புனர்பூசம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புனர்பூசம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 24 டிசம்பர், 2023

கடகராசி புனர்பூசம் நட்சத்திரம் - ராஜயோக வாழ்வை தரும் ரகசிய இறைவழிபாடு!

 

 கடகராசி "புனர்பூசம் நட்சத்திரம்" கல்வியில் மேன்மையையும், நிர்வாக திறனில் புதுமையையும் வெளிப்படுத்தும் தனித்திறன் வாய்ந்த நட்சத்திரம், கற்றுஉணர்வதிலும் கல்வியை போதிப்பதிலும் சிறப்பான நடைமுறையை கையாளும் வல்லவர்கள், தெய்வீக சக்தி இயற்கையாக அமைந்திருக்கும், பாதுகாப்பது பராமரிப்பது இரண்டும் இவர்களுக்கு "கைவந்தகலை" நினைத்த காரியங்களை சாதிக்கும் வல்லமை பெற்றவர்கள், தொலைநோக்கு பார்வையுடன் எந்த ஓர் விஷயத்தையும் மிக சிறப்பாக அணுகுவார்கள், பொருளாதார அறிவாற்றல் அதிகம் உள்ளவர்கள், பயணங்கள் மூலம் மிகப்பெரிய தனசேர்க்கையை சுவீகரிக்கும் யோகம் பெற்றவர்கள், எண்ணத்தின் வலிமை அதிக அளவில் வெற்றிகளை பெற்றுத்தரும், களங்கமற்ற மனநிலையை பெற்றவர்கள், குழந்தை வளர்ப்பில், குடும்ப பராமரிப்பில், வாழ்க்கை துணை தேவைகளை நிறைவு செய்வதில், தாய் தந்தையர் மற்றும் பெரியோர்களை மனநிறைவு செய்து கவனித்து கொள்வதில் சிறந்தவர்கள், இவர்களது  தமது வாழ்வில் சகலவிதமான சௌபாக்கியமும், உடல் நலம் மனோவலிமை, கல்வியில் மேன்மை, தொழில் விருத்தி, புத்திரபாக்கியம், பொருளாதார வளர்ச்சி என்றவகையில் பரிபூரணமான சுகபோகங்களையும், தன்னிறைவாக சுவீகரிக்க, மிக எளிமையான ரகசிய இறைவழிபாடு என்பது கீழ்கண்டவாறு அமையும். 

அலர்மேல் மங்கை "ஸ்ரீ பத்மாவதி தாயார்"  புனர்பூசம் நட்சத்திர அன்பர்களுக்கு பரிபூர்ண நன்மைகளையும் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும் திருக்கோவிலாகும், திருமலை திருப்பதி செல்லும்பொழுது அலர்மேல் மங்காபுரம் சென்று, வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று அதிகாலை சுக்கிர ஹோரையில் ( காலை 6:00 முதல் 7:00 வரை ) வெண் வர்ண பட்டு, தாமரை மலர் மாலை சாற்றி வழிபடுவோருக்கு 10நாட்களில் வெகு சிறப்பான சுபயோக பலாபலன்கள் நடைமுறைக்கு வரும் என்பது உறுதி, புனர்பூசம் நட்சத்திர அதிபதி தேவர்களின் தாயான "அதிதி" என்பதால் "ஸ்ரீ பத்மாவதி தாயார்" கடகராசியில் புனர்பூச நட்சத்திரத்தில் உதித்த அன்பர்களின் வாழ்வில் வியக்கத்தக்க சுபயோகங்களை வாரிவழங்குவார், தாயாரின் தரிசனமும் வழிபாடும் புனர்பூசம் நட்சத்திர அன்பர்களுக்கு நிலையான சௌபாக்கியங்களை நல்கும், சிறந்த அறிவுத்திறனும், பொருளாதார முன்னேற்றமும், இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சியும், திருமண வாழ்வில் கணவன் மனைவி ஒற்றுமையும், குழந்தை பாக்கியமும், புகழ்மிக்க பொறுப்புகளை அலங்கரிக்கும் யோகமும் உண்டாகும். 

