சனி, 16 பிப்ரவரி, 2013

உச்ச சுக்கிரன் குருவின் ஆட்சி வீட்டில் அமர்ந்து உடன் நீச புதன் இருக்கும் துலா லக்ன ஜாதகருக்கு நன்மை விளையும அல்லது தீமையா?




கேள்வி :

உச்ச சுக்கிரன் குருவின் ஆட்சி வீட்டில் அமர்ந்து உடன் நீச புதன் இருக்கும் துல லக்ன ஜாதகருக்கு நன்மை விளையும அல்லது தீமையா? ஏனென்றால் அது அவருக்கு 6 இடம் மற்றும் 12 , 6, 8 வீடுகளின் சம்பந்தம் உண்டாகிறது .இது என் நெடு நாள் ஐயம் .விளக்கம் அளித்தால் நன்றாக இருக்கும் .

பதில் :

ஒருவருடைய சுய ஜாதகத்தை பற்றி பலன் சொல்லும் பொழுது அந்த ஜாதகரின் பிறந்த தேதி , நேரம் , இடம் ஆகியவை தெளிவாக தெரிந்து கொண்டு , அதனை அடிப்படையாக வைத்து , ஜாதக கணிதம் செய்து , பிறந்த நேரத்தின் படி ஜாதகருக்கு லக்கினம் எதுவென்று தெளிவாக தெரிந்து கொண்டு , லக்கினம் ஆரம்பிக்கும் பாகை வைத்து , பனிரெண்டு வீடுகளின் நிலையை அறிந்து பலன் சொல்லும் பொழுதே , ஜாதகருக்கு தெளிவான பதிலை சொல்ல இயலும் , தாங்கள் கேள்வியில் இருந்து நான் அறிந்துகொள்ள இயலுவது ஒன்று மட்டுமே , அது ஜாதகருக்கு துலா லக்கினம் , லக்கினதிபதியான சுக்கிரன் குருவின் வீடான மீனத்தில் உச்சம் பெற்று அமர்ந்து இருக்கிறார் , இவருடன் புதன் நீச்சம் பெற்று அமர்ந்து இருக்கிறார் இதனால் துலா இலக்கின ஜாதகருக்கு நன்மை விளையுமா ? தீமை விளையுமா ?  என்பது தங்களின் கேள்வி.

 இதற்க்கு உண்டான பதில் சொல்ல வேண்டும் எனில் முதலில் துலா லக்கினத்திற்கு அதிபதியான சுக்கிரன் ஆறாம் பாவகத்தில் தான் அமர்ந்திருக்கிறார் என்றால் நிச்சயம் , ஜாதகருக்கு தீமைதான் செய்வார் , அவர் உச்சம் பெற்று அமர்ந்திருந்தாலும் எவ்வித நன்மையையும் ஜாதகருக்கு இல்லை , ஒருவேளை சுய ஜாதகத்தில் பாவக அமைப்பின் படி மீனத்தில் உள்ள ஐந்தாம் பாவகத்தில் ( இதை லக்கினம் ஆரம்பிக்கும் பாகையை வைத்து நிர்ணயம் செய்ய வேண்டும் ) உச்சம் பெற்று அமர்ந்து இருக்கின்றார் என்று வைத்து கொள்ளுங்கள் , ஜாதகர் லக்கினத்திற்கு 100 சதவிகித நன்மையை செய்வார் .

எப்படி எனில் பாவக அமைப்பின் படி சுக்கிரன் ஆறில் அமர்ந்தால் , ஜாதகர் தனது மன நிம்மதியை தானே கெடுத்து கொள்வார் , ஜாதகர் எதிரிகளின் சூழ்சி வலையில் தானே சென்று மாட்டிக்கொள்ளும் மன நிலையை தரும் , மேலும் ஜாதகர் ஒரு மன நிம்மதியற்ற சூழ்நிலையிலேயே ஜீவித்து இருக்க வேண்டி வரும் , ஜாதகர் செய்யும் அனைத்து செயல்களுக்கும் அனைவரிடமும் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பும் , ஜாதகரால் அதை சமாளிக்க  இயலாமல் மனதை கெடுத்து கொண்டு லாகிரி வஷ்துகளுக்கு அடிமையாகும் சூழ்நிலையை தரும் , இதானால் ஜாதகரின் உடல் நிலை கடுமையாக பாதிக்க படும் .

 பாவக அமைப்பின் படி சுக்கிரன் ஐந்தில் அமர்ந்தால் , ஜாதகர் தனது மனதில் நினைக்கும் காரியங்களை சாதிக்கும் வல்லமையை தரும் , பரந்த மனம் , நன்மை தீமையை ஒன்றாகவே கருதும் மனநிலை , குலதேவதையின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் தன்மை , பெண் தெய்வங்களின் அருளாசி விரைவில் கிடைக்கும் யோகம் , எப்பொழுதும் சந்தோசமான மனநிலையுடன்  ஜாதகர் வாழும் தன்மை , மன நிலையை சிறப்பாக இருப்பதால் ஜாதகரின் உடல் நிலையில் எவ்வித  பாதிப்பையும் சந்திக்காத தன்மை என சுக்கிரனால் ஜாதகர் அதிக நன்மைகளை  பெறுவார் , குறிப்பாக சிறந்த சிந்தனை ஆற்றலும் , தன்னம்பிக்கையும் , உறுதியான  மனநிலையையும் ஜாதகர் எப்பொழுதும் கொண்டு இருப்பார் .

மேற்கண்ட பலன்கள் யாவும் ஜாதகருக்கு நடை பெற வேண்டும் எனில் தற்பொழுது நடக்கும் திசை மற்றும் புத்தி  எதுவென்றாலும் , லக்கினத்துடன் தொடர்பு பெற்று பலனை தரவேண்டும் அப்பொழுதுதான்  ஜாதகருக்கு மேற்கண்ட நன்மையோ ! தீமையோ ! நடை முறையில் வரும் , ஒரு வேலை  மேற்கண்ட அமைப்பில் ஜாதகம் அமைந்து நடை பெரும் திசை மற்றும் புத்திகள் வேறு வீடுகளின் ( பாவகத்தின் ) பலனை நடத்தினால் லக்கினத்திற்கு உண்டான பலனை ( நன்மையோ தீமையோ ) ஜாதகர் சிறிதும் அனுபவிக்க மாட்டார் .

அடுத்த கேள்வி நீச்சம் பெற்ற புதன் என்ன செய்வார் என்பதை பார்ப்போம் , மீனத்தில் நீச்சம் பெரும் புதன் துலா லக்கினத்திர்க்கு 12 ம் வீட்டிற்கு அதிபதியாக வருகிறார் , இவர் சூரியனுடன் 14 பாகைக்குள் சேர்ந்து அமர்ந்திருந்தால் மீனத்தில் தனது வீட்டிற்கு ஏழில் அமர்ந்து,  நீச்சம் பெற்றிருந்தாலும் ஜாதகர் 12 ம் பாவக அமைப்பில் இருந்து அதிக நன்மைகளை பெறுவார் எடுத்துகாட்டாக , நல்ல மனநிம்மதி , எதிரிகளை பந்தாடும் வல்லமை , நல்ல நிம்மதியான தூக்கம் , அதிக முதலீடு செய்வதால் லாபம் , திருமண வாழ்க்கையில் நல்ல இல்லற சுகம் , தம்பதியர் ஒற்றுமை , பிறவி  பயனை முழுவதுமாக அடையும் யோகம் என அதிக நன்மைகளை பெறுவார் .

 ஒருவேளை சுய ஜாதகத்தில் பாவக அமைப்பின் படி மீனத்தில் ( புதன் தனது பாவகத்திர்க்கு ) உள்ள ஆறாம்  பாவகத்தில்  ( இதை லக்கினம் ஆரம்பிக்கும் பாகையை வைத்து நிர்ணயம் செய்ய வேண்டும் ) நீச்சம் பெற்று அமர்ந்து இருக்கின்றார் என்று வைத்து கொள்ளுங்கள் , ஜாதகர்  12 ம் பாவக அமைப்பில் இருந்து அதிக இன்னல்களை அனுபவிக்க வேண்டி வரும் , மேற்சொன்ன  நன்மையான பலன்களுக்கு எதிர்மறையான பலன்கள் நடைபெறும் .


மேலும் துலா லக்கினத்திர்க்கு 12 ம் வீட்டிற்கு அதிபதியாக வரும் புதன் ஒரு வேலை சூரியனுடன் 14 பாகைக்கு மேல் சேராமல் இருப்பின் ஜாதகருக்கு மீனத்தில் நீச்சம் பெற்று தனது வீட்டிற்கு  7 ல் அமர்வது மேற்க்கண்டவாறு தீமையான பலன்களையும் , 6 ல் அமருவது மேற்க்கண்டவாறு  நன்மையான பலன்களையும் வாரி வழங்கும் , இங்கே புதன் என்ற கிரகம் தனது  பாவகத்திர்க்கு இரண்டு விதமான தன்மையும் , நான்கு விதமான பலனையும் தரும் என்பதனை சிறந்த  ஜோதிட அறிவு கொண்டவர்கள் மட்டுமே புரிந்து கொள்ள இயலும் .

ஜோதிட தீபம் மேற்சொன்ன அனைத்து பலன்களும் சுய ஜாதகத்தை அடிப்படையாக கொண்டே நிர்ணயம்  செய்ய இயலும் , மேலும் தற்பொழுது நடக்கும் திசை மற்றும் புத்திகள் மேற்கண்ட பாவகத்தின் பலனை தொடர்பு படுத்தி நடத்தினால் மட்டுமே இது நடைமுறைக்கு வரும் , இல்லை  எனில் இவையாவும் சுய ஜாதகத்தில் நீறு பூத்த நெருப்பாக இருக்குமே அன்றி , எவ்வித  நன்மை தீமையும் தர வாய்ப்பில்லை என்பதை உணர வேண்டும் .

ஆகவேதான் ஜோதிட தீபம் தங்களது சுய ஜாதகத்தை பற்றி தெளிவு பெற , ஜாதகத்தின் உண்மை  நிலையை உணர்ந்து , அதன் வழியில் வாழ்க்கையை செம்மையாக அமைத்துக்கொள்ள  தனிப்பட்ட முறையில் ஜோதிட ஆலோசனை பெற்று கொள்ளுங்கள் என்று  அறிவுறுத்துகிறது , இப்படி பொதுவாக கேள்விகள் கேட்டால் , சரியான பதில் சொல்ல இயலாது என்பதை அன்பர்கள் அனைவரும் உணரவேண்டு என்று  பணிவுடன் வேண்டுகிறது .

எந்த ஒரு நல்ல விஷயங்களையும் முறைப்படி தெரிந்து கொள்வது , அதன் படி நடப்பதும் சம்பந்தபட்ட நபர்களுக்கு முழுமையாக  பலன்தரும் .

இதைதான் பெரியவர்கள் " மூத்தோர் சொல்லும் , முதிர்ந்த நெல்லிக்கனியும் , முன்னால் கசக்கும் பின்னல் இனிக்கும் " என்றனர் .

அதாவது பெரியவர்கள் கூறும் அறிவுரை முதலில் கேட்க்கும் பொழுதும் , முதிர்ந்த நெல்லிக்கனியும்  உண்ணும் பொழுதும் கசப்பாக தெரியும் , அதை அனுபவத்தில் உணரும் பொழுது இனிமையாக இருக்கும் .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443306969


ஞாயிறு, 10 பிப்ரவரி, 2013

குரு பகவானின் ஆட்சி வீடான மீனத்தில் சுக்கிரன் உச்சம் பெரும் பொழுது ஜாதகர் பெறும் நன்மைகள் !



சுய ஜாதகத்தில்  ஒருவருக்கு சுக்கிரன் உச்சம் பெற்று நல்ல நிலையில் அமரும் பொழுது ஜாதகர் பெரும் நன்மைகளை பற்றி நாம் இந்த பதிவில் சிந்திப்போம் , பொதுவாகவே ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிரன் உச்சம் பெற்று அமர்ந்திருந்தால் ஜோதிடர்களின் கணிப்பு ஜாதகர் சுக போக வாழ்க்கையையும் , பொருளாதார அமைப்பில் தன்னிறைவையும் , மனிதன் பூமியில் வாழ்வதற்கு தேவையான வசதி வாய்ப்புகளை பெற்று நல்ல ராஜயோக பலன்களை பெறுவார் என்றும் , ஜாதகர் பெண் வசியம் கொண்டுள்ளவராக திகழ்வார் என்று சிலாகித்து சொல்லும் ஜோதிடர்களும் உண்டு .

இதில் எந்த அளவிற்கு உண்மை என்பதை பற்றி இனி பார்ப்போம் , சுக்கிரன் மீனத்தில் உச்சம் பெற்று நல்ல நிலையில் அமரும் பொழுது ஜாதகனுக்கு  பெண்களால் விரும்பபடுபவராகவும் , கவர்சிகரமான தோற்றம் கொண்டவராகவும் , தனது இனிமையான பேச்சு திறமையால் பெண்களை கவரும் தன்மை கொண்டவராகவும் , பெண்கள் ஆதரவு வாழ்நாள் முழுவதும் பெறுபவர் என்பது நிச்சயம், இதில் எவ்வித சந்தேகமும் இல்லை , ஆனால் ஜாதகனுக்கு இங்கு அமரும் சுக்கிரன் பேரின்பம் எனும் ஞானத்தை தருவாரே தவிர சிற்றின்பத்தில் ஈடுபாடு கொண்டவராக ஜாதகர் ஜீவித்து இருக்க வாய்ப்பு இல்லை.

மேலும் பெண்கள் அதிகம் பயன்படுத்தும் , ஆடை ஆபரணம் , அலங்கார பொருட்கள் , பெண்கள் விரும்பி பயன்படுத்து பொருட்கள் சார்ந்த தொழில்களில் சிறப்பான முன்னேற்றத்தை தரும் , சுய ஜாதகத்தில் இந்த மீனம் ஜாதகருக்கு எந்த பாவகமாக வருகிறதோ அந்த பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு விருத்தியையும் , முன்னேற்றத்தையும் திடீர் அதிர்ஷ்டத்தையும் வாரி வழங்கும் .

