ஞாயிறு, 5 ஏப்ரல், 2015

சுய ஜாதகத்தில் ஜீவன மேன்மை ( தொழில் முன்னேற்றம் ) தரும் திசாபுத்திகள் !




ஒருவரது சுய ஜாதக அமைப்பின் படி தொழில் மற்றும் வேலை வாய்ப்பில் முன்னேற்றமும், யோகமும் தரும் திசாபுத்திகள் எது என்பதை தெளிவாக ஜாதக கணிதம் மூலம் தெரிந்துகொண்டு, அந்த கால நேரத்தில் ஜாதகர் தொழில் ரீதியான முயற்ச்சிகளை மேற்கொள்ளும் பொழுது 100% விகித வெற்றிகளை தங்கு தடையின்றி ஜாதகர் பெறலாம், பொதுவாக ஒருவரது தொழில் மற்றும் வேலைவாய்ப்பில் வரும் முன்னேற்றத்தை நிர்ணயம் செய்வது அவரது சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையையும், வலிமை பெற்ற பாவகத்தின் பலனை ஏற்று நடத்து திசாபுத்திகளே என்றால் அது மிகையில்லை, பொதுவாக சுப கிரகமான குரு,சுக்கிரன்,புதன்,வளர்பிறை சந்திரன் திசாபுத்திகளில் ஜீவன மேன்மை உண்டாகும் என்று கணிப்பதும், அசுப கிரகங்களான சூரியன்,செவ்வாய்,தேய்பிறைசந்திரன்,சனி,ராகுகேது  திசபுத்திகளில் ஜீவன முன்னேற்றம் தடைபடும், பாதிப்பை தரும் என்று முடிவு செய்வது முற்றிலும் உண்மைக்கு புறம்பான விஷயமாகவே கருதலாம்.

தொழில் மற்றும் வேலை வாய்ப்பில் முன்னேற்றமும், முன்னேற்றம் அற்ற நிலையை தருவது நவ கிரகங்களின் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் அல்ல, குறிப்பிட்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையையும், அந்த பாவக பலனை ஏற்று நடத்தும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமுமே என்றால் அது மிகையில்லை அன்பர்களே! இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு விளக்கம் தர ஜோதிடதீபம் கடமைபட்டு இருக்கிறது.

உதாரண ஜாதகம் :


லக்கினம் : சிம்மம் 
ராசி : கடகம் 
நட்சத்திரம் : பூசம் 1ம் பாதம் 

ஜாதகருக்கு சிம்ம லக்கினம், சுய ஜாதகத்தில் ஜீவனத்தை குறிக்கும் 10ம் பாவக நிலை ஆய்வு செய்யும் பொழுது 1,2,4,5,8,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று மிக வலிமையுடன் இருப்பது ஜாதகருக்கு ஜீவன வழியில் இருந்து மிகுந்த யோகத்தை தரும் அமைப்பாக கருதலாம், 1,2,4,58,10ம் வீடுகள் முறையே ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவதால், ஜாதகர் இலக்கின வழியில் இருந்து சுயமாக தொழில் செய்து வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பவர் என்பது உறுதியாகிறது, ஜாதகர் தனது அறிவின் வழியிலோ, அல்லது தனது உடல் உழைப்பின் மூலமோ ஜீவனத்தை தேடி சுயமாக தொழில் வெற்றிகளை குவிப்பார் என்பதும், தனது சுய உழைப்பின் மூலம் ஸ்திரமான தொழில் நிறுவனங்களை நிர்வாகிக்கும் தன்மையை பெறுவார் என்பதும் 1ம் பாவக வழியில் இருந்து உறுதிபடுத்த படுகிறது.

ஜாதகர் 2ம் பாவக வழியில் இருந்து நல்ல வருமான வாய்ப்பை பெறுவார் தனது பேச்சு திறனின் காரணமாக நல்ல வேலைவாய்ப்பை பெறுவதும், வரும் வருமானத்தை கொண்டு வாழ்க்கையில் தொழில் துவங்கும் தன்மையை ஜாதகருக்கு தரும், 4ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு வீடு,வண்டி,வாகனம்,நிலம்,சொத்து ஆகிய அமைப்பில் இருந்தும் நல்ல வருமானத்தை தரும், தனது பெயரில் இருக்கும் அசையும் அசையா சொத்துகள் மூலமும் ஜாதகருக்கு தொழில் அமையும், தனது பெயரிலேயே ஜாதகர் தொழில் துவங்கி செய்யலாம், தனது பெயரில் சொத்து வாங்கலாம் விற்கலாம் எனவே ஜாதகருக்கு 4ம் பாவகம் ஜீவன ஸ்தானத்துடன் தொடர்பு பெறுவது மிகுந்த யோகத்தை வாரி வழங்கும்.

5ம் பாவக வழியில் இருந்து, ஜாதகர் தான் கற்ற கல்வியின் வழியில் இருந்தும், தனது முன்னோர்களின் அறிவு திறனின் தன்மையின் வழியில் இருந்து தொழில் முன்னேற்றங்களை பெறுவார், 5ம் பாவகம் ஜீவன பாவகத்துடன் தொடர்பு பெறுவது, ஜாதகரின் புதிய சிந்தனையும், புதிய செயல்பாடுகளும், மற்ற அமைப்பில் இருந்து வேறுபடுத்தி தனித்தன்மையுடன் திகழ செய்யும், ஜாதகரின் வெற்றியும் இதன் வழியிலேயே அமையும், எவரும் பயன்படுத்தாத புதிய தொழில் முறை யுக்திகளை பயன்படுத்தி வாழ்க்கையில் ஜீவன மேன்மையை ஜாதகர் தங்குதடையின்றி பெறுவார், குல தெய்வத்தின் அருளாசிகள் ஜாதகரை எவ்வித தொல்லைகளில் இருந்தும் காப்பாற்றிவிடும் என்பது கவனிக்க தக்கது.

 8ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு திருமண வாழ்க்கையின் மூலம் ஜீவனம் மேம்படும் அமைப்பை தருகிறது, ஜாதகர் தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து நல்ல வருமான வாய்ப்பையும் தொழில் முன்னேற்றத்தையும் பெறுவார், 8ம் பாவகம் திடீர் அதிர்ஷ்டத்தை ஜீவன அமைப்பில் தருவதால், ஜாதகர் செய்யும் தொழில் அல்லது வேலை வாய்ப்பில் திடீரென முன்னேற்றத்தை பெற்று, புதையலுக்கு நிகரான சொத்து சுக சேர்க்கையை பெறுவார் என்பது வரவேற்க தக்கது, ஜாதகரின் தொழில் முன்னேற்றம் என்பது வெளிநாடுகளில் இருந்து வரும் வருமானத்தை அடிப்படையாக கொண்டதாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

  10ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் நிச்சயம் ஒரு ஸ்திரமான தொழில் முன்னேற்றத்தை பெறுவார் என்பதும், செய்யும் தொழில் அல்லது வேலை வாய்ப்பில் தொடர்ந்து வருமானத்தை பெற்றுகொண்டே இருப்பார் என்பதும் உறுதியாகிறது, ஜாதகரின் கையில் எப்பொழுதும் பணம் இருந்துகொண்டே இருக்கும், ஜீவன வழியில் இருந்து ஜாதகருக்கு நல்ல கௌரவமும், அந்தஸ்தும் கிடைத்துக்கொண்டே இருக்கும், நிலையான மதிப்பு மரியாதையுடன் நீண்ட நெடுங்காலம் ஜீவன வாழ்க்கையை செய்யும் தன்மையை தரும், ஜாதகருக்கு ஸ்திரமான மண் தத்துவம் சார்ந்த தொழில்கள் அபரிவிதமான வெற்றியை வாரி வழங்கும், பொறுமையுடன் கையாளும் தொழில்கள் மூலம் நீண்டகால தொழில் முன்னேற்றத்தை ஜாதகர் ஸ்திரமாக பெறுவார் என்பது உறுதியாகிறது.


பொதுவாக ஜாதகரின் ஜீவன பாவகத்தை ஆய்வுக்கு எடுத்துகொள்ளும் பொழுது கிடைக்கும், சுய ஜாதகரீதியான பதில்கள் மேற்கண்டவை, இனி அடுத்தது மேற்கண்ட யோக பலன்களை ஜாதகர் எப்பொழுது, எந்த எந்த கிரகங்களின் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சம காலங்களில் பெறுவார் என்பது தெரிந்தால் மட்டுமே ஜாதகர், முன் எச்சரிக்கையுடன் செயல்பட்டு தனது ஜீவன வாழ்க்கையை மேலும் சிறப்பாக அமைத்துக்கொள்ள உதவும், ஆக அவரது ஜாதகத்தில் நடைபெறும் எந்த எந்த கிரகங்களின் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்துகிறது என்பதை ஆய்வு செய்து, அதை தெளிவாக ஜாதகருக்கு உணர்த்துவதே ஒரு சிறந்த ஜோதிடனின் கடமை.

எனவே ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்தும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சம அமைப்பை இனி ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே!

ஜாதகருக்கு ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்தும் கிரகங்களின் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சம விபரங்கள் பின்வருமாறு :

1) சனி 1,5ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று ஜீவன ஸ்தான பலனை தருகிறது.
2) புதன் 4ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று ஜீவன ஸ்தான பலனை தருகிறது.
3) கேது 2,4,8,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று ஜீவன ஸ்தான பலனை தருகிறது.
4) சந்திரன் 1,5ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று ஜீவன ஸ்தான பலனை தருகிறது.

ஆக ஜாதகர் ஜீவன ரீதியான வெற்றிகளை சனி,புதன்,கேது,சந்திரன் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சம காலங்களில், தங்குதடையின்றி 100% விகிதம் பெறுவார் என்பது உறுதியாகிறது, எனவே ஜாதகர் மேற்கண்ட திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சம காலங்களில் தனது தொழில் அபிவிருத்தியை மேற்கொண்டு வாழ்க்கையில் சகல விதங்களில் இருந்தும் ஜீவன மேன்மையை பெறலாம் என்பதே "ஜோதிடதீபத்தின் " ஆலோசனை வாழ்த்துகள்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696


சாயா ( ராகு கேது ) கிரகங்களுடன் சேர்ந்த கிரகங்கள் வழங்கும் யோகபலன்கள் !


 சாயா கிரகங்களுடன் சேர்க்கை பெரும் கிரகங்கள் பெரும்பாலும் தீமையான பலன்களையே தரும் என்பது பல ஜோதிடர்களின் கருத்தாக உள்ளது, மேலும் ராகு கேது கிரகங்களுடன் தொடர்பு பெரும் கிரகங்கள் ஜாதகருக்கு அவயோக பலன்களை தருவதில் எவ்வித விதிவிலக்கும் கிடையாது என்பது ஒரு சாராரின் கருத்து, ராகு கேதுவுடன் சேர்ந்த கிரகங்கள் வழங்கும் பலன்களை நிர்ணயம் செய்யும் முன், சாயா கிரகங்கள் அமர்ந்த பாவக நிலையை கருத்தில் கொள்வது மிக துல்லியமான பலன்களை சரியாக சொல்ல உதவும், ஏனெனில் சாயா கிரகங்கள் தான் அமர்ந்த பாவகத்தின் தன்மைக்கு ஏற்ப்பவே, யோக அவயோக பலன்களை வழங்குவார்கள் என்பது கவனிக்க தக்கது, இதை ஒரு உதாரண ஜாதகம் கொண்டு காண்போம்.



லக்கினம் : சிம்மம் 
ராசி : சிம்மம் 
நட்சத்திரம் : மகம் 3ம் பாதம் 

ஜாதகி சிம்ம லக்கினம் லக்கினத்திற்கு 3,9ம் பாவகங்கள் முறையே சாயா கிரகங்களான ராகு கேது அமர்ந்திருப்பது சிறப்பான யோக நிலையை தரும் அமைப்பு, ஜாதகிக்கு விருச்சிகத்தில் 3ம் பாவகத்தில் அமர்ந்த ராகு பகவான் திடீர் அதிர்ஷ்டங்களையும், சிறந்த வாய்ப்புகளையும் வாரி வழங்குகிறார், தான் நினைக்கும் காரியங்களை நினைத்த வண்ணம் நிறைவேறும் யோகத்தை தருகிறார், விருச்சிகம் ஸ்திர  நீர் ராசியாக அமைவதால், ஜாதகியின் நிலையான மன உறுதியையும், சரியான முடிவுகளை எடுக்கும் தன்மையை வாரி வழங்குவது வரவேற்க தக்கது, மேலும் ஜாதகி விளையாட்டு துறையிலும், வியாபர துறையிலும் சிறந்து விளங்கும் வல்லமையை  தருவது ராகு பகவானே, 3ம் பாவகத்தில் அமர்ந்த ராகு பகவான் ஜாதகிக்கு 100% யோக பலன்களை தான் அமர்ந்த பாவக வழியில் இருந்து சிறப்பாக தருகிறார் என்பது இந்த ஜாதகிக்கு கிடைத்த வரபிரசாதம் என்றே சொல்லாம், மேலும் ஜாதகிக்கு சகோதர வழியில் இருந்து 100% நன்மைகள் நடைபெறும் என்பது கூடுதல் யோகமாக கருதலாம்.

9ம் பாவகத்தில் ரிஷப ராசியில் அமர்ந்த கேது பகவானுடன் சேர்ந்த கிரகங்கள் சூரியன் மற்றும் புதன் எனும் இரண்டு கிரகங்களின் தன்மையை தானே ஏற்று கேது பகவானே பலன்களை வாரி வழங்குவது கண்கூடான விஷயம், ( சுக்கிரன் ரிஷபத்தில் உள்ள 10ம் பாவகத்தில் அமர்ந்திர்ருக்கிறார் ) மேலும் கேது அமர்ந்திருக்கும் 9ம் பாவகத்தை 100% வலிமை பெற செய்து சூரியன் மற்றும் புதன் கிரகங்களின் தன்மையை தானே ஏற்று நடத்துவது ஜாதகியை கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கும் தன்மையை தரும், படிப்பில் முதல் இடத்தை ஜாதகி மிக எளிதாக கை பற்றுவார், குறிப்பாக ஜாதகியின் அறிவு திறன் மற்றவர்கள் அனைரையும் பிரமிக்க வைக்கும், தான் கற்ற கல்வியின் மூலம் அபரிவிதமான வருமான வாய்ப்பை ஜாதகி தங்குதடையின்றி  பெறுவார், சமுதாயத்தில் பெரியவர்கள் போற்றும் குணவதியாக  திகழும் தன்மையை கேது பகவான் வழங்குவது கவனிக்க தக்கது.

