திங்கள், 20 ஜூன், 2016

தொழில் மற்றும் லாப ஸ்தான வலிமையையும், அபரிவிதமான பொருளாதார முன்னேற்றமும் !


"ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின்."

"ஏற்ற காலத்தையும் இடத்தையும் அறிந்து ஒரு செயலைச் செய்தால், பூவுலகம் முழுமையையும் வேண்டினாலும் அது கைவசப்படும்."

மிக பெரிய தொழில் வெற்றிகளையும், ஜீவன முன்னேறங்களையும் பெறுவதற்கு மேற்கண்ட திருக்குறள் படிப்பினையாக அமையும், சுய ஜாதக வலிமைக்கு ஏற்ப, தமக்கு பொருத்தமான தொழில் வாய்ப்பை தேர்வு செய்துவிட்டால், ஜீவன வழியில் தன்னிறைவான முன்னேற்றம் பெறுவது என்பது இயல்பாகவே நடைபெற ஆரம்பித்துவிடும், பொருளாதார வசதி வாய்ப்புகளும், வண்டிவாகன யோகமும், சொத்து சுக சேர்க்கையும் சம்பந்த பட்ட ஜாதகரை தேடிவரும், ஜாதகரால் இயலாத காரியம் ஒன்று இல்லை என்ற நிலையை தரும், இதற்க்கு சுய ஜாதகத்தில் பாவக வலிமை சிறப்பாக அமைவது அவசியமாகிறது, கிழ்காணும் உதாரண ஜாதகத்தில் ஜீவனம் மற்றும் லாப ஸ்தான வலிமையை பற்றி, இந்த பதிவில் சற்று சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே!


லக்கினம் : கன்னி
ராசி : கடகம்
நட்சத்திரம் : பூசம் 3ம் பாதம்

ஜாதகத்தில் பாவக தொடர்புகள் :

1,3,4,5,7,8,9,11,12ம் வீடுகள் அனைத்தும் அதிர்ஷ்டத்தையும், லாபத்தையும் குறிக்கும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இருக்கின்றது.

2,6,10ம் வீடுகள் ஜீவனம் மற்றும் தொழில் ஸ்தானம் எனும் 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இருக்கின்றது.

மேற்கண்ட ஜாதகத்தில் பெரும்பாலான பாவகங்கள் அதிர்ஷ்டம் மற்றும் லாப ஸ்தானம் எனும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம், சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமை பெறுவது என்பது சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையில் சகல நலன்களையும் வாரி வழங்கும், மேலும் நடைபெறும் எதிர்வரும் திசா புத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் ஜாதகரின் வாழ்க்கையில் யோகங்களுக்கு குறைவிருக்காது, ஜாதகரின் முன்னேற்றத்திற்கு தடையிருக்காது.

பொதுவாக ஜீவன ஸ்தான வலிமை  என்பது சம்பந்தப்பட்ட ஜாதகரின் தனிப்பட்ட தொழில் முன்னேற்றத்தையும், தன்னிறைவான பொருளாதார நன்மைகளையும் வாரி வழங்கும், ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவது ஜாதகரின் தொழில் ஞானத்தையும், லாபஸ்தானம் வலிமை பெறுவது ஜாதகரின் அதிர்ஷ்டத்தையும், தான் அனுபவிக்க இருக்கும் யோக பலன்களின் தன்மையையும் அறிவுறுத்தும், மேற்கண்ட ஜாதகருக்கு கற்ற கல்வி வழியில் இருந்து வாக்கு வன்மையும், மிகசிறந்த பேச்சு திறனையும், 2ம் பாவக வழியில் இருந்து கிடைக்க பெறுவார், மேலும் வாக்கு வழியில் இருந்து பொதுமக்கள் ஆதரவையும், மக்கள் செல்வாக்கையும், பேச்சை ஆதராமாக கொண்ட வருமான வாய்ப்பையும் பெறுவார், 6ம் பாவக வழியில் இருந்து திடீர் தொழில் வெற்றிகளையும் தொடர் வருமான வாய்ப்புகளையும் தரும், தன்னிறைவான வருமானம் எதிர்பாரமால் கிடைக்க பெறுவார், ஜாதகருக்கு வரும் எதிர்ப்புகள் அனைத்தும் சாதகமாக மாறும், தான் செய்யும் தொழிலில் நுண்ணறிவு திறனையும், சிறந்து விளங்கும் தன்மையையும் தரும், 10ம் பாவக வழியில் இருந்து செய்யும் தொழிலில் வெற்றியையும், தன்னிறைவான தொழில் முன்னேற்றத்தையும் தரும், சமூகத்தில் நல்ல அந்தஸ்தையும், கௌரவம் குறைவில்லா வாழ்க்கையயும், அரசு  ஆதரவும் உண்டாகும், அடிப்படையிலேயே வியாபர நுணுக்கமும், அறிவு திறனும் பெற்று இருப்பார், வாழ்க்கையில் ஜீவன வழியில் எவ்வித தடைகளும் வர வாய்ப்பில்லை, வந்த போதிலும் அதை சிறப்பாக கையாண்டு வெற்றி பெரும் வல்லமையை தரும்.

ஜீவன ஸ்தான அதிபதியாக சுக்கிரன் அமைவது ஜாதகரின் வாழ்க்கையில் நல்ல சுக போகங்களை வாரி வழங்கும், ஆடை ஆபரணம், வண்டி வாகனம், பொதுமக்கள் மக்கள் விரும்பு உயர் மதிப்பு கொண்ட ஆடம்பர பொருட்கள், கலை துறை போன்ற தொழில்களில் நல்ல வெற்றி வாய்ப்பும், தகவல் தொழில் நுட்பம் சார்ந்த வியாபரத்தில் அபரிவிதமான ஜீவன முன்னேற்றத்தையும் வாரி வழங்கும், சொல்வ செழிப்பு தேடிவந்து குவியும், இந்த ஜாதகம் குறைந்த முதலீட்டில் அபரிவிதமான லாபங்களை குறுகிய காலத்தில் குவிக்கும் ஜாதக அமைப்பாகும், மேலும் சொந்த முயற்ச்சியில் சகல முன்னேற்றங்களையும் பெரும் யோக அமைப்பை தரும், பல தொழில் செய்யும் அறிவு திறனையும், பல வழிகளில் இருந்து வருமானங்களையும் வாரி வழங்கும், தனது முடிவில் இருந்து மாறாத மன நிலையையும், உறுதியான செயல்பாடுகள் மூலம் வெற்றியை பெரும் யோகத்தை தரும், ஜாதகரின் சிந்தனை மற்றும் அறிவு திறனே சகல நிலைகளில் இருந்தும் ஜீவன முன்னேற்றத்தை வாரி வழங்கும், தனக்கென்று ஒரு வழிமுறையை கையாண்டு வெற்றி பெரும் யோகத்தை தரும், திட்டமிடுதல்களும் செயல்பாடுகளும் ஜாதகருக்கு தொடர் வெற்றிகளை வாரி வழங்கும்.

1,3,4,5,7,8,9,11,12ம் வீடுகள் அனைத்தும் அதிர்ஷ்டத்தையும், லாபத்தையும் குறிக்கும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகர் இலக்கின வழியில் இருந்து சிறப்பாக வளரும் சூழ்நிலை, நல்ல உடல் மனம் நலம், முற்போக்கு சிந்தனை, அனைத்திலும் அதிர்ஷ்டத்தை பெரும் யோகத்தை தரும், தனக்கு வரும் நல்ல வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றியை பெரும் யோகம் உண்டாகும், 3ம் பாவக வழியில் இருந்து எடுக்கும் முயற்ச்சியில் வெற்றி, வியாபரத்தின் மூலம் சகல யோகங்களையும் பெரும் தன்மை, பயணங்களில் லாபம், சமயோசித புத்திசாலித்தனம், தன்னம்பிக்கை மற்றும் வீரியமிக்க செயல்பாடுகள், மனதில் நினைத்ததை சாதிக்கும் வல்லமை, அதிகார யோகம், கட்டளையிடும் இடத்தில் நிற்கும்  யோகம், சகல சௌபாக்கியம் என்ற வகையில் யோகங்களை வாரி வழங்கும்.

4ம் பாவக வழியில் சொத்து சுக சேர்க்கை, வண்டி வாகன யோகம், சகல வசதிமிக்க வீடு, மற்றும் நிறுவனம், செய்யும் தொழில் வழங்கும் லாபங்களை சொத்துகளாக மாற்றும் யோகம், சுக போகங்களை அனுபவிக்கும் தன்மை, செல்லும் இடங்களில் நல்ல வரவேற்ப்பு, நல்ல குணநலம், பெருந்தன்மையான மனம், சகலருக்கும் உதவும் தன்மை,  தன்னை சார்ந்தவர்களை ஆதரிக்கும் குணம், உதவி செய்வதன் மூலம் நற்ப்பெயர், பெற்றோர் வழி ஆதரவு, மிதமிஞ்சிய சொத்து சுக சேர்க்கை, வாழ்க்கையில் வரும் செல்வ சேர்க்கையை கண்டு கர்வம் கொள்ளாத மன நிலை, எப்போதும் எளிமையை கடைபிடிக்கும் மன நிலையை தரும். 5ம் பாவக வழியில் இருந்து கற்ற கல்வி வழியில் இருந்து பலன்பெறுதல், சமயோசித புத்திசாலித்தனம், எந்த ஒரு சூழ்நிலையையும் தனது அறிவு திறன் கொண்டு வெல்லும் யோகம், மனம் தளர்வடையா தன்மை, அனைவரின் ஆதரவையும் பெரும் யோகம், எந்த சூழ்நிலையிலும் உதவி செய்யும் உறவுகள் மற்றும் நண்பர்கள், மாற்று இனம் மாற்றும் மதத்தினரும் ஆதரவு தரும் நன்னடத்தை, தர்மத்தையும் உண்மையையும் போற்றும் குணம், பொதுவாழ்க்கையில் நேர்மை, போதும் என்ற மன நிலை, குல தேவதையின் பரிபூரண நல்லாசிகள் எந்த சூழ்நிலையிலும் ஜாதகரை காக்கும் வல்லமை, புதுமை விரும்பி, ஆராய்ச்சி மன நிலை, புதிய கண்டுபிடிப்புகள் மூலம் உலகிற்க்கு சகல நன்மைகளையும் தரும் யோகம் என ஜாதகர்
 பூர்வபுண்ணிய ஸ்தான வழியில் இருந்து சகல யோகங்களையும் தரும், எதிர்ப்புகள் அனைத்தும் ஜாதகர் முறியடித்து நன்மையை பெறுவார்.

7ம் பாவக வழியில் இருந்து ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம், கலைதுறையில் செல்வாக்கு, அதிக லாபம், கூட்டு முயற்ச்சியின் மூலம் லாபம், பொதுமக்கள் ஆதரவு மற்றும் செல்வாக்கு, தன்னிறைவான வியாபர விருத்தி, உலக புகழ், பல தொழில்களை நிர்வகிக்கும் வல்லமை, நல்ல வலிமை மிக்க கூட்டாளி, செல்லும் இடங்களில் நல்ல பெயரும் புகழும் உண்டாகும் யோகம், குறுகிய காலத்தில் சகல செல்வாக்கையும் பெரும் யோகம், வியாபாரத்தின் மூலம் சொத்து சுக சேர்க்கை, வாழ்க்கை துணை, நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் பெரும் யோகம் என களத்திர வழியில் இருந்து சிறப்பான நன்மைகள் உண்டாகும், 8ம் பாவக  வழியில் இருந்து புதையல் யோகம், புதையலுக்கு நிகரான சொத்து சுக சேர்க்கை, வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் வருமானம் மற்றும் சொத்துகள், கூட்டாளியின் மூலம் லாபம் பெரும் யோகம், நீண்ட ஆயுள், மிகப்பெரிய லட்சியங்கள் மற்றும் திட்டமிடுதல்களை சுவீகரிக்கும் வல்லமை, திடீர் பொருள் வரவு என ஆயுள் பாவக நன்மைகளை தங்கு தடையின்றி பெரும் யோகத்தை தரும்.

9ம் பாவக வழியில் இருந்து நல்லறிவு, ஆன்மீக ஞானம், பெரியோர் ஆசிர்வாதம், புண்ணியம் மிக்க செயல்பாடுகள், ஆன்மீக பெரியோர்களின் ஆசிர்வாதம், பல்துறை அறிவு திறன், நல்ல கல்வி அறிவு, ஆராய்ச்சி மூலம் புதுமையான கண்டுபிடிப்புகள், எதிர்பார்ப்புகள் நிறைவேறும் யோகம், அனைவரிடமும் நற்ப்பெயர் பெரும் யோகம், சமூகத்தில் நன்மதிப்பு, பெயரும் புகழும் தேடிவரும் தன்மை, பெருதன்மை மிக்க நற்குண நலன்கள் மூலம் அனைவரின் ஆதரவையும் பெறுதல், புகழ் மிக்க பொறுப்புகளை நிர்வகிக்கும் வல்லமை, அனைவரையும் ஆதரிக்கும் யோகம், பித்ருக்கள் ஆசிர்வாதம் என ஜாதகர் பாக்கிய ஸ்தான பலன்களை பரிபூரணமாக அனுபவிக்கும் யோகத்தை தரும், 11ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் அதிர்ஷ்டசாலி, முற்போக்கு சிந்தனை, நினைத்ததை பெரும் யோகம், நல்ல குணம், எதிர்ப்புகளை வெற்றியாக்கும் தனித்தன்மை, செல்வ நிலையில் திருப்தி, தேடி வரும் வெற்றி வாய்ப்புகள், அபரிவிதமான செல்வசெழிப்பு, அனைத்திலும் லாபம், லாபநோக்க சிந்தனை, வெற்றிக்கான சரியான திட்டமிடுதல்கள், வருமுன் உணரும் மனநிலை என லாப ஸ்தான வழியில் இருந்து மிகுந்த நன்மைகளை தரும்.

12ம் பாவக வழியில் இருந்து முதலீடுகளில் நல்ல லாபம், நல்ல உறக்கம், ஆன்மீக வெற்றி, நிறைய சொத்துகள், திருப்தியான மன நிலை தாம்பத்திய வாழ்க்கையில் வெற்றி, நல்ல மன நிம்மதி, எதிர்காலத்திர்க்கான சேமிப்பு, அசையும் அசையா சொத்துகள், பொது வாழ்க்கையில் நேர்மை, தொழில் முதலீடுகள் நல்ல லாபம் தரும் யோகம் என அயன சயன சுக போகங்களை வாரி வழங்கும்.

மேற்கண்ட ஜாதகத்தில் ஜீவன ஸ்தான வலிமையை விட, லாப ஸ்தான வலிமை மேலோங்கி நிற்பது, சிறப்பான தொழில் வெற்றிகளையும், தன்னிறைவான பொருளாதார முன்னேற்றத்தையும் வாரி வழங்கும், எனவே சுய தொழில் மூலம் குறுகிய கால வெற்றிகளை வாரி வழங்கும், மேலும் எதிர்வரும் சுக்கிரன் திசையில் நல்ல தொழில் வளர்ச்சியையும், அதற்க்கு பிறகு வரும் சூரியன், சந்திரன், செவ்வாய் திசைகளில் அபரிவிதமான லாபங்களையும் தரும் என்பதால் ஜாதகர் பின்யோக ஜாதகர் என்பது உறுதியாகிறது, 45 வருடங்களுக்கு மேல் ராஜ யோகங்களை வாரி வழங்கும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வியாழன், 16 ஜூன், 2016

சுய ஜாதகத்தில் வலிமைபெற்ற கிரகம், தனது திசாபுத்தி காலங்களில் யோகங்களை வாரி வழங்குமா ?

