திங்கள், 3 நவம்பர், 2014

" மறைந்த புதன் நிறைந்த கலை " என்பதற்கு ஏற்ப சுய ஜாதகத்தில் புதன் பலன் தருமா ?



 கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 6ம் பாவகமாக வருவது கன்னி ராசி இதன் அதிபதி புதன், இங்கு புதன் ஆட்சி மற்றும் உச்ச நிலையை பெறுகிறார், மேலும் உபய மண் தத்துவ அமைப்பை கன்னி ராசி பெறுகிறது, பொதுவாக ஒருவரது சுய ஜாதகத்தில் 6ம் பாவகத்தை மறைவு ஸ்தானமாக பாவிப்பார்கள், மேலும் 6ம் பாவகம் சத்ரு ஸ்தானமாக வர்ணிப்பதும் உண்டு, சுய ஜாதகத்தில் ஒருவரின் 6ம் பாவகம் வலிமை பெரும் பொழுது ஜாதகர் 6ம் பாவக வழியில் இருந்து அபரிவிதமான நோய் எதிர்ப்பு சக்தியையும், பங்கு பெரும் போட்டி பந்தையங்களில் எதிர்பாராத வெற்றியையும், எதிரிகளின் சதியை முறியடிக்கும் அபரிவிதமான ஆற்றலையும், வழக்குகளில் பெரும் வெற்றியையும் குறிக்கும், மேலும் ஜாதகர் அரியகலைகளில் அபரிவிதமான அறிவு திறனையும், செயல் திறனையும் வாரி வழங்கும், இந்த விஷயம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 6ம் பாவகமாக கன்னி ராசி வருவதாலும், இங்கே உபய மண் தத்துவம் சிறப்பாக செயல்பட்டு, புதன் ஆட்சி உச்சம் பெறுவதாலும் " மறைந்த புதன் நிறைந்த கலை " என்ற வாக்கு பொருத்தமானதாகவே இருக்கும் என்று ஜோதிடதீபம் கருதுகிறது.


ஒருவரின் சுய ஜாதகத்தில் புதன் 6ம் பாவகத்தில் அமர்வது அந்தஜாதகருக்கு பலவகையான தனி திறமைகளை வாரி வழங்கி விடுகிறார் ( 6ம் பாவகம் நல்ல நிலையில் வலிமை பெற்று இருந்தால் மட்டுமே இது சாத்தியம் ) மேலும் ஜாதகருடன் தொடர்பில் இருக்கும் அவரது நண்பர்கள்,உறவுகள், எதிர்பாலினரின் தன்மையை தெளிவாக தெரிவிப்பது, ஜாதகரின் 6ம் பாவகமே, மேலும் ஜாதகரின் சூட்சம அறிவாற்றலை மேம்படுத்தும் தன்மை இந்த ஆறாம் பாவகத்திர்க்கே உண்டு என்பதால், நுண்ணறிவுக்கு அதிபதியான புதன் இங்கு வலிமை பெரும் பொழுது ஜாதகரின் சிந்தனை,அறிவாற்றல்,செயல்பாடுகள் அனைத்தும் மற்றவர்கள் மெச்சும் வண்ணம் மிகவும் சிறப்பாக அமையும் என்பதை யாராலும் மறுக்க இயலாது, சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற 6ம் பாவகத்தில் அமரும் புதன் ஜாதகருக்கு தனது வழியில் இருந்து எவ்வித யோகங்களை வழங்குகிறார், என்பதை இனி சிந்திப்போம்.

6ம் பாவகம் சர ராசியாக இருப்பின் ஜாதகரின் செயல்பாடுகள் அனைத்தும் துரித கதியில் மிக சிறப்பாக செயல்படும், 6ம் பாவகம் ஸ்திர ராசியாக இருப்பின் ஜாதகரின் செயல்பாடுகள் அனைத்தும் மிக நிதானமாக ஸ்திர தன்மையுடன் நீண்ட நாட்கள் பலன் தரும் அமைப்பில் செயல்படும், 6ம் பாவகம் உபய ராசியாக இருப்பின் ஜாதகரின் செயல்பாடுகள் அனைத்தும் தனக்கும் மற்றவருக்கும் குறுகிய காலத்திற்கு மட்டும் பலன்தரும் அமைப்பை தரும், இந்த விஷயம் சுய ஜாதகத்தில் அவரவர் லக்கினத்திற்கு ஏற்ப சில மாறுபட்ட பலன்களை தந்த போதிலும், அதிக சதவிகிதம் பொருத்தமாகவே இருக்கின்றது.

