்னேற்றமும் லாபமும் உண்டாகும், கல்வி கேள்விகளில் புலமையும் தேர்ச்சியும் உண்டாகும், மனதில் உறுதியுடன் மேற்கொள்ளும் காரியங்களில் முழு வெற்றி கிட்டும், சுய மரியாதை, கௌரவம், அந்தஸ்து உயரும், புதிய வாய்ப்புகள் தங்களின் வாழ்க்கையில் பலவிதமான வசதி வாய்ப்புகளை பெற்றுத்தரும்.
9ல் அமர்ந்த குரு தனது 9ம் பார்வையாக பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்தை வசீகரிப்பது தனுசு லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு, குல தெய்வ அருளாசியின் மூலம் தன்னிறைவான முன்னேற்றத்தை பெரும் யோகத்தை தரும், இது வரை இருந்த தடைகள் யாவும் நீங்கி வாழ்க்கையில் சுபிட்சம் ஓங்கும், தனது சந்ததிக்கு புத்திர சந்தானம் பாக்கியம் கிடைக்கும், இதுவரை திருமண வாழ்க்கை அமையாத அன்பர்களுக்கு சிறப்பான வாழ்க்கை துணை அமைந்து திருமணம் விரைவில் நடைபெறும், குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோசம் ஓங்கி நிற்கும், எதிர்பாராத சொத்துகள் கிடைக்க பெறுவீர்கள், உறவுகள் ஆதரவும் உதவியும் கிடைக்கும், சமூகத்தில் இதுவரை இருந்துவந்த இடையூறுகள் யாவும் நீங்கி மதிப்பு மரியாதை கிடைக்க பெறுவீர்கள், வெளிநாடுகளில் இருந்து அபரிவிதமான வருமான வாய்ப்பும், மாற்று மதத்தினர் மூலம் மிகுந்த லாபமும் முன்னேற்றமும் உண்டாகும் யோக காலமாக இந்த வருடம் தனுசு இலக்கின அன்பர்களுக்கு அமையும் என்பது கவனிக்க தக்கது, வாழ்த்துகள்
குறிப்பு :
தனுசு லக்கின அன்பர்களே ! தற்பொழுது தங்களுக்கு நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் மேற்கண்ட9,1,3,5ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே, தங்களுக்கு மேற்கண்ட குரு பகவானின், கோட்சார நன்மைகள் அல்லது தீமைகள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் 9,1,3,5ம் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் எவ்வித நன்மையும், தீமையும் நடைபெறாது என்பதை கவனத்தில் கொள்க.
இந்த குரு மாற்றத்தின் மூலாம் 100% யோக பலன்களை அனுபவிக்கும் லக்கினத்தை சார்ந்தவர்கள் என்ற முறையில் தங்களது தனுசு லக்கினமே இரண்டாவது இடத்தை பெறுகிறது, வாழ்த்துகள் .
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
பிரகஸ்பதி எனும் தேவ குரு கடகத்தில் இருந்து, குரு வட்டமான சிம்ம ராசிக்கு பெயர்ச்சி பெற்று இருப்பது, வரவேற்க்கதக்க அம்சமாகவே ஜோதிடதீபம் கருதுகிறது,ராசியை அடிப்படையாக கொண்டு இந்த குரு பெயர்ச்சி பலன்களை சிந்திப்பதை விட, சுய ஜாதகத்தை இயக்கும் லக்கினத்தை அடிப்படையாக கொண்டு, நடைபெறும் திசை புத்தி அந்தரம் மற்றும் சூட்சமம் ஏற்று நடத்தும் பாவகங்களுடன் குரு பகவானின் தொடர்புகளை ( அமர்வு மற்றும் பார்வை ) கொண்டு சுய ஜாதக பலனை கணிதம் செய்யும் பொழுது ஜாதக ரீதியான துல்லியமான பலன்களை காண இயலும், இனி மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கினங்களுக்கு குரு பகவான் வழங்கும் பலன்களை ஆய்வுக்கும் சிந்தனைக்கும் எடுத்துகொள்வோம் அன்பர்களே!
விருச்சிக லக்கினம் :
கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 8ம் ராசியான விருச்சிக ராசியை லக்கினமாக கொண்ட அன்பர்களே! தங்களுக்கு தற்பொழுது நடைபெறும் திசை புத்தி அந்தரம் மற்றும் சூட்சமம் 10,2,4,6ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் கிழ்கண்ட பலன்கள் குரு பெயர்ச்சியின் காரணமாக குரு பகவான் தங்களுக்கு வாரி வழங்குவார், ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்தில் அமர்ந்துள்ள குரு பகவான் தங்களுக்கு ஜீவன ரீதியான முன்னேற்றத்தையும், தொழில் அனுபவங்களையும் வாரி வழங்குவார், செய்யும் தொழில் சார்ந்த கல்வியினை பெறுவதற்கு சரியான நேரமிது, கல்வி துறையில் பணியாற்றும் அன்பர்களுக்கு நல்ல முன்னேற்றமும், பதவி உயர்வும் உண்டாகும், மேலும் கல்வி துறையில் புகழும் அந்தஸ்து கௌரவம் கிடைக்க பெறுவீர்கள், தங்களின் சார்ந்த முயற்ச்சிகள் யாவும் நிறைவான நன்மைகளை வாரி வழங்கும், வேலைவாய்ப்பில் முன்னேற்றமும், வெளிநாடு சென்றுவரும் யோகமும் இனிவரும் ஒரு வருட காலத்தில் நிச்சயம் அமையும், மருத்துவ துறையில் உள்ள அனபர்களுக்கு எதிர்பாரத லாபமும் தொழில் முன்னேற்றமும் உண்டாகும், புதிய கண்டுபிடிப்புகள் மூலம் தன்னிறைவான பொருளாதார வசதி வாய்ப்புகளை பெரும் யோகத்தை தரும்.
