வியாழன், 8 அக்டோபர், 2015

திருமண பொருத்தம் : சுய ஜாதக வலிமையும், வாழ்க்கை துணையின் ஜாதக வலிமையும் !


திருமண வாழ்க்கையின் வெற்றியை நிர்ணயம் செய்வதில் முக்கிய பங்கு வகிப்பது சுய ஜாதக வலிமை நிலையே, பொதுவாக திருமண பொருத்தம் காண்பதில் நடைமுறையில் உள்ள பொருத்தம் காணும் விஷயங்களுடன் ( நட்சத்திர பொருத்தம், தோஷ நிர்ணயம், ஏக திசை பொருத்தம்) , சுய ஜாதக வலிமையை கருத்தில் கொண்டு பொருத்தம் அமைத்து தருவது சம்பந்தபட்ட ஜாதகரின் திருமண வாழ்க்கையை மிகவும் சிறப்பாக அமைத்து தரும், உதாரணமாக கிழ்கண்ட ஜாதகங்களை ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே!

ஜாதகிக்கு வயது 32 நடைமுறையில் உள்ளது, இதுவரை நல்ல வரன் அமையவில்லை, திருமணத்திற்காக எடுக்கும் முயற்ச்சிகள் யாவும் தோல்வியில் முடிந்தது, மேலும் ஜாதகி தான் ஒரு வரனை தேர்ந்தெடுத்ததாகவும், தேர்ந்தெடுத்த ஜாதகரை தான் திருமணம் செய்துகொண்டால் இல்லறவாழ்க்கை சிறப்பாக இருக்குமா? என்ற கேள்வியை முன் வைக்கிறார், ஜாதகின் சுய ஜாதகத்தையும், ஜாதகி தேர்ந்தெடுத்த வரனின் ஜாதகத்தையும் திருமண வாழ்க்கைக்கு உகந்ததா? இல்லறவாழ்க்கை சிறப்பாக அமையுமா? என்பதை சம்பந்தபட்ட ஜாதகங்களின் பாவக வலிமையை இனி ஆய்வு செய்வோம்.

அடிப்படையில் திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய வது வரனின் ஜாதகத்தில் ஆய்வுக்கு எடுத்துகொள்ள வேண்டிய விஷயங்கள், 1) குடும்ப ஸ்தானமனான 2ம் பாவகம், 2) புத்திர ஸ்தானமான 5ம் பாவகம், 3) களத்திர ஸ்தானமான 7ம் பாவகம், 4) ஆயுள் பாவகமான 8ம் பாவகம், 5) தற்பொழுது நடைமுறையில் உள்ள திசை,புத்தி வழங்கும் பலாபலன்களும், எதிர்வரும் திசை,புத்தி வழங்கும் பலாபலன்கள் ஆகியவற்றை கருத்தில் கொள்வது மிக மிக அவசியம் ( நட்சத்திர பொருத்தமோ, மற்ற தோஷங்களோ தம்பதியரை வெகுவாக பாதிப்பதில்லை, சுய ஜாதகத்தில் 12 பாவகங்கள் நல்ல வலிமையுடன்  இருப்பின் ரஜ்ஜு பொருத்தம் இல்லை என்றாலும் திருமணம் செய்யலாம், செவ்வாய் மற்றும் ராகுகேது, சனி தோஷங்களும் எவ்வித பாதிப்பையும் தருவதில்லை).

 ஜாதகிக்கு

லக்கினம் : கன்னி
ராசி : விருச்சிகம்
நட்சத்திரம் : அனுஷம் 4ம் பாதம்



ஜாதகருக்கு

லக்கினம் : விருச்சிகம்
ராசி : மிதுனம்
நட்சத்திரம் : திருவாதிரை 1ம் பாதம்



இருவரது சுய ஜாதக அமைப்பின் படி திருமண பொருத்தத்திற்கு அதி முக்கியமான பாவகங்கள் குடும்ப ஸ்தானமான 2ம் பாவக வலிமையையும், களத்திர ஸ்தானமான 7ம் பாவக வலிமையையும், ஆய்வு செய்வோம். 

பெண்ணின் ஜாதகத்தில் குடும்ப ஸ்தானமான 2ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம்.
ஆணின் ஜாதகத்தில் குடும்ப ஸ்தானமான 2ம் வீடு திடீர் இழப்பை தரும் ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் 

பெண்ணின் ஜாதகத்தில் களத்திர ஸ்தானமான 7ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம்.
ஆணின் ஜாதகத்தில் களத்திர ஸ்தானமான 7ம் வீடு பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம்.

தம்பதியருக்கு புத்திரசந்தான யோகத்தை வழங்கும் 5ம் பாவகம், பெண்ணின் ஜாதகத்தில் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம். ஆணின் ஜாதகத்தில் திடீர் இழப்பை தரும் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம்.

தம்பதியர் ஒருவர் வழியில் இருந்து ஒருவர் பெரும் யோக நிலையையும், ஆயுள் அமைப்பையும் குறிக்கும் 8ம் பாவகம், பெண்ணின் ஜாதகத்தில் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம். ஆணின் ஜாதகத்தில் திடீர் இழப்பை தரும் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடனே சம்பந்தம்.

பெண்ணிற்கு தற்பொழுது நடைபெறும் சுக்கிரன் திசை 2,4,8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அவயோக பலன்களையும், ஆணின் ஜாதகத்தில் தற்பொழுது நடைபெறும் குரு திசை 6ம் வீடு சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடனே சம்பந்தம் பெற்று அவயோக பலனை தருவதும் இருவருக்கும் மிகுந்த இன்னல்களையே தரும்.

மேலும் ஜாதகருக்கு எதிர்வரும் சனி திசை 1,3,7,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சனி திசை முழுவதும் பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துவது மிகுந்த இன்னல்களுக்கு ஆளாக்கும், குறிப்பாக ஜாதகர், ஜாதகர் மேற்கொள்ளும் முயற்ச்சிகளில் வரும் தோல்வி, வாழ்க்கை துணை மற்றும் நண்பர்கள் வழியில் இருந்து வரும் தாங்க இயலாத இன்னல்கள், சமுதாயத்தில் ஜாதகருக்கு ஏற்ப்படும் வீண் அவபெயர்கள் என ஜாதகருக்கு எதிர்வரும் சனி திசை மிகுந்த சோதனை காலமாகவே அமையும் என்பது கவனிக்க தக்கது.

எனவே மேற்கண்ட வது வரன் ஜாதகத்தை திருமண வாழ்க்கையில் இணைப்பது என்பது "யானை தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுகொள்வதற்கு" ஒப்பானதாக அமைந்து விடும் என்பது 100% விகித உண்மை, எனவே இருவரது ஜாதகங்களுக்கு, ஜாதக மற்றும் பாவக பொருத்தம் இல்லை என்பதை அறிவுறுத்துவதே சிறந்தது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

திங்கள், 14 செப்டம்பர், 2015

ஜாதக ஆலோசனை : சுய ஜாதக வலிமையும், நடைபெறும் திசை தரும் பலன்களும் !




ஒருவரின் சுய ஜாதகத்தில் பாவக வலிமைக்கு ஏற்ப்பவே யோக அவயோக பலன்கள் சம்பந்தபட்ட ஜாதகருக்கு வழங்குகிறது, சுய ஜாதகத்தில் ஒருவருக்கு உள்ள யோக அவயோக பலன்கள் நடைபெறும் காலம் எதுவென்று துல்லியமாக அறிந்துகொள்வதும், அதன் அடிப்படையில் தமது வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக்கொள்ள திட்டமிடுவதும், குறிப்பிட்ட ஜாதகருக்கு சிறப்பான நன்மைகளை தரும், இதற்க்கு சுய ஜாதகத்தில் யோக அவயோக பலன்கள் நடைபெறும் காலநேரம் எதுவென்று அறிந்துகொள்வது மிக மிக அவசியமானது, நமது நண்பரின் ஜாதகத்தை இதற்காக ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே !


லக்கினம் : கடகம் 
ராசி : கன்னி 
நட்சத்திரம் : சித்திரை 2ம் பாதம் 

ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் மிகவும் வலிமை பெற்ற பாவகங்கள் :

1,3,7,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவதும்,
4,10ம் வீடுகள் சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவதும்,
ஜாதகத்தில் உள்ள வலிமை பெற்ற பாவகங்கள்.

ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் வலிமை அற்ற பாவகங்கள் :

2,8ம் வீடுகள் ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவதும்,
6,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவதும்,
ஜாதகத்தில் உள்ள வலிமை அற்ற பாவகங்கள்.

ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் மிகவும் வலிமை அற்ற பாவகங்கள் :

5,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது ஜாதகத்தில் மிகவும் வலிமை அற்ற கடுமையான இன்னல்களை தரும் பாவகங்கள் ஆகும்.

ஜாதக பொது பலன்கள் :

1,3,7,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது 1ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் நல்ல குணமும், சிறந்த அறிவு திறனையும் ஒருங்கே அமைய பெற்றவர், ஜாதகரின் மனம் மிகவும் பெருந்தன்மையானது, இயற்கையாக ஜாதகருக்கு நல்ல ஆரோக்கியமும், நிறைவான கல்வி அறிவும் கிடைக்க பெற்றவர், சிறந்த நிர்வாக திறமைகளை தன்னகத்தே கொண்டவர், தனது உறவுகள் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றமும், நன்மையையும் பெரும் யோகம் கொண்டவர், 3ம் பாவக வழியில் இருந்து தான் மனதில் நினைத்த லட்சியங்களை அடைய விடா முயற்சியுடன் போராடும் குணமும், இடைவிடாத உழைப்பையும் வெளிபடுத்தும் ஆற்றல் பெற்றவர், புதிய மனிதர்கள், வெளிநாட்டவர், நண்பர்கள் வழியில் இருந்து ஆதரவையும் வாய்ப்புகளையும் பெரும் யோகம் கொண்டவர், ஆராய்ச்சி மனபாண்மையும், சிறந்த புத்திசாலித்தனமும் கொண்டவர், சிறந்த திட்டமிடுதல்களுடன் வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றங்களை பெரும் யோகம் பெற்றவர், சிறந்த வாதத்திறமை ஜாதகரின் வாழ்க்கையை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்லும், தரகு அல்லது ஏற்றுமதி இறக்குமதி வியாபாரத்தில் மிகுந்த லாபத்தை பெரும் யோகம் உண்டாகும்.

7ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் வாழ்க்கை துணையுடன் சிறப்பான இல்லற வாழ்க்கையை பெரும் யோகத்தை தரும், தனது நண்பர்களுக்கு யோகத்தையும் லாபத்தையும் தரும் வல்லமை பெற்றவர், புனித திருத்தலங்களுக்கு சென்று வரும் யோகமும், மிகசிறந்த ஆன்மீகவாதிகளின் அருளாசியும் பெரும் யோகம் பெற்றவர், தான் செய்யும் தொழிலில் நல்ல நுண்ணறிவும், சிறந்த நிர்வாகத்தை கையாளும் வல்லமை பெற்றவர், பொதுமக்கள் மற்றும் பெரியமனிதர்களின் ஆதரவை ஒருங்கே பெரும் யோகம் கொண்டவர், சமூகத்தில் நல்ல மனிதர் என்ற அங்கீகாரத்தை மிக விரைவில் பெற்று வாழ்க்கையில் சிறந்த முன்னேற்றங்களை அடையும் யோகம் உண்டாகும், 9ம் பாவக வழியில் இருந்து சிறந்த அறிவு திறனும், நிர்வாக திறனும் ஜாதகருக்கு வாழ்க்கையில் பல முன்னேற்றங்களை வாரி வழங்கும், செய்த புண்ணியத்தின் பலன்களை ஜாதகர் பரிபூர்ணமாக அனுபவிக்கும் யோகம்  உண்டாகும், அனைவரிடத்திலும் நல்ல பெயர் கிடைக்கும், இடமாற்றம் மற்றும் சூழ்நிலை மாற்றத்தில் விருப்பம் கொண்டவர், சந்தர்பங்களையும் சூழ்நிலைகளையும் தனக்கு சாதகமாக மாற்றி கொள்ளும் அதிபுத்திசாலித்தனம் ஜாதகருக்கு இயற்கையாகவே அமைந்திருக்கும்.

