ஞாயிறு, 11 ஜனவரி, 2015

சனி பெயர்ச்சி, விருச்சிக ராசிக்கு செல்லும் சனிபகவான் லக்கின வாரியாக தரும் பலன்கள் - தனுசு




சனி பகவான்  திருக்கணித பஞ்சாங்க முறைப்படி 02-11-2014 ஞாயிறு கிழமை அன்று இரவு 08-54 மணிக்கு துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகியுள்ளார். விருச்சிக ராசியில் சனி சுமார் இரண்டரை ஆண்டு காலம் சஞ்சரிப்பார், இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு லக்கினத்தை சார்ந்தவர்களுக்கும் சனி பகவான் வழங்கும் யோக அவயோக பலன்களை பற்றி நாம் இந்த பதிவில் சிந்திப்போம் அன்பர்களே!   

ஜோதிடதீபம் ராசியை அடிப்படையாக வைத்து சனி பெயர்ச்சி பலன்களை வழங்காமல், ஏன் லக்கினத்தை அடிப்படையாக கொண்டு பலன் சொல்லுகிறது என்ற சந்தேகம் சிலருக்கு வரக்கூடும், லக்கினம் என்பதே ஜாதகத்திற்கு அடிப்படையானது, இந்த லக்கினம் எனும் முதல் பாவகத்தை வைத்தே ஒருவருக்கு சரியான ஜாதக பலன்களை சொல்ல இயலும், ராசியை வைத்து சொல்வது என்பது, பொது பலன்களாகவே இருக்குமே தவிர ஒரு ஜாதகருக்கு தெளிவான பதிலையும், பலன்களையும் தர வாய்ப்பில்லை என்பதால் ஒவ்வொரு லக்கினத்தருக்கும், இந்த சனி பெயர்ச்சி எவ்வித பலன்களை தருகிறது என்று தெளிவாக இனி வரும் பதிவுகளில் காண்போம்.

அடிப்படையில் ஒரு விஷயத்தில் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள் அன்பர்களே! சனி பகவான் தற்பொழுது விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளார், இனி வரும் 30 மாதங்கள் சனி பகவான் விருச்சிக ராசியில் சஞ்சாரம் செய்கிறார், விருச்சிகத்தில் அமர்ந்து  6ம் பார்வையாக மேஷ ராசியையும், 7ம் பார்வையாக ரிஷப ராசியையும், 10ம் பார்வையாக சிம்ம ராசியையும் பார்ப்பதால் இந்த ராசிகளுக்கு திருஷ்டி பலன் என்ற அமைப்பில் பலன் தருகிறார்.

இலக்கின ரீதியாக பலன்கான முனையும் அன்பர்கள் அனைவரது ஜாதகத்திலும் தற்பொழுது நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஆகியவை ஏற்று நடத்தும் பாவகம் கிழ்கண்ட ராசிகளில் அமைந்தால் மட்டுமே( அதாவது விருச்சிகம்,மேஷம்,ரிஷபம் மற்றும் சிம்மம் ஆகிய ராசிகள் எந்த எந்த பாவகமாக வருகிறதோ அந்த பாவக பலனை தற்பொழுது நடைமுறையில் உள்ள திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஆகியவை தொடர்பு பெறுதல் ) ஜாதகருக்கு தற்பொழுது பெயர்ச்சி பெற்று இருக்கும் சனிபகவான் நன்மையையோ, தீமையையோ செய்வார் என்பதை கருத்தில் கொள்க, எனவே தற்பொழுது நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் மேற்கண்ட ராசிகளுடன் தொடர்பு பெருகின்றத என்பதை கவனிப்பது மிக முக்கியமானதாக ஜோதிடதீபம் அறிவுறுத்துகிறது . 

தனுசு லக்கினம் :

தனுசு லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு 12ல் அமர்ந்த சனிபகவான் சற்றே மன ரீதியான போராட்டத்தை அதிகமாக வழங்குகிறார், ஜாதகரின் மன ரீதியான போராட்டங்கள் அதிகரிக்கும் என்பது மட்டும் நிதர்சனமான உண்மை, ஸ்திர நீர் ராசியான விருச்சிக ராசியில் அமரும் சனி பகவான் தனுசு லக்கினத்தாருக்கு முதலீடுகள் செய்யவதில் தடைகளையும், வாழ்க்கை துணை வழியில் இருந்து எதிர்பாராமல் வரும் சிறு சிறு வீண் விரையங்களையும் தரக்கூடும், மற்றவர்களை நம்பி செய்யும் காரியங்களை வெகுவாக குறைத்து கொள்வது சால சிறந்தது, மற்றவர்களை நம்பி செய்யும் முதலீடுகள் எதிர்பாராத இழப்புகளை தர கூடும், சிந்தனை சிதறல்களால் சிறு சிறு விபத்துகளையும் சந்திக்கும் தன்மையை தரக்கூடும், எனவே பயணங்களில் அதிக கவனம் தேவை, பல முறை யோசனை செய்து சரியான முடிவுகளை எடுப்பது தங்களுக்கும் தங்களை சார்ந்தவர்களுக்கும் மிகுந்த நன்மைகளையும் சிறப்பான முன்னேற்றங்களையும் தரும்.

6ம் பார்வையாக பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்தை வசீகரிக்கும் சனி பகவான், ஜாதகரின் அறிவுத்திறனின் வீச்சை கடுமையாக கட்டுபடுத்துவார், தனது பூர்வீகத்தை விட்டு வெளியில் சென்று ஜீவனம் தேடும் சூல்நிலைகளைகூட தரக்கூடும், உதவி செய்ய யாரும் அற்ற நிலையை உருவாக்கும், தங்களின் திட்டங்கள் நடைமுறைக்கு வருவதற்கு உண்டான வாய்ப்பை வெகுவாக குறைக்கும், பல போராட்டங்களையும் எதிர்ப்புகளையும் சமாளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்ப்படும், கல்வியில் திடீர் திருப்பங்களும், தடைகளையும் தர கூடும், இதுவரை நன்றாக கல்வியில் தேறியவர்கள் கூட இனி வரும் காலங்களில் சில தடுமாற்றங்களை சந்திக்கும் தன்மை ஏற்ப்பட வாய்ப்பு உண்டு, முடிந்தவரை தங்களின் குல தெய்வ வழிபாட்டினை முறையாக மேற்கொள்வது சால சிறந்தது.

7ம் பார்வையாக எதிரி ஸ்தானமான 6ம் பாவகத்தை வசீகரிக்கும் சனி பகவான் தங்களுக்கு அதிரடியான வெற்றிகளை குவிக்க வைப்பார், சிறு சிறு அதிர்ஷ்டங்கள் தொடந்து வந்தவண்ணமே இருக்கும், எந்த ஒரு முயர்ச்சியும் எதிர்பாராத வெற்றியை தரக்கூடும், போட்டி பந்தையங்களில் சிறந்த வெற்றி வாய்ப்பு, கேட்க்கும் இடத்தில் இருந்து வரும் பொருளாதார உதவிகள், கை நிறைவான வருமானம், தனது பேச்சு திறனால் வாழ்க்கையில் எதிர்பாராது வரும் முன்னேற்றங்கள், அரசியலில் சிறந்த எதிர்காலம், தலைமை அல்லது தலைவர் பதவிகள் தேடிவரும் வாய்ப்பு, பயணங்களில் இருந்து வரும் லாபங்கள் மற்றும் அதிர்ஷ்டங்கள், புதிய வீடு, வண்டி, வாகன யோகம், அதன் வழிகளில் இருந்து வரும் வருமானம், என மிகசிறந்த நிலையான யோக பலன்களை தனுசு லக்கினத்திற்கு வாரி வழங்குகிறார்.

10ம் பார்வையாக பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்தை வசீகரிக்கும் சனிபகவான், ஜாதகரை மற்றவர்கள் பிரச்சனைகளில் மூக்கை நுழைக்க வைத்து வீண் அவபெயர்களை உருவாக்கும் தன்மையை தரக்கூடும்,  குறிப்பாக தனுசு லக்கினத்தார் தான் உண்டு தனது வேலை உண்டு என்று இருப்பது சகல நலன்களையும் தரும், பஞ்சாயத்து தீர்ப்பு சொல்ல போனால் இவர்களின் எதிர்காலமும், முன்னேற்றமும் வெகுவாக பாதிக்க படும், தன்னுள் உள்ள ஆன்மீக சக்தியின் வீச்சு வெகுவாக பாதிக்க படும், சமுதாயத்தில் தேவையில்ல தொந்தரவுகளுக்கு எல்லாம் ஆளாகி இருப்பதும் போய்விடும் சந்தர்ப்பங்கள் உருவாக வாய்ப்பு உண்டு, அவசர கதியில் செய்யும் காரியங்கள் பின்னாளில் மிகப்பெரிய முன்னேற்ற தடைகளை உருவாக்கும், தன்னை விட வயதில் அதிகம் உள்ளவர்களின் பேச்சை கேட்டு நடந்துகொள்வது நல்லது, குறிப்பாக பெண்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய காலகட்டங்கள் இது எனலாம், எந்த ஒரு காரணத்தை கொண்டும் பெரியவர்களின் பேச்சை மீறி செயல்படுவது, பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்கும்.

தனுசு  இலக்கின  அன்பர்களே ! தற்பொழுது தங்களுக்கு நடைபெறும் திசை மற்றும் புத்தி மேற்கண்ட 12,5,6,9ம்  பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே, தங்களுக்கு மேற்கண்ட  சனிபகவானின், கோட்சார நன்மைகள் அல்லது தீமைகள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைபெறும் திசை 12,5,6,9ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் எவ்வித நன்மையும், தீமையும் நடைபெறாது என்பதை கவனத்தில் கொள்க, வாழ்த்துகள் .

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன் 
9443355696 

புதன், 7 ஜனவரி, 2015

சாய கிரகமான ராகு கேது சுய ஜாதகத்தில் வழங்கும் தனிப்பட்ட பலாபலன்கள்!




ராகு கேதுவாக கிரக அந்தஸ்து பெற்ற சுவர்ணபானு பிறப்பில் அரக்க  குலத்தை சார்ந்தவராக இருந்த போதிலும், தனது அறிவு திறனாலும், மாறுபட்ட சிந்தனையாலும் தேவர்களுக்கு மட்டும் கிடைக்க இருந்த அமுதத்தை அருந்தி, தெய்வ நிந்தனைக்கு ஆளாகி, விடா முயற்ச்சியாக இறை அருளின் கருணையை பெற்று, எவருடனும் ஒப்பிட முடியாத வல்லமையை பெற்று "ராகு கேது" கிரகமாக அந்தஸ்த்து பெரும் அமைப்பை பெற்றனர், மேலும் ஜாதக அமைப்பில் சாயகிரகங்கள் என்று வழங்கப்பட்டும், மற்ற கிரகங்களுக்கு இல்லாத தனிப்பட்ட செயல்பாடுகளையும், வலிமையையும் பெரும் தன்மையை பெறுகின்றனர் இந்த நிழல் கிரகங்கள் என்றால் அது மிகையில்லை.

சுய ஜாதகத்தில் வலிமை அல்லது வலிமை அற்ற தன்மையில் இருந்தாலும் , சம்பந்தபட்ட ஜாதகருக்கு வாழ்க்கையில் சிறப்பாக வாழ்வதற்கு உண்டான வழிகாட்டுதலை சிறப்பாக எடுத்து சொல்லும் ஆற்றல் ராகுகேதுவுக்கு நிச்சயம் உண்டு, நல்ல நிலையில் உள்ள ஜாதகர் எவ்வளவு விரைவில் யோக பலன்களை அனுபவிக்கும் தன்மையை தருகிறார்களே, அதே அமைப்பை பாதிக்க பட்ட ஜாதகத்துக்கும் தங்கு தடையின்றி ராகு கேது வாரி வழங்கும், இருப்பினும் ஜாதகர் குறிப்பிட்ட பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்கு உண்டான சரியான வாய்ப்பை நிச்சயம் தருகின்றனர்.

ராகு கேது கிரகங்களால் பாதிக்க படும் அன்பர்கள்! நிச்சயம் அந்த பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்கு உண்டான வழிமுறையை இறை அருளின் கருணையினால் நிச்சயம் பெறுவார்கள், சில அன்பர்களின் விடா முயர்ச்சியும், மாறுப்பட்ட அறிவு திறனும் சிறப்பாக செயல்பட இந்த அமைப்பே காரணம், எவ்வித துன்பத்தையும் எதிர்கொள்ளும் வல்லமையை சாயகிரகங்கள் வாரி வழங்கிவிடுவார்கள், உடல் ரீதியாக வரும் இன்னல்களை ராகுவும், மன ரீதியாக வரும் இன்னல்களை கேதுவும் சிறப்பாக எதிர்கொண்டு ஜாதகரை வாழ்க்கையில் சிறப்பான யோக பலன்களை அனுபவிக்கும் தன்மையை 100% விகிதம் வழங்கிவிடுவது கவனிக்க தக்க விஷயமாக ஜோதிடதீபம் கருதுகிறது.

உடல் ரீதியாக வரும் பொழுது ராகு பகவான் ஜாதகரை மிகுந்த அளவில் உடல் பலத்தையும், வலிதாங்கும் உடல் அமைப்பையும், எந்த ஒரு சூழ்நிலையையும், சீதோஷ்ண நிலையையும் தாங்கும் வலிமையை தருகிறார், இறுதி வரை போராடும் உடல் வலிமையையும், எளிதில் வெற்றிகொள்ளும் சூட்சம விஷயங்களையும், உடனுக்கு உடன் பரிசோதனை செய்துகொள்ளும் வாய்ப்பையும், சந்தர்ப்பத்தையும் அமைத்து கொடுப்பது ராகு பகவானின் தன்மையே, மேலும் ஜாதகர் ஆய்வு நோக்கத்திலோ, புதிய கண்டுபிடிப்பு  நோக்கத்திலோ செய்யும் விஷயங்கள் 100% விகித வெற்றி வாய்ப்பை தருவதற்கு உண்டான சந்தர்ப்பத்தை ஏற்ப்படுத்துவதும், ராகு பகவானே என்றால், அது மிகையில்லை, ஒரு ஜாதகர் போராடி வாழ்க்கையில் வெற்றி பெறுவது ராகுவின் கருணையினாலே.

மன ரீதியாக வரும் பொழுது கேது பகவான் ஜாதகருக்கு புலனுக்கு எட்டாத அறிவு சார்ந்த விஷயங்களை மிக எளிதாக உணரும் வண்ணம் வழிவகை செய்கிறார், சூட்சம அறிவு திறன் பிரபஞ்ச ரகசியம், தன்னிலை உணரும் ஆற்றல், தவ வலிமையின் மூலம் பல அறிய சாதனைகளை செய்யும் தன்மை, பின் வருவதை முன் உணரும் ஆற்றல், எடுத்த காரியத்தை சரியான திட்டமிடுதலுடன் சிறப்பாக நடத்தும் தன்மையை தருவது கேது பகவானே, பல மனிதர்களின் திட்டங்கள் அனைத்தும் நடைமுறைக்கு வாராமல், வெறும் திட்டத்துடனும் கற்பனையாகவும் நின்று விடுவதற்கு காரணகர்த்த கேது பகவானே என்றால் அது மிகையில்லை, அறிவு திறனையும் அது சார்ந்த மன ஆற்றலையும் பன்மடங்கு வலிமை சேர்க்கும் தன்மை பெற்றவர் கேது பகவான் என்றால் அது மிகையில்லை, ஜாதகரை மிக எளிமையாக வாழ்க்கையில் வெற்றி பெற செய்யும் தனித்துவமான ஆற்றல் கேது பகவானுக்கே நிச்சயம் உண்டு.