10ல் அமர்ந்த குரு தனது 5ம் பார்வையாக குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்தை வசீகரிப்பது விருச்சிக லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு, குடும்பத்தில் மகிழ்ச்சியும் அளவில்லா தன வரவையும் வாரி வழங்கும், புதிய வருமான வாய்ப்புகள் தங்களுக்கு தேடி வரும், பேச்சு திறமையின் மூலம் நல்ல வாய்ப்புகளையும், முன்னேற்றங்களையும் பெறுவதற்கு உண்டான சந்தர்ப்பங்கள் கூடி வரும், இதுவரை திருமணம் ஆகாத அன்பர்களுக்கு திருமணம் வாய்ப்புகள் கூடி வரும், நல்ல இல்லற வாழ்க்கை அமையும், சமூதாயத்தில் உள்ள பெரிய மனிதர்களின் ஆதரவும் உதவியும் கிடைக்க பெறுவீர்கள், அரசியல் பொது வாழ்க்கையில் உள்ள அன்பர்களுக்கு ஏற்றமிகு யோக காலமாக கருதலாம், புதிய பொறுப்புகள் தங்களை தேடி வரும், எதிரிகளின் செயல்கள் தங்களுக்கு சாதகமாக அமையும், சரளமான வாத திறமையும், சமயோசித புத்திசாலித்தனமும் தங்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றத்தையும், எதிர்பாராத பதவிகளையும் பெற்று தரும், இனி வரும் ஒரு வருடம் கை நிறைவான வருமானத்தை தங்கு தடையின்றி வாரி வழங்கும்.
10ல் அமர்ந்த குரு தனது 7ம் பார்வையாக சுக ஸ்தானமான 4ம் பாவகத்தை வசீகரிப்பது விருச்சிக லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு, புதிய சொத்துகள் வண்டி வாகனம், மண் மணை யோகத்தை தரும், கட்டுமான துறையில் உள்ள அன்பர்களுக்கு தொழில் ரீதியான வளர்ச்சி மிகவும் அபரிவிதமாக அமையும், சுய முயற்ச்சியின் மூலம் சகல விதமான நன்மைகளையும் முன்னேற்றத்தையும் வாரி வழங்கும், தனது பெயரில் உள்ள சொத்துகளை விற்று பெரிய தன வரவையும், புதிய தொழில் முதலீடுகளையும் செய்யும் யோகத்தை தரும், இது வரை விற்பனை செய்ய இயலாத சொத்துகளை இனிவரும் ஒரு வருட காலத்தில் நல்ல லாபத்திற்கு விற்க ஏதுவான சூழ்நிலை அமையும், தங்களின் மனதில் உள்ள எண்ணங்கள் யாவும் நடைமுறைக்கு வரும், தங்களின் திட்டமிடுதல்களும், லட்சியங்களும் நிறைவேறும்.
10ல் அமர்ந்த குரு தனது 9ம் பார்வையாக சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்தை வசீகரிப்பது விருச்சிக லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு, 6ம் பாவக வழியில் இருந்து அதிக அளவில் உடல் தொந்தரவுகளை தரக்கூடும், வயிறு சார்ந்த பிரச்சனைகளும், பித்தம் சார்ந்த தொந்தரவுகளும் அதிக அளவில் துன்பத்தை தரக்கூடும், எதிரிகள் மூலம் எதிர்பாராத முன்னேற்ற தடைகளை சந்திக்கு சூழ்நிலை தரும், கடன் தொந்தரவுகள் எதிர்பாராத நேரங்களில் தங்களின் மன நிம்மதியை கேள்விக்குறியாக்கும், புதிய கடன்களை வாங்கும் பொழுதும், மற்றவர்களுக்கு ஜாமீன் இடும் பொழுதும் அதிக கவனமாக இருப்பது நலம் தரும், சிறு பயணங்கள் மூலம் நல்ல லாபம் கிட்டும், மருந்து மருத்துவ உபகரணங்கள் மூலம் எதிர்பாராத நல்ல லாபங்களை பெறுவதற்கு உண்டான சூழ்நிலைகள் உருவாகும், தொழில் புரிவோருக்கும், ஒரு இடத்தில் பணியாற்றும் அன்பர்களுக்கும் எதிர்பாராத இன்னல்கள் ஏற்ப்பட அதிக வாய்ப்புண்டு என்பதால் யாவரிடமும் பகைமை பாராட்டாமல் நடந்துகொள்வது நலம் தரும்.
குறிப்பு :
விருச்சிக லக்கின அன்பர்களே ! தற்பொழுது தங்களுக்கு நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் மேற்கண்ட10,2,4,6ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே, தங்களுக்கு மேற்கண்ட குரு பகவானின், கோட்சார நன்மைகள் அல்லது தீமைகள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் 10,2,4,6ம் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் எவ்வித நன்மையும், தீமையும் நடைபெறாது என்பதை கவனத்தில் கொள்க.
இந்த குரு மாற்றத்தின் மூலாம் 90% யோக பலன்களை அனுபவிக்கும் லக்கினத்தை சார்ந்தவர்கள் என்ற முறையில் தங்களது விருச்சிக லக்கினமே இரண்டாவது இடத்தை பெறுகிறது, வாழ்த்துகள் .
