மகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 22 ஜனவரி, 2024

சிம்மராசி மகம் நட்சத்திரம் - ராஜயோக வாழ்வை தரும் ரகசிய இறைவழிபாடு!

  


சிம்மராசி "மகம்" நட்சத்திரம் பிரம்மாண்டத்தையும் பிரமிப்பையும் வெகு சிறப்பாக பிரதிபலிக்கும் அற்புத நட்சத்திரம் ஆன்மீகத்தில் வெற்றி இறைநிலை தேடுதலில் அதீத ஆர்வம், வருமுன் கண்டுணரும் சக்தி, அரசியலில் சிறப்பான ஆளுமை திறன், மெய்பொருள் கண்டுணரும் யோகம், அரசு பதவிகளில் உயர் நிலையை மிக குறுகிய காலத்தில் சுவீகரிக்கும் தன்மை, இந்திய ஆட்சி பணிகளுக்கான தேர்வுகளில் நல்ல தேர்ச்சியை பெறுவதன் மூலம் வாழ்வில் சாதனை படைக்கும் பேராற்றல், பொதுமக்கள் ஆதரவின் மூலம் மிக உயரிய பதவிகளை அடையும் தன்மை, பாரம்பரிய பெருமைகளை கட்டிக்காத்தல், பரம்பரை பரம்பரையாக தனது ஜீவன வாழ்க்கையை மேம்படுத்துதல், சிந்தனையை ஒருமுக படுத்துதல், செயல்பாடுகளில் அதீத வீரியம், லட்சியங்களை வென்று எடுத்து சாதனை புரிதல், எதிர்கால வாழ்வில் திட்டமிடுதலுடன் வெற்றி காணுதல், துறைசார்ந்த ஞானம், தன்னிறைவான பொருளாதார முன்னேற்றத்தை சுவீகரித்தல் என்ற வகையில் சிறப்பை தரும், இவர்களது  தமது வாழ்வில் சகலவிதமான சௌபாக்கியமும், உடல் நலம் மனோவலிமை, கல்வியில் மேன்மை, தொழில் விருத்தி, புத்திரபாக்கியம், பொருளாதார வளர்ச்சி என்றவகையில் பரிபூரணமான சுகபோகங்களையும், தன்னிறைவாக சுவீகரிக்க, மிக எளிமையான ரகசிய இறைவழிபாடு என்பது கீழ்கண்டவாறு அமையும். 

  சிவகங்கை மாவட்டத்தில், பிள்ளையார்பட்டி எனும் ஊரில் அமைந்துள்ள "பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்"  ஜெகம் ஆளும் "மக" நட்சத்திர அன்பர்களுக்கு வெற்றிகளை வாரி வழங்கும் திருக்கோவிலாகும், இங்கு வளர்பிறையில் வரும் ஞாயிற்று கிழமை அல்லது சதுர்த்தி திதி அன்று வெள்ளெருக்கு மாலை சாற்றி சிகப்புதாமரை மலர்கள் சாற்றி வழிபடும் மகநட்சத்திர அன்பர்கள் 10 நாட்களில் அனைத்தையும் சாதிக்கும் வல்லவர்களாக திகழ்வார்கள், ஞானமும் அறிவும் இவர்களுக்கு வெகுவாக கைகொடுக்கும், சமயோசித அறிவு திறன் என்பது இவர்களின் வாழ்க்கையை பலமடங்கு சுபயோக வாழ்வை பெற்றுத்தரும், கல்வி கேள்விகளில் புலமை, தொழில்நுட்ப்ப அறிவாற்றல், கலைத்துறையில் மிகப்பெரிய வளர்ச்சி, இயல் இசை நாடகம் எழுத்து கவிதை போன்றவற்றில் மிகப்பெரிய ஆளுமை திறன், கற்ற கல்வி வழியிலான முன்னேற்றங்கள், ஞானமும் அறிவும் பெற்ற பெரியோர்களின் ஆசிர்வாதத்தை பெறுதல் அதன் வழியிலான சிறப்பு முன்னேற்றங்கள், கவலைகள் யாவும் மறைந்து மனதில் புத்துணர்ச்சி மற்றும் புதிய வாய்ப்புகளை பெறுதல், மிதம் மிஞ்சிய மனமகிழ்வு பொதுவாழ்க்கையில் புகழ்மிக்க பொறுப்புகள் தேடிவரும் தன்மை, கோபுர உச்சியில் சென்று அரசாளும் யோகம், மூதாதையர் ஆசி, அரசு மரியாதை பெறுதல், விரும்பிய வாழ்வை வெற்றிகரமாக சுவீகரித்தல், எதிர்பாலினர் சேர்க்கை மற்றும் அவர்களால் விரும்படுத்தல், எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடித்தல், ஆன்மீக வாழ்வில் உச்சம் தொடுதல், பிறவி அற்ற நிலையை எய்துதல், தனது வழியில் மற்றவர்களை புகழ்பெற செய்தல், தன்னம்பிக்கை, சுயமரியாதை, அறிவார்ந்த செயல்பாடுகள், தெய்வீக வாழ்வில் மிகப்பெரிய சாதனைகளை படைத்தல், மற்றவர்களுக்கு வழிகாட்டியாக திகழும் வல்லமை, எதிர்பாராத திடீர் முன்னேற்றங்கள் என்ற வகையில் ராஜயோக வாழ்வை வாரி வழங்கும்.

