செவ்வாய், 14 அக்டோபர், 2014

சுய ஜாதக ரீதியாக தனக்கு அமையும் திருமணம் காதல் திருமணமா? பெரியோர்களால் நிச்சயிக்கபட்ட திருமணமா? என்று எப்படி தெரிந்துகொள்வது.




திருமண வயதில் உள்ள ஆண் பெண் இருவருக்கும் இருக்கும் மிகப்பெரிய கேள்வி இது என்றால் அது மிகையில்லை, தனது திருமண வாழ்க்கை பற்றி முன்கூட்டியே தெரிந்து கொண்டு, அதன் அடிப்படையில் தனது வாழ்க்கையை சிறப்பாக அமைத்துகொள்ளும் வண்ணம், மேற்கண்ட கேள்வி இன்றைய இளைஞர்கள் மத்தியில் ஏற்ப்படுகிறது, இது வரவேற்க தக்க ஒரு விஷயமே, பொதுவாக சுய ஜாதகத்தில் குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானம் எனப்படும் 2,7ம் பாவகங்கள் சுய ஜாதகத்தில் எவ்வித வலிமை பெற்று இருக்கிறது, என்பதின் அடிப்படையிலேயே ஒருவரின் திருமண வாழ்க்கை நிர்ணயம் செய்யபடுகிறது, இதில் குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானங்கள் நல்ல வலிமையுடன் இருக்கும் ஜாதக அமைப்பை சார்ந்த ஆண் அல்லது பெண்ணுக்கு எவ்வித தடையும் இன்றி பெரியோர்களால் நிச்சயிக்கபட்டு திருமணம் சிறப்பாக நடைபெறுகிறது, ( இது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 2,7ம் ராசிகளின் தன்மையும் வலிமையையும் பொறுத்தே அமையும் ) அப்படி அமையும் திருமண வாழ்க்கையும் மிகவும் சிறப்பான முன்னேற்றத்தையே தம்பதியரின் வாழ்க்கையில் தருகின்றது.


சுய ஜாதகத்தில் மேற்கண்ட 2,7ம் பாவகம் வலிமை பெற்று அமர்ந்திருக்கும் ஜாதகர் எவருக்கும் காதல் திருமணம் என்ற ஒரு வாய்ப்பை தருவதில்லை, மாறாக ஜாதகர் திருமணதிற்கு பிறகு தனது மனைவியை நேசிக்கும் யோகத்தையே பெறுகிறார், மேலும் இவர்களின் வாழ்க்கையில் குடும்பம் மாறும் களத்திர ரீதியான எவ்வித பிரச்சனைகளும் ஏற்படுவதில்லை, அப்படி ஏற்படும் பட்சத்தில் இவர்களுக்கு இடையிலான தாம்பத்தியம் பன்மடங்கு வலிமை பெறுகிறதே தவிர, பிரிவு என்ற பேச்சிற்கே இடம் தருவதில்லை, மேலும் இவர்களுக்கு இடையில் ஏற்ப்படும் பிரச்சனைகளை தவிர்க்க, பெரியவர்களின் ஆலோசனையும் அறிவுரையும் மிகவும் உதவிகரமாக அமைகிறது, தம்பதியரின் திருமண வாழ்க்கையின் வெற்றியை உறுதி செய்கிறது, எந்த ஒரு சூழ்நிலையிலும் தம்பதியர் தனது வாழ்க்கை துணையை பிரிந்து தனித்து இருக்க விரும்புவதில்லை.

எனவே சுய ஜாதகத்தில் மேற்கண்ட குடும்பம் மற்றும் களத்திரம் எனும் இரண்டு பாவகங்கள் வலிமை பெற்ற ஜாதகர்கள் எவ்வித குழப்பமும் இன்றி நிச்சியக்கபட்ட திருமணம் செய்து கொள்வதற்கு உண்டான வாய்ப்பு 100% சதவிகிதம் உள்ளது என்பது உறுதியாகிறது, மேலும் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ரிஷபம் மற்றும் துலாம் ராசிகள் வலிமை பெரும் பொழுது நிச்சயிக்கபட்ட திருமணதிற்கு உண்டான வாய்ப்பு என்பது மேலும் வலிமை பெறுகிறது, திருமண வாழ்க்கையில் எவ்வித தொய்வும் இல்லாத மணவாழ்க்கையை சிறப்பாக வாரி வழங்கிவிடுகிறது.

காதல் திருமணம் செய்துகொள்வதற்கு உண்டான வாய்ப்பை தருவது சுய ஜாதகத்தில் லக்கினம் எனும் முதல் பாவகமும், வீர்ய ஸ்தானம் எனும் 3ம் பாவகத்தின் வலிமையுமே, மேலும் இவர்களின் சுய ஜாதகத்தில் குடும்பம் எனும் இரண்டாம் பாவகமோ  அல்லது களத்திரம் எனும் 7ம் பாவகமோ பாதிக்கபட்டு இருப்பது கண்கூடான விஷயம், சுய ஜாதகத்தில் லக்கினம் மற்றும் மூன்றாம் பாவகம் வலிமை பெற்று அமர்ந்திருக்கும் ஜாதக அமைப்பை பெற்றவர்களுக்கு காதல் திருமணம் செய்துகொள்வதற்கு உண்டான வாய்ப்புகள் மிக அதிகம், காரணம் தான் எடுக்கும் முடிவில் பிடிவாதமாக இருந்து தான் நினைத்ததை அடையும் ஆற்றல் இவர்களுக்கு அசாத்தியமாக அமைந்துவிடுகிறது, மேலும் தனக்கு உண்டான வாழ்க்கை துணையை சரியாக தேர்ந்தெடுக்கும் வல்லமை பெற்றவர்கள், பொதுவாக சுய ஜாதகத்தில் 2ம் பாவகம் அல்லது 7ம் பாவகம் இரண்டில் ஏதாவது ஒன்று வலிமை குறைந்து, லக்கினம் மற்றும் 3ம் பாவகம் அதிக வலிமை பெற்று இருக்கும் ஜாதக அமைப்பை பெற்றவர்கள் தனது விருப்பபடி தனது வாழ்க்கை துணையை தேடிக்கொண்டு இல்லற வாழ்க்கையை இனிதே நடத்தும் யோகம் பெற்றவர்களாகவே காணப்படுகின்றனர்.

மேலும் இவர்களின் சுய ஜாதகத்தில் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 2ம் வீடான ரிஷபமும், 7ம் வீடான துலாமும் மிகவும் வலிமை பெற்றே அமர்ந்திருக்கிறது, ஆனால் இலக்கின அடிப்படையில் 2ம் பாவகமோ அல்லது 7ம் பாவகமோ ஏதாவது ஒரு வகையில் பாதிக்கபட்டு இருப்பது தவிர்க்க இயலாது, எனவேதான் ஜாதாகர் காதல் திருமணம் செய்துகொள்ளும் சூழ்நிலைக்கு தள்ளபடுகிறார், இருப்பினும் ஜாதகர் செய்துகொள்ளும் காதல் திருமணம் மேற்கண்ட மற்ற பாவகங்களின் வலிமையால் 100% வெற்றியை பெறுகிறது, பிரிவில்லாத இல்லற வாழ்க்கையை வாரி வழங்குகிறது, தமக்குள்ள வரும் பிரச்சனைகளை தம்பதியர் இருவருமே தீர்வு காண்பதால் பிரிவு என்ற நிலைக்கு செல்லும் வாய்ப்பை தருவதில், இல்லறவாழ்க்கையில் 100% மகிழ்ச்சியை வாரி வழங்குகிறது.

சுய ஜாதகத்தில் 2ம் பாவகமான குடும்ப ஸ்தானமும், 7ம் பாவகமான களத்திர ஸ்தானமும் பாதிக்கபட்டு, லக்கினம் மற்றும் வீரிய ஸ்தானமான 1,3ம் பாவகங்களும் பாதிக்கபட்டு, காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு 2,7ம் வீடுகளான ரிஷபம் மற்றும் துலாம் ராசியும் பாதிக்க பட்ட ஜாதகர்களின் நிலைதான் மிகுந்த இன்னல்களை அனுபவிக்கும் ஜாதகங்களாக கருதலாம், குறிப்பாக காதலில் தோல்வியை சந்திக்கும் அன்பர்கள் அனைவரின் ஜாதகத்திலும் மேற்கண்ட அமைப்பு காணப்படுகிறது, மேற்கண்ட பாவகங்கள் வலிமை பெறாத ஜாதகர் அனைவரும் தனது திருமண வாழ்க்கையை பற்றி முடிவு செய்யும் பொழுது அதிக கவனமுடன் இருப்பது நலம், குறிப்பாக சொல்லவேண்டும் எனில் தனது வாழ்க்கை துணையை இவர்களால் நிச்சயம் சரியாக தேர்ந்தெடுக்க முடியாது, இதுவே இவர்களின் காதல் தோல்விக்கும், காதல் திருமணத்தில் ஏற்ப்படும் மணவாழ்க்கை பிரிவுக்கும் அடிப்படை காரணமாக அமைந்துவிடும்.

மேலும் இவர்களின் சுய ஜாதகத்தில் பாதிக்கபட்ட வீடுகளான 2,7ம் பாவகங்கள் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெறுவதோ, 1,3ம் பாவகங்கள் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெறுவதோ நிச்சயம் காதல் தோல்வியை தரும், மனவழ்க்கையிலும் மிகப்பெரிய தோல்வியை தரும், குறிப்பாக மேற்கண்ட பாவகங்கள்  பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெற்று, பாதக ஸ்தானம் நெருப்பு தத்துவ ராசியாக இருப்பின் ஜாதகர் தனது சுய கட்டுப்பாட்டையும் ஒழுக்கத்தையும் இழந்துவிடுவார், நில தத்துவ ராசியாக இருப்பின் ஜாதகர் தனது பொறுமையை இழந்து உடல் நல பாதிப்பை பெரும் சூழ்நிலைக்கு தள்ளபடுவார், காற்று தத்துவ ராசியாக இருப்பின் ஜாதகரின் அறிவாறலே வெகுவாக பாதிக்கப்படும், பல அறிவிலி  தனமான செய்கைகளுக்கு சொந்தகாரர் ஆகிவிடுவார், நீர் தத்துவ ராசியாக இருப்பின் ஜாதகரின் மன நிலை வெகுவாக பதிக்கப்படும், புத்தி போதளிக்கும் நிலைக்கு ஜாதகர் தள்ளபடுவார் என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

மேற்கண்ட ராசிகள் சர தத்துவ அமைப்பை பெரும் பொழுது ஜாதகருக்கு குறுகிய காலத்தில் கடுமையான பாதிப்பை தரும், ஸ்திர தத்துவ அமைப்பை பெரும் பொழுது ஜாதகருக்கு தரும் பாதிப்பின் தன்மை நெடுநாளுக்கு பாதிப்பை தரும், இவர்கள் காதல் தோல்வியில் இருந்தோ, மணவாழ்க்கை பிரிவில் இருந்தோ மீண்டு வருவது கேள்விக்குறியே, உபய தத்துவ அமைப்பை பெரும் பொழுது ஜாதகருக்கு வரும் பாதிப்பின் தன்மை மிக குறைந்த அளவிலேயே இருக்கும் என்பதால் மேற்கண்ட விஷயங்களில் இருந்து வெகு விரைவில் தோல்விகளில் இருந்து மீண்டு வந்து சகசமான வாழ்க்கையை சிறப்பாக வாழும் யோகத்தை தந்துவிடும்.

சுய ஜாதக அமைப்பை பற்றி தெளிவாக தெரிந்துகொண்டு, அதன் அடிப்படையில் தனது திருமண வாழ்க்கையை சரியாக அமைத்து கொள்வது இன்றைய இளைஞர்களுக்கு சிறப்பான முன்னேற்றத்தை வழங்கும், மேற்கண்ட அமைப்பில் பாதிக்கபட்ட ஜாதக அமைப்பை சார்ந்த இளைஞர்களும் இளைஞிகளும் தங்களுது கவனத்தையும், செயல்பாடுகளையும் திசை திருப்பிக்கொண்டு வாழ்க்கையில் முன்னேற்ற பாதையில் நடைபோடுவதே சாலசிறந்தது, காதல் என்ற ஒரு விஷயமே வாழ்க்கையில் அனைத்தும் தந்துவிடுவதில்லை, திரைப்படங்களில் வேண்டுமானால் அது சாத்தியப்படுமே தவிர, நிஜவாழ்க்கையில் இது சாத்தியப்பட வாய்ப்பே இல்லை எனலாம் அன்பர்களே, இறை அருள்  ஓவ்வொரு மனித ஜீவனையும் படைத்ததின் சாரம்சத்தை  உணர்ந்து அதன் வழியில், வாழ்க்கையை சிறப்பாக வாழும் கலையை கற்றுகொள்வது இங்கே அவசியமாகிறது அன்பர்களே!

எனவே ஒருவரின் சுய ஜாதகத்தில் 11ம் பாவகத்தின் தன்மையை உணர்ந்து அதன் வழியில், தனது வாழ்க்கையை செம்மையாக வாழ கற்றுகொள்வது நம் அனைவருக்கும் மிகுந்த நன்மைகளை வாரி வழங்கும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வெள்ளி, 10 அக்டோபர், 2014

அதிர்ஷ்டம் மற்றும் யோக வாழ்க்கையின் முழுமையை உணர்த்தும் யோக ஜாதக அமைப்பு!

 

அதிர்ஷ்டம் என்ற வார்த்தைக்கும் யோக ஜாதகம் என்ற அமைப்பிற்கும் உதாரணமாக விளங்கும் ஜாதகத்தை பற்றி நாம் இந்த பதிவில் ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே! கிழ்கண்ட ஜாதகியை அதிர்ஷ்ட தேவதையின் மறு உருவமாகவே நாம் கருதலாம், ஏனெனில் அவரது சுய ஜாதகத்தில், பாவகங்களின் வலிமை அவ்வளவு சிறப்பாக அமைந்திருக்கிறது, மேலும் வலிமை பெற்ற பாவகங்களின் பலன்களையே, ஜாதகிக்கு நடைபெறும் பெரும்பாலான திசை, புத்தி, அந்தரம், சூட்சமங்கள் நடைமுறைக்கு கொண்டுவருகிறது, அதன் அபரிவிதமான ராஜயோக பலன்களையே ஜாதகி பரிபூரணமாக் இனிவரும் காலங்களில் அனுபவிக்கிறார் என்பது கவனிக்கத்தக்க 
ஒரு சிறப்பு யோக பலன்களாக ஜோதிடதீபம் கருதுகிறது.

மேலும் ஜாதகி செய்த புண்ணியத்தின் பலனையும், பெற்றோர் செய்த பாக்கியத்தின் பலனையும் ஒன்று சேர்ந்து தரும் யோக ஜாதக பலனாகவே கருதலாம், ஜாதகியின் சிறு வயதுமுதல் மிகுந்த யோக பலன்களை அனுபவிக்கும் தன்மையை தரும் குறிப்பாக ஜாதகியின் பெற்றோர், ஜாதகியின் உடன் பிறப்பு, ஜாதகியின் நண்பர்கள், ஜாதகியின் வாழ்க்கை துணை, ஜாதகியின் உறவினர்கள் என்ற அமைப்பில் சகல நபர்களுக்கும் தனது வழியில் இருந்து யோகத்தை தருபவராக காணப்படுகிறார், ஜாதகி அடிப்படையில் இருந்தே நல்லகுணம், சிறந்த உடல் ஆரோக்கியம், பொருளாதார தன்னிறைவு மற்றும் சகல வளங்களையும் பெற்று சிறப்பாக வாழும் யோகத்தை தரும்.



