சனி, 15 ஜூன், 2013

குருபெயர்ச்சி பலன் நிர்ணயம் , சுய ஜாதகத்தில் குரு தரும் யோக அவயோக பலன்களும் !



குருபெயர்ச்சி பலன்களை நிர்ணயம் செய்யும் பொழுது, ராசியை வைத்து நிர்ணயம் செய்வது சுய ஜாதக ரீதியான பலன்களை தெளிவாக துல்லியமாக நிர்ணயம் செய்ய இயலாது என்பதே உண்மை , ஒருவருடைய சுய ஜாதக அமைப்பின் படி லக்கினம் எதுவாக அமைகிறதோ அதை அடிப்படையாக வைத்தும் , தற்பொழுது நடக்கும் திசை மற்றும் புத்தி எந்த பாவகத்தின் பலனை நடத்துகிறதோ, அந்த பாவகத்துடன் தற்பொழுது பெயர்ச்சி அடைந்திருக்கும் குருபகவான் எவ்வித தொடர்பை பெறுகிறார் ( 1,5,7,9 ) என்பதை வைத்தே குருபெயர்ச்சியை பலனை நிர்ணயம் செய்வது சரியான முறையாக இருக்கும், மேலும் சுய ஜாதக ரீதியான துல்லியமான பலனை நிர்ணயம் செய்யமுடியும்.

எடுத்துகாட்டாக :




 மேற்கண்ட சிம்மலக்கின ஜாதகருக்கு தற்பொழுது நடக்கும், குரு திசை மற்றும் புத்தி எந்த பாவகத்தின் பலனை தருகிறது என்பதை தெளிவாக தெரிந்தால் மட்டுமே இந்த ஜாதகருக்கு தற்பொழுது நடை பெற்று இருக்கின்ற குருபெயர்ச்சி ஜாதகருக்கு எந்த மாதிரியான நன்மை தீமை பலன்களை தருகிறது என்பதை நிர்ணயம் செய்ய முடியும்.

தற்பொழுது நடக்கும் குருதிசை ஜாதகருக்கு 7,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று நன்மையான பலனை தந்துகொண்டு இருக்கிறது , இந்த குருதிசையில் தற்பொழுது நடக்கும் ராகு புத்தி 1,3,5,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 200 சதவிகித தீமையான பலனை தந்துகொண்டு இருக்கிறது, மேற்கண்ட பாவகங்களுடன் தற்பொழுது பெயர்ச்சி அடைந்துள்ள குருபகவான் 11ம் பாவகத்தில் அமர்ந்து நன்மையான பலன்களையும்,3ம் பாவகத்தை பார்வை செய்யும் அமைப்பில் நன்மையான பலன்களையும் , 5ம் பாவகத்தை பார்வை செய்யும் அமைப்பில் தீமையான பலன்களையும், 7ம் பாவகத்தை பார்வை செய்யும் அமைப்பில் தீமையான பலன்களையும் வழங்குகிறார் .

ஆக இந்த குருபெயர்ச்சி  ஜாதகருக்கு 3,11ம் பாவகங்களுக்கு நன்மையான பலன்களையும். 5,7ம் பாவகங்களுக்கு தீமையான பலன்களையும் தருகிறார் என்பது உறுதியாகிறது மிதுனத்தில் குருபகவான் அமர்ந்து 5ம் பார்வையாக  துலாம்  ராசியை பார்வை செய்வதாலும், 3ம் பாவகம் சர காற்று தத்துவம் என்பதாலும் ஜாதகர் தனது அறிவார்ந்த செயல்களாலும் , எடுக்கும் முயர்ச்சிகளாலும் வெற்றிமேல் வெற்றி பெறுவார் அந்த வெற்றிகள் ஜாதகருக்கு சிறந்த மக்கள் செல்வாக்கினை வாரி வழங்கும் 3ம் பாவக வழியில் இருந்து .

மிதுனத்தில் குருபகவான் அமர்ந்து, 11ம் பாவகம் உபய காற்று தத்துவம் என்பதால் ஜாதகரின் அறிவாற்றல் பொதுமக்களுக்கும் ஜாதகருக்கும் பல நன்மைகளை வாரி வழங்கும் , தன்னம்பிக்கை  அதிகரிக்கும் , தரகு அமைப்பில் செய்யும் தொழில்கள் யாவும் மிகப்பெரிய ஆதாயத்தை வாரி வழங்கும் .

மிதுனத்தில் குருபகவான் அமர்ந்து 7ம் பார்வையாக தனுசு ராசியை பார்வை செய்வதாலும், 5ம் பாவகம் உபய நெருப்பு தத்துவம் என்பதாலும் ஜாதகர் அவசர கதியில் செய்யும் சில செயல்பாடுகள் ஜாதகருக்கும் ஜாதகரை சார்ந்தவருக்கும் சில அவ பெயரை ஏற்ப்படுத்த கூடும் எனவே சற்றே சிந்தனை செய்து பொறுமையாக ஒவ்வொரு முடிவையும் எடுப்பது நலம் . ( ஐந்தாம் பாவகத்திர்க்கு குருவின் 7ம் பார்வை நன்மை தர வாய்ப்பில்லை )

மிதுனத்தில் குருபகவான் அமர்ந்து 9ம் பார்வையாக கும்ப  ராசியை பார்வை செய்வதாலும்,7ம் பாவகம் ஸ்திர காற்று தத்துவம் என்பதாலும் தனக்கு வரும் அதிர்ஷ்ட வாய்ப்புகளை கவனமாக கையாள வேண்டும் , மேலும் வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் இன்னல்களை அனுசரித்து செல்வது பெரிய துன்பங்களை ஏற்ப்படுத்தாது. ( கேந்திர பாவகமான 7ம் பாவகத்தை குருபகவான் ஒன்பதாம் பார்வையாக காண்பது தீமையான பலன்களையே தரும்.)

மேற்கண்ட அமைப்பில் இந்த சிம்மலக்கின ஜாதகருக்கு குருபெயர்ச்சி நான்கு பாவகங்களுடன் தொடர்பு பெற்று இரண்டிற்கு நன்மையையும் , இரண்டிற்கு தீமையான பலனை தருகிறது என்பதே துல்லியமான குருபெயர்ச்சி பலன்கள்.

எனவே குருபெயர்ச்சி பலன்களை நிர்ணயம் செய்யும் பொழுது சுய ஜாதகத்தை அடிப்படையாக வைத்து நிர்ணயம் செய்வதே சரியானதாக இருக்கும் , சந்திரன் நின்ற ராசியை வைத்து வைத்து குருபெயர்ச்சி பலன்களை நிர்ணயம் செய்வது எந்த விதத்திலும் சுய ஜாதகத்தை கட்டுப்படுத்தாது , மேலும் அதனால் ஜாதகருக்கு எவ்வித நன்மையையும் தீமையும் ஏற்ப்பட வாய்ப்பில்லை என்பதே முற்றிலும் உண்மை .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443306969


செவ்வாய், 21 மே, 2013

சுய ஜாதகத்தில் 12 வீடுகளும், அவற்றின் பலனை ஏற்று நடத்தும் திசா புத்திகளும் !



ஒருவருடைய சுய ஜாதக அமைப்பில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் நிலையின் அடிப்படையிலேயே , நடந்த நடக்கின்ற நடைபெற இருக்கின்ற திசை,புத்தி,அந்தரம்,சூட்சமம் ஆகியன பலனை வழங்குகிறது என்றால் அது மிகை ஆகாது , இதை அடிப்படையாக கொண்டு காணும் பொழுது , ஒவ்வொருவரின் சுய ஜாதகத்திலும் 12 பாவகங்களும் நல்ல நிலையில் இருப்பது அவசியம் என்பது உறுதியாகிறது .

எனவே ஒருவருடைய சுய ஜாதக பலனை நிர்ணயம் செய்யும் பொழுது பனிரெண்டு பாவகங்களுக்கு முன்னுரிமை கொடுப்பது அவசியம், மேலும் அவருடைய சுய ஜாதகத்தில் தற்பொழுது நடை பெரும் திசை,புத்தி,அந்தரம்,சூட்சமம் ஆகியவை எந்த பாவகத்தின் பலனை ஏற்று நடத்துகிறது என்பதை தெளிவாக தெரிந்து கொள்வது , ஜாதக பலனை மிக துல்லியமாக எடுத்துரைக்க உதவி புரியும் .

ஒருவரின் சுய ஜாதக அமைப்பின் படி நவ கிரகங்கள் ராசி கட்டத்தில் எந்த பாவகத்தில் அமர்ந்திருக்கிறது, என்பதனை லக்கினம் ஆரம்பிக்கும் பாகையின் அடிப்படையில் கண்டுணர்ந்து பலன் நிர்ணயம் செய்வது, சம்பந்த பட்ட ஜாதகருக்கு ஜாதக ரீதியான துல்லியமான பலனை சொல்ல உதவும் , ராசியை அடிப்படையாக வைத்தோ , லக்கினத்தை அடிப்படையாக வைத்தோ (லக்கினம் ஆரம்பிக்கும் பாகையை கருத்தில் கொள்ளாமல்) பலன் காணுவது அமாவசை அன்று நிலவை தேடுவதற்கு நிகரான ஒன்றாக கருத வேண்டி வரும் , லக்கினம் ஆரம்பிக்கும் பாகையின் அடிப்படையில் ஜாதக ஆய்வு செய்தால் மட்டுமே ஒவ்வொரு கிரகமும் எந்த பாவகத்தில் அமர்ந்திருக்கிறது என்ற உண்மை நிலை புரியும் , மேலும் ஒவ்வொரு பாவகத்தின் வலிமையை பற்றி தெளிவாக உணர்ந்துகொள்ள இயலும் .

மேற்கண்ட அமைப்பில் ஜாதக கணிதம் நிர்ணயம் செய்த பின்பு திசா புத்திகளின் பலாபலன்களை துல்லியமாக நிர்ணயம் செய்ய இயலும், உதாரணமாக கீழ்க்கண்ட ஜாதக அமைப்பை எடுத்துகொண்டு லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் நிலையை பற்றியும் , திசா புத்திகள் எந்த பாவகத்தின் பலனை ஏற்று நடத்துகிறது என்பதனை பற்றியும் சற்றே சிந்திப்போம் .

ஜாதகர் பிறந்த தேதி : 27/06/2012
ஜாதகர் பிறந்த நேரம்: 07 : 52 pm 
ஜாதகர் பிறந்த இடம் : சேலம் 


இந்த ஜாதக அமைப்பின் படி 1,7,10 ம் வீடுகள் முறையே ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று நல்ல நிலையிலும் ( ஜீவன ஸ்தானம் உபய ராசி என்பதால் 33சதவிகித யோக பலன்களையே தரும் ).

2,3,5,9,11ம் வீடுகள் முறையே அதிர்ஷ்டம் எனும் லாப ஸ்தானமாகிய 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகவும் சிறப்பான நிலையிலும் ( லாப ஸ்தானம் சர ராசி என்பதால் 100 சதவிகித யோக பலன்களை வாரி வழங்கும்).

4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகவும் சிறப்பான நிலையிலும் ( சுக ஸ்தானம் சர ராசி என்பதால் 100 சதவிகித யோக பலன்களை வாரி வழங்கும்).

6ம் வீடு சத்துரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பாதிப்படைந்த நிலையிலும் ( சத்துரு ஸ்தானம் உபய ராசி என்பதால் 33 சதவிகித தீமையான பலன்களே தரும் என்பதால் அதிக கவலை தேவையில்லை )

8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பாதிப்படைந்த நிலையிலும் ( விரைய ஸ்தானம் உபய ராசி என்பதால் 33 சதவிகித தீமையான பலன்களே தரும் என்பதால் அதிக கவலை தேவையில்லை ) சுய ஜாதக நிலை பலன்களை வழங்கிக்கொண்டு இருக்கிறது .

ஜாதகருக்கு பிறப்பு முதல்  11/05/2016 தேதி முடிய சந்திரன் திசையே நடை பெற்று கொண்டு இருக்கிறது , இந்த சந்திரன் திசை ஜாதகருக்கு எந்த பாவகத்தின் பலனை செய்கிறது என்பதை கவனிக்க வேண்டும் மேலும் ஜாதகர் சிறு குழந்தை பருவம் என்பதால் இதை அனுசரித்து பலனை நிர்ணயம் செய்வது அவசியம் தற்பொழுது நடை பெரும் சந்திரன் திசை ஜாதகருக்கு 8,12ம் வீடுகள் விரைய பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பலன்களை தந்து கொண்டு இருப்பது அவ்வளவு நன்மையை தர வாய்ப்பில்லை,மேலும் பனிரெண்டாம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஒன்பதாம் பாவகமாக வருவது ஜாதகருக்கு தான் செய்த பாக்கியத்தின் பலன்களை அனுபவிக்க இயலாது சூழ்நிலையையும் , உடல் ரீதியான சில தொந்தரவுகளையும் தர கூடும் , மேலும் தனது தகப்பனாருக்கு தேவையற்ற அவ பெயரை ஏற்ப்படுத்தகூடும் , இருப்பினும் இவற்றின் தாக்கம் என்பது மிக குறைந்த அளவிலேயே இருக்கும் என்பதை நினைத்து மகிழ்ச்சி அடையலாம் .

11/05/2016 தேதிக்கு மேல் நடை பெரும் செவ்வாய் திசை பற்றி சிறிது ஆய்வு செய்வோம், 2,3,5,9,11ம் வீடுகள் முறையே அதிர்ஷ்டம் எனும் லாப ஸ்தானமாகிய 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று செவ்வாய் திசை பலன்களை வழங்குகிறது இது மிகவும் சிறந்த விஷயம் குறிப்பிட்ட பாவக அமைப்பில் இருந்து ஜாதகர் 100 சதவிகித பலன்களை தங்கு தடையின்றி அனுபவிக்கும் தன்மை உண்டாகும் , இதனால் ஜாதகருக்கு நல்ல கல்வி அமையும் , எடுக்கும் முயற்ச்சிகள் வெற்றி பெரும் , குல தேவதையின் அருளும் நல்லோர் ஆசியும் கிடைக்கும் , எங்கு சென்றாலும் ஜாதகர் நற்பெயர் எடுக்கும் யோகம் உண்டாகும் , அடிப்படையில் ஜாதகருக்கு இந்த செவ்வாய் திசை நீண்ட அதிர்ஷ்ட வாழ்க்கையை அமைத்து தரும் என்பது உறுதியாகிறது.

