ஞாயிறு, 29 செப்டம்பர், 2013

பன்முக தொழில் திறமை கொண்ட ஒரு ஜாதகர்,செய்யும் தொழிலிலும், பொருளாதார ரீதியாகவும் வெற்றி பெறாமல் போவதற்கு என்ன காரணம் ?



 பொதுவாக ஒருவருடைய சுய ஜாதகத்தில் கர்ம ஸ்தானம் எனும் 10ம் பாவகம் ஜாதகர் செய்யும் தொழில் அமைப்பை பற்றியும் , அதில் ஜாதகரின் தனி திறமையை பற்றியும் தெளிவாக தெரிவிக்கும் , ஜாதகர் எவ்வகையான தொழில் செய்தால், செய்யும் தொழிலில் வெற்றி கிடைக்கும் என்பதனையும் அறிவுறுத்தும், ஆக ஒருவருக்கு ஏற்ற தொழில் நிலையை உணர்ந்துகொள்ள ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்தை வைத்து நிர்ணயம் செய்துவிட முடியும் அவர் செய்யும் தொழில் அமைப்பில் ஜாதகரின் திறமையை பற்றியும் தெளிவாக தெரிந்துகொள்ள இயலும், ஆனால் ஜாதகரின் தொழில் திறமை ஜாதகருக்கும் ஜாதகரை சார்ந்தவர்களுக்கும் பயன்படுமா ? என்பத்தை பற்றி வேறு சில பாவக நிலையை வைத்தே நிர்ணயம் செய்ய இயலும் .

ஒருவருடைய சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் 100 சதவிகிதம் வலிமை பெரும் பொழுது ஜாதகர் தான் செய்யும் தொழில் அமைப்பில் பன்முக திறமையும், தனது உழைப்பை, கடமையை 100 சதவிகதம் செய்பவராக இருப்பார் , ஜாதகரின் உழைப்பும் பன்முக திறமையும் , ஜாதகருக்கு பயனளிக்க வேண்டும் எனில் அவரது ஜாதகத்தில் லக்கினம் எனும் முதல் பாவகம் நல்ல நிலையில் இருப்பது அவசியம் , லக்கினம் 2,6,8,12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் , பாதக ஸ்தான அமைப்புடன் சம்பந்தம் பெறுவதும் ஜாதகரின் உழைப்பும், தொழில் திறமையும் ஜாதகருக்கு பயன்படாமல் வீணடிக்கப்படும், அல்லது வேற்று நபர்களுக்கு ஜாதகரின் தொழில் திறமையும், உழைப்பும் பலன் தரும், எனவே ஜாதகரை பணிக்கு அமர்த்தும் முதலாளிக்கு மிகுந்த நன்மைகள் கிடைக்கும் .

சுய தொழில் செய்யும் அன்பர்கள் தொழில் துவங்கிய  நான்கு வருடங்களுக்குள் பொருளாதார ரீதியான தன்னிறைவு பெற இயலவில்லை எனில் ஜாதகர் தனது சுய ஜாதகத்தை பரிசோதித்து கொள்வது சால சிறந்தது , ஏனெனில் ஜீவன ஸ்தானம் வலிமை பெற்ற போதிலும், ஜீவன ஸ்தான வழியில் இருந்து கிடைக்க வேண்டிய நன்மைகளை ஜாதகருக்கு தருவது லக்கினமும், களத்திர பாவகமுமே இவை இரண்டும் பாதிக்கும் பொழுது ஜாதகர் தனது தொழில் திறமையின் மூலம் அடையவேண்டிய நன்மைகளை அனுபவிக்க இயலாது , மேலும் நான்காம் பாவகம் வலிமை பெறவில்லை எனும் பொழுது ஜாதகர் தான் ஈட்டிய வருமானத்தை, அழியா சொத்தாக மாற்ற இயலாது அனைத்து வருமானத்தையும் வீண் செலவுகளிலும் , கேளிக்கைகளிலும் இழக்கும் சூழ்நிலையை தரும் .

 எந்த ஒரு ஜாதகத்திலும் 1,4,7,10ம் பாவகங்கள், 2,6,8,12ம் வீட்டுடனோ , பாதக ஸ்தான அமைப்புடனோ தொடர்பு கொள்ளும் பொழுது , ஜாதகரின் தொழில் அமைப்பும், வாழ்க்கை முறையும் கேள்விக்குறியாக மாறிவிடும் , சுயமாக ஜாதகர் செயல்பட முடியாத சூழ்நிலையை தரும் , ஜாதகரின் முன்னேற்றம் வெகுவாக பாதிக்க படும் , பொருளாதார ரீதியான சிக்கல்களை அதிகம் சந்திக்க வேண்டிய சூழ்நிலையை தரும், மேலும் ஜீவன ஸ்தானம் மட்டும் வலிமை பெற்று மேற்கண்ட பாவகங்கள் வலிமை இழக்கும் பொழுது , ஜாதகரின் உழைப்பும் திறமையும் ஜாதகருக்கு பயன்படாமல் வீண் விரையத்தை தரும் .

குறிப்பாக ஒருவருடைய சுய ஜாதகத்தில் லக்கினம், சுக ஸ்தானமான நான்காம் பாவகம், பொதுமக்கள் நண்பர்கள் ஆதரவை தரும் களத்திர பாவகம், மற்றும்  ஜாதகரின் ஜீவனத்தை தரும் கர்ம ஸ்தானமான 10ம் பாவகம் ஆகியன உபய ராசியுடன் தொடர்பு பெற்று ( தொடர்பு பெரும் உபய ராசி பாதக ஸ்தானமாக அமையாத நிலையில் ) லாபம் மற்றும் அதிர்ஷ்டத்தை குறிக்கும் 11ம் பாவகம் சர ராசிகளான மேஷம்,கடகம்,துலாம்,மகரம் தொடர்பு பெரும் பொழுது ஜாதகரின் வாழ்க்கை பொருளாதார ரீதியாகவும், ஜீவன அமைப்பின் வழியில் இருந்தும் மிகப்பெரிய முன்னேற்றத்தை எவ்வித தங்கு தடையின்றி வாரி வழங்கும், திடீரென வாழ்க்கையிலும் ஜீவன நிலையிலும் முன்னேற்றம் பெற மேற்கண்ட  அமைப்பை சுய ஜாதகத்தில் பெற்றிருப்பது அவசியம் , ஜாதகரின்  உழைப்பு 33 சதவிகிதமாகவும் , ஜாதகரின் வருமானம் 100 சதவிகிதமாகவும் அமையும் யோக நிலையை தரும் .

ஒரு ஜாதகருக்கு தொழில் திறமை இருந்தாலும் கூட சுய ஜாதகத்தில் 1,4,7,11ம் பாவகங்கள் வலிமை பெரும் பொழுதே அந்த ஜாதகர் அதற்க்கு உண்டான முழு நன்மைகளையும் பலன்களையும் 100 சதவிகிதம் அனுபவிக்க இயலும் இல்லை எனில் ஜாதகர் உழைப்பு வீணடிக்க படும் அல்லது ஜாதகர் திட்டம் மட்டும் வகுத்துக்கொண்டு இருக்கும் சூழ்நிலையை தரும் , நடைமுறையில் எவ்வித செயல்பாட்டிற்கும் கொண்டு வர இயலாத சூழ்நிலையை தரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை, எனவே சுய ஜாதக நிலையை நன்கு உணர்ந்து ஜாதகர் செய்யும் தொழில் 100 சதவிகித வெற்றியை வாரி வழங்கும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

புதன், 18 செப்டம்பர், 2013

தனது மகன் அல்லது மகள் என்றாலும் கூட, சுபகாரியங்களில் கணவனை இழந்த பெண்களை கலந்துகொள்ள அனுமதிப்பதில்லையே இதற்க்கு என்ன காரணம்? சாஸ்திரம் தான் இப்படி அறிவுறுத்துகிறது என்கிறார்களே இது உண்மையா ?



எனது சிற்றறிவுக்கு எட்டிய வரையில் எந்த சாஸ்திரமும் கணவனை இழந்த பெண்களை சுபகாரிங்களில் கலந்துகொள்ளகூடாது என்று அறிவுறுத்தியதாக தெரியவில்லை சகோதரி அவர்களே ! 

மேலும் பெரியோர்கள் கணவனை இழந்த பெண்கள் சுபகாரியங்களுக்கு தவிர்த்ததிர்க்கு உண்டான உண்மை காரணம், கணவனை இழந்த பெண்கள் சுப காரியங்களில் கலந்துகொள்ளும் பொழுது மனோ ரீதியான சிக்கல்களை சந்திக்கவேண்டி வரும் என்பதாலும், தனது நிலையை பற்றிய நினைத்து  தாழ்வு மனப்பான்மை ஏற்பட கூடும் என்பதாலும், மற்றவர்கள் சந்தோஷமாக தம்பதியாக கலந்துகொள்ளும் பொழுது தன்னால் இயலவில்லை என்ற மனக்கவலை ஏற்படக்கூடும் என்ற எண்ணத்தாலும், சுப காரியங்களில் கணவனை இழந்த பெண்களை கலந்துகொள்ள வேண்டாம் என்று அறிவுருத்தியிருக்க கூடும் .

இதுவே நாளடைவில் பிற்போக்கு தனமான செய்கையாக மாறியிருக்க கூடும், ஆக கணவனை இழந்த பெண்களின் நலன் கருதியே பெரியவர்கள் சுப காரியங்களில் தவிர்த்திருக்க வாய்ப்பு உண்டு, மற்றபடி சாஸ்திரம் சொல்கிறது என்பது முற்றிலும் உண்மைக்கு மாறானது என்பதே ஜோதிடதீபத்தின் கருத்து , இறை அருளுக்கு தெரியாத? உயிர்கள் அனைத்தும் ஒன்று என்று , மனிதனுக்குள் தானே, இத்தனை பிரிவினைகள், வேறுபாடுகள்  இறை நிலைக்கு ஏது வேறுபாடு, தற்பொழுது நடந்துகொண்டு இருக்கும் 21ம் நூற்றாண்டில் இப்படி பட்ட அவலங்கள் இருப்பதை நினைத்து, நாம் அனைவரும் வருந்த வேண்டும் என்பதே உண்மை.

ஆகவே சகோதரி அவர்களே ! தாங்கள் தங்களின் குழந்தைகளின் சுபகாரியங்களில் கலந்துகொள்ள எந்த சாஸ்திரமும் தடை சொல்லவில்லை என்ற உண்மையை உணர்ந்துகொள்ளுங்கள் , மற்றவர்களை விட நல்ல மனதுடன் தாங்கள் வாழ்த்தும் வாழ்த்துகள் அனைத்தும் தங்களின் குழந்தைகளின் வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றத்தையும் , நல்லாசியையும் வாரி வழங்கும் என்பதே உண்மை, ஆக தாங்கள் எவ்விதத்திலும் மனவருத்தம் கொள்ளாமல் தங்களின் குழந்தைகளை ஆசிர்வாதம் செய்யுங்கள் , அவர்கள் வாழையடி வாழையாக செழித்து, 16வகை செல்வமும் பெற்று நீண்ட ஆயுளும், நிறைசெல்வமும், உயர்புகழும்,
மெய்ஞானத்தையும் பெற்று வளமுடன் வாழட்டும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன்
9443355696
jothidadeepam@gmail.com 

செவ்வாய், 17 செப்டம்பர், 2013

ஒருவர் திருமண வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக்கொள்ள, சரியான காலநேரம் எதுவென்பதை எப்படி ஜாதக ரீதியாக தெரிந்துகொள்வது ?



நல்ல கேள்வி இதற்க்கு பொதுவாக பதில் சொல்வது சரியாக இருக்காது , இருந்தாலும் அவரவர் சுய ஜாதகத்தை அடிப்படையாக வைத்து துல்லியமாக கணிதம் செய்து தெளிவாக தெரிந்துகொள்ள உதவும் , இதில் சில விஷயங்களை ஜாதக கணிதம் செய்யும் பொழுது கவனித்தாலே போதும் ஒருவரின் வாழ்க்கையில் திருமணத்திற்கு ஏற்ற சரியான கால நேரத்தை அறிந்துகொள்ள இயலும் .

திருமணத்திற்கு ஏற்ற காலநேரத்தை தெரிந்துகொள்ள ஒருவரின் சுய ஜாதகத்தில் முதலில் கவனிக்க வேண்டிய விஷயம், சம்பந்தபட்ட  நபரின் சுய ஜாதகத்தில் குடும்பம் எனும் 2ம் பாவகமும் , களத்திரம் எனும் 7ம் பாவகமும் வலிமை பெற்று இருக்கிறதா ? தற்பொழுது நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் குடும்பம் களத்திர பாவகத்துடன் எவிததிலாவது சம்பந்தம் பெறுகிறத? கேட்சர ரீதியாக கிரக நிலைகள் குடும்ப களத்திர ஸ்தானத்திற்கு நன்மையான பலனை வழங்குகிறதா? போன்ற விஷயங்களை கவனத்தில் எடுத்துகொள்வது அவசியம் .

ஒருவருடைய சுய ஜாதகத்தில் குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானம் எனும் இரண்டு பாவகங்களும் நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே ஜாதகருக்கு சரியான வயதில் முறைப்படி எவ்வித தொந்தரவும் இன்றி சிறப்பாக திருமண வாழ்க்கை அமையும், மேற்கண்ட இரண்டு பாவகங்களில் ஏதாவது ஒன்று பாதிக்க பட்டாலோ, அல்லது இரண்டும் பாவகமும் பாதிக்க பட்டாலோ ஜாதகருக்கு திருமணம் என்பது மிகவும் தாமதமாகவே நடைபெறும், அல்லது ஜாதகர் தனது வாழ்க்கை துணையினை தானே தேர்ந்தெடுக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படும் சந்தர்ப்பம் வரக்கூடும் .