மேலும் 6ம் பாவகம் ஜாதகருக்கு நெருப்பு தத்துவமாக இருப்பின் ஜாதகருக்கு அரிய கலைகளில், போர் முறைகள் சார்ந்த விசயங்களில் ஞானம் உண்டாகும், எதிரிகளை தாக்கும் சூட்சம கலைகளில் சிறந்து விளங்குவார்கள், குறிப்பாக வில் அம்பு எய்தல், துப்பாக்கி சுடுதல், ரகசிய போர் முறைகளை அறிந்து வைத்திருக்கும் ஆற்றல், வீரம் சார்ந்த ரகசிய கலைகளில் அபரிவிதமான தேர்சியை தரும், தற்காப்பு கலைகளில் சிறந்து விளங்கும்  வல்லமை ஜாதகருக்கு மிக எளிதாக கைவர பெறுவார், நெருப்பு தத்துவத்துடன் 6ம் பாவகத்தில் வலிமை பெரும் புதன் ஜாதகருக்கு மேற்கண்ட யோக பலன்களை வாரி வழங்கி விடுவார்.

6ம் பாவகம் மண் தத்துவமாக இருப்பின் ஜாதகர் மருத்துவ கலையில் சிறந்து விளங்குவார் , ஒருவரை பார்த்த உடனே அவரின் உடல் நிலையை மிக சிறப்பாக புரிந்து கொள்ளும் ஆற்றல் இருக்கும், மருத்துவத்தில் குறிப்பாக சித்த மருத்துவத்தில் சிறந்து விளங்கும் தன்மையை தரும், பல மூலிகை ரகசியங்களை அறிந்திருக்கும் பலரது ஜாதகங்களில் இந்த அமைப்பு இருப்பதை பார்க்க முடிகிறது, மேலும் சித்த மருத்துவ முறையில் சிறந்த வைத்திய  ரகசியங்களை அறிந்துகொள்ளும் யோகத்தையும் இங்கு அமரும் புதன் வாரி வழங்கி விடுகிறார்.

6ம் பாவகம் காற்று தத்துவமாக இருப்பின் ஜாதகருக்கு கணிதம்,ஜோதிடம்,எதிர்காலத்தை  துல்லியாமாக கணிதம் செய்யும் அனைத்து ஜோதிட கலைகளிலும் அபரிவிதமான ஞானத்தையும், தெளிவான கலை நுணுக்கத்தையும் வழங்குகிறது, மேலும் எண்கணிதம், ஜோதிடம், வாஸ்து போன்ற  கலைகளில் சிறந்து விளங்கும் யோகத்தை தருகிறது, மேலும் இயல் இசை நாடகம் மற்றும் சிற்ப கலையில் சிறந்து விளங்கும் நுண் அறிவாற்றல் ஜாதகருக்கு இயற்கையாகவே கிடைத்து விடுகிறது, ஜாதகரின் அறிவாற்றல் பலரது வாழ்க்கையில் யோகங்களை வாரி வழங்கும் தன்மையை, காற்று தத்துவத்துடன் 6ம் பாவகத்தில் வலிமை பெரும் புதன் ஜாதகருக்கு வாரி வழங்கி விடுவார்.

6ம் பாவகம் நீர் தத்துவமாக இருப்பின் ஜாதகர் சிறந்த மனோதத்துவ நிபுனாராக விளங்குவார், ஜாதகரின் மனம் இந்த பிரபஞ்சத்தில் உள்ள ரகசியங்களை அறியும் தன்மையை சிறு வயதிலேயே பெற்று விடும், குறிப்பாக நல்ல மனோதத்துவ நிபுணர் தனது மனதை ஒருநிலை படுத்தி இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளின் உள்ளுணர்வுகளையும் புரிந்துகொள்ளும் வாய்ப்பை பெறுவார், சரித்திரத்தில் சில பாத்திரங்களை மிருக பாஷை அறிந்தவராக சிததரித்து இருப்பார்கள், அதற்க்கு பொருத்தமானவர்கள் என்று இவர்களை சொல்லலாம், டெலிபதி, கிரகங்களின் தன்மையை உள்ளுணர்வாக புரிந்து கொள்ளும் மன ஆற்றல் இவர்களுக்கு இயற்கையாகவே அமைந்திருக்கும், மேலும் மண்ணில் புதையுண்ட ரகசியங்களை அறிந்துகொள்ளும் தன்மையையும், பின்னல் நடக்க இருப்பதை துல்லியமாக கணித்து கூறும் வல்லமையை, நீர் தத்துவத்துடன் 6ம் பாவகத்தில் வலிமை பெரும் புதன் ஜாதகருக்கு வாரி வழங்கி விடுவார்.