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
பிரகஸ்பதி எனும் தேவ குரு கடகத்தில் இருந்து, குரு வட்டமான சிம்ம ராசிக்கு பெயர்ச்சி பெற்று இருப்பது, வரவேற்க்கதக்க அம்சமாகவே ஜோதிடதீபம் கருதுகிறது,ராசியை அடிப்படையாக கொண்டு இந்த குரு பெயர்ச்சி பலன்களை சிந்திப்பதை விட, சுய ஜாதகத்தை இயக்கும் லக்கினத்தை அடிப்படையாக கொண்டு, நடைபெறும் திசை புத்தி அந்தரம் மற்றும் சூட்சமம் ஏற்று நடத்தும் பாவகங்களுடன் குரு பகவானின் தொடர்புகளை ( அமர்வு மற்றும் பார்வை ) கொண்டு சுய ஜாதக பலனை கணிதம் செய்யும் பொழுது ஜாதக ரீதியான துல்லியமான பலன்களை காண இயலும், இனி மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கினங்களுக்கு குரு பகவான் வழங்கும் பலன்களை ஆய்வுக்கும் சிந்தனைக்கும் எடுத்துகொள்வோம் அன்பர்களே!
துலா லக்கினம் :
கால புருஷ தத்துவ அமைப்பிற்கு7ம் ராசியான துலாம் ராசியை லக்கினமாக கொண்ட அன்பர்களே! தங்களுக்கு தற்பொழுது நடைபெறும் திசை புத்தி அந்தரம் மற்றும் சூட்சமம் 11,3,5,7ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் கிழ்கண்ட பலன்கள் குரு பெயர்ச்சியின் காரணமாக குரு பகவான் தங்களுக்கு வாரி வழங்குவார், சம வீடான லாப ஸ்தானத்தில், அமர்ந்த குரு பகவான் துலாம் இலக்கின அன்பர்களுக்கு அளவில்லா அதிர்ஷ்டங்களையும், லாபங்களையும் ஸ்திரமாக தொடர்ந்து தருவது வரவேற்க்கதக்க விஷயமாக கருதலாம், கல்வி கேள்விகளில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும், முற்போக்கு சிந்தனையும், சமயோசித புத்திசாலித்தனமும் தங்களின் வாழ்க்கையில் வியக்கத்தகு மாற்றங்களை வாரி வழங்கும், இதுவரை நிறைவேறாத ஆசைகள் யாவும் பூர்த்தியாகும், லட்ச்சியங்கள் கைகூடி வரும், அனைத்திலும் நல்ல லாபம் கிட்டும், தனிப்பட்ட செயல்களிலும், தொழில் அமைப்புகளில் இருந்தும் அபரிவிதமான லாபங்கள் வந்து சேரும், தங்களின் பெயரும் புகழும் ஓங்கி நிற்கும், அனைத்து தரப்புகளில் இருந்தும் பாராட்டு கிடைக்கும், குல தேவதையின் கருணையினால் சகல விதமான அதிர்ஷ்டங்களையும் பெரும் யோக காலமாக இனிவரும் ஒருவருடம் தங்களுக்கு மிகவும் சிறப்பாக அமையும்.
11ல் அமர்ந்த குரு தனது 5ம் பார்வையாக வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்தை வசீகரிப்பது துலாம் லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு, 3ம் பாவக வழியில் இருந்து எடுக்கும் முயற்ச்சிகளில் அனைத்திலும் வெற்றி உண்டாகும், விளையாட்டு துறையில் உள்ள அன்பர்களுக்கு மிக பெரிய வெற்றிகளை பெற்று தரும் யோககாலமாக கருதலாம், ஏஜென்சி,கமிஷன்,வியாபாரம் ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்யும் அன்பர்களுக்கு தொழில் விருத்தி மிக அபரிவிதமாக அமையும், புதிய தொழில் துவங்கும் அன்பர்களுக்கு வியாபாரம் செழிக்கும், தன வரவு மிகவும் அதிக அளவில் வந்து குவியும், பொதுமக்களிடம் நற்ப்பெயரும் ஆதரவும் பெருகும், பயணங்களில் அதிர்ஷ்டமும் செல்லும் இடங்களில் வரவேற்ப்பும் லாபமும் கிடைக்கும், சகோதர வழியில் ஆதரவு என்பது வியக்கத்தக்க விதத்தில் வந்து சேரும், உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்வி சார்ந்த விஷயங்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு அபரிவிதமான வெற்றிகள் வந்து சேரும், உடல் மனம் எப்பொழுதும் புத்துணர்ச்சியாக காணப்படும், மிதமிஞ்சிய சக்திகளை பெரும் வாய்ப்புகளை வாரி வழங்கும், புனித திருத்தலங்களுக்கு தடையின்றி சென்று வரும் யோகத்தை தரும், ஆன்மீகத்தில் வெற்றியும் ஆன்மீக பெரியோர்களின் சந்திப்பும் தங்களின் வாழ்க்கையில் நல்ல திருப்பு முனையை ஏற்ப்படுத்தும்.
11ல் அமர்ந்த குரு தனது 7ம் பார்வையாக பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்தை வசீகரிப்பது துலாம் லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு, 5ம் பாவக வழியில் இருந்து சிறு சிறு இன்னல்களை தர கூடும், குழந்தைகள் வழியில் இருந்து இன்னல்களும் சிரமங்களும் ஏற்ப்பட வாய்ப்பு உண்டாகும், அவர்களின் நலன்களில் அதிக அக்கறை கொள்வது சால சிறந்தது, உதவி செய்ய யாரும் அற்ற சூழ்நிலையை உருவாக்கும் என்பதால், சரியான திட்டமிடுதல்களும், முன் எச்சரிக்கை நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவது நல்லது, எந்த ஒரு விஷயத்தையும் செய்யும் முன் பல முறை யோசனை செய்து இறங்குவது மிகுந்த நன்மைகளை தரும், கற்ற கல்வியினால் பயன் இல்லாத சூழ்நிலையை தரும், சிந்தனை திறனில் சிறு வறட்சி ஏற்ப்பட கூடும், சுய முன்னேற்றம் பற்றிய சிந்தனையும் அது சார்ந்த விஷயங்களில் சில நடவடிக்கைகளையும் இனிவரும் காலங்களில் தாங்கள் கட்டாயமாக எடுக்க வேண்டிய சூழ்நிலையை தரக்கூடும், இருப்பினும் இறுதியில் சகல விஷயங்களிலும் நன்மையையும் லாபமும் உண்டாகும் என்பதை நினைத்து பெருமை படலாம்.
