கன்னிராசி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கன்னிராசி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 11 மார்ச், 2025

கன்னி சனிப்பெயர்ச்சி பலன்கள் ( 29.03.2025 முதல் 03.06.2027 )


 குறிப்பு :
 சனிதிசை, சனிபுத்தி, சனிஅந்தரம் மற்றும் சனிசூட்டசமம் நடைபெறும் கன்னிராசி அன்பர்களுக்கு மட்டும் இது பொருந்தும். 

 கன்னி ராசிக்கு 29.03.2025 அன்று இரவு 07:25க்கு கும்ப ராசியில் இருந்து மீனராசிக்கு பெயர்ச்சி அடையும் "சனிபகவான்" 03.06.2027 அன்று நள்ளிரவு 01:54 வரை, கால புருஷ தத்துவ அமைப்பிற்க்கு பத்து மற்றும் பதினொன்றுக்கு அதிபதி என்ற நிலையில் கன்னி ராசியினருக்கு களத்திர சனியாக தரும் பலன்கள் என்ன என்பதை இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

 தனது வர்க்க கிரகமான சனி பகவான் கன்னி ராசிக்கு களத்திர ஸ்தானமான 7ல் சஞ்சரிக்கு காலம் "சமசப்த சனி" என்ற நிலையில் கன்னி ராசி அன்பர்களுக்கு தனது தனித்திறமையை இந்த உலகிற்க்கு பிரபல்ய படுத்தும் தன்மையை வெளிப்படுத்துவார், இதுவரை சாதாரண மனிதர்களாக இருந்து வந்த கன்னி ராசி அன்பர்கள், இனிவரும் காலங்களில் சமூக அந்தஸ்து உள்ள பிரபல்யமாக திகழ வாய்ப்பு உண்டு, கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கும் யோகம் உண்டு கலைகளில் தேர்ச்சி உண்டு, உயர்கல்வி பட்டய படிப்பு போன்றவற்றில் தேர்ச்சி பெறவும், உலக ஞானம் பெற்று தனது சுய வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ளும் யோகம் உண்டாகும், கூட்டு முயற்சிகளில் அபரிவிதமான யோகங்களை தரும், தனது துறையில் சிறந்து விளங்கும் யோகம் உண்டாகும், தனது வார்த்தைக்கு மதிப்பு இருக்கும் என்பதால் செய்யும் காரியங்கள் யாவும் வெற்றிபெறும், நம்பிக்கையுடன் வாழ்க்கையை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும்.

  இதுவரை இருந்து வந்த சிரமங்கள் உடல் உபாதைகள் பிணிகள் யாவும் நீங்கும், அதற்க்கான மருத்துவர் தங்களை தேடிவந்து தீர்வு தருவார், மனநிம்மதியும் நிறைவான யோக வாழ்க்கையையும் தேடிவரும், தங்களது வாழ்க்கை துணை வழியில் இருந்துவரும் இன்னல்கள் யாவும் நீங்கி ஒன்று சேர்ந்து வாழும் யோகம் உண்டாகும், உறவுகளை அனுசரித்து செல்லும் யோகம் உண்டு, பொதுவாழ்வில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும், பிரிந்து இருந்த கணவன் மனைவி உறவுகள் ஒன்று சேரும் யோகம் உண்டு, சந்ததி தழைப்பதற்க்கு நல்ல ஆண் வாரிசு உருவாகும், திருமண தடை அகன்று நல்ல இல்லற வாழ்க்கை அமையும், குறிப்பாக கன்னி பெண்களுக்கு நல்ல வாழ்க்கை துணை அமையும், காதலில் வெற்றி பெறுவதற்க்கான யோகம் உண்டு, தங்களது தனி திறமையை பயன்படுத்தி வாழ்வில் வெற்றிகொள்ளும் யோக காலமாக இந்த சனி பெயர்ச்சி தங்களுக்கு அமைகிறது.