மேலும் சுய ஜாதகத்தில் 6ம் பாவகத்தில் சாய கிரகமான ராகு அல்லது கேதுவோ ஆளுமை செய்து 6ம் பாவகத்தை வலிமை பெரும் தன்மையில் இருக்குமாயின், புதனின் அபரிவிதமான சக்தியை சாயா கிரகங்கள் பெற்று பன்மடங்கு அதிகரித்து தரும் என்பது குறிப்பிட தக்கது, ராகு கேதுவுடன் சேர்ந்த புதனின் தன்மை பன்மடங்காக அதிகரிக்கும், குறிப்பக கேதுவுடன் சேரும் பொழுது அபரிவிதமான அறிவாற்றலையும், ராகுவுடன் சேரும்பொழுது அளவில்லா உடல் வலிமையையும் ஜாதகருக்கு வாரி வழங்கி விடுகிறது  என்பது கவனிக்க தக்க ஒரு சிறப்பு விஷயமாக ஜோதிடதீபம் கருதுகிறது.

எனவே " மறைந்த புதன் நிறைந்த கலை " என்ற வாக்கு நிச்சயம் உண்மையானதே, இதை வேறுஒரு பதிவில் உதாரண ஜாதகம் கொண்டு உறுதி செய்வோம் அன்பர்களே.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

ஞாயிறு, 2 நவம்பர், 2014

சாதாரண மனிதன் உலக புகழ் பெறுவதிற்கு காரணம் சுய ஜாதகத்தில் உள்ள யோக நிலையா ? கடின உழைப்பா ?




 புகழ் பெற்ற ஒருவரின்  ஜாதகத்தை பார்க்கும் ஜோதிடர்கள் அனைவரும், அவரது புகழுக்கும் வெற்றிக்கும் காரணம் அவரது சுய ஜாதகத்தில் உள்ள யோக நிலையே என்று கூறுவது வாடிக்கையானதே, மேலும் அவரது ஜாதகத்தில் கிரக நிலைகள் மிக சிறப்பாக இருந்தது, அதன் காரணமாக அந்த ஜாதகர் புகழ் பெற்ற ஆன்மீக பெரியவராகவோ, நடிகராக, அரசியல் தலைவராக, சமுதாயத்தில் புகழ் மிக்க பெரிய மனிதராக வளம் பெற்றார் என்ற வாதத்தை ஜோதிடதீபம் வேறு விதாமாக பார்க்கிறது, ஏனெனில் குறிப்பிட்ட ஜாதகருக்கு சில யோக நிலை இருந்த போதிலும் அதே அமைப்பை பெற்ற சில ஜாதகங்கள் வெற்றி பெற இயலாமல் போக காரணம் ஏன் ? என்பதை பற்றி இந்த ஆய்வில் சிந்திப்போம் அன்பர்களே !

 உதாரண ஜாதகம் :


லக்கினம் : சிம்மம் 
ராசி : மகரம் 
நட்சத்திரம் : திருவோணம் 

மேற்கண்ட சிம்ம இலக்கின ஜாதகரை தமிழகத்தில் அறியாதவர்களே இல்லை  எனலாம், ஏன் ? உலக அளவில் இவர் பிரபலமான நடிகர், ஆரம்பத்தில் பேருந்தில் நடத்துனராக பணிபுரிந்து, திரைப்பட துறையில் பெரிய புகழும், வெற்றியும் பெற்று உலகத்தை தன்பால் திரும்பி பார்க்க வைத்தவர், இயற்கையில் இவரது ஜாதகம் யோகம் நிறைந்ததா ? அல்லது ஜாதகரின் கடின  உழைப்பு ஜாதகருக்கு பல வெற்றிகளையும், உலக புகழையும் தேடி தந்ததா? என்பதை பற்றி இந்த பதிவில் சிந்திப்போம் , முதலில் ஜாதகருக்கு பாவக தொடர்புகளை  பற்றி ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் .