ஜாதகியின் ஜெனன லக்கினம் : கன்னி 
ஜாதகியின் ஜெனன ராசி : மகரம் 
ஜாதகியின் ஜெனன நட்சத்திரம் : திருவோணம் 

இந்த ஜாதகத்தில் யோக பலன்களை வாரி வழங்கும் பாவகங்களை மட்டும் நாம் சிந்தனைக்கு எடுத்து கொள்வோம் அன்பர்களே ! இதை அடிப்படையாக கொண்டு காணும் பொழுது 1,3,5,9,11ம் வீடுகள் அதிர்ஷ்டம் மட்டும் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதே ஜாதக அமைப்பில் சிறந்த யோக பலன்களை வாரி வழங்கும் வலிமையை பெறுகிறது இதன் வழியில் ஜாதகி பெரும் யோக பலன்களை பற்றி இனி ஆய்வுக்கு எடுத்துகொள்வோம், ஜாதகியின் 1,3,5,9,11ம் வீடுகள் லாப ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவதும், லாப ஸ்தானம் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு 4ம் பாவகமாக வருவதும், லாப ஸ்தானம் சர நீர் தத்துவ ராசியான கடகமாக அமைவதும் ஜாதகிக்கு தர வேண்டிய யோக பலன்களை 100% தங்கு தடையின்றி பூரணமாக வாரி வழங்கும். மேலும் லாப ஸ்தானம் சர ராசியாக இருப்பதால் தான் தரும் பலன்களை விரைந்து தரும், யோக பலன்களின் அளவு என்பது 100% என்ற விகிதத்தில் இருக்கும் என்பது கவனிகதக்கது.

1ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது :

ஜாதகிக்கு பரந்த மனப்பான்மையையும், சிறந்த நற்குண நலன்களையும் வாரி வழங்கும், ஜாதகியின் எண்ணங்கள் யாவும் பலிதம் பெரும், முற்போக்கு சிந்தனையும் பகுத்தறியும் சிறந்த அறிவாற்றலும் இயற்கையாக அமைந்திருக்கும், சிறப்பாக வளரும் சூழ்நிலையை தரும், அதிக லாபத்தையும், நீடித்த அதிர்ஷ்டத்தையும் இலக்கின வழியில் இருந்து ஜாதகி பரிபூரணமாக பெறுவார், செல்வசெழிப்பு, பரஸ்பர உதவிகளை பெரும் யோகம், நீடித்த உடல் ஆரோக்கியம், வருமுன் உணரும் மனோசக்தி, வருமுன் காக்கும் சமயோசித அறிவாற்றல், மனதிற்கு உகந்த மணவாழ்க்கை பெரும் யோகம், சிறந்த புத்திர சந்தான பாக்கியம், தனது குழந்தைகள் வழியில் இருந்து யோக வாழ்க்கை என ஜாதகி இலக்கின அமைப்பில் இருந்து சகலயோக பலன்களை அனுபவிக்கும் தன்மையை தரும்.

3ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது :

தனது பெயரில் செய்யும் வியாபாரம் அல்லது தொழில் விரைவான முன்னேற்றத்தை வாரி வழங்கும், நிறைய வண்டி வாகனங்களுக்கு உரிமியாளர் ஆகும் யோகம் உண்டாகும், விவசாய பண்ணை விவிவசாய தொழில்களில் அபரிவிதமான வளர்ச்சியை பெரும் யோகம் உண்டாகும், நிறைய சொத்து சுக சேர்க்கை ஜாதகி வளரும் காலத்தில் அதிர்ஷ்ட வசமாக கிடைக்கும், புதையல் அல்லது அதற்க்கு இணையான பொருள் வரவை தரும், தர்ம சிந்தனையையும் நேர்மையான குணத்தையும், அதி தைரியமான மனவலிமையையும் வாரி வழங்கும், நிர்வாகம் மற்றும் தகவல் தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்கும் யோகத்தை தரும், திருமண வாழ்க்கைக்கு பிறகு அளவில்லா சொத்து சேர்க்கையை வாரி வழங்கும், விளையாட்டு வீரராக உலக புகழ் பெரும் யோகம் உண்டாகும்.

5ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது :

லாட்டரியில் யோகம் , குதிரை பந்தயம் மற்றும் அனைத்து போட்டி பந்தையங்களில் மிகப்பெரிய வெற்றிகளை வாரி குவிக்கும், தனது புத்திசாலிதனத்தல் எப்பொழுதும் ஆதாயம் கிடைக்கும், எப்பொழுதும் மகிழ்ச்சியான வாழ்க்கையே தரும், குடும்பத்தில் நீடித்த மகிழ்ச்சியும் அதிர்ஷ்டமும் தொடர்ந்து வந்தவண்ணமே இருக்கும், இறை அருளின் பரிபூரண நல்லாசிகள் ஜாதகிக்கு வாழ்நாள் முழுவதும் நிறைந்து அருள் புரியும், தொழில் ரீதியான வெற்றிகள் ஜாதகிக்கு வெகு எளிதாக் கிடைக்கும், மக்கள் ஆதரவும், சமுக அந்தஸ்தும் நீடித்து நிலைத்து நிற்கும், கல்வி கேள்விகளிலும், கலைத்துறையிலும் பிரகாசிக்கும் யோகத்தை சிறு வயது முதற்கொண்டே ஜாதகி இயற்கையாக பெற்று இருப்பார்.

9ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது :

ஆன்மீக வெற்றி, ஆன்மீக பெரியவர்களின் அருளாசி சிறு வயதிலேயே கிடைக்கும் பாக்கியம் உண்டாகும், பல புண்ணிய திருத்தலங்களுக்கு சென்றுவரும் யோகம் உண்டாகும், ஜாதகி சொல்லும் வார்த்தைகள் யாவும் பலிதம் பெரும், பல நாடுகளுக்கு சுற்று பயணம் சென்றுவரும் யோகம் உண்டாகும், இதனால் மிகுந்த லாபம் கிடைக்கும், வெளிநாட்டில் படிக்கும் யோகம் உண்டாகும், ஆராய்ச்சி கல்வியில் சிறந்து விளங்கும் யோகம் உண்டு, ஜாதகி நினைக்கும் விஷயங்கள்  மற்றும் பொருட்கள் யாவும், எளிதில் கிடைக்கும்.

11ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது :

ஜாதக அமைப்பிலேயே சிறந்த விஷயமாகவும், அதிர்ஷ்டங்களை அள்ளித்தரும் அமைப்பாகவும் இதை கருதலாம், ஜாதகியின் சிந்தனையும் செயல்பாடுகளும் அனைவரும் பாராட்டும் வண்ணம் அமையும், படிப்படியான அதிரடி வளர்ச்சியை வாரி வழங்கும், அனைத்திலும் லாபம் கிடைக்கும், ஜாதகிக்கு சிறந்த  நல்ல குணங்களை வழங்குவதில், இந்த 11ம் பாவகத்திர்க்கு அதிக  பங்கு உண்டு, வியாபர விருத்தி, நீடித்த அதிர்ஷ்டம், சுப விரைய செலவுகளை தரும், ஒருவரின் ஜாதகத்தில் 11ம் வீடு ஜாதகர் எதற்காக பிறந்தார் என்பதை உணர்த்தும் பாவகமாக இருப்பதால், இங்கே ஜாதகி அதிர்ஷ்டமும் சகல யோகத்தையும் அனுபவிக்க பிறந்தவர் என்பது தெளிவாகிறது, மேலும் இந்த லாப ஸ்தானம் ஜாதகிக்கு கால புருஷ தத்துவ அமைப்பிற்கு சுக ஸ்தானமான கடக ராசியாக அமைவது 100% யோக பலன்களை வாரி வழங்குகிறது.

குறிப்பு :

ஜாதகிக்கு தற்பொழுது நடைபெறும் திசையும், எதிர்வரும் திசைகளும் மேற்கண்ட லாப ஸ்தான பலன்களையே நடைமுறைக்கு கொண்டுவருவது ராஜயோக பலன்களை பரிபூரணமாக அனுபவிக்கும் தன்மையை தரும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696 

வியாழன், 9 அக்டோபர், 2014

புதிதாக வீடு கட்டும் பொழுது ஜெனன லக்கினத்தை வைத்து வீட்டிற்கு வாயிற்படி வைப்பதா ? ஜெனன ராசியை வைத்து வீட்டிற்கு வாயிற்படி வைப்பதா ?





இதற்கு கண்ணதாசனின் வரிகள் பொருத்தமானதாக இருக்கும்,
"இருக்கும் இடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சௌக்கியமே" என்ற வார்த்தைக்கு இணங்க சுய ஜாதக அமைப்பின் படி லக்கினத்தை அடிப்படையாக கொண்டு வீடு நிலம், சொத்து சுகம், வண்டி வாகனம் அமைப்பை குறிக்கும் நான்காம் பாவக வலிமை உணர்ந்தும், காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு நான்காம் பாவகமான கடக ராசியின் நிலை உணர்ந்தும் ஜாதக ரீதியாக நன்மை தரும் திசை அமைப்பை தெரிந்துகொண்டு வீட்டிற்கு வாயிற்படி அமைப்பது சால சிறந்தது, ஜோதிடதீபம் இதை முந்தைய பதிவிலேயே தெளிவாக அறிவுறித்தி இருக்கிறது, இருப்பினும் இந்த பதிவில் விரிவாக காண்போம் அன்பர்களே!

" வீடு " இது ஒருவருக்கு சரியாக அமைந்துவிட்டால் இதற்க்கு பிறகு வரும் நிலம்,சொத்து,சுகம்,வண்டி,வாகனம் மற்றும் தொழில் ஆகியவை ஜாதகருக்கு சரியாக அமைந்துவிடும், புதிதாக வீடு கட்டுவதற்கு முன் அல்லது வாங்குவதற்கு முன்  ஒருவரின் ஜாதகத்தில் நாம் கவனத்தில் எடுத்துகொள்ளவேண்டிய பாவகம் பூர்வ புண்ணியம் எனும் 5ம் பாவகம், ஏனெனில் ஒரு ஜாதகர் சிறப்பாக ஜீவித்து இருக்க உகந்த இடத்தை தெள்ள தெளிவாக உணர்த்துவது, இந்த பூர்வ புண்ணியம் என்றால் அது மிகையில்லை, உதாரணமாக ஒருவரின் சுய ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் எனும் 5ம் பாவகம் நல்ல நிலையில் இருப்பின், ஜாதகர் தனது பூர்வீகம் சார்ந்த பகுதிகளில் ( அதாவது 100 கிலோமீட்டர் சுற்றளவில் ) வீடு கட்டவோ அல்லது வாங்கவோ முயற்ச்சிக்கலாம், அப்படி கட்டும் அல்லது வாங்கும் வீட்டில் ஜாதகர் ஜீவிக்கும் பொழுது சகல செல்வங்களும் நிறைந்து நிற்கும்.

ஒரு வேலை சுய ஜாதகத்தில் 5ம் பாவகம் பாதிக்கபட்டு இருப்பின் ஜாதகர், தனது பூர்வீகத்தின் அப்பால் ( அதாவது 100 கிலோமீட்டருக்கு அப்பால் ) சென்று ஜீவித்து இருப்பதே சகல நலன்களையும் வாரி வழங்கும், இந்த விஷயம் குடும்ப தலைவன் ஒருவரின் ஜாதகத்தையே கட்டுபடுத்தும் என்பதால், அந்த குடும்ப தலைவனின் ஜாதகத்தை அடிப்படையாக கொண்டு நிர்ணயம் செய்வதே சால சிறந்தது, எனவே முதலில் ஒரு ஜாதகர் எங்கு வசிப்பது என்ற விஷயத்தை முடிவு செய்துகொள்வது சிறந்தது.

இதற்க்கு பிறகு குடும்ப தலைவன் என்ற பொறுப்பில் இருக்கும் ஜாதகரின் லக்கினத்தை அடிப்படையாக கொண்டு, அவரின் நான்காம் பாவக வலிமையை அறிந்துகொள்வதும், அவரின் ஜாதகத்தில் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 4ம் பாவகமான கடகம் எப்படி பட்ட நிலையில் இருக்கின்றது என்பதை கருத்தில் கொள்வதும், ஜாதகர் குறிப்பிட்ட ஊரில் எந்த திக்கில் குடியிருக்கலாம் என்பதை நிர்ணயம் செய்துவிடலாம், இதற்க்கு அடுத்து குறிப்பிட்ட ஜாதகருக்கு நான்காம் வீடு தொடர்பு பெரும் பாவக அமைப்பை கருத்தில் கொண்டு, ஜாதகருக்கு அமையும் வீட்டின் தலைவாயிற்படியின் திசையை மிக துல்லியமாக அறிந்து கொள்ள முடியும்.

இதன் அடிப்படையில் ஒருவரின் ஜாதகத்தில் நான்காம் வீடு லக்கினம் எனும் முதல் பாவகத்துடன் தொடர்பு பெரும் பொழுது, ஜாதகர் தனது வீட்டின்  வாயிப்படியை கிழக்கு முகமாக அமைத்து கொள்வது சகல நிலைகளில் இருந்தும் முன்னேற்றத்தை வரி வழங்கும், இதை போன்றே ஜாதகர் செய்யும் தொழில் அமைப்புகளையும் நிறுவனங்களையும் கிழக்கு திசையில் வாயிர்ப்படி அமைந்து கொள்வது அபரிவிதமான வளர்ச்சியை வாரி வழங்கிவிடும், அடிப்படையில் ஒருவர் குடியிருக்கும் வீட்டின் அமைப்பில் இருந்தே முன்னேற்றமும், பொருளாதார வளர்ச்சியும், உடல் நலனும், உறவுகள் ஆதரவும் கிடைக்க பெறுவதால், வீடு என்ற ஒரு விஷயத்தில் ஜாதகர் சரியான முடிவு எடுத்து அமைத்துகொண்டால், ஜாதகரின் முன்னேற்றமும் அபரிவிதமான வளர்ச்சியையும் எவராலும் தடுத்து நிறுத்த இயலாது அன்பர்களே !

சுய ஜாதகத்தில் ஒருவருக்கு நான்காம் வீடு சுக ஸ்தானமான நான்காம் பாவகத்துடனே சம்பந்தம் பெறுகிறது என்று வைத்து கொண்டால், ஜாதகருக்கு ஏற்ற வாயிற்படி வடக்கு திசை என்பதை உறுதி செய்துவிடலாம், எனவே இந்த அமைப்பை பெற்ற ஜாதகரின் வீட்டின் வாயிபடியும் சரி, தொழில் நிறுவனத்தின் வாயிற்படியும் சரி வடக்கு திசையில் அமைவது சால சிறந்தது, ஜாதகரின் அதிரடியான முன்னேற்றத்தை எவராலும் தடுத்து நிறுத்த இயலாது, மேலும் பொருளாதார வளர்ச்சியும், சொத்து சுக சேர்க்கையும் மிகவும் அபரிவிதமாக அமைந்துவிடும் என்பது உறுதி, ஆக நான்காம் வீடு சுக ஸ்தானமான  நான்காம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றால் ஜாதகர் வடக்கு திசை வாயிற்படியை தனது வீட்டிற்கு அமைத்து கொள்வது சால சிறந்தது ஜாதகரின் முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக இது அமையும்.

