செவ்வாய், 18 செப்டம்பர், 2012

ஜாதகத்தில் செவ்வாய் தோஷ நிர்ணயம்,செவ்வாய் பகவான் வழங்கும் நன்மை ! தீமை ? பகுதி 5





பொதுவாக சுய ஜாதக அமைப்பில் லக்கினத்திற்கு 2 ,4 ,7 ,8 ,12  பாவகங்களில் செவ்வாய் இருப்பின், அது செவ்வாய் தோஷம் என்று நிர்ணயம் செய்து , குறிப்பிட்ட ஜாதக அமைப்பை சார்ந்தவர்கள் இதே போன்றே செவ்வாய் லக்கினத்திற்கு 2 ,4 ,7 ,8 ,12  பாவகங்களில் இருக்கும் ஜாதகத்தை சார்ந்தவரையே திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்றும் பல ஜோதிடர்கள் தீர்மானம் செய்கின்றனர் , இது எந்த அளவிற்கு உண்மை என்பதை பற்றி இந்த பதிவில் சிந்திப்போம் . மேலும் ஒருவருடைய ஜாதகத்தில் செவ்வாய் பகவான் தரும் நன்மை தீமையை பற்றி விரிவாக 12 லக்கினத்தை அடிப்படையாக வைத்து  பார்ப்போம் . 


தனுசு லக்கினம் 


2 ம் பாவகம் மகரத்தில் உச்சம் பெற்று அமரும் செவ்வாய் ஜாதகருக்கு தொழில் வகையில் எடுக்கும் முயற்ச்சிகளில் வெற்றிகளும் , சகோதர வகையில் ஆதரவினையும் , உதவிகளையும் , தன்னம்பிக்கை மற்றும் சுய கட்டுபட்டினையும் , பயணங்களில் லாபத்தினையும் , போட்டிகளில் வெற்றிகளையும் வாரி வழங்கிவிடும் , ஆனால் ஜாதகருக்கு புத்திர சந்தானம் தாமதமாகவே கிடைக்கும், முதலில் பெண் குழந்தையும் , சரியான குல தெய்வ வழிபாடு செய்வதால் ஆண் குழந்தையும் ஜாதகருக்கு கிடைக்கும் , தனது பூர்வீகத்தில் ஜாதகருக்கு பெரிய முன்னேற்றத்தை தருவதில்லை , எதிர்ப்புகளே அதிகமாக வரும் , பூர்விகத்தில் இருந்து வெளியே சென்று  ஜீவனம் செய்வது ஜாதகருக்கு பல வகையில் முன்னேற்றங்களையும் , அரசியல் பதவிகளையும் நிச்சயம் தரும் . மேலும் செவ்வாய் இங்கு அமர்வது லக்கினம் , குடும்பம் எனும் இரண்டு பாவகங்களுக்கு அதிக  நன்மைகளையும் , பூர்வீக அமைப்பிற்கு கடுமையான பாதிப்பையும் வழங்கும் .


4 ம் பாவகம் மீனத்தில் அமரும் செவ்வாய் , ஜாதகரின் பூர்விக அமைப்பில் இருந்து மிகப்பெரிய நன்மைகளையும் , அளவில்லா குழந்தை செல்வத்தையும் , குழந்தைகள் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் பெரும் யோகத்தையும், இறை நிலையின் பரிபூர்ண நல்லாசிகளையும் , குலதெய்வத்தின் கருணையால் வாழ்க்கையில் சகல செல்வாக்கினையும் பெரும் யோகம் உண்டாகும் , அதே சமயம் ஜாதகரின் மன நிம்மதி கெடும் அளவிற்கு சூழ்நிலைகள் உருவாகும் , குறிப்பாக வாழ்க்கை துணையின் வழியில் இருந்து அதிக இன்னல்களை சந்திக்க வேண்டி வரும் , இருப்பினும் ஜாதகருக்கு முதல் பாவகத்திர்க்கு நன்மையை செய்யும் செவ்வாய் பகவானால் ஜாதகர் எதையும் தங்கும் மன நிலையை தந்துவிடும் , உடல் நிலையும் சிறப்பாக அமைந்துவிடும் , எனவே  பனிரெண்டாம் பாவக அமைப்பில் இருந்து  ஜாதகர் அதிக  பாதிப்புகளை சந்திக்க வேண்டி வராது ,  மேலும் செவ்வாய் இங்கு அமர்வது லக்கினம் ,  பூர்விகம்  எனும் இரண்டு பாவகங்களுக்கு அதிக  நன்மைகளையும் ,  பனிரெண்டாம் பாவக அமைப்பிற்கு சிறிய  பாதிப்பையும் வழங்கும் .


7 ம் பாவகம் மிதுனத்தில் அமரும் செவ்வாய், லக்கினத்திற்கு மிகுந்த நன்மைகளை செய்வார் , குறிப்பாக நீண்ட ஆயுள் , மருத்துவ துறையில் சிறந்து விளங்கும் மருத்துவர்கள் , உடல் பாதிப்புகளை விரைவில் நலம் பெற செய்யும் ஆற்றல் கொண்டவர்கள் எனவும் , சிறந்த நிர்வாக திறமையையும் , ஆட்சி பணிகளில் சிறப்பான எதிர்காலத்தையும் , சரியான நீதி சொல்லும் நீதிமானாகவும் , விளையாட்டு வீரர்களாகவும் இங்கு அமரும் செவ்வாய் ஜொலிக்க வைப்பார் , மேலும் ஜாதகரின் பூர்வீகம் வலிமை பெற்று பூர்வீக அமைப்பில் இருந்து மிகசிறப்பான யோக பலன்களை அனுபவிக்கும் யோகம் உண்டாகும் , ஆனால் விரைய ஸ்தான அமைப்பில் இருந்து ஜாதகர் சில சிரமங்களை அனுபவிக்க வேண்டி வரும் , மேலும் செவ்வாய் இங்கு அமர்வது லக்கினம் ,  பூர்விகம்  எனும் இரண்டு பாவகங்களுக்கு அதிக  நன்மைகளையும் ,  பனிரெண்டாம் பாவக அமைப்பிற்கு சிறிய  பாதிப்பையும் வழங்கும் .


8 ம் பாவகம் கடகத்தில் அமரும் செவ்வாய் , ஜாதகருக்கு சகல வழிகளில் இருந்தும் அதிக தீமையான பலன்களையே வழங்குவார் , குறிப்பாக திருமணம் தாமதம் ஆகும் , நல்ல  நிலையான வருமானம் கிடைக்காது , அன்பான குடும்பம் அமையாது , வாழ்க்கை துணையின் வழியில் இருந்து அதிக இன்னல்களை  அனுபவிக்கும் சூழ்நிலை வரும் , தனது பூர்வீகத்தில் குடியிருப்பதால் ஜாதகருக்கு அதிக இழப்புகளை தரும் , மன நிம்மதி இழக்கும் படி சம்பவங்கள் ஜாதகருக்கு நடக்கும் என்பதால் , ஜாதகர் எந்த விஷயங்களையும் நன்கு ஆராய்ந்து முடிவெடுப்பது நலம் தரும் , ஜாதகர் ஒரு சிறந்த ஆன்மீகவாதிகளிடம் ஆசியும் , தீட்சையும் பெறுவது அவசியம் , மேலும் செவ்வாய் இங்கு அமர்வது லக்கினம் ,  பூர்விகம் மற்றும்  பனிரெண்டாம் பாவக அமைப்பிற்கு அதிக பாதிப்பையும் வழங்கும் .