9ம் பாவகத்தில் அமர்ந்த சூரியன்,புதன் இரு கிரகங்களின் தன்மையை கேது பகவானே ஏற்று நடத்துவதால், சூரியன் அமைப்பில் இருந்து ஜாதகி அதிகார பதவிகளையும், நிர்வாகத்திலும் சிறந்து விளங்கும் யோகம் உண்டு, புதன் அமைப்பில் இருந்து புத்தி கூர்மையான செயல்பாடுகள் மூலம் தான் எடுத்த காரியங்களை செவ்வனே செய்து முடிக்கும் தன்மையை தரும், ஜாதகியுடன் சேரும் அன்பர்கள் அனைவரும் மிகசிறந்த பெரிய மனிதர்களும், கல்வியாளர்களும், ஆன்மீக பெரியவர்களாகவும் திகழ்வார்கள், இவர்களது ஆசியுடன் ஜாதகியின் வாழ்க்கை மிக மிக உயர்ந்த நிலைக்கு எடுத்து செல்லும் என்பது கேது பகவானால் நிகழும் யோக அமைப்பே என்றால் அது மிகையில்லை, லக்கினாதிபதி 2,11க்கு  உடையவர்களின் ( பாரம்பரிய முறைப்படி) சேர்க்கையை பெற்ற கேது பகவான் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்தில் வலிமை பெற்று அமர்ந்ததால் மேற்கண்ட யோக பலன்கள் ஜாதகிக்கு தங்குதடையின்றி நடைபெறும் என்பது மட்டும் உறுதி.

குறிப்பு :

எந்த ஒரு ஜாதகத்திலும் சாயா கிரகங்களான ராகு கேதுவுடன் சேர்ந்த கிரகங்கள் வழங்கும் பலனை நிர்ணயம் செய்யும் பொழுது, ராகுகேது ஜாதகருக்கு லக்கினத்தில் இருந்து எந்த பாவகத்தில் அமர்ந்து இருக்கின்றனர், அமர்ந்த பாவகத்திர்க்கு யோக பலனை தருகின்றனரா ? அவயோக பலனை தருகின்றனரா ? என்பதை தெளிவாக தெரிந்து கொண்டு பலன் காண்பதே,  குறிப்பிட்ட ஜாதகருக்கு சாயா கிரகங்களுடன் சேர்ந்த கிரகங்கள் தரும் பலனை மிக துல்லியமாக கணிதம் செய்ய இயலும், பொதுவாக ராகுகேதுவுடன் சேர்ந்த கிரகங்கள் தீமையை செய்யும் என்பது முற்றிலும் ஜோதிட கணித உண்மைக்கு புறம்பான விஷயமாகவே " ஜோதிடதீபம் " கருதுகிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696 

புதன், 18 மார்ச், 2015

சுய ஜாதகத்தில் ஆட்சி உச்சம் பெற்ற கிரகத்தின் திசாபுத்தி நடைமுறைக்கு வரும் பொழுது யோகபலன்களை வாரி வழங்குமா ?




 ஒருவரின் சுய ஜாதகத்தில் ராசி அல்லது அம்ச நிலையிலோ  ஆட்சி, உச்சம் பெற்று இருக்கும் கிரகங்களின் திசாபுத்திகள் நடைமுறைக்கு வரும்பொழுது, ஜாதகர் யோக பலன்களை அனுபவிப்பார், பகை நீச்சம் பெற்று இருக்கும் திசாபுத்திகள் நடைமுறைக்கு வரும்பொழுது, ஜாதகர் அவயோக பலன்களை அனுபவிப்பார், என்பது பொதுவான கருத்தாக உள்ளது, கிரகங்களின் ஆட்சி,உச்சம்,சமம்,நட்பு,பகை,நீச்ச நிலைகளுக்கும், சுய ஜாதகத்தில் தனது திசாபுத்தி காலங்களில் அவர்கள் தரும் பலாபலன்களுக்கும் சம்பந்தம் இல்லை என்பதே உண்மை.

 மேலும் கிரகங்களின் ஆட்சி,உச்சம்,சமம்,நட்பு,பகை,நீச்ச நிலைகள் யாவும் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு உண்டான வலிமை அமைப்பே அன்றி, சுய ஜாதகத்திற்கு அவர்கள் தரும் பலன் அல்ல வலிமையையும் அல்ல, ஒருவரின் சுய ஜாதக அமைப்பில் லக்கினத்தை அடிப்படையாக கொண்டே கிரகங்களின் வலிமையை நிர்ணயம் செய்ய இயலும், மேலும் 12பாவகங்களின் தன்மையை நிர்ணயம் செய்ய இயலும், பொதுப்படையாக சுய ஜாதகத்தில் நவகிரகங்கள் ஆட்சி உச்ச நிலையில் உள்ளதால் யோகத்தை செய்யும் என்று முடிவு செய்வதும், பகை நீச்சம் பெற்று உள்ளதால் தீமையை செய்யும் என்று முடிவு செய்வதும் சரியான ஜாதக கணித பலனாக இருக்க வாய்ப்பில்லை என்பதே ஜோதிடதீபத்தின் கருத்து.

மேற்கண்ட கருத்தை உறுதி செய்யும் விதத்தில் சரியான உதாரண ஜாதகம் கொண்டு விளக்கம் தர ஜோதிடதீபம் கடமைபட்டுள்ளது.

உதாரண ஜாதகம் 1



லக்கினம் : மகரம் 
ராசி : கடகம் 
நட்சத்திரம் : ஆயில்யம் 4ம் பாதம் 

இந்த மகர இலக்கின ஜாதகருக்கு தற்பொழுது நடைபெறும் சுக்கிரன் திசை மீனத்தில் உச்சம் பெற்று  தனது  திசாபுத்தி  பலன்களை 17/03/1997 முதல் 17/03/2017 வரை வழங்குகிறார், பொதுவாக இவரது ஜாதகத்தை ஆய்வு செய்யும்  அன்பர்கள் அனைவரும் 5,10க்கு உடைய சுக்கிர பகவான் திசை 3ம் பாவகமான மீனத்தில் உச்சம் பெற்று நடத்துவதால் ஜாதகருக்கு சகல நிலைகளில் இருந்தும் முன்னேற்றம் உண்டாகும் 5,10ம் பாவக வழியில் இருந்தும் 3ம் பாவக வழியில் இருந்து மித மிஞ்சிய யோக பலன்களை, மகர லக்கினத்திற்கு யோக காரனான சுக்கிரன்  வாரி வழங்குகிறார் என்ற கருத்தை பலனாக சொல்லியிருக்கின்றனர், ஜாதகரும் இதை நம்பி செய்த காரியங்கள் யாவும் தோல்வி மேல் தோல்வியே கிடைத்து இருக்கின்றது, ஜீவன வழியில் இருந்து அதிக சிரமங்கள், திடீர் சொத்து இழப்புகள், சுய தொழில் செய்யும் நோக்கத்தில்  வாங்கிய கடன் தொல்லைகள், மூட நம்பிக்கையின் பெயரில் இழந்த பொருள் இழப்புகள் என ஜாதகர் தற்பொழுது நடைபெறும் சுக்கிரன் திசை, ஜோதிடர்கள் கூறிய பலனுக்கு நேர்எதிரான பலாபலன்களை அனுபவித்து கொண்டு  இருக்கிறார், ஜாதகரின் இந்த நிலைக்கு காரணம் என்ன ?

சுய ஜாதகத்தில் சுக்கிரன் உச்ச நிலையில் இருந்தாலும் கூட, அவர் தனது திசாபுத்தி காலங்களில் ஏற்று நடத்தும் பாவக பலன்களை பற்றி தெரியாமல் பலன் கண்டதே இதற்க்கு காரணம், இந்த ஜாதகருக்கு உண்மையில் சுக்கிரன் மீனத்தில் உள்ள 2ம் பாவகத்தில் அமர்ந்து  தனது திசையில் 6,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றும், 4,10ம் வீடுகள் திடீர் இழப்பை தரும் ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றும் பலன்களை தருவது, ஜாதகருக்கு வந்த இந்த மோசமான சூழ்நிலைக்கு காரணமாக கொள்ளலாம்.

ஜாதகருக்கு 4,10ம் வீடுகள் 8ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது 4ம் பாவக வழியில் இருந்து தனது சொத்து வண்டி வாகனம் என அனைத்தையும் திடீரென இழந்து வாடும் சூழ்நிலையை தந்தது, சுக போக வாழ்க்கைக்கு ஆசைபட்டு சொத்து சுகத்தை அனைத்தையும் இழக்கும் தன்மையையும், தனக்கு உள்ள சொத்துகளை துச்சமென மதித்து, அதன் மதிப்பு தெரியாமல் ஜாதகர் அனைத்தையும் இழந்து நிற்கும் தன்மையை தந்தது, 10ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் சொந்த தொழில் செய்யும் உத்தேசத்தில் செய்த காரியங்கள் யாவும் பெரிய பின்னடைவையும், பெருத்த நஷ்டத்தையும் தந்தது, தனது முன்னோர்கள் சேர்த்து வைத்திருந்த ஜீவன கௌரவத்தையும் இழந்து, தொழில் முறையில் ஜாதகர் மிகப்பெரிய தோல்விகளை சந்தித்தார், உச்சம் பெற்ற சுக்கிரன் திசை என்று உசுபேத்திய ஜோதிடர்களின் வழிகாடுதல்களின் பெயரில் அகல கால் வைத்து மிகப்பெரிய நஷ்டங்களை ஜாதகர் சந்தித்தை இவரது நலம் விரும்பிகாளால் கூட தடுக்க இயலவில்லை, மேற்க்கண்டவை  சுக்கிரன் திசை ஜாதகருக்கு 4,10ம் வீடுகள் 8ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றதால் ஏற்ப்பட்ட 80% விகித இழப்புகள்.

ஜாதகருக்கு 6,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றதே 200% சதவிகித இன்னல்களை வாரி வழங்கியது, அதாவது ஜாதகர் 6ம் பாவக வழியில் இருந்து ஜீவனம் மேற்கொள்வதற்காக வாங்கிய கடனே  வட்டி குட்டி போட்டு கடன்தொகையை விட 10 மடங்கு அதிகரித்து நின்றது, இதன் காரணமாக ஜாதகர் தனது முன்னோர்களின் ஜீவன சொத்துகளையும், பாரம்பரிய சொத்து, பூர்வீக பூமி ஆகியவற்றை அனைத்தும் இழந்து செய்வது அறியாமல் திகைக்க வைக்க, உடல் ரீதியான பிரச்சனைகளுக்காக மருத்துவ செலவுகள் ஒருபக்கம் ஜாதகரை வேறு வழியில் இன்னல்களை வாரி வழங்கியது, 11ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் எவ்வித அதிர்ஷ்ட வாய்ப்புகளையும் பெற இயலாமல், பிற்போக்கு சிந்தனையுடனும், அறிவார்ந்த செயல்பாடுகள் இல்லாமலும், எவர் எதை சொன்னாலும் அதை உண்மை என நம்பி செய்த காரியங்களில் ஏற்ப்பட்ட பொருள் இழப்புகள் என்பதும் மிக மிக அதிகம், ஜாதகரின் சிந்தனை திறனின் செயல்பாடுகள் முடங்கியதற்கு இதுவும் ஓர் காரணமாகவே கருதலாம், ஆக உச்சம் பெற்ற சுக்கிரன் திசை ஜாதகருக்கு பாதிப்படைந்த பாவக தொடர்புகளை பெற்றதால் ஜாதகருக்கு எவ்வித யோக பலன்களையும் சுக்கிரன் திசை வழங்க வில்லை என்பதே முற்றிலும் உண்மை , பொதுவாக சுய ஜாதகத்தில் கிரகங்கள்  ஆட்சி உச்ச நிலையை கருத்தில் கொண்டு பலன் காணாமல், தனது திசாபுத்தி காலங்களில் எந்த பாவகத்தின் பலனை தருகிறது என்ற உண்மை நிலையை உணர்ந்து ஜாதக பலன் காணும் பொழுதே, சம்பந்தபட்ட ஜாதகருக்கு மிக துல்லியமான ஜாதக கணித பலன்களை சொல்ல இயலும் என்பது மறுக்க இயலாத உண்மை.

 உதாரண ஜாதகம் 2

லக்கினம் : மிதுனம் 
ராசி : மகரம் 
நட்சத்திரம் : அவிட்டம் 2ம் பாதம் 

இந்த மிதுன இலக்கின ஜாதகருக்கு மகரத்தில் நீச்ச நிலையில் அமர்ந்த குரு பகவானின் திசை 26/05/2007 முதல் 26/05/2023 வரை நடைபெறுகிறது, தற்பொழுது நடைபெறும் குரு திசை ஜாதகருக்கு 1,5,7,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று, ஜாதகருக்கு 1ம் பாவக வழியில் இருந்து நல்ல உடல் நலம், மன நலம், புகழ், வெற்றி, கீர்த்தி ஆகியவற்றை வாரி வழங்குவதுடன், ஜாதகர் தனக்கு வரும் அதிர்ஷ்ட வாய்ப்புகளை முறையாக பயன்படுத்திக்கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் பெரும் யோகத்தை தருகிறது, 5ம் பாவக வழியில் இருந்து இறை அருளின் கருணையை பரிபூரணமாக பெரும் யோகத்தையும், தனது பூர்வீகத்தில் இருந்துகொண்டே வாழ்க்கையில் சகல யோகத்தையும் பெரும் தன்மையை தருகிறது, ஜாதகரின் நுண்ணறிவு திறன் ஜாதகர் செய்யும் சுய தொழில் அமைப்பில் மிகுந்த அதிர்ஷ்டத்தை வாரி வழங்குகிறது, ஜாதகரின் புதிய சிந்தனையும் செயல்பாடுகளும், மிகப்பெரிய வெற்றி வாய்ப்பை உறுதி செய்கிறது.

7ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு வாழ்க்கை துணை வழியில் இருந்து அதிர்ஷ்ட வாய்ப்புகள் வந்து குவிந்த வண்ணம் இருக்கிறது, ஜாதகரின் நண்பர்கள் தொழில் முறை கூட்டாளிகள் மூலம் மிகுந்த அதிர்ஷ்ட வாய்ப்பையும், சிறந்த உதவிகளையும், எதிர்பாராத வருமான வாய்ப்பையும் பெரும் யோகத்தை தருவது சிறப்பான விஷயமாக கருதலாம், ஜாதகர் செய்யும் ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில் சிறந்து விளங்கும் தொழில் திறமைகளை பெற்று இருப்பது மேற்க்கண்ட 7ம் பாவக வழியில் இருந்தே என்றால் அது மிகையில்லை. 

11ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் நீடித்த அதிர்ஷ்டத்தையும், முற்போக்கு சிந்தனையுடன் அனைத்தையும் எதிர்கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் பெரும் யோகத்தை தருவது கவனிக்க தக்கது, ஜாதகர் நினைக்கும் எண்ணங்கள் யாவும் நடைமுறைக்கு வருவதும், செய்யும் காரியங்கள் யாவும் நல்ல அதிர்ஷ்ட வாழ்க்கையை தருவது 11ம் பாவக வழியில் இருந்தே, மேலும் ஜாதகருக்கு உதவி செய்ய பலர் காத்து இருப்பது வரவேற்க தக்கது, ஜாதகரின் தேவையும், ஜாதகருடைய தேவைகளையும் நிறைவேற்றும் விதத்தில், ஜாதகரை சுற்றி உள்ளவர்கள் இருப்பது 11ம் பாவகத்தின் வலிமையே, ஆக நீச்சம் பெற்ற குரு திசை ஜாதகருக்கு 1,5,7,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று, மிக பெரிய  யோக வாழ்க்கையை தனது திசையில் வாரி வழங்குவது ஆட்சி,உச்சம்,பகை,நீச்சம் என்ற வலிமையின் நடைமுறையில் வழங்கும், முரண்பட்ட பலாபலன்களின் தன்மையை மேற்கண்ட உதாரண ஜாதகம் மூலம் நாம் உணர்ந்து கொள்ள இயலும் அன்பர்களே!