 தனது 6ம் பார்வையால் கன்னிராசி அன்பர்களுக்கு விரைய ஸ்தானம் எனும் 12ம் பாவகத்தை வசீகரிக்கும் ( சிம்ம ராசியை ) சனிபகவான் முதலீடுகள் வழியில் இருந்து சிரமங்களை தரக்கூடும், புதிய முதலீடுகளை தவிர்ப்பதும் தேங்கி இருந்த சரக்குகளையும், உற்பத்தி பொருட்களையும் முறையாக கையாண்டு வருமானத்தை அதிகரிப்பதும் அவசியம், சற்று விழிப்புணர்வு இல்லை என்றாலும், நிர்வாக திறன் இல்லை என்றாலும் முதலீடுகளில் இருந்துவரும் லாபம் குறைவதற்க்கும், நஷ்டங்கள் ஏற்படுவதற்கும் சந்தர்ப்பங்கள் உண்டு, சுய தொழில் புரிவோர் வாழ்க்கையில் மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட்டு பொரளாதார சிக்கல்களில் இருந்து மீண்டு வருவது அவசியம், இனிவரும் காலங்களில் அலைச்சல் அதிகரிக்கும், நிம்மதி சார்ந்த விஷயங்களில் துன்பங்களை சந்திக்கும் சூழ்நிலையை தரும், வாழ்க்கை துணை மற்றும் பெற்ற பிள்ளைகள் வழியிலான இன்னல்கள், சமயோசித அறிவாற்றலுடன் செயல்பட முடியாத சூழ்நிலையால் பொருளாதார இழப்புகள் ஏற்பட வாய்ப்பு உண்டு, உறவுகளுடன் அதிக அளவில் அனுசரித்து செல்வது நன்மையை தரும், பொதுமக்கள் ஆதரவு என்பது சற்று குறைவதற்க்கு வாய்ப்பு உண்டு, எனவே வார்த்தை பிரயோகங்களில் மிகுந்த கவனத்துடன் செயல்படுவது நன்மையை தரும், விரையம் அனைவராலும் துன்பம், நிம்மதியின்மை போன்றவற்றால் தங்களின் உடல் ஆரோக்கியம் பாதிக்கவும் வாய்ப்பு உண்டு.

 தனது 7ம் பார்வையால் கன்னிராசி அன்பர்களுக்கு ஜென்ம ராசி எனும் 1ம் பாவகத்தை வசீகரிக்கும் ( கன்னி ராசியை ) சனிபகவான் தனது வர்க்கம் என்பதால் வாழ்க்கையில் இதுவரை இல்லாத வெற்றிகள் மற்றும் புதிய சந்தர்ப்பங்கள் கைகூடிவரும், கடின உழைப்பை சிறப்பாக வெளிப்படுத்தி வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றங்களை  சுவீகரிக்கும் யோகம் உண்டாகும், தனித்திறமை அற்புதமாக வெளிப்படும், விவசாயம் பண்ணை தொழில் புரிவோருக்கு இனிவரும் காலங்கள் வாழ்க்கையில் வெற்றி மேல் வெற்றி என்ற அற்புதம் நடைமுறைக்கு வரும், பணியிட மாற்றம் பதவி உயர்வு, பொருளாதர வளர்ச்சி, புதிய வீடு வண்டி வாகன யோகம், தெய்வீக அனுக்கிரகம், உழைப்பிற்கான அங்கீகாரம் வருமான உயர்வு என்ற வகையில் சுபயோக பலன்கள் நடைமுறைக்கு வரும், தெளிவான சிந்தனை, சிறந்த உடல் வலிமை நீங்கள் நினைத்ததை சாதிக்கும் யோகத்தை தரும், புதிய தொழில் அல்லது வேலைவாய்ப்பை தற்போழுது பெறுவதற்க்கான சந்தர்ப்பம் உண்டாகும், அயல்நாடுகளில் நல்ல முன்னேற்றமும் தொழில் வளர்ச்சியும் வெகு சிறப்பாக கைகூடும், இதுவரை தங்களை மதிக்காதர்வர்கள் கூட தங்களின் திறமையை உணர்ந்து அதற்கான அங்கீகாரத்தை வழங்குவார்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் தங்களின் திறமையை உணர்ந்து உங்களுக்கான வெற்றியை உறுதி செய்வார்கள், வாழ்க்கை துணை மற்றும் பெண்நண்பர்கள் தங்களை சரியாக புரிந்துகொள்ளும் தன்மை வெளிப்படும், இதுவரை கிடைக்காத மதிப்பு மரியாதை தங்களை தேடிவரும், சிறு வியாபாரம் விருத்தி அடையும், தொழில் அபிவிருத்தி உண்டாகும், நினைத்த காரியங்கள் யாவும் வெற்றி மேல் வெற்றி தரும்.