இதற்க்கு காரணம் மீனம் ராசி கால புருஷ தத்துவ அமைப்பின் படி பனிரெண்டாம்  பாவகமாக இருப்பதும் , உபய நீர் ராசியாக அமைவதுமே இதற்க்கு முக்கிய  காரணம் ,  மேலும் சுக்கிரன் நீர் ராசியில் அமரும் பொழுது ஜாதகரின் எண்ணம் , மற்றும் மனநிலை பரிசுத்தமானதாக இருக்குமே அன்றி தீய எண்ணங்களை கொண்டவராக இருக்க சிறிதும் வாய்ப்பு இல்லை , ஒரு மனிதனின் வெற்றிகரமான வாழ்க்கைக்கு ஜாதகரின் மன நிலை முக்கிய பங்கு வகிக்கிறது என்றால் அது மிகை ஆகாது , சுக்கிரன் ஆட்சி பெற்று நல்ல நிலையில் அமரும் பொழுது , ஜாதகர் முற்போக்கு சிந்தனை கொண்டவராகவும் , புதுமையான விஷயங்களில் அதிக ஆர்வம் கொண்டவரகாவும் , மாற்று சிந்தனை உள்ள சிறந்த மனிதராக காணப்படுவார்.

எனவே ஜாதகர் செய்யும் ஒவ்வொரு விஷயத்திலும் பல புதிய பரிணாமங்களை  காணமுடியும் , புதிய கண்டுபிடிப்புகள் , பிரச்சனைகளுக்கு வித்தியாசமான  நல்ல தீர்வுகளை தரும் அறிவாற்றலை பெற்றிருப்பார் , ஜாதகர்  செய்யும் காரியங்கள் யாவும் மக்களிடம் நல்ல வரவேற்ப்பை பெரும் , ஜாதகரை நாடி வருபவர்களுக்கு  நிச்சயம் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை  தரும் ஆலோசனைகளை வழங்கும் ஆற்றல் நிச்சயம் ஜாதகருக்கு உண்டு , மீனம் என்பது உபய ராசியாக வருவதால் இங்கு உச்சம் பெற்று  அமரும் சுக்கிரன் ஜாதகர் மற்றும் ஜாதகரை சார்ந்தவர்களுக்கு அதிகபட்ச  நன்மைகளையே தருவார் என்பது ஒரு சிறப்பான விஷயமாக கருதலாம் . 

கால புருஷ தத்துவ அமைப்பின் படி பனிரெண்டாம் வீடான மீனத்தில்  உச்சம் பெரும் சுக்கிரன், ஜாதகருக்கு நேர்மையான நிறைவான சுகபோக வாழ்க்கையுடன், நல்ல ஞானத்தையும் தருவார், எனவே ஜாதகர் தனக்கு கிடைத்ததை  வைத்து திருப்தியுடன் வாழும் மன நிலையை பெற்று இருப்பார் , இந்த மன நிலையை பெற்ற நபர்களுக்கு இறை அருள் பரிபூரணமான சகல செல்வத்தையும் வாரி வழங்குகிறது, என்பதை மறுக்க இயலாது .

மனிதன் இந்த திருப்தியான மனநிலை பெறுவது அவ்வளவு எளிதான காரியமல்ல என்பதே உண்மை , அப்படி பட்ட திருப்தியான மன நிலையை வழங்குவதில் நீர ராசியான மீனத்தில் சுக்கிரன்  நல்ல நிலையில் அமரும் பொழுது நிச்சயம் வழங்குகிறார், ஆக சுக போகியான சுக்கிரனும் நல்ல நிலையில் அமர்ந்தால் ஜாதகருக்கு நல்ல ஞானத்தை வாரி வழங்குவதில் தவறுவதில்லை என்பதை இங்கு பதிவு செய்ய ஜோதிடதீபம் கடமை பட்டுள்ளது .

    
வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

சனி, 12 ஜனவரி, 2013

சந்திரன் அமர்ந்த ராசியும் ஜாதகரின் மன இயல்பும் - பகுதி 2



ஒருவரின் மன ஆற்றலை நிர்ணயம் செய்யும் சந்திரன் , மேஷம் முதற்கொண்டு மீனம் வரை அமரும் பொழுது , ஜாதகரின் மன நிலையையும், என்ன ஆற்றல்களையும் , எவ்விதம் செயல்படுத்துகிறார் என்பதை பற்றி இந்த பதிவில் சற்றே சிந்திப்போம் .

சிம்மம் :

சந்திரன் இங்கு அமர்ந்து நல்ல நிலையில் இருப்பின் ஜாதகரின் மனம் மிகவும் பரிசுத்தமான கள்ளம் கபடம் அற்று ஒரு குழந்தையின் மன நிலையை ஒத்து இருக்கும், சந்திரன் சூரியன் சேர்க்கை நிலையில் இருந்து தரும் யோக பலன்களை நடைமுறை படுத்தும், முற்ப்போக்கு சிந்தனையும் ஆராய்ச்சி மனநிலையும் தரும், நான் யார் என்ற உண்மையின் விளக்கத்தை பெற மனம் எப்பொழுதும் ஒரு தேடுதல் உடனே இருக்கும், தன்னம்பிக்கை, சுய கட்டுபாடு, ஸ்திரமான மனநிலை , முடிவு செய்த பின் மாறாத தன்மை, தர்மம் நியாயம் போன்ற உண்மை விஷயங்களுக்கு கட்டுப்படும் தன்மை, சூரியனை போன்று அக இருளை அகற்றி, மற்றவருக்கும் தெளிவை தரும் யோக வாழ்க்கையில் வெற்றியை தரும் . 

 தனக்கு எவ்வித துன்பம் வந்த போதிலும் தன்னை நம்பியவர்களை காப்பாற்றும் தயாள குணத்தை தரும் தனக்கு சாதகமானதை செய்யாமல் மற்றவருக்கும்  சரியென்பதை செய்யும் உயர்ந்த குணத்தை தரும் , இதன் காரணமாகவே பல நேரங்களில் பல எதிர்ப்புகளை ஜாதகர் சந்திக்க வேண்டி வரும் , இருப்பினும் எதற்க்கும் அஞ்சாத நேர்மையில் இருந்து மாறாத குணத்தை தரும் , இவர்கள் அனைவரும் சிறு வயது முதற்கொண்டே ஏதாவது நிறைவேறாத ஆசைகளுடனே வாழ்க்கையை எதிர்கொள்ளும் அமைப்பை தருகிறது , நிறைய திறமைகள் இருந்தும் வெளி உலகிற்கு தெரியாமல் தன்னடக்கத்துடன்  வாழும் தன்மை பெற்றவர்கள் , இங்கு அமரும் சந்திரன் சுய ஜாதக ரீதியாக சிறப்பாக இருந்தால் ஜாதகரின் வாழ்க்கையில் சாதிக்க இயலாதது ஒன்றும்  இல்லை எனலாம் .

கன்னி :

சந்திரன் இங்கு அமர்ந்து நல்ல நிலையில் இருப்பின் தன்னை எதிர்பவர்க்கும் நன்மை செய்யும் மன பக்குவத்தை தரும் , எதற்க்ககவும்  எந்த ஒரு சூழ்நிலையிலும் தனது சுய உரிமையையும் , சுய மரியாதையையும் விட்டுகொடுக்க ஜாதகருக்கு  மனம் வராது , எதிர்ப்புகளை  ஜாதகர் தனக்கு சாதகமாக மாற்றி கொள்ளும் தனி திறமை இயற்கையாக  அமைந்திருக்கும் , பூமிக்கு அடியில் உள்ள நீர் மற்றும்  புதையல்கள் விஷயங்களை தனது மன ஆற்றல் கொண்டு சரியாக  கண்டுபிடிக்கு தன்மை ஜாதகருக்கு ஏற்ப்படும் மேலும் வரலாற்று விஷயங்களை சரியாக கணிக்கும் பேராற்றல் இயற்க்கை இவர்களுக்கு கொடுத்த கொடை எனலாம்,  இந்த குறிப்பிட்ட திறமையை  ஜாதகர் வளர்த்து கொள்வது அவசியம் .

சிறந்த மனோ தத்துவ நிபுணராக ஜாதகர் ஜொலிக்க இங்கு அமரும் சந்திரன் 100 சதவிகிதம் உதவி செய்வார் , மேலும் மற்று மருத்துவ முறைகளில் சிறந்து விளங்கும் தன்மையை தரும் , ஜாதகரின் மன ஆற்றல்  மூலமாகவும் , எண்ணத்தின் மூலமாகவும் மக்களுக்கு ஏதாவது ஒரு  வகையில் உதவி செய்து கொண்டு இருக்கும் தன்மையில் தனது தொழில் மற்றும் பணியை  அமைத்துகொள்ளும் வாய்ப்பை தரும் , இதை தவிர  மற்றவர்களின் மனதில் உள்ள விஷயத்தை உணர்ந்து கொள்ளும் ஆற்றல்  உண்டாகும் , இங்கு அமரும் சந்திரன் பிரபஞ்சத்தை உணர்ந்து கொள்ளும் விழிப்பு நிலையை தரும் .

துலாம் :

சந்திரன் இங்கு அமர்ந்து நல்ல நிலையில் இருப்பின் ஜாதகர் கலகலப்பாக  அனைவருடன் பழகும் தன்மையை தரும் , ஜாதகருக்கு பொது மக்களின்  ஆதரவு எப்பொழுதும் நிறைந்திருக்கும் , கலைகளில் சிறந்து  விளங்கும் பேராற்றலை வாரி வழங்கி விடும் , கலை துறையில் நல்ல பெயரும்  புகழும், சாதனை செய்யும் யோகம் உண்டு, குறிப்பாக இசையில்  சிறந்து விளங்கும் தன்மையும்  நல்ல ஞானத்தை தரும், ஒரு சிறந்த  சமுகத்தை உருவாக்கும் தன்மையும் உண்டாகும் , தனது சிறப்பான  சிந்தனை ஆற்றல் மூலம் தன்னை சார்ந்த மக்களுக்கு   முன்னேற்றமான எதிர்காலத்தை அமைத்து தரும் சக்தியினை தரும்.

இங்கே அமரும் சந்திரன் ஜாதகருக்கு சிறந்த நுணுக்கமான அறிவாற்றலை  தந்துவிடும் , எந்த ஒரு சூழ்நிலையையும் தனது அறிவாற்றல்  மூலம் சிறப்பாக எதிர்கொண்டு வெற்றியை பெரும் யோகம் உண்டு , செய்யும் தொழில் நேரம் காலம் பார்க்காமல் அயராது பாடு படும் குணத்தை தரும் , ஜாதகரை நம்பியவர்கள் நிச்சயம் நன்மையடைவார்கள் , தானும் முன்னேற்றம் கண்டு தன்னை நம்பியவர்களின் வாழ்க்கையிலும் முன்னேற்றத்தை  தரும் தன்மை கொண்டவர்களாக காணப்படுவார்கள் சந்திரன்  இங்கு அமர்வது அழியா உலக புகழ் பெரும் யோகத்தை தரும் .

விருச்சிகம் :

சந்திரன் இங்கு அமர்ந்து நல்ல நிலையில் இருப்பின் ஜாதகர் அதிக அளவில் மன  போராட்டத்தை எதிர்கொள்ளும் தன்மை பெற்றவராக இருப்பார் , மக்கள் நலனுக்காக போராடும் தன்மை பெற்றவர்கள் , எதிர்பாராத  நிகழ்சிகளால் சமுதயாத்தில் முக்கிய பதவிகளை ஏற்றுகொள்ளு  சூழ்நிலை ஏற்படும் , பெரிய மனிதர்களின் ஆதரவு , அவர்களின் மனதை  எளிதில் கவரும் தன்மை , அரசு வழிகளில் இருந்து வரும்  ஆதரவு , வேற்று இனத்தவர்களின் ஆதரவு மூலம் வாழ்க்கையில் மிக பெரிய பதவியை  பெற்றுத்தரும் , அந்த பதவிகளை நீடித்து சிறப்பாக செய்யும் யோகம்  உண்டாகும் , தனது சிறப்பன நடவடிக்கையின் மூலம் மக்கள் அனைவரிடமும் நல்ல பெயரும் புகழும் உண்டாகும் .

தனிபட்ட முறையில் ஜாதகரின் குணாதிசியத்தை எவராலும் கணிக்க இயலாது , இவரின் மனதில் உதிக்கும் எண்ணங்கள் யாவும் ஜாதகருக்கும், ஜாதகரை  சார்ந்தவர்களுக்கும் மிகப்பெரிய நன்மைகளை தொடர்ந்து வழங்கி கொண்டே இருக்கும் , குறிப்பாக ஜாதகர் பொது வாழ்க்கையில் வெற்றி பெரும் அளவிற்கு குடும்ப வாழ்க்கையில் நன்மை மற்றும் வெற்றி பெற இயலுவதில்லை , இருப்பினும் எதையும் தங்கும் இதயமாக ஜாதகர் இருப்பது  இறைவன் கொடுத்த வரமே , இங்கும் அமரும் சந்திரன் ஜாதகருக்கு  வாழ்க்கையின் உண்மை நிலையை உணர வைத்தது , பக்தி நிலைக்கு  எடுத்து செல்லும் .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696


புதன் கேது சேர்க்கை தரும் யோக பலன்கள் !



ஒருவருடைய சுய ஜாதகத்தில் எந்த ஒரு பாவகம் என்றாலும் சரி புதன் கேது சேர்க்கை பெற்று நல்ல நிலையில் அமரும் பொழுது ஜாதகருக்கு தரும் யோக பலன்களை பற்றி இந்த பதிவில் சற்றே சிந்திப்போம் , 

புதன் கேது சேர்க்கை ஒருவருடைய சுய ஜாதகத்தில், ஒரே வர்க்கம் சார்ந்த மண் தத்துவ ராசிகளான ரிஷபம் , கன்னி , மகரத்தில் நல்ல நிலையில் அமரும் பொழுது ஜாதகர் பொருளாதரா ரீதியாக நல்ல முன்னேற்றமும் , சிறந்த உடல் ஆரோக்கியத்தையும் , நிறைவான சொத்து சுக சேர்க்கையையும் வாரி வழங்கி விடுகிறது புதன் கேது சேர்க்கை , இதற்க்கு காரணம் புதனுடன் சேர்ந்த கேதுவின் ஆற்றலே என்றால் அது மிகை ஆகாது , ஏனெனில் புதனுடன் சேரும் கேது, புதன் வழங்கும் நல்ல பலன்களையும் , அமர்ந்த இடத்திற்கு உண்டான முழு பலன்களையும் தானே ஏற்று கொண்டு நடை முறை படுத்துவதே இதற்க்கு காரணம்.