4,10ம் வீடுகள் சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது, ஜாதகருக்கு 4ம் பாவக வழியில் இருந்து மிதமிஞ்சிய சுகபோக வாழ்க்கையை வாழும் யோகம் உண்டாகும், கற்பனையிலும் நினைத்திராத யோகங்களும் சுக போகங்களும் ஜாதகரை தேடி வரும், மிகப்பெரிய சொத்து சுக சேர்க்கைகள் மிக எளிதில் ஜாதகருக்கு கிடக்க பெரும், ஜாதகரின் நல்ல குணம் எங்கு சென்றாலும் வரவேற்ப்பும் சிறப்பான ஆதரவையும் பெற்று தரும், சுய உழைப்பின் மூலம் வாழ்க்கையில் சகல வசதிகளையும் அனுபவிக்கும் தன்மையையும், மிகப்பெரிய சொத்துகளை வாங்கும் யோகத்தையும் தரும், கல்வியில் வெற்றி, சொந்த ஊரில் ஜீவிக்க விருப்பமும் கொண்டவர், மண் மனை வண்டி வாகன யோகம் இயற்கையாகவே அமைய பெற்றவர், கல்வி துறையில் மிகப்பெரிய வெற்றிகளை ஜாதகருக்கு வாரி வழங்கும், 10ம் பாவக வழியில் இருந்து தனது சொத்துகளை மிக எளிதாக விருத்தி செய்தல், வண்டி வாகன தொழில்களில் எதிர்பாராத லாபம், ஆயுள் காப்பீடு மற்றும் வண்டி வாகனத்திற்கு காப்பீடு செய்யும் தொழில் மூலம் அபரிவிதமான முன்னேற்றம், நிரந்தரமான தொழில் மூலம் கை நிறைவான வருமானம் பெரும் யோகம், தனது சொத்துகள் வழியில் இருந்து மிகுந்த லாபத்தையும் அதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கும் தன்மையை தரும், மேற்கண்ட யோக பலன்கள் யாவும் ஜாதகருக்கு நடைபெற ஜாதகர் வடக்கு திசை வாயிற்படி கொண்ட வீட்டில் குடியிருந்தால் மட்டுமே சாத்தியப்படும், குடியிருக்கும் வீடு வேறு திசையில் வாயிற்படி அமைந்து இருப்பின் ஜாதகரின் வாழ்க்கை மிகுந்த போராட்டங்களையே சந்திக்கும் சூழ்நிலையை தரும்.

2,8ம் வீடுகள் ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது 2ம் பாவக வழியில் இருந்து ஜாதகரின் வருமானம் அனைத்தும் திடீர் இழப்பை சந்திக்க கூடும், குடும்பத்தில் அதிக இன்னல்களும், வாக்குவாதமும் ஜாதகரின் வருமானத்தை வெகுவாக பாதிக்கும், உயில் மூலம் லாபமும், இன்சுரன்ஸ் மூலம் திடீர் லாபமும் அதிர்ஷ்டமும் உண்டாகும், வணிக துறையில் ஜாதகருக்கு நல்ல வருமானம் கிடைக்கும், சில நேரங்களில் ஜாதகரின் பேச்சு மிகப்பெரிய இன்னல்களை வாரி வழங்கிவிடும், பண விஷயத்தில் மிகவும் கவனமாக  இருப்பது ஜாதகருக்கு மிகுந்த நன்மையை தரும், 8ம் பாவக வழியில் இருந்து நீண்ட ஆயுளையும், வாழ்க்கையில் சில எதிர்பாராத ஏமாற்றங்களையும் சந்திக்கும் சூழ்நிலையை தரும், எதிர்பாராத விபத்து, மருத்துவ செலவினங்களை தவிர்க்க இயலாது, மற்றவருக்கு பண உதவி செய்வது ஜாமீன் போடுவது போன்ற விஷயங்களை தவிர்த்துவிடுவது நல்லது, ஜாதகருக்கு செல்வத்தை முறையாக கையாளும் தன்மையை கற்று வைத்துகொள்வது மிகுந்த நன்மையை தரும்.

6,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது, 6ம் பாவக வழியில் இருந்து கடன் வாங்குவது கொடுப்பது இரண்டும் ஜாதகரை வெகுவாக பாதிக்கும், தனக்கு கிழ் பணியாற்றும் வேலை ஆட்களுடன் சமாதன போக்கை கடைபிடிப்பது நல்லது, தேவையற்ற வீண் செலவுகளை தவிர்ப்பதும், மருத்துவ செலவினங்களை தவிர்ப்பதும் ஜாதகருக்கு நல்லது, 12ம் பாவக வழியில் இருந்து அதிக மன உளைச்சல்களையும், மனபோரட்டங்களையும் சந்திக்கும் சூழ்நிலையை தரும், வீண் மன கவலை ஜாதகரை தீய பழக்க வழக்கங்களுக்கு ஆர்படுத்தும் எனவே ஜாதகர் மிக எச்சரிக்கையாக இருப்பது நல்லது, எந்த ஒரு தீய பழக்கமும் இல்லாமல் இருப்பது ஜாதகரின் உடல் மற்றும் மனம் இரண்டையும் காப்பற்றும், நல்ல ஆன்மீகவாதிகளின் ஆசிர்வாதம் ஜாதகரின் வாழ்க்கையில் சுபிட்சத்தை வழங்கும்.

5,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது ஜாதகத்தில் மிகவும் இன்னல்களை தரும் அமைப்பாக கருதலாம், 5ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் தனது பூர்வீகத்தை விட்டு வெளியில் சென்று ஜீவனம் தேடும் சூழ்நிலையை உருவாக்கும், குல தெய்வத்தின் நிந்தனை ஜாதகரை வெகுவாக பாதிக்கும், புத்திர பாக்கியத்தில் ( ஆண்வாரிசு ) இன்னல்களை தரும், ஜாதகரின் கல்வி மற்றும் அறிவு திறன் சரியான நேரத்தில் பலன் தாராது, சிறு முன்னேற்றத்திற்கு ஜாதகர் மிகப்பெரிய உழைப்பை தரும் சூழ்நிலையை வரக்கூடும், மன அமைதி கெடும், திட்டமிட்ட செயல்கள் சில நேரங்களில் பெரிய தோல்விகளை தரக்கூடும், சுதந்திரமாக செயலாற்ற இயலாமல் மற்றவர்களுக்கு கட்டுபட்டு இயங்கும் சூழ்நிலையை தரும், பூர்வீகத்தில் ஜீவனதிர்க்கு மிகுந்த இன்னல்களை அனுபவிக்கும் நிலை உருவாகும், தெளிவில்லாத மன நிலையுடன் ஜாதகர் பல போராட்டங்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும்.

11ம் பாவக வழியில் இருந்து அதிர்ஷ்டம் ஜாதகருக்கு பயன்படாமல், ஜாதகரை சார்ந்தவர்களுக்கு பலன் தரும், ஜாதகரின் திட்டமிடுதல்களை மிக எளிதாக முடக்கி வைக்கும், எதை எடுத்தாலும் தடை, தொந்தரவு, போராட்டம் என ஜாதகரை முழு வீச்சில் எதிர்ப்புகளை வழங்கும், தன்னம்பிக்கையை இழக்கும் சூழ்நிலையும், மன நிம்மதி இழப்பையும் வெகுவாக தரும், அதிர்ஷ்டமில்லா போராட்ட வாழ்க்கையை ஜாதகருக்கு தரக்கூடும், திறமை இருந்தும் வெற்றி வாய்ப்புகள் ஜாதகருக்கு எட்டாக்கனியாகவே அமைந்துவிடும்.

மேற்கண்ட யோக அவயோக பலன்கள் ஜாதகருக்கு நடைமுறையில் வரும் கால நேரங்கள் :

ஜெனனத்தில் செவ்வாய் திசை ஜாதகருக்கு 4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று யோக பலன்களையும்,

செவ்வாய் திசைக்கு அடுத்து வந்த ராகு திசை ஜாதகருக்கு 10ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று யோக பலன்களையும்,

ராகு திசைக்கு அடுத்து தற்பொழுது நடைமுறையில் உள்ள குரு திசை ஜாதகருக்கு 3ம் வீடு பாக்கய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று யோக பலன்களையும்,

குரு திசைக்கு அடுத்து வரும் சனி திசை ஜாதகருக்கு 5,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றும், 6,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றும் அவயோக பலன்களையும்,

சனி திசைக்கு அடுத்து வரும் புதன் திசை ஜாதகருக்கு 5,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று அவயோக பலன்களையும்,

புதன் திசைக்கு அடுத்து வரும் கேது திசை ஜாதகருக்கு 2,8ம் வீடுகள் ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று அவயோக பலன்களையும்,

கேது  திசைக்கு அடுத்து வரும் சுக்கிரன்  திசை ஜாதகருக்கு 10ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று யோக பலன்களையும்,

சுக்கிரன் திசைக்கு அடுத்து வரும் சூரியன் திசை ஜாதகருக்கு 4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று யோக பலன்களையும்,

சூரியன் திசைக்கு அடுத்து வரும் சந்திரன் திசை ஜாதகருக்கு 3ம் வீடு பாக்கய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று யோக பலன்களையும், வாரி வழங்குகின்றது.

ஜாதகருக்கு சூரியன்,சந்திரன்,செவ்வாய்,ராகு,குரு,சுக்கிரன் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சம் யோக பலன்களையும்,

சனி,புதன்,கேது திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சம் அவயோக பலன்களையும், வாரி வழங்குவது தெளிவாகிறது.

எனவே ஜாதகர் யோக பலன்கள் நடைமுறையில் உள்ள திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சம காலங்களில் சிறப்பான முன்னேற்றம் மற்றும் நன்மைகளையும், அவயோக பலன்கள் நடைமுறையில் உள்ள திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சம காலங்களில் அதிக அளவில் இன்னல்களையும்,போராட்டங்களையும் சந்திக்க வேண்டி வரும் என்பதால், தனது வாழ்க்கை முன்னேற்றங்களை சிறப்பான கால நேரத்தில் திட்டமிட்டும், சிறப்பற்ற கால நேரத்தில் தவிர்த்தும் நன்மை அடையலாம்.

குறிப்பு :

மேற்கண்ட பாவக தொடர்புகள் தரும் பலன்களுடன் கோட்சார கிரக பலன்களையும் கருத்தில் கொள்வது இன்னும் சிறப்பை தரும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன்
9443355696



சனி, 12 செப்டம்பர், 2015

தொழில் வெற்றிகளை நிர்ணயம் செய்யும்களத்திர பாவகமும் லாப ஸ்தானமும் !


ஒருவரின் தொழில் வெற்றியை நிர்ணயம் செய்வது ஜீவன ஸ்தானம் தானே, எப்படிகளத்திர பாவகமும் லாப ஸ்தானமும் நிர்ணயம் செய்யும் என்ற கேள்வி அன்பர்களுக்கு ஏற்படுவது இயற்கையே! சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவது சம்பந்தபட்ட ஜாதகரை தொழில் ரீதியான தனிப்பட்ட திறமைகளுடன் இயங்க செய்யும் என்பதில் மாற்று கருத்து இல்லை, ஆனால் ஜாதகரின் திறமைகளை அனைத்தையும் வெளி உலகிற்கு கொண்டு வருவது களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகமே, 7ம் பாவகம் வலிமை பெற்று அமர்ந்தால் மட்டுமே ஜாதகரின் தனி தொழில் திறமைகள் வெளி உலகிற்கு தெரிய வரும், சிறந்த மக்கள் தொடர்பு கிட்டும் இதன் மூலம் வாழ்க்கையில் ஜாதகரின் வியாபாரம் விருத்தி பெரும், வியாபரம் விருத்தி செய்தால் மட்டும் போதுமா ?  ஜாதகருக்கு கிடைத்த வியாபர விருத்தியின் மூலம் நல்ல லாபமும் அதிர்ஷ்டமும் 11ம் பாவக வழியில் இருந்தே கிடைக்க பெறுவார்.