11ல் அமர்ந்த குரு தனது 9ம் பார்வையாக களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்தை வசீகரிப்பது துலாம் லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு, 7ம் பாவக வழியில் இருந்து சில நன்மைகளை பெற்ற போதிலும், வாழ்க்கை துணையின் வழியில் இருந்து வரும் இன்னல்களுக்காக மண்டையை பிய்த்துக்கொள்ளும் சூழ்நிலையை தரும், வாழ்க்கை துணையின் தேவைகளை பூர்த்திசெய்ய தனிப்பட்ட வருமான வாய்ப்புகளை உருவாக்கி கொள்ளும் அவசியம் ஏற்ப்படும், தங்களின் வாழ்க்கை பாதையை திசை திருப்புவதில் தங்களின் வாழ்க்கை துணை மிக முக்கிய பங்கு வகிப்பார் என்பதை தங்களால் தவிர்க்க இயலாது, இருப்பினும் பொதுமக்கள் ஆதரவும் நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளின் உதவியும் தங்களின் வாழ்க்கையில் மிகுந்த நன்மைகளை வாரி வழங்கும், தொழில் ரீதியான வெற்றிகள் தாங்கள் எதிர்பார்த்த அளவில் மிகவும் சிறப்பாக அமையும், அரசியல் ரீதியான நன்மைகளையும் பதவிகளையும் திடீரென பெரும் யோகத்தை தரும், மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும், பொருளாதார தேடுதல்களுக்கு சிறந்த வாய்ப்புகள் உண்டாகும், செயற்கரிய செயல்களில் ஈடுபடும் வாய்ப்பையும் அதில் வெற்றிகளை குவிக்கும் யோகத்தை தரும்.
குறிப்பு :
துலாம் லக்கின அன்பர்களே ! தற்பொழுது தங்களுக்கு நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் மேற்கண்ட11,3,5,7ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே, தங்களுக்கு மேற்கண்ட குரு பகவானின், கோட்சார நன்மைகள் அல்லது தீமைகள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் 11,3,5,7ம் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் எவ்வித நன்மையும், தீமையும் நடைபெறாது என்பதை கவனத்தில் கொள்க.
இந்த குரு மாற்றத்தின் மூலாம் 90% யோக பலன்களை அனுபவிக்கும் லக்கினத்தை சார்ந்தவர்கள் என்ற முறையில் தங்களது துலாம் லக்கினமே முதலாவது இடத்தை பெறுகிறது, வாழ்த்துகள் .
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
பிரகஸ்பதி எனும் தேவ குரு கடகத்தில் இருந்து, குரு வட்டமான சிம்ம ராசிக்கு பெயர்ச்சி பெற்று இருப்பது, வரவேற்க்கதக்க அம்சமாகவே ஜோதிடதீபம் கருதுகிறது,ராசியை அடிப்படையாக கொண்டு இந்த குரு பெயர்ச்சி பலன்களை சிந்திப்பதை விட, சுய ஜாதகத்தை இயக்கும் லக்கினத்தை அடிப்படையாக கொண்டு, நடைபெறும் திசை புத்தி அந்தரம் மற்றும் சூட்சமம் ஏற்று நடத்தும் பாவகங்களுடன் குரு பகவானின் தொடர்புகளை ( அமர்வு மற்றும் பார்வை ) கொண்டு சுய ஜாதக பலனை கணிதம் செய்யும் பொழுது ஜாதக ரீதியான துல்லியமான பலன்களை காண இயலும், இனி மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கினங்களுக்கு குரு பகவான் வழங்கும் பலன்களை ஆய்வுக்கும் சிந்தனைக்கும் எடுத்துகொள்வோம் அன்பர்களே!
கன்னி லக்கினம் :
கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 6ம் ராசியான கன்னியை லக்கினமாக கொண்ட அன்பர்களே! தங்களுக்கு தற்பொழுது நடைபெறும் திசை புத்தி அந்தரம் மற்றும் சூட்சமம் 12,4,6,8ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் கிழ்கண்ட பலன்கள் குரு பெயர்ச்சியின் காரணமாக குரு பகவான் தங்களுக்கு வாரி வழங்குவார், 12ம் பாவகத்தில் அமர்ந்துள்ள குரு பகவான் தங்களுக்கு அதிக அளவில் மன உளைச்சலை தருவதற்கு வாய்ப்பு உள்ளது, இல்லற வாழக்கையில் தேவையில்லாத வாக்குவாதத்தில் ஈடுபடும் சூழ்நிலையை தர கூடும், மற்றவர்களை நம்பி செய்யும் காரியங்கள் யாவும் மிகப்பெரிய பின்னடைவதரும், தேவையில்லாத விரையங்கள் ஏற்ப்பட வாய்ப்புண்டு, மன நிம்மதியை குறைக்கும் வண்ணம் சில எதிர்பாராத நிகழ்வுகள் நடைபெற கூடும், அனைவராலும் தொல்லை சிரமங்களை அனுபவிக்கும் சூழ்நிலையை தவிர்க்க இயலாது, மன நிம்மதியை பாதிக்கும் விதமான எவ்வித செய்கைகளிலும் தாங்கள் இனிவரும் ஒருவருட காலம் ஈடுபடாமல் இருப்பது சகல விதங்களிலும் நன்மை தரும்.