சுய ஜாதகத்தில் ஒருவருக்கு நான்காம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுகிறது என்று வைத்துகொண்டால், ஜாதகருக்கு ஏற்ற வாயிற்படி மேற்கு திசை என்பதை உறுதி செய்துவிடலாம், மேலும் ஜாதகரின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் என்பது தனது வாழ்க்கை துணை வழியில் இருந்தும், பொதுமக்களின் ஆதரவில் இருந்து கிடைக்கும் கூடுதல் யோகம் என்பதை மறுப்பதற்கில்லை, இந்த அமைப்பை பெற்ற ஜாதகர் அனைவரும் தனது திருமணதிற்கு பிறகு சில காலங்களிலேயே வீடு கட்டும் யோகத்தையோ, வீடு வாங்கும் யோகத்தையோ, பெறுகிறார்கள் என்பது கவனிக்க தக்கது, இவர்களுக்கு மேற்கு திசையில் வாயிற்படி கொண்ட தொழில் நிறுவனங்கள் இருந்து அபரிவிதமான வெற்றிகள் குவிகிறது என்பதை கவனிக்க வேண்டிய விஷயமாக ஜோதிடதீபம் கருதுகிறது.

சுய ஜாதகத்தில் ஒருவருக்கு நான்காம் வீடு ஜீவன ஸ்தானமான 10 ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுகிறது என்று வைத்துகொண்டால், ஜாதகருக்கு ஏற்ற வாயிற்படி தெற்கு  திசை என்பதை உறுதி செய்துவிடலாம், மேலும் ஜாதகரின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் என்பது தான் செய்யும் தொழில் அமைப்புகளில் இருந்து அபரிவிதமாக பெறுவார், மேலும் ஜாதகரின் வீடு மற்றும் தொழில் நிறுவனங்கள் தெற்கு திசை வாயிற்படி கொண்டதாக அமைத்து கொள்வது சால சிறந்தது, மேற்கண்ட அமைப்பை பெரும் ஜாதகர்கள் தனது குழந்தை பருவத்திலேயே சரியான திசையில் வாயிற்படி கொண்ட வீடுகளில் ஜீவனம் செய்யும் யோகத்தை தந்துவிடுகிறது, அதாவது தனது முன்னோர்களின் வீடு மற்றும் சொத்து ஜாதகருக்கு, இயற்கையாக அமைந்துவிடுகிறது, எனவே ஜாதகருக்கு ஜீவனம் செய்ய வீடு இல்லை என்ற நிலை ஏற்படுவதில்லை, மேலும் ஜாதகரின் முன்னேற்றமும் வளர்ச்சியும் எவ்விதமும் பாதிக்க  படுவதில்லை.

 எனவே சுய ஜாதகத்தில் லக்கினத்தை அடிப்படையாக கொண்டு தனது வீட்டின் வாயிற்படியை நிர்ணயம் செய்வதே சகல நிலைகளில் இருந்தும் முன்னேற்றம் தரும் , தன்னிறைவான பொருளாதார வளர்ச்சி, சுய முன்னேற்றம் மற்றும் சுக வாழ்க்கைக்கு உறுதியளிக்கும், தனது லக்கினத்தின் அடிப்படையில் நான்காம் பாவக தொடர்பு அறிந்து, தனது வீட்டிற்கு வாயிற்படி அமைக்கும் பொழுது ஜாதகர் 16 வகை செல்வங்களையும் பரிபூரணமாக சம்பந்தபட்ட ஜாதகர் அல்லது குடும்ப தலைவர் பெறுவார் என்பது உறுதி.

ஆக சுய ஜாதகத்தில் நான்காம் வீடு லக்கினத்துடன் தொடர்பு பெற்றால் ஜாதகர் கிழக்கு  திசை வாயிற்படியும், நான்காம் வீடு சுக ஸ்தானத்துடன் தொடர்பு பெற்றால் வடக்கு திசை வாயிற்படியும், நான்காம் வீடு களத்திர ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்றால் மேற்கு திசை வாயிற்படியும், நான்காம் வீடு ஜீவன ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்றால் தெற்கு திசை வாயிற்படியும் கொண்ட வீடுகளில் குடியிருப்பதும், வீடு கட்டி குடியிருப்பதும் சம்பந்தபட்ட ஜாதகருக்கு சகல விதங்களில் இருந்தும் நன்மை தரும், ஒருவரின் ராசியை வைத்து வீட்டின் வாயிற்படியை நிர்ணயம் செய்வது சரியான யோக பலன்களை தராது என்பதே ஜோதிடதீபத்தின் அறிவுரை.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

புதன், 8 அக்டோபர், 2014

ராகு கேது சுய ஜாதகத்தில் லக்கினம் மற்றும் களத்திர பாவகத்தில் வலிமை பெற்று அமரும் பொழுது ஜாதகர் பெரும் யோக வாழ்க்கை.



ஒருவரின் சுய ஜாதகத்தில் லக்கினம் எனும் முதல் பாவகத்தில், சாய கிரகங்களான ராகு கேது அமர்ந்தால்,  ராகு கேது தோஷம் பெற்ற ஜாதகம் என்றும், சர்ப்ப தோஷம் உள்ள ஜாதகம் என்றும், நாக தோஷம் உள்ள ஜாதகம் என்றும் பாரம்பரிய ஜோதிடத்தில் வர்ணிக்க படுவதுண்டு, மேலும் இந்த அமைப்பை பெற்ற ஜாதகர்கள் வாழ்க்கையில் அதிக இன்னல்களையும், துன்பங்களையும் எதிர்கொள்ள வேண்டி வரும் என்று சொல்வதுண்டு.

குறிப்பாக ஜாதகர் அடிப்படையில் நல்ல வளரும் சூழ்நிலை அமையாது என்றும், சிறந்த கல்வி கிடைக்காது கல்வியில் தடை உண்டாகும், வேலை வாய்ப்பில் சிரமம், திருமண தடை, புத்திர பாக்கியத்தில் தடை என சகல நிலைகளிலும் பாதிக்க படுவார்கள் என்றும், இந்த அமைப்பை கால சர்ப்ப தோஷ நிலை என்றும், பல ஜோதிடர்களால் அறிவுறுத்த படுவதுண்டு, இதற்க்கு ஒரு படி மேல் சென்று ராகு கேது தோஷம் உள்ள ஜாதக அமைப்பை பெற்றவர்கள், மிகுந்த சிரமத்திர்க்கே ஆளாக வேண்டி வரும் என்று சொல்வதும் உண்டு, இதை பற்றிய உண்மை விளக்கத்தை இந்த பதிவில் ஆய்வுக்கு எடுத்து கொள்வோம் அன்பர்களே !



மேற்கண்ட கும்ப இலக்கின ஜாதகருக்கு லக்கினத்தில் ராகு பகவானும், களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகத்தில் கேது பகவனும் அமர்ந்து ஜாதகருக்கு வழங்கும் பலன்களை ஆய்வுக்கு எடுத்து கொள்வோம் அன்பர்களே !

லக்கினத்தில் அமர்ந்த ராகு பகவான் தரும் பலன்கள் :

சாய கிரகங்கள் ஆனா ராகு கேது சுய ஜாதகத்தில் எந்த பாவகத்தில் அமர்ந்தாலும் அந்த பாவகத்தின் தன்மையை தானே ஏற்று நடத்த ஆரம்பித்து விடுவார்கள் என்பது பொது விதி, மேலும்  குறிப்பிட்ட பாவகதில் அமர்ந்த கிரகங்களுக்கோ, பார்த்த கிரகங்களுக்கோ தனிப்பட்ட வலிமை கிடையாது என்பது அவர்கள் தரும் யோக அவயோக பலன்களை சாய கிரகங்களே ஏற்று நடத்துவார்கள் என்பதும் கவனிக்க வேண்டிய ஒன்று, இதன் அடிப்படையில் கும்ப லக்கினத்தில் ராகு பகவான் அமர்கிறார், இவர் அமர்ந்த இடத்திற்கு உண்டான பலன்களை தானே முழுவதும் ஏற்று நடத்துகிறார், கும்பம் என்பது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 11ம் வீடாக வருவதும், ஸ்திர காற்று தத்துவமாக அமைவதும், ஜாதகருக்கு அளவில்லா அறிவாற்றலை வாரி வழங்கியது, மேலும் தன்னம்பிக்கை சுய கட்டுபாடு, சிறந்த ஒழுக்கம் மற்றும் பண்பாடு, எதையும் தனது அறிவுக்கு உற்படுத்தி சிந்திக்கும் தன்மை, பரந்த மனப்பக்குவத்தையும் ராகு பகவானால் ஜாதகர் பெறுகிறார்.

லக்கினத்தில் அமர்ந்த ராகு பகவான் ஜாதகருக்கு அடிப்படையில் நல்ல வளரும் சூழ்நிலையையே தருகிறார், நல்ல உடல் ஆரோக்கியம், சிறந்த அறிவு திறன், கல்வியில் சிறந்து விளங்கும் யோகம், தங்கு தடையின்றிய உயர் கல்வி, கற்ற கல்வியின் அடிப்படையில் சுய வேலைவாய்ப்பை பெரும் யோகம், சுய தொழில் மூலம் விருத்தி பெரும் தன்மை, ஒருவருக்கு அடிமைபடாமல் சுயமாக பலருக்கு வேலை வாய்ப்பை நல்கும் தன்மை, தனது செயலும் எடுக்கும் முயற்சியும் தனது சுய முன்னேற்றத்திற்கு பயன்படும் வகையில்  செயல்படும் அமைப்பு, சமயோசித புத்திசாலித்தனம், வருமுன் அறிந்துகொண்டு  எந்த ஒரு பிரச்சனையையும் சாமாளிக்கும் மன தைரியம், எதற்கும்  அஞ்சாத மன நிலை என்ற வகையில் ராகு பகவான் ஜாதகருக்கு யோக பலன்களை வாரி வழங்குகிறார்.

பொதுவாக ராகு லக்கினத்தில் அமர்வது ஒரு கெடுதலான விஷயமாகவே   பாரம்பரிய ஜோதிடம் கருதும், இந்த ஜாதகத்தில் அந்த கருத்து உடைபடுகிறது, உண்மையில் ஜாதகரின் முன்னேற்றத்திற்கும், தடையில்லாத வெற்றிகரமான யோக வாழ்க்கைக்கும் அடிப்படை காரணமாக இருப்பதே ராகு  பகவான்தான் என்றால் அது மிகையில்லை, ஜாதகர் எதற்காக பிறந்தாரோ அதற்க்குண்டான  சந்தர்ப்பங்களையும், வாய்ப்புகளையும் உருவாக்கி கொடுப்பதே சாய கிரகமான ராகு பகவான்தான் என்ற ஒரு விஷயத்தை இங்கு மறுப்பதற்கு வாய்ப்பில்லை, பொதுவாக காற்று தத்துவ அமைப்புடன் ஒன்று சேரும் பொழுது ராகு பகவானின் வீரியம் என்பது மிகுந்து காணப்படும், இது நல்ல நிலையில்  இருந்தால் பல ஆக்கபூர்வமான செயல்களுக்கும், பல புதிய கண்டு பிடிப்புகளுக்கும் சொந்தகாரக உரிமை கொண்டாடும் யோகத்தை தந்துவிடும், இந்த ஜாதகரின் தன்மையும் அப்படி பட்டதே, ஜாதகர் தான் செய்யும் தொழில் அமைப்புகளை பல புதிய நடைமுறைகளை கையாண்டு, பல வெற்றிகளை குவித்துக்கொண்டு இருப்பது கவனிக்க தக்கது.

ஜாதகரின் நிர்வாக திறமையை கண்டும், ஜாதகர் தான் செய்துவரும் தொழில் குறுகிய காலத்தில் பெரும் வெற்றிகளை கண்டும் மூக்கின் மேல் விரல் வைக்காத நபர்களே இல்லை எனலாம், இதற்க்கெல்லாம் ஜாதகர் கற்ற கல்வியும் அதன் வழியில் செயல்படும் ஜாதகரின் அறிவாற்றலும், புதிய யுக்திகளுமே என்றால் அது மிகையில்லை, ஜாதகரின் எண்ணங்கள் யாவும் உயரிய நோக்கம் கொண்டாதாக இருக்கின்றது, இதன் அடிப்படையில் ஜாதகரின் வெற்றிகள் பரிணமிக்கின்றது, ஜாதகர் என்ன நினைக்கிறாரோ அதை தங்கு தடையின்றி பெறுகிறார், தனது எண்ணம் போல் வாழ்க்கையை மிக  எளிதாக எதிர்கொண்டு யோக வாழ்க்கையை பெறுகிறார்.

இங்கே லக்கினத்தில் அமரும் ராகு பகவான் ஜாதகர் எதற்காக பிறந்தார் என்பதின் முழு பலன்களையும் அனுபவிக்க வைக்கிறார், காரணம் ஜாதகரின் லக்கினம் என்பது கால புருஷ தந்துவ  அமைப்பிற்கு 11ம் பாவகமாக வருவதே, ஒருவரின் சுய ஜாதகத்தில் லக்கினத்தில் இருந்து 11ம் பாவகத்தை வைத்து ஜாதகர் எதற்க்காக இந்த பிறவியை பெற்றார் என்பதை 100 % உணரமுடியும், இந்த ஜாதகருக்கு லக்கினம் என்பதே 11ம் பாவகமாக அமைவதாலும், சுய ஜாதகத்தில் 11ம் வீடு அதிர்ஷ்ட ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், கவனிக்க தக்கது, ஜாதகர் தனது வாழ்க்கையை நீடித்த அதிர்ஷ்ட அமைப்பில் வாழ பிறந்தவர்  என்பது உறுதியாகிறது, இதை நடைமுறைக்கு கொண்டு வருபவர் லக்கினத்தில் அமர்ந்த ராகு பகவான் என்பது கூடுதலான விஷயம் ஏனெனில், நவ கிரகங்களில் அதிக வலிமை பெற்றவர் ராகு பகவானே என்பது எவராலும் மறுக்க இயலாது.

இந்த ஜாதகத்தில் ராகு பகவான் 100% விகித யோக பலன்களையே இலக்கின வழியில் இருந்து தங்கு தடையின்றி வாரி வழங்குகிறார்.


ஏழாம் பாவகத்தில் அமர்ந்த கேது பகவான் தரும் பலன்கள் :

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் வீடான சிம்மத்தில் அமர்ந்த கேது பகவான் ஜாதகருக்கு வழங்கு பலன்களை இங்கே சிந்திப்போம் அன்பர்களே!கும்ப லக்கினத்திற்கு கேந்திர பாவகமான 7ம் பாவகத்திர்க்கு, கேந்திர அதிபதியாக சூரியனே பொறுப்பேற்கும் காரணத்தால், இங்கு அமரும் கேது பகவானும் 100% யோக பலன்களையே வழங்கும் தன்மைக்கு ஆளாகிறார், மேலும் சிம்மம் ஸ்திர நெருப்பு தத்துவ ராசியாக வருவதாலும், இங்கு அமரும் சாய கிரகமான கேதுபகவான் தனது கட்டுபாட்டில் 7ம் பாவகத்தை எடுத்து கொள்வதாலும், ஜாதகர் 7ம் பாவக வழியில் இருந்து கேது பகவான் மூலம் 100% யோக பலன்களை அனுபவிக்கும் யோகத்தை பெறுகிறார், குறிப்பாக ஜாதகர் பொதுமக்கள், நண்பர்கள், தொழில் முறை கூட்டாளிகள், பொது ஜன உறவுகள், வியாபாரம், வெளிநாடுகளில் இருந்து வரும் வருமான வாய்ப்புகள் என்ற வகையில்  இருந்து 100% யோக பலன்களை வாரி வழங்கும் அமைப்பிற்கு கேது பகவானே பொறுப்பேற்கிறார்.

