ஜாதக பொது பலன்கள்
இன்றைய பதிவில் நமது வாசகரின் சுய ஜாதக ரீதியாக 12 பாவகங்களின் வலிமையை பற்றியும், தற்பொழுது நடைபெறும் திசை மற்றும் புத்தி ஏற்று நடத்தும் பாவக வழி பலன்களை பற்றியும், அந்த பாவகங்களுக்கு கேட்சார கிரகங்கள் தரும், யோக அவயோக பலன்களை பற்றியும் இந்த பதிவில், நாம் மிக தெளிவாக இந்த பதிவில் காண்போம் அன்பர்களே !
நமது வாசகரின் ஜாதக நிலை :
ஜாதகரின் லக்கினம் : தனுசு
ராசி : கன்னி
நட்சத்திரம் : அஸ்தம் 3ம் பாதம்
( தனுசு ராசியில் 254:28:19 பாகையில் ஆரம்பித்து மகர ராசியில் 284:37:29 பாகையில் முடிவடைகிறது )
லக்கினம் ஆரம்பிக்கு பாகையையும், முடிவடையும் பாகையையும் இங்கு ஏன் ஜோதிடதீபம் குறிப்பிடுகிறது என்றால், நவ கிரகங்கள் இவரது ஜாதகத்தில் எந்த பாவகத்தில் அமர்ந்து இருக்கின்றனர் என்ற தெளிவு பெறவே, நவ கிரகங்கள் எந்த பாவகத்தில் அமர்ந்து இருக்கின்றனர் என்ற விஷயம் தெரிந்தால் மட்டுமே ஜாதகருக்கு 12 பாவகங்களின் வலிமை நிலையை தெளிவாக தெரிந்துகொள்ள இயலும், இல்லை எனில் குத்து மதிப்பாக ராசி கட்டத்தை பார்த்து நவகிரகங்கள் இந்த பாவகத்தில் தான் உள்ளது என்று தவறாக நிர்ணயம் செய்து, ஜாதகருக்கு முரண்பட்ட பலன்களை தெரிவிக்க வேண்டி வரும், உதாரணமாக இவரது ஜாதகத்தில் ராகு கேது எனும் சாய கிரகங்கள் மேலோட்டமாக காணும் பொழுது லக்கினம் மற்றும் 7ம் பாவகத்தில் இருப்பதை போல் தோன்றும், இதை பார்க்கும் பல ஜோதிடர்கள் உடனடியாக ஜாதகருக்கு கால சர்ப்ப தோஷம் எனவும், ( ராகு கேது கிரகங்களுக்குள் அனைத்து கிரகமும் அடக்கம் என்பதால்), ராகு கேது ஜாதகம் எனவும் முடிவு செய்து விடுவார்கள்.
ஆனால் ஜாதகரின் லக்கினம் ஆரம்பிக்கும் பாகையை அடிப்படையாக கொண்டு காணும் பொழுது ராகு மிதுன ராசியில் உள்ள 6ம் பாவகத்திலும், கேது தனுசு ராசியில் உள்ள 12ம் பாவகத்திலும் அமர்ந்து இருப்பது புலனாகும், அப்படி அமரும் ராகு 6ம் பாவகத்திர்க்கு 30% தீமையையும், கேது 12ம் பாவகத்திர்க்கு 30% தீமையையும் தருகிறார்கள் என்பது உறுதியாகிறது, மேலும் பாவக அமைப்பில் மற்ற கிரகங்கள் 7ம் எந்த எந்த பாவகங்களில் அமர்ந்து இருக்கின்றனர் என்பதை இனி ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே !
சந்திரனும் புதனும் கன்னி ராசியில் உள்ள 9ம் பாவகத்திலும், சூரியன்,சுக்கிரன், கிரகங்கள் கன்னி ராசியில் உள்ள 10ம் பாவகத்திலும், சனி துலாம் ராசியில் உள்ள பத்தாம் பாவகத்திலும், லக்கினாதிபதி ஆனா குரு துலாம் ராசியில் 11ம் பாவகத்திலும், செவ்வாய் விருச்சிக ராசியில் 12ம் பாவகத்திலும், பாவக முறையே அமர்ந்து இருப்பது 12 பாவகங்களும் ஆரம்பிக்கும் பாகையை அடிப்படையாக வைத்து காணும் பொழுது மிக தெளிவாக தெரிந்துகொள்ள இயலும் அன்பர்களே !
இனி ஜாதகத்தில் 12 பாவகங்களின் வலிமை நிலையை ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே !
ஜாதகத்தில் வலிமை பெற்று நல்ல நிலையில் இருக்கும் பாவகங்கள் :
1,3,4ம் வீடுகள் சுக ஸ்தானம் எனும் 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 65% வலிமையுடனும்,
2,5,11ம் வீடுகள் லாப ஸ்தானம் எனும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 85% வலிமையுடனும்,
6,9,12ம் வீடுகள் பாக்கிய ஸ்தானம் எனும் 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 50% வலிமையுடனும்,
7,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 70% வலிமையுடனும், மிகவும் சிறப்பாக அமைந்திருக்கின்றது.
ஜாதகத்தில் வலிமை அற்று பாதிக்கபட்டு இருக்கும் பாவகங்கள் :
இவரது ஜாதகத்தில் 8ம் வீடு ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 50% வலிமையற்று இருப்பது மட்டுமே குறையாக காணப்படுகிறது, இருப்பினும் ஜாதகருக்கு பூரண ஆயுளை தந்துவிடும்.
இனி 12 பாவக வழியில் இருந்து ஜாதகர் பெரும் பலன்களை பற்றி பார்ப்போம் அன்பர்களே !
1,3,4ம் வீடுகள் சுக ஸ்தானம் எனும் 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு இலக்கின வழியில் இருந்து கல்வியில் வெற்றி, மண் மனை வண்டி வாகன யோகம், தாய் வழியில் இருந்து சொத்து கிடைத்தல், ஜாதகரின் நுண்ணறிவு மூலம் தனது வாழ்க்கையை சிறப்பாக அமைத்து கொள்ளும் வாய்ப்பு, அறிய கலைகளில் அதிக ஆர்வத்தை தரும், 3ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் சுய முயற்சியால், மண் மனை, வண்டி வாகனம் வாங்கும் யோகம், பின் யோகம், மகிழ்சியான வாழ்க்கை, பொதுமக்கள் பெண்கள் ஆதரவு, போட்டி பந்தையங்களில் வெற்றி, பேப்பர், எழுத்து புத்தகம் மூலம் அபரிவிதமான வருமானம், கால் நடைகள் வீட்டு மிருகங்கள் மூலம் நல்ல லாபம், போக்குவரத்து ஏஜென்சி மூலம் சிறப்பான வருமானம், விவசாயத்தில் நல்ல லாபம், அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் மூலம் நல்ல லாபம், என்ற வகையில் நன்மையை தரும்.
4ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு மண் மனை வண்டிவாகன யோகம் எளிதில் கிட்டும் அமைப்பு, சொந்த ஊரில் இருப்பதால் நல்ல வெற்றி வாய்ப்பு, வீடு நிலம் சார்ந்த வியாபாரங்கள் செய்வதால் நல்ல யோகம், அதிக வருமானம் கிடைக்கும் வாய்ப்பு, கட்டுமான துறை சார்ந்த பொருட்களை வாங்கி விற்பனை செய்வதால் குறுகிய கால முன்னேற்றத்தை தரும், வடக்கு திசை வாயிற்படி கொண்ட வீடுகளில் குடியிருப்பதால் ஜாதகருக்கு அபரிவிதமான வெற்றி வாய்ப்பு உண்டாகும், பொருளாதார ரீதியான தன்னிறைவு ஏற்ப்படும்.
2,5,11ம் வீடுகள் லாப ஸ்தானம் எனும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 2ம் பாவக வழியில் இருந்து அதிர்ஷ்டம் , நண்பர்கள் உதவி, செல்வ செழிப்பு மற்றும் மருத்துவ உபகரணம், மருந்து, ரசாயன உரம், இயற்க்கை உரம் போன்ற விவசாய பொருட்களை வியாபாரம் செய்வதால் அபரிவிதமான வருமானம் கிட்டும், மேலும் உணவு உணவு சார்ந்த பொருட்களை விற்பனை செய்வதால் நல்ல லாபம் கிட்டும், 5ம் பாவக வழியில் இருந்து லாட்டரியில் யோகம், பங்கு வர்த்தகத்தில் நல்ல லாபம், தனது புத்திசாலிதனத்தால் ஆதாயம், எப்போதும் மகிழ்ச்சி, குழந்தை மனைவி குடும்பத்தாருடன் நல்லுறவு, தனது பூர்வீகத்தில் இருப்பதால் மட்டுமே யோக வாழ்க்கையை பெரும் தன்மையை தரும், 11ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு நீடித்த அதிர்ஷ்டம், அனைத்திலும் லாபம், நல்ல குணம் என்ற வகையில் ஜாதகருக்கு நன்மையை தரும்.