1,3,5,7,9,11ம் வீடுகள் லாபம் மற்றும் அதிர்ஷ்ட ஸ்தானம் எனும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம், 2,4.6,8,10,12ம் வீடுகள் எதிரி ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம், ஆக இவரது ஜாதகத்தில் எந்த ஒரு திசை பலனை தந்தாலும்  சரி ஒன்று 11ம் பாவகமான லாப ஸ்தான பலனை தரவேண்டும், அல்லது 6ம் பாவகமான எதிரி ஸ்தான பலனை தர வேண்டும், இதை தவிர வேறு பாவக  பலன்கள் நடைமுறைக்கு வர வாய்ப்பில்லை, எனவே 6,11 ம் பாவக அமைப்பை காணும் பொழுது 6ம் பாவகம் ஜாதகருக்கு மகரத்தில் 290:14:45 பாகையில் ஆரம்பித்து, கும்பத்தில் 320:15:29 பாகையில் முடிவடைகிறது , இந்த மகரமும் கும்பமும் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 10ம் வீடாகவும், 11ம் வீடாகவும் வருவது கவனிக்க தக்கது, ஏனெனில் இங்கே ஜாதகருக்கு 6ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ஸ்தானம் மற்றும் லாப ஸ்தானமாக  வருவதால் கடின உழைப்பையும், நிலையான அதிர்ஷ்டத்தையும் தந்தது, சர மகர ராசி மண் தத்துவ அமைப்பில் இருந்து ஜாதகருக்கு கடின உழைப்பையும், ஸ்திர கும்ப ராசி காற்று தத்துவ அமைப்பில் இருந்து நிலையான ( ஸ்திரமான ) அதிர்ஷ்டத்தையும், வாரி வழங்கியது. இதன் காரணமாகவே ஜாதகர் தான் ஏற்று கொண்ட தொழிலை  சிறப்பாகவும் செம்மையாகவும் பணியாற்ற முடிகிறது,
    
11ம் பாவக அமைப்பை காணும் பொழுது 11ம் பாவகம் ஜாதகருக்கு மிதுனத்தில் 80:42:17 பாகையில் ஆரம்பித்து கடகத்தில் 110:14:45 பாகையில் முடிவடைகிறது. இந்த மிதுனமும் கடகமும் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு முறையே 3ம் வீடாகவும், 4ம் வீடாகவும் வருகிறது, ஜாதகருக்கு 11ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு முயற்ச்சி ஸ்தானமாகவும், சுக ஸ்தானமாகவும் வருவதால், ஜாதகருக்கு மக்கள் மத்தில் நல்ல தொடர்பு கிடைத்தது ( 3ம் பாவகம் மக்கள் தொடர்புகளை  பற்றியும் சொல்லும்) சுக ஸ்தான அமைப்பில் இருந்து  சொத்து சுக  சேர்க்கையும் மிக பெரிய தன சேர்க்கையையும் தந்தது , இதுவெல்லாம்  இந்த ஜாதகருக்கு சுய ஜாதக ரீதியாக அமைந்தது, மேலும் இந்த ஜாதகர் பாவக வழியில் இருந்து எவ்வித பாதிப்பை பெற்றார் என்பதை பார்ப்போம், சுய ஜாதக அமைப்பின் படி ஜாதகருக்கு பாதிப்பை தரும் அமைப்பு 6,12ம் பாவகங்கள் மட்டுமே, வேறு எந்த பாவகமும் ஜாதகருக்கு பாதிப்பை தரவில்லை , மேற்கண்ட பாதிப்புகள் ஜாதகருக்கு உடல் சார்ந்த அமைப்பில் மட்டுமே இருப்பதால் ஜாதகருக்கு அவை பெரிய பதிப்பை தரவில்லை, பொருளாதார வசதி ஜாதகருக்கு உடல் நலத்தை பாதுகாத்தது, ஆக ஜாதக அமைப்பில்  நல்ல யோக அமைப்புகளே இருப்பதால், ஜாதகர் வெற்றி பெற்றார் என்று எடுத்துகொள்லாமா ? முற்றிலும் இல்லை அன்பர்களே ! ஜாதகர் 11ம் பாவக  வழியில் இருந்து தனது அதிர்ஷ்டத்தை எப்படி அபிவிருத்தி செய்து கொண்டார் என்பதை இனி பார்ப்போம் .