இறை அருளின் கருணையை பரிபூரணமாக ஜாதகர் அனுபவிக்கும் யோகத்தை இங்கே கேது பகவான் தங்கு தடையின்றி வாரி வழங்குகிறார், பொதுமக்களிடம்  நர்ப்பெயரும், நன்மதிப்பும் பெறுவதற்கு அடிப்படை காரணமாக கேது பகவானே செயல் புரிகிறார், ஒருவரின் வாழ்க்கை முன்னேற்றத்தை வெகுவாக நிர்ணயம் செய்பவர்கள் அந்த ஜாதகருக்கு அமையும் 1) ஆசிரியர், 2) நண்பர்கள், 3) தொழில் முறை கூட்டாளிகள், 4) வாழ்க்கை துணைவர் என்றால் அது மிகையில்ல, மேற்கண்ட நல்ல நபர்களை ஜாதகரின் வாழ்க்கையில் சரியான காலத்தில், சரியான சந்தர்பத்தில் இணைத்து வைக்கும் வேலையை செவ்வனே செய்பவர் கேது பகவானே என்றால்  அது மிகையில்லை, இதன் காரணமாக ஜாதகர் 7ம் பாவக வழியில் இருந்து 100% யோக பலன்களையே அனுபவிக்கிறார்.

ஒருவர் தான் செய்யும் எந்த ஒரு தொழில் என்றாலும் சரி, வியாபாரம் என்றாலும் சரி தங்கு தடையின்றிய வெற்றி வாய்ப்பை குறிக்கும் 7ம் பாவகம் சுய ஜாதகத்தில்  வலிமை பெறுவது அவசியம், ஏனெனில் நம்மில் பலருக்கு பல தனிப்பட்ட திறமைகள் இருக்கும், புதிய சிந்தனைகள் இருக்கும், இவை யாவும் வெளி உலகத்திற்கு தெரிய வேண்டும் எனில் சுய ஜாதகத்தில் 7ம் பாவகம் மிகவும் வலிமை பெற்று இருக்க வேண்டும், அப்படி வலிமை பெரும் பொழுதே ஜாதகரின் தனி திறமைகளும், புதிய செயல்பாடுகளையும் உலகம் கூர்ந்து கவனிக்கும், இந்த அமைப்பு சுய ஜாதகத்தில் இல்லை எனில் ஜாதகரின்  திறமைகள் யாவும் குடத்தில் இட்ட விளக்குபோல் பிரகசிக்காமல் போய்விடும், இந்த ஜாதகத்தில் கேதுபகவான் 7ம் பாவகத்தில் அமர்ந்து, எவ்வித பாகுபாடும் இன்றி அனைவராலும் ஜாதகர் கவனிக்க படுகிறார், ஜாதகரின்  வியாபர அமைப்பிற்கு முழு அங்கீகாரம் கிடைக்கிறது, இதன் காரணமாக ஜாதகரின் திறமைகள் யாவும் உலகம் முழுவதும் கவனிக்கப்படும் யோகத்தை தருகிறது.

எனவே அன்பர்களே சுய ஜாதகத்தில் லக்கினத்தில் ராகு கேது அமர்வதை கண்டு அது தோஷம் தரும் என்று சொல்லும் வார்த்தையை நம்பி, தங்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு தாங்களே தடை கற்களாக மாறி விடாதிர்கள், பொதுவாக லக்கினத்தில் அமரும் சாய கிரகங்களான ராகு கேது இருவருமே லக்கினத்திற்கு 100% யோகத்தையே வாரி வழங்குவார்கள்,  நேரெதிராக 7ம் பாவகத்தில் அமரும் சாய கிரகங்களான ராகு கேதுவின், தன்மையை மட்டும் நாம் கருத்தில் கொண்டு நன்மையை தருகின்றனவா ? தீமையை தருகின்றனவா ? என்று தெரிந்துகொண்டால் போதும், சர்ப்ப தோஷம், நாக தோஷம் என்று பயம் கொள்ள தேவையில்லை, நமது வாழ்க்கையை சிறப்பாக அமைத்து தருவதில் சாய கிரகங்களான ராகு கேதுவின் உண்மை வலிமையை நாம் சிறப்பாக உணர்ந்து கொள்ள முடியும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

தனக்கு அமையும் வாழ்க்கை துணை பற்றி ( கணவன், மனைவி ) சுய ஜாதகப்படி அறிந்துகொள்வது எப்படி ?



ஒருவரின் சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் எனும் ஏழாம் பாவகமும், கலபுருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் வீடான துலாம் ராசியும் சுய ஜாதக ரீதியாக எவ்வித வலிமை பெற்று இருக்கின்றது என்பதை பொறுத்தே ஒவ்வொருவரின் வாழ்க்கை துணை அமைப்பும் நிர்ணயம் செய்யபடுகிறது, சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் வலிமை பெற்று அமைவது ஜாதகருக்கு சிறந்த வாழ்க்கை துணையை நிச்சயம் அமைத்து தரும், மேலும் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் வீடான துலாம் ராசி சுய ஜாதகத்தில் வலிமை பெற்று அமைவது சிறந்த அந்தஸ்து, மற்றும் அழகு அறிவு நிறைந்த வாழ்க்கை துணையை நிச்சயம் அமைத்து தரும், இத்துடன் குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகம் வலிமை பெற்று அமைவதும் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 2ம் வீடான ரிஷபம் வலிமை பெற்று இருப்பது, சம்பந்தபட்ட ஜாதகருக்கு சரியான வயதில்
( அதாவது இளமையில் திருமணம் ) திருமண வாழ்க்கையை அமைத்து தந்துவிடும்.

ஒருவருக்கு வரும் வாழ்க்கை துணையை பற்றி நாம் தெளிவாக தெரிந்துகொள்ள சம்பந்தபட்ட ஜாதகரின் சுய ஜாதகத்தில், லக்கினத்தின் அடிப்படையில் 2,7ம் பாவகங்களின் வலிமை மற்றும் அவரது ஜாதகத்தில் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் தன்மையை வைத்து தெளிவாக அறிந்துகொள்ள முடியும், சுய ஜாதகத்தில் 2 மற்றும் 7ம் பாவகங்களுக்கு அதிபதி, மற்றும் 2 மற்றும் 7ம் பாவகங்கள் தொடர்பு பெரும் பாவகங்கள் எது என்பதை துல்லியமாக ஜாதக கணிதம் செய்யும் பொழுது, ஜாதகருக்கு வரும் வாழ்க்கை துணையின் அமைப்பை பற்றியும், ஜாதகர் வசிக்கு இடத்தில் இருந்து எவ்வளவு ? தொலைவில் இருந்து வருவார் என்பது பற்றியும், வாழ்க்கை துணை குடியிருக்கும் வீட்டின் வாயிற்படி அமைப்பை பற்றியும், ஜாதகர் அவரை காணும் பொழுது அவர் உடுத்தி இருக்கும் துணியின் வண்ணம் பற்றியும் தெளிவாக கூற இயலும், இதை உதாரண ஜாதகம் கொண்டு காண்பது மிக எளிதாக புரியும்.



மேற்கண்ட சிம்ம இலக்கின ஜாதகருக்கு குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் பாவகமும், களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகமும் வலிமை பெற்றே அமைந்திருக்கிறது, மேலும் ரிஷபம் ஜாதகருக்கு ஜீவன பாவகமாகவும், துலாம் ஜாதகருக்கு வீரிய ஸ்தானமாகவும் அமைந்து மிகவும் நல்ல நிலையிலேயே  இருப்பதால், ஜாதகருக்கு சரியாக 24 வது வயதில் திருமணம் நடைபெற்றது, 7ம் பாவகதிர்க்கு அதிபதியாக சனி பகவான் வருவதாலும், 7ம் பாவகம் ஸ்திர கும்ப ராசியாக வருவதாலும் இவருக்கு அமைந்த வாழ்க்கை துணை மேற்கு திசையிலும், 70 கிலோமீட்டர் தொலைவிற்குள் வாழ்க்கை துணையின் வீடு அமைந்து இருந்தது, ஜாதகிகை ஜாதகர் காணும் பொழுது சாம்பல் நிறம் கொண்ட ஆடையை அணிந்து இருந்தார்.

இவரது ஜாதகத்தில் ரிஷபமும்,துலாமும் நல்ல நிலையில் இருப்பது நல்ல அந்தஸ்தும் அழகும் நிறைந்த வாழ்க்கை துணையை பெற்று தந்தது, 7ம் பாவக அதிபதியாக சனிபகவான் வருவது, ஜாதகரை விட வசதி குறைந்த வீட்டில் திருமணம் செய்துகொள்ள வேண்டிய நிலையை தந்தது, இருப்பினும் 7ம் பாவகம் ஜாதகருக்கு கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 11ம் வீடாக வருவதால், ஜாதகியை திருமணம் செய்த நாள் முதல் ஸ்திரமான அதிர்ஷ்ட வாய்ப்புகளை  ஜாதகர் தொடர்ந்து பெற்ற வண்ணமே இருப்பது குறிப்பிட தக்கது, ஜாதகரின் 7ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது கணவன் மனைவி நல்லுறவுக்கு வழிவகுத்தது, மேலும் 7ம் பாவக அதிபதியாக சனிபகவான் வருவதால் ஒருவருக்கு ஒருவர் விட்டுகொடுக்கும்  மனப்பனமையையும், பொறுமையையும் அனுசரித்து செல்லும் தன்மையையும் தந்தது.

இரண்டாம் பாவக அதிபதியாக ராகு பகவான் வருவாதல் ஜாதகருக்கு அபரிவிதமான வருமானத்தை தந்த போதிலும், வாழ்க்கை துணையும் வழியில் இருந்து வரும் வாக்கின் அமைப்பில் சில நேரங்களில் மனம் நோகும்  தன்மையை தந்துகொண்டு இருக்கிறது, ஜாதகியின் பேச்சு மட்டும் ஜாதகரின் வாழ்க்கையில் சில எதிர்பாராத திருப்பங்களை தந்துவிடுகிறது, இருப்பினும் இவை அனைத்தும் முடி, ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு குடும்பம் அமைந்த பிறகே நிலையான தொழிலும், தொழில் வழியில் இருந்து மிகப்பெரிய முன்னேற்றமும்வில் மிகுந்த நன்மையையே ஜாதகருக்கு வழங்குவது சிறப்பான விஷயமாக கருதலாம்.

ஜாதகரின் இரண்டாம் வீடு உண்டானது எனலாம், மேலும் ஜாதகரின் இரண்டாம் வீடு கால புருஷ தத்துவ அமைப்பிற்கு இரண்டாம் பாவகமான ரிஷப ராசியுடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு குடும்ப வாழ்க்கை அமைந்த பிறகே தன்னிச்சையாக வருமானம் பெரும் யோகத்தை தந்தது, பொருளாதார ரீதியான மிகப்பெரிய வெற்றியை ஜாதகருக்கு வாரி வழங்கியது, ஜாதகரின் 2ம் பாவகம் தொடர்பு பெறுவது ஜீவன ஸ்தானம் என்பதாலும், இந்த ஜீவன ஸ்தானம் ஸ்திர மண் தத்துவ அமைப்பாக வருவாதாலும், ஜாதகருக்கு குடும்பம் அமைந்த பிறகே நல்ல தொழில் முன்னேற்றமும் சுய சம்பாத்தியம் மூலம் வீடு வண்டி வாகனம், சொத்து சுக சேர்க்கை ஏற்ப்பட்டது எனாலாம்.

மேற்கண்ட ஜாதக அமைப்பின் படி ஜாதகருக்கு களத்திர ஸ்தானம் வலிமை பெற்றதால் ஜாதகர் வாழ்க்கை துணை அமைப்பில் இருந்து மக்கள் செல்வாக்கும், பெரிய மனிதர்கள் ஆதரவும் கிடைக்க பெற்றார், ஜாதகரின் களத்திர ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 11ம் வீடாக வருவதும் ஸ்திர  காற்று தத்துவ ராசியாக அமைவது ஜாதகருக்கு திருமணதிற்கு பிறகு பிறகு சிறந்த  சிந்தனை திறனையும், அறிவாற்றலையும் ஸ்திரமானதாக வழங்கியது,  மேலும் முற்போக்கு சிந்தனையும் அதிர்ஷ்ட  வாய்ப்புகளையும் ஜாதகருக்கு தொடர்ந்து வழங்கிய வண்ணம் இருப்பது கவனிக்க தக்கது.

ஜாதகருக்கு குடும்ப ஸ்தானம் வலிமை பெற்றதால் ஜாதகருக்கு சிறப்பான குடும்ப வாழ்க்கை அமைந்தது, ஜாதகரின் வருமான வாய்ப்புகள் அதிகரித்தது, தனது சுய முயற்ச்சியாலும், தனிப்பட்ட முறையிலும் ஜாதகர் வருமானம் பெரும் யோகத்தை தந்தது, ஜாதகரின் 2ம் பாவகமும் அது தொடர்பு பெரும் ஜீவன ஸ்தானமும் உபய மண் தத்துவமாகவும், ஸ்திர மண் தத்துவமாகவும்  அமைவதால் ஜாதகர் பொருளாதார ரீதியான வெற்றிகளை பெற மிகவும் உதவிகரமாக அமைந்தது, இரண்டும் மண் தத்துவம் என்பதால் ஜாதகரின்  உடல் நிலையும் மிகவும் சிறப்பாக ஒத்துழைப்பை நல்கியது.

ஜாதகரின் சுய ஜாதகத்தில் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு இரண்டாம் வீடான ரிஷபமும், 7ம் வீடான துலாமும் சிறப்பான நிலையில் இருப்பதால் சரியான வயதில் திருமணமும், தனது எண்ணத்திற்கு ஏற்ப பொருத்தமான  மனைவியையும் பெற்று தந்தது, இதில் துலாம் ராசி வலிமை பெறுவதால் ஜாதகரின் வெளி வட்டார பழக்க வழக்கங்கள் மிகவும் சிறப்பாக அமைந்தது, பொதுமக்களின் ஆதரவு தன்னிகரற்று அமைந்தது, சர காற்று தத்துவ ராசியான துலாம் ஜாதகருக்கு விரைவான வெற்றிகளை வாரி வழங்கி கொண்டு இருக்கிறது, ஜாதகரின் திருமணதிற்கு பிறகே இந்த நிகழ்வுகள் நடைபெறுகிறது, குறிப்பிட்ட பாவகத்தின் பலன்களை நடைமுறைக்கு வரும் பொழுது அதன் வழியில் இருந்து வரும் யோக பலன்கள், தங்கு தடையின்றி 100 சதவிகிதம் ஜாதகர் பெறுவார் என்பது இதன் மூலம் உறுதியாகிறது.

மேற்கண்ட முறையில் ஒவ்வொரு ஜாதகரின் வாழ்க்கை துணையை பற்றியும், சுய ஜாதகத்தின் அடிப்படையில் நாம் தெள்ள தெளிவாக அறிந்துகொள்ள இயலும் என்பது எவராலும் மறுக்க இயலாத உண்மை, எனவே சுய ஜாதகம் இருப்பின், ஜாதகருக்கு வரும் வாழ்க்கை துணையை பற்றி  மிக சரியாக ஜோதிட கணிதம் கொண்டு நிர்ணயம் செய்துவிட நிச்சயம் முடியும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696 


ஜீவன ஸ்தானம் எனும் பத்தாம் பாவகம் வழங்கும் தொழில் மேன்மை - மேஷ லக்கினம் பாகம் 3




 கால புருஷ தத்துவ அமைப்பிற்கு முதல் ராசியான மேஷ ராசியை லக்கினமாக கொண்ட அன்பர்களுக்கு, ஜீவன ஸ்தானம் வலிமை பெற்று அமரும் பொழுது தரும் யோக பலன்களையும், வலிமை அற்று அமரும் பொழுது தரும் அவயோக பலன்களை பற்றியும் இந்த பதிவில் சிந்திப்போம் அன்பர்களே! மேஷ லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு மகரம் ஜீவன ஸ்தானம் எனும் பத்தாம் பாவகமாக அமையும், இந்த மகரம் மேஷ லக்கினதிர்க்கும் சரி, கால புருஷ தத்துவ அமைப்பிற்கும் சரி 10ம் வீடாகவே அமைகிறது, மேலும் சர மண் தத்துவ அமைப்பில் இயங்குகிறது, இந்த மகரம் மேஷ லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு 6,8,11,12ம் பாவகங்களுடன் தொடர்பு பெறாமல் இருந்தால் ஜாதகரின் ஜீவன மேன்மை மிகவும் சிறப்பாக இருக்கும் குறிப்பாக பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறாமல் இருப்பது மிகுந்த யோகத்தை தரும்.


