நட்சத்திரபலன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நட்சத்திரபலன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 6 பிப்ரவரி, 2024

கன்னிராசி அஸ்தம் நட்சத்திரம் - ராஜயோக வாழ்வை தரும் ரகசிய இறைவழிபாடு!


 கன்னிராசி "அஸ்தம்" நட்சத்திரம்
வாழ்வில் நினைத்ததை சாதிக்கும் வல்லமையையும், தொட்டதெல்லாம் பொண்ணாக மாறும் அதிர்ஷ்டத்தையும் ஒருங்கே அமையப்பெற்ற அற்புத நட்ஷத்திரம், தனது உள்ளங்கையில் அனைத்தையும் சுவீகரிக்கும் யோகம் பெற்றவர்கள், ஆன்மீகத்தின் வழியிலான அருளாசிகளையும், புவியில் மனிதர்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் பேராற்றலும் கொண்டவர்கள், கற்பனை வளம், விவசாயம் செழிப்படைதல், தானிய விருத்தி, பொருள் விருத்தி, பூமியின் மேலும் புவியின் கீழும் உள்ள பொருட்களை ஆளுமை செய்யும் நட்ஷத்திரம், புலனுக்கு அப்பாற்பட்ட அறிவுத்திறனும், வருமுன் கண்டுணரும் உள்ளுணர்வும், நடப்பதை முன்கூட்டியே அறிந்துகொள்ளும் பேராற்றலும், தெய்வீக சிந்தனையும், சுய முயற்சி வழியிலான பொருள் தேடுதல்களையும், தன்னிறைவான பொருளாதார முன்னேற்றங்களையும் சிறப்பாக சுவீகரிப்பார்கள், தனது வாத திறன் கொண்டு வாழ்க்கையில் மிக பெரிய சாதனைகளை படைப்பார்கள், கடின உழைப்பிற்கும் சுய முயற்சிக்கும் எடுத்துக்காட்டாக விளங்குவார்கள், அனைத்து காரியங்களிலும் ஒரு நேர்த்தியை கடைபிடிப்பவர்கள், துணிச்சலும் எதிர்ப்புகளை கண்டு அஞ்சாமல் இறுதிவரை போராடி வெற்றி பெரும் வல்லமையும் பெற்றவர்கள், 
இவர்களது  தமது வாழ்வில் சகலவிதமான சௌபாக்கியமும், உடல் நலம் மனோவலிமை, கல்வியில் மேன்மை, தொழில் விருத்தி, புத்திரபாக்கியம், பொருளாதார வளர்ச்சி என்றவகையில் பரிபூரணமான சுகபோகங்களையும், தன்னிறைவாக சுவீகரிக்க, மிக எளிமையான ரகசிய இறைவழிபாடு என்பது கீழ்கண்டவாறு அமையும். 

கேரள மாநிலம், எர்ணாகுளத்திலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது, சோற்றானிக்கரை (சோட்டானிக்கரை) "பகவதியம்மன் அம்மன் ஆலயம்" அஸ்த நட்சத்திர அன்பர்களுக்கு அளவில்லா சௌபாக்கியங்களை தன்னிறைவாக வாரி வழங்கும் அற்புதமான திருக்கோவில், கேட்ட அனைத்தையும் தாய் பகவதி வாரி வழங்கும் கருணை உள்ளம் கொண்டவர், அஸ்த நட்சத்திர அன்பர்கள் வளர்பிறை திங்கள் அன்று இத்திருக்கோவிலுக்கு சந்திர ஹோரையில் மல்லிகை மலர்மாலை மற்றும் வெண் பட்டு வஸ்த்திரம் சாற்றி வழிபாடு செய்யும் பொழுது இவர்களது வாழ்க்கையில் சகல சௌபாக்கியமும் வந்து சேரும், குறிப்பாக உடல் ஆரோக்கியம், மனோ வலிமை, கல்வியில் மேன்மை, தொழில் விருத்தி, திருமண யோகம், புத்திர பாக்கியம், வீடு வண்டி வாகன யோகம், புதிய வேலை அல்லது தொழில், பொருளாதார வழியிலான முன்னேற்றங்கள், விவசாயம் மற்றும் மருத்துவ துறையில் மிகப்பெரிய சாதனைகளை படைத்தல், தெய்வீக அனுக்கிரகம், குலதெய்வ சாபம் நீங்குதல், பித்ரு சாபம் நீங்குதல், பெண்சாபம் நீங்குதல் என சகல தோஷங்களில் இருந்தும்  விடுதலை வழங்கும் வல்லமை  பெற்ற தெய்வம்  "சோட்டானிக்கரை பகவதியம்மன்" என்பதை அஸ்த நட்ச்சத்திர அன்பர்கள் வழிபாடு செய்வதன் வழியில் இருந்து உணர முடியும்.

 வருடம் ஒருமுறை   (சோட்டானிக்கரை) "பகவதியம்மன் அம்மன் ஆலயம்" சென்று வரும் கன்னி ராசி அஸ்த நட்ச்சத்திர அன்பர்கள் தமது வாழ்வில் நிலைத்தன்மையிலான முன்னேற்றங்களை பரிபூர்ணமாக சுவீகரிக்கமுடியும், மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும், தெளிவான சிந்தனை, புதிய முயற்சிகள் வழியிலான முன்னேற்றங்கள் உண்டாகும், தனது துறை சார்ந்த ஞானம் மற்றும் வித்தைகளில் தேர்ச்சி உண்டு, அருங்கலைகள் மூலம் உலகப்புகழ் பெரும் யோகம் உண்டாகும், சாதனை படைப்பதற்கான அத்துணை வாய்ப்புகளும் வந்து சேரும், ஜீவன விருத்தி, திருமணயோகம் வெகு சிறப்பாக வந்து சேரும், உயரிய குணங்களால் வாழ்க்கையில் உன்னத வெற்றிகளை பெறுவதுடன் சமுதாயத்திற்க்கு பயனுள்ள வாழ்க்கையை முன்னெடுக்கும் யோகம் உண்டாகும், நல்ல எண்ணமும் சிறந்த நற்செயல்களும் அஸ்த நட்சத்திர அன்பர்கள் வாழ்வில் வியக்கத்தக்க மாற்றங்களை நல்கும், தொட்ட காரியங்கள் விருத்தி பெறுவதுடன், புகழ் மிக்க பொறுப்புகளும் அரசியல் பதவிகளும் வந்து சேரும், முறையான வாழ்க்கை, நேர்மையான முன்னேற்றம், வியாபாரத்தில் மிகப்பெரிய வெற்றி வாய்ப்புகள், பாரம்பரிய விஷயங்களை கட்டிக்காக்கும் பேராற்றல், உறவுகளுடன் இணக்கமான சூழ்நிலையை கடைபிடிக்கும் வல்லமை, தனித்துவம் வாய்ந்த செயல்பாடுகள், அனைவருக்கும் பயனுள்ள வாழ்வை சுவீகரித்தல் என்ற வகையில் தன்னிறைவான யோக வாழ்வை பெற்று நலம் பெறுவார்கள்.

 குறிப்பு :

கன்னிராசியில் "அஸ்தம்" நட்சத்திரத்தை தனது ஜென்ம நட்ஷத்திரம் அல்லது லக்கினமாக பெற்ற அன்பர்கள், அதிர்ஷ்டத்தையும் ஆளுமை திறனையும் ஒருங்கே அமையப்பெற்றவர்கள், ஆட்சி பணியில் நேர்மையை கடைபிடிக்கும் நல்லவர்கள், உண்மை சத்தியம் போன்ற உயர் குணங்களை பிறவியிலே பெற்று இருப்பார்கள், விவசாயம் மற்றும் இயற்க்கை வளம், இயற்க்கை மருத்துவம், ஜோதிடம் வாஸ்து சாஸ்திரம், படைப்பு திறன் அறிவாற்றல் கற்பனை வளம் இயல் இசை நாடகம் போன்ற துறைகளில் நன்மைகளை பெறுவதுடன், எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாக திகழ்வார்கள், எதிரிகள் வழியிலான நன்மைகளையும், பொதுமக்கள் செல்வாக்கில் நிலையான வெற்றிகளையும் சுவீகரிப்பார்கள்,  இவர்களது வளர்ச்சி அதிர்ஷ்டகரமாக அமையும், வாழ்வை மற்றவர்களுக்கும் பயனுள்ள வாழ்வாக வாழ்வது என்பதை பற்றியும், அனைவரையும் அனுசரித்து வாழும் வல்லமையும் இவர்களுக்கு ஒருங்கே அமையப்பெற்று இருக்கும், பொதுநலம் என்பது இவர்களது வாழ்வை மேம்பட செய்யும், மேற்சொன்ன  (சோட்டானிக்கரை) "பகவதியம்மன் அம்மன் ஆலய" வழிபாடு இவர்களது வாழ்வில் ராஜயோகத்தை தன்னிறைவாக வாரி வழங்கும் என்பதுடன் பொருள் ஆதாயத்தையும் அதிகார பதவிகளையும் முழுமையாக பெறுவார்கள் என்பதில் மாற்று கருத்துக்கு இடம் இல்லை அன்பர்களே ! 

ஜோதிடன் வர்ஷன் 

9443355696

ஞாயிறு, 4 பிப்ரவரி, 2024

கன்னிராசி உத்திரம் நட்சத்திரம் - ராஜயோக வாழ்வை தரும் ரகசிய இறைவழிபாடு!

 


கன்னிராசி "உத்திரம்" நட்சத்திரம் பொறுமையின் பிறப்பிடமாகவும், நிர்வாக திறனில் தனித்தன்மையுடன் இயங்கசெய்யும் அற்புத நட்சத்திரம், சவால்கள் அனைத்தையும் தனது நிர்வாக வல்லமையால் வெற்றிகொள்வார்கள், தனது சிந்தனை திறனையும் செயல்பாடுகளையும் மற்றவர்கள் அறியா வண்ணம் லட்சியங்களை வெற்றிகொள்ளும் யோகம் உண்டு, ரகசியமான கலைகளில் நல்ல தேசியும், புகழ் மிக்க பொறுப்புகளை குறுகிய காலத்தில் சுவீகரிக்கும் யோகமும் உண்டாகும், தெளிவான சிந்தனை, முற்போக்கு செயல்பாடுகள், எந்த பொருளையும் பன்மடங்கு விருத்தி செய்யும் வல்லமை, சிறிதாக ஆரம்பித்து வெகு விரைவில் சாம்ரஜ்ஜியத்தை கட்டமைக்கும் நிர்வாக வல்லமை, எதிரிகளுக்கு சிம்மசொப்பனம், தனது காரியத்தில் கண்ணும் கருத்துமாக நின்று சாதிக்கும் யோகம், சிறந்த பொருளாதார திட்டமிடுதல்கள், சார்ந்து இருப்போர் அனைவரையும் காப்பாற்றும் யோகம், உறவுகள் மற்றும் நண்பர்கள் வழியிலான நன்மைகளை முழுமையாக பெறுதல், பல தொழில் செய்யும் யோகம், விவசாயத்தில் சாதனை படைக்கும் வழிமுறைகளை கையாளும் யோகம், தொலைநோக்கு பார்வை, மண் மற்றும் பூமியை பற்றிய நுண்ணறிவு, வாஸ்து கலையில் அதீத புலமை, இயற்க்கை மருத்துவத்தில் உணவு சம்பந்தப்பட்ட துறையில் அதீத வெற்றிவாய்ப்புகள், மற்றவர் நோய் தீர்க்கும் தனித்திறன் அல்லது கைராசி, புலனுக்கு அப்பாற்பட்ட அறிவாற்றல் என்ற வகையில் சிறப்புகளை தரும், இவர்களது  தமது வாழ்வில் சகலவிதமான சௌபாக்கியமும், உடல் நலம் மனோவலிமை, கல்வியில் மேன்மை, தொழில் விருத்தி, புத்திரபாக்கியம், பொருளாதார வளர்ச்சி என்றவகையில் பரிபூரணமான சுகபோகங்களையும், தன்னிறைவாக சுவீகரிக்க, மிக எளிமையான ரகசிய இறைவழிபாடு என்பது கீழ்கண்டவாறு அமையும். 