12ல் அமர்ந்த குரு தனது 5ம் பார்வையாக சுக ஸ்தானமான 4ம் பாவகத்தை வசீகரிப்பது கன்னி லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு, 4ம் பாவக வழியில் இருந்து தான பெயரில் உள்ள சொத்து வண்டி வாகனங்களில் வில்லங்கங்களை தரக்கூடும், தனது பெயருக்கு அவப்பெயர் உருவாகும் சூழ்நிலையை தரக்கூடும், எதிர்பால் அமைப்பினரிடம் அதிக அளவில் கவனமுடன் நடந்துகொள்வது நல்லது, தன்னை விட வயதில் மூத்தோர்களிடம் மிகவும் மரியாதையுடன் நடந்துகொள்வது சால சிறந்தது, குடும்பத்தில் உள்ள பெரிய மனிதர்களின் ஆலோசனை படி நடந்துகொள்வது மிகுந்த நன்மைகளை தரும், தனது பெயரில் உள்ள உடைமைகள் மீது அதிக கவனமாக இருப்பது நலம், விலை உயர்ந்த பொருட்கள் சொத்துக்களை மிக கவனமாக கையாள்வதும் பாதுகாப்பாக வைத்துகொள்வதும் நல்லது, குண நலன்களில் மாறுபாடு ஏற்ப்படும் என்பதால் பொறுமையை கடைபிடிப்பது மிகுந்த நன்மையை தரும், புதிய சொத்துகள் வண்டி வாகனங்களை வாங்கும் பொழுது மிகுந்த கவனாமா இருப்பது தேவையிலாத அலைச்சலை குறைக்கும், தாய் வழியில் இருந்து சில இன்னல்களை தாங்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும்.
12ல் அமர்ந்த குரு தனது 7ம் பார்வையாக சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்தை வசீகரிப்பது கன்னி லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு, எதிரிகள் தொல்லையை அதிகரிக்க செய்த போதிலும், அவர்கள் வழியில் இருந்து லாபங்களை வாரி வழங்கும், தாங்கள் எதிர்பார்த்த விஷயங்களில் தடை தாமதத்தை தந்த போதிலும், இறுதியில் நிறைவேறும், வயிறு சார்ந்த பிரச்சனைகள் தங்களுக்கு அதிக அளவில் தொல்லைகளை தரும், மருத்துவ செலவினங்களை தவிர்க்க இயலாது, யாரிடமும் பகைமை பாராட்டாமல் நடந்துகொள்வது நல்லது, சிறு சிறு விபத்துகள் மூலம் உடல் நல குறைவு உருவாக கூடும், மூடநம்பிக்கையின் அடிப்படையில் செயல்படும் காரியங்கள் யாவும் தங்களுக்கு தோல்வியை தரும், தனம்பிக்கை வெகுவாக பாதிக்கும், வாகனங்களில் நீண்ட நெடுதூர பயணங்களில் பாதுகாப்பு அம்சங்களை கடைபிடிப்பது நலம் தரும், கடன் பெறுவது கடன் கொடுப்பது என்ற இரண்டு விஷயங்களும் தங்களுக்கு அதிக அளவில் முன்னேற்ற பாதிப்பை தரும் தேவையில்லாத பகைமையை உருவாக்கும், தங்களின் எண்ணங்களும் செயல்களும் சில நேரங்களில் திடீர் பின்னடைவை தரக்கூடும், திட்டமிடுதல் இல்லாத வாழ்க்கை முறை தங்களுக்கு பெரிய அளவில் இன்னல்களை தர கூடும்.
12ல் அமர்ந்த குரு தனது 9ம் பார்வையாக ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்தை வசீகரிப்பது கன்னி லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு, நெருப்பு அல்லது விபத்தின் மூலம் உடல் நல குறைவை தர கூடும், வீண் பிடிவாதங்களும் முரட்டு தனமும் தங்களது வாழ்க்கை முன்னேற்றத்தை வெகுவாக பாதிக்கும், விபத்துகளை தவிர்க்க வேகம் மற்றும் பொறுமையை கடைபிடிப்பது நல்லது, அதிக அளவில் கோப உணர்வை தூண்டு நிகழ்வுகள் நடைபெறுவதால் தங்களின் உடல் நிலையும் மன நிலையும் வெகுவாக பாதிக்கும், எனவே சுய கட்டுபாடும், பொறுப்புணர்வும் தங்களுக்கு இனிவரும் காலங்களில் அதிக அளவில் தேவை படும், பெரிய அளவில் முதலீடுகளை செய்யும் பொழுது மிகுந்த கவனமுடன் இருப்பது மிகுந்த நன்மை பயக்கும், எந்த அளவிற்கு பொறுமையையும், அமைதியையும் கடை பிடிக்கின்றீர்களோ அந்த அளவிற்கு தங்களுக்கு நன்மைகளும், லாபமும் கிடைக்கும்.
குறிப்பு :
கன்னி லக்கின அன்பர்களே ! தற்பொழுது தங்களுக்கு நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் மேற்கண்ட12,4,6,8ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே, தங்களுக்கு மேற்கண்ட குரு பகவானின், கோட்சார நன்மைகள் அல்லது தீமைகள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் 12,4,6,8ம் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் எவ்வித நன்மையும், தீமையும் நடைபெறாது என்பதை கவனத்தில் கொள்க.
இந்த குரு மாற்றத்தின் மூலாம் 30% யோக பலன்களை அனுபவிக்கும் லக்கினத்தை சார்ந்தவர்கள் என்ற முறையில் தங்களது கன்னி லக்கினமே முதலாவது இடத்தை பெறுகிறது, வாழ்த்துகள் .