 மேஷ லக்கினத்திற்கு ஜீவன ஸ்தானம் தொடர்பு பெரும் பாவகங்களும், ஜாதகர் பெரும் நன்மைகளும்:

 ஜீவன ஸ்தானம் லக்கினத்துடன் தொடர்பு பெரும் பொழுது :

 ஜாதகர் சிறந்த நிர்வாக திறமை கொண்டவராக காணப்படுவார், அரசு மற்றும் காவல் ராணுவ துறையில் கொடிகட்டி பறக்கும் யோகம் உண்டாகும், குறிப்பாக அரசு நிர்வாகம் சார்ந்த உயர் பதவிகளான IAS ,IPS தேர்வுகளில் சிறந்த தேர்ச்சியை பெரும் யோகத்தை தரும், அரசு துறை சார்ந்த நிர்வாக அமைப்புகளில் சிறப்பாக பணிபுரியும் தன்மையை தரும், தன்னம்பிக்கையும், சுய கட்டுபாடும் கொண்டவர்களாக இருப்பார்கள், நேர்மைக்கு பெயர்போனவர்கள், ஜீவன ஸ்தானமான மகரம் லக்கினத்துடன் தொடர்பு பெரும் பொழுது ஜாதகருக்கு அளவில்லா தைரியத்தையும், நேர்மையாக வாழும் யோகத்தையும் தந்துவிடும், இதற்க்கு முக்கிய காரணமாக இந்த மகர ராசிக்கு அதிபதியான சனியும், மேஷ ராசிக்கு அதிபதியான சனியும் காரணமாக இருக்கின்றனர், பொதுவாக செவ்வாய் சனி சேர்க்கை பெறுவதை, பாரம்பரிய ஜோதிடத்தில் தீய பல்னகளை தரும் என்று வர்ணிக்க படுவதுண்டு, இதில் யாருக்கு தீய பலன்களை வழங்கும் என்பதை கருத்தில் கொள்வது நலம், நேர்மைக்கும் உண்மைக்கும் புறம்பாக செயல்படும் அனைவருக்கும், மேற்கண்ட அமைப்பு தீய பலன்களையே வழங்கும், உண்மைக்கும் நேர்மைக்கும் பாடுபடும் அன்பர்களுக்கு மிகுந்த யோகத்தையே வாரி வழங்கும்.

 எனவே சுய ஜாதகத்தில் இந்த சனி செவ்வாய் சேர்க்கை பெற்ற அன்பர்கள் பலர் உண்மைக்கும் நேர்மைக்கும் புறம்பாக செயல் படாத காரணத்தால், மற்றவர்கள் இவர்களை புறக்கணிப்பதும், இவர்கள் வாழ தெரியாதவர்கள் என்று புகார்  சொல்வதும் இயற்கையான ஒன்றே, ஆக மேஷ லக்கினத்தை சார்ந்தவர்கள் ஜீவன ஸ்தானம் லக்கினத்துடன் தொடர்பு பெரும் பொழுது, மிகவும் நேர்மையாகவும், உண்மையாகவும் ஜீவன வாழ்க்கையை மேற்கொள்வார்கள், எனவேதான் இவர்களால் சட்டம் ஒழுங்கை காப்பாற்றும் அரசியல், காவல் துறை, ராணுவ துறையில் சிறந்த பதவிகளை பெற இயலுகிறது, மேலும் கட்டுமான துறையிலும், பொறியியல் துறையிலும், நிலம் சம்பந்தபட்ட  ரியல் எஸ்டேட் துறையிலும் தன்னிகரற்று விளங்கும் யோகத்தை தருகிறது. ஆக மேஷ லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு ஜீவன ஸ்தானம் எனும் 10ம் வீடு இலக்கின பாவகத்துடன் தொடர்பு பெறுவது 100% யோக வாழ்க்கையை வாரி வழங்கும்.

 குறிப்பு : ( சுயமாக பெரிய முதலீடுகளை செய்து மிகப்பெரிய தொழில்களை செய்யும் யோகம் பெற்றவர்கள் ) 


 ஜீவன ஸ்தானம் இரண்டாம் பாவகத்துடன் தொடர்பு பெரும் பொழுது :

 ஜாதகர் சிறந்த கலை நுணுக்கமும், ஆய கலைகள் 64 ல் சிறந்து விளங்கும் தனித்தன்மை பெற்றவராக காணப்படுவார், குறிப்பாக கட்டிட கலையில் சிறந்து விளங்கும்  யோகத்தை தரும் மேலும், பணம் சார்ந்த துறைகளிலும், வணிகம் சார்ந்த துறைகளிலும் சிறந்து விளங்கும் அறிவாற்றலை தரும், ஒரு நாட்டின் பொருளாதரத்தை மிகவும் சிறப்பாக நடத்தி செல்லும் தனி திறன் பெற்றவர்கள் குறிப்பாக சொல்ல வேண்டும் எனில், வியாபாரம், வணிகம், ஏற்றுமதி இறக்குமதி, அந்நிய செலவாணி, வங்கி துறை போன்ற அமைப்புகளில் முக்கிய பங்காற்றும் அன்பர்கள் இவர்களே, மிகசிறந்த சொகுசு வாழ்க்கையை வாழும் யோகத்தை தரும், இதை சார்ந்த தொழில்களில் ஜாதகர் கொடிகட்டி பறக்கும் யோகத்தையும் வாரி வழங்கும், ஜாதக அமைப்பில் 66%  சதவிகித ஜீவன யோகத்தை அனுபவிக்கும் தன்மையை தரும் .

 மனிதன் சொகுசாக வாழும் வாழ்க்கைக்கு தேவையான பொருட்களை தாயரிக்கும் தொழில், விற்பனை தொழில் மற்றும் சேவை தொழில்களில் மிகப்பெரிய வெற்றிய பெரும் அன்பர்கள் அனைவரும் மேற்கண்ட அமைப்பை சார்ந்தவர்களே! ஜீவன ஸ்தானமான மகரம் இரண்டாம் பாவகமான ரிஷபத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது, ஸ்திரமான வெற்றியை வாரி வழங்கி விடுகிறது, மேலும் 2ம் பாவகமான ரிஷப ராசிக்கு அதிபதியாக சுக்கிரன் பொறுப்பேற்று கொள்வதால், ஜாதகரின் சொகுசு வாழ்க்கையை எவராலும் தடுத்து நிறுத்த இயலாத வண்ணம் அமைந்துவிடுகிறது, இந்த அமைப்பு மேஷ லக்கினத்தை சார்ந்தவரகளுக்கு வணிகம், வங்கி, வண்டி வாகனம், வீடு நில புலன்கள், வட்டி, வாடகை தொழில், ஏற்றுமதி இறக்குமதி தொழில்கள், அரசு துறையில் பணம் சார்ந்த விஷயங்களை நிர்வாகிக்கும் அமைப்புகளிலும், கட்டுமான துறையிலும் மிகசிறந்த முன்னேற்றத்தை வாரி வழங்கி விடும், வருமானம் என்பது மேற்கண்ட அமைப்பை சார்ந்தவரகளுக்கு ஒரு பிரச்சனையாகவே இருக்காது, தொடர்ந்து வருமான வாய்ப்புகள் வந்து குவிந்த வண்ணமே இருக்கும் என்பதால் இவர்களுக்கு தொழில் சார்ந்த பிரச்சனைகள் இருக்க வாய்ப்பில்லை, சேமிப்பு என்ற ஒரு விஷயத்தில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும், ஜாதகர் வாழ்க்கையில் ஸ்திரமான சொத்து சுகங்களை பெரும் யோகம் உண்டாகும்.

 குறிப்பு : ( சுயமாக நடுத்தர  முதலீடுகளை செய்து, ஏற்றுமதி இறக்குமதி  தொழில்களை செய்யும் யோகம் பெற்றவர்கள் ) 


ஜீவன ஸ்தானம் மூன்றாம் பாவகத்துடன் தொடர்பு பெரும் பொழுது :

 இவர்களின் அறிவு திறன் என்பது ஜாதகருக்கு பயன்படுவதை விட மற்றவர்களுக்கே  அதிகம் பயன்படும், மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்லும் தொழில்களில் மிகசிறந்த முன்னேற்றத்தை பெரும் யோகம் பெற்றவர்கள், குறிப்பாக மருத்துவம்,சட்டம்,ஜோதிடம் போன்ற துறைகளில் கொடிகட்டி பறக்கும் யோகத்தை தரும், இவர்களின் ஆலோசனை படி நடக்கும்  அன்பர்கள் அனைவரும் 100% நன்மையே பெறுவார்கள், தங்கு தடையின்றி வெற்றி வாய்ப்பை பெற்று தரும், ஜீவன ஸ்தானமான மகரம் உபய காற்று தத்துவமான மிதுனத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு சிறந்த அறிவாற்றலை வாரி வழங்கி விடும், எவருக்கும் புரியாத விஷயங்களும், சூட்சும ரகசியங்களையும் தெளிவாக தெரிந்துகொள்ளும் அறிவு திறன் பெற்றவர்கள், இவர்களின் ஆலோசனை சமுதாயத்திற்கும், அரசு துறைகளுக்கும், குடும்ப வாழ்க்கைக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும், ஏஜென்சி துறையில் இந்த அமைப்பை பெற்றவர்கள் மிகுந்த முன்னேற்றத்தை பெறுவார்கள், கமிஷன் தரகு தொழில்களில் மிகுந்த லாபத்தை பெரும் யோகத்தை தரும்.

 சிறந்த ஆசிரியர்கள், பேராசிரியர்கள் அனைவரும் மேற்கண்ட அமைப்பை பெற்று இருப்பது கவனிக்க தக்கது, சமுதாயத்திற்கு சிறந்த மாணவர்களையும், நல்ல மனிதர்களையும் தரும் வலிமையையும் திறமையும் பெற்றவர்கள், தான் எடுக்கும் முடிவுகளில் இருந்து சிறிதும் பின்வாங்கத மன வலிமையை கொண்டவர்கள், தகவல் மற்றும் தொழில் நுட்பம் சார்ந்த துறைகளில் மிகப்பெரிய வெற்றி வாய்ப்பை பெரும் அன்பர்கள் இவர்களே என்றால் அது மிகையில்லை, புதிய கண்டுபிடிப்புகள், புதிய உபகரணங்களை சரியாக பயன்படுத்தும் அறிவாற்றல் பெற்றவர்கள், புதிய சிந்தனைகள் மூலம் தான் செய்யும் பணியின் சிரமங்களை வெகுவாக குறைத்துகொள்ளும் மதிநுட்பம் நிறைந்தவர்கள், எடுக்கும் எந்த ஒரு முயர்ச்சியிலும் பின்வாங்காமல் வெற்றி வாய்ப்பை பெரும் யோக அமைப்பை பெற்றவர்கள், எந்த ஒரு நிறுவனத்தையும் தனது மதி நுட்பத்தால் குறுகிய காலத்தில் பொருளாதார ரீதியாக வெற்றி பெற வைக்கும் தனித்தன்மை இவர்களுக்கே இறையருள் வாரி வழங்கி இருப்பது கவனிக்க தக்கது, மேற்கண்ட அமைப்பு ஜீவன ரீதியாக 33% சதவிகிதம் யோகத்தை அனுபவிக்கும் தன்மையை தரும் .

 குறிப்பு : ( சுயமாக சிறிய முதலீடுகளை செய்து சிறு வியாபர தொழில்களை செய்யும் யோகம் பெற்றவர்கள் ) 

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன் 
9443355696


புதன், 24 செப்டம்பர், 2014

ஒருவரின் சுய ஜாதகத்தில் யோக அவயோக பலன்களை வழங்குவதும், ஜாதகத்தை ஆளுமை செய்வதும் நவ கிரகங்களா ? பனிரெண்டு பாவகங்களா ?



சுய ஜாதகத்தை ஆளுமை செய்வதும், யோக அவயோக பலன்களை வழங்குவதும் லக்கினம் முதற்கொண்டு 12 பாவகமே இதில் எவ்வித சந்தேகமும் இல்லை அன்பர்களே!

 பொதுவாக பாரம்பரிய ஜோதிடத்தில் பலன் காண வரும் அன்பர்களுக்கு, சுய ஜாதகத்தில் ராசி நிலையில் நவகிரகங்கள் ஆட்சி, உச்சம், நட்பு நிலைகளில் இருக்கும் அமைப்பை பார்த்தவுடன், ஆட்சி, உச்சம், நட்பு நிலைகளில் இருக்கும் கிரகங்கள் யோக பலன்களை வாரி வழங்குவது போலவும், பகை,நீசம் போன்ற நிலைகளில் அமரும் கிரகங்கள் அவயோக பலன்களை தருவது போலவும் ஒரு மாய தோற்றத்தையே ஜோதிடர்கள் உருவாக்கி வைத்துள்ளனர், இது முற்றிலும் தவறான ஒரு அணுகு முறையே.

 மேலும் இந்த கருத்தை நாம் ஆமோதிக்கிறோம் என்று வைத்து கொண்டாலும், ஆட்சி உச்சம் பெற்ற கிரகம் இரட்டையர்கள் ஜாதகத்தில் ஏன்?  மாறுபட்ட பலன்களை தருகிறது, குறிப்பாக இரண்டரை வருடம் துலாத்தில் உச்சம் பெரும் சனிபகவான் அந்த இரண்டரை வருடம் பிறக்கும் அனைவருக்கும் யோக பலன்களையே வாரி வழங்குகிறார்? 

 இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டும் எனில் பிரபஞ்சத்தில் குறிப்பிட்ட நீள்வட்ட பாதையில் சஞ்சாரம் செய்யும் நவகிரகங்கள் பூமியின் மீது வாழும் ஜீவன்களுக்கு எவ்வித பாகுபாடும் இன்றி தனது காந்த அலைகளை செலுத்தி கொண்டு இருக்கிறது, இதில் பாமரன் முதல் பாராளும் அரசன் வரை அனைவருக்கு ஒரேவிதமான காந்த அலைகளின் ஜீவ கலப்பே ஏற்ப்படுகிறது, நீ ஒரு நாட்டின் மன்னன் எனவே உனக்கு நான் தனிப்பட்ட முறையில், அதி சக்தி வாய்ந்த காந்த அலைகளை அனுப்புகிறேன், நீ ஒரு சாதாரண கூலி தொழிலாளி உனக்கு சக்தி வாய்ந்த காந்த அலைகளின் தன்மையை மிக குறைவாக தருகிறேன் என்று எந்த ஒரு கிரகமும் சொல்வதில் என்பதை கருத்தில் கொள்வது நலம் அன்பர்களே!

 இதில் சாய கிரகமான ராகு கேதுவிற்கு மட்டும் விதி விளக்கு உண்டு, எப்படி எனில் தான் அமர்ந்த பாவகத்தை தனது கட்டுப்பட்டிற்குள் கொண்டுவரும் தன்மை 100% ராகு கேது கிரகத்திற்கு உண்டு மற்றபடி ஒருவரின் சுய ஜாதகத்தில் மற்ற கிரகங்கள் தனிப்பட்ட ஆளுமையை செய்ய இயலாது என்பதே ஜோதிடதீபத்தின் கருத்து, தான் செய்த வினை பதிவிற்கு ஏற்ப ஒருவரின் ஜாதகத்தில் பாவகங்கள் வலிமை பெற்றோ, வலிமை இழந்தோ இறை அருளால் நிர்ணயிக்க படுகிறது, இதன் அடிப்படையில் நவகிரகங்கள் தனது காந்த அலைகளை ஜாதகரின் 12 பாவக அமைப்பில் இருந்து நடைமுறை படுத்துகிறது.