தலச்சேரியில் இருந்து 8 கிமீ தொலைவில் அமைந்துள்ள "கதிரூர் சூரிய நாராயணா கோயில்" உத்திரம் நட்சத்திரம் கன்னி ராசி அன்பர்களுக்கு ஆளுமை திறனையும் அதிர்ஷ்ட வாய்ப்புகளையும் தன்னிறைவாக வாரி வழங்கும் திருக்கோவிலாகும், அகஸ்திய மகா முனிவர் "ஆதித்ய ஹிருதயமந்திரத்தை"  3முறை பாராயணம் செய்து ராவணனை வெற்றிகொள்ள "பகவான் ராமருக்கு" கொடுத்த திருத்தலம்.

 "சூரியனின் தேசம்" என்பதின் சுருக்கம் கதிரூர் அல்லது கதிரவபுரம், வளர்பிறை ஞாயிற்று கிழமை அன்று காலை சூரிய ஹோரையில் செம்பருத்தி மாலை மற்றும் சிகப்பு வர்ண பட்டாடை சாற்றி வழிபடும் கன்னி ராசி உத்திர நட்சத்திர அன்பர்களுக்கு, சிறந்த நிர்வாக திறனையும் அகிலம் போற்றும் ஆளுமை திறனையும் வாரி வழங்குவார், எதிரிகளை வெற்றி கொள்ளவும், மாந்திரீகம் சூனியம் செய்வினை கோளாறுகள் வழியிலான துன்பங்களை நீக்கவும், அரசுதுறையிலான பணிகளில் வெற்றி பெறவும், அரசியல் ரீதியான வளர்ச்சிகளை பெறவும், தலைமை பொறுப்புகளை வென்று நிலையான ஆட்சி செய்யவும் வல்லமையை தருவார், தொழில் ரீதியான இன்னல்களை சந்தித்து கொண்டு இருக்கும் அனைத்து அன்பர்களுக்கு இந்த திருத்தலம் மிகப்பெரிய மாற்றங்களையும், அபரிவிதமான வளர்ச்சியினையும் மிகப்பெரிய அளவில் வாரி வழங்கும், எதிர்ப்புகளை கண்டு அஞ்சாமல் போட்டி பந்தயங்களில் மிகப்பெரிய வெற்றிகளையும், தன்னிறைவான யோக வாழ்க்கையையும் நிச்சயம் பெறுவார்கள், எதிராளிகள் இவர்களது அசுர பலத்தை கண்டு அச்சமுறும் தன்மையை தரும், அனைத்திலும் வெற்றி கல்வி கேள்விகளில் புகழ், கலைத்துறையில் சாதனை, யாரையும் சார்ந்து வாழாமல் தனித்து நின்று போராடி வெற்றி பெறுதல், பொதுமக்கள் ஆதரவு, நீதி நேர்மை கடமை கண்ணியம் போன்ற உயரிய குணங்களை சுவீகரித்தல், சத்தியத்தையும் உண்மையையும் பாதுகாத்தல், சாஸ்திர ஞானம், தவவாழ்வில் முக்தியை பெறுதல் என்ற வகையில் மிகப்பெரிய சுபயோகங்கள் உண்டாகும்.

வருடம் ஒருமுறை  "கதிரூர் சூரிய நாராயணா கோயில்" சென்று வரும் கன்னி ராசி உத்திர நட்ச்சத்திர அன்பர்கள் தமது வாழ்வில் தனித்துவமான சாம்ராஜ்யத்தை நிறுவி சாதனை புரியும் வல்லமையை பெறுவார்கள், கல்வி உயர்கல்வி, வேலை தொழில் , காதல் வெற்றி திருமணயோகம், ஆண்வாரிசு, பொருளாதார தன்னிறைவு, எதிர் பாரத சுபயோகங்கள், திடீர் அதிர்ஷ்டம், முற்போக்கு சிந்தனை, தெய்வீக தரிசனம், மூதாதையர் சொத்துக்கள் மிக எளிதாக சுவீகரிக்கும் வல்லமை, இந்தியாவின் உயரிய ஆட்சி பணிகளை பதவிகளை மிக எளிதாக சுவீகரித்தல், புதிய சிந்தனை புதிய மாற்றங்கள் என வாழ்க்கையில் சகல நிலைகளில் இருந்தும் முழுமையான சுபயோகங்களை வாரி வழங்கும் யோகம், தனது துறை சார்ந்த ஞானம் அல்லது தான் செய்யும் தொழில் வழியிலான உச்ச நிலையை அடைதல், என்ற வகையில் சிறப்புகளை தரும்.

குறிப்பு :

கன்னிராசியில் "உத்திரம்" நட்சத்திரத்தை தனது ஜென்ம நட்ஷத்திரம் அல்லது லக்கினமாக பெற்ற அன்பர்கள், பரோபகரமான ஆளுமை திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் மிக்கவர்கள், ஆட்சி பணியில் நேர்மையை கடைபிடிக்கும் நல்லவர்கள், உண்மை சத்தியம் போன்ற உயர் குணங்களை பிறவியிலே பெற்று இருப்பார்கள், விவசாயம் மற்றும் இயற்க்கை வளம், இயற்க்கை மருத்துவம், ஜோதிடம் வாஸ்து சாஸ்திரம், படைப்பு திறன் அறிவாற்றல் கற்பனை வளம் இயல் இசை நாடகம் போன்ற துறைகளில் நன்மைகளை பெறுவதுடன், எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாக திகழ்வார்கள், எதிரிகள் வழியிலான நன்மைகளையும், பொதுமக்கள் செல்வாக்கில் நிலையான வெற்றிகளையும் சுவீகரிப்பார்கள்,  இவர்களது வளர்ச்சி அசுர வேகத்தில் அமையும், வாழ்வை எவ்வாறு சிறப்பாக வாழ்வது என்பதை பற்றியும், அனைவரையும் அனுசரித்து வாழும் வல்லமையும் இவர்களுக்கு ஒருங்கே அமையப்பெற்று இருக்கும், பொதுநலம் என்பது இவர்களது வாழ்வை மேம்பட செய்யும், மேற்சொன்ன "கதிரூர் சூரிய நாராயணா கோயில்"வழிபாடு இவர்களது வாழ்வில் ராஜயோகத்தை தன்னிறைவாக வாரி வழங்கும் என்பதுடன் அரசியல் ஆதாயத்தையும் முழுமையாக பெறுவார்கள் என்பதில் மாற்று கருத்துக்கு இடம் இல்லை அன்பர்களே ! 

ஜோதிடன்வர்ஷன் 

9443355696

சனி, 27 ஜனவரி, 2024

சிம்மராசி உத்திரம் நட்சத்திரம் - ராஜயோக வாழ்வை தரும் ரகசிய இறைவழிபாடு!

  


 சிம்மராசி "உத்திரம்" நட்சத்திரம் கடின உழைப்பும் ஸ்திர தன்மையான அறிவாற்றலும் சமயோசித புத்திசாலித்தனமும் பரிபூரணமாக நிறைந்த அற்புத நட்சத்திரம், எதிர்ப்புகளை கண்டு அஞ்சாமல் வீரியமிக்க வெற்றிகளை பதிவு செய்வார்கள், தன்னை பின்பற்றி வாழ அனைவரையும் உற்சாகப்படுத்தும் அன்பர்கள், பிரதிபலன் பாராமல் அனைவருக்கும் நன்மைகளையும், பேதம் பாராமல் மக்களுக்கான சேவைகளை செய்வத்தில் வல்லவர்கள், அன்பு பாராட்டுதல், உறவுகளை அனுசரித்து செல்லுதல், தன்னை சார்ந்து இருக்கு அன்பர்களுக்கான வழிகாட்டுதல், சுயநலம் இன்றி பொதுநலன் காத்தல், உயரிய நோக்கங்கள், சமுதாய விழிப்புணர்வு, வெற்றிகளை அனைவருடன் பகிர்ந்து கொள்ளுதல், எதிர்பாலினர் சேர்க்கை வழியிலான நன்மைகளையும் முன்னேற்றங்களையும் சுவீகரித்தல், தெய்வீக சிந்தனை, ஆன்மீக வெற்றி அரசுத்துறை சார்ந்த பணிகளை இலகுவாக கையாளுதல், அரசாட்சி செய்யும் யோகம், நிதி மேலாண்மை சார்ந்த திட்டமிடுதல்களை வெகு அற்புதமாக கையாளுதல், வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டு இருக்கும் தொழில்களை வெகு விரைவில் மீட்டு எடுத்து முன்னேற்றங்களையும், அபரிவிதமான வளர்ச்சியினையும் சுவீகரிக்கும் தன்மை, உறவுகளும் நட்புகளும் புடைசூழ யோக வாழ்வை சுவீகரிக்கும் பேராற்றல் என மிகுந்த நன்மைகளை வாரி வழங்கும், இவர்களது  தமது வாழ்வில் சகலவிதமான சௌபாக்கியமும், உடல் நலம் மனோவலிமை, கல்வியில் மேன்மை, தொழில் விருத்தி, புத்திரபாக்கியம், பொருளாதார வளர்ச்சி என்றவகையில் பரிபூரணமான சுகபோகங்களையும், தன்னிறைவாக சுவீகரிக்க, மிக எளிமையான ரகசிய இறைவழிபாடு என்பது கீழ்கண்டவாறு அமையும். 