 கால புருஷ தத்துவ அமைப்பின் படி இரண்டாம் வீடான ரிஷபத்தில் அமரும் புதன் கேது சேர்க்கை நல்ல குடும்ப வாழ்க்கையினையும் ,   முதலீடு அற்ற கை நிறைவான வருமானத்தையும் , சிறப்பான பேச்சு திறமையின் மூலம் பொருளாதார முன்னேற்றத்தையும் தரும் . மேலும் ஜாதகரின் உடல் நிலை ஆயுள் வரை பெரிய பாதிப்புகளை சந்திக்காது ,  ஜாதகருக்கு சொத்து சுக சேர்க்கை என்பது மிக எளிதாக அமையும் , அடிப்படை கல்வி ஜாதகருக்கு எவ்வித தடையும் இன்றி மிகவும் சிறப்பாக அமையும் , 

ஜாதகருக்கு விட்டு கொடுத்து செல்லும் மனபக்குவம் சிறு வயது முதலே அமைந்து விடும் , இதனால் ஜாதகருக்கு வேண்டியாது நிச்சயம் கிடைக்கும் , ஜாதகரின் பொறுமையான குணம் அனைவராலும் விரும்பப்படும் , ரிஷபத்தில் அமரும் புதன் கேது சேர்க்கை ஜாதகருக்கு அளவற்ற வருமானத்தை நிச்சயம் தரும் , குறிப்பாக மருத்துவம் , பைனான்ஸ் , வட்டி தொழில் , கலை துறை , தனது பேச்சு திறனால் ஈட்டும் வருவாய் என்ற அமைப்பில் .

கால புருஷ தத்துவ அமைப்பின் படி ஆறாம் வீடான கன்னியில் அமரும் புதன் கேது சேர்க்கை ஜாதகரை திடீர் அதிர்ஷ்டத்தின் மூலம்  மிக பெரிய செல்வந்தனாக மற்றும் தன்மை கொண்டது , மேலும் சூது , லாட்டரி , சட்டத்துக்கு புறம்பான தொழில்கள் மூலம் மிகப்பெரிய தன சேர்க்கை உண்டாகும் , புதனுடன் சேரும் கேது  ஜாதகருக்கு அடிக்கடி அதிர்ஷ்ட வாய்ப்புகளை வழங்கி கொண்டே இருப்பார் , மேலும் ஜாதகரை பகைத்து கொள்ளும் அன்பர்களின் நிலை மிகவும்  பரிதாபத்திற்கு உரிய நிலைக்கு கொண்டு சென்று விடும் .

 இவர்களின் வாக்கு  பலிதம் பெரும் என்பதால் , இவரால் சபிக்க பட்டவர்களுக்கு சுய ஜாதகம் கடுமையாக பாதிக்க பட்டு இருக்கும் , இவரால் வாழ்த்து பெற்றவர்களின்  ஜாதக அமைப்பு மிகுந்த யோக பலன்களை  நடை முறையில் நடத்தி கொண்டு இருக்கும், தனது எண்ணத்தாலும் செயலாலும் காரிய வெற்றி பெரும்  தனி திறமை, ஜாதகருக்கு இயற்கையாக அமைந்து இருக்கும் , தன்னை எதிர்பவர்களை கண்டு சிறிதும் அஞ்சாத மன நிலையை இங்கு அமரும்  புதன் கேது சேர்க்கை சிறப்பாக தந்து விடும் .

கால புருஷ தத்துவ அமைப்பின் படி பத்தாம் வீடான மகரத்தில் அமரும் புதன் கேது சேர்க்கை , மேற்கண்ட இரண்டு சேர்க்கை நிலையை விட அதிக யோக பலன்களை தரும் புதன் கேது சேர்க்கை எனலாம் , சர ராசியான மகரத்தில் அமரும் இந்த சேர்க்கை நிலையில் கேதுவின் ஆதிக்கமே 100 சதவிகிதம் மேலோங்கி  நிற்கும், ஜாதகருக்கு தொழில் ரீதியான முன்னேற்றத்தை குறுகிய காலத்தில் வாரி வழங்கும் , எதையும் சாதிக்கும் ஆற்றலை ஜாதகருக்கு தடையில்லாமல் வாழ்நாள் முழுவதும் வாரி வழங்கி கொண்டே இருக்கும் .

குறிப்பாக கனரக வண்டி வாகன போக்குவரத்து தொழில்கள் , கட்டிடம் மற்றும் கட்டுமான தொழில்களில் , விவசாயம் சார்ந்த தொழில்கள் , பண்ணை தொழில்கள் மூலம் ஜாதகரின் வாழ்க்கை குறுகிய காலத்தில் முன்னேற்றம் பெரும் , இதற்க்கு மூல காரணமாக இங்கு அமரும் கேது பகவானின் ஆற்றலே  என்றால்  அது மிகையாகாது , புதன் ஜாதகருக்கு சரியான திட்டமிடுதலை தருவார் , கேது அதனை நடைமுறைக்கு கொண்டுவருவார் , மேலும் ஜாதகர் வெற்றி பெறுவதற்கு உண்டான நல்ல மனிதர்களின் தொடர்புகளை ஏற்ப்படுத்துவதும் கேது பகவானே . 

மேற்கண்ட அமைப்பில் சுய ஜாதகத்தில் புதன் கேது சேர்க்கை இருந்து லக்கினத்திற்கு நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே மேற்கண்ட நன்மையான பலன்கள்  நடை முறைக்கு வரும் , இல்லை எனில் இதற்க்கு நேர் எதிரான  பலன்களை ஜாதகர் அனுபவிக்க வேண்டி வரும் , இவை யாவும் நடப்பு திசையில் சம்பந்த பட்ட பாவகத்தின் பலன் நடைமுறையில் வந்தால் மட்டுமே  என்பதை கவனத்தில் கொள்வது அவசியம் .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443306969


புதன், 9 ஜனவரி, 2013

சந்திரன் அமர்ந்த ராசியும் ஜாதகரின் மன இயல்பும் - பகுதி 1




ஒருவரின் மன ஆற்றலை நிர்ணயம் செய்யும் சந்திரன் , மேஷம் முதற்கொண்டு மீனம் வரை அமரும் பொழுது , ஜாதகரின் மன நிலையையும், என்ன ஆற்றல்களையும் , எவ்விதம் செயல்படுத்துகிறார் என்பதை பற்றி இந்த பதிவில் சற்றே சிந்திப்போம் .

மேஷம் : 

சந்திரன் இங்கு அமர்ந்து நல்ல நிலையில் இருப்பின் ஜாதகரின் மனம் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டே இருக்கும் , அதிரடியான பல முடிவுகளை சரியான நேரத்தில் சரியான விதத்தில் எடுக்கும் தன்மை பெற்றவர்கள் , தனது மன நிலையை எப்பொழுதும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஆற்றல் பெற்றவர்கள் , சுய கட்டுபாடு , செயல்களில் வேகம் , நினைத்ததை சாதிக்கும் ஆற்றல் நினைத்ததை அடையும் யோகம் , சிறந்த நிர்வாக திறன் , அதிகாரம் செய்யும் மனோ நிலை , தனது கட்டுப்பாட்டில் அனைவரையும் வைத்திருக்கும் ஆற்றல், சமுகத்தில் சிறப்பான பதவி மற்றும் உயர்ந்த அந்தஸ்து , ஊர் மரியாதை நியாய தர்மங்களை எடுத்து உரைக்கும் பெரிய மனித தன்மை , பொது மக்களுக்கு காவல் செய்யும் யோகம் , அதிக மன வலிமை தேவை படுகிற காவல் துறை , ராணுவம் , தீயணைப்பு துறை , மக்களை பாதுகாப்பாக எடுத்து செல்லும் ஓட்டுனர் பணி போன்ற அமைப்புகளில் சிறந்து விளங்க செய்யும் , மேலும் ஸ்திரமான மன நிலை, அபரிவிதமான மன  ஆற்றலை இங்கு அமரும் சந்திரன் வாரி வழங்கி விடுவார் .

ரிஷபம் : 

சந்திரன் இங்கு அமர்ந்து நல்ல நிலையில் இருப்பின் ஜாதகர் நிலையான முடிவுகளை தெளிவாக எடுக்கும் ஆற்றல் பெற்றவர்கள் , கொஞ்சம் பயந்த சுபாவம் இருந்த போதிலும் , அதுவே ஜாதகருக்கு பாதுகாப்பாக அமையும் , தான் எடுத்த முடிவுகளை மறு பரிசிலனை செய்யாதவர்கள் , இறைவன் இவர்களுக்கு அதிக அதிர்ஷ்டங்களை வாழ்நாள் முழுவதும் தந்து கொண்டே இருப்பார் , எளிதில் மனம் கனியும் தன்மை பெற்றவர்கள் , ஏழை எளியவர்களுக்கு ஓடி வந்து உதவி செய்யும் மனம் கொண்டவர்கள் , தனது அன்பால் அனைவரையும் ஆதரிக்கும் தன்மை பெற்றவர்கள் , இவர்களை வீணாக சீண்டினால் கோபத்தின் உச்சத்திற்கே சென்றுவிடுவார்கள் , மனித உணர்வுக்கு மதிப்பு தரும் மென்மையானவர்கள் , இவர்களால் அதிகம் எவரும் பாதிக்க படுவதில் மற்றவர்களால் அதிகம் இவர்களே பாதிக்க படுகிறார்கள் , இருப்பினும் அனைத்தையும் பொறுமையாக ஏற்றுகொள்ளும் தன்மை பெற்றவர்கள் , நிலையான சொத்து சுக சேர்க்கையையும் சிறப்பான வாழ்க்கையையும் இங்கு அமரும் சந்திரன் வாரி வழங்கிவிடுவார்  .

மிதுனம் : 

சந்திரன் இங்கு அமர்ந்து நல்ல நிலையில் இருப்பின் ஜாதகர் சுதந்திரமே வாழ்க்கையில் சகல நன்மைகளையும் பெற்று தரும் என்ற மனபக்குவத்தை கொண்டவர்கள் , தனது பேச்சுக்கு அங்கீகாரம் எப்பொழுதும் கிடைக்க வேண்டும் என்று நினைக்கும் தன்மை பெற்றவர்கள் , இவர்களின் பொது நலத்திலும் ஒரு சுய நலம் கலந்தே நிற்கும் , பரந்த மனப்பான்மை பெற்று இருந்த  போதிலும் அதில் சுய லாபம் பார்க்கும் தன்மை இயற்கையாக ஜாதகருக்கு அமைந்துவிடும் , தனது மன ஆற்றல் மூலம் சகல கலைகளிலும் பல புதுமைகளை படைக்கும் தன்மை பெற்றவர்கள் , வாழ்க்கையில் எவ்வித சூழ்நிலையையும் சமாளிக்கும் மன நிலையை பெற்றவர்கள் , எதற்கும் கலங்காமல் எதிர்நீச்சல் போடும் மன நிலையை பெற்றவர்கள் , குறிப்பாக கல்வியில் சிறந்து விளங்கும் ஆற்றலை மிக அதிகமாக இங்கு அமரும் சந்திரன் வழங்குவார் , இவர்களின் செயல்களும் எண்ணங்களும் மற்றவர்களுக்கு எவ்விதத்திலாவது உதவிகரமாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை , தனது அறிவாற்றலை முழுவதுமாக மன நிலையின் உதவி கொண்டு காரியம் சாதிப்பவர்கள் என்றால் அது மிகை ஆகாது , சிறப்பான புத்திசாலித்தனத்தையும் நுணுக்கமான அறிவாற்றலையும் இங்கு அமரும் சந்திரன் வாரி வழங்கிவிடுவார்  .

கடகம் :

சந்திரன் இங்கு அமர்ந்து நல்ல நிலையில் இருப்பின் ஜாதகர் பரிபூரண அதிர்ஷ்டத்தை முழுவதும் அனுபவிக்கும் யோகத்தை தரும் , ஜாதகரின் மன நிலையானது எப்பொழுதும் நேர்மறையான எண்ணங்களால் நிரம்ப பெற்று இருக்கும் , அந்த எண்ணங்கள் யாவும் ஜாதகருக்கு வாழ்க்கையில் சகல நிலைகளில் இருந்தும் விரைவான முன்னேற்றத்தை வாரி வழங்கும் , குறிப்பாக வண்டி வாகனம் , சொத்து சுக சேர்க்கை , நிலபுலன் சேர்க்கை , மக்கள் செல்வாக்கு , அரசியல் ஆதாயம் , பெரிய சொத்து சுக சேர்க்கை , உலகம் முழுவதும் சுற்றி வரும் யோகம் , பெண்கள் வழியில் இருந்து வரும் பேராதரவு , மக்கள் விரும்பும் பொருட்களின் வியாபாரம் மூலம் ஜாதகர் விரைவான முன்னேற்றத்தை பெரும் யோகம் , தன்னம்பிக்கை , நிலையான நிறைவான மன நிலை , தன்னால் இயன்ற அளவிற்கு பொது மக்களுக்கும்  உறவினர்களுக்கும் உதவி செய்யும் குணம் , இங்கு அமரும் சந்திரன் ஜாதகருக்கு விரைவான வளர்ச்சியையும் , உறுதியான மன நிலையையும் , நீடித்த அதிர்ஷ்ட வாழ்க்கையையும் 100 சதவிகிதம் நிச்சயம் பெற்று தருவார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696



நீர் தத்துவ ராசிகளின் தன்மையும் , சுய ஜாதகத்தில் வலிமை பெரும் பொழுது தரும் நன்மையும் !