 

 நவகிரகங்கள் சுய ஜாதகங்களில் வலிமை பெறுவது, தனது திசா புத்தி காலங்களில் நன்மைகளையும் யோகங்களையும் தரும் என்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாக "ஜோதிடதீபம்" கருதுகிறது, சுய ஜாதகத்தில் ஒரு கிரகமோ அல்லது ஒன்றிற்க்கு மேற்ப்பட்ட கிரகமோ ராசியிலோ அல்லது நவாம்சத்திலோ  ஆட்சி,உச்சம் பெறுவது ஜாதகருக்கு யோகங்களையும் நன்மைகளையும் தமது திசா புத்திகாலங்களில் வாரி வழங்கும் என்பது பொதுவான கருத்து, இந்த பதிவில் நாம் கிரகங்கள் இலக்கின வழியில் இருந்து, பாவகங்களுக்கு தரும் வலிமையை அடிப்படையாக கொண்டு காண்போம் அன்பர்களே!

ராசி சக்கிரத்தில்  கிரகங்களின் ஆட்சி உச்சம் என்பது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு  உண்டானது, இந்த வலிமை சுய ஜாதகத்தில் லக்கினத்தை அடிப்படையாக கொண்டு 12 பாவகங்களுக்கு எவ்வித  வலிமையை தருகிறது என்பதில் தெளிவு பெறுவது அவசியமாகிறது, மேலும் ராசியிலோ அம்சத்திலோ நவகிரகங்கள் ஆட்சி உச்சம் பெறுவது, தமது திசா புத்தியிலும் நன்மையை தரும் என்று உறுதியாக சொல்ல இயலாது, சுய ஜாதகங்களில் பாவக வலிமையே, திசா புத்திகளில் பலாபலன்கலாக பிரதிபலிக்கிறது, உதாரணமாக கிழ்கண்ட ஜாதகத்தை ஆய்வு செய்வோம் அன்பர்களே !


லக்கினம் : சிம்மம் 
ராசி : துலாம் 
நட்சத்திரம் : சித்திரை 4ம் பாதம் 

ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் ராகு கேது முறையே 12,6ம் பாவகங்களில் அமர்ந்து 12ம் பாவகத்தையும், 6ம் பாவகத்தையும் 100% விகித வலிமை பெற செய்கின்றனர், ( இங்கே கிரக வலிமை என்பது ஆட்சி,உச்சம்,நட்பு,சமம்,பகை,நிச்சம்  என்பதை வைத்து நிர்ணயம் செய்யவில்லை, சுய ஜாதகத்திற்கு லக்கினத்திற்கு பாவக வழியில் தரும் வலிமையை வைத்து நிர்ணயம் செய்யபடுகிறது மேலும் ராகுகேது லக்கினம் மற்றும் களத்திர ஸ்தானங்களில் அமரவில்லை 12,6ம் பாவகங்களில் அமர்ந்து இருப்பது லக்கினம் ஆரம்பிக்கும் பாகையை வைத்து கணிதம் செய்தால் தெளிவாகும் ) 12ல் அமர்ந்த ராகு ஜாதகருக்கு நல்ல அயன சயன சுகத்தையும், 6ல் அமர்ந்த கேது ஜாதகருக்கு எதிர்ப்பற்ற யோக வாழ்க்கையையும், சத்ரு வழியில் யோகங்களையும் தருவது புலனாகும், எனவே சுய ஜாதகத்தில் ராகுவும், கேதுவும் தாம் அமர்ந்த பாவகங்களுக்கு 100% விகித நன்மையை தரும் அமைப்பில் உள்ளனர், எனவே ஜாதகருக்கு ராகு திசையும், கேது திசையும் யோகங்களை வாரி வழங்குமா ?

இந்த கேள்விக்கு பதில் சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற ராகுவும், கேதுவும் தமது திசா புத்தி காலங்களில் லக்கினம் முதல் 12 பாவகங்களில் எந்த பாவக பலனை ஏற்று நடத்துகின்றார் என்பதில் தெளிவு பெறுவது அவசியமாகிறது, எனவே நடைபெற்ற ராகு திசை ஏற்று நடத்திய பாவக பலனை ஆய்வு செய்வோம் அன்பர்களே !

சுய ஜாதகத்தில் 12ம் பாவகத்தில் வலிமை பெற்ற ராகு தனது திசையில் 1.3,5,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று 200% விகித அவயோக பலன்களையும், 6ல் வலிமை பெற்ற கேது எதிர்வரும் தனது திசையில் 4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 100% விகித யோக பலன்களையும் வாரி வழங்கும் என்பது தெளிவாகிறது, எனவே ராகு திசாபுத்தி காலங்கள் ஜாதகருக்கு பாதக ஸ்தான பலனையும், கேது திசாபுத்தி காலங்கள் ஜாதகருக்கு ஜீவன ஸ்தான பலனையும் ஏற்று நடத்துவது ஜாதகருக்கு ராகு திசாபுத்தி காலங்கள் கடுமையான அவயோக பலன்களையும், கேது திசாபுத்தி காலங்கள் மிகுந்த யோக பலன்களையும் தரும் என்பது உறுதியாகிறது.

எனவே சுய ஜாதகத்தில் வலிமை ( பாவக வழியில் ) பெற்ற கிரகங்கள் தமது திசாபுத்தி காலங்களில் யோக வாழ்க்கையை தரும் என்று கருதுவதும், சுய ஜாதகத்தில்  வலிமை அற்ற கிரகங்கள் தமது திசாபுத்தி காலங்களில் அவ யோகங்களை தரும் என்று கருதுவதும் ஜாதக கணித உண்மைக்கு புறம்பானதே, நவகிரகங்கள் தமது திசாபுத்தி காலங்களில் லக்கினம் முதல் 12 வீடுகள் தொடர்பு பெற்ற பாவக பலனையே ஏற்று நடத்துகிறது, வலிமை பெற்ற பாவாக பலனை ஏற்று நடத்தும் பொழுது ஜாதகருக்கு யோக பலன்களையும், வலிமை அற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் பொழுது ஜாதகருக்கு அவயோக பலனையும் நவகிரங்கள் தமது திசாபுத்தி காலங்களில் வழங்குகிறது என்பதே உண்மை, மேலும் சுய ஜாதகத்தில் பாவக வலிமைக்கு ஏற்ப்பவே ஒவ்வொருவரின் வாழ்க்கையும் அமைகிறது, நவகிரகங்களின் திசாபுத்திகள் சுய ஜாதகத்தில் வலிமைபெற்ற வலிமை அற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் ஒரு கருவியே அன்றி, தனிப்பட்ட யோக அவயோக பலனை வழங்க தகுதி அற்றவை என்பதை மறுக்க இயலாது, சுய ஜாதக பாவக வலிமைக்கு ஏற்ப்பவே நன்மை தீமை பலன்கள் நடைமுறைக்கு வரும் என்பது கவனிக்கத்தக்கது.

குறிப்பு : 

சுய ஜாதகங்களில் ஆட்சி உச்சம் பெற்ற கிரகத்தின் திசாபுத்திகள் ஜாதகருக்கு யோகத்தை தரும் என்பதும், பகை நீச்சம் பெற்ற கிரகத்தின் திசாபுத்திகள் அவ யோகத்தை தரும் என்பதும், உண்மைக்கு புறம்பானதே அவரவர் சுய ஜாதக பாவக வலிமையையே நவ கிரகங்களின் திசாபுத்திகள்  ஏற்று நடத்தும் என்பதே உண்மை.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

திருமணத்திற்கு முன் வரன் மற்றும் வதுவின் ஜாதகத்தில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் !


" திருமணம் ஆயிரம் காலத்து பயிர் " என்ற பெரியோர்களின் முதுமொழிக்கு  ஏற்ற இல்லற வாழ்க்கை அமைய வேண்டும் எனில் அவரவர் சுய ஜாதகங்களில் சில முக்கியமான பாவகங்கள் வலிமையுடன் இருப்பது அவசியமாகிறது, இதற்க்கு மாறாக அமையும் பொழுது சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையில் பொருத்தமில்லா வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார், இல்லற வாழ்க்கையும் இனிமை தருவதில்லை, சுய ஜாதகத்தில் இல்லற வாழ்க்கையை நிர்ணயம் செய்யும், 2,5,7,8,12 ம் பாவகங்கள் ஒருவருக்கு வலிமையுடன் அமைந்தால் நிச்சயம் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு திருமண வாழ்க்கை சிறப்பாக அமையும், தமக்கு பொருத்தமான இல்லற வாழ்க்கை சரியான வயதில் அமைந்துவிடும், மேற்கண்ட பாவகங்கள் பாதிக்கப்படும்பொழுது, சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு பொருத்தமான வாழ்க்கை துணை அமைவது என்பது குதிரை கொம்பாக மாறிவிடும், தமது சுய ஜாதகத்தில் மேற்கண்ட பாவகங்கள் பாதிக்க பட்டு இருப்பின் சம்பந்தப்பட்ட ஜாதகர், தமக்கு வரும் வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் பொழுது மிகுந்த கவனமுடன் இருப்பது நலம் தரும்.


லக்கினம் : விருச்சிகம் 
ராசி : மகரம் 
நட்சத்திரம் : அவிட்டம் 1ம் பாதம் 

ஜாதகிக்கு வயது 26 இதுவரை திருமணம் செய்வதற்கு எடுத்த 100க்கு மேற்ப்பட முயற்ச்சிகள் யாவும்  தோல்வியில் முடிந்தது, சுய ஜாதகத்தில் பாவக வலிமையை ஆய்வு செய்வோம் அன்பர்களே!

1,3,7,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம்.
2,5,6,8,10,11ம் வீடுகள் சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம்.
4,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம்.

ஜாதகிக்கு பெரும்பாலான பாவக தொடர்புகள் வலிமை அற்ற நிலையில் காணப்படுவது வரவேற்க தக்கது அல்ல, இதில் பாதக ஸ்தான தொடர்பு என்பது ஜாதகிக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்பை தரும், இலக்கின வழியில் இருந்து ஜாதகி எடுக்கும் முடிவுகள் யாவும் மிகப்பெரிய பின்னடைவை தரும், நல்ல உடல் நலம் மற்றும் மன நலம் அமைவதும், வளரும் சூழ்நிலை சிறப்பாக அமைவதும் கேள்விக்குறியே, ஜாதகியின் எண்ணமும் நடவடிக்கையும் மற்றவர்கள் விமர்சனத்திற்கு வழிவகுக்கும், ஜாதகியின் ஆசைகள் நிராசைகளாக மாறிவிடும், நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும், 3ம் பாவக வழியில் இருந்து எடுக்கும் முயற்ச்சிகள் யாவும் மிகப்பெரிய தோல்வியை தரும், தன்னம்பிக்கை குறையும், வீரியமற்ற தன்மையும், அசட்டு துணிச்சலும் ஜாதகியின் வாழ்க்கையை திசைமாறி  செல்லும் தன்மையை தரும்.

7ம் பாவக வழியில் இருந்து ஜாதகியின் நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் ஜாதகியை வெகுவாக தமது சுயலாபத்திற்காக பயன்படுத்திகொல்வார்கள், எதிர்பால் அமைப்பினரிடம் இருந்து ஜாதகி சொல்ல இயலா துன்பத்திற்கும் ஆளாகும் சூழ்நிலையை தரும், வாழ்க்கை துணையை சரியாக தேர்வு செய்யவில்லை எனில் வாழ்க்கை  நரகத்திற்கு ஒப்பான நிலையை தரும், 9ம் பாவக வழியில் இருந்து தமது அறிவார்ந்த செயல் என்று நினைத்துகொண்டு செய்யும் சில முட்டாள்தனமான நடவடிக்கைகள் ஜாதகியை படுகுழியில் தள்ளும், உதவி செய்ய யாரும் அற்ற சூழ்நிலையை தரும், பெரியோரை மதிக்கமால் செய்யும் ஒவ்வொரு காரியமும் ஜாதகியின்  நற்ப்பெயருக்கும் புகழுக்கும் மறையாத களங்கத்தை ஏற்ப்படுத்தும், தனது வாழ்க்கைய தானே பாதிப்பிற்க்கு உள்ளாக்கும் சூழ்நிலையை தரும்.

1,3,7,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகியின் வாழ்க்கையில் 200% விகித இன்னல்களை வாரி வழங்கும், மேலும் பெரும்பாலான பாவக தொடர்புகள் சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, சம்பந்தம் பெற்ற பாவக வழியில் இருந்து எதிர்ப்பையும், வீண் விரோதங்களையும், பகைமையையும் வளர்க்கும், இதனால் ஜாதகிக்கு பெரிய அளவில் மன நிம்மதி இழப்பையும், துன்பத்தையும் வாரி வழங்கும், சுக ஸ்தானமான 4ம் வீடும், அயன சயன சுகம் தரும் 12ம் வீடும் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகிக்கு சுகபோகங்களையும், இல்லறவாழ்க்கையில் இன்பத்தையும் தடை செய்யும், மேலும் ஜாதகியின் விரைய ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு களத்திர ஸ்தானமாக அமைவது, வாழ்க்கை துணை வழியில் இருந்து சுகமற்ற தன்மையையும், வீண் மன கவலைகளையும், அதிக மன உளைச்சல் மற்றும் மன போராட்டத்தை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், எனவே ஜாதகி மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் வாழ்க்கையை எதிர்கொள்வது  சாலசிறந்தது, சுய ஜாதகத்தில் வெகுவான பாவக தொடர்புகள் பாதிப்பை தரும் அமைப்பில் உள்ளது ஜாதகியின் வாழ்க்கைக்கு உகந்தது அல்ல என்பது கவனிக்க தக்க விஷயமாகும்.

ஜாதகியின் களத்திர ஸ்தானம், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு குடும்ப ஸ்தானமாகவும், ஜாதகியின் குடும்ப ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பாக்கிய ஸ்தானமாகவும் அமைவது, ஜாதகியின் பேச்சு வாக்கின் வழியில் இருந்து மிகப்பெரிய துன்பமும், அவபெயரும் உண்டாகும், ஜாதகியின் வாக்கு வன்மை பெரிய அளவில் ஜாதகிக்கும், ஜாதகியை சார்ந்தோருக்கும் பாதிப்புகளை வாரி வழங்கும், சுய ஜாதகத்தில் 2,7ம் வீடுகள்  கடுமையாக பாதிக்கபடுவதும், காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு  குடும்பம் மற்றும் களத்திர பாவகங்கள் பாதிப்பிற்கு உள்ளகுவதும், நல்ல இல்லற வாழ்க்கையை அமைத்து தர வாய்ப்பில்லை, மேலும் ஜாதகியாக தேர்வு செய்வது மிகப்பெரிய இன்னலுக்கும், மனமுறிவுக்கும் வழிவகுக்கும், எனவே  ஜாதகி வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் பொழுது, வாழ்க்கை துணையையின் ஜாதகத்தில் மேற்கண்ட ( 1,2,5,7,8,12 ) பாவகங்கள் வலிமையுடன் இருப்பதை கவனத்தில் கொண்டு தேர்வு செய்வது நலம் தரும், மேலும் தமது நலம் விரும்பும் பெரியோர்களின் வாக்கை மதித்து நடந்து கொள்வதும், தமக்கு வரும் வாழ்க்கை துணையின் வழியில் இருந்து வரும் இன்னல்களை ஏற்றுக்கொண்டு, திருமண வாழ்க்கையை சிறப்பாக வாழ்வதற்கு தயாராக இருப்பதும் சகல நலன்களையும் தரும்.