எந்த ஒரு தொழிலும் திடீர் முன்னேற்றத்தையும் நிரந்தரமான இடத்தையும் பெறுவதற்கு மக்கள் தொடர்பும், குறிப்பிட்ட தொழிலை செய்துவரும் தொழிலாளர்களின் உறவு நிலையையும் களத்திர பாவகமே நிர்ணயம் செய்யும், தொழிலாளர்களின் ஒருமித்த ஒத்துழைப்பும் சரியான உழைப்பும் ஜாதகருக்கு பரிபூர்ணமாக கிடைக்க வேண்டுமெனில் சுய ஜாதகத்தில் களத்திர பாவகம் வலிமை பெற்று இருந்தால் மட்டுமே சாத்தியம், களத்திர பாவகம் வலிமை பெரும் பொழுது ஜாதகரின் தொழில் விளம்பரமும், அறிமுகமும் வெகு விரைவில் பொதுமக்களிடம் சென்றடையும், இதன் மூலம் ஜாதகரின் வியாபாரம் என்பது பலமடங்கு உயரும், ஜாதகருக்கு தொழில் முன்னேற்றம் என்பது மிகவும் ஸ்திரமாக தங்குதடையின்றி அமையும், எந்த ஒரு தொழிலும் மக்கள் தொடர்பு இன்றி மிகப்பெரிய வெற்றிகளை பெறுவதில்லை என்பதை கவனத்தில் கொள்வது நல்லது, தமது வியாபரம் செழிப்படைய விளம்பர யுக்தியை சரியாக கடைபிடிக்கும் அன்பர்களின் சுய ஜாதகங்களில் அனைத்திலும் களத்திர பாவகம் மிக வலிமையுடன் இயங்கும் என்பது மறுக்க இயலாத உண்மை.

சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவது நல்ல தொழில் வல்லமையையும், களத்திர பாவகம் வலிமை பெறுவது தொழில் விளம்பரம் மற்றும் விருத்தியையும் தந்த போதிலும், தான் செய்யும் தொழில் நிச்சயம் வெற்றி பெரும் என்ற நம்பிக்கையையும், முற்போக்கு சிந்தனையும் தருவது லாப ஸ்தானமான 11ம் பாவக வலிமையே, ஜாதகரின் திட்டமிடுதல்களும், செயல்பாடுகளும் நடைமுறைக்கு வருவதும், மனதில் எண்ணிய எண்ணங்கள் யாவும் நிறைவேறுவது லாப ஸ்தான வலிமையின் அடிப்படையிலேயே, மேலும் தொழில் ரீதியாகவும் வியாபர ரீதியாகவும் ஜாதகருக்கு வரும் லாபங்களையும், அதிர்ஷ்டங்களையும் பரிபூர்ணமாக அனுபவிக்க வைப்பதில் முக்கிய பங்காற்றுவது லாப ஸ்தானமே என்றால் அது மிகையில்லை.

11ம் பாவகம் ஜாதகர் தனது வாழ்க்கையில் என்ன நிலையை அடைய விரும்புகிறாரோ? அந்த நிலைக்கு எடுத்து செல்லும் தன்மை உடையது, எனவே சுய ஜாதகத்தில் 11ம் பாவகம் மிகவும் வலிமையுடன் இருப்பது சிறந்த முன்னேற்றங்களையும் அதிர்ஷ்டங்களையும் ஜாதகருக்கு வாரி வழங்கும், திட்டமிடுதல்கள் அனைத்தையும் நடைமுறைக்கு கொண்டுவரும் வல்லமையை ஒவ்வொருவருக்கும் தருவது சுய ஜாதகத்தில் லாப ஸ்தான வலிமையே, எண்ணங்களின் வேகத்தையும் மனதின் சக்தியையும் நிர்ணயம் செய்வது 11ம் பாவகமே, சுய ஜாதகத்தில் லாப ஸ்தானம் வலிமை பெற்ற அன்பர்கள் ஏதாவது ஒரு வழியில் தனது லட்சியங்களை நிச்சயம் அடைந்துவிடுவார்கள் என்பது உறுதி.

சுய ஜாதகத்தில் 7ம் பாவகம் வலிமை பெறுவது பொதுமக்கள் ஆதரவையும், தொழிலாளர்களின் ஆதரவையும், விளம்பரங்கள் மூலம் விருத்தியையும் வாரி வழங்கும், வியாபர வெற்றியை நிர்ணயம் செய்வது 7ம் பாவக வலிமையே, ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவது ஜாதகரின் தொழில் திறமையையும் சிறந்த நிர்வாக திறமையையும் வாரி வழங்கும், தான் செய்ய வேண்டிய தொழிலை சரியான வயதில் சரியான நேரத்தில் சரியாக தேர்ந்தெடுக்கும் தன்மையை ஜாதகருக்கு இயற்கையாக வாரி வழங்கும், லாப ஸ்தான வலிமை என்பது ஜாதகர் அடைய வேண்டிய லட்சியங்களையும், லாபங்களையும் அதிர்ஷ்டத்துடன் யோகமாக வாரி வழங்கும், ஜாதகரின் எண்ணங்கள் யாவும் பலிதம் பெற செய்யும் தன்மை 11ம் பாவகத்திர்க்கே 100% உண்டு, எனவே சுய ஜாதகத்தில் 7,10,11ம் பாவகம் வலிமை பெறுவது ஜாதகரின் வாழ்க்கையில் தொழில் ரீதியான வெற்றிகளையும் யோகங்களையும் தங்குதடையின்றி வாரி வழங்கும்.

குறிப்பு :

சில அன்பர்கள் திருமணதிற்கு பிறகு தாம் செய்யும் தொழிலில் அபரிவிதமான வெற்றிகளை குவிப்பது களத்திர பாவக வலிமையே, திருமண வாழ்க்கை அமையும் பொழுது சுய ஜாதகத்தில் களத்திர பாவக வலிமை சிறப்பாக செயல்பட ஆரம்பிக்கும், அதிரடியான வியாபர வெற்றிகளை குவிக்க வைக்கும், இதுவரை சராசரி மனிதராக இருந்த அன்பர்களை, புகழ் பெற்ற மனிதர்களாக மாற்றும் வல்லமை களத்திர பாவகத்திர்க்கு 100% உண்டு.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696


திருமண தடைகளை சந்திக்கும் பெண்ணின் ஜாதக அமைப்பு !

  

சுய ஜாதகங்களில் குறிப்பாக பெண்களின் ஜாதகங்களில் குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் பாவகமும், களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகமும் பாதிக்க படுவது சம்பந்த பட்ட ஜாதகியின் திருமண வாழ்க்கையை வெகுவாக பாதிக்கும், திருமணம் செய்துகொள்வதற்கு எடுக்கும் முயற்ச்சிகள் யாவும் தடைபடும், தாமதமாக செய்யும் திருமண வாழ்க்கையும் சோபிப்பது இல்லை, மேலும் வாழ்க்கை துணையின் ஜாதகத்திலும் குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானங்கள் பாதிக்கபட்டு இருப்பின் ஜாதகியின் கதி அதோ கதிதான், கிழ்கண்ட ஜாதகிக்கு திருமண வாழ்க்கை அமையாமல் இதுவரை தடை தாமதங்களை சந்தித்து கொண்டு இருப்பதின் காரணத்தையும், ஜாதகி இனி கருத்தில் கொள்ளவேண்டிய விஷயங்களையும் ஆய்வு செய்வோம் அன்பர்களே !



லக்கினம் : கடகம் 
ராசி : மேஷம் 
நட்சத்திரம் : பரணி 2ம் பாதம் 

 கால புருஷ தத்துவ அமைப்பிற்கு சுக ஸ்தானமான கடக ராசியை லக்கினமாகவும், சர நெருப்பு தத்துவ ராசியான மேஷத்தை ஜென்ம ராசியாகவும், சுக்கிரனின் நட்சத்திரமான பரணியை ஜென்ம நட்சத்திரமாகவும் அமைய பெற்ற இந்த ஜாதகியின் சுய ஜாதகத்தில் பாவக வலிமையை ஆய்வு செய்வோம் அன்பர்களே !

1,5,7,8,11ம் வீடுகள் சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் தொடர்பு,
2,12ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு,
3,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் தொடர்பு,
4,6ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் தொடர்பு,
10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் தொடர்பு,

 மேற்கண்ட ஜாதகத்தில் ஜாதகிக்கு 3,9,10ம் பாவகங்களை தவிர மற்ற அனைத்து பாவகங்களும் பெருவாரியான பாதிப்பில் உள்ளது மிக  தெளிவாக புலனாகிறது, அடிப்படையில் ஒருவரின் சுய ஜாதகத்தில் திருமண வாழ்க்கையை பற்றி நாம் தெரிந்துகொள்ள கவனிக்க வேண்டிய பாவகங்கள் குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவக வலிமையையும், களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவக வலிமையையுமே, மேற்கண்ட ஜாதகத்தில் ஜாதகிக்கு குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் வீடு தொடர்பு பெறுவது பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன், களத்திர ஸ்தானம் எனும் 7ம் வீடு தொடர்பு பெறுவது சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன்.

 ஆக  ஜாதகிக்கு திருமண வாழ்க்கை அமைவதற்கு பல தடைகளையும், இன்னல்களையும் தரும் என்பதை 2,7ம் பாவக வலிமை நமக்கு தெளிவாக உணர்த்திவிடுகிறது, மேற்கொண்டு ஜாதகியின் லக்கினம் சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது தனது வாழ்க்கையை தானே கேடுத்துகொள்ளும் சூழ்நிலையை உருவாக்கும், ஜாதகிக்கு நல்ல வரன்கள் வந்த போதிலும் அனைத்தையும் தனக்கு பொருத்தமில்லை என்று உதறும் தன்மையை தரும், 12ம் பாவகம் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெறுவது ஜாதகியின் எல்லை இல்லா கற்பனை வளத்தை காட்டுவதால், தனது வாழ்க்கை துணை பற்றிய அதிதீவிரமான கற்பனை தேடுதல் மூலம் தனக்கு வரும் வரன்களின் ஜாதகங்கள் அனைத்தையும் தவிர்த்து வருகிறார்.

இதை பார்க்கும் பொழுது கிராமங்களில் பெரியோர் சொன்ன பலமொழிதான்  நமக்கு  ஞாபகம் வருகிறது "ஆசை இருக்கு தாசில் செய்ய அம்சம் இருக்கு கழுதை மேய்க்க" என்பதற்கு இணங்க ஜாதகியின் நடவடிக்கைகள் அமைந்துள்ளது, வயது 30க்கு மேல் முடிந்து விட்டது ஜாதகியின் லக்கினம்,குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானங்கள் திருமண வாழ்க்கையை அமைத்து தாராமல், ஜாதகியை முதிர்கன்னியாக மாற்றிவிட ஆயத்த நிலையில் இருப்பது மறுக்க இயலாத உண்மை அன்பர்களே !

ஜாதகி தனது கற்பனை கணவனை மண்ணில் போட்டு புதைத்து விட்டு, தனக்கு வரும் 2,7ம் பாவகங்கள் வலிமை பெற்ற ஜாதகத்தை தேர்வு செய்து நல்ல இல்லறத்தை நடத்துவதே நல்லது, திருமணத்திற்கு பிறகு இன்னல்கள் வந்த போதிலும் அதை தனது கர்ம வினை பதிவின் விளைவு என உணர்ந்து, தனது இல்லற வாழ்க்கையை செம்மையாக நடத்துவதே சால சிறந்தது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

திங்கள், 31 ஆகஸ்ட், 2015

திசாசந்திப்பும் ( ஏக திசை ) திருமண பொருத்தமும் !


திருமண பொருத்தம் காண வரும் பெற்றோர்கள் தற்பொழுது திசா சந்திப்பு ஆணுக்கும் பெண்ணுக்கும் உண்டா ? இதனால் திருமணதிற்கு பிறகு தம்பதியருக்குள் பிரச்சனைகள் வருமா ? ஒரே நேரத்தில் தம்பதியர் இருவரும் ஒரு திசை நடைமுறையில் இருந்தால் திருமண வாழ்க்கையில் இன்னல்கள் வரும் என்று கூறுகின்றனர் எனவே தம்பதியரின் ஜாதகத்தில் திசாசந்திப்பு உள்ளத என்பதை சொல்லுங்கள் என்ற ஒரு கேள்வியை முன் வைக்கின்றனர், திருமண பொருத்ததில் ஏக திசை சந்திப்புக்கு முக்கியதுவம் தருவது அவசியம் என அனைத்து ஜோதிடர்களும் அறிவுறுத்துகின்றனர், அதாவது திருமணம் செய்வதற்கு முன் வது,வரனின் ஜாதகத்தில் இருவருக்கும் ஒரே திசை நடைபெற்றால் ஜாதக பொருத்தம் கிடையாது, திருமணம் செய்தால் இருவருக்கும் ஒரே திசை நடைமுறையிலும், தொடர்ந்தும் வரும் பொழுது நன்மை நடைபெறாது என்பது பல ஜோதிடர்களின் வாதமாக இருக்கிறது, சமீப காலங்களில் இது அதிக அளவில் மிகைபடுத்தபட்டு, பொதுமக்களிடம் சென்று இருக்கிறது, திசாசந்திப்பு ( ஏக திசை ) பற்றியும் அதன் உண்மை நிலையை பற்றியும் சற்று இந்த பதிவில் சிந்திப்போம் அன்பர்களே!