எனவே மேற்கண்ட முறையில் ஜாதக பலன்களை துல்லியமாக கணிதம் செய்து சொல்லும் பொழுது ஜாதகர் தனது வாழ்க்கையை செம்மையாக அமைத்து கொள்ள உதவும் என்பது ஜோதிட கலையின் சிறப்பு அம்சம் . மேலும் சந்திரன் திசையில் ஜாதகர் உடல் நிலை அமைப்பில் அதிக கவனமாக இருந்து அவர்களது பெற்றோர்கள் ஜாதகரை கவனமுடன் பார்த்துக்கொள்ள ஜோதிட கலை இந்த இடத்தில் கை கொடுக்கும் , ஜாதகரின் தகப்பனார் தேவையில்லாமல் மாற்றவர்கள் விஷயந்தில் தலையீடு செய்து அவ பெயரை சம்பாதித்து கொள்ளாமல் எச்சரிக்கையாக இருந்து கொள்ள ஜோதிட கலை அறிவுறுத்தும் , வீண் விரையன்களை தவிர்க்க உதவி புரியும் .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443306969




 

திங்கள், 20 மே, 2013

சாய கிரகங்களான ராகு கேது வழங்கும் யோக பலன்களும், 4,10ம் பாவக வழியில் ஜாதகர் பெரும் நன்மைகளும் !



சாயா கிரகங்கள் என வர்ணிக்கப்படும் ராகு கேதுவின் வலிமையை பற்றி தெளிவாக புரிந்துகொள்ள உதவும் ஜாதகம் இது என்றால் அது மிகையாகாது.



இந்த குழந்தையின் ஜாதக அமைப்பில் சாயா கிரகங்களான  ராகு கேது முறையே மகரம் மற்றும் கடகம் என்ற ராசிகளில் அமர்ந்து சம்பந்தபட்ட பாவக அமைப்பிற்கு 100 சதவிகித யோகபலன்களை தரும் நிலையில் இருக்கின்றனர் , பொதுவாக ஜாதக பலன்கள் காணும் அமைப்பை வைத்து பார்க்கும் பொழுது இந்த சாயாகிரகங்கள் அதிர்ஷ்டம் மற்றும் லாப ஸ்தானம் என்று அழைக்கப்படும் 11ம் பாவகத்தில் ராகுவும், பூர்வபுண்ணியம் என்று அழைக்கப்படும் 5ம் பாவகத்தில் கேதுவும் அமர்ந்த பலன்களை தரும் அமைப்பை கொண்டுள்ளதாக பல ஜோதிடர்களின் கணிப்பாக இருக்க கூடும் .

உண்மையில் ராகு கேது எனும் சாயா கிரகங்கள் , பாவக அமைப்பின் படி பாகை வாரியாக கணிதம் கொண்டு பார்க்கும் பொழுது மகரத்தில் உள்ள 10ம் பாவகத்தில் ராகுவும், கடகத்தில் உள்ள 4ம் பாவகத்தில் கேதுவும் அமர்ந்திருக்கின்றனர் என்பதே சரியான ஜோதிட கணிதம் , மேலும் ஜாதகருக்கு சரியான பதில் சொல்ல இதுவே உதவும்.

ஏனெனில் ஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் என்பது தனுசு ராசியில்  259.16.01என்ற பாகையில் ஆரம்பித்து , மகரத்தில் 286.46.10 பாகையில் நிறைவு பெறுகிறது , இதற்க்கு உட்பட்ட 276.24.26 பாகையில் மகர ராசியில் , ராகு அமர்ந்து இருப்பது ஜீவன ஸ்தானத்தில் தனது ஆளுமையை செலுத்துகிறது என்பது உறுதி ஆகிறது .

மேலும் ஜாதகருக்கு சுக  ஸ்தானம் என்பது மிதுனத்தில் 79.16.01என்ற பாகையில் ஆரம்பித்து , கடகத்தில்  106.46.10 பாகையில் நிறைவு பெறுகிறது , இதற்க்கு உட்பட்ட 96.24.26 பாகையில்கேது அமர்ந்து இருப்பது சுக ஸ்தானத்தில் தனது ஆளுமையை செலுத்துகிறது என்பது உறுதி ஆகிறது .

ஆக மேற்க்கண்ட ஜாதகத்தில் கேந்திர வீடுகளான ஜீவன ஸ்தானத்தில் ராகுவும் , சுக ஸ்தானத்தில் கேதுவும் அமர்ந்து 100 சதவிகித நல்ல நிலையில் இருப்பது தெளிவாகிறது , எனவே ஜாதகருக்கு இவர்களால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்பதை இனி பார்ப்போம் .

 காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு  ஜீவன ஸ்தானமான மகரத்தில் ராகு நல்ல நிலையில் அமர்ந்து ஜாதகருக்கு ஜீவன  ஸ்தானத்திற்கு  100 சதவிகித நன்மையை செய்வதால் , ஜாதகரின் வாழ்க்கையில் தனது தகப்பனார் அமைப்பில்  இருந்து கிடைக்க வேண்டிய அனைத்தும் 100 சதவிகிதம் எவ்வித தங்கு தடையும் இன்றி கிடைக்கும் , தனது தகப்பனாருடன் ஜாதகர் நல்ல நடப்பு மற்றும் பாசத்துடன் பழகும் யோகம் உண்டாகும் , தனது தகப்பனார் மீது அளவுகடந்த நன்மதிப்பையும் , மரியாதையும் ஜாதகர் கொண்டு இருப்பார் , ஜாதகர் பிறந்ததில் இருந்து ஜாதகரின் தகப்பனாருக்கு அளவில்லா ஜீவன முன்னேற்றத்தை வாரி வழங்கும்.

 பல தொழில் செய்யும் யோகம் உண்டாகும், மேலும் ஜாதகர் செய்யும் செயல்கள் யாவும் கவுரவமாகமும் , மதிப்பு மிக்க  செயல்களாகவும் , அனைவரையும் கவரும் விதத்திலும் இருக்கும் , ஜிவனத்தில் அமரும் ராகு ஜாதகருக்கும் , ஜாதகரின் தகப்பனாருக்கும்  தொழில் , வேலை , ஜீவனம் என்ற அமைப்பில் இருந்து 100 சதவிகித முன்னேற்றத்தை தங்கு தடையின்றி வாரி வழங்கும் என்பதில் சிறிதும்  சந்தேகம் இல்லை , இந்த முன்னேற்றம் என்பது ஜாதகருக்கு வெகு விரைவில்  குறுகிய காலத்தில் அமையும் என்பது சிறப்பான விஷயம் .

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு சுக ஸ்தானமான கடகத்தில் கேது நல்ல நிலையில் அமர்ந்து ஜாதகருக்கு சுக ஸ்தானத்திற்கு 100 சதவிகித நன்மையை செய்வதால் , ஜாதகரின் வாழ்க்கையில் தனது தாயார் அமைப்பில் இருந்து கிடைக்க  வேண்டிய சிறந்த உயர்கல்வி , சுகமான வாழ்க்கை , சிறந்த சொகுசு வண்டி  வாகனம் , சொத்து சுக சேர்க்கை , தன்னம்பிக்கையான மன நிலை , ஸ்திரமான புத்தி , நல்ல மன நிலை , உடல் ரீதியாக வரும் நோய் நொடிகளில் இருந்து விரைவான குணம் பெரும் அமைப்பு என்ற வகையில் அதிக நன்மைகளை  விரைந்து தரும் .

குறிப்பாக ஜாதகரின் தாயாருக்கு இது மிக சிறந்த அமைப்பு , அவர்களின் ஆரோக்கியம் மேம்படும் , நிம்மதியான வாழ்க்கை கிட்டும் , தாயாரின் அமைப்பில் இருந்து ஜாதகருக்கு சிறந்த அரவணைப்பும் , பாசமும் தடையின்றி கிடைக்கும் , ஜாதகரின் சிறந்த ஒழுக்கத்திற்கு காரணமாக தாயின் அறிவுரைகளும் , ஜாதகரின் வெற்றிக்கு காரணமாக தாயின் ஆலோசனைகளும் உறுதுணையாக இருக்கும் , மகரத்தில் அமரும் ராகு ஜாதகருக்கு சிறந்த சொத்து சுக சேர்க்கைகளை , தனது சுய உழைப்பின் மூலம் பெற்று தரும் , கடகத்தில் அமரும் கேது ஜாதகருக்கு பரந்த மனப்பான்மையையும் , விட்டுகொடுக்கும் தன்மையையும் , மற்றவர்களிடம் பரிவு காட்டும் நல்ல குணத்தையும் தரும் .

ராகு கேது இருவரும் ஒருவரது சுய ஜாதகத்தில் நல்ல நிலையில் அமர்வது சிறப்பு , இதை போன்று தகப்பனை குறிக்கும் 10ம் பாவகத்துடனும் , தாயை குறிக்கும் 4ம் பாவகத்துடனும் , சம்பந்தம் பெறுவது ஜாதகர் சிறந்த மாமனிதனாக வளர வழிவகுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை , ஒருவருக்கு நல்ல பெற்றோர் அமைந்துவிட்டால் , அவர் தனது வாழ்க்கையை  எவ்வித சூழ்நிலைகளையும் சமாளித்து வெற்றி பெரும் யோகம் உண்டாகும் .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443306969


வெள்ளி, 17 மே, 2013

முற்ப்போக்கு சிந்தனையும் , நேர்மறை எண்ணங்களாலும் வாழ்க்கையில் வெற்றி பெரும் ஜாதக நிலை !



இறை அருளின் கருணையினால் ஒருவருடைய சுய ஜாதக அமைப்பில் , உடல் உயிர் என்று வர்ணிக்கப்படும் லக்கினம் எனும் முதல் பாவகம் லக்கினத்துடன் தொடர்பு பெறுவதும் , பூர்வ புண்ணியம் எனும் ஐந்து களத்திர ஸ்தானம் எனும் ஏழு, பாக்கிய ஸ்தானம் எனும் ஒன்பது மற்றும் லாப ஸ்தானம் எனும் பதினொன்றாம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகரின் வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றத்தை தந்து , ஜாதகரின் சிந்தனையினாலும் , செயல்பாட்டினாலும் ஜாதகத்தில் உள்ள யோக நிலைகளை முழுவதும் அனுபவிக்கும் ஆற்றலை தரும் .

மேற்கண்ட அமைப்பை பெற்ற ஜாதக அன்பர்கள் , தனது வாழ்க்கையை தானே சுயமாக வாழும் வல்லமையை சிறு வயதினில் இருந்தே பெற்று விடுவார்கள், இந்த சிக்கலான சமுக அமைப்பில் இருந்து , தனது வாழ்க்கையை எப்படியும்  செம்மையாக அமைத்து கொண்டு பிறர் வியந்து பாராட்டும் அளவிற்கு சிறப்பாக வாழும் தன்மையை ஜாதகர் பெற்று இருப்பார் என்பது மிகப்பெரிய ஆச்சரியமான விஷயம் , மேலும் இவர்களின் முற்ப்போக்கு சிந்தனையும் செயல்பாடுகளும் ஜாதகரை மற்றவர்களிடம் இருந்து தனித்து காட்டும் , பொதுமக்களிடம் இருந்து சிறப்பான வரவேற்ப்பை பெற்று தரும் .

தன்னம்பிக்கை மற்றும் சுய கட்டுபாட்டிற்கும் சிறந்த உதாரணமாக விளங்கும் அன்பர்கள் இவர்களே , இவர்களின் இறக்க சுபாவத்தை பலர் தமது சுய லாபத்திற்காக பயன்படுத்தி கொள்வார்கள் , இருப்பினும் ஜாதகர் அதைபற்றிய கவலை எதுவும் இன்றி தனது செயல் மற்றும் நடவடிக்கை மற்றவரை பாதிக்கா வண்ணம் நடந்து கொள்வார்கள் , மேலும் தனக்கு வரும் துன்பம் மற்றும் சிரமங்களை கூட தனக்கு சாதகமாக மாற்றிகொண்டு வெற்றிகரமாக வாழும் சிறந்த வாழ்க்கையை இறையருள் ஜாதகருக்கு தொடர்ந்து வாரி வழங்கி கொண்டே இருக்கும் .

லக்கினம் முதல் பாவகத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது ஜாதகர் தனது வாழ்க்கையில் நடக்கும் நன்மை தீமை விஷயங்களுக்கு தானே காரணம் , தனது வினை பதிவின் அடிப்படையிலேயே அனைத்தும் நடை பெறுகிறது , வரும் இன்ப துன்பங்களுக்கு தானே காரணம் எனும் சிந்தனையை தரும் , மேலும் சுய கட்டுப்பாடு , தன்னம்பிக்கை ஒழுக்கம் என்பது ஜாதகருக்கு சிறு வயது முதற்கொண்டே அடிப்படையாக அமைந்து ஜாதகரின் வாழ்க்கையில் வரும் முன்னேற்றத்திற்கு  உறுதுணையாக அமைந்து விடும் , இதுவே ஜாதகர் சிறப்பாக  வளரும் சூழ்நிலையை தரும் , ஜாதகர் எவ்வித தீய பழக்க வழக்கங்களுக்கு  ஆட்பட மாட்டார் என்பது மட்டும் உறுதி , இவரால் நிச்சயம் மற்றவர்கள்  பாதிக்க வாய்ப்பு இல்லை, இதுவே ஜாதகரை சிறப்பான முன்னேற்றத்திற்கு  எடுத்து செல்லும் .

