உத்திரநட்சத்திரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உத்திரநட்சத்திரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 4 பிப்ரவரி, 2024

கன்னிராசி உத்திரம் நட்சத்திரம் - ராஜயோக வாழ்வை தரும் ரகசிய இறைவழிபாடு!

 


கன்னிராசி "உத்திரம்" நட்சத்திரம் பொறுமையின் பிறப்பிடமாகவும், நிர்வாக திறனில் தனித்தன்மையுடன் இயங்கசெய்யும் அற்புத நட்சத்திரம், சவால்கள் அனைத்தையும் தனது நிர்வாக வல்லமையால் வெற்றிகொள்வார்கள், தனது சிந்தனை திறனையும் செயல்பாடுகளையும் மற்றவர்கள் அறியா வண்ணம் லட்சியங்களை வெற்றிகொள்ளும் யோகம் உண்டு, ரகசியமான கலைகளில் நல்ல தேசியும், புகழ் மிக்க பொறுப்புகளை குறுகிய காலத்தில் சுவீகரிக்கும் யோகமும் உண்டாகும், தெளிவான சிந்தனை, முற்போக்கு செயல்பாடுகள், எந்த பொருளையும் பன்மடங்கு விருத்தி செய்யும் வல்லமை, சிறிதாக ஆரம்பித்து வெகு விரைவில் சாம்ரஜ்ஜியத்தை கட்டமைக்கும் நிர்வாக வல்லமை, எதிரிகளுக்கு சிம்மசொப்பனம், தனது காரியத்தில் கண்ணும் கருத்துமாக நின்று சாதிக்கும் யோகம், சிறந்த பொருளாதார திட்டமிடுதல்கள், சார்ந்து இருப்போர் அனைவரையும் காப்பாற்றும் யோகம், உறவுகள் மற்றும் நண்பர்கள் வழியிலான நன்மைகளை முழுமையாக பெறுதல், பல தொழில் செய்யும் யோகம், விவசாயத்தில் சாதனை படைக்கும் வழிமுறைகளை கையாளும் யோகம், தொலைநோக்கு பார்வை, மண் மற்றும் பூமியை பற்றிய நுண்ணறிவு, வாஸ்து கலையில் அதீத புலமை, இயற்க்கை மருத்துவத்தில் உணவு சம்பந்தப்பட்ட துறையில் அதீத வெற்றிவாய்ப்புகள், மற்றவர் நோய் தீர்க்கும் தனித்திறன் அல்லது கைராசி, புலனுக்கு அப்பாற்பட்ட அறிவாற்றல் என்ற வகையில் சிறப்புகளை தரும், இவர்களது  தமது வாழ்வில் சகலவிதமான சௌபாக்கியமும், உடல் நலம் மனோவலிமை, கல்வியில் மேன்மை, தொழில் விருத்தி, புத்திரபாக்கியம், பொருளாதார வளர்ச்சி என்றவகையில் பரிபூரணமான சுகபோகங்களையும், தன்னிறைவாக சுவீகரிக்க, மிக எளிமையான ரகசிய இறைவழிபாடு என்பது கீழ்கண்டவாறு அமையும். 

தலச்சேரியில் இருந்து 8 கிமீ தொலைவில் அமைந்துள்ள "கதிரூர் சூரிய நாராயணா கோயில்" உத்திரம் நட்சத்திரம் கன்னி ராசி அன்பர்களுக்கு ஆளுமை திறனையும் அதிர்ஷ்ட வாய்ப்புகளையும் தன்னிறைவாக வாரி வழங்கும் திருக்கோவிலாகும், அகஸ்திய மகா முனிவர் "ஆதித்ய ஹிருதயமந்திரத்தை"  3முறை பாராயணம் செய்து ராவணனை வெற்றிகொள்ள "பகவான் ராமருக்கு" கொடுத்த திருத்தலம்.