தமிழர்களுக்கு மிகப்பெரிய குணம் ஒன்று உண்டு, அதாவது " வந்தாரை வாழவைக்கும் தமிழகம் " என்ற வார்த்தைக்கு ஏற்ப, இவரது நடிப்பிற்கும், வித்தியாசமான நடைமுறைக்கும், ஈர்க்க பட்ட மக்கள் ஜாதகரை வெகுவாக வாழ்த்த ஆரம்பித்தனர், அவர்கள் மனதில் ஜாதகர் நிரந்தரமாக கதாநாயகனாக அமர்ந்துகொண்டார், அவரது ஒவ்வொரு ரசிகனின் மனதிலும் பெரிய அளவில் உயர்ந்து நின்றார், ரசிகனின் எண்ண அலைகள் யாவும் ஒன்று சேர்ந்து ஜாதகரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது ( ரசிகன் வீட்டில் குடிப்பதற்கு கஞ்சி இல்லாமல் கிடப்பான் அது வேறு விஷயம் ஆனால் தனது தலைவன் மிகவும் நல்லவர் என்ற எண்ணம் தீர்க்கமாக இருக்கும் ) , ஜாதகர் வாழ்க்கையில் பொருளாதார ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற வைத்தது, ஆக ஜாதகரின் யோக அமைப்பும், மக்கள் செல்வாக்கும் மக்களின் எண்ண அலைகளும், அவர்களின் வாழ்த்துகளும் ஒன்று சேரும் பொழுது ஜாதகர் வெற்றிகரமாக புகழின் உச்சிக்கு மிக எளிதாக சென்று வெற்றிக்கொடி நாட்டமுடியும் என்பதே ஜோதிடதீபத்தின் கருத்து, வெற்றி பெற்ற பல மனிதர்களுக்கு பின்னல் அவர்களது ரசிகர்,தொண்டர்,பணியாளர்களின் நல்ல எண்ண அலைகளும், வாழ்த்துகளும் ஓங்கி நிற்கும் என்பதை எவராலும் மறுக்க இயலாது அன்பர்களே!.

அரசியல் தலைவர்கள், திரைப்பட நடிகர், ஆன்மீகபெரியோர், தொழில் அதிபர்கள், சமூக பெரிய மனிதர்கள் அனைவரின் புகழ் மிக்க வெற்றிக்கு பின்னல் அவர்களது தொண்டர்கள், ரசிகர்கள், பணியாளர்கள், பொதுமக்களின் எண்ண அலைகளும் , அவர்களது வாழ்த்துகளும் ஒன்று சேர்ந்தே  மேற்கண்ட நபர்களின் வெற்றியும், பொருளாதார முன்னேற்றத்தையும் அபரிவிதமாக பெற முடிகிறது,  ( சுய ஜாதகத்தில் யோக அமைப்பு இருந்த போதிலும் ) மேற்கண்ட நபர்களின் வெற்றிக்கு அவர்களது தொண்டர்கள், ரசிகர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்களின் நல்ல எண்ணங்களே , அடிப்படை காரணமாக அமைகிறது, என்ற கருத்தை இங்கே ஜோதிடதீபம் பதிவு செய்ய விரும்புகிறது.

உதாரண ஜாதகத்தை இன்னும் சற்றே ஆய்வுக்கு எடுத்து கொள்வோம் அன்பர்களே ! 

ஜாதகர் பிறந்ததில் இருந்து தற்பொழுது உள்ள வரை நடைபெறும் திசைகள் எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்று பார்ப்போம் 1

பிறப்பில் ஜாதகருக்கு சந்திரன் திசை 1,3,5,7,9,11ம் வீடுகள் லாபம் மற்றும் அதிர்ஷ்ட ஸ்தானம் எனும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களையும், 2வதாக செவ்வாய் திசை 1,3,5,7,9,11ம் வீடுகள் லாபம் மற்றும் அதிர்ஷ்ட ஸ்தானம் எனும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களையும், 3வதாக ராகு திசை 1,3,5,7,9,11ம் வீடுகள் லாபம் மற்றும் அதிர்ஷ்ட ஸ்தானம் எனும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களையும், 4வதாக குரு திசை 1,3,5,7,9,11ம் வீடுகள் லாபம் மற்றும் அதிர்ஷ்ட ஸ்தானம் எனும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களையும், 5வதாக தற்பொழுது நடைபெறும் சனி திசை 1,3,5,7,9,11ம் வீடுகள் லாபம் மற்றும் அதிர்ஷ்ட ஸ்தானம் எனும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களையும் தந்து கொண்டு இருக்கிறது, ஜாதகருக்கு தீமையை செய்யும் திசை அல்லது புத்தி என்று பார்க்கும் பொழுது சூரியன் கேது மட்டுமே அதிக தீமையை ஸ்திரமாக செய்யும் என்பது உறுதியாகிறது, எனவே ஜாதகருக்கு சிரமம் என்ற நிலை சூரியன்,கேது புத்தி,அந்தரம்,சூட்சமம் போன்ற காலங்களிலேயே நடைபெற்று இருக்கும் என்பதை ஆய்வின் மூலம் தெரிந்துகொள்ளலாம் அன்பர்களே !