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

சனி, 14 மார்ச், 2015

ராகுகேது தோஷம் சுய ஜாதகத்தில் வழங்கும் அவயோக பலன்கள் !




ஜோதிடதீபம் பொதுவாக, சாய கிரகமான ராகு கேது, சுய ஜாதகத்தில் நல்ல நிலையில் அமரும் பொழுது, ஜாதகருக்கு  தரும் யோக பலன்களை பற்றி வெகுவாக பதிவு செய்திருக்கிறது இதற்க்கு முன் எழுதிய கட்டுரைகளில், மேலும் சுய ஜாதகத்தில் ராகு கேது எங்கு அமர்ந்தால் நன்மையை செய்வார்கள் என்று சில விளக்கங்களும், கட்டுரைகளில் தெளிவுபட தெரிவித்திருக்கும், ஆனால் ராகு கேது ஒருவரது ஜாதகத்தில் பாதிப்பான பலனை தரும் அமைப்பில் அமர்ந்து இருப்பின் அவர்கள் தரும் அவயோக பலன்களை பற்றி குறிப்பிட்ட அளவிலேயே பதிவு செய்திருக்கும், இந்த பதிவில் ராகுகேது பாதிப்பை தரும் அமைப்பில் இருப்பின் ஜாதகரின் வாழ்க்கை எவ்வித இனல்களை எதிர்கொள்ள வேண்டி வரும் என்பதை சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே !

சாய கிரகங்களான ராகு கேது சுய ஜாதகத்தில் வலிமை பெற்று அமரும் பொழுது எந்த அளவிற்கு யோக பலன்களை வாரி வழங்குகிறதோ? அதை போன்றே பன்மடங்கு அவயோக பலன்களை வாரி வழங்கும் தான் அமர்ந்த நிலையில் வலிமை அற்ற தன்மையுடன் இருப்பின், பொதுவாக சுய ஜாதகத்தில் ராகு கேது பாதிப்பை தாராமல் வலிமையுடன் இருப்பது ஜாதகருக்கு மிகுந்த நலன்களை தரும், ஒருவேளை ராகு கேது பாதிப்படைந்து அமர்ந்த பாவகத்தின் பலனை நடைமுறையில் உள்ள திசை,புத்தி,அந்தரம்  மற்றும் சூட்சமம்  அல்லது எதிர்வரும்திசை,புத்தி,அந்தரம்  மற்றும் சூட்சமம் ஆகியவை ஏற்று நடத்தாமல் இருப்பின் ஜாதகருக்கு நல்லது, ஒருவேளை குறிப்பிட்ட பாவகத்தின் பலனை ஏற்று நடத்தினால், ஜாதகர் அந்த பாவக வழியில் இருந்து பெரும் அவயோக பலன்களை எந்த விதத்திலும் தவிர்க்க இயலாது அனுபவித்தே தீரவேண்டி வரும், மேலும் சாய கிரகங்களுடன் சேர்ந்த கிரகங்களின் பலா பலன்களையும் அனுபவிக்கும் தன்மையை தரும், தன்னுடன் சேர்ந்த கிரகங்களின் பலன்களையும் தானே ஏற்று நடத்த ஆரமிபித்து விடும் வல்லமை பெற்றது, இந்த  சாயா கிரகங்களான ராகு கேது  என்றால் அது  மிகையில்லை.

சரியான உதாரண ஜாதகம் கொண்டு விளக்கம் காண்போம் :



லக்கினம் : கும்பம்
ராசி : துலாம்
நட்சத்திரம் : சுவாதி 4ம் பாதம்

ஜாதகருக்கு கும்ப லக்கினம் ராகு கேது சுய ஜாதகத்தில் முறையே,  தனுசு ராசியில் உள்ள 10ம் பாவகத்தில் ராகுவும், மிதுன ராசியில் உள்ள நான்காம் பாவகத்தில் கேதுவும் அமர்ந்து, 10ம் பாவகத்தையும், 4ம் பாவகத்தையும் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாக்கும் வல்லமையை பெறுகின்றனர், இனி ஜாதகருக்கு சாயா கிரகங்கள் தரும் பலன்களை பற்றி சிந்திப்போம்.

பொதுவாக ஒருவரது சுய ஜாதகத்தில் சுக ஸ்தானம் எனும் 4ம் பாவகமும், ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகமும் பாதிப்பது ஜாதகருக்கு சம்பந்தபட்ட பாவக வழியில் இருந்து அதிக இன்னல்களை வாரி வழங்கும், மேலும் பாதிப்பிற்கு சாயாகிரகங்கள் காரணமாக அமைந்தால் ஜாதகரின் நிலை மிகவும் பரிதாப நிலைக்கு ஆளாக்கும், இந்த ஜாதகம் ஆண்  என்பதால் பாதிப்பின் தன்மை மிகவும் கடுமையானதாக அமைந்தது, உத்தியோகம் புருஷ லட்சனம் என்று சொல்வார்கள், இவரது ஜாதகத்தில் ராகு பகவான் ஜீவன ஸ்தானத்தில் அமர்ந்து ஜாதகரின் தொழில் மற்றும் வேலை வாய்ப்பை கடுமையாக பாதித்து ஜீவன வாழ்க்கையை கேள்விக்குறியாக மாற்றினார், ஜாதகருக்கு இதுவரை சரியான தொழில் அமையவில்லை, சிறு வேலைகூட கிடைக்கவில்லை, மேலும் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகம் பெற்ற தகப்பனை குறிக்கும் என்பதால், ஜாதகருக்கும் ஜாதகரின் தகப்பனாருக்கும் ஒட்டு உறவு இல்லாமல் செய்தது, தனது தகப்பனார் வழியில் இருந்து பெற வேண்டிய  எந்த ஒரு நன்மையையும் ஜாதகர் பெற இயலாமல், அதிக இன்னல்களுக்கு ஆளானார்.

 ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகம், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 9ம் ராசியாக வருவதால், ஜாதகர் எந்த ஒரு வேலையை செய்தாலும் சம்பந்தபட்ட இடத்தில் இருந்து நர்ப்பெயரோ, முன்னேற்றமோ கிடைக்கவில்லை, கிடைத்தது அனைத்தும் அவமானங்களும், துன்பமும்தான், ஜாதகரை மேற்கண்ட விஷயங்கள் வெகுவாக பாதிப்பை தந்தது, ஜீவன ரீதியான வாழ்க்கையில் ஜாதகர் இதுவரை கடுமையாக போராடிக்கொண்டு வாழ்க்கையை நகர்த்த வேண்டிய சூழ்நிலையே ஏற்ப்பட்டது, எதிர்பாராத சந்தர்ப்பங்களில் ஜாதகரின் கௌரவம் பலரால் கடுமையாக பாதிக்கபட்டது, இதனால் வேலை இழப்பு, தொழில் வெற்றி கிடைக்காமல் ஜாதகர் கடுமையான இன்னல்களுக்கு ஆளாகி, விரக்தியின் உச்ச நிலைக்கே செல்லும் தன்மையை தந்தது, ஜாதகர் தனது தகப்பனார் வழியில் இருந்து எந்த ஒரு வழிகாட்டுதலும் பெற இயலாமல், தனி ஒருவராக வாழ்க்கையில் பல போராட்டங்களை சந்திக்க வைத்தது, ஜாதகர் ஜீவன வழியில் தொடர்பு பெற்ற அன்பர்கள் யாவரும் ஜாதகரை தனது சுய லாபத்துக்காக மட்டும் பயன்படுத்தி கொண்டனர், இவருக்கு எவ்வித சிறு நன்மையையும் செய்யவில்லை என்பது கவனிக்க தக்கது.

சொத்து சுகம், வண்டி வாகனம், நிலபுலன்கள் என்ற விஷயங்களை குறிக்கும் சுக  ஸ்தானமான நான்காம் பாவகம் ஜாதகருக்கு மிதுன ராசியில் வியாபித்து, அங்கு அமர்ந்த கேது பகவான், ஜாதகரின் சுக போகமான வாழ்க்கைக்கு, வேட்டு வைத்தார், பொதுவாக 10ம் பாவகம் தகப்பனாரையும், 4ம் பாவகம் தாயரையும் குறிக்கும், இவரது ஜாதகத்தில் இந்த இரண்டு பாவகமும் கடுமையாக பாதிப்பதால், ஜாதகர் சிறுவயது முதல் 10 மற்றும் 4ம் பாவக வழியில் இருந்து நன்மை பெற இயலவில்லை, பெற்றோரை பிரிந்து ஜாதகர் தனது வாழ்க்கையை எதிர்கொள்ளும் தன்மையை தருகின்றது என்றால், ஜாதகரின் நிலை என்ன ? என்பதை அன்பர்களின் சிந்தனைக்கே விட்டுவிடுகிறது " ஜோதிடதீபம் " பெற்றோரை பிரிந்த குழந்தையின் வளர்ப்பும், வாழ்க்கையும் எவ்விதம் இருக்கும், அடிப்படையில் கிடைக்க வேண்டிய பெற்றோரின் பாசமே கிடைக்காத, இந்த ஜாதகரின் வாழ்க்கைக்கு அடிப்படை காரணமாக அமைந்தது, இவரது ஜாதகத்தில் அமர்ந்த சாயா கிரகங்களான ராகுகேது என்றால் அது மிகையில்லை.

சுக ஸ்தானமான 4ம் பாவகம் கேது பகவானால் பாதிப்படைந்ததால், ஜாதகருக்கு குடியிருக்க ஒரு நல்ல வீடு இன்னும் அமையவில்லை, சிறந்த போக்குவரத்து வாகனம் அமையவில்லை, நிம்மதியாக உறங்குவதற்கு வசதியற்ற ஒரு சூழ்நிலையில், ஜாதகர் தனது இருப்பிடத்தை அமைத்துகொள்ளும் சூழ்நிலையை தந்துள்ளது, தான் கற்ற கல்வி வழியில் இருந்தும் ஜாதகரால் பெரிய அளவில் எதையும் செய்ய இயலாவண்ணம், சந்தர்பம் மற்றும் சூழ்நிலைகள் அமைந்தது, மிதுனம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 3ம் ராசியாக அமைவதால், ஜாதகரின் முயற்ச்சிகள் யாவும் படு தோல்வியை சந்தித்தது, ஜாதகரின் மனமும் மூடநம்பிக்கையால் முடங்கி போனது, பிற்போக்கு சிந்தனைகள் ஜாதகரின் வாழ்க்கையை வெகுவாக பாதித்து ஜாதகரின் முன்னேற்றத்தை கடுமையாக பாதித்தது, உபய காற்று தத்துவம் என்பதால் ஜாதகரின் அறிவு எவ்வித பலனும் தாராமல், பயனற்று போனது, ஜாதகரின் திட்டங்கள் வெறும் கற்பனையாகவே நின்றது, நடைமுறைக்கு வாராமல், அவரது எண்ணத்திலேயே சமாதி நிலையை கண்டது, ஜாதகரின் முயற்ச்சிக்கும் தன்மை 100% விகிதம் தோல்வியை பெற்றது.

பொதுவாக சுய ஜாதகத்தில் 4,10ம் பாவகங்கள் பெற்றோரை குறிப்பதால், பெற்றவர்களின் அமைப்பில் இருந்து ஜாதகர் பெரும் யோக வாழ்க்கையின் தன்மையை இது உறுதி செய்யும், ஆனால் இவரது ஜாதகத்தில் 4,10ம் பாவகங்கள் சாயா கிரகங்களான ராகுகேது பகவானால் பாதிக்க படுவதால், ஜாதகருக்கும் ஜாதகரின் பெற்றோருக்கும், நல்ல உறவு நிலையே அற்றுபோகும் சூழ்நிலையை உருவாக்கியது, ஜாதகரின் லட்சியம், எண்ணம், அறிவு திறனின் செயல்பாடுகள், இறை அருளின் கருணை அனைத்தையும் ஏக காலத்தில் இழந்து, வாழ்க்கையில் போராட்டத்தை அதிக அளவில் சந்திக்கும் தன்மையை தந்தது, தற்பொழுது நடைபெறும் சனி திசையும் ஜாதகருக்கு 4ம் பாவக பலனை ஏற்று நடத்துவது, ஜாதகரின் வாழ்க்கையில் உள்ள இன்னல்களையும், எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் கட்டியம் கூறுகிறது, நடைபெறும் சனி திசை, ஜாதகருக்கு கேது அமர்ந்த 4ம் பாவக பலனை ஏற்று நடத்துவது, உபய காற்று தந்து அமைப்பில் இருந்து அதிக துன்பங்களையும், சுக ஸ்தான அமைப்பில் இருந்து வரும் பிரச்சனைகளையும் காட்டுகிறது, ஜாதகர் சரியான அமைப்பில் உள்ள வீட்டில் குடியிருந்தால் மட்டுமே, சனி திசை ஜாதகருக்கு 30% விகித நன்மையை செய்ய கூடும், இல்லை எனில் ஜாதகரின் வாழ்க்கை கடுமையாக பாதிப்பதை தடுப்பது குதிரை கொம்பாகவே இருக்கும்.

குறிப்பு :

(சுய ஜாதகத்தில் சாயா கிரகங்களான ராகுகேது நல்ல வலிமையுடன் அமர்ந்தால், அந்த ஜாதகருக்கு அவர்கள் தரும் யோக வாழ்க்கை என்பது அளவில்லாத தன்மையுடன் இருக்கும், ஜாதகரின் யோக  வாழ்க்கைக்கு எவராலும் தடை போட முடியாது, யோக பலனின் தன்மை முழு வீச்சில் வேலை செய்யும், சுய ஜாதகத்தில் சாயா கிரகங்களான ராகுகேது வலிமை அற்ற தன்மையில் அமரும் பொழுது ஜாதகரின் வாழ்க்கை கேள்விக்குறியாக மாறுவதை, எவராலும் தடுக்க இயலாது, குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து ஜாதகர் அனுபவிக்கும் இன்னல்களுக்கு ஒரு வரைமுறை இருக்காது, ஒருவேளை நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ராகுகேது அமர்ந்த பாவக பலனை ஏற்று நடத்தாமல், இருந்தால் ஜாதகர் தப்பித்தார், ஏற்று நடத்தினால் ஜாதகரின் கதி அதோ கதிதான்.)


வாழ்க வளமுடன்  
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

ஞாயிறு, 1 மார்ச், 2015

யோகம் உள்ள மனைவி அமையுமா ?வாழ்க்கை துணை வழியில் இருந்து அதிர்ஷ்டம் உண்டா?




கேள்வி :

அய்யா எனக்கு யோகம் உள்ள மனைவி அமையுமா ? வாழ்க்கை துணை வழியில் இருந்து அதிர்ஷ்டம் உண்டா ?