கும்பகோணம் அருகில் அமைந்துள் சூரியன் நவக்கிரக தலம் "சூரியனார் கோவில்"  உத்திரம் நட்சத்திரம் அன்பர்களுக்கு ஆளுமை திறனையும் அதிர்ஷ்ட வாய்ப்புகளையும் தன்னிறைவாக வாரி வழங்கும் திருக்கோவிலாகும், வளர்பிறை ஞாயிற்று கிழமை அன்று காலை சூரிய ஹோரையில் செம்பருத்தி மாலை மற்றும் சிகப்பு வர்ண பட்டாடை சாற்றி வழிபடும் உத்திர நட்சத்திர அன்பர்களுக்கு, வாழ்வில் பெருந்தன்மையான குணத்தையும், தலைமை பொறுப்பேற்கும் வலிமையையும், கல்வி கேள்விகளில் மிகப்பெரிய ஆளுமைத்திறனையும், முற்போக்கு சிந்தனையையும், நேர்மறை எண்ணத்தின் வழியிலான வெற்றி வாய்ப்புக்களையும், நிலைத்து நின்று ஸ்திர தன்மையுடன் தனது வெற்றிகளை பதிவு செய்யும் யோகத்தையும், அரசு மற்றும் அரசுத்துறை சார்ந்த பணிகளை சுவீகரிக்கும் நிலையையும் வெகு விரைவாக வழங்குவார் மேலும் உடல் வலிமை மனஉறுதி இரண்டையும் ஏககாலத்தில் உத்திர நட்சத்திர அன்பர்கள் பெற்று நலமடைவார்கள், தொழில் ரீதியான தடைகள் நீங்கும், புதிய தொழில் வாய்ப்புகள் மேலோங்கும், ஏற்றுமதி இறக்குமதி தொழில் வழியிலான முன்னேற்றங்கள் வெகு அற்புதமாக வந்து சேரும், மலைபோல் வந்த சிரமங்கள் பனிபோல் விலகும், சமுதாயத்தில் பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்க பெறுவதுடன் எதிர்பாராத முன்னேற்றங்கள் வெகு சிறப்பாக வந்து சேரும், செய்யும் தொழில் வழியிலான முன்னேற்றங்கள் உத்திர நட்சத்திர அன்பர்களுக்கு முழுஅளவில் கிடைக்க பெறுவார்கள்.

வருடம் ஒருமுறை  "சூரியனார் கோவில்" சென்று வரும் உத்திர நட்ச்சத்திர அன்பர்கள் தமது வாழ்வில் அரசருக்கு நிகரான யோக வாழ்வை சுவீகரிப்பதுடன் பொதுமக்கள் ஆதரவு, தொழில் சாதனைகள், எதிர்பாலினர் ஆதரவு, வசதி வாய்ப்புகள் நிறைந்த சொகுசு வாழ்க்கை, சுயமாக செயல்பட்டு தனசேர்க்கை பெறுதல், சமுதாயத்தில் உயரிய பதவிகள், கலைத்துறையில் மிகப்பெரிய வெற்றி வாய்ப்புகள், வெளியூர் அல்லது வெளிநாடுகளில் தொழில் யோகம், மருத்துவம் தொழில் நுட்பம் நிதிமேலாண்மை போன்றவற்றில் அபரிவிதமான முன்னேற்றங்கள், சுய சம்பாத்தியம், பொருளாதார முன்னேற்றங்கள், மண் மனை வண்டி வாகன யோகங்கள் என்ற வகையில் அபரிவிதமான வளர்ச்சி வாய்ப்புகள், தடைகள் யாவும் நீங்கி சுபயோக வாழ்வை சுவீகரிக்கும் தன்மை என்ற வகையில் சிறப்புகளை வரி வழங்கும்.

 குறிப்பு :

 சிம்மராசியில் "உத்திரம்" நட்சத்திரத்தை தனது ஜென்ம நட்ஷத்திரம் அல்லது லக்கினமாக பெற்ற அன்பர்கள், ஸ்திர தன்மையான ஆளுமை திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் மிக்கவர்கள், படைப்பு திறன் அறிவாற்றல் கற்பனை வளம் இயல் இசை நாடகம் போன்ற துறைகளில் நன்மைகளை பெறுவதுடன், எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாக திகழ்வார்கள், எதிரிகள் வழியிலான நன்மைகளையும், பொதுமக்கள் செல்வாக்கில் நிலையான வெற்றிகளையும் சுவீகரிப்பார்கள், இயல் இசை நாடகம் போன்ற கலைத்துறையில் மிகப்பெரிய  முன்னேற்றத்தையும், அதிக அளவிலான செல்வத்திற்கும்  சொந்தக்காரர்கள் என்பதனால், இவர்களது வளர்ச்சி அசுர வேகத்தில் அமையும், வாழ்வை எவ்வாறு சிறப்பாக வாழ்வது என்பதை பற்றியும்,அனைவரையும் அனுசரித்து வாழும் வல்லமையும் இவர்களுக்கு ஒருங்கே அமையப்பெற்று இருக்கும், மேற்சொன்ன "சூரியனார் கோவில்" வழிபாடு இவர்களது வாழ்வில் ராஜயோகத்தை தன்னிறைவாக வாரி வழங்கும் என்பதுடன் அரசியல் ஆதாயத்தையும் முழுமையாக பெறுவார்கள் என்பதில் மாற்று கருத்துக்கு இடம் இல்லை அன்பர்களே ! 

ஜோதிடன்வர்ஷன் 

9443355696

வியாழன், 25 ஜனவரி, 2024

சிம்மராசி பூரம் நட்சத்திரம் - ராஜயோக வாழ்வை தரும் ரகசிய இறைவழிபாடு!

  

 சிம்மராசி "பூரம்" நட்சத்திரம் "கலை உலக இளவரசன் கவிஞர்களுக்கு கதாநாயகன் " என்பதற்கு இணங்க தனது செயல்பாடுகளை முன்னெடுக்கும் அற்புத நட்சத்திரம், சுயகட்டுப்பாடு சிறந்த நிர்வாகத்திறமை அதீத தைரியம் தன்னம்பிக்கை, உடல் நலம் பேணுவதில் வல்லவர்கள், என்றும் இளமை என்பதற்கு இணங்க வயோதிகத்திலும் துடிப்புடன் செயல்படுதல், வயதை கணிக்க இயலாத தன்மை, ரகசிய கலைகளை கற்றுணர்ந்து தேர்ச்சி பெறுதல், தெளிவான சிந்தனை, குழப்பம் அற்ற மனநிலை, நினைத்தது நிறைவேற்றும் செயல்பாடுகள், சுதந்திர மனப்பான்மை, எதிர்கால வாழ்வை சிறப்பாக மகிழ்ச்சிகரமாக வாழும் தன்மை, தன்னிறைவான பொருளாதார சேர்க்கை, சிறப்பு தொழில் நுண்ணறிவு துறை சார்ந்த ஞானம், எதையும் சமாளிக்கும் வல்லமை, எப்பொழுதும் விழிப்புணர்வுடன் இயங்குதல், தொழில் ரீதியான வளர்ச்சியை விரைவாக சுவீகரித்தல் என்ற வகையில் சிறப்பைத்தரும், இவர்களது  தமது வாழ்வில் சகலவிதமான சௌபாக்கியமும், உடல் நலம் மனோவலிமை, கல்வியில் மேன்மை, தொழில் விருத்தி, புத்திரபாக்கியம், பொருளாதார வளர்ச்சி என்றவகையில் பரிபூரணமான சுகபோகங்களையும், தன்னிறைவாக சுவீகரிக்க, மிக எளிமையான ரகசிய இறைவழிபாடு என்பது கீழ்கண்டவாறு அமையும். 

 கடலூர் மாவட்டம் "சிங்கிரிக்குடி லட்சுமி நரசிம்மர்" கோவில் "பூரம்" நட்சத்திர அன்பர்களுக்கு வெற்றிகளை வாரி வழங்கும் திருக்கோவிலாகும், இங்கு வளர்பிறையில் வரும் ஞாயிற்று கிழமை அன்று சிகப்பு வர்ண பட்டு வஸ்திரம் சாற்றி சிகப்புதாமரை மலர்கள் சாற்றி வழிபடும் பூர நட்சத்திர அன்பர்கள் 14 நாட்களில் அரசு ஆதாயம், அரசு வேலை வாய்ப்பு, அரசுத்துறை சார்ந்த மானியங்கள், அரசியல்வாதிகளில் ஆதரவு என மிக சிறப்பான எதிர்காலத்தை வாரி வழங்கும், மேலும் கலைத்துறையில் இயங்கும் அன்பர்களுக்கு தனது தனித்திறமையையும் படைப்பாற்றலையும் மக்களிடம் கொண்டுசேர்க்கும் தன்மையை தரும், நேர்த்தியான விஷயங்களை கடைபிடிக்கும் பூர நட்சத்திர அன்பர்களுக்கு இத்திருக்கோவில் வெற்றிமேல் வெற்றியை பெற்றுத்தரும் என்றால் அது மிகையாகாது, பூர்வீக சொத்துக்கள் சார்ந்த இன்னல்களை எதிர்கொண்டு இருக்கும் அன்பர்களுக்கு சரியான தீர்வையும்  தனது பக்கமுள்ள ஞாயமான கோரிக்கைகளையும் வென்று எடுக்கும் வல்லமையையும் தருவதுடன், சுகபோக யோக வாழ்வை நல்கும் தன்மை பெற்றவர், எதிர்ப்புகள் அனைத்தையும் வெற்றிகொள்ளும் மனஉறுதி, போட்டி பந்தயம் மற்றும் வழக்குகளில் அபரிவிதமான வெற்றிகள், விளையாட்டு துறையில்  சாதிக்கும் பேராற்றல், அரசியலில் தனது வலிமையை வெகு சிறப்பாக பிரயோகிக்கும் வல்லமை என மிகுந்த சிறப்புகளை தரும்.

 வருடம் ஒருமுறை சிங்கிரிக்குடி லட்சுமி நரசிம்மர் சென்று வரும் பூர நட்ச்சத்திர அன்பர்கள் தமது வாழ்வில் பொதுமக்களின் ஆதரவு, உறவுகளின் அன்பு, பூர்வீக சொத்துக்களை சுவீகரிக்கும் யோகம், உடல் ரீதியான சுறுசுறுப்பு, தெய்வீக ஆளுமை, தெய்வ தரிசனம், குறுகிய காலத்தில் உலக பிரபல்யம் அடைதல், இயல்பான வாழ்வை மகிழ்ச்சிகரமாக வாழ்வது, வாழ்வின் நெறிமுறைகளை உணர்ந்து புரிந்து வெற்றிகரமாக ஜீவனம் செய்வது, உடல் ஆரோக்கியத்தில் மேன்மை, பலபுண்ணிய திருத்தலங்களுக்கும்  சுற்றுலா தலங்களுக்கும் சென்று வரும் யோகம், கண்ணியமிக்க செயல்பாடுகள், பொதுமக்கள் வழியில் இருந்து வரும் பேராதரவு என்ற வகையில் சிறப்புக்களை வாரி வழங்குவார், குறிப்பாக பூரம் நட்சத்திர பெண்களுக்கு அரசு வேலைவாய்ப்பு, அரசியல் ரீதியான செல்வாக்கு, திருமணயோகம், நல்லதொரு ஆண் வாரிசு, பொருளாதார முன்னேற்றம், புதிய தொழில் வழியிலான வெற்றிகள், வெளிநாடுகள் பயணம் மூலம் தொழில் விருத்தி அல்லது  வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு, புதிய சந்தர்ப்பங்கள், புதிய வாய்ப்புகளை மிக எளிதாக சுவீகரிக்கும் யோகம் என்ற வகையில் வெற்றிகளை "சிங்கிரிக்குடி லட்சுமி நரசிம்மர்" தன்னிறைவாக வாரி வழங்குவார்.