பொதுவாக கால புருஷ தத்துவ அமைப்பிற்கு கடகம் சர நீர் தத்துவ ராசியாகவும், விருச்சிகம் ஸ்திர நீர் தத்துவ ராசியாகவும் , மீனம் உபய நீர் தத்துவ ராசியாகவும் , இயற்கையால் வகை படுத்த படுகிறது , ஒருவருடை சுய ஜாதகத்தில் மேற்கண்ட நீர் தத்துவ ராசிகள் நல்ல நிலையில் அமரும் பொழுது ஜாதகர் பெரும் நன்மைகளை பற்றி இந்த பதிவில் சற்றே சிந்திப்போம் .

சுய ஜாதக  ரீதியாக ஒருவருக்கு நீர் ராசிகளான கடகம் , விருச்சிகம், மீன ராசிகள் நல்ல நிலையில் இருந்தால் , ஜாதகர் நல்ல மனம் கொண்டவராகவும், பரந்த மனப்பான்மை உள்ளவராகவும் , தனது எண்ணத்தால் அனைத்ததையும் சாதிக்கும் பேராற்றல் கொண்டவராகவும் இருப்பார் , குறிப்பாக ஜாதகரின் மன நிலையை பற்றி தெளிவாக தெறிந்து கொள்ள இந்த பாவகங்கள் மிகுந்த உதவி புரியும் , சிறந்த ஆன்மீகவாதிகள் , தன்னம்பிக்கையாளர்கள் , மனோ தத்துவ நிபுணர்கள் , சிறந்த பேராசிரியார்கள் , கல்வியாளர்கள் , மக்கள் நலனில் அக்கறையுள்ள அரசு அதிகாரிகள் , அரசியல்வாதிகள் , சிறந்த தலைமை பொறுப்பை வகிக்கும் தலைவர்கள் போன்ற அமைப்பில் பெரிய பதவிகளை மேற்க்கண்ட ராசிகள் சுய ஜாதகத்தில் வலிமை பெறும் பொழுது , மிக எளிமையாக பெற்று தந்துவிடுகிறது .

கடகம் சர நீர் ராசி சுய ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் ஜாதகர் பெரும் யோக பலன்கள் :

ஜாதகர் மிகுந்த யோகசாலி , பெருந்தன்மையான குணம் ஜாதகருக்கு சிறு வயது முதற்கொண்டே அமைந்து விடும் , தனது நடத்தையாலும் , செய்கையாலும் அனைவராலும் விரும்ப படும் குணத்தை பெற்று இருப்பார் , மேலும் ஜாதகர் மனதில் நினைக்கும் எண்ணங்கள் யாவும் எவ்வித தடையும் இல்லாமல் வெற்றி பெறும் , குறிப்பாக ஆய கலைகள் 64 லும் சிறந்து விளங்கும் ஆற்றல் இயற்கையாக அமைந்து விடும் .

 பூலோகத்தில் வாழ்வதற்கு உண்டான சொகுசு வீடு , வண்டி வாகனம் , நல்ல உணவு , மன மகிழ்விற்கு உண்டான வசதிகள் , நான்குகால் ஜீவன்கள் பெருக்கம் , குதிரை , செல்ல பிராணிகள் வாங்கும் யோகம் , மன திருப்தியுடன் செய்யும் காரியங்கள் , பொன் பொருள் சேர்க்கை , ஆடம்பர பொருட்களின் சேர்க்கை , போதும் என்ற மன நிலை , பொது மக்கள் நீடித்த ஆதரவு என சகல வழிகளிலும் , சகல வசதி வாய்ப்புகளையும் அள்ளித்தரும் ராசியாக கடகம் அமைகிறது , ஒருவருடைய சுய ஜாதகத்தில் நல்ல நிலையில் இருக்க வேண்டிய ராசிகளில் முதன்மை வகிப்பது இந்த கடக ராசியே என்றால் அது மிகையாகாது , ஆனால் சர லக்கினத்திற்கு இது பொருந்தாது .

விருச்சகம் ஸ்திர  நீர் ராசி சுய ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் ஜாதகர் பெரும் யோக பலன்கள் :

 குடும்ப வாழ்க்கையில் ஜாதகர் நல்ல நிலையில் இருக்கவும் , இல்லறவாழ்க்கையில் இருந்து கொண்டே ஆன்மீகத்தில் சிறந்து விளங்கும் அமைப்பை  தரும் , திருமண வாழ்க்கையில் நிறைவான மகிழ்ச்சியையும் , திருமணத்தின் மூலம் யோக வாழ்க்கையையும் தரும் ராசி இந்த விருச்சக ராசியாக கருதலாம் , விருச்சககத்தில் நீர் தத்துவம் நல்ல நிலையில் இருப்பின் , ஒன்று நல்ல இல்லற வாழ்க்கையை சிறப்பாக அமைத்து தரும் அல்லது ஆன்மீக வாழ்க்கையில் மிக பெரிய வெற்றியை தரும் , மனித வாழ்க்கையின் சூட்சம விஷயங்களை புரிய வைக்கும் ராசி. 

மனதில் தெளிவையும் , மன உறுதியையும் , தார்மீக சிந்தனையும் , இறை நிலையின் புரிதலையும் தரும் , ஜாதகருக்கு இவை அனைத்தும் திடீர் எனவே நிகழும் , வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்களை ஜாதகருக்கு திடீர் திடீர் எனவே நிகழ்த்தும் , நேற்றுவரை சாமான்யவராக இருந்த நபர் , இன்று உலகம் போற்றும்  நபராக வளம் வரும் யோகம் உண்டாகும் , பொதுமக்கள் ஆதரவை அளவில்லாமல் பெற்று தரும் , இவரின் பேச்சுக்கு மக்கள் அனைவரும் கட்டுப்படும் தன்மை உண்டாகும் , வெளிநாடுகளில் இருந்து வெளி ஊர்களில் இருந்தும் ஜாதகருக்கு பெயரும் புகழும் உண்டாகும்  ஆனால் ஸ்திர லக்கினத்திற்கு இது பொருந்தாது .

மீனம் உபய நீர் ராசி  சுய ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் ஜாதகர் பெரும் யோக பலன்கள் :

வாழ்க்கையை வாழ பிறந்தவர்கள் , இவர்களின் மன நிலை எதையும் தாங்கும் தன்மை கொண்டது , சாதாரண மனிதனாக இருந்து வாழ்க்கையில் மிகப்பெரிய சாதனைகளை படைக்கும் பேராற்றல் கொண்டவர்கள் , மேலும் தனது மன ஆற்றல் மூலம் புதிய பல கண்டுபிடிப்பை உலகிற்கு தரும் தன்மை கொண்டவர்கள் , இவர்களின் கண்டு பிடிப்பு , மக்களுக்கு அன்றாட தேவைகளை சிறப்பாக நிறைவேற்றி கொண்டு இருக்கிறது , எதற்கும் அஞ்சாதவர்கள் , தைரியம் , துணிவு , தன்னம்பிக்கை மிகுந்தவர்கள் , சுயநலம் பாராமல் பொது சேவையில் சிறந்து விளங்கும் தன்மை பெற்றவர்கள் .

ஆசிரிய பணிகளில் சிறந்து விளங்கும் யோகம் பெற்றவர்கள் , சமுதயத்தில் பல மாற்றங்களுக்கு அடிகோலும் நபர்கள் , மக்களின் சிந்தனையும் , நோக்கத்தையும்  எளிதில் புரிந்து கொள்ளும் ஆற்றல் பெற்றவர்கள் , இவர்களின் பேச்சும் , செயல்களும் அனைவருக்கும் நன்மையே வாரி வழங்கும் , குறிப்பாக பெண்களின் ஜாதகத்தில் இந்த ராசி நல்ல நிலையில் இருப்பது அவசியம் , இல்லை எனில் குடும்பத்தில் மன நிம்மதி என்பதே இருக்காது , போற்றுவார் போற்றட்டும் , தூற்றுவார் தூற்றட்டும் போகட்டும் எல்லாம் கண்ணனுக்கே  என்ற எண்ணம் கொண்டவர்கள் , இருப்பதை வைத்து  நிறைவாக வாழும் தன்மை பெற்றவர்கள் ஆனால் உபய லக்கினத்திற்கு இது பொருந்தாது .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443306969
   

வியாழன், 27 டிசம்பர், 2012

சாய கிரகமான ராகு கேதுவுடன் மற்ற கிரகங்கள் சேர்க்கை பெற்று ஒரு பாவகத்தில் அமரும் பொழுது தரும் பலன்கள் !



கேள்வி :

 ஒருவருடைய சுய ஜாதகத்தில் சாயா கிரகமான ராகு கேதுவுடன் , சுப கிரகங்களோ , அசுப கிரகங்களோ சேர்க்கை பெற்று அமரும் பொழுது தரும் பலன்கள் என்ன ? ராகு கேதுவுடன் சேரும் கிரகங்கள் ஜாதகருக்கு அவ்வளவு நன்மையை செய்யவதில்லை என்றும் , குறிப்பாக சூரியன் , செவ்வாய் , சனி போன்ற அசுப கிரகங்கள் சேரும் பொழுது ஜாதகருக்கு அதிக தீமையே செய்கின்றது என்பது பொது கருத்தாக இருக்கிறது , உண்மை என்ன ? சற்றே தெளிவாக விளக்கவும்.  நன்றி !

பதில் :

கிரக சேர்க்கை வைத்தே ஒரு ஜாதகத்தில் ஒருவருக்கு யோக அவ யோக நிலையை பற்றி நிர்ணயம் செய்கின்றனர் , குறிப்பாக சுப கிரகங்கள் சேர்க்கை பெரும் பொழுது யோக பலன்களையும் , அசுப கிரகங்களின் சேர்க்கை ஜாதகருக்கு அவ யோக பலன்களை தரும் என்று பலன் நிர்ணயம் செய்கின்றனர் பெரும்பாலான ஜோதிடர்கள் , இதில் சுய ஜாதகத்தில் கிரக சேர்க்கை நிர்ணயம் செய்யும் பொழுது பல விதி விளக்குகள் உள்ளன , இதனால் ஒருவருடைய சுய ஜாதகத்தில் கிரக சேர்க்கை பெறாதா நிலையை கூட யோக நிலை என்றும் , கிரக சேர்க்கை பெற்ற நிலையை கிரக சேர்க்கை இல்லை என்றும் கணிதம் செய்து பலன் சொல்கின்றனர் .


எடுத்துகாட்டாக :

மேற்கண்ட இந்த சிம்ம இலக்கின ஜாதகருக்கு பெரும்பாலான ஜோதிடர்களின் கணிப்பு , ராகு கிரகத்துடன் செவ்வாய் குரு சேர்க்கை பெற்று இருக்கிறது என்றும் , சனி பகவானுடன் எந்த கிரகமும் சேர்க்கை பெறவில்லை என்பதாகவே இருக்கிறது , உண்மையில் இந்த சிம்ம இலக்கின ஜாதகருக்கு ராகு கிரகத்துடன் எந்த ஒரு கிரகமும் ஒரே பாவகத்தில் சேர்க்கை பெறவில்லை, கரணம் இந்த ஜாதகருக்கு லக்கினம் என்பது, சிம்மத்தில் 131.33.44 பாகையில் ஆரம்பித்து, கன்னியில் 162.12.33 பாகையில் முடிவடைகிறது .

இதில் ராகு  ஜாதகத்தில் 126.25.02 பாகையில் அமர்ந்து இருக்கிறார் எனும் பொழுது  , ராகு சிம்மத்தில் அமர்ந்து இருந்தாலும் சிம்மத்தில் உள்ள 12 ம் பாவகத்தில் அமர்ந்து இருப்பதாகவே நாம் எடுத்துகொள்ள வேண்டும் , அதுவே சரியான  ஜோதிட கணிதம் , இதில் சனி பகவான் கன்னியில் அமர்ந்து இருந்தாலும் , அவர் லக்கின பாவகத்திர்க்கு உற்பட்ட 152.39.12 பாகையில் அமர்ந்து  விடுவதால் சனி பகவான் குரு செவ்வாய் பகவானுடன் சேர்க்கை பெற்றதாகவே  நாம் எடுத்துகொள்ள வேண்டும் , இதுவே கிரக சேர்க்கை பற்றிய  துல்லியமான ஜோதிட கணிதம்.

 இங்கே ராகு பகவான் சிம்மத்தில் குரு செவ்வாயுடன்  சேர்க்கை பெற்று இருப்பதுபோல் தெரிந்தாலும் , உண்மையில் அவற்றுடன்  சேர்க்கை பெறவில்லை , சனி கன்னியில் தனித்து நிற்பது போல் தோற்றம் தந்தாலும் , லக்கினத்திற்கு உட்ப்பட்ட பாகைக்குள் அமர்ந்து  இருப்பதால் உண்மையில் குரு பகவானுடனும் செவ்வாய் பகவனுடனும்  சேர்க்கை பெற்று அமர்ந்து இருக்கிறார் என்பதே உண்மை , மேற்கண்ட  எடுத்து காட்டில் இருந்து நாம் தெரிந்து கொள்வது , லக்கினம் மற்றும் 12 பாவகங்களும் எந்த பாகையில்  ஆரம்பிக்கிறது எந்த பாகையில்  முடிவடைகிறது என்று தெரியாத பொழுது , சுய ஜாதகத்தில் கிரக சேர்க்கையை  பற்றிய ஒரு தெளிவான முடிவுக்கு வர இயலாது , மேலும் அந்த கிரக  சேர்க்கை தரும் நன்மை தீமையை பற்றி தெரிந்து கொள்ள முடியவே முடியாது .

ஒரு ஜாதகத்தில் கிரக சேர்க்கை பற்றி முடிவு செய்வதிலேயே இவ்வளவு குளறுபடிகள் ஜோதிடர்களுக்கு இடையே காணப்படும் பொழுது , பாவம் ஜோதிட பலன் காண வந்தவரின் நிலை பரிதாபத்திற்கு உரியது , இதனால் தான் பல  ஜோதிடர்கள் ஆக ஓகோ இது ராஜ யோக ஜாதகம் என்று சொன்ன ஜாதகர்  கூட எவ்வித யோக பலன்களையும் அனுபவிக்க இயலாமல் , விட்டத்தை பார்த்து  கனவு கண்டு கொண்டு இருக்கின்றனர் , ஆக ஜாதகத்தில் துல்லியமாக  பாகை வாரியாக கணிதம் செய்து பலன் காணும் பொழுதே சரியான  பலனை ஜாதகருக்கு சொல்ல இயலும் , அதுவே ஜாதகருக்கு நல்ல வாழ்க்கையை  அமைத்து தரும் .