இதில் வலிமை பெற்ற பாவகத்தின் அமைப்பில் இருந்து ஜாதகர் யோக பலன்களையும், வலிமை இழந்த பாவகத்தின் அமைப்பில் இருந்து ஜாதகர் அவயோக பலன்களையும் நவகிரகங்களின் திசை புத்தி அந்தரம் மற்றும் சூட்சம அமைப்பில் பெறுகிறார், கோட்சார கிரகங்கள் இயக்க நிலைக்கு ஏற்ப ஜாதகர் யோக அவயோக பலன்களையும் அனுபவிக்கும் தன்மையை தருகிறது.

ஒருவரின் பிறந்த நேரம்,இடம்,தேதி ஆகியவை 12 பாவகங்களின் வலிமையை நவ கிரகங்கள் நிலை உணர்ந்து நிர்ணயம் செய்யபடுகிறது, இதன் பிறகு பாவக வலிமைக்கு ஏற்ப ஜாதகருக்கு யோக அவயோக பலன்களை நடைமுறைக்கு கொண்டு வருகிறது, ஒரே நாளில் ஒரே இடத்தில் சில வினாடிகள் வித்தியாசத்தில் பிறந்தவர்களின் ஜாதக பலன்கள் வேறுபடுவதற்கு, பாவகத்தின் வலிமையின் நிலையே என்றால் அது மிகையில்லை அன்பர்களே! எனவே ஒருவர் யோக அவயோக பல்னகளை பெறுவது ஜாதகரின் பாவக வலிமையே 100% சதவிகிதம் நிர்ணயம் செய்கிறது.

இதில் ஒருவரின் ராசியோ, நட்சத்திரமோ, நவகிரகன்களோ தனிப்பட்ட முறையில் யோக அவயோக பலன்களை வாரி வழங்குவதில்லை அன்பர்களே! நவகிரகங்கள் பூமியில் ஜீவிக்கும் ஜீவன்கள் அனைத்திற்கும் ஒரே விதமான காந்த அலைகளையே வழங்குகிறது, இதில் அவரவர் பிறந்த நேரத்திற்கு ஏற்ப்பவும், கிரகங்கள் வழங்கும் காந்த அலைகளை பெற்று கொள்ளும் பாவகங்களின் நிலைக்கு ஏற்ப்பவும் நன்மை தீமை பலன்களை அனுபவிக்கின்றன.

 எனவேதான் ஜோதிடதீபம் ஒவ்வொருவரின் சுய ஜாதகத்தில் பாவக வலிமையை பற்றி முன்னிறுத்தி பேசுகிறது, சுய ஜாதகத்தில் 12 பாவகமும் வலிமை பெற்று இருப்பின், ஜாதகர் 12 பாவக வழியில் இருந்து மிகுந்த  யோக பலன்களை பெறுகிறார், மேலும் கோட்சார ரீதியான கிரகங்களின் காந்த அலைகளை  பெரும் பாவகங்கள் மேலும் வலிமை அடைந்து ஜாதகருக்கு யோக பலன்களை உறுதி செய்கிறது, இதற்க்கு மாறாக பாவகங்கள் வலிமை இழந்து காணப்படும் ஜாதகர், வலிமை இழந்த பாவக வழியில் இருந்து அதிக இன்னல்களுக்கும் துன்பத்திற்கு ஆளாகும் சூழ்நிலையை தரும்.

ஜோதிடம் காண்பதே ஒருவரின் ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவகங்கள் எவையெவை, வலிமை இழந்த பாவங்கள் எவையெவை என்பதை உணர்ந்து பாதிக்க பட்ட பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை தவிர்க்கவும், பாதிக்கபட்ட பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை ஏற்றுகொள்ளும் மனபக்குவத்தை வளர்த்துக்கொள்ளவும், அல்லது பாதிக்க பட்ட பாவகங்களின் வலிமையை இறை நிலையில் அமைப்பில் இருந்து பெற்று கொள்ளவுமே, எனவே சுய ஜாதகம் ஒருவரின் வாழ்க்கை பற்றிய தெளிவும், தனது வாழ்க்கையை சிறப்பாக அமைத்து கொள்ள உறுதுணையாக அமையும்.


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696


செவ்வாய், 9 செப்டம்பர், 2014

ராகு ஐந்தாம் பாவகத்தில் அமரும் பொழுது புத்திர பாக்கியத்தை தடை செய்யுமா ? ஆண் வாரிசு அமையாத ?



  ராகு ஐந்தில் அமர்ந்தால் சம்பந்த பட்ட ஜாதகருக்கு புத்திர சந்தானம் அமையாது என்பதும், குலம் தழைக்க ஆண் வாரிசு அமையாது என்று சொல்வதும் பொதுவான கருத்து, இதில் ராகு 5ம் பாவகத்தில் அமர்ந்தாலே இந்த பலனை தரும் என்று சொல்வது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது, ஜோதிட கணிதம் பற்றிய தெளிவில்லாமல், பாவகங்களின் தன்மை அறியாமலும், சுய ஜாதக ரீதியாக 5ம் பாவகத்தின் வலிமையை பற்றிய கணிதம் செய்ய தெரியாமலும் சொல்லும் ஒரு வார்த்தையாக மட்டுமே எடுத்துகொள்ள இயலும், பாரம்பரிய ஜோதிடத்தில் ராகு ஐந்தில் அமர்ந்தால் புத்திர பாக்கியத்தை தராது என்று பொதுவாக சொல்வது உண்டு.

 உண்மையில் ராகு 5ம் பாவகத்திர்க்கு உற்பட்ட பாகைக்குள் தான் அமர்ந்து இருக்கின்றாரா, என்ற தெளிவு வேண்டும், ஒரு வேலை 5ம் பாவகம் ஆரம்பிக்கும் பாகைக்கு முன்பே அமர்ந்து இருக்கின்றாரா, 5ல் அமர்ந்த ராகு பாவகத்தை வலிமை படுத்துகிறார, அல்லது தீமையான பலனை தருகிறார என்பதை துல்லியமாக, சுய ஜாதகத்தை கொண்டு அறிந்த பிறகே, புத்திர பாக்கியத்தை பற்றி சொல்வது சரியாக இருக்கும், இதை உதாரண ஜாதகம் கொண்டு ஆய்வு செய்வது தங்களுக்கு மிக எளிதாக புரிந்துகொள்ள இயலும்.


மேற்கண்ட ஜாதகத்தை ஆய்வுக்கு எடுத்து கொள்வோம் அன்பர்களே !

லக்கினம் : கன்னி 
ராசி : கடகம் 
நட்சத்திரம் : பூசம் 2ம் பாதம்

இந்த கன்னி இலக்கின ஜாதகிக்கு திருமணம் நடைபெற்று 4 வருடங்கள் ஆயிற்று, இருமுறை கருத்தரித்து, கருச்சிதைவு ஏற்ப்பட்டு இருக்கிறது, இதனால் உடல் நலம் வெகுவாக பாதிக்க பட்டு இருக்கிறது, இது வரை ஜாதகிக்கு புத்திர பாக்கியம் என்பது கிடைக்கவில்லை, ஜாதகியின் வாழ்க்கை துணைவரின் ஜாதகத்திலும் புத்திர பாக்கியத்தை தரும் ஐந்தாம் பாவகம் கடுமையாக பாதிக்க பட்டு இருக்கின்றது, மேற்கண்ட ஜாதகிக்கு புத்திர சந்தானம் கிடைக்க பெறாத அமைப்பிற்கு 5ல் ராகு அமர்ந்து இருப்பதே என்று சொல்வது சரியாக இருக்கும் என்றபோதிலும், சுய ஜாதக அமைப்பில் 5ம் பாவகம் எனும் புத்திர ஸ்தானம் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதே இதற்க்கு காரணம், மேலும் 5ம் பாவக வழியில் இருந்து ஜாதகி 200% இன்னல்களை அனுபவிக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

மேற்கண்ட ஜாதகத்தில் மகரத்தில் அமரும் ராகு பகவான் 5ம் பாவகத்தை 100% பாதிப்பிற்கு உள்ளாக்குகிறார், இதன் காரணமாகவே ஜாதகிக்கு குழந்தை பாக்கியம் அமையாமல் தடை செய்கிறது, பொதுவாக தம்பதியரின் ஜாதகத்தில் புத்திர ஸ்தானத்தை குறிக்கும் 5ம் பாவகம் பாதிக்க படாமல் இருப்பது உடனடி குழந்தை பாக்கியத்தை வாரி வழங்கும், திருமணதிற்கு பிறகு குறுகிய காலத்தில் குழந்தை பாக்கியத்தை எவ்வித தங்கு தடையின்றி தரும் குறிப்பாக ஆண் வாரிசாக அது அமையும் என்பது மகிழ்ச்சிக்கு உரிய விஷயம், பிறக்கும் குழந்தையும் பூரண ஆயுளுடன், நல்ல ஆரோக்கியத்துடன் சீரும் சிறப்புமாக இருக்கும், தனது பெற்றோருக்கு மிகுந்த கீர்த்தியை பெற்று தரும், இதற்க்கு அடிப்படையாக அமைவது தம்பதியரின் பூர்வ புண்ணியம் எனும் 5ம் பாவகமே என்றால் அது மிகையில்லை.

இதற்க்கு மாறாக மேற்கண்ட உதாரண ஜாதகத்தில் 5ம் பாவகம் ராகு பகவானால் கடுமையாக பாதிக்கபட்டு இருக்கின்றது, மேலும் சுய ஜாதகத்தில் 5ம் பாவகம் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பதம் பெற்று 200% இன்னல்களை வாரி வழங்கி கொண்டு இருப்பது மிகவும் வருந்தத்தக்க ஒன்றாக இருக்கின்றது.

 சர மண் தத்துவமான மகர ராசியில் அமரும் ராகு ஜாதகியின் உடல் நிலையையும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 10ம் வீடாக வருவதால் ஜாதகியின் முன்வினை கர்ம பலன்களையும் அனுபவிக்கும் தன்மையாக 5ம் பாவக வழியில் இருந்து தீமையான பலன்களை வழங்குகிறார், கிரகங்களில் அதிக வலிமை பெற்றதும், தன்னிகரில்லா தனி தன்மை வாய்ந்ததும் ராகு பகவானே என்றால் அது மிகையில்லை, குறிப்பாக ஒருவரின் ஜாதகத்தில் ராகு பகவான் வலிமையாக நல்ல நிலையில் அமர்ந்து இருப்பின் ஜாதகரின் வெற்றிகரமான வாழ்க்கையை எவராலும் தடுத்து நிறுத்த இயலாது, இதற்க்கு மாறாக தீமை தரும் அமைப்பில் ராகு அமரும் பட்சத்தில், தான் அமரும் பாவக அமைப்பில் இருந்து தரும் இன்னல்களில் இருந்து ஜாதகரை எவராலும் காப்பாற்ற இயலாது, தனது கடமையை மிகவும் சிறப்பாக ராகு பகவான் தங்கு தடை இன்றி தருவார் என்பதில் மாற்று கருத்து இல்லை.


மேற்கண்ட ஜாதகம் ராகு பகவான் 5ல் அமர்ந்தால் தரும் தீமையான பலன்கள் பற்றிய உதாரணம், ஆனால் ராகு பகவான் 5ல் அமர்ந்தாலும் 5ம் பாவகத்தை வலிமை செய்யும் அமைப்பும் உண்டு, பொதுவாக 5ல் அமரும் ராகு பகவான் தீமையை மட்டுமே செய்யும் என்பது பாரம்பரிய ஜோதிடத்தின் கருத்து, இங்கே 5ல் அமரும் ராகு பகவான் 5ம் பாவகத்தை தனது கட்டுப்பாட்டில் எடுத்து கொண்டு மிகுந்த நன்மையையும், அளவில்லா புத்திர சந்தான பாக்கியத்தையும் அருள்கிறார் என்பதை ஒரு உதாரண ஜாதகம் கொண்டு பார்ப்போம் அன்பர்களே !




லக்கினம் : மகரம் 
ராசி : கும்பம் 
நட்சத்திரம் : சதயம் 3ம் பாதம்

இந்த மகர இலக்கின ஜாதகிக்கு திருமணம் ஆன ஓரிரு மாதங்களிலேயே புத்திர சந்தான பாக்கியத்தை வாரி வழங்கியது ராகு பகவானே, ராகு பகவான் ஸ்திர மண் தத்துவ ராசியான ரிஷபத்தில் அமர்ந்து 5ம் பாவகத்திர்க்கு 100% வலிமை தருவது ஒரு சிறப்பான விஷயம் ஸ்திர மண் தத்துவம் என்பதால், ஜாதகிக்கு சிறந்த உடல் வலிமை தந்தது, பூரண சுக பிரசவத்தில் நல்ல யோகமுள்ள ஆண் வாரிசை ஜாதகிக்கு வழங்கியது, ஜாதகியின் வாழ்க்கை துணையின் ஜாதகத்திலும் 5ம் பாவகம் பூரண வலிமை பெற்று இருந்தது ஜாதகிக்கு நல்ல ஆண் வாரிசை உறுதி செய்தது.

மேற்கண்ட ஜாதகிக்கு ராகு 5ல் அமர்ந்தது ஆண் வாரிசை மற்றும் இன்றி நல்ல புத்திசாலிதனத்தையும், மிகசிறந்த அறிவாற்றலையும் வாரி வழங்கியது, கல்வியில் சிறந்து விளங்கும் தன்மையை தந்தது, மேலும் இறை அருளின் கருணையை பரிபூரணமான பெற்று தந்து, ஜாதகிக்கு ரிஷபம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 2ம் வீடாக வந்தது, ஜாதகிக்கு நிலையான குடும்ப வாழ்க்கையையும், கை நிறைவான பொருளாதார வசதி வாய்ப்பையும், நிலையான வருமான வாய்ப்பையும் பெற்று தந்தது, மேற்கண்ட ஜாதகத்தை பொதுவான கண்ணோட்டத்துடன் 5ல் ராகு இருப்பதால் புத்திர பாக்கியம் கிடைக்காது என்று நிர்ணயம் செய்வது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது, இந்த ஜாதகிக்கு ராகு பகவானே சிறந்த புத்திர சந்தானத்தை தான் அமர்ந்த இடத்தில் இருந்து வழங்குகிறார் அன்பர்களே!

எந்த ஒரு ஜாதகத்திலும் ராகு பகவான் 5ல் அமர்ந்து இருந்தாலும், 5ம் பாவகத்தை வலிமை செய்தால், ஜாதகர் 5ம் பாவாக வழியில் இருந்து 100% நன்மைகளை பெறுவார், இதற்க்கு மாறாக தீமை செய்யும் அமைப்பில் அமர்ந்தால் எவ்வித பாகுபாடும் இன்றி 100% தீமையே செய்வார் இதில் மாற்றம் இல்லை, எனவே சுய ஜாதக அமைப்பின் படி 5ல் அமரும் ராகு பகவான் எந்த நிலையில் இருக்கிறார் என்று துல்லியமாக கணிதம் செய்து, பலன்  காண்பதே சிறந்த உண்மையான ஜோதிட பலன் சொல்ல உதவி புரியும், 5ல் அமரும் ராகு பகவான் கெடுதல் மட்டுமே செய்யும் என்று நிர்ணயம் செய்வது முற்றிலும் தவறன ஒரு அணுகுமுறையே.