பொதுவாக ஒருவரது சுய ஜாதகத்தில் 5,11ம் பாவகங்கள்  நல்ல நிலையில் இருப்பின் கலை துறையில் மிகப்பெரிய இடத்தை பெற முடியும், தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளம் இருப்பின் பெயரும் புகழும் ஜாதகருக்கு வெகு விரைவில் கிடைக்கும் இது உறுதி, 5ம் பாவகம் ஒருவரது ஜாதகத்தில் நல்ல நிலையில் இருப்பின் ஜாதகருக்கு ஆய கலைகள் 64 ல் நல்ல  புலமையும், பண்டித்தியமும் நிச்சயம் இறை அருளால் கிடைக்கும், 5ம் பாவகம் என்பது ஜாதகரின் சுய அறிவாற்றலையும் சமயோசித புத்திசாலிதனத்தையும் வெளிபடுத்தும், நவரசம் சொட்டும் முகபாவகங்கள் மிக எளிதாக கைவர பெறுவார்கள் என்பது குறிப்பிட தக்கது, மேற்கண்ட ஜாதகருக்கு 5ம் பாவகம் லாப ஸ்தானதுடன் தொடர்பு பெற்று, லாப ஸ்தானம் மிதுனம் கடகம் ராசி கலப்பில் அமைந்ததால் மேற்கண்ட புகழும் வெற்றியும், கலைத்துறையில் மிக எளிதாக பெற முடிந்தது, மேலும் 1ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு முற்போக்கு சிந்தனையும், தன்னம்பிக்கையையும் தந்தது, 3ம் பாவக வழியில் இருந்து விடாமுயர்ச்சியையும், நினைத்ததை சாதிக்கும் வல்லமையை தந்தது, 5ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு சிறப்பான நடிப்பு திறனை தந்தது, 7ம் பாவக வழியில் இருந்து பொதுமக்கள் ஆதரவையும், மக்களிடம் முகமதிப்பையும் பெற்று தந்து, 9ம் பாவக அமைப்பில் இருந்து சமுதாயத்தில் நல்ல மனிதர் என்ற பெயரை பெற்று தந்து,11ம் பாவக வழியல் இருந்து மிகப்பெரிய அதிர்ஷ்டத்தையும், யோக வாழ்க்கையையும் வாரி வழங்கியது.

சுய ஜாதகத்தில் 6ம் பாவகம் வலிமை பெரும் பொழுது, ஜாதகருக்கு அவரது எதிரிகள் செய்யும் சூல்சியே மிகப்பெரிய வெற்றியையும், முன்னேற்றத்தையும் வாரி வழங்கி விடும், மேலும் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்வார்கள், இவரது வெற்றிக்கு இதுவும் ஒரு காரணம், மேலும் ஜாதகர் 2,4,8,10ம் வீடுகள் 6ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது 2,4,8,10ம் பாவக வழியில் இருந்து 100% யோகத்தை வாரி வழங்கி இருப்பது கண்கூடான விஷயம், 2ம் பாவக வழியில் இருந்து பல தலைமுறைக்கு உண்டான வருமானம் ஜாதகரே சம்பாதிக்கும் வல்லமையை தந்தது , 4ம் பாவக வழியில் இருந்து அபரிவிதமான சொத்து சுக சேர்க்கையை தந்தது, 8ம் பாவக வழியில் இருந்து புதையலுக்கு நிகரான சொத்து சுக சேர்க்கையை திடீரென குறுகிய காலத்தில் தந்தது, 10 ம் பாவக வழியில் இருந்து சிறந்த கௌரவம், அந்தஸ்து, புகழ், ஸ்திரமான ஜீவனம் என்ற அமைப்பை தந்தது. 