சரி தாங்கள் கேட்ட கேள்விக்கு உண்டான பதிலுக்கு வருவோம் , சாயா கிரகத்துடன் சேரும்  கிரகங்கள் ஜாதகருக்கு எவ்வித பலனை தரும் ? 

ராகு அல்லது  கேதுவுடன் சேர்ந்து ஒரு பாவகத்தில் அமரும் கிரகங்கள் , அமர்ந்த  அந்த பாவகத்திர்க்கு எவ்வித நன்மை தீமையும் செய்ய இயலாது , அங்கு  அமர்ந்த ராகுவோ கேதுவோ முழு பலனையும் தானே ஏற்று நடத்தும் , மேற்கண்ட  சிம்ம இலக்கின ஜாதகத்தில் கேதுவுடன் சூரியன் , புதன் இரண்டு கிரகமும் சேர்க்கை பெற்று 6 ம் பாவகத்தில் அமர்ந்து இருக்கிறது , இங்கு கேதுவுடன்  சேர்ந்த சூரியன் , புதனுக்கு எவ்வித பலனும் 6 ம் பாவகத்திர்க்கு தர வாய்ப்பு  சிறிதும் இல்லை , கேது என்ற கிரகமே ஆறாம் பாவகத்திர்க்கு உண்டான  முழு பலனையும் செய்யும் அதுவும் 100 சதவிகிதம் நன்மையாக , ஆனால்  சூரியன் லக்கினத்திற்கும் , புதன் இரண்டு மற்றும் பதினொன்றாம் பாவகத்திர்க்கு  உண்டான நன்மை தீமை பலனை செய்வார்கள் .

பொதுவாக சாய கிரகமான ராகு கேதுவுடன்  எந்த கிரகமும் சேர்க்கை பெற்று ஒரே  பாவகத்தில் அமர்ந்தாலும் , அந்த பாவகதிர்க்கு எவ்வித நன்மை தீமையும்  செய்ய இயலாது , ஏனெனில் அந்த பாவகதிர்க்கு உண்டான நன்மை தீமை பலன்களை  ராகு கேதுவே 100 சதவிகிதம் நிர்ணயம் செய்யும் என்பதால், ராகு கேதுவுடன்  சேர்க்கை பெற்ற கிரகத்தை பற்றி நாம் எந்த கவலையும் கொள்ள தேவையில்லை, ராகு கேது ஜாதகருக்கும் அந்த பாவகதிர்க்கும் நன்மை  செய்கிறதா ? தீமை செய்கிறதா ? என்பதை மட்டும் பார்த்தால் போதும்,   அதுவே  ஜாதகருக்கு சரியான பலன் சொல்ல உதவும்.

 இல்லை எனில் குத்து மதிப்பாக 12 ராசிக்கும் நன்மைகள் மிக பெரிய அளவிலே, அதிக அளவிலே நன்மைகள் நடைபெறும் ஒரு நல்ல நாளாக விளங்குகிறது, என்று கதை விட்டுக்கொண்டு , காலத்தை கடத்த  வேண்டியதுதான். 

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன்
9443306969


வெள்ளி, 21 டிசம்பர், 2012

சகல யோகமும், வாழ்க்கையில் மிக பெரிய வெற்றியை பெரும் ஜாதக நிலை !



ஜாதக பொது பலன்கள் 

லக்கினம் : கன்னி 
ராசி : ரிஷபம் 
நட்சத்திரம் : கிருத்திகை 4 ம் பாதம் 

ஜாதக அமைப்பில் நல்ல நிலையில் உள்ள பாவகங்கள் :

1,2,3,5,6,7,8,9,11,12 வீடுகள் லாபஸ்தானம் மற்றும் அதிர்ஷ்ட ஸ்தானம் எனும் பதினொன்றாம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, தங்களது ஜாதகத்தில் மிகுந்த வலிமையை பெற்று காணப்படுகிறது , குறிப்பாக லாப ஸ்தானம் கடகமாக இருப்பது மிகுந்த அளவில்லா அதிர்ஷ்டத்தை தரும் .

1 ம் பாவக அமைப்பில் இருந்து அதிக லாபம் , செல்வா செழிப்பு , பரஸ்பர உதவி , நோய் குணமடயும் தன்மை , வருமுன் உணர்ந்து செயல்படும் தன்மை , நினைத்த எண்ணங்கள் பலிதமாகும் யோகம் , திருமணம் மூலம் யோக வாழ்க்கை , அதிக குழந்தைகள் , நல்ல வளரும் சூழ்நிலை , சிறந்த அறிவாற்றல் , வெற்றி மேல் வெற்றி பெரும் யோகம் , தன்னம்பிக்கை , சுய கட்டுபாடு , பொதுமக்கள் ஆதரவு என்ற அமைப்பில் லாப ஸ்தான பலனை தரும் .

ம் பாவக அமைப்பில் இருந்து அதிர்ஷ்டம் , நண்பர்கள் உதவி மூலம் வாழ்க்கையில் மேன்மை பெரும் யோகம் , செல்வ நிலையில் செழிப்பு , இனிமையான வாக்கு , அதிக வருமானம் பெரும்  யோகம் , ஜாதகரின் பேச்சுக்கு மக்களிடம் மதிப்பு மரியாதை ஏற்ப்படும் தன்மை , செல்லும் இடங்களிலெல்லாம் நல்ல செல்வாக்கும் , முன்னேற்றமும் உண்டாகும் , இருப்பினும் வாழ்க்கை துணை  வழியில் இருந்து சிறு சிறு இன்னல்கள் ஏற்ப்பட கூடும் , அதனால் பெரிய பாதிப்பு எதுவும் வர வாய்ப்பு இல்லை .

ம் பாவக அமைப்பில் இருந்து நினைத்த எண்ணங்கள் ஈடேறும் தன்மை , நல்ல வியாபாரம் , அதிக வாகன யோகம் , விவசாயத்தில் முன்னேற்றம் , சொகுசு  வண்டி வாகனம் , வீடு , மண் மனை  வாங்கும் யோகம் , எடுக்கும் காரியங்களை முடிக்கும் திறமை , முயற்ச்சி வெற்றி பெரும் அமைப்பு , நிறைய சொத்து சுக சேர்க்கை , தர்ம சிந்தனை , ஜோதிடம் மற்றும் கணிதத்தில் புலமை ஏற்படுதல் , திருமணத்திற்கு பின் அதிர்ஷ்ட வாழ்க்கையை தரும் .

ம் பாவக அமைப்பில் இருந்து லாட்டரியில் யோகம் , தனது சுய அறிவாற்றல் , புத்திசாலித்தனத்தால் ஆதாயம் , எப்பொழுதும் மகிழ்ச்சி , குழந்தை மனைவி குடும்பத்தாருடன் நல்லுறவு , தனது  குல தேவதையின் பரிபூரண ஆசிகள் ஜாதகருக்கு எப்பொழுதும் கிடைக்கும் யோகம் , ஆன்மீக வாழ்க்கையில் வெற்றி , நல்ல நினைவாற்றல் , சிறப்பான சிந்தனை மூலம் வாழ்க்கையில் அதிர்ஷ்ட  அமைப்பை பெரும் யோகம் என்ற அமைப்பில் லாப ஸ்தான பலனை தரும் .

ம் பாவக அமைப்பில் இருந்து சுலபத்தில் வெற்றி பெரும் தன்மை , புத்தி கூர்மை , பங்கு சந்தை , லாட்டரி மூலம் அதிர்ஷ்ட யோகம் , கூலி ஆட்கள், தொழிலாளர்கள் மூலம் லாபம் , நான்கு கால்  ஜீவன்கள் மூலம் லாபம் , விவசாயத்தில் வெற்றி , கடன் கொடுப்பது , வாங்குவதால் லாபம் என்ற அமைப்பில் லாப ஸ்தான பலனை தரும் .

ம் பாவக அமைப்பில் இருந்து நல்ல வாழ்க்கை துணை , நன்மை செய்யும் நண்பர்கள் , திருப்தியான கூட்டாளி கூட்டு தொழில் மெல்லாம் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றி பெரும் யோகம் , வாழ்க்கை துணை வழியில் இருந்து அறிவு வழியில் அல்லது பொருளாதார அமைப்பில் இருந்து ஆதரவு , பொதுமக்கள் செல்வாக்கு , அரசியலில் வெற்றி வாய்ப்பு , வெளிநாடுகளில்  இறந்து வரும் நல்ல வாய்ப்புகள் மற்றும் செல்வ விருத்தி , பல தொழில் செய்யும் யோகம் , மக்களை நம்பி செய்யும் தொழில்கள் யாவும் வெற்றி மேல் வெற்றி தன்மை என்ற  அமைப்பில் லாப ஸ்தான பலனை செய்யும் .

ம் பாவக அமைப்பில் இருந்து நீண்ட ஆயுள் , நல்ல உடல் ஆரோக்கியம் ,குறுகிய காலத்தில் திடீர் என அதிர்ஷ்ட வாழ்க்கையை பெரும் தன்மை , வழக்குகளில் வெற்றி பெரும் தன்மை , சேமிப்பின் மூலம்  முன்னேற்றம் பெரும் யோகம் , சுய தொழில் மூலம் அதிர்ஷ்ட வாய்ப்புகள் , பங்கு வர்த்தகத்தில் அதிர்ஷ்ட யோகம் , போதும் என்ற மன நிலை , மக்கள் செல்வாக்கு , திருப்தியான  வாழ்க்கை என்ற அமைப்பில் லாப ஸ்தான பலனை செய்யும் .

ம் பாவக அமைப்பில் இருந்து தெய்வீக அனுபவம் , தான் செய்த புண்ணியத்தின் பலனை முழுவதுமாக பெரும் யோகம் , இறை நிலையின் அருள் ஆற்றல் ஜாதகருக்கு பரிபூரணமாக வாழ்நாள் முழுவதும் கிடைக்கும் பேரு , சுற்று பயணம் செல்வதாலும் , பயனங்களினாலும் அதிக லாபம், அறிவாளி , நல்ல சிந்தனையாளர் , ஒழுக்கம் , சுய கட்டுப்பாடு , தன்னம்பிக்கை அதிகம் கொண்டுள்ள  ஜாதகர் , வெளிநாடுகளில் யோக வாழ்க்கை , ஆராய்ச்சி மூலம் அதிர்ஷ்ட வாழ்க்கை , எல்லா நன்மைகளும் எளிதில் கிடைக்கும் யோகம் என்ற அமைப்பில் லாப ஸ்தான  பலனை செய்யும் .

11 ம் பாவக அமைப்பில் இருந்து நீடித்த அதிர்ஷ்டம் வாழ்நாள் முழுவதும் கிடைக்கும் , அனைத்திலும் லாபம் , நல்ல குணம் , பல அறிய பொருட்கள் ஜாதகருக்கு கிடைக்கும் யோகம் , தன்னை விட  வயதில் மூத்தவர்களின் வழியில் இருந்து வரும் யோகம் மற்றும் நல்வாய்ப்புகள் , என்ற அமைப்பில் லாப ஸ்தான பலனை செய்யும் .

4,10 ம் வீடுகள் ஜீவன ஸ்தானம் எனும் 10 ம் வீட்டுடன் தொடர்பு பெறுவது நான்காம் பாவக அமைப்பில் இருந்து நல்ல தொழில் முன்னேற்றம் , பெயரும் புகழும் கிடைக்கும் யோகம் , மண் மனை வண்டி வாகன யோகம் , ஆள் வசதி , சிறந்த நிர்வாக திறமை , சரியான தீர்ப்பு சொல்லும் தன்மை , அரசு ஆதரவின் மூலம் வாழ்க்கையில் நன்மை பெரும் யோகம் , பெரிய சொத்து சுக சேர்க்கை , விளையாட்டு துறையில் ஆர்வம் , அரசு கௌரவம் , சமுக வாழ்க்கையில் வெற்றி , அரசியலில் மிகப்பெரிய வெற்றி என்ற அமைப்பிலும் , உத்தியோகம் , வியாபாரம் , தொழில் முதலியவற்றில்  மிகப்பெரிய வெற்றியை பெரும் யோகம் , கம்பீரமான வாழ்க்கை , தீர்க்கமான வாதம் , தனது பேச்சாற்றல் மூலம் அனைத்தையும் சாதிக்கும் யோகம் , வாழ்நாள் முழுவதும்  அதிர்ஷ்ட தொழில் வாய்ப்புகள் வந்துகொண்டே இருக்கும் தன்மை , சுய தொழில் மற்றும் கூட்டு தொழில் செய்வதால் வெற்றி மேல் வெற்றி பெரும் யோகம் , என்ற அமைப்பிலும்  ஜாதகருக்கு முன்னேற்றத்தை தரும் , ஜாதகர் சுய தொழில் செய்வதாலேயே முன்னேற்றம் என்பதை பெற முடியும் , வேலைக்கு செல்வதால் ஜாதகரின் யோக நிலைகள் வெகுவாக  பாதிக்க பட கூடும் .

ஜாதக அமைப்பில் பாதிக்க பட்ட பாவகங்கள் :

தங்களது ஜாதகத்தில் ஒரு பாவகமும் பாதிக்க படவில்லை .


பரிகாரம் :

1 தினமும் சூரிய நமஸ்காரம் அதிகாலை 5 மணிக்கே எழுந்து செய்து வருவது சகல யோகத்தையும் தரும் .
2 வருடம் ஒரு முறை வளர் பிறை திங்கள் அன்று திருப்பதி சென்று ஸ்ரீ வாரி பெருமானை தரிசித்து வருவது சகல நன்மைகளையும் தரும் .
3 தாங்கள் குடியிருக்கும் இடத்தில் இருந்து தெற்கு திசையில் இருக்கும் ஒரு அம்மன் கோவிலுக்கு பௌர்ணமி திதிகளில் சென்று வழிபடுவது அவசியம்.



வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443306969

புதன், 19 டிசம்பர், 2012

அரசியலில் கொடிகட்டி பறக்கும் யோக ஜாதக நிலை !



மேற்கண்ட மேஷ இலக்கின ஜாதகருக்கு , லக்கினம் மற்றும் ஏழாம் வீடு எனும் இரண்டு பாவகங்களும் களத்திர பாவகமான ஏழாம் பாவகத்துடனே சம்பந்தம் பெறுவது , மிகுந்த யோக அமைப்பாக கருதலாம் , ஒருவர் பொது வாழ்க்கையிலும் , அரசியலிலும் சிறந்து விளங்க வேண்டும் எனில் ஏழாம் பாவகம் சுய ஜாதகத்தில் அதிக வலிமையுடன் இருப்பது அவசியம் , அப்படி வலிமை பெரும் பொழுது ஜாதகருக்கு மக்கள் ஆதரவு என்பது சிறப்பாக அமைந்து , தேர்தலில் நிற்கும் பொழுது வெற்றியை வாரி வழங்கிவிடும் , அந்த வெற்றி நிலையானதாக இருக்க வேண்டும் எனில் மேற்கண்ட அமைப்பில் லக்கினம் ஏழாம் பாவகத்துடன் சம்பந்தம் பெற வேண்டும் அப்பொழுது தான் ஜாதகர் வெற்றி பெற்றதின் பலனை முழுவதும் அனுபவிக்க இயலும் .

இதில் ஒருவருக்கு கால புருஷ தத்துவ அமைப்பிற்கு முதல் வீடான மேஷ  ராசியே, தனது சுய லக்கினமாக அமைந்து களத்திர பாவகமான துலாம் ராசியுடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு சகல வழிகளில் இருந்தும் மிகுந்த யோக பலனை வாரி வழங்கும் , துலாம் சர காற்று ராசி என்பதால் ஜாதகருக்கு விரைந்து நல்ல பலன்களை வழங்கும் , மக்கள் ஆதரவு என்பது வாழ்நாள் முழுவதும் நிலையாக அமைந்து விடும் , மேலும் ஜாதகரின் இனிமையான பேச்சு திறன் அரசியலில் தனக்கு என ஒரு இடத்தை பெற்று தரும் அமைப்பில் இருக்கும் , மேஷம் லக்கினமாக வருவதாலும் இது சர நெருப்பு ராசியாக இருப்பதாலும் நிறைவான  ஆளுமை திறனையும் , ஆட்சி பணிகளில் சிறப்பாக செயலாற்றும் தன்மையையும் வாரி வழங்கும் , குறிப்பாக தனக்கென ஒரு அரசியல் பாதையை வகுத்துக்கொண்டு , அதில் மிகப்பெரிய வெற்றியை பெரும் யோகத்தை தரும் .

மேலும் ஜாதகர் சுய கட்டுப்பாடு , மக்களுக்கு நன்மை செய்யும் மன நிலை , தான் நினைக்கும் செயல்களை நிறைவாக செய்து முடிக்கும் ஆற்றல் , தனது அதிகாரத்தை முறையாக பயன்படுத்தும் தன்மை , தனது கடமையில் இருந்து சிறிதும் பிசகாத தன்மை , முற்ப்போக்கு சிந்தனை , அந்த சிந்தனையால் சமுதாயத்தில் நல்ல மாற்றங்களை ஏற்ப்படுத்தும் தன்மை , சோர்வடையா மக்கள் சேவை , தனது சிறப்பான நிர்வாக திறமையின் காரணமாக எவ்வித பிரச்சனைகளுக்கும் சரியான நேரத்தில் சிறப்பான தீர்வை காணும் தன்மை , மக்கள் பிரச்சனைகளை தனது பிரச்சனையாக பாவித்து தீர்வு சொல்லும் மனபாங்கு  , தனது முடிவில் உறுதியாக இருக்கும் தன்மை , தீர்கமான வாத திறமை , பேச்சு திறனால் தான் நினைக்கும் காரியங்களை சாதிக்கும் யோகம்  என  ஜாதகருக்கு எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றியை தரும் அமைப்பு  இது .

மேற்கண்ட ஜாதகர் இந்திய அரசியலில் மிக பெரிய மாற்றத்தை எதிர்வரும் காலத்தில்  நிச்சயம் செய்வார் என்பது மட்டும் உறுதி , இந்த மாற்றத்தை மக்கள் உணர அதிக காலங்கள்  இல்லை என்பது ஒரு சிறப்பு விஷயம், இறை அருள் அவருக்கு சகல நலன்களையும் வாரி வழங்கட்டும் .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696
  


செவ்வாய், 11 டிசம்பர், 2012

காற்று தத்துவ ராசிகளின் தன்மையும், சுய ஜாதகத்தில் வலிமை பெரும் பொழுது தரும் நன்மைகள் !



கால புருஷ தத்துவ அமைப்பிற்கு மிதுனம் உபய காற்று தத்துவ ராசியாகவும், துலாம் சர காற்று தத்துவ ராசியாகவும், கும்பம் ஸ்திர காற்று தத்துவ ராசியாகவும் இயற்கையால் வகைபடுத்த படுகிறது , ஒருவருக்கு சுய ஜாதக அமைப்பில் மேற்கண்ட காற்று  தத்துவ ராசிகள் நல்ல நிலையில் இருந்தால் ஜாதகர் பெரும் நன்மைகளை பற்றி இந்த பதிவில் சற்றே சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் .

பொதுவாக சுய ஜாதகத்தில் மேற்கண்ட ராசிகள் ஜாதகருக்கு நல்ல நிலையில் இருந்தால் , ஜாதகரின் அறிவாற்றல் மிகவும் சிறப்பாக அமைந்து விடும் , தனது அறிவாற்றல் துணை கொண்டு சாதிக்காத விஷயங்களே இல்லை எனலாம் , சிறுவயதில் கல்வியில் சிறந்து விளங்கும் தன்மையை இயற்கையாக தந்துவிடும் , மேலும் விளைவு அறிந்து செயல்படும் நுணுக்கமான அறிவை பெற்றிருப்பது இவர்களின் தனி தன்மை , மேலும் கணிதம் , மற்றும் அறிவியல் , விண்வெளி ஆராய்ச்சி போன்ற துறைகளில் இவர்களின் பங்களிப்பை தவிர்க்க இயலாது , மேலும் மருத்துவ துறையில் தலை சிறந்த மருத்துவர்களின் ஜாதக அமைப்பில் இந்த காற்று தத்துவ ராசிகள் மிகவும் சிறப்பாக அமைந்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை .

தனது வாரிசுகள் எந்த துறையில் சிறந்து விளங்குவார்கள் என்பதை பற்றி தெளிவாக பெற்றோர்கள் தெரிந்து கொள்ள உதவும் ராசிகள் இந்த காற்று தத்துவ ராசிகள் என்றால் அது மிகையாகாது , இதன் மூலம் ஒவ்வொருவரும் தன்னை பற்றிய சுய மதிப்பீடு செய்ய இந்த காற்று தத்துவ ராசிகள் நிச்சயம் உதவி புரியும் .

மிதுனம் உபய காற்று ராசி ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் ஜாதகருக்கு  தரும் நன்மைகள் :

தனது அறிவாற்றல் மூலம் மக்களுக்கும் தன்னை சார்ந்தவர்களுக்கும் , மிகுந்த நன்மைகளை செய்யும் அமைப்பை தரும் , இருப்பினும் ஜாதகருக்கு  சுயநலம் அதிகமாக மேலோங்கி இருக்கும் மற்றவருக்கு உதவினாலும்  அதில் தனக்கு ஏதாவது நன்மை இருக்குமாறு பார்த்துகொள்ளும்  தன்மை பெற்றவர்கள் , அதிக சுதந்திர மன நிலை கொண்டவர்கள் , கணித துறையில் சிறந்து விளங்கும் தன்மையை தரும் , வாழ்க்கையில் முன்னேற்றம்  என்பது சிறிது தாமதமாகவே கிடைக்கும் இருப்பினும் நிலைத்து  நிற்கும் , சமுதயாத்தில் சில மாற்றங்களை செய்யும்  தன்மையை ஜாதகருக்கு உண்டு .

 இவர்களின் அறிவாற்றல் நிச்சயம் மற்றவருக்கு  நன்மையை மட்டுமே செய்யும் என்பது தனி சிறப்பாக கருதலாம் , தான் நினைப்பதை நடத்தி முடிக்கும் தன்மை பெற்றவர்கள் , இளம் வயதில் கல்வியில் சிறந்து விளங்கும் தன்மை உண்டாகும் , கலைகளில் சிறந்து விளங்கும் தன்மை உண்டாகும் , குறிப்பாக , ஓவியம் வரைதல் , இசை கோர்த்தல் , இசை கருவிகளை சிறப்பாக இயக்கும் ஆற்றல், மனதில் உள்ளதை கலை நயமாக மக்களுக்கு  விரும்பும் விதம் விருந்தளிக்கும் படைப்பற்றல் ஜாதகருக்கு சிறப்பாக  அமைந்து விடும், மிதுனம் ஒருவர் ஜாதகத்தில் நல்ல நிலையில் அமர்வது  ஜாதகருக்கு தனது அறிவாற்றல் மூலம் எவ்வித பிரச்சனைகள்  வந்தாலும் எளிதாக சாமாளிக்கும் ஆற்றலை வழங்கி விடும் .

துலாம் சர காற்று ராசி ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் ஜாதகருக்கு  தரும்  நன்மைகள் :

ஒருவரின் ஜாதகத்தில் நல்ல நிலையில் அமர வேண்டிய ராசி இதுவே , குறிப்பாக  சூரியன் , சந்திரன் , சனி , புதன் இந்த ராசியில் நல்ல நிலையில் அமரும் பொழுது ஜாதகரின் புகழ்  எட்டு திக்கும் எங்கும் உலகம் முழுவது  பரவும் , மக்களுக்கு பயன்படும் பல புதிய கண்டு பிடிப்புகளுக்கு சொந்தகாரர்கள்  இவர்களே , சிறந்த வியாபார நுணுக்கங்களையும் , நிர்வாக  திறமையையும் வாரி வழங்கி விடும் , புதுமை விரும்பிகள் வாழ்க்கையில் புதிய சூழ்நிலை மற்றும்  பொழுது போக்கில் அதிக நாட்டம் கொண்டவர்கள் , கலை துறையில் நீங்க இடம் பிடிக்கும் அளவிற்கு  புதிய சிந்தனைகளை சமுதாயத்திற்கு கொடுக்கும் படைப்பாற்றல்  பெற்றவர்கள் , இவர்களின் உதவி இல்லாமல் கலை துறையில்  எவ்வித புதிய படைப்புகளும் வர வாய்ப்பில்லை .

 மற்றவர்கள் வியக்கும் வண்ணம் ஒன்றும் இல்ல விஷயத்தை  வைத்துக்கொண்டே அதில் பல புதுமைகளை கொடுக்கும் சிந்தனை மற்றும்  அறிவாற்றல் இவர்களுக்கு இறைவன் கொடுத்த வர பிரசாதமே அன்றி வேறேது ? இந்த துலாம்  ராசி நல்ல நிலையில் இருப்பவர்களின் வசீகர சக்தி என்பது சற்று அதிகமே , இவர்களை விரும்பாத பிடிக்காத நபர்கள் மிக குறைவே , தன்னம்பிக்கை  , சுய கட்டுபாடு , எல்லோருக்கும் பிரதி பலன் பாராமல் உதவும் தன்மை , பொது மக்கள் சேவையில் சிறந்து விளங்கும் கடமை தவறாத  அரசு உழியர்கள் , மருத்துவ சேவையில் புதுமை மற்றும் உயிர்க்காக்கும் சிறப்பு சிகிச்சையில் பல விஷயங்களை அறிமுகம்  செய்யும் சிறந்த மருத்துவரகள் என இவர்களின் பட்டியல் நீளம் மிக மிக அதிகம் ஒருவருடைய சுய ஜாதகத்தில் இந்த துலாம் ராசி வலிமையாக இருந்தால்  அந்த ஜாதகர் வாழ்க்கையில் மிக விரைவாக முன்னேற்றம் பெரும் தன்மையை நிச்சயம் தரும் .

கும்பம் ஸ்திர காற்று ராசி ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் ஜாதகருக்கு  தரும் நன்மைகள் :

அதிர்ஷ்டம் மற்றும் அளவில்லா அறிவாற்றல் இரண்டும் ஒருங்கே அமைந்தவர்கள்  , குறிப்பாக தொழில் நுட்ப அறிவு மற்றவர்களை காட்டிலும் இந்த ஜாதக அமைப்பை பெற்றவர்களுக்கு ரொம்ப அதிகம் , புதிய வண்டி வாகனம் , புதிய தொழில் நுட்பம் வாய்ந்த கருவிகள் , மக்களுக்கு பயன்படும்  வீட்டு உபகரண பொருட்கள் தாயாரிப்பு , மோட்டார் எஞ்சின் தயாரிப்பில் புதுமை செய்யும் தன்மை , பழமையான பொருட்களை  தனது அறிவாற்றல் மூலம் சிறந்த பொக்கிஷமாக மாறும் திறன்  , கட்டிட கலை , சிற்ப கலை , கற் சிலை வடிக்கும் சிற்ப கலை வல்லுனர்கள் , மக்களை சந்தோஷ படுத்தும் இசை , திரைப்படம் , நடாகம் , போன்ற துறைகளிலும் சிறப்பான முன்னேற்றத்தை தரும் .