12 ம் பாவகம் விருச்சகத்தில் அமரும் செவ்வாய், 8 ம் வீட்டில் அமரும் செவ்வாய்  போன்றே ஜாதகருக்கு சகல வழிகளில் இருந்தும் அதிக தீமையான பலன்களையே வழங்குவார் , குறிப்பாக திருமணம் தாமதம் ஆகும் , நல்ல  நிலையான வருமானம் கிடைக்காது , அன்பான குடும்பம் அமையாது , வாழ்க்கை துணையின் வழியில் இருந்து அதிக இன்னல்களை  அனுபவிக்கும் சூழ்நிலை வரும் , தனது பூர்வீகத்தில் குடியிருப்பதால் ஜாதகருக்கு அதிக இழப்புகளை தரும் , மன நிம்மதி இழக்கும் படி சம்பவங்கள் ஜாதகருக்கு நடக்கும் என்பதால் , ஜாதகர் எந்த விஷயங்களையும் நன்கு ஆராய்ந்து முடிவெடுப்பது நலம் தரும் , ஜாதகர் ஒரு 
சிறந்த ஆன்மீகவாதிகளிடம் ஆசியும் , தீட்சையும் பெறுவது அவசியம் , மேலும் செவ்வாய் இங்கு அமர்வது லக்கினம் ,  பூர்விகம் மற்றும்  பனிரெண்டாம் பாவக அமைப்பிற்கு அதிக பாதிப்பையும் வழங்கும் .



மகர லக்கினம் 


2 ம் பாவகம் கும்பத்தில் அமரும் செவ்வாய் ஜாதகருக்கு , நீண்ட ஆயுளையும் , வெளிநாடுகளில் இருந்து அதிக வருமானத்தையும், புதிய முயற்ச்சிகளையும் அதன் மூலம் ஜாதகர் பெரும் அதிக வருவாயினையும் , எதிர்பாராத செல்வ வளங்களையும் , முன்னேற்றத்தையும்  அபரிவிதமாக தரும் , மேலும் இன்சூரன்ஸ் தொழில் செய்வதால் குறிகிய காலத்தில் வெற்றி பெரும் யோகம் உண்டாகும் ,பொது மக்களை வாடிக்கையாளராக கொண்டு செய்யும் தொழில்களில் மிகப்பெரிய லாபமும் , முன்னேற்றமும் உண்டாகும் , மேலும் வண்டி வாகனம் , சொகுசு வீடு , சொத்து , நிலபுலன்கள் சேர்க்கை என்பது ஜாதகருக்கு விரைவானதாகவும் நிலையானதாகவும் நிச்சயம் கிடைக்க பெறுவார் , மேலும் செவ்வாய் இங்கு அமர்வது லக்கினம் , நான்காம் பாவகம் மற்றும்  லாப ஸ்தானம் எனும் அனைத்து  பாவகங்களுக்கு அதிக  நன்மைகளையும் , முன்னேற்றத்தையும் வாரி வழங்கும் .


4 ம் பாவகம் மேஷத்தில் ஆட்சி பெற்று அமரும் செவ்வாய் லக்கினம் , நான்காம் பாவகம் மற்றும்  லாப ஸ்தானம் எனும் அனைத்து பாவகங்களில் இருந்து கடுமையான பதிப்பையே தருவார் , குறிப்பாக குடியிருக்க நல்ல வீடு அமையாது , நல்ல வண்டி வாகனம் அமையாது , திடீர் இழப்புகளை தரும் , உடல் நிலை  அமைப்பிற்கு ரத்த சம்பந்தபட்ட நோய்களை தர கூடும் , மேலும் செவ்வாய் இங்கு அமரும் பொழுது பெண்களுக்கு அதிக உடல் உபாதைகளை வாரி வழங்குகிறது , அடிக்கடி மருத்துவ மனைக்கு செல்லும் சூழ்நிலையை தரும் , குழந்தை பாக்கியம் சற்றே தாமதமாகவே கிடைக்க பெறுவார்கள் , நல்ல சுக போக வாழ்க்கையை அனுபவிக்க அதிக தடைகள் உண்டாகும் , குடும்ப வாழ்க்கையில் அதிக இன்னல்களை அனுபவிக்க வேண்டி வரும் , மேலும் அதிர்ஷ்டமில்லா வாழ்க்கையாக அமைந்து விட வாய்ப்பு அதிகம் , மேலும் செவ்வாய் இங்கு அமர்வது லக்கினம் , நான்காம் பாவகம் மற்றும்  லாப ஸ்தானம் எனும் அனைத்து  பாவகங்களுக்கும் அதிக நன்மைகளை செய்வதில்லை .


7 ம் பாவகம் சிம்மத்தில் அமரும் செவ்வாய், ஜாதகருக்கு பனிரெண்டாம் பாவக அமைப்பிற்கு மட்டும் அதிக நன்மைகளை வாரி வழங்குவார் , திடீர் அதிர்ஷ்டம் மூலம் செல்வந்தன் ஆகும் யோகம் உண்டாகும் , நிறைய முதலீடு செய்வதால் அபரிவிதமான முன்னேற்றம் உண்டாகும் , வெளிநாடுகளில் இருந்து அபரிவிதமான யோகம் உண்டாகும் , நிறைய வருமானம் ஜாதகருக்கு வெளிநாடுகளில் இருந்தும் , வெளிநாடுகளில் தயாரிக்கும் பொருட்கள் மூலமும் கிடைக்க பெறுவார் , அல்லது அமர்ந்த இடத்தில் இருந்து கொண்டே நிறைய வருமான சம்பாதிக்கும் யோகத்தை தந்துவிடுவார் , சிறப்பான நிர்வாக திறமையால் பல தொழில்கள் செய்யும் யோகம் உண்டு , மேலும் இலக்கின அமைப்பிற்கும் , சொத்து , சுகம் , வண்டி வாகன யோகத்தில் ஜாதகருக்கு அதிக இன்னல்களை தரும் ,  மேலும் செவ்வாய் இங்கு அமர்வது லக்கினம் மற்றும்  நான்காம் பாவகம்  எனும்  அமைப்பிற்கு அதிக நன்மைகளை செய்வதில்லை, ஆனால் 11 பாவகத்திர்க்கு அதிக நன்மைகளை செய்கிறார் .