லக்கினம் ஐந்தாம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது , ஜாதகரிடம் குடிகொண்டுள்ள இறை நிலையின் அருள் ஆற்றல் ஜாதகரின் முன்னேற்றத்திற்கு 100 சதவிகிதம் உறுதுணை புரியும் , ஜாதகர் சிறு வயது முதற்கொண்டே இறை நிலையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளவராகவும் ஆன்மீக பெரியோர்களின் ஆசியை பெற்றவராகவும் திகழ்வார் , தன்னுடன் சேர்க்கை பெரும் அன்பர்களின் குணம் , எண்ணம் , செயல்  அறிந்து நட்பை வளர்த்துகொள்ளும் தன்மையை தரும் , இதுவே ஜாதகரின்  வாழ்க்கையை மேன்மை படுத்தும் , தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்யும் , இவர்களிடம் உள்ள ஒரு சிறப்பான விஷயம் , தன்னை சார்ந்துள்ளவர்களின்  தன்மையை முழுமையாக உணர்ந்து கொண்டு அவர்களுக்கு  ஏற்ற விதத்தில் நடந்துகொள்ளும் தன்மையை தரும் , இவர்களுக்கு எல்லா நேரமும் நல்ல நேரமாக விளங்கும் என்பது குறிப்பிடத்தக்க  ஒரு சிறப்பு அம்சம் .

லக்கினம் ஏழாம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது , ஜாதகரின் நண்பர்கள் அனைவரும் நல்வர்களாக திகழ்வார்கள் ,  பொதுமக்கள் ஆதரவு ஜாதகருக்கு பரிபூரணமாக  அமைந்துவிடும் , இவர்கள் வழியே ஜாதகர் அதிக யோக பலன்களை  அனுபவிக்கும் தன்மை உண்டாகும் , ஜாதகரின் செயல்பாடுகளை ஜாதகரின்  நல்ல நண்பர்களும் , பொதுமக்களும் கூர்ந்து கவனிப்பதால் ஜாதகரின்  நடத்தை மற்றும் ஒழுக்கம் மிகவும் சிறப்பாக அமைந்துவிடும் , மேலும்  பொறுப்பான பதவிகள்  அல்லது பொறுப்பான நிர்வாகத்தை ஜாதகர் நிர்வகிக்கும்  யோகத்தை இளம் வயதிலேயே தந்துவிடுவதால் , ஜாதகர் அதில் சிறந்து விளங்கும்  தன்மையை பெறுவதற்காகவே தனது வாழ்க்கையை சிறப்பாக அமைத்து கொண்டு , 100 சதவிகித வெற்றிகரமான வாழ்க்கையை வாழ்நாள்  முழுவது வாழும் தன்மை தரும் .

லக்கினம் ஒன்பதாம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகர் தனது முன்ஜென்ம  நல்வினை காரணமாகவும் , தனது பெற்றோர்கள் மற்றும் முன்னேர்கள்  செய்த புண்ணிய பதிவின் காரணமாகவும் வாழ்க்கை பாதை சீரான  ஒரு நேர்கோட்டில் அமைந்துவிடும் , ஜாதகரே நினைத்தால் கூட தீய வழி  பாதையில் செல்ல இயலாது , அடிப்படையிலேயே ஒழுக்கத்தை தனது இரு கண்களாக  பாவிக்கும் தன்மையை தரும் , மானம் ஒன்றே வாழ்க்கை என்ற  சிந்தனையை தரும் , தவறி கூட தனது சொல்லால் , செயலால் மற்றும் சிந்தனையால் பிறருக்கு தீமை செய்யாத மன பக்குவத்தை தரும், ஜாதகர்  மேற்கொள்ளும் காரியங்கள் யாவும் முன்னோர்களின் ஆசியினாலும் , இறை அருளின் கருணையினாலும் வெற்றி மேல் வெற்றியை பெற்று தரும் .

லக்கினம் பதினொன்றாம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகர் தனது வாழ்க்கையில் அதிர்ஷ்ட வாய்ப்புகளை தொடர்ந்து பெற்றுகொண்டே இருக்கும் யோக நிலையை தரும் , குறிப்பாக ஜாதகருக்கு புதையல் , லாட்டரி போன்ற  அமைப்புகளில் இருந்து மிகப்பெரிய முன்னேற்றத்தை தரும் அல்லது  ஜாதகர் தனது நேர்மறை எண்ணங்களால் , புதையலுக்கு நிகரான செல்வ வளங்களை பெரும் புத்திசாலித்தனம் மற்றும் செயல் திறனை வாரி வழங்கும் , ஜாதகரால் முடியாத காரியங்கள் என்பது எதுவும் இல்லை என்ற நிலையை தரும் , தன்னம்பிக்கையும் , மனோதிடத்தையும் இறை நிலை ஜாதகருக்கு மற்றவரை விட கொஞ்சம் அதிகமாகவே கொடுத்துவிடும் , எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளித்து , அதில் வெற்றி பெரும் யோகத்தையும் வாரி வழங்கும் , இவரின் சிந்தனை மற்றும் செயல்பாடுகளின் வீரியத்தை எவராலும் அறிந்து கொள்ள இயலாது , இதுவே ஜாதகரின் வெற்றிக்கு உண்டான  சூட்சமமாக விளங்கும் .

ஆனால் மேற்சொன்ன பாவகங்கள் ஜாதகரின் லக்கினத்திற்கு பாதக ஸ்தானமாக அமைந்துவிட கூடாது அப்படி அமையும் பட்சத்தில் மேற்சொன்ன பலன்களுக்கு  எதிர்மறையான பலன்களே நடைமுறைக்கு வரும் , மேலும் லக்கினம் என்பது 2,6,8,12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு எதிர்மறை எண்ணத்தை ஊக்கபடுத்தி , ஜாதகரை செயல்படாத சூழ்நிலைக்கு தள்ளிவிடும் தன்மையை தர கூடும் .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443306969


வெள்ளி, 26 ஏப்ரல், 2013

நல்ல நேரம் பார்த்து அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தை பெற்றுகொள்வது, குழந்தைக்கு யோக வாழ்க்கையை தருமா ?



இதை விட கேலிக்கூத்தான ஒரு விஷயம் எதுவும் இல்லை என்றே சொல்லலாம் , முன்பெல்லாம் ஒரு பெண்ணிற்கு சுக பிரசவம் என்பது எளிதாக இருந்தது , இதற்க்கு காரணம் பெண்களின் மன நிலையும்  உடல் நிலையும்  அதற்க்கு ஏற்ற வகையிலே சிறப்பாக அமைந்து இருந்தது , மேலும் மருத்துவர்கள் இயற்கையாக குழந்தை பிறப்பினையே வலியுறுத்தினர் தம்மை நாடி வரும் மக்களுக்கு, தனது நேர்மையின் அடையாளமாக .

 ஆனால் இன்றோ இதற்க்கு மாறாக சில மருத்துவர்கள் இயற்கையாக சுக பிரசவம் பெரும் அமைப்பை பெண்கள் பெற்று இருந்தாலும், அவர்கள் அறுவை சிகிச்சையே பரிந்துரை செய்கின்றனர் , இதற்க்கு காரணமாக பல விஷயங்களை சொல்லலாம் 

1) குழந்தை இயற்கையாக சுகமாக பிறந்தால் மருத்துவமனைக்கும் , தனக்கும் பெரிய வருமானம் இல்லாமல் போய்விடும் என்ற ஒரு காரணத்தினாலும் .

2) குழந்தையின் பெற்றோர்களின் வேண்டுகோளுக்கு இணங்கியும் .

3) ஜோதிடர்கள் சொல்லும் நல்ல நேரத்தில் தமது குழந்தை பிறந்தால் உலகத்தையே கட்டி ஆண்டுவிடும் என்ற தவறான எண்ணத்தினாலும்.

4) இந்த நேரத்தில் குழந்தை பிறந்தால் சிலருக்கு ஆகாது என்ற தவறான ஜோதிட ஆலோசனையின் பேரிலும் .

இன்னும் பல சொல்ல இயலாத காரணத்தினாலும் இயற்கையான குழந்தை பிறப்பை மருத்துவர்கள் , அல்லது குழந்தையின் பெற்றோர்கள் தவிர்த்து விடுகின்றனர் என்பதே உண்மை .

சில தொலைகாட்சி ஜோதிட நிகழ்சிகளில் இன்றைக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறக்க நல்ல நேரம் என்ற குறிப்பு வேறு தருகின்றனர் , கலிகாலத்தின் அலங்கோலம்தான் இது என்ற எண்ணமே நமக்கு தோன்றுகிறது . 

இயற்கையின் பேரழிவுகளையும் , பூமியில் மலை பொழியும் தருணங்களையும் , குழந்தை பிறக்கும் நேரத்தினையும் எவராலும் சரியாக கணிக்க இயலாது,  இதை பெரியோர்களே மலைபேரும், பிள்ளைபேரும்  மகாதேவனுக்கே  தெரியாது என்று செலவடையாக சொல்லி வைத்துள்ளார்கள் , ஆக நல்ல நேரம் பார்த்து குழந்தை பிறப்பை நிர்ணயம் செய்வது என்பது முற்றிலும் இயலாத காரணம் , இதற்க்கு சரியான உதரணங்களை கிழே கொடுத்துள்ளோம் , 

எடுத்துகாட்டாக ஜோதிடர் கொடுத்த ஒரு 3 நிமிட நல்ல நேரத்திற்கு உட்பட்ட காலகட்டத்தில் பிறக்கும் ஒவ்வொரு நிமிடத்திலும் , நொடியிலும் குழந்தையின் பலன்கள் வேறுபடுவதை பாருங்கள் :


ஜாதகம் 1 :

இந்த குறிப்பிட்ட தேதியில் (26/04/2013) குறிப்பிட்ட நேரத்தில் (12:55:33) பிறந்த குழந்தையின் ஜாதகத்தில் 1,3,7,9,11ம் வீடுகள் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று மேற்கண்ட பாவக வழியில் தீமையான பலன்களை தருகிறது , 6,12ம் வீடுகள் ஆயுள் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று தீமையான பலனை தருகிறது , 2ம் வீடு விரைய பாவகத்துடன் சம்பந்தம் பெற்று தீமையான பலனை தருகிறது , 4,10 ம் வீடுகள் ஜீவன ஷ்தானத்துடன் சம்பந்தம் பெற்றும் , 5,8ம் வீடுகள் குடும்ப ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று மிகுந்த நன்மையை தருகிறது .



ஜாதகம் 2 :

இந்த குறிப்பிட்ட தேதியில் (26/04/2013) குறிப்பிட்ட நேரத்தில் (12:56:33) பிறந்த குழந்தையின் ஜாதகத்தில் 1,3,7,9,11ம் வீடுகள் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று மேற்கண்ட பாவக வழியில் தீமையான பலன்களை தருகிறது ,8ம் வீடு ஆயுள் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று தீமையான பலனை தருகிறது , 6,12ம் வீடுகள் பூர்வ புண்ணிய  பாவகத்துடன் சம்பந்தம் பெற்று நன்மையான பலனை தருகிறது , 2ம் வீடு விரைய பாவகத்துடன் சம்பந்தம் பெற்று தீமையான பலனை தருகிறது , 4,10 ம் வீடுகள் ஜீவன ஷ்தானத்துடன் சம்பந்தம் பெற்றும் , 5,ம் வீடு குடும்ப ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று மிகுந்த நன்மையை தருகிறது .



ஜாதகம் 3 :

இந்த குறிப்பிட்ட தேதியில் (26/04/2013) குறிப்பிட்ட நேரத்தில் (12:57:33) பிறந்த குழந்தையின் ஜாதகத்தில் 1,3,7,9ம் வீடுகள் பாக்கிய  ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று மேற்கண்ட பாவக வழியில் நன்மையான  பலன்களை தருகிறது , 6ம் வீடு பூர்வ புண்ணிய பாவகத்துடன் சம்பந்தம் பெற்று தீமையான பலனை தருகிறது , 8ம் வீடு ஆயுள் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று தீமையான பலனை தருகிறது , 2ம் வீடு எதிரி பாவகத்துடன் சம்பந்தம் பெற்று தீமையான பலனை தருகிறது , 4,10, 12ம் வீடுகள் விரைய ஸ்தானத்துடன்  சம்பந்தம் பெற்றும் தீமையையும் , 5ம் வீடு குடும்ப ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று மிகுந்த நன்மையை தருகிறது .11ம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று அதிக தீமையான பலனையும் தருகிறது .




ஆக நிமிடத்திற்கு நிமிடமும் , நொடிக்கு நொடியும் பலன்கள் மாறும் பொழுது நிச்சயம் தங்களின் குழந்தை குறித்த நேரத்தில் அறுவை சிகிச்சையின் மூலம் பெற்றுகொள்வது என்பது நிச்சயம் இயலாத காரியம் , மேலும் இடத்திற்கு இடம் அதற்கு உண்டான அமைப்பில் ஜாதக பலன்கள் மாறுபடும் எனவே குறித்த நல்ல நேரத்தில் குழந்தை பிறப்பை எவராலும் நிர்ணயம் செய்ய இயலாது, ஜோதிடர் சொல்லும்  நல்ல நேரத்தில் எவராலும் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுகொள்ள இயலாது என்பதே உண்மை .