தனது 10ம் பார்வையால் கன்னிராசி அன்பர்களுக்கு சுக ஸ்தானமான 4ம் பாவகத்தை வசீகரிக்கும் ( தனுசு ராசியை ) சனிபகவான், தனது எதிர் வர்க்க வீடு என்ற போதிலும் தங்களை சிறந்த நிர்வாக திறன் கொண்டவராக மாற்றும் வல்லமையை தருவார், மேலும் நீண்டகால லட்சியங்கள் ஆசைகள் யாவும் பரிபூரணமாக நிறைவேறும், குறிப்பாக உயர்கல்வி வெளிநாடு பயணம், சமூக அந்தஸ்த்து அதிகம் உள்ள பெரிய மனிதர்கள் அறிமுகம், சுய முன்னேற்றம் சார்ந்த தெளிவான விழிப்புணர்வு, செய்யும் தொழில் அல்லது வேலையில் திடீர் முன்னேற்றம், பயணங்கள் மூலம் கிடைக்க பெரும் அதிர்ஷ்ட வாய்ப்புகள், வெளிநாடு அல்லது வெளியூரில் புகழ் பெரும் யோகம், தெய்வீக அனுகூலம், செய்வதை சரியாக செய்யும் யோகம், பொது வாழ்வில் வெற்றி, அரசியல் ரீதியான செல்வாக்கு, தனிப்பட்ட முன்னேற்றம் என்ற வகையில் சிறப்பான யோக வாழ்க்கையை நல்கும், அதே சமயம் உடல் ரீதியாக உள்ளுறுப்புகள் சம்பந்தபட்ட இன்னல்களை தரக்கூடும், எனவே உடல் ஆரோக்கியத்தில் அதிக முக்கியதுவம் தருவதும், மருத்துவ காப்பீடு போன்றவற்றை முன்னெடுப்பதும் சரியான தீர்வாக அமையும், தங்களது குடும்பத்தில் உள்ள பெரிய மனிதர்கள் ஆசியை பெறுவது தங்களின் வாழ்க்கையில் வரும் இன்னல்களுக்கு தீர்வாக அமையும், பெண்கள் எனில் தனது தந்தையிடமும், ஆண்கள் எனில் தனது தாயிடமும் ஆசியையும் அரவணைப்பையும் பெறுவது நலம் தரும், மேலும் அவர்களது தேவைகளை பூர்த்தி செய்வது மேலும் சுபயோக வாழ்க்கையை வாரி வழங்கும். 

 கன்னி ராசி அன்பர்களுக்கு மனஆசைகள் நிறைவேறும், புதிதாக இடம் வீடு வாங்கும் எண்ணம் ஈடேறும், திருமண யோகம் கைகூடி வரும், நீண்ட கால ஏக்கமாக இருந்த புத்திர பாக்கியம் குலதெய்வ ஆசியால் உண்டாகும், சொந்தமாக சுய தொழில் ஆரம்பிக்கும் யோகம் உண்டு, உறவுகள் மரியாதை தருவார்கள், பொதுமக்கள் ஆதரவு தருவார்கள், தொழில் முன்னேற்றம் இதுவரை இல்லாத அளவில் மிகபெரிய வருமானத்தை பெற்று தரும். 

ஜோதிடன் வர்ஷன்

9443355696

செவ்வாய், 6 பிப்ரவரி, 2024

கன்னிராசி அஸ்தம் நட்சத்திரம் - ராஜயோக வாழ்வை தரும் ரகசிய இறைவழிபாடு!


 கன்னிராசி "அஸ்தம்" நட்சத்திரம்
வாழ்வில் நினைத்ததை சாதிக்கும் வல்லமையையும், தொட்டதெல்லாம் பொண்ணாக மாறும் அதிர்ஷ்டத்தையும் ஒருங்கே அமையப்பெற்ற அற்புத நட்ஷத்திரம், தனது உள்ளங்கையில் அனைத்தையும் சுவீகரிக்கும் யோகம் பெற்றவர்கள், ஆன்மீகத்தின் வழியிலான அருளாசிகளையும், புவியில் மனிதர்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் பேராற்றலும் கொண்டவர்கள், கற்பனை வளம், விவசாயம் செழிப்படைதல், தானிய விருத்தி, பொருள் விருத்தி, பூமியின் மேலும் புவியின் கீழும் உள்ள பொருட்களை ஆளுமை செய்யும் நட்ஷத்திரம், புலனுக்கு அப்பாற்பட்ட அறிவுத்திறனும், வருமுன் கண்டுணரும் உள்ளுணர்வும், நடப்பதை முன்கூட்டியே அறிந்துகொள்ளும் பேராற்றலும், தெய்வீக சிந்தனையும், சுய முயற்சி வழியிலான பொருள் தேடுதல்களையும், தன்னிறைவான பொருளாதார முன்னேற்றங்களையும் சிறப்பாக சுவீகரிப்பார்கள், தனது வாத திறன் கொண்டு வாழ்க்கையில் மிக பெரிய சாதனைகளை படைப்பார்கள், கடின உழைப்பிற்கும் சுய முயற்சிக்கும் எடுத்துக்காட்டாக விளங்குவார்கள், அனைத்து காரியங்களிலும் ஒரு நேர்த்தியை கடைபிடிப்பவர்கள், துணிச்சலும் எதிர்ப்புகளை கண்டு அஞ்சாமல் இறுதிவரை போராடி வெற்றி பெரும் வல்லமையும் பெற்றவர்கள், 
இவர்களது  தமது வாழ்வில் சகலவிதமான சௌபாக்கியமும், உடல் நலம் மனோவலிமை, கல்வியில் மேன்மை, தொழில் விருத்தி, புத்திரபாக்கியம், பொருளாதார வளர்ச்சி என்றவகையில் பரிபூரணமான சுகபோகங்களையும், தன்னிறைவாக சுவீகரிக்க, மிக எளிமையான ரகசிய இறைவழிபாடு என்பது கீழ்கண்டவாறு அமையும். 