6,9,12ம் வீடுகள் பாக்கிய ஸ்தானம் எனும் 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 6ம் பாவக வழியில் இருந்து பயணங்களால் நல்ல லாபம், சமாதான முறையில் வெற்றி, எதிர்பாராத சொத்து சுக சேர்க்கை, உடல் ஆரோக்கியம், புகழ் பரிசு பெரும் யோகத்தை தரும்,9ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு நல்ல அறிவாற்றல், பயணங்களில் விருப்பம், பெரிய மனிதர்கள், ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு, திடீரென சூழ்நிலை மாறும் அமைப்பு என யோக பலன்களையும், 12ம் பாவக வழியில் இருந்து, வெளிநாடு யோகம், வெளிநாடுகளில் இருந்து வரும் வருமானம், உல்லாசமான வாழ்க்கை முறை, தொழில் மற்றும் இருப்பிடத்தை அடிக்கடி மற்றும் அமைப்பை தரும்.
7,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 7ம் பாவக வழியில் இருந்து தாமத திருமணம், திருமணதிற்கு பிறகு வரும் அபரிவிதமான வெற்றி வாய்ப்புகள், நல்ல அந்தஸ்து உள்ள வாழ்க்கை துணை, அரசியலிலும், வியாபாரத்திலும் எதிர்பாராத வெற்றி வாய்ப்புகள், கூட்டு தொழில் செய்வதால் வரும் அபரிவிதமான யோக வாழ்க்கை, சொந்த முயற்ச்சியில் முன்னேற்றம் பெரும் அமைப்பு, சமூகத்தில் மதிப்பு மரியாதை, கௌரவம் அந்தஸ்து என்ற வகையில் மிக பெரிய யோகத்தை தரும், 10ம் பாவக வழியில் இருந்து உத்தியோகம், வியாபாரம், தொழில் முதலியவற்றில் மிகப்பெரிய வெற்றி கிட்டும், கம்பீரமான வாழ்க்கை, தீர்க்கமான முடிவுகளை எடுக்கும் மன அமைப்பு, வேலைக்கு செல்வதை விட ஜாதகர் தொழில் செய்வதாலேயே மிகப்பெரிய முன்னேற்றத்தை பெரும் யோகத்தை தரும்.
8ம் வீடு ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு பூரண ஆயுளை தரும், இருப்பினும் ஜாதகருக்கு வாழ்க்கையில் பல ஏமாற்றங்களை தரும், துயரம், விபத்து, வியாதி எதிர்க்கும் வல்லமை இல்லாத தன்மை, திருப்தி இல்லாமல் வாழும் சூழ்நிலையை தரக்கூடும்.
12 பாவக வழியில் இருந்து ஜாதகர் மேற்கண்ட வகையில் பலன்களை அனுபவிக்கும் தன்மையை தரும்.
இனி ஜாதகருக்கு இதற்க்கு முன் நடந்த திசைகள், தற்பொழுது நடைபெறும் திசை, இனி வரும் திசைகள் மேற்கண்ட 12 பாவகங்களில், எந்த எந்த பாவக பலனை ஏற்று நடத்தியது? நடத்துகிறது ? நடத்தும் ? என்பதை தெளிவாக காண்போம் அன்பர்களே! ஜாதக அமைப்பிலேயே, நவ கிரகங்களின் திசைகள் எந்த பாவகங்களின் பலனை ஏற்று நடத்துகிறது என்பதே ஒருவரின் வாழ்க்கையில் வரும் யோக அவயோக பலன்களை நிர்ணயம் செய்கிறது என்பதால், இந்த பதிவில் " எண்ஜான் உடம்பிற்கு சிரசே பிரதானம் " என்பதற்கு ஒப்பாக விளங்குகின்றது, ஏனெனில் நடைபெறும் திசை ஒரு ஜாதகருக்கு எந்த பாவகத்தின் பலனை தருகிறது என்று தெரிய வில்லை எனில், அந்த ஜாதகருக்கு நாம் ஜோதிட கணிதம் செய்து சொல்லும் பலன்கள் யாவும், பொதுவானதாக அமைந்துவிடும், ஜாதகருக்கு எந்த பாவகத்தின் பலனை தருகிறது என்பது தெளிவாக தெரியும் பொழுது ஜாதகர் அந்த குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து எவ்வித பலன்களை ( யோக அவயோக ) வழங்குகிறது என்பதை துல்லியமாக எடுத்து கூற முடியம், ஜாதகர் அதன் வழியில் வாழ்க்கையை செம்மையாக நடத்த வழிகோல இயலும்.
ஜாதகருக்கு பிறப்பில் நடைபெற்ற திசை சந்திரன் திசை 12/07/1985 வரை நடைபெற்றது, இந்த சந்திரன் திசை ஜாதகருக்கு 6,9,12ம் வீடுகள் பாக்கிய ஸ்தானம் எனும் 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களை தந்து.