பதில் : 

அன்பரே தங்களது ஜாதக அமைப்பில் குடும்பம்,பூர்வபுண்ணியம்,களத்திரம் மற்றும் ஆயுள் பாவகம் வலிமை பெற்று இருப்பின் தங்களின் கேள்விக்கு உண்டான பதில் நிச்சயம் உண்டு, மேலும் தங்களது ஜாதகத்தில் மேற்கண்ட பாவகங்கள் நல்ல வலிமையுடனே உள்ளது, இருப்பினும் தாங்கள் பொருத்தம் பார்க்க அனுப்பிய பெண்ணின் ஜாதகத்தில் இதற்க்கு நேர்மாறாக அமைந்திருக்கிறது, அந்த ஜாதகத்தில் உள்ள பாவகங்களின் வலிமையை பற்றி கிழ்கண்ட வரிகளில்  தெளிவு படுத்துகிறோம், அதன் பிறகு தங்களின் முடிவை நிர்ணயம் செய்யுங்கள்.

பொதுவாக திருமணம் செய்துகொள்வதற்கு வது வரன் ஜாதகத்தை ஆய்வுக்கு எடுத்துகொள்ளும் பொழுது, அவர்களது ஜாதக ரீதியாக கவனிக்க பட வேண்டிய சில விஷயங்கள் கிழ்கண்டவாறு அமையும்.

1) ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகம் நல்ல நிலையில் இருப்பது அவசியம், குடும்ப ஸ்தானம் வலிமை பெற்று அமைவது தம்பதியரின் குடும்ப வாழ்க்கையில் நல்ல வருமான வாய்ப்புகளையும், பொருளாதார வசதிகளையும் வாரி வழங்கும், தம்பதியரின் ஒருமித்த கருத்துகளை புரிந்துகொள்ளும் வல்லமையை தரும், ஒருவர் நினைப்பதை குறிப்பால் உணர்ந்து குடும்ப வாழ்க்கையை சிறப்பாக நடத்தும் யோகத்தை தரும், இருவரின் பேச்சிலும் இனிமை மேலோங்கும், வெறுப்பு கலந்த வார்த்தைகள் அல்லது வீண் விவாதங்களுக்கு இடமளிக்காமல், குடும்பத்தையும், குடும்பத்தில் உள்ளோரையும் அனுசரித்து செல்லும் சிறப்பான வாழ்க்கையை தரும், மேலும் குடும்ப ஸ்தானம் எனும் 2ம் வீடு  6,8,12ம் வீடுகளுடன் தொடர்பு பெறாமலும், பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெறாமலும் இருப்பது நல்லது.

2) குழந்தை பாக்கியத்தை வழங்கும் 5ம் பாவகம் வலிமையுடன் இருப்பது தனது சந்ததிக்கு நல்ல வாரிசை பெற்று தரும், எனவே 5ம் பாவகம் 6,8,12ம் வீடுகளுடன் தொடர்பு பெறாமலும், பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெறாமலும் இருப்பது அவசியமாகும் மேலும் சிறப்பாக கவனிக்க வேண்டிய பாவகமாக 5ம் பாவகத்தை கருதலாம், தம்பதியருக்குள் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் வந்த போதிலும் இறை அருளின் கருணையினால், தன்பதியரை பிரிவு என்ற நிலைக்கு தள்ளாமல், பெரியோர்களின் ஆசியுடன் நீண்ட நெடுங்காலம் சிறப்பாக வாழ இந்த பாவகம் துணை புரியும்.

3) கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் சிறப்பாக புரிந்துகொண்டு, ஒருவருக்கு ஒருவர் விட்டுகொடுத்து செல்லும் இனிய வாழ்க்கையை வாரி வழங்குவது களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகம் என்பதால், இந்த 7ம் பாவகம் இருவரது ஜாதகத்திலும் நல்ல வலிமையுடன் இருப்பது சிறப்பு, மேலும் 6,8,12ம் வீடுகளுடன் தொடர்பு பெறாமலும், பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெறாமலும் இருப்பது திருமண வாழ்க்கையின் வெற்றியை, பொருத்தம் காணும் பொழுதே உறுதி செய்துவிடும்.

4) கணவன் வழியில் இருந்து மனைவியும், மனைவி வழியில் இருந்து கணவனும் பெரும் யோக வாழ்க்கையை நிர்ணயம் செய்வது ஆயுள் ஸ்தானம் என்று அழைக்கப்படும் 8ம் பாவகம் என்பதால் இருவரது சுய ஜாதகத்திலும் 8ம் பாவகம் வலிமை பெற்று இருப்பது சிறப்பு, மேலும் இருவரது ஆயுள் பலத்தையும் விருத்தி செய்யும் என்பதால் இந்த பாவக வழிமையை பற்றி கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம், மேலும் இந்த ஆயுள் பாவகம் 1,6,12ம் வீடுகளுடன் தொடர்பு பெறாமலும், பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெறாமலும் இருப்பது தம்பதியரின் யோக வாழ்க்கையை உறுதி செய்யும்.

5) ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகம் இருவரது ஜாதகத்திலும் மிக மிக வலிமையுடன் இருப்பது அவசியம் ஏனெனில், தம்பதியரின் கெளரவம் அந்தஸ்து மற்றும் சமுதாயம் மதிக்கும் வழியில் வாழும் யோக வாழ்க்கையை  வாரி வழங்குவது ஜீவன ஸ்தானம் என்பதால் இருவரது சுய ஜாதகத்திலும் ஜீவன ஸ்தானம் வலிமை பெற்று இருப்பது சகல நிலைகளில் இருந்தும் யோகத்தை தரும், கௌரவம் குறையாத, கருத்து வேறுபாடற்ற, மணவாழ்க்கையில் பிரிவு நிலையை தாராத தாம்பத்திய வாழ்க்கையை வழங்கும், மேலும் ஜீவன ஸ்தானம் 6,8,12ம் வீடுகளுடன் தொடர்பு பெறாமலும், பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெறாமலும் இருப்பது நல்லது.

தாங்கள் அனுப்பிய வதுவின் ( பெண் ) ஜாதக நிலை :



1) குடும்ப ஸ்தானம் 6ம் வீட்டுடன் தொடர்பு அடிப்படையில் குடும்ப ஸ்தானம் பாதிப்படைந்திருக்கிறது,
2) பூர்வ புண்ணிய ஸ்தானம் எனும் 5ம் பாவகம் 6ம் வீட்டுடன் தொடர்பு, குழந்தை பாக்கிய அமைப்பில் ஆண்  வாரிசு கேள்விக்குறியாக மாற வாய்ப்புகள் அதிகம்.
3) களத்திர பாவகம் எனும் 7ம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம், பெறுவது திருமண வாழ்க்கையில் வரும் இன்னல்களை குறிக்கிறது.
4) ஆயுள் பாவகமான 8ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது, இந்த ஜாதகியை மனம் செய்து கொள்பவருக்கு மன நிம்மதி என்பது கேள்வி குறி? மேலும் வீண் விரையங்களையும் இழப்புகளையும் தவிர்க்க இயலாது. 
5) நடைபெறும் சந்திரன் திசை பூர்வ புண்ணியமான 5ம் பாவகம் எதிரி ஸ்தானமான 6ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று பலனை தருவது மிகுந்த இன்னல்களை சம்பந்தபட்ட பாவக வழியில் இருந்து 100% விகிதம் தரும்.

ஜாதகத்தில் உள்ள உண்மை நிலை இதுவே, எனவே இறுதி முடிவு தங்களின் பார்வைக்கே விட்டு விடுகிறது ஜோதிடதீபம்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

சனி, 28 பிப்ரவரி, 2015

களத்திர பாவகம் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெற்றால் ஜாதகரின் நிலை என்ன ?

 

சுய ஜாதகத்தில் எந்த ஒரு பாவகமும் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெறுவது சம்பந்தபட்ட பாவக வழியில் இருந்து மிகுந்த துன்பத்தை தரும், மேலும் திருமண வாழ்க்கையை நிர்ணயம் செய்யும் களத்திர பாவகம் ஒருவரது ஜாதகத்தில் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெறுவது களத்திர பாவக வழியில் இருந்து மீளமுடியாத துன்பத்திற்கு ஆளாக்கும், உதாரண ஜாதகம் கொண்டு இந்த பதிவில் சிந்திப்போம் அன்பர்களே !

ஒருவரது ஜாதகத்தில் கேந்திர பாவகங்கள் என்று அழைக்கப்படும் 1,4,7,10ம் வீடுகள் ( நமது ஜோதிடத்தில் 1ம் பாவகம் சம வீடாக எடுத்துகொள்வோம் ) மிக வலிமையுடன் இருப்பது அவசியம், ஒரு நாற்காலிக்கு எப்படி நான்கு கால்களும் முக்கியமோ அதை போன்றதே கேந்திர பாவகங்கலான 1,4,7,10ம் வீடுகள், ஒருவரது ஜாதகத்தில் 1ம் வீடான லக்கினம் வலிமை பெரும் பொழுது ஜாதகர் தனது உடல்,மனம்,ஆயுள்,புகழ்,கீர்த்தி,ஒழுக்கம்,செயல்திறனில் காணும் வெற்றி என்ற வகையில் யோக பலன்களையும், 4ம் வீடான சுக ஸ்தானம் வலிமை பெரும் பொழுது சொத்து,சுகம், வண்டி வாகன யோகம், நல்லகுணம், சிறந்த வசதி மிக்க வீடு, நிலபுலன்கள் என்ற வகையில் யோக பலன்களையும், 7ம் வீடான களத்திர ஸ்தானம் வலிமை பெரும் பொழுது வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் ஆதரவு, சிறந்த இல்லற வாழ்க்கை, நல்ல நண்பர்கள் சேர்க்கை, வெளியில் இருந்து வரும் ஆதரவு, பொதுமக்கள் செல்வாக்கு, நண்பர்களின் ஒத்துழைப்பு, கூட்டாளிகளின் எதிர்பாராத ஆதரவு என்ற வகையில் யோக பலன்களையும், 10ம் வீடான ஜீவன ஸ்தானம் வலிமை பெரும் பொழுது, சிறந்த தொழில் மற்றும் வேலை வாய்ப்பு, சமுதாயத்தில் கிடைக்கும் மரியாதை சுய கௌரவம், அந்தஸ்து மதிப்பு மிக்க பதவிகள், பொருளாதார ரீதியான வெற்றிகள், எங்கு சென்றாலும் கிடைக்கும் வெகுமதிகள், பாராட்டுகள் பொதுவாழ்க்கையில் கிடைக்கும் அங்கீகாரம் என்ற வகையில் யோக பலன்களையும் வாரி வழங்கும்.

மேற்கண்ட நன்மைகளை சுய ஜாதகத்தில் 1,4,7,10ம் வீடுகள் பாவக தொடர்புகள் அமைப்பில் வலிமை பெரும் பொழுது ஜாதகருக்கு தங்குதடையின்றி வாரி வழங்கும், எந்த காரணத்தை கொண்டும் மேற்கண்ட வீடுகள் 6,8,12ம் வீடுகளுடன் தொடர்பு பெறுவது அதிக இன்னல்களையும், பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெறுவது 200% விகித இன்னல்களையும் வாரி வழங்கும், ஒருவேளை மேற்கண்ட வீடுகள் 6,8,12ம் வீடுகளுடன் தொடர்பு பெற்றோ, அல்லது பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெற்றோ தற்பொழுது நடைபெறும் திசையும், தொடர்பு பெற்ற 6,8,12 மற்றும் பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தினால் ஜாதகரின் பாடு படு திண்டாட்டம் ஆகிவிடும், பாரம்பரிய ஜோதிடர்கள் இந்த வகை இன்னல்களுக்கு சனி பகவான் மீதும், ராகுகேது மற்றும் பாவ கிரகங்களின் மீது குற்றம் சாற்றுவது இயற்கையான விஷயமாகவே அமைந்து விடுகிறது.

கிழ்கண்ட ஜாதக அமைப்பில் இருந்து சில சந்தேகங்களுக்கு விளக்கம் பெறுவோம் அன்பர்களே !


இலக்கினம் : தனுசு 
ராசி : தனுசு 
நட்சத்திரம் : பூராடம் 3ம் பாதம் 

இந்த ஜாதகிக்கு கேந்திர பாவகங்கள் எனும் 1,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் தொடர்பு, 4,10ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று 12ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு திடீர் இழப்பை தரும் 8ம் வீடான விருச்சிக ராசியாக அமைந்தது பெரிய பின்னடைவு, மேலும் 12ம் வீடு ஸ்திர நீர் ராசியாக அமைவது ஜாதகியின் மனதை வெகுவாக ஆளுமை செய்து மன போராட்டம், மனக்கவலை, தீர்வு காண இயலாத வண்ணம் மனக்குழப்பம் ஆகியவற்றை ஸ்திரமாக தொடர்ந்து தீய பலன்களை வாரி வழங்கி கொண்டே இருக்கும்.

ஜாதகிக்கு தற்பொழுது நடைபெறும் ராகு திசை நன்றாக வாழவேண்டிய வயதில் வந்து 4,10ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று ( 05/07/2003 முதல் 05/07/2021 வரை ) 4,10ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவக பலனை ஏற்று நடத்துவது மிகுந்த கவலைக்கு உள்ளாக்குவதாகவே இருக்கின்றது, பொதுவாக ஜோதிடதீபம் இதற்க்கு முன் பதிவு செய்த கட்டுரைகளில் 8ம் வீடு என்பது ஒரு ஜாதகர் தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து பெரும் யோக வாழ்க்கையை குறிப்பதாக விளக்கம் தந்து இருப்போம், இந்த ஜாதகிக்கு கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 8ம் வீடான விருச்சிகம் 12ம் பாவகமாக அமைந்து, நடைபெறும் ராகு திசை இந்த விருச்சிகத்தில் அமைந்த 12ம் பாவக பலனை ஸ்திரமாக ஏற்று நடத்தியதின் விளைவும், சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றதின் விளைவும், ஜாதகியை திருமண வாழ்க்கையில் அளவில்லா இன்னல்களையும், துன்பங்களையும் அனுபவிக்க வைத்தது, லக்கினம் எனும் முதல் பாவகமும் பாதக ஸ்தானதுடன் தொடர்பு பெற்றதால் ஜாதகி சரியான தீர்வுகளையும், நல்ல வழிகளையும் பின்பற்ற இயலாத சூழ்நிலையை தந்து பல இன்னல்களுக்கு தானும் காரணமாகவே அமைந்துவிட்டார் என்பது கண்கூடான உண்மை.