குறிப்பு :

சிம்மராசியில் "பூரம்" நட்சத்திரத்தை தனது ஜென்ம நட்ஷத்திரம் அல்லது லக்கினமாக பெற்ற அன்பர்கள், ரகசிய கலைகளில் தேர்ச்சியும் வெகு ஜன மக்கள் ஆதரவும் உண்டாகும், படைப்பு திறன் அறிவாற்றல் கற்பனை வளம் இயல் இசை நாடகம் போன்ற துறைகளில் நன்மைகளை பெறுவதுடன், எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாக திகழ்வார்கள், எதிரிகளை சர்வநாசம் செய்யும் வலிமை பெற்றவர்கள் இவர்களது செயல்பாடுகள் மிகவும் வலிமையானது என்பதனால், எதிர்ப்பவர்கள் நிலை மிகவும் பரிதாபத்துக்கு உரியது, கலைத்துறையில் மிகப்பெரிய சாதனைகளுக்கும், மிகப்பெரிய செயல்பாடுகளுக்கும் சொந்தக்காரர்கள் என்பதனால், இவர்களுது கற்பனை திறன் என்பது மிகப்பெரிய காரியங்களை சாதிக்கும் தன்மையுடன் காணப்படும், வாழ்வை எவ்வாறு சிறப்பாக வாழ்வது என்பதை பற்றியும், வாழ்க்கையை புரிந்து வாழும் வல்லமையும் இவர்களுக்கு ஒருங்கே அமையப்பெற்று இருக்கும், மேற்சொன்ன "சிங்கிரிக்குடி லட்சுமி நரசிம்மர்" வழிபாடு இவர்களது வாழ்வில் ராஜயோகத்தை தன்னிறைவாக வாரி வழங்கும் என்பதில் மாற்று கருத்துக்கு இடம் இல்லை அன்பர்களே ! 

ஜோதிடன்வர்ஷன் 

9443355696

திங்கள், 22 ஜனவரி, 2024

சிம்மராசி மகம் நட்சத்திரம் - ராஜயோக வாழ்வை தரும் ரகசிய இறைவழிபாடு!

  


சிம்மராசி "மகம்" நட்சத்திரம் பிரம்மாண்டத்தையும் பிரமிப்பையும் வெகு சிறப்பாக பிரதிபலிக்கும் அற்புத நட்சத்திரம் ஆன்மீகத்தில் வெற்றி இறைநிலை தேடுதலில் அதீத ஆர்வம், வருமுன் கண்டுணரும் சக்தி, அரசியலில் சிறப்பான ஆளுமை திறன், மெய்பொருள் கண்டுணரும் யோகம், அரசு பதவிகளில் உயர் நிலையை மிக குறுகிய காலத்தில் சுவீகரிக்கும் தன்மை, இந்திய ஆட்சி பணிகளுக்கான தேர்வுகளில் நல்ல தேர்ச்சியை பெறுவதன் மூலம் வாழ்வில் சாதனை படைக்கும் பேராற்றல், பொதுமக்கள் ஆதரவின் மூலம் மிக உயரிய பதவிகளை அடையும் தன்மை, பாரம்பரிய பெருமைகளை கட்டிக்காத்தல், பரம்பரை பரம்பரையாக தனது ஜீவன வாழ்க்கையை மேம்படுத்துதல், சிந்தனையை ஒருமுக படுத்துதல், செயல்பாடுகளில் அதீத வீரியம், லட்சியங்களை வென்று எடுத்து சாதனை புரிதல், எதிர்கால வாழ்வில் திட்டமிடுதலுடன் வெற்றி காணுதல், துறைசார்ந்த ஞானம், தன்னிறைவான பொருளாதார முன்னேற்றத்தை சுவீகரித்தல் என்ற வகையில் சிறப்பை தரும், இவர்களது  தமது வாழ்வில் சகலவிதமான சௌபாக்கியமும், உடல் நலம் மனோவலிமை, கல்வியில் மேன்மை, தொழில் விருத்தி, புத்திரபாக்கியம், பொருளாதார வளர்ச்சி என்றவகையில் பரிபூரணமான சுகபோகங்களையும், தன்னிறைவாக சுவீகரிக்க, மிக எளிமையான ரகசிய இறைவழிபாடு என்பது கீழ்கண்டவாறு அமையும். 

  சிவகங்கை மாவட்டத்தில், பிள்ளையார்பட்டி எனும் ஊரில் அமைந்துள்ள "பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்"  ஜெகம் ஆளும் "மக" நட்சத்திர அன்பர்களுக்கு வெற்றிகளை வாரி வழங்கும் திருக்கோவிலாகும், இங்கு வளர்பிறையில் வரும் ஞாயிற்று கிழமை அல்லது சதுர்த்தி திதி அன்று வெள்ளெருக்கு மாலை சாற்றி சிகப்புதாமரை மலர்கள் சாற்றி வழிபடும் மகநட்சத்திர அன்பர்கள் 10 நாட்களில் அனைத்தையும் சாதிக்கும் வல்லவர்களாக திகழ்வார்கள், ஞானமும் அறிவும் இவர்களுக்கு வெகுவாக கைகொடுக்கும், சமயோசித அறிவு திறன் என்பது இவர்களின் வாழ்க்கையை பலமடங்கு சுபயோக வாழ்வை பெற்றுத்தரும், கல்வி கேள்விகளில் புலமை, தொழில்நுட்ப்ப அறிவாற்றல், கலைத்துறையில் மிகப்பெரிய வளர்ச்சி, இயல் இசை நாடகம் எழுத்து கவிதை போன்றவற்றில் மிகப்பெரிய ஆளுமை திறன், கற்ற கல்வி வழியிலான முன்னேற்றங்கள், ஞானமும் அறிவும் பெற்ற பெரியோர்களின் ஆசிர்வாதத்தை பெறுதல் அதன் வழியிலான சிறப்பு முன்னேற்றங்கள், கவலைகள் யாவும் மறைந்து மனதில் புத்துணர்ச்சி மற்றும் புதிய வாய்ப்புகளை பெறுதல், மிதம் மிஞ்சிய மனமகிழ்வு பொதுவாழ்க்கையில் புகழ்மிக்க பொறுப்புகள் தேடிவரும் தன்மை, கோபுர உச்சியில் சென்று அரசாளும் யோகம், மூதாதையர் ஆசி, அரசு மரியாதை பெறுதல், விரும்பிய வாழ்வை வெற்றிகரமாக சுவீகரித்தல், எதிர்பாலினர் சேர்க்கை மற்றும் அவர்களால் விரும்படுத்தல், எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடித்தல், ஆன்மீக வாழ்வில் உச்சம் தொடுதல், பிறவி அற்ற நிலையை எய்துதல், தனது வழியில் மற்றவர்களை புகழ்பெற செய்தல், தன்னம்பிக்கை, சுயமரியாதை, அறிவார்ந்த செயல்பாடுகள், தெய்வீக வாழ்வில் மிகப்பெரிய சாதனைகளை படைத்தல், மற்றவர்களுக்கு வழிகாட்டியாக திகழும் வல்லமை, எதிர்பாராத திடீர் முன்னேற்றங்கள் என்ற வகையில் ராஜயோக வாழ்வை வாரி வழங்கும்.

 வருடம் ஒருமுறை பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சென்று வரும் மக நட்ச்சத்திர அன்பர்கள் தமது இல்லற வாழ்வில் வரும் இன்னல்களில் இருந்து விடுபட்டு மகிழ்ச்சி கரமான குடும்ப வாழ்வை சுவீகரிப்பார்கள், குறிப்பாக மக நட்ச்சத்திர பெண்களின் வாழ்வில் சுய முன்னேற்றமும், தொழில் வளர்ச்சியும் நிச்சயம் உண்டு புகழ் மிக்க தொழில் அதிபர்களாக திகழ செய்வதுடன் தனக்கு பொருத்தமான வாழ்க்கை துணையையும் பெற்று மிகப்பெரிய சாதனைகளை படைக்கும் பேராற்றல் உண்டாகும், திருமண தடை அகலும் புத்திர பாக்கியம் உண்டாகும், தொழில் விருத்தி கல்வியில் வெற்றி என சகல நிலைகளில் இருந்தும் தன்னிறைவான முன்னேற்றங்களை வாரி வழங்கும், பதவி உயர்வு அரசுத்துறை ஆதாயம், அரசு பதவிகளை பெறுதல் அரசு வேலைவாய்ப்பு போன்ற முன்னேற்றங்கள் என இவர்களது வாழ்வில் வெகு சிறப்பான நன்மைகளை வாரி வழங்கும், மகநட்சத்திர பெண்கள் தமது வாழ்வில் சாதனைகள் புரிய பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் எப்பொழுதும் துணை நிற்பார்.

  குறிப்பு :

சிம்மராசியில் "மகம்" நட்சத்திரத்தை தனது ஜென்ம நட்ஷத்திரம் அல்லது லக்கினமாக பெற்ற அன்பர்கள், பாரம்பரிய பெருமைகளையும், மக்கள் செல்வாக்கு, தெய்வ வழிபாடு, பித்ரு வழிபாடு, ஆன்மீக பெரியோர் ஆசி என சிறப்பான ஆன்மீக நன்மைகளை பெறுவதுடன், எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாக திகழ்வார்கள், எதிரிகளை சர்வநாசம் செய்யும் வலிமை பெற்றவர்கள் இவர்களது வாக்கு மிகவும் வலிமையானது என்பதனால், அனைவருக்கும் நல்ல வார்த்தைகளை பிரயோகம் செய்வது நலம், மிகப்பெரிய சாதனைகளுக்கும், மிகப்பெரிய செயல்பாடுகளுக்கும் சொந்தக்காரர்கள் என்பதனால், இவர்களுது சிந்தனை என்பது மிகப்பெரிய காரியங்களை சாதிக்கும் தன்மையுடன் இருப்பது நலம், குறுகிய மனப்பான்மையின்றி பொதுநலம் சார்ந்து செயல்படும் பொழுது இவர்களது புகழ் தலைமுறை தலைமுறையாக நிலைத்து நிற்கும், மேற்சொன்ன பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் வழிபாடு இவர்களது வாழ்வில் ராஜயோகத்தை தன்னிறைவாக வாரி வழங்கும் என்பதில் மாற்று கருத்துக்கு இடம் இல்லை அன்பர்களே ! 

ஜோதிடன்வர்ஷன் 

9443355696

திங்கள், 15 ஜனவரி, 2024

கடகராசி ஆயில்யம் நட்சத்திரம் - ராஜயோக வாழ்வை தரும் ரகசிய இறைவழிபாடு!