கேரள மாநிலம், எர்ணாகுளத்திலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது, சோற்றானிக்கரை (சோட்டானிக்கரை) "பகவதியம்மன் அம்மன் ஆலயம்" அஸ்த நட்சத்திர அன்பர்களுக்கு அளவில்லா சௌபாக்கியங்களை தன்னிறைவாக வாரி வழங்கும் அற்புதமான திருக்கோவில், கேட்ட அனைத்தையும் தாய் பகவதி வாரி வழங்கும் கருணை உள்ளம் கொண்டவர், அஸ்த நட்சத்திர அன்பர்கள் வளர்பிறை திங்கள் அன்று இத்திருக்கோவிலுக்கு சந்திர ஹோரையில் மல்லிகை மலர்மாலை மற்றும் வெண் பட்டு வஸ்த்திரம் சாற்றி வழிபாடு செய்யும் பொழுது இவர்களது வாழ்க்கையில் சகல சௌபாக்கியமும் வந்து சேரும், குறிப்பாக உடல் ஆரோக்கியம், மனோ வலிமை, கல்வியில் மேன்மை, தொழில் விருத்தி, திருமண யோகம், புத்திர பாக்கியம், வீடு வண்டி வாகன யோகம், புதிய வேலை அல்லது தொழில், பொருளாதார வழியிலான முன்னேற்றங்கள், விவசாயம் மற்றும் மருத்துவ துறையில் மிகப்பெரிய சாதனைகளை படைத்தல், தெய்வீக அனுக்கிரகம், குலதெய்வ சாபம் நீங்குதல், பித்ரு சாபம் நீங்குதல், பெண்சாபம் நீங்குதல் என சகல தோஷங்களில் இருந்தும்  விடுதலை வழங்கும் வல்லமை  பெற்ற தெய்வம்  "சோட்டானிக்கரை பகவதியம்மன்" என்பதை அஸ்த நட்ச்சத்திர அன்பர்கள் வழிபாடு செய்வதன் வழியில் இருந்து உணர முடியும்.

 வருடம் ஒருமுறை   (சோட்டானிக்கரை) "பகவதியம்மன் அம்மன் ஆலயம்" சென்று வரும் கன்னி ராசி அஸ்த நட்ச்சத்திர அன்பர்கள் தமது வாழ்வில் நிலைத்தன்மையிலான முன்னேற்றங்களை பரிபூர்ணமாக சுவீகரிக்கமுடியும், மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும், தெளிவான சிந்தனை, புதிய முயற்சிகள் வழியிலான முன்னேற்றங்கள் உண்டாகும், தனது துறை சார்ந்த ஞானம் மற்றும் வித்தைகளில் தேர்ச்சி உண்டு, அருங்கலைகள் மூலம் உலகப்புகழ் பெரும் யோகம் உண்டாகும், சாதனை படைப்பதற்கான அத்துணை வாய்ப்புகளும் வந்து சேரும், ஜீவன விருத்தி, திருமணயோகம் வெகு சிறப்பாக வந்து சேரும், உயரிய குணங்களால் வாழ்க்கையில் உன்னத வெற்றிகளை பெறுவதுடன் சமுதாயத்திற்க்கு பயனுள்ள வாழ்க்கையை முன்னெடுக்கும் யோகம் உண்டாகும், நல்ல எண்ணமும் சிறந்த நற்செயல்களும் அஸ்த நட்சத்திர அன்பர்கள் வாழ்வில் வியக்கத்தக்க மாற்றங்களை நல்கும், தொட்ட காரியங்கள் விருத்தி பெறுவதுடன், புகழ் மிக்க பொறுப்புகளும் அரசியல் பதவிகளும் வந்து சேரும், முறையான வாழ்க்கை, நேர்மையான முன்னேற்றம், வியாபாரத்தில் மிகப்பெரிய வெற்றி வாய்ப்புகள், பாரம்பரிய விஷயங்களை கட்டிக்காக்கும் பேராற்றல், உறவுகளுடன் இணக்கமான சூழ்நிலையை கடைபிடிக்கும் வல்லமை, தனித்துவம் வாய்ந்த செயல்பாடுகள், அனைவருக்கும் பயனுள்ள வாழ்வை சுவீகரித்தல் என்ற வகையில் தன்னிறைவான யோக வாழ்வை பெற்று நலம் பெறுவார்கள்.