பொதுவாக ராகுகேது ஜாதகம், சர்ப்பதோஷம், நாக தோஷம், காலசர்ப்ப தோஷம் என்ற வார்த்தை விளையாடல்களை நம்பி, தங்களின் சுய ஜாதகத்தில் ராகு கேதுவின் வலிமையை உணராமல் வாழ்க்கையின் சிறப்பு முன்னேற்றங்களை தவறவிடாதீர்கள் அன்பர்களே! தாங்கள் வாழ்க்கையில் ஏதாவது ஒருவகையில் நன்மையை தர சாயாகிரகங்கள் தயார் நிலையிலேயே உள்ளனர் என்பதை மறவாதீர்கள்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

செவ்வாய், 6 ஜனவரி, 2015

ராகு கேது வலிமை அற்ற ஜாதக நிலை ( உதாரண ஜாதகம் )




சாய கிரகமான ராகு கேது சுய ஜாதகத்தில் வலிமை அற்ற நிலையில் அமரும் பொழுது ஜாதகர் எவ்வித அவயோக பலன்களை அனுபவிக்கும் சூழ்நிலையை தருகிறார் என்பதை இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே!


 இந்த கன்னி இலக்கின ஜாதகருக்கு மேலோட்டமாக ஜாதகத்தை பார்வை செய்யும் ஜோதிடர்கள் அனைவரும் ஜாதகருக்கு லக்கினத்தில் கேது, 7ம் வீட்டில் ராகு என்று கணித்துவிடுவார்கள், இந்த ஜாதகத்தை பார்க்கும் அனைவரும், லக்கினத்தில் கேது 7ல் ராகு என்றும், இது சர்ப்ப தோஷ ஜாதகம் என்று உடனடியாக சொல்வது இயற்கையே, ஜாதகத்தை துல்லியமாக ஆய்வு செய்யும் சிறந்த கணித ஜோதிடர்களுக்கு மட்டுமே தெரியும், ராகு கேது முறையே 7,1ல் இல்லை என்று, ஏனெனில் ஜாதகரின் லக்கினம் ஆரம்பிக்கும் பாகை என்பது கன்னி ராசியில் 173.12.16 பாகையில், களத்திர பாவகம் ஆரம்பிப்பது மீனத்தில் 353.12.16 பாகையில் ஆதாவது லக்கினம் கன்னி ராசியில் 23.12.16 பாகையிலும், களத்திர பாவகம் 23.12.16 பாகையிலும் ஆரம்பிக்கிறது ராகு இருப்பது மீனத்தில் 338.20.05 ( 08.20.05) பாகையிலும், கேது கன்னியில் 158.20.05 ( 08.20.05) பாகையிலும் இருப்பதால் ஜாதகருக்கு கன்னி ராசியில் உள்ள 12ம் பாவகத்திலும் ( கேது ) , மீனத்தில் உள்ள 6ம் பாவகத்திலும் ( ராகு ) ராகு கேது அமர்ந்திருப்பது புலனாகும்.

எனவே இவரது ஜாதகத்தில் முதலில் ராகு கேது லக்கினம் மற்றும் களத்திர  ஸ்தானத்தில் இல்லை என்பது உறுதியானது, இனி தாங்கள் அமர்ந்த இடத்திற்கு சாய கிரகமான ராகு கேது எவ்வித பலன்களை வழங்குகின்றனர் என்பதை கருத்தில் கொள்வோம் அன்பர்களே!

6ல் அமர்ந்த ராகு ஜாதகனுக்கு மனோரீதியான போராட்டங்களையும், தனக்கு எதிரான மனநிலையை கொண்டுள்ளவராகவும், தேவையில்ல விஷயங்களில் தானே போய் சிக்கிக்கொள்ளும் தன்மையை தருகிறார், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மிகப்பெரிய சிக்கல்களை வரவைத்துகொண்டு, துன்பப்படும் அமைப்பை தருகிறார், நல்ல நிறைவான நிம்மதியான தூக்கம் இன்றி உடல் நல சீர்கேட்டை பெரும் அமைப்பை தருகிறது, ஜாதகரின் செயல்பாடுகள் அனைத்தும் முன்னுக்கு புறம்பான தன்மையில் இருக்கும் என்பதும், எதிர்பாராத தோல்விகளையும், கடன் சுமைகளையும் தானே தனது தலையில் ஏற்றி வைத்துகொள்வார் என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது.

12ல் அமர்ந்த கேது ஜாதகனுக்கு பூலோக வாழ்க்கையில் ஒரு மனிதன் அடையும் துன்பத்தின் அனைத்து அத்தியாயத்தையும் பக்கம் பக்கமாக காட்டும் என்பது உறுதி, புலன் அடக்கம் இல்லாத தன்மையினால், ஜாதகர் நெருப்பில் இட்ட புழு போல தவிக்கும் தன்மையை தரும், தீய பழக்கவழக்கத்திற்கு ஜாதகர் அடிமையாகும் பட்சத்தில், ஜாதகரால் நிச்சயம் இந்த பாதிப்பில் இருந்து மீண்டு வருவது என்பது இயலாத காரியம், மேலும் ஜாதகருக்கு வயிறு சார்ந்த இன்னல்கள் அதிக தொந்தரவை தரும், மற்றவர்களை நம்பி செய்யும் முதலீடுகள் அனைத்தும் வீண் விரையத்தை தரும், வாழ்க்கை துணை வழியில் இருந்து அதிக இன்னல்களையும், மீள கடன் சுமையையும் தரும், ஜாதகர் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் பொழுது அதிக கவனமுடன் இருப்பது நலம்.

மேற்கண்ட பலன்கள் யாவும் ஜாதகருக்கு சுய ஜாதக ரீதியாக நடைபெறும் பலன்கள் என்பது உண்மை என்ற போதிலும், இந்த பலாபலன்கள் ஜாதகருக்கு எப்பொழுது நடைமுறைக்கு வரும் என்று கணிதம் செய்வதே ஜோதிடரின் தனி திறமை, மேற்கண்ட 6,12ம் பாவகங்களின் பலன்கள் எப்பொழுது நடைபெறும், எந்த திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமத்தில் நடைமுறைக்கு வரும்? அல்லது  6,12ம் பாவகங்களின் பலன்கள்நடைபெறும் திசை ,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமத்தில் நடைமுறைக்கு வாராமலே போய்விடுமா ? என்ற விஷயங்களை தெளிவாக ஜாதகனுக்கு எடுத்து கூறி, அதற்க்கு உண்டான தீர்வுகளை பரிந்துரை செய்வது சிறந்த ஜோதிடனின் கணித திறமை என்றால் அது மிகையில்லை.
  வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

திங்கள், 5 ஜனவரி, 2015

ராகு கேது வலிமை பெற்ற ஜாதக நிலை ( உதாரண ஜாதகம் )



ராகு கேது வலிமை பெரும் பொழுது ஜாதகர் குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து எவ்வித யோக பலன்களை பெறுகிறார் என்பதை இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே !



லக்கினம் : கும்பம் 
ராசி : மேஷம் 
நட்சத்திரம் : அஸ்வினி 3ம் பாதம் 

ஜாதகருக்கு லக்கினத்தில் அமர்ந்த ராகு, இலக்கின அமைப்பில் இருந்து சிறந்த சிந்தனை திறன் அறிவுபூர்வமான செயல்பாடுகள், தனம்பிக்கையான மன நிலை, முற்போக்கு சிந்தனையுடன் அனைத்தையும் அணுகும் மன இயல்பு , எடுத்த  காரியத்தில் வெற்றிபெறும் யோகம், நிலைதன்மையான செயல்கள், நம்பிக்கைக்குரிய வெளிப்படையான நடைமுறைகள், மற்றவர்களாலும் உறவுகளாலும் மெச்சும்படியான செய்கைகள், சுய கட்டுபாடு, ஒழுக்கம், மெய் பொருள் காணும் அறிவு திறன், எந்த ஒரு விஷயத்தையும் நேர்மறையாக அணுகும் ஆளுமை திறன், உடல் மற்றும் மன வலிமை, நல்ல பரந்த மனபக்குவம், எங்கு சென்றாலும் வரவேற்ப்பை பெரும் யோகம், எவரையும் எதிர்பாராமல்  சுயமாக வாழ்க்கையில் முன்னுக்கு வரும் தன்மை, விட்டுகொடுக்கும் மனப்பான்மை, பரோபகரமான செயல்பாடுகள், ஒளிமறைவின்றி செயல்படும் போக்கு, நீண்ட ஆயுள் , நிறைவான செல்வ வளம்  என ஜாதகரை, இலக்கின வழியில் இருந்து 100% விகித யோக பலன்களை ராகு பகவான் தருகிறார்.

லக்கினத்திற்கு கேந்திர பாகமான 7ம் பாவகத்தில் அமர்ந்த கேது பகவான், ஜாதகருக்கு சிறந்த வாழ்க்கை துணையை பெற்று தருகிறார், பொதுமக்கள் மற்றும் அரசியலில் மிகப்பெரிய செல்வாக்கையும், புகழ் மிக்க பொறுப்புகளையும் வாரி வழங்குகிறார், பல திருத்தலங்களுக்கும், தனது குல தேவதைக்கு உண்டான கடமைகளையும் செவ்வன செய்யும் யோகத்தையும், உலக புகழ் பெரும் அளவிற்க்கான ஏற்றுமதி இறக்குமதி தொழில் வெற்றி வாய்ப்பை வாரி வழங்குகிறார், திருமணதிற்கு பிறகான முன்னேற்றத்தை அபரிவிதமாக வழங்குவது கவனிக்க தக்கது, ஸ்திர நெருப்பு தத்துவத்தில் செயல்படும் கேது ஜாதகருக்கு சுய கட்டுப்பாட்டையும், பொதுமக்கள் வழியில் இருந்து நிரந்தரமான ஆதரவையும், அரசியலில் அபரிவிதமான பொறுப்புகளை ஏற்று நடத்தும் யோகத்தையும் வழங்குவது ஜாதக அமைப்பிலேயே மிகவும் சிறப்பான யோக பலன்களாக கருதலாம், வெளிவட்டார பழக்க வழக்கத்தையும், சிறந்த வாழ்க்கை துணையையும், தன்னலம் கருத நண்பர்களையும், அபரிவிதமான வியாபர விருத்தியையும், புகழ் மிக்க மக்கள் செல்வாக்கையும் ஜாதகருக்கு வாரி வழங்குவதே கேது பகவான் தான் என்றால் அது மிகையில்லை.

இந்த ஜாதகத்தை பல ஜோதிடர்கள் சர்ப்ப தோஷம், நாக தோஷம் என்று குழப்பி உள்ளனர், உண்மையில் லக்கினம் மற்றும் களத்திர ஸ்தானத்தில் அமர்ந்த ராகு கேது ஜாதகருக்கு தடையில்லா யோக வாழ்க்கையையே 100% சதவிகிதம் வாரி வழங்குகின்றனர் என்பதை எவராலும் மறுக்க இயலாது .

மேற்கண்ட ஜாதக அமைப்பை போல் உள்ள ஜாதகங்களை நிறைய ஜோதிடர்கள் சர்ப்ப தோஷம் உள்ளதாக நிர்ணயம் செய்கின்றனர், ஜாதகத்தில் ராகு கேது எவ்வித பலன்களை தருகிறது என்பதை நிர்ணயம் செய்த பிறகே ஜாதகருக்கு உண்டான பலன்களை சொல்வது சால சிறந்தது.

லக்கினத்தில் அல்லது களத்திர ஸ்தானத்தில் ராகு கேது அமர்ந்தாலே அது சர்ப்ப தோஷ ஜாதகம் என்று முடிவு செய்வது ஜோதிடத்தின் அடிப்படையே தெரியாத நபர்கள் சொல்லும் வாக்காகவே"ஜோதிடதீபம் " கருதுகிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

அபார சக்தி வாய்ந்த சாய கிரகமான ராகு கேதுவின் வலிமை!



 ராகு கேது சரித்திரம் பற்றியும், சுய ஜாதகத்தில் வலிமை மற்றும் வலிமை அற்ற நிலையில் அமரும் பொழுது ஜாதகருக்கு தரும் பலாபலன்களை பற்றி இன்று நாம் இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்து கொள்வோம் அன்பர்களே !

சாய கிரகமான ராகு கேது கிரகங்களின் சரித்திர கதையை நாம் சிந்தனைக்கு எடுத்துகொள்ளும் பொழுது, பாற்கடலை கடைந்து அதில் வரும் அமிர்தத்தை, தேவர்களும் அசுரர்களும் சமமாக பங்கிட்டு அருத்துவதாக ஒப்பந்தம் செய்துகொண்டனர் , இதன் அடிப்படையில் பாற்கடலை கடைந்து அமிர்தம் கிடைத்தவுடன் விஷ்ணு மோகினி அவதாரம் கொண்டு அமிர்த கலசத்தை பெற்று, தேவர்கள் அசுரர்களுக்கு பரிமாருவதாக நிர்ணயம் செய்யப்பட்டது,  அசுரர்கள் தமக்கு வழங்குவது அமிர்தமல்ல என்பதை உணராமல் மோகினியின் அழகில் மயங்கிய நின்றனர், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திகொண்ட மோகினி முதலில் தேவர்களுக்கு மட்டும் அமிர்தத்தை பரிமாறினாள்.

 இந்த சதியை உணர்ந்த கஷ்யப மகரிஷியின் மகனான சுவர்ணபானு, தனக்கு அமிர்தம் கிடைக்காமல் போய்விடுமோ என்று அஞ்சி தேவர்களின் வடிவம் எடுத்து, தேவர்களின் வரிசையில் அமர்ந்தார், இதை உணர்ந்த சூரியனும் சந்திரனும் மோகினியை தடுக்கும் முன் சுவர்ணபனுக்கு அமிர்தத்தை அருந்த கொடுத்து விட்டாள், சூரியனும் சந்திரனும் நடந்த உண்மையை மோகினியிடம் எடுத்து கூறினர், கடுங்கோபம் கொண்ட மோகினி அமுதம் வழங்கிய அகப்பையால் சுவர்ணபானுவின் தலையில் ஓங்கி அடிக்க, சுவர்ண பானுவின் தலை வேறாகவும் உடல் வேறாகவும் பிரிந்தது.

 அமிர்தம் அருந்தியதால் சுவர்ணபானுவின் உயிர் பிரியாமல் தலையும் உடலும் தனித்தனியாக கிடந்தது, இதை அறிந்த அசுரர்கள் மோகினியின் கையில் இருந்த அமுத கலசத்தை பிடுங்க முயற்ச்சி செய்ய, சுவர்ணபானு செய்த தவறுக்கு அசுரர்களுக்கு அமிர்தம் இல்லை என்று சொன்ன மோகினி, அமிர்தம் முழுவதையும் தேவர்களுக்கு மட்டும் வேகமாக வழங்கிவிட்டு சென்று விட்டாள், சுவர்ணபானுவால்தான் தங்களுக்கு அமிர்தம் கிடைக்கவில்லை என்று எண்ணிய அசுரர்கள் சுவர்ணபானுவை தம் அசுர குலத்தில் இருந்து ஒதுக்கி வைத்தனர்.

தனக்கு உயிர் இருந்த போதிலும் உடல் வேறாக தலை வேறாக இருப்பதை எண்ணிய சுவர்ணபானு, பிரம்மனிடம் முறையிட பிரம்மாவோ இதற்க்கு தீர்வு பரம்பொருளான மஹாவிஷ்ணு மட்டுமே வழங்கமுடியும் என்று சொல்ல, சுவர்ணபானு மஹாவிஷ்ணுவை வணங்கி பிராயசித்தம் வேண்டும் பொழுது எம்பெருமான் அருள் கூர்ந்து சுவர்ணபானுவின் தலைக்கு பாம்பு உடலையும், உடலுக்கு பாம்பு தலையையும் வழங்கி, சுவர்ணபனுவின் தலைக்கு ராகு எனவும், உடலுக்கு கேது எனவும் பெயர் வழங்கி கிரக அந்தஸ்தை வழங்குகிறார், மேலும் கிரகங்களின் அமைப்பில் இருந்து வித்தியாசத்தை பெற வானவெளியில் அப்ரதட்சனமாக சஞ்சாரம் செய்ய இறைவன் கட்டளை இடுகிறார், இதை ஏற்று ராகு கேது இருவரும் அப்ரதட்சனமாக சஞ்சாரம் செய்கின்றனர்.

