சிம்மராசி "பூரம்" நட்சத்திரம் "கலை உலக இளவரசன் கவிஞர்களுக்கு கதாநாயகன் " என்பதற்கு இணங்க தனது செயல்பாடுகளை முன்னெடுக்கும் அற்புத நட்சத்திரம், சுயகட்டுப்பாடு சிறந்த நிர்வாகத்திறமை அதீத தைரியம் தன்னம்பிக்கை, உடல் நலம் பேணுவதில் வல்லவர்கள், என்றும் இளமை என்பதற்கு இணங்க வயோதிகத்திலும் துடிப்புடன் செயல்படுதல், வயதை கணிக்க இயலாத தன்மை, ரகசிய கலைகளை கற்றுணர்ந்து தேர்ச்சி பெறுதல், தெளிவான சிந்தனை, குழப்பம் அற்ற மனநிலை, நினைத்தது நிறைவேற்றும் செயல்பாடுகள், சுதந்திர மனப்பான்மை, எதிர்கால வாழ்வை சிறப்பாக மகிழ்ச்சிகரமாக வாழும் தன்மை, தன்னிறைவான பொருளாதார சேர்க்கை, சிறப்பு தொழில் நுண்ணறிவு துறை சார்ந்த ஞானம், எதையும் சமாளிக்கும் வல்லமை, எப்பொழுதும் விழிப்புணர்வுடன் இயங்குதல், தொழில் ரீதியான வளர்ச்சியை விரைவாக சுவீகரித்தல் என்ற வகையில் சிறப்பைத்தரும், இவர்களது தமது வாழ்வில் சகலவிதமான சௌபாக்கியமும், உடல் நலம் மனோவலிமை, கல்வியில் மேன்மை, தொழில் விருத்தி, புத்திரபாக்கியம், பொருளாதார வளர்ச்சி என்றவகையில் பரிபூரணமான சுகபோகங்களையும், தன்னிறைவாக சுவீகரிக்க, மிக எளிமையான ரகசிய இறைவழிபாடு என்பது கீழ்கண்டவாறு அமையும்.
கடலூர் மாவட்டம் "சிங்கிரிக்குடி லட்சுமி நரசிம்மர்" கோவில் "பூரம்" நட்சத்திர அன்பர்களுக்கு வெற்றிகளை வாரி வழங்கும் திருக்கோவிலாகும், இங்கு வளர்பிறையில் வரும் ஞாயிற்று கிழமை அன்று சிகப்பு வர்ண பட்டு வஸ்திரம் சாற்றி சிகப்புதாமரை மலர்கள் சாற்றி வழிபடும் பூர நட்சத்திர அன்பர்கள் 14 நாட்களில் அரசு ஆதாயம், அரசு வேலை வாய்ப்பு, அரசுத்துறை சார்ந்த மானியங்கள், அரசியல்வாதிகளில் ஆதரவு என மிக சிறப்பான எதிர்காலத்தை வாரி வழங்கும், மேலும் கலைத்துறையில் இயங்கும் அன்பர்களுக்கு தனது தனித்திறமையையும் படைப்பாற்றலையும் மக்களிடம் கொண்டுசேர்க்கும் தன்மையை தரும், நேர்த்தியான விஷயங்களை கடைபிடிக்கும் பூர நட்சத்திர அன்பர்களுக்கு இத்திருக்கோவில் வெற்றிமேல் வெற்றியை பெற்றுத்தரும் என்றால் அது மிகையாகாது, பூர்வீக சொத்துக்கள் சார்ந்த இன்னல்களை எதிர்கொண்டு இருக்கும் அன்பர்களுக்கு சரியான தீர்வையும் தனது பக்கமுள்ள ஞாயமான கோரிக்கைகளையும் வென்று எடுக்கும் வல்லமையையும் தருவதுடன், சுகபோக யோக வாழ்வை நல்கும் தன்மை பெற்றவர், எதிர்ப்புகள் அனைத்தையும் வெற்றிகொள்ளும் மனஉறுதி, போட்டி பந்தயம் மற்றும் வழக்குகளில் அபரிவிதமான வெற்றிகள், விளையாட்டு துறையில் சாதிக்கும் பேராற்றல், அரசியலில் தனது வலிமையை வெகு சிறப்பாக பிரயோகிக்கும் வல்லமை என மிகுந்த சிறப்புகளை தரும்.