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
பிரகஸ்பதி எனும் தேவ குரு கடகத்தில் இருந்து, குரு வட்டமான சிம்ம ராசிக்கு பெயர்ச்சி பெற்று இருப்பது, வரவேற்க்கதக்க அம்சமாகவே ஜோதிடதீபம் கருதுகிறது,ராசியை அடிப்படையாக கொண்டு இந்த குரு பெயர்ச்சி பலன்களை சிந்திப்பதை விட, சுய ஜாதகத்தை இயக்கும் லக்கினத்தை அடிப்படையாக கொண்டு, நடைபெறும் திசை புத்தி அந்தரம் மற்றும் சூட்சமம் ஏற்று நடத்தும் பாவகங்களுடன் குரு பகவானின் தொடர்புகளை ( அமர்வு மற்றும் பார்வை ) கொண்டு சுய ஜாதக பலனை கணிதம் செய்யும் பொழுது ஜாதக ரீதியான துல்லியமான பலன்களை காண இயலும், இனி மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கினங்களுக்கு குரு பகவான் வழங்கும் பலன்களை ஆய்வுக்கும் சிந்தனைக்கும் எடுத்துகொள்வோம் அன்பர்களே!
சிம்ம லக்கினம் :
கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் ராசியான சிம்மத்தை லக்கினமாக கொண்ட அன்பர்களே! தங்களுக்கு தற்பொழுது நடைபெறும் திசை புத்தி அந்தரம் மற்றும் சூட்சமம் 1,5,7,9ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் கிழ்கண்ட பலன்கள் குரு பெயர்ச்சியின் காரணமாக குரு பகவான் தங்களுக்கு வாரி வழங்குவார், முதல் பாவகமான லக்கினத்தில் அமர்ந்துள்ள குருபகவான் சிம்ம லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு, இனி வரும் ஒரு வருட காலத்திற்கு ராஜயோக பலன்களை வாரி வழங்குகிறார், சிம்ம இலக்கின அன்பர்களுக்கு உடல் நிலையில் நல்ல ஆரோக்கியத்தையும், தெளிவான சிந்தனையும், செயல்திறனில் ஒரு உத்வேகத்தையும் தருவார், எந்த ஒரு பிரச்சனைகளையும் மிக எளிதாக கையாளும் தன்மையை தருவார், வருமுன் காக்கும் தன்மையையும், எடுக்கும் காரியங்களில் மிகப்பெரிய வெற்றிகளை வாரி வழகுவார், புதிய மனிதர்களின் அறிமுகம் தங்களது வாழ்க்கையில் பல அதிர்ஷ்ட வாய்ப்புகளையும் முன்னேற்றத்தையும் வாரி வழங்கும், கல்வி கலை சார்ந்த துறைகளில் பணியாற்றும் அன்பர்களுக்கு சிறப்பான நல்ல எதிர்க்கலாம் உண்டு, அரசியலில் நல்ல பெயரையும் உயர் பதவிகளை அலங்கரிக்கும் யோகத்தை தரும்.
1ல் அமர்ந்த குரு தனது 5ம் பார்வையாக பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்தை வசீகரிப்பது சிம்ம லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு, இதுவரை குழந்தை பாக்கியம் அற்ற தம்பதியருக்கு புத்திரசந்தான பாக்கியம் உண்டாகும், தனது குழந்தைகள் வழியில் இருந்து நல்ல முன்னேற்றமும், செல்வாக்கும் உண்டாகும், கல்வி கலைகளில் தேர்ச்சியும், புகழும் உண்டாகும், காதலில் வெற்றியும் காதலர்களுக்கு திருமண யோகத்தையும் வழங்குவார், ஆன்மீக பெரியோர்களில் ஆசிர்வாதமும், முன்னோர்களின் ஆசிவாதமும் தங்களுக்கு வாழ்க்கையில் அளவில்லா நன்மைகளையும் முன்னேற்றத்தையும் வாரி வழங்கும், பல ஆன்மீக திருத்தலங்களுக் சென்றுவரும் யோகத்தையும், அதன் வழியில் வாழ்க்கையில் முன்னேற்றமும் உண்டாகும், வெளிநாடுகளில் இருந்து நல்ல சேதியும், வெளிநாட்டில் பணியாற்றும் அன்பர்களுக்கு, திடீர் பதவி உயர்வும் தன சேர்க்கையும் உண்டாகும், தங்களின் அறிவு திறன் மிகசிறந்த திட்டங்களை வகுத்து தரும், இதன் மூலம் அளவில்லா தொழில் முன்னேற்றமும், கை நிறைவான லாபமும் கிடைக்க பெறுவீர்கள், தன்னம்பிக்கையும் மனோ தைரியமும் அதிகரிக்கும் யோக காலமாக இதை கருதலாம்.
1ல் அமர்ந்த குரு தனது 7ம் பார்வையாக களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்தை வசீகரிப்பது சிம்ம லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு, வாழ்க்கை துணை, நண்பர்கள், கூட்டாளிகள் மற்றும் பொதுமக்கள் வழியில் இருந்து மிகசிறந்த யோக பலன்களை வாரி வழங்கும், வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடு வந்த போதிலும், ஒற்றுமை குறையாது, வாழ்க்கை துணையின் ஆதரவின் மூலம் பல அறிய செயல்களில் ஈடுபட்டு வெற்றியை குவிக்கும் யோகத்தை தரும், ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்யும் அன்பர்களுக்கு இனிவரும் ஒரு வருடம் எதிர்பாராத வெற்றி வாய்ப்புகளை வாரி வழங்கும், வியாபாரிகளுக்கு நல்ல லாபத்தையும், முன்னேற்றத்தையும் வாரி வழங்கும், பொதுமக்களை சார்ந்து தொழில் செய்யும் அன்பர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும், தங்களின் எண்ணங்கள் லட்சியங்கள் யாவும் நிறைவேற்றும் யோக காலமாக இந்த குரு பெயர்ச்சியை கருதலாம், அரசியலில் உள்ள அன்பர்களுக்கு நல்ல வெற்றி வாய்ப்பையும், எதிர்பாராத பதவி உயர்வையும் தங்குதடையின்றி இந்த குரு பெயர்ச்சி வாரி வழங்கும்.