 ஜாதகரின்   புத்திசாலித்தனம் பலரது வாழ்க்கையில் நிலையான நல்ல மாற்றங்களை தரும் , இதனால் ஜாதகருக்கும் ஜாதகரை சார்ந்தவருக்கும் பல முன்னேற்றங்கள் உண்டாகும் , புதை பொருள் ஆராய்ச்சி , பழமையான புராதன பொருட்கள் மீதான ஆய்வுகள் , சரித்திர சம்பந்தம் பட்ட ஆய்வுகளில் உண்மை விஷயங்களை உலகிற்கு எடுத்து சொல்லும் ஆற்றல் , உயிரியல் , மருத்துவ ஆய்வு , வேதியல் , புவியல் ஆய்வுகள் போன்ற விஷயங்களில்  சிறந்து விளங்கும் தன்மை என ஜாதகருக்கு சிறப்பான ஆய்வுகளில் சிறந்து விளங்கும் அறிவு ஆற்றலை இந்த கும்ப ராசி நல்ல நிலையில் இருந்தால் ஜாதகருக்கு எவ்வித தடையும் இல்லாமல் வாரி வழங்கும் .

ஒருவருடைய ஜாதகத்தில் காற்று தத்துவ ராசிகள் சிறப்பாக அமைய பெற்றால் அறிவாளியாகவும் , காற்று தத்துவ ராசிகள் கடுமையாக பாதிக்க பட்டால் அறிவிலியாகவும் ஜாதகர் காணப்படுவார் .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443306969

காலதாமத திருமணம் ஜாதகத்தில் உள்ள சர்ப்ப தோஷம்,மற்றும் செவ்வாய் தோஷத்திற்கு பரிகாரம் ஆகுமா ?



அய்யா வணக்கம் 

எனது ஜாதகத்தை பார்க்கும் ஜோதிடர்கள் அனைவரும் தங்களது ஜாதகத்தில் நாக தோஷம் , சர்ப்ப தோஷம் , ராகு கேது தோஷமும்,  ( லக்கினம் மற்றும் களத்திரம் ஸ்தானங்களில் ) , செவ்வாய் தோஷமும் ( 8 ல் செவ்வாய் அமர்வு ) இருப்பதால் தங்களுக்கு திருமணம் 32 வயதுக்கு பிறகு தான் நடக்கும் , எனவே இப்பொழுது திருமணத்தை பற்றி நினைத்து கூட பார்க்க வேண்டாம் என்று சொல்கின்றனர், இது வரை வந்த நல்ல வரன்களை  எல்லாம் ( இரு வீட்டாருக்கும் பிடித்திருந்தும் கூட ) ஜோதிடர்கள் சொன்ன காரணத்திற்க்காக தட்டி கழித்து கொண்டு இருக்கின்றனர் எனது பெற்றோர்கள் , எனக்கும் வயது 24 ஆகி விட்டது ,உண்மையில் எனக்கு இளம் வயதில் திருமணம் ஆகாத ? எனது ஜாதக நிலையில் தாமத திருமணம் தான் நடக்குமா ? தயவு செய்து சரியான வழிகாட்டுங்கள் , வேலை பார்க்கும் இடத்தில் தனியாக இருக்க மிகவும் சிரமமாக இருக்கிறது குறிப்பாக வீட்டு சாப்பாடு சாப்பிட்டு வெகு நாட்கள் ஆகிவிட்டது , நீங்கள் சொல்லும் பதிலில்தான் எனது திருமண வாழ்க்கை அமைவதாக இருக்கிறது .


அன்பு நண்பருக்கு !

வணக்கம் , தங்களின் ஜாதக அமைப்பில் லக்கினம் கடகமாகவும் , கடகத்தில் அமர்ந்த கேது, மகரத்தில் அமர்ந்த ராகு என தான் அமர்ந்த பாவக முறையே லக்கினம் மற்றும் களத்திர பாவகங்களை 100 சதவிகிதம் நன்மையான பலன்களை தரும் அமைப்பில் சிறப்பாக அமர்ந்து இருக்கின்றனர் , மேலும் கும்பத்தில் ( 7ம் பாவகத்தில் ) அமர்ந்த செவ்வாய் லக்கினம் மற்றும் ஐந்தாம் பாவகம், ஜீவன ஸ்தானம் என்ற அமைப்பிலும் நல்ல பலன்களையே தந்துகொண்டு இருக்கின்றார் . 

எனவே தாங்கள் இளம் வயதில் திருமணம் செய்து கொள்வதில் எவ்வித தடையும் இல்லை , அப்படி இளம் வயதில் திருமணம் செய்து கொள்வதால் தங்களுக்கு  எவ்வித துன்பமும் வர வாய்ப்பு சிறிதும் இல்லை என்பதே உண்மை , எனவே உடனடியாக தங்கள் திருமணம் செய்துகொள்வதற்கு உண்டான வேலைகளை கவனியுங்கள்  , பெண்  ஜாதக ரீதியாக ஏதாவது சந்தேகம் மற்றும் குழப்பம் இருந்தால் மட்டுமே எம்மை தொடர்பு கொள்ளுங்கள் , சரியான ஜோதிட விளக்கங்களை நாங்கள் தருகிறோம் . 

மேலும் நாக தோஷம் , சர்ப்ப தோஷம் , செவ்வாய் தோஷம் என்பது எல்லாம் ஒரு மாய தோற்றம் , ஜோதிடத்தை பற்றிய  போதிய அறிவு அற்றவர்களும் , அரை குறை ஜோதிடர்களும் பரிகாரம் என்ற பெயரில் பொருள் ஈட்ட  சொல்லும் ஒரு வார்த்தையே அன்றி உண்மை இல்லை என்பதை  தங்களுக்கு உணர்த்த நான் கடமை பட்டுள்ளேன் .

பொதுவாக பல போலி ஜோதிடர்கள் நவ கிரக தத்துவங்களை பற்றிய போதிய அறிவு இல்லாத  காரணத்தாலும் , வாய் வலி செய்திகளாலும் , தனது கற்பனையில்  உதிக்கும் எண்ணங்களையும் ஜோதிடம் பார்க்க வரும் அன்பர்கள் மீது  திணிப்பது கலி காலத்தின் கொடுமையே , இதனால் சரியான வயதில்  திருமணம் மற்றும் சுப காரியங்கள் நடை பெறாமல் , இளம் பெண்களும், ஆண்களும் பலவாறு சிரம படுவதை பார்த்தவன் என்ற முறையில்  சொல்கிறேன் .

திருமணம் என்பது என்ன ? என்பதை பற்றிய புரிதல் மக்களுக்கு இந்த இடத்தில்  அதிகம் தேவை படுகிறது , சரியான வயதில் திருமணம் செய்யும் பொழுது  ( பருவத்தே பயிர் செய்தால் எப்படி பயிர் செழித்து வளர்கிறதோ அதுபோல் ) தம்பதியின் ஒற்றுமை சிறப்பாக விளங்கும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும்  தன்மையை கொடுக்கும் , குறிப்பாக நல்ல சந்ததிகள் அமையும் , அவர்களை சிறப்பாக வளர்க்கும் ஆற்றலும் , வயதும் நம்மிடம் இருக்கும் , அவர்களை நமது கட்டுப்பாட்டில் சிறப்பாக வளர்க்க முடியும் , நமது சொல்லிற்கு கட்டுப்பட்டு நடக்கும் மன நிலை அவர்களுக்கு இருக்கும் . 

மேலும் நமது உடல் மனம் இரண்டும் சிறப்பாக செயல் புரியும் இது இயற்க்கை நமக்கு கொடுத்த வரம் , இங்கே இது முரண் படும் பொழுது தான் வாழ்க்கையில்  அதிக சிக்கல்களை சந்திக்க வேண்டி வரும் , காலம் கடந்து திருமணம்  செய்யும் பொழுது வாழ்க்கையில் வழி தவறி செல்ல நிறைய சந்தர்ப்பங்களை நவ கிரகங்கள் தர வாய்ப்பு உண்டு , இதனால் அதிக இன்னல்களை சந்திப்பது,  திருமணம் ஆகாமல் தவிக்கும் ஆண்களும் பெண்களுமே , மேலும் தாமத திருமணத்தால் குழந்தை பிறப்பு முதல் அனைத்தும்  தாமத பட வாய்ப்பு உண்டு , அதிகம் அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தை பிறப்பு ஏற்ப்படுவதற்க்கு இதுவும் ஒரு காரணம் .

மேலும் இயற்க்கைக்கு மாறாக அறுவை சிகிச்சை மூலம் பிறக்கும் குழந்தைகளின் நடவடிக்கை மற்றும் செயல்பாடுகள் , அறிவாற்றல் ஆகியவை கடுமையாக பாதிக்க படுகிறது என்பது ஆராய்ச்சி முடிவு , நம்மால் ஒரு சிறந்த  சந்ததியை தர முடியவில்லை எனில் இந்த வாழ்க்கை வாழ்ந்து என  பயன் , இதற்க்கு எல்லாம் அடிப்படை  காரணம் என்ன ? சரியான வயதில் திருமணம் ஆகததே காரணம் .

பொதுவாக 100 ஜாதகம் வரும் பொழுது அதில் 8 ஜாதகம் மட்டுமே திருமண தாமதத்தை  தரும் அமைப்பில் இருக்கும் , மேலும் இரண்டு ஜாதக அமைப்பிற்கு திருமணத்திற்கு உண்டான வாய்ப்பே இல்லாமல் இருக்கும் , ஆனால்  தற்பொழுது நடப்பது என்ன ? ஜோதிடர்கள் பலர் வரும் ஜாதகம் அனைத்திலும் ஏதாவது ஒரு தோஷத்தை சொல்லி ( சனி ஏழில் , ராகு கேது தோஷம் , செவ்வாய் தோஷம் ) இயற்கையாக அமையவிருக்கும் திருமணத்தையும் தடுத்து விடுகின்றனர் , இதையே வேதவாக்காக எடுத்து கொண்டு பலர் தமக்கு சிறப்பாக அமைய இருக்கும் நல்ல வாழ்க்கையை கெடுத்து கொள்கின்றனர் .

ஒருவருக்கு களத்திர பாவகம் மற்றும் குடும்ப பாவக அமைப்பில் இருந்து இன்னல்களை அனுபவிக்க வேண்டும் என்று விதி இருந்தால் , அவர் எவ்வளவு காலம்  கடந்து திருமணம் செய்தாலும் அதை அனுபவித்தே தீர வேண்டும்  இதை தடுக்க எந்த ஜோதிடனாலும் முடியாது , ஏன் கடவுளாலும் முடியாது , அப்படி நடக்கும் தீமையான பலன்கள் இளம் வயதில் நடந்தால் ஜாதகர் அதை சமாளிக்கும் ஆற்றலாவது அதிகம் இருக்கும் , அல்லது ஏற்றுக்கொண்டு  வாழும் திறனாவது இருக்கும் நல்ல அனுபவம் கிடைக்கும் , காலம் கடந்து திருமணம் செய்து இந்த நிலை ஏற்ப்பட்டால் வயதும் அதை ஏற்று கொல்லாகொள்ளது மனதும் அதை ஏற்று கொள்ளது எனும் பொழுது அங்கு பிரிவே பிரதானமாக இருக்கும் , குழந்தைகள் இருந்தாலும் அதை பற்றிய கவலை இருக்காது தனது சுதந்திரம் மற்றும் பெரிதாக நினைக்க துண்டும்  .

32 வயது எனும் பொழுது வாழ்க்கையில் பாதி நாள் சென்றுவிடும் இதன் பிறகு திருமணம் செய்து வாழ்க்கையை நல்ல முறையில் அமைத்து கொள்வது என்பது  மிக கடினம் , எனவே தங்களது வாழ்க்கையை சரியான வயதில் தாங்களே தேர்ந்தெடுங்கள் .

பொதுவாக ஆண்களுக்கு 24 முதல் 27 வயதிற்கு உட்ப்பட்ட காலகட்டத்தில் திருமணம் செய்வது சிறப்பு , இதற்க்கு மேல் சென்றால் திருமண வாழ்க்கை அமைய அதிக சிக்கலை தரும் .

பெண்களுக்கு 21 வயது முதல் 24 வயதிற்குள் திருமணம் செய்வது சிறப்பு , இதற்க்கு மேல் சென்றால் திருமண வாழ்க்கை அமைய அதிக சிக்கலை தரும் .

ஆணுக்கு 29 வயதிற்கு மேலும் , பெண்ணிற்கு 27 வயதிற்கு மேலும் திருமணம் நடக்க வில்லை எனில் , சுய ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம் அல்லது களத்திர ஸ்தானம் கடுமையாக பாதிக்க பட்டு இருக்கும் , 

ஆணுக்கு 35 வயதிற்கு மேலும் , பெண்ணிற்கு 33 வயதிற்கு மேலும் திருமணம் நடக்க வில்லை எனில் , அவர்களது சுய ஜாதகத்தில் குடும்பம் , மற்றும் களத்திரம் எனும் இரண்டு பாவகங்களும் கடுமையாக பாதிக்க பட்டு இருக்கும் .

 ஜோதிடம் தங்களுடைய வாழ்க்கையில் வரும் இன்னல்களை தீர்பதற்கு வழிகாட்ட வேண்டுமே  அன்றி , இன்னல்களை தருவதாக இருக்க கூடாது .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443306969


பாதகஸ்தானம் தரும் பாதிப்பிலிருந்து தப்பிக்க என்ன செய்யலாம்?.




கேள்வி : 

அண்ணா,
          1.பாதக ஸ்தானத்துடன் பூர்வபுண்ணியம் எனும் 5ம் பாவம் தொடர்பு பெறுகிறது என்பது எவ்வளவு பெரிய கொடுமை. நாம் எப்படி வருந்தினாலும் அது மாறப்போவது இல்லை, இந்தப்பிறவியில் நமக்கு பரதேஷ ஜீவனம் தான் என்பது ஏற்கனவே இறை நிலையால் தீர்மானிக்கப்பட்டுவிட்டது.இது நமது முன் ஜென்மக்கர்மாவினால் இந்தப் பிறவியில் நமக்குக் கிடைத்திருக்கிறது.அதை மாற்றும் வித்தை,படைத்தவன் ஒருவனைத் தவிர யாருக்குமே தெரியாது.ஆனாலும் பாதகஸ்தானம் தரும் பாதிப்பிலிருந்து தப்பிக்க என்ன செய்யலாம்?.