இதற்க்கு தீர்வு என்ன ? என்ற கேள்விக்கு ஜோதிடதீபம் பரிந்துரை செய்யும் விஷயம் 1) ஜாதகி முதலில் தனது ஜாதக வலிமையின் உண்மை நிலையை உணர்வது அவசியம், 2) தனது ஜாதகத்தில் பாவகங்களின் வலிமை அற்ற நிலையின் காரணமாகவே தனக்கு பல இன்னல்கள் வருகின்றது என்ற அடிப்படை உண்மையை புரிந்துகொள்ள முயற்ச்சி செய்வது அவசியம் ( ஜாதகிக்கு இது சற்று சிரமம்தான் ஏனெனில் லக்கினமும் பாதக ஸ்தானத்துடன் அல்லவா தொடர்பு பெற்றுள்ளது ) 3) தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் இன்னல்களை ஏற்றுகொள்வது நல்லது சிறிது காலம் சிரமமாக இருந்த போதிலும், வினைபதிவின் தன்மை வெகுவாக குறையும், 4) நண்பர்கள் வெளிவட்டார பழக்க வழக்கங்களை எச்சரிக்கையாக கையாள்வது சிறந்த நன்மையை தரும். 5) சிறந்த ஆன்மீக குருவிடம் தீட்சை பெறுவது சகல நிலைகளில் இருந்தும் முன்னேற்றத்தை தரும், 6) திருவெண்காடு திருத்தலம் சென்று முக்குண நீராடி நலம் பெறுவது ஜாதகிக்கு சகல நிலைகளில் இருந்தும் யோக வாழ்க்கையை வாரி வழங்கும்.

ஜாதகிக்கு அடுத்து வரும் குரு திசை 3,9ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவக பலனை ஏற்று நடத்துவதால் வாழ்க்கையில் சிறந்த நன்மைகள் நடைபெற யோகம் உண்டாகும், ராகு திசையின் விரைய ஸ்தான பலன்களின் பிடியில் இருந்து மீண்டு, குரு திசையில் ஜீவன ஸ்தான வழியில் இருந்து யோக பலன்களை அனுபவிப்பர் என்பது நிதர்சனமான உண்மை ராகு திசையை மிக கவனமாக எதிர்கொள்ளுங்கள், வாழ்த்துகள். 

குறிப்பு :

" பூராடம் நூலாடாது " என்ற பழமொழிக்கும் இந்த ஜாதகதிர்க்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை அன்பர்களே! சுய ஜாதகத்தில் பாவக வலிமை இல்லாத காரணத்தினாலேயே ஜாதகிக்கு திருமண வாழ்க்கை சிறப்பில்லை என்பதை அனைவரும் உணர்வது அவசியம், 

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வியாழன், 26 பிப்ரவரி, 2015

யோக காலமும் நல்ல நேரமும் வரும் சமயம் எப்பொழுது ? சுய ஜாதக ரீதியாக தெரிந்துகொள்வது எப்படி ?




சுய ஜாதக ரீதியாக ஒருவருக்கு நல்ல யோக காலம் வரும் தருணம் எப்பொழுது? என்பதை தெளிவாக தெரிந்துகொள்வது அவசியமானதாகவும், அவயோக காலம் வரும் தருணம் எப்பொழுது ? என்பதை தெளிவாக தெரிந்து கொள்வது மிக மிக அவசியமானதாகவும்  ஜோதிடதீபம்  கருதுகிறது, ஒருவருக்கு யோக காலம் எப்படி மிகசிறந்த நன்மைகளை குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து தருகிறதோ ?  அதை போன்றே அவயோக காலமும் குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து கெடு பலன்களை தர தவறுவதில்லை, பொதுவாக பாரம்பரிய ஜோதிட முறையில் பலன்கானும் பொழுது ஒருவரது சுய ஜாதக பலன்களை கணிதம் செய்வதில் பல முரண்பாடுகளும், தவறுகளும் ஏற்ப்பட வாய்ப்பு அதிகம் உண்டு, நமது ஜோதிட முறையில் இந்த தவறுகள் நடை பெற வாய்ப்புகள் மிக மிக குறைவு என்பது ஒரு சந்தோஷமான விஷயமாகவே ஜோதிடதீபம் கருதுகிறது.

பாரம்பரிய முறையில் பலன் காணும் பொழுது பொதுவாக ஒருவரின் ஜாதகத்தில் லக்கினம் முதற்கொண்டு 12 வீடுகளில் கிரகங்கள் அமர்ந்த நிலையை வைத்தும், தற்பொழுது நடைபெறும் திசை சுபர அசுபர என்ற நிலையை வைத்தும், தற்காலத்தில் உள்ள கோட்சார கிரகங்களின் இயக்க நிலையை சந்திரனை அடிப்படையாக கொண்ட ராசியை வைத்தும் பலன் காணுவது இயற்கையாக நிகழ்வது, இருப்பினும் ஒருவருக்கு சுய ஜாதகத்தில் சுப கிரகங்கள் என்று அழைக்கப்படும் குரு,சுக்கிரன்,வளர் பிறை சந்திரன்,புதன் ஆகிய கிரகங்களின் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் ஒருவருக்கு யோக பலன்களை வாரி வழங்கி விடுவதுமில்லை, அசுப கிரகங்கள் என்று அழைக்கப்படும் சூரியன்,தேய்பிறை சந்திரன், செவ்வாய்,சனி,ராகுகேது ஆகிய கிரகங்கள் அவயோக பலன்களையும் வாரி வழங்கி விடுவதுமில்லை, மேலும் கோட்சார கிரகங்களின் பலன்கள் ஜாதகரை வெகுவாக பாதிக்க படுவதுமில்லை, ஏனெனில் தற்பொழுது நடை பெரும் திசை மற்றும் புத்திகள்  ஏற்று நடத்தும் பாவகங்களின் தொடர்பை கோட்சார கிரகங்கள் தொடர்பு பெற்றால் மட்டுமே நன்மை தீமை பலன்களை வழங்குகிறது, சந்திரனை அடிப்படையாக கொண்டு பலன் காண முற்படுவது பொது பலனே அன்றி, சுய ஜாதகத்திற்கு எவ்விதத்திலும் அது பொருந்துவதில்லை என்ற உண்மையை இந்த இடத்தில் அனைவரும் உணர்வது அவசியமாக ஜோதிடதீபம் கருதுகிறது அன்பர்களே !

ஒரு உதாரண ஜாதகம் கொண்டு பலன் காண்போம் :


ஜாதகர் லக்கினம் : கன்னி 
ராசி :  மகரம் 
நட்சத்திரம் : திருவோணம் 3ம் பாதம் 

ஒருவரின் ஜாதக பலன் காணும் முன்பு அவரது ஜாதகத்தில் 12 பாவகங்களின் வலிமை என்ன ? என்பதை தெளிவாக உணர்ந்தால்  மட்டுமே குறிப்பிட்ட ஜாதகருக்கு சரியான ஜாதக பலனை ஜோதிடர்களால் சொல்ல இயலும், மாறாக கிரகங்கள்  வலிமை வைத்து பலன் சொல்வது நிச்சயம் சரியான பலன் காண வாய்ப்பை தாராது ஏனெனில், பாவகம் ஒன்று மட்டுமே வினாடிக்கு வினாடி மாற்றம் பெற்றுகொண்டு இருக்கும், இதன் மூலமே ஜாதகரின் பாவக வலிமையை  நிர்ணயம் செய்ய இயலும், ஒரே நேரத்தில் பிறந்த குழந்தைகளின் சுய ஜாதகத்தில் பாவக வலிமை வித்தியாசம் பெறுவது இதன் அடிப்படையிலேயே, ஆக ஒருவரின் சுய ஜாதகத்தில் சரியான பலன் காண அடிப்படையில் கணிதம்  செய்து காண வேண்டிய விஷயங்கள் பின்வருமாறு:

1) ஜாதகத்தில் 12 பாவகங்களின் வலிமை என்ன ?
2) 12 பாவகங்களும் தொடர்பு படுத்தும் வீடுகள் என்ன ?
3) தற்பொழுது நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் 12 பாவகங்களில் எந்த பாவகத்தின் பலனை ஏற்று நடத்துகிறது.
4) தற்பொழுது உள்ள கோட்சார கிரகங்கள் நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சம தொடர்பு படுத்தும் பாவகங்களுக்கு எவ்வித பலன்களை தருகிறது என்பதை தெளிவாக தெரிந்தால் மட்டுமே, ஒரு ஜாதகருக்கு சரியான ஜாதக பலன்களை நாம் சொல்ல இயலும்.

மேற்கண்ட ஜாதகத்தில் நவ கிரகங்களின் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் 12 பாவகங்களுடன் எவ்வித தொடர்பை பெறுகிறது என்பதை வரிசைகிரமமாக பார்ப்போம் அன்பர்களே !

ஜாதகருக்கு ஜெனன நிலையில் நின்ற திசை சந்திரன்:

சந்திரன் திசை ஜாதகருக்கு 1,3,7,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களையும், 4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று யோக பலன்களையும், 8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று அவயோக பலன்களையும் தந்தது, இதில் ஜாதகர் 1,3,4,7,9ம் பாவக வழிகளில் இருந்து நன்மையான பலன்களையும், 8,12ம் பாவக வழியில் இருந்து அவயோக பலன்களையும் சந்திரன் திசையில் அனுபவித்தார்.

2வதாக வந்த திசை செவ்வாய் :

 செவ்வாய் திசை ஜாதகருக்கு 1,3,7,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களை மட்டும் செய்ததால் ஜாதகர் செவ்வாய் திசையில் 1,3,4,7,9ம் பாவக வழிகளில் இருந்து நன்மையான பலன்களை மட்டும் அனுபவித்தார்,

3வதாக வந்த திசை ராகு :

 ராகு திசை ஜாதகருக்கு 2,6ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகுந்த யோக பலனையே வழங்கியதால், ஜாதகருக்கு ராகு திசை 2,6ம் பாவக வழியில் இருந்து யோக பலன்களையே அனுபவிக்கும் தன்மைய தந்தது.

4வதாக தற்பொழுது  நடைமுறையில் உள்ள திசை குரு :

 தற்பொழுது நடைபெறும் குரு திசை ஜாதகருக்கு 10ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது நல்ல பலன் என்ற போதிலும் 10ம் வீட்டிற்கு 9ம் பாவகம் 12ம் வீடாக வருவதால் ஜாதகர் தனது தகப்பனார் வழியில் இருந்து எவ்வித யோக பலன்களையும் அனுபவிக்க இயலாத சூழ்நிலையை உருவாக்கி விட்டது.

5வதாக வரும் திசை சனி :

இனி வர இருக்கும் சனி திசை ஜாதகருக்கு 5,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று யோக பலன்களையும், 10ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று அவயோக பலன்களையும் வழங்குகிறது எனவே ஜாதகர் சனி திசையில் 5,11ம் பாவக வழியில் இருந்து நன்மையையும், 10ம் பாவக வழியில் இருந்து தீமையையும் பெரும் நிலையை தரும்.

6வதாக வரும் திசை புதன் :

சனிக்கு அடுத்து வரும் புதன் திசை ஜாதகருக்கு 4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களையே தருவதால், ஜாதகருக்கு புதன் திசை மிகுந்த நன்மையையே வாரி வழங்கும்.

7வதாக வரும் திசை கேது :

புதன் திசைக்கு அடுத்ததாக வரும் கேது திசை ஜாதகருக்கு 2,6ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகுந்த யோக பலனையே வழங்குவதால் ஜாதகருக்கு கேது திசை 2,6ம் பாவக வழியில் இருந்து யோக பலன்களையே வாரி வழங்கும்.

8வதாக வரும் திசை சுக்கிரன் :

கேது திசைக்கு அடுத்ததாக வரும் சுக்கிரன் திசை ஜாதகருக்கு 5,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று யோக பலன்களை வாரி வழங்குவதால் ஜாதகருக்கு சுக்கிரன் திசை மிகுந்த யோகத்தையும் நன்மையையும் வாரி வழங்கும் என்பது உறுதி.

9வதாக வரும் திசை சூரியன் :

சுக்கிர திசைக்கு அடுத்ததாக வரும் சூரியன் திசை ஜாதகருக்கு 8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அவயோக பலன்களையே தருவதால், ஜாதகருக்கு சூரியன் திசை மிகுந்த துன்பத்தையே தரும் என்பது குறிப்பிட தக்கது.

மேற்கண்ட ஜாதகருக்கு அதிக நன்மையை தரும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்களாக  சனி மற்றும் சுக்கிரன் ஜாதகத்தில் அமர்கின்றனர்.

மேற்கண்ட ஜாதகருக்கு அதிக இன்னல்களை தரும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்களாக சூரியன் மற்றும் சந்திரன் ஜாதகத்தில் அமர்கின்றனர்.

மேலும் மேற்கண்ட திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் நடைபெறும் பொழுது இவர்கள் தொடர்பு படுத்தும் பாவகங்களுடன் கோட்சார கிரகங்கள் தொடர்பு பெரும் பொழுது வழங்கும் யோக, அவயோக பலன்களையும் கருத்தில் கொண்டு பலன் காணும் பொழுது குறிப்பிட்ட ஜாதகருக்கு  நிச்சயம் தெளிவான ஜாதக பலனை தர இயலும்.

மேலும் ஜாதகர் யோக பலன்கள் நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சம காலங்களில் விழிப்புணர்வுடன் செயல்பட்டு வெற்றிகளையும், அவயோக பலன்கள் நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமாக காலங்களில் பொறுமையையும் எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட்டு சம்பந்த  பட்ட பாவக வழியில் இருந்து நன்மை தீமை பலன்களை அனுபவிக்கலாம், ஆக ஒரு ஜாதகருக்கு நடைபெறும் திசை மற்றும் புத்திகள் வழங்கும் பலன்களின் தன்மையை உணர்ந்து அவருக்கு சரியான ஜாதக பலனை சொல்லும் பொழுது, ஜாதகரின் வாழ்க்கையில் சுபிட்சம் ஓங்கும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

செவ்வாய், 17 பிப்ரவரி, 2015

சாயா கிரகங்களான ராகு கேது சுய ஜாதகத்தில் 1,7ம் பாவகங்களில் அமர்ந்து வழங்கும் யோக பலன்கள் !



கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமண பொருத்தம் காண,  ஜாதக ஆலோசனை பெற வந்த அன்பரின் ஜாதகத்தில் ராகு கேதுவின் தன்மையையும், அவர்கள் அமர்ந்த பாவகத்தின் வலிமையை பற்றியும், இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே ! ஜாதகருக்கு 31 வயதுக்கு மேல் ஆகிவிட்டது, ஜாதகர் திருமணத்திற்க்கா எடுத்த முயற்ச்சிகள் யாவையும், ஜோதிடர்கள் ராகு கேது 1,7ம்  பாவகங்களில் அமர்ந்து இருக்கும் நிலையை மேலோட்டமாக கருத்தில் கொண்டு ராகுகேது தோஷம், சர்ப்ப தோஷம், மற்றும் களத்திர தோஷம் இருப்பதாக விளக்கம் தந்து, இது தோஷ ஜாதகம் எனவே இதை போன்ற அமைப்பை கொண்ட ஜாதகத்துடன் இணைப்பதுதான் சரியான தீர்வாக இருக்கும் என்று அறிவுறுத்தி வந்துள்ளனர்.