8 ம் பாவகம் கன்னியில் அமரும் செவ்வாய் , ஜாதகருக்கு நீண்ட ஆயுளையும் , நல்ல உடல் ஆரோக்கியத்தையும் , பொருளாதார வாழ்க்கையில் தன்னிறைவையும் , பல வெளிநாடுகள் சென்றுவரும் யோகமும் உண்டாகும் , தனது வாழ்க்கையில் பல தலை முறைக்கு சொத்து சேர்த்துவைக்கும் தன்மை ஜாதகருக்கு கிடைக்கும் வாய்ப்புகளை ஜாதகர் சரியாக பயன்படுத்தி கொள்வது சால சிறந்தது , மேலும் லாட்டரி யோகம் , புதையல் மூலம் பெரும் செல்வம் சேரும் யோகம் உண்டு , இருப்பினும் ஜாதகருக்கு குடியிருக்க நல்ல வீடு அமைவதில்லை , தனது தாயாருக்கு செய்யும் பாவத்தால் ஜாதகர் அதிகம் பாதிக்க பட வேண்டி வரும் , எனவே செவ்வாய் இங்கு அமர்வது 11 ம் வீட்டிற்கு மட்டும் அதிக நன்மைகளை வாரி வழங்கும் , லக்கினம் மற்றும் சுக ஸ்தான அமைப்பிற்கு அதிக பாதிப்பை தரும் . 


12 ம் பாவகம் மகரத்தில்  அமரும் செவ்வாய் ஜாதகருக்கு லக்கினம் , சுக ஸ்தானம் , லாப ஸ்தானம் எனும் மூன்று வீடுகளுக்கும் மிகுந்த யோக பலன்களையே தருகிறார் , நீண்ட ஆயுள் , நிறைவான கல்வி , நிலையான சொத்து சுக சேர்க்கை , வாழ்நாள் முழுவதும் அதிர்ஷ்ட வாழ்க்கை , எதிர்பாராத சொத்து சுக சேர்க்கை , தன்னம்பிக்கை , சுய கட்டுப்பாடு சுயமாக வாழ்க்கையில் முனேற்றம் பெரும் யோகம் , மற்றவர் வாழ்க்கையை மாற்றி அமைக்கும் பேராற்றல் , பூலோகத்தில் மனிதன் வாழ்வதற்கு தேவையான அனைத்து வசதி வாய்ப்புகளையும் வாரி வழங்குகிறார், எனவே செவ்வாய் இங்கு அமர்வது  லக்கினம் , நான்காம் பாவகம் மற்றும்  லாப ஸ்தானம் எனும் அனைத்து  பாவகங்களுக்கும் அதிக நன்மைகளை வாரி வழங்குகிறார் .


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வெள்ளி, 14 செப்டம்பர், 2012

நடப்பு திசா புத்தியில் கேட்சர கிரகங்களின் சம்பந்தமும் , அவை தரும் நன்மை தீமை பலன்களும் !



பொதுவாக ஒருவருடைய ஜாதகத்தை கணித்து பலன் சொல்லும்பொழுது , ஜோதிடர்கள் தற்பொழுது நடக்கும் திசை மற்றும் புத்தி சுய ஜாதகத்திற்கு ( லக்கினம் ) நன்மை செய்கிறதா ? தீமையான பலனை தருகிறதா ?  சந்திர ராசியை அடிப்படையாக வைத்து  சனி பகவன் , குரு பகவான் , ராகு கேது கிரகங்கள் கேட்சர நிலையில் ( ராசிக்கு ) நன்மை செய்கிறதா ? தீமையான பலனை தருகிறதா ? என்று ஜோதிட கணிப்பு செய்து (கணிதம் அல்ல ) பலன் சொல்கின்றனர்இது எந்த அளவிற்கு நடைமுறையில் ஒத்து வருகிறது , மேற்கண்ட முறையில் பலன் சொல்லும்பொழுது , ஜோதிடரை நம்பிவரும் நபர்களுக்கு நன்மை மற்றும் வாழ்க்கையில் முன்னேற்றம் பெற கூடுமா ? என்பதை பற்றி இந்த பதிவில் காணலாம் .

ஒருவருடைய ஜாதகத்தில் பலன் நிர்ணயம் செய்யும் பொழுது , ஜோதிடர்கள் பெரும்பாலும் லக்கினம் , நடப்பு திசை மற்றும் புத்தி , சந்திரனுக்கு கோட்சார கிரகங்களின் நிலை , இவற்றை அடிப்படையாக வைத்து பலன் சொல்லும் பொழுது நிச்சயம் அது சரியான பலனாக இருக்க வாய்ப்பே இல்லை , காரணம் ஒருவருடைய ஜாதக அமைப்பில் குறிப்பிட்ட திசை எந்த பாவக பலனை தருகிறது என்பதை தெரிந்தால் மட்டுமே சரியான பலனை சம்பந்த பட்ட ஜாதகருக்கு சரியாக சொல்ல முடியும் , மேலும் சம்பந்த பட்ட பாவகம் சுய ஜாதகத்தில் நல்ல நிலையில் இருக்கிறதா ? பாதிக்க பட்டு இருக்கிறதா ? அந்த பாவகத்துடன் சம்பந்தம் பெரும் கோட்சார கிரகங்கள் , நன்மையை செய்கிறதா , தீமையை செய்கிறதா என்பதை சரியாக கணிதம் செய்ய தெரிந்து இருந்தால் மட்டுமே , பலன் கேட்க வந்த நபருக்கு தெளிவான , சரியான பலனை சொல்ல முடியும்.

எடுத்து காட்டாக மேற்கண்ட ஜாதகத்தை எடுத்து கொண்டு தற்பொழுது நடை முறையில் உள்ள பலனை கணாலாம் மேலும் கேட்சர கிரகங்களின் பங்களிப்பு எந்த மாதிரியான பலனை தருகிறது என்பதை பற்றியும் பார்ப்போம் . 

இந்த தனுசு இலக்கின ஜாதகருக்கு தற்பொழுது நடக்கும் குரு திசை ( 25 /02 /2004 முதல் 25 /02 /2020 வரை ) 7 ம் பாவகம் லாப ஸ்தானம் எனும் 11 ம் வீட்டுடன் தொடர்பு பெற்று 11 ம் வீட்டின் பலனை தந்துகொண்டு இருக்கிறது , இதில் தற்பொழுது நடக்கும் சுக்கிரன் புத்தி ( 07 /01 /2012 முதல் 07 /09 /2014 வரை ) ஜாதகருக்கு 7 ம் பாவகம் லாப ஸ்தானம் எனும் 11 ம் வீட்டுடன் தொடர்பு பெற்று 11 ம் வீட்டின் பலனையே  தந்துகொண்டு இருக்கிறது , ஆக தற்பொழுது நடக்கும் குரு திசை சுக்கிர புத்தி ஜாதகருக்கு 11 ம் வீட்டு பலனை மட்டுமே செய்துகொண்டு இருக்கிறது , அடுத்ததாக இந்த 11 ம் வீடு ஜாதகருக்கு சர துலாம் ராசியில் கற்று தத்துவமாக அமைகிறது , மேலும் லக்கினத்திற்கு லாப ஸ்தானமாக வருகிறது எனவே தற்பொழுது நடக்கும் குரு தசை சுக்கிர புத்தி ஜாதகருக்கு 100 சதவிகித நன்மையை தந்துகொண்டு இருக்கிறது , மேலும் இந்த 11 ம் வீட்டுடன் தொடர்பு பெரும் கோட்சார கிரகமான சனிபகவானும் நன்மையே செய்கிறார் , எனவே ஜாதகருக்கு கேட்சார கிரகமும் நன்மையை செய்வதால் சம்பந்தபட்ட 11 ம் வீட்டில் இருந்து ஜாதகருக்கு நன்மை மட்டுமே நடைபெறும் .