தங்களின் இந்த நிலைக்கு காரணமான சூரிய சந்திரர்களை பழிவாங்க தவம் இருந்து பிரம்மாவிடம் வரம் கோருகின்றனர், சாய கிரகங்கள் பெற்ற வரத்தின் படி ஒரு ஆண்டில் நான்கு முறை சூரிய சந்திரர்களின் பார்வை பூமியில் விழாது  தடுக்கும் வல்லமையை பெறுகின்றனர், இந்த நிகழ்வை சூரிய கிரகணம் என்றும், சந்திர கிரகணம் என்றும் வழங்கபடுகிறது, இந்த கிரகண நேரத்தில் அதிசக்தி வாய்ந்ததாக கருதப்படும் சூரியனையும் சந்திரனையும் மறைக்கும் தன்மையை சாய கிரகங்களான ராகு கேது பெறுகின்றனர்.

ஒருவரது சுய ஜாதகத்தில் சூரியன் அல்லது சந்திரன் வலிமை பெற்று அமரும் பொழுது அந்த ஜாதகர் தனது வாழ்க்கையில் பெரும் வெற்றிகளுக்கும், அதிர்ஷ்ட வாழ்க்கைக்கும் தங்கு தடை என்பதே கிடையாது எனலாம், இந்த சிறப்புகளை பெற்ற சூரியனையும் சந்திரனையும் மறைக்கும் வல்லமை பெற்ற சாயகிரகமான ராகு கேதுவின் வல்லமையை பற்றி சொல்லவும் வேண்டுமோ? ஆக கிரகங்களின் அதிக வலிமை பெற்றதாக ராகு கேதுவை வர்ணனை செய்தது துளியும் தவறில்லை என்றே ஜோதிடதீபம் 100% விகிதம் கருதுகிறது.

எமது குருவின் கருத்துப்படி, சாய கிரகங்கள் ஆன ராகு கேது ஒருவரது சுய ஜாதகத்தில் எந்த பாவகத்தில் அமர்ந்தாலும் சரி குறிப்பிட்ட பாவகத்தை தனது  ஆளுமைக்கு கிழ் 100% விகிதம் கொண்டு வந்துவிடுவார்கள் என்ற உண்மை மிக சரியாக பொருந்துகிறது, தான் அமர்ந்த பாவகத்தின் தன்மையையும், தன்னுடன் சேர்ந்த கிரகத்தின் வலிமையையும் தானே ஏற்று நடத்துவார்கள் என்பது எவராலும் மறுக்க இயலாத உண்மை, மேலும் தான் அமர்ந்த பாவகத்திர்க்கு நன்மையையோ அல்லது தீமையையோ 100% விகிதம் எவ்வித குறையும் இன்றி செய்வார்கள் என்பதும் முற்றிலும் உண்மை.

சுய ஜாதகத்தில் ராகு கேது வலிமை பெற்ற ஜாதகர் நிச்சயம் குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து 100% விகிதம் நன்மை மற்றும் யோகத்தை அனுபவிப்பர், சுய ஜாதகத்தில் ராகு கேது வலிமை அற்ற ஜாதகர் நிச்சயம் குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து 100% விகிதம் தீமை மற்றும் அவயோகத்தை அனுபவிப்பர், இதை மாற்ற எவராலும் இயலாது, சாய கிரகங்களால் வரும் இன்னல்களை கலைய  எந்த ஒரு பரிகாரமும் பலன் தாரது, ஏனெனில் இதுவே ராகு கேதுவின் தனித்தன்மை, 

மேற்கண்ட ராகு கேதுவின் சரித்திர கதையில் இருந்தே இதை நாம் உணராலாம், முப்பத்து முக்கோடி தேவர்களையும் அமிர்தம் வழங்கிய எம்பெருமான் மகாவிஷ்ணுவையும் ஏமாற்றி அசுரனான சுவர்ணபானு தனது தனி திறமையால் அமிர்தத்தை அருந்த முடிகிறது என்றால், நவக்கிரக அந்தஸ்து பெற்ற சாய கிரகமான ராகு கேது ஏன் ? தனிப்பட்ட வல்லமையுடன் திகழ முடியாது, ஆக நவகிரகங்களிலேயே அதி சக்தி கொண்டதாக சாய கிரகமான ராகு கேதுவை வர்ண்ணனை செய்வதில் எவ்வித தவறும் இல்லை என்றே ஜோதிடதீபம் கருதுகிறது.

ராகு வலிமை பெரும் ஜாதகம் :

தனிப்பட்ட தன்மைகளை தன்னகத்தே கொண்ட  ஜாதகராக கருதலாம், ஜாதகருக்கு தான் அமர்ந்த தத்துவத்தின் அடிப்படையில் இருந்து 100% விகித நன்மைகளை தங்குதடையின்றி செய்வார், அசுர பலம் கொண்ட அமைப்பை பெறுவார்கள், பெரிய அறிவியல் வல்லுனர்கள், புதிய கண்டுபிடிப்பாளர்கள், உடல் மனம்  இரண்டிலும் நிகரில்லா வலிமையை பெற்றவர்கள், அதிகாரம் செய்யும் யோகம் கொண்டவர்கள், தனது கட்டளைக்கு அனைவரையும் கட்டுபட்டு நடக்க வைக்கும் தன்மை பெற்றவர்கள், தான் சொல்வதை வேதவாக்காக எடுத்துக்கொண்ட மக்களை தன் கண் அசைவில் கட்டுபடுத்தும் வல்லமையாலர்களாக திகழ்வார்கள்.

பொதுவாக அதிகாரம் செய்வதில் செவ்வாய் சூரியன் சிறந்து விளங்குபவர்களாக ஜோதிடர்களால் வர்ணிக்க படுவார்கள், ஆனால் ராகுவின் முன்னால் இவர்களின் திறன் வெறும் 10% விகிதம் மட்டுமே என்பதை நினைவில் நிறுத்தினால் ராகுவின் ஆளுமை மிக எளிதாக நமக்கு புரியும், உலகின் வல்லரசான நாடுகள் அனைத்தும் ராகுவின் கருணை இன்றி செயல்பட முடியாது என்பதை கருத்தில் கொள்வது நலம், வீர்யமிக்க செயல்பாடுகள், தான் நினைக்கும் அனைத்தையும் சாதிக்கும் வல்லமை, தனது தேடுதலுக்கு உண்டான சரியான பதில் அல்லது பயன்கள் அனைத்தையும் குறுகிய காலத்தில் தருவது ராகு பகவானே என்றால் அது மிகையில்லை, ராகு வலிமை பெற்ற ஜாதக அமைப்பை பெற்ற அன்பர்கள் புலன் அடக்கம் பற்றிய தெளிவில் இருப்பார்கள், வாழ்க்கையை இயல்பாக வாழும் தன்மையை பெற்று இருப்பார்கள் என்பது கவனிக்க தக்கது.

கேது வலிமை பெரும் ஜாதகம் :

தனிப்பட்ட அமைப்புடன் குழுவாக செயல்படும் தன்மையை பெற்று இருப்பார்கள், ஜாதகருக்கு தான் அமர்ந்த தத்துவத்தின் அடிப்படையில் இருந்து 100% விகித நன்மைகளை தங்குதடையின்றி செய்வார், ஆத்மா பலம் கொண்டவர்களாக திகழ்வார்கள், ஆன்மீக வெற்றியை பெரும் யோகம் பெற்றவர்கள், புலன்களை அடக்கி ஆளும் வல்லமை ஜாதகருக்கு இயல்பாகவே அமைந்திருக்கும், குறிப்பாக செயல்திறன் மற்றும் அறிவில் தெளிவு பெற்றவர்களாகவும், பலரது கேள்விகளுக்கு சரியான பதில்தரும் ஞானம்  பெற்றவர்களாகவும், சமுதாயத்தை அன்பின் வழியிலும் அறவழியிலும் இயக்கும் தன்மை பெற்றவர்கள், தனது அறிவு திறனால் சாதிக்க இயலாத விஷயம் ஒன்றும் இல்லை என்ற நிலையை தரும்.

ஜோதிட ரீதியாக குரு,புதனுக்கு நிகரான 3 மடங்கு அறிவு திறனையும், இயக்க சக்தியையும் வாரி வழங்கும் தன்மையை பெற்றவர் கேது பகவான், சிறந்த ஆன்மீகவாதிகள், இறை நிலை சிந்தனையாளர்கள், வருமுன் உணரும் சக்தி படைத்தவர்கள், கல்வி கேள்விகளில் புகழ் பெரும் விற்பனர்கள், ஜோதிட கணித  மேதைகள், பல சாம்ராஜ்யங்களை கட்டியாளும் தனி திறமைகளை கொண்டவர்கள், சாஷ்திரங்களையும் சம்பிரதாயங்களையும் வகுக்கும் வல்லமை பெற்றவர்கள், பிரபஞ்ச ரகசியங்களை அறிந்தவர்கள், இறை நிலையுடன் ஜீவகலப்பு பெரும் யோகம் பெற்றவர்கள் அனைவரின் ஜாதகத்திலும் கேது பகவான் மிகவும் சிறப்பாக பஞ்சபூத தத்துவ அமைப்பில் அமர்ந்திருப்பார் என்பது கவனிக்க தக்கது.

எனவே சுய ஜாதகத்தில் சாய கிரகமான ராகு கேது வலிமை பெறுவது குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து 100% விகித யோக வாழ்க்கையையே பெற்று தரும் என்பதை மறுக்கவும் இயலாது, மாற்றவும் முடியாது.

வாழ்க வளமுடன்  
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வியாழன், 1 ஜனவரி, 2015

அதிர்ஷ்டங்களையும் வெற்றி வாய்ப்புகளையும் வாரி வழங்கும் - 2015

வணக்கம் அன்பர்களே !



இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் 

இந்த 2015 ஆண்டு 100% அதிர்ஷ்டங்களையும் வெற்றி வாய்ப்புகளையும் வாரி வழங்கும் விதமாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை, தொழில் துறையில் வங்கி மற்றும் நிதி நிறுவனம் போன்ற அமைப்புகளில் எதிர்பாராத வளர்ச்சி நிச்சயம் அமையும், நிதி தன்னிறைவாக அனைவருக்கும் கிடைக்கும் விதமான சூழ்நிலைகள் ஏற்ப்படும், பொருளாதார ரீதியான வெற்றிகள் மிகவும் சிறப்பாக அமையும் என்பதால் பணம் மற்றும் நிதி வட்டி வரவு செலவுகள் மிகவும் சிறப்பாக நடைபெறும், நிதி சார்ந்த தொழில்களில் இருப்பவர்கள் எதிர்பாராத வரவையும், இதுவரை வாராத நிலுவை தொகையெல்லாம் வசூல் ஆகும், வாக்கு பலப்படும் வாக்கை தொழிலாக கொண்டு செயல்படும் அன்பர்களுக்கு அபரிவிதமான தொழில் வெற்றி கிட்டும், குறிப்பாக வழக்கறிஞர், ஜோதிடர், அரசியல் போன்ற அமைப்பில் இருப்புவர்கள் எதிர்பாராத நன்மைகளை பெறுவார்கள்.

வண்டி வாகன தொழில்கள், மற்றும் சொகுசு வாகன துறைகளில் அதிரடியான வளர்ச்சியை பெரும், வண்டி வாகன துறை சார்ந்த தொழில்களில் இருப்பவர்களுக்கு இந்த வருடம் மிக மிக சிறப்பாக இருக்கும், மேலும் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான துறை எதிர்பாராத வளர்ச்சியை பெரும், வீடு மற்றும் நிறுவன  கட்டுமான துறையில் இருப்பவர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் வந்து கதவை தட்டும், போக்குவரத்து துறையில் இருப்பவர்கள் அபரிவிதமான வளர்ச்சியை பெறுவார்கள்.

சிறிய முதலீடு மற்றும் விவாசாயம் சார்ந்த தொழில்களில் இருப்பவர்களுக்கு இந்த வருடம் மிகவும் சிறப்பாக அமையும், ஏஜென்சி துறையில் இருக்கும் அனைவருக்கும் அபரிவிதமான லாபம் வந்து சேரும், பொதுமக்கள் ஆதரவை பெற்று மிகப்பெரிய முன்னேற்றத்தை பெறுவார்கள், சிறு வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பாராத முன்னேற்றமும் புதிய வாய்ப்புகளும் அதிக அளவில் வந்து சேரும், தன்னம்பிக்கை அதிகரிக்கும் விதமாக பல நிகழ்வுகள் உண்டாகும் முன்னேற்றம் என்பது அபரிவிதமாக இருக்கும் என்பதில் மாற்றம் இல்லை அன்பர்களே !

தொழில் வாய்ப்புகள் அனைவருக்கும் எதிர்பார்த்த வண்ணம் கை கொடுக்கும், குறைந்த முதலீட்டில் பல மடங்கு லாபம் பெரும் தொழில்கள் அனைத்தும் மிக சிறப்பாக நன்மைகளை தரும், நெருப்பு தத்துவம் சார்ந்த தொழில்களில் இருப்பவர்களும், தொழில் நுட்பம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களும் அபரிவிதமான வெற்றி வாய்ப்புகளை பெறுவார்கள், வெளிநாடுகளில் இருந்து வரும் வருமானம் அதிகரிக்கும், அனைத்து தொழில்களும் 100% விகித வெற்றியை பெரும் யோக காலமாக இந்த ஆண்டை கருதலாம்.

லாப ஸ்தானம் மிகவும் வலிமை பெற்று இருப்பது இந்த 2015ம் வருடம் அனைவருக்கும் யோகம் நிறைந்த அதிர்ஷ்ட வாய்ப்புகளை வாரி வழங்கும் என்பதில் சந்தேகம் இல்லை, குறிப்பாக குழந்தைகள், பெண்களின் முன்னேற்றம் அபரிவிதமானதாக இருக்கும், பல சாதனைகளுக்கு உரிமை கொண்டாடும் வருடமாக இந்த 2015 அமையும், நீதி நேர்மை மற்றும் உண்மையின் பரிபாலனம் உலகெங்கும் கொடிகட்டி பறக்கும், உலக தலைவர்களுக்கு இந்த வருடம் சோதனை காலமாக அமையும், அரசியலில் யாரும் எதிர்பாராத திருப்பங்கள் நடைபெறும் குறிப்பாக உலக அரசியலில் சாத்தியம் இல்லாத விஷயங்கள் நடைமுறைக்கு வரும், மக்களின் வாழ்க்கை தரம் மிகவும் சிறப்பாக மேலோங்கும்.

எதிர்பாராமல் நிகழும் நிகழ்வுகள் :

1) அரசியலில் கட்சி தலைவர்களின் இழப்பு, ஈடுகட்ட இயலாத தன்மையில் அமையும்.
2) நெருப்பின் மூலம் பெரிய சேதாரங்கள் நிகழ வாய்ப்பு உண்டு.
3) மருத்துவ துறை எதிர்பாராத சிக்கல்களை எதிர்கொள்ளும்.
4) வெளிநாடுகளில் ஜீவனம் செய்பவர்களின்  நிலை சற்றே கவலை தரும் விதத்தில் அமையும்.
5) ஆன்மீகம் மிகப்பெரிய வெற்றியை சந்திக்கும், அனைவருக்குள்ளும் ஆன்மீக தேடல் நன்மைகளை வாரி வழங்கும்.
6) திரைதுறையில் உள்ளவர்களுக்கு இந்த வருடம் சோதனைகள் நிறைந்த காலமாகவே அமையும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வியாழன், 18 டிசம்பர், 2014

யோகம், அவயோகம் ஒருவரின் சுய ஜாதகத்தில் பலன் தரும் கால நேரம் எப்பொழுது ?