பொதுமக்கள் இதை உணருவது அவசியம் யாரோ ஒரு ஜோதிடர் சொல்கிறார் என்பதற்காக தங்களின் குழந்தையின் விதி நிச்சயம் மாறிவிட வாய்ப்பு இல்லை , முடிந்த அளவிற்கு தங்களது  குழந்தை இயற்கையாக பிறப்பதற்கு என்ன வழி உள்ளது என்பதை பற்றி  மட்டும் சிந்தியுங்கள் அல்லது மருத்துவ துறைக்கு தன்னை அர்ப்பணித்து  கொண்டு நேர்மையாக மருத்துவம் பார்க்கும் நல்ல மருத்துவரை நாடி இயற்கையாக குழந்தை பிறப்பை பெறுவதற்கு என்ன வழி என்பதை  பற்றி சரியான ஆலோசனை பெறுங்கள்.

ஜோதிட தர்மத்தை முறையாக கடை பிடிக்கும்  எந்த ஒரு ஜோதிடனும் குழந்தை பிறப்பிற்கு  நேரம் குறித்து தருவதில்லை, காரணம் பிறப்பு இறப்பு என்பது ஒருவரின் வினை பதிவின் படி இயற்கையால் நிர்ணயம் செய்யபடுவது என்பதே உண்மை , ஜோதிடன் என்பவன் தங்களின் விதி பாதையில் உள்ள உண்மை நிலைகளை , சாதக பாதக அமைப்புகளை உள்ளது உள்ளபடி சொல்பவரே அன்றி விதியை மற்றும் அளவிற்கு சக்தி படைத்தவர் அல்ல , இறை நிலைக்கு அப்பாற்பட்ட சிறப்பு சக்தி படைத்தவரும் அல்ல , அவரும் தங்களை போன்றே ஒரு சாதாரண மனிதன் என்பதை மறந்துவிட வேண்டாம் அன்பர்களே இதை போன்றே ஜோதிடமும் நமது வாழ்க்கையில் நடைபெறும் நன்மை தீமையை சரியாக எடுத்து சொல்லும் ஒரு கணித அறிவியல் மட்டுமே . 

மருத்துவ தர்மத்தை முறையாக  கடைபிடிக்கும் எந்த ஒரு மருத்துவனும் இயற்கையாக குழந்தை பிறப்பிற்கு  வாய்ப்பு இருக்கும் பொது அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்வதில்லை என்பதே முற்றிலும் உண்மை , மேலும் இயற்கையாக பிறக்கும்  குழந்தையின் வளரும் சூழ்நிலையும் , அறுவை சிகிச்சை மூலம் பிறக்கும்  குழந்தையின் வளரும் சூழ்நிலையும் அதிக அளவிலே வித்தியாசம் படுகிறது  என்பதை மக்கள் இங்கு கவனிக்க வேண்டும் .

இயற்கையாக பிறக்கும் குழந்தையின் மன ஆற்றல் , உடல் நிலை , அறிவு திறன்  மிகவும் பலம்கொண்டதாக இருக்கிறது என்பது பல ஆராய்ச்சிகள் நமக்கு  உணர்த்துகிறது , இது பற்றி தெளிவு பெற கூகிள் ஆண்டவரை தொடர்பு  கொள்ளுங்கள் அன்பர்களே !

இயற்கையாக குழந்தை பிறப்பு அமையாததிர்க்கு சில முக்கிய காரணங்களாக அறிஞர்கள் சொல்வது :

1) சரியான வயதில் திருமணம் செய்யாமல் தவிர்ப்பது .
2) தேவையான  உடல் உழைப்பு அற்ற நிலை 
3) குழந்தை பிறப்பை தள்ளிபோடுவது .
4) தேவையான அளவிற்கு ஊட்ட சத்து உணவுகளை எடுத்துகொள்ளதது .
5) மனோ ரீதியான பிரச்சனைகள் .
6)​ தன்னம்பிக்கை அற்ற நிலை 
7) கருவுற்று இருக்கும் பொழுது பொற்றோர்களின் ஆதரவு இல்லாத சூழ்நிலை ஆகியவற்றை  குறிப்பிடலாம் .

எனவே அன்பர்களே தங்களின் குழந்தை இயற்கையாக பிறப்பதே குழந்தைக்கும் அதன் தாயிக்கும் மிகுந்த நன்மையை தரும் , தங்களின் குழந்தை  இயற்கையாக பிறப்பதே நல்லது , ஒருவேளை அதற்க்கு வாய்ப்பு இல்லை எனும்பொழுதே அறுவை சிகிச்சை செய்து கொள்ளுங்கள் அது மருத்துவரின்  ஆலோசனையாக இருக்கட்டும், ஜோதிடரின் ஆலோசனையாக  இருப்பது சிறந்ததல்ல என்பதே முற்றிலும் உண்மை .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443306969

வியாழன், 11 ஏப்ரல், 2013

பூர்வபுண்ணிய பாதிப்பும், புத்திர பாக்கியம் எனும் ஆண் வாரிசு யோகமும் !




சுய ஜாதக ரீதியாக ஒருவருடைய ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம் 100 சதவிகித வலிமை பெறுவது ஜாதகருக்கு மிகுந்த நன்மைகளை வாரி வழங்கும் அமைப்பாக கருதலாம் , எடுத்துகாட்டாக ஒருவர் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் எனில் பூர்வ புண்ணியம் வலிமை பெற்று இருக்க வேண்டும் , நல்ல நினைவாற்றல் , தன்னம்பிக்கை , உறவுகள் அல்லாத மற்றவர்களின் ஆதரவு , தெளிவான சிந்தனை திறன் மற்றும் செயல்பாடுகள் , வருமுன் கணிக்கும் புத்திசாலித்தனம் , தனது முன்னோர்களின் சொத்து சுகங்களை பெரும் யோகம் , முன்னோர்களின் நல்ல குணங்களை தான் அப்படியே பெற்று இருக்கும் அமைப்பு என்ற அமைப்பில் மிகுந்த நன்மைகளை வாரி வழங்குவது பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகமே என்றால் அது மிகையாகாது . 

இவ்வளவு மேன்மைகள் பெற்ற பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம் ஒருவருடைய ஜாதகத்தில் புத்திர சந்தானம் எனும் குழந்தை பாக்கியத்தை நிர்ணயம் செய்கிறது என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம் , சுய ஜாதகத்தில் ஒருவருக்கு பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம் நல்ல நிலையில் இருப்பது தனது வம்சம் விருத்தி பெற எவ்வித தடையும் இல்லாமல் ( ஆண் )  குழந்தை பாக்கியத்தை வழங்கும் , இதில் சில விதி முறைகள் உண்டு , தம்பதியர் இருவரது ஜாதக அமைப்பிலும் புத்திர ஸ்தானம் வலிமை பெறுவது நன் மக்கட்பேரை தரும் , மேலும் ஜாதகர் தனது பூர்வீகத்தை விட்டு வெளியில் சென்று ஜீவனம் செய்யாமல் இருப்பது மிகுந்த நன்மையை தரும் .

பூர்வ புண்ணியம் நல்ல நிலையில் இருந்து  அந்த ஜாதகர் தனது பூர்வீகத்தை விட்டு வெகு தொலைவு சென்று ஜீவனம் செய்துகொண்டு இருக்கிறார் என்ற ஒரு நிலை வரும் பொழுது , ஜாதகருக்கு (ஆண் வாரிசு ) புத்திர சந்தானத்தில் குறை வர வாய்ப்பு உண்டு ஏனெனில் ஜாதகரின் ( நல்ல நிலையில் இருக்கும் ) தனது பூர்வீகத்தை விட்டு வெளியிடங்களில் சென்று ஜீவனம் செய்வது , பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு உண்டான பலன்கள்  ஜாதகருக்கு வாழ்நாள் முழுவதுமே நடை பெறாமலே நின்று விடக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உண்டு, மேலும் ஜாதகர் தனது பூர்வீகத்தை விட்டு வெளியில் இருக்கிறார் என்றால் நிச்சயம் ஜாதகருக்கு கிடைக்க வேண்டிய நன்மையான பலன்கள் அதிக அளவில் தடை படும் என்பதே உண்மை .

மேலும் பூர்வ புண்ணியம் வலிமை பெற்று நல்ல நிலையில் அமர்ந்து பூர்வ புண்ணிய ஸ்தானம் சர ராசியாக இருப்பின் விரைவான குழந்தை பாக்கியத்தையும் , ஸ்திர ராசியாக இருப்பின் சில மாதங்களிலும் , உபய ராசியாக இருப்பின் சில வருடங்களிலும் நிச்சயம் குலம் விருத்தி பெற ஆண்வாரிசை தந்துவிடும் , எனவே சுய ஜாதக ரீதியாக புத்திர ஸ்தானம் வலிமை பெற்ற அன்பர்கள் எதற்காகவும் கவலை கொள்ள தேவையில்லை .

ஆனால் பூர்வ புண்ணியம் பாதிப்படைந்த அன்பர்கள் ஜாதகத்தில் பூர்வ புண்ணியம்  ஸ்தானம் சர ராசியாக இருப்பின் தம்பதியர் இருவரின் உடல்  ரீதியான மருத்துவ காரணங்களாலும் , குலதேவதை நிந்தனையின் காரணங்களாலும் , முன்னோர்கள் ,சாதுக்கள் , ஐந்தறிவு ஜீவன்களின் சாபத்தாலும், மற்றும் பெண்களின் சாபத்தாலும் தம்பதியருக்கு குழந்தை பாக்கிய தடையை தரக்கூடும் .

பூர்வ புண்ணியம் பாதிப்படைந்த அன்பர்கள் ஜாதகத்தில் பூர்வ புண்ணியம்  ஸ்தானம் ஸ்திர ராசியாக இருப்பின் ஜாதகரின் ஜீவிக்கும் இடமும் அல்லது தனது  பூர்வீகத்தில் குடியிருப்பதாலும் , தம்பதியரின் விருப்பத்தின் பேரில் குழந்தை பிறப்பை தாமதபடுத்துவத்தின் காரணத்தாலும், தம்பதியர் இருவரும் எடுக்கும் தவறான முடிவுகளின் காரணத்தாலும் , தனது குடும்பத்தில் உள்ளவர்களின் தவறான போதனை மற்றும் வழிகாட்டுதலின்  காரணத்தாலும் தம்பதியருக்கு குழந்தை பாக்கிய தடையை தரக்கூடும் .

பூர்வ புண்ணியம் பாதிப்படைந்த அன்பர்கள் ஜாதகத்தில் பூர்வ புண்ணியம்  ஸ்தானம் உபய ராசியாக இருப்பின் ஜாதகர் மற்றவர்களுக்கு இழைக்கும் அநீதிகளாலும் , மற்றவர் பொருளுக்கு விருப்பபட்டு அவர்களை ஏமாற்றுவதினாலும் , தனது பெற்றோரை , சகோதரர்களை , ரத்த உறவுகளை ஏமாற்றுவதினாலும் , தனது குல தேவதையை முறையாக வழிபாடு செய்யாமல் விடுவதினாலும் , பித்ரு கடமைகளை முறையாக கடைபிடிக்காமல் விடுவதினாலும், தம்பதியருக்கு குழந்தை பாக்கிய தடையை தரக்கூடும்.

எனவே அவரவர் சுய ஜாதகத்தின் தன்மையை உணர்ந்து , முறையான செயல்பாடுகளையும் , வழிபாடுகளையும் சரியாக செய்தால் அவர்களுக்கு உறுதியாக இறை அருளின் கருணையினால் தனது குலம் விளங்க புத்திர சந்தானம்  உண்டாகும் என்பதில் சந்தேகம் இல்லை என்பது ஜோதிடதீபத்தின் கருத்து , ஒருவரது சுய ஜாதகத்தில் இந்த புத்திர ஸ்தானம் எந்த நிலையில் உள்ளது என்பது பற்றி நாம் அடுத்த பதிவில் சற்றே சிந்திப்போம் அன்பர்களே !

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443306969

காதல் திருமணத்திற்கு ஜாதக பொருத்தம் பார்த்து இல்லற வாழ்க்கை அமைத்து கொள்வது நன்மை தருமா ?



பொதுவாக காதலர்கள் பெற்றோர்  அனுமதியுடன் திருமணம் செய்துகொள்ளும் முன், சில பெற்றோர்களின் அறிவுறுத்தலுக்கு இணங்கி ஜாதக பொருத்தம் காண எங்களிடம் வருவது உண்டு, தனது வாழ்க்கையை தனது விருப்பபடி அமைத்துகொள்ளும் காதலர்களின் ஜாதக அமைப்பில் , குடும்ப ஸ்தானமோ அல்லது களத்திர ஸ்தானமோ ஒன்று, ஏதாவது ஒருவகையில் பாதிக்க பட்டு இருக்கிறது ,அல்லது மேற்கண்ட இரண்டு பாவகங்களும் பாதிக்க பட்டு இருக்கின்ற நிலையில் தான் ஜாதகர் தனது வாழ்க்கையை தானே தேர்ந்தெடுத்து கொள்ளும் சூழ்நிலைக்கு தள்ள படுகிறார் .

இப்படி பட்ட சூழ்நிலையில் காதலர்களின் சுய ஜாதகத்தில்,  இல்லற வாழ்க்கையை நல்ல முறையில் அமைவதற்கு வழி கோலும் பாவகங்கலான, குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானங்கள் பாதிக்க பட்டு இருந்த போதிலும் , லக்கினம் மற்றும் பூர்வ புண்ணியம் எனும் இரண்டு பாவகங்கள் இரண்டும் வலிமை பெற்று இருப்பது அவசியம் , ஏனெனில் தான் அமைத்து கொண்ட வாழ்க்கையை வெற்றிகரமாக அமைத்து கொள்ள இந்த இரண்டு பாவகங்கள் 100 சதவிகிதம் உறுதி புரியும் , வாழ்க்கையில் எவ்வித சிரமங்கள் வந்த போதிலும் அவற்றை எல்லாம் மன துணிவுடன் எதிர்கொண்டு , காதல் திருமண வாழ்க்கையில்  வெற்றி பெரும் யோகத்தை தரும் .