 குறிப்பு :

கன்னிராசியில் "அஸ்தம்" நட்சத்திரத்தை தனது ஜென்ம நட்ஷத்திரம் அல்லது லக்கினமாக பெற்ற அன்பர்கள், அதிர்ஷ்டத்தையும் ஆளுமை திறனையும் ஒருங்கே அமையப்பெற்றவர்கள், ஆட்சி பணியில் நேர்மையை கடைபிடிக்கும் நல்லவர்கள், உண்மை சத்தியம் போன்ற உயர் குணங்களை பிறவியிலே பெற்று இருப்பார்கள், விவசாயம் மற்றும் இயற்க்கை வளம், இயற்க்கை மருத்துவம், ஜோதிடம் வாஸ்து சாஸ்திரம், படைப்பு திறன் அறிவாற்றல் கற்பனை வளம் இயல் இசை நாடகம் போன்ற துறைகளில் நன்மைகளை பெறுவதுடன், எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாக திகழ்வார்கள், எதிரிகள் வழியிலான நன்மைகளையும், பொதுமக்கள் செல்வாக்கில் நிலையான வெற்றிகளையும் சுவீகரிப்பார்கள்,  இவர்களது வளர்ச்சி அதிர்ஷ்டகரமாக அமையும், வாழ்வை மற்றவர்களுக்கும் பயனுள்ள வாழ்வாக வாழ்வது என்பதை பற்றியும், அனைவரையும் அனுசரித்து வாழும் வல்லமையும் இவர்களுக்கு ஒருங்கே அமையப்பெற்று இருக்கும், பொதுநலம் என்பது இவர்களது வாழ்வை மேம்பட செய்யும், மேற்சொன்ன  (சோட்டானிக்கரை) "பகவதியம்மன் அம்மன் ஆலய" வழிபாடு இவர்களது வாழ்வில் ராஜயோகத்தை தன்னிறைவாக வாரி வழங்கும் என்பதுடன் பொருள் ஆதாயத்தையும் அதிகார பதவிகளையும் முழுமையாக பெறுவார்கள் என்பதில் மாற்று கருத்துக்கு இடம் இல்லை அன்பர்களே ! 

ஜோதிடன் வர்ஷன் 

9443355696

ஞாயிறு, 4 பிப்ரவரி, 2024

கன்னிராசி உத்திரம் நட்சத்திரம் - ராஜயோக வாழ்வை தரும் ரகசிய இறைவழிபாடு!

 


கன்னிராசி "உத்திரம்" நட்சத்திரம் பொறுமையின் பிறப்பிடமாகவும், நிர்வாக திறனில் தனித்தன்மையுடன் இயங்கசெய்யும் அற்புத நட்சத்திரம், சவால்கள் அனைத்தையும் தனது நிர்வாக வல்லமையால் வெற்றிகொள்வார்கள், தனது சிந்தனை திறனையும் செயல்பாடுகளையும் மற்றவர்கள் அறியா வண்ணம் லட்சியங்களை வெற்றிகொள்ளும் யோகம் உண்டு, ரகசியமான கலைகளில் நல்ல தேசியும், புகழ் மிக்க பொறுப்புகளை குறுகிய காலத்தில் சுவீகரிக்கும் யோகமும் உண்டாகும், தெளிவான சிந்தனை, முற்போக்கு செயல்பாடுகள், எந்த பொருளையும் பன்மடங்கு விருத்தி செய்யும் வல்லமை, சிறிதாக ஆரம்பித்து வெகு விரைவில் சாம்ரஜ்ஜியத்தை கட்டமைக்கும் நிர்வாக வல்லமை, எதிரிகளுக்கு சிம்மசொப்பனம், தனது காரியத்தில் கண்ணும் கருத்துமாக நின்று சாதிக்கும் யோகம், சிறந்த பொருளாதார திட்டமிடுதல்கள், சார்ந்து இருப்போர் அனைவரையும் காப்பாற்றும் யோகம், உறவுகள் மற்றும் நண்பர்கள் வழியிலான நன்மைகளை முழுமையாக பெறுதல், பல தொழில் செய்யும் யோகம், விவசாயத்தில் சாதனை படைக்கும் வழிமுறைகளை கையாளும் யோகம், தொலைநோக்கு பார்வை, மண் மற்றும் பூமியை பற்றிய நுண்ணறிவு, வாஸ்து கலையில் அதீத புலமை, இயற்க்கை மருத்துவத்தில் உணவு சம்பந்தப்பட்ட துறையில் அதீத வெற்றிவாய்ப்புகள், மற்றவர் நோய் தீர்க்கும் தனித்திறன் அல்லது கைராசி, புலனுக்கு அப்பாற்பட்ட அறிவாற்றல் என்ற வகையில் சிறப்புகளை தரும், இவர்களது  தமது வாழ்வில் சகலவிதமான சௌபாக்கியமும், உடல் நலம் மனோவலிமை, கல்வியில் மேன்மை, தொழில் விருத்தி, புத்திரபாக்கியம், பொருளாதார வளர்ச்சி என்றவகையில் பரிபூரணமான சுகபோகங்களையும், தன்னிறைவாக சுவீகரிக்க, மிக எளிமையான ரகசிய இறைவழிபாடு என்பது கீழ்கண்டவாறு அமையும். 