 "சூரியனின் தேசம்" என்பதின் சுருக்கம் கதிரூர் அல்லது கதிரவபுரம், வளர்பிறை ஞாயிற்று கிழமை அன்று காலை சூரிய ஹோரையில் செம்பருத்தி மாலை மற்றும் சிகப்பு வர்ண பட்டாடை சாற்றி வழிபடும் கன்னி ராசி உத்திர நட்சத்திர அன்பர்களுக்கு, சிறந்த நிர்வாக திறனையும் அகிலம் போற்றும் ஆளுமை திறனையும் வாரி வழங்குவார், எதிரிகளை வெற்றி கொள்ளவும், மாந்திரீகம் சூனியம் செய்வினை கோளாறுகள் வழியிலான துன்பங்களை நீக்கவும், அரசுதுறையிலான பணிகளில் வெற்றி பெறவும், அரசியல் ரீதியான வளர்ச்சிகளை பெறவும், தலைமை பொறுப்புகளை வென்று நிலையான ஆட்சி செய்யவும் வல்லமையை தருவார், தொழில் ரீதியான இன்னல்களை சந்தித்து கொண்டு இருக்கும் அனைத்து அன்பர்களுக்கு இந்த திருத்தலம் மிகப்பெரிய மாற்றங்களையும், அபரிவிதமான வளர்ச்சியினையும் மிகப்பெரிய அளவில் வாரி வழங்கும், எதிர்ப்புகளை கண்டு அஞ்சாமல் போட்டி பந்தயங்களில் மிகப்பெரிய வெற்றிகளையும், தன்னிறைவான யோக வாழ்க்கையையும் நிச்சயம் பெறுவார்கள், எதிராளிகள் இவர்களது அசுர பலத்தை கண்டு அச்சமுறும் தன்மையை தரும், அனைத்திலும் வெற்றி கல்வி கேள்விகளில் புகழ், கலைத்துறையில் சாதனை, யாரையும் சார்ந்து வாழாமல் தனித்து நின்று போராடி வெற்றி பெறுதல், பொதுமக்கள் ஆதரவு, நீதி நேர்மை கடமை கண்ணியம் போன்ற உயரிய குணங்களை சுவீகரித்தல், சத்தியத்தையும் உண்மையையும் பாதுகாத்தல், சாஸ்திர ஞானம், தவவாழ்வில் முக்தியை பெறுதல் என்ற வகையில் மிகப்பெரிய சுபயோகங்கள் உண்டாகும்.

வருடம் ஒருமுறை  "கதிரூர் சூரிய நாராயணா கோயில்" சென்று வரும் கன்னி ராசி உத்திர நட்ச்சத்திர அன்பர்கள் தமது வாழ்வில் தனித்துவமான சாம்ராஜ்யத்தை நிறுவி சாதனை புரியும் வல்லமையை பெறுவார்கள், கல்வி உயர்கல்வி, வேலை தொழில் , காதல் வெற்றி திருமணயோகம், ஆண்வாரிசு, பொருளாதார தன்னிறைவு, எதிர் பாரத சுபயோகங்கள், திடீர் அதிர்ஷ்டம், முற்போக்கு சிந்தனை, தெய்வீக தரிசனம், மூதாதையர் சொத்துக்கள் மிக எளிதாக சுவீகரிக்கும் வல்லமை, இந்தியாவின் உயரிய ஆட்சி பணிகளை பதவிகளை மிக எளிதாக சுவீகரித்தல், புதிய சிந்தனை புதிய மாற்றங்கள் என வாழ்க்கையில் சகல நிலைகளில் இருந்தும் முழுமையான சுபயோகங்களை வாரி வழங்கும் யோகம், தனது துறை சார்ந்த ஞானம் அல்லது தான் செய்யும் தொழில் வழியிலான உச்ச நிலையை அடைதல், என்ற வகையில் சிறப்புகளை தரும்.

குறிப்பு :

கன்னிராசியில் "உத்திரம்" நட்சத்திரத்தை தனது ஜென்ம நட்ஷத்திரம் அல்லது லக்கினமாக பெற்ற அன்பர்கள், பரோபகரமான ஆளுமை திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் மிக்கவர்கள், ஆட்சி பணியில் நேர்மையை கடைபிடிக்கும் நல்லவர்கள், உண்மை சத்தியம் போன்ற உயர் குணங்களை பிறவியிலே பெற்று இருப்பார்கள், விவசாயம் மற்றும் இயற்க்கை வளம், இயற்க்கை மருத்துவம், ஜோதிடம் வாஸ்து சாஸ்திரம், படைப்பு திறன் அறிவாற்றல் கற்பனை வளம் இயல் இசை நாடகம் போன்ற துறைகளில் நன்மைகளை பெறுவதுடன், எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாக திகழ்வார்கள், எதிரிகள் வழியிலான நன்மைகளையும், பொதுமக்கள் செல்வாக்கில் நிலையான வெற்றிகளையும் சுவீகரிப்பார்கள்,  இவர்களது வளர்ச்சி அசுர வேகத்தில் அமையும், வாழ்வை எவ்வாறு சிறப்பாக வாழ்வது என்பதை பற்றியும், அனைவரையும் அனுசரித்து வாழும் வல்லமையும் இவர்களுக்கு ஒருங்கே அமையப்பெற்று இருக்கும், பொதுநலம் என்பது இவர்களது வாழ்வை மேம்பட செய்யும், மேற்சொன்ன "கதிரூர் சூரிய நாராயணா கோயில்"வழிபாடு இவர்களது வாழ்வில் ராஜயோகத்தை தன்னிறைவாக வாரி வழங்கும் என்பதுடன் அரசியல் ஆதாயத்தையும் முழுமையாக பெறுவார்கள் என்பதில் மாற்று கருத்துக்கு இடம் இல்லை அன்பர்களே ! 