மேலும் தனது குலம் விளங்க நல்ல வாரிசு அமையும் , இதன் மூலம் சமுதயத்தில் காதல் தம்பதியரின் வாழ்க்கை மேலும் மேலும் முன்னேற்றம் பெரும் , மதிப்பு ,மரியாதை ,அந்தஸ்த்து , கௌரவம் போன்றவை இயற்கையாக அமையும் , தம்பதியருக்கு  குடும்ப வாழ்க்கையில் ஒரு பிடிப்பும், நம்பிக்கையும் உண்டாகும் . எனவே காதல் திருமணம் செய்துகொள்ளும்  அன்பர்களின் ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம் களத்திர ஸ்தானம், ஏதாவது  ஒருவகையில் பாதிக்க பட்டு இருக்கும் என்பது உறுதி. ஆனால் லக்கினம் மற்றும் பூர்வ புண்ணியம்  பாதிக்கபடாமல் இருப்பது அவசியம் .

ஒருவேளை காதல் திருமணம் செய்து கொள்ளும் அன்பர்களின் ஜாதகத்தில் லக்கினம் மற்றும் பூர்வ புண்ணியம் எனும்  இரண்டு பாவகங்களும் பாதிக்கப்படும் பொழுது  ஜாதகரின் காதல் வாழ்க்கையும் , காதல் திருமண வாழ்க்கையும்  மிகப்பெரிய சிக்கல்களை சந்திக்கவேண்டி வரும் , இதனால் காதலர்களின்  மன உறுதி உடைபடும் , குடும்ப வாழ்க்கை சின்னாபின்னமாகும்  சூழ்நிலையை, திருமணத்திற்கு பிறகு வெகு விரைவில் தரும் . அப்பொழுது காதலர்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் காணும்  மன நிலையையும் , விட்டுகொடுக்கும் மனப்பக்குவத்தை இழந்து தங்களது  காதல் வாழ்க்கைக்கு முடிவுரை எழுதும் நிலைக்கு வந்துவிடுவார்கள் என்பதே உண்மை .

நல்ல வாழ்க்கை துணை ஒருவருக்கு அமைவது என்பது மற்றவர்களால் நிர்ணயம் செய்யபடுவதில்லை இல்லை என்பதை அனைவரும் இந்த இடத்தில் உணருவது  அவசியம், தனது வினை பதிவிற்கு ஏற்ற விதத்திலேயே  இயற்கையால் நிர்ணயம் செய்யபடுகிறது என்பதே உண்மை , ஒருவருக்கு நல்ல வாழ்க்கை துணை  , நல்ல கூட்டாளிகள் , நல்ல நண்பர்கள் , சிறந்த மக்கள் ஆதரவு அமைவதற்கு , அவரின் சுய ஜாதகத்தில் களத்திர பாவகம் எனும் 7ம் பாவகம் 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருக்க வேண்டும் .

இதை போன்றே நல்ல குடும்ப வாழ்க்கை , கை நிறைவான வருமானம் , இனிமையான  பேச்சு திறன் , வாழ்க்கையில் அனைத்தையும் அனுசரித்து செல்லும்  மன பக்குவத்தையும் , அடிப்படை கல்வியில் சிறந்து விளங்கும் யோகம், தனது வாழ்க்கை துணையுடன் இனிமையான குடும்ப வாழ்க்கை மேற்கொள்ளும் அமைப்பையும் குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் பாவக வழியில் இருந்தே  நடை பெரும், எனவே மேற்கண்ட குடும்ப ஸ்தான அமைப்பில்  இருந்து ஜாதகர் 100 சதவிகித நன்மையை பெற வேண்டும் எனில் குடும்ப  ஸ்தானம் எனும் இரண்டாம் பாவகம் சுய ஜாதகத்தில் 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருப்பது  அவசியம் .

ஆக ஒருவரின் சுய ஜாதகத்தில் குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானம் நல்ல நிலையில்  இருந்தால் ஜாதகர் திருமணம் பெரியோர்களால் நிச்சயக்கபட்டும் , ஒருவரின் சுய ஜாதகத்தில் குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானம் பாதிக்கபட்டு  இருந்தால், ஜாதகர் திருமணம் தமது விருப்பபடி காதல் திருமணமாகவும்  அமையும், எனவே காதல் திருமணம் செய்துகொள்ளும் அன்பர்கள் குடும்ப களத்திர ஸ்தான அமைப்பில் இருந்து வரும் இன்னல்களை ஏற்று வாழ்க்கை இனிமையாக வாழும் மனபக்குவத்தை வளர்த்துகொள்வது மிகுந்த நன்மை தரும் , காதல் திருமணம் ஆரம்பத்தில் துன்பமாக இருந்தாலும் சில காலங்களுக்கு பிறகு வாழ்க்கை  மிகவும் இனிமையானதாக மாறிவிடும், என்ற உண்மையை காதல் திருமணம்  செய்துகொண்ட தம்பதியர் இருவரும் உணருவது காதல் திருமண வாழ்க்கை 100 சதவிகித வெற்றி பெற உதவி புரியும் .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443306969


வெள்ளி, 29 மார்ச், 2013

லக்கினம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது ஜாதகர் நிலை என்ன ?





அன்பரே இது ஒரு சிறந்த கேள்வியாக ஜோதிடதீபம் கருதுகிறது .


கால புருஷ தத்துவ விதிப்படி ராசிகளை சரம் ஸ்திரம் உபயம் என்று மூன்று பிரிவுகளாக இயற்க்கை பகுத்து வைத்திருக்கிறது , இதில் சர ராசிகளை லக்கினமாக கொண்டவர்களுக்கு 11ம் பாவகம் பாதக ஸ்தானமாகவும், ஸ்திர ராசிகளை லக்கினமாக கொண்டவர்களுக்கு 9ம் பாவகம் பாதக ஸ்தானமாகவும், உபய ராசிகளை லக்கினமாக கொண்டவர்களுக்கு 7ம் பாவகம் பாதக ஸ்தானமாக இயற்கையால் நிர்ணயம் செய்யப்படுகிறது .

ஒருவருடைய லக்கினம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது ஜாதகர் தனது வாழ்க்கையில் எவ்வித இன்னல்களை சந்திக்க வேண்டி வரும், என்பதை இந்த பதிவில் சிந்திப்போம் , பொதுவாக ஜாதகத்தில் எந்த ஒரு பாவகமும் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது அவ்வளவு நன்மையை தருவதில்லை என்பதே முற்றிலும் உண்மை , எனவே ஒருவருடைய ஜாதகத்தில் உடலாக , உயிராக , மனதாக  மதிக்கப்படும் லக்கினம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது ஜாதகர் இலக்கின வழியில் இருந்து அனுபவிக்க வேண்டிய பலன்களை பற்றி இனி பார்ப்போம் .

சர ராசியை லக்கினமாக கொண்டவர்களுக்கு லக்கினம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது , ஜாதகருக்கு தரவேண்டிய பதிப்புகளை நிலைத்து நின்று செய்யும் , மேலும் ஜாதகரின் உடல் நிலை , மன நிலை , அறிவாற்றல் , செயல்பாடுகளின் மூலம் ஜாதகர் வாழ்நாள் முழுவதும் அதிக இன்னல்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலையை தாமே உருவாக்கி கொண்டு தனது வாழ்க்கையை தானே கெடுத்து கொள்வார் , மேலும் தனக்கு வரும் அதிர்ஷ்ட வாய்ப்புகளை பயன்படுத்தி கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் பெரும் அமைப்பை ஜாதகர் தவறவிடும் தன்மையை தரும் .

முன் பின் சிந்திக்காமல் செய்யும் காரியங்களால் ஜாதகர் வாழ்நாள் முழுவதும் இன்னல்களை சந்திக்க வேண்டி வரும் , ஜாதகருக்கு சிறப்பான வளரும் சூழ்நிலையை தராது , கல்வியில் தடையை தரும் , திருமண தாமதத்தை தரும் , தொழில் முடக்கம் அல்லது வேலைவாய்ப்பற்ற நிலை தரும் , ஆக சர லக்கினம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது ஜாதகர்  இலக்கின வழியில் இருந்து நிலையான இன்னல்களை சந்திக்க வேண்டி வரும்  .

ஸ்திர ராசியை லக்கினமாக கொண்டவர்களுக்கு லக்கினம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது , ஜாதகருக்கு தர வேண்டிய பாதிப்புகளை  விரைந்து செய்யும் அதுவும் ஜாதகர் எதிர்பாராத நேரத்தில் வாழ்க்கையில்  மிகப்பெரிய சிரமத்தை ஏற்படுத்தி சென்றுவிடும் , இதில் இருந்து  ஜாதகர் மீண்டு எழுந்து வர அதிக கால நேரத்தை எடுத்துகொள்ள வேண்டி வரும் , இந்த தீமையான பலன்கள் யாவும் ஜாதகரின் வாழ்க்கையில் அதிக மாற்றங்களை தரும் நேற்றுவரை நன்றாக இருந்தவர் ஒரு இரவில் அனைத்தையும்  இழந்து , ஒன்றும் இல்லாத சூழ்நிலைக்கு தள்ளப்படுவார் , இருப்பினும்  ஜாதகர் இவற்றில் இருந்து மீண்டு வரும் வாய்ப்பை நிச்சயம் தரும் .

மேலும் ஜாதகரின் உடல் நிலை , மன நிலை , அறிவாற்றல் , செயல்பாடுகளின் மூலம் தனக்கு நடக்கும் இன்னல்களை ஏற்படுத்தி கொள்ளும் தன்மையை தரும் , குறிப்பாக தனது கல்வி , தொழில் , குடும்ப வாழ்க்கை என்ற அமைப்புகளில் வெகுவாக பாதிக்கும் சூழ்நிலையை தரும் , ஸ்திர ராசியை லக்கினமாக கொண்டவர்களுக்கு லக்கினம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும்  பொழுது, விரைவான கெடு பலன்களை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டி வரும் , இருப்பினும் இவை அனைத்தும் ஜாதகரின் நன்மைக்கே என்பதை இறுதியில் ஜாதகர் உணரக்கூடும் .

உபய ராசியை லக்கினமாக கொண்டவர்களுக்கு லக்கினம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது ,  ஜாதகருக்கு தர வேண்டிய பாதிப்புகளை ஜாதகருடைய அமைப்பில் இருந்து குறைந்த இன்னல்களை அனுபவித்த  போதிலும் , ஜாதகரின் நண்பர்கள் , வாழ்க்கை துணை , கூட்டாளிகள்  மூலமாகவே அதிக இன்னல்களை சந்திக்க வேண்டி வரும் , எனவே  ஜாதகர் தனது நண்பர்கள் , வாழ்க்கை துணை , கூட்டாளிகளை தேர்ந்தெடுக்கும்  பொழுது அதிக கவனமுடன் இருப்பது நலம் ஏனெனில் ஜாதகர்  அவர்கள் வழியில் இருந்தே அதிகபடியான பாதக ஸ்தான பலன்களை அனுபவிக்க வேண்டி வரும் .

மேலும் ஜாதகரின் உடல் நிலை , மன நிலை , அறிவாற்றல் , செயல்பாடுகளின் தன்மையை ஜாதகரின் நண்பர்கள் , கூடாளிகள் , வாழ்க்கை துணையே நிர்ணயம்  செய்து ஜாதகரை மிகுந்த துன்பத்திற்கு ஆளாக்குவார்கள் , குறிப்பாக மற்றவர் செய்யும் காரியங்களுக்கு ஜாதகர் வீண் பலி பாவங்களை அனுபவிக்க  வேண்டி வரும் , குறிப்பாக ஜாதகரின் பொது வாழ்க்கை , தொழில் மற்றும்  திருமண வாழ்க்கை கேள்வி குறியாக மாறிவிட அதிக வாய்ப்புகள் ஏற்ப்படுத்தும் , தனது நண்பர்கள் , கூட்டாளிகள் , வாழ்க்கை துணையின் செயல்பாடுகள்  மூலம் ஜாதகர் 100 சதவிகித தீமையான பலனையே அதிகம் அனுபவிக்க  வேண்டி வரும் என்பதே வருத்தம் அளிக்கும் விஷயம் , இவரின் தொடர்  தோல்விகளுக்கு காரணமாக மேற்க்கண்டவர்களின் தொடர்பே காரணமாக அமைந்துவிடும்  என்பதே உண்மை .

சர லக்கினத்தை சார்ந்தவர்கள் தனது அதிர்ஷ்ட வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தாமல்  இருப்பதாலும் , ஸ்திர லக்கினத்தை சார்ந்தவர்கள் தனது செய்கையினாலும் சிந்தனையினாலும் தனக்கு இன்னல்களை தானே தேடி கொள்வதாலும் , உபய லக்கினத்தை சார்ந்தவர்கள் மற்றவர்களாலும் பாதக ஸ்தான  பலனை அனுபவிக்க வேண்டி வரும் .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443306969


திங்கள், 25 மார்ச், 2013

2ல் மற்றும் 8ல் ராகு கேது அமர்வதால் குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கை பாதிக்கபடுமா ? இது சர்ப்ப தோஷத்தை தருமா ?



பொதுவாக 

( 1 ) லக்கினம் மற்றும் ஏழாம் பாவகத்தில் ராகு கேது அமர்வது , 
( 2 ) 2ம் மற்றும் 8ம் பாவகத்தில் ராகு கேது அமர்வது,
( 3 ) 5ம் மற்றும் 11ம் பாவகத்தில் ராகு கேது அமர்வது , 
( 4 ) 6ம் மற்றும் 12ம் பாவகத்தில் ராகு கேது அமர்வது, 

சர்ப்ப தோஷம் என்றும் , இந்த நிலையை பெற்றுள்ள ஜாதக அமைப்பை சார்ந்தவர்கள் அனைவரும் திருமண தாமதம் , மற்றும் குடும்ப வாழ்க்கையில் அதிக இன்னல்களையும் அனுபவிக்க வேண்டி வரும்என்றும்.