 இவர்களது பெற்றோர்களும், அதையே வேத வாக்காக எடுத்துகொண்டு வதுவின் ஜாதகத்தை தேடியுள்ளனர், ஜாதகருக்கு சரியான வயதில் தேடிவந்த நல்ல வதுவின் ஜாதகங்களை தோஷத்தை காரணம் காட்டி தவிர்த்து வந்துள்ளனர், நாளடைவில் ஜாதகருக்கு சமதோஷம் கொண்ட பெண்  ஜாதகம் இறுதி வரை கிடைக்கவில்லை, ஜாதகரின் குடும்பமும் இறுதியில் விவாகரத்து அல்லது விதவை  போன்று ஏதாவது ஒரு பெண் அமைந்தால் கூட போதும் என்ற நிலைக்கு வந்து  தற்பொழுது திருமணம் செய்துகொள்ள பெண் கிடைத்தால் போதும் என்ற சூழ்நிலைக்கு தள்ளபட்டுள்ளனர், ஜாதகரும் தனது பெற்றோர்கள் வார்த்தையை மீறாமல் தனது திருமண வாழ்க்கையை பெற்றோர்களின் கைவசமே ஒப்படைத்துவிட்டு பொறுமையுடன் காத்து இருப்பதின் ரகசியம் அவரது ஜாதகத்தில் ராகு பகவான் லக்கனத்தில் அமர்ந்து சிறப்பான நல்ல குணத்தை வழங்கியதும், ரிஷபத்தின் ஸ்திர மண் தத்துவத்திற்கு உண்டான பொறுமை குணத்தை ராகுபகவான் சிறப்பாக செயல்படுத்துகிறார் என்பதை தவிர வேறு என்ன ? சொல்ல இயலும் அன்பர்களே !

பொதுவாக திருமண பொருத்தம் நிர்ணயம் செய்யும் பொழுது சுய ஜாதகத்தில் 1,2,5,7,8ம் பாவகங்களில் ராகு கேதுவின் அமர்வை வைத்து தோஷம் என்று நிர்ணயம் செய்வதால் வரும் குழப்பமே அன்றி வேறு எதுவும் இல்லை, மேற்கண்ட பாவகங்களில் ராகு கேது அமர்ந்தாலே குறிப்பிட்ட பாவகங்களுக்கு சாயா கிரகங்கள் தீமையை தான் செய்யும் என்று முடிவுக்கு வருவது முற்றிலும் உண்மைக்கு புறம்பான ஒன்றாகவே  " ஜோதிடதீபம் " கருதுகிறது, மேற்கண்ட ஜாதகத்தில் இந்த தவறே கடந்த 7வருடங்களாக நடைபெற்று வந்துள்ளது, திருமண தாமதத்திற்கு காரணமாக இவர்கள் சொல்லும் ராகு கேது தோஷமாக ஜோதிடதீபம் கருதவில்லை, இவரது சுய ஜாதகத்தில் 2ம் பாவகம் பாதிக்க பட்ட அமைப்பே, என்ற போதிலும், ஜோதிடர்களால் முன்னிறுத்த பட்டது ராகுகேது தோஷமே, ஒருவேளை ஜாதகர் குடும்ப ஸ்தானம் வலிமை உள்ள ஒரு வதுவை தேர்ந்தெடுத்து திருமணம் செய்து இருந்தால், ஜாதகரின் குடும்ப வாழ்க்கை நிச்சயம் சிறப்பாக அமைந்திருக்கும், உண்மையில் இந்த ஜாதகருக்கு சாயா கிரகங்கள் எவ்வித பலன்களை வழங்குகிறது என்பதை ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே !

ஜோதிடதீபம் இதற்க்கு முன் பதிவு செய்த கட்டுரைகளின் உண்மை நிலைக்கு ஏற்ப ஒருவரது சுய ஜாதகத்தில் சம வீடான லக்கினத்தில் அமரும் சாய கிரகங்கள் 100% விகித நன்மையே செய்யும் என்பதிற்கு இணங்க, ரிஷப லக்கினத்தில் அமர்ந்த ராகு ஜாதகருக்கு, சிறந்த நல்ல குணத்தையும், பொறுமையான மன பக்குவத்தையும், நல்ல உடல் ஆரோக்கியத்தையும், நீண்ட  ஆயுளையும் வாரி வழங்கிக்கொண்டு இருக்கிறார், லக்கினத்தில் ராகு அமரும் பொழுது ஜாதகர் சிறந்த அறிவாளியாகவும், நுணுக்கமான அறிவு திறனையும், ஆய்வு ஆராய்ச்சியில் சிறந்து விளங்கும் தன்மையை பெற்று இருப்பார்.

 சுயமாக வாழ்க்கையில் முன்னேற்றம் பெரும் யோகமும், யாரையும் எதிர்பாரமால் வாழ்க்கையில் முன்னேறி செல்லும் தன்மையை பெற்று இருப்பார், புகழ் கீர்த்தி மற்றும் மற்றவர்கள் போற்றும் துறைகளில் சிறந்து விளங்குவார்கள் என்பதிற்கு ஏற்றார் போல் ஜாதகருக்கு புனிதமான மருத்துவ துறையில் உயர் பதவியை பெற்று தந்தது ராகு பகவான் என்றால் அது மிகையில்லை, ஜாதகர் மருத்துவ துறையில் உயர் நிலை பட்டம் பெற்றவர், சிறந்த அறுவை சிகிச்சை நிபுணர், மேலும் ராகு பகவானின் வலிமை இந்த ஜாதகருக்கு ஒரு "அருள் கொடையை" வழங்கி உள்ளது குறிப்பிட தக்கது, அதாவது ஜாதகர் இதுவரை மேற்கொண்ட அறுவை சிகிச்சை அனைத்திலும் வெற்றியே  கண்டுள்ளார், இவரிடம் சிகிச்சை பெற்றுக்கொண்ட நோயாளிகள் அனைவரும் பூர்ண குணம் அடைந்துள்ளனர்.

7ல் கேது அமர்ந்து நல்ல நிலையில் உள்ள ஜாதக அமைப்பை பெற்ற அன்பர்களை வாழ்க்கை துணையாக பெரும் யோகத்தை பெற்றவர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்றே சொல்லாம், ஏனெனில் தனது வாழ்க்கை துணையை  உயிரினும் மேலாக நேசிக்கும் அளப்பரிய இல்லற வாழ்க்கையை தரும், குறிப்பாக இவரது ஜாதகத்தில் விருச்சிகத்தில் அமர்ந்த கேதுபகவான் ஜாதகரின் வாழ்க்கை துணையை உளமார நேசித்து இல்லற வாழ்க்கையில், மன மகிழ்ச்சியுடன் குடும்பம் நடத்தும் அழகை சிறப்பாக எடுத்து காட்டுகிறது, மேலும் விருச்சிகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு திடீர் அதிர்ஷ்டம் மற்றும் புதையலுக்கு நிகரான சொத்து சுக சேர்க்கையை குறிக்கும் 8ம் பாவகமாக வருவது, ஜாதகரை திருமணம் செய்துகொள்ளும் பெண்ணின் அதிர்ஷ்ட வாழ்க்கையை கட்டியம் கூறுகிறது, ஆக மொத்தத்தில் 7ம் பாவகத்தில் அமர்ந்த கேது பகாவான் ஜாதகருக்கு இனிமையான இல்லற வாழ்க்கையை வழங்குகிறார் என்பது மறுக்க முடியாத உண்மை.

மேலும் 7ல் அமர்ந்த கேது ஜாதகரின் வாழ்க்கை துணை, நண்பர்கள், பொதுமக்கள் செல்வாக்கு ஆகியவற்றை குறிப்பதால், ஜாதகர் பொதுமக்கள் மற்றும் நண்பர்களுடன் இனிமையாக பழகும் தன்மை கொண்டவர், இவரது பேச்சில் மற்றவர்களின் மன கவலை கூட மறந்து போகும் விதத்தில் அமையும் என்பது, இவருடன் பழகிய நண்பர்களுக்கும், இவரிடம் மருத்துவம் பார்த்துகொண்ட அன்பர்களுக்கும் நிச்சயம் தெளிவாக தெரியும், ஜாதகர் ஒரு மருத்துவர் மட்டும் அல்ல சிறந்த மன நல ஆலோசகரும் கூட, இந்த தனி திறமை ஜாதகருக்கு இயற்கையிலேயே அமைந்ததிற்கு காரணம் 7ம் பாவகத்தில் அமர்ந்த கேதுபகவானின் வலிமையே என்றால் அது மிகையில்லை.

ரத்தினசுருக்கமாக சொல்ல வேண்டும் எனில் மேற்கண்ட ஜாதகருக்கு ரிஷப லக்கினத்தில் அமர்ந்த ராகு பகவான் ( ஸ்திர மண் ராசி ) இயக்க நிலையில் உள்ள மண் தத்துவமான மனித உடலின் தன்மைகளை தெள்ள தெளிவாக புரிந்துகொள்ளும் ஆற்றலை தந்து, ஜாதகரை புனிதமான மருத்துவ துறையில் பிரகாசிக்க செய்தது.

விருச்சிக ராசியில் 7ம் பாவகத்தில் அமர்ந்த கேது பகவான் ( ஸ்திர நீர் ராசி ) கண்ணிற்கு தெரியாத மற்றவர்களின் மனதில் உள்ள எண்ண ஓட்டங்களை தெள்ள தெளிவாக புரிந்துகொள்ளும் வல்லமையை தந்தது, ஜாதகர் இந்த சிறப்பு இயல்பு ஜாதகரை தனது துறையில் சிறந்து விளங்க மிக மிக உதவிகரமாக அமைந்தது என்றால் அது மிகையில்லை, எனவே இந்த ஜாதகருக்கு லக்கினத்தில் அமர்ந்த ராகுகேது கிரகங்கள் ஜாதகருக்கு 100% விகித பரிபூர்ண நன்மைகளையும் யோகங்களையும் வாரி வழங்குகிறது என்பதே ஜாதகத்தில் உள்ள உண்மை நிலை அன்பர்களே !

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

பூர்வ புண்ணியம் எனும் 5ம் பாவகம் வழங்கும் அறிவுத்திறன் !




பூர்வ புண்ணிய ஸ்தானம் எனும் 5ம் பாவகம் ஒருவரின் சுய ஜாதகத்தில் வலிமை பெறுவதால் ஜாதகர் பெரும் அறிவு திறனின் செயல்பாடுகள் பற்றி இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே ! சுய ஜாதக அமைப்பில் புத்திர பாக்கியம்,குல தெய்வத்தின் அருளாசி மற்றும் ஜாதகரின் சமயோசித புத்திசாலித்தனம் மற்றும் ஜாதகர் தனது பூர்வீக அமைப்பில் இருந்து பெரும் யோக வாழ்க்கை அனைத்தையும், ஒன்று சேர வழங்குவது 5ம் பாவகமான பூர்வபுண்ணிய ஸ்தானம் என்றால் அது மிகையில்லை,.

 பொதுவாக ஜாதகம் காணும் பல ஜோதிடர்கள் 5ம் பாவகத்தை பற்றி சிறப்பித்து கூறுவது உண்டு, ஏனெனில் ஜாதகரின் அறிவுத்திறனை நிர்ணயம் செய்யும் பாவகம் என்பதால் 5ம் பாவகத்திர்க்கு இந்த பெருமை நிச்சயம் உண்டு, ஜாதகத்தில் மற்ற பாவகங்களின் வலிமை ஒவ்வொரு விதத்தில் யோக பலனை தந்த போதிலும் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகம் வழங்கும் பலன் என்பது ஜாதகரை சிறப்பு தகுதிகளுடன் பரிணமிக்க செய்யும் என்பது கவனிக்க தக்கது, ஜாதகரை அமர்ந்த இடத்தில் இருந்து உலக பிரசித்தி பெற வைக்கும் வல்லமை இந்த 5ம் பாவகத்திற்கு உண்டு, பரம்பரை பரம்பரையாக முன்னோர்களின் வழியில் இருந்து ஜாதகருக்கு கிடைக்கும் அறிவாற்றலின் தனி தன்மையை பிரகாசிக்க செய்யும் வல்லமை 5ம் பாவகத்திற்கு உண்டு என்றால் அது மிகை அல்ல அன்பர்களே !

இந்திய மண்ணில் பாரம்பரியம் மிக்க பல விஷயங்களை வியப்புடன் மற்ற நாட்டினர் பார்ப்பதற்கு இந்த 5ம் பாவகம் காரணமாக அமைகிறது, என்ற உண்மை இந்திய மண்ணில் பிறந்த நமக்கே இன்னும் தெரியவில்லை என்பது ஒருபக்கம் இருந்த போதிலும், நமது முன்னோர்களின் அறிவு திறனின் செயல்பாட்டிற்கு ஒரு எல்லையே இல்லை என்பதே வியப்புக்கு உரிய ஒன்றாகவே கருதலாம், வணிக மேலாண்மை, வானியல் கண்டுபிடிப்புகள், கால கணிதம், கிரக,நட்சத்திர சூட்சம ஆய்வு, வருமுன் உணரும் முற்போக்கு சிந்தனை, விவசாய நெறிமுறைகள், ஆரோக்கியமான வாழ்விற்கான உணவு பழக்க வழக்கம், மருத்துவத்தில் நோய் தீர்க்கும் முறைகள், இறை வழிபாட்டில் சிறப்பு, மனிதர்களையும் விலங்குகளையும் அரவணைத்து செல்லும் பாங்கு, தனி மனித முன்னேற்றம், சமுதாய முன்னேற்றம் என அனைத்து விஷயங்களிலும் சிறப்பான வெற்றிகளை காண்பதற்கு உண்டான விதிகளை வகுத்து வைத்தது அதன் வழியில் சிறப்பான மனித குல தோன்றுதலுக்கு ஆதாரமாக விளங்கியது நமது முன்னோர்களின் அறிவுத்திறன் என்றால் அது மிகையில்லை, அதற்க்கு காரணமாக அமைந்தது பூர்வ புண்ணிய ஸ்தானம் எனும் 5ம் பாவகமே என்றால் இதை மறுக்கவும் இயலாது.

5ம் பாவகம் மற்றும் குல தெய்வம் என்ற ஒரு விஷயத்துடன் இணைத்தது, பாரம்பரியமாக தனது முன்னோர்கள் தனது வாரிசுகளுக்கு சொல்ல வேண்டிய சரியான அதே சமயம் உண்மையான விஷயங்களை குல தெய்வ வழிபாட்டின் மூலம் நாம் தெளிவாக உணராலாம், பாரம்பரியமாக தனது முன்னோர்களின் அறிவு  மற்றும் செயல்பாடுகளின் தன்மையை அவர்களின் வாரிசுகள் தெளிவாக புரிந்துகொள்ள இந்த குல தெய்வம் வழிவகுத்தது, அதன் வழியில் அவர்களின் வாரிசுகள் சிறப்பான வெற்றிகளையும், சரியான திட்டமிட்ட செயல்பாடுகளின் வழியில் முன்னேற்றங்களை மிக எளிதாக பெறுவதற்கு உண்டான வாய்ப்பை, இந்த குல தெய்வ வழிபாடு தருகிறது  என்பது நாம் அனைவரும் கூர்ந்து கவனிக்க தக்க விஷயமாக உள்ளது, பொதுவாக 5ம் பாவகம் வலிமை பெறுவதால் ஜாதகர் யாருடைய உதவியும் இன்றி தன்னிச்சையாக தனது செயல்களிலும், முயற்ச்சிகளிலும் வெற்றி காண இயலும் என்பது கண்கூடான விஷயமாக ஜோதிடதீபம் கருதுகிறது.