ஜோதிடன்வர்ஷன் 

9443355696

சனி, 27 ஜனவரி, 2024

சிம்மராசி உத்திரம் நட்சத்திரம் - ராஜயோக வாழ்வை தரும் ரகசிய இறைவழிபாடு!

  


 சிம்மராசி "உத்திரம்" நட்சத்திரம் கடின உழைப்பும் ஸ்திர தன்மையான அறிவாற்றலும் சமயோசித புத்திசாலித்தனமும் பரிபூரணமாக நிறைந்த அற்புத நட்சத்திரம், எதிர்ப்புகளை கண்டு அஞ்சாமல் வீரியமிக்க வெற்றிகளை பதிவு செய்வார்கள், தன்னை பின்பற்றி வாழ அனைவரையும் உற்சாகப்படுத்தும் அன்பர்கள், பிரதிபலன் பாராமல் அனைவருக்கும் நன்மைகளையும், பேதம் பாராமல் மக்களுக்கான சேவைகளை செய்வத்தில் வல்லவர்கள், அன்பு பாராட்டுதல், உறவுகளை அனுசரித்து செல்லுதல், தன்னை சார்ந்து இருக்கு அன்பர்களுக்கான வழிகாட்டுதல், சுயநலம் இன்றி பொதுநலன் காத்தல், உயரிய நோக்கங்கள், சமுதாய விழிப்புணர்வு, வெற்றிகளை அனைவருடன் பகிர்ந்து கொள்ளுதல், எதிர்பாலினர் சேர்க்கை வழியிலான நன்மைகளையும் முன்னேற்றங்களையும் சுவீகரித்தல், தெய்வீக சிந்தனை, ஆன்மீக வெற்றி அரசுத்துறை சார்ந்த பணிகளை இலகுவாக கையாளுதல், அரசாட்சி செய்யும் யோகம், நிதி மேலாண்மை சார்ந்த திட்டமிடுதல்களை வெகு அற்புதமாக கையாளுதல், வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டு இருக்கும் தொழில்களை வெகு விரைவில் மீட்டு எடுத்து முன்னேற்றங்களையும், அபரிவிதமான வளர்ச்சியினையும் சுவீகரிக்கும் தன்மை, உறவுகளும் நட்புகளும் புடைசூழ யோக வாழ்வை சுவீகரிக்கும் பேராற்றல் என மிகுந்த நன்மைகளை வாரி வழங்கும், இவர்களது  தமது வாழ்வில் சகலவிதமான சௌபாக்கியமும், உடல் நலம் மனோவலிமை, கல்வியில் மேன்மை, தொழில் விருத்தி, புத்திரபாக்கியம், பொருளாதார வளர்ச்சி என்றவகையில் பரிபூரணமான சுகபோகங்களையும், தன்னிறைவாக சுவீகரிக்க, மிக எளிமையான ரகசிய இறைவழிபாடு என்பது கீழ்கண்டவாறு அமையும். 