தம்பதியர் இருவருக்கும் ஒரே திசை நடைமுறையில் இருந்தால் நன்மையை தாராது, இன்னல்களை தரும் என்ற வாதமே தவறானதாக "ஜோதிடதீபம் " கருதுகிறது, பொதுவாக ஒருவரது சுய ஜாதகத்தில் நடைபெறும் திசை எவ்வித பலன்களை  ( எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்ற அடிப்படை விஷயம் ) வழங்குகிறது என்பது தெரியாத பொழுதே இந்த குழப்பம் ஏற்ப்பட வாய்ப்புண்டு அன்பர்களே ! 

பொருத்தம் காண வரும் ஆண் பெண் இருவரது ஜாதகத்திலும் ஒரே திசை நடைமுறையில் இருந்தாலும், ஆணுக்கு நடைபெறும் திசை எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது, பெண்ணுக்கு நடைபெறும் திசை எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்ற தெளிவு பெறுவது மிக மிக அவசியமாகிறது, இருவருக்கும் நடைபெறும் திசை வலிமை பெற்ற பாவக பலனை நடத்தினால், தம்பதியர் இருவருக்கும் குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து நன்மைகளே நடைபெறும், ஒரு வேலை பாதிக்கபட்ட பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே அவயோக பலன்கள் நடைமுறைக்கு வரும், பொதுவாக இருவருக்கும் ஒரே திசை நடைபெறுவது இன்னல்களையே தரும் என்று முடிவு செய்வதும், பொருத்தம் இல்லை என முடிவு செய்வதும் ஜாதக கணிதம் பற்றிய தெளிவும், ஜோதிட ஞானமும் அற்றவர்கள் செய்யும் காரியமாகவே படுகிறது.

கிழ்கண்ட தம்பதியரின் ஜாதகங்களை உதாரணம் கொண்டு காண்போம் அன்பர்களே !

ஆண் ஜாதகம் :



பெண் ஜாதகம் :


மேற்கண்ட இருவருக்கும் திருமணம் நடந்து 4 வருடங்கள் முடிந்துவிட்டது, ஜாதகர் ஒரு சிறந்த வெளிநாட்டு நிறுவனத்தில் பணியில் உள்ளார், ஜாதகி வீட்டு கடமைகளை சிறப்பாக கவனித்து வருகிறார், சிறந்த ஆண் வாரிசு உண்டு, திருமண வாழ்க்கை மிகவும் சிறப்பாக உள்ளது, திருமணதிற்கு பிறகு ஜாதகர்  பொருளாதார ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் நல்ல முன்னேற்றங்களை பெற்று வருகிறார், இனி விஷயத்திற்கு வருவோம்.

தம்பதியர் இருவருக்கும் தற்பொழுது நடைமுறையில் உள்ள திசை குரு திசையாகும், குரு திசை ஜாதகருக்கு ( 20/04/2015 முதல் 20/04/2031 வரையிலும் )  நடைபெறுகிறது, ஜாதகிக்கு குரு திசை ( 27/02/2014 முதல் 27/02/2030 வரையிலும் ) நடைபெறுகிறது, எனவே இருவரும் ஒரே திசை சந்திப்பு பெறுவதால் இன்னல்களே நடைபெறும் என்று முடிவு செய்யலாமா? அப்படி செய்தால் அதைவிட முட்டாள் தனம் வேறு ஒன்றும் இல்லை மேலும் ஜாதகத்தை கணிதம் செய்தவருக்கு ஜோதிடம் சாஸ்திரம் பற்றி ஒன்றும் தெரியவில்லை என்பதே முற்றிலும் உண்மை.

இருவருக்கும் நடைபெறும் குரு திசை எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்பதை ஆய்வு செய்வது குரு திசை இருவருக்கும் தரும் பலாபலன்கள் பற்றி தெளிவை தரும்.

ஜாதகருக்கு நடைபெறும் குரு திசை ஏற்று நடத்தும் பாவக தொடர்புகள் மற்றும் பலன்கள் :

2,5,11ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று குரு திசை யோக பலன்களை  வாரி வழங்குவது ஜாதகருக்கு 2ம் பாவக வழியில் இருந்து குடும்பத்தில் மகிழ்ச்சியும், நல்ல வருமான வாய்ப்புகளையும், 5ம் பாவக வழியில் இருந்து குழந்தைகள் மூலம் யோகமும், நல்ல வாரிசும், தனது சுய புத்திசாலிதனத்தால் தொழில் அபவிரித்தியும், 11ம் பாவக வழியில் இருந்து செய்யும் தொழிலில் அபரிவிதமான வளர்ச்சியும், அதிர்ஷ்ட வாய்ப்புகளையும், பதவி உயர்வுகளையும், சமுதாயத்தில் கௌரவம் அந்தஸ்து போன்ற விஷயங்கள் ஜாதகரை தேடி வரும் யோகத்தையும் பெறுகின்றார்.

ஜாதகிக்கு நடைபெறும் குரு திசை ஏற்று நடத்தும் பாவக தொடர்புகள் மற்றும் பலன்கள் :

9ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடனே சம்பந்தம் பெற்று குரு திசை  யோக பலன்களை  வாரி வழங்குவது ஜாதகிக்கு எங்கு சென்றாலும் நற்ப்பெயரும் புகழும் உண்டாகும், தனது அறிவு வழியில் பல யோக பலன்களை ஜாதகி அனுபவிக்கும் தன்மையை தரும், கற்ற கல்வியின் மூலம் வாழ்க்கையில் சுய முன்னேற்றம் பெரும் யோகத்தை தரும், ஆக தம்பதியர் இருவருக்கும் தற்பொழுது நடைபெறும் குரு திசை மிகுந்த யோக பலன்களை வாரி வழங்குவது தாம்பத்திய வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், தொழில், பொருளாதார ரீதியான வளர்ச்சிகளையும் 100% விகிதம் வாரி வழங்குவதும், ஏக திசை தம்பதியருக்கு மிகுந்த யோக பலன்களையே தருகிறது என்பது தெளிவாகிறது.

அடுத்து வரும் சனி திசை தரும் பலன்களை பற்றி சிறிது சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே !

ஜாதகருக்கு அடுத்து வரும் சனி திசை 1ம் வீடு உயிர் உடலாகிய லக்கினத்துடன் தொடர்பு பெற்று, 1ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு மிகுந்த யோக பலன்களையே வாரி வழங்குகிறது.

ஜாதகிக்கு அடுத்து வரும் சனி திசை 2,6,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 2ம் பாவக வழியில் இருந்து குடும்பத்தில் மகிழ்ச்சியும், சிறந்த வருமான வாய்ப்புகளையும், 6ம் பாவக வழியில் இருந்து செய்யும் தொழிலில் திடீர் அதிர்ஷ்டங்களும் முன்னேற்றங்களையும், நல்ல உடல் ஆரோக்கியத்தையும், 10ம் பாவக வழியில் இருந்து நிரந்தரமான தொழில் வாய்ப்புகளையும்,தொழில் ரீதியான அபரிவித வளர்ச்சிகளையும், வாரி வழங்குவது தெளிவாகிறது.

எனவே அன்பர்களே, தம்பதியரின் ஜாதகங்களில் இருவருக்கும் ஒரே திசை நடைபெற்றாலும், நடைபெறும் திசை எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்பதை தெளிவாக தெரிந்துகொண்டு பலன் கூறுவதே சரியான ஜோதிட கணிதம், சுய ஜாதகத்தில் உள்ள பலன்களுக்கு மாறாக பலன்களை கூறுவது, ஜாதக பலன்கான வந்தவருக்கு இன்னல்களை தரும், அதை பலனாக கூறியவருக்கு மிகுந்த இன்னல்களை வாரி வழங்கிவிடும்.

குறிப்பு :

மேற்கண்ட ஜாதகங்களுக்கு ரஜ்ஜு பொருத்தம் இல்லை என்று திருமணத்தை நிறுத்தும் நிலைக்கு வந்த வரன் வதுவின் பெற்றோர்களுக்கு, ஜாதகத்தில் உள்ள பாவக வலிமை நிலையை பற்றியும், நடைபெறும் திசைகள் தரும் யோகங்கள் பற்றியும் "ஜோதிடதீபம் " சரியான விளக்கம் தந்து கடந்த நான்கு வருடங்களுக்கு முன் திருமண வாழ்க்கையில் இணைத்து வைத்தது, அதன் பிறகு இது வரையிலும் தம்பதியரின் வாழ்க்கையில் யோகங்களுக்கு குறைவு இல்லை  முன்னேற்றத்திற்கும் தடையில்லை என்பது கவனிக்க தக்கது, இவை அனைத்திற்கும் காரணம் இறை அருளின் கருணையே!

எனவே திருமண வாழ்க்கையில் சுய ஜாதகத்தில் பாவக வலிமையை உணர்ந்து திருமணம் அமைத்து தரும் பொழுது, தம்பதியரின் வாழ்க்கை மிகவும் வெற்றிகரமாக அமைகிறது, இதில் செவ்வாய் தோஷமோ, சர்ப்ப தோஷமோ, களத்திர தோஷமோ,ரஜ்ஜு பொருத்தமோ, திசாசந்திப்போ,
 எவ்வித இன்னல்களையும் தருவதில்லை அன்பர்களே, இதுவே முற்றிலும் உண்மை.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

தொழில் நிர்ணயம் : சுய ஜாதக வலிமைக்கு பொருத்தமான தொழில் அல்லது வேலையை தேர்வு செய்வது எப்படி ?


" உத்தியோகம் புருஷ லட்சனம் " என்ற பழமொழிக்கு வலிமையை சேர்ப்பது அனைவரின் ஜாதகத்தில் உள்ள ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகமே, ஒரு ஜாதகரின் தொழில் அல்லது வேலைய நிர்ணயம் செய்வதில் லக்கினம் முதல் 12 பாவகங்களும் பங்கு வகித்தாலும், ஜீவன ஸ்தானமே முக்கிய பங்குவகிக்கிறது, சுய ஜாதகத்தில் ஜாதகருக்கு உண்டான சரியான தொழில் தேர்வு செய்யவும், சரியான நேரத்தில் ஜாதகருக்கு ஜீவன ரீதியான அறிமுகங்களையும் தேர்ச்சியும் தந்து வாழ்க்கையில் தொழில் ரீதியான முன்னேற்றங்களை வாரி வழங்குகிறது.

அடிப்படையில் ஒருவர் தொழில் அல்லது வேலையை தேர்வு செய்யும் முன் தனது சுய ஜாதகத்தில் உள்ள ஜீவன ஸ்தான வலிமையையும், மற்ற பாவகங்களின் வலிமையையும் கருத்தில் கொண்டு சரியான தொழில் அல்லது வேலையை தேர்வு செய்து வெற்றி பெறலாம், சுய தொழில் செய்ய விருப்பமுள்ள ஒவ்வொருவரும் தனது ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகம் மிக மிக வலிமையாக இருப்பது அவசியமாகிறது, ஒருவரது சுய ஜாதகத்தில் 10ம் பாவகம் 6,8,12ம் வீடுகளுடனோ, பாதக ஸ்தானத்துடனோ சம்பந்தம் பெற்று இருந்தாலோ, நடைபெறும் அல்லது எதிர் வரும் திசை ஜாதகருக்கு பாதிக்க பட்ட பாவகத்தின் பலனை ஏற்று நடத்தினாலோ, ஜாதகர் எக்காரணத்தை கொண்டும் சுய தொழில் செய்வதை தவிர்ப்பதே நல்லது, சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெற்று இருந்து, நடைபெறும் திசை எதிர்வரும் திசை வலிமை பெற்ற ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்தினால் ஜாதகரின் தொழில் மற்றும் ஜீவன மேன்மை மிகவும் சிறப்பாக அமையும்.

உதாரணமாக கிழ்கண்ட ஜாதகிக்கு, ஜாதக ரீதியாக தொழில் நிர்ணயம் செய்வது  பற்றி ஆய்வு செய்வோம் அன்பர்களே!