இதற்காக என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்க வெளிநாட்டு நிறுவனங்கள் தயாராக இருக்கின்றனர் என்பது கடந்த சில வருடங்களில், இந்தியர்களுக்கு கொடுக்கும் முன்னுரிமையில் இருந்து தெரியவரலாம் ( ஒரு வகையில் அவர்களின் தேடுதல்களுக்கு உண்டான அறிவு திறன் நம்மிடம் இருப்பதாக கொண்டாலும் கூட ) இந்தியர்கள் இல்லாத நாடே இல்லை எனலாம், இந்தியர்கள் சாதிக்கத விஷயங்களே இல்லை எனலாம், இந்த விஷயங்கள் சாத்திய பட்டது எப்படி என்றால்? அவர்களது ஜாதகத்தில் உள்ள 5ம் பாவகத்தின் வலிமையே அன்றி வேறு எதுவும் இல்லை, புதுமையான சிந்தனை, புதிய யுக்திகள் அனைத்தும் நமது வசம் இருந்த போதிலும் இதன் பயன்பாடுகள் என்பது மற்றவர்களுக்கே போய் சேருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

கல்வியில், புதிய கண்டுபிடிப்புகளில், ஆராய்ச்சியில், கணித துறையில், வணிக துறையில், நிதி நிர்வாகத்தில், மருத்துவத்தில் மேலும் பல துறைகளில் ஒரு ஜாதகரை பிரகாசிக்க வைப்பதில் 5ம் பாவகத்தின் பங்கு மிக அளப்பறியாத ஒன்றாகவே காணப்படுகிறது, நூதன தேடுதலுக்கு உண்டான விளக்கங்களையும், சரியான பதில்களையும் இந்த 5ம் பாவகமே வாரி வழங்குகிறது, மனிதகுலம் செழித்து ஓங்குவதற்கு உண்டான விஷயங்களையும், கருத்துகளையும் சரியான நேரத்தில் மக்களிடம் கொண்டு சேர்க்கும் வலிமை இந்த 5ம் பாவகத்திற்கே உள்ளது, விஞ்ஞானமும் மெய்ஞானமும் ஒருங்கே வெற்றிபெற 5ம் பாவகத்தின் வலிமை மிக மிக அவசியம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

5ம் பாவக வலிமையை சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில், ஒருவரின் அறிவு திறன், சிந்தனை ஆற்றல், சமயோசித புத்திசாலித்தனம் என்று சொல்லாம், குல தேவதையின் அருளாசியுடன் 5ம் பாவக வலிமையின் தன்மைக்கு ஏற்ப சுய ஜாதக வெற்றிகள் அமையும் என்பதால், ஒரு  ஜாதகர் தனது பாரம்பரியம் மற்றும் அவர்களின் வாழ்க்கை முறையில் பின்பற்றிய ரகசிய யுக்திகளை உணர்ந்து, நமது படைப்பின் சாராம்சம் அறிந்து, தமது வாழ்க்கையில் தேடுதல்களின் பூரணத்துவ நிலையை  5ம் பாவக வழியில் இருந்து தனது அறிவு திறனாலும் புத்திசாலிதனத்தாலும் நிச்சயம் பெறுவார், இதற்க்கு இறை நிலையின் அருள் துணைபுரியும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

புதன், 11 பிப்ரவரி, 2015

திருமண பொருத்ததில் பெண்ணின் ஜாதகத்தில் வலிமை அற்ற பாவக அமைப்புகள்!



ஜாதகத்தில் பாவக வலிமை இல்லாமல் திருமணம் தடைபெறும் ஜாதக அமைப்பு கிழ்கண்ட ஜாதகம் :



லக்கினம் : மிதுனம் 
ராசி : மிதுனம் 
நட்சத்திரம் : புனர்பூசம் 2ம் பாதம் 

ஜாதகி மிதுன லக்கினம், சுய ஜாதகத்தில் பாவக தொடர்புகள் பின் வருமாறு :

1ம் வீடு லக்கினத்துடன் தொடர்பு, 
2,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் தொடர்பு, 
3,6,9,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் தொடர்பு,
4,5,8,11ம் வீடுகள் திடீர் இழப்பை தரும் ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் தொடர்பு,
10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் தொடர்பு.

ஜாதகத்தில் 1,10ம் பாவகத்தை தவிர மற்ற பாவகங்களின் தொடர்பு மிகவும் பாதிப்பில் இருக்கின்றது குறிப்பாக குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானத்தை குறிக்கும் 2,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று திருமண வாழ்க்கையை கேள்விகுறியாக்குகிறது, மேலும் ஜாதகிக்கு வந்த நல்ல  வரன்களை ஜாதகியும், ஜாதகியின் தாயாரும் இன்றுவரை தட்டி கழித்துக்கொண்டே இருக்கின்றனர், இது ஜாதகியின் சுய ஜாதக அமைப்பின் விதி பயன் என்று சொல்வதை தவிர வேறு வழியில்லை.

ஜாதகிக்கு தற்பொழுது நடைபெறும் சனி திசை( 10/03/1999முதல்10/03/2018 வரை )  2,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று 200% விகித அவயோக பலன்களை வாரி வழங்கி கொண்டு இருக்கிறது, தற்பொழுது நடைபெறும் ராகு புத்தியும் ( 21/10/2012 முதல் 28/08/2015 வரை ) 5,8ம் வீடுகள் திடீர் இழப்பை தரும் ஆயுள் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அவயோக பலன்களை தருவது குறிப்பிட தக்கது, ஆக ஜாதகியின் சுய ஜாதக அமைப்பின் படி திருமண வாழ்க்கைக்கு உண்டான வாய்ப்புகள் எதுவும் பிரகாசம் அற்ற நிலையில், ஜாதகியும் ஜாதகியின் தாயாரும் தனது சிந்தனையிலும், கற்பனையிலும் குறைவில்லாமலே கனவு கண்டு கொண்டு இருப்பது வேடிக்கையானது.

மேலும் பெண்ணுக்கு வயது 28 ஜோதிடர்கள் கூறும் அறிவுரையும் ஏற்ப்பதில்லை, பெரியவர்கள் மற்றும் உறவினர்களின் சரியான ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலையும் ஏற்றுகொள்வதில்லை, காலமும் நேரமும் ஜாதகிக்கு சாதகமாக இல்லை என்பதையும் உணருவதில்லை, ஆக மொத்தத்தில் விதி தனது வேலையை சரியாக செய்கிறது என்பதுமட்டும் நிதர்சனமான உண்மை அன்பர்களே !

மேற்கண்ட ஜாதக அமைப்பை போல் உள்ள ஜாதக அன்பர்கள், ஒன்று தன்னை விட வயதில் அதிகம் உள்ள பெரியவர்களின் வார்த்தைகளையோ, உறவினர்களின் பேச்சையோ கேட்டு நடந்து கொள்வது நல்லது அல்லது ஜோதிடர்கள் காட்டும் நல்ல வழியை பின்பற்றி வாழ்க்கையை சிறப்பாக அமைத்து கொள்வது நல்லது, சுய ஜாதகத்தில் 2,7ம் வீடுகள் பாதிக்க பட்டு இருப்பின் தான் தேர்தெடுக்கும் வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் 2,7ம் வீடுகள் அதிக வலிமையுடன் இருப்பது நல்லது, அப்படி வலிமை பெற்ற ஜாதகத்தை பரிந்துரை செய்யும் பொழுது தனது ஜாதக நிலையை புரிந்துகொண்ட காலம் தாமதிக்காமல், திருமண வாழ்க்கையை சிறப்பாக அமைத்து கொண்டு இல்லற வாழ்க்கையை இனிதே வாழும் யோகத்தை பெறுவது சிறப்பானதாக ஜோதிடதீபம் கருதுகிறது.

மாறாக தனது ஜாதக நிலையை உணராமல் வீண் பிடிவாதமும், வீண் கற்பனையும் தங்களது வாழ்க்கையை கேள்விக்குறியாக மாற்றிவிடும் வாய்ப்பு அதிகம் என்பதை கருத்தில் கொள்ளுங்கள் அன்பர்களே! சரியான ஜாதக ஆலோசனை பெற்று தங்களுக்கு பொருத்தமான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்து வாழ்க்கையை சிறப்பாக அமைத்து கொள்ளுங்கள், வாழ்த்துகள். 

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

செவ்வாய், 10 பிப்ரவரி, 2015

வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் பொழுது ஜாதக ரீதியாக கவனிக்கப்பட வேண்டிய சில முக்கிய விஷயங்கள்!




 
 திருமண வாழ்க்கை ஒருவருக்கு சிறப்பன நன்மைகளையும், யோக வாழ்க்கையையும் வாரி வழங்க வேண்டுமெனில் சம்பந்த பட்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்திலேயே அந்த யோக அமைப்பு இருக்க வேண்டும் அல்லது ஜாதகர் தான் தேர்ந்து எடுத்த வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் நல்ல யோக அமைப்புகள் இருக்க வேண்டும், பொதுவாக திருமண பொருத்தம் காண்பதில் அதிக முக்கியத்துவம் நட்சத்திர பொறுத்த அமைப்பிற்கே ஜோதிடர்கள் தருகின்றனர், மேலும் சில தோஷ அமைப்புகள் கொண்டும் நிர்ணயம் செய்கின்றனர் ( குறிப்பாக சர்ப்ப தோஷம், செவ்வாய் தோஷம், களத்திர தோஷம் ) போன்றவை ஜோதிடர்கள் முன்னிறுத்தி பேசுகின்றனர், இது சரியான திருமண வாழ்க்கையை அமைத்து தருகின்றதா ? என்றால் பதில் கேள்விக்குறியே, ஏனெனில் சுய ஜாதகத்தில் 12 பாவகங்களின் வலிமையே ஒருவரது வாழ்க்கையை நிர்ணயம் செய்கின்றது, பொதுவாக ஜோதிடதீபம் இதற்க்கு முன் பதிந்த பதிவுகளிலும் சரி, தற்பொழுது கூறும் கருத்திலும் சரி திருமண வாழ்க்கை ஒருவருக்கு சிறப்பாக அமைய நிச்சயம் அவர்களது சுய ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகமும், களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகமும் நல்ல நிலையிலும் வலிமையுடனும் இருப்பது அவசியம்.


2,7ம் பாவகங்கள் வலிமையுடன் இருப்பது என்றால் எப்படி ? மேற்கண்ட பாவகங்களில் சுப கிரகம் இருப்பதா? பார்ப்பதா ? அல்லது அந்த பாவகங்களில் எந்த ஒரு கிரகமும் இல்லாமல் சுத்தமாக இருப்பதா ? பொதுவாக மேற்கண்ட கேள்விகளே பதிலாகவும் அமைந்து விடுகிறது, ஆனால் இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகவே காணப்படுகிறது, இதற்க்கு முன் திருமண பொருத்தம் கண்டு இல்லற வாழ்க்கையில் இணைந்தவர்களின், மணவாழ்க்கை கசந்து விவாகரத்து பெற்றதற்கு என்ன காரணம் சொல்ல முடியும்? இதற்க்கு காரணமாக ஜோதிடதீபம்  கருதுவது அவர்களது சுய ஜாதகத்தில் பாவக வலிமை உணராமல், 10 பொருத்தம், சர்ப்ப தோஷம், செவ்வாய் தோஷம், களத்திர தோஷம் போன்ற விஷயங்களுக்கு முன்னுரிமை தந்து திருமணம் செய்ததே 100% விகிதம் காரணமாக இருக்க கூடும், மேலும் திருமண வாழ்க்கையில் சிறந்த நன்மைகளை ஒருவர் பெறுவதற்கு மிக முக்கியமான விஷயங்களாக கருதுவதை ஜோதிடதீபம்  கிழ்கண்ட வரிகளில் பதிவு செய்கிறது, அப்படி முக்கிய துவம் தாராமல் செய்த திருமண வாழ்க்கை சிதைந்து போன ஒருவரது உதாரண ஜாதகத்தையும், ஜோதிடதீபம் ஆய்வு செய்து விளக்கம் தர கடமைபட்டு இருக்கின்றது.

திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய வது,வரனின் ஜாதகத்தில் இருக்கவேண்டிய பொறுத்த நிலைகள் :

1) அடிப்படையில் லக்கினம் நல்ல நிலையில் இருப்பது அவசியம் அதாவது லக்கினம் பாதக ஸ்தானத்துடனோ 6,8,12ம் பாவகங்களுடனோ தொடர்பு பெறாமல் இருப்பது ஜாதகரின் தன்மையை சிறப்பாக எடுத்து காட்டும்.

2) குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகம் எந்த காரணத்தை கொண்டும் பாதிக்க படாமல் இருப்பது  நல்லது குறிப்பாக பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெறுவதும், 6,8,12ம் பாவகங்களுடனோ தொடர்பு பெறாமல் இருப்பது அவசியம், குடும்ப ஸ்தானம் நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே ஜாதகருக்கு சிறப்பான குடும்ப வாழ்க்கை அமையும், குடும்பம் நடத்த தேவையான வருமானம் சிறப்பாக ஜாதகருக்கு தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும்.

3) சுக ஸ்தானம் நல்ல நிலையில் இருப்பது கணவன் மனைவி நல்லுறவை சிறப்பிக்கும், வாழ்க்கைக்கு தேவையான பொருள் வரவுகளும் சிறந்த வீடும் அமையும்.

4) 5ம் பாவகம் வலிமை பெறுவது சிறந்த ஆண் வாரிசை பெற்றுத்தரும், தம்பதியருக்கு இறை அருளின் கருணை கிடைக்கும், இவர்களுக்கு உதவ பலர் முன்வருவார்கள், தாம்பத்திய வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும் நினைக்கும் எண்ணங்கள் நிறைவேறும்.

5) களத்திர ஸ்தானமான 7ம் பாவகம் எந்த காரணத்தை கொண்டும் பாதிக்க படாமல் இருப்பது  நல்லது குறிப்பாக பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெறுவதும், 6,8,12ம் பாவகங்களுடனோ தொடர்பு பெறாமல் இருப்பது அவசியம், கணவன் மனைவி உறவின் பூர்ணத்துவத்தை உணரவைக்கும் பாவகமாக அமைவதால் 7ம் பாவகம் மிக வலிமையுடன் இருப்பது அவசியம், மேலும் சமுதாயத்தில் அந்தஸ்து மற்றும்  கௌரவத்தை தருவதால் 7ம் பாவகம் அதிக வலிமையுடன் இருப்பது சகல நலன்களையும்  தரும்.

6) ஆயுள் பாவகமான 8ம் பாவகம் வலிமை பெறுவது பரஸ்பரம் கணவன் மனைவி அமைப்பில்  இருந்தும், மனைவி கணவன் அமைப்பில் இருந்தும் பெரும் யோக வாழ்க்கையையும், சிறப்பான நன்மைகளையும் தருவதாலும், ஆயுள் விருத்தியை தருவதாலும் 8ம் பாவகம் மிகுந்த வலிமையுடன் இருப்பது மிகுந்த நன்மைகளை வாரி வழங்கும்.