1ல் அமர்ந்த குரு தனது 9ம் பார்வையாக பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்தை வசீகரிப்பது சிம்ம லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு, உறவுகள் வழியில் இருந்தும், தந்தை வழியில் இருந்தும் நன்மைகளை வாரி வழங்கும், ஆன்மீக சிந்தனைகள் மேலோங்கும், உயர்கல்வி அல்லது ஆராய்ச்சி படிப்பு சார்ந்த முயற்சிகளில் உள்ள அன்பர்களுக்கு சிற்றப்பன கல்வி முன்னேற்றத்தையும் எதிர்பாராத வெற்றி வாய்ப்புகளையும் வாரி வழங்கும், புதிய கண்டு பிடிப்புகள், புதிய ஆராய்ச்சிகள் பெயரையும் புகழையும் பெற்று தரும், சமூகத்தில் நல்ல பெயரும் அந்தஸ்தும் உண்டாகும், பொது காரியங்களில் நல்ல மதிப்பும் மரியாதையும் உண்டாகும், கோவில் மற்றும் சாஸ்திரம் சார்ந்த விஷயங்களில் நன்மையையும் லாபத்தையும் பெற்று தரும், புனித திருத்தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பும், அதன் வழியில் யோக வாழ்க்கையும் உண்டாகும், இடம் மற்றும் சூழ்நிலை மாற்றத்தில் விருப்பமும், இயற்க்கை எழில் சூழ்ந்த இடங்களுக்கு சென்று வரும் வாய்ப்பை தரும், தொலைதூர பயணங்களில் லாபத்தையும் அதிர்ஷ்டத்தையும் வாரி வழங்கும், தடை பெற்ற கல்வியில் முன்னேற்றமும், வேலைவாய்ப்பில் அதிர்ஷ்டத்தையும் வாரி வழங்கும், குரு வட்டமான சிம்மத்தில் அமர்ந்துள்ள குரு பகவான் தங்களுக்கு இந்த வரும் யோக பலன்களையே தங்கு தடையின்றி வாரி வழங்குவது வரவேற்க தக்க விஷயமாகவே கருதலாம்.
குறிப்பு :
சிம்ம இலக்கின அன்பர்களே ! தற்பொழுது தங்களுக்கு நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் மேற்கண்ட1,5,7,9ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே, தங்களுக்கு மேற்கண்ட குரு பகவானின், கோட்சார நன்மைகள் அல்லது தீமைகள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் 1,5,7,9ம் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் எவ்வித நன்மையும், தீமையும் நடைபெறாது என்பதை கவனத்தில் கொள்க.
இந்த குரு மாற்றத்தின் மூலாம் 50% யோக பலன்களை அனுபவிக்கும் லக்கினத்தை சார்ந்தவர்கள் என்ற முறையில் தங்களது சிம்ம லக்கினமே இரண்டாம் இடத்தை பெறுகிறது, வாழ்த்துகள் .
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
பிரகஸ்பதி எனும் தேவ குரு கடகத்தில் இருந்து, குரு வட்டமான சிம்ம ராசிக்கு பெயர்ச்சி பெற்று இருப்பது, வரவேற்க்கதக்க அம்சமாகவே ஜோதிடதீபம் கருதுகிறது,ராசியை அடிப்படையாக கொண்டு இந்த குரு பெயர்ச்சி பலன்களை சிந்திப்பதை விட, சுய ஜாதகத்தை இயக்கும் லக்கினத்தை அடிப்படையாக கொண்டு, நடைபெறும் திசை புத்தி அந்தரம் மற்றும் சூட்சமம் ஏற்று நடத்தும் பாவகங்களுடன் குரு பகவானின் தொடர்புகளை ( அமர்வு மற்றும் பார்வை ) கொண்டு சுய ஜாதக பலனை கணிதம் செய்யும் பொழுது ஜாதக ரீதியான துல்லியமான பலன்களை காண இயலும், இனி மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கினங்களுக்கு குரு பகவான் வழங்கும் பலன்களை ஆய்வுக்கும் சிந்தனைக்கும் எடுத்துகொள்வோம் அன்பர்களே!
கடக லக்கினம் :
கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 4ம் ராசியான கடகத்தை லக்கினமாக கொண்ட அன்பர்களே! தங்களுக்கு தற்பொழுது நடைபெறும் திசை புத்தி அந்தரம் மற்றும் சூட்சமம் 2,6,8,10ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் கிழ்கண்ட பலன்கள் குரு பெயர்ச்சியின் காரணமாக குரு பகவான் தங்களுக்கு வாரி வழங்குவார், 2ம் பாவகமான சிம்மத்தில் அமர்ந்து இருக்கும் குரு பகவான் கடக இலக்கின அன்பர்களுக்கு கை நிறைவான வருமான வாய்ப்புகளையும், இனிமையான பேச்சு திறனையும் வாரி வழங்குவார், குடும்பத்தில் சிறு சிறு குழப்பங்கள் வந்த போதிலும் இறுதியில் நன்மையே விளையும், திருமண வாய்ப்புகள் கைகூடி வரும், இது வரை திருமணம் ஆக அன்பர்களுக்கு நல்ல வரணும் வதுவும் அமையும், கலை துறையிலும், மருத்துவ துறையிலும் உள்ள அன்பர்களுக்கு எதிர் பாராத வெற்றிகளும் லாபங்களும் வந்து குவியும், ஆய்வுகள் மூலம் தொழில் நுட்பம் சாந்த விஷயங்களில் பல புதுமை படைப்புகளை இளைய சமுதாயத்தை சார்ந்த கடக இலக்கின அன்பர்கள் கண்டறிந்து சாதனை செய்வார்கள், கல்வியில் புகழ் பெறுவார்கள், தன்னிறைவான பொருளாதார வசதி வாய்ப்புகளை பெரும் யோக காலமாக கடக இலக்கின அன்பர்களுக்கு இந்த குறு பெயர்ச்சி அமையும்.