இருப்பினும் இந்த ஜாதகருக்கு 12ம் பாவகம் கடுமையாக பாதிக்கபட்டு இருப்பதால் மன நிம்மதி என்ற விஷயம் வெகுவாக பாதிக்கபடுகிறது , இதன் காரணமாகவே இவர் இமையமலை பயணம் என்று வருடம் ஒரு முறையாவது சென்று வருகின்றார், சுய ஜாதகத்தில் 12ம் பாவகம் வலிமை பெற்றால் மட்டுமே ஆன்மீக வெற்றி கிட்டும், இந்த ஜாதகருக்கு 12ம் பாவகம் கடகமாக வருவதால் ஆன்மீகத்தில் ஈடுபாட்டை தந்தது, ஆனால் 12ம் பாவகம் கடுமையாக பாதிக்க படுவதால் ஜாதகர் ஆன்மீக வாழ்க்கையில் வெற்றி பெற இயலவில்லை, ஆன்மீகம் என்ற பெயரில் இவர் அடிக்கும் கூத்து ( என்பது ) இதில் இருந்தே நமக்கு தெளிவாக தெரியும்.

சாதாரண மனிதன் உலக புகழ் பெறுவதிற்கு காரணம் சுய ஜாதகத்தில் உள்ள யோக நிலையும், அவரது கடின உழைப்பும் மட்டுமே காரணமாக இருக்க வாய்ப்பில்லை, பொதுமக்களின் ஆதரவும் அவர்களின் எண்ண ஆற்றலும் ஜாதகருக்கு கிடைக்கும் பொழுதே ஜாதகருக்கு அபரிவிதமான வெற்றியும் புகழின் உச்ச நிலைக்கு செல்லும் வாய்ப்பும் கிடைக்கிறது என்பதை ஜோதிடதீபம் இங்கு உறுதி பட தெரிவிக்கிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

சனி, 1 நவம்பர், 2014

ராகு பகவான் சுய ஜாதகத்தில் பெரும் வலிமையையும், தனது திசையில் வழங்கும் பலன்களும்!




 நவகிரகங்களில் மிக அதிக வலிமை வாய்ந்ததும், தான் அமரும் பாவகத்தின் பலனை முழுவதும் தானே அதிகாரம் செலுத்தும் வல்லமை பெற்றதும், தன்னுடன் சேர்ந்த கிரகங்களின் வலிமையை தானே ஏற்று நடத்தும், அதிகாரம் மிக்க ராகு பகவான் ஒருவரின் சுய ஜாதகத்தில் நல்ல நிலையில் அமர்ந்தால் மட்டும் போதாது, தனது திசையில் தான் வலிமை பெற்று அமர்ந்த பாவகத்தின் பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே ஜாதகர், ராகு பகவான் அமைப்பில் இருந்து அவர் அமர்ந்த பாவக வழியில் இருந்து ஜாதகர் யோக பலன்களை அனுபவிக்க இயலும், பொதுவாக ராகு பகவான் சுய ஜாதகத்தில் எந்த எந்த பாவகங்களில் அமர்ந்தால் மிகுந்த நர்ப்பலன்களை ஜாதகருக்கு வழங்குவார் என்பதை பற்றி, இதற்க்கு முன் ஜோதிடதீபம் பல பதிவுகளில் தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளது, ராகு பகவான் சுய ஜாதகத்தில் வலிமை பெற்று அமர்ந்தாலே போதும், தனது திசைகளில் யோக பலன்களை தான் அமர்ந்த பாவக வழியில் இருந்து நடத்துவார் என்ற தவறான கருத்து உள்ளது, இது முற்றிலும் தவறான அணுகு முறை அன்பர்களே!

சுய ஜாதகத்தில் எந்த ஒரு கிரகமும் வலிமை பெற்று அமர்ந்து இருந்தாலும் சரி, வலிமை அற்று அமர்ந்து இருந்தாலும் சரி, தனது திசையில் ஜாதகருக்கு சுய ஜாதக அமைப்பின் படி எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறார், அவர் ஏற்று நடத்து பாவகம் சுய ஜாதகத்தில் நல்ல நிலையில் இருக்கிறதா ? பாதிக்கபட்டு இருக்கிறதா ? என்பதின் அடிப்படையிலேயே ஜாதகருக்கு யோக அவயோக பலன்கள் நடைமுறைக்கு வரும், இதை ஒரு உதாரண ஜாதகம் கொண்டு ஆய்வு செய்வது மிக தெளிவாக அன்பர்கள் புரிந்துகொள்ள இயலும், ஒருவரின் சுய ஜாதகத்தில் ராகு பகவான் எந்த பாவகத்தில் இருக்கிறார் ? ராகு பகவான் அமர்ந்த பாவகத்தை வலிமை பெற செய்கிறாரா ? வலிமை இழக்கும் நிலையை தருகிறார ? தனது திசையில் எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறார் ? என்பதை இந்த பதிவில் சிந்திப்போம் அன்பர்களே !