 எந்தமாதிரியான பலன் எனில் துலாம் காற்று சர ராசி இந்த ராசியுடன் களத்திர பாவகம் சம்பந்தம் பெற்று பலன் தருகிறது ,களத்த்திர பாவகம் ஒருவருக்கு மக்கள் வழியில் தொடர்புகளையும் , வாழ்க்கை துணை வழி தொடர்புகளையும் , நண்பர்கள் வழி தொடர்புகளையும் தரும் , எனவே ஜாதகருக்கு இளம் வயதிலேயே திருமணம் நடந்தது , திருமணத்திற்கு முன்னராகவே மக்கள் தொடர்பு உடைய அரசு துறையில் வேலை அமைந்தது , நல்ல நண்பர்களாலும் , உறவுகளாலும் ஜாதகர் அதிக நன்மைகளை பெற்றுகொண்டு இருக்கிறார் , அரசு துறையில் தற்பொழுது சில நாட்களுக்கு முன் பதவி உயர்வினை பெற்றிருக்கிறார் , இதற்க்கு காரணம் தற்பொழுது சனிபகவான் கேட்சர ரீதியாக ௧௧ ம் வீட்டுடன் தொடர்பு பெற்று அந்த வீட்டிற்கு 100 சதவிகிதம் நன்மையை செய்வதே .

மேலும் துலாம் சர காற்று ராசியாக இருப்பதால் பலன்கள் எல்லாம் விரைவாகவும் , உறுதியாகவும் நடை பெறுகிருகிறது, காற்று தத்துவமாக இருப்பதால் ஜாதகரின் அறிவாற்றல் சிறப்பாக செயல் படுகிறது இதானால் ஜாதகர் தனக்கு வரும் ஒவ்வொரு வாய்ப்பினையும் சரியாக பயன் படுத்தி கொண்டு வாழ்க்கையில் 200 சதவிகித வெற்றிகளை பெற்றுகொண்டு இருக்கிறார் .

 ஒருவேளை மேற்கண்ட ஜாதகருக்கு மகர லக்கினமாக அமைந்து ,  7 ம் பாவகம் லாப ஸ்தானம் எனும் 11 ம் வீட்டுடன் தொடர்பு பெற்று  பலனை நடத்தி இருந்தால் ஜாதகர் பாடு பெரும் திண்டாட்டமாக மாறியிருக்கும் , காரணம் சர லக்கினத்திற்கு 11 ம் பாவகம் பாதக ஸ்தானம் ஆகும் , ஒருவருடைய ஜாதகத்தில் நடைபெறும் திசை புத்தி பாதக ஸ்தான பலனை நடத்தினால் ஜாதகர் நிலை மிகவும் மோசமாக மாறிவிடும் , மேலும் கோட்சாரத்தில் சம்பந்தம் பெரும் அனைத்து கிரகங்களும் கடுமையான பாதிப்பை மட்டுமே செய்யும் இதில் மாற்றம் இல்லை .

எனவே ஒருவருடைய ஜாதகத்தில் பலன் நிர்ணயம் செய்யும் பொழுது நடக்கும் திசை மற்றும் புத்தி எந்த வீட்டின் பலனை தருகிறது , அது நன்மையான பலான ? தீமையான பலனா ? என்று முதலில் நிர்ணயம் செய்ய வேண்டும் , அதன் பிறகு அந்த வீட்டுடன் கோட்சாரத்தில் எந்த கிரகமாவது  சம்பந்தம் பெறுகிறத என்று பார்க்க வேண்டும் , அப்படி கோட்சாரத்தில் ஏதாவது கிரகம் சம்பந்தம் பெற்றால் அது அந்த பாவகத்திர்க்கு நன்மை செய்கிறதா ? தீமை செய்கிறதா என்று காண வேண்டும் , மேற்கண்ட முறையில் ஜாதக பலன் நிர்ணயம் செய்தால் ஜாதகருக்கு நிச்சயம் தெளிவான பதிலை நாம் தர முடியும் . 
மேலும் லக்கினத்தை வைத்து பலன் நிர்ணயம் செய்வதே சரியானது , ராசியை வைத்தது பலன் சொல்லுவது ஜாதக பலனை சரியாக சொல்ல உதவி புரியாது , காரணம் சில பேர் ஏழரை சனி , அஷ்டமத்து சனி , ஜென்ம குரு , ராகு கேது என்று பலன் நிர்ணயம் செய்கின்றனர், இதில் மேற்கண்ட கிரகங்கள் ஒருவருடைய சுய ஜாதகத்தில் நடைபெறும் திசை எந்த வீடுகளின் பலனை தருகிறதோ அந்த வீட்டுடன் கோட்சார சம்பந்தம் பெற்றால் மட்டுமே பலன் தரும் இல்லை எனில் மேற்கண்ட கிரகங்களை பற்றி நாம் எந்த கவலையும் கொள்ள தேவையில்லை , சந்திரனை வைத்து கோட்சார பலனை நிர்ணயம் செய்வது நடை முறையில் நிச்சயம் பலன் தருவதில்லை என்பதே முற்றிலும் உண்மை .


ஜாதக பலன் நிர்ணயம் செய்யும்பொழுது லக்கினத்தை அடிப்படையாக கொண்டு பலன் நிர்ணயம் செய்வது 100 சதவிகிதம் சரியான ஜாதக பலனை தரும் .


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வியாழன், 13 செப்டம்பர், 2012

ஜோதிட ஆலோசனை : குடும்பம் மற்றும் களத்திர பாவகம் பாதிக்கபட்டால் ஜாதகரின் நிலை என்ன ?


கேள்வி :

எனது குடும்ப வாழ்க்கையில் நிம்மதி உண்டா ? பிரிந்தவர்கள் ஒன்று சேர வாய்ப்பு உண்டா ? எதிர்காலம் எப்படி இருக்கும் ?

பதில் :

தங்களது சுய ஜாதக அமைப்பில் களத்திர ஸ்தானம் எனும் ஏழாம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது , களத்திர வழியில் இருந்து 200 சதவிகித இன்னல்களை தரும் , குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் பாவகம் தீடீர் இழப்பை தரும் எட்டாம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது குடும்ப வாழ்க்கையில் அதிக தீமையை தரும் அமைப்பாக இருப்பது தங்களின் துரதிர்ஷ்டமே , மேலும் தங்களின் வாழ்க்கை துணையின் ஜாதகத்திலும் குடும்ப ஸ்தானம் பாதிக்க படுவது , குடும்ப வாழ்க்கையில் அடிக்கடி இன்னல்களை அனுபவிக்க வேண்டும் என்பதையே காட்டுகிறது , மேலும் தங்களுடைய ஜாதக அமைப்பில் பல தார யோகம் வேறு , இதனால் அதிகம் பாதிக்க படுவது தாங்களே என்பதை நினைவில் கொள்ளுங்கள் .