எனவே ஒரு ஜாதகர் தனது திருமண வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக்கொள்ள சரியான வயது வந்தவுடன் தனது சுய ஜாதகத்தில் களத்திர பாவகமும் குடும்ப ஸ்தானமும் வலிமை பெற்றிருக்கும் காலத்தை சரியாக தெரிந்துகொண்டு வாழ்க்கை துணை தேடுதலில் இறங்கினால் தாமதம் இல்லாமல் தடையில்லாமல் திருமணம் கைகூடும் , இதை தவிர்த்து களத்திர பாவகமும், குடும்ப ஸ்தானமும் வலிமை அற்ற பொழுது ஜாதகர் வழக்கை துணை தேடுதலில் இறங்கினால் ஏமாற்றமே மிஞ்சும் என்பதே முற்றிலும் உண்மை.

ஒருவருடைய சுய ஜாதகத்தில் குடும்ப ஸ்தானமும், களத்திர ஸ்தானமும் இயற்கையில் நல்ல நிலையில் இருப்பின் ஜாதகர் திருமண வாழ்க்கையை பற்றி எவ்வித கவலையும் கொள்ள தேவையில்லை, சரியான வயதில் நிச்சயம் தாமதம் இன்றி திருமணம் சிறப்பாக நடைபெறும், ஜாதகருக்கு அமையும் வாழ்க்கை துணையும் சரி, குடும்ப வாழ்க்கையும் சரி மிகவும் மகிழ்ச்சிகரமானதாக அமைந்துவிடும், மேற்கண்ட பாவகங்கள் பாதிக்க படும் ஜாதக அமைப்பை பெற்ற அன்பர்கள் கோட்சார ரீதியாக குடும்ப ஸ்தானம் களத்திர ஸ்தானம் வலிமை பெரும் நிலையை அறிந்துகொண்டு அந்த குறிப்பிட்ட கால நேரத்தை சரியாக பயன்படுத்தி கொண்டு திருமண வாழ்க்கையை அமைத்துக்கொண்டு வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியை பெறலாம் .

காலம் கடந்தும் திருமணம் நடைபெறாமல் தடையும் தாமதமும் பெரும் அன்பர்கள், தனது சுய ஜாதகத்தை நன்றாக ஒருமுறை ஆய்வுக்கு எடுத்துகொள்வது நல்லது எனில் ஒருவருக்கு திருமணம் தாமதம் ஆக இரண்டு காரணங்கள் மட்டுமே இருக்க முடியும் அதில் ஒன்று ஜாதக ரீதியாக குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானம் பாதிக்க படும்பொழுது திருமணம் தாமதப்படும் , அல்லது ஜாதகர் திருமணம் வேண்டாம் என்று மறுப்பதால் திருமணம் தாமதப்படும் .

இதில் ஜாதக ரீதியாக பாதிக்கப்படும் அன்பர்களுக்கு களத்திர ஸ்தானமும் குடும்ப ஸ்தானமும் வலிமை பெரும் நல்ல நேரத்தை சரியாக கணிதம் செய்து குறிப்பிட்ட ஜாதகருக்கு திருமண வாழ்க்கையை சிறப்பாக அமைத்து தந்துவிட முடியும் , இரண்டாவது அமைப்பை சார்ந்தவர்களுக்கு இறைவன் விட்ட வழி  என்று இருந்துவிடுவதே நல்லது .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696
jothidadeepam@gmail.com 

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

கேது திசை தரும் யோக அவயோக பலன்கள் !




ஞானகாரகனாகிய கேது பகவான் ஒருவருடைய சுய ஜாதகத்தில் நல்ல நிலையில் அமர்ந்து தனது திசையில் இலக்கண ரீதியாக வலுமையுடன் இருக்கும் பாவகத்துடன் தொடர்பு பெற்று பலனை தரும் பொழுது ஜாதகருக்கு கேது திசையில் எவ்வித தீய பலன்களும் நடை பெறுவதில்லை, மாறாக வலிமை இழந்த பாவகத்துடன் சம்பந்தம் பெற்று தனது திசையில் பலனை நடத்தும் பொழுது கேது தொடர்பு பெற்ற பாவகத்தின் வழியில் இருந்து அதிக இன்னல்களை சந்திக்க வேண்டி வருகிறது, எடுத்துகாட்டாக கிழ்கண்ட ஜாதகத்தை கவனியுங்கள் அன்பர்களே !

உதாரண ஜாதகம் : 1

லக்கினம் : மீனம்
ராசி : மீனம்
நட்சத்திரம் : ரேவதி 1ம் பாதம்

ஜாதகருக்கு தற்பொழுது நடக்கும் திசை கேது திசை : ( 25/01/2010 முதல் 25/01/2017 வரை)

ஜாதகருக்கு நடக்கும் கேது திசை லக்கினம் மற்றும் களத்திர ஸ்தானங்கள் பாதக ஸ்தானமான 7ம் வீட்டுடன் தொடர்பு பெற்று பலனை தந்துகொண்டு இருக்கிறது , இதன் பலன்கள் என்ன என்பதை பற்றிய சற்றே இனி ஆய்வு செய்வோம் அன்பர்களே  !

1) லக்கினம் பாதக ஸ்தானத்துடன்  சம்பந்தம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல காரணம் பாதக ஸ்தானம் என்பது 200 சதவிகிதம் தீமை தரும் அமைப்பு, எனவே இந்த கேது திசை நடக்கும் காலத்தில் ஜாதகர் உடல் மற்றும் மனோ ரீதியான பிரச்சனைகளை எதிர்கொள்ளவேண்டிய சூழ்நிலையை தரும், மேலும் ஜாதகருடையை பாதக ஸ்தானமானது காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு 6ம் வீடாக வருவதும், உபய மண் தத்துவ ராசியாக அமைவதாலும், ஜாதகரின் உடல் நிலை  பாதிக்க படும் , பொருள் இழப்பு உண்டாகும் , ஜாதகரின் பெயரில் இருக்கும் சொத்துகள் மற்றும் வண்டி வாகனங்களை திடீரென இழக்கும் தன்மையை தரும் .

2) ஜாதகரின் செயல்களும், எண்ணங்களும் ஜாதகருக்கு எதிராக செயல்படும் , தனது  திட்டங்கள் யாவும் தோல்வியையே தரும் , குறிப்பாக ஜாதகர் தீய பழக்க  வழக்கங்களுக்கு ஆளாகி தனது உடல் நிலையையும் மன நிலையையும் தானே கெடுத்து கொள்வார்  இதற்க்கு காரணமாக எதிர்பாலினர் மற்றும்  அவரது நண்பர்களே அமைந்துவிடுவார்கள் .

3) ஜாதகர் பெரும் கடன் மற்றும் ஏற்றுகொள்ளும் ஜாமீன் போன்றவற்றால் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகும் சூழ்நிலையை தரும், இதனால் ஜாதகர் வெகுவாக சமுகத்தில் அவ பெயரை சந்திக்கும் தன்மையை தரும், கடன் பெற்று செய்யும் எந்த காரியமும் ஜாதகருக்கு கடும் நெருக்கடியை தரும் , முன்னேற்றம் என்பது ஜாதகருக்கு குதிரை கொம்பாக தெரியும் .

4) கேது திசை ஜாதகருக்கு பாதக ஸ்தான பலனை செய்வது ஜாதகரின் சிந்தனை மற்றும் அறிவாற்றலை வெகுவாக பாதிக்கும் , ஜாதகர் பின்னல் வரும் இன்னல்களை உணர்ந்து செயல்படும் தன்மை இல்லாமல் செயல்படுவார் , இன்றைய காரியம் முடிந்ததா நாளைய விஷயத்தை நாளை பார்க்கலாம்  என்ற எண்ணத்தையே தரும் , சோம்பல் ஆர்வமின்மை , தனம்பிக்கை இன்மை என்ற விஷயங்களால் ஜாதகரின் முன்னேற்றம் கடுமையாக பாதிக்க கூடும் .

5) மேற்கண்ட அமைப்பில் ஜாதகருக்கு தீமையான பலன்கள் நடைபெறும் பொழுது ஜாதகர் செய்யவேண்டிய பரிகாரம் என்ன ? முதலில் ஜாதகர் தனது நடவடிக்கையில் ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும் , ஆண்கள் என்றால் பெண்களிடமும், பெண்கள் என்றால் ஆண்களிடமும் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும் , தனது உடல்நிலையில் அதிக கவனம் செலுத்த வேண்டும் , அதிக முதலீடுகளை தவிர்க்க வேண்டும் , ஒரு முறைக்கு பல முறை ஜாதகர் நன்கு யோசனை செய்து ஒரு காரியத்தை செய்வது நலம் தரும், பல கோடி ரூபாய் வருமானம் வருகிறது என்று சொன்னாலும், சட்டத்துக்கு புறம்பான செயல்களை செய்வது, ஜாதகரை படு குழியில் தள்ளிவிடும் , மேலும் கேது திசை முடியும் வரை ஆன்மீகத்தில் மனதை செலுத்தலாம் , அல்லது நல்ல ஆன்மீக பெரியோர்களிடம் ஆசி பெற்று மனதை  ஒருநிலை படுத்தி வாழ்க்கையில் முன்னேற்றம் பெற தனது சிந்தனை ஆற்றலை பயன்படுத்துவது சிறந்த பரிகாரமாகும் .


இதே ஞானகாரனாகிய கேது பகவான் மேற்கண்ட ஜாதகர் பிறந்த ஊரில் ஜாதகர் பிறந்த நேரத்தில் இருந்து, 2 நிமிடம் தாமதமாக பிறந்த வேறு ஒருவருக்கு தனது பலனை எவ்விதம் நடத்துகிறார் என்பதை பற்றி தற்பொழுது காண்போம் அன்பர்களே !

உதாரண ஜாதகம் : 2

லக்கினம் : மீனம்
ராசி : மீனம்
நட்சத்திரம் : ரேவதி 1ம் பாதம்


ஜாதகருக்கு தற்பொழுது நடக்கும் திசை கேது திசை : ( 13/02/2010 முதல் 13/02/2017 வரை)

இந்த ஜாதகருக்கு நடக்கும் கேது 1,2,8,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் வீட்டுடன் தொடர்பு பெற்று பலனை தருவது ஜாதகருக்கு மிகுந்த அதிர்ஷ்டத்தை தரும்  அமைப்பாக கருதலாம் , மேலும் ஜாதகருக்கு 11ம் வீடு என்பது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஒன்பதாம் பாவகமாக அமைவது , ஜாதகரின் முன்னோர்கள் செய்த நல்வினை பதிவினையும் , தான் செய்த நல்வினை  பதிவினையும் யோக வாழ்க்கையாக இந்த கேது அனுபவிக்க வைக்கும் என்பது முற்றிலும் உண்மை .

1) லக்கினம் லாப ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகரின் வாழ்க்கையில்  கேது திசை முடிய நீடித்த  அதிர்ஷ்டத்தை , மேலும் ஜாதகரின் உடல் நிலை மன நிலை  மிகவும் சிறப்பாக இயங்கும் , ஜாதகர் நல்ல அறிவாளியாக இருப்பார் , தன்னம்பிக்கை மிகும் , முற்போக்கு சிந்தனைகளால்  வாழ்க்கையில் சகல நிலைகளில் இருந்தும் ஜாதகருக்கு நல்ல முன்னேற்றம்  உண்டாகும் .

2) 2ம் பாவகம் லாப ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகரின் வாழ்க்கையில்  நல்ல வருமானத்தை தரும் , இனிமையான பேச்சு திறனையும், நல்ல மக்கள் செல்வாக்கினை பெற்று தரும் , பொதுமக்களை நம்பி செய்யும் தொழில்கள்  யாவும் வெற்றி மேல் வெற்றி தரும் காரணம் ஜாதகரின் 2ம் பாவகம் மேஷமாக சர நெருப்பு ராசியாக அமைவதே .

3) 8ம் பாவகம் லாப ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது , ஜாதகரின் வாழ்க்கையில்  சரியான வயதில் இளம் வயது திருமண வாழ்க்கையையும் , அருமையான குடும்ப  வாழ்க்கையையும் தரும் , ஜாதகர் திடீர் அதிர்ஷ்டத்தின் மூலம்  வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியை பெறுவார் , தன்னம்பிக்கை மேலோங்கி நிற்கும் ஜாதகருக்கு நீண்ட ஆயுள் கிட்டும் , தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து 100 சதவிகித யோக வாழ்க்கையை அனுபவிக்கும் தன்மையை தரும் .

4) 11ம் பாவகம் லாப ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது , ஜாதகரின்  வழ்க்கை அதிர்ஷ்டம் என்பது நீடித்து நிற்கும் ,குறிப்பாக செய்யும் தொழில்களிலும் நிலம் , வண்டி , வாகனம் , வீடு போன்றவறில் இருந்தும் அதிக வருமானம் கிடைக்கும் அல்லது  மேற்கண்ட சொத்து சுகங்களை ஜாதகர் தனது சுய உழைப்பாலும் , அறிவாற்றலாலும் பெரும் யோகத்தை தந்துகொண்டே இருக்கும் , ஜாதகரின் முன்னேற்றம் என்பதனை எவராலும் கணிக்க இயலாத அளவில்  இருக்கும் .

5) மேற்கண்ட பாவகங்களுடன் தொடர்பு பெற்று நன்மையான பலனை தரும் கேது  திசை ஜாதகருக்கு நல்ல ஒழுக்கத்தையும் , பண்பாட்டினையும் , போதும் என்ற  மனத்தினையும் , சிறந்த ஆன்மீக வாழ்க்கையினையும் இயற்கையாகவே  தந்துவிடும் , மேலும் ஜாதகரின் செயல்பாடுகளும் , மக்கள் மற்றும் நண்பர்கள் வழியில் இருந்து நன்கு புரிந்துகொள்ளப்படும் , எனவே இவர்களின்  ஆதரவுடன் ஜாதகர் குறுகிய காலத்தில் பிரபலம் அடையும்  யோகத்தை இந்த கேது திசையே அருளும் .