2வதாக நடைபெற்ற செவ்வாய் திசை ( 12/07/1985 முதல் 12/07/1992 வரை ) ஜாதகருக்கு 1,3,4ம் வீடுகள் சுக ஸ்தானம் எனும் 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களை தந்தது.
3வதாக நடைபெற்ற ராகு திசை ( 12/07/1992 முதல் 12/07/2010 வரை ) 8ம் வீடு ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று தீமையான பலன்களை ராகு திசை முழுவதும் தந்தது, ஜாதகருக்கு 8ம் பாவகம் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு 4ம் பாவகமாக, சர நீர் தத்துவ அமைப்பில் பலனை தந்தது, ராகு திசை 18 வருடங்களும் ஜாதகருக்கு அளவில்லா துன்பத்திற்கு ஆளாக்கியது, குறிப்பாக ஜாதகரின் கல்வி காலத்தில் ராகு திசை திடீர் இழப்பை தரும் 8ம் பாவக பலனை தந்ததால், ஜாதகரின் கல்வி கேள்விக்குறியானது ? கல்வி பாதியிலேயே தடை பெற்றது, அடுத்ததாக ஜாதகரின் தொழில் முயற்ச்சிகள் யாவும் தோல்வியை தந்தது, நிலையான தொழில் அமையாமல் ஜாதகரின் போராட்டம் ஆரம்பம் ஆனது, நிலையான வருமானம் அமையாமல் ஜாதகர் அதிக அளவில் சிரமப்பட வேண்டிய சூழ்நிலையை தந்தது, " கொடிது கொடிது வறுமை கொடிது அதனினும் கொடிது இளமையில் வறுமை " என்ற ஒவ்வையின் வாக்கிற்கு இணங்க ஜாதகருக்கு இளமையில் வறுமையை ( 12/07/1992 முதல் 12/07/2010 வரை ) நடைபெற்ற ராகு திசை ஆயுள் ஸ்தானமான 8ம் பாவக வழியில் இருந்தும் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு சுக ஸ்தானமான 4ம் பாவக அமைப்பில் சர நீர் தத்துவ அமைப்பில் தந்தது , ஜாதகரை விரக்தியின் விளிம்பில் கொண்டு போய் நிறுத்தியது, சர ராசி என்பது தான் கொடுக்க வேண்டிய நன்மையையோ ? தீமையையோ ? 100% தங்கு தடையின்றி தரும் என்பதால் ஜாதகரால் ராகு திசையில் அதிக சிரமத்திற்கும் துன்பத்திற்கு ஆளாகும் சூழ்நிலையை தந்தது.
3வதாக நடைபெற்ற ராகு திசை ஜாதகரை போட்டு வாட்டி வதைத்தது என்றே சொல்லாம், இளமையில் ஒருவர் எவ்வித கஷ்டங்களை அனுபவிக்க கூடாதோ ? அந்தனை கஷ்டங்களையும் ஜாதகர் அனுபவித்தார், 8ம் பாவகம் சர நீர் ராசி என்பதாலும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு சுக ஸ்தானம் என்பதாலும், ஜாதகரின் வசதி வாய்ப்புகளை இழக்க வைத்து மனதளவில் அதிக போராட்டத்தையும், மன உளைச்சலுக்கும் ஆளாக்கியது என்பதால் ஜாதகருக்கு ராகு திசை மிகுந்த அவயோக பலன்களையே தங்கு தடையின்றி கொடுத்தது வருத்தத்திற்கு உரிய ஒரு விஷயமே.