இதனால்  ஜாதகர் வாழ்க்கையில் அதிக துன்பங்களை ஜீவன வழியிலும் பொருளாதார ரீதியாகவும் அனுபவிக்க வேண்டிவரும் என்றும் பாரம்பரிய ஜோதிட முறையில் பலனாக பல ஜோதிடர்கள் சொல்வது உண்டு , இவை அனைத்தும் பொதுவாக சொல்லப்படும் கருத்தே அன்றி ஜாதகத்தை தெளிவாக ஆராய்ந்து கணிதம் செய்து சொல்லப்படும் பதில்கள் அல்ல என்பதே உண்மை .

 லக்கினம் ஆரம்பிக்கும் பாகையை வைத்து மேற்க்கண்ட பாவகங்களில்தான் ராகு கேது அமர்ந்திருக்கின்றனர என்று நிர்ணயம் செய்வது மிக முக்கியம் , ஏனெனில் சில ஜாதகங்களில் ராகு கேது கட்டங்களில் அமர்ந்திருக்கும் நிலையை வைத்து ராகு கேது கிரகங்களின் நிலையினை நிர்ணயம் செய்வது என்பது தவறான பலனை சொல்வதற்கு வழிகாட்டிவிடும் , ஆக லக்கினம் ஆரம்பிக்கும் பாகையை ஆதாரமாக வைத்து உண்மையில் ராகு கேது எந்த பாவகத்தில் அமர்ந்திருக்கிறார் என்பதை சரியாக நிர்ணயம் செய்வது ஒரு தலை சிறந்த ஜோதிடனின் கடமை.

 எடுத்துகாட்டாக :

கிழ்க்கண்ட சிம்ம இலக்கின ஜாதக அமைப்பில் மேலோட்டமாக பார்க்கும் பொழுது 6 ல் கேதுவும் 12 ல் ராகுவும் அமர்ந்திருப்பதை போன்ற தோற்றத்தை தரும் ஆனால் உண்மையில் பாவக அமைப்பின் படி கணிதம் செய்து பார்க்கும் பொழுது 5ல் கேதுவும் , 11ல் ராகுவும் அமர்ந்திருக்கிறார்கள் என்ற உண்மை புரியும் , பொதுவாக ஜோதிடத்தை பற்றிய அடிப்படை விஷயம் தெரியாதவர்கள் ஜாதக கட்டத்தை பார்த்த உடனே கேது 6லும் ராகு 12லும் அமர்திருப்பதாக கணித்து குத்து மதிப்பாக பலனை சொல்ல ஆரம்பித்து விடுவார்கள் , ஆனால் உண்மையில் ஜோதிட கணிதம் தெரிந்த ஜோதிடர்கள் கிரகங்களின் சரியான அமரும் நிலையை வைத்து பலன் காணுவார்கள் .



குறிப்பு : 

( 1 ) லக்கினம் என்பது சிம்மத்தில் 148.04.24 பாகை முதல் கன்னியில் 178.35.45 பாகை வரை வியாபித்து இருக்கிறது ,

( 2 ) ஜாதகரின் 5ம் பாவகம் தனுசுவில் 267.52.60 பாகை முதல் மகரத்தில் 297.40.34 பாகை வரை வியாபித்து இருக்கிறது , 

( 3 )ஜாதகரின் 11ம் பாவகம் மிதுனத்தில் 87.52.60 பாகை முதல் கடகத்தில் 117.40.34 வரை வியாபித்து இருக்கின்றது எனும் பொழுது,

( 4 ) மகரத்தில் 273.11.52 பாகையில் அமர்ந்திருக்கும் கேதுவும் கடகத்தில் 93.11.52 பாகையில் அமர்ந்திருக்கும் ராகுவும் எப்படி 6 மற்றும் 12 ம் பாவகத்தில் அமர்வதாக எடுத்துகொள்ள இயலும்.

 ( எனவேதான் இங்கு சரியான ஜோதிட கணிதத்தை பயன்படுத்தி பலன் காணவேண்டும் என்ற அவசியம் ஏற்ப்படுகிறது .) 

கணிப்பு என்பது எவரும் எளிதில் செய்துவிட முடியும் , கணிதம் என்பது முறையாக  ஜோதிட கணிதத்தை அறிந்தவர்களால் மட்டுமே செய்யகூடிய ஒரு விஷயம்  , எனவே இங்கே பலகாலமாக ஜாதகத்தில் ராகு கேது 6ல் மற்றும் 12ல் என்று நினைத்து கொண்டு பலன் சொல்லும் பொழுது , ஜாதகனுக்கு அந்த  பலன்கள் எப்படி பொருந்தும் மேலும் அது சரியான கணிதமும்  இல்லை என்பதே அடிப்படை விஷயமாக மாறிவிடுகிறது , இங்கே   ஏமாற்றம் பெறுவது  பலன் சொன்ன ஜோதிடனும் , பலன் காண வந்த ஜாதகனும்  என்பதை ஒரு சரியான கணித ஜோதிடன் மூலமாக மட்டுமே தெரிய  வரும் அதுவும் அந்த ஜாதகனுக்கு பிராப்தம் இருந்தால் .

எனவே முதலில் ஒரு கிரகம் எந்த பாவகத்தில் அமர்திருக்கிறார் என்ற அடிப்படை  விஷயம் கூட தெரியாத ஜோதிடனிடம் ஆலோசனை பெற்று ஒருஜாதகர்  தனது வாழ்க்கையை சரியான வழியில் நடத்தி செல்வது என்பது எப்படி ? என்ற  கேள்வி இங்கு தோன்றுகிறது .

நிறை ஜாதகங்களில் இதை போன்ற  குழப்பங்களை  காணமுடிகிறது , இதை பயன்படுத்திக்கொண்டு  சில ஜோதிடர்கள் ராகு கேது தோஷம் , சர்ப்ப தோஷம், செவ்வாய் தோஷம் , களத்திர தோஷம் என்று  மற்றவர்கள் வாழ்க்கையில் புகுந்து விளையாடி விடுகின்றனர் , இதை  உணராத  மக்கள் அனைவரும் தனக்கு எதோ பெரிய தோஷம் இருப்பதாக நினைத்துகொண்டு  தனது வாழ்க்கையை சரியாக நிர்ணயம் செய்ய இயலாமல்  தடுமாறுகின்றனர் என்பதே உண்மை .

அடுத்து மேற்கண்ட அமைப்பில் அமர்ந்த ராகு கேது கிரகங்கள் ஜாதகனுக்கு நன்மையை  செய்கிறனவா ? தீமையை செய்கிறனவா ? என்பதை நிரண்யம்  செய்யவேண்டும் . இதற்க்கு முறையான ஜோதிட கணிதம் பயின்றவர்கள் உடனடியாக பதில் சொல்விட முடியும் , ஆனால் ஜோதிடத்தை பற்றிய அடிப்படை விஷயம் அறியாதவர்களால் ஜாதகனை குழப்பம் பெற செய்ய முடியுமே  தவிர சரியான பலனை சொல்ல இயலாது. 

மகரத்தில் 5ல் அமர்ந்த கேது பகவான் 100 சதவிகித தீமையையும் , கடகத்தில் 11ல் அமர்ந்த ராகு பகவான் 100 சதவிகித நன்மையையும் செய்வார் என்பதே உண்மை , இந்த பலன்கள் எப்பொழுது நடை முறைக்கு வரும் என்பது அடுத்த கேள்வி ? 

 5 மற்றும் 11 ம் பாவகத்தின் பலனை ஏற்று நடக்கும் திசை எதுவென்று அறிந்து அதன்  பலனை சொல்ல வேண்டும் . ஒருவேளை ஜாதகத்தில் நடை பெரும் அனைத்து திசைகளும் இந்த பாவகத்தின் பலனை தரவில்லை ஏற்று நடத்தவில்லை எனில் ஜாதகன் மேற்கண்ட பாவகத்தின் நன்மை தீமை பலனை சிறிதும் அனுபவிக்க மாட்டார் என்பது குறிப்பிட தக்கது .

2ல் அல்லது 8ல் நல்ல நிலையில் அமரும் ராகு கேது கிரகத்தால் ஒருவருடைய வாழ்க்கை சிறிதும் பாதிக்க வாய்ப்பில்லை என்ற உண்மையை உணருவது அவசியம் , ஒருவேளை 2ல் அல்லது 8ல் பாதிப்பை தரும் நிலையில் அமரும் ராகு கேது கிரகத்தால் ஜாதகர் கடுமையாக மேற்கண்ட பாவக  வழியில் இருந்து இன்னல்களை அனுபவிக்க வேண்டி வரும் என்பதையும்  மறுப்பதற்கு இல்லை எனவே ஒருவருடைய ஜாதகத்தில் ராகு கேது கிரகங்கள் எங்கு அமர்ந்து இருக்கிறார்கள் , அவர்கள் ஜாதகருக்கு நன்மையை செய்துகொண்டு இருக்கிறார்களா இல்லையா ? என்பதை நிர்ணயம்  செய்து , நடப்பு திசையில் அதன் பலன்கள் நடை பெறுகிறத என்பதை  ஜோதிட கணிதம் செய்து தெளிவாக தெரிந்துகொண்டு பலன் சொல்வதே நம்மை நாடி வரும் அன்பர்களுக்கு நன்மை தரும் .

பொதுவாக 2ல் மற்றும் 8ல் அமரும் ராகு கேது நன்மை செய்யுமா ? தீமை செய்யுமா ? என்பதை பற்றிய ஒரு சிறு விளக்கம் .

ஒருவருடைய சுய ஜாதகத்தில் 2ம் பாவகம் மற்றும் 8ம் பாவகம் ரிஷபம் , மிதுனம், கன்னி  ( சூரியனுடன் 14 பாகைக்குள் சேராத புதன் ), கடகம் ( வளர்பிறை சந்திரன் ) துலாம் , தனுசு , மீனம் ராசிகளாக வந்து இங்கு அமரும் ராகு கேது 100 சதவிகித தீமையை செய்யும் .

ஒருவருடைய சுய ஜாதகத்தில் 2ம் பாவகம் மற்றும் 8ம் பாவகம் மேஷம் , மிதுனம்,கன்னி ( சூரியனுடன் 14 பாகைக்குள் சேர்ந்த புதன் ) , கடகம் ( தேய் பிறை சந்திரன் ), சிம்மம் , விருச்சகம் , மகரம் , கும்பம் ராசிகளாக வந்து இங்கு அமரும் ராகு கேது 100 சதவிகித நன்மையை செய்யும் , என்பதே உண்மை எனவே சுய ஜாதகத்தில் ராகு கேது 2ல் 8ல் அமர்ந்திருக்கும் ஜாதக அமைப்பை பெற்றவர்கள் இதை வைத்து ராகு கேது நன்மை செய்கிறதா ? தீமை செய்கிறதா என்பதை  நிர்ணயம் செய்து கொள்ளலாம் .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443306969


ஞாயிறு, 24 மார்ச், 2013

ஜோதிட ஆலோசனை : ஜாதக பொது பலன்கள்



லக்கினம் : ரிஷபம்  
ராசி : ரிஷபம் 
நட்சத்திரம் : மிருகசீரிடம் 1 ம் பாதம்  

ஜாதக அமைப்பில் நல்ல நிலையில் இருக்கும் பாவகங்கள் :

1,7 ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7 ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது இலக்கின வழியில் இருந்து நீண்ட ஆயுள் , நல்ல ஆரோக்கியம் , சிறப்பாக வளரும் சூழ்நிலை , தன்னம்பிக்கை சுய கட்டுப்பாடுடன் வாழும் தன்மை , நினைத்ததை சாதிக்கும் யோகம் , நல்ல நண்பர்கள் , சிறந்த கூட்டாளிகள், பொதுமக்கள் ஆதரவு , எங்கு சென்றாலும் யோக வாழ்க்கை , வெளிநாடுகளில் இருந்து வரும் திடீர் செல்வ சேர்க்கை , கூட்டு முயற்ச்சியில் கிடைக்கும் வெற்றி , வாழ்க்கை துணையின் வழியில் இருந்து அபரிவிதமான யோகம் , எதிர்பாலினரின் ஆதரவு அவர்கள் வழியில் இருந்து வரும் முன்னேற்றம் என இலக்கின வழியில் இருந்து ஜாதகரை மிகசிறந்த நன்மைகளை வாரி வழங்கும் .

7ம் பாவக வழியில் இருந்து நண்பர்கள் கூட்டாளிகள் மூலம் வாழ்க்கையில் மேன்மை பெரும் அமைப்பு , மிகசிறந்த தொழில் அதிபர்களின் சேர்க்கை நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை துணை , சிறந்த கல்வி அறிவு , குறிப்பாக வியாபாரம் சம்பந்தபட்ட விஷயங்களில் ஜாதகரின் தகப்பனாருக்கு மிகுந்த முன்னேற்றத்தை வாரி வழங்கும் . தனது தகப்பனாருக்கு தொழில் ரீதியாகவும் , பொருளாதார ரீதியாகவும் மிகுந்த அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும் .

2,3,6,8,10,11 ம் வீடுகள் திடீர் அதிர்ஷ்டத்தை தரும் , 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 2ம் பாவக வழியில் இருந்து வட்டி  வரவு , கடன் கொடுப்பதால் பெறுவதால் லாபம் , ஓவர் டிராப்ட்  வசதி , தேர்வில் வெற்றி , வீட்டு செல்ல பிராணிகள் மூலம் லாபம்  பண்ணை தொழில்கள் , விவசாயம் கால்நடைகள் வளர்ப்பு மருந்து மருத்துவ உபகரணம் மூலம்  லாபம் என்ற வகையிலும் 

3ம் பாவாக வழியில் இருந்து சிறந்த உத்தியோகம் , பதவி உயர்வு , புத்திசாலித்தனம் , தைரியம் , எதிரிகளை வெற்றி கொள்ளும் யோகம் , விரைவான வளர்ச்சி , வங்கிகள் மூலம் லாபம் , வழக்குகளில் தனலாபம் , வெற்றி , உடல் ரீதியான பிரச்சனைகளை தாங்கும் தன்மை , சுலபமான திடீர் தன பிராப்தி என மிகுந்த நன்மைகளை தரும் .