எனவே தங்களது வாழ்க்கை துணையின் வழியில் வரும் இன்னல்களை ஏற்றுக்கொண்டு சந்தோசமாக வாழ கற்றுக்கொள்வதே சிறப்பு , இல்லை எனில் அவருக்கு விவாகரத்து கொடுத்து விட்டு தாங்கள் மறுமணம் செய்துகொள்வதும் ஒரு சிறந்த வழியே , காரணம் தங்களது ஜாதகத்தில் இரண்டாவது திருமணத்தை குறிக்கும் பாவகங்கள் நல்ல நிலையில் இருக்கிறது , இது தங்களுக்கும் நன்மை செய்யும் , தங்களது முதல் மனைவிக்கும் நன்மை செய்யும் , இருவரின் வாழ்க்கையும் நலமாக அமையும் . மேலும் சில அறிவுரைகளை தங்களது தனிப்பட்ட கவனத்திற்கு மின் அஞ்சலில் அனுப்பி வைத்திருக்கிறோம் .

பொதுவாக குடும்பம் மற்றும் களத்திரம் இரண்டும் பாதிக்க பட்ட நபர்களுக்கு , திருமணம் மற்றும் குடும்ப வாழ்க்கை சிறப்பாக அமைவதில்லை ,சம்பந்த பட்டவர்  ஜாதக அமைப்பில் இரண்டு பாவகங்களும் கடுமையாக பாதிக்க படுவதால் , ஜாதகர் அதிக பொறுமையாகவும் , கோபத்திற்கு ஆட்ப்படாமலும் குடும்பம் நடத்துவது அவசியம், காரணம் சம்பந்தபட்டவரின்  ஜாதக அமைப்பில் குடும்பம் மற்றும் களத்திரம் பாதிக்க படுவதே ,ஆக ஜாதகரின் வினை பதிவே இதற்கெல்லாம் காரணம் , மேலும் இந்த காலகட்டங்களில் ஜாதகர் தன்  மனைவிக்கு துரோகம் இளைப்பது மேலும் மேலும் சிக்கல்களையே தரும் குடும்ப வாழ்க்கையில் நிம்மதியில்ல நிலையையே உருவாக்கும் , எனவே மனம் போன போக்கில் வாழ்க்கை நடத்தாமல் , அறிவின் வழியில் வாழ்க்கை நடத்துவது ஜாதகரின்  குடும்ப வாழ்க்கையை  சிறப்பாக அமைத்து தரும் .

ஒருவர் தனது வாழ்க்கை துணைக்கு துரோகம் இழைத்தால், ஜாதகருக்கு நடக்கும் தீமையான பலன்களை பற்றி முதலில் தெரிவிப்பது இந்த இடத்தில் அவசியமாகிறது , தனது சுய ஜாதகத்தில் களத்திரம் , மற்றும் குடும்ப ஸ்தானங்கள் பாதிக்க படும் பொழுதே ஜாதகருக்கு தனது வாழ்க்கை துணைக்கு துரோகம் செய்யும் சூழ்நிலை உருவாகிறது , அப்படிபட்ட ஜாதகருக்கு முதலில் நல்ல நண்பர்கள் சகவாசம் இல்லாமல் போய்விடும் , துர் போதனை செய்யும் நண்பர்களால் சூழப்படும் நிலைக்கு தள்ளப்படுவார் , அறிவு சரியான சிந்தனை செய்யாது  முற்றிலும் எதிர் மறை எண்ணங்களால் தவறான பழக்க வழக்கங்களுக்கு ஆட்ப்படும் நிலை வரும்.

 தொழில் முறையில் நல்ல கூட்டாளிகள் அமைய மாட்டார்கள் , கூட்டு தொழில் முற்றிலும் முடங்கும் சூழ்நிலையை தரும் , வரும்  வருமானம் அனைத்தும் தேவையில்ல செலவுகளால் வீண் விரையம் ஆகும் ,மேலும் சொந்த பந்தங்கள் , உறவுகள் ஜாதகரை வெறுத்து ஒதுக்கும் தன்மை ஏற்ப்படும் , மேலும் பொதுமக்களிடம் நீங்காத அவ பெயர் உண்டாகும் , சமுதாயத்தில் மதிப்பற்ற தன்மை உண்டாகும் , தேவையில்ல தீய பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி வாழ்க்கையில் துன்பம் அடையும் நிலைக்கு தள்ளப்பட கூடும் , இவையெல்லாம் தனது வாழ்க்கை துணைக்கு துரோகம் செய்வதால் ஜாதகர் பெறும் பலன்கள் , இது ஆண்களுக்கு மட்டும் அல்ல பெண்களுக்கும் கூட பொருந்தும் .


பொதுவாக குடும்பம் எனும் இரண்டாம் வீடும் , களத்திரம் எனும் ஏழாம் பாவகமும் ஒரு ஜாதகருக்கு இரண்டு விதமான பலனை தரும் .

இதில் குடும்ப ஸ்தானம் ஜாதகருக்கு கை நிறைய வருமானத்தையும் ஜாதகரின் வார்த்தைக்கு மதிப்பு மரியாதையையும்  , அமைதியான மகிழ்ச்சியான குடும்ப வாழ்வினையும், வாக்கு வன்மையும் , பொருளாதாரத்தில் அபரிவிதமான முன்னேற்றத்தையும் , சகல வசதிமிக்க வாழ்க்கையும் பெற்றுத்தரும் 

களத்திரம் ஸ்தானம் வாழ்க்கை துணை வழியில் முன்னேற்றத்தையும் , கூட்டு தொழில் வகையில் அபரிவிதமான செல்வாக்கினையும் வெற்றியையும் , நல்ல நண்பர்கள் சேர்க்கையும் , பொதுமக்களிடம் நல்ல பெயரையும் , சமுதாயத்தில் மதிப்பு மரியாதையும் பெற்று தரும் .

மேற்கண்ட அமைப்பின் படி ஒரு ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் குடும்பம் மற்றும் களத்திரம் பாதிக்க பட்டு இருப்பின்,  ஜாதகர்  பகவான் ஸ்ரீ ராம சந்திர மூர்த்தியை  போல் இருக்க வேண்டும் , தனது மனைவி வழியில் இருந்து வரும் இன்னல்களை மனமுவந்து ஏற்றுக்கொண்டு வாழ்க்கை துணை கடுமையாக பேசினாலும் பொறுமையை கடைப்பிடித்து, பரிசுத்தாமான அன்பை மட்டுமே தனது வாழ்க்கை துணைக்கு கொடுப்பது ஜாதகரின் குடும்பம் மேன்மை பெறவும் ,மகிழ்ச்சிகரமானதாக அமையவும் உறுதுணை புரியும்.