தற்பொழுது ஜாதகிக்கு நடக்கும் குரு திசை ஆயுள் பாவகமான 8ம் வீடு சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று சில நன்மைகளை தந்த போதிலும், வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் எதிர்ப்புகளை தவிர்க்க இயலாது, தமக்கு வர இருக்கும் வாழ்க்கை துணையின் ஜாதகமே தமக்கு இல்லற வாழ்க்கையில் நன்மையை தரும் என்பதால், ஜாதகி தமக்கு வரும் வாழ்க்கை துணையின்  ஜாதகத்தை வலிமை மிக்கதாக தேர்வு செய்வது சகல நலன்களையும் தரும்.

குறிப்பு :

தமது சுய ஜாதகம் வலிமை அற்று இருக்கும் பொழுது, தமது கூட்டாளிகள் மற்றும் வாழ்க்கை துணையின் ஜாதக வலிமை, தமக்கு நன்மைகளை தரும் என்பதில்  மாற்று கருத்து இல்லை, மேலும் திருமண வாழ்க்கையில் சுய ஜாதக வலிமையை விட, தமது வாழ்க்கை துணையின் ஜாதக வலிமையே மிகுந்த நன்மையை தரும் என்பதில் அனைவரும் கவனம் கொள்வது நலம் தரும், வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் பாவக வலிமை அற்ற தன்மை தம்மையும் பெரிய பாதிப்பிற்கு ஆளாக்கும் என்பதில் எச்சரிக்கையுடன் இருப்பது நலம் தரும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

செவ்வாய், 7 ஜூன், 2016

திருமண வாழ்க்கையில் தடைகளும் தாமதமும் ஏற்ப்பட காரணம் என்ன ?

 

சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களும் வலிமை பெரும்பொழுது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு, தமது பாவக நிலைகளில் இருந்து தமது வலிமைக்கேற்ப நன்மைகளை வாரி வழங்கும், மாறாக சில பாவகங்கள் பாதிக்கப்படும் பொழுதோ, லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களும் வலிமை இழக்கும் பொழுதோ ஜாதகர் பாதிக்கப்பட்ட பாவக வழியில் இருந்து இன்னல்களையும் துன்பங்களையும் அனுபவிக்கும் நிலைக்கு ஆளாக்கபடுகிறார், ஜாதகர் பாதிக்க பட்ட பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களில் இருந்து விடுபட பரிகாரங்களையும், வழிமுறைகளையும் நாடவேண்டி உள்ளது, 40 வருடங்கள் கடந்தும் திருமண வாழ்க்கை அமையாமல், பல போராட்டங்களை சந்தித்து கொண்டு இருக்கும் ஓர் ஜாதகத்தை இந்த பதிவில் ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே! சம்பந்தப்பட்ட ஜாதகத்தின் பாவக வலிமை, ஜெனனம் முதல் நவகிரக திசா புத்திகள் ஜாதகருக்கு ஏற்று நடத்திய பலாபலன்கள் பற்றியும் சிந்திப்போம்.


லக்கினம் : ரிஷபம் 
ராசி : மேஷம் 
நட்சத்திரம் : அஷ்வினி 4ம் பாதம் 

இது ஒரு பெண்ணின் ஜாதகம், ஜாதகிக்கு தற்பொழுது அகவை 41, இதுவரை  திருமணம் செய்வதற்காக எடுத்த முயற்ச்சிகள் அனைத்தும் தோல்வியையே சந்தித்தது, இதற்க்கு முன் ஜாதகிக்கு தேடிவந்த நல்ல வரன் வாய்ப்புகளை ஜாதகியும், ஜாதகியின் பெற்றோரும் குறைகூறி தவிர்த்தனர், இவ்வளவு நெடுங்காலம் திருமண தாமதத்திற்கு காரணம் என்ன? என்பதை ஜாதக  ரீதியாக ஆய்வு செய்வோம், இந்த ஜாதகத்தில் பாவக வலிமை பற்றி சிந்திப்போம் .

வலிமை மிக்க பாவக தொடர்புகள் :

1ம் வீடு ஜாதகிக்கு தனது பாவகத்துடனே சம்பந்தம் பெறுவது மிக சிறப்பான அமைப்பு லக்கினம் மிகவும் வலிமை பெறுகின்றது.

10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகிக்கு ஒரு நல்ல ஸ்திரமான வேலை வாய்ப்பை வழங்கி உள்ளது.

வலிமை அற்ற பாவக தொடர்புகள் :

2,4,7,8ம் வீடுகள் திடீர் இழப்பை தரும் ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகிக்கு 2ம் பாவக வழியில் இருந்து குடும்ப அமைப்பில் இருந்தும், வருமானம்  மற்றும் வாக்கு அமைப்பில் இருந்தும் இன்னல்களை வழங்கும், 4ம் பாவக வழியில் இருந்து வீடு சொத்து சுகம் மற்றும் தனது தந்தை வழியில் இருந்து யோகம் அற்ற தன்மையை தரும், 7ம் பாவக வழியில் இருந்து எதிர்பால் அமைப்பினர், களத்திர வாழ்க்கையில் இன்னல்கள், கூட்டாளிகள் மூலம் துன்பங்கள், வெளிவட்டார பழக்க  வழக்கங்களில் திருப்தியற்ற சூழ்நிலையை உருவாக்கும், 8ம் பாவக வழியில் இருந்து திடீர் இழப்பு, வீண் மருத்துவ செலவுகள், பொருளாதார நெருக்கடிகள், மற்றவர்களால் இன்னல்களுக்கு ஆளாகும் தன்மை என மிகுந்த சிரமங்களை தந்த போதிலும், பூர்ண ஆயுளை தரும்.

3,6,9,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகிக்கு 3ம் பாவக வழியில் இருந்து எடுக்கும் முயற்சிகளில் தோல்வியையும், வீரியமற்ற தன்மையையும், சகோதர வழியில் இருந்து ஆதரவற்ற தன்மையையும், லட்சியமற்ற பொறுப்பற்ற வாழ்க்கையையும் தரும், 6ம் பாவக வழியில் இருந்து கடுமையான உடல் நல குறைவையும், வீண் செலவினங்களையும் தரும், 9ம் பாவக வழியில் இருந்து சுய அறிவுத்திறன் அற்ற நிலையையும், அறிவார்ந்த செயல்திறன் இல்லாத நிலையையும், முன்னோர்கள் ஆசியும், கடவுள் அனுகிரகம் அற்ற நிலையையும்  தரும், 12ம் பாவக வழியில் இருந்து அனைவராலும் தொல்லை, மனநிம்மதி அற்ற சூழ்நிலைகள், இல்லறவாழ்க்கை சுகமற்ற தன்மை, நல்ல உறக்கம் இன்மை, அதிக மனபோராட்டங்கள், வீண் மன பயம், பிற்போக்குத்தனமான செய்கைகள் மூலம் தமது சுய வாழ்க்கையை தாமே பாதிக்க செய்துகொள்ளும் தன்மை என மிகுந்த இன்னல்களுக்கு ஆளாக்கும்.

5,11ம் வீடுகள் சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, 5ம் பாவக வழியில் இருந்து குல தெய்வ ஆசி அற்ற தன்மையும், சமயோசித புத்திசாலித்தனம் இல்லாத நிலையையும், மற்றவர்களின் உதவியை பெற இயலாத தன்மையையும் தரும், எடுக்கும் செயல்கள் யாவும் ஜாதகிக்கு முழு பலன்களை தாராமல் தடைகளையும், இன்னல்களையும் வாரி வழங்கும், யாருடைய உதவியும் இல்லாமல் ஜாதகி மட்டும் தனிமையில் போராடும் சூழ்நிலையை உருவாக்கும், பூர்வீகத்தில் குடியிருப்பது என்பது ஜாதகிக்கு அனைத்து வித தடைகளையும் வாரி வழங்கும், 11ம் பாவக வழியில் இருந்து அதிர்ஷ்டமற்ற தன்மையையும், ஒவ்வொரு விஷயத்திற்கும் அதிக போராட்டங்களை சந்திக்கும் தன்மையை தரும், எதிர்பார்ப்புகள் அனைத்தும் பொய்த்து போகும், மூடநம்பிக்கையும் பிற்போக்கு தனமான எண்ணங்களும் ஜாதகியை வெகுவாக பாதித்து, செயல்பட முடியாமல் முடக்கி வைக்கும், நன்மைகள் இருந்த போதிலும் அதை நாடாமல், தீமையை நோக்கியே ஜாதகியை பயணிக்க வைக்கும் என்பது கவனிக்க தக்க அம்சமாகும்.

மேற்கண்ட ஜாதகத்தில் லக்கினம் மற்றும் ஜீவன ஸ்தானத்தை தவிர மற்ற அனைத்து பாவகங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது, குறிப்பாக 6,12ம் பாவகங்களுடன் தொடர்பு பெரும் வீடுகள் வழியில் இருந்து ஜாதகி 100% விகித இன்னல்களையும், 8ம் பாவகத்துடன் தொடர்பு பெரும் வீடுகள் வழியில் இருந்து ஜாதகி 50% விகித இன்னல்களையும், சந்திக்கவேண்டியுள்ளது, மேலும் 6,8,12ம் பாவக பலனை ஏற்று நடத்தும் திசாபுத்திகள் அனைத்தும், தொடர்பு பெரும் பாவக வழியில் இருந்து அதிக அளவில் இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலையை ஜாதகிக்கு தங்கு தடையின்றி தருகின்றது.

திருமண தாமதத்திற்கு காரணம் என்ன ?

சுய ஜாதகங்களில் குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகமும், களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகமும், வலிமை பெறுவது ஒரு ஜாதகருக்கு தடையில்லாத, திருமண வாழ்க்கையை அமைத்து தரும், மேற்கண்ட ஜாதகிக்கு, குடும்ப ஸ்தானம் எனும் 2ம் வீடும், களத்திர ஸ்தானம் எனும் 7ம் வீடும் ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பாதிக்க பெற்று இருப்பதும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு களத்திர ஸ்தானமான துலாம் ராசி கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதும், ஜாதகியின் திருமண வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி இருக்கிறது, மேலும் திருமண பருவ வயதில் சுக்கிரன் திசை ஜாதகிக்கு விரைய ஸ்தான பலனை ஏற்று நடத்தியதும், அதன் பிறகு வந்த சூரியன் திசை ஜாதகிக்கு திடீர் இழப்பை தரும் ஆயுள் பாவக பலனை ஏற்று நடத்தியதும், ஜாதகியின் திருமண வாழ்க்கை எனும் எண்ணத்திற்கு தடைகளை வாரி வழங்கியது, அதற்க்கு பிறகு நடைபெற்ற சந்திரன் திசை ஜாதகிக்கு இலக்கின பாவக தொடர்பை பெற்று ஜாதகிக்கு நல்ல வேலையை மட்டுமே வழங்கியது, திருமண வாழ்க்கைக்கு தடையாக ஜாதகியின் பெற்றோர்கள் காரணமாக அமைந்தனர், குறிப்பாக ஜாதகியின் தாந்தையார் ( தந்தையை  குறிக்கும் 4ம் வீடு ஜாதகிக்கு திடீர் இழப்பை தரும் ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் ) தலையீட்டின் காரணமாக ஜாதகிக்கு சந்திரன் திசையில் அமையவிருந்த நல்ல திருமண வாழ்க்கை நடைபெறாமல் பாதியில் நின்றுபோனது.

தற்பொழுது நடைபெறும் செவ்வாய் திசையும் ஜாதகிக்கு கடுமையாக பாதிக்கப்பட்ட விரைய ஸ்தான பலனை ஏற்று நடத்துவது வருத்தத்திற்கு உரியதாகவே கருத வேண்டியுள்ளது, மேலும் தற்பொழுது நடைபெறும் செவ்வாய் திசையில் மற்ற புத்திகளும் ஜாதகிக்கு சாதகமாக இல்லை என்பதால், திருமண வாழ்க்கையில் தொடர்ந்து தடைகளை வழங்கும் என்பதுமட்டும் தெளிவாகிறது, எனவே ஜாதகியும், ஜாதகியின் பெற்றோரும் தனது கருத்துகளை சுய பரிசீலனைகள் செய்துகொள்வது, ஜாதகிக்கு மிகுந்த நன்மைகளை வாரி வழங்கும்.

ஜாதகிக்கு உள்ள சிரமங்கள் மாற, ஜாதகிக்கு அமையவிருக்கும் வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் 2,5,7,12ம் வீடுகள் வலிமை பெற்று இருக்கும் வரன் அமைந்தால் மட்டுமே ஜாதகியின் இல்லற வாழ்க்கை இனிக்கும், இதற்க்கு  வாய்ப்பு மிகவும் குறைவு, ஜாதகியின் சுய ஜாதக வலிமை இதற்க்கு வழிகாட்ட வாய்ப்பில்லை, இறையருள் கருணை செய்யட்டும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696 

ராகுகேது எனும் சாயா கிரகங்கள் தரும் ராஜயோகங்கள் !


 நவகிரகங்களில் சாயா கிரகங்கள் என்று போற்றபடும் " ராகு கேது " ஒருவரின் சுய ஜாதகத்தில் மிகவும் வலிமை பெற்று இருப்பின் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு தனது அமைப்பில் இருந்து நன்மைகளையும் யோகங்களையும் வாரி வழங்குவதில் எவ்வித தயக்கமும் காட்டுவதில்லை, அதே போன்று பாதிக்க பட்டு இருப்பின் ஜாதகரின் வாழ்க்கையில் தனது அமைப்பில் இருந்து இன்னல்களை வாரி வழங்குவதில் எவ்வித குறையும் வைப்பதில்லை, சுய ஜாதகத்தில் சாயாகிரகங்கள் என்று அலைக்கபெரும் ராகு கேது, லக்கினம் மற்றும் களத்திர பாவகங்களில் அமர்ந்தால் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு சர்ப்ப தோஷத்தை தரும் என்ற தவறான கருத்தும் உள்ளது, சுய ஜாதகத்தில் ராகு கேது லக்கினம் மற்றும் களத்திர ஸ்தானங்களில் அமர்ந்தாலும், லக்கினத்திற்கும் களத்திர பாவகத்திர்க்கும் நன்மையை தருகின்ற அமைப்பில் உள்ளனரா? தீமையை தரும் அமைப்பில் உள்ளனரா ? என்பதில் தெளிவு பெறுவது அவசியமாகிறது.

இயற்கையில் சாயா கிரகங்களான ராகு கேதுவிற்கு மற்ற கிரகங்களுக்கு இல்லாத தனி சிறப்பு இயல்புகள் அதிகம் உண்டு, அவையாவன :

1) தான் அமர்ந்த இடத்தின் பலனை முழுவதும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் வல்லமை, 

2) தன்னுடன் சேர்ந்த கிரகங்களின் சக்தியை தாமே வீகரித்துகொண்டு அவர்கள் தரும் பலாபலனையும் தமது பலனாக தானே ஏற்று நடத்தும் வல்லமை. 