மேற்கண்ட இரண்டு ஜாதக அமைப்பில் இருந்தும் நாம் புரிந்துகொள்வது என்னவென்றால் பொதுவாக ஒரு திசை கெடுதல் செய்கிறது என்று கணிப்பது  மிகப்பெரிய தவறு , மேலும் ஒவ்வொரு கிரகத்தின் திசையும் அவரவர்களின் சுய  ஜாதகத்திற்கு உட்பட்டு , பாவக வலிமைக்கு ஏற்ற அமைப்பில் தொடர்பு பெற்று  நன்மை தீமை பலன்களை செய்கிறது , எனவே ஒருவரின் சுய ஜாதகத்தில் 12 பாவகங்களும் நல்ல வலிமையுடன் இருந்தால் , நடை பெரும் அனைத்து திசை மற்றும் புத்திகளும் நன்மையே செய்யும் , இதற்க்கு மாறாக பாவகங்கள்  பாதிக்கப்படும் பொழுதே அது எந்த திசை என்றாலும் ஜாதகர் இன்னல்களை அனுபவிக்க வேண்டி வருகிறது .

இறுதியாக :

சுய ஜாதகத்தில் அவரவர் கர்ம வினைக்கு ஏற்ப்பவே பாவக வலிமை, இறை அருளால்  நிர்ணயம் செய்யபடுகிறது என்பதே உண்மை, ஒருவருடைய சுய ஜாதகத்தில்  பாவகங்களின் வலிமையை தெளிவாக தெரிந்துகொண்டால் மட்டுமே அந்த ஜாதகருக்கு நற்பலன் நடைபெறுமா ? தீய பலன் நடைபெறுமா? என்று நிர்ணயம் செய்ய இயலும் , இல்லை எனில் ஜாதகம் பலன் அறிய வந்தவருக்கு ஜோதிடரால் எவ்வித வழிகாட்டுதலையும் எடுத்துரைக்க இயலாது .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696


சனி, 24 ஆகஸ்ட், 2013

ஜீவன ஸ்தான அடிப்படையில் ஒரு ஜாதகருக்கு சரியான தொழில் நிர்ணயம் செய்வது எப்படி ?




சுய ஜாதகத்தில் வலிமையுடன் இருக்க வேண்டிய பாவகத்தில் முதன்மையாக கருதவேண்டிய பாவகம் ஜீவன ஸ்தானமே என்றால் அது மிகையில்லை, குறிப்பாக ஆண்களின் ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவது அவசியம், மாறாக வலிமை இழக்கும் பொழுது ஜாதகரின் வேலை அல்லது தொழில் சிறப்பாக அமையாமல் ஜாதகரின் வாழ்க்கையில் நடை பெற வேண்டிய  சில நல்ல விஷயங்கள் கூட நடை பெறாமல் தாமதம் அல்லது தடையை ஏற்படுத்துகிறது , குறிப்பாக சொல்லவேண்டும் எனில் ஜாதகருக்கு நல்ல வேலை அல்லது தொழில் அமைந்தால் மட்டுமே நல்ல திருமண வாழ்க்கை சரியான வயதில் அமைகிறது, மேலும் தனது குடும்பத்தை சார்ந்தவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து அவர்களின் வாழ்க்கையை மகிழ்ச்சிகரமானதாக மாற்ற இயலும்.

முக்கியமாக  தனது பெற்றோர்களின் மனதை கஷ்டப்படுத்தாமல், அவர்களின் வயதான காலத்தில் ஜாதகரால் சந்தோஷமாக வைத்துகொள்ள முடிகிறது, ஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் நல்ல நிலையில் அமைந்தால் மட்டுமே ஜாதகர் சமுதாயத்தில் பொறுப்புள்ள மனிதராக இயங்க முடியும், இல்லை எனில் குடும்பம் மற்றும் சமுதாயத்தில் நல்ல பெயர் எடுப்பது என்பது குதிரை கொம்புதான், மேலும் தனது தேவைகளை நிறைவேற்றி கொள்ளவே ஜாதகர் மற்றவர்களின் கரங்களை எதிர்நோக்கியிருக்க வேண்டிய சூழ்நிலை தந்துவிடுகிறது .

ஜீவனம் நல்ல நிலையில் அமையாத பொழுதே ஜாதகர் தவறான வழியில் தனது வாழ்க்கை வாழும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார் , தான் சுயமாக சிந்தித்து செயலாற்றும் தன்மையை தரும் ஜீவன ஸ்தானம் வலிமை இழக்கும் பொழுது ஜாதகரால் தனிப்பட்டு செயல்பட  இயலாமல் ஜீவன வழியில் இருந்து அதிக இன்னல்களை சந்திக்க வேண்டி வருகிறது, ஒருவேளை சுய ஜாதகத்தில் ஒருவருக்கு ஜீவன ஸ்தானம் பாதிக்கபட்டு இருந்தால் 10க்கு 10ம் பாவகமான களத்திர பாவகம் வலிமையுடன் இருப்பது அவசியம்.

10க்கு 10ம் பாவகமான களத்திர பாவகம் வலிமையுடன் இருக்கும் பொழுது ஜாதகரின் வாழ்க்கையில் திருமணம் நடை பெரும் காலம் வரையில் ஜாதகருக்கு நல்ல ஜீவனம் அமையாது , திருமணம் நடைபெற்ற குறுகிய காலத்திலேயே ஜாதகர் நல்ல ஜீவன முன்னேற்றத்தை பெரும் யோகத்தை தந்துவிடும், சில அன்பர்களின் வாழ்க்கையில் திருமணத்திற்கு பிறகு நல்ல முன்னேற்றம் காண்பது இதன் அடிப்படியிலேயே என்பது மட்டுமே முற்றிலும் உண்மை , இந்த அமைப்பை பெற்ற அன்பர்கள் திருமணத்திற்கு பிறகு தனது வாழ்க்கை துணையை மிகவும் அன்பாக நடத்துவது அவசியம் காரணம் ஜாதகரின் வாழ்க்கையில் நல்ல ஜீவன முன்னேற்றத்தை தந்ததும், சமுதாயத்தில் சிறந்த கௌரவத்தையும் தந்தது ஜாதகரின் வாழ்க்கை துணைதானே .

மேற்கண்ட  ஜீவனம் மற்றும் களத்திரம் இரண்டும் பாதிக்கப்படும் பொழுது ஜாதகர்  களத்திர ஸ்தானத்திற்கு 10ம் வீடான 4ம் பாவகம் நல்ல நிலையில் இருந்தால், ஜாதகருக்கு மாத்ரு ஸ்தானமான 4ம் பாவக வழியில் இருந்தும்  ஜீவனத்தை தரும் , ஜாதகர் 4ம் பாவக வழியில் இருந்து ஜீவன வாழ்க்கையை மேற்கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் பெறலாம் .

ஆக ஒரு ஜாதகர் வாழ்க்கையில் ஜீவன வழியில் இருந்து நல்ல முன்னேற்றம் பெற வேண்டும் எனில் அவரது சுய ஜாதகத்தில் தகப்பனாரை குறிக்கும் 10ம் பாவகம் நல்ல நிலையில் இருக்க வேண்டும் அல்லது தாயாரை குறிக்கும் 4ம் பாவகம் நல்ல நிலையில் இருக்க வேண்டும், இந்த இரண்டும் ஒருவேளை பாதிக்க படும் பொழுது  ஜாதகருக்கு களத்திர ஸ்தானமான 7ம் பாவகம் நல்ல நிலையில் இருக்க வேண்டும் மேற்கண்ட 3பாவகமும் பாதிக்க படும் பொழுதே ஜாதகர் ஜீவன வழியில் இருந்து அதிக இன்னல்களை சந்திக்க வேண்டி வருகிறது.

ஒருவருடைய சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் சார ராசிகளான மேஷம்,கடகம்,துலாம்,மகரம் என்ற ராசிகளுடன் தொடர்பு பெற்று இந்த ராசிகள் ஜாதகருக்கு பாதக ஸ்தானமாக அமையாமல் இருந்தால், ஜாதகர் தனது சுய முயற்ற்சியால் தனித்து செயல்பட்டு தொழில் அல்லது வேலை வாய்ப்பில் எளிமையான வெற்றிகளையும் , மிகப்பெரிய ஜீவன முன்னேற்றத்தை பெரும் தன்மையை தந்துவிடும். குறிப்பாக ஜாதகருக்கு அமையும் தொழில் அல்லது வேலை குறுகிய காலத்தில் மிகப்பெரிய வெற்றிகளை வாரி வழங்கி விடும் , வருமானம் என்பது மிக அதிக அளவில் கிடைக்கும், ஜாதகருக்கு பொருளாதார ரீதியான வளர்ச்சி என்பது எவராலும் நினைத்து பார்க்காத அளவில் இருக்கும்.

 ஒருவருடைய சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் ஸ்திர  ராசிகளான ரிஷபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம்  என்ற ராசிகளுடன் தொடர்பு பெற்று இந்த ராசிகள் ஜாதகருக்கு பாதக ஸ்தானமாக அமையாமல் இருந்தால், ஜாதகரின் தொழில் அல்லது வேலை வாய்ப்பில் ஸ்திரமான நிலையுடன் நிரந்தர  ஜீவனம் மேற்கொள்ளும் தன்மையை தரும் , மேலும் ஜாதகர் பல தொழில் செய்யும் யோகத்தையும், தொடர்ந்து நிலையான நல்ல வருமானத்தை பெரும் தன்மையையும் தந்துவிடும், ஜாதகர் ஆரம்பிக்கும் தொழில்கள் பல தலைமுறைக்கு தொடர்ந்து நிலையாக நடந்துகொண்டே இருக்கும் .

ஒருவருடைய சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் உபய  ராசிகளான மிதுனம்,கன்னி,தனுசு,மீனம்  என்ற ராசிகளுடன் தொடர்பு பெற்று இந்த ராசிகள் ஜாதகருக்கு பாதக ஸ்தானமாக அமையாமல் இருந்தால், ஜாதகர் கூட்டு தொழில் மூலம் சிறப்பான முன்னேற்றங்களை பெறுபவராக இருப்பார், பல பெரிய மனிதர்கள் செய்யும் தொழில்களில் ஜாதகருக்கும் கணிசமான பங்கு நிச்சயம் இருக்கும், ஜாதகரின் ஜீவன முன்னேற்றம் என்பது மற்றவர்களை சார்ந்தே இருக்கும் என்பது கவனிக்க தக்கது, இவர்கள் செய்யும் சிறு தொழில்கள் அல்லது கூட்டு தொழில்கள் நல்ல வெற்றியை தரும், ஆனால் ஜாதகர் பெரிய தொழில்களில் தனித்து இறங்குவது அவ்வளவு நல்லதல்ல, பெரிய வளர்சியையும் தருவதில்லை.

ஒருவருடைய சுய ஜாதகத்தின் அடிப்படையில் செய்யும் எந்த ஒரு தொழிலும் ஜாதகருக்கு நிச்சயம் தோல்வியை தருவதில்லை, இதை ஒரு சிறந்த  ஜோதிடரை கொண்டு தனது ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் மற்றும் களத்திரம்,சுக ஸ்தானத்தின் வலிமை உணர்ந்து , செய்யும் தொழில் அல்லது வேலையை தேர்ந்தெடுத்து செய்து வாழ்க்கையில் வெற்றி காணுங்கள் அன்பர்களே !

அப்படி தாங்கள் தேர்ந்தெடுக்கும் தொழில் நிச்சயம் உங்களுக்கு மிகப்பெரிய வெற்றியை வாரி வழங்கும் என்பதில் சந்தேகம் இல்லை, தாங்கள் செய்யும் தொழில் 3 அல்லது 4 வருடங்களில் நல்ல பொருளாதார முன்னேற்றத்தையும் தன்னிறைவான வாழ்க்கையையும் தரும் , இதை தவிர்த்து 4 வருடங்களுக்கு மேலும் தங்களுக்கு முன்னேற்றம் இல்லாமல் அரைத்த மாவையே அரைத்துகொண்டு இருக்கின்றீர்கள் என்றால்,  தங்களுக்கு பொருந்தாத தொழிலை அல்லது வேலையை செய்து கொண்டு இருக்கின்றீர்கள் என்பதே முற்றிலும் உண்மை .


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696


வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

திடீர் தன சேர்க்கை மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் காணும் யோக ஜாதக நிலை !



பொதுவாக பாரம்பரிய ஜோதிட கணிப்பில் 6,8,12ம் வீடுகளை ( பாவகம் ) துர் ஸ்தானம் என்றும் . தீமை செய்யும் பாவகம் என்றும் சொல்வதுண்டு, குறிப்பாக மேற்க்கண்ட பாவகங்கள் எக்காரணத்தை கொண்டும் வலிமை பெறுவது சம்பந்தபட்ட ஜாதகருக்கு அதிக இன்னல்களை வாரி வழங்கும், ஜாதகர் அதன் பாதிப்பில் இருந்து மீள்வது மிக கடினம் என்று கூட சொல்வதுண்டு.

6ம் வீடு அல்லது 6ம் பாவக அதிபதி வலிமை பெரும் பொழுது உடல் நல குறையும், கடன் தொந்தரவுகளையும் வழங்கும் என்றும் , 8ம் வீடு அல்லது 8ம் பாவக அதிபதி வலிமை பெரும் பொழுது ஜாதகர் திடீர் இழப்பு அல்லது திடீர் விபத்துகளை சந்திக்க வேண்டும் என்றும், 12ம் வீடு அல்லது 12ம் அதிபதி வலிமை பெற்றால் ஜாதகர் மன நிம்மதி இழப்பினையும், வீண் விரையங்களையும் சந்திக்க வேண்டி வரும் என்பது பாரம்பரிய ஜோதிடத்தின் கருத்தாக இருக்கிறது , இது முற்றிலும் உண்மையா ? அல்லது இதற்க்கு மாற்று கருத்து இருக்கின்றதா என்பதை பற்றி இந்த பதிவில் சற்றே சிந்திப்போம் அன்பர்களே !

ஜோதிட தீபத்தில் இதற்க்கு முன் எழுதிய பதிவுகளில்  ஒரு ஜாதகருக்கு நன்மை தீமை பலன்களை வழங்கும் அதிகாரம் 12 பாவகத்திர்க்கும் உண்டு என்ற கருத்தை முன் மொழிந்திருப்போம், ஆக ஒருவருடைய சுய ஜாதக அமைப்பின் படி தீமையான பலன்களை மட்டுமே 6,8,12ம் வீடுகள் (பாவகங்கள்)  வழங்கும் என்பது முற்றிலும் ஜோதிட கணிதத்திற்கு புறம்பானது மேற்கண்ட பாவகங்கள் நல்ல நிலையில் ஒரு ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் அமரும்பொழுது ஜாதகருக்கு வழங்கும் நன்மையான பலன்களை பற்றிய ஒரு சிறு விளக்கம் கிழ்கண்டவாறு அமையும் .