தலச்சேரியில் இருந்து 8 கிமீ தொலைவில் அமைந்துள்ள "கதிரூர் சூரிய நாராயணா கோயில்" உத்திரம் நட்சத்திரம் கன்னி ராசி அன்பர்களுக்கு ஆளுமை திறனையும் அதிர்ஷ்ட வாய்ப்புகளையும் தன்னிறைவாக வாரி வழங்கும் திருக்கோவிலாகும், அகஸ்திய மகா முனிவர் "ஆதித்ய ஹிருதயமந்திரத்தை"  3முறை பாராயணம் செய்து ராவணனை வெற்றிகொள்ள "பகவான் ராமருக்கு" கொடுத்த திருத்தலம்.

 "சூரியனின் தேசம்" என்பதின் சுருக்கம் கதிரூர் அல்லது கதிரவபுரம், வளர்பிறை ஞாயிற்று கிழமை அன்று காலை சூரிய ஹோரையில் செம்பருத்தி மாலை மற்றும் சிகப்பு வர்ண பட்டாடை சாற்றி வழிபடும் கன்னி ராசி உத்திர நட்சத்திர அன்பர்களுக்கு, சிறந்த நிர்வாக திறனையும் அகிலம் போற்றும் ஆளுமை திறனையும் வாரி வழங்குவார், எதிரிகளை வெற்றி கொள்ளவும், மாந்திரீகம் சூனியம் செய்வினை கோளாறுகள் வழியிலான துன்பங்களை நீக்கவும், அரசுதுறையிலான பணிகளில் வெற்றி பெறவும், அரசியல் ரீதியான வளர்ச்சிகளை பெறவும், தலைமை பொறுப்புகளை வென்று நிலையான ஆட்சி செய்யவும் வல்லமையை தருவார், தொழில் ரீதியான இன்னல்களை சந்தித்து கொண்டு இருக்கும் அனைத்து அன்பர்களுக்கு இந்த திருத்தலம் மிகப்பெரிய மாற்றங்களையும், அபரிவிதமான வளர்ச்சியினையும் மிகப்பெரிய அளவில் வாரி வழங்கும், எதிர்ப்புகளை கண்டு அஞ்சாமல் போட்டி பந்தயங்களில் மிகப்பெரிய வெற்றிகளையும், தன்னிறைவான யோக வாழ்க்கையையும் நிச்சயம் பெறுவார்கள், எதிராளிகள் இவர்களது அசுர பலத்தை கண்டு அச்சமுறும் தன்மையை தரும், அனைத்திலும் வெற்றி கல்வி கேள்விகளில் புகழ், கலைத்துறையில் சாதனை, யாரையும் சார்ந்து வாழாமல் தனித்து நின்று போராடி வெற்றி பெறுதல், பொதுமக்கள் ஆதரவு, நீதி நேர்மை கடமை கண்ணியம் போன்ற உயரிய குணங்களை சுவீகரித்தல், சத்தியத்தையும் உண்மையையும் பாதுகாத்தல், சாஸ்திர ஞானம், தவவாழ்வில் முக்தியை பெறுதல் என்ற வகையில் மிகப்பெரிய சுபயோகங்கள் உண்டாகும்.