 ஒருவரின் சுய ஜாதக நிலையை வைத்து பலன் காண முற்படும் ஜோதிடர்கள் அனைவரும், கிரக சேர்க்கையை வைத்தும், கிரகங்கள் அமர்ந்திருக்கும் நிலையை வைத்தும், கிரகங்களின் தன்மையை வைத்தும், பாவகங்களின் வலிமையை வைத்தும், யோக அவயோக நிலைகளை நிர்ணயம் செய்வதுண்டு, பொதுவாக பலரது ஜாதகங்களில் யோக அமைப்புகளும் உண்டு, அவயோக அமைப்புகளும் உண்டு, இந்த யோக/அவயோக நிலைகள் ஜாதகருக்கு எப்பொழுது தனது பலாபலன்களை வழங்குகிறது என்பதை காண்பதே, சரியான ஜோதிடருக்கு முன்னாள் இருக்கும் சவால், சிலரது ஜாதகங்களில் யோக அமைப்புகளும், அவயோக அமைப்புகளும் இருந்த போதிலும், நடை பெரும் திசா புத்திகள் யோக/அவயோக பலன்களை ஏற்று நடத்தாமல் போய்விடின், ஜாதகருக்கு யோகம் இருந்தும் பலன் இல்லை என்பதே வருத்தத்திற்கு உரியது, இது யோக/அவயோக நிலை இரண்டிற்கும் பொருந்தும் அன்பர்களே !

நமது ஜோதிட முறையில் யோக அவயோகத்தின் தன்மைகளை பாவக வலிமை மூலம் நிர்ணயம் செய்வதால், ஒருவருக்கு நடைபெறும் திசை மற்றும் புத்திகளிலேயே ஜாதகத்தில் உள்ள யோக/அவயோக பலன்கள் நடைமுறையில் வருகின்றதா என்பதை மிக எளிதில் அறிந்துகொள்ள இயலும், ஒரு ஜாதகருக்கு வலிமை பெற்ற அல்லது யோகங்களை வழங்க கூடிய பாவகங்களின் பலன்களை, நடைபெறும் திசை மற்றும் புத்திகள் ஏற்று நடத்தினால் மட்டுமே ஜாதகருக்கு குறிப்பிட்ட பாவகத்தின் நன்மைகளும், யோகத்தின் பலன்களும் நடைமுறைக்கு வரும், மாறாக நடைபெறும் திசை புத்திகள் யோகங்களை தரும் பாவக பலன்களை ஏற்று நடத்த வில்லை எனில், ஜாதகருக்கு இதனால் எவ்வித நன்மையையும் நடைபெற வாய்ப்ப்பில்லை என்பதே முற்றிலும் உண்மை, ஆக சுய ஜாதகத்தில் யோக அமைப்புகள் இருந்த போதிலும், நடைமுறையில் ஜாதகருக்கு பலன்களை தருகிறத என்பதை தெளிவு பட தெரிந்துகொண்டு ஜாதகருக்கு பலன் சொல்ல முற்படுவதே சரியான ஜோதிட கணித முறை அன்பர்களே!

கிழ்கண்ட உதாரண ஜாதகத்தை ஆய்வுக்கு எடுத்து கொள்வோம் அன்பர்களே !



ஜாதகியின் லக்கினம் : ரிஷபம்
ஜாதகியின் ராசி : கடகம்
ஜாதகியின் நட்சத்திரம் : ஆயில்யம் 1ம் பாதம்.

ஜாதகிக்கு தற்பொழுது நடைமுறையில் உள்ள சுக்கிரன் திசை சுய ஜாதக அமைப்பின் படி 6,9,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பலனை தருவது மிகுந்த துன்பத்திற்கு ஆளாக்கி கொண்டு இருக்கிறது, பொதுவாக பெண்கள் ஜாதகத்தில் 12ம் பாவகம் பாதிக்க படுவது அவ்வளவு சிறப்பான விஷயமாக கருத இயலாது ஏனெனில், அயன சயன அமைப்பில் இருந்தும், மன நிம்மதி என்ற அமைப்பில் இருந்தும் ஜாதகிக்கு எவ்வித நன்மையையும் தாராது, குறிப்பாக மன நிம்மதி என்ன விலை என்று கேட்க்கும் சூழ்நிலைக்கு ஆளாக்கும், மேலும் ஜாதகியின் 12ம் பாவகம் அமைவது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு முதல் வீடான  ( கால புருஷ தத்துவ அமைப்பிற்கு லக்கினம் ) சர மேஷ ராசியாக இருப்பதால் ஜாதகி 12ம் பாவக வழியில் இருந்து அனுபவிக்க வேண்டிய இன்னல்களை 100% விகிதம் அனுபவிக்கும் தன்மையை தந்தது, சர நெருப்பு தத்துவ அமைப்பில் அமர்ந்த 12ம் பாவகம், காட்டு தீயின் தன்மையுடன் ஜாதகிக்கு தரவேண்டிய இன்னல்களை எவ்வித குறைபாடும் இன்றி வாரி வழங்கியது.

 பொதுவாக சுக்கிரன் திசை ஜாதகருக்கு அதிக நன்மையை தரும் என்பர், ஜாதகிக்கு இது நேர்மாறாக அமைந்துவிட்டது, சுக்கிரன் திசை சுய ஜாதகத்தில் விரைய ஸ்தானமான 12ம் பாவக பலனை ஏற்று நடத்தியது, ஜாதகியின் வாழ்க்கையை பெரிய புயலுக்கு ஒப்பாக கலங்கடித்தது, 12ம் பாவகம் சர ராசியான மேஷத்தில் 26 பாகையில் ஆரம்பித்து ஸ்திர ராசியான ரிஷபத்தில் 26 பாகை வரை வியாபித்து இருந்தது சர ஸ்திர ராசிகள் அமைப்பில் இருந்து விரைவான நீடித்த  அவயோக பலன்களை அனுபவிக்க வைத்தது, 12ம் பாவகம் மேஷத்தில் ஆரம்பித்த போதிலும், ரிஷபத்திலேயே அதிக பாகைகளை கொண்டு இருப்பதும், ரிஷபம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு குடும்ப ஸ்தான அமைப்பில் வருவதும், ஜாதகியின் குடும்ப வாழ்க்கையை கேள்விக்குறியாக மாற்றியது, நடைபெறும் சுக்கிரன் திசையும் 12ம் பாவக பலனை ஏற்று நடத்தியது, ஜாதகிக்கு குடும்ப வாழ்க்கையில்  நிம்மதி என்பதே இல்லை என்ற சூழ்நிலை உருவானது, வருமானம் என்ற விஷயத்தையும் பதம் பார்த்தது, ஜாதகியின் பேச்சுக்கு சிறிதும் மதிப்பில்லாமல் போனது, ஆக மொத்தத்தில் ஜாதகிக்கு 12ம் பாவகம் தான் தரவேண்டிய அவயோக பலன்களை தங்குதடையின்றி சுக்கிர திசையில் ( சிலர் லக்கினாதிபதி திசை தீமை தாரது என்பர் ) வாரி வழங்கியது.

ஜாதகிக்கு நடைபெறும் சுக்கிரன் திசை 6,9,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன்  தொடர்பை பெற்று பலனை தருவது 6ம் பாவக வழியில் இருந்து மறை முக எதிர்ப்பு, மற்றும் உடல்  சார்ந்த தொந்தரவுகள், எதிரிகளால் மன நிம்மதி இழப்பு, எதிர்பார்ப்புகள் யாவும் நடைபெறாமல்  போகும் தன்மை, முன்னேற்றத்திற்க்காக பல வகையில் போராடும் தன்மை, எதிர்பாராத சில இழப்புகள், கடன் கொடுப்பது பெறுவதால் இன்னல்கள், வாழ்க்கை துணையே எதிரியாக மாறும் சூழ்நிலை, தேவையில்லா பிரச்சனைகளை எதிர்கொள்ளும் தன்மை, உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் போராடவேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகும் தன்மையை தருகிறது, யாரையும் நம்பி எந்த ஒரு விஷயத்திலும் ஈடுபட இயலாத சூழல், நம்பியவர்களால் ஏமாற்றப்படும் தன்மை, எதிர்பார்க்கும் சில  விஷயங்கள் ஏமாற்றப்படும் தன்மையும், விரக்தி மனபான்மையையும் தரும்.

9ம் பாவக வழியில் இருந்து ஜாதகியின் உறவினர்கள் அல்லது பெரியவர்களின் ஆதரவை பெற இயலாத சூழ்நிலையை தந்தது, இறை அருளின் கருணையை பெற இயலாமல் வாழ்க்கையில் போராடும் சூழ்நிலையை தந்தது, எவ்வளவு நல்லவராக இருந்த போதிலும் ஜாதகிக்கு நற்பெயர் கிடைப்பது அரிதானது, தன்னை சார்ந்தவர்களின் உதவிகளையும் பெற முடியாத தன்மையை தந்தது, எந்த ஒரு பிரச்சனைகளையும் ஜாதகி ஒருவராகவே தனித்து நின்று எதிர்கொள்ளும் சூழ்நிலையை தந்தது, தன்னம்பிக்கையை வெகுவாக குறைத்தது, தனது முன்வினை பதிவின் பலன்களை முழுவதும் அனுபவிக்கும் தன்மையை இந்த பிறவியிலேயே அனுபவிக்க நேர்ந்தது.

12 ம் பாவக வழியில் இருந்து ஜாதகி குடும்ப வாழ்க்கையில் நிம்மதியின்மை, எதிர்பாராத இழப்புகள், வீண் விரையம், அதிக மன போராட்டம், எதிர்பாராத சூழ்நிலையை சமாளிக்கத தெரியாத தன்மை, விபத்து, உடல் தொந்தரவுகள், பண விரையம், எதிர்பார்க்கும் விஷயங்கள் நடைபெறாமல் ஜாதகியை அலைகழிக்கும் தன்மை, சாதரணமாக கிடைக்கும் விஷயங்களுக்கு கூட ஜாதகி அதிகம் போராடும் தன்மையை தரும், திருப்தி இல்லாத வாழ்க்கை, உதவி செய்ய யாரும் இல்லாத சூழ்நிலை, சூழ்நிலையில் கட்டுண்டு வாழவேண்டிய சந்தர்ப்பத்தை தரும்.

இதுவெல்லாம் ஜாதகிக்கு தற்பொழுது நடைபெறும்  சுக்கிரன் திசை வரையில்தான் அதாவது 07/12/2015 வரையில் மட்டுமே, இதற்க்கு பிறகு வரும் சூரியன் திசை ஜாதகிக்கு பூர்வ புண்ணியமான 5ம் வீடு, 5ம் பாவகத்துடனே சம்பந்தம் பெற்று வெகுவான யோக பலன்களை வாரி வழங்குகிறது, தனது குழந்தைகள் மூலமும் தனது சுய அறிவு திறன் மூலமும் ஜாதகி மிகப்பெரிய அளவில் யோக பலன்களை அனுபவிக்க இயலும், அதற்க்கு பிறகு வரும் சந்திரன் திசையும் 10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களையே தருவதால் இனி வரும் எதிர்காலம் ஜாதகிக்கு மிகவும் பிரகாசமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை என்று ஜோதிடடீபம் கருதுகிறது, வாழ்த்துகள்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696 

செவ்வாய், 16 டிசம்பர், 2014

திருமண பொருத்தம் காணும் பொழுது பெண்களின் ஜாதகத்தில் 8ம் பாவகத்திற்க்கு முக்கியத்துவம் தருவது எதனால் ?


 திருமண பொருத்தம் காணும் பொழுது பெண்களின் ஜாதகத்தில், லக்கினத்தில் இருந்து 8ம் பாவகமான ஆயுள் ஸ்தான அமைப்பிற்கு முக்கியத்துவம் தந்து ஜோதிடர்கள் பொருத்தம் காண்பது உண்டு, பொதுவாக இது குறிப்பிட்ட பெண்ணுக்கு ஆயுள் பாவகமாக வந்த போதிலும், தனது வாழ்க்கை துணையை குறிக்கும் 7ம் பாவகத்திற்க்கு 2ம் பாவகமாக வருவது, ஜாதகியின் கணவனுக்கு குடும்ப ஸ்தான அமைப்பை தெளிவாக தெரிந்துகொள்ள உதவும், அதாவது பெண்ணின் ஜாதகத்தில் 8ம் பாவக வலிமை வைத்து, ஜாதகி தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து (7க்கு 2ம் வீடான 8ம் பாவகத்தை ) குடும்ப வாழ்க்கையை எவ்வாறு வாழும் யோகத்தை தரும் என்பதை, ஜாதகியின் ஜாதக அமைப்பில் இருந்தே துல்லியமாக அறிந்துகொள்ள இயலும் என்பதால் பெண்ணின் ஜாதகத்தில் ஆயுள் பாவகமான 8ம் பாவகத்திற்க்கு முக்கியத்துவம் தந்து பலன் காண்கின்றனர்.

உதாரணமாக ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 8ம் பாவகம் மிகவும் வலிமை பெற்று இருப்பின், ஜாதகி தனது திருமணதிற்கு பிறகு தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து சிறப்பான குடும்ப வாழ்க்கையை பெரும் யோகத்தை தரும், தனது கணவன் அமைப்பில் இருந்து முழு ஆதரவும், அவரின் இனிமையான பேச்சும் ஜாதகிக்கு மன மகிழ்ச்சியையும், சந்தோஷத்தையும் வாரி வழங்கும், தனது கணவனுக்கு அதிகபடியான வருமான வாய்ப்பையும், திடீர் அதிர்ஷ்ட யோகங்களையும் ஜாதகியின் 8ம் பாவகம் வாரி வழங்கும், ஜாதகியை திருமணம் செய்ததால் ஜாதகியின் கணவர் சிறந்த யோக வாழ்க்கையை பெறுவார், சில ஆண்கள் திருமணதிற்கு பிறகு அபரிவிதமான வளர்ச்சியை பெறுவதற்கு அவர்களது வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் திடீர் அதிர்ஷ்டத்தை தரும் 8ம் பாவகம் வலிமை பெற்று அமைவதே காரணம் அன்பர்களே.

பெண்களின் ஜாதகத்தில் ஆயுள் பாவகமான 8ம் பாவகம் வலிமை பெறுவது, ஜாதகிக்கு மட்டுமல்ல, ஜாதகியின் குடும்ப வாழ்க்கைக்கே சிறந்த யோக பலன்களை வாரி வழங்கும், ஜாதகி திருமணம் நடைபெற்று புகுந்த வீட்டில் காலடி எடுத்து வைத்த அந்த கணத்தில் இருந்து ஜாதகியின் யோக வாழ்க்கை ஆரம்பமாகிவிடும், தனது கணவன் இதுவரை சாதாரண தொழில் அல்லது பணியை மேற்கொண்டு இருந்தால், இவரது வருகைக்கு பிறகு அபரிவிதமான வருமான வாய்ப்பை தனது கணவன் பெறுவதும், தொழில் முன்னேற்றங்களை அதிர்ஷ்ட வாய்ப்புகளை பெறுவதும் கண்முன்னே தெளிவாக தெரியும், இதுவரை சமுதாயத்தில் சாதாரண மனிதராக இருந்தவருக்கு பல பெரிய மனிதர்களின் அறிமுகமும், பிரபல்யமும் உண்டாகும், ஜாதகரின் வெளிவட்டார பழக்க வழக்கங்கள் அதிகரிக்கும், பொதுமக்கள் மற்றும் நண்பர்கள் ஆதரவின் மூலம் ஜாதகர் 100% விகித வெற்றி வாய்ப்பை பெறுவார் என்பது உறுதி.