 மேலும் ஜாதகர் வாழ்வில் ஒழுக்கம் தவறமால்  இருந்தால் , ஸ்ரீ ராமர் பட்டாபிஷேகம் செய்ததிற்கு ஒப்பான வாழ்க்கையை நிச்சயம் பெறுவார் , ஏனெனில் சம்பந்த பட்ட பாவக  வழியில் இருந்து வரும் வினை பதிவை,  ஜாதகர் தனது வாழ்க்கை துணை தரும் இன்னல்கள்  மூலம் கழித்து கொள்வதால் , ஜாதகரின் குடும்ப ஸ்தானமும் , களத்திர ஸ்தானமும் 100 சதவிகிதம் வலிமை பெற்று சம்பந்தபட்ட பாவக வழியில் இருந்து நன்மை தரும்  என்பதே உண்மை, மேலும் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவசர பட்டு எடுக்கும் முடிவுகள் வாழ்க்கையை திசை திருப்பி விடும் .

இந்த உண்மையை நமது மக்களுக்கு தெளிவாக உணர்த்தும் இதிகாசமே ராமாயணம் , ஆனால் நாம்  விடியும் வரை ராமாயணம் கேட்டுக்கொண்டு இருந்து விட்டு , விடிந்தவுடன் சீதைக்கு ராமன் சித்தப்பனா ? என்றல்லவோ கேள்வி கேட்கிறோம் , ஒருவரின் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்க சில பெரியவர்கள் ராமாயணத்தில் சுந்தரகண்டத்தை படி என்பார்கள் , அதை படிப்பதால் மட்டுமே குடும்பத்தில் நிம்மதி கிடைத்து விடாது , ராமாயணம் சொல்லும் கருத்து மற்றும்  மறைமுக பொருளை உணர்ந்து வாழ்க்கையை வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே நமது முன்னோர்களின் ஆவல் , நாமும் வாழ்க்கையின் உண்மையை  உணர்வோம் , நமது குடும்பத்தை மகிழ்வாக வைத்திருப்போம் . 

 வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

செவ்வாய், 11 செப்டம்பர், 2012

சுய தொழில் துவங்குமுன் ஒருவர் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் !



 பொதுவாக சிலர் புதியாதாக தொழில் துவங்கும் பொழுது கோட்சார கிரகங்களின் பலனை அடிப்படையாக கொண்டும் , நடப்பு திசை புத்தி ஆகியவற்றை அடிப்படையாக கொண்டும் தொழில் துவங்கி விடுகின்றனர் , இது புதிதாக அல்லது  சுயமாக தொழில் துவங்க ஏற்றதல்ல , காரணம் ஒருவருடைய ஜாதக அமைப்பில் சில பாவகங்கள் நல்ல நிலையில் இருப்பது தொழில் சிறப்பாக நடைபெற உதவி புரியும் , குறிப்பாக தொழில் துவங்கிய சில நாட்களிலேயே அதிக பாதிப்புகளை சந்தித்து மூடுவிழ காணும் சூழ்நிலை வருவதற்கு பொதுவான ஜாதக பலனையும் ,கோட்சார பலனையும் அடிப்படையாக வைத்து செய்வதாலேயே இந்த நிலை , சரி ஒருவர் சுய தொழில் ,அல்லது கூட்டு தொழில் புதிதாக துவங்கினால் சிறப்பான முன்னேற்றமும் , தொழில் வளர்சியும் பெற என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் காணலாம் .

ஒருவர் சுய தொழில் செய்யவோ அல்லது கூட்டு தொழில் செய்யவோ, அவரது ஜாதகத்தில் லக்கினம் , நான்காம் பாவகம் , ஐந்தாம் பாவகம் , ஏழாம் பாவகம் , ஜீவன ஸ்தானம் எனும் பாவகங்கள் மிகவும் நல்ல நிலையில் இருப்பது அவசியம் , ஏனெனில் ஜீவனம் எனும் தொழில் ஸ்தானம் நல்ல நிலையில் செயல் பட மேற்கண்ட பாவகங்கள் உதவி செய்தால் மட்டுமே தொழில் விருத்தி பெரும் , மேலும்  ஒவ்வொரு பாவகமும் ஜீவன ஸ்தானத்துடன் எவ்வாறு சம்பந்தம் பெறுகிறது என்பதை பற்றி இனி பார்ப்போம் .

லக்கினம் ஜீவன ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று நல்ல நிலையில் இருப்பது :

ஜாதகரின் நிலையான தன்மையை குறிக்கும் , நிலையான புத்தி தெளிவான சிந்தனை , புத்திசாலித்தனமாக  சரியாக முடிவு எடுக்கும் தன்மை , தொழில் முன்னேற்றத்திற்க்காக அயராது பாடுபடும் குணம் , எவரின் உதவியும் பெறாமல் சுயமாக முன்னேற்றம் பெரும் தன்மை , சுய தொழில் செய்யும் பொழுது தனக்கு என தனித்தன்மையுடன் ஒரு இடத்தை தக்க வைத்துகொள்ளும் திறன் , எப்பொழுதும் தொழில் முன்னேறத்தை பற்றிய சிந்தனையுடன் சுறு சுறுப்பாக இயங்கும் தன்மை , தொழில் புதுமையான முறைகளை அறிமுகம் செய்யம் தனி திறமை , ஜாதகருக்கு அமையும் தொழில் சிறப்பான முன்னேற்றம் பெரும் யோகம் , அரசு வழியில் இருந்து வரும் ஆதாயம் , என ஜாதகருக்கு சிறப்பான முன்னேற்றத்தை தர இந்த லக்கினம், ஜீவன ஸ்தானத்திற்கு நல்ல நிலையில் இருப்பது அவசியம் , மேலும் இது ஜாதகர் முதலீடு செய்து உற்பத்தி தொழில் செய்வதை குறிக்கும்.

நான்காம் பாவகம்  ஜீவன ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று நல்ல நிலையில் இருப்பது :

ஜாதகரின் தொழில் முறை சொத்து , வண்டி வாகனம் , அசையும் சொத்து அசையா சொத்து , போக்குவரத்து சரக்கு வாகனங்கள் , மக்களை ஏற்றி செல்லும் இலகுரக கனரக வாகனங்கள் , உற்பத்தி செய்த பொருட்களை மற்ற இடங்களுக்கு எடுத்து செல்லும் அமைப்பு , பொருட்களை எவ்வித பாதிப்பும் இல்லாமல் கொண்டுசெல்லும் தன்மை , மேலும் தனித்தனியாக பகிர்ந்து விற்பனை செய்யும் முறைகள் , என ஜாதகர் செய்த உற்பத்தி பொருட்களை சரியான நேரத்தில் சரியான இடங்களுக்கு கொண்டு சென்று சேர்ப்பிக்கும் பணிகளில் நான்காம் பாவகம் நல்ல நிலையில் இருப்பவர்களுக்கு சிறப்பாக அமையும் , மேலும் நமது நாட்டில் சரியான போக்குவரத்து வசதி  இல்லை என்றால் வாழ்க்கையே ஸ்தம்பித்துவிடும் , எனவே மேற்கண்ட பாவகம் நல்ல நிலையில் இருப்பது ஜாதகர் செய்த முதலீடுகளால் கிடைக்கும் பொருட்கள் இயந்தர தளவாடங்கள் , சொத்துகள் , நிலம் இடம் ஆகியவற்றை குறிப்பிடும் பாவகமாக நான்காம் பாவகம் செயல் ஆற்றுகிறது , மேலும் இது ஜாதகர் முதலீடு செய்து உற்பத்தி செய்த பொருட்களை சரியான இடத்திற்கு எடுத்து செல்வதை குறிக்கும் .