லக்கினம் : கன்னி 
ராசி : கன்னி 
நட்சத்திரம் : அஸ்தம் 3ம் பாதம் 

ஜாதகிக்கு 10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகி ஒரு இடத்தில் வேலை செய்வதை விட சுய தொழில் செய்வதே சிறப்பான வெற்றிகளை தரும் என்பது உறுதியாகிறது, ஜாதகியின் ஜீவன ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 3ம் வீடாக அமைவதும், உபய காற்று தத்துவத்தில் இயக்கம் பெறுவதாலும், ஜாதகிக்கு ஏஜென்சி துறையிலும், தரகு சார்ந்த தொழில்களிலும் வெற்றியை தரும், தனது அறிவு திறனை பயன்படுத்தி செய்யும் தொழில்களில் ஜாதகிக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

ஜாதகிக்கு வருமானம் எங்கிருந்து வருகிறது என்பதை ஆய்வு செய்வோம், ஜாதகியின் குடும்பம் மற்றும் வருமானத்தை குறிக்கும் 2ம் பாவகம் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் வீடாக வருவது ஜாதகி வாழ்க்கை துணை, நண்பர்கள், பொதுமக்கள் வழியில் இருந்து வருமான வாய்ப்பை தனது அறிவு சார்ந்த விஷயங்களில் இருந்து பெறுவார் என்பது தெளிவாகிறது, வரும் வருமானம்  ஜாதகிக்கு மீண்டும் தொழில் முதலீட்டில் பயன்படும் என்பதை 2ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது உறுதிபடுத்துகிறது, பொதுவாக சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவது சம்பந்தபட்ட ஜாதகருக்கு சுய தொழில் வாய்ப்பை வழங்கும், லாப ஸ்தானமான  11ம் பாவகம் வலிமை பெறுவது செய்யும் தொழிலில் நல்ல லாபத்தை தரும்.

மேற்கண்ட ஜாதகிக்கு ஜீவன ஸ்தானம் வலிமை பெற்று உபய ராசியில் அமைவது செய்யும் சுய தொழில் சிறு முதலீடு செய்வதையும், லாப ஸ்தானம் வலிமை பெற்று சர ராசியில் அமைவது செய்யும் தொழிலில் பெரும் அபரிவிதமான லாபத்தையும் தெளிவுபடுத்துகிறது, ஜாதகி தான் செய்யும் தொழிலை தனிப்பட்ட முறையில் செய்ய வேண்டும் என்பதையும், கூட்டு தொழில் ஜாதகிக்கு பெரிய இழப்பை தரும் என்பதை 7ம் வீடு ஆயுள் மற்றும் திடீர் இழப்பை தரும் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மிக தெளிவாக ஜாதகம் அறிவுறுத்துகிறது.

நடைபெறும் குரு திசை ஜாதகிக்கு பாக்கிய ஸ்தான பலனை செய்வது யோகம் என்ற போதிலும், குரு திசை சனி புத்தியே ஜாதகிக்கு 2,6,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தருவதால், குரு திசை சனி புத்தியே ஜீவன ரீதியான முன்னேற்றத்தையும், தொழில் துவக்கத்தையும் தரும் என்பது கவனிக்க தக்கது, ஆக ஜாதகிக்கு எதிர்வரும் சனி புத்தி சுய தொழில் துவங்கவும், தொழில் ரீதியான வெற்றிகளை பெறுவதற்கும் வாய்ப்பை தரும் என்பது தெளிவாகிறது.

சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெற்று இருப்பின் ஜாதகர் சுய தொழில் செய்ய யோகம் பெற்றவராகிறார், சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை இழக்கும் பொழுது ஓரிடத்தில் பணியாற்றும் யோகத்தையே பெறுகிறார், மேலும் 7ம் பாவகம் வலிமை பெற்றால் மட்டுமே ஜாதகருக்கு கூட்டு தொழில் முன்னேற்றம் தரும், சுய ஜாதகத்தில் 7,10ம் வீடுகள் பாதிக்கப்படும் பொழுது ஓரிடத்தில் பணிபுரிவதே சால சிறந்தது என்பதை கவனத்தில் கொள்வது நல்லது.

குறிப்பு :

ஜீவன ஸ்தானம் ஜாதகிக்கு வலிமை பெற்று மிதுனத்தில் அமைவதால், சிறிய முதலீட்டின் மூலம் ஒரு ஏஜென்சி எடுத்து நடத்துவது மிகுந்த லாபத்தை தரும் என்பது கவனிக்க தக்கது, தரகு சார்ந்த வியாபாரங்கள் மூலமும் நல்ல வருமானம் கிடைக்கும், இருப்பினும் ஜீவன ஸ்தான அதிபதியை கருத்தில் கொண்டு தொழிலை தேர்வு செய்யும் பொழுது தொழில் ரீதியான வெற்றி 100% விகிதம் உறுதிபடுத்தப்படும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன்
9443355696    

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015

திருமண தடைகளையும், திருமணத்திற்கு பிறகு இன்னல்களையும் அனுபவிக்கும் ஜாதக நிலை !


 திருமணம் ஒருவருக்கு சரியான வயதில், சிறப்பாக அமைவது என்பது அவரின் வாழ்க்கையில் வரும் முன்னேற்றங்களுக்கு சரியான அடித்தளத்தை அமைத்து தரும், ஜாதகத்தில் உள்ள யோக பலன்களை பரிபூரணமாக அனுபவிக்கும் சந்தர்ப்பங்களையும் சூழ்நிலைகளையும் தங்கு தடையின்றி வாரி வழங்கும், ஆண்  என்றாலும் சரி பெண் என்றாலும் சரி, திருமண வயது வந்தவுடன் எந்த காரணத்தை கொண்டு திருமணத்தை தள்ளிபோடாமல், இல்லற வாழ்க்கையில் இணைந்து நன்மைகளையும் யோகங்களையும் அனுபவிப்பதே சிறந்த வாழ்க்கையை தரும்.

தன் ஜாதகம் சற்று பாவக வலிமை அற்று இருப்பினும், தனது வாழ்க்கை துணையின் ஜாதகம் சிறப்பாக அமைந்தால் இல்லற வாழ்க்கையில் இனிமையும் மகிழ்ச்சியும் பொங்கும், இதற்க்கு தனது சுய ஜாதகத்தின் பாவக வலிமை நாம் உணர்ந்து இருப்பது நல்ல ஏனெனில், நமது ஜாதக நிலையை பற்றிய தெளிவு இருந்தால் மட்டுமே, வாழ்க்கை துணையுடன் நமது இல்லற வாழ்க்கை எப்படி அமையும் என்ற விழிப்புணர்வுடன் நடந்துகொள்ள இயலும், மாறாக நமது ஜாதக வலிமையை உணராத பொழுது, விதியின் மீது காரணம் சொல்லிக்கொண்டு முரண்பட்ட இல்லற வாழ்க்கையை, போராட்டத்துடன் சந்திக்கும் சூழ்நிலையை தரும்.

சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் 12 பாவகங்களின் வலிமைக்கு ஏற்ப்பவே நமக்கு நடைபெறும் பலாபலன்கள் நடைமுறைக்கு வருகிறது, சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து யோக பலன்களும், வலிமை அற்ற பாவக வழியில் இருந்து அவயோக பலன்களும் நடைபெறுகிறது, இதை திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் நடைமுறைக்கு கொண்டுவருகிறது, ஒரு சில வினாடிகள் வித்தியாசத்தில் பிறந்த இரட்டையர்களுக்கு கூட ஒரே பலாபலன்கள் நடைமுறைக்கு வருவதில்லை, காரணம் பாவக வலிமை என்பது ஒரு வினாடியில் மாற்றம் பெறக்கூடும், சுய ஜாதக வலிமையை பற்றி தெளிவு பெரும் பொழுது தமது வாழ்க்கை பாதையை மிகவும் சிறப்பாக அமைத்துக்கொண்டு, வாழ்க்கையில் பல வெற்றிகளை மிக எளிதாக பெற இயலும் அன்பர்களே!

கிழ்கண்ட ஜாதகத்தில் பாவகங்களின் வலிமையை பற்றியும், நடைபெறும் திசை, எதிர்வரும் திசை தரும் பலாபலன்கள் பற்றியும், தனது ஜாதக வலிமைக்கு ஏற்ப தனது வாழ்க்கையை எவ்வாறு சிறப்பாக 
அமைத்துக்கொண்டு வெற்றி பெறுவது என்பதை பற்றியும் சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே!

இயற்கையாக நமது சுய ஜாதகம் வலிமை பெரும் பொழுதும், நடைமுறையில் அல்லது எதிர்வரும் திசைகள் வலிமை பெற்ற பாவகத்தின் பலனை ஏற்று நடத்தும் பொழுதும் சம்பந்தபட்ட பாவக வழியில் இருந்து யோக பலன்களை நாம் தங்குதடையின்றி அனுபவிக்க இயலும், மாறாக சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமை குறைந்து, நடைபெறும் அல்லது எதிர்வரும் திசைகள் வலிமை அற்ற பாவகத்தின் பலனை ஏற்று நடத்தினால், எப்படிபட்ட தீர்வுகளை  விழிப்புணர்வுடன் நாம் கையாண்டு, நன்மைகளை பெறுவது என்பதை பற்றி இனி பார்ப்போம்.

கிழ்கண்ட ஜாதகிக்கு 

லக்கினம் : மேஷம் 
ராசி : ரிஷபம் 
நட்சத்திரம் : ரோகிணி 4ம் பாதம் 


ஜாதகத்தில் பாவகங்களின் வலிமை நிலை 

1,4,5,7,9,11,12ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம்,
2,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம்,
3ம், வீடு சகோதர ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம்,
6ம் வீடு சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம்,
10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம்,

எனவே ஜாதகி 1,4,5,7,9,11,12ம் பாவக வழியில் இருந்து 200% விகித இன்னல்களையும், 2,6,8ம் பாவக வழியில் இருந்து 60% விகித இன்னல்களையும், 3ம் பாவக வழியில் இருந்து 30% விகித நன்மைகளையும், 10ம் பாவக வழியில் இருந்து 100% விகித நன்மைகளையும் அனுபவிக்கும் தன்மையை தரும்.

தற்பொழுது நடைமுறையில் உள்ள ராகு திசை ஜீவன ஸ்தான பலனையும், பாதக ஸ்தான பலனையும் கலந்து நடைமுறை படுத்துகிறது, எனவே ஜாதகி ஜீவன வழியில் இருந்து யோக பலன்களையும், பாதக ஸ்தான வழியில் இருந்து அவயோக பலன்களையும் அனுபவிக்கும் தன்மையை தரும், எதிர்வரும் குரு திசை ஜாதகிக்கு பாதக ஸ்தான பலனை மட்டுமே நடைமுறைபடுத்துவது, மிகுந்த இன்னல்களுக்கும் சிரமங்களுக்கும் ஆளாக்கும் என்பதால், இனி வரும் காலங்களில் ஜாதகி அதிக விழிப்புணர்வுடன் வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டும்.

பெரும்பாலான பாவகங்கள் (3,10 பாவகங்களை தவிர ) ஜாதகிக்கு மிகுந்த பாதிப்பை தருவதால் ஜாதகி பாதிக்க பட்ட பாவகங்களில் இருந்து வரும் இன்னல்களை எதிர்கொள்ளும் மன நிலைக்கு வந்துவிடுவது, ஜாதகியை பாதிக்கபட்ட பாவக வழி இன்னல்களை மிக எளிதாக கையாளும் வாய்ப்பை தரும், ( உதாரணமாக 7ம் பாவக வழியில் இருந்து இன்னல்கள் வரும் எனும் பொழுது ஜாதகி அடிப்படையில் தனது நண்பர்களை தேர்வு செய்யும் பொழுது எச்சரிக்கையுடன் இருக்கலாம், கூட்டு முயற்ச்சியை தவிர்க்கலாம், வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் பொழுது அவரது ஜாதகம் மிகவும் வலிமை உடையதாக தேர்வு செய்யலாம், பொது காரியங்களில் ஈடுபடாமல், தனது வேளையில் மட்டும் கவனம் செலுத்தலாம் ) தனது ஜாதகம் வலிமை அற்று இருப்பதை உணர்ந்தால் மட்டுமே மற்ற விஷயங்களில் ஜாதகி கவனமுடன் இருந்து நன்மைகளை பெற இயலும், தனது ஜாதக வலிமையை பற்றி தெரியாத பொழுது ஜாதகி பாவகங்களின் தன்மைக்கு ஏற்ப விதி பயனை அனுபவிக்கும் சூழ்நிலையை தந்துவிடும்.