3) தான் அமர்ந்த பாவகங்களை பார்வை செய்யும் கிரகங்களின் சக்தியை தானே சுவீகரித்துகொண்டு அவர்கள் தரும் பலாபலனையும் தமது பலனாக தானே ஏற்று நடத்தும் வல்லமை.

4) தன்னுடன் சேர்ந்த, பார்த்த கிரகங்களின் வலிமையை முழுவதும் தமது கட்டுப்பாட்டில் எடுத்துகொள்ளும் வல்லமை.

5) தாம் அமர்ந்த பாவகத்திர்க்கு நன்மை தரும் அமைப்பை பெற்றால் 100% சதவிகித நன்மைகளையும், தாம் அமர்ந்த பாவகத்திர்க்கு தீமை தரும் அமைப்பை பெற்றால் 100%  சதவிகித தீமையையும், தங்குதடையின்றி ஜாதகருக்கு வழங்கும் வல்லமை.

6) தாம் தரும் நன்மை தீமை பலாபலன்களை எந்த ஒரு கிரகத்தின் பார்வையும், சேர்க்கையும் குறுக்கீடு செய்ய இயலாத வல்லமையும், சாயா கிரகங்களான ராகு கேதுவிற்கு உண்டான சிறப்பு இயல்புகள் ஆகும்.

 சுய ஜாதகங்களில் ராகு கேது (1,7) (2,8) (5,11) (6,12)  பாவகங்களில் அமர்ந்தால் ஜாதகருக்கு ராகு கேது தோஷம், சர்ப்ப தோஷம், புத்திர தோஷம் என்று முடிவு செய்வது ஜோதிட சாஸ்திர உண்மைக்கு புறம்பானதாகவே "ஜோதிடதீபம்" கருதுகிறது, ஏனெனில் தான் அமர்ந்த பாவகத்திர்க்கு சாயா கிரகங்கள் நன்மையை தருகின்றனரா ? தீமையை தருகின்றனரா ? என்பதில் தெளிவு பெறுவது அவசியமாகிறது, பெரும்பாலும் சுய ஜாதகங்களில் ஒருவருக்கு 1,3,11ம் பாவகங்களில் அமரும் ராகு அல்லது கேது 100% விகித நன்மையே தருகின்றனர் இதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

 லக்கினத்தில் அமர்ந்த ராகு கேது ஜாதகருக்கு சிறப்பான வளரும் சூழ்நிலை, நல்ல உடல் நிலை, சிறந்த மன நிலை, புலனுக்கு அப்பாற்ப்பட்ட அறிவு திறன், மிதமிஞ்சிய உடல் மற்றும் மனோ சக்தி, எந்த சூழ்நிலையையும் சிறப்பாக கையாளும் வல்லமை, நினைத்ததை சாதிக்கும் யோகம், மற்றவர்களை தமது ஆளுமைக்கு கீழ் கொண்டுவரும் சிறப்பு தகுதி, அமர்ந்த இடத்தில் இருந்துகொண்டு அனைத்தையும் சாதிக்கும் யோகம், அபார சக்திகளை கையாளும் வல்லமை, புதிய சிந்தனைகள், புதிய கண்டுபிடிப்புகள், உலகத்தை தன்பக்கம் கவர்ந்து இழுக்கும் சக்தி, குறுகிய காலத்தில் பிரபலம் அடையும் வழிமுறைகள், எதிர்பாலின கவர்ச்சி, தமது லட்சியங்களை எந்த ஒரு சூழ்நிலையிலும் கைவிடாமல் வெற்றியை பெரும் யோகம், பின்னல் வருவதை முன்னால் உணரும் சக்தி, முக்காலங்களையும் உணர்ந்து  செயல்படும் யோகம், மற்றவர்களின் மன ஓட்டம், இயக்கங்களை தெளிவாக உணரும் தன்மை, சாஸ்திர ஞானம், கலைகளில் தேர்ச்சி, தமது எண்ணங்களை மற்றவர்கள் மீது பிரகாசிக்க செய்யும் வல்லமை, கர்ம  வினை பதிவில் இருந்து தாமும் மீண்டு, மற்றவர்களையும் மீட்டு எடுக்கும் யோகம், சிறந்த ஞானத்தை அனைவருக்கும் பாரபட்சம் இன்றி போதிக்கும் வல்லமை என லக்கினத்தில் அமரும் ராகு அல்லது கேது ஜாதகருக்கு 100% விகித யோகங்கலையே வாரி வழங்கும்.

வீரிய ஸ்தானத்தில் அமர்ந்த ராகு கேது ஜாதகருக்கு சகல விதங்களில் இருந்தும்  வெற்றிகளை வாரி குவிக்கும், சிறந்த விளையாட்டு வீரர்கள், வியாபாரிகள், வெகு ஜன அபிமானிகள், திரை நட்சத்திரங்கள், மக்கள் செல்வாக்குள்ள அரசியல்வாதிகள், சிறந்த நிர்வாகிகள், மற்றும் வியப்பில் ஆழ்த்தும் வெற்றியாளர்கள் சுய ஜாதகங்களில் 3ம் பாவக ராகு கேதுவின் பங்களிப்பு மிக அபரிவிதமானதாக அமைந்திருக்கும், திடீர் செல்வவளம், திடீர் பதவி உயர்வு, அரசு அங்கீகாரம், திடீர் ராஜ உபச்சாரம் என ஜாதகரை திக்குமுக்காட வைப்பதில் அதிக பங்குவகிப்பது 3ம் பாவக சாயா கிரகங்களின் பங்களிப்பே என்றால் அது மிகையில்லை, வீரியமிக்க செயல்திறன்களையும் தனிப்பட்ட தகுதி மற்றும் சிறப்பு மிக்க மாற்றங்களை  வழங்கும் யோகம் பெற்றவர்களாக திகழ செய்வதில் சாயாகிரகங்களின் பங்களிப்பு வியப்பை தரும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

லாப ஸ்தானத்தில் அமர்ந்த ராகு கேது ஜாதகருக்கு அதிர்ஷ்டங்களை வாரி வழங்குவதில்  எவ்வித பாகுபாடும் காட்டுவதில்லை, திடீர் அதிர்ஷ்டசாலிகள், நல்ல குணம், நினைத்ததை அடையும் வல்லமை, திறன்மிக்க செயல்பாடுகள், தன்னம்பிக்கை முற்போக்கு சிந்தனை மூலம் யோக வாழ்க்கையை  தங்குதடையின்றி அனுபவிக்கும் தன்மையை தரும், எதிர்பார்ப்புகள் அனைத்தும் ஜாதகருக்கு நிறைவேற்றி வைப்பதில் சாயாகிரகங்களுக்கு நிகர் வேறு எவரும் இல்லை என்பதே உண்மை, லாப ஸ்தானத்தில் சாயா கிரகங்களின் செயல்பாடுகள் மிகவும் அபரிவிதமாக இருக்கும், ஜாதகரின் மன எண்ணங்களையும், திட்டமிடுதல்களையும் எவ்வித தடையும் இல்லாமல் நிறைவேற்றி வைக்கும், தனது முன்னோர்கள் மற்றும் பெற்றோரின் லட்சியங்கள் அனைத்தையும் ஜாதகரே பரிபூரணமாக அனுபவிப்பார் என்பதில் மாற்று கருத்து இல்லை, இவர்களின் பொருளாதார வளர்ச்சி என்பது மற்றவர்களுக்கு புரியாத புதிராகவே இறுதிவரை இருக்கும், ஜாதகரின் முன்னேற்றம் குறுகிய கால வெற்றிகளாக அமைந்திருக்கும், அனைத்து  விஷயங்களிலும் லாபங்களை பெறுவதில் லாப ஸ்தான சாயாகிரகங்களின் பங்களிப்பு என்பது ஜாதகருக்கு தொடர்ந்து கொடுத்தவண்ணம் இருக்கும் என்பது கவனிக்கத்தக்க அம்சமாகும்.

லக்கினம் மற்றும் களத்திர ஸ்தானத்தில் அமரும் சாயகிரகங்கள் ஒரு ஜாதகத்தில் தனது பங்களிப்பையும் தான் அமர்ந்த பாவகத்திர்க்கு வழங்கும் பலாபலன்களையும்  பற்றி ஓர் உதாரண ஜாதகம் கொண்டு ஆய்வு செய்வோம் அன்பர்களே !

 
லக்கினம் : கடகம் 
நட்சத்திரம் : பூராடம் 4ம் பாதம் 
ராசி : தனுசு 

ஜாதகிக்கு லக்கினத்தில் கேதுவும், களத்திர ஸ்தானத்தில் ராகுவும் அமர்ந்துள்ளனர், தாம் அமர்ந்த பாவகங்கள் முறையே நன்மையான பலனை 100% வீதம் வலிமை பெற்று வழங்குகின்றனர், லக்கினத்தில் அமர்ந்த கேது ஜாதகிக்கு கல்வி கேள்விகளில் நல்ல ஞானத்தை வாரி வழங்குகிறார் என்பதால் ஜாதகி பட்டைய படிப்பில் தேர்ச்சி பெற்று இருக்கிறார், வளரும்  சூழ்நிலையும் ஜாதகிக்கு மிக சிறப்பாக அமைந்திருக்கின்றது, நல்ல உடல் ஆரோக்கியம், பரந்த விசாலமான மனம், அனைவருக்கும் நன்மையை நினைக்கும் நல்ல குணம், சுகபோகமான யோக வாழ்க்கை ( கடகம் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு சுக ஸ்தானம் என்பதால் ஜாதகிக்கு அடிப்படையில் இருந்தே சுகபோகங்களுக்கு குறைவில்லை ) மேலும் லக்கினத்தில் அமர்ந்த குரு பகவானின் வலிமையையும் கேது பகவானே ஏற்று நடத்துவதால் ஜாதகிக்கு கற்ற கல்வியில் நல்ல ஞானத்தையும், சிறப்பு மிக்க தேர்ச்சியையும், சிறந்த நிர்வாக திறமையும் ஒருங்கே அமையபெற்று இருப்பது கவனிக்க தக்கது, ஜாதகிக்கு சிறு வயது முதலே கேட்பது கிடைத்தது, நினைத்தது நடந்தது, இதற்க்கு காரணமாக சுய ஜாதகத்தில் லக்கினத்தில் கேதுபகவான் மிகவும் வலிமையாக அமர்ந்தது, என்றால் அது  மிகையில்லை .

களத்திர ஸ்தானத்தில் ராகு அமர்ந்தது களத்திர ஸ்தானம் வலிமை பெற்றது, ஜாதகியின் நண்பர்கள் வட்டாரத்தை  மிகசிறப்பாக அமைத்து தந்தது, பிரியமான நேசமிக்க நல்ல நண்பர்கள் மற்றும்  தோழிகள் ஜாதகிக்கு அமைந்தனர், சிறந்த புகழ் மிக்க மேல்நாட்டு நிறுவனத்தில்  கை நிறைவான வருமானத்தில் நல்ல வேலை கிடைத்தது,  ( ஜாதகியின் களத்திர பாவகம் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ஸ்தானமாக அமைந்ததும், களத்திர ஸ்தானம் 100% விகிதம் வலிமை பெற்றதும், வெளிநாட்டு நிறுவனத்தில் நல்ல வேலை வாய்ப்பை நல்கியது ) பதவி உயர்வும் குறுகிய காலத்தில் அமைந்தது, உடன் பணிபுரியும் அன்பர்களுடன் நல்ல இணக்கத்தையும், சிறந்த நிர்வாக திறமையையும் வாரி வழங்கியது, பணிநிமித்தமாக அடிக்கடி வெளிநாடுகள் சென்றுவரும் யோகத்தை வாரி வழங்கியது, சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெறாத காரணத்தால் ஜாதகி அடிமை தொழில் செய்யும் சூழ்நிலையை தந்தது, சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெறாத நிலையில் சம்பந்தப்பட்ட ஜாதகர் அடிமை தொழிலை மேற்கொள்வதே சால சிறந்தது, இந்த ஜாதகிக்கு ஜீவன ஸ்தானம் வலிமை இழந்த போதிலும், ராகுவின் தயவாலும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ஸ்தான வலிமையின் தயவாலும் நல்ல தொழில் அமைந்து, அதில் ராஜ யோகங்களை அனுபவிக்கும் நிலையை தந்துகொண்டு இருக்கின்றது, என்பதை காணும் பொழுது சுய ஜாதகத்தில் சாயகிரகங்களின் வலிமை  பற்றியும், அதனால் ஜாதகர் பெரும் யோகங்கள் பற்றியும் நாம் தெளிவு பெற இயலும்.

இருப்பினும் ஜாதகிக்கு 26 வயது கடந்த போதிலும் திருமணம் நடைபெறவில்லை, இதற்க்கு காரணமாக சுய ஜாதகத்தில் லக்கினத்தில் கேதுவும், களத்திர ஸ்தானத்தில் ராகுவும் அமர்ந்ததே காரணம் என்றும், ஜாதகிக்கு களத்திர தோஷம், சர்ப்ப தோஷம் உள்ளது என்றும் மற்ற ஜோதிடர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர், இதன் உண்மை தன்மை பற்றியும் நாம் இந்த பதிவில் ஆய்வு செய்வோம் அன்பர்களே! 

ஜாதகிக்கு லக்கினத்தில் அமர்ந்த கேதுவும் நன்மையை செய்கின்றார், களத்திர ஸ்தானத்தில் அமர்ந்த ராகுவும் நன்மையை செய்கின்றார், பிறகு ஏன் திருமணம் தாமதமாகிறது ? மற்றவர்கள் சொல்வது போல் ஜாதகிக்கு சர்ப்ப தோஷம் உண்டோ என்ற சந்தேகம் வருவது இயற்கையானதே, இதற்க்கு சரியான விளக்கம் தர "ஜோதிடதீபம்" கடமைப்பட்டுள்ளது, ஒருவருக்கு எவ்வித தடையும் இல்லாமல் திருமணம் நடைபெற வேண்டும் எனில் சுய ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகமும், களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகமும் மிகவும் வலிமையாக இருக்க வேண்டும், இந்த ஜாதகிக்கு  களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகம் ராகு பகவானால் 100% சதவிகிதம் வலிமை பெற்று அமைந்த போதிலும், குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகம், விரைய ஸ்தான தொடர்பை பெற்று மிகவும் வலிமை இழக்கின்றது, எனவே இந்த ஜாதகிக்கு திருமணம் தாமதம் ஆக உண்மையான காரணம் 2ம் பாவகம் கடுமையாக பாதிக்க படுவதே அன்றி, சாயா கிரகங்களான ராகு கேது அல்ல என்பதில் தெளிவு பெறுவது அவசியமாகிறது.

மேற்கண்ட ஜாதகத்தில் திருமண தாமதத்திற்கு 2ம் பாவக வலிமை அற்ற நிலையே 100% விகிதம் காரணமாக அமைகிறது, லக்கினம் மற்றும் களத்திர ஸ்தானத்தில் அமர்ந்த சாயா கிரகங்கள் அல்ல என்பதும், ஜாதகிக்கு சர்ப்ப தோஷம் இல்லை என்பதனையும் இந்த பதிவில் "ஜோதிடதீபம்" மிக துல்லியமாக தெளிவுபடுத்துகிறது, மேலும் ஜாதகிக்கு தற்பொழுது நடைபெறும் ராகு திசையும் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவக பலனை ஏற்று நடத்துவது சிறப்பான யோகங்களை தங்கு தடையின்றி வாரி வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது, ராகு தசை ராகு புத்தியிலே ஜாதகிக்கு நல்ல வாழ்க்கை  துணை நிச்சயம் அமையும், அதற்க்கு களத்திர ஸ்தானத்தில் வலிமை பெற்ற ராகு பகவான் காரணமாக அமைவார் என்பது மறுக்க இயலாத உண்மை, சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் வலிமை பெறுவது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு நல்ல சிறப்பான வாழ்க்கை துணையை அமைத்து தரும், இந்த ஜாதகிக்கு 2ம் பாவக வலிமை அற்ற நிலை திருமணத்தை தாமதம் செய்த போதிலும் ( 27 வயதுக்கு மேல் ) 7ம் பாவக வலிமை சிறப்பான வாழ்க்கை துணையை நிச்சயம் அமைத்து தரும்.