6 ம் பாவக வழியில் இருந்து உடல் ரீதியான சிறு சிறு தொந்தரவுகள் , வயிறு சம்பந்தபட்ட இன்னல்கள் , தேர்வில் பரிச்சையில் வெற்றி , வழக்குகளில் வெற்றி , திடீர் உடல் நல பாதிப்பு , பிறரால் ஜாதகருக்கு அதிக  தொந்தரவுகள் , தனது தகப்பனாருக்கு திடீர் அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும் தன்மை என மிகுந்த நன்மையை தரும் .

 8 ம் பாவக அமைப்பில் இருந்து எவ்வித தடையும் இன்றி அனைத்திலும் வெற்றி பெரும் அமைப்பு , ஜாதகரின் அமைப்பால் குடும்பத்தில் முன்னேற்றம் , சுப நிகழ்சிகள் மூலம் லாபம் , நீண்ட ஆயுள் , நிறைவான செல்வாக்கு திடீர் தனவந்தனாகும் யோகம் , வண்டி வாகனம் மூலம் எதிர்பாராத  முன்னேற்றம் , மண் , நிலம் சம்பந்தபட்ட அமைப்பில் திடீர் அதிர்ஷ்டம் , புதையல் யோகம் என மிகுந்த அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும் .

10ம் பாவக வழியில் இருந்து தனது வேலையை தானே செய்யும் தன்மை , செய்யும் பணியில் அதிக ஈடுபாடு , எதிலும் முழு முயற்சியுடன் வெற்றி பெரும் அமைப்பு ,  தனது தகப்பனாருக்கு பொருளாதார முன்னேற்றம் மற்றும் திடீர் செல்வ சேர்க்கையை தரும் யோகம் , தனது தகப்பனாருடன் அதிக கருத்து வேறுபாடு கொள்ளும் மன நிலை எனற வகையில் பலன்களை தரும் .

11 ம் பாவக அமைப்பில் இருந்து ஜாதகர் நீடித்த அதிர்ஷ்டம் தனது பெற்றோருக்கு யோக வாழ்க்கையும் , திடீர் முன்னேற்றத்தையும் தரும் தன்மை , அவர்கள் வழி சொத்து சுக சேர்க்கை , செய்யும் செயல்களில் வெற்றி மேல் வெற்றி , தான் கற்ற கல்வி மூலம் வாழ்க்கையில் மிகசிறந்த இடத்தை பெரும் யோகம் , வெளிநாடுகளில் இருந்து மிகுந்த பண வரவு , லாட்டரியில் யோகம் என ஜாதகருக்கு நீடித்த அதிர்ஷ்டத்தை வாழ்நாள் முழுவதும்  தந்துகொண்டே இருக்கும் .

4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது , மண் மனை வண்டி வாகன யோகத்தையும் , சொந்த ஊரில் சிறப்பான முன்னேற்றங்களையும் , உயர்கல்வியில் முதல் நிலையில் தேர்ச்சி பெரும் அமைப்பையும் , சிறந்த தொழில் வாய்ப்புகளையும் வாரி வழங்கும் , குறிப்பாக தனது தாயாருக்கு சிறந்த வாழ்க்கையை தரும் , அனைத்து வசதி வாய்ப்புகளையும் பெரும் யோகத்தை ஜாதகர் நிச்சயம் பெறுவார் .

5,9 ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9 ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது நல்ல உடல் ஆரோக்கியம் , மன வலிமை , விரைவாக முடிவெடுக்கும் தன்மை , பல்துறையில் ஆராய்ச்சி , அதி புத்திசாலித்தனம் , கல்வியில் வெற்றி , படிப்பில் முதல் நிலை , நல்ல ஒழுக்கம் , பண்பாடு , பெரியவர்களை மதித்து நடத்தல் , அவர்களின் ஆசியை பெரும் யோகம் , குல தேவதையின் அருள் கிடைத்தல் , நல்ல பழக்க வழக்கங்கள் நல்ல நினைவாற்றல் என ஜாதகரை மிக சிறந்த இடத்திற்கு எடுத்து செல்லும் .

9 ம் பாவக அமைப்பில் இருந்து சிறந்த அறிவாளி , சிறப்பு மிக்க சிந்தனை திறன் , புதிய கட்டுபிடிப்புகள் , பயணங்களில் விருப்பம் , தெய்வத்தின் அருள் ஜாதகருக்கு பரிபூரணமாக கிடைக்கும் தன்மை , இட மற்றம் சூழ்நிலை மாற்றத்தில் விருப்பம் , அனைவரிடமும் நல்ல பெயரை எடுக்கும் தன்மை , கல்வியில் சிறந்து விளங்கும் ஆற்றல் , தனது குல பெருமையை காக்கும் ஆற்றல் என வாழ்க்கையில் சிறந்த முன்னேற்றத்தை வாரி வழங்கும் .


ஜாதக அமைப்பில் பாதிக்க பட்ட பாவகங்கள் :

12ம் வீடு எதிரி ஸ்தானமான 6 ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது , சில எதிர்பாரத தோல்விகளால் அதிக மன கவலைக்கு ஆளாகும் சூழ்நிலை , அப்படி ஏற்ப்பாடு தோல்விகள் அனைத்து சில காலங்களுக்கு பிறகு தனக்கு சாதகமாக வெற்றியாக மாறும் யோகமும் , முன்யோசனை அற்ற வாழ்க்கையால் அதிக மன போராட்டங்களையும் , அனைவரையும் வெறுக்கும் சூழ்நிலை சந்தர்பங்களையும் தரும் , மற்றவரிடம் அதிக குற்றம் குறைகளை கண்டுபிடிக்கும் மன நிலையை தரும் .

நடக்கும் செவ்வாய் திசை தரும் பலன்கள் : ( 18/10/2008 முதல் 12/10/2015 வரை)

தற்பொழுது நடக்கும் செவ்வாய் திசை 2,6 ம் வீடுகள் திடீர் அதிர்ஷ்டத்தை தரும் 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பலனை தருவது , ஜாதகரின் குடும்பத்திற்கு வெற்றி மேல் வெற்றியை தரும் , மேலும் மற்றவர் பணம் ஜாதகருக்கு வந்து சேரும் , எடுக்கும் காரியங்களில் வெற்றியை தரும் , தன்னம்பிக்கையை அதிகரிக்கும் விதமாக வாழ்க்கையில் சகல நிலைகளில் இருந்தும் முன்னேற்றம் உண்டாகும் சகல சௌபாக்கியம் உண்டாகும் , திடீர் தன பிராப்தி உண்டாகும் , பெற்றோருக்கு மிகுந்த நன்மைகளை வாரி வழங்கும் , குறிப்பாக  தகப்பனாரின் தொழில் முன்னேற்றம் வெகு சிறப்பாக அமையும் ஜீவனம் மேன்மையடையும் , இது ஜாதகருக்கு மிகுந்த யோகத்தை தரும் அமைப்பாக இருந்தாலும் உடல் ரீதியான பிரச்சனைகள் அடிக்கடி ஏற்ப்படும் .

அடுத்து வரும் ராகு திசை தரும் பலன்கள் : ( 12/10/2015 முதல் 11/10/2033 வரை )

அடுத்து நடக்கும் செவ்வாய் திசை 2,6 ,10 ம் வீடுகள் திடீர் அதிர்ஷ்டத்தை தரும் 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பலனை தருவது , ஜாதகரின் தகப்பனாருக்கு மிகுந்த யோகத்தை தரும் , ஜாதகர் கல்வியில் சிறந்து விளங்கும் தன்மையையும் , படிப்பில் வெற்றியும் , விளையாட்டில் ஆர்வத்தையும் , முற்ப்போக்கு சிந்தனையையும் , வெற்றி மேல் வெறியையும் தரும் , தொழில் ரீதியாகவும் , பொருளாதரா ரீதியாகவும் மிகுந்த அதிர்ஷ்டத்தை தரும் காலம் இந்த ராகு திசை என்றால் அது மிகையில்லை.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696
jothidadeepam@gmail.com

வெள்ளி, 22 மார்ச், 2013

பிரம்மஹத்தி தோஷத்தால் ஜாதகர் பெரும் இன்னல்கள் !



கேள்வி :

ஐயா வணக்கம்,


ஒருவரது ஜாதகத்தில் ராசிச்சக்கரத்தில் (லக்ன பாகை அடிப்படையில் பாவகசக்கரப்படியும்) குருவிற்கும் சனிக்கும் தொடர்பு ஏற்பட்டால் அதாவது பரஸ்பர பார்வை, ஒரே பாவகத்தில் இருத்தல்,ஒரே சாரத்தில், பரிவர்தனை இப்படி ஏதேனும் ஒரு வகையில் தொடர்பு ஏற்பட்டால் அது பிரம்மஹத்தி தோஷம் என ஏதோஒரு புத்தகத்தில் படித்தேன். இது சரியா? சரி எனில் இதனால் ஜாதகர் அடையும் தீமைகள் என்ன?

இதில் ஏதேனும் விதிவிலக்குகள் உண்டா?அதாவது சனி நீசமாகி பார்ப்பது அல்லது சனி மறைந்து பார்ப்பது சனியோடு சாயாகிரக அமர்வு இப்படி ஏதேனும் காரணத்தால் இந்த தோஷம் இல்லாமல் போகுமா? மேலும் சனி நல்ல ஆதிபத்யம் பெற்றிருந்தாலும் இந்த தோஷம் உண்டா?



பதில் : 

சனிபகவனுக்கும் , குருபகவானுக்கும் எதாவது ஒருவகையில் ( சேர்க்கை , பார்வை , சார தொடர்பு ) தொடர்பு பெறுவதால் அது பிரம்மஹத்தி தோஷத்தை தந்துவிட வாய்ப்பு இல்லை என்பதே ஜோதிட தீபத்தின் கருத்து , பொதுவாக காலபுருஷ தத்துவ அமைப்பின் படி 9,12 க்கு உடைய குருபகவானும் , 10, 11 க்கு உடைய சனிபகவானும் ஒரே பாவகத்தில் சேர்க்கை பெறுவதும் , சமசப்த பார்வை பெறுவது நன்மையே தரும் .

பாக்கிய விரைய ஸ்தான அதிபதியும் , ஜீவன லாப ஸ்தான அதிபதியும் சேர்க்கை பெறுவது ஜாதகத்திற்கு நன்மையை தானே தரும் , பாக்கிய அமைப்பில் இருந்து சிறந்த வெற்றிகளையும் , ஜீவன அமைப்பில் இருந்து சிறந்த தொழில் அமைப்பையும் , லாப ஸ்தான அமைப்பில் இருந்து தொடர் வெற்றி மற்றும் லாபங்களையும் தந்துகொண்டேதான் இருக்கும் , விரைய பாவக அமைப்பில் இருந்து ஜாதகர் செய்யும் பெரிய முதலீடுகளில் இருந்து மிகுந்த நன்மைகளையும் , அதிக லாபத்தையும் வாரி வழங்கும் என்பதே உண்மை .

ஒரு வேலை ஜாதகர் சுயஜாதாக அமைப்பின் படி 12ம் பாவக அமைப்பில் இருந்து தீமையான பலனை பெறுகிறார் என்று வைத்து கொண்டாலும் அது வெறும் 33 சதவிகித தீமையை மட்டுமே தரும் என்பதே உண்மை .

மேற்சொன்னவை அனைத்தும் பொது பலன்களே , சுய ஜாதகத்தை வைத்தே குரு சனி  சேர்க்கை , பார்வை  , சார தொடர்பு போன்றவற்றின் துல்லியமான பலன்களை  நிர்ணயம் செய்ய இயலும் , மேலும் இந்த இருகிரகங்களுடன் வேறு  ஏதாவது கிரகங்கள் தொடர்பு பெறுகிறத என்பதை சரியாக கவனித்து பலன் காணுவது அவசியம் .

பிரம்மஹத்தி தோஷத்தால் ஜாதகர் அடையும் தீமைகள் முதன்மையானது  நல்ல  பெற்றோர்களை ஜாதகர் பெற வாய்ப்பு இல்லாமல் போய்விடும் , இரண்டாவதாக  சிறப்பாக வளரும் சூழ்நிலையை தராது , கல்வியில் தடையை  தரும் , நல்ல நண்பர்கள் சேர்க்கையை தராது , தனது உடல்நிலையை  தானே தீங்கு விளைவிக்கும் செயல்களில் ஜாதகர் இறங்கிவிடுவார் , நல்ல வாழ்க்கை துணை அமையாது , குழந்தை பாக்கியத்தில்  தடையும் , புத்திர சோகத்தையும் தந்துவிடும் .

பிரம்மஹத்தி தோஷம் என்பது , லக்கினம் மற்றும் களத்திர பாவகம் பாதக ஸ்தனத்துடன் சம்பந்தம்  பெறுவதற்கு நிகரானது என்பதே உண்மை , இந்த நிலை  100000 ஜாதகங்களில் ஒரு ஜாதகத்தில் மற்றுமே இருக்கும் என்பது கவனிக்கப்பட வேண்டிய  விஷயம் .

இதில் விதிவிலக்கு என்று பார்த்தால் மேற்கண்ட பாவகத்துடன் சாய கிரகமான  ராகு கேது சம்பந்தம் பெற்று , குறிப்பிட்ட பாவகத்திர்க்கு 100 சதவிகித  நன்மையை செய்தால் மட்டுமே ஜாதகருக்கு அவயோக பலன்கள் குறைந்து  யோக பலன்கள் நடைமுறையில் அனுபவிக்க முடியும் , அதுவும் சம்பந்த பட்ட  ராசி என்ன தத்துவ அமைப்பில் வருகிறதோ அதை பொறுத்தே யோக பலன்களின் தன்மை இருக்கும் .