7) ஜீவனத்தை குறிக்கும் 10ம் பாவகம் வலிமையுடன் இருப்பது தம்பதியரின் தொழில் மற்றும் வேலைவாய்ப்பில் பெரும் வெற்றியை குறிக்கும், சமுதாயத்தில் சிறந்த அந்தஸ்த்தை வாரி வழங்கும், கௌரவமான யோக வாழ்க்கையை பெற்று தரும்.

8) அயன சயன ஸ்தானமான 12ம் பாவகம் வலிமையுடன் இருப்பதே குடும்பத்தில் தம்பதியரிடம் உள்ள மன நிம்மதியை எடுத்துரைக்கும், பரிபூரண அன்பை பரஸ்பரம் இருவரும் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பை தருவதே இந்த 12ம் பாவகம்தான் அன்பர்களே, ஆக திருமண வாழ்க்கை வெற்றிகரமான இல்லற வாழ்க்கையாக அமைய மேற்கண்ட விஷயங்கள் தேவை படும்பொழுது, வெறும் 10 பொருத்தங்கள் சம தோஷங்கள் எனப்படும் சர்ப்ப தோஷம், செவ்வாய் தோஷம், களத்திர தோஷம் ஆகியவை திருமண வாழ்க்கையை வெற்றிகரமாக அமைத்து தந்துவிடாது, சுய ஜாதகத்தில் பாவகங்களின் வலிமையே திருமண வெற்றியை நிர்ணயம் செய்யும் என்பதை "ஜோதிடதீபம்" அழுத்தமாக பதிவு செய்ய விரும்புகிறது .

உதாரண ஜாதகம் :


லக்கினம் : மிதுனம் 
ராசி : மகரம் 
நட்சத்திரம் : திருவோணம் 3ம் பாதம்

ஜாதகி மிதுன லக்கினம் லக்கினத்திற்கு பாதக ஸ்தானம் 7ம் வீடு, ஜாதகிக்கு 2,3,4,7,9பாவகங்கள் பாதக ஸ்தானமான  7ம் பாவகத்துடன் சம்பந்தம், 6,12ம் பாவகங்கள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம், தற்பொழுது நடைமுறையில் உள்ள குரு திசை  6,12ம் பாவகங்கள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பலனை தருகிறது, ஜாதகி அனுபவித்த இன்னல்கள் : 1) ஜாதகி விருப்ப மனம்  செய்தவர், 2) திருமணம் நடந்த 4 வருடங்களுக்கு பிறகு விபத்தில் கணவருக்கு கை கால்கள் செயல் இழப்பு  இதற்குள் 2 குழந்தைகள். 3) 7வது  வருடத்தில் கணவரை இழந்தார்  4) பிறகு வேறு ஒருவருடன் தொடர்பு  ஏற்ப்பட அதில் மான அவமானங்களை சந்திக்கும் சூழ்நிலை உறவுகளை உதறி தனிமையில் போராட்ட வாழ்க்கையை வாழும் சூழ்நிலையை தந்து  5) குடும்ப வாழ்க்கை சிறப்பில்லாமல் மன நிம்மதி இழப்பு 6) தற்கொலை முயற்ச்சியால் உடல்நலம் பாதிப்பு 7) தனது பூர்வீகத்தை விட்டு  பரதேச ஜீவனத்தை மேற்கொள்ளும் சூழ்நிலைக்கு ஆளாக்கி உள்ளது. இறை அருளின் கருணையினால் வாழ்க்கை ஜாதகிக்கு போராட்டத்துடன் செல்கிறது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

வெள்ளி, 6 பிப்ரவரி, 2015

சனி பெயர்ச்சி, விருச்சிக ராசிக்கு செல்லும் சனிபகவான் லக்கின வாரியாக தரும் பலன்கள் - மீனம்


சனி பகவான்  திருக்கணித பஞ்சாங்க முறைப்படி 02-11-2014 ஞாயிறு கிழமை அன்று இரவு 08-54 மணிக்கு துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகியுள்ளார். விருச்சிக ராசியில் சனி சுமார் இரண்டரை ஆண்டு காலம் சஞ்சரிப்பார், இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு லக்கினத்தை சார்ந்தவர்களுக்கும் சனி பகவான் வழங்கும் யோக அவயோக பலன்களை பற்றி நாம் இந்த பதிவில் சிந்திப்போம் அன்பர்களே!   


ஜோதிடதீபம் ராசியை அடிப்படையாக வைத்து சனி பெயர்ச்சி பலன்களை வழங்காமல், ஏன் லக்கினத்தை அடிப்படையாக கொண்டு பலன் சொல்லுகிறது என்ற சந்தேகம் சிலருக்கு வரக்கூடும், லக்கினம் என்பதே ஜாதகத்திற்கு அடிப்படையானது, இந்த லக்கினம் எனும் முதல் பாவகத்தை வைத்தே ஒருவருக்கு சரியான ஜாதக பலன்களை சொல்ல இயலும், ராசியை வைத்து சொல்வது என்பது, பொது பலன்களாகவே இருக்குமே தவிர ஒரு ஜாதகருக்கு தெளிவான பதிலையும், பலன்களையும் தர வாய்ப்பில்லை என்பதால் ஒவ்வொரு லக்கினத்தருக்கும், இந்த சனி பெயர்ச்சி எவ்வித பலன்களை தருகிறது என்று தெளிவாக இனி வரும் பதிவுகளில் காண்போம்.

அடிப்படையில் ஒரு விஷயத்தில் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள் அன்பர்களே! சனி பகவான் தற்பொழுது விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளார், இனி வரும் 30 மாதங்கள் சனி பகவான் விருச்சிக ராசியில் சஞ்சாரம் செய்கிறார், விருச்சிகத்தில் அமர்ந்து  6ம் பார்வையாக மேஷ ராசியையும், 7ம் பார்வையாக ரிஷப ராசியையும், 10ம் பார்வையாக சிம்ம ராசியையும் பார்ப்பதால் இந்த ராசிகளுக்கு திருஷ்டி பலன் என்ற அமைப்பில் பலன் தருகிறார்.

இலக்கின ரீதியாக பலன்கான முனையும் அன்பர்கள் அனைவரது ஜாதகத்திலும் தற்பொழுது நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஆகியவை ஏற்று நடத்தும் பாவகம் கிழ்கண்ட ராசிகளில் அமைந்தால் மட்டுமே ( அதாவது விருச்சிகம்,மேஷம்,ரிஷபம் மற்றும் சிம்மம் ஆகிய ராசிகள் எந்த எந்த பாவகமாக வருகிறதோ அந்த பாவக பலனை தற்பொழுது நடைமுறையில் உள்ள திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஆகியவை தொடர்பு பெறுதல் ) ஜாதகருக்கு தற்பொழுது பெயர்ச்சி பெற்று இருக்கும் சனிபகவான் நன்மையையோ, தீமையையோ செய்வார் என்பதை கருத்தில் கொள்க, எனவே தற்பொழுது நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் மேற்கண்ட ராசிகளுடன் தொடர்பு பெருகின்றத என்பதை கவனிப்பது மிக முக்கியமானதாக ஜோதிடதீபம் அறிவுறுத்துகிறது . 


மீன லக்கினம் :

மீன லக்கினத்தை சார்ந்த அன்பர்களே ! தங்களுக்கு 9ல் அமர்ந்த சனி பகவான் 9ம் பாவகத்திர்க்கு அவ்வளவு நன்மையை தருவதாக தெரியவில்லை, தாங்கள் 9ம் பாவக வழியில் இருந்து உயர்கல்வி  மற்றும் சீரிய முயற்ச்சிகள் சில நேரங்களில் தோல்வியை  தரக்கூடும், பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கமால் சில நேரங்களில் அவதியுற நேரலாம், ஆராய்ச்சி சார்ந்த விஷயங்கள் சில தடைகளை சந்திக்கும் தன்மையை தரும், தன்னை விட வயதில் அதிகமுள்ள பெரிய மனிதர்ர்களின் ஆலோசனை படி நடந்துகொள்வது சாலசிறந்தது, இல்லை எனில் தேவையில்லாத அவ பெயர் ஏற்ப்பட அதிக வாய்ப்பு உள்ளது, வண்டி வாகனங்களில் செல்லும் பொழுது அதிக கவனம் தேவை, எதிர்பாராத விபத்துகள் சந்திக்கும் வாய்ப்பு உள்ளதால், பாதுகாப்பான பயணம் மேற்கொள்வது சகல நிலைகளில் இருந்தும் நன்மை தரும், திடீர் மருத்துவ செலவுகளும், எதிர்பாராத இழப்புகளும் தவிர்க்க இயலாது என்பதை கவனிப்பது நலம், ஆரோக்கியத்தில் அதிக அக்கறை கொள்வது தங்களுக்கு சிறந்த உடல் நலனை பெற்று தரும், அதிக முதலீடு மற்றும் மற்றவரை நம்பி செய்யும் காரியங்கள் பெரிய பின்னடைவை சந்திக்கும், அதிக எச்சரிக்கை தேவை இனிவரும் காலங்களில்.

6ம் பார்வையாக மேஷத்தை பார்வை செய்யும் சனிபகவான் தங்களுக்கு, வாக்கு மற்றும் குடும்ப அமைப்பில் இருந்து அதிக இன்னல்களை தந்த போதிலும், அளவுக்கு அதிகமான முறையற்ற செல்வத்தை வாரி வழங்க கூடும், எதிர்பாராத பணவரவுகள் தங்களை ஒரு நிமிடம் செயல் இழக்க செய்யும், இந்த நேரங்களில் அதிக சிந்தனையும், சரியான செயல்பாடுகளும் தங்களது வாழ்க்கையில் நன்மைகளை ஏற்ப்படுத்தும், ஒருநாள் இடைவெளியில் பொருள் வரவு தாரளமாக வருவதற்கு உண்டான வாய்ப்புகள் உண்டு, அதே சமயம், இதற்க்கு நிகரான குடும்ப பிரச்சனைகளும் தலைதூக்கும், சமாளிப்பது தங்களின் திறமை, முன்னுக்கு புறநான வார்த்தைகள் தங்களை வெகுவாக பதம் பார்க்கும், இதனாலும் பொருள் வரவு உண்டாகும், எக்காரணத்தை கொண்டும் யாருக்கும் வாக்கு கொடுப்பது தங்களை நிலை குலைய செய்யும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள், தங்களின் பொருளாதார வெற்றி இனிவரும் காலங்களில் அபரிவிதமாக இருக்கும் என்பது மட்டும் உறுதி, குடும்பத்தில் அதிக அனுசரிப்பும் விட்டுகொடுத்து செல்லும் மனப்பக்குவமும் மிகப்பெரிய எதிர்காலத்தை உருவாக்கும்.

7ம் பார்வையாக வீர்ய ஸ்தானத்தை வசீகரிக்கும் சனிபகவான் தங்களுக்கு கை நிறைவான வருமான வாய்ப்பை வாரி வழங்குகிறார், இதுவரை நிலுவையில் நின்ற பணம் யாவும் வந்து சேரும், சமுதாய அந்தஸ்த்து அதிகரிக்கும், ஏஜென்சி துறையில் உள்ளவர்களுக்கு அபரிவிதமான லாபங்கள் வந்து குவியும் யோக காலமாக இதை கருதலாம், வெளிநாடுகளில் இருந்து வரும் வருமானம் அதிகரிக்க வாய்ப்பு உண்டாகும், மருத்துவ துறையில் உள்ள அன்பர்களுக்கு லாபம் கொழிக்கும் , ஆராய்ச்சி சார்ந்த துறைகளில் உள்ள அன்பர்களுக்கு மிக சிறப்பான வெற்றிகள் உண்டாகும், விளையாட்டு துறையில் பல சாதனைகளை செய்யும் வாய்ப்பு உண்டாகும், தொழில் துறையில் உள்ள அன்பர்களும், தொழிலாளர்களும் அபரிவிதமான லாபங்களை பெறுவார்கள், வட்டி தொழில் செய்பவர்களுக்கு எதிர்பாராத வருமானங்கள் வந்து குவியும், கட்டிடம் மற்றும் கட்டுமான துறைகள் சரிவை  சந்தித்து மிகப்பெரிய வளர்ச்சியை பெரும் என்பதால், இந்த துறையில் உள்ள அன்பர்கள் மிகுந்த லாபத்தை நிச்சயம் பெறுவார்கள், குழந்தைகளின் கல்வி மற்றும் விளையாட்டு திறன் அதிகரிக்கும், மீன இலக்கின அன்பர்களுக்கு இந்த சனியின் 7ம் பார்வை சகல நலன்களையும் தருகிறது.

10ம் பார்வையாக ரண ருண ஸ்தானத்தை பார்வை செய்யும் சனிபகவான் தங்களுக்கு, வயிறு சார்ந்த தொந்தரவுகளை கடுமையாக கொடுக்க கூடும் , கடன் வாங்குவது கொடுப்பது, பெரிய பின்னடைவை சந்திக்கும், வீண் மருத்துவ செலவுகளும் உடல் நல சீர்கேடுகளும் தங்களை வெகுவாக பாதிக்கும், தன்னபிக்கை வெகுவாக குறையும், வாழ்க்கை துணை வழியில் இருந்து அதிக சிரமங்களை  எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரக்கூடும், மனோ ரீதியான தொந்தரவுகளும், எதிரிகளின் தொல்லைகளும் அதிகரிக்கும், எந்த ஒரு விஷயத்தையும் நன்கு ஆய்வு செய்து செயல்படுவது நலம் தரும், நெடுந்தொலைவு பயணங்களில் அதிக பாதுகாப்பு தேவை, சிந்தனை திறன் குறையும் என்பதால் தாங்கள் அனைவரும் முறையாக சூரிய நமஸ்காரம் செய்து வருவது சால சிறந்த நன்மைகளை வாரி வழங்கும், எதிரிகளின் சூழ்ச்சியே தங்களுக்கு சாதகமாக மாற அதிக வாய்ப்பு உண்டு, பெண்கள் தங்களது உடல் நலனில் அதிக அக்கறை கொள்வது நல்லது குறிப்பாக வயிறு மற்றும் முதுகு எலும்பு சார்ந்த தொந்தரவுகள் வெகுவாக பாதிக்கும், யாரிடமும் பகைமை பாராட்டாமல் நன்மைகளை மட்டும் செய்வது தங்களின் பூர்வ புண்ணிய பலன்களை அதிகரிக்கும்.

மீன இலக்கின அன்பர்களே ! தங்களுக்கு தற்ப்பொழுது நடைபெறும் திசை மற்றும் புத்திகள் மேற்கண்ட 9,2,3,6ம் பாவக பலன்களை ஏற்று நடத்தினால் மட்டுமே, தங்களுக்கு கோட்சார சனிபகவானின் கோட்சார யோக அவயோக பலன்கள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை தற்பொழுது நடைபெறும் திசை மற்றும் புத்திகள் மேற்கண்ட 9,2,3,6ம் பாவக பலனை ஏற்று நடத்த வில்லை எனில், எவ்வித நன்மை தீமையும் தங்களுக்கு நடைமுறையில் வர வாய்ப்பில்லை என்பதை கருத்தில் கொள்வது நல்லது வாழ்த்துகள்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696