குறிப்பு : 

சுய ஜாதகத்தில் ராகு கேது (1,7) (2,8) (5,11) (6,12)  பாவகங்களில் அமர்ந்தால் ஜாதகருக்கு ராகு கேது தோஷம், சர்ப்ப தோஷம், புத்திர தோஷம் என்று தவறாக முடிவு செய்வதை விட்டுவிட்டு, திருமண தாமதம் மற்றும் தடைகளுக்கு உண்மையான காரணம் என்னவென்பதை சம்பந்தப்பட்ட ஜாதகத்தில் பாவக வழியில் ஆய்வு செய்து, சரியான தீர்வை காண்பதே ஜோதிடர்களை தேடிவரும் அன்பர்களுக்கு நன்மைபயப்பதாக அமையும், உண்மைக்கு புறம்பான பாலாபலன்களை ஜாதகர்களுக்கு சொல்லும்பொழுது, இதனால் உண்டான வினைபதிவு ஜோதிடர்களையே நிச்சயம் சென்றடையும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

திங்கள், 23 மே, 2016

திருமண வாழ்க்கைக்கு பொருத்தமற்ற துணையை தேர்வு செய்தால், சம்பந்தப்பட்டவரின் வாழ்க்கை என்னவாகும் ?


" ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே " என்ற முதுமொழிக்கு ஏற்ப ஒரு ஆண் மகனின் வாழ்க்கையில் அடிஎடுத்து வைக்கும் பெண் யோகமானவராக இருந்தால் சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையில் சகல நலன்களும் வந்துசேரும், இதற்க்கு எதிர்மறையாக அமைந்தால் சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையில் நிம்மதி என்பதே இல்லமால் போய்விட வாய்ப்புண்டு, சம்பந்தப்பட்ட ஜாதகரின் சுய ஜாதகத்தில் பல யோகங்கள் இருந்தாலும் அதை பரிபூரணமாக அனுபவிக்க இயலாத சூழ்நிலையை தரும், முன்னேற்றம் என்பது கடுமையாக பாதிக்கப்படும், ஜாதகரின் திட்டமிடுதல்கள், கனவுகள் மற்றும் லட்சியங்கள் யாவும் நிறைவேறாத கானால் நீராகவே மாறிவிட வாய்ப்பு உண்டு.

இன்றைய இளைஞர்கள் தமக்கு உகந்த கல்வி, வேலை மற்றும் வசதிவாய்ப்புகளை தேர்வு செய்வதில் வல்லவர்களாகவே உள்ளனர், ஆனால் தமது வாழ்க்கை துணையை தேர்வு செய்வதில் மட்டும் ஒரு தெளிவான கண்ணோட்டத்தில் இல்லாமல், மனம் சொல்வதை மட்டும் ஏற்றுக்கொண்டு, அறிவு சொல்வதை நிராகரித்து விடும் தன்மையை பெற்றுள்ளனர், நம்மால் அனைத்தும் முடியும் என்ற குருட்டு நம்பிக்கையில், சில தவறான முடிவுகளால் தமது வாழ்க்கைக்கும் தமது நலனிற்கும் சற்றும் பொருத்தம் இல்லாத நபர்களை தேர்வு செய்து, அதனால் வரும் துன்பங்களை தவிர்க்க இயலாமல் இன்னலுக்கு ஆளாகின்றனர், மேலும் தமது சுய ஜாதக வலிமை நிலையை பற்றி உணராமல் வாழ்க்கையில் கிடைக்க இருக்கும் யோகங்களையும், முன்னேற்றங்களையும் உதறித்தள்ளும் நிலைக்கு வந்துவிடுகின்றனர், இதில் ஆண் பெண் என்ற பாகுபாடு கிடையாது, தமது சுய ஜாதக வலிமைக்கு சற்றும் பொருத்தமில்லாத வரனையோ, வதுவையோ தேர்வு செய்யும் ஆண், பெண் இருவருக்கும், திருமணதிற்கு முன்பு வரை உயிராக இருந்தவர்கள் கூட பரம எதிரியாக மாறிவிடும் தன்மையை தந்துவிடுகிறது.

இன்றைய சூழ்நிலையில் வாழ்க்கையில் எவ்வித தவறான தேர்வுகளுக்கும், மாற்று வழிவகைகள் உண்டு, வாழ்க்கை துணையை தேர்வு செய்வதில் தவறு செய்தால் வாழ்நாள் முழுவதும் அதன் பாதிப்பு இருந்துகொண்டே இருக்கும் என்பதுமட்டும் உறுதி, மேலும் சுய ஜாதகத்தில் உள்ள யோக பலன்களை அனுபவிக்க இயலாத சூழ்நிலையும், தனது லட்சியம் மற்றும் கனவுகளை நிறைவேற்ற இயலாமல் கடுமையான போரற்றங்களையும், இன்னல்களையும் ஜாதகர் வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கும் சூழ்நிலையை தந்துவிடும், தமது வாழ்க்கை துணையை தேர்வு செய்வதற்கு முன் அவர்களது சுய ஜாதக பாவக வலிமையை தெளிவாக உணர்ந்து, தமக்கு பொருத்தமானவர்தான? என்பதை உறுதி செய்துகொண்டு இல்லற வாழ்க்கையில் இணைவதே சால சிறந்தது, கண்களையும் மனம் சொல்வதையும் ஏற்றுக்கொண்டு வாழ்க்கை துணையை தேர்வு செய்தால் திருமணத்திற்கு பிறகு வாழும் வாழ்க்கை சிறப்பாக அமையும் என்று  உறுதியாக சொல்வதற்கு இல்லை, இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு இந்த பதிவில் ஆய்வு செய்வோம் அன்பர்களே!


லக்கினம் : மேஷம் 
ராசி : மீனம் 
நட்சத்திரம் : உத்திரட்டாதி 2ம் பாதம் 

மேற்கண்ட ஜாதகிக்கு திருமணம் நடைபெற்று 2 வருடங்கள் கடந்துவிட்டது, ஜாதகியின் கணவர் ஜாதகம் மிகவும் வலிமை பெற்ற ஜாதகம், இருப்பினும் திருமணம் நடைபெற்ற 3 மாதத்தில் பெற்றோர் வீட்டுக்கு சென்றவர் இதுவரை கணவர் வீட்டிற்கு வரவில்லை, ஜாதகரின் முயற்ச்சிகள் யாவும் மிகப்பெரிய தோல்வியிலேயே முடிந்தது, திருமண வாழ்க்கை சிறப்பாக அமையவேண்டும் எனில் தம்பதியர் இருவரின் ஜாதகத்திலும் 2,5,7,8,12ம் வீடுகள் மிகவும் வலிமை பெற்று இருப்பது அவசியமாகிறது, இதில் ஜாதகருக்கு மேற்கண்ட பாவகங்கள் சிறப்பாக அமைந்திருக்கிறது, ஆனால் ஜாதகிக்கு 5,7ம் வீடுகள் மட்டும் வலிமையாக இருக்கின்றது,2,8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று கடுமையான பாதிப்பை பெற்று இருக்கின்றது, 2ம் பாவக வழியில் இருந்து ஜாதகி மன நிம்மதி இழப்பையும், தேவையற்ற பேச்சு மற்றும் வாத பிரதி வாதங்களால் குடும்பத்தில் சண்டை சச்சரவையும், குடும்ப வாழ்க்கையில் நிம்மதி அற்ற தன்மையையும்  தருகிறது, 8ம் பாவக வழியில் இருந்து திடீர்  இழப்புகளையும், வீண் செலவினங்களையும், வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் இழப்புகளையும் தருகிறது, 12ம் பாவக வழியில் இருந்து நல்ல அயன சயன சுகமற்ற நிலையையும், அனைவராலும் தொல்லை மற்றும் துன்பங்களையும், மன நிம்மதி அற்ற சூழ்நிலையையும் தருகிறது , மேலும் லாப ஸ்தானம் 11ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பது ஜாதகியின் யோக வாழ்க்கையை கேள்விக்கு ஆளாக்குகிறது.

5ம் பாவகம் வலிமை பெற்றது ஜாதகிக்கு தெய்வ அனுகிரகத்தையும், சிறந்த புத்திர  பாக்கியத்தை எதிர்காலத்தில் வழங்கும் என்பதையும் தெளிவுபடுத்துகிறது, 7ம் பாவகம் வலிமை பெற்றது ஜாதகிக்கு நல்ல யோகம் நிறைந்த கணவனை வழங்கி இருக்கின்றது, ஜாதகியை சிறப்பாக புரிந்துகொள்ளும் தன்மையை பெற்றவர் என்பதை தெளிவுபடுத்துகிறது, இருப்பினும் 2,8,12ம் வீடுகளின் பாதிப்பு ஜாதகிக்கு திருமண வாழ்க்கையில் இன்னல்களை வாரி வழங்கிக்கொண்டு இருக்கின்றது, பாதக ஸ்தான தொடர்பு சுய ஜாதகத்தில் உள்ள யோக பலன்களை மற்றவர்கள் அனுபவிக்கும் தன்மையை தருகிறது, திருமணத்திற்கு பிறகு வந்த இந்த பிரிவு நிலை மற்றும் இன்னல் அனைத்திற்கும் காரணம் தனது சுய ஜாதகத்தில்  2,8,11,12 வீடுகளின் வலிமை அற்ற நிலையே காரணம் என்பதை ஜாதகி தெளிவாக உணர்ந்து, அதற்க்கு உண்டான பிரயசித்ததை தேடிகொள்வது ஜாதகிக்கு குடும்ப வாழ்க்கையில் சகல மகிழ்சிகளையும் வழங்கும், மேலும் தனது கணவரின் ஜாதகம் யோகம் நிறைந்தது என்பதனையும், அவரின் வழியில் இருந்து சகல நன்மைகளையும் பெறுவதற்கு உண்டான வாய்ப்புகளை ஜாதகி தேடிகொள்வது மட்டுமே சரியான தீர்வாக இருக்கும் என்பதை உணர்வது அவசியமாகிறது.

கடந்த புதன் திசை ஜாதகிக்கு பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தி மிகுந்த இன்னல்களுக்கும், சிரமங்களுக்கும் ஆளாக்கியது, ஆனால் தற்பொழுது வந்துள்ள, நடைபெறுகின்ற கேது திசை ஜாதகிக்கு 1,4,7,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று யோக பலன்களை தருவது சிறப்பான அம்சமாகும், எனவே கேது திசை வழங்கும் ராஜயோக பலன்களை தனது வாழ்க்கை துணையுடன் சேர்ந்திருந்து பரிபூரணமாக அனுபவிக்க இறைஅருள் கருணை புரியட்டும்.

நமது ஜாதகம் வலிமை  அற்று இருக்கும் பொழுது நாம் தேர்வு செய்யும் நண்பர்கள், வாழ்க்கை துணை, மற்றும் கூட்டாளிகளின் ஜாதகம் மிகவும் வலிமையாக இருப்பது நமக்கு நன்மையை தரும், மேற்கண்ட ஜாதகிக்கு திருமண வாழ்க்கை சிறப்பிக்க உதவும் 2,7ம் வீடுகளில் 2ம் வீடு கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பது குறையாக இருந்த போதிலும், அவரின் கணவர் ஜாதகத்தில் 2,ம் வீடும் 7ம் வீடும் மிகவும் வலிமையாக இருப்பது வரவேற்க தக்க அம்சமாகும், எனவே தமது 2ம் பாவக வலிமை அற்ற நிலையை மாற்றிக்கொள்ள, தமது கணவருடன் சேர்ந்து இல்லறவழ்க்கையை சிறப்பாக எதிர்கொள்வதே சால சிறந்த வழிமுறையாகும், தமக்கு வரும் இன்னல்களுக்கும் துன்பத்திற்கும் தமது சுய ஜாதக பாவக வலிமையின்மையே முழு முதற்காரணம் என்பதை ஜாதகி உணர்ந்து, மற்றவர்களை குறை சொல்லாமல், வீண் பிடிவாதத்தை விட்டு தமது வினை பதிவை கழித்துகொள்வதர்க்கு இறைஅருள் கொடுத்த நல்ல வாய்ப்பாக கருதி வாழ்க்கையில் வளம் பெற "ஜோதிடதீபம்" வாழ்த்துகிறது.

குறிப்பு :

 திருமண வாழ்க்கையில் இன்னல்களை சந்தித்துக்கொண்டு இருக்கும் தம்பதியர் அனைவரும் தமது சுய ஜாதக நிலை பற்றி, சுய பரிசோதனை செய்துகொள்வது நல்லது, திருமண வாழ்க்கையை ஆரம்பிக்க இருக்கும் அன்பர்கள் தமது ஜாதக வலிமையை பற்றியும், தமக்கு வர இருக்கும் வாழ்க்கை துணையின் ஜாதக வலிமையை பற்றியும் தெளிவு பெறுவது, எதிர்கால வாழ்க்கையை மிகவும் யோகம் நிறைந்ததாக மாற்றியமைக்கும் என்ற  உண்மையை உணர்வது அவசியமாகிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

சனி, 14 மே, 2016

தொழில் ஸ்தான வலிமையையும், பாதக ஸ்தான தொடர்புகளும், திசா புத்திகள் வழங்கும் பலாபலன்களும்!


 சுய ஜாதகத்தில் லக்கினம் வலிமை பெறுவது என்பது மிக மிக அவசியமாகிறது "எண்சான் உடம்புக்கு சிரசே பிரதானம்" என்பதற்கு இணங்க சுய ஜாதகத்தில் லக்கினம் வலிமை பெறுவது என்பது சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையில் சிறப்பான வளரும் சூழ்நிலையையும், சிறந்த உடல் ஆரோக்கியத்தையும், நல்ல சிந்தனைகளையும், அறிவு திறன் மற்றும் மன ஆரோக்கியத்தையும் வாரி வழங்கும், லக்கினம் வலிமை இழப்பது என்பது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு சிறப்பான நன்மைகளை வழங்குவதில்லை, மேலும் சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக வழியிலான நன்மைகளையும், யோகங்களையும் அனுபவிக்க இயலாத சூழ்நிலை மற்றும் சந்தர்ப்பங்களை ஜாதகருக்கு வழங்குகிறது, லக்கினம் பாதிக்க படுவதே ஜாதகருக்கு நன்மைகளை வழங்குவதில்லை என்ற நிலையில், லக்கினம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது என்பது ஜாதகரின் வாழ்க்கையில் தாங்க இயலாத இன்னல்களை கடுமையாக வாரி வழங்கும், மேலும் நடைமுறையில் உள்ள திசா புத்திகள் பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தினால் ஜாதகரின் வாழ்க்கை அந்தோ பரிதாபம் என்ற நிலைக்கு எடுத்து செல்லும் என்பதில் மாற்று கருத்து இல்லை அன்பர்களே!