மேற்சொன்ன அனைத்தும் சுய ஜாதகத்தை வைத்தே நிர்ணயம் செய்ய இயலும்  , பொதுவாக பலன் சொல்வது என்பது தெளிவான ஜோதிட பலன்களை  உணர வாய்ப்பளிக்காது என்பதே உண்மை அன்பரே !

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443306969


சனி, 9 மார்ச், 2013

7 ம் வீட்டில் அமரும் சனிபகவானால் திருமணம் தாமதமாக நடை பெறுமா ?




பொதுவாக களத்திர பாவகத்தில் அமரும் சனிபகவான் திருமண வாழ்க்கையில் தாமதத்தையும் , குடும்ப வாழ்க்கையில் அதிக இன்னல்களையும் தருவார் என்பது பல ஜோதிடர்களின் கருத்தாக இருக்கிறது, இது முற்றிலும் தவறான கண்ணோட்டம் என்பதே தீபத்தின் கருத்து ,  உண்மையில் கடகம் சிம்மம் எனும் இரண்டு லக்கினத்திற்கு மேற்சொன்ன விதி பொருந்தும் .

 உதரணமாக கடக லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு மகரத்தில் ( களத்திர பாவகத்திர்க்கு உட்ப்பட்ட பாகையில் ) அமரும் சனிபகவான் ( சனி இங்கு ஆட்சி பெற்று அமர்ந்தாலும் கூட ) களத்திர பாவகத்தை 100 சதவிகிதம் கெடுத்து விடுவார் .

மேற்கண்ட அமைப்பை பெற்ற கடக இலக்கின ஜாதகருக்கு ஆண் என்றால் திருமண வாழ்க்கை 34 வயதுக்குக் மேல்தான் அமையும் , பெண் என்றால் 28 வயதுக்கு மேல்தான் அமையும் ,  அதுவும் சிறப்பாக இருப்பதற்கு ஜாதகரின் குடும்ப ஸ்தானம் நல்ல நிலையில் இருக்க வேண்டும், மாறாக குடும்ப ஸ்தானமும் பாதிக்க படும் என்றால் ஜாதகரின் திருமண குடும்ப வாழ்க்கை கேள்விக்கு உரியதாக மாறி விடும் , ஆக கடக லக்கினத்திற்கு மகரத்தில் அமரும் சனிபகவான் களத்திர பாவகத்தை வெகுவாக பாதிக்க செய்வார் என்பது உறுதியாகிறது .

அடுத்து சிம்மலக்கின அமைப்பை சார்ந்த அன்பர்களுக்கு கும்பத்தில்                ( களத்திர பாவகத்திர்க்கு உட்ப்பட்ட பாகையில் ) அமரும் சனிபகவான்          ( சனி இங்கு ஆட்சி பெற்று அமர்ந்தாலும் கூட ) களத்திர பாவகத்தை 100 சதவிகிதம் கெடுத்து விடுவார், மேற்கண்ட அமைப்பை பெற்ற சிம்ம  இலக்கின ஜாதகருக்கு ஆண் என்றால் திருமண வாழ்க்கை 34 வயதுக்குக் மேல்தான் அமையும் , பெண் என்றால் 28 வயதுக்கு மேல்தான் அமையும் .

  அதுவும் சிறப்பாக இருப்பதற்கு ஜாதகரின் குடும்ப ஸ்தானம் நல்ல நிலையில் இருக்க வேண்டும், மாறாக குடும்ப ஸ்தானமும் பாதிக்க படும் என்றால் ஜாதகரின் திருமண குடும்ப வாழ்க்கை கேள்விக்கு உரியதாக மாறி விடும் , மேற்சொன்ன அமைப்பின் படி கடக சிம்ம லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு லக்கினத்திற்கு 7ம் பாவகத்தில் அமரும் சனி மட்டுமே திருமண வாழ்க்கையில் அதிக இன்னல்களை தரும் என்பதே உண்மை .

இதிலும் ஒரு விதி விளக்கு உண்டு மேற்சொன்ன கடக சிம்ம லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு களத்திர ஸ்தானமான மகரம் மற்றும் கும்பத்தில் , சாய  கிரகமான  ராகுவோ கேதுவோ அமர்ந்தால் களத்திர பாவகம் 100 சதவிகித வலிமை  பெற்று சிறப்பான நன்மைகளை தந்துகொண்டு இருக்கும் , இந்த நிலையை பெற்றவர்கள் சனி களத்திர பாவகத்தில் அமர்ந்ததை பற்றி எவ்வித கவலையும் கொள்ள தேவையில்லை .

இங்கே சாயா கிரகமான ராகு கேது கிரகங்களுக்கு மட்டுமே முழு வலிமை உண்டு களத்திர பாவகத்தில் அமர்ந்த சனி பகவானால் எவ்வித நன்மை தீமை பலனையும் தர நிலைக்கு தள்ளி விடும் இந்த சாயா கிரகங்கள் , மேலும் களத்திர  பாவக வழியில் இருந்து 100 சதவிகித யோக பலன்களை ஜாதகர் அனுபவிப்பார்  என்பது சாயா கிரகங்களினால் உண்டாகும் கூடுதல் யோக பலன்கள் என்றால் அது மிகையாகாது .

கடக இலக்கின ஜாதகருக்கு களத்திர பாவக அதிபதியான சனிபகவான் லக்கினமான  கடகத்தில் அமர்ந்தால் ஜாதகருக்கு 19 வயதில் இருந்து 23 வயதிற்குள்  திருமணம் நடந்துவிடும் என்பதும் , அந்த திருமணத்தின் மூலம் ஜாதகர்  வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியை பெறுவார் என்பதும் , ஜாதகருக்கு அமையும் வாழ்க்கை  துணை மிகுந்த யோகதாரியாகவும் , பொருளாதார ரீதியாக மிகப்பெரிய முன்னேற்றத்தை தருபவராகும் இருப்பார் என்பது  கூடுதல் சந்தோஷமான தகவல் .

இதே சிம்ம இலக்கின ஜாதகருக்கு களத்திர பாவக அதிபதியான சனிபகவான் லக்கினமான  சிம்மத்தில் அமர்ந்தால் மிகவும் இளம் வயதிலேயே திருமண வாழ்க்கை  மிகவும் சிறப்பாகவோ அல்லது தனது விருப்பபடியோ நடந்துவிடும் என்பதும் , திருமண வாழ்க்கையின் மூலம் ஜாதகர் அதிக படிப்பினையும் , உலக வாழ்க்கையின் புரிதல்களையும் , அறிவில் தெளிவையும்  பெறுவார் என்பதும் , ஜாதகருக்கு அமைந்த வாழ்க்கை துணை மிகுந்த புத்திசாலியாகவும் , அறிவாற்றல் நிரம்பியவராகவும் , எந்த ஒரு சூழ்நிலையிலும்  தனது வாழ்க்கை துணையை கைவிடாமல் காப்பற்றும் குணம் கொண்டவராகவும் இருப்பார் என்பது சிம்மலக்கின அமைப்பை சார்ந்தவர்களுக்கு  ஒரு சிறந்த வர பிரசாதமாக கருதலாம் .

இந்த கடக சிம்ம லக்கினத்தை தவிர்த்து வேறு எந்த லக்கினம் என்றாலும் லக்கினத்திற்கு 7ம் வீடான களத்திர பாவகத்தில் அமரும் சனிபகவானால் எவ்வித தொந்தரவும் தடையும் இருக்காது என்பதே உண்மை , அப்படி இருந்து ஜாதகருக்கு  திருமணம் தமத நிலையை தருமாயின் , அந்த ஜாதகரின் களத்திர ஸ்தான  அதிபதி எப்படி இருக்கிறார் என்பதை சரியாக கவனிக்க வேண்டும் என்பதும் , களத்திர ஸ்தானத்தின் நிலை எப்படி இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும் என்பதே  சம்பந்தபட்ட பாவகத்திர்க்கு உண்டான சரியான பதில் சொல்ல உதவும் என்பதே உண்மை அன்பர்களே !

இதை விட்டுவிட்டு 7ல் சனி அமர்ந்தாலே தீமை என்று முடிவு செய்வது முற்றிலும்  தவறானது என்று ஜோதிட தீபம் கருதுகிறது .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443306969

ரிஷப ராசி லக்கினமும், பிரதோஷ வழிபாடும் சம்பந்தம் உண்டா ?



ஜோதிட கலை என்பது மிகுந்த புனிதமான கலை என்றால் அது மிகையாகாது , இந்த ஜோதிட கலை என்பது இருபக்கம் கூர்முனை கொண்ட கத்தியை போன்றது , முறையாக இதை பயன்படுத்தவில்லை என்றால் இது ஜோதிடம் காண வந்தவரையும் பாதிக்கும் , ஜோதிடம் சொல்பவரையும் கடுமையாக பாதிக்கும் .

இன்று தொலைகாட்சியில் நான் பார்த்த ஒரு விஷயம் , ஜோதிடர்கள் அறியாமல் செய்யும் விஷயம் மக்களை வெகுவாக பதிப்பதை தெளிவாக உணர முடிந்தது , அவர் சொன்ன விஷயம் தன்னிடம் ஜோதிட ஆலோசனை கேட்க வந்த ஒரு பெண்ணிற்கு 28 வயது என்றும் , அந்த பெண் ரிஷப ராசி ரிஷப லக்கினம் என்றும் இதுவரை அந்த பெண்ணிற்கு திருமணம் ஆகவில்லை என்பதாகவும் , தான் பிரதோஷ வழிபாடு செய்ய சொன்னதால் திருமணம் ஆனதாகவும் , இதற்க்கு காரணம் அந்த பெண்ணின் ரிஷப ராசி ரிஷப லக்கினம் என்பதால் பிரதோஷ நந்தி வழிபாடு செய்ய சொல்லி பரிந்துரை செய்ததாகவும் ஜோதிடத்தின் உண்மை நிலையை உணராமல் கதை விட்டு கொண்டு இருந்தார் .

ஒருவர் ரிஷப ராசி அல்லது ரிஷப லக்கினத்தை கொண்டு இருந்தால் , ஜாதகரின் எண்ணமும் செயலும் ஒரு பசுவின் குனாதிசையத்துடன் ஒருமித்து இருக்கும் , இதற்கும் நந்திபகவானுக்கும் பிரதோஷ வழிபாட்டிற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதை உணராமலேயே , மேலும் ரிஷபம் கால புருஷ தத்துவத்திற்கு இரண்டாவது இடத்திலும், ஸ்திர  மண் தத்துவ ராசியாகவும் , வருகிறது எனவே ஜாதகி பூமியை போன்று ( மண் தத்துவம் என்பதால் ) பொறுமையான குணத்தை பெற்றவராகவும் , சிறந்த உடல் நிலையை கொண்டவராகவும் , சிறப்பான வளரும் சூழ்நிலையை பெற்றவராகவும் இருப்பார் என்பது ரிஷப ராசி லக்கினத்திற்கு உண்டான சூட்சம உண்மை , ஜோதிடர் இதை உணருவது அவசியம் .

மேலும் ஜாதகிக்கு திருமணம் 28 வயது வரை நடைபெறவில்லை என்பதிற்கு உண்டான காரணம் பெண்ணின் ஜாதகத்தில் குடும்ப ஸ்தானமான 2ம் பாவகம் மிதுனம் பாதிப்பு அடைந்திருந்தாலோ , அல்லது களத்திர ஸ்தானமான 7ம் பாவகம்  விருச்சகம்  பாதிப்பு அடைந்திருந்தால் மட்டுமே திருமணம் தாமத படும் , உதாரணமாக மிதுனம் உபய காற்று ராசியாக வருவதால் 2ம் பாவகம் பாதிக்கப்படும்பொழுது , ஜாதகி தனக்கு அமைய வேண்டிய நல்ல வாழ்க்கையை தனது வாயினாலேயே கெடுத்து கொள்வார்  அல்லது ஜாதகியுடன் பிறந்த சகோதர அமைப்பை சார்ந்தவர்கள் இவரது  திருமணத்திற்கு பெரும் தடையாக இருப்பார்கள் .

ஒருவேளை 7ம் பாவகம் பாதிக்க பட்டு இருந்தால் , இது ஸ்திர நீர் தத்துவ ராசியாக இருப்பதால் ஜாதகியின் எண்ணம் மற்றும்  கற்பனைக்கு ஒத்துவராத வரன் வருவதால் ஜாதகி இதை தவிர்த்து கொண்டே இருப்பார் அல்லது அக்கம் பக்கம் உள்ளவர்களின் துர் போதனையால் , திருமணம் தடை பெற்றுகொண்டே இருக்கும் , இதுவே ஜாதக ரீதியான  உண்மை காரணம், பிரதோஷ நந்தி வழிபாட்டிற்கும் ரிஷப ராசி லக்கினத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதே உண்மை .

இறை வழிபாடு என்பது தனது ஆன்மாவை உணரும் தன்மையாகவும் , அறிவில் விழிப்புணர்வு பெறுவதற்கும் வழிபட்டு ஸ்தலங்கள் வழியாக நமக்கு  கிடைக்கும் ஒரு சூட்சம தொடர்பு நிலையே என்பதை உணருவது அவசியம் , இவர் சொல்வதை பார்க்கும் பொழுது ரிஷப ராசி ,லக்கினத்தை பெற்றவர்கள் அனைவரும் நந்தி வழிபாடு செய்தால் போதும் திருமணம் உடனடியாக  நடந்துவிடும் என்பதாக இருக்கிறதே ? இறை வழிபாட்டின் தன்மையை  உணராது செய்யும் வழிபாடுகள் அனைத்தும் கடலில் பயன்படாமல் கலக்கும் நல்ல குடிநீரை போன்றதே .

 வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443306969