தனது கணவன் ஜாதகியை எப்படி நடத்துவார் என்பதும், எப்படி வைத்திருப்பார் என்பதும் ஜாதகியின் ஆயுள் பாவகமான 8ம் பாவகமே நிர்ணயம் செய்யும், உதாரணமாக சில தம்பதியரின் வாழ்க்கையில் பேச்சு என்பது பல விளைவுகளை ஏற்ப்படுத்தும், சிலரது பேச்சை அவர்களது வாழ்க்கை துணை கேட்காமல் நடந்துகொண்டு ஜாதகியின் மனைதை நோகடிப்பது உண்டு, பெண்களின் சுய ஜாதகத்தில் 8ம் பாவகம் வலிமை பெரும் பொழுது இதுபோன்ற நிகழ்வுகள் நிகழ வாய்ப்பு என்பதே இல்லை, ஜாதகியின் வாழ்க்கை துணை தனது பேச்சின் மூலம் ஜாதகியின் மனம் எப்பொழுதும்  சந்தோஷமாக வைத்திருக்கு தன்மையுடன் காணப்படுவார், பரஸ்பர அன்புடன் ஜாதகியின் வாழ்க்கை துணை விளங்குவார், ஜாதகியின் எண்ணம் மற்றும் மன நிலை அறிந்து நடந்துகொள்ளும் பேராண்மையை தரும், தனது கணவன் தனது வார்த்தைக்கு கட்டுப்படும் தன்மையையும், தனக்கு தரவேண்டிய மதிப்பு மரியாதையை சிறிதும் குறைவின்றி தரும் யோகத்தை தரும், முரண்பட்ட கருத்து வேறுபாடுகளுக்கும்,மனம் நோகும் வண்ணம் தேவையற்ற ஏச்சுக்கும் பேச்சுக்கும் இடமளிக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக பெண்களின் ஜாதகத்தில் ஆயுள் பாவகமான 8ம் பாவகம் 6,8,12ம் வீடுகளுடன் தொடர்பு பெறுவதும், பாதக ஸ்தான அமைப்புடன் தொடர்பு பெறுவதும் ஜாதகியின் குடும்ப வாழ்க்கையை வெகுவாக பதம்பார்க்கும், குறிப்பாக பாதக ஸ்தானத்துடன் ( சர லக்கினத்திற்கு 11ம் வீடு, ஸ்திர லக்கினத்திற்கு 9ம் வீடு, உபய லக்கினத்திற்கு 7ம் வீடு ) சம்பந்தம் பெறுவது 200% விகித இன்னல்களை தனது கணவன் மற்றும் குடும்ப அமைப்பில் இருந்து அனுபவிக்க வைக்கும், திருமணம் நடைபெற்று ஜாதகி காலடி எடுத்து வைத்த அந்த கணத்தில் இருந்து, தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து எவ்வளவு இன்னல்களை அனுபவிக்க இயலுமோ அவ்வளவு துன்பங்களை அனுபவிக்கும் சூழ்நிலையை தரும், இது ஆண் பெண் இருவரின் ஜாதகதிர்க்கும் பொருந்தும் அன்பர்களே! எனவே  ஜாதக பொருத்தம் காணும் பொழுது வரன், வது இருவரின் ஜாதகத்திலும் ஆயுள் பாவகமான 8ம் பாவகதிர்க்கு அதி முக்கியத்துவம் தரப்படுகிறது என்பதே முற்றிலும் உண்மை.

8ம் பாவகம் அதிர்ஷ்டத்தை தந்தாலும் திடீரெனவே தரும், துரதிர்ஷ்டத்தை தந்தாலும் திடீரெனவே தரும் என்பதாலேயே, திருமணதிற்கு பிறகு சிலரின் முன்னேற்றம் அபரிவிதமாக இருப்பதும், ஆதாலபாதலத்துக்கு செல்வதற்கு முக்கிய காரணமாக அமைகிறது அன்பர்களே, சுய ஜாதகத்தில் ஆயுள் பாவகமான 8ம் வீடு வலிமை பெறுவது திருமணதிற்கு பிறகு தம்பதியர் வாழும் யோக வாழ்க்கையை குறிப்பிடும், சிலரது ஜாதகத்தில் 7ம் பாவகம் வலிமை பெற்று அமையும் பொழுது காதல் வாழ்க்கை சிறப்பாக அமையும், அவர்களே திருமணதிற்கு பிறகு தோல்வியை சந்திப்பதற்கு அவர்களது ஜாதகத்தில் ஆயுள் பாவகமான 8ம் பாவகம் வலிமை பெறாத அமைப்பே காரணமாக இருக்கும், மேலும் பல தம்பதியர் விவாகரத்து பெறுவதற்கும் இந்த ஆயுள் பாவகமே காரணமாக அமைந்து விடுகிறது, இந்த பதிவை காணும் அன்பர்கள் திருமணம் செய்யும் முன் வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் ஆயுள் பாவகமான 8ம் பாவகம் எப்படிபட்ட நிலையில் உள்ளது, தனது ஜாதகத்தில் ஆயுள் பாவகம் எப்படி பட்ட நிலையில் உள்ளது என்பதை சிறந்த ஜோதிடரை கொண்டு தெளிவு பெற்ற பிறகு, தங்களது திருமண வாழ்க்கையை நிர்ணயம் செய்துகொள்ளுங்கள், வாழ்த்துகள்.
  
வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696 


சனி பெயர்ச்சி, விருச்சிக ராசிக்கு செல்லும் சனிபகவான் லக்கின வாரியாக தரும் பலன்கள் - விருச்சிகம்



சனி பகவான்  திருக்கணித பஞ்சாங்க முறைப்படி 02-11-2014 ஞாயிறு கிழமை அன்று இரவு 08-54 மணிக்கு துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகியுள்ளார். விருச்சிக ராசியில் சனி சுமார் இரண்டரை ஆண்டு காலம் சஞ்சரிப்பார், இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு லக்கினத்தை சார்ந்தவர்களுக்கும் சனி பகவான் வழங்கும் யோக அவயோக பலன்களை பற்றி நாம் இந்த பதிவில் சிந்திப்போம் அன்பர்களே!   


ஜோதிடதீபம் ராசியை அடிப்படையாக வைத்து சனி பெயர்ச்சி பலன்களை வழங்காமல், ஏன் லக்கினத்தை அடிப்படையாக கொண்டு பலன் சொல்லுகிறது என்ற சந்தேகம் சிலருக்கு வரக்கூடும், லக்கினம் என்பதே ஜாதகத்திற்கு அடிப்படையானது, இந்த லக்கினம் எனும் முதல் பாவகத்தை வைத்தே ஒருவருக்கு சரியான ஜாதக பலன்களை சொல்ல இயலும், ராசியை வைத்து சொல்வது என்பது, பொது பலன்களாகவே இருக்குமே தவிர ஒரு ஜாதகருக்கு தெளிவான பதிலையும், பலன்களையும் தர வாய்ப்பில்லை என்பதால் ஒவ்வொரு லக்கினத்தருக்கும், இந்த சனி பெயர்ச்சி எவ்வித பலன்களை தருகிறது என்று தெளிவாக இனி வரும் பதிவுகளில் காண்போம்.


அடிப்படையில் ஒரு விஷயத்தில் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள் அன்பர்களே! சனி பகவான் தற்பொழுது விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளார், இனி வரும் 30 மாதங்கள் சனி பகவான் விருச்சிக ராசியில் சஞ்சாரம் செய்கிறார், விருச்சிகத்தில் அமர்ந்து  6ம் பார்வையாக மேஷ ராசியையும், 7ம் பார்வையாக ரிஷப ராசியையும், 10ம் பார்வையாக சிம்ம ராசியையும் பார்ப்பதால் இந்த ராசிகளுக்கு திருஷ்டி பலன் என்ற அமைப்பில் பலன் தருகிறார்.

இலக்கின ரீதியாக பலன்கான முனையும் அன்பர்கள் அனைவரது ஜாதகத்திலும் தற்பொழுது நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஆகியவை ஏற்று நடத்தும் பாவகம் கிழ்கண்ட ராசிகளில் அமைந்தால் மட்டுமே( அதாவது விருச்சிகம்,மேஷம்,ரிஷபம் மற்றும் சிம்மம் ஆகிய ராசிகள் எந்த எந்த பாவகமாக வருகிறதோ அந்த பாவக பலனை தற்பொழுது நடைமுறையில் உள்ள திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஆகியவை தொடர்பு பெறுதல் ) ஜாதகருக்கு தற்பொழுது பெயர்ச்சி பெற்று இருக்கும் சனிபகவான் நன்மையையோ, தீமையையோ செய்வார் என்பதை கருத்தில் கொள்க, எனவே தற்பொழுது நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் மேற்கண்ட ராசிகளுடன் தொடர்பு பெருகின்றத என்பதை கவனிப்பது மிக முக்கியமானதாக ஜோதிடதீபம் அறிவுறுத்துகிறது . 


விருச்சிக லக்கினம் : 


லக்கினத்தில் அமர்ந்த சனி பகவான் தங்களுக்கு மனோ ரீதியான போராட்டங்களை தந்த போதிலும், வெளிநாடுகளில் இருந்து நல்ல வருமானத்தை தரும் வாய்ப்பை தருகிறார், குடும்பத்தில் வாழ்க்கை துணை வழியில் இருந்து ஜாதகருக்கு நல்ல ஆதரவு கிடைக்கும், தன்னம்பிக்கை மேலோங்கும், எதிர்பாராத திருப்பங்கள் மூலம் வாழ்க்கை பிரகாசிக்கும், எடுக்கும் காரியங்கள் யாவும் வெற்றி மேல் வெற்றி தரும், ஜாதகர் எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளிக்கும் யோகத்தை தரும், ஜாதகர் பல திருத்தலங்களுக்கு திடீரென சென்றுவரும் யோகத்தை தரும், எதிர்பாராத உதவிகள் திடீரென கிடைக்க வாய்ப்பு உண்டாகும், தனது சிந்தனையும் மனதையும் இனி வரும் காலங்களில் ஜாதகர் ஒருமுகபடுத்துவது சால சிறந்தது, தெளிவான சிந்தனையும் செயல்பாடுகளுமே ஜாதகருக்கு வெற்றியை தரும் என்பதால் தனது சுய முன்னேற்றத்தில் ஜாதகர் அதிக அக்கறை கொள்வது நல்லது, நல்ல வேலையாட்கள் கிடைக்கும் யோக காலம் இதுவென்பதால், ஜாதகர் தான் செய்துவரும் தொழில்களில் விருத்தியை பெறுவதற்கு உண்டான சகல முயற்ச்சிகளையும் மேற்கொள்வது மிகுந்த நன்மைகளை வாரி வழங்கும்.

6ம் பார்வையாக எதிரி ஸ்தானமான 6ம் பாவகத்தை வசீகரிக்கும் சனி பகவான் ஜாதகருக்கு எதிராக செயல்படும் அன்பர்கள் மூலமாகவே நன்மையை பெறுவார், மேலும்  ஜாதகருக்கு சில நாட்கள் இடைவெளியில் தொடர்ந்து வருமான வாய்ப்பை தந்த வண்ணமே இருப்பார் என்பதை கவனத்தில் கொள்வது சால சிறந்தது, சனி பகவான் தரும் வருமான வாய்ப்புகள் யாவும் சனி பெருக்கம் போல் பெருகிக்கொண்டே இருக்கும் என்பதை மனதில் வைத்து ஜாதகர் தனது செயல்பாடுகளை அமைத்துகொல்வது சிறந்த நன்மைகளையும், யோக வாழ்க்கையையும் வாரி வழங்கும், கடன் வாங்குவது, கடன் கொடுப்பது போன்ற விஷயங்கள் மிகவும் சிறப்பாக நடைபெறும், ஜாதகரை தேடி பண உதவிகள் வந்த வண்ணமே இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு செயல்படுவது மிகுந்த நன்மையை தரும், புதிய பொருட்கள் இயந்திர பொருட்கள், தொழில் நுட்பம் சார்ந்த விஷயங்களில் ஜாதகருக்கு 100% விகித வெற்றியை தரும், உடல் நிலையில் ஜாதகர் அதிக அக்கறை கொள்வது சால சிறந்தது, ஏனெனில் வயிறு சார்ந்த தொந்தரவுகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டாகும், மருத்துவ சிகிச்சை தவிர்க்க இயலாது, சரியான உணவு பழக்க வழக்கங்களை மேற்கொள்வது பெரிய தொந்தரவுகளில் இருந்து காப்பாற்றும்.

7ம் பார்வையாக களத்திர பாவகத்தை வசீகரிக்கும் சனி பகவான் ஜாதகருக்கு வாழ்க்கை துணை வழியில் இருந்து 100% விகித ஆதரவை வாரி வழங்குகிறார், குடும்ப வாழ்க்கையில் எவ்வித தொந்தரவும் இன்றி சுமுகமான உறவுகள் நீடிக்கும், பிரிவு வரை சென்ற தம்பதியரை சேர்த்து வைக்கும் வல்லமையை சனிபகவான் தனது பார்வையின் மூலம் தருகிறார், வருமான வாய்ப்புகள் என்பது ஸ்திரமான தன்மையுடன் தொடர்ந்து வந்தவண்ணமே இருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை, கை நிறைவான வருமானம் மூலம் ஜாதகரின் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும், புதிய வீட்டிற்கு தேவையான உபகரணங்களையும், வழக்கை துணைக்கு தேவையான ஆடை ஆபரணங்களையும் வாங்கும் யோகம் உண்டாகும், கல்வியில் ஏற்ப்பட்ட தடைகள் நீங்கி, கல்வியில் வெற்றியும் உயர் கல்விக்கு உண்டான வாய்ப்பும் உண்டாகும், ஜாதகருக்கு குடும்பம், வாழ்க்கை துணை, வருமானம் என்ற அமைப்பில் இருந்து 100% விகித வெற்றி நிச்சயம் உண்டு என்பதால், இனிவரும் காலங்களை விரிச்சிக லக்கினம் கொண்டவர்கள் சிறப்பாக கையாண்டு நன்மை பெற ஜோதிடதீபம் வாழ்த்துகிறது.

10ம் பார்வையாக ஜீவன ஸ்தான அமைப்பை வசீகரிக்கும் சனிபகவான் ஜாதகருக்கு இனிவரும் காலங்களில் ஜீவன மேன்மையை எதிர்பாராத வண்ணம் ஸ்திர தன்மையுடன் வாரி வழங்குவது கவனிக்க தக்கது, ஜாதகரின் குல தெய்வ அருளால் புதிய தொழில் துவக்கம், புதிய தொழில் வாய்ப்புகள், சிறந்த வேலைவாய்ப்பை பெரும் யோகம் தன்னுடைய சுய உழைப்பின் மூலம் வாழ்க்கையில் வெகு விரைவில் முன்னேற்றம் பெரும் அமைப்பு, ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் மூலம் லாபம், தனது அறிவார்ந்த செயல்திறனால் சமுகத்தில் நல்ல அந்தஸ்து மற்றும் கௌரவத்தை பெரும் யோகத்தை வாரி வழங்கும், தன்னிறைவான பெருளாதார முன்னேற்றம் பெறுவதற்கு உண்டான சரியான நேரம் இதுவே என்று ஜாதகர் செயலாற்றும் தருணம் என்பதால், வாய்ப்புகளை தவற விடாமல் பயன்படுத்தி நிலையான வெற்றி காண்பது இவர்களது கடமை, "கடமையை செய் பலனை எதிர்பாராதே" என்ற வாக்கியத்திற்கு ஏற்றவாறு செயல்படுங்கள், நிச்சயம் தாங்கள் ஆற்றிய கடமைக்கு 100% விகித பலன்கள் உறுதியாக கிடைக்கும்.

விரிச்சிக இலக்கின  அன்பர்களே ! தற்பொழுது தங்களுக்கு நடைபெறும் திசை மற்றும் புத்தி மேற்கண்ட 1,6,7,10ம்  பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே, தங்களுக்கு மேற்கண்ட  சனிபகவானின், கோட்சார நன்மைகள் அல்லது தீமைகள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைபெறும் திசை 1,6,7,10ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் எவ்வித நன்மையும், தீமையும் நடைபெறாது என்பதை கவனத்தில் கொள்க, வாழ்த்துகள் .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696 

ஞாயிறு, 14 டிசம்பர், 2014

குழந்தை பாக்கியமும், பூர்வபுண்ணிய ஸ்தானமான ஐந்தாம் பாவக வலிமையையும் !


தனது குலம் செழிக்கவும், தனக்கு பின் தனது பெயர் சொல்லவும் ஒரு நல்ல வாரிசு வேண்டும் என்று தேடுதல் இல்லாத தம்பதியரை இப்புவியில் காண்பது அரிது, எவ்வளவோ மருத்துவ முன்னேற்றம் வந்த போதிலும் திருமணம் நடைபெற்று பல வருடங்கள் ஆகியும்,  ஒரு வாரிசுக்காக ஏங்கும் தம்பதியர் நிறைய உண்டு, பல மருத்துவர்களை பார்த்தும் புத்திர பாக்கியம் அமையாத தம்பதியரும், பல திருத்தலங்களுக்கு சென்றும் குழந்தை பாக்கியம் கிட்டாமல் வாடும் தம்பதியரும் உள்ளனர், இந்த பதிவில் புத்திர பாக்கியம் அமையாமல் தனது குலம் தழைக்க ஒரு நல்ல வாரிசு அமையாத நிலைக்கு காரணம் என்னவென்பதை ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே.