 


கடகராசி "ஆயில்யம்" நட்சத்திரம் பொதுநல வாழ்வில் புகழ் பெரும் யோக நட்சத்திரம், தனித்திறமை கொண்டு எவராலும் சாதிக்க இயலாத சாதனைகளை மிக எளிதாக சாதிக்கும் வல்லமை பெற்ற நட்சத்திரம், பொதுமக்கள் ஆதரவு என்பது மிக குறுகிய காலத்தில் கிடைக்கப்பெற்று வாழ்வில் மிகப்பெரிய அதிகார பதவிகளை சுவீகரிக்கும் நட்சத்திரம், தெய்வீகத்தில் ஆன்மீகத்தில் அதீத ஈடுபாடு கொண்டுள்ள நட்சத்திரம்,  சுயநலம் இன்றி செயல்படும் பொழுது இறையருளின் கருணையினை பரிபூர்ணமாக பெரும் நட்சத்திரம், அன்பு கருணை மற்றும் அனைத்து உயிர்களையும் தனது உயிர்போல் பாவிக்கும் மனப்பான்மை, எதிர்ப்புகளை கண்டு அஞ்சாத மனநிலை, அறிவில் விழிப்புணர்வு பகுத்தறிதல் உணர்வுக்கு முக்கியத்துவம் தராமல் அறிவுக்கு முக்கியத்துவம் தருதல், பொறுப்பான செயல்பாடுகள், கவனம் கனிவாக நடந்துகொள்ளுதல், அனைவரையும் சரியான வழிப்பாதையில் நடத்திச்செல்லும் அறிவாற்றல், இன்னலுறும் அனைவரையும் தனது அரவணைப்பின் மூலம் மீட்டு எடுக்கும் வலிமை, எதையும் சிறப்பாக செய்யும் வல்லமை என்ற வகையில் மேன்மையை தரும்,  இவர்களது  தமது வாழ்வில் சகலவிதமான சௌபாக்கியமும், உடல் நலம் மனோவலிமை, கல்வியில் மேன்மை, தொழில் விருத்தி, புத்திரபாக்கியம், பொருளாதார வளர்ச்சி என்றவகையில் பரிபூரணமான சுகபோகங்களையும், தன்னிறைவாக சுவீகரிக்க, மிக எளிமையான ரகசிய இறைவழிபாடு என்பது கீழ்கண்டவாறு அமையும். 

 ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள "திருக்காளத்தி " கோவிலில் அருள்பாலிக்கும்  "காளத்தியப்பர்" பெருமானை ராகு கால வேளையில் அபிஷேகம் வெந்நிற பட்டு சாற்றி வழிபாடு செய்யும் ஆயில்ய நட்சத்திர அன்பர்களுக்கு ஒரு மண்டல காலத்தில் சகல ஐஸ்வர்யங்களும் வந்து சேரும், பிறவியின் அருமை உணர்ந்து அறிவுக்கு முக்கியத்துவம் தந்து செயற்கரிய காரியங்களை மிக சிறப்பாக செயலாற்ற வைக்கும், தனது ஆன்ம ஒளி பிரகாசிக்கும், அறிவில் தெளிவு, விழிப்புணர்வு, விளைவறிந்து செயல்படுதல், வருமுன்காக்கும் வல்லமை, தெய்வீக அனுகிரகம், அனைவரையும் வசீகரிக்கும் யோகம், மனிதசக்தியை பயனுள்ளதாக மாற்றும் வல்லமை, பொதுமக்களின் வாழ்வை மேம்படுத்தும் தன்மை, மருத்துவத்தில் தேர்ச்சி, கலைகளில் புகழ்மிக்க பொறுப்புகளை பெறுதல், அரசியல் வழி ஆதாயம், சமூக செயல்பாடுகள், பொதுவாழ்வில் வெற்றி, தனது தனித்திறமையை முழுவதுமாக பிரயோகம் செய்வதால் வரும் வெற்றி வாய்ப்புகள், பல்வகைத்தொழில் புரிதல், மிதமிஞ்சிய வருமான வாய்ப்புகள், பொதுநலம் சார்ந்த காரியங்களில் புகழ்மிக்க பொறுப்புகள் தேடி வருதல், எந்த தொழில் செய்தாலும் அதில் முதன்மை பெறுதல், அதிகாரமும் ஆளுமை திறனும் ஒருங்கே அமையப்பெற்று மக்களுக்கு வழிகாட்டியாக திகழும் யோகம் உண்டாகும்.

ஆயில்யம் நட்சத்திர அன்பர்கள் வருடம் ஒருமுறை "காளத்தியப்பர்" பெருமானை ராகு கால வேளையில் தரிசனம் செய்யும் பொழுது வாழ்வில் முன்னேற்றம் என்பது படிப்படியாக உயர்ந்து உச்சநிலையை அடைவார்கள், மனித வாழ்விற்கு தேவையான அனைத்தும் பரிபூரணமாக கிடைக்கும், உடல்நலம் மனவலிமை, கல்வியில் தேர்ச்சி தொழில்யோகம், திருமணத்தடை அகன்று தனக்கான பொருத்தமான வாழ்க்கை துணையை பெறுதல், சந்ததி தழைக்க நல்லதொரு வாரிசுகள், வசதிவாய்ப்புகள், வண்டி வாகன யோகம், சொத்தது சுக சேர்க்கை, குடியிருக்க நல்ல வசதியான சொந்த வீடு, உறவுகள் ஆதரவு பொதுமக்கள் பேராதரவு, உயர்கல்வி பட்டைய படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்பு, சுய தொழில் புரிவதற்கான சந்தர்ப்பங்கள், துறைசார்ந்த ஞானம், எதையும் முற்போக்கு சிந்தனை மற்றும் நேர்மறை எண்ணம் கொண்டு வெற்றி பெறுதல், மக்கள் சக்தியை ஒருங்கிணைக்கும் வல்லமை, சாதனை புரிவதன் மூலம் பொதுவாழ்வில் வெற்றிபெறுதல் என்றவகையில் மிகுந்த சிறப்புகளை வாரி வழங்கும்.

 குறிப்பு :

கடகராசியில் "ஆயில்யம்" நட்சத்திரத்தை தனது ஜென்ம நட்ஷத்திரம் அல்லது லக்கினமாக பெற்ற அன்பர்கள், ஆன்மிகம் மற்றும் பொதுவாழ்வில் மிகப்பெரிய உச்சத்தை தொடும் யோகம் உண்டு, சுய தொழில் மற்றும் அரசியலில் சார்ந்த அமைப்புகளில் நிச்சய வெற்றிபெறுவார்கள், திடீர் தனயோகம் அதிர்ஷ்ட வாய்ப்புகள், பல்வகை தொழில் வழியிலான லாபங்கள், தனது நிர்வாக திறமை கொண்டு தொழில் வளர்ச்சி  பெரும் வல்லமை, எதிர்பாராத செல்வாக்கு, பொது சேவையை செய்வதின் வழியில் வரும் புகழ்மிக்க பொறுப்புகள், உடல் ஆரோக்கியம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, தெய்வீகஅனுகூலம், தன்னிறைவான பொருளாதார முன்னேற்றம் என்ற வகையில் மிகுந்த சுபயோக பலாபலன்களை சுவீகரிக்க, மேற்சொன்ன இறை வழிபாடு இவர்களது வாழ்வில் ராஜயோகத்தை தன்னிறைவாக வாரி வழங்கும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை அன்பர்களே ! 

ஜோதிடன்வர்ஷன் 

9443355696

செவ்வாய், 9 ஜனவரி, 2024

கடகராசி பூசம் நட்சத்திரம் - ராஜயோக வாழ்வை தரும் ரகசிய இறைவழிபாடு!

 

 கடகராசி "பூசம் நட்சத்திரம்" உற்பத்தி  தொழில் ரீதியான ஞானமும், பாதுகாப்பு, நிதி மேலாண்மை, நிர்வாக திறன் சார்ந்த நிலைகளில் தனித்தன்மையையும் வெளிப்படுத்தும் அபரிவிதமான ஆற்றல் மிக்க சிறப்பு நட்சத்திரமாகும், கல்வி போதிப்பதிலும், அறிய கலைகளில் சிறந்த ஞானமும், தெய்வீக வழிபாடு மூலம் தனது வாழ்வை பிரகாசமாக மாற்றிக்கொள்ளும் யோகமும், மற்றவர்கள் துன்பத்தை தனது ஆறுதலான வார்த்தைகள் மூலம் சரிசெய்யும் வலிமையையும், எதிர்காலம் சார்ந்த விஷயங்களை கண்டுணரும் ஆற்றலும், அறிவார்ந்த பெரியோர்கள் சேர்க்கையும், ஆன்மீக பெருமக்கள் ஆசிர்வாதமும், வருமுன் உணர்ந்து செயல்படும் யோகமும், துணிச்சலான காரியங்களை மிகச்சிறப்பாக செய்துமுடிக்கும் வல்லமையும் இவர்களுக்கு பிறவியிலே அமையப்பெற்று இருக்கும், இவர்களது  தமது வாழ்வில் சகலவிதமான சௌபாக்கியமும், உடல் நலம் மனோவலிமை, கல்வியில் மேன்மை, தொழில் விருத்தி, புத்திரபாக்கியம், பொருளாதார வளர்ச்சி என்றவகையில் பரிபூரணமான சுகபோகங்களையும், தன்னிறைவாக சுவீகரிக்க, மிக எளிமையான ரகசிய இறைவழிபாடு என்பது கீழ்கண்டவாறு அமையும். 

 ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவிலில் அருள்பாலிக்கும் குருபகவானை வளர்பிறை வியாழன் அல்லது மாசி மாதம் மூன்றாவது வியாழக்கிழமை அன்று குரு ஹோரையில் மஞ்சள் பட்டு, மஞ்சள் வர்ண புஷ்பம், வெண்சுண்டல் மாலை சாற்றி வழிபடுவோருக்கு 3நாட்களில் வியக்கத்தக்க சுபயோகங்களும், சிறப்பான முன்னேற்றங்களும் நிச்சயம் உண்டாகும், குறிப்பாக திருமண தடை அகல அனைவரும் இந்த வழிபாட்டு முறையை பின்பற்றலாம், இதனால் திருமண யோகம் கைகூடுவதுடன், சந்ததி தழைக்க நல்ல ஆண் வாரிசு அமையும், மேலும் கல்வியில் வெற்றி, விளையாட்டு துறையில் சாதனை புரியும் யோகம், புதிய கண்டுபிடுப்புகள் சார்ந்த விஷயங்கள் மூலம் உலக புகழ், தெய்வீக அனுகூலம், வெளிநாடு பயணங்கள் அல்லது வெளிநாடுகளில் தொழில் யோகம், ஏற்றுமதி இறக்குமதி தொழில் வழியிலான முன்னேற்றங்கள், உணவு தொழில் சார்ந்த நிலைகளில் மிகப்பெரிய வெற்றி வாய்ப்புகள், புதிய தொழில் யோகங்கள், உயர்கல்வி, பட்டப்படிப்பு, பட்டைய படிப்பு போன்றவற்றில் தேர்ச்சி, வருமான உயர்வு, அரசியல் பதவிகள், அரசுத்துறை சார்ந்த பணிகள், நிரந்தரமான வேலைவாய்ப்புகள், மனதில் உள்ள கவலைகள், துன்பங்கள், அழுத்தங்கள் நீங்கி தெளிவான சிந்தனை, தொலைநோக்கு பார்வை, பல தொழில் செய்யும் யோகம், சரியான முடிவுகளை மேற்கொண்டு வாழ்வில் தன்னிறைவான பொருளாதார  முன்னேற்றத்தை பெறுதல், ஆன்மிகம் மூலம் அபரிவிதமான வளர்ச்சி, உறவுகளின் ஓத்துழைப்பு, கூட்டு தொழில் வழியிலான மிகப்பெரிய வளர்ச்சி, வாழ்க்கை துணை நண்பர்கள் மூலம் அரியபல சாதனைகளை சாதிக்கும் யோகம், தனது தனித்திறமை கொண்டு வாழ்க்கையில் மிகப்பெரிய அதிகார பதவிகளை அலங்கரிக்கும் யோகம் என்றவகையில் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்குவர்.