 வருடம் ஒருமுறை பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சென்று வரும் மக நட்ச்சத்திர அன்பர்கள் தமது இல்லற வாழ்வில் வரும் இன்னல்களில் இருந்து விடுபட்டு மகிழ்ச்சி கரமான குடும்ப வாழ்வை சுவீகரிப்பார்கள், குறிப்பாக மக நட்ச்சத்திர பெண்களின் வாழ்வில் சுய முன்னேற்றமும், தொழில் வளர்ச்சியும் நிச்சயம் உண்டு புகழ் மிக்க தொழில் அதிபர்களாக திகழ செய்வதுடன் தனக்கு பொருத்தமான வாழ்க்கை துணையையும் பெற்று மிகப்பெரிய சாதனைகளை படைக்கும் பேராற்றல் உண்டாகும், திருமண தடை அகலும் புத்திர பாக்கியம் உண்டாகும், தொழில் விருத்தி கல்வியில் வெற்றி என சகல நிலைகளில் இருந்தும் தன்னிறைவான முன்னேற்றங்களை வாரி வழங்கும், பதவி உயர்வு அரசுத்துறை ஆதாயம், அரசு பதவிகளை பெறுதல் அரசு வேலைவாய்ப்பு போன்ற முன்னேற்றங்கள் என இவர்களது வாழ்வில் வெகு சிறப்பான நன்மைகளை வாரி வழங்கும், மகநட்சத்திர பெண்கள் தமது வாழ்வில் சாதனைகள் புரிய பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் எப்பொழுதும் துணை நிற்பார்.

  குறிப்பு :

சிம்மராசியில் "மகம்" நட்சத்திரத்தை தனது ஜென்ம நட்ஷத்திரம் அல்லது லக்கினமாக பெற்ற அன்பர்கள், பாரம்பரிய பெருமைகளையும், மக்கள் செல்வாக்கு, தெய்வ வழிபாடு, பித்ரு வழிபாடு, ஆன்மீக பெரியோர் ஆசி என சிறப்பான ஆன்மீக நன்மைகளை பெறுவதுடன், எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாக திகழ்வார்கள், எதிரிகளை சர்வநாசம் செய்யும் வலிமை பெற்றவர்கள் இவர்களது வாக்கு மிகவும் வலிமையானது என்பதனால், அனைவருக்கும் நல்ல வார்த்தைகளை பிரயோகம் செய்வது நலம், மிகப்பெரிய சாதனைகளுக்கும், மிகப்பெரிய செயல்பாடுகளுக்கும் சொந்தக்காரர்கள் என்பதனால், இவர்களுது சிந்தனை என்பது மிகப்பெரிய காரியங்களை சாதிக்கும் தன்மையுடன் இருப்பது நலம், குறுகிய மனப்பான்மையின்றி பொதுநலம் சார்ந்து செயல்படும் பொழுது இவர்களது புகழ் தலைமுறை தலைமுறையாக நிலைத்து நிற்கும், மேற்சொன்ன பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் வழிபாடு இவர்களது வாழ்வில் ராஜயோகத்தை தன்னிறைவாக வாரி வழங்கும் என்பதில் மாற்று கருத்துக்கு இடம் இல்லை அன்பர்களே ! 