பூர்வ புண்ணியம்  ஜீவன ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று நல்ல நிலையில் இருப்பது :

ஜாதகர் பூர்வீகத்தில் தொழில் செய்வதால் வரும் முன்னேற்றத்தை பற்றி குறிப்பிடும் பாவகம் , இந்த பாவகம் நல்ல நிலையில் இருந்தால் ஜாதகர் சுய தொழில் பூர்விகத்தில் இருப்பதாலும் , தொழில் செய்வதாலும் வெற்றி மேல் வெற்றி கிடக்கும் ,எடுத்துகாட்டாக பரம்பரை பரம்பரையாக ஒரே இடத்தில் சிறப்பாக தொழில் செய்துகொண்டு இருப்பவர்கள் ஜாதக அமைப்பில் இந்த பாவகம் நல்ல நிலையில் அமைந்து நன்மைகளை வாரி வழங்கி கொண்டு இருக்கும் , ஒருவேளை இந்த பாவகம் பாதிக்க பட்டால் பூர்வீகத்தில் இருந்து அதிக தொலைவில் சென்று தொழில் செய்வதால் வெற்றி கிட்டும் .

ஏழாம் பாவகம்  ஜீவன ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று நல்ல நிலையில் இருப்பது :

நேரடியாக மக்களிடம் தொடர்புகொள்ளும் தொழில்களில் ஜாதகருக்கு மிகப்பெரிய வெற்றியை தரும் , தனது உற்பத்தி பொருட்களை மக்களிடம் நேரடியாக கொண்டு சேர்த்து எவ்வித விளம்பரமும் இல்லாமல் பொதுமக்கள்  மூலம்  தனது உற்பத்தி பொருட்களுக்கு வாய் வழி விளம்பரம் மூலம் மிகப்பெரிய வெற்றியை தரும் , மேலும் ஜாதகர் தனியாக தொழில் செய்வதா ? அல்லது கூட்டு தொழிலா ? என்பதை சரியாக நிர்ணயம் செய்ய இந்த பாவகம் , சரியான பதிலை தரும் . மேலும் பொதுமக்களிடம் தனது பொருட்களுக்கு சிறப்பான வரவேற்ப்பை தரும் , மேலும் இது ஜாதகர் முதலீடு செய்து உற்பத்தி செய்த பொருட்களை நேரடியாக மக்களிடம் கொண்டு சேர்ப்பதை குறிக்கும் .

பத்தாம் பாவகம் ஜீவன ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று நல்ல நிலையில் இருப்பது :

ஜாதகர் சுயமாக தொழில் செய்து பெறும் வெற்றிகளையும் , ஜீவன முன்னேற்றத்தையும்  கீர்த்தியையும் நிர்ணயம் செய்யும் பாவகமாக பத்தாம் வீடு அமைகிறது , சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவது ஜாதகரின் தொழில் அமைப்பை தெளிவாக காட்டும் , மேலும் தனது தகப்பனார் செய்து வந்த தொழிலை ஜாதகர் நிர்வாகிக்கும் அமைப்பை பற்றி தெளிவாக தெரிவிப்பது ஜீவன பாவகமே ,  மேலும் அந்த ஜீவன வழியில் இருந்து ஜாதகர் பெரும் யோக நிலையை பற்றி தெளிவாக தெரிந்து கொள்ள இந்த பாவகம் சிறப்பாக உதவி செய்யும் , ஒருவர் சுய தொழில் செய்யலாமா ? அடிமை தொழிலே  சிறப்பானதா ? என்பதை நிர்ணயம் செய்யும் இடம் இது , இந்த பாவகம் நல்ல நிலையில் இருக்கும் ஜாதகர் அனைவரும் சுய தொழில் செய்வதே மிகுந்த நன்மை தரும் . மேலும் இது ஜாதகர் முதலீடு செய்து உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை செய்வதால் பெரும் வாழ்க்கை முன்னேற்றத்தையும் , பொருளாதார முன்னேற்றத்தை பற்றி தெளிவாக குறிப்பிடும் இடம் இந்த ஜீவன பாவகமே .

தொழில் அமைப்புகள் 

உலகத்திலேயே மூன்று விதமான தொழில் அமைப்புகள் மட்டுமே உள்ளன அவையாவன 1 ) உற்பத்தி தொழில்கள் 2 ) உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை செய்வது 3 ) விற்பனை செய்த பொருட்களை பராமாரிப்பது ( அதாவது உற்பத்தி , விற்பனை , பராமரிப்பு ) என்று அனைத்தும் இம்மூன்றில் அடங்கிவிடும் . இதில் ஜாதகர் எதை தொழிலாக செய்து வாழ்க்கையில் வெற்றி பெறுவது என்பதை சுய ஜாதகம் கொண்டு தொளிவாக தெரிந்து கொண்டு , அதை தொழிலாக செய்தால் நிச்சயம் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

சுய ஜாதக அமைப்பில் பாதிக்க பட்ட பாவகங்களில் இருந்து, நன்மை பெற ஜாதகர் என்ன செய்ய வேண்டும் ! பாகம் 1





பொதுவாக ஒருவருடைய ஜாதக அமைப்பில் நவக்கிரக அமைப்பால் , லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்கள் பாதிப்படைந்து இருக்கும் எனில் , அந்த  பாவகங்களின் பலன்களை நடப்பு திசை அல்லது எதிர்வரும் திசை தருமாயின் , இதனால் ஜாதகர் குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து துன்பங்களையும் , கெடுதலான பலன்களையும் அனுபவிக்க வேண்டி வரும் , இதையே பல ஜோதிடர்கள் தோஷம் என்று சொல்கின்றனர் , மேலும் அப்படி வரும் தீமையான பலன்களில் இருந்து ஒரு ஜாதகர் எப்படி தப்பிப்பது , தீமையான பலன்களில் இருந்து விடுபட்டு கர்ம வினை பதிவினை கழித்து கொள்வது , சம்பந்தபட்ட பாவக வழியில் இருந்து நன்மை பெறுவது எப்படி என்று இந்த பதிவில் காணலாம் . அதாவது பரிகாரம் தேடிக்கொள்வது எப்படி என்பதை பார்க்கலாம் )

லக்கினம் பாதிக்க பட்டு நடப்பு திசை பலனை தருமாயின் :


ஜாதகர் சுயமாக முடிவெடுக்காமல் , குடும்பத்தில் வயது முதிர்ந்தவர்கள் , அனுபவசாலிகளிடம் ஆலோசனை பெற்று செய்வது காரியங்களில் 100 சதவிகித வெற்றியை தரும் , போதை வஸ்துகளின் பக்கம் தலை வைத்து படுக்காமல் இருப்பது நல்லது , உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது மிகுந்த நன்மையை தரும் , மேலும் மனதை அலைய விடாமல் ஒருநிலை படுத்தி தன்னம்பிக்கையை வளர்த்துகொல்வதும் , சுய கட்டு பாட்டுடன் வாழ்க்கையை நடத்துவதும் , நல்ல பழக்க வழக்கங்களை கடை பிடித்து வாழ்வதும் நிச்சயம் தீமையான பலன்களில் இருந்து காப்பாற்றி , நன்மை தரும் , மேலும் விழிப்புணர்வுடன் இருப்பது ஜாதகருக்கு மிகப்பெரிய வெற்றியை தரும் .