கிழ்கண்ட ஜாதகருக்கு லக்கினம் மட்டுமல்ல மேலும் சில பாவகங்களும் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகரின் வாழ்க்கையை எவ்வித பாதிப்புகளை வழங்குகிறது என்பதை பற்றியும், ஜாதகருக்கு நடைமுறையில் உள்ள திசாபுத்திகள், எதிர்வரும் திசாபுத்திகள் வழங்கும் பலாபலன்கள் பற்றியும், இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே!


லக்கினம் : சிம்மம் 
ராசி : கடகம் 
நட்சத்திரம் : பூசம் 2ம் பாதம் 

பாவக தொடர்புகள் :

1,2,5,6,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 200% விகித கடுமையான பாதிப்புகளை 1,2,5,6,9ம் வீடுகள் வழியில் இருந்து நடத்தும்.

8,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 100% விகித கடுமையான பாதிப்புகளை 8,10,12ம் வீடுகள் வழியில்  இருந்து நடத்தும்.

3ம் வீடு வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 3ம் பாவக வழியில் இருந்து நன்மைகளையும், 4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 4ம் பாவக வழியில் இருந்து நன்மைகளையும்,7ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 7ம் பாவக வழியில் இருந்து நன்மைகளையும்,11ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 11ம் பாவக வழியில் இருந்து நன்மைகளையும் சிறப்பாக வாரி வழங்கும்.

சுய ஜாதகத்தில் ஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் எனும் 10ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று கடுமையாக பாதிக்க படுவது, ஜாதகருக்கு சுய தொழில் மூலம் ஜீவனம் இல்லை என்பதை தெளிவு படுத்துகிறது, 7ம் பாவகம் வலிமையுடன் இருப்பதால் ஜாதகர் கூட்டு தொழில் செய்வதற்கு உகந்தவர் என்பது உறுதியாகிறது, இருப்பினும் ஜாதகர் ஒரு நிறுவனத்தில் பணிபுரிகிறார், பணிபுரியும் இடத்தில் அதிக இன்னல்களை தற்ப்போழுதும் சந்தித்து கொண்டு இருக்கிறார் என்பதை ஜீவன ஸ்தான வலிமை இன்மை காட்டுகிறது.

மேலும் சுய ஜாதகத்தில் பெருவாரியான வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதும், பாதக ஸ்தான தொடர்புகளை பெறுவது ஜாதகரின் வாழ்க்கையில் சிறு வயது முதல் பல இன்னல்களுக்கு ஆளாக்கி  உள்ளது, ஜாதகரும் தனது செய்கையினாலே பல இன்னல்களை எதிர்கொண்டுள்ளார், 1ம் பாவக வழியில் இருந்து உடல்நலம், மன நலம் மற்றும் வளரும் சூழ்நிலை சிறப்பற்ற தன்மையையும், 2ம் பாவக வழியில் குடும்ப வாழ்க்கையில் சிக்கல்களையும், வரும் வருமானம் ஜாதகருக்கு பாதகமான பலன்களையும், தனது பேச்சினால் இன்னல்களையும், 5ம் பாவக வழியில் இருந்து கற்ற கல்வி வழியில் இருந்து பலன் அற்ற நிலையையும், பூர்வீகத்தில் இருந்து பரதேச ஜீவனம் மேற்கொள்ளும் சூழ்நிலையையும், குல தெய்வ ஆசி அற்ற நிலையையும், 6ம் பாவக வழியில் இருந்து கடுமையான உடல் நல பாதிப்புகளையும், எதிரிகள் தொந்தரவு மற்றும் கடன் சார்ந்த இன்னல்களையும், 9ம் பாவக வழியில் இருந்து பித்ரு சாபங்களையும், சுய அறிவு திறன் மற்றும் புத்திசாலித்தனம் ஜாதகருக்கு பயன் தாராமல் மற்றவர்களுக்கு பயன்படும் சூழ்நிலையும் ஏற்ப்படுகிறது.

மேலும் ஜாதகர் 8ம் பாவக வழியில் இருந்து திடீர் இழப்புகளையும், எதிர்பாராத மருத்துவ செலவினங்களையும், அனைவராலும் தொல்லைகளையும், எதிர்பாராத விபத்துகளையும், மன அழுத்தம் மற்றும் தற்கொலை எண்ணங்களையும் தருகிறது, 10ம் பாவக வழியில் இருந்து அடிக்கடி ஜீவன வழியில் தொந்தரவுகளையும், பணியிட மாறுதல்களையும், உயர் அதிகாரிகளின் கடுமையான கண்டிப்புகளுக்கும், ஆளாகும் சூழ்நிலையை தருகிறது, 12ம் பாவக வழியில் இருந்து அனைவராலும் தொல்லைகளை எதிர்கொள்ளும் சூழ்நிலையையும், நல்ல உறக்கமின்மையும், ஜாதகரின் வாழ்க்கையில் வரும் திடீர் நிம்மதி இழப்பும் கடுமையாக பாதிப்பை தருக்கிறது, வீண் மன பயம், பிற்போக்கு சிந்தனைகள், ஜாதகரின் வாழ்க்கையை வெகுவாக பாதிக்கிறது, திடீர் இழப்புகள் ஜாதகருக்கு மிகப்பெரிய நெருக்கடிகளை கடுமையாக தருவது வருந்தத்தக்கது.

சுய ஜாதகத்தில் 8வீடுகள் கடுமையாக பதிக்க படுவது ஜாதகரின் வாழ்க்கையில் மிகப்பெரிய இன்னல்களை வாரி வழங்கிக்கொண்டு இருப்பது கண்கூட உள்ளது, சுய ஜாதகத்தில் பாவகங்களின் வலிமை நிலை இப்படி இருக்க நடைபெறும் திசா புத்திகள் எவ்வித பலன்களை தருகிறது என்பதை ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே! 

தற்பொழுது ஜாதகருக்கு நடைபெறுவது புதன் திசை, இந்த புதன் திசை ஜாதகருக்கு 3ம் வீடு வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று வீரிய ஸ்தான பலனை ஏற்று நடத்துவது வரவேற்க தக்க அம்சமாகும், சுய ஜாதகத்தில் பல பாவகங்கள் கடுமையாக பாதிக்கப் பட்ட போதிலும், தற்பொழுது நடைபெறும் புதன் திசை வலிமை பெற்ற 3ம் பாவக பலனை ஏற்று நடத்தியது வரவேற்க தக்க அம்சமாகும், எனவே புதன் திசை ஜாதகருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் நன்மைகளை வழங்கியது எனலாம், அடுத்து வரும் கேது திசை ஜாதகருக்கு 7ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மிகசிறப்பான நன்மைகளையே தரும் என்பது கவனிக்க தக்கது, கேது திசை காலங்களில் ஜாதகருக்கு திருமணம் சிறப்பாக நடைபெறும், நல்ல வாழ்க்கை துணை அமைவார், நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் வழியில் இருந்து யோக பலன்களை தங்குதடையின்றி பரிபூரணமாக அனுபவிக்கும் யோகத்தை தரும், திருமணத்திற்கு பிறகு ஜாதகருக்கு நல்ல எதிர்காலம் உண்டு.

கேது திசைக்கு பிறகு வரும் சுக்கிரன் திசை ஜாதகருக்கு 4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று நன்மைகளை தருவது வரவேற்க தக்க அம்சமாகும், சுக்கிரன் திசை முழுவதும் ஜாதகருக்கு நல்ல வீடு வண்டி வாகனம் மற்றும் சுக போகங்களையும் 4ம் பாவக வழியில் இருந்து வாரி வழங்கும், மேலும் வாழ்க்கை துணை வழியில் இருந்தும் ஜாதகருக்கு பொருள் சேர்க்கை உண்டாகும்.

மேற்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் பெரும்பாலான வீடுகள் கடுமையான பாதிப்பை பெற்ற போதிலும் ( 8 வீடுகள் பாதிக்க பட்டுள்ளது ) நடைபெறும் திசா புத்தி, எதிர்வரும் திசாபுத்தி ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவக பலனையே ஏற்று நடத்துவது சாதகமாக அமைந்துவிடுகிறது, சுய ஜாதகத்தில் பாவகங்கள் பாதிக்கப்பட்ட போதிலும், நடைமுறை எதிர்வரும் திசா புத்தி ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவதால் ஜாதகருக்கு சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து யோக பலன்களே நடைமுறைக்கு வரும், எனவே ஜாதகர் பாதிக்கப்பட்ட பாவக பலனை ஏற்று நடத்தும் திசா புத்தி காலங்களில் மட்டும் எச்சரிக்கையாக இருப்பது சகல நலன்களையும் தரும்.

குறிப்பு :

சுய ஜாதகத்தில் லக்கினம் பாதக ஸ்தான தொடர்பை பெறுவது ஜாதகருக்கு   உகந்தது அல்ல, வலிமை பெற்ற பாவக வழியிலான நன்மைகளை  முழுமையாக பெற, வலிமை பெற்ற பாவக வழியிலான உறவுகளின் தொடர்பை ஜாதகர் நட்பு பாராட்டுவது நல்லது, மேலும் சுய ஜாதகத்தில் ஜாதகருக்கு நன்மைகளை தருவோர், 3ம் பாவக வழியில் சகோதரம், 4ம் பாவக வழியில் தாயார், 7ம் பாவக வழியில் வாழ்க்கை துணை, நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள், 11ம் பாவக வழியிலான மூத்த சகோதரம் ஆகியோரிடம் ஜாதகர் எப்பொழுதும் சுகுமானபோக்கை கடைபிடிப்பது மிகுந்த நன்மைகளை வாரி வழங்கும், நடைபெறும் திசா புத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் ஜாதகருக்கு நன்மையே நடைபெறும், பாதிக்கப்பட்ட பாவக வழியிலான பலாபலன்கள் ஜாதகருக்கு நடைபெறாது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

புதன், 11 மே, 2016

சுய ஜாதகங்களில் யோகங்களும், ஜாதகரின் விழிப்புணர்வும்!

 

சுய ஜாதகத்தில் ராஜ யோகங்கள் 12 பாவகங்கள் வழியில் பலனை தரும் பொழுது ஜாதகர் விழிப்புணர்வுடன் இருந்து நன்மைகளையும், அதிர்ஷ்டங்களையும் பெறவேண்டும், மாறாக வரும் நன்மைகளையும் யோகங்களையும் ஜாதகர் உதறும் பொழுது, சுய ஜாதகத்தில் யோகங்கள் இருந்த போதிலும் ஜாதகருக்கு அதனால் எவ்வித பலாபலனும் அனுபவிக்க இயலாத நிலையை தரும், இயற்கையாகவே சுய ஜாதகத்தில் உடல் உயிர் ஆகிய லக்கினம் எனும் முதல் பாவகம் வலிமை பெரும் பொழுது ஜாதகர் மிகவும் விழிப்புணர்வுடன் செயலாற்றும் தன்மையை தரும், மேலும் சுய ஜாதகத்தில் 12 பாவக வழியில் இருந்து வரும் யோக பலன்களை சிறிதும் விரையம் இன்றி ஜாதகர் அனுபவிப்பர், தங்கு தடையின்றி ராஜ யோக பலாபலன்கள் ஜாதகருக்கு நடைமுறைக்கு வரும், உடல்உயிராகிய லக்கினம் எனும் முதல் பாவகம் ஏதாவது ஒரு வகையில் பாதிக்க படும்பொழுது, ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் ராஜ யோகங்கள் இருந்த போதிலும் அதன் பலாபலன்களை ஜாதகர் அனுபவிக்கும் நிலையை தாராது, ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவகத்திர்க்கு ஆதிபத்தியத்திற்கு உற்பட்ட உறவுகள் அனுபவிக்கும் நிலையை தந்துவிட வாய்ப்புள்ளது.

சுய ஜாதகத்தில் சிறப்பான ராஜ யோகங்கள் இருந்து, உடல் உயிராகிய லக்கினம் பாதிக்க படும்பொழுது, ஜாதகர் லக்கின பாதிப்பில் இருந்து வெளிவருவதற்கு உண்டான வாய்ப்புகளை தீவிரமாக ஆராய்வது சாலசிறந்தது, இலக்கின பாதிப்பு எத்தகையது, அதன் வீரியம் என்ன என்பதை ஜாதகர் தெளிவாக உணர்வது அவசியமாகிறது, இலக்கினம் மறைவு ஸ்தானமான 6,8,12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு நிச்சயம் பாதிப்பை தரும், லக்கினம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு கடுமையான பாதிப்பை மிக பெரிய அளவில்  வழங்கும், மேற்கண்ட அமைப்பு சுய ஜாதகத்தில் இருப்பின் ஜாதகர் அவ்வித பாதிப்பில் இருந்து வெளிவருவதற்கு உண்டான விஷயங்களில் ஆர்வம் செலுத்துவது சுய ஜாதகத்தில் உள்ள யோகங்களையும், அதிர்ஷ்டங்களையும் முழுமையாக அனுபவிப்பதற்கு உண்டான வாய்ப்புகளை நிச்சயம் வாரி வழங்கும், ஜாதகரின் முயற்ச்சி நிச்சயம் நல்ல வெற்றிகளை தரும்.

மேற்கண்ட விஷயங்களை பற்றி ஓர் உதாரண ஜாதகம் கொண்டு ஆய்வு செய்வோம் அன்பர்களே !


லக்கினம் : மீனம் 
 ராசி : மீனம்
நட்சத்திரம் : ரேவதி 1ம் பாதம்

ஜாதகருக்கு மிகவும் வலிமை பெற்ற பாவக தொடர்புகள் :

5,8,11ம் வீடுகள் அதிர்ஷ்டம் மற்றும் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது ஜாதகத்தில் மிதமிஞ்சிய யோகங்களை தரும்.

10ம் வீடு குடும்பம் மற்றும் தன  ஸ்தானமான 2ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது ஜாதகத்தில் மிதமிஞ்சிய யோகங்களை தரும்.

ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவக தொடர்புகள் :

4ம் வீடு சுக  ஸ்தானமான 4ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது ஜாதகத்தில் மிதமான யோகங்களை தரும்.

2,3,6,9,12ம் வீடுகள் தொழில் ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது ஜாதகத்தில் மிதமான யோகங்களை தரும்.

ஜாதகருக்கு மிகவும் வலிமை அற்ற பாவக தொடர்புகள் :

1,7 ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மிக கடுமையான பாதிப்புகளை வாரி வழங்கும் .

மேற்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் 2,11ம் பாவக தொடர்புகளை பெரும் வீடுகள் வழியில் இருந்து மிதமிஞ்சிய யோக பலன்கள் நடைபெறும், ஜாதகரின் வாழ்க்கையில் 5பாவக வழியில் இருந்து நல்ல அறிவு திறனும், புத்திசாலித்தனமும், 8ம் பாவக வழியில் இருந்து திடீர் அதிர்ஷ்டமும் புதையலுக்கு நிகரான சொத்து சுக சேர்க்கையையும், 10ம் பாவக வழியில் இருந்து மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்ஜியத்தையும், 11ம் பாவக வழியில் இருந்து முற்போக்கு சிந்தனையையும், நீடித்த மிகப்பெரிய அளவிலான அதிர்ஷ்டங்களையும் வாரி வழங்கும், ஜாதகருக்கு 5,8,10,11ம் பாவகங்கள் தனது அமைப்பிலான யோகங்களை விரைந்து வாரி வழங்கும், தன்னிறைவான முழுமை நிறைந்த யோகங்களையும் நன்மைகளையும் 5,8,10,11ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் நிச்சயம் அனுபவிக்கலாம் என்பது மேற்கண்ட ஜாதகருக்கு உள்ள சிறப்பு தன்மை ஆகும்.