குழந்தை பாக்கியம் இல்லை என்று ஜாதகம் காண வரும் அன்பர்களுக்கு, ஜோதிடர்கள் சொல்லும் முதல் பரிகாரம் அவர்களது குல தெய்வம் எதுவோ அதற்க்கு முறையான வழிபாட்டையும், தான தர்மங்களையும் செய்யுமாறு அறிவுரை கூறுவது உண்டு, பொதுவாக குழந்தை பாக்கியம் அமையாத நிலைக்கு அடிப்படை காரணமாக குல தெய்வ சாபம் மற்றும் முறையான குல தெய்வ வழிபாடு செய்யாதது என்று அறிவுறுத்த படுகிறது.

 குல தெய்வ சாபம் என்றால் என்ன ?

1 சம்பந்தபட்ட தம்பதியரோ அல்லது அவர்களது முன்னோர்களோ வெகு காலமாகவோ, தலை முறை தலை முறையாக தனது குல தேவதைக்கு ஆற்ற வேண்டிய கடமைகளில் இருந்து தவறி நடப்பதால் வரும் சாபம் என்று வைத்து கொள்ளலாம்.
2 சம்பந்தபட்ட தம்பதியரின் முன்னோர்கள் தனக்கு பிறந்த குழந்தை பெண் என்பதால், அதன் உயிருக்கு பங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவது ( அதாவது சிசு கொலை )
3 சம்பந்தபட்ட தம்பதியரின் முன்னோர்கள் தனக்கு இறை அருளால் அமைந்த கருவை, தனது சௌகர்யத்திற்காக கருசிதைவு செய்து கொள்ளுதல். ( இது தம்பதியருக்கும் பொருந்தும்.)
4 கருவுற்ற பெண் வந்து யாசிக்கும் பொழுது அவர்களுக்கு இல்லை என்று சொல்வதும், அவர்களை உதாசீனபடுத்துவதும் குல தெய்வ சாபத்திற்கு வழிவகுக்கும்.
5 பசு அதன் கன்று குட்டியை பிறந்தவுடன் பிரிப்பதும், பசுவிற்கு துன்பம் இளைப்பதும், பசு தந்த பாலில் நீர் கலந்து விற்பதும், பச்சிளம் குழந்தைக்கு கொடுப்பதும் குல தெய்வ சாபத்திற்கு அடிகோலும்.
6 கற்று கொடுத்த குருவுக்கு இன்னல் தருவதும், துரோகம் செய்வதும், சாஸ்திரம் அறிந்த பெரியோர்களை அவமதிப்பதும், இறைபணியில் அர்ப்பணித்து கொண்டவர்களின் வாழ்க்கையில் இன்னல்களை ஏற்ப்படுத்துவதும், குல தெய்வ சாபத்திற்கு வழிவகுக்கும்.
7 பெற்றோர்களை நிந்தனை செய்வதும், இயலாமல் இருக்கும் பெரியோரின் சொத்துகளை  அபகரிப்பதும் குல தெய்வ சாபத்திற்கு வழிவகுக்கும்.
8 தன்னை நாடிவரும் பெண்களுக்கு தீங்கு  விளைவிப்பதாலும், கட்டிய மனைவியை நிந்தனை செய்வதாலும் குல தெய்வ சாபத்திற்கு ஆளாகும் சூழ்நிலையை தரும்.
9 சிறு வயதிற்கு உற்பட்ட குழந்தைகள் அனைவரும் குல தேவதையின் அம்சம் என்பதால், அவர்களுக்கு உணவு தர மறுப்பதாலும் குல தெய்வ சாபம் ஏற்ப்பட வாய்ப்பு உண்டு.
10 ஆன்மீக பெரியவர்களை நிந்தனை செய்வதும், அவர்களுக்கு எண்ணத்தாலும் செயலாலும் துன்பம் விளைவிப்பதும் குல தெய்வ சாபத்திற்கு ஆளாக்கும்.
11 சர்ப்பங்களை கொள்வதும் ஒருவகையில் குல தெய்வ சாபத்திற்கு ஆளாக்கும், புத்திர பாக்கியத்தில் தடை செய்யும்.
12 சேர்ந்து வாழும் தம்பதியரை பிரிப்பதும் குல தெய்வ சாபத்தை பெற வழிவகுக்கும்.

மேற்கண்ட காரணங்கள் குல தெய்வ சாபத்திற்கும், புத்திர பாக்கியத்தில் தடை உண்டாகவும் வாய்ப்புகளை ஏற்ப்படுத்தும், மேலும் சுய ஜாதகத்தில் புத்திர ஸ்தானமான 5ம் பாவகம் பாதிக்கப்படும் பொழுது ஜாதகருக்கு உதவி செய்ய எவரும் முன்வரமாட்டார்கள் என்பது கவனிக்க தக்கது அன்பர்களே.

மேற்கண்ட விஷயங்கள் குல தெய்வ சாபத்திற்கு காரணமாக அமைந்த போதிலும், இதில் அதிக இன்னல்களை தருவது உடனடியாக குல தெய்வ சாபத்திற்கு ஆளாக்குவது " சிசு கொலை, கருகலைப்பு "  ஆகிய இரண்டு மட்டுமே மிகுந்த துன்பத்திற்கு ஆளாக்கும், பிறக்கும் பெண் சிசு யாவும் அவர்களது குல  தேவதையை குறிக்கும், கருவில் உள்ள குழந்தைகள் யாவும் அவர்களது குலதெய்வமாகவே விளங்கும் என்பதால், இவற்றிற்கு விளைவிக்கும் துன்பங்கள் யாவும் தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வரும், இதற்க்கு தீர்வு காண்பது என்பதும் அவ்வளவு எளிதல்ல என்பதை நாம் அனைவரும் உணர்வது அவசியம், ஏனெனில் நமக்கு பின் வரும் சந்ததிக்கு புண்ணி பதிவை சேர்த்து வைக்காவிட்டாலும் சரி பாவ பதிவை சேர்த்து வைக்காமல் போவது நல்லது, நாம் செய்யும் தவறு நமக்கு பின் வருபவர்களுக்கு இன்னல்களை தர கூடாது அல்லவா ?

இனி தனது சுய ஜாதக அடிப்படையில் புத்திர பாக்கியம் உண்டா ? அதற்க்கு தடைகள் உள்ளனவா ? என்பதை சுய ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவது அவசியமாகிறது, பொதுவாக சுய ஜாதகத்தில் புத்திர பாக்கியத்தை குறிக்கும் ஐந்தாம் பாவகம் எக்காரணத்தை கொண்டும் பாதிப்பை பெறாமல் இருப்பது நல்லது, இது தம்பதியர் இருவருக்கும் பொருந்தும், குறிப்பாக ஐந்தாம் பாவகம் அவர்களது  லக்கினத்திற்கு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது ( சர லக்கினத்திற்கு பாதக ஸ்தானம் 11ம் வீடு, ஸ்திர லக்கினத்திற்கு பாதக ஸ்தானம் 9ம் வீடு, உபய லக்கினத்திற்கு பாதக ஸ்தானம் 7ம் வீடு ) புத்திர பாக்கியத்தை கேள்விக்குறியாக்கும், ஐந்தாம் பாவகம் 6,8,12ம் பாவகங்களுடன் சம்பந்தம் பெறுவதும் மிகுந்த இன்னல்களையே தரும், இதை போன்றே கால புருஷ தத்துவ அமைப்பிற்கும் 5ம் பாவகமான சிம்மம் பாதிப்பை பெறுவதும் குழந்தை பாக்கியத்தை கடுமையாக பாதிக்கும், மேற்கண்ட விஷயங்கள் யாவும் தம்பதியர் இருவரின் சுய ஜாதக அமைப்பிற்கும் பொருந்தும்.

ஒருவரது சுய ஜாதகத்தில் புத்திர ஸ்தானமான 5ம் பாவகம் பாதிக்கப்படும் பொழுது ஜாதகர் தனது பூர்வீகத்தில் வசிப்பதற்கு தடைகளை தொடர்ந்து தந்த வண்ணமே இருக்கும், ஜாதகரின் அறிவு சார்ந்த முயற்ச்சிகள் யாவும் வெறும் திட்டத்துடனே முடியும், நடைமுறைக்கு வருவதற்கு உண்டான வாய்ப்பை தாராது, ஜாதகரின் எண்ணங்கள் யாவும் வெறும் கற்பனையாகவோ கனவாகவோ மாறிவிட வாய்ப்பு உண்டு, இதை தவிர குழந்தை பாக்கியத்திற்கு எடுக்கும் அனைத்து முயற்ச்சிகளும் பலன் தாராமால் ஜாதகர்  மற்றும் ஜாதகரை சார்ந்தவர்கள் வெகுவாக மனபோரட்டத்திர்க்கு ஆளாகும் சூழ்நிலையை தர  கூடும், இவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவி செய்யும் அன்பர்களும் இருக்கமாட்டார்கள் என்பது கவனிக்க தக்கது, தனிமையில் போராட்ட வாழ்க்கையை வாழும் சூழ்நிலைக்கு ஆளாக்கும், மேற்க்கண்ட விஷயங்கள்  5ம் பாவகத்தின்  வலிமை அற்ற தன்மையால் நடைபெறும் என்பதை இவர்களது சுய ஜாதகத்தை ஆய்வு செய்தால் நமக்கு நிச்சயம் புலப்படும்.

இன்றைய நவநாகரீக உலகத்தில் இளம் தம்பதியர் தனது விருப்பத்திற்கு ஏற்றவாறு குழந்தை பெற்றுகொள்ள, கருக்கலைப்பு என்ற ஒரு விஷயத்தை சர்வ சாதரணமாக செய்கின்றனர், இதன் விளைவு அவர்களுக்கு தெரிவதில்லை இதனால் ஏற்ப்படும் விளைவுகளின் தன்மை மிகவும் கடுமையானதாக இருக்கும், உதாரணமாக வீட்டில் செல்வ வளம் குறைந்து தரித்திர நிலை உருவாகும், குல தெய்வ சாபத்தால் ஜாதகருக்கு மிக எளிதில் கிடைக்கும் விஷயங்களுக்கு கூட போராடி பெரும் சூழ்நிலையை தரும், சுய முன்னேறம் வெகுவாக பாதிக்கும், தனது சந்ததிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கும், உடல் நல குறைபாட்டை தரும், மருத்துவ செலவினங்களை அதிகரிக்கும், ஒற்றுமையாக இருந்த தம்பதியர் திடீரென பிரியும் சூழ்நிலையை தரும், எதிர்பாராத விபத்துகள் மூலம் உடல் நல குறைவு, பொருள் இழப்பு போன்றவை ஏற்ப்பட வாய்ப்பு உண்டாகும், இது போன்ற நிகழ்வுகள் நடைபெறும் பொழுது சம்பந்த பட்ட ஜாதகருக்கு யாரும் உதவி செய்ய முன்வரமாட்டார்கள் என்பதே  வருத்தத்திற்கு உரியது அன்பர்களே, எனவே இதுபோன்ற சந்தர்ப்பங்களை நீங்களே உருவாக்கி கொண்டு பின்னலில் வருத்தம் கொள்வதனால் எவ்வித பயனும் இல்லை என்பதே ஜோதிடதீபத்தின் கருத்து.

அடுத்த பதிவில் 5ம் பாவக வலிமையை சுய ஜாதக ரீதியாக நிர்ணயம் செய்வது பற்றி சிந்திப்போம் அன்பர்களே ........

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன் 
9443355696 

சனி, 13 டிசம்பர், 2014

விரைய ஸ்தானம் எனும் பனிரெண்டாம் பாவகம் வழங்கும் யோக வாழ்க்கை !




விரைய ஸ்தானம் எனும் பனிரெண்டாம் பாவகம் வழங்கும் யோக வாழ்க்கை ! எனும் தலைப்பை காணும் வாசக அன்பர்களுக்கு வியப்பு மேலோங்க வாய்ப்பு உண்டாகலாம், விரைய ஸ்தான அமைப்பில் இருந்து ஒரு ஜாதகர் என்ன யோக பலன்களை அனுபவிக்க இயலும், இந்த பாவக ஜாதகருக்கு அப்படியென்ன யோக வாழ்க்கையை தந்துவிடும் என்ற எண்ணம் வருவது இயற்கையே, பொதுவாக பாரம்பரிய ஜோதிடமுறையில் 6,8,12ம்  வீடுகள் தீய ஸ்தனமாகவே பாவிக்க பட்டு இருக்கிறது, குறிப்பாக 6,8,12ம் பாவக வழியில் இருந்து ஒரு ஜாதகர் நிச்சயம் தீய பலன்களே அனுபவிக்க நேரும் என்பதாகவே இருக்கின்றது, ஜாதகர் மேற்கண்ட 6,8,12ம் பாவக வழியில் இருந்து எவ்வித யோக பலன்களையும் அனுபவிக்க இயலாதா ? என்ற கேள்விக்கு உண்டான சிந்தனையே இந்த பதிவு அன்பர்களே ! இனி 12ம் பாவகத்தை பற்றி சிந்தனைக்கு எடுத்துகொள்வோம்.

வாழ்க்கையில் மனிதனின் செயல்கள் எல்லாம் மனதிருப்தி என்ற இலக்கை நோக்கியே செல்கிறது, இந்த மன திருப்தியை தருவது 12ம் பாவக வலிமையே, மன திருப்திக்காக ஒரு மனிதனை இந்த பனிரெண்டாம் பாவகம் எவ்விதம் ஆட்டி படைக்கிறது என்பதை சற்றே சிந்திப்போம் அன்பர்களே ! பொதுவாக ஒருவரது சுய ஜாதகத்தில் 12ம் பாவகம் வலிமை இழக்கும் பொழுது, ஜாதகர் தனது மனதிற்கு திருப்தியை தருவது எதுவென்று அறியாமல் கடுமையான குழப்பத்திற்கு ஆளாகும் சூழ்நிலையை தருகிறது, உதாரணமாக ஜாதகர் மது பழக்கத்திற்கு அடிமையாகும் முன்பு, தனக்கு மன திருப்தியை தருவதாக மற்றவர்கள் சொல்ல கேட்டு, மது பழக்கத்திற்கு அறிமுகமாகிறார், இறுதியில் ஜாதகரின் மனம் திருப்தியை பெறுகிறதா ? என்றால் நிச்சயம் இல்லை, மது பழக்கத்தால் ஜாதகரின் மனம் திருப்தியை பெற்று இருந்தால் உண்மையில் ஜாதகர் அந்த பழக்கத்தில் இருந்து 100% சதவிகிதம் விடுபட்டு அல்லவா இருக்க வேண்டும், ஆனால் நடப்பது என்ன ? ஜாதகர் மீண்டும் மீண்டும் தொடர்ந்து செய்து மன திருப்தியை தேடுகிறார்.

இதை போன்றே அனைத்து தீய பழக்கத்திற்கும் காரணமாக ஜாதகரின், வலிமை அற்ற 12ம் பாவக நிலை அடிகோலுகிறது, இந்த 12ம் பாவகம் வலிமை அற்று போகும் அன்பர்களின் மனதை, மற்றவர்கள் மிக எளிதில் தங்கள் வசப்படுத்தி கொண்டு தங்களுக்கு சாதகமான விஷயங்களை நிறைவேற்றி கொள்கின்றனர், ஒரு அரசியல்வாதி தனது தொண்டனை அடிமையாக வைத்திருக்கவும், ஒரு திரைப்பட நடிகர் தனது ரசிகர்களை தனது கைக்குள் வைத்திருக்கவும், ஒரு தீவிரவாத தலைவன் தனக்கு கிழ் சிலரை மூளை சலவை செய்து அடிமைகளாக வைத்திருக்கவும், போலி ஆன்மீகவாதி தனது சீடர்களை தனக்கு கிழ்படிந்து நடக்கும் சீடனாக சில நபர்களை பேச்சில் மயக்கி வைத்திருக்கவும், அவர்களின் 12ம் பாவக வலிமையற்ற தன்மையே காரணமாக அமைகிறது, மனிதர்களை மன ரீதியாகவும் உணர்ச்சிகள் ரீதியாகவும் மிக எளிதில் அணுகி அவர்களுக்கு ஒரு மாய தோற்றத்தை ஏற்ப்படுத்தி அவர்களை தன்வசபடுத்த அவர்களின் ஜாதகத்தில் 12ம் பாவக நிலை வலிமை அற்ற தன்மையில் இருப்பதே காரணம் என்றால் அது மிகையில்லை அன்பர்களே !