குறிப்பு :

ராகு பாவக அமைப்பின் படி 5ல் தான் அமர்ந்திருக்கிறார் என்பதை முதலில் நிர்ணயம் செய்வது நலம், இதற்க்கு லக்கினம் ஆரம்பிக்கும் பாகையும், 5ம் பாவகம் ஆரம்பிக்கும் பாகையும், ராகு பகவான் அமர்ந்திருக்கும் பாகையும் மிக மிக முக்கியம் என்பதை கருத்தில் கொள்வது அவசியம்.

ஒருவேளை ஒரே ராசியில் ராகு பகவான்  5ம் பாவகம் ஆரம்பிக்கும் பாகைக்கு முன்பே அமர்ந்திருந்தால், ராகு பகவான் 5ல் என்ற கருத்துக்கே இடமில்லாமல் போகும் வாய்ப்பு உண்டு அன்பர்களே !

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696


ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

ஜீவன ஸ்தானம் எனும் பத்தாம் பாவகம் வழங்கும் தொழில் மேன்மை - பாகம் 2 (சனி வக்கிரகம்)

 
 கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ஸ்தானமான மகர ராசிக்கும், அதிர்ஷ்டம் மற்றும் லாப ஸ்தானமான கும்ப ராசிக்கும் அதிபதியான சனிபகவான் ஒவ்வொருவரின் சுய ஜாதகத்திலும் வலிமை பெற்று அமருவது ஜாதகரின் கர்ம ஸ்தானம் எனும் ஜீவன ஸ்தானத்திற்கு மிகப்பெரிய வலிமையை சேர்க்கும், தனிப்பட்ட முறையில் சுயமாக வாழ்க்கையில் முன்னேற்றம் பெரும் தன்மையை தரும், குறிப்பாக ஜாதகரின் அறிவு திறனும், தன்னம்பிக்கையும் தான் செய்யும் தொழில் அமைப்பில் இருந்து 100 சதவிகித வெற்றியை வாரி வழங்கும், மேலும் சுய ஜாதகத்தில் சனிபகவான் ஜீவன பாவக அமைப்புடன் தொடர்பு பெரும் பொழுது, ஜாதகர் ஜீவன வழியில் எதிர்பாராத வெற்றிகளையும் திடீர் முன்னேற்றத்தையும் தொடர்ந்து பெற்றுகொண்டே இருப்பார், ஜீவன அமைப்பில் தோல்வி என்ற விஷயமே ஜாதகரிடம் எட்டிபார்க்கது என்பது வியக்கத்தக்க ஜாதக நிலையாகும்.

மகரம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன பாவக உரிமையை ஏற்றுகொள்கிறது, கும்பம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு லாப ஸ்தான உரிமையை ஏற்றுகொள்கிறது, இந்த இரண்டு ராசிக்கும் அதிபதியாக சனிபகவானே பொறுப்பேற்கிறார், இதில் மகரம் சர மண் தத்துவ அமைப்பில் செயல்படுகிறது, எனவே இயக்க நிலையில் இருக்கும் மண் தத்துவமான இயந்திரங்கள், மனித உடல், மற்றும் ஜீவன் உள்ள உயிர்கள், பொருட்கள் ஆகியவற்றின் கர்ம நிலைக்கு ஏற்ற நன்மை தீமை விஷயங்களை, சனிபகவான் ஆளுமை செய்கிறார், அவரவருக்கு ஏற்ற ஜீவனத்தை சரியான காலகட்டத்தில் சுய ஜாதகத்திற்கு உட்ப்பட்டு சிறப்பாக அமைத்து தருகிறார்.

மேலும் கும்பம் ஸ்திர காற்று தத்துவ அமைப்பில் செயல்படுகிறது, எனவே மகர ராசி அமைப்பில் ஏற்றுகொண்ட கர்ம வினைக்கு ஏற்ற, ஸ்திரமான அறிவாற்றலை சனிபகவான் ஒவ்வொருவருக்கும் வாரி  வழங்குகிறார், உலகத்தில் ஜீவனம் எனும் தொழில் அமைப்பை பலபேர் பலவித தொழில்களை செய்த போதிலும் , சிறந்த அறிவு திறனையும் புதிய முயற்ச்சிகளையும், புதிய அணுகுமுறையையும் தொழில் அமைப்பில் செயல்படுத்தி வெற்றி காண்பவரையே, உலகம் வியந்து போற்றும், இதற்க்கு அடிப்படை காரணமாக அமைவது ஸ்திர கும்ப ராசியும், சனிபகவனுமே என்றால் அது மிகையில்லை.

ஒருவரின் சுய ஜாதகத்தில் ஜீவன பாவகம் ஜாதகரின் ஜீவன அமைப்பை பற்றியும், அதன் வழியில் இருந்து ஜாதகர் பெரும் கௌரவம், அந்தஸ்து, மதிப்பு மரியாதை ஆகியவற்றையும், ஜாதகரின் கர்ம வினைபதிவினை ஜாதகர் எவ்விதம் அனுபவிக்கிறார் என்பதை பற்றியும் தெளிவாக அறிவுறுத்தும், லாப ஸ்தானம் ஜாதகர் தான் பெரும் புகழ், வெற்றி, மன உறுதி, ஜீவன வழியில் ஜாதகர் செய்யும் புதுமை, எடுக்கும் முயற்ச்சிகளில் ஜாதகர் பெரும் வெற்றி வாய்ப்புகள், குறுகிய காலத்தில் ஜாதகர் பெரும் எதிர்பாராத வெற்றிகள் என்ற விஷயங்களை அறிவுறுத்தும், மேற்கண்ட இரண்டு பாவகங்கள் ஒவ்வொருவருக்கும் ஜீவன அமைப்பை, தொழில் மற்றும் பணியை சரியாக அமைத்துக்கொள்ள 100 சதவிகிதம் வழிகாட்டும், இதன் அடிப்படையில் ஜாதகர் தனது ஜீவன வாழ்க்கையை அமைத்து கொண்டு வாழ்க்கையில் சகல நலன்களையும் ஜீவன வழியில் இருந்து பெறலாம்.

மேற்கண்ட அமைப்பில் சுயஜாதகத்தில் ஜீவனம், மற்றும் லாப ஸ்தானம் வலிமை பெற்று அமர்வது உடன், காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவனம் மற்றும் லாப ஸ்தானமான மகரம் மற்றும் கும்பம் நல்ல நிலையில் இருப்பது ஜாதகருக்கு ஜீவன வழியில் இருந்தும், ஜீவன வழியில் இருந்து ஜாதகர் பெரும் லாபத்தை உறுதிபடுத்தும், மேற்கண்ட விஷயத்துடன் ஜாதகருக்கு தற்பொழுது நடைபெறும் திசை மற்றும் புத்திகள் சாதகமாக அமைந்துவிட்டால் ஜாதகரின் ஜீவன வெற்றியை யாராலும் தடுத்து நிறுத்த இயலாது, தன்னிகர் இல்ல தொழில் அதிபராக உருவாக்கி விடும்.

சுய ஜாதகத்தில் தொழில் ஸ்தானம் எனும் 10ம் பாவகம் வலிமை பெற்று அமர்ந்தாலும் கூட லாப ஸ்தானம் எனும் 11ம் பாவகமும் வலிமை பெறுவது ஜாதகரின் தொழில் வெற்றியின் பலன்களை 100 சதவிகிதம் அனுபவிக்க வைக்கும், ஒருவேளை 11ம் பாவகம் வலிமை பெறவில்லை எனில் ஜாதகர் உழைக்கும் உழைப்பு அனைத்தும் வீண் போக வாய்ப்பு உண்டு, ஒன்று ஜாதகரை சாந்தவர்கள் அனுபவிப்பார்கள், அல்லது ஜாதகரின் கூட்டாளி அனுபவிப்பர், இல்லை எனில் லாப ஸ்தானம் வலிமை பெற்ற ஜாதகரின் முதலாளி பரிபூரணமாக அனுபவிப்பார்கள்.

 எனவே ஒருவரின் சுய ஜாதகத்தில், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ஸ்தானத்திற்கும் லாப ஸ்தானத்திற்கும் அதிபதியான சனிபகவான் வக்கிரக நிலை பெறுவது மேற்கண்ட பாவக வழியில் இருந்து பெரும் யோக பலன்களை 10 சதவிகிதம் என்ற அளவிலேயே வழங்கும், சுய ஜாதகத்தில் சனி வக்கிரக நிலையில் இருப்பின், இதன் விளைவை கருத்தில் கொண்டு முறையாக வக்கிரக நிவர்த்தி பெறுவது, சுய ஜாதகத்தில் உள்ள யோக பலன்களை ( அதாவது ஜீவனம் மற்றும் லாபம் ) 100 சதவிகதம் அனுபவிக்க வைக்கும், சனிபெருக்கம் என்ற பொன்மொழிக்கு ஏற்ப ஜாதகரின் வாழ்க்கையில் ஜீவனம் பன்மடங்கு பெருகி, மிகப்பெரிய யோக வாழ்க்கையையும் தன்னிறைவான பொருளாதார வெற்றியையும் தங்கு தடையின்றி கொடுக்கும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

சனி, 23 ஆகஸ்ட், 2014

பெண்கள் ஜாதகத்தில் களத்திர பாவகம், பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்றால் ஜாதகியின் நிலை என்ன ?

  
 பொதுவாக ஆண்கள் ஜாதகம் என்றாலும் சரி, பெண்கள் ஜாதகம் என்றாலும் சரி, சுய ஜாதக அமைப்பில் களத்திர பாவகம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல, மேலும் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்ற களத்திர பாவக பலனை பருவ வயதிலோ, திருமண வயதிலோ, நடைபெறும் திசை ஏற்று நடத்தினால் ஜாதகரோ, ஜாதகியோ படும் இன்னல்களுக்கு எல்லை இருக்காது, குறிப்பாக எதிர்பால் இன அமைப்பில் இருந்து பல இன்னல்களுக்கும் துன்பங்களுக்கும் ஆளாகும் சூழ்நிலையை தரும், ஆண் என்றால் பெண்களிடமும், பெண் என்றால் ஆண்களிடமும் ஏமாறும் தன்மையை தரும், சபந்தபட்ட நபர்களால் உடல் நலம் மற்றும் மன நலம் வெகுவாக பாதிக்க படும், இதுவரை வாழ்ந்துவந்த வாழ்க்கையை விட்டு விட்டு புதிய வாழ்க்கையை ஏற்றுக்கொண்டு சிரமப்படும் நிலைக்கு தள்ளபடுவார், மேலும் களத்திர பாவக வழியில் 200% துன்பத்தை அனுபவிக்கும் சூழ்நிலையை எவ்வித பாகுபாடு இன்றி வாரி வழங்கும்.

 இதை ஒரு உதாரண ஜாதகம் கொண்டு இந்த பதிவில் சிந்திப்போம் அன்பர்களே !

லக்கினம் : தனுசு
ராசி : மகரம் 
நட்சத்திரம் : திருவோணம் 4ம் பாதம்


ஜாதகத்தில் நன்மைதரும் பாவக அமைப்புகள்:

1) 2,5,11ம் வீடுகள் லாபம் மற்றும் அதிர்ஷ்ட ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 100% யோகத்தை வாரி வழங்குகிறது.

2) 3ம் வீடு தைரிய வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 70% யோகத்தை வாரி வழங்குகிறது.

3) 4,6,10,12ம் வீடுகள் உயிர் உடலாகி லக்கினத்துடன் சம்பந்தம் பெற்று 70% யோகத்தை வாரி வழங்குகிறது.

4) 9ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 70% யோகத்தை வாரி வழங்குகிறது.
ஜாதகத்தில் தீமை தரும் அமைப்புகள் :

1) 7ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 200% இன்னல்களுக்கும், மனதளவில் துன்பத்திற்கும் வழிவகுக்கும்.

2) 8ம் வீடு ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 100% திடீர் இழப்பிற்கும், பொருள் இழப்பிற்கும், நிம்மதியற்ற வாழ்க்கைக்கும் அடிகோலும்.

3) 1ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 70% நிம்மதியற்ற வாழ்க்கைக்கும், தான் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் தவறான பாதைக்கும் அழைத்து செல்லும்.

ராகு திசையில் 2,5,11ம் வீடுகள் லாபம் மற்றும் அதிர்ஷ்ட ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று ஜாதகிக்கு கலைத்துறையில் மிகப்பெரிய வெற்றியும், சிறந்த அந்தஸ்த்தையும் வாரி வழங்கியது, 2ம் பாவக அமைப்பில் இருந்து ஜாதகிக்கு அளவில்லா வருமானத்தை வாரி வழங்கியது, 5ம் பாவக அமைப்பில் இருந்து கலைத்துறையில் பிரகாசிக்கு தன்மையை வாரி வழங்கியது, 11ம் பாவக அமைப்பில் இருந்து ஜாதகிக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் பல இடங்களில் இருந்து தொடர்ந்து வந்து குவிந்தது, ஜாதகியின் 11ம் பாவகம் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் பாவகமாக இருப்பதால், பொதுமக்களின் ஆதரவு மிகப்பெரிய அளவில் இருந்தது, மிகப்பெரிய மனிதர்களின் அறிமுகமும், கலைத்துறையில் மிகப்பெரிய வெற்றியையும் சம்பாதித்து கொடுத்தது.

ஆனால் ராகு திசையில் சந்திரன் மற்றும் செவ்வாய் புத்தியும்,
தற்பொழுது நடைபெறும் குரு திசையில், குரு புத்தியும் ஜாதகிக்கு பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துவதால், ஜாதகியின் வாழ்க்கையில் மிகப்பெரிய பாதிப்பை சந்திக்கும் சூழ்நிலையை தந்தது, ஜாதகியால் இந்த இன்னல்களில் இருந்து வெளிவர இயலாத சூழ்நிலையில் மற்றவருக்கு கட்டுப்படும் நிலைக்கு ஆளாகி, அதில் இருந்து மீண்டு வர இயலாத சூழ்நிலையை ஜாதகியே உருவாக்கிகொண்டார், மேலும் தனது மனதையும் உடலையும் கொடுத்துக்கொண்டு , பல நிலைகளில் எதிர்ப்புகளை சம்பாதித்து கொண்டார், தனக்கு வந்த பல நல்ல வாய்ப்புகளை உதறி தள்ளிவிட்டு, தன் வாழ்க்கையை தானே கெடுத்து கொண்டார், தற்பொழுது நடைபெறும் திசை லக்கினத்திற்கு அதிபதியானாலும் கூட, அவர் ஏற்று நடத்துவது பாதக ஸ்தான பலன் என்பதால் 200% துன்பத்தையும் இன்னல்களையுமே இதுவரை வழங்கிக்கொண்டு இருக்கிறார் என்பதை கருத்தில் கொள்வது அவசியம்.

மேலும் நடைபெறும் குரு திசை களத்திர ஸ்தான அமைப்பில் இருந்து பாதக ஸ்தான பலனை வழங்குவதால், ஜாதகி முரண்பட்ட இல்லற வாழ்க்கையை வாழ்ந்து பலரிடம் ஏமாறும் சூழ்நிலையை தந்துகொண்டு இருப்பது வருத்தத்திற்கு உரிய ஒரு விஷயம் , மேலும் இந்த பாதிப்பில் இருந்து ஜாதகி வெளியே வருவது என்பது மிக சிரமமான ஒரு காரியமே என்றால் அது மிகையில்லை, சுய ஜாதகத்தில் 8ம் வீடு ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று, 8ம் பாவகம் சர நீர் ராசி என்பதால் ஜாதகி தனது மனதை கட்டுபடுத்த இயலாமல், மனம் போன போக்கில் தனது வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.