2ல் அமர்ந்த குரு தனது 5ம் பார்வையாக சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்தை வசீகரிப்பது கடக லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு, 6ம் பாவக வழியில் இருந்து குறுகிய கால வெற்றிகளை தங்கு தடை இன்றி வாரி வழங்குவார், எதிரிகள் மூலம் லாபமும், எதிரிகளின் செயல்கள் கடக இலக்கின அன்பர்களுக்கு சாதகமாக அமைந்து நன்மையை செய்யும், உடல் ரீதியான குறிப்பாக வயிறு சார்ந்த தொல்லைகள் அதிக அளவில் வரும் என்பதால் உணவு பழக்க வழக்கத்தில் மிகுந்த கட்டுபாடும், சுகாதாரத்தையும் கடைபிடிப்பது நலம் தரும், தீய பழக்க வழக்கங்களில் இருந்து விடுபட இது ஒரு சரியான நேரமாக கடக இலக்கின அன்பர்கள் கருதலாம், தன்னை விட வயதில் அதிகம் உள்ள பெரிய மனிதர்களிடம் மிகுந்த மரியாதையுடனும், பணிவுடன் நடந்துகொள்வது கடக இலக்கின அன்பர்களுக்கு மிகுந்த நன்மையை தரும், தொழில் ரீதியாக சிறு சிறு அதிர்ஷ்டங்கள் தொடர்ந்து கிடைத்த வண்ணமே இருக்கும், தேர்வு மற்றும் வழக்குகளில் வெற்றியும், சொத்து சுக சேர்க்கையும் உண்டாகும்.
2ல் அமர்ந்த குரு தனது 7ம் பார்வையாக ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்தை வசீகரிப்பது கடக லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு, புதையல் யோகம் கிட்டும், புதையலுக்கு நிகரான சொத்து சுக சேர்க்கையை தங்கு தடையின்றி தரும், திடீர் விபத்துகளையும், தன்னம்பிக்கை குறையும் விதத்திலான சூழ்நிலைகள் உருவாகும், வாழ்க்கை துணை வழியில் இருந்து பொருளாதார இழப்புகளை கடக இலக்கின அன்பர்கள் தவிர்க்க இயலாது, இன்சூரன்ஸ் போனஸ் போன்றவற்றில் இருந்து நல்ல லாபமும் பொருளாதார உதவியும் கிடைக்கும், பயணங்களில் அதிக கவனமுடன் இருப்பது கடக இலக்கின அன்பர்களுக்கும் அவரை சார்ந்தவர்களுக்கும் நன்மை பயக்கும், பொது காரியங்கள் மற்றும் ஜாமீன் தருவதை தவிர்ப்பது அதிக நலன் தரும், பாதுகாப்பற்ற பயணங்களினால் விபத்தும் உடல் நல குறைவும் உண்டாகும் என்பதால், வாகனங்களை பாதுகாப்புடன் இயக்குவது சகல நிலைகளில் இருந்தும் நன்மை தரும், முன் பின் அறிமுகம் அற்ற நபர்களினால் அதிக தொல்லைகளுக்கு ஆளாகும் சூழ்நிலையை தரும், கடக லக்கினத்தை சார்ந்த பெண்கள் அதிக கவனமுடன் இருப்பது நல்லது.
2ல் அமர்ந்த குரு தனது 9ம் பார்வையாக ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்தை வசீகரிப்பது கடக லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு, தொழில் ரீதியான வெற்றிகளை வாரி வழங்கும், ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்யும் அன்பர்களுக்கு இனி வரும் ஒரு வருடம் அதிரடியான வெற்றி வாய்ப்புகளை வாரி வழங்கும், சமூகத்தில் மதிப்பு மரியாதை உயரும், சுய முன்னேற்ற சிந்தனைகள் மிக பெரிய வெற்றிகளை வாரி வழங்கும், தீர்கமான செயல் திறன் மூலம் லாபம் பெரும் யோக காலம் இது, புகழ் மிக்க பொறுப்புகளை அலங்கரிக்கும் யோகத்தை தரும், புதிய பதவிகள் அல்லது பதவி உயர்வு என கடக இலக்கின அன்பகளுக்கு தகுதிக்கு உகந்த பொறுப்புகள் தேடி வரும், உடலும் மனமும் ஒருங்கே செயல்பட்டு சரியான ஒத்துளைப்பை வழங்கும், இதன் மூலம் கடக இலக்கின அன்பர்களின் லட்சியங்கள் நிறைவேறும், விளையாட்டு துறையில் உள்ள அன்பர்களுக்கு நல்ல வெற்றிகள் கிடைக்கும், நினைக்கும் எண்ணங்கள் யாவும் பலிதம் பெரும். ஜீவன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் நன்மைகளையும், லாபங்களையும் அபரிவிதமாக கடக இலக்கின அன்பர்களுக்கு இந்த குரு மாற்றம் வாரி வழங்கும் என்பதால் கடக்க லக்கினத்தார் 100% விகித மகிழ்ச்சியை பெறலாம்.
குறிப்பு :
கடக இலக்கின அன்பர்களே ! தற்பொழுது தங்களுக்கு நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் மேற்கண்ட 2,6,8,10 ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே, தங்களுக்கு மேற்கண்ட குரு பகவானின், கோட்சார நன்மைகள் அல்லது தீமைகள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் 2,6,8,10ம் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் எவ்வித நன்மையும், தீமையும் நடைபெறாது என்பதை கவனத்தில் கொள்க.
இந்த குரு மாற்றத்தின் மூலாம் 50% யோக பலன்களை அனுபவிக்கும் லக்கினத்தை சார்ந்தவர்கள் என்ற முறையில் தங்களது கடக லக்கினமே இரண்டாம் இடத்தை பெறுகிறது, வாழ்த்துகள் .
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696