 அரசியல் ரீதியான நிர்வாகம், அரசு பதவிகள், அரசு சம்பந்தப்பட்ட தொழில்களில் தங்களுடைய பங்களிப்பை வெற்றிகரமாக வழங்கும் வலிமை பெற்றவர்கள், நிர்வாகத்தில் தனது தனித்துவமான செயல்பாடுகள் மூலம் வியக்கத்தக்க வெற்றிகளை பெறுபவர்கள், கல்வி நிலையங்கள், கல்லூரிகள், விளையாட்டு துறையில் மாணவர்களின் சிறப்பு திறன் உணர்ந்து அவர்களை சரியான பாதையில் வழிநடத்தும் வல்லமை பெற்றவர்கள், உணவு பொருள் சம்பந்தப்பட்ட ஞானமும், உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட முழுமையான புரிதலும் கொண்டவர்கள், ஒருவரை உடல் ரீதியாகவும் மனோ ரீதியாகவும் பண்பட்டவர்களாக மாற்றும் வல்லமை பெற்றவர்கள். அன்பு, பாசம், கருணை மனம்  கொண்டு அனைவரையும் அனுசரித்து செல்வதில் இவர்களுக்கு நிகர் இவர்களே என்றால் அது மிகையாகாது, எந்த ஒரு சூழ்நிலையிலும் தனது சுயகட்டுப்பாட்டையும், கடமை கண்ணியத்தையும் விட்டுக்கொடுக்காமல் மற்றவர்களுக்கு முன் உதாரணமாக வாழும் யோகம் பெற்றவர்கள் கடகராசி புனர்பூச நட்ச்சத்திர அன்பர்கள், தெய்வீக அனுக்கிரகமும் பல புண்ணிய திருத்தலங்களுக்கு மிக எளிதாக சென்றுவரும் யோகமும், ஆன்மீக பெரியோர்களின் பரிபூரண நல்லாசிகளை மிக எளிதாக சுவீகரிக்கும் யோகமும் இவர்களுக்கு இறைஅருள் வழங்கிய நன்கொடையாகும்.

 குறிப்பு :

கடகராசியில் "புனர்பூசம்" நட்சத்திரத்தை தனது ஜென்ம நட்ஷத்திரம் அல்லது லக்கினமாக பெற்ற அன்பர்கள்,நிர்வாக துறையில் மிகப்பெரிய உச்சத்தை தொடும் யோகம் உண்டு, கலை மற்றும் கல்வியில் நிச்சய வெற்றிபெறுவார்கள், திடீர் தனயோகம் அதிர்ஷ்ட வாய்ப்புகள், கமிஷன் தொழில், ஏற்றுமதி இறக்குமதி தொழில் வழியிலான லாபங்கள், நிர்வாக திறமை கொண்டு அரசு ஆதாயம் பெரும் வல்லமை, எதிர்பாராத செல்வாக்கு, பொது சேவையை செய்வதின் வழியில் வரும் புகழ்மிக்க பொறுப்புகள், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, தெய்வீகஅனுகூலம், தன்னிறைவான பொருளாதார முன்னேற்றம் என்ற வகையில் மிகுந்த சுபயோக பலாபலன்களை சுவீகரிக்க, மேற்சொன்ன இறை வழிபாடு இவர்களது வாழ்வில் ராஜயோகத்தை தன்னிறைவாக வாரி வழங்கும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை அன்பர்களே ! 

ஜோதிடன்வர்ஷன் 

9443355696

சனி, 16 டிசம்பர், 2023

மிதுனராசி புனர்பூசம் நட்சத்திரம் - ராஜயோக வாழ்வை தரும் ரகசிய இறைவழிபாடு!