ஜோதிடன்வர்ஷன் 

9443355696

ஞாயிறு, 5 ஏப்ரல், 2015

சாயா ( ராகு கேது ) கிரகங்களுடன் சேர்ந்த கிரகங்கள் வழங்கும் யோகபலன்கள் !


 சாயா கிரகங்களுடன் சேர்க்கை பெரும் கிரகங்கள் பெரும்பாலும் தீமையான பலன்களையே தரும் என்பது பல ஜோதிடர்களின் கருத்தாக உள்ளது, மேலும் ராகு கேது கிரகங்களுடன் தொடர்பு பெரும் கிரகங்கள் ஜாதகருக்கு அவயோக பலன்களை தருவதில் எவ்வித விதிவிலக்கும் கிடையாது என்பது ஒரு சாராரின் கருத்து, ராகு கேதுவுடன் சேர்ந்த கிரகங்கள் வழங்கும் பலன்களை நிர்ணயம் செய்யும் முன், சாயா கிரகங்கள் அமர்ந்த பாவக நிலையை கருத்தில் கொள்வது மிக துல்லியமான பலன்களை சரியாக சொல்ல உதவும், ஏனெனில் சாயா கிரகங்கள் தான் அமர்ந்த பாவகத்தின் தன்மைக்கு ஏற்ப்பவே, யோக அவயோக பலன்களை வழங்குவார்கள் என்பது கவனிக்க தக்கது, இதை ஒரு உதாரண ஜாதகம் கொண்டு காண்போம்.



லக்கினம் : சிம்மம் 
ராசி : சிம்மம் 
நட்சத்திரம் : மகம் 3ம் பாதம் 

ஜாதகி சிம்ம லக்கினம் லக்கினத்திற்கு 3,9ம் பாவகங்கள் முறையே சாயா கிரகங்களான ராகு கேது அமர்ந்திருப்பது சிறப்பான யோக நிலையை தரும் அமைப்பு, ஜாதகிக்கு விருச்சிகத்தில் 3ம் பாவகத்தில் அமர்ந்த ராகு பகவான் திடீர் அதிர்ஷ்டங்களையும், சிறந்த வாய்ப்புகளையும் வாரி வழங்குகிறார், தான் நினைக்கும் காரியங்களை நினைத்த வண்ணம் நிறைவேறும் யோகத்தை தருகிறார், விருச்சிகம் ஸ்திர  நீர் ராசியாக அமைவதால், ஜாதகியின் நிலையான மன உறுதியையும், சரியான முடிவுகளை எடுக்கும் தன்மையை வாரி வழங்குவது வரவேற்க தக்கது, மேலும் ஜாதகி விளையாட்டு துறையிலும், வியாபர துறையிலும் சிறந்து விளங்கும் வல்லமையை  தருவது ராகு பகவானே, 3ம் பாவகத்தில் அமர்ந்த ராகு பகவான் ஜாதகிக்கு 100% யோக பலன்களை தான் அமர்ந்த பாவக வழியில் இருந்து சிறப்பாக தருகிறார் என்பது இந்த ஜாதகிக்கு கிடைத்த வரபிரசாதம் என்றே சொல்லாம், மேலும் ஜாதகிக்கு சகோதர வழியில் இருந்து 100% நன்மைகள் நடைபெறும் என்பது கூடுதல் யோகமாக கருதலாம்.