6ம் வீடு (பாவகம்) வலிமை பெரும் பொழுது ஜாதகர் பெரும் நன்மைகள் :

1) ஜாதகர் எதிரிக்கு சிம்மசொப்பனமாக விளங்குவார், ஜாதகரை எதிர்க்கும் அனைவரும் தோல்வியை தழுவ வேண்டி வரும் மேலும் , எதிரிகள் செய்யும் சூழ்சி ஜாதகருக்கு சாதகமாக அமைந்து ஜாதகரை உலக புகழ் பெற வைக்கும்.

2) அரசியலில் திடீர் என முன்னேற்றம் பெறவும், பொதுமக்களின் நீண்ட ஆதரவினை பெரும் யோகத்தை பெறவும், அதிகார பதவிகளை நீண்ட நெடுங்காலம் அனுபவிக்கும் யோகத்தை தருவதும் இந்த சத்துரு ஸ்தானத்தின்  வலிமையே என்றால் அது மிகையாகாது .

3) ஜாதகருக்கு வரும் உடல் ரீதியான தொந்தரவுகள் விரைவில் குணம் பெற வைப்பதும், தனக்கு வரும் உடல் ரீதியான தொந்தரவுகளை தாங்கும் மன வலிமையை  தருவதும், தனது உடல் நிலையில் அதிக கவனமும், உடல் மன நலம் பேணுவதில் சிறந்து விளங்கும் தன்மையினையும், எதிர்ப்புகளை கண்டு அஞ்சாமல் எதிர்த்து போராடும் குணத்தை தருவதும் இந்த சத்ரு ஸ்தானத்தின் வலிமையே .

4) வட்டிதொழில், நிதி நிறுவனம் நடத்தும் யோகம், தன்னை சார்ந்தவர்களை அரவணைத்து அவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்தை காணச்செய்யும் தன்மையை ஜாதகருக்கு தருவது சத்ரு ஸ்தானமே, 6ம் பாவகம் வலிமை பெரும்  பொழுது ஜாதகர் நிதி சார்ந்த தொழில்களை துணிந்து செய்யலாம், ஜாதகரை குறுகிய காலத்தில் மிக பெரிய செல்வ சேர்க்கையை தந்துவிடும்.

5) புதிய உயிர்காக்கும் மருந்துகளை கண்டறிந்து மக்களின் உயிரை காக்கும் வல்லமையை இந்த பாவகமே வழங்குகிறது, ஜாதகரின் பொருளாதார முன்னேற்றமும் இதன் மூலம்  மிகப்பெரிய அளவில் உயரும் என்பது இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் . 

6) ஒருவருக்கு சுய ஜாதகத்தில் 6ம் வீடு வலிமை பெற்று, நடக்கும் திசை 6ம் பாவக பலனை தரும் பொழுது ஜாதகருக்கு தொடர்ந்து சிறு சிறு அதிர்ஷ்ட வாய்ப்புகள் வந்துகொண்டே இருக்கும், மேலும் ஜாதகரின் பொருளாதார முன்னேற்றம் படி படியாக உயர்ந்த வண்ணமே இருக்கும் . 

8ம் வீடு (பாவகம்) வலிமை பெரும் பொழுது ஜாதகர் பெரும் நன்மைகள் :  

1) முதலில் ஜாதகருக்கு பூரண நீண்ட ஆயுளை தந்துவிடும் , மேலும் நூலிலையில் உயிர்தப்பிக்கும் புண்ணியவான்கள் அனைவரின் ஜாதகத்திலும் ஆயுள் பாவகம் மிகவும் சிறப்பாக அமைந்திருக்கும்.

2) இன்சுரன்ஸ் துறையில் கொடிகட்டி பறக்கும் அன்பர்கள் ஜாதக அமைப்பில் இந்த 8ம் பாவகம் மிகுந்து வலிமை பெற்றிருக்கும், தனது மூதாதையர்களின் சொத்து சுகங்களை உயில் மூலம் பெரும் அமைப்பை தரும், ஜாதகருக்கு வாழ்க்கை துணை வழியில் இருந்து மிகப்பெரிய சொத்து சேர்க்கை உண்டாகும் .

3) ஜாதகரிடம் மற்றவர்களின் பணமே அதிகம் இருக்கும் , குறிப்பாக பெண்கள் மூலம் அதிக லாபம் உண்டாகும், கட்டுமான துறையில் பயன்படுத்த படும் உபகரணங்களினால் ஜாதகருக்கு தொடர்ந்து வருமானம் வந்துகொண்டே இருக்கும், திருமணத்தால் யோக வாழ்க்கை ஜாதகருக்கு நிச்சயம் அமையும்.

4) ஜாதகருக்கு தனது பூர்விக நிலத்தில் இருந்து புதையல் கிடைப்பதும், அதன் மூலம் ஜாதகர் திடீர் தன பிராப்தி யோகம் உண்டாகுவதும், அல்லது புதையலுக்கு நிகரான செல்வ சேர்க்கையை ஜாதகருக்கு திடீர் என தருவதும்  ஆயுள் பாவகத்தின் வலிமையே.

5) யூக வணிகத்தில் கொடிகட்டி பறக்கும் ஜாம்பவான்களின் ஜாதக அமைப்பில்  ஆயுள் பாவகம் மிகுந்த வலிமையுடன் இருக்கும் , பங்குவர்த்தக தொழில் துறையில்  அபரிவிதமான செல்வ சேர்க்கையை தருவது ஆயுள் பாவகமே, ஜாதகர் செய்யும் கூட்டு தொழில் மிகப்பெரிய வளர்சியை பெரும் மேலும் கூட்டு தொழிலால் அதிக லாபம் பெறுவது ஆயுள் பாவகம் வலிமை பெற்றவருக்கே என்றால் அது மிகையில்லை .

6) தான் செய்யும் தொழில், வியாபாரம், ஏற்றுமதி இறக்குமதி சார்ந்த துறைகளில் இருந்தும் , அரசு மானியம் மற்றும் அரசு சலுகைகள் மிக எளிதில் கிடைக்க வேண்டும் எனில் குறிப்பிட்ட ஜாதகருக்கு ஆயுள் பாவகம் வலிமை பெற்றிருக்க வேண்டும் , மேலும் மருத்துவ துறையில் பயன்படுத்த படும் மருத்துவ உபகரணங்களினால் ஜாதகருக்கு மிகப்பெரிய தன சேர்க்கை உண்டாகும் கருப்பு பணம் வைத்திருப்பவர்களின் ஜாதகத்திலும் பெரிய தனவந்தர்களின் ஜாதகத்திலும் ஆயுள் பாவகம் மிகவும் வலிமையுடன் இருக்கும்.

12ம் வீடு (பாவகம்) வலிமை பெரும் பொழுது ஜாதகர் பெரும் நன்மைகள் :

1) மற்றவர்கள் மனதில், மன நிம்மதி மற்றும் மன மாற்றத்தை தரும் அறிய கலைகளில் ஜாதகருக்கு மிகப்பெரிய ஆற்றல் மற்றும் புலமை இயற்கையாக  அமைந்திருக்கும், இதனால் ஜாதகரை சந்திப்பவர்களின் வாழ்க்கையில் மிகசிறந்த எதிர்காலம்  உருவாகும்.

2) யோகசானம் , தியானம், உடற்பயிற்ச்சி, தற்காப்பு கலைகளில் ஜாதகருக்கு அதிக  ஆர்வமும், தேர்ச்சியும் உண்டாகும், தனிப்பட்ட முறையில் எவருடைய உதவியும் இன்றி வாழ்க்கையில் மிக பெரிய வெற்றி பெரும் யோகம் ஜாதகருக்கு உண்டு, தொலைதூர பயணங்களினால் ஜாதகர் மிகப்பெரிய தன சேர்க்கை பெரும் யோக அமைப்பு ஜாதகருக்கு மத்திம வயதில் உண்டாகும்.

3) பொழுதுபோக்கு மற்றும் வீட்டு உபகரண பொருட்கள் மூலம் ஜாதகருக்கு மிகுந்த லாபம் உண்டாகும், இசை மற்றும் கலை துறை சார்ந்த அமைப்புகளில் அதிக வருமானத்தை பெரும் தன்மையை தரும் , கலை துறையில் குறிப்பாக சிறந்த  திரைப்பட இயக்குனர்களின் சுய ஜாதகத்தில் 12ம் வீடு மிகுந்த வலிமையுடன் இருக்கும் .

4) ஜாதகர் செய்யும் முதலீடுகள் 3மடங்கு லாபத்தை தரும், குறிப்பாக 12ம் வீடு வலிமை பெற்ற ஜாதக அமைப்பை சார்ந்தவர்கள் முதலீடு செய்யும் தொழில்களை  தேர்ந்தெடுத்து செய்யும் பொழுது மிகுந்த லாபமும் குறுகிய காலத்தில்  தான் முதலீடு செய்த தொகையை எவ்வித நஷ்டமும் இன்றி எடுத்து விட முடியும் .

5) 12ம் வீடு வலிமை பெறுவது ஜாதகருக்கு நல்ல மன வலிமையை தரும், எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளிக்கும் மன ஆற்றலை பெற்றிருப்பார் , எடுத்த காரியத்தில் வெற்றி பெரும் வரை உறக்கம் இல்லாமல் ஓயாமல் உழைத்துக்கொண்டு இருக்கும் மன வலிமையை தரும் , மேலும் ஒரு இரவில் தனவந்தனாகும் யோகம் 12ம் வீடு வலிமை பெரும் பொழுதே நடைமுறைக்கு வருகிறது .

6) இறுதியில் ஆன்மீக வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றத்தையும், தனது ஆன்மாவை இறை நிலையுடன் கலந்து மோட்ச வாழ்வினை பெறுவதற்கு 12ம் வீடு மிகுந்த வலிமையுடன் இருப்பது அவசியம், தான் யார் என்ற கேள்விக்கு விடை தேடும் அன்பர்களின் ஜாதக அமைப்பில் 12ம் வீடு வலிமை பெற்றிருப்பதை காண முடிகிறது .

ஒருவருடைய சுய ஜாதகத்தில் மேற்கண்ட 6,8,12ம் விடுகள் வலிமையுடன் இருக்கும்  பொழுது நோயற்ற வாழ்க்கையும் , குறைவற்ற செல்வமும் , மன நிம்மதியான குடும்ப வாழ்க்கையும் நிச்சயம் அமைந்திருக்கும் என்பதில் எவ்வித  சந்தேகமும் இல்லை அன்பர்களே ! துர் ஸ்தானம் என்று சொல்லபடுகிற 6,8,12ம் வீடுகள் வலிமை பெரும் பொழுது மேற்கண்ட யோக பலன்களும் , வலிமை இழக்கும் பொழுது இதற்க்கு நேர்மறையான அவயோக பலன்களையும் தரும் , மேலும் அப்படி வலுவிழந்து தீய பலன்களை தரும் பொழுது அந்த பலன்களை ஜாதகரால் எதிர்கொள்ள முடிவதில்லை எனவே தான் 6,8,12ம் வீடுகள் துர் ஸ்தானம் என்று வர்ணிக்கபட்டு இருக்க கூடும் .


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696
jothidadeepam@gmail.com


திங்கள், 29 ஜூலை, 2013

சுய ஜாதகத்தில் சுப கிரகங்களின் திசா புத்திகள் நடை பெற்றாலும் ஜாதகர் நன்மையான பலன்களை அனுபவிக்க இயலாத சூழ்நிலை ஏற்ப்பட காரணம் ஏன் ?



சிறந்த கேள்வியாக இதை ஜோதிடதீபம் கருதுகிறது .

ஒருவாருடைய சுய ஜாதகத்தில் சுபகிரகம் என்று வர்ணிக்கப்படும் , குரு , சுக்கிரன் , புதன், சந்திரன் ஆகியோர்களின் திசை மற்றும் புத்திகள் ஜாதகருக்கு மிகுந்த நன்மையையும், யோக பலன்களையும் வாரி வழங்கும் என்பதாக பாரம்பரிய ஜோதிடத்தில் ஒரு பரவலான கருத்து உண்டு , இதை அடிப்படையாக கொண்டு ஒருவருக்கு ஜாதக பலன்களை சொல்வது என்பது அந்த ஜாதகருக்கு சரியான வாழ்க்கை பாதையை அமைத்து தர வாய்ப்பு என்பது மிக மிக குறைவே .

 எடுத்து காட்டாக சில அன்பர்களின் ஜாதகத்தில் இயற்க்கை சுப கிரகங்களான குரு, சுக்கிரன், சந்திரன், புதன்  ஆட்சியாகவோ , உச்சமாகவோ அமர்ந்திருக்கும் ஆனால் அதன் திசை மற்றும் புத்திகள் வரும் பொழுது ஜாதகர் யோக பலன்களை அனுபவிக்க இயலாமல் தவிப்பார் , மேலும் சிலர் ஜாதகத்தில் இயற்க்கை பாவிகளான சனி,செவ்வாய் ,சூரியன் பகை , நீச்சம் அமர்ந்திருக்கும் ஆனால் அதன் திசை மற்றும் புத்திகள் வரும் பொழுது ஜாதகர் மிகசிறந்த யோக பலன்களை அனுபவிப்பார் , மேற்கண்ட விஷயத்தை பாரம்பரிய ஜோதிட முறையில் ஆய்வுக்கு எடுத்துகொண்டு பலன் காணும்பொழுது இறுதியில் அளவுக்கு அதிகமான குழப்பமே மிச்சும் , ஒரு தெளிவான முடிவுக்கு வருவது என்பது குதிரை கொம்பாகவே இருக்கும் .