12ம் பாவகம் வலிமையற்று போகும் பொழுது அந்த ஜாதகர் தனது மனதிற்கு திருப்தி தருவது எதுவென்று அறியாமல் குழப்பத்தின் நடுவிலேயே வாழ்க்கையை நகர்த்தும் சூழ்நிலையை தருகிறது , குழப்பம் என்பது ஒருவருக்கு வந்துவிட்டால் அவர் சரியான முடிவு எடுப்பது என்பது குதிரை  கொம்பாகிவிடும், இவருக்கு சரியான முடிவை தருவது போல் ஒரு மாய தோற்றத்தை ஏற்ப்படுத்தி, அவர்களது தேவைகளை பூர்த்தி சொய்துகொள்ளும் ஆட்களும் உண்டு, ஒருவர் தான் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் விளைவு அறிந்து செயல்பட அவரது சுய ஜாதகத்தில் 12ம் பாவகம் மிக மிக வலிமையுடன் இருப்பது அவசியம் ஆகிறது, மேலும் தனது மனதில் ஏற்ப்படும் குழப்பங்களுக்கு தானே தீர்வை தேடும் வல்லமை பெற 12ம் பாவக வலிமை 100% விகிதம் உதவி புரியும் என்பதில் மற்று கருத்து இல்லை அன்பர்களே, வாழ்க்கையில் சிலர் திடீர் என முடிவெடுத்து தற்கொலை செய்துகொள்ளும் சூழ்நிலைக்கு ஆளாக்குவது இந்த  12ம்  பாவக வலிமை அற்ற தன்மையே என்றால் அது மிகையில்லை, அற்ப காரணங்களுக்காக வாழ்க்கையை முடித்துகொள்ளும் எண்ணத்தை ஜாதகருக்கு தருவது இந்த 12ம்  பாவகத்தின் வலிமை அற்ற தன்மையே  காரணமாக அமைகிறது அன்பர்களே !

வாழ்க்கையில் ஒரு ஜாதகர் தான் எடுக்கும் முடிவுகள் சரியானதா ? அல்லது தவறானதா என்பதை தனது அறிவுக்கு உற்படுத்தி மன ரீதியான தெளிவை பெற சுய ஜாதகத்தில் 12ம் பாவகம் மிக வலிமையுடன் இருப்பது அவசியமாகிறது, ஒருவரது மனதில் குழப்பம் வரும் பொழுது உயிர் சக்தி விரையபடுத்த  படுகிறது, தேவையற்ற சந்தேகம், பயம் மற்றும் மன தைரியம் யாவும், ஜாதகரை ஒரே இடத்தில் முடக்கி வைக்கிறது, அயன சயன சுகம் எனும் நிம்மதியான தூக்கம் வராமல் ஜாதார் மனோ ரீதியாக கடுமையான பாதிப்பை சந்திக்கும் சூழ்நிலை உருவாகிறது, நல்ல தூக்கமே ஒருவரை மன ரீதியாகவும் , உடல் ரீதியாகவும் எப்பொழுதும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும், சுய ஜாதகத்தில் 12ம் பாவகம் பாதிக்கப்படும் பொழுது இது கேள்விக்குறியாக மாறிவிடுகிறது.

பொதுவாக சுய ஜாதகத்தில் 12ம் பாவகத்தை தீய ஸ்தானமாகவே பாவித்து பலன் காண்பது 
முற்றிலும் தவறான அணுகுமுறையாகவே ஜோதிடதீபம் கருதுகிறது, ஏனெனில் 12ம் பாவகம் வலிமை பெரும் பொழுது ஜாதகர் தனது இயல்பு மாறாத தன்மையுடன் விளங்க செய்கிறது, எவ்வித சூழ்நிலையையும் தாங்கும் மன வலிமையை தருகிறது, தனது எண்ணங்களின் வலிமையின் மூலம் அனைத்தையும் சாதிக்கும் யோக வாழ்க்கையை ஜாதகர் பெற முடிகிறது, ஆன்மீகத்தில் சிறந்து விளங்க ஒருவரின் ஜாதகத்தில் 12ம் பாவகம் வலிமை பெறுவது அவ்ச்சியமாகிறது மேலும் 12ம் பாவகம் நீர் தத்துவ ராசியில் அமைவது மோட்ச வாழ்க்கையை 100 சதவிகிதம் வழங்கும் என்பதும், சர நீர் தத்துவத்தில் 12ம் பாவகம் அமைவதும் வலிமை பெறுவதும் ஜாதகர் ஆன்மீகத்தின் மூலம்  முக்தி பெரும் யோகத்தை தரும், திருப்தி அடைவது என்பது 12ம் பாவகத்தின் தன்மை எனும் பொழுது, ஆன்மா முக்தி பெற்று திருப்தியான பூர்ணத்துவத்தை பெறுவது மேற்கண்ட பாவகத்திலே என்றால் அது மிகையில்லை அன்பர்களே.

பொதுவாக காதலில் 100% விகிதம் வெற்றி பெற்று காதல் திருமணத்தின் மூலம் பரிபூரணத்தை அடைவதற்கு 12ம் பாவக வலிமை மிக மிக அவசியம் தேவை, காதலில் தோல்வி அடைவதும், காதல் தோல்வியின் மூலம் வாழ்க்கையில் விரக்தியின் உச்சிக்கே கொண்டு செல்வது 12ம் பாவகத்தி தன்மையே, இதன் விளைவுகளாக தற்கொலைக்கு முயற்ச்சி செய்வதும், ஸ்திர தன்மையில்லாத காதல் வாழ்க்கையை மேற்கொள்ள வைப்பதும் 12ம் பாவகமே, போதும் என்ற மன நிலையை தாராமல், தொடர்ந்து அடுத்து அடுத்து என்று அலைபாயும் மன நிலையை தருவதும் 12ம் பாவகமே, எதுவும் இல்லை என்றாலும் இருப்பதை வைத்து சிறப்பாக வாழும் வல்லமையை தருவது 12ம் பாவக வலிமையே, ஒருவரின் தேடுதலுக்கு எல்லாம் ஒரு முற்று புள்ளியை வைப்பது 12ம் பாவக வலிமையே, அது பொருள் சார்ந்தது என்றாலும் சரி அறிவு,மனம் மற்றும் இயக்கம் சார்ந்தது என்றாலும் சரி நிச்சயம் இறுதியில் திருப்தி என்ற மன நிலைக்கு ஜாதகரை அழைத்து செல்லும் வல்லமையை தருவது மேற்கண்ட அயன சயன ஸ்தானமே.

இதை தெளிவாக வேதாத்திரி மகரிஷி அய்யா அவர்கள் " தேடுவதை விட்டுவிட்டால் அனைத்தும் அங்கேயே இருப்பது புலனாகும் " எனும் வேதவாக்கின் மூலம் நமக்கு தெளிவு பட நம் அனைவருக்கு சிந்தனையில் உரைக்கும் வண்ணம் அருளியிருக்கிறார், புலனுக்கு எட்டாத அறிவு ஆற்றலை நமக்கு தருவது 12ம் பாவக வலிமையே என்றால் அது மிகையில்லை, 12ம் பாவகம் வலிமை பெறவில்லை எனில் ஒரு ஜாதகரால் தனது அலைபாயும் மன ஆற்றலை ஒருமுகமாக கட்டுபடுத்த இயலாது, ஒன்று படுத்தபட்ட சக்தியை எவ்விதத்திலும் பிரயோகிக்கவும் இயலாது, அருங்குண நலன்களை சீரமைக்கவும்  இயலாது, ஐம்புலன்களையும் கட்டுக்குள் கொண்டு வரவும் இயலாது, மிக துல்லியமாக சொல்ல வேண்டும் எனில் ஜாதகர் தன்னை சுய கட்டுப்பாட்டின் கிழ் கொண்டு வரவும், ஒரு இலக்கை நோக்கி பயணம் செய்ய வைக்கவும் 12ம் பாவக உதவி நிச்சயம் தேவை அன்பர்களே.

 ஒருவருக்கு லக்கினம் எனும் முதல் பாவகம் சிறப்பாக இயங்க வேண்டும் எனில் லக்கினத்திற்கு மேல் இருக்கும் 12ம் பாவகம் வலிமையுடன் இருப்பது அவசியமாகிறது, ஜாதகரின் இயக்கத்தை ஆளுமை செய்யும் தன்மையும் 12ம் பாவகத்திற்கு 100% சதவிகிதம் உண்டு, லக்கினம் சிறப்பு பெறுவது ஒரு வகையில் நன்மை என்ற போதிலும் 12ம் பாவகம் வலிமை பெறுவது ஜாதகரை 100% விகிதம் சிறப்பாக செயல்பட வைக்கும், ஒருவரின் மன திருப்தியே பூரணத்துவத்தை தருகிறது என்றால், அவரது ஜாதகத்தில் அயன சயன ஸ்தானம் வலிமையுடன் இருப்பது முக்கியம் என்பதை கருத்தில் கொள்வது நலம் அன்பர்களே, அயன சயன ஸ்தானம் வலிமை பெரும் பொழுது ஜாதகர் தன்னிலை உணர்வதும், சுய திருப்தி பெறுவதும் இயற்கையாக நடைபெறும், ஒரு ஆன்மீக வாதியையோ, ஒரு நடிகரையோ, ஒரு அரசியல் தலைவரையோ நாடி செல்லும் சூழ்நிலையை தராது, மேற்க்கண்டவர்கள் உண்மையானவர்களாக இருந்து விடில் ஜாதகருக்கு பிரச்சனை இல்லை, அதற்க்கு நேர் மாறாக இருப்பின் ஜாதகர் நிச்சயம் மூளை சலவை செய்து நம்ப வைக்கபடுவார், இதற்க்கு காரணமாக விரைய ஸ்தானம் வலிமை அற்ற நிலை காரணமாக அமைந்துவிடும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வியாழன், 11 டிசம்பர், 2014

ஜீவன ஸ்தான வலிமையையும், தகப்பனார் வழியில் இருந்து ஜாதகர் பெரும் யோக வாழ்க்கையும் !




"தாயின் சிறந்த கோவிலும் இல்லை
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை "

மேற்கண்ட முதுமொழிக்கு ஏற்ப ஒருவரின் சுய ஜாதகத்தில் லக்கினத்தில் இருந்து 4ம் பாவகம் தாயாரையும், 10ம் பாவகம் தகப்பனாரையும் குறிக்கும், சுய ஜாதகத்தில் 4,10ம் பாவகங்கள் நல்ல வலிமையுடன் இருப்பது ஜாதகரின் வாழ்க்கையில் 4ம் பாவக அமைப்பில் இருந்து நல்ல சுகபோக வாழ்க்கையையும், 10ம் பாவக வழியில் இருந்து சிறந்த ஜீவன ( தொழில் ) வாழ்க்கையையும் வாரி வழங்கும், பொதுவாக சுய ஜாதக ரீதியாக ஆண்களின் ஜாதகத்தில் ஜீவனம் எனும் 10ம் பாவகம் மிகவும் வலிமையுடன் இருப்பது அவசியமாகிறது ஏனெனில் உத்தியோகம் "புருஷ லட்சனம் " என்று பழமொழிக்கு ஏற்ப ஆண்கள் ஏதாவது ஒரு வகையில் ஜீவனத்தை தேடி குடும்பத்தை காப்பாற்றும் கடமை ஆண்களுக்கே அதிகம் உண்டு, தற்காலத்தில் "உத்தியோகம் பெண் ஆட்சி லட்சனம் " ஆகிவிட்டது வேறு கதையாக இருந்தாலும், உத்தியோகம் அல்லது வேலை இல்லாத ஆண் மகனை சமுதாயமும், அவரது உறவுகளும் மிக ஏளனமாகவே பார்க்கின்றனர், வேலை இல்ல இளைஞனை பார்த்து, அதிக அளவு கவலை படுபவர்கள் அவர்களது பெற்றோர்களே, குறிப்பாக ஜாதகரின் தந்தையே இதை பற்றி அதிக அளவில் கவலை கொள்பவராக காணப்படுகின்றார்கள்.

ஒரு ஆண்மகனுக்கு சரியான வயதில் நல்ல ஜீவனம் அமைவது அவரது சுய ஜாதகத்தில் உள்ள ஜீவன ஸ்தானமான 10ம் பாவக வலிமையை பொறுத்தே, ஜீவன ஸ்தானம் ஒருவரது சுய ஜாதகத்தில் மறைவு ஸ்தானமான 6,8,12ம் பாவகத்துடனும், பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறாமல் இருப்பது ஜாதகருக்கு சிறந்த ஜீவன அமைப்பை தொழில் அல்லது வேலைவாய்ப்பில் சரியான வயதில் வழங்கிவிடுகிறது, மேலும் ஜீவன ஸ்தானம் தொடர்பு பெரும் பாவக வழியில் இருந்து ஜாதகர் ஏதாவது ஒரு தொழில் வாய்ப்பையோ, வேலை வாய்ப்பையோ பெரும் யோகத்தை தங்குதடையின்றி கொடுத்து  விடுகிறது, ஜாதகர் குறிப்பிட்ட பாவக அமைப்பில் இருந்து கௌரவம் அந்தஸ்து மற்றும் வருமான வாய்ப்பை பெறுவதில் தடையேதும் இருப்பதில்லை. மேலும் நடைபெறும் திசை மற்றும் புத்திகள் சாதகமாக இருப்பின் ஜாதகரின் தொழில் மற்றும் வேலை வாய்ப்புகள் ஜாதகரை தேடிவருவதும், ஜாதகர் ஜீவன வழியில் இருந்து யோக வாழ்க்கையை பெறுவதும் இயற்கையாக நடந்துவிடுகிறது.

இதற்க்கு மாறாக ஜீவன ஸ்தானம் பாதிக்கப்படும் பொழுதே ஜாதகர் ஜீவனம் சார்ந்த இன்னல்களையும் துன்பங்களையும் எதிர்கொள்ளும் அமைப்பை தருகிறது, மேலும் ஜீவன ஸ்தானம் கௌரவம் மற்றும் அந்தஸ்தை குறிப்பதால், ஜாதகர்  ஜீவன வழியில் இருந்து அதிக இன்னல்களையும் வேலை வாய்ப்பின்மையும் ஜாதகரை கடுமையாக பாதிக்கிறது, சுய கௌரவமும் அந்தஸ்தும் இழந்து மற்றவரை எதிர்பார்த்து வாழ்க்கையை நகர்த்தும் சூழ்நிலைக்கு ஜாதகர் தள்ளபடுகிறார், பொதுவாக ஜீவன ஸ்தானம் பாதிக்கப்படும் பொழுது  ஜாதகர் அதிக அளவில்  தனது தகப்பனாருடன் கருத்து வேறுபாடு வருவது எதார்த்தமான விஷயம், ஏனெனில் ஜீவன ஸ்தானம்  ஒரு வகையில்  தனது  தகப்பனாரையும் குறிப்பதால் ஜாதகர் அவரது வழியில் இருந்து ஆதரவினமையும், கருத்துவேறுபாடு காரணமாக வீண் சச்சரவையும் தருகிறது, இதன் விளைவாக பல இளைஞர்களின் முதல் எதிரியாக தனது தகப்பனாரை நினைப்பது உண்டு, மேலும் அவர் சொல்லும் விஷயங்களை ஏற்றுகொள்ளாமல் அவருக்கு எதிராக முரண்பட்ட காரியங்களை செய்வது சம்பந்தபட்ட ஜாதகருக்கு மேலும் ஜீவன வழியில் இருந்து அதிக இன்னல்களை எதிர்கொள்ளும் தன்மையையே தருகிறது.