ஜாதகிக்கு வயது 25, இதுவரை தனக்கு வந்த நல்ல வரன்கள் அனைத்தையும் ஏதாவது காரணங்களை சொல்லி தவிர்த்து வருகிறார், தனது ஜாதக வலிமையை பற்றி தெரியாமல், ஜாதகி விதி பயனை அனுபவித்துக்கொண்டு இருப்பது எதார்த்தமான உண்மை, மேற்கண்ட ஜாதக வலிமையை பற்றிய விஷயத்தை ஜாதகிக்கு எடுத்து கூறி, சரியான இல்லற வாழ்க்கையை அமையை " ஜோதிடதீபம் " அறிவுறுத்தியது, ஜாதகியின் பாவக வலிமைக்கு ஏற்றப்ப, மிகவும் வலிமையான பாவகங்களை பெற்ற, வரனின் ஜாதகத்தை தேர்வு செய்து ஜாதகிக்கு பரிந்துரை செய்தது, ஜாதகியும் ஜாதகியின் பெற்றோரும் இதை ஏற்றுக்கொண்டு சரியான இல்லற வாழ்க்கையை தமது மகளுக்கு அமைத்து தர இசைந்தது இறை அருளின் கருணையே.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696   

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

திருமண பொருத்ததில் வது வரனின் ஜாதகத்தில் பாவக வழி ஆய்வு!

 

 திருமண பொருத்ததில் வது வரனின் ஜாதகத்தில், 12 பாவகங்களின் வலிமையை அடிப்படையாக கொண்டும், நடைமுறையில் உள்ள திசை புத்திகளும், எதிர்வரும் திசைபுத்திகளும், எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்பதை கருத்தில் கொண்டும் பொருத்தம் நிர்ணயம் செய்யும் பொழுது தம்பதியரின் எதிர்கால வாழ்க்கை எவ்விதம் அமையும் என்பதை தெளிவாக உணர்ந்துகொள்ள இயலும், இதை இரண்டு உதாரண ஜாதகம் கொண்டு ஆய்வு செய்வோம் அன்பர்களே !

வதுவின் ஜாதக நிலை :

 
லக்கினம் : மகரம் 
ராசி : கும்பம் 
நட்சத்திரம் : சதயம் 1ம் பாதம் 

பெண்ணின் ஜாதகத்தில் பாவக தொடர்புகள் :

1,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் தொடர்பு,
2,6,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் தொடர்பு,
3,4,5,8,11,12ம் வீடுகள் சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் தொடர்பு,
10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் தொடர்பு,

( பெண்ணின் ஜாதகத்தில் எந்த ஒரு பாவகமும் பாதிக்கபடாமல் இருப்பது வரவேக்க தக்கது )

வரனின் ஜாதக நிலை :


லக்கினம் : கன்னி 
ராசி : சிம்மம் 
நட்சத்திரம் : பூரம் 3ம் பாதம் 

ஆணின் ஜாதகத்தில் பாவக தொடர்புகள்:

1,3,5,7,9,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு,
2,4,6,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் தொடர்பு,
8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் தொடர்பு,

( ஆணின் ஜாதகத்தில் 8,12ம் வீடுகள் மட்டும் பாதிக்க பட்டு இருப்பது 50% விகித இன்னல்களை மேற்கண்ட பாவக வழியில் இருந்து ஜாதகர் அனுபவிக்க கூடும், 12ம் பாவக பலனை  தற்பொழுது அல்லது எதிர் வரும் திசை ஏற்று நடத்தினால் மட்டுமே இது சாத்தியம் )

தம்பதியரின் திருமண வாழ்க்கையின் வெற்றியை நிர்ணயம் செய்யும் விஷயங்கள் கிழ்கண்டவாறு :

லக்கினம் :

தம்பதியர் இருவரின் ஜாதகத்திலும் லக்கினம் முறையே பெண்ணுக்கு களத்திர பாவகத்துடன் தொடர்பு பெறுவதும், ஆணுக்கு லாப ஸ்தானத்துடன் தொடர்பு பெறுவதும் உடல் உயிரான இலக்கின வலிமையை தெளிவு படுத்துகிறது, பெண் தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து யோகங்களையும், ஆண் லாப ஸ்தான வழியில் இருந்து அதிர்ஷ்டத்தையும், யோகங்களையும் பெரும் தன்மையை தருகிறது.

2ம் வீடு குடும்ப ஸ்தானம் :

பெண்ணின் ஜாதகத்தில் 2ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது குடும்ப வாழ்க்கையில், சந்தோஷத்தையும் முன்னோர்களின் ஆசியையும் பெரும் யோகத்தை தருகிறது, ஆணின் ஜாதகத்தில் 2ம் வீடு கௌரவத்தையும், ஜீவனத்தையும் குறிக்கும் 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று தொழில் மேன்மையுடன் கூடிய வருமானத்தை தருகிறது.

4ம் வீடு சுக ஸ்தானம் :

பெண்ணின் ஜாதகத்தில் 4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடனே சம்பந்தம் பெறுவது நல்ல உயரிய குணத்தையும், பெருந்தன்மையான மன நிலையையும் தருகிறது, சுக போக வாழ்க்கையில் யோகத்தை வாரி வழங்குகிறது, ஆணின் ஜாதகத்தில் 4ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகரின் தொழில் மூலம் சொத்து சுக சேர்க்கையையும் அபரிவிதமான சுக போக வாழ்க்கையும், நல்ல குணத்தையும் தருகிறது.

5ம் வீடு புத்திர ஸ்தானம் :

பெண்ணின் ஜாதகத்தில் 5ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது புத்திர பாக்கியத்தில் சிறு கால தாமத்தை தந்தபோதிலும், நல்ல குழந்தை பாக்கியத்தை தரும், ஜாதகியின் புத்திசாலித்தனம் வாழ்க்கையில் பல யோகங்களை வாரி வழங்கும், ஆணின் ஜாதகத்தில் 5ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது தனது குலம் விளங்க நல்ல அதிர்ஷ்டகரமான ஆண்  வாரிசை வழங்கும், ஜாதகரின் சமயோசித புத்திசாலித்தனம் ஜாதகரின் வாழ்க்கையில் முன்னேற்றத்தையும் அதிர்ஷ்டத்தையும் வாரி வழங்கும்.

7ம் வீடு களத்திர ஸ்தானம் :

பெண்ணின் ஜாதகத்தில் 7ம் வீடு களத்திர பாவகமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, தனது வாழ்க்கை துணையுடன் உண்டான பிரிவு இல்லா இணக்கமான தாம்பத்தியத்தை வழங்கும், வாழ்க்கை துணை வழியில் இருந்து ஜாதகி யோக பலன்களை அனுபவிக்கும் தன்மையை தரும், ஆணின் ஜாதகத்தில் 7ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, திருமணத்திற்கு பிறகு தனது வாழ்க்கை துணையின் மூலம் அதிர்ஷ்டகரமான யோக வாழ்க்கையை பெரும் யோகத்தை தரும், மகிழ்ச்சிக்கும் தாம்பத்திய இன்பத்திற்கும் குறைவில்லா யோக வாழ்க்கையை வாரி வழங்கும்.

8ம் வீடு ஆயுள் ஸ்தானம் :

பெண்ணின் ஜாதகத்தில் 8ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து சொத்து சுக சேர்க்கையும், அதிக வருமானங்களையும், நீண்ட ஆயுளையும் பெற்று தரும், தனது வாழ்க்கை துணை மூலம் மிகப்பெரிய சொத்து சுக சேர்க்கையை வழங்கும், ஆணின் ஜாதகத்தில் 8ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் பொருள் இழப்பையும், சிறு கருத்து வேறுபாடும் ஏற்ப்பட்ட போதிலும் ஆயுள் பூரணமாக உண்டு.

10ம் வீடு ஜீவன ஸ்தானம் :

தம்பதியர் இருவரது ஜாதகத்திலும் ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவது, கௌரவம் குறையாத யோக வாழ்க்கையை தரும், ஜாதகி சுய தொழில் மூலம் வெற்றியும், ஜாதகருக்கு செய்யும் தொழில் மூலம் அதிர்ஷ்டமும் அபரிவிதமான லாபங்களும் உண்டாகும்.

12ம் வீடு சயன ஸ்தானம் :

தம்பதியர் ஜாதகத்தில் பெண்ணின் ஜாதகத்தில் 12ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது தாம்பத்திய வாழ்க்கையில், இருவருக்கு உண்டான நெருக்கத்தையும், அன்பையும் அதிகரிக்கும், வாழ்க்கை துணைக்கு பரிபூர்ண அன்பையும் பாசத்தையும் வழங்கும் சிறந்த பதிவிரதையாக ஜாதகி விளங்குவார், ஆணின் ஜாதகத்தில் 12ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவக்த்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகரின் இல்லற வாழ்க்கையில் எவ்வித இன்னலையும் தாராது என்ற போதிலும், தேவையில்லாத மன கவலைகளையும், மன உளைச்சல்களையும் வழங்க கூடும், இருப்பினும் பெரிய இன்னல்கள் எதுவும் நடைபெறாது என்பதால் ஜாதகர் 12ம் பாவக வழியில் இருந்து நன்மையையே அனுபவிக்கும் தன்மையே தரும்.


தற்பொழுது நடைமுறையில் உள்ள திசை தரும் பலன்கள் :

பெண்ணிற்கு தற்பொழுது நடைமுறையில் உள்ள குரு திசை 2,6,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தருவது ஜாதகிக்கு மிகுந்த நன்மைகளை தரும், ஆணின் ஜாதகத்தில் தற்பொழுது நடைமுறையில் உள்ள செவ்வாய் திசை 2,4,6,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது தொழில் ரீதியான வெற்றிகளை வாரி வழங்கும், 8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது திடீர் பொருள் இழப்புகளையும்,வீண் மன கவலைகளையும் தர கூடும்.

எதிர் வரும் திசை தரும் பலன்கள் :

பெண்ணிற்கு எதிர்வரும் சனி திசையும் 2,6,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தருவது வரவேற்க தக்க ஒரு சிறப்பான அம்சமே, ஆணின் ஜாதகத்தில் எதிர்வரும் ராகு திசை 1,3,5,7,9,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று மிக பெரிய அளவில் யோக வாழ்க்கை தருவது திருமண வாழ்க்கை, குழந்தை பாக்கியம், பொருளாதார வெற்றிகள், அதிர்ஷ்டம் என்று 100% விகித யோக வாழ்க்கையை தம்பதியருக்கு தங்கு தடையின்றி தரும், வாழ்த்துகள்.

 வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வியாழன், 27 ஆகஸ்ட், 2015

சுய தொழில் முன்னேற்றமும், அதிர்ஷ்டகரமான மித மிஞ்சிய யோக பலன்களும் !



 சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகம் வலிமை பெறுவதும், வலிமை பெற்ற ஜீவன ஸ்தான பலனை நடைமுறையில் உள்ள திசை ஏற்று நடத்துவதும், ஜாதகருக்கு ஜீவன ரீதியான நன்மைகளை வாரி வழங்கும், பொதுவாக ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவது ஜாதகருக்கு மிகுந்த நன்மைகளை தரும், குறிப்பாக ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகம் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ( சர லக்கினத்தை தவிர்த்து ) ஜாதகரை தொழில் ரீதியான அதிர்ஷ்டங்களையும் மிதமிஞ்சிய லாபங்களையும் வாரி வழங்கி சிறந்த தொழில் அதிபர் என்ற நிலைக்கு விரைவில் உயர்த்தும், ஒரு சிறந்த தொழில் அதிபரின் ஜாதகம் எப்படி இருக்கும் என்பதற்கு உதாரணமாக, கிழ்கண்ட ஜாதகம் விளங்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை அன்பர்களே !