ஜோதிடதீபத்தின் கருத்துப்படி எந்த ஒரு கிரகமும் சுப அசுப கிரகமல்ல என்பதை அனைவரும் உணருவது அவசியம் , குறிப்பாக நவகிரகங்கள் ஒருவருடைய சுய ஜாதகத்தில் உடல் ,உயிராகிய லக்கினத்தை அடிப்படையாக கொண்டே , 12 பாவக வழியில் இருந்து சுப அசுப பலன்களை வழங்குகிறது , இங்கே ஒருவருடைய சுய ஜாதகத்தில் 12 பாவகங்களும் எப்படிபட்ட நிலையில் இருக்கின்றன என்பதை தெளிவாக ஜோதிட கணிதம் கொண்டு நிர்ணயம் செய்தால் மட்டுமே குறிப்பிட ஜாதகருடைய யோக அவயோக பலன்களை நிர்ணயம் செய்ய இயலும் .

ஒரு பாவகத்தின் பலனை நிர்ணயம் செய்வதில் நவகிரகங்களின் அமர்வு நிலை , பார்வை நிலை , சேர்க்கை என்ற பல விஷயங்களை எடுத்துக்கொண்ட ஆய்வு செய்தாலும் கூட, ராகு கேது என்ற இரண்டு கிரகங்களுக்கு மட்டும் விதி விளக்கு உண்டு, ராகு கேது எனும் இரண்டு சாய கிரகங்கள் எந்த பாவகத்தில் அமர்கிறதோ அந்த பாவகத்தின் பலனை முழுமையாக ஆளுமை செய்யும் , அந்த பாவகத்தில்  அமர்ந்த , பார்த்த , சேர்ந்த எந்த ஒரு கிரகத்திற்கும் நன்மை தீமை செய்யும் வலிமை கிடையாது , ஆக ஒருவருடைய சுய ஜாதகத்தில் ராகு கேது எனும் இரண்டு கிரகங்கள், தான் அமரும் இரண்டு பாவகங்களின் பலனை நிர்ணயம் செய்துவிடும் , இதற்க்கு மேற்கொண்டே மற்ற பாவகங்களின் பலனை நிர்ணயம் செய்து பலன் காணுவது, ஜாதகருக்கு
சரியான பலனை சொல்ல உதவும்.

ஒருவருடைய சுய ஜாதகத்தில் 12 பாவகங்களின் நிலையை தெளிவாக தெரிந்து கொண்ட பின் , 12 பாவகங்களில் நல்ல வலிமையுடன் இருக்கும் பாவகங்கள் எவை எவை , பாதிப்படைந்துள்ள பாவகங்கள் எவை எவை என்பதை வகை படுத்திகொண்டு , நவ கிரகங்களின் திசை, புத்தி, அந்தரம், சூட்சமம் ஆகியன எந்த எந்த பாவகத்தின் பலனை தருகிறது என்பதை உணர்ந்து , அதற்க்கு உண்டான பலாபலன்களை தற்பொழுது உள்ள கோட்சார கிரகங்களின் தன்மையையும் தொடர்பு படுத்தி பலன் காணும் பொழுது , ஜாதகருக்கு தெள்ள தெளிவான பலனை மிக சரியாக சொல்ல இயலும், ஜாதகரும் தனது வாழ்க்கையை மிக சிறப்பாக அமைத்து கொள்ள இயலும் .



எடுத்துகாட்டாக :

மேற்கண்ட ஜாதகருக்கு , ஜாதக பலன்களை நிர்ணயம் செய்வோம் ,
ஜாதகரின் லக்கினம்     : மீனம்
ஜாதகரின் ராசி                 : மீனம்
ஜாதகரின் நட்சத்திரம்   : ரேவதி 1ம் பாதம் .

ஜாதக அமைப்பில் நல்ல நிலையில் இருக்கும் பாவகங்கள் :

1,2,8,11 ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும்,
3,5,7,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும்,
4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும்,
10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10 ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் ஜாதகத்தில் யோக பலன்களை தரும் ஜாதக அமைப்பில் 10பாவகங்கள் வலிமையுடன் இருப்பது மிகவும் சிறப்பான விஷயம்.

ஜாதக அமைப்பில் பாதிக்கபட்டு இருக்கும் பாவகங்கள் :

6,12ம் வீடுகள் விரைய பாவகமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மட்டும் தீமையான பலன்களை தரும் இவருடைய ஜாதக அமைப்பிற்கு . மேலும் 12ம் பாவகம் சர மகர ராசியாக அமைவதால் தான் தரவேண்டிய கெடுதலான பலன்களை ( அதாவது விரையத்தை ) ஜீவன வழியிலும் , தனது தகப்பனார் வழியிலும் விரைந்து தரும் , இதனால் ஜாதகரின் மன நிம்மதி , பொருள் விரையம் , ஜீவன தடைகள் , தகப்பனார் வழியில் இருந்து வரும் அதிக இன்னல்கள்  என்ற வகையில் ஜாதகரை கடுமையாக பாதிக்கும் , மேற்கண்ட பலன்கள் மிக விரைவாக ஜாதகர் எதிர்பாராத நேரத்தில் நடை பெரும் என்பது கவனிக்க பட வேண்டிய விஷயம் .

மேலும் இந்த தீமையான பலன்கள் ஜாதகருக்கு குரு திசை,புத்தி,
அந்தரம்,சூட்சமம் போன்ற காலங்களிலேயே நடைபெறும் மற்ற கிரகங்களின் திசை, புத்தி, அந்தரம், சூட்சமம் அனைத்தும் 6,12ம் வீடுகள் 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறாத காரணத்தால் இந்த பாதிப்புகள் ஜாதகருக்கு மற்ற திசை புத்திகளில் நடைபெறாது என்பதை கருத்தில் கொள்வது சிறப்பு .

ஜாதக அமைப்பில் மிகவும் சிறப்பாக இருக்கும் பாவகம் :

1,2,8,11 ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பது அதிக நன்மையான பலன்களை வாரி வழங்கும் , இந்த பாவகத்தின் பலன்களை ஜாதகருக்கு அடுத்து வரும் கேது திசை நடைமுறைக்கு கொண்டு வருவாதால் ஜாதகர் இலக்கின வழியில் இருந்தும் , வருமானம் குடும்பம் என்ற அமைப்பில் இருந்தும் , திடீர் அதிர்ஷ்டத்தின் மூலமாகவும் , தனது முற்ப்போக்கு சிந்தனையாலும், வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திகொள்ளும் தன்மையினாலும் ஜாதகர் வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றத்தை தரும், மேலும் 11ம் பாவகம் உபய நெருப்பு தத்துவ ராசியான தனுசுவில் தொடங்கி, சர மண் தத்துவ ராசியான மகரத்திலும் வியாபித்து இருப்பதால் , ஜாதகருக்கு கேது திசை மிகுந்த நன்மையான பலன்களையே தரும் , இந்த ஜாதகருக்கு கேது எனும் பாவ கிரகம் யோகமான பலன்களையே தருகிறது.

ஆக ஒருவருடைய ஜாதக பலன்களை நவகிரகங்கள் தான் அமர்ந்த பாவக வலிமையுடனும், தனது திசையில் தான் ஏற்று நடத்தும் பாவகத்தின் தன்மைக்கு ஏற்ப்பவே யோக அவயோக பலன்களை தருகிறது என்பது மேற்கண்ட அமைப்பில் இருந்து  உறுதியாகிறது .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443306969
jothidadeepam@gmail.com



  

சனி, 6 ஜூலை, 2013

சுய ஜாதகத்தில் குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானம் வலிமை பெற்று இருந்தும், ஜாதகருக்கு திருமணம் நடைபெறாத நிலை ஏன்?



ஒருவருடைய சுய ஜாதகத்தில் பாவகங்கள் சிறப்பான நிலையில் இருக்கும் , ஆனால் ஜாதகர் அதற்குண்டான நன்மையான பலன்களை சிறிதும் அனுபவிக்க இயலாத நிலையில் இருப்பார் , எடுத்துகாட்டாக கிழ்கண்ட ஜாதகத்தை ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் .



லக்கினம் : கடகம் 
ராசி : கடகம் 
நட்சத்திரம் : பூசம் 4ம் பாதம் 

சுய ஜாதக அமைப்பின் படி ஜாதகருக்கு குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் பாவகமும் , களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகமும் மிகவும் நல்ல நிலையில் இருக்கின்றன.

ஆனால் தற்பொழுது நடக்கும் சுக்கிரன் திசை ( 17/01/2007 முதல் 17/01/2027 வரை ) ஜாதகருக்கு பூர்வ புண்ணியம் எனும் 5ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 200 சதவிகித தீமையான பலன்களை தந்துகொண்டு இருக்கிறது , ஒருவருடைய ஜாதகத்தில் இளம் வயதில் பாதக ஸ்தானத்தின் பலன் நடை பெரும் பொழுது சம்பந்த பட்ட பாவக வழியில் இருந்து ஜாதகர் அதிக இன்னல்களை அனுபவிக்க வேண்டி வரும் , குறிப்பாக இந்த ஜாதகருக்கு 11ம் பாவகம் என்பது காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு 2ம் வீடான ரிஷப ராசியாக வருவது ஜாதகருக்கு குடும்பம் என்ற அமைப்பில் இருந்தும், வருமானம் என்ற அமைப்பில் இருந்தும் , வாக்கு என்ற அமைப்பில் இருந்தும்  ஜாதகருக்கு 200 சதவிகித தீமையை தரும் என்பதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை.

பொதுவாக இவரது ஜாதகத்தை பாரம்பரிய முறையில் ஜோதிட பலன் கண்ட  ஜோதிடர்களின் கருத்து, சுக்கிரன் திசை மிகப்பெரிய முன்னேற்றத்தை வாரி வழங்கும் எனவே சுக்கிரன் திசையில் திருமணம் நடக்கும் , அதுவரை ஜாதகர் திருமணம் செய்யாமல் இருந்து அதற்க்கு பிறகு திருமணம் செய்துகொண்டால் வாழ்க்கையில் ஜாதகர் கொடி கட்டி பறப்பார் என்று தெரிவித்துள்ளனர், ஆனால் சுக்கிரன் திசை ஆரம்பித்த உடனே ஜாதகருக்கு செய்து கொண்டிருந்த வேலை பறிபோனது , வருமானம் இல்லாத சூழ்நிலையை தந்தது , இதன் காரணமாக ஜாதகரின் வாழ்க்கை வெகுவாக பாதிக்க ஆரம்பித்தது , கேது திசையில் ஜாதகர் பாதக ஸ்தானத்தின் பலனை அணிபவித்த போதிலும் தனது பூர்வீகத்தில் குடியிருந்து கொண்டு ஓரளவு நன்றாக இருந்தார்.

சுக்கிரன் திசை,சுக்கிரன் புத்தி  ஆரம்பித்தது பூர்வீக ஸ்தானம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பிடத்தை விட்டே வெளியே துரத்தியது, வருமானத்தில் சிக்கல்களை உருவாக்கியது , பொருளாதார ரீதியான இன்னல்களை வாரி வழங்க ஆரம்பித்தது , ஜாதகரின் பேச்சே ஜாதகருக்கு எதிராக திரும்பியது 19/05/2010 வரை, அதன் பிறகு ஆரம்பித்த சூரியன் புத்தி ஜாதகருக்கு நல்ல வருமானத்தை தந்தது, காரணம் சூரியன் புத்தி 2ம் வீடு குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று நன்மையான பலனை நடத்தியதால் இது சாத்தியம் ஆயிற்று, இந்த காலத்தில் ஜாதகருக்கு மன வாழ்க்கையை அமைத்து தர பெற்றோர்கள் எடுத்த முயற்சிகள் நல்ல முன்னேற்றம் கண்டது , இருப்பினும் ஜாதகர் அதை தவிர்த்தார் எனவே இந்தகாலத்தில் அமையவேண்டிய திருமண வாழ்க்கை தடை பெற ஜாதகரே காரணமாக இருந்தார் .

தற்பொழுது நடக்கும் சந்திரன் புத்தியும் ஜாதகருக்கு களத்திர ஸ்தான பலனை தருவதற்காக , பல வாய்ப்புகளை வாரி வழங்கியது இருப்பினும் ஜாதகர் அனைத்தையும் தவிர்த்தார் , இதற்க்கு காரணம் ஜாதகர் ஒரு பெண்ணை விரும்பியதே, முடிவில் அந்த பெண்ணும் வேறொருவருடன் திருமணம் செய்துகொண்டு இவரை வெகுவாக ஏமாற்றி விட்டார் , இதை ஜோதிட ரீதியாக ஆராயும் பொழுது திசையை மீறி புத்திகள் எவ்வித நன்மையான பலன்களையும்  வழங்க இயலவில்லை என்பது தெளிவாக தெரிகிறது , 200 சதவிகித தீமையை திசை செய்யும் பொழுது , 30 சதவிகித நன்மையை புத்தி செய்தால் ஜாதகருக்கு பெரிய நன்மைகள் எதுவும் நடை பெறுவதில்லை, அப்படியே நன்மை நடந்தாலும் அது ஜாதகருக்கு பெரிதாக தெரிவதில்லை நல்ல மாற்றங்களை வாழ்க்கையில் ஏற்படுத்துவதில்லை .

ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானம் வலிமை பெற்று இருந்த பொழுதிலும் , ஜாதகரின் இளமை பருவத்தில் குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானத்தின் பலனை ஏற்று சுக்கிர திசை பலனை தராததால் (சுக்கிர திசை தந்தது 5ம் வீடு பாதக ஸ்தான பலனை ) ஜாதகருக்கு 2,7ம் பாவக நன்மையை சிறிதும் அனுபவிக்க இயலவில்லை, எனவே ஒருவருடைய சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமை பெற்று இருப்பது மட்டுமே போதாது , சரியான நேரத்தில் சரியான வயதில், நல்ல நிலையில் இருக்கும் பாவகத்தின் பலனை, நடைமுறையில் உள்ள திசை,புத்தி,அந்தரம்,சூட்சமம் ஏற்று நடத்தினால் மட்டுமே ஜாதகர் குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து நன்மை மற்றும் யோக வாழ்க்கையை பெற முடியும், மேலும் கேட்சார கிரகங்களின் ஆதரவும்  இருந்தால் மிகப்பெரிய நன்மைகளை ஜாதகர் நிச்சயம் பெற முடியும்  என்பது ஜாதக ரீதியான உண்மை .

