திருவாதிரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருவாதிரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 14 டிசம்பர், 2023

மிதுனராசி திருவாதிரை நட்சத்திரம் - ராஜயோக வாழ்வை தரும் ரகசிய இறைவழிபாடு!


" திருவாதிரை நட்சத்திரம் " படைப்பாளியாகவும் புதுமைவிரும்பியாகவும் பிரகாசிக்க வைக்கும் சிறப்பு நட்சத்திரம்,  கால புருஷ தத்துவ அமைப்பிற்கு மூன்றாவது உபய காற்று ராசியான மிதுன ராசியில் வியாபித்து இருக்கும் "ராகுவின்" திருவாதிரை நட்சத்திரத்தை தனது ஜென்ம நட்சத்திரமாக பெற்ற அன்பர்கள் புதுமையான சிந்தனை, படைப்புதிறன், அறியகலைகளில் சிறப்பான தேர்ச்சி, தெய்வீகஅனுகிரகம், புலனுக்கு அப்பாற்பட்ட அறிவாற்றல், கலைரசனை, எழுத்தாற்றல், கவி புனையும் வல்லமை, கற்பனைதிறன், எழுத்தை ஜீவனமாக முன்னெடுக்கும் வாய்ப்பு, பத்திரிக்கை ஊடகம், தொலைதொடர்பு, தொலைக்காட்சி போன்றவற்றி சாதிக்கும் யோகம் பெற்றவர்கள், இவர்களது  தமது வாழ்வில் சகலவிதமான சௌபாக்கியமும், உடல் நலம் மனோவலிமை, கல்வியில் மேன்மை, தொழில் விருத்தி, புத்திரபாக்கியம், பொருளாதார வளர்ச்சி என்றவகையில் பரிபூரணமான சுகபோகங்களையும், தன்னிறைவாக சுவீகரிக்க, மிக எளிமையான ரகசிய இறைவழிபாடு என்பது கீழ்கண்டவாறு அமையும். 

 சங்கரநாராயணன் திருக்கோவிலில் (சங்கரன்கோவில்) மார்கழி மாத திருவாதிரை வழிபாடு மிகவும் விமர்சையாக நடைபெறும், அதன்படி திருவாதிரை 7ம் திருநாளில் நடராஜர் சிவப்பு உடை அலங்காரங்கள் செய்து ருத்ரன் அம்சமாக வெள்ளி சப்பரத்தில் எழுந்தருள்வார், திருவாதிரை நட்சத்திர அன்பர்கள் இந்த ருத்ரன் அம்ச வழிபாட்டில் கலந்துகொண்டு, சிவப்பு வஸ்திரம் மற்றும் சிவப்புதாமரை மலர் சாற்றி வழிபாடு செய்வது என்பது 9 நாட்களில் சகல சௌபாக்கியங்களையும் திருவாதிரை நட்சத்திர அன்பர்களுக்கு வாரி வழங்கும் வழிபாடு ஆகும், குறிப்பாக கலைதுறையில் வெற்றி, அரசியல் அதிகாரம், அரசு துறையில் வேலைவாய்ப்பு, அதிகாரம்மிக்க பதவிகள், வியாபாரத்தில் வெற்றி, பலதொழில் செய்யும் யோகம், பத்திரிகை மற்றும் ஊடக துறையில் வெற்றிவாய்ப்பு, மக்கள் துயர்துடைக்கும் பொதுவாழ்வில் தொடர் வெற்றிகள், ஏஜென்சி மற்றும் கமிஷன் வழியிலான பொருளாதர முன்னேற்றங்கள், சேவை தொழில் வழியிலான மிகப்பெரிய வளர்ச்சி, பொதுமக்கள் ஆதரவு வழியிலான அதிகாரங்கள், உடல் மனம் சார்ந்த பிரச்சனைகளில் இருந்து மற்றவர்களை காப்பாற்றும் வல்லமை என மிகுந்த சிறப்புகளை தன்னிறைவாக வழங்கும்.

 புதுமையான விஷயங்களை உலகுக்கு அறிமுகம் செய்து அதன்வழியிலான சுபமுன்னேற்றங்களை மற்றவர்களுக்கு வழங்கும் அறிவுத்திறன் மிகுந்தவர்கள், கற்ற கல்வியை தனது சுய முன்னேற்றத்திற்கும், ஆரோக்கியமான சமுதாயம் காண்பதற்கும் உபயோகிக்கும் வல்லமை பெற்றவர்கள், அதிகாரங்களை நடைமுறைப்படுத்தவும், நிர்வாக திறன் கொண்டு வாழ்வை நெறிப்படுத்தவும் இவர்களுக்கு மிக எளிதான காரியமாக அமையும், மற்றவர்கள் தோல்வியடையும் துறையில் இவர்களின் வெற்றி அபரிவிதமானதா இருக்கும் என்பது கவனிக்கத்தக்கது, இவர்களை சார்ந்து இருப்பவர்கள் வாழ்வில் மகிழ்ச்சிக்கு குறைவுஇருக்காது, சுயநலம் இன்றி செயல்படுவார்கள், சுய கட்டுப்பாடு, உண்மை சத்தியம் போன்றவற்றை தமது வாழ்வில் சிறப்பாக கடைபிடிக்கும் சத்திய சீலர்கள், ஒழுக்கம் பண்பாடு நாகரீகம் போன்ற நற்குணங்களால் அனைவராலும் போற்றப்படும் யோகம் உண்டு, தனது எழுத்து மூலம் உலகில் பலமாற்றங்களையும் அறிய பல சாதனைகளையும் செய்யும் வல்லவர்கள், புதிய கருவிகளையும் தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களையும் மிக சிறப்பாக கையாளும் அறிவாற்றல் சிறு வயதுமுதலே இவர்கள் பெற்று இருப்பது அதிசயிக்கத்தக்க விஷயமாகும்.

குறிப்பு :

மிதுனராசியில் "திருவாதிரை" நட்சத்திரத்தை தனது ஜென்ம நட்ஷத்திரம் அல்லது லக்கினமாக பெற்ற அன்பர்கள், தகவல் தொழில் நுட்பம், ஊடகம்  மற்றும்  பத்திரிகை துறையில் சாதனை புரியும் யோகம் பெற்றவர்கள், கமிஷன் ஏஜென்சி தரகுதொழில் மற்றும் ஏற்றுமதி இறக்குமதி தொழில் வழியில் சிறப்பான முன்னேற்றத்தை நல்கும், தொலைத்தொடர்பு சாதனங்கள் மின்னணு கருவிகள், கணினி மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் வழியில் பெரிய தனசேர்க்கையினை பெறுவார்கள், சிறந்த திட்டமிடுதல்கள் இவர்களது வாழக்கையை சிறப்பாக நிலைநிறுத்தும், தெய்வீகம் மற்றும் ஆன்மிகம் இவர்களது வாழ்வை பிரகாசிக்க வைக்கும், இயற்கையாவே  இவர்களுக்கு இறையருளின் தரிசனம் கிட்டும், சுயமாக வாழ்வில் அறிய பல சாதனைகளை படைக்கும் பேராற்றல் இவர்களுக்கு நிச்சயம் உண்டு,  மேற்சொன்ன இறை வழிபாடு இவர்களது வாழ்வில் ராஜயோகத்தை தன்னிறைவாக வாரி வழங்கும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை அன்பர்களே ! 

ஜோதிடன் வர்ஷன் 

9443355696