9ம் பாவகத்தில் ரிஷப ராசியில் அமர்ந்த கேது பகவானுடன் சேர்ந்த கிரகங்கள் சூரியன் மற்றும் புதன் எனும் இரண்டு கிரகங்களின் தன்மையை தானே ஏற்று கேது பகவானே பலன்களை வாரி வழங்குவது கண்கூடான விஷயம், ( சுக்கிரன் ரிஷபத்தில் உள்ள 10ம் பாவகத்தில் அமர்ந்திர்ருக்கிறார் ) மேலும் கேது அமர்ந்திருக்கும் 9ம் பாவகத்தை 100% வலிமை பெற செய்து சூரியன் மற்றும் புதன் கிரகங்களின் தன்மையை தானே ஏற்று நடத்துவது ஜாதகியை கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கும் தன்மையை தரும், படிப்பில் முதல் இடத்தை ஜாதகி மிக எளிதாக கை பற்றுவார், குறிப்பாக ஜாதகியின் அறிவு திறன் மற்றவர்கள் அனைரையும் பிரமிக்க வைக்கும், தான் கற்ற கல்வியின் மூலம் அபரிவிதமான வருமான வாய்ப்பை ஜாதகி தங்குதடையின்றி  பெறுவார், சமுதாயத்தில் பெரியவர்கள் போற்றும் குணவதியாக  திகழும் தன்மையை கேது பகவான் வழங்குவது கவனிக்க தக்கது.

9ம் பாவகத்தில் அமர்ந்த சூரியன்,புதன் இரு கிரகங்களின் தன்மையை கேது பகவானே ஏற்று நடத்துவதால், சூரியன் அமைப்பில் இருந்து ஜாதகி அதிகார பதவிகளையும், நிர்வாகத்திலும் சிறந்து விளங்கும் யோகம் உண்டு, புதன் அமைப்பில் இருந்து புத்தி கூர்மையான செயல்பாடுகள் மூலம் தான் எடுத்த காரியங்களை செவ்வனே செய்து முடிக்கும் தன்மையை தரும், ஜாதகியுடன் சேரும் அன்பர்கள் அனைவரும் மிகசிறந்த பெரிய மனிதர்களும், கல்வியாளர்களும், ஆன்மீக பெரியவர்களாகவும் திகழ்வார்கள், இவர்களது ஆசியுடன் ஜாதகியின் வாழ்க்கை மிக மிக உயர்ந்த நிலைக்கு எடுத்து செல்லும் என்பது கேது பகவானால் நிகழும் யோக அமைப்பே என்றால் அது மிகையில்லை, லக்கினாதிபதி 2,11க்கு  உடையவர்களின் ( பாரம்பரிய முறைப்படி) சேர்க்கையை பெற்ற கேது பகவான் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்தில் வலிமை பெற்று அமர்ந்ததால் மேற்கண்ட யோக பலன்கள் ஜாதகிக்கு தங்குதடையின்றி நடைபெறும் என்பது மட்டும் உறுதி.

குறிப்பு :

எந்த ஒரு ஜாதகத்திலும் சாயா கிரகங்களான ராகு கேதுவுடன் சேர்ந்த கிரகங்கள் வழங்கும் பலனை நிர்ணயம் செய்யும் பொழுது, ராகுகேது ஜாதகருக்கு லக்கினத்தில் இருந்து எந்த பாவகத்தில் அமர்ந்து இருக்கின்றனர், அமர்ந்த பாவகத்திர்க்கு யோக பலனை தருகின்றனரா ? அவயோக பலனை தருகின்றனரா ? என்பதை தெளிவாக தெரிந்து கொண்டு பலன் காண்பதே,  குறிப்பிட்ட ஜாதகருக்கு சாயா கிரகங்களுடன் சேர்ந்த கிரகங்கள் தரும் பலனை மிக துல்லியமாக கணிதம் செய்ய இயலும், பொதுவாக ராகுகேதுவுடன் சேர்ந்த கிரகங்கள் தீமையை செய்யும் என்பது முற்றிலும் ஜோதிட கணித உண்மைக்கு புறம்பான விஷயமாகவே " ஜோதிடதீபம் " கருதுகிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696