இதை தவிர்த்து சுபகிரகங்களின் திசை,புத்திகள் நன்மை செய்யும் என்றும், அசுப கிரகங்களின் திசை புத்திகள் தீமை செய்யும் என்றும் பலன் காணுவது ஜோதிட கணிதத்தை முறையாக அறியாதவர்கள் சொல்லும் ஒரு வாய் ஜாலமே என்றால் அது மிகையாகாது .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696
jothidadeepam@gmail.com



வெள்ளி, 5 ஜூலை, 2013

சந்திராஷ்டமம் என்றால் தீமையான பலன்கள் மட்டுமே நடை பெறுமா ?



பொதுவாக சந்திரன் ராசிக்கு, எட்டம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் பொழுது , ஜாதகருக்கு மன ரீதியான சிறு பிரச்சனைகளும் , உடல் ரீதியான சிறு பாதிப்புகளையும் , மற்றவர்கள் வழியில் இருந்து அதிக இன்னல்களையும் வழங்கும் என்பாதாக பல ஜோதிடர்களின் கருத்தாக இருக்கிறது , அதிலும் குறிப்பாக தொலைகாட்சியில் ராசி பலன்கள் செல்லும் ஜோதிட மாமணிகளின் கணிப்பு என்பது சந்திராஷ்டமத்தல் பலன் பெரும் ராசி அன்பர்களின் நிலை பற்றி, மிகவும் மோசமாக பலன் சொல்வது என்பது சர்வ சாதரணமாக இருக்கிறது , சந்திராஷ்டமத்தில் குறிப்பிட்ட ராசி அமைப்பை சார்ந்தவர்கள் இனிமேல் சாப்பிட வேண்டாம் என்று சொன்னாலும் சொல்ல கூடும் அன்பர்களே ! இதில் எந்த அளவிற்கு உண்மை உள்ளது என்பதை பற்றி இந்த பதிவில் காண்போம் .

பொதுவாக ராசி அமைப்பை வைத்து பலன் சொல்வது என்பது ? எங்க ஆத்துக்காரரும் பஞ்சாயத்துக்கு போகிறார் என்பதற்கு ஒப்பானது , ஒருவருடைய சுய ஜாதகத்தில் லக்கினத்தை அடிப்படையாக வைத்து பலன் காணும் பொழுதே ஜாதகரின் உண்மை நிலையம் , தற்பொழுது ஜாதகருக்கு நடந்துகொண்டு இருந்த , இருக்கின்ற , இருக்க போகிற பலன்களை தெளிவாக, துல்லியமாக எடுத்து சொல்ல இயலும்.

குறிப்பாக ஒருவருடைய ஜாதகத்தில் ராசிக்கு எட்டில் சஞ்சாரம் செய்யும் சந்திரன் ஜாதகருக்கு லக்கினத்தில் இருந்து சிறப்பான பலனை தந்துகொண்டு (திசை, புத்தி, அந்தரம், சூட்சமம்) இருக்கும் பாவகத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது அந்த பாவகம் கோண வீடாக இருந்து , சந்திரன் கோண அதிபதியாக குறிப்பிட்ட பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் பொழுது மிகுந்த நன்மையையே செய்வார் , இங்கே சந்திரன் ராசிக்கு அஷ்டமத்தில் சஞ்சாரம், லக்கினத்தில் இருந்து பாவக அமைப்பிற்கு நன்மை செய்யும் பொழுது, சந்திராஷ்டமம் மிகுந்த நன்மையே செய்யும் . 

எடுத்துகாட்டாக :

ஒரு மேஷ இலக்கின , கடக ராசி ஜாதகருக்கு, தற்பொழுது நடக்கும் திசை மற்றும் புத்தி 11ம் பாவகத்தின் பலனை செய்கிறது என்று வைத்துகொண்டால், லக்கினத்திற்கு 11ம் பாவகமான  கும்பத்தில் சஞ்சாரம் செய்யும் சந்திரன் ( அவர் தேய்பிறை சந்திரன் என்றாலும் சரி , வளர் பிறை சந்திரன் என்றாலும் சரி ) 100 சதவிகித நன்மையே செய்வார் , இங்கே சந்திரன் கடக ராசிக்கு அஷ்டமத்தில் சஞ்சாரம் செய்கிறார் ( சந்திராஷ்டமம்) என்று ஜாதகர் கவலை கொள்ள தேவையில்லை .

இங்கே ஜாதகருக்கு 11ம் பாவகத்தின் பலனே மிகுந்து நடக்கும் ராசிக்கு சந்திரன் எப்படி இருந்தாலும் அதை பற்றி எவ்வித கவலையும் நாம் கொள்ளத்தேவையில்லை என்பதே எமது கருத்து , இதில் பதினொன்றாம் பாவகமான மகரம் ஸ்திர காற்று தத்துவம் என்பதால் கும்பத்தில்  உலவும் சந்திரன் ஜாதகருக்கு ஸ்திரமான அறிவாற்றலையும் சிறந்த புத்திசாலித்தனத்தையும் விரைந்து தருவார் , அப்பொழுது ஜாதகரின் நடவடிக்கை என்பது மற்றவர்களின் பாராட்டுதலுக்கு உரியதாகவும் , ஜாதகருக்கு லாபத்தையும் அதிர்ஷ்டத்தையும் தருவதாக இருக்கும் என்பதே உண்மை .

ஒருவருடைய சுய ஜாதகத்தில் லக்கினத்தை அடிப்படையாக வைத்து பலன் கானும்போழுதே சரியான பலன்களை சொல்ல இயலும் , பல ஜோதிடர்கள் இன்றைய ராசிபலன் என்ற தலைப்பில் பலன் சொல்கிறார்களே , இவர்கள் மனிதர்களுக்கு ராசி பலன் சொல்கிறார்களா? அல்லது 12 ராசிகளுக்கு பலன் சொல்கிறார்களா ? என்ற சந்தேகம் ஜோதிட தீபத்திற்கு பல நாட்களாக உண்டு. மனிதர்களுக்கு சொன்னால் நிச்சயம் அந்த மனிதனின் சுய ஜாதகம் இல்லாமல் பலன் சொல்ல இயலாது ? ராசிகளுக்கு சொன்னால் இவர்கள் சொல்லும் பலன்களை கேட்டு அதன் படி நடக்கூடிய நிலையில் 12 ராசிகளும் இல்லை என்பதே உண்மை .

ஆக சந்திராஷ்டமம் என்பது தங்களுது சுய ஜாதகத்தை எவ்விதத்திலும் கட்டுபடுத்த வாய்ப்பில்லை என்பதே முற்றிலும் உண்மை , இதை போன்று ராசி பலன் சொல்வதை கேட்டு , அன்றைய கடைமைகளில் இருந்து தவறுவது என்பது உங்களின் வாழ்க்கை முன்னேற்றத்தை வெகுவாக பாதிக்கும் , மேலும் காலம் கண்போன்றது அதை சரியாக பயன்படுத்து அன்பர்களே வாழ்க்கையில்  மற்றவர்களை விட ஒரு படியாவது முன் நிற்கின்றனர் , மற்ற அனைவரும் கால நேரத்தை குறை சொல்லிக்கொண்டு தோல்வியையே தழுவுகின்றனர், இறை நிலை தங்களுக்கு வழங்கி இருக்கும் நல்ல நேரத்தை தவற விடாமல் பயன்படுத்தி  வாழ்க்கையில் 100 சதவிகித வெற்றியை பெறுங்கள் .

உண்மையில் அஷ்டமம் எனும் 8ம் பாவகம் இரண்டு விதமான நன்மை தீமை பலன்களை வழங்கி கொண்டு இருக்கிறது, ஒருவருக்கு இந்த 8ம் பாவகம் நல்ல நிலையில் இருந்தால் ஜாதகருக்கு வாழ்க்கை துணை வழியில் இருந்தும் , தனது நண்பர்கள் வழியில் இருந்தும் திடீர் தான சேர்க்கையும் , திடீர் அதிர்ஷ்ட வாழ்க்கையையும் தரும் , மேலும் பொதுமக்களை தொடர்பு படுத்தி  செய்யும் அரசியல் , தொழில் , பொது சேவை ஆகியவற்றில் இருந்து 100 சதவிகித வெற்றியை தரும் , ஒருவேளை அந்த ஜாதகருக்கு இந்த 8ம் பாவகம் பாதிக்க பட்டு இருந்தால் மேற்கண்ட அமைப்பில் இருந்து கடுமையான இழப்புகளையும் , துன்பங்களையும் தரும் மேலும் வாழ்க்கை துணை , நண்பர்களின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகும் சூழ்நிலையை தரும், எனவே ஒவ்வொரு பாவகமும் இரண்டு வித பலனை வழங்கும் என்பதே உண்மை , நல்ல நிலையில் இருந்தால் நன்மையையும் பாதிக்கபட்டு இருந்தால் தீமையும் வழங்கும் என்பதனை ஜோதிட கணிதம் கொண்டு ஆராய்ந்தால் , தெளிவாக புரிந்து கொள்ள இயலும் .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696 

  

சனி, 15 ஜூன், 2013

குருபெயர்ச்சி பலன் நிர்ணயம் , சுய ஜாதகத்தில் குரு தரும் யோக அவயோக பலன்களும் !



குருபெயர்ச்சி பலன்களை நிர்ணயம் செய்யும் பொழுது, ராசியை வைத்து நிர்ணயம் செய்வது சுய ஜாதக ரீதியான பலன்களை தெளிவாக துல்லியமாக நிர்ணயம் செய்ய இயலாது என்பதே உண்மை , ஒருவருடைய சுய ஜாதக அமைப்பின் படி லக்கினம் எதுவாக அமைகிறதோ அதை அடிப்படையாக வைத்தும் , தற்பொழுது நடக்கும் திசை மற்றும் புத்தி எந்த பாவகத்தின் பலனை நடத்துகிறதோ, அந்த பாவகத்துடன் தற்பொழுது பெயர்ச்சி அடைந்திருக்கும் குருபகவான் எவ்வித தொடர்பை பெறுகிறார் ( 1,5,7,9 ) என்பதை வைத்தே குருபெயர்ச்சியை பலனை நிர்ணயம் செய்வது சரியான முறையாக இருக்கும், மேலும் சுய ஜாதக ரீதியான துல்லியமான பலனை நிர்ணயம் செய்யமுடியும்.

எடுத்துகாட்டாக :




 மேற்கண்ட சிம்மலக்கின ஜாதகருக்கு தற்பொழுது நடக்கும், குரு திசை மற்றும் புத்தி எந்த பாவகத்தின் பலனை தருகிறது என்பதை தெளிவாக தெரிந்தால் மட்டுமே இந்த ஜாதகருக்கு தற்பொழுது நடை பெற்று இருக்கின்ற குருபெயர்ச்சி ஜாதகருக்கு எந்த மாதிரியான நன்மை தீமை பலன்களை தருகிறது என்பதை நிர்ணயம் செய்ய முடியும்.

தற்பொழுது நடக்கும் குருதிசை ஜாதகருக்கு 7,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று நன்மையான பலனை தந்துகொண்டு இருக்கிறது , இந்த குருதிசையில் தற்பொழுது நடக்கும் ராகு புத்தி 1,3,5,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 200 சதவிகித தீமையான பலனை தந்துகொண்டு இருக்கிறது, மேற்கண்ட பாவகங்களுடன் தற்பொழுது பெயர்ச்சி அடைந்துள்ள குருபகவான் 11ம் பாவகத்தில் அமர்ந்து நன்மையான பலன்களையும்,3ம் பாவகத்தை பார்வை செய்யும் அமைப்பில் நன்மையான பலன்களையும் , 5ம் பாவகத்தை பார்வை செய்யும் அமைப்பில் தீமையான பலன்களையும், 7ம் பாவகத்தை பார்வை செய்யும் அமைப்பில் தீமையான பலன்களையும் வழங்குகிறார் .

ஆக இந்த குருபெயர்ச்சி  ஜாதகருக்கு 3,11ம் பாவகங்களுக்கு நன்மையான பலன்களையும். 5,7ம் பாவகங்களுக்கு தீமையான பலன்களையும் தருகிறார் என்பது உறுதியாகிறது மிதுனத்தில் குருபகவான் அமர்ந்து 5ம் பார்வையாக  துலாம்  ராசியை பார்வை செய்வதாலும், 3ம் பாவகம் சர காற்று தத்துவம் என்பதாலும் ஜாதகர் தனது அறிவார்ந்த செயல்களாலும் , எடுக்கும் முயர்ச்சிகளாலும் வெற்றிமேல் வெற்றி பெறுவார் அந்த வெற்றிகள் ஜாதகருக்கு சிறந்த மக்கள் செல்வாக்கினை வாரி வழங்கும் 3ம் பாவக வழியில் இருந்து .

மிதுனத்தில் குருபகவான் அமர்ந்து, 11ம் பாவகம் உபய காற்று தத்துவம் என்பதால் ஜாதகரின் அறிவாற்றல் பொதுமக்களுக்கும் ஜாதகருக்கும் பல நன்மைகளை வாரி வழங்கும் , தன்னம்பிக்கை  அதிகரிக்கும் , தரகு அமைப்பில் செய்யும் தொழில்கள் யாவும் மிகப்பெரிய ஆதாயத்தை வாரி வழங்கும் .

மிதுனத்தில் குருபகவான் அமர்ந்து 7ம் பார்வையாக தனுசு ராசியை பார்வை செய்வதாலும், 5ம் பாவகம் உபய நெருப்பு தத்துவம் என்பதாலும் ஜாதகர் அவசர கதியில் செய்யும் சில செயல்பாடுகள் ஜாதகருக்கும் ஜாதகரை சார்ந்தவருக்கும் சில அவ பெயரை ஏற்ப்படுத்த கூடும் எனவே சற்றே சிந்தனை செய்து பொறுமையாக ஒவ்வொரு முடிவையும் எடுப்பது நலம் . ( ஐந்தாம் பாவகத்திர்க்கு குருவின் 7ம் பார்வை நன்மை தர வாய்ப்பில்லை )

மிதுனத்தில் குருபகவான் அமர்ந்து 9ம் பார்வையாக கும்ப  ராசியை பார்வை செய்வதாலும்,7ம் பாவகம் ஸ்திர காற்று தத்துவம் என்பதாலும் தனக்கு வரும் அதிர்ஷ்ட வாய்ப்புகளை கவனமாக கையாள வேண்டும் , மேலும் வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் இன்னல்களை அனுசரித்து செல்வது பெரிய துன்பங்களை ஏற்ப்படுத்தாது. ( கேந்திர பாவகமான 7ம் பாவகத்தை குருபகவான் ஒன்பதாம் பார்வையாக காண்பது தீமையான பலன்களையே தரும்.)