பொதுவாக ஜீவன ஸ்தானம் பாதிக்க பட்ட ஜாதக அமைப்பை சார்ந்த அன்பர்கள் ! தனது  தகப்பனார்  வழியில் இருந்து வரும் துன்பங்களை அல்லது சிரமங்களை ஏற்றுகொள்ளும் பொழுது அந்த ஜாதகருக்கு  ஜீவன வழியில் இருந்து வரும் இன்னல்கள் நீங்கி தொழில் ரீதியாகவும் வேலை அமைப்பிலும் மிகப்பெரிய சாதனையை செய்கின்றார்கள் என்பது கவனிக்க தக்கது, சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் பாதிக்கபட்ட அன்பர்கள் எந்த காரணத்தை கொண்டும் தனது தகப்பனாரை எதிர்த்து செயல்படாமல் இருப்பது நல்லது, மேலும் அவரது வார்த்தைகளை மதித்து  அவர் சொல்லும் வழியில் நடப்பது ஜாதகருக்கு சில காலங்கள் சிரமம் தந்த போதிலும், அதன் பிறகு வரும் காலங்கள் ஜீவன  வழியில் இருந்து 100% விகித யோகத்தை வாரி வழங்கும், ஜாதகர் எதிர்பாராத வெற்றி வாய்ப்புகளை வேலை மற்றும் தொழில் அமைப்பின் மூலம் அபரிவிதமாக பெரும் யோகத்தை தரும் என்பதை மறுக்க இயலாது, தான் செய்யும் தொழில் மற்றும் வேலைவாய்ப்பின் மூலம் ஜாதகர் அபரிவிதமான வருமான வாய்ப்பை பெரும்  தன்மையை தரும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் நெருப்பு தத்துவ ராசியில் அமைந்து பாதிக்க பட்டு இருப்பின் ஜாதகர் தனது  செய்கையின் மூலம் தகப்பனாருக்கு பிடித்த அமைப்பில் நடந்துகொள்வதும், எந்த ஒரு காரியத்திலும் அவசர கதியில் செய்யாமல் பொறுமையை கடைபிடிப்பது சிறந்தது, ஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் நில தத்துவ அமைப்பில் இருப்பின், ஜாதகர் தனது தகப்பனாரின் சொத்துக்களை அல்லது செல்வத்தை பயன்படுத்தாமல் இருப்பது நலம் தரும், ஜாதகர் தனது தகப்பனாரின் உடல் நிலையை அதிக  அக்கறை எடுத்துகொள்வது சிறந்தது, அவரது பணத்தை செல்வத்தை விரையம் செய்யாமல் இருப்பது ஜாதகருக்கு உடனடி ஜீவன மேன்மையை தரும், ஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் காற்று தத்துவ அமைப்பில் இருப்பின் அவரது அறிவுரையை ஏற்று நடப்பதும், சுயமாக தனது சிந்தனை மூலம் ஜீவன வாழ்க்கையை மேற்கொள்வது சிறந்தது தகப்பனாருக்காக அனைத்தையும் ஏற்றுகொள்ளும் மனபக்குவத்தை வளர்த்துகொள்வது நல்லது, ஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் நீர் தத்துவ அமைப்பில் இருப்பின்  ஜாதகர் தனது தகப்பனார் மனம் நோகாமல் நடந்துகொள்வது சிறந்தது, மனதளவில் அவருக்கு சிறு துன்பமும் தராமல் இருப்பதே ஜாதகருக்கு அபரிவிதமான ஜீவன வாழ்க்கையை வாரி வழங்கிவிடும், அதே போல் ஜாதகர் தனது மனதளவில் மிகுந்த தன்னம்பிக்கையுடன் இருப்பது சகல நிலைகளில்  இருந்து வெற்றியை வாரி வழங்கும்.

பொதுவாக ஜீவன ஸ்தானம் பாதிக்கப்படும் ஜாதக அமைப்பை பெற்ற அன்பர்கள் அனைவரும் தனது தகப்பனாருக்கு  சிறிதேனும் துன்பம் தராமல் நடந்துகொல்வதே, ஜாதகரின் ஜீவன வாழ்க்கையை மேம்படுத்தும் மேலும் ஜாதகர் பார்ர்க்கும் பணியில் அல்லது செய்யும் தொழிலில் அபரிவிதமான முன்னேற்றங்களை  வாரி வழங்கும் என்பது மட்டும் 100% விகிதம் உறுதி.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696  

செவ்வாய், 9 டிசம்பர், 2014

சனி பெயர்ச்சி, விருச்சிக ராசிக்கு செல்லும் சனிபகவான் லக்கின வாரியாக தரும் பலன்கள் - துலாம்


சனி பகவான்  திருக்கணித பஞ்சாங்க முறைப்படி 02-11-2014 ஞாயிறு கிழமை அன்று இரவு 08-54 மணிக்கு துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகியுள்ளார். விருச்சிக ராசியில் சனி சுமார் இரண்டரை ஆண்டு காலம் சஞ்சரிப்பார், இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு லக்கினத்தை சார்ந்தவர்களுக்கும் சனி பகவான் வழங்கும் யோக அவயோக பலன்களை பற்றி நாம் இந்த பதிவில் சிந்திப்போம் அன்பர்களே!   


ஜோதிடதீபம் ராசியை அடிப்படையாக வைத்து சனி பெயர்ச்சி பலன்களை வழங்காமல், ஏன் லக்கினத்தை அடிப்படையாக கொண்டு பலன் சொல்லுகிறது என்ற சந்தேகம் சிலருக்கு வரக்கூடும், லக்கினம் என்பதே ஜாதகத்திற்கு அடிப்படையானது, இந்த லக்கினம் எனும் முதல் பாவகத்தை வைத்தே ஒருவருக்கு சரியான ஜாதக பலன்களை சொல்ல இயலும், ராசியை வைத்து சொல்வது என்பது, பொது பலன்களாகவே இருக்குமே தவிர ஒரு ஜாதகருக்கு தெளிவான பதிலையும், பலன்களையும் தர வாய்ப்பில்லை என்பதால் ஒவ்வொரு லக்கினத்தருக்கும், இந்த சனி பெயர்ச்சி எவ்வித பலன்களை தருகிறது என்று தெளிவாக இனி வரும் பதிவுகளில் காண்போம்.


அடிப்படையில் ஒரு விஷயத்தில் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள் அன்பர்களே! சனி பகவான் தற்பொழுது விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளார், இனி வரும் 30 மாதங்கள் சனி பகவான் விருச்சிக ராசியில் சஞ்சாரம் செய்கிறார், விருச்சிகத்தில் அமர்ந்து  6ம் பார்வையாக மேஷ ராசியையும், 7ம் பார்வையாக ரிஷப ராசியையும், 10ம் பார்வையாக சிம்ம ராசியையும் பார்ப்பதால் இந்த ராசிகளுக்கு திருஷ்டி பலன் என்ற அமைப்பில் பலன் தருகிறார்.

இலக்கின ரீதியாக பலன்கான முனையும் அன்பர்கள் அனைவரது ஜாதகத்திலும் தற்பொழுது நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஆகியவை ஏற்று நடத்தும் பாவகம் கிழ்கண்ட ராசிகளில் அமைந்தால் மட்டுமே( அதாவது விருச்சிகம்,மேஷம்,ரிஷபம் மற்றும் சிம்மம் ஆகிய ராசிகள் எந்த எந்த பாவகமாக வருகிறதோ அந்த பாவக பலனை தற்பொழுது நடைமுறையில் உள்ள திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஆகியவை தொடர்பு பெறுதல் ) ஜாதகருக்கு தற்பொழுது பெயர்ச்சி பெற்று இருக்கும் சனிபகவான் நன்மையையோ, தீமையையோ செய்வார் என்பதை கருத்தில் கொள்க, எனவே தற்பொழுது நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் மேற்கண்ட ராசிகளுடன் தொடர்பு பெருகின்றத என்பதை கவனிப்பது மிக முக்கியமானதாக ஜோதிடதீபம் அறிவுறுத்துகிறது .


துலாம் லக்கினம் 

2ல் அமர்ந்த சனிபகவான் துலாம் லக்கினத்தி சார்ந்தவர்களுக்கு பேச்சு மற்றும் குடும்பம் போன்ற அமைப்புகளில் சிறு சிறு இன்னல்களை தந்தபோதிலும், திடீர் வருமான வாய்ப்புகளை ஏற்ப்படுத்தி கொடுக்கிறார், இனிவரும் இரண்டரை வருடமும் துலாம் இலக்கின அன்பர்களுக்கு நல்ல வருமானம் தொய்வின்றி கிடைக்கும், எதிர்பார்த்த பணவரவுகள் நிச்சயம் கிடைக்கும், ஜாதகரின் மன நிலையில் மட்டும் சிறிது பாதிப்புகள் வந்துபோக வாய்ப்பு உண்டு , தனக்கு வரும் மன கவலைகளை ஜாதகர் அனைவரிடமும் பகிர்ந்து ஆறுதல் தேடிக்கொள்வது சகல நிலைகளில் இருந்தும் நன்மை தரும்.

 மேலும் ஜாதகர் பௌர்ணமி அல்லது அமாவசை தினங்களில் கோவில் வழிபாடு மேற்கொள்வது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சிறந்த நன்மைகளை வாரி வழங்கும், தனது கையில் உள்ள நிதியை மற்றவர்களை  நம்பிக்கையின் பேரில் கொடுப்பது நிச்சயம் பல இன்னல்களை தரும், ஜாதகருக்கு இதனால் குடும்பத்திலும் உறவுகள் சார்ந்த அமைப்பில் இருந்தும் அதிக மனகசப்பை தருவதற்கு வாய்ப்பு உண்டாகும், எனவே பணம் சார்ந்த விஷயங்களில் மிகவும் கவனமாக இருப்பது நலம் தரும், இதனால் வரும் பிரச்சனைகளை வெகுவாக தவிர்க்கலாம், வெளிநாடுகள் இருக்கும் அன்பர்கள் மிகுந்த கவனமுடன் வாழ்க்கையை எதிர்கொள்ளவேண்டிய சூழ்நிலை இனிவரும் காலங்களில் தங்களுக்கு ஏற்ப்படாலம்.

6ம் பார்வையாக துலாம் லக்கினத்திற்கு 7ம் பாவகத்தை பார்க்கும் சனிபகவான், இதுவரை திருமணம் ஆகாமல் தாமாத நிலையில் இருந்த அன்பர்களுக்கு திருமணம் சார்ந்த விஷயங்களில் எடுக்கும் முயற்ச்சிகள் உடனடி வெற்றியை தரும், வெளிநாடு வேலை வாய்ப்பை எதிர்பாத்து காத்துகொண்டு இருந்த அன்பர்களுக்கு எதிர்பாராத வகையில் திடீர் வேலைவாய்ப்பை பெரும் யோகம் உண்டாகும், பொதுமக்கள் மற்றும் நண்பர்களின் உதவி கேட்டவுடன் கிடைக்கும், சமுதாயத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் உண்டாகும், அரசு துறையில் பணியாற்றி கொண்டு இருக்கும் அன்பர்களுக்கு இனிவரும் காலங்கள் மிகுந்த முன்னேற்றத்தை வாரி வழங்கும், குறிப்பாக காவல் துறை, நிர்வாக துறை, பொதுபணி துறை சார்ந்த அன்பர்களுக்கு மிகுந்த யோக காலம் என்றே சொல்லலாம், எதிர்பாராத பதவி உயர்வு, அதிக வருமான வாய்ப்பு என்ற வகையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும், உடல் நிலை மிகவும் சிறப்பாக விளங்கும், தன்னம்பிக்கை அதிகரிக்கும், தங்களின் எண்ணங்கள் யாவும் பலிதம் பெரும் யோக காலமாக இந்த சனிபெயர்ச்சியை தாங்கள் கருதலாம்.

7ம் பார்வையாக துலாம் லக்கினத்திற்கு 8ம் பாவகத்தை பார்வை செய்யும் சனிபவான், ஜாதகருக்கு கை நிறைவான வருமான வாய்ப்புகளை வாரி வழங்குகிறார், தனது சுய உழைப்பின் மூலம் சொத்து சுகம், வண்டி வாகனம் வாங்கும் யோகத்தை வாரி வழங்குகிறார், தன்னிறைவான பேச்சு திறனால் ஜாதகர்  தனது வாழ்க்கையில் பல முன்னேற்றங்களை பெரும் யோக காலமாக இதை கருதலாம், ஜாதகர் குடும்பம் மற்றும் பாரம்பரியம் சார்ந்த சொத்துகளை திடீரென பெரும் யோகத்தை தரும், வாழ்க்கை துணை வழியில் இருந்து வரவேண்டிய அதிர்ஷ்டங்களையும் வருமானம் மற்றும் சொத்துகள் போன்ற விஷயங்களை ஜாதகர் அபரிவிதமான பெரும் யோகத்தை தரும், குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும், எதிர்பாராத அதிர்ஷ்ட வருமான வாய்ப்புகள் ஜாதகருக்கு இனிவரும் காலங்களில் தொடர்ந்து வந்தவண்ணமே இருக்கும் என்பது மகிழ்ச்சிக்கு உரிய விஷயம்.

10ம் பார்வையாக துலாம் லக்கினத்திற்கு 11ம் பாவகத்தை பார்வை செய்யும் சனிபகவான், துலாம் லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு நீடித்த அதிர்ஷ்டத்தை வாரி வழங்குகிறார், ஜாதகருக்கு வழங்கும் அதிர்ஷ்ட வாய்ப்புகள் என்பது ஸ்திர தன்மையுடன் நீண்டகால அமைப்புடன் தொடர்ந்து நன்மைகளை வாரி வழங்கி கொண்டு இருக்கும் என்பதை மறுக்க இயலாது , ஜாதகருக்கு தனது குல தெய்வத்தின் அருளாசி பரிபூர்ணமாக பலன்தரும், இறை அருளின் கருணையினால் ஜாதகரின் முயற்சிகள் யாவும் வெற்றி பெரும், தனது சுய சிந்தனையும் அறிவாற்றலும் நீடித்த நன்மைகளை வாரி வழங்கும் விதமாக அமையும், ஜாதகரின் அறிவு திறன் பிரகாசிக்கும் யோக காலமாக இதை கருதலாம், ஜாதகருக்கு தற்பொழுது கல்வி சார்ந்த விஷயங்களில் நல்ல ஈடுபாடும், கல்வியில் நல்ல முன்னேற்றமும் உண்டாகும், தங்கு தடையின்றி எடுக்கும் நல்ல காரியங்கள் யாவும் வெற்றி பெரும், மருத்துவ துறையில் இருக்கும் அன்பர்களுக்கு மிகுந்த அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும் யோக காலமாக இதை கருதலாம், மருத்துவம்,விவசாயம்,நிலம் சார்ந்த தொழில்களில் இருப்பவர்களுக்கு, இது ஒரு ஏற்றமிகு அதிர்ஷ்ட காலமாக கருதலாம், அதிர்ஷ்டத்தின் முழு பயனையும் துலாம் லக்கினத்தை சார்ந்த அன்பர்கள் அனுபவிக்கும் தன்மையை இனிவரும் காலங்களில் நிச்சயம் உணர்வார்கள் வாழ்த்துகள்.

துலா இலக்கின  அன்பர்களே ! தற்பொழுது தங்களுக்கு நடைபெறும் திசை மற்றும் புத்தி மேற்கண்ட2,7,8,11ம்  பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே, தங்களுக்கு மேற்கண்ட  சனிபகவானின், கோட்சார நன்மைகள் அல்லது தீமைகள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைபெறும் திசை 2,7,8,11ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் எவ்வித நன்மையும், தீமையும் நடைபெறாது என்பதை கவனத்தில் கொள்க, வாழ்த்துகள் .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696