பதில் : 

அன்பு தம்பிக்கு பாதக ஸ்தானம் தரும் பலனில் இருந்து தப்பிக்க நாம் என்ன செய்யலாம்?  நல்ல கேள்வி , தம்பி ஒருவர் பிறக்கும் பொழுது சுய ஜாதகத்தில் 12 பாவகங்களில் எந்த ஒரு பாவகமும் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து அதிக இன்னல்களை தரும் , குறிப்பாக லக்கினம் என்றால் ஜாதகரின் எண்ணம் செயல் ஆகிய அமைப்பிலும் , இரண்டாம் பாவகம் எனில் வருமானம் ,குடும்பம்,வாக்கு என்ற அமைப்பிலும், மூன்றாம் பாவகம் எனில் சகோதரம்,எடுக்கும் முயற்ச்சி,தைரியம் என்ற அமைப்பிலும் , நான்காம் பாவகம் எனில் தனது தாய் ,சொத்து வீடு ,வண்டி வாகனம்,சுக வாழ்க்கை என்ற அமைப்பிலும் , ஐந்தாம் பாவகம் எனில் குல தேவதை,குழந்தைகள்,பூர்வ புண்ணிய அமைப்பிலும்.

 ஆறாம் பாவகம் எனில் எதிரிகள்,உடல் தொந்தரவு,கடன் என்ற அமைப்பிலும்,ஏழாம் பாவகம் எனில் வாழ்க்கை துணை , கூட்டாளி , வெளிநாடு , நண்பர்கள் வழியிலும், எட்டாம் பாவகம் எனில் திடீர் இழப்பு , விபத்து , அறுவை சிகிச்சை வாழ்க்கை துணை செய்யும் வீண் செலவுகள் என்ற அமைப்பிலும், ஒன்பதாம் பாவக அமைப்பில் தனது நர்ப்பெயருக்கு களங்கம் , செய்த நல்வினை பதிவுகளின் பலனை அனுபவிக்க முடியாத நிலையும், பத்தாம் பாவக அமைப்பில் இருந்து கௌரவம் திடீர் என இழக்கும் சூழ்நிலை , தனது தகப்பன் வழியிலும் , செய்யும் தொழில் அமைப்பில் இருந்தும் , பதினொன்றாம் பாவக அமைப்பில் இருந்து நீண்ட அதிர்ஷ்ட வாழ்க்கைக்கு தடைகளையும் , மூத்த சகோதர அமைப்பில் இருந்து அதிக இன்னல்களையும் , தன்னம்பிக்கை குறைவு,சூழ்நிலைக்கு ஏற்றார் போல் மனதை மாற்றி கொள்ளும் மன நிலை என்ற அமைப்பில் இருந்தும், பனிரெண்டாம் பாவக அமைப்பில் மன நிம்மதி இழப்பு, வீண் விரையம் , ஜாதகர் தனது கட்டுபாட்டை இழப்பது, தனக்கு வரும் இன்னல்களுக்கு மற்றவர்களே காரணம் என்று நினைத்து தன்னையும் கெடுத்து கொண்டு , மற்றவரையும் கெடுத்து கொள்ளும் அமைப்பு என்று பாதக ஸ்தான அமைப்பில் இருந்து 200 சதவிகித இன்னல்களை சந்திக்க வேண்டி வரும் .

மேற்கண்ட பலன்கள் ஒரு ஜாதகருக்கு 12 பாவகங்கள் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவதாலேயே நடந்து விடாது , தற்பொழுது நடக்கும் திசை மற்றும் புத்தி பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று, பாவகத்தின் தொடர்பு மற்றும் அந்த பாவகத்தின் பலனை நடத்தினால் மட்டுமே பலன் நடை முறைக்கு வரும் . இல்லை எனில் ஜாதகத்தில் எந்த ஒரு பாவகமும் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று இருந்தாலும் தீமையை தராது , ஜாதகர் இன்னல்களை அனுபவிக்க வேண்டி வர வாய்ப்பு என்பது சிறிது ஏற்ப்படாது .

கேள்வி :

வாழ்நாள் முழுவதும் தனது உறவுகள் மூலமாகவும்(சரம்),தனது அறிவும்,செயலும்(ஸ்திரம்),தனது மனைவி மற்றும் தனது கூட்டாளிகளுமே(உபயம்) நமக்கு ஆப்பு அடிப்பார்கள் எனில் கற்பனை செய்து பார்க்கவே கடினமாக இருக்கிறது(பாட வேண்டியது தான் யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம் என்று).உதவியில்லையென்றாலும் உபத்திரவம் இருக்கக்கூடாது இல்லையா?. இதற்கு ஜோதீட தீபம் தரும் ஆலோசனை என்ன?.
           
பதில் : 

மிக சுலபமான வழி ஒன்று இருக்கிறது அதாவது அந்த பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை மனம் உவந்து ஏற்றுக்கொண்டு கர்ம வினை பதிவினை கழித்து கொள்ளும் மன பக்குவத்தை வளர்த்து கொள்வதால் , சம்பந்த பட்ட பாவக அமைப்பில் இருந்து சில காலங்கள் இன்னல்கள் வரும் அதன் பிறகு அந்த பாவக அமைப்பில் இருந்தே மிகுந்த யோகம் ஏற்ப்படும் என்பது இறை நிலை தரும் ஒரு சிறப்பான வழி தம்பி .

கேள்வி :

2.பாத‌க‌ஸ்தான‌த் தொட‌ர்பு பெற்ற‌ 5ம் வீட்டில் ந‌ன்மை செய்யும் வ‌கையில் ராகு,கேது அமைந்துவிட்டால் ப‌ல‌ன் எப்ப‌டியிருக்கும்?.எந்த பாவகமாயினும் ராகு,கேது நன்மை மட்டும்தான் செய்யுமா?. 
            
பதில் :

தம்பி 5 ம் பாவகத்தில் ராகு அல்லது கேது அமர்ந்து நன்மையை செய்யும் என்றால் , அந்த ஐந்தாம்  பாவகம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற வாய்ப்பே இல்லை , ஒரு வேலை இங்கு அமரும் ராகு கேது ஐந்தாம் பாவகத்தை , கடுமையாக பாதிக்கும் எனில் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற வாய்ப்பு உண்டு என்பதே ஜாதக சூட்சமம் .

கேள்வி :

3.லக்கின‌த்தின் ஆர‌ம்ப‌ப்பாகையை ஜோதிட‌தீப‌ம் எவ்வாறு க‌ணிக்கிற‌து.சூரிய‌ உத‌ய‌த்திலிருந்தா?.இல்லை ஜ‌ன‌ன‌ நேர‌த்தின் நட்ச‌த்திர‌ பாத‌த்தை அனுச‌ரித்தா?.

பதில் : 

ஜனன நேரத்தில் நட்சத்திர பாதத்தில் உதிக்கும் பாகையின் அமைப்பை வைத்தே லக்கினம் , மற்றும் மற்ற  பாவகங்களின் ஆரம்ப பாகையை நிர்ணயம் செய்கிறோம், இதுவே ஒரு ஜாதகத்தில் ஜாதக ரீதியான பலன்களை நிர்ணயம் செய்ய உதவும் , பொதுவாக லக்கினம் எந்த ராசி என்று கணிதம்  செய்யும் பொழுதும் , சந்திர ராசியை வைத்து நிர்ணயம் செய்யும் பொழுதும் , பொது பலனை குத்து மதிப்பாக சொல்லவே உதவும் , நம்மை நம்பி வருபவரின் வாழ்க்கையில்  சரியான வழியை காட்ட உதவாது தம்பி .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443306969


செவ்வாய், 4 டிசம்பர், 2012

பாதக ஸ்தானத்துடன் பூர்வ புண்ணியம் சம்பந்தம் பெரும்பொழுது ஜாதகர் பெரும் நன்மை தீமை பலன்கள் !




ஒருவருடைய சுய ஜாதகத்தில் நல்ல நிலையில் இருக்க வேண்டிய பாவகங்களில் ஒன்றான பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது ஜாதகர் அதிக அளவில் பாதிக்க படுவார் என்பதில் சந்தேகம் இல்லை இருப்பினும் , இதில் சர இலக்கின அமைப்பை சார்ந்தவருக்கும் , ஸ்திர இலக்கின அமைப்பை சார்ந்தவருக்கும் , உபய இலக்கின அமைப்பை சார்ந்தவருக்கும் பலன்கள் நடை முறை அமைப்பில் வேறுபடுவது இயற்கையே .

ஒரு சர இலக்கின அமைப்பை சார்ந்தவருக்கு லக்கினத்திற்கு ஐந்தாம் பாவகம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது ஜாதகர் பாதக ஸ்தான அமைப்பில் இருந்து மற்றவர்களால்  அனுபவிக்கும் இன்னல்களின் தன்மை, அதாவது உறவுகள் , நண்பர்கள் , அண்டை அயலார், வாழ்க்கை துணை , தனது குழந்தைகள் மூலமாக வரும் தொந்தரவு அதிகமாக இருக்கும் , மேலும் ஜாதகர் யாருக்காவது உதவி செய்ய சென்றால் அதுவே ஜாதகருக்கு எதிராக திரும்பி தாங்க முடியாத அளவிற்கு இன்னல்களை தரும், ஆக சர இலக்கின அமைப்பை சார்ந்தவருக்கு பூர்வ புண்ணியம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும்பொழுது மற்றவர்களால் ஜாதகருக்கு அதிக இன்னல்கள் ஏற்ப்படும் .

ஒரு ஸ்திர இலக்கின அமைப்பை சார்ந்தவருக்கு லக்கினத்திற்கு ஐந்தாம் பாவகம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது ஜாதகர் தான் அவசர பட்டு எடுக்கும் திடீர் முடிவுகளால் , தனது வாழ்க்கையை தானே கெடுத்து கொள்ளும் அமைப்பை தரும் , அதாவது யானை தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டு கொள்வதற்கு இணையாக எடுத்துகொள்ளலாம் , உறவுகள் நண்பர்கள்  தனக்கு நன்மை செய்கிறார்களா ? தீமை செய்கிறார்களா? என்று தெரிந்துகொள்ளாமல் ஜாதகர் அவசரபட்டு எடுக்கும் திடீர் முடிவுகளால் ஜாதகரின் வாழ்க்கையில் சகல நலன்களையும் இழக்கும் தன்மை ஏற்ப்படும் .

ஒரு உபய இலக்கின அமைப்பை சார்ந்தவருக்கு லக்கினத்திற்கு ஐந்தாம் பாவகம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது ஜாதகர் தனது செய்கை மற்றும் நடவடிக்கைகளாலும் பாதிக்க படுவார் , தனது உறவுகள் நண்பர்கள் பொது மக்களாலும் பாதிக்கப்படும் சூழ்நிலையை தரும் , மேலும் பூர்வ புண்ணிய அமைப்பில் இருந்து ஜாதாருக்கு நீடித்த தீமையான பலன்கள் தொடர்ந்து நடை பெரும் இதில் ஜாதகர் எதையும் தவிர்க்க இயலாது , பூர்வ புண்ணியம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் அமைப்பில் இருந்து  அதிக  இன்னல்களை எதிர்கொள்ளும் அன்பர்கள் உபய இலக்கின அமைப்பை சார்ந்தவர்களே .

பூர்வ புண்ணியம் பாதக ஸ்தானதுடன் சம்பந்தம் பெறுவதால் சர இலக்கின அமைப்பை சார்ந்தவர்கள் மற்றவர்களாலும் , ஸ்திர இலக்கின அமைப்பை சார்ந்தவர்கள் தனது செய்கையினாலும் , உபய இலக்கின அமைப்பை சார்ந்தவர்கள்  தன்னாலும் மற்றவர்களாலும் பாதக ஸ்தான பலன்களை அனுபவிக்க  வேண்டி வரும் , இது பாதக ஸ்தான அமைப்பில் இருந்து வரும் கெடுதல்கள் .

இந்த பாதக ஸ்தான அமைப்பில் இருந்து ஜாதகர் நன்மை பெரும் அமைப்பும் உண்டு  அதாவது ஜாதகரின் ரத்த உறவுகளான பாட்டனார் , தகப்பனார் சமுதாயத்தில் பெரிய அளவில் தனது அறிவாற்றல் கொண்டு நல்ல நிலையை பெற முடியாத அமைப்பை பெரும்பொழுது , ஜாதகர் தனது அறிவாற்றல் மூலம் சமுதாயத்தில் சிறப்பான இடத்தை பெரும் யோகம் உண்டாகும் , ஒரு வகையில் பூர்வ புண்ணியம் என்பது ஜாதகரின் தகப்பனார் வழியில் வரும் புத்தி கூர்மை மற்றும் அறிவாற்றலை  குறிக்கும் , எனவே ஒரு ஜாதகருக்கு பூர்வ புண்ணியம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுகிறது எனும் பொழுது ஜாதகரின் தகப்பனார் புத்திசாலித்தனம் அற்றவராக கானப்படுவாறே ஆயின் , ஜாதகருக்கு அதி புத்திசாலிதனத்தை வாரி வழங்கி விடும் , இதனால் தனது தகப்பனார் மற்றும் அவரது  முன்னோர்கள் செய்யாத சாதனைகளை ஜாதகர் தனது அறிவாற்றல் மற்றும் சமயோசித புத்திசாலிதனத்தால் செய்து வாழ்க்கையில்  சிறப்பான முன்னேற்றத்தையும் , பொருளாதார தன்னிறைவையும் பெரும் யோகம் உண்டாகும் .

இந்த இடத்தில் ஜாதகருக்கு பூர்வ புண்ணியம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது , ஜாதகரை மட்டும்  மிகப்பெரிய இடத்திற்கு எடுத்து செல்லும் அவரது அறிவு  வழியில்,  ஆனால் ஜாதகரை சார்ந்தவர்கள் அடையும் இன்னல்களுக்கு அளவிருக்காது , ஜாதகரை நம்பியவர்களின் கதி அதோ கதிதான் . ஜாதகர் பாதக ஸ்தான வழியில் இருந்து பெற வேண்டிய துன்பங்களை , ஜாதகரை சார்ந்தவர்கள் அனுபவிக்க வேண்டி வரும் அதாவது ஜாதகரின்  நண்பர்கள் , உறவுகள் , வாழ்க்கை துணை , ஜாதகரின் வாரிசுகள் என  அனைவரையும் பாதிக்கும் .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696