மேற்கண்ட அமைப்பில் இந்த சிம்மலக்கின ஜாதகருக்கு குருபெயர்ச்சி நான்கு பாவகங்களுடன் தொடர்பு பெற்று இரண்டிற்கு நன்மையையும் , இரண்டிற்கு தீமையான பலனை தருகிறது என்பதே துல்லியமான குருபெயர்ச்சி பலன்கள்.

எனவே குருபெயர்ச்சி பலன்களை நிர்ணயம் செய்யும் பொழுது சுய ஜாதகத்தை அடிப்படையாக வைத்து நிர்ணயம் செய்வதே சரியானதாக இருக்கும் , சந்திரன் நின்ற ராசியை வைத்து வைத்து குருபெயர்ச்சி பலன்களை நிர்ணயம் செய்வது எந்த விதத்திலும் சுய ஜாதகத்தை கட்டுப்படுத்தாது , மேலும் அதனால் ஜாதகருக்கு எவ்வித நன்மையையும் தீமையும் ஏற்ப்பட வாய்ப்பில்லை என்பதே முற்றிலும் உண்மை .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443306969


செவ்வாய், 21 மே, 2013

சுய ஜாதகத்தில் 12 வீடுகளும், அவற்றின் பலனை ஏற்று நடத்தும் திசா புத்திகளும் !



ஒருவருடைய சுய ஜாதக அமைப்பில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் நிலையின் அடிப்படையிலேயே , நடந்த நடக்கின்ற நடைபெற இருக்கின்ற திசை,புத்தி,அந்தரம்,சூட்சமம் ஆகியன பலனை வழங்குகிறது என்றால் அது மிகை ஆகாது , இதை அடிப்படையாக கொண்டு காணும் பொழுது , ஒவ்வொருவரின் சுய ஜாதகத்திலும் 12 பாவகங்களும் நல்ல நிலையில் இருப்பது அவசியம் என்பது உறுதியாகிறது .

எனவே ஒருவருடைய சுய ஜாதக பலனை நிர்ணயம் செய்யும் பொழுது பனிரெண்டு பாவகங்களுக்கு முன்னுரிமை கொடுப்பது அவசியம், மேலும் அவருடைய சுய ஜாதகத்தில் தற்பொழுது நடை பெரும் திசை,புத்தி,அந்தரம்,சூட்சமம் ஆகியவை எந்த பாவகத்தின் பலனை ஏற்று நடத்துகிறது என்பதை தெளிவாக தெரிந்து கொள்வது , ஜாதக பலனை மிக துல்லியமாக எடுத்துரைக்க உதவி புரியும் .

ஒருவரின் சுய ஜாதக அமைப்பின் படி நவ கிரகங்கள் ராசி கட்டத்தில் எந்த பாவகத்தில் அமர்ந்திருக்கிறது, என்பதனை லக்கினம் ஆரம்பிக்கும் பாகையின் அடிப்படையில் கண்டுணர்ந்து பலன் நிர்ணயம் செய்வது, சம்பந்த பட்ட ஜாதகருக்கு ஜாதக ரீதியான துல்லியமான பலனை சொல்ல உதவும் , ராசியை அடிப்படையாக வைத்தோ , லக்கினத்தை அடிப்படையாக வைத்தோ (லக்கினம் ஆரம்பிக்கும் பாகையை கருத்தில் கொள்ளாமல்) பலன் காணுவது அமாவசை அன்று நிலவை தேடுவதற்கு நிகரான ஒன்றாக கருத வேண்டி வரும் , லக்கினம் ஆரம்பிக்கும் பாகையின் அடிப்படையில் ஜாதக ஆய்வு செய்தால் மட்டுமே ஒவ்வொரு கிரகமும் எந்த பாவகத்தில் அமர்ந்திருக்கிறது என்ற உண்மை நிலை புரியும் , மேலும் ஒவ்வொரு பாவகத்தின் வலிமையை பற்றி தெளிவாக உணர்ந்துகொள்ள இயலும் .

மேற்கண்ட அமைப்பில் ஜாதக கணிதம் நிர்ணயம் செய்த பின்பு திசா புத்திகளின் பலாபலன்களை துல்லியமாக நிர்ணயம் செய்ய இயலும், உதாரணமாக கீழ்க்கண்ட ஜாதக அமைப்பை எடுத்துகொண்டு லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் நிலையை பற்றியும் , திசா புத்திகள் எந்த பாவகத்தின் பலனை ஏற்று நடத்துகிறது என்பதனை பற்றியும் சற்றே சிந்திப்போம் .

ஜாதகர் பிறந்த தேதி : 27/06/2012
ஜாதகர் பிறந்த நேரம்: 07 : 52 pm 
ஜாதகர் பிறந்த இடம் : சேலம் 


இந்த ஜாதக அமைப்பின் படி 1,7,10 ம் வீடுகள் முறையே ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று நல்ல நிலையிலும் ( ஜீவன ஸ்தானம் உபய ராசி என்பதால் 33சதவிகித யோக பலன்களையே தரும் ).

2,3,5,9,11ம் வீடுகள் முறையே அதிர்ஷ்டம் எனும் லாப ஸ்தானமாகிய 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகவும் சிறப்பான நிலையிலும் ( லாப ஸ்தானம் சர ராசி என்பதால் 100 சதவிகித யோக பலன்களை வாரி வழங்கும்).

4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகவும் சிறப்பான நிலையிலும் ( சுக ஸ்தானம் சர ராசி என்பதால் 100 சதவிகித யோக பலன்களை வாரி வழங்கும்).

6ம் வீடு சத்துரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பாதிப்படைந்த நிலையிலும் ( சத்துரு ஸ்தானம் உபய ராசி என்பதால் 33 சதவிகித தீமையான பலன்களே தரும் என்பதால் அதிக கவலை தேவையில்லை )

8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பாதிப்படைந்த நிலையிலும் ( விரைய ஸ்தானம் உபய ராசி என்பதால் 33 சதவிகித தீமையான பலன்களே தரும் என்பதால் அதிக கவலை தேவையில்லை ) சுய ஜாதக நிலை பலன்களை வழங்கிக்கொண்டு இருக்கிறது .

ஜாதகருக்கு பிறப்பு முதல்  11/05/2016 தேதி முடிய சந்திரன் திசையே நடை பெற்று கொண்டு இருக்கிறது , இந்த சந்திரன் திசை ஜாதகருக்கு எந்த பாவகத்தின் பலனை செய்கிறது என்பதை கவனிக்க வேண்டும் மேலும் ஜாதகர் சிறு குழந்தை பருவம் என்பதால் இதை அனுசரித்து பலனை நிர்ணயம் செய்வது அவசியம் தற்பொழுது நடை பெரும் சந்திரன் திசை ஜாதகருக்கு 8,12ம் வீடுகள் விரைய பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பலன்களை தந்து கொண்டு இருப்பது அவ்வளவு நன்மையை தர வாய்ப்பில்லை,மேலும் பனிரெண்டாம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஒன்பதாம் பாவகமாக வருவது ஜாதகருக்கு தான் செய்த பாக்கியத்தின் பலன்களை அனுபவிக்க இயலாது சூழ்நிலையையும் , உடல் ரீதியான சில தொந்தரவுகளையும் தர கூடும் , மேலும் தனது தகப்பனாருக்கு தேவையற்ற அவ பெயரை ஏற்ப்படுத்தகூடும் , இருப்பினும் இவற்றின் தாக்கம் என்பது மிக குறைந்த அளவிலேயே இருக்கும் என்பதை நினைத்து மகிழ்ச்சி அடையலாம் .

11/05/2016 தேதிக்கு மேல் நடை பெரும் செவ்வாய் திசை பற்றி சிறிது ஆய்வு செய்வோம், 2,3,5,9,11ம் வீடுகள் முறையே அதிர்ஷ்டம் எனும் லாப ஸ்தானமாகிய 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று செவ்வாய் திசை பலன்களை வழங்குகிறது இது மிகவும் சிறந்த விஷயம் குறிப்பிட்ட பாவக அமைப்பில் இருந்து ஜாதகர் 100 சதவிகித பலன்களை தங்கு தடையின்றி அனுபவிக்கும் தன்மை உண்டாகும் , இதனால் ஜாதகருக்கு நல்ல கல்வி அமையும் , எடுக்கும் முயற்ச்சிகள் வெற்றி பெரும் , குல தேவதையின் அருளும் நல்லோர் ஆசியும் கிடைக்கும் , எங்கு சென்றாலும் ஜாதகர் நற்பெயர் எடுக்கும் யோகம் உண்டாகும் , அடிப்படையில் ஜாதகருக்கு இந்த செவ்வாய் திசை நீண்ட அதிர்ஷ்ட வாழ்க்கையை அமைத்து தரும் என்பது உறுதியாகிறது.

எனவே மேற்கண்ட முறையில் ஜாதக பலன்களை துல்லியமாக கணிதம் செய்து சொல்லும் பொழுது ஜாதகர் தனது வாழ்க்கையை செம்மையாக அமைத்து கொள்ள உதவும் என்பது ஜோதிட கலையின் சிறப்பு அம்சம் . மேலும் சந்திரன் திசையில் ஜாதகர் உடல் நிலை அமைப்பில் அதிக கவனமாக இருந்து அவர்களது பெற்றோர்கள் ஜாதகரை கவனமுடன் பார்த்துக்கொள்ள ஜோதிட கலை இந்த இடத்தில் கை கொடுக்கும் , ஜாதகரின் தகப்பனார் தேவையில்லாமல் மாற்றவர்கள் விஷயந்தில் தலையீடு செய்து அவ பெயரை சம்பாதித்து கொள்ளாமல் எச்சரிக்கையாக இருந்து கொள்ள ஜோதிட கலை அறிவுறுத்தும் , வீண் விரையன்களை தவிர்க்க உதவி புரியும் .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443306969




 

திங்கள், 20 மே, 2013

சாய கிரகங்களான ராகு கேது வழங்கும் யோக பலன்களும், 4,10ம் பாவக வழியில் ஜாதகர் பெரும் நன்மைகளும் !



சாயா கிரகங்கள் என வர்ணிக்கப்படும் ராகு கேதுவின் வலிமையை பற்றி தெளிவாக புரிந்துகொள்ள உதவும் ஜாதகம் இது என்றால் அது மிகையாகாது.



இந்த குழந்தையின் ஜாதக அமைப்பில் சாயா கிரகங்களான  ராகு கேது முறையே மகரம் மற்றும் கடகம் என்ற ராசிகளில் அமர்ந்து சம்பந்தபட்ட பாவக அமைப்பிற்கு 100 சதவிகித யோகபலன்களை தரும் நிலையில் இருக்கின்றனர் , பொதுவாக ஜாதக பலன்கள் காணும் அமைப்பை வைத்து பார்க்கும் பொழுது இந்த சாயாகிரகங்கள் அதிர்ஷ்டம் மற்றும் லாப ஸ்தானம் என்று அழைக்கப்படும் 11ம் பாவகத்தில் ராகுவும், பூர்வபுண்ணியம் என்று அழைக்கப்படும் 5ம் பாவகத்தில் கேதுவும் அமர்ந்த பலன்களை தரும் அமைப்பை கொண்டுள்ளதாக பல ஜோதிடர்களின் கணிப்பாக இருக்க கூடும் .

உண்மையில் ராகு கேது எனும் சாயா கிரகங்கள் , பாவக அமைப்பின் படி பாகை வாரியாக கணிதம் கொண்டு பார்க்கும் பொழுது மகரத்தில் உள்ள 10ம் பாவகத்தில் ராகுவும், கடகத்தில் உள்ள 4ம் பாவகத்தில் கேதுவும் அமர்ந்திருக்கின்றனர் என்பதே சரியான ஜோதிட கணிதம் , மேலும் ஜாதகருக்கு சரியான பதில் சொல்ல இதுவே உதவும்.

ஏனெனில் ஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் என்பது தனுசு ராசியில்  259.16.01என்ற பாகையில் ஆரம்பித்து , மகரத்தில் 286.46.10 பாகையில் நிறைவு பெறுகிறது , இதற்க்கு உட்பட்ட 276.24.26 பாகையில் மகர ராசியில் , ராகு அமர்ந்து இருப்பது ஜீவன ஸ்தானத்தில் தனது ஆளுமையை செலுத்துகிறது என்பது உறுதி ஆகிறது .

மேலும் ஜாதகருக்கு சுக  ஸ்தானம் என்பது மிதுனத்தில் 79.16.01என்ற பாகையில் ஆரம்பித்து , கடகத்தில்  106.46.10 பாகையில் நிறைவு பெறுகிறது , இதற்க்கு உட்பட்ட 96.24.26 பாகையில்கேது அமர்ந்து இருப்பது சுக ஸ்தானத்தில் தனது ஆளுமையை செலுத்துகிறது என்பது உறுதி ஆகிறது .

ஆக மேற்க்கண்ட ஜாதகத்தில் கேந்திர வீடுகளான ஜீவன ஸ்தானத்தில் ராகுவும் , சுக ஸ்தானத்தில் கேதுவும் அமர்ந்து 100 சதவிகித நல்ல நிலையில் இருப்பது தெளிவாகிறது , எனவே ஜாதகருக்கு இவர்களால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்பதை இனி பார்ப்போம் .

 காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு  ஜீவன ஸ்தானமான மகரத்தில் ராகு நல்ல நிலையில் அமர்ந்து ஜாதகருக்கு ஜீவன  ஸ்தானத்திற்கு  100 சதவிகித நன்மையை செய்வதால் , ஜாதகரின் வாழ்க்கையில் தனது தகப்பனார் அமைப்பில்  இருந்து கிடைக்க வேண்டிய அனைத்தும் 100 சதவிகிதம் எவ்வித தங்கு தடையும் இன்றி கிடைக்கும் , தனது தகப்பனாருடன் ஜாதகர் நல்ல நடப்பு மற்றும் பாசத்துடன் பழகும் யோகம் உண்டாகும் , தனது தகப்பனார் மீது அளவுகடந்த நன்மதிப்பையும் , மரியாதையும் ஜாதகர் கொண்டு இருப்பார் , ஜாதகர் பிறந்ததில் இருந்து ஜாதகரின் தகப்பனாருக்கு அளவில்லா ஜீவன முன்னேற்றத்தை வாரி வழங்கும்.