லக்கினம் : மீனம் 
ராசி : தனுசு 
நட்சத்திரம் : பூராடம் 4ம் பாதம் 

ஜாதகத்தில் பாவகங்களின் வலிமை :

1,6,7,12ம் வீடுகள் குடும்பம் ஸ்தானமான 2ம் பாவகத்துடன் சம்பந்தம்,
2ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம்,
3,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம்,
4,10,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம்,
5ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம்,
8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம்,

1,6,7,12ம் வீடுகள் குடும்பம் ஸ்தானமான 2ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது இலக்கின வழியில் இருந்து ஜாதகர் மிகுந்த வருமான வாய்ப்புகளையும், இனிமையான பேச்சு திறனையும், வாத திறமையாலும் சரளமான பேச்சினாலும், செய்யும் தொழிலில் மிகுந்த லாபத்தையும் வெற்றிகளையும் குவிக்க வைக்கும், சிறந்த உடல் நலத்தையும், மன நலத்தையும் ஜாதகர் இயற்கையாகவே பெற்று இருப்பார், வங்கி பரிவர்த்தனைகள் மூலம் மிகுந்த லாபத்தையும், நிலையான கையிருப்பையும், வரவு செலவுகளில் தன்னிறைவையும், தொடர்ந்து தன சேர்க்கையையும் ஜாதகர் பெறுவார்.

6ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் வாங்கும் கடன்களும் ஜாதகருக்கு நல்ல வருமானத்தையே தரும், பொருளாதார தன்னிறைவையும், வங்களின் உதவிகளையும், கேட்ட உடன் வங்கி கடன் உதவி பெரும் யோகத்தையும் வாரி வழங்கும், சிறப்பான வெற்றிகரமான நிதி நிலையை ஜாதகருக்கு தொடர்ந்து கொடுத்தவண்ணம் இருக்கும், ஜாதகருக்கு அமையும் தொழிலாளர்கள் அனைவரும் நல்ல விசுவாசியாகவும், கடமை உணர்ச்சி கொண்டவர்களாகவும் திகழ்வார்கள்.

7ம் பாவக வழியில் இருந்து திருமணம் மூலம் அபரிவிதமான அதிர்ஷ்டத்தையும் வருமான வாய்ப்புகளையும், நிறைவான லாபத்தையும் ஜாதகருக்கு வாரி வழங்கும், வாழ்க்கை துணை,கூட்டாளிகள் மற்றும் நண்பர்கள் வழியில் இருந்து 100% விகித யோக வாழ்க்கையை அனுபவிக்க நிலையை தரும், கூட்டாளிகள், கூட்டு தொழில் மூலமும் அளவில்லா வருமானங்களை ஜாதகருக்கு வாரி வழங்கும்.

12ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் சிறந்த தான சேர்க்கையை தரும், செய்த முதலீடுகளில் இருந்து 100% விகித வருமானத்தை தரும், செல்வத்தை கையாளுவதில் சிறந்த நுட்பங்களை ஜாதகர் கடைபிடிப்பார், பணம் ஒன்றே குறிகோளாக செயல்பட வைக்கும், சரியான திட்டமிடுதல்களையும் அதன் வழியில் இருந்து நல்ல லாபங்களையும் தரும், புதையலுக்கு நிகரான சொத்து சுக சேர்க்கையை தரும் அமைப்பாக இதை கருதலாம்.

2ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, கலைத்துறையில் ஈடுபாட்டையும், வாக்கு பலிதத்தையும், இயல்,இசை, நாடக துறையில் சிறந்த ஆளுமையை தரும், பொழுதுபோக்கு அமசங்களில் இருந்து ஜாதகருக்கு எதிர்பாராத வருமானமும் லாபமும் உண்டாகும், தனது அறிவு திறனால் மிகப்பெரிய வெற்றிகளையும், தொழில் வாய்ப்புகளையும் ஜாதகர் உருவாக்கும் தன்மையை தரும், பூர்வீகத்தில் நல்ல வருமானமும், பெயரும் புகழும் உண்டாகும், குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும், குடும்பத்தில் குதூகுலமும் சந்தோஷமும் நிறைந்து நிற்கும், ஜாதகரின் வார்த்தைக்கு அனைத்து இடத்திலும் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும்.

3,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு 3ம் பாவக வழியில் இருந்து எடுக்கும் முயற்ச்சிகளில் அனைத்திலும் வெற்றியே உண்டாகும், ஏஜென்சி துறையில் கொடிகட்டி பறக்கும் வாய்ப்புகளை வாரி வழங்கும், வெளிநாடு மற்றும் வெளிநாட்டில் உள்ள மக்களின் ஆதரவும் ஜாதகருக்கு பரிபூரணமாக கிடைக்கும், புதியவர்கள் வெளிநாட்டினர்கள் மூலம் வியாபர விருத்தி உண்டாகும், ஆராய்ச்சி மூலம் புதிய யுக்திகளை கையாளும் தன்மையை தரும், அனைத்திலும் வெற்றி நினைக்கும் எண்ணங்களை நடைமுறைக்கு கொண்டு வந்து நன்மைகளை பெரும் யோகம், சாஸ்திர ஞானமும், தேர்ச்சியும் உண்டாகும், அனைவரின் மன நிலையையும் உணர்ந்துகொள்ளும் மனோசக்தி உண்டாகும்,  ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில் எதிர்பாராத லாபம் உண்டாகும், இசை துறையிலும் ஜோதிடத்திலும் மிதமிஞ்சிய புலமை உண்டாகும், தியானம் யோகங்களில் ஆர்வமும், விளையாட்டில் வெற்றியும், மண்ணிற்கு கிழ் கிடைக்கும் கனிம பொருட்கள், உலோகம் அலோகம் சார்ந்த பொருட்களில் மிகுந்த லாபம் உண்டாக்கும், அனைத்தும் ஜாதகருக்கு சாதகமாக அமையும்.

9ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் சிறந்த அறிவு திறனையும், தன்னிகரில்லாத சிந்தனை ஆற்றலையும் வாரி வழங்கும், பயணங்களில் விருப்பத்தையும், இடம் மற்றும் சூழ்நிலை மாற்றத்தில் ஆர்வத்தை அதிகரிக்கும், சமுதாயத்தில் அனைத்து தரப்பு மக்களிடமும் ஜாதகருக்கு நற்ப்பெயரும் ஆதரவும் தொடர்ந்து கிடைத்த வண்ணம் இருக்கும், தான் செய்யும் தொழிலில் கைராசியையும், நிலைத்து நிற்கும் வித்தையையும் ஜாதகர் தெளிவாக அறிந்து வைத்திருப்பார்.

4,10,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதே ஜாதகத்தில் உள்ள மித மிஞ்சிய யோக பலன்களை வாரி வழங்கும் அமைப்பாக கருதலாம், 4,10,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் 11ம் பாவகம் ஜாதகருக்கு காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு தொழில் ஸ்தானமாகவும், சர மண் தத்துவமாக அமைவது கவனிக்க தக்க அம்சமாகும், சர ராசிகளின் தன்மை பொதுவாக தான் தரவேண்டிய பலன்களை தங்குதடை இன்றி 100% விகிதம் மிக குறுகிய காலத்தில் வாரி வழங்கும், ஜாதகருக்கு நடைபெறும் அல்லது  எதிர்வரும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் 11ம் பாவக பலனை ஏற்று நடத்தினால், ஜாதகருக்கு எதிர்பாராத லாபங்களும் அதிர்ஷ்டங்களும் தொழில் ரீதியாகவும், வியாபர ரீதியாகவும் வாரி வழங்கிவிடும்.

4ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் நண்பர்கள் ஆதரவு நிரந்தரமாக கிடைக்கும் யோகத்தை தரும், போதும் என்ற மன நிறைவையும், சுக போக வாழ்க்கையில் தன்னிறைவையும் தரும், தனது பெயரில் உள்ள அசையும் அசையா சொத்துகள் வழியில் இருந்து நிறைவான லாபங்கள் வந்துகொண்டே இருக்கும், வண்டி வாகனம், புதிய சொத்துகள் வாங்கும் யோகம், கால்நடைகள் வழியில் மிதமிஞ்சிய லாபம், புதிய அனைத்து வசதிமிக்க வீடு கட்டும் அல்லது வாங்கும் யோகத்தை தரும், ஜாதகரின் நல்ல குணம் உலக புகழை பெற்று தரும், சமுதாயத்தில் உள்ள பெரிய மனிதர்களின் ஆதரவும் உதவியும் தேடிவரும், எடுக்கும் காரியங்களில் சுலப வெற்றியை பெற்று தரும்.

10ம் பாவக வழியில் சிறந்த கௌரவமான யோக வாழ்க்கை, அரசியலில் பெரிய பதவிகளை அலங்கரிக்கும் யோகம், அனைவருடன் அனுசரித்து செல்லும் யோகம், தொழில் ரீதியான வெற்றிகளையும் லாபங்களையும், ஜாதகர் முன்கூட்டியே திட்டமிட்டு பெரும் யோகத்தை தரும், ஜாதகரின் கணிப்பு தவறாமல் ஜாதகருக்கு நன்மைகளையும், யோகத்தையும் வாரி வழங்கும், வெற்றி மயமான எதிர்கால வாழ்க்கை, எந்த செயலையும் நம்பிக்கையுடன் செய்து 100% விகித வெற்றியை பெரும் யோகத்தை தரும்.

11ம் பாவக வழியில் இருந்து ஜாதகரின் தன்னம்பிக்கையும், மன உறுதியும் மிதமிஞ்சிய அளவில் செயல்படும், சிறந்த குணம் ஜாதகரின் வாழ்க்கையில் பல திருப்பு முனைகளை தரும், மிகுந்த அதிர்ஷ்டத்தின் பலனை ஜாதகர் தங்குதடையின்றி பெறுவார், பொருளாதரத்தில் தன்னிறைவான யோக வாழ்க்கையை ஜாதகர் மிக இளம் வயதிலேயே பெற்றுவிடுவார், ஜாதகரின் எண்ணங்களும் செயல்களும் மிகவும் நேர்மையானதாகவும், சத்தியத்திற்கும் சட்டத்திற்கும் கட்டுப்பட்டதாக அமைந்திருக்கும்.

5ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகரின் சுய முயற்ச்சியில் வெற்றிபெற்ற ஒரு சிறந்த வெற்றியாளனாக சமுதாயத்தில் அறிமுகம் செய்துவைக்கும், தனது சிந்தனை மற்றும் அறிவு புத்திசாலித்தனம் அனைத்தையும் தான் செய்யும் தொழிலில் பயன்படுத்தும் வல்லமையை தரும் என்ற போதிலும், தனது தந்தையுடன் மிகுந்த கருத்துவேறுபாடுகளை தொடர்ந்து கொடுத்தவண்ணம் இருக்கும், கலை துறையில் ஜாதகருக்கு தனிப்பட்ட அடையாளத்தையும், மிகப்பெரிய வெற்றிகளையும் வாரி வழங்கும், ஆய கலைகள் 64ல் ஜாதகர் தேர்ந்து எடுக்கும் கலையில் மிகுந்த தேர்ச்சியை தரும், ஜோதிடம் கணிதம் இசை சார்ந்த விஷயங்களில் தனிப்பட திறைமைகளை ஜாதகர் பயன்படுத்தும் யோகத்தை தரும், இறைஅருளின் கருணை  ஜாதகருக்கு பரிபூர்ணமாக அமைந்திருக்கும், முப்பெரும் தேவியரின் ஆசிகளுக்கும் அருளுக்கும் பாத்தியமாகும் யோகத்தை வழங்கும்.

தற்பொழுது நடைமுறையில் உள்ள செவ்வாய் திசை ஜாதகருக்கு 11ம் பாவக பலனை ஏற்று நடத்துவதும், அடுத்து வரும் ராகு திசையும் ஜாதகருக்கு 2ம் பாவக பலனை ஏற்று நடத்துவதும், ஜாதகரை தொழில் மற்றும் ஜீவன ரீதியான வெற்றிபடிகளில் தொடர்ந்து உயர்ந்து சென்றுகொண்டு இருக்கும் வாய்ப்பை தங்கு தடையின்றி வழங்கும், தொழில் ரீதியான மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை, ஜாதகர் உருவாக்குவதற்கு நல்ல வாய்ப்புகளை நிச்சயம் ஏற்ப்படுத்தும்.

குறிப்பு :

தற்பொழுது நடைபெறும் சனி புத்தி மட்டும் 8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 
8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, சற்று அதிக சிரமங்களை தரக்கூடும், மனோ ரீதியான போராட்டங்களை அதிக அளவில் தர கூடும், திடீர் இழப்புகள் சில நேரங்களில் தவிர்க்க இயலாது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

புதன், 26 ஆகஸ்ட், 2015

தாமத திருமணம் அல்லது திருமண வாழ்க்கையில் தடை ஏன் ?


" இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே அவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே " என்ற பாடல்தான் நமக்கு நினைவுக்கு வருகிறது கிழ்கண்ட ஜாதகத்தை ஆய்வு செய்யும் பொழுது அன்பர்களே ! 