 இதன் விளைவுகள் இனிவரும் காலங்களில் மிகவும் கடுமையாக இருக்கும் என்பதே வருந்ததக்கது, 8ம் பாவகம் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு 4ம் பாவகமாக இருப்பதால் தனக்கு நல்லது என்று நினைக்கும் விஷயங்கள்  யாவும், எதிர்ப்பாராத பொருள் இழப்பையே வாரி வழங்கியது, லக்கினம் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவதால் ஜாதகி மற்றவரை நம்பி ஏமாறும் சூழ்நிலையையே இதுவரை தந்துகொண்டு இருக்கிறது, மேலும் 12ம் பாவகம் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு 8ம் பாவகமாக வருவதாலும் ஜாதகிக்கு மன வாழ்க்கை என்ற ஒரு விஷயம் கேள்விக்குறியாகவே உள்ளது, 8ம் பாவகம் கடுமையான பாதிப்பை தருவதால், ஜாதகி தனது வாழ்க்கை துணையாக நினைக்கும் நபர்கள், ஜாதகியை மிக எளிதாக ஜாதகிக்கே தெரியாமல் ஏமாற்றுகிறார்கள் என்பதே வேதனைக்குரிய விஷயம்.

எனவே பெண்களின் ஜாதகத்தில் களத்திர பாவகம் பாதிக்கபடுவது எதிர்பால் அமைப்பில் இருந்து மிகப்பெரிய இன்னல்களையும், வாழ்க்கை துணை வழியில் இருந்து அதிக துன்பத்தையும் தரும், 8ம் பாவகம் பாதிக்க படுவது வாழ்க்கை துணை வழியில் இருந்து மிகப்பெரிய பொருள் இழப்பை தரும், 2ம் பாவகம் பாதிக்கபடுவது குடும்ப வாழ்க்கையை கேள்விக்குறியாக மாற்றிவிடும், பெண்கள் ஜாதகத்தில் 2,7,8ம் பாவகங்கள் எக்காரணத்தை கொண்டு பாதிக்க படாமல் இருப்பது நல்லது, மேற்கண்ட பாவகங்கள் வலிமை பெறுவது ஜாதகிக்கு இல்லற வாழ்க்கையில் மிகுந்த சந்தோஷத்தையும், அதிர்ஷ்டத்தையும் வாரி வழங்கும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வெள்ளி, 22 ஆகஸ்ட், 2014

சுய ஜாதகம் கடுமையாக பாதிக்கபட்டு இருந்த போதிலும் ஜாதகர், நன்மையான பலன்களை அனுபவிப்பது எப்படி ?



 இது ஒரு சிறந்த கேள்வியாக ஜோதிடதீபம் கருதுகிறது, பொதுவாக எந்த ஒரு விஷயமும் சரி, யோக அவயோக பலன்களும் சரி சுய ஜாதக விதிகளுக்கு உட்பட்டே நடைபெறும், சுய ஜாதகத்தில் இல்லாத ஒன்றை நாம் எந்த விதத்திலும் அனுபவிக்க இயலாது, உதாரணமாக ஒரு அவயோக ஜாதகம் எக்காரணத்தை கொண்டும் ராஜ யோக பலன்களை அனுபவிக்க இயலாது, அதேபோல் ராஜயோக ஜாதகம் பெற்ற ஒருவரை, அவயோக பலன்களை அனுபவிக்க வைக்க இயலாது, தாங்கள் கூறியது போல் சுய ஜாதகம் கடுமையாக பாதிக்கபட்டு இருக்கும் ஒருவர் எந்த காலத்திலும் யோக பலன்களை அனுபவிக்க இயலாது.

 சம்பந்தபட்ட ஜாதகத்தில் ஏதாவது ஒரு பாவகம் மிக வலிமையுடன் இருக்கும், அந்த வலிமை பெற்ற பாவகத்தின் பலனை தற்பொழுது நடைபெறும் திசை ஏற்று நடத்திக்கொண்டு இருக்கும், ஒருவரின் சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமை பெற்று இருப்பது முக்கியம் அல்ல, நடைபெறும் திசை வலிமை பெற்ற பாவகத்தின் பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே ஜாதகர் மிகுந்த யோக பலன்களை, நடைமுறையில் அனுபவிக்க இயலும், இதை கிழ்கண்ட உதாரண ஜாதகம் கொண்டு விளக்கமாக காணலாம் அன்பர்களே !

உதாரண ஜாதகம் 1



 மேற்கண்ட மீன இலக்கின ஜாதகருக்கு

1) 1,3,5,7,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இருக்கின்றது, எனவே மேற்கண்ட பாவக அமைப்பில் இருந்து ஜாதகர் 200 சதவிகித இன்னல்களை அனுபவிக்கும் தன்மையை தரும்,.

2) 4,8,12ம் விடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பது மேற்கண்ட பாவக அமைப்பில் இருந்து 60 சதவிகித இன்னல்களை அனுபவிக்கும் தன்மையை தரும்.

3) 2,6ம் வீடுகள் ஜீவன ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவதும், 10ம் வீடு பாக்கிய ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவதும், மேற்கண்ட பாவக அமைப்பில் இருந்து முறையே ஜாதகர் 30 சதவிகிதம் மற்றும் 60 சதவிகித யோக பலன்களை அனுபவிக்க இயலும், 

4) 11ம் வீடு அதிர்ஷ்டம் மற்றும் லாப ஸ்தானம் எனும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 100 சதவிகித யோக பலன்களை அனுபவிக்க வைக்கும்.

இது மேற்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையின் நிலை, தற்பொழுது நடைபெறும் திசை ஜாதகருக்கு எந்த பாவகத்தின் பலனை ஏற்று நடத்துகிறது என்பதை தெளிவாக தெரிந்து கொண்டால் மட்டுமே, நடைபெறும் திசை ஜாதகருக்கு யோக பலன்களை வழங்குமா ? அவயோக பலன்களை வழங்குமா ? என்பது தெளிவாக தெரியும், தற்பொழுது ஜாதகருக்கு சுக்கிர திசை ( 28/05/2012 முதல் 28/05/2032 வரை ) நடைபெறுகிறது.

 இந்த சுக்கிர திசை ஜாதகருக்கு எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்பதை கவனிக்கும் பொழுது சுக்கிரன், தசா என்ற அமைப்பில் இருந்து 1,5,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று பலனை தருகிறார், எனவே ஜாதகருக்கு தற்பொழுது நடைபெறும் சுக்கிரன் திசை பாதக ஸ்தான பலனை தருகிறது என்பது உறுதியாகிறது, மேலும் பாதக ஸ்தான பலனை எந்த எந்த வீடுகள் வழியில் இருந்து அனுபவிக்கிறார் என்பதை கருத்தில் கொண்டு பார்க்கும் பொழுது.

1ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது ஜாதகரின், வளரும் சூழ்நிலை அமைப்பிலும், உடல் ரீதியான அமைப்பிலும் பல எதிர்ப்புகளையும், தொந்தரவுகளை எதிர்கொள்ள வைக்கும், ஜாதகரின் பழக்க வழக்கங்கள் ஆரோக்கியமானதாக இருக்க வாய்ப்பில்லை, நல்ல நண்பர்கள் சேர்க்கையும் ஜாதகருக்கு அமையாது, ஜாதகரே தனது வாழ்க்கையை கெடுத்து கொண்டு தன்னை சார்ந்தவருக்கும் துன்பத்தை தருவார்.7ம் பாவகம் உபய மண் தத்துவம் என்பதால் உடல் நிலை பாதிப்பும், பொருள் இழப்பும் தவிர்க்க இயலாது.

5ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது ஜாதகரின் பூர்வீகம் எதுவோ? அங்கு ஜீவனம் செய்ய இயலாத சூழ்நிலையை தரும், குறிப்பாக எல்லை கடந்து பரதேச ஜீவனத்தை மேற்கொள்ள வைக்கும், மேலும் ஜாதகருக்கு சுய அறிவும் வேலை செய்யாது, நல்லவர்  சொல் பேச்சும் கேட்க மாட்டார், 5ம் பாவகம் பாதிக்க படுவது ஜாதகருக்கு சிந்தனை ஆற்றல் மற்றும் அறிவு திறன் போன்ற விஷயங்களை வெகுவாக பாதிக்க வைக்கும், இறை அருளின் கருணையை பெற இயலாது, ஜாதகருக்கு உதவ எவரும் முன்வரமாட்டார்கள்.

9ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது, ஜாதகரின் செயல்கள் அனைத்தும், மற்றவர்களின் விமர்சனத்துக்கு உள்ளாகும், தேவையில்லாமல் மற்றவரிடம் அவ பெயரை சம்பாதித்து கொடுக்கும், மற்றவர் விஷயங்களில் தலையீடு செய்து தனது பெயரை கெடுத்து கொள்ளும் சம்பவங்களும் உருவாகலாம், தனிப்பட்ட  வாழ்க்கையிலும், நண்பர்கள் அமைப்பில் இருந்தும், பொது வாழ்க்கை சமுக அமைப்பில் இருந்தும், ஜாதகருக்கு கடுமையான எதிர்ப்புகளும், விமர்சனங்களுமே தொடர்ந்து வரும்.

ஆக ஜாதகருக்கு தற்பொழுது நடைபெறும் சுக்கிரன் திசை நிறைய எதிர்ப்புகளை எதிர்கொண்டு எதிர்நீச்சல் போடும் வாய்ப்பை தருகிறார், சுய ஜாதகத்தில் 11ம் பாவகம் நல்ல நிலையில் இருப்பதால் வரும் எதிர்ப்புகள் அனைத்தையும் சமாளித்து, வாழ்க்கையில் வெற்றி பெறுவார் என்பது உறுதியாகிறது.

உதாரண ஜாதகம் 2


மேற்கண்ட துலா இலக்கின ஜாதகிக்கு 

1) 1,5,7,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மேற்கண்ட பாவக அமைப்பில் இருந்து, ஜாதகிக்கு 200 சதவிகித இன்னல்களை அனுபவிக்கும் தன்மையை தரும்.

2) 2ம் வீடு ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மேற்கண்ட பாவக அமைப்பில் இருந்து, ஜாதகிக்கு 60 சதவிகித இன்னல்களை அனுபவிக்கும் தன்மையை தரும்.

3) 6,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மேற்கண்ட பாவக அமைப்பில் இருந்து ஜாதகிக்கு 30 சதவிகித இன்னல்களை அனுபவிக்கும் தன்மையை தரும்.

4) 3,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, மேற்கண்ட பாவக அமைப்பில் இருந்து ஜாதகிக்கு 30 சதவிகித யோக பலன்களை அனுபவிக்கும் தன்மையை தரும்.

5) 4,8ம் வீடுகள் குடும்ப  ஸ்தானமான 2ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, மேற்கண்ட பாவக அமைப்பில் இருந்து ஜாதகிக்கு 60 சதவிகித யோக பலன்களை அனுபவிக்கும் தன்மையை தரும்.

6) 10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, மேற்கண்ட பாவக அமைப்பில் இருந்து ஜாதகிக்கு 30 சதவிகித யோக பலன்களை அனுபவிக்கும் தன்மையை தரும்.

 இது மேற்கண்ட ஜாதகிக்கு சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையின் நிலை, தற்பொழுது நடைபெறும் திசை ஜாதகிக்கு எந்த பாவகத்தின் பலனை ஏற்று நடத்துகிறது என்பதை தெளிவாக தெரிந்து கொண்டால் மட்டுமே, நடைபெறும் திசை ஜாதகிக்கு யோக பலன்களை வழங்குமா ? அவயோக பலன்களை வழங்குமா ? என்பது தெளிவாக தெரியும், தற்பொழுதுஜாதகிக்கு ராகு திசை ( 29/01/2010 முதல் 29/01/2028 வரை ) நடைபெறுகிறது, இந்த ராகு திசை ஜாதகிக்கு எந்த பாவக  பலனை ஏற்று நடத்துகிறது என்று கவனிக்கும் பொழுது ராகு, புத்தி என்ற அமைப்பில் நின்று 3,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று தனது திசையை ராகு சிறப்பான நன்மைகளை வாரி வழங்கி கொண்டு இருக்கிறது எனவே ஜாதகி 3,9ம் பாவக வழியில் இருந்து யோக பலன்களை பெறுகிறார்.

3ம் பாவக வழியில் இருந்து எடுக்கும் முயற்ச்சிகளில் இருந்து வெற்றி, போட்டி பந்தயங்களில் வெற்றி, தேர்வில் வெற்றி, மக்கள் செல்வாக்கு, நினைத்ததை அடையும் யோகம், நல்ல ஆரோக்கியமான உடல் நிலை அமைப்பு, தன்னம்பிக்கையுடன் அனைத்தையும் எதிர்கொள்ளும் மனபக்குவம், பலமுறை சிந்தித்து செயல்படும் யோகம் என்றவகையில் மிகுந்த யோக பலன்களை 3ம் பாவக வழியில் இருந்து தருகிறது.

9ம் பாவக வழியில் இருந்து சமுதாயத்தில் நல்ல பெயர், அந்தஸ்து, சுய கெளரவம், சுய மரியாதையுடன் வாழும் யோகத்தை தருகிறது, உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்வியில் மிகப்பெரிய வெற்றி, தான் கற்ற கல்வியினால் யோக வாழ்க்கை, பெயரரும் புகழும் கிடைக்கும் யோகம், தன்னிறைவான பொருளாதார வளர்ச்சி என்றவகையில் நன்மைகளை வாரி வழங்கிக்கொண்டு  இருக்கிறது, மேலும் ராகு திசைக்கு அடுத்து வரும் குரு திசையும் 3,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று பலனை தருவது குரு திசையிலும் மேற்கண்ட யோக பலன்களையே ஜாதகிக்கு தரும் என்பது உறுதியாகிறது.

இந்த இரண்டு ஜாதகத்திலும் 1ம் உற்பட சில பாவகங்கள் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெற்று சுய ஜாதகம் கடுமையாக பாதிக்கபட்டு இருந்த போதிலும், தற்பொழுது நடைபெறும் திசை வழங்கும் பலன்கள் மாறுபட்டு ஒருவருக்கு தீமையான பலன்களையும், ஒருவருக்கு நன்மையான பலன்களையும் தருகிறது, இதில் முதல் உதாரண ஜாதகத்தில் நடைபெறும் திசை தீமையான பலன்களையும், இரண்டாம் உதாரண ஜாதகத்தில் நடைபெறும் திசை மிகுந்த நன்மையான பலன்களையும் தருகிறது, எனவே சுய ஜாதகத்தில் பாவகங்கள் பாதிக்கபட்டு இருந்த போதிலும், நடைபெறும் திசை நல்ல நிலையில் இருக்கும் பாவகங்களின் பலனை ஏற்று நடத்தினால் ஜாதகருக்கு நன்மையான பலன்களே நடைபெறும்.

ஒருவேளை சுய ஜாதகத்தில் சில பாவகங்கள் வலிமை பெற்று இருந்த போதிலும், நடைபெறும் திசை பாதிக்கபட்ட பாவகங்களின் பலனை ஏற்று நடத்தினால் ஜாதகர் எவ்வித நன்மையையும் பெற இயலாது, சம்பந்தபட்ட பாவக வழியில் இருந்து அதிக இன்னல்களையே அனுபவிக்க வேண்டிவரும், மேற்கண்ட உதாரண ஜாதகத்தில் தற்பொழுது நடைபெறும் திசை சுக்கிரன் திசை என்றாலும், அவர் ஏற்று நடத்துவது பாதக ஸ்தான பலனை  என்பதால் ஜாதகர் குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து படும் இன்னல்களுக்கும், துன்பத்திற்கும் ஒரு அளவு இருக்காது என்பதே உண்மை.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696