 பல தொழில் செய்யும் யோகம் உண்டாகும், மேலும் ஜாதகர் செய்யும் செயல்கள் யாவும் கவுரவமாகமும் , மதிப்பு மிக்க  செயல்களாகவும் , அனைவரையும் கவரும் விதத்திலும் இருக்கும் , ஜிவனத்தில் அமரும் ராகு ஜாதகருக்கும் , ஜாதகரின் தகப்பனாருக்கும்  தொழில் , வேலை , ஜீவனம் என்ற அமைப்பில் இருந்து 100 சதவிகித முன்னேற்றத்தை தங்கு தடையின்றி வாரி வழங்கும் என்பதில் சிறிதும்  சந்தேகம் இல்லை , இந்த முன்னேற்றம் என்பது ஜாதகருக்கு வெகு விரைவில்  குறுகிய காலத்தில் அமையும் என்பது சிறப்பான விஷயம் .

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு சுக ஸ்தானமான கடகத்தில் கேது நல்ல நிலையில் அமர்ந்து ஜாதகருக்கு சுக ஸ்தானத்திற்கு 100 சதவிகித நன்மையை செய்வதால் , ஜாதகரின் வாழ்க்கையில் தனது தாயார் அமைப்பில் இருந்து கிடைக்க  வேண்டிய சிறந்த உயர்கல்வி , சுகமான வாழ்க்கை , சிறந்த சொகுசு வண்டி  வாகனம் , சொத்து சுக சேர்க்கை , தன்னம்பிக்கையான மன நிலை , ஸ்திரமான புத்தி , நல்ல மன நிலை , உடல் ரீதியாக வரும் நோய் நொடிகளில் இருந்து விரைவான குணம் பெரும் அமைப்பு என்ற வகையில் அதிக நன்மைகளை  விரைந்து தரும் .

குறிப்பாக ஜாதகரின் தாயாருக்கு இது மிக சிறந்த அமைப்பு , அவர்களின் ஆரோக்கியம் மேம்படும் , நிம்மதியான வாழ்க்கை கிட்டும் , தாயாரின் அமைப்பில் இருந்து ஜாதகருக்கு சிறந்த அரவணைப்பும் , பாசமும் தடையின்றி கிடைக்கும் , ஜாதகரின் சிறந்த ஒழுக்கத்திற்கு காரணமாக தாயின் அறிவுரைகளும் , ஜாதகரின் வெற்றிக்கு காரணமாக தாயின் ஆலோசனைகளும் உறுதுணையாக இருக்கும் , மகரத்தில் அமரும் ராகு ஜாதகருக்கு சிறந்த சொத்து சுக சேர்க்கைகளை , தனது சுய உழைப்பின் மூலம் பெற்று தரும் , கடகத்தில் அமரும் கேது ஜாதகருக்கு பரந்த மனப்பான்மையையும் , விட்டுகொடுக்கும் தன்மையையும் , மற்றவர்களிடம் பரிவு காட்டும் நல்ல குணத்தையும் தரும் .

ராகு கேது இருவரும் ஒருவரது சுய ஜாதகத்தில் நல்ல நிலையில் அமர்வது சிறப்பு , இதை போன்று தகப்பனை குறிக்கும் 10ம் பாவகத்துடனும் , தாயை குறிக்கும் 4ம் பாவகத்துடனும் , சம்பந்தம் பெறுவது ஜாதகர் சிறந்த மாமனிதனாக வளர வழிவகுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை , ஒருவருக்கு நல்ல பெற்றோர் அமைந்துவிட்டால் , அவர் தனது வாழ்க்கையை  எவ்வித சூழ்நிலைகளையும் சமாளித்து வெற்றி பெரும் யோகம் உண்டாகும் .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443306969


வெள்ளி, 17 மே, 2013

முற்ப்போக்கு சிந்தனையும் , நேர்மறை எண்ணங்களாலும் வாழ்க்கையில் வெற்றி பெரும் ஜாதக நிலை !



இறை அருளின் கருணையினால் ஒருவருடைய சுய ஜாதக அமைப்பில் , உடல் உயிர் என்று வர்ணிக்கப்படும் லக்கினம் எனும் முதல் பாவகம் லக்கினத்துடன் தொடர்பு பெறுவதும் , பூர்வ புண்ணியம் எனும் ஐந்து களத்திர ஸ்தானம் எனும் ஏழு, பாக்கிய ஸ்தானம் எனும் ஒன்பது மற்றும் லாப ஸ்தானம் எனும் பதினொன்றாம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகரின் வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றத்தை தந்து , ஜாதகரின் சிந்தனையினாலும் , செயல்பாட்டினாலும் ஜாதகத்தில் உள்ள யோக நிலைகளை முழுவதும் அனுபவிக்கும் ஆற்றலை தரும் .

மேற்கண்ட அமைப்பை பெற்ற ஜாதக அன்பர்கள் , தனது வாழ்க்கையை தானே சுயமாக வாழும் வல்லமையை சிறு வயதினில் இருந்தே பெற்று விடுவார்கள், இந்த சிக்கலான சமுக அமைப்பில் இருந்து , தனது வாழ்க்கையை எப்படியும்  செம்மையாக அமைத்து கொண்டு பிறர் வியந்து பாராட்டும் அளவிற்கு சிறப்பாக வாழும் தன்மையை ஜாதகர் பெற்று இருப்பார் என்பது மிகப்பெரிய ஆச்சரியமான விஷயம் , மேலும் இவர்களின் முற்ப்போக்கு சிந்தனையும் செயல்பாடுகளும் ஜாதகரை மற்றவர்களிடம் இருந்து தனித்து காட்டும் , பொதுமக்களிடம் இருந்து சிறப்பான வரவேற்ப்பை பெற்று தரும் .

தன்னம்பிக்கை மற்றும் சுய கட்டுபாட்டிற்கும் சிறந்த உதாரணமாக விளங்கும் அன்பர்கள் இவர்களே , இவர்களின் இறக்க சுபாவத்தை பலர் தமது சுய லாபத்திற்காக பயன்படுத்தி கொள்வார்கள் , இருப்பினும் ஜாதகர் அதைபற்றிய கவலை எதுவும் இன்றி தனது செயல் மற்றும் நடவடிக்கை மற்றவரை பாதிக்கா வண்ணம் நடந்து கொள்வார்கள் , மேலும் தனக்கு வரும் துன்பம் மற்றும் சிரமங்களை கூட தனக்கு சாதகமாக மாற்றிகொண்டு வெற்றிகரமாக வாழும் சிறந்த வாழ்க்கையை இறையருள் ஜாதகருக்கு தொடர்ந்து வாரி வழங்கி கொண்டே இருக்கும் .

லக்கினம் முதல் பாவகத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது ஜாதகர் தனது வாழ்க்கையில் நடக்கும் நன்மை தீமை விஷயங்களுக்கு தானே காரணம் , தனது வினை பதிவின் அடிப்படையிலேயே அனைத்தும் நடை பெறுகிறது , வரும் இன்ப துன்பங்களுக்கு தானே காரணம் எனும் சிந்தனையை தரும் , மேலும் சுய கட்டுப்பாடு , தன்னம்பிக்கை ஒழுக்கம் என்பது ஜாதகருக்கு சிறு வயது முதற்கொண்டே அடிப்படையாக அமைந்து ஜாதகரின் வாழ்க்கையில் வரும் முன்னேற்றத்திற்கு  உறுதுணையாக அமைந்து விடும் , இதுவே ஜாதகர் சிறப்பாக  வளரும் சூழ்நிலையை தரும் , ஜாதகர் எவ்வித தீய பழக்க வழக்கங்களுக்கு  ஆட்பட மாட்டார் என்பது மட்டும் உறுதி , இவரால் நிச்சயம் மற்றவர்கள்  பாதிக்க வாய்ப்பு இல்லை, இதுவே ஜாதகரை சிறப்பான முன்னேற்றத்திற்கு  எடுத்து செல்லும் .

லக்கினம் ஐந்தாம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது , ஜாதகரிடம் குடிகொண்டுள்ள இறை நிலையின் அருள் ஆற்றல் ஜாதகரின் முன்னேற்றத்திற்கு 100 சதவிகிதம் உறுதுணை புரியும் , ஜாதகர் சிறு வயது முதற்கொண்டே இறை நிலையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளவராகவும் ஆன்மீக பெரியோர்களின் ஆசியை பெற்றவராகவும் திகழ்வார் , தன்னுடன் சேர்க்கை பெரும் அன்பர்களின் குணம் , எண்ணம் , செயல்  அறிந்து நட்பை வளர்த்துகொள்ளும் தன்மையை தரும் , இதுவே ஜாதகரின்  வாழ்க்கையை மேன்மை படுத்தும் , தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்யும் , இவர்களிடம் உள்ள ஒரு சிறப்பான விஷயம் , தன்னை சார்ந்துள்ளவர்களின்  தன்மையை முழுமையாக உணர்ந்து கொண்டு அவர்களுக்கு  ஏற்ற விதத்தில் நடந்துகொள்ளும் தன்மையை தரும் , இவர்களுக்கு எல்லா நேரமும் நல்ல நேரமாக விளங்கும் என்பது குறிப்பிடத்தக்க  ஒரு சிறப்பு அம்சம் .

லக்கினம் ஏழாம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது , ஜாதகரின் நண்பர்கள் அனைவரும் நல்வர்களாக திகழ்வார்கள் ,  பொதுமக்கள் ஆதரவு ஜாதகருக்கு பரிபூரணமாக  அமைந்துவிடும் , இவர்கள் வழியே ஜாதகர் அதிக யோக பலன்களை  அனுபவிக்கும் தன்மை உண்டாகும் , ஜாதகரின் செயல்பாடுகளை ஜாதகரின்  நல்ல நண்பர்களும் , பொதுமக்களும் கூர்ந்து கவனிப்பதால் ஜாதகரின்  நடத்தை மற்றும் ஒழுக்கம் மிகவும் சிறப்பாக அமைந்துவிடும் , மேலும்  பொறுப்பான பதவிகள்  அல்லது பொறுப்பான நிர்வாகத்தை ஜாதகர் நிர்வகிக்கும்  யோகத்தை இளம் வயதிலேயே தந்துவிடுவதால் , ஜாதகர் அதில் சிறந்து விளங்கும்  தன்மையை பெறுவதற்காகவே தனது வாழ்க்கையை சிறப்பாக அமைத்து கொண்டு , 100 சதவிகித வெற்றிகரமான வாழ்க்கையை வாழ்நாள்  முழுவது வாழும் தன்மை தரும் .

லக்கினம் ஒன்பதாம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகர் தனது முன்ஜென்ம  நல்வினை காரணமாகவும் , தனது பெற்றோர்கள் மற்றும் முன்னேர்கள்  செய்த புண்ணிய பதிவின் காரணமாகவும் வாழ்க்கை பாதை சீரான  ஒரு நேர்கோட்டில் அமைந்துவிடும் , ஜாதகரே நினைத்தால் கூட தீய வழி  பாதையில் செல்ல இயலாது , அடிப்படையிலேயே ஒழுக்கத்தை தனது இரு கண்களாக  பாவிக்கும் தன்மையை தரும் , மானம் ஒன்றே வாழ்க்கை என்ற  சிந்தனையை தரும் , தவறி கூட தனது சொல்லால் , செயலால் மற்றும் சிந்தனையால் பிறருக்கு தீமை செய்யாத மன பக்குவத்தை தரும், ஜாதகர்  மேற்கொள்ளும் காரியங்கள் யாவும் முன்னோர்களின் ஆசியினாலும் , இறை அருளின் கருணையினாலும் வெற்றி மேல் வெற்றியை பெற்று தரும் .

லக்கினம் பதினொன்றாம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகர் தனது வாழ்க்கையில் அதிர்ஷ்ட வாய்ப்புகளை தொடர்ந்து பெற்றுகொண்டே இருக்கும் யோக நிலையை தரும் , குறிப்பாக ஜாதகருக்கு புதையல் , லாட்டரி போன்ற  அமைப்புகளில் இருந்து மிகப்பெரிய முன்னேற்றத்தை தரும் அல்லது  ஜாதகர் தனது நேர்மறை எண்ணங்களால் , புதையலுக்கு நிகரான செல்வ வளங்களை பெரும் புத்திசாலித்தனம் மற்றும் செயல் திறனை வாரி வழங்கும் , ஜாதகரால் முடியாத காரியங்கள் என்பது எதுவும் இல்லை என்ற நிலையை தரும் , தன்னம்பிக்கையும் , மனோதிடத்தையும் இறை நிலை ஜாதகருக்கு மற்றவரை விட கொஞ்சம் அதிகமாகவே கொடுத்துவிடும் , எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளித்து , அதில் வெற்றி பெரும் யோகத்தையும் வாரி வழங்கும் , இவரின் சிந்தனை மற்றும் செயல்பாடுகளின் வீரியத்தை எவராலும் அறிந்து கொள்ள இயலாது , இதுவே ஜாதகரின் வெற்றிக்கு உண்டான  சூட்சமமாக விளங்கும் .

ஆனால் மேற்சொன்ன பாவகங்கள் ஜாதகரின் லக்கினத்திற்கு பாதக ஸ்தானமாக அமைந்துவிட கூடாது அப்படி அமையும் பட்சத்தில் மேற்சொன்ன பலன்களுக்கு  எதிர்மறையான பலன்களே நடைமுறைக்கு வரும் , மேலும் லக்கினம் என்பது 2,6,8,12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு எதிர்மறை எண்ணத்தை ஊக்கபடுத்தி , ஜாதகரை செயல்படாத சூழ்நிலைக்கு தள்ளிவிடும் தன்மையை தர கூடும் .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443306969