ஆனால் ஜாதகரின் லக்கினமும், களத்திர பாவகமும் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவதால், மேற்கண்ட யோக பலன்களை அனுபவிப்பதற்கு  தடையாக ஜாதகரும், ஜாதகரின் வாழ்க்கை துணையும், ஜாதகரின் நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளும் இருப்பார்கள் என்பது கவனிக்க தக்க அம்சமாகும், அடிப்படையில் லக்கினம் பாதிப்பது, ஜாதகரின் வளர்ந்த சூழ்நிலை சரியில்லை என்பதையும், ஜாதகரின் உடல் மற்றும் மனம் சார்ந்த விஷயங்கள் ஜாதகருக்கு ஒத்துழைப்பை வழங்காது என்பதையும், ஜாதகரின் எண்ணமும் செயலும் சரியான பாதையில் செல்லாது என்பதையும் தெளிவுபடுத்துகிறது.

களத்திர பாவகம் பாதிப்பது, ஜாதகர் தனது வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் பொழுது மிகுந்த கவனத்தையும், ஜாதகருக்கு சாதகமாக இருக்கும் விஷயங்களில் ஆர்வம் செலுத்தி தேர்வு செய்வது நன்மையை தரும் என்பதனையும், தமது நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளை தேர்வு செய்யும் பொழுது மிகுந்த எச்சரிக்கையையும், ஜாதகருக்கு பாதகமில்லாத நபர்களையும் தேர்வு செய்வது அவசியமாகிறது, ஜாதகர் மேற்கண்ட விஷயங்களில் கவனம் செலுத்த வில்லை எனில் ஜாதகரின் வாழ்க்கை மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகும் என்பதனை கருத்தில் கொள்வது, ஜாதகருக்கு நன்மைகளை தரும்.

மேலும் ஜாதகர் உடல்,மனம்,புத்தி மற்றும் செயல்களால் தனக்கும் தன்னை சார்ந்தவர்களுக்கும் பாதிப்பில்லாத செயல்களை செய்வதும், உடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவதும், செய்யும் செயல்களில் விளைவறிந்து செயல்படும் தன்மையையும், அறிவில் விழிப்புணர்வும் தெளிவான சிந்தனையையும் தனது துணையாக கைகொள்வது சகல நிலைகளில் இருந்தும் நன்மைகளை தரும்.

இந்த ஜாதகருக்கு கடுமையாக பாதிக்க பட்ட பாவக பலனை ஏற்று நடத்தும் திசா புத்தி காலங்களில் ஜாதகர் மிகுந்த கவனமுடன் நடந்துகொள்வது அவசியமாகிறது, ஏனெனில் பாதிக்க பட்ட பாவகங்களின் பலன்களை ஏற்று நடத்தும் திசா புத்திகளே ஜாதகருக்கு கடுமையான நெருக்கடிகளையும், சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து கடுமையான இன்னல்களையும் வாரி வழங்கும், இதை கருத்தில் கொண்டு பார்க்கும் பொழுது ஜாதகருக்கு கேது,சுக்கிரன்,சூரியன் மற்றும் செவ்வாய் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துவதால், இந்த காலகட்டங்களில் ஜாதகர் மிகுந்த கவனமுடன் இருப்பது ஜாதகருக்கு நன்மைகளை தரும், மேலும் யோகங்களை தரும் பாவக வழியிலான பலாபலன்களை அனுபவிப்பதற்கு உண்டான வழிமுறைகளை ஜாதகர் கையாள்வது சிறப்பானதாக அமையும்.

அடுத்து வரும் சுக்கிரன் திசை 5,8,11ம் வீடுகள்  அதிர்ஷ்டம் மற்றும் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்ற பலனையும், 1,7 ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்ற பலனையும் கலந்து நடத்துவது ஜாதகருக்கு 11ம் பாவக வழியில் இருந்து மிதமிஞ்சிய யோகங்களையும், பாதக ஸ்தான வழியிலான கடுமையான பாதிப்புகளையும் வாரி வழங்கும் என்பதால், ஜாதகர் மிகுந்த விழிப்புணர்வுடன் நடந்துகொண்டு யோக பலன்களை அனுபவிக்கும் தன்மையை பெறுவதும், பாதக ஸ்தான வழியிலான இன்னல்களில் இருந்து விடுபடுவதற்கு உண்டான விஷயங்களில் அதிக ஆர்வமும் கொள்வது, ஜாதகருக்கு மிகசிறந்த யோக வாழ்க்கையயை வாரி வழங்கும்.

குறிப்பு :

சுய ஜாதகத்தில் ராஜயோகங்கள் இருந்த போதிலும், லக்கினம் வலிமை இழப்பது ஜாதகருக்கு நல்லதல்ல, யோகபலன்களை ஜாதகர்  பரிபூர்ணமாக அனுபவிக்க இயலாத சூழ்நிலையை உருவாக்கும், இருப்பினும் ஜாதகர் விழிப்புணர்வுடன் இருந்தால், இந்த நிலையை ஜாதகரே மாற்ற இயலும் என்பதை கருத்தில் கொள்வது நல்லதென " ஜோதிடதீபம் " உறுதியாக பதிவு செய்கிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

புதன், 4 மே, 2016

தொழில் ஸ்தானம் - ஜாதக ரீதியாக தமக்கு உகந்த தொழில் அல்லது வேலையை தேர்வு செய்வது எப்படி ?


" உத்தியோகம் புருஷ லட்சணம் " என்ற பழமொழிக்கு உதாரணமாக வாழும் மனிதர்களுக்கே இந்த சமுதாயமும், உறவுகளும் கௌரவம், அந்தஸ்து மற்றும் மரியாதைகளை நிச்சயம் வாரி வழங்குகிறது, கல்வி காலங்களுக்கு பிறகு சரியான ஜீவனத்தை தேடுவதில் அதிக ஆர்வம் இன்றைய இளைஞர்களுக்கு உண்டு என்பதை மறுப்பதற்கில்லை, இருப்பினும் சுய ஜாதக ரீதியாக தமக்கு உகந்த தொழில் அல்லது பணியை தேர்வு செய்யாத பொழுது, சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கை திசைமாறி செல்வதற்கு அதிக வாய்ப்புண்டு, எந்தவிதத்திலும் தமக்கு சம்பந்தம் இல்லாத துறையை தேர்வு செய்து, கடனுக்காக அந்த தொழிலை செய்வதை விட, தமக்கு உகந்த ஆர்வமுள்ள தொழில்களில் ஜாதகர் ஈடுபடும்  பொழுது, ஜாதகரின் முன்னேற்றமும் சிறப்பாக அமையும். 

மேலும் ஜாதகர் தனது வாழ்க்கையில் முழு ஈடுபாட்டுடன் செய்யும் தொழில் மற்றும் வேலை உலக புகழையும், தன்னிறைவான வசதி வாய்ப்புகளையும் வாரி வழங்கும், நல்ல ஜீவனம் அமைவது என்பது சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் என்று அழைக்கப்படும் 10ம் பாவக வலிமையின் அடிப்படையிலேயே அமைகிறது, மேலும் 10ம் பாவக வலிமை சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையில், கௌரவம் மற்றும் அந்தஸ்த்தை தாம் செய்யும் தொழில் வழியில் இருந்தே நிர்ணயம் செய்வதால், ஜாதகர் சமூகத்துடன் கொண்டுள்ள தொடர்புகளையும், அதன் வழியில் இருந்து பெரும் யோக நிலையையும் ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவக வழியில் இருந்தே 100% விகிதம் பெறுகின்றார்.

எந்த ஒரு ஜாதகரும் தமது சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தான வலிமைக்கு ஏற்ப ஜீவனத்தை அமைத்துகொள்வது ஜாதகரின் வாழ்க்கையில் தன்னிறைவான முன்னேற்றங்களை வாரி வழங்கும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு சர ராசி, ஸ்திர ராசி மற்றும் உபய ராசி என்றும் நெருப்பு தத்துவம், நில தத்துவம், காற்று  தத்துவம் மற்றும் நீர் தத்துவம் என்றும் இயற்கையால்  வகைபடுத்தபட்டுள்ளது, எந்த ஒரு ஜாதகருக்கும் மேற்கண்ட ராசி மற்றும் தத்துவ அமைப்பிலேயே ஜீவன ஸ்தானம் அமையும், அப்படி அமையும் ஜீவன ஸ்தான வலிமையை முதலில் அறிந்துகொள்வது, சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு உகந்த வெற்றியை தரும்  தொழில் அல்லது வேலையை துல்லியமாக தேர்வு செய்ய உதவி  புரியும், சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெற்று இருப்பின், ஜாதகர் ஜீவன ஸ்தானம் அமைந்த ராசி, ஜீவன ஸ்தானம் பெற்றுள்ள தத்துவம், ஜீவன ஸ்தானம் தொடர்பு பெற்றுள்ள பாவகம் ஆகியவற்றை கணிதம் செய்து மிக துல்லியமாக ஒருவரின் தொழில் அல்லது வேலையை நிச்சயம் நிர்ணயம் செய்ய இயலும், மேலும் நடைபெறும் திசா புத்திகள் ஜாதகருக்கு சாதகமாக அமைந்தால் ( வலிமை பெற்ற ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்தினால் ) தாம் தேர்வு செய்த தொழில் அல்லது பணியில் ஜாதகர் கொடிகட்டி பறக்கும் யோகத்தை தரும், நடைபெறும் திசா புத்திகள் சாதகமாக அமையவில்லை என்றாலும் ஜாதகருக்கு சிறப்பான ஜீவனத்தை வழங்குவதில் தவறுவது இல்லை, ஜீவன வெற்றி என்பது சாதகமான  திசா புத்திகள் நடைமுறைக்கு வரும்பொழுது மிக அபரிவிதமாக வாரி வழங்கிவிடும், இதில் சிறிதும் சந்தேகம் இல்லை.

ஜீவன பாவகம் தரும் பலனை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே!


லக்கினம் : தனுசு 
ராசி : கும்பம் 
நட்சத்திரம் : சதயம் 4ம் பாதம் 

ஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் எனும் பத்தாம் பாவக வலிமை  நிலையை ஆய்வு செய்வோம் அன்பர்களே! ஜாதகரின் ஜீவன ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 6ம் ராசியாக அமைகிறது, மேலும் உபய ராசி நில தத்துவம், ஜாதகரின் ஜீவன ஸ்தானம் தொடர்பு பெறுவது தமது பாவகத்துடனே என்பது வரவேற்க தக்கது, மேலும் ஜீவன ஸ்தானத்துடன் தொடர்பு பெரும் மற்ற வீடுகள் 7,10 ஆகும், எனவே ஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் மிகவும் வலிமையாக இருப்பது உறுதியாகிறது. 7ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது ஜாதகருக்கு வாழ்க்கை துணை, நண்பர்கள் மற்றும் தொழில் கூட்டாளிகள் வழியில் இருந்து நன்மைகளை வாரி வழங்கும், இந்த இடத்தில் வாழ்க்கை துணை பற்றி குறிப்பிடுவதற்கு  காரணம், பெண்கள் நினைத்தால் தமது வாழ்க்கை துணையை மிகசிறந்த இடத்திற்கு எடுத்துசெல்லும் வல்லமை பெற்றவர்கள் என்பதை தெரிவிப்பதற்கே, மேலும் ஜாதகர் தமது திருமணத்திற்கு பிறகே வாழ்க்கையில் சகல முன்னேற்றங்களையும் பெற்றார் என்பது கவனிக்க தக்கது, வீட்டில் நிம்மதி இருந்தால் மட்டுமே எந்த ஒரு ஆண்மகனும் தாம் செய்யும் தொழிலில் சிறந்து விளங்க முடியும்.

இயற்கையாகவே இந்த ஜாதகருக்கு 7ம் பாவகம் ஜீவன ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது, வாழ்க்கை துணை வழியில் இருந்து ஜீவன  உதவிகளையும் ஆதரவையும் பெற்று தந்தது, மேலும் சுய ஜாதகத்தில் ஜீவன  ஸ்தானமான 10ம் பாவகத்துடன் தொடர்பு பெரும் வீடுகள் இரண்டு, 
1) களத்திரம் என்று அழைக்கப்படும் 7ம் வீடு. 2) ஜீவனம் ஸ்தானம் என்று அழைக்கப்படும் 10ம் வீடு, ஜாதகரின் களத்திர ஸ்தானம் காலபுருஷ தத்துவத்திற்கு வீர்ய ஸ்தானமாகவும், ஜீவன ஸ்தானம் காலபுருஷ தத்துவத்திற்கு சத்ரு ஸ்தானமாகவும் அமைந்து மிகவும் வலிமை பெற்றுள்ளது.

 மேலும் ஜாதகரின் களத்திர ஸ்தானம் உபய காற்று தத்துவத்திலும், சர நீர் தத்துவத்திலும் சம்பந்தம் பெறுகின்றது ( 7ம் பாவகம் மிதுன ராசியில் 072:16:00 பாகையில் ஆரம்பித்து, கடக ராசியில் 101:49:01 பாகையில் முடிவடைகிறது )  ஜாதகரின் ஜீவன ஸ்தானம் உபய நில தத்துவத்திலும், சர கற்று தத்துவத்திலும் சம்பந்தம் பெறுகின்றது ( 10ம் பாவகம் கன்னி ராசியில் 166:34:14 பாகையில் ஆரம்பித்து, துலாம் ராசியில் 197:34:04 பாகையில் முடிவடைகிறது ) எனவே ஜாதகருக்கு மேற்கண்ட தத்துவ அமைப்பில்தான் ஜீவனம் அமைய வாய்ப்புள்ளது, இயற்கையாகவே மிதுனம் உபய காற்று தத்துவம் என்பதால் ஜாதகரின் வியாபர அறிவை குறிக்கும், மிதுனம் ஜாதகருக்கு  7ம் பாவகமாக அமைவது வியாபாரம் மற்றும் வியாபாரத்தில் தமக்குள்ள அறிவு திறனை குறிக்கும், கன்னி உபய நில தத்துவம் என்பதால் பூமியில் விளையும் உணவு சார்ந்த பொருட்களை குறிக்கும், கன்னி ஜாதகருக்கு 10ம் பாவகமாக அமைவது, ஜாதகர் மண்ணில் விளைந்து மக்கள் உபயோகிக்கும் உணவு பொருட்களை வியாபாரமாக செய்வதை குறிக்கிறது, எனவே ஜாதகர் 7ம் பாவக வழியில் இருந்து அறிவார்ந்த வியாபாரத்தையும், 10ம் பாவக வழியில் இருந்து மண் தத்துவம் சார்ந்த உணவு பொருட்களை வைத்து வியாபாரம் செய்வதை தெளிவு படுத்துகிறது, மேலும்  மக்கள் பயன்படுத்தும் உணவு பொருட்கள் சார்ந்த வியாபாரத்தில், ஜீவன ஸ்தான வழியில் இருந்து தன்னிறைவான முன்னேற்றத்தை  பெறுவார் என்பதை அவரது சுய ஜாதகம் தெளிவு படுத்துகிறது.