வருடம் ஒருமுறை  "கதிரூர் சூரிய நாராயணா கோயில்" சென்று வரும் கன்னி ராசி உத்திர நட்ச்சத்திர அன்பர்கள் தமது வாழ்வில் தனித்துவமான சாம்ராஜ்யத்தை நிறுவி சாதனை புரியும் வல்லமையை பெறுவார்கள், கல்வி உயர்கல்வி, வேலை தொழில் , காதல் வெற்றி திருமணயோகம், ஆண்வாரிசு, பொருளாதார தன்னிறைவு, எதிர் பாரத சுபயோகங்கள், திடீர் அதிர்ஷ்டம், முற்போக்கு சிந்தனை, தெய்வீக தரிசனம், மூதாதையர் சொத்துக்கள் மிக எளிதாக சுவீகரிக்கும் வல்லமை, இந்தியாவின் உயரிய ஆட்சி பணிகளை பதவிகளை மிக எளிதாக சுவீகரித்தல், புதிய சிந்தனை புதிய மாற்றங்கள் என வாழ்க்கையில் சகல நிலைகளில் இருந்தும் முழுமையான சுபயோகங்களை வாரி வழங்கும் யோகம், தனது துறை சார்ந்த ஞானம் அல்லது தான் செய்யும் தொழில் வழியிலான உச்ச நிலையை அடைதல், என்ற வகையில் சிறப்புகளை தரும்.

குறிப்பு :

கன்னிராசியில் "உத்திரம்" நட்சத்திரத்தை தனது ஜென்ம நட்ஷத்திரம் அல்லது லக்கினமாக பெற்ற அன்பர்கள், பரோபகரமான ஆளுமை திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் மிக்கவர்கள், ஆட்சி பணியில் நேர்மையை கடைபிடிக்கும் நல்லவர்கள், உண்மை சத்தியம் போன்ற உயர் குணங்களை பிறவியிலே பெற்று இருப்பார்கள், விவசாயம் மற்றும் இயற்க்கை வளம், இயற்க்கை மருத்துவம், ஜோதிடம் வாஸ்து சாஸ்திரம், படைப்பு திறன் அறிவாற்றல் கற்பனை வளம் இயல் இசை நாடகம் போன்ற துறைகளில் நன்மைகளை பெறுவதுடன், எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாக திகழ்வார்கள், எதிரிகள் வழியிலான நன்மைகளையும், பொதுமக்கள் செல்வாக்கில் நிலையான வெற்றிகளையும் சுவீகரிப்பார்கள்,  இவர்களது வளர்ச்சி அசுர வேகத்தில் அமையும், வாழ்வை எவ்வாறு சிறப்பாக வாழ்வது என்பதை பற்றியும், அனைவரையும் அனுசரித்து வாழும் வல்லமையும் இவர்களுக்கு ஒருங்கே அமையப்பெற்று இருக்கும், பொதுநலம் என்பது இவர்களது வாழ்வை மேம்பட செய்யும், மேற்சொன்ன "கதிரூர் சூரிய நாராயணா கோயில்"வழிபாடு இவர்களது வாழ்வில் ராஜயோகத்தை தன்னிறைவாக வாரி வழங்கும் என்பதுடன் அரசியல் ஆதாயத்தையும் முழுமையாக பெறுவார்கள் என்பதில் மாற்று கருத்துக்கு இடம் இல்லை அன்பர்களே ! 

ஜோதிடன்வர்ஷன் 

9443355696

செவ்வாய், 3 ஜூலை, 2012

கன்னி லக்கினத்தில் ராகு அல்லது கேது அமர்ந்தால் தரும் பலன்கள் !



கன்னி லக்கினத்தில் ராகுவோ அல்லது கேதுவோ அமரும்பொழுது  ஜாதகருக்கு தரும் பலன்களை பற்றி இனி காண்போம் ! ஜாதகருக்கு நீடித்த ஆயுளும், சுயமாக முன்னேற்றம் பெரும் வாய்ப்பு அதிகம் உண்டு , நல்ல உடல் ஆரோக்கியம் ஜாதகருக்கு சிறு வயது முதல் அமைந்து விடும் , ஜாதகருக்கு இயற்கையாக நல்ல குணம் , பெருந்தன்மையான மனம் , மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை , தனது பெற்றோர்கள் ஆதரவுடன் வளரும் சூழ்நிலை , நிறைவான அடிப்படை கல்வி , கலைகளில் ஆர்வம் , விளையாட்டு துறைகளில் சிறந்து விளங்கும் தன்மை , மற்றவர்களின் முழு ஆதரவு , பெரியவர்களிடம் நன்மதிப்பு , அறிவார்ந்த செயல்களால் மற்றவரை திரும்பி பார்க்க வைக்கும் திறன் என ஜாதகருக்கு மிகசிறந்த நன்மைகளை மட்டும் வாரி வழங்கும் .