மேலும் தம்மிடம் உள்ளது முயலா? ஆமையா ? என்பதும் தெரியாமல் ஆமையை பிடித்துகொண்டு முயலை போல் ஓடவேண்டும் என்று கட்டளையிட்டால் எப்படி சாத்தியமாகும், பொதுவாக ஆணாக இருந்தால் திருமணம் செய்ய உகந்த வயது 25, அதுவே பெண்ணாக இருப்பின் திருமணம் செய்ய உகந்த வயது 21, இது இயற்கையாக உள்ள நடைமுறை, இதற்க்கு மாறாக திருமண வயதை தள்ளிபோடுவது என்பது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி சரியான விஷயமாக படவில்லை, அது ஜோதிட ரீதியாக இருந்தாலும் சரி, மருத்துவ ரீதியாக இருந்தாலும் சரி.

 திருமணத்தை தள்ளிபோடுவதர்க்கு இன்றைய இளம் தலைமுறையினர் சொல்லும் காரணம் பொருளாதார தன்னிறைவு, பொருளாதார தன்னிறைவை அடைந்த பிறகே திருமணம் என்ற வாதம் இன்றைய இளம் தலைமுறையினரை, சரியான முன்னேற்றத்தை நோக்கி அழைத்து செல்லும் என்று நிச்சயம் சொல்ல இயலாது, காரணம் ஒவ்வொரு வயதுகளிலும் பொருளாதார தேவைகள்  நிச்சயம் இருந்துகொண்டே இருக்கும், இந்த பொருளாதார தேவைகளை முடிவுக்கு கொண்டு வருவது என்பது சாத்தியமில்லாத ஒன்று, அதுவும் திருமணம் ஆகாமல் தனியாளாக சமாளிப்பது என்பது நிச்சயம் இயலாது, காரணம் திருமணதிற்கு பிறகே ஒருவரின் சுய ஜாதகத்தில் களத்திர பாவக பலன்கள் நடைமுறைக்கு வருகிறது,.
 
அதன்பிறகே ஜாதகருக்கோ அல்லது ஜாதகிக்கோ சமுதாயத்தில் மதிப்பு மரியாதையும், சமூக அந்தஸ்தும் உண்டாகிறது, வெளிவட்டடார பழக்கவழக்கங்களும், 7ம் பாவக வழியில் இருந்து பெரிய மனிதர்களின் ஆதரவும் ஜாதகருக்கு முழு வீச்சில் செயல்பட துவங்குகிறது, ஜாதகர் ஒருவேளை களத்திர பாவக பலனை நடைமுறைக்கு கொண்டு வராமல் இருப்பின் 7ம் பாவக வழியில் இருந்து வரும் எவ்வித யோக பலனையும் அனுபவிக்க தகுதியற்றவராக மாறிவிடுகிறார், இதை கருத்தில் கொண்டே சரியான வயதில் திருமணத்தை நடத்தி வைத்து சம்பந்தபட்ட தம்பதியருக்கு சமூகத்தில் ஒரு அந்தஸ்தையும், அங்கீகாரத்தையும்  நமது பெரியோர்கள் கொடுத்தார்கள், இதன் அடிப்படையிலேயே தம்பதியரின் நல்வழ்க்கையும் சிறப்படைந்தது.

திருமணம் எனும் விஷயம் என்று பெரியவர்களின் கைகளை விட்டு, இளைய தலைமுறையினரின் கைகளுக்கு சென்றதோ, அன்றே நமது இளைய தலைமுறையினரின் வாழ்க்கை வெகுவாக பாதிப்பிற்கு உள்ளாகியது எனலாம், கிழ்கண்ட ஜாதகத்தை ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே!


லக்கினம் : ரிஷபம்  
ராசி : மேஷம் 
நட்சத்திரம் : அஷ்வினி 4ம் பாதம் 

ஜாதகிக்கு வயது 40, தனது 21 ஒரு வயதில் இருந்து ஜாதகிக்கு வரன் பார்க்கின்றனர், இன்னும் வரன் அமைந்தபாடில்லை, ஜாதகி ஓரளவு படித்தவர் மேலும் தனது வருமானத்தில் சுயமாக வாழும் தன்மையை பெற்றுள்ளது குறிப்பிட தக்கது, மேலும் ஜாதகிக்கு தனது மனதில் தனது கணவனை பற்றிய கற்பனையில் வரன் தேடியதால், தனது கற்பனைக்கு நிகரான ஒரு வாழ்க்கை துணையை ஜாதகி இதுவரை சந்திக்கவில்லை, மேலும் தனது பேச்சுக்கு குடும்பத்தில் யாரும் எதிர்த்து பேசாததால், ஜாதகியின் போக்கே திருமண தாமதத்திற்கு காரணமாக அமைந்தது, தனக்கு வரும் நல்ல வரன்களை கூட ஜாதகி தட்டி கழிப்பது  இன்னும் நடைமுறையில் உள்ளது , ஜாதகி செய்யாத பரிகாரங்கள் இல்லை எனலாம், இனி ஜாதகியின் சுய ஜாதகத்தை ஆய்வு செய்வோம் அன்பர்களே !

ஜாதகிக்கு சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற அமைப்புகள் :

1ம் வீடு முதல் பாவகமான லக்கினத்துடன் தொடர்பு பெற்றதும்,
10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றதும் மிகவும் வலிமையான அமைப்பு.

ஜாதகிக்கு சுய ஜாதகத்தில் வலிமை அற்ற அமைப்புகள் :

2,4,7,8ம் வீடுகள் திடீர் இழப்பை தரும் ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றதும்,
3,6,9,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றதும்,
5,11ம் வீடுகள் சத்துரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றதும், மிகவும் வலிமை அற்ற அமைப்பு.

மேற்கண்ட ஜாதகிக்கு சுய ஜாதகத்தில் குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானம் எனும் 2பாவகங்களும் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகியின் திருமண வாழ்க்கையை வெகுவாக பாதிப்பிற்கு ஆளாக்கியது, ஜாதகியின் 8ம் பாவகம் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு பாக்கிய ஸ்தானமாக அமைந்து தனது முன்னோர்கள் செய்த வினை பதிவின் தன்மையை ஜாதகி குடும்பம் மற்றும் களத்திர ஸ்தான அமைப்பில் இருந்து அனுபவிக்கும் சூழ்நிலையை தந்தது, தந்துகொண்டு இருக்கிறது எனவே ஜாதகிக்கு வயது 40 ஆகியும் திருமணம் நடைபெறாமல் இன்னும் முதிர்கன்னியாகவே வாழும் சூழ்நிலையை தந்துகொண்டு இருக்கிறது, ஜாதகியும் தனது ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையை உணராமல், தனக்காக ஒரு ராஜகுமாரன் வருவான் என்ற கற்பனையில், கோட்டை கட்டி வாழ்ந்துகொண்டு இருக்கிறார், தனது பேச்சுக்கு எவரும் எதிர்த்து பேசாத சூழல் உள்ளதால் ( பெற்றோருக்கு வயதாகிவிட்டதால் ) தான் வைத்ததே சட்டம் என்று வாழ்ந்துகொண்டு இருக்கிறார்.

சுய ஜாதகத்தில் 1,10ம் பாவகங்களை தவிர மற்ற அனைத்து பாவகமும் கடுமையாக பாதிக்கபட்டு இருப்பது, ஜாதகியின் விதிபயனை சரியாக அனுபவித்துக்கொண்டு இருப்பதை உறுதி செய்கிறது, லக்கினம் வலுபெருவது உடல் மற்றும் மன நலனில் நன்மையையும், ஜீவன ஸ்தானம் வலுபெருவது நல்ல வேலையும் அதன் வழியில் இருந்து வரும் வருமானத்தையும் உறுதி செய்கிறது.

2ம் பாவகம் பாதிப்பது 40 வருடங்கள் ஆகியும் குடும்ப வாழ்க்கை அமையாமல் சிரமத்தையும், வரும் வருமானம் அனைத்தையும் வீண் விரையத்தையும் தருகிறது, ஜாதகியின் பேச்சும் மற்றவர்கள் ரசிக்கும்படி இனிமையாக இல்லாதது கவனிக்கதக்கது, 4ம் பாவகம் பாதிப்பது சுக போக வாழ்க்கை இல்லாமல், தடுமாறும் சூழ்நிலையும், ஜாதகியின் பெயரில் எவ்வித சொத்து வண்டி வாகனம் இல்லாத நிலையை தருகிறது,7ம் பாவக வழியில் இருந்து நல்ல நண்பர்கள் இல்லை, சரியான வாழ்க்கை துணை அமையவில்லை, 8ம் பாவக வழியில் இருந்து பூர்ண ஆயுள் உள்ள போதும், வீண் இழப்புகளை தவிர்க்க இயலவில்லை, வாழ்க்கை துணை வழியில் இருந்து பெரும் வருமான வாய்ப்பையும் தவிர்க்க வைக்கிறது.

3ம் பாவாகம் பாதிப்பது சகோதர ஆதரவு இல்லை, எடுக்கும் செயல்களிலும், முயற்ச்சிகளிலும் தொடர் தோல்விகளை சந்திக்கும் தன்மையை தருகிறது, 6ம் பாவகம் பாதிப்பது ஜாதகிக்கு நிறைய எதிர்ப்புகளும், எதிரிகளும் மிக அதிக அளவில் உள்ளது ஜாதகியின் திருமண வாழ்க்கையை தாமத படுத்த ஒரு காரணமாக அமைகிறது, 9ம் பாவகம் பாதிப்பது பெரியமனிதர்களின் உதவி இல்லாமல் அவர்களின் வெறுப்பிற்கு ஆளாகும் சூழ்நிலையை தந்தது, 12ம் பாவகம் பாதிப்பது ஜாதகியை வீண் கற்பனையில் கனவு கோட்டை கட்டி வாழும் சூழ்நிலையை தந்தது.

5ம் பாவகம் பாதிப்பது, சொல்புத்தியும் இல்லாமல் சுய அறிவும் இல்லாமல், தான்தோன்றி தனமாக நடக்கும் நிலையை தந்துகொண்டு இருக்கிறது, 11ம் பாவகம் பாதிப்பது ஜாதகிக்கு எவ்வித அதிர்ஷ்டமும் இல்லாமல், 400 வரன்கள் வந்த போதிலும் தனக்கு பொருத்தம் இல்லை என வரன்கள் அனைவரையும் தவிர்க்க வைத்து, சரியான வயதில் நடக்கவேண்டிய விஷயங்கள் யாவும் நடைபெறாமல் துரதிர்ஷ்ட வாழ்க்கையும், மூட பழக்க வழக்கங்களில் திளைத்து தனது வாழ்க்கையை தானே பாழ்படுத்திகொள்ளும் சூழ்நிலையை தந்துள்ளது.

சுய ஜாதகத்தில் ஜாதகிக்கு 12 பாவகங்களில் 10 பாவகங்கள் வலிமை அற்று காணப்பட்டாலும், இதற்க்கு முன் நடந்த சந்திரன் திசை 24/08/2012 வரை நல்ல நல்ல வாய்ப்புகளையும், வரன்களையும் வழங்கிய போதும் ஜாதகியின் கற்ப்பனை ஜாதகியின் வாழ்க்கையை வெகுவாக பாதித்தது, குறிப்பாக திருமணம் எனும் ஒரு விஷயம் இதுவரையிலும் தடையாகவே அமைந்துவிட்டது, ஜாதகிக்கு பிறகு இரண்டு சகோதரிகள் உண்டு அவர்களுக்கும் திருமணம் இன்னும் நடைபெறவில்லை என்பது வருந்தத்தக்க ஒரு விஷயமாகவே படுகிறது, தற்பொழுது நடைபெறும் செவ்வாய் திசை 12ம் பாவக பலனை ஏற்று நடத்துவது ஜாதகியின் கற்பனை வாழ்க்கைக்கு இன்னும் சற்று அதிகமாகவே தூபம் போடும் என்பது மட்டும் மறுக்க இயலாத உண்மை.

குறிப்பு :

ஜாதகி இனிவரும் காலங்களிலாவது, தனது வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் 2,7ம் வீடுகள் வலிமையுள்ள சாதகமாக தேர்ந்தெடுத்து இல்லறவாழ்க்கையில் இணைய, இறையருள் கருணை செய்யட்டும் என ஜோதிடதீபம் வேண்டுகிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696