1,3ம் வீடுகள் வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகர்  நல்ல வியாபர திறன் கொண்டவர் என்பதையும், 3ம் பாவக வழியில் இருந்து செய்கின்ற வியாபரத்தில் வெற்றிகளை தொடர்ந்து பெறுவார் என்பதையும் உறுதி செய்கிறது, இதற்க்கெல்லாம் சிகரம் வைத்தார் போல் ஜாதகரின் 11ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது  குறைந்த முதலீட்டில் பன்மடங்கு லாபத்தை பெறுவார் என்பதை சிறப்பாக சொல்லலாம், மேலும் கடந்த புதன் திசை ஜாதகருக்கு 11ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று லாப ஸ்தான பலனை ஏற்று நடத்தியது தாம் செய்த வியாபாரத்தில் கொடிகட்டி பறக்கும் யோகத்தை தந்தது கவனிக்கத்தக்க அம்சமாகும்.

தற்பொழுது நடைபெறும் கேது திசை ஜாதகருக்கு 1,3ம் வீடுகள் வீர்ய ஸ்தானமான 3ம் பாவக பலனை ஏற்று நடத்துவது, ஜாதகர்  தாம் செய்து கொண்டு இருக்கும் வியாபாரத்தில் தன்னிறைவான வளர்ச்சி பெறுவதை தெளிவு படுத்துகிறது, மேலும் அடுத்து வரும் சுக்கிரன் திசையும் ஜாதகருக்கு 4,6,12ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தருவது மிகுந்த யோகத்தையே தரும் என்பதால் ஜாதகரின் வாழ்க்கை இனிவரும் காலங்களில் மிகவும் சிறப்பானதாக அமையும் என்பது மட்டும் உறுதி, இவரது ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் மிகவும்  வலிமையுடன் அமைந்ததும், அதைவிட லாப ஸ்தானம் மிக மிக வலிமையுடன் அமைந்ததும், ஜாதகரின் வாழ்க்கையில் சகல யோகங்களையும் தந்தது.

 லக்கினம் வலிமை பெறுவது ஜாதகரின் உடல் மனம்  மற்றும் செயல்பாட்டினையும், 2ம் பாவகம் வலிமை பெறுவது கை நிறைவான வருமானத்தையும், வியாபாரத்தில் பேச்சு திறமையையும், 3ம் பாவகம் வலிமை பெறுவது தனிப்பட்ட வியாபர திறமைகளையும், 4ம் பாவகம் வலிமை பெறுவது சொத்து சுக சேர்க்கையையும், 5ம் பாவகம் வலிமை பெறுவது சமயோசித புத்திசாலிதனத்தையும், தொழிலில் ஜாதகர் கொண்டுள்ள நுண் அறிவையும், 6ம் பாவகம் வலிமை பெறுவது குறுகிய கால வெற்றிகளையும், 7ம் பாவகம் வலிமை பெறுவது பொதுமக்கள், வாழ்க்கை துணை மற்றும் கூட்டாளிகள் ஆதரவையும், 10ம் பாவகம் வலிமை பெறுவது தொழில் வழியில் கௌரவத்தையும், சுய மரியாதை மற்றும் அந்தஸ்தையும், 11ம் பாவகம் வலிமை பெறுவது சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து பெரும் யோக வாழ்க்கையையும், மிகுந்த அதிர்ஷ்ட சாலி என்ற நிலையையும், தன்னம்பிக்கையியும், முற்போக்கு சிந்தனையையும் ஒருங்கே அமையபெற்றவர் என்பதனையும், 12ம் பாவக வழியில் இருந்து போதும் என்ற மன நிறைவையும், நல்ல உறக்கத்தையும், மன நிம்மதியையும், வாரி வழங்கும்.

சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தான வலிமையின் அடிப்படையில், தமக்கு உகந்த தொழிலை ஒரு ஜாதகர் தேர்ந்து எடுப்பராயின், சம்பந்தப்பட்ட ஜாதகர் தொழில் ரீதியாக தன்னிறைவு பெறுவதை எந்த சக்தியாலும் தடுக்க இயலாது என்று உறுதியாக இந்த கட்டுரையில்  "ஜோதிடதீபம்" பதிவு செய்கிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

செவ்வாய், 3 மே, 2016

சுய ஜாதக பலாபலன்களும், தொழில் ரீதியான முன்னேற்றங்களும் !


 சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து, நவ கிரகங்கள் தனது திசா புத்தி காலங்களில் ஏற்று நடத்தும் பலாபலன்கள் பற்றி இந்த பதிவில் சிந்திப்போம் அன்பர்களே, மேலும் ஜாதகர் ஜீவன வழியில் இருந்து பெரும் யோக அவயோக நிலையை பற்றி ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே! சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவது சம்பந்த பட்ட ஜாதகருக்கு செய்யும் தொழில் அல்லது பணியில் சிறப்பான நன்மைகளை வாரி வழங்கும், ஜீவன ஸ்தானம் பாதிக்க படும்பொழுது ஜாதகரின் ஜீவன ரீதியான போராட்டங்கள் அதிகரிக்கும், தொழில் வாய்ப்புகள் வெகுவாக பாதிக்கும், கௌரவம் மற்றும் அந்தஸ்து குறையவும் வாய்ப்புள்ளது, எனவே ஒவ்வொரு ஆண் மகனின் ஜாதகத்திலும் ஜீவன ஸ்தான வலிமையே சம்பந்தப்பட்ட ஜாதகரின் சுய மரியாதை மற்றும் கௌரவத்திற்கு வலு சேர்க்கிறது, மேலும் ஜாதகர் எவ்வித தொழில்களில் சிறந்து விளங்குவார், ஜாதகரின் வருமான வாய்ப்புகள் எப்படி? பொருளாதாரம் மற்றும் சமூக அந்தஸ்த்து எப்படி பட்ட வகையில் சிறப்பாக அமையும் என்பதை பற்றிய தெளிவு பெற சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தான வலிமையின், தன்மையை ஆய்வு செய்வது அவசியமாகிறது மேலும் நடைபெறும் திசா புத்திகள், எதிர்வரும் திசா புத்திகள் ஏற்று நடத்தும் பாவக வலிமையை பற்றிய தெளிவு பெறுவதும் அவசியமாகிறது, உதாரணமாக கிழ்கண்ட ஜாதகத்தை இன்றைய சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே !


லக்கினம் : கன்னி 
ராசி : மகரம் 
நட்சத்திரம் : திருவோணம் 3ம் பாதம்

 ஜாதகருக்கு கன்னி லக்கினம் ( உபய ராசி, உபய மண் தத்துவம் ) மகர ராசி,  திருவோண நட்சத்திரம், சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் 12பாவக வலிமை பற்றி  ஆய்வு செய்வோம்.

ஜாதகருக்கு வலிமை பெற்றுள்ள பாவகங்கள் :

1,3,7,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9 பாவகத்துடன் சம்பந்தம்.
2,6ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம்.
4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம்.
5,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம்.
10ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம்.

ஜாதகருக்கு வலிமை அற்ற பாவகங்கள் :

8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம்.

மேற்கண்ட ஜாதகருக்கு 8,12ம் வீடுகளை தவிர மற்ற அனைத்து பாவகங்களும் வலிமை பெற்ற இருக்கின்றது, குறிப்பாக 5,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகத்திலேயே மிகவும் சிறப்பு வாய்ந்த நிலையாக கருதலாம்.

1,3,7,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9 பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு இலக்கின வழியில் இருந்து சிறப்பாக வளரும் சூழ்நிலையையும், நல்ல உடல் மற்றும் மன ஆரோக்கியத்தையும் வாரி வழங்கும், சிறந்த அறிவு திறன் கல்வி கேள்விகளில் புலமை, நுண் அறிவு திறன் மூலம் வாழ்க்கையில் சகல முன்னேற்றங்களையும் பெரும் யோகம், தெளிவான சிந்தனை, பகுத்தறிவு, விளைவு அறிந்து செயல்படும் யோகம் தன்னிறைவான வாழ்க்கை முன்னேற்றங்களை ஜாதகரே தீர்மானிக்கும் அமைப்பு, நல்ல குணம் பெருந்தன்மையான நடவடிக்கைகள் மூலம் நற்பெயர் பெறுதல், பெரியோர்களை மதித்து நடந்துகொள்ளுதல், முன்னோர்களின் ஆசியை பெறுதல் என ஜாதகருக்கு மிகுந்த யோக பலன்களை பாக்கிய ஸ்தான அமைப்பில் இருந்து தரும்.

3ம் பாவக வழியில் இருந்து ஆன்மீகத்தில் ஈடுபாடு, சகல சௌபாக்கியம், வியாபாரம், ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில் வெற்றி லாபம், பயணங்களில் நன்மை, எடுக்கும் முயற்ச்சிகளில் நல்ல வெற்றி, வீரியமிக்க செயல்பாடுகள், வாத திறமை, செல்லும் இடங்களில் நல்ல வரவேற்ப்பு, எதிலும் எளிதில் வெற்றி பெரும் யோகம், புத்திகூர்மை தன்னம்பிக்கை, ஆராய்ச்சிகளில் வெற்றி, போக்குவரத்து துறைகளில் நல்ல முன்னேற்றம், கனிம பொருட்களில் நல்ல லாபம், சுரங்கம் சார்ந்த தொழில்களில் சிறப்பான பொருளாதார வளர்ச்சி என வீர்ய ஸ்தான வழியில் இருந்து யோக பலன்களே நடைபெறும்.

7ம் பாவக வழியில் இருந்து நல்ல வாழ்க்கை துணை, சிறந்த நண்பர்கள், வலிமை மிக்க கூட்டாளி, கூட்டு தொழில் செய்வதால் சிறப்பான முன்னேற்றம், ஏற்றுமதி இறக்குமதி வியாபர யோகம், வெளிநாடுகளில் நல்ல யோகம், செய்யும் தொழிலில் நல்ல ஞானம், கூட்டு முயற்ச்சி வெற்றி பெரும் யோகம் என்ற வகையில் சிறப்பான நன்மைகளை வழங்கும்.

9ம் பாவக வழியில் இருந்து மிகசிறந்த மதிநுட்பம் மற்றும் அறிவு திறன், சிறப்பான திட்டமிடுதல்கள், பயணங்களில் ஆர்வம், ஆன்மீகத்தில் வெற்றி, பெரியோர் ஆசிர்வாதம், நல்ல கல்வி அறிவு, பெயரும் புகழும் தேடிவரும் யோகம் என்ற வகையில் நன்மையை தரும்.

2,6ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது கல்வியில் வெற்றி, நல்ல ஜீவனம் அமையும் யோகம், சிறந்த வியாபார யோகம், கௌரவம் புகழ் தேடிவரும் அமைப்பு செய்யும் தொழில் வழியில் இருந்து கை நிறைவான வருமானம் பெரும் அமைப்பு, அனைத்திலும் வெற்றி வாய்ப்புகள் என்ற வகையிலும், 6ம் பாவக வழியில் இருந்து குறுகிய கால ஜீவன மேண்மையும், தன்னிறைவான பொருளாதார முன்னேற்றமும்,  பதவியில்  வெற்றி, உத்தியோக ஆர்வம், சொந்த முயற்ச்சியில் முன்னேற்றம் காணும் அமைப்பு என்ற வகையில் யோகத்தை தரும்.

4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, சிறப்பான வண்டி வாகன யோகம், சொத்து சுக சேர்க்கை, சுயமாக வீடு சொத்து  வாங்கும் யோகம், சொந்த ஊரில் சிறப்பான முன்னேற்றம் காணும் அமைப்பு, தனது பெயரில் உள்ள சொத்துகள் விருத்தி பெரும் யோகம், வடக்கு திசை வாயிற்படி கொண்ட வீடுகளில் ஜாதகர் குடியிருப்பதால் மிகுந்த லாபமும் முன்னேற்றமும் உண்டாகும்.

5,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகத்திலேயே  மிகவும் வலிமை பெற்ற அமைப்பாக கருதலாம், 5ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு அதிர்ஷ்டத்தின் வழியில் இருந்து மிகுந்த லாபங்கள் உண்டாகும், லாட்டரியில் யோகம், பங்கு வர்த்தகத்தில் லாபம், தனது  புத்திசாலிதனத்தால் எதிர்பாராத அதிர்ஷ்டங்கள், தன் சுய முயற்ச்சியில் வெற்றி பெரும் யோகம், திடீர் சொத்து சுக சேர்க்கை, கற்ற கல்வி மூலம் அதிர்ஷ்டங்களை பெரும் யோகம், கலைகளில் தேர்ச்சி, சாஸ்திர  ஞானம், குல தெய்வ ஆசிகளை பெரும் யோகம், தனது குழந்தைகள் வழியில் இருந்து யோகம், தனிப்பட்ட முன்னேற்றத்தில் ஆர்வம் என்ற வகையில் நன்மைகளை வாரி வழங்கும்.

11ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் மிகுந்த அதிர்ஷ்டசாலி, தன்னம்பிக்கையும் விடா முயர்ச்சியும் கொண்டவர், புதிய நம்பிக்கை மற்றும்  லட்சியங்களில் வெற்றி, முற்போக்கு சிந்தனை, பகுத்தறிவு மூலம் சகல விஷயங்களிலும் தேர்ச்சி பெரும் யோகம், செய்யும் அனைத்து காரியங்களிலும் லாபம் பெரும் அமைப்பு, சிறப்பு மிக்க சிந்தனைகள், செயல்திறன்கள் என்ற வகையில் ஜாதகருக்கு அதிர்ஷ்டத்தின் மேல் அதிர்ஷ்டம் வந்தவண்ணம் இருக்கும், லாப ஸ்தானம் கடகமாக அமைவது ஜாதகரின் வாழ்க்கையில் சகல யோகத்தையும் வாரி வழங்கும்.

10ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு அடிமை தொழில் இல்லை என்பதையும், கூட்டு முயற்ச்சியில் தொழில் வெற்றிகளை பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது என்பதையும் தெளிவு படுத்துகிறது.

8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 8ம் பாவக வழியில் இருந்து விபத்து, இழப்பு, வீண் மருத்துவ செலவினங்கள்,  தவிர்க்க  இயலாத பொருளாதார தடைகள், மற்றவர்களை நம்பி செய்யும் சில காரியங்கள் தோல்வியை தரும் அமைப்பு என்ற வகையிலும், 12ம் பாவக வழியில் இருந்து வீண் மன கவலைகளையும், மன போராட்டத்தையும் தரும், அனைவராலும் இன்னல்களுக்கு ஆளாகும் தன்மை, நிம்மதி இன்மை, அதிக முதலீடு செய்வதால் வரும் திடீர் இழப்பு என்ற வகையில் துன்பங்களை தரும், மன நிம்மதி வெகுவாக கெடும்.

தொழில் : 

ஜாதகருக்கு ஜீவன ஸ்தானத்தை விட லாப ஸ்தானம் வலிமை பெற்று இருப்பது, தான் செய்யும் தொழில்களில் அபரிவிதமான யோகங்களை வாரி வழங்கும், குறைந்த முதலீட்டில் அதிகபடியான லாபங்களை பெரும் யோகம் உண்டாகும், தற்பொழுது நடைபெறும் குரு திசையில் ஜாதகருக்கு நல்ல தொழில் முன்னேற்றத்தையும், அடுத்து வரும் சனி திசையில் தொழில் அதிபர் என்ற அந்தஸ்த்தையும் வாரி வழங்கும் என்பது கவனிக்க தக்கது, குறுகிய காலங்களில் ஜாதகர் தொழில் ரீதியான அபரிவிதமான வெற்றிகளை பெறுவார் என்பது கவனிக்க தக்க அம்சமாகும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696