 பூச நட்சத்திர அன்பர்கள் சுயமாக வாழ்வில் முன்னேற்றம் பெற வேண்டுமெனில் அவர்களுக்கு ஆபத்பாண்டவராக "ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரரும் குரு பகவனும்" அருளாசியை பரிபூர்ணமாக வழங்குவார்கள் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை, பொதுவாழ்வில் பொறுப்பு மிக்க பதவிகள், சுய தொழில் வழியிலான மிகப்பெரிய முன்னேற்றங்கள், அரசு துறை சார்ந்த ஆதங்கள், யாரையும் சார்ந்து வாழாமல் தனித்து இயங்கும் பேராற்றல், சுய ஜாதகத்தில் தடைபட்ட ( யோக பங்கம் ) சுபயோகங்களை முழுமையாக சுவீகரிக்கும் தன்மை, தொழில் சார்ந்த அமைப்புகளில் குறுகியகால வெற்றி வாய்ப்புகள், தனது தனித்திறனை வெளிஉலகிற்க்கு வெளிப்படுத்தி உலக புகழ் பெரும் யோகம், மனநிலையில் தெளிவு மற்றும் மாற்றங்கள், கணவன் மனைவி பிரிவு நிலையில் இருந்து மீட்டுஎடுக்கும் யோகம், புதிய சிந்தனை, புதிய வாய்ப்புகள், அறிவார்ந்த புத்திர பேரு, எதிர்காலத்தை மிக சிறப்பாக அமைத்துக்கொள்ளும் யோகம், குலதெய்வத்தின் அருளாசியின் மூலம் வாழ்வில் முன்னேற்றம் பெரும் யோகம் ஆகிவற்றிற்க்கு அடிப்படை வழிபாடாக இது அமையும்.

குறிப்பு :

கடகராசியில் "பூசம்" நட்சத்திரத்தை தனது ஜென்ம நட்ஷத்திரம் அல்லது லக்கினமாக பெற்ற அன்பர்கள், கல்வி மற்றும் உற்பத்தி துறையில் மிகப்பெரிய உச்சத்தை தொடும் யோகம் உண்டு, சேவை தொழில் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த அமைப்புகளில் நிச்சய வெற்றிபெறுவார்கள், திடீர் தனயோகம் அதிர்ஷ்ட வாய்ப்புகள், கமிஷன் தொழில், ஏற்றுமதி இறக்குமதி தொழில் வழியிலான லாபங்கள், நிர்வாக திறமை கொண்டு அரசு ஆதாயம் பெரும் வல்லமை, எதிர்பாராத செல்வாக்கு, பொது சேவையை செய்வதின் வழியில் வரும் புகழ்மிக்க பொறுப்புகள், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, தெய்வீகஅனுகூலம், தன்னிறைவான பொருளாதார முன்னேற்றம் என்ற வகையில் மிகுந்த சுபயோக பலாபலன்களை சுவீகரிக்க, மேற்சொன்ன இறை வழிபாடு இவர்களது வாழ்வில் ராஜயோகத்தை தன்னிறைவாக வாரி வழங்கும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை அன்பர்களே ! 

ஜோதிடன்வர்ஷன் 

9443355696

ஞாயிறு, 24 டிசம்பர், 2023

கடகராசி புனர்பூசம் நட்சத்திரம் - ராஜயோக வாழ்வை தரும் ரகசிய இறைவழிபாடு!

 

 கடகராசி "புனர்பூசம் நட்சத்திரம்" கல்வியில் மேன்மையையும், நிர்வாக திறனில் புதுமையையும் வெளிப்படுத்தும் தனித்திறன் வாய்ந்த நட்சத்திரம், கற்றுஉணர்வதிலும் கல்வியை போதிப்பதிலும் சிறப்பான நடைமுறையை கையாளும் வல்லவர்கள், தெய்வீக சக்தி இயற்கையாக அமைந்திருக்கும், பாதுகாப்பது பராமரிப்பது இரண்டும் இவர்களுக்கு "கைவந்தகலை" நினைத்த காரியங்களை சாதிக்கும் வல்லமை பெற்றவர்கள், தொலைநோக்கு பார்வையுடன் எந்த ஓர் விஷயத்தையும் மிக சிறப்பாக அணுகுவார்கள், பொருளாதார அறிவாற்றல் அதிகம் உள்ளவர்கள், பயணங்கள் மூலம் மிகப்பெரிய தனசேர்க்கையை சுவீகரிக்கும் யோகம் பெற்றவர்கள், எண்ணத்தின் வலிமை அதிக அளவில் வெற்றிகளை பெற்றுத்தரும், களங்கமற்ற மனநிலையை பெற்றவர்கள், குழந்தை வளர்ப்பில், குடும்ப பராமரிப்பில், வாழ்க்கை துணை தேவைகளை நிறைவு செய்வதில், தாய் தந்தையர் மற்றும் பெரியோர்களை மனநிறைவு செய்து கவனித்து கொள்வதில் சிறந்தவர்கள், இவர்களது  தமது வாழ்வில் சகலவிதமான சௌபாக்கியமும், உடல் நலம் மனோவலிமை, கல்வியில் மேன்மை, தொழில் விருத்தி, புத்திரபாக்கியம், பொருளாதார வளர்ச்சி என்றவகையில் பரிபூரணமான சுகபோகங்களையும், தன்னிறைவாக சுவீகரிக்க, மிக எளிமையான ரகசிய இறைவழிபாடு என்பது கீழ்கண்டவாறு அமையும். 

அலர்மேல் மங்கை "ஸ்ரீ பத்மாவதி தாயார்"  புனர்பூசம் நட்சத்திர அன்பர்களுக்கு பரிபூர்ண நன்மைகளையும் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும் திருக்கோவிலாகும், திருமலை திருப்பதி செல்லும்பொழுது அலர்மேல் மங்காபுரம் சென்று, வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று அதிகாலை சுக்கிர ஹோரையில் ( காலை 6:00 முதல் 7:00 வரை ) வெண் வர்ண பட்டு, தாமரை மலர் மாலை சாற்றி வழிபடுவோருக்கு 10நாட்களில் வெகு சிறப்பான சுபயோக பலாபலன்கள் நடைமுறைக்கு வரும் என்பது உறுதி, புனர்பூசம் நட்சத்திர அதிபதி தேவர்களின் தாயான "அதிதி" என்பதால் "ஸ்ரீ பத்மாவதி தாயார்" கடகராசியில் புனர்பூச நட்சத்திரத்தில் உதித்த அன்பர்களின் வாழ்வில் வியக்கத்தக்க சுபயோகங்களை வாரிவழங்குவார், தாயாரின் தரிசனமும் வழிபாடும் புனர்பூசம் நட்சத்திர அன்பர்களுக்கு நிலையான சௌபாக்கியங்களை நல்கும், சிறந்த அறிவுத்திறனும், பொருளாதார முன்னேற்றமும், இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சியும், திருமண வாழ்வில் கணவன் மனைவி ஒற்றுமையும், குழந்தை பாக்கியமும், புகழ்மிக்க பொறுப்புகளை அலங்கரிக்கும் யோகமும் உண்டாகும். 

 அரசியல் ரீதியான நிர்வாகம், அரசு பதவிகள், அரசு சம்பந்தப்பட்ட தொழில்களில் தங்களுடைய பங்களிப்பை வெற்றிகரமாக வழங்கும் வலிமை பெற்றவர்கள், நிர்வாகத்தில் தனது தனித்துவமான செயல்பாடுகள் மூலம் வியக்கத்தக்க வெற்றிகளை பெறுபவர்கள், கல்வி நிலையங்கள், கல்லூரிகள், விளையாட்டு துறையில் மாணவர்களின் சிறப்பு திறன் உணர்ந்து அவர்களை சரியான பாதையில் வழிநடத்தும் வல்லமை பெற்றவர்கள், உணவு பொருள் சம்பந்தப்பட்ட ஞானமும், உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட முழுமையான புரிதலும் கொண்டவர்கள், ஒருவரை உடல் ரீதியாகவும் மனோ ரீதியாகவும் பண்பட்டவர்களாக மாற்றும் வல்லமை பெற்றவர்கள். அன்பு, பாசம், கருணை மனம்  கொண்டு அனைவரையும் அனுசரித்து செல்வதில் இவர்களுக்கு நிகர் இவர்களே என்றால் அது மிகையாகாது, எந்த ஒரு சூழ்நிலையிலும் தனது சுயகட்டுப்பாட்டையும், கடமை கண்ணியத்தையும் விட்டுக்கொடுக்காமல் மற்றவர்களுக்கு முன் உதாரணமாக வாழும் யோகம் பெற்றவர்கள் கடகராசி புனர்பூச நட்ச்சத்திர அன்பர்கள், தெய்வீக அனுக்கிரகமும் பல புண்ணிய திருத்தலங்களுக்கு மிக எளிதாக சென்றுவரும் யோகமும், ஆன்மீக பெரியோர்களின் பரிபூரண நல்லாசிகளை மிக எளிதாக சுவீகரிக்கும் யோகமும் இவர்களுக்கு இறைஅருள் வழங்கிய நன்கொடையாகும்.

 குறிப்பு :

கடகராசியில் "புனர்பூசம்" நட்சத்திரத்தை தனது ஜென்ம நட்ஷத்திரம் அல்லது லக்கினமாக பெற்ற அன்பர்கள்,நிர்வாக துறையில் மிகப்பெரிய உச்சத்தை தொடும் யோகம் உண்டு, கலை மற்றும் கல்வியில் நிச்சய வெற்றிபெறுவார்கள், திடீர் தனயோகம் அதிர்ஷ்ட வாய்ப்புகள், கமிஷன் தொழில், ஏற்றுமதி இறக்குமதி தொழில் வழியிலான லாபங்கள், நிர்வாக திறமை கொண்டு அரசு ஆதாயம் பெரும் வல்லமை, எதிர்பாராத செல்வாக்கு, பொது சேவையை செய்வதின் வழியில் வரும் புகழ்மிக்க பொறுப்புகள், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, தெய்வீகஅனுகூலம், தன்னிறைவான பொருளாதார முன்னேற்றம் என்ற வகையில் மிகுந்த சுபயோக பலாபலன்களை சுவீகரிக்க, மேற்சொன்ன இறை வழிபாடு இவர்களது வாழ்வில் ராஜயோகத்தை தன்னிறைவாக வாரி வழங்கும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை அன்பர்களே ! 

ஜோதிடன்வர்ஷன் 

9443355696

சனி, 16 டிசம்பர், 2023

மிதுனராசி புனர்பூசம் நட்சத்திரம் - ராஜயோக வாழ்வை தரும் ரகசிய இறைவழிபாடு!