" புனர்பூசம் நட்சத்திரம் " உயர்ந்த லட்சியங்கள் மற்றும் குறிக்கோள்களை மிக சிறப்பாக வென்றெடுக்கும் வலிமை வாய்ந்த நட்சத்திரம், நோக்கமும் செயலும் இலக்கை நோக்கி சரியாக பாயும் யோகம் பெற்றவர்கள், அர்ச்சுனனின் காண்டீபத்தில் இருந்து வெளிப்படும் அம்புபோல் சென்றடையும் செயல்திறன் பெற்றவர்கள், தெய்வீகத்தில் ஆன்மீகத்தில் அதீத ஈடுபாடும், தலைமை பொறுப்பேற்கும் யோகமும், பல இடங்களுக்கு சென்று தனது திறமையை நிரூபிக்கும் வல்லமை பெற்றவர்கள், தனது ஆழ்ந்த அறிவாற்றல் அனைவருக்கும் பயன்தரும் விதத்திலான செயல்களை செய்து புகழ் பெறுவார்கள், மனம் உடல் செயல் மூன்றிலும் ஸ்திரத்தன்மையான செயல்பாடுகளை பிரயோகம் செய்யும் அன்பர்கள், எதிர்கால திட்டமிடுதல்கள், உயரிய நோக்கம், வித்தையில் தேர்ச்சி, எதிலும் வெற்றி, எடுத்துக்கொண்ட காரியங்களில் கண்ணும் கருத்துமாக செயல்படுவது, பொறுப்புகளை மிக சிறப்பாக நிர்வகிக்கும் வல்லமை, பழமொழிகளை கற்றுணர்ந்து புலமை பெறுவது, பல தேசங்கள் சென்றுவரும் யோகம், பயணங்கள் வழியிலான வளர்ச்சி மற்றும் பொருளாதார முன்னேற்றங்களை தன்னிறைவாக சுவீகரிப்பார்கள், இவர்களது  தமது வாழ்வில் சகலவிதமான சௌபாக்கியமும், உடல் நலம் மனோவலிமை, கல்வியில் மேன்மை, தொழில் விருத்தி, புத்திரபாக்கியம், பொருளாதார வளர்ச்சி என்றவகையில் பரிபூரணமான சுகபோகங்களையும், தன்னிறைவாக சுவீகரிக்க, மிக எளிமையான ரகசிய இறைவழிபாடு என்பது கீழ்கண்டவாறு அமையும். 

"சமயபுரம் மாரியம்மன்"  புனர்பூசம் நட்சத்திர அன்பர்களுக்கு பரிபூர்ண நன்மைகளையும் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும் திருக்கோவிலாகும், வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று அதிகாலை சுக்கிர ஹோரையில் ( காலை 6:00 முதல் 7:00 வரை ) சிகப்பு வர்ண பட்டு, மல்லிகை மலர் மாலை சாற்றி வழிபடுவோருக்கு 30நாட்களில் வெகு சிறப்பான சுபயோக பலாபலன்கள் நடைமுறைக்கு வரும் என்பது உறுதி, புனர்பூசம் நட்சத்திர அதிபதி தேவர்களின் தாயான "அதிதி" என்பதால் தாய் வழிபாட்டின் முதன்மையான இடமான "சமயபுரம் மாரியம்மன்" புனர்பூசம் நட்சத்திர அன்பர்கள் வாழ்வில் சுபயோகங்களையும், நன்மைகளையும் முழுமையாக வாரி வழங்குவார்கள் என்பதில் சந்தேகமில்லை, குறிப்பாக கலைகளில் தேர்ச்சி கல்வியில் மேன்மை, படைப்பு திறன், பலதொழில் செய்யும் யோகம், அயல் தேச பயணங்கள் வழியிலான வெற்றி வாய்ப்புகள், தொல்லியல் மற்றும் சுற்றுலாதுறையில் புகழ் மிக்க பொறுப்புகள், கற்பனை வளம், இயல் இசை நாடகம் அல்லது எழுத்து பணியில் சாதனை புரியும் வாய்ப்பு என புனர்பூசம் நட்சத்திர அன்பர்களின் வாழ்வில் வியக்கத்தக்க மாற்றங்கள் நடைமுறைக்கு வரும் என்பது கவனிக்கத்தக்கது.