4வதாக நடைபெற்று வரும் குரு திசை ( 12/07/2010 முதல் 12/07/2026 வரை ) 2,5,11ம் வீடுகள் லாப ஸ்தானம் எனும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு மிகுந்த யோக அமைப்பை தரும் மேற்கண்ட பாவக வழியில் இருந்து, அதாவது 2ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு அளவில்லா வருமானத்தை பொதுமக்கள் வழியில் இருந்து பெற்று தரும் ஏனெனில் 2ம் வீடு தொடர்பு பெறுவது லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன், இந்த 11ம் பாவகம் ஜாதகருக்கு துலாம் ராசியில் அமைகிறது, துலாம் ராசி கால புருஷ தத்துவ அமைப்பிற்கு களத்திர ஸ்தானமான 7ம் பாவகமாக வருவதால் ( 7ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் பொதுமக்கள்,கூட்டாளி,வாழ்க்கை துணை, வெளிநாடு, வெளிநாட்டில் இருந்து வரும் வருமானம் போன்றவற்றை குறிக்கும், மேலும் துலாம் ராசி சர காற்று தத்துவ அமைப்பை பெறுவதால் தனது அமைப்பில் இருந்து 100% யோகத்தை தரும் என்பதை இங்கே ஜோதிடதீபம் குறிப்பிட விரும்புகிறது ) ஜாதகரின் அறிவாற்றல் மிகசிறப்பாக செயல்படும், இனி வரும் காலங்களிலேயே ஜாதகருக்கு சிறப்பான வாழ்க்கை துணை கிடைக்கும், நல்ல தொழில் முறை கூட்டாளிகளை தரும், சிறந்த நண்பர்களை அறிமுகம் செய்து வைக்கும், ஜாதகர் ராகு திசையில் அனுபவித்த இன்னல்களுக்கு , இரட்டிப்பான நன்மைகளையும், யோக அமைப்புகளையும் குறுகிய காலத்தில் அனுபவிக்கும் தன்மையை தரும்.
5ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு நல்ல குழந்தைகள், சிறந்த ஆண் வாரிசு அமையும், ஜாதகரின் புத்திசாலிதனமும் அறிவு திறனும் வியாபாரத்தில் பன்மடங்கு லாபத்தை பெற்றுத்தரும், எங்கு சென்றாலும் ஜாதகருக்கு நல்ல வரவேற்ப்பு கிட்டும், சர காற்று தத்துவமான துலாம் ராசியுடன் சம்பந்தம் பெறுவதால் ஜாதகருக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும், மேற்கண்ட யோக பலன்கள் யாவும் நடைமுறைக்கு வரவேண்டும் என்றால் ஜாதகர் தனது பூர்விகத்திர்க்கு உற்பட்ட பகுதிகளில் ஜீவனம் மேற்கொண்டால் மட்டுமே யோக பலன்கள் 100% கிடைக்கும் என்பதை ஜாதகர் நினைவில் நிறுத்துக, ஒரு வேலை ஜாதகர் தனது பூர்வீகத்தை விட்டு வெளியில் ஜீவனம் மேற்கொண்டால் , 11ம் பாவக வழியில் இருந்து வரும் யோக பலன்களின் தன்மை வெகுவாக குறையும்.
11ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு குரு திசை முழுவதும் நீடித்த அதிர்ஷ்டத்தை தரும், முற்போக்கு சிந்தனையும், நேர்மறையான எண்ணங்களும் ஜாதகரை குறுகிய காலத்தில் மிகப்பெரிய வெற்றியை தேடி தரும், ஜாதகர் வியாபாரம் செய்வதால் அளவில்லா லாபம் வந்து குவியும், சுயமாகவோ ? கூட்டாகவோ ? ஜாதகர் தொழில் செய்வது சால சிறந்தது, மற்றவரிடம் பணியாற்றினால் ஜாதகரின் யோக பலன்கள் யாவும், தடைபட கூடும் என்பதால், ஜாதகர் தனது முன்னேற்றத்தை மட்டும் கவனத்தில் கொண்டு செயல்படுவது அவசியம் ஆகிறது .
கோட்சார கிரகங்களின் தொடர்பு அவை தரும் பலன்கள் :
குரு திசை முழுவதும் ஜாதகருக்கு 11ம் பாவக பலனையே நடத்துவதால், இந்த 11ம் பாவகத்துடன் நீண்ட நாள் சஞ்சாரம் செய்யும் சனி பகவான் மற்றும் குருபகவானின் தொடர்புகள் தற்பொழுது இல்லாத காரணத்தால், மேற்கண்ட கிரகங்கள் அமைப்பில் இருந்து ஜாதகர் எவ்வித யோக அவயோக பலன்களையும் பெறவில்லை, ஒருவேளை இனி வரும் காலங்களில் நவகிரகங்கள் சம வீடான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றால் அந்த பாவகத்திர்க்கு 100% கோட்சார நன்மையை செய்வதால் ஜாதகர் கோட்சார கிரகங்கள் பற்றிய பயம் கொள்ள தேவையில்லை என்பதே ஜோதிடதீபத்தின் கருத்து , வாழ்த்துகள் .
ஒருவரின் சுய ஜாதகத்தில் மேற்கண்ட அமைப்பில் முறையாக ஜாதக கணிதம் செய்து பலன்களை தெளிவாக கூறும் பொழுது, ஜாதகர் நிச்சயம் தமது வாழ்க்கையை மிக சிறப்பாக அமைத்து கொள்வார் என்பது உறுதி என்று, ஜோதிடதீபம் 100% திடமாக நம்புகிறது.
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696