" புனர்பூசம் நட்சத்திரம் " உயர்ந்த லட்சியங்கள் மற்றும் குறிக்கோள்களை மிக சிறப்பாக வென்றெடுக்கும் வலிமை வாய்ந்த நட்சத்திரம், நோக்கமும் செயலும் இலக்கை நோக்கி சரியாக பாயும் யோகம் பெற்றவர்கள், அர்ச்சுனனின் காண்டீபத்தில் இருந்து வெளிப்படும் அம்புபோல் சென்றடையும் செயல்திறன் பெற்றவர்கள், தெய்வீகத்தில் ஆன்மீகத்தில் அதீத ஈடுபாடும், தலைமை பொறுப்பேற்கும் யோகமும், பல இடங்களுக்கு சென்று தனது திறமையை நிரூபிக்கும் வல்லமை பெற்றவர்கள், தனது ஆழ்ந்த அறிவாற்றல் அனைவருக்கும் பயன்தரும் விதத்திலான செயல்களை செய்து புகழ் பெறுவார்கள், மனம் உடல் செயல் மூன்றிலும் ஸ்திரத்தன்மையான செயல்பாடுகளை பிரயோகம் செய்யும் அன்பர்கள், எதிர்கால திட்டமிடுதல்கள், உயரிய நோக்கம், வித்தையில் தேர்ச்சி, எதிலும் வெற்றி, எடுத்துக்கொண்ட காரியங்களில் கண்ணும் கருத்துமாக செயல்படுவது, பொறுப்புகளை மிக சிறப்பாக நிர்வகிக்கும் வல்லமை, பழமொழிகளை கற்றுணர்ந்து புலமை பெறுவது, பல தேசங்கள் சென்றுவரும் யோகம், பயணங்கள் வழியிலான வளர்ச்சி மற்றும் பொருளாதார முன்னேற்றங்களை தன்னிறைவாக சுவீகரிப்பார்கள், இவர்களது  தமது வாழ்வில் சகலவிதமான சௌபாக்கியமும், உடல் நலம் மனோவலிமை, கல்வியில் மேன்மை, தொழில் விருத்தி, புத்திரபாக்கியம், பொருளாதார வளர்ச்சி என்றவகையில் பரிபூரணமான சுகபோகங்களையும், தன்னிறைவாக சுவீகரிக்க, மிக எளிமையான ரகசிய இறைவழிபாடு என்பது கீழ்கண்டவாறு அமையும். 

"சமயபுரம் மாரியம்மன்"  புனர்பூசம் நட்சத்திர அன்பர்களுக்கு பரிபூர்ண நன்மைகளையும் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும் திருக்கோவிலாகும், வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று அதிகாலை சுக்கிர ஹோரையில் ( காலை 6:00 முதல் 7:00 வரை ) சிகப்பு வர்ண பட்டு, மல்லிகை மலர் மாலை சாற்றி வழிபடுவோருக்கு 30நாட்களில் வெகு சிறப்பான சுபயோக பலாபலன்கள் நடைமுறைக்கு வரும் என்பது உறுதி, புனர்பூசம் நட்சத்திர அதிபதி தேவர்களின் தாயான "அதிதி" என்பதால் தாய் வழிபாட்டின் முதன்மையான இடமான "சமயபுரம் மாரியம்மன்" புனர்பூசம் நட்சத்திர அன்பர்கள் வாழ்வில் சுபயோகங்களையும், நன்மைகளையும் முழுமையாக வாரி வழங்குவார்கள் என்பதில் சந்தேகமில்லை, குறிப்பாக கலைகளில் தேர்ச்சி கல்வியில் மேன்மை, படைப்பு திறன், பலதொழில் செய்யும் யோகம், அயல் தேச பயணங்கள் வழியிலான வெற்றி வாய்ப்புகள், தொல்லியல் மற்றும் சுற்றுலாதுறையில் புகழ் மிக்க பொறுப்புகள், கற்பனை வளம், இயல் இசை நாடகம் அல்லது எழுத்து பணியில் சாதனை புரியும் வாய்ப்பு என புனர்பூசம் நட்சத்திர அன்பர்களின் வாழ்வில் வியக்கத்தக்க மாற்றங்கள் நடைமுறைக்கு வரும் என்பது கவனிக்கத்தக்கது.

 வியாபார துறையில் மிகப்பெரிய வெற்றி வாய்ப்புகள், பொதுமக்கள் தொடர்புடைய பணிகளில் சிறப்பான செயல்பாடுகள், பொது வாழ்வில் புகழ்மிக்க பொறுப்புகளை மிக எளிதாக சுவீகரிக்கும் யோகம், அமைதியை நிலைநாட்டும் ஆளுமை திறன், பொறுப்புணர்வுடன் செயல்பட்டு குடும்பநலன் காப்பது, உறவுகளை மிகச்சிறப்பாக வசீகரித்து தமது காரியங்களை சாதிப்பது, திருப்திகரமான செயல்பாடுகள் மூலம் மனநிறைவு பெறுதல், போதும் என்ற மனநிலை, பேச்சு திறன் மூலம் வாழ்வின் முன்னேற்றத்தை வெகு சிறப்பாக நிலைநிறுத்திக்கொள்ளும் யோகம், தெய்வீக சிந்தனை, வருமுன்  காக்கும் தன்மை, நிறைவான வாழ்வை குறைவின்றி வாழும் யோகம், சரியான வழிகாட்டுதல்கள், பொது சேவையை சிறப்பாக செய்து அதன்வழியில் அரசியல் அதிகார பதவிகளை வெற்றிகொள்ளுதல், புகழ் மிக்க பொறுப்புகளை மிக எளிதாக சுவீகரித்தல், அனைத்தையும் அடையும் மனவலிமை, ஞானம் மற்றும் அறிவார்ந்த செயல்பாடுகள், பொதுஅறிவு திறன், கல்வியில் வெற்றி, அரியகலைகளில் தேர்ச்சி, ஆட்சிப்பணி சம்பந்தப்பட்ட கல்வியில் மிகப்பெரிய சாதனை படைக்கும் பேராற்றல், எந்த ஒரு விஷயத்தையும் மிக நுணுக்கமாக அணுகும் வல்லமை, புன்னகை மாறாத பேச்சு திறன், நகைசுவை உணர்வுடன் மற்றவரை மகிழ்விக்கும் வல்லமை, எதிர்ப்புகளை கண்டு அஞ்சாமல் வெற்றிநடை போடும் யோகம் என்றவகையில் சிறப்பான நன்மைகளை வாரி வழங்கும்.

குறிப்பு :

மிதுனராசியில் "புனர்பூசம்" நட்சத்திரத்தை தனது ஜென்ம நட்ஷத்திரம் அல்லது லக்கினமாக பெற்ற அன்பர்கள், விளையாட்டு துறையில் மிகப்பெரிய உச்சத்தை தொடும் யோகம் உண்டு, போட்டி பந்தயங்களில் நிச்சய வெற்றிபெறுவார்கள், திடீர் தனயோகம் அதிர்ஷ்ட வாய்ப்புகள், கமிஷன் தொழில், ஏற்றுமதி இறக்குமதி தொழில் வழியிலான லாபங்கள், தொழில் திறமை கொண்டு அரசு ஆதாயம் பெரும் வல்லமை, எதிர்பாராத செல்வாக்கு, பொது சேவையை செய்வதின் வழியில் வரும் புகழ்மிக்க பொறுப்புகள், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, தெய்வீகஅனுகூலம், தன்னிறைவான பொருளாதார முன்னேற்றம் என்ற வகையில் மிகுந்த சுபயோக பலாபலன்களை சுவீகரிக்க, மேற்சொன்ன இறை வழிபாடு இவர்களது வாழ்வில் ராஜயோகத்தை தன்னிறைவாக வாரி வழங்கும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை அன்பர்களே ! 

ஜோதிடன்வர்ஷன் 

9443355696

வியாழன், 14 டிசம்பர், 2023

மிதுனராசி திருவாதிரை நட்சத்திரம் - ராஜயோக வாழ்வை தரும் ரகசிய இறைவழிபாடு!


" திருவாதிரை நட்சத்திரம் " படைப்பாளியாகவும் புதுமைவிரும்பியாகவும் பிரகாசிக்க வைக்கும் சிறப்பு நட்சத்திரம்,  கால புருஷ தத்துவ அமைப்பிற்கு மூன்றாவது உபய காற்று ராசியான மிதுன ராசியில் வியாபித்து இருக்கும் "ராகுவின்" திருவாதிரை நட்சத்திரத்தை தனது ஜென்ம நட்சத்திரமாக பெற்ற அன்பர்கள் புதுமையான சிந்தனை, படைப்புதிறன், அறியகலைகளில் சிறப்பான தேர்ச்சி, தெய்வீகஅனுகிரகம், புலனுக்கு அப்பாற்பட்ட அறிவாற்றல், கலைரசனை, எழுத்தாற்றல், கவி புனையும் வல்லமை, கற்பனைதிறன், எழுத்தை ஜீவனமாக முன்னெடுக்கும் வாய்ப்பு, பத்திரிக்கை ஊடகம், தொலைதொடர்பு, தொலைக்காட்சி போன்றவற்றி சாதிக்கும் யோகம் பெற்றவர்கள், இவர்களது  தமது வாழ்வில் சகலவிதமான சௌபாக்கியமும், உடல் நலம் மனோவலிமை, கல்வியில் மேன்மை, தொழில் விருத்தி, புத்திரபாக்கியம், பொருளாதார வளர்ச்சி என்றவகையில் பரிபூரணமான சுகபோகங்களையும், தன்னிறைவாக சுவீகரிக்க, மிக எளிமையான ரகசிய இறைவழிபாடு என்பது கீழ்கண்டவாறு அமையும். 

 சங்கரநாராயணன் திருக்கோவிலில் (சங்கரன்கோவில்) மார்கழி மாத திருவாதிரை வழிபாடு மிகவும் விமர்சையாக நடைபெறும், அதன்படி திருவாதிரை 7ம் திருநாளில் நடராஜர் சிவப்பு உடை அலங்காரங்கள் செய்து ருத்ரன் அம்சமாக வெள்ளி சப்பரத்தில் எழுந்தருள்வார், திருவாதிரை நட்சத்திர அன்பர்கள் இந்த ருத்ரன் அம்ச வழிபாட்டில் கலந்துகொண்டு, சிவப்பு வஸ்திரம் மற்றும் சிவப்புதாமரை மலர் சாற்றி வழிபாடு செய்வது என்பது 9 நாட்களில் சகல சௌபாக்கியங்களையும் திருவாதிரை நட்சத்திர அன்பர்களுக்கு வாரி வழங்கும் வழிபாடு ஆகும், குறிப்பாக கலைதுறையில் வெற்றி, அரசியல் அதிகாரம், அரசு துறையில் வேலைவாய்ப்பு, அதிகாரம்மிக்க பதவிகள், வியாபாரத்தில் வெற்றி, பலதொழில் செய்யும் யோகம், பத்திரிகை மற்றும் ஊடக துறையில் வெற்றிவாய்ப்பு, மக்கள் துயர்துடைக்கும் பொதுவாழ்வில் தொடர் வெற்றிகள், ஏஜென்சி மற்றும் கமிஷன் வழியிலான பொருளாதர முன்னேற்றங்கள், சேவை தொழில் வழியிலான மிகப்பெரிய வளர்ச்சி, பொதுமக்கள் ஆதரவு வழியிலான அதிகாரங்கள், உடல் மனம் சார்ந்த பிரச்சனைகளில் இருந்து மற்றவர்களை காப்பாற்றும் வல்லமை என மிகுந்த சிறப்புகளை தன்னிறைவாக வழங்கும்.