இரண்டாம் பாவகம்  பாதிக்க பட்டு நடப்பு திசை பலனை தருமாயின் :


ஜாதகர் அளவறிந்து செலவு செய்வதும் , தேவையற்ற செலவுகளை குறைத்து கொள்வதும் ,வீண் ஆடம்பரங்களை களைந்து எளிமையான வாழ்க்கையை வாழ பழகி கொள்வது அவசியம் , இல்லையெனில் அதிக துன்பம் வந்து சேரும் , மேலும் தாம்பத்திய வாழ்க்கையில் வாழ்க்கை துணையுடன் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் அவர்களுக்கு நன்மை மட்டுமே செய்ய வேண்டும் , வாழ்க்கை துணை தங்களை மனம் நோகும் படி செய்தாலும் அவர்களை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு நன்மை செய்து வாழ்க்கை நடத்த வேண்டும் , குறிப்பாக தேவையில்லாமல் பேசகூடாது , இதனால் மன நிம்மதி கெடும் , யாரிடமும் அதிகம் பேசாமல் அமைதி காப்பது தங்களுக்கும் நல்லது , தங்களை சார்ந்தவருக்கும் நல்லது .


மூன்றாம்  பாவகம்  பாதிக்க பட்டு நடப்பு திசை பலனை தருமாயின் :


சகோதர வழயில் இருந்து வரும் இன்னல்களையும் , துன்பங்களையும் ஏற்றுகொள்வது ஜாதகரீதியாக மிகப்பெரிய நன்மைகளை வாரி வழங்கும் , குறிப்பாக எடுக்கும் முயற்ச்சிகளில் சரியாக கவனம் செலுத்துவது குறிப்பிட்ட காரியத்தில் வெற்றியை தரும் , தேவையில்லாமல் பெண்களிடம் பேசுவது ஜாதகருக்கு அதிக சிக்கல்களை உருவாக்கும் , மன நிம்மதி கெடும் தேவையில்லாத வீண் முயற்ச்சிகள் எடுத்து தோல்வியை தழுவ வேண்டி வரும் , திட்டமிடாத செயல்களால் நிறைய தோல்விகளை சந்திக்க வேண்டிவரும் , மேலும் சரியான உண்மை  தகவல்களை ஜாதகர் புரிந்துகொள்ள முடியாத நிலைக்கு ஆட்ப்படலாம் , இதனால் தவறான முடிவு அவசரப்பட்டு எடுத்து சிக்கல்களை உருவாக்கி கொள்ள கூடும் எனவே எதிலும் நிதான போக்கை கடை பிடிப்பது அவசியம் , பொறுமையுடன் இருப்பது சகல நலன்களையும் தரும் .

நான்காம் பாவகம்  பாதிக்க பட்டு நடப்பு திசை பலனை தருமாயின் :

ஜாதகர் குடியிருக்கும் வீடு தனக்கு உகந்த அமைப்பில் இருக்கிறதா என்று சரியான ஜோதிடரின் மூலம் ஆலோசனை பெற்று , தனக்கு உகந்த வாயிர்ப்படி அமைந்த வீடுகளில் இருப்பது சகல நலன்களையும் தரும் , தனது பெயரில் , வீடு , வண்டி , வாகனம் ஆகியவற்றை வைத்து கொள்ளாமல் இருப்பது நல்லது , தனது தாய்க்கு ஏதாவது உடல் நிலை பிரச்சனை ஏற்ப்பட்டால் உடனடியாக ஓடி சென்று கவனித்துகொள்வது நான்காம் வீட்டு பாதிப்பான பலனில் இருந்து காப்பாற்றும் , மேலும் வாகனங்களில் செல்லும்பொழுது அதிக கவனமுடன் வாகனத்தை இயக்குவது நலம் தரும் , அல்லது வாகன ஓட்டுனரை பணிக்கு நியமித்து கொள்வது சால சிறந்தது , மற்றவரிடம் பழகும் பொழுது கோப உணர்வை காட்டாமல் , அன்பாக பேசுவது நலம் தரும் .

ஐந்தாம் பாவகம்  பாதிக்க பட்டு நடப்பு திசை பலனை தருமாயின் :

ஜாதகர் தனது பூர்வீகம் எதுவோ அந்த இடத்தை விட்டு வெகு தொலைவில் சென்று ஜீவனம் செய்வது மிகுந்த நன்மை தரும் , ஐந்தாம் பாவகம் பாதிக்க பட்டால் ஜாதகர் தனது பூர்வீகத்தை விட்டு வெளியில் செல்வது ஒன்ற சரியான தீர்வாக இருக்க முடியும் , மேலும் தனது குழந்தைகளால் வரும் இன்னல்களை ஜாதகர் ஏற்றுக்கொள்வதும் , முறையாக குலதெய்வ வழிபாட்டினை மேற்க்கொல்லுவதும் நிச்சயம் இந்த பாவக வழியில் இருந்து அதிக நன்மைகளை வாரி வழங்கும் , குறிப்பாக அமாவசை தினங்களில் குலதெய்வ கோவில்களுக்கு சென்று முன் பின் தெரியாத மக்களுக்கு அண்ண தானம் செய்து வழிபடும் பொழுது ஜாதகருக்கு மேற்கண்ட பாவக வழியில் இருந்து நிச்சயம் நன்மை தரும் , இதனால் பூர்வ புண்ணிய ஸ்தானம் விரைவில் வலிமை பெரும் .

ஆறாம் பாவகம்  பாதிக்க பட்டு நடப்பு திசை பலனை தருமாயின் :

ஜாதகர் யாரிடமும் தேவையின்றி கடன் வாங்காமல் , கொடுக்காமல் இருப்பது மிகுந்த நன்மை தரும் , உடல் நிலையில் அதிக கவனம் செலுத்துவது பெரிய உடல் நிலை பாதிப்பில் இருந்து காப்பாற்றும் , இந்த கால கட்டங்களில் சிறு முதலீடு செய்வது நிச்சயம் இழப்பையே தரும் , மன நலம் கெடும் , இந்த காலகட்டங்களில் ஜாதகர் தீய பழக்க வழக்கங்களுக்கு ஆட்ப்படாமல் இருப்பது நன்மை . இல்லையெனில் மீள தீய பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகும் சூழ்நிலையை தரும் , யாவரிடமும் பகைமை பாராட்டாமல் சுகுமுமான போக்கை கடைபிடிப்பது சால சிறந்தது , மேலும் மற்றவருக்கு ஜாமீன் ஏற்காமல் இருந்தால் ஜாதகரின் பெயருக்கு எவ்வித களங்கமும் வர வாய்ப்பிருக்காது .




வாழ்க வளமுடன்

ஜோதிடன் வர்ஷன்
9443355696