 வியாபார துறையில் மிகப்பெரிய வெற்றி வாய்ப்புகள், பொதுமக்கள் தொடர்புடைய பணிகளில் சிறப்பான செயல்பாடுகள், பொது வாழ்வில் புகழ்மிக்க பொறுப்புகளை மிக எளிதாக சுவீகரிக்கும் யோகம், அமைதியை நிலைநாட்டும் ஆளுமை திறன், பொறுப்புணர்வுடன் செயல்பட்டு குடும்பநலன் காப்பது, உறவுகளை மிகச்சிறப்பாக வசீகரித்து தமது காரியங்களை சாதிப்பது, திருப்திகரமான செயல்பாடுகள் மூலம் மனநிறைவு பெறுதல், போதும் என்ற மனநிலை, பேச்சு திறன் மூலம் வாழ்வின் முன்னேற்றத்தை வெகு சிறப்பாக நிலைநிறுத்திக்கொள்ளும் யோகம், தெய்வீக சிந்தனை, வருமுன்  காக்கும் தன்மை, நிறைவான வாழ்வை குறைவின்றி வாழும் யோகம், சரியான வழிகாட்டுதல்கள், பொது சேவையை சிறப்பாக செய்து அதன்வழியில் அரசியல் அதிகார பதவிகளை வெற்றிகொள்ளுதல், புகழ் மிக்க பொறுப்புகளை மிக எளிதாக சுவீகரித்தல், அனைத்தையும் அடையும் மனவலிமை, ஞானம் மற்றும் அறிவார்ந்த செயல்பாடுகள், பொதுஅறிவு திறன், கல்வியில் வெற்றி, அரியகலைகளில் தேர்ச்சி, ஆட்சிப்பணி சம்பந்தப்பட்ட கல்வியில் மிகப்பெரிய சாதனை படைக்கும் பேராற்றல், எந்த ஒரு விஷயத்தையும் மிக நுணுக்கமாக அணுகும் வல்லமை, புன்னகை மாறாத பேச்சு திறன், நகைசுவை உணர்வுடன் மற்றவரை மகிழ்விக்கும் வல்லமை, எதிர்ப்புகளை கண்டு அஞ்சாமல் வெற்றிநடை போடும் யோகம் என்றவகையில் சிறப்பான நன்மைகளை வாரி வழங்கும்.

குறிப்பு :

மிதுனராசியில் "புனர்பூசம்" நட்சத்திரத்தை தனது ஜென்ம நட்ஷத்திரம் அல்லது லக்கினமாக பெற்ற அன்பர்கள், விளையாட்டு துறையில் மிகப்பெரிய உச்சத்தை தொடும் யோகம் உண்டு, போட்டி பந்தயங்களில் நிச்சய வெற்றிபெறுவார்கள், திடீர் தனயோகம் அதிர்ஷ்ட வாய்ப்புகள், கமிஷன் தொழில், ஏற்றுமதி இறக்குமதி தொழில் வழியிலான லாபங்கள், தொழில் திறமை கொண்டு அரசு ஆதாயம் பெரும் வல்லமை, எதிர்பாராத செல்வாக்கு, பொது சேவையை செய்வதின் வழியில் வரும் புகழ்மிக்க பொறுப்புகள், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, தெய்வீகஅனுகூலம், தன்னிறைவான பொருளாதார முன்னேற்றம் என்ற வகையில் மிகுந்த சுபயோக பலாபலன்களை சுவீகரிக்க, மேற்சொன்ன இறை வழிபாடு இவர்களது வாழ்வில் ராஜயோகத்தை தன்னிறைவாக வாரி வழங்கும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை அன்பர்களே ! 

ஜோதிடன்வர்ஷன் 

9443355696