கும்பகோணம் அருகில் அமைந்துள் சூரியன் நவக்கிரக தலம் "சூரியனார் கோவில்"  உத்திரம் நட்சத்திரம் அன்பர்களுக்கு ஆளுமை திறனையும் அதிர்ஷ்ட வாய்ப்புகளையும் தன்னிறைவாக வாரி வழங்கும் திருக்கோவிலாகும், வளர்பிறை ஞாயிற்று கிழமை அன்று காலை சூரிய ஹோரையில் செம்பருத்தி மாலை மற்றும் சிகப்பு வர்ண பட்டாடை சாற்றி வழிபடும் உத்திர நட்சத்திர அன்பர்களுக்கு, வாழ்வில் பெருந்தன்மையான குணத்தையும், தலைமை பொறுப்பேற்கும் வலிமையையும், கல்வி கேள்விகளில் மிகப்பெரிய ஆளுமைத்திறனையும், முற்போக்கு சிந்தனையையும், நேர்மறை எண்ணத்தின் வழியிலான வெற்றி வாய்ப்புக்களையும், நிலைத்து நின்று ஸ்திர தன்மையுடன் தனது வெற்றிகளை பதிவு செய்யும் யோகத்தையும், அரசு மற்றும் அரசுத்துறை சார்ந்த பணிகளை சுவீகரிக்கும் நிலையையும் வெகு விரைவாக வழங்குவார் மேலும் உடல் வலிமை மனஉறுதி இரண்டையும் ஏககாலத்தில் உத்திர நட்சத்திர அன்பர்கள் பெற்று நலமடைவார்கள், தொழில் ரீதியான தடைகள் நீங்கும், புதிய தொழில் வாய்ப்புகள் மேலோங்கும், ஏற்றுமதி இறக்குமதி தொழில் வழியிலான முன்னேற்றங்கள் வெகு அற்புதமாக வந்து சேரும், மலைபோல் வந்த சிரமங்கள் பனிபோல் விலகும், சமுதாயத்தில் பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்க பெறுவதுடன் எதிர்பாராத முன்னேற்றங்கள் வெகு சிறப்பாக வந்து சேரும், செய்யும் தொழில் வழியிலான முன்னேற்றங்கள் உத்திர நட்சத்திர அன்பர்களுக்கு முழுஅளவில் கிடைக்க பெறுவார்கள்.

வருடம் ஒருமுறை  "சூரியனார் கோவில்" சென்று வரும் உத்திர நட்ச்சத்திர அன்பர்கள் தமது வாழ்வில் அரசருக்கு நிகரான யோக வாழ்வை சுவீகரிப்பதுடன் பொதுமக்கள் ஆதரவு, தொழில் சாதனைகள், எதிர்பாலினர் ஆதரவு, வசதி வாய்ப்புகள் நிறைந்த சொகுசு வாழ்க்கை, சுயமாக செயல்பட்டு தனசேர்க்கை பெறுதல், சமுதாயத்தில் உயரிய பதவிகள், கலைத்துறையில் மிகப்பெரிய வெற்றி வாய்ப்புகள், வெளியூர் அல்லது வெளிநாடுகளில் தொழில் யோகம், மருத்துவம் தொழில் நுட்பம் நிதிமேலாண்மை போன்றவற்றில் அபரிவிதமான முன்னேற்றங்கள், சுய சம்பாத்தியம், பொருளாதார முன்னேற்றங்கள், மண் மனை வண்டி வாகன யோகங்கள் என்ற வகையில் அபரிவிதமான வளர்ச்சி வாய்ப்புகள், தடைகள் யாவும் நீங்கி சுபயோக வாழ்வை சுவீகரிக்கும் தன்மை என்ற வகையில் சிறப்புகளை வரி வழங்கும்.

 குறிப்பு :

 சிம்மராசியில் "உத்திரம்" நட்சத்திரத்தை தனது ஜென்ம நட்ஷத்திரம் அல்லது லக்கினமாக பெற்ற அன்பர்கள், ஸ்திர தன்மையான ஆளுமை திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் மிக்கவர்கள், படைப்பு திறன் அறிவாற்றல் கற்பனை வளம் இயல் இசை நாடகம் போன்ற துறைகளில் நன்மைகளை பெறுவதுடன், எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாக திகழ்வார்கள், எதிரிகள் வழியிலான நன்மைகளையும், பொதுமக்கள் செல்வாக்கில் நிலையான வெற்றிகளையும் சுவீகரிப்பார்கள், இயல் இசை நாடகம் போன்ற கலைத்துறையில் மிகப்பெரிய  முன்னேற்றத்தையும், அதிக அளவிலான செல்வத்திற்கும்  சொந்தக்காரர்கள் என்பதனால், இவர்களது வளர்ச்சி அசுர வேகத்தில் அமையும், வாழ்வை எவ்வாறு சிறப்பாக வாழ்வது என்பதை பற்றியும்,அனைவரையும் அனுசரித்து வாழும் வல்லமையும் இவர்களுக்கு ஒருங்கே அமையப்பெற்று இருக்கும், மேற்சொன்ன "சூரியனார் கோவில்" வழிபாடு இவர்களது வாழ்வில் ராஜயோகத்தை தன்னிறைவாக வாரி வழங்கும் என்பதுடன் அரசியல் ஆதாயத்தையும் முழுமையாக பெறுவார்கள் என்பதில் மாற்று கருத்துக்கு இடம் இல்லை அன்பர்களே ! 

ஜோதிடன்வர்ஷன் 

9443355696