 புதுமையான விஷயங்களை உலகுக்கு அறிமுகம் செய்து அதன்வழியிலான சுபமுன்னேற்றங்களை மற்றவர்களுக்கு வழங்கும் அறிவுத்திறன் மிகுந்தவர்கள், கற்ற கல்வியை தனது சுய முன்னேற்றத்திற்கும், ஆரோக்கியமான சமுதாயம் காண்பதற்கும் உபயோகிக்கும் வல்லமை பெற்றவர்கள், அதிகாரங்களை நடைமுறைப்படுத்தவும், நிர்வாக திறன் கொண்டு வாழ்வை நெறிப்படுத்தவும் இவர்களுக்கு மிக எளிதான காரியமாக அமையும், மற்றவர்கள் தோல்வியடையும் துறையில் இவர்களின் வெற்றி அபரிவிதமானதா இருக்கும் என்பது கவனிக்கத்தக்கது, இவர்களை சார்ந்து இருப்பவர்கள் வாழ்வில் மகிழ்ச்சிக்கு குறைவுஇருக்காது, சுயநலம் இன்றி செயல்படுவார்கள், சுய கட்டுப்பாடு, உண்மை சத்தியம் போன்றவற்றை தமது வாழ்வில் சிறப்பாக கடைபிடிக்கும் சத்திய சீலர்கள், ஒழுக்கம் பண்பாடு நாகரீகம் போன்ற நற்குணங்களால் அனைவராலும் போற்றப்படும் யோகம் உண்டு, தனது எழுத்து மூலம் உலகில் பலமாற்றங்களையும் அறிய பல சாதனைகளையும் செய்யும் வல்லவர்கள், புதிய கருவிகளையும் தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களையும் மிக சிறப்பாக கையாளும் அறிவாற்றல் சிறு வயதுமுதலே இவர்கள் பெற்று இருப்பது அதிசயிக்கத்தக்க விஷயமாகும்.

குறிப்பு :

மிதுனராசியில் "திருவாதிரை" நட்சத்திரத்தை தனது ஜென்ம நட்ஷத்திரம் அல்லது லக்கினமாக பெற்ற அன்பர்கள், தகவல் தொழில் நுட்பம், ஊடகம்  மற்றும்  பத்திரிகை துறையில் சாதனை புரியும் யோகம் பெற்றவர்கள், கமிஷன் ஏஜென்சி தரகுதொழில் மற்றும் ஏற்றுமதி இறக்குமதி தொழில் வழியில் சிறப்பான முன்னேற்றத்தை நல்கும், தொலைத்தொடர்பு சாதனங்கள் மின்னணு கருவிகள், கணினி மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் வழியில் பெரிய தனசேர்க்கையினை பெறுவார்கள், சிறந்த திட்டமிடுதல்கள் இவர்களது வாழக்கையை சிறப்பாக நிலைநிறுத்தும், தெய்வீகம் மற்றும் ஆன்மிகம் இவர்களது வாழ்வை பிரகாசிக்க வைக்கும், இயற்கையாவே  இவர்களுக்கு இறையருளின் தரிசனம் கிட்டும், சுயமாக வாழ்வில் அறிய பல சாதனைகளை படைக்கும் பேராற்றல் இவர்களுக்கு நிச்சயம் உண்டு,  மேற்சொன்ன இறை வழிபாடு இவர்களது வாழ்வில் ராஜயோகத்தை தன்னிறைவாக வாரி வழங்கும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை அன்பர்களே ! 

ஜோதிடன் வர்ஷன் 

9443355696

செவ்வாய், 12 டிசம்பர், 2023

மிதுனராசி மிருகசீரிடம் நட்சத்திரம் - ராஜயோக வாழ்வை தரும் ரகசிய இறைவழிபாடு!

 "மிருகசீரிடம் நட்சத்திரம்" கணிதம் மற்றும் வியாபாரநுணுக்கமும் ஒருங்கே அமையப்பெற்ற அருமையான நட்சத்திரம், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு மூன்றாவது உபய காற்று ராசியான மிதுன ராசியில் வியாபித்து இருக்கும் "செவ்வாயின்" மிருகசீரிடம் நட்சத்திரத்தை தனது ஜென்ம நட்சத்திரமாக பெற்ற அன்பர்கள் இயற்கையிலேயே வியாபர தந்திரங்கள் மற்றும் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட தகவல் தொழில் நுட்ப அறிவுத்திறன் கொண்டவர்கள், இவர்களது அறிவுத்திறன் என்பது சிக்கலான பல பாதுகாப்பு விஷயங்களையும், வியாபார ரீதியான திட்டமிடுதல்களையும் மிக லாவகமாக கையாளும் தன்மை பெற்றவர்கள், கருத்து பரிமாற்றம், புதிய தொழில் நுட்ப கருவிகளை கண்டுபிடிப்பது மற்றும் கையாள்வது, எதிர்ப்புகளை கண்டு அஞ்சாமல் தைரியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், விளையாட்டு துறையில் புகழ்மிக்க பதவி மற்றும் பரிசுகளை சுவீகரிக்கும் யோகம், உலகப்புகழ், உழைப்பிற்க்கான முழுமையான அங்கீகாரம் போன்றவற்றை மிக குறிக்கியகாலத்தில் பெற்று சாதனை புரிவார்கள், இவர்களது  தமது வாழ்வில் சகலவிதமான சௌபாக்கியமும், உடல் நலம் மனோவலிமை, கல்வியில் மேன்மை, தொழில் விருத்தி, புத்திரபாக்கியம், பொருளாதார வளர்ச்சி என்றவகையில் பரிபூரணமான சுகபோகங்களையும், தன்னிறைவாக சுவீகரிக்க, மிக எளிமையான ரகசிய இறைவழிபாடு என்பது கீழ்கண்டவாறு அமையும். 

நாமக்கல் "நரசிம்மர் திருக்கோவில்" மிருகசீரிடம் நட்சத்திரம் மிதுன ராசி அன்பர்களுக்கு நினைக்கும் காரியங்கள் யாவற்றையும் சாதிக்கும் பேராற்றலை 18நாட்களுக்குள் வாரி வழங்கும் வல்லமை பெற்ற திருக்கோவில், நரசிம்மரும் நாமகிரி தாயாரும் மிருகசீரிடம் நட்சத்திரம் மிதுன ராசி அன்பர்களுக்கு உலகப்புகழ், வியாபார வெற்றி, திருமணயோகம், அரசுத்துறை ஆதாயங்கள் என்ற வகையில் சிறப்பான நற்பலன்களை தடையின்றி வாரி வழங்குவார்கள், வளர்பிறை செவ்வாய் அல்லது வெள்ளி கிழமைகளில் செவ்வாய், சுக்கிர ஹோரையில் வெண்ணிற பட்டு வஸ்த்திரம், மல்லிகை மலர்மாலை சாற்றி, நரசிம்மர் மற்றும் தாயாரை வழிபாடு செய்யும் அன்பர்களுக்கு மேற்சொன்ன சுபயோக பலன்கள் என்பது மூன்று வாரங்களில் வெகுசிறப்பாக நடைமுறைக்கு வரும், குறிப்பாக தொழில் ரீதியான தடை, திருமண தடை, புத்திர பாக்கிய தடைகளை சந்தித்துக்கொண்டு இருக்கும்  மிருகசீரிடம் நட்சத்திரம் மிதுன ராசி அன்பர்களுக்கு சிறப்பான நற்பலன்கள் நடைமுறைக்குவரும் என்பது உறுதியான அம்சமாகும்.

மிருகசீரிடம் நட்சத்திரம் மிதுன ராசி அன்பர்கள் விளையாட்டு மற்றும் வியாபார துறையில் கொடிகட்டி பறக்கும் யோகம் கொண்டவர்கள், சிறு வயது முதலே விளையாட்டு துறையில் அதீத ஆர்வமும், மிக எளிதான வெற்றிகளையும் பெறுவார்கள், பாதுகாப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களை மிக சிறப்பாக கையாளும் தன்மை பெற்றவர்கள், மேலும் திட்டமிட்டு காரியங்களை சாதிக்கும் குணம் பெற்றவர்கள், இவர்கள் சொல்வதுபோல் செயலிலும் தமது திறமையை காட்டும் வல்லவர்கள், குறிக்கோள்கள் லட்சியங்கள் போன்றவற்றில் தங்களது தனித்திறமையை வெகு அற்புதமாக வெளிப்படுத்துவார்கள், எந்த ஒரு விஷயத்தையும் சரியான கோணத்தில் அணுகும் வல்லமை பெற்றவர்கள், இவர்களது அறிவுரைப்படி செய்யும் காரியங்கள் மிகுந்தபாதுகாப்புடன் கூடிய வெற்றிகளை வாரிவழங்கும், நிதி சம்பத்தப்பட்ட திட்டமிடுதல்கள், சேமிப்பின் மூலம் வாழ்வை முன்னேற்ற பாதையில் நகர்த்திச்செல்லும் வல்லமை, தன்னிறைவான வருமான வாய்ப்பு, தொழில் சார்ந்த விஷயங்களில் தொலைநோக்கு பார்வை மற்றும் திட்டமிடுதல்கள், தொழிலாளர்கள் மற்றும் வேலையாட்களை நெறிப்படுத்தி, உயர்ந்த லட்சியங்களை மிக சிறப்பாக சுவீகரிக்கும் யோகம் என்ற வகையில் மிகுந்த நற்பலன்களை பெறுவார்கள்.

குறிப்பு :

மிதுனராசியில் "மிருகசீரிடம்" நட்சத்திரத்தை தனது ஜென்ம நட்ஷத்திரம் அல்லது லக்கினமாக பெற்ற அன்பர்கள், தகவல் தொழில் நுட்ப அறிவாற்றல் வியாபார நுணுக்கம் மற்றும் விளையாட்டு துறையில் சாதனை புரியும் யோகம் பெற்றவர்கள், விரல்நுனியில் சகல விஷயங்களையும் வைத்திருக்கும் வல்லமை பெற்றவர்கள், திட்டமிடுதல் என்பது இவர்களின் தாரக மந்திரமாகும், செய்யும் காரியங்களில் மிக நேர்த்தியான விஷயங்களை கடைபிடிப்பவர்கள், சிரமமான நேரங்களில் தனது அறிவாற்றல் கொண்டு சிக்கல்களை தீர்க்கும் வல்லமை பெற்றவர்கள், இயல் இசை நாடக துறையில் புகழ்மிக்க கவுரவ பதவிகளை சுவீகரிப்பார்கள், ரகசிய கலைகளையும் தற்காப்பு விஷயங்களையும் முறைப்படி கற்றுணர்ந்தவர்கள், தேவையான நேரத்தில் சரியான முடிவுகளை மேற்கொள்ளும் ஆளுமை திறனும் இவர்களுக்கு அமையப்பெற்று இருக்கும், இவர்களுக்கு மேற்சொன்ன இறை வழிபாடு இவர்களது வாழ்வில் ராஜயோகத்தை தன்னிறைவாக வாரி வழங்கும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை அன்பர்களே ! 

ஜோதிடன் வர்ஷன் 

9443355696