வாழ்க்கையில் அடிக்கடி சிறு சிறு அதிர்ஷ்டங்கள் ஜாதகருக்கு வந்து கொண்டே இருக்கும் , ஜாதகரும் அதை தவறாமல் பயன்படுத்தி முன்னேற்றம் பெற்று கொண்டே இருப்பார் , மேலும் இயற்கையாக சொத்து சுகம் அமைய பெற்ற ஜாதகர் , மற்றவர் உதவி இன்றி வாழ்க்கையில் தனி ஆளாக நின்று எந்த ஒரு காரியத்தையும் ஜெயிக்கும் தன்மை கொண்டவர் , இதனால் ஜாதகருக்கு நிறைய எதிர்ப்புகளையும் , எதிரிகளையும் சந்திக்க வேண்டி வரும் ,மனதில் எண்ணிய காரியங்கள் அனைத்தையும் செய்து முடிக்கும் பேராற்றல் கொண்டவர்கள் , இதில் ஜாதகர் கவனிக்க வேண்டியது, யாரிடமும் பகைமை பாராட்டாமல்  இருப்பது அவசியம். இல்லை எனில் மற்றவர்களால் ஜாதகர் செய்யும் அனைத்து காரியங்களும் தோல்வியை தழுவ நேரிடலாம் , விட்டு கொடுக்கும் மன பான்மையும் , ஜீவ காருண்யமும் ஜாதகருக்கு அவசியம் தேவை , மேலும் தனது உடலை கெடுக்கும் எந்த தீய பழக்க வழக்கங்களுக்கும் அடிமையாகமால் ஜாதகர் இருப்பது மிக மிக  முக்கியம் .

இவர்களுக்கு நல்ல நண்பர்கள் அதிகம் வாய்ப்பதில்லை , அப்படியே வாய்த்தாலும் பாதியிலேயே நட்பு முறிவு ஏற்ப்பட்டு விடுகிறது , அவர்களால் ஜாதகர் அதிக மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டிய சூழ்நிலை அதிகம் ஏற்ப்படுகிறது , எதிர் பாலினரிடம் அதிக கவனமாக பழகுவது அவசியம் இல்லை எனில் வாழ்க்கையில் அதிக துன்பத்திற்கும் , மன போராட்டத்திற்கும் ஆளாக வேண்டி வரும் , மன நிம்மதி இழப்பு , தற்கொலை செய்து கொள்ளும் மன நிலை , முட்டாள் தனமாக ஏதாவது மற்றவர்களுக்காக செய்து விட்டு வாழ்நாள் முழுவதும் கண்ணீர் சிந்தும் நிலை என நண்பர்களும் ,
எதிர் பாலினரும் ஜாதகரை அதிகம் சோதனை செய்வார்கள் , இதனால் பாதிக்க படுவது என்னவே? இந்த கன்னி லக்கினத்தை சார்ந்தவர்கள் மட்டுமே , இவர்களின் சிரமங்களை மனதுக்குள் ரசிக்கும் மனம் கொண்ட நண்பர்கள் அமைவது ஜாதகருக்கு பெரிய இழப்பே , ஆகவே முன் எச்சரிக்கையாக யாரிடம் பழகினாலும், ஒரு எல்லைக்குள் அவர்களை நிறுத்தி விடுவதும் , தனது சுய விபரங்கள், சுய விஷயங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பதே சாலசிறந்தது , நண்பர்கள் கூட்டாளிகள் விஷயத்தில் ஜாதகர் அதிக எச்சரிக்கை உடன் பழகுவது அவசியம் . இல்லை எனில் பாவம் ஒருபக்கம் பலி உங்கள் பக்கம் வரும் என்பது மறுக்க முடியாத உண்மை .

கன்னி லக்கினத்தில் அமரும் ராகுவோ அல்லது கேதுவோ ஜாதகருக்கு நல்ல உடல்நிலை , சிறந்த அடிப்படை கல்வி , நல்ல சூழ்நிலையில் வளரும் யோகம் , அனைவராலும் விரும்பப்படும் குணம் , வெற்றிகரமான தொழில் வளர்ச்சி , செல்லும் இடங்களில் எல்லாம் சிறப்பு , வெளிநாடுகளில் வசிக்கும் தன்மை அதனால் வரும் யோக அமைப்பு , பரம்பரை சொத்துகளை தன்வசம் பெரும் அமைப்பு , பல தொழில் புரியும் ஆற்றல் ,நல்ல ஞானம் , சிறப்பான சிந்தனை ஆற்றல் , என்றும் இளமை மாறாதா தோற்றம் , எடுக்கும் காரியங்களில் வெற்றி , சிறந்த செல்வ வளம் என 100 சதவிகித நன்மையான பலனையே லக்கினத்திற்கு வாரி வழங்குவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை .

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696