வருடம் ஒருமுறை சிங்கிரிக்குடி லட்சுமி நரசிம்மர் சென்று வரும் பூர நட்ச்சத்திர அன்பர்கள் தமது வாழ்வில் பொதுமக்களின் ஆதரவு, உறவுகளின் அன்பு, பூர்வீக சொத்துக்களை சுவீகரிக்கும் யோகம், உடல் ரீதியான சுறுசுறுப்பு, தெய்வீக ஆளுமை, தெய்வ தரிசனம், குறுகிய காலத்தில் உலக பிரபல்யம் அடைதல், இயல்பான வாழ்வை மகிழ்ச்சிகரமாக வாழ்வது, வாழ்வின் நெறிமுறைகளை உணர்ந்து புரிந்து வெற்றிகரமாக ஜீவனம் செய்வது, உடல் ஆரோக்கியத்தில் மேன்மை, பலபுண்ணிய திருத்தலங்களுக்கும் சுற்றுலா தலங்களுக்கும் சென்று வரும் யோகம், கண்ணியமிக்க செயல்பாடுகள், பொதுமக்கள் வழியில் இருந்து வரும் பேராதரவு என்ற வகையில் சிறப்புக்களை வாரி வழங்குவார், குறிப்பாக பூரம் நட்சத்திர பெண்களுக்கு அரசு வேலைவாய்ப்பு, அரசியல் ரீதியான செல்வாக்கு, திருமணயோகம், நல்லதொரு ஆண் வாரிசு, பொருளாதார முன்னேற்றம், புதிய தொழில் வழியிலான வெற்றிகள், வெளிநாடுகள் பயணம் மூலம் தொழில் விருத்தி அல்லது வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு, புதிய சந்தர்ப்பங்கள், புதிய வாய்ப்புகளை மிக எளிதாக சுவீகரிக்கும் யோகம் என்ற வகையில் வெற்றிகளை "சிங்கிரிக்குடி லட்சுமி நரசிம்மர்" தன்னிறைவாக வாரி வழங்குவார்.
குறிப்பு :
சிம்மராசியில் "பூரம்" நட்சத்திரத்தை தனது ஜென்ம நட்ஷத்திரம் அல்லது லக்கினமாக பெற்ற அன்பர்கள், ரகசிய கலைகளில் தேர்ச்சியும் வெகு ஜன மக்கள் ஆதரவும் உண்டாகும், படைப்பு திறன் அறிவாற்றல் கற்பனை வளம் இயல் இசை நாடகம் போன்ற துறைகளில் நன்மைகளை பெறுவதுடன், எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாக திகழ்வார்கள், எதிரிகளை சர்வநாசம் செய்யும் வலிமை பெற்றவர்கள் இவர்களது செயல்பாடுகள் மிகவும் வலிமையானது என்பதனால், எதிர்ப்பவர்கள் நிலை மிகவும் பரிதாபத்துக்கு உரியது, கலைத்துறையில் மிகப்பெரிய சாதனைகளுக்கும், மிகப்பெரிய செயல்பாடுகளுக்கும் சொந்தக்காரர்கள் என்பதனால், இவர்களுது கற்பனை திறன் என்பது மிகப்பெரிய காரியங்களை சாதிக்கும் தன்மையுடன் காணப்படும், வாழ்வை எவ்வாறு சிறப்பாக வாழ்வது என்பதை பற்றியும், வாழ்க்கையை புரிந்து வாழும் வல்லமையும் இவர்களுக்கு ஒருங்கே அமையப்பெற்று இருக்கும், மேற்சொன்ன "சிங்கிரிக்குடி லட்சுமி நரசிம்மர்" வழிபாடு இவர்களது வாழ்வில் ராஜயோகத்தை தன்னிறைவாக வாரி வழங்கும் என்பதில் மாற்று கருத்துக்கு இடம் இல்லை அன்பர்களே !
ஜோதிடன்வர்ஷன்
9443355696