உதாரண ஜாதகம் :



லக்கினம் : சிம்மம் 
ராசி : துலாம் 
நட்சத்திரம் : சித்திரை 4ம் பாதம் 

ஜாதகருக்கு ராகு பகவான் அமர்ந்திருக்கும் பாவகம் எது ?

ஜாதகர் சிம்ம லக்கினம் ராகு பகவான் அமர்ந்திருப்பது சிம்மத்தில், எனவே பொதுவாக இந்த ஜாதகத்தை ஆய்வுக்கு எடுத்து கொள்ளும் ஜோதிடர்கள் ராகு லக்கினத்தில் அமர்ந்து இருப்பதாகவே எடுத்து கொள்வார்கள், இது இந்த ஜாதகத்தை பொதுவாக காணும் பொழுது ஏற்ப்படும் பிழை, உண்மையில் இந்த சிம்ம இலக்கின ஜாதகருக்கு ராகு பகவான் சிம்ம ராசியில் உள்ள 12ம் பாவகத்தில் இருக்கிறார் என்பது சரியானது, ஏனெனில் ஜாதகருக்கு லக்கினம் சிம்மத்தில் 131:32:59 பாகையில் ஆரம்பித்து, கன்னியில் உள்ள 161:36:28 பாகையில் முடிவடைகிறது ) ஆக ஜாதகருக்கு லக்கினம் எனும் முதல் பாவகம் 131:32:59 பாகையில் ஆரம்பித்து, 161:36:28 பாகையில் முடிவடைகிறது. மேற்கண்ட பாகைக்குள் ராகு பகவான் அமர்ந்து இருந்தால் மட்டுமே ஜாதகருக்கு ராகு பகவான் லக்கினத்தில் அமர்ந்ததாக எடுத்துகொள்ள இயலும், ஆனால் இவரது ஜாதகத்தில் ( ராகு பகவான் அமர்ந்திருக்கும் பாகை 126:20:17 ) எனவே இந்த ஜாதகருக்கு ராகு பகவான் சிம்மத்தில் உள்ள 12ம் பாவகத்தில் அமர்ந்து இருக்கிறார் என்பதே சரியான ஜாதக ரீதியான கணிதம், சுய ஜாதகத்தில் ராகு பகவான் அமர்ந்திருக்கும் உண்மையான பாவக நிலை, ஜாதகருக்கு ( 12ம் பாவகம் கடகத்தில் 101:41:47 பாகையில் ஆரம்பித்து சிம்மத்தில் 131:32:59 பாகையில் முடிவடைகிறது ) என்பதை பார்க்கும் பொழுது ராகு  பகவான் 12ம் பாவகத்தில் தான் அமர்ந்து இருக்கிறார் என்பதை உறுதி செய்து கொள்ள முடியும்.

ஜாதகருக்கு ராகு பகவான் அமர்ந்திருக்கும் பாவகத்தை வலிமை பெற செய்கிறாரா ? வலிமை இழக்க செய்கிறாரா ?  

பொதுவாக கேந்திர பாவகங்களில் ( பாரம்பரிய ஜோதிடத்தில் 12ம் பாவகத்தை மறைவு ஸ்தானம் என்பர்  இந்த விதி நமது உயர் கணித ஜோதிடத்தில்  பொருத்தது இங்கே 12ம் பாவகத்தை கேந்திரமாகவே எடுத்துகொள்ள வேண்டும் ) அமரும் ராகு பகவான் கேந்திர பாவகத்தை 100% வலிமை பெற செய்வார் அதன் அதிபதி சூரியன்,செவ்வாய்,தேய்பிறை சந்திரன், சூரியனுடன் சேர்ந்த புதன் ( 14 பாகைக்குள் சூரியனுடன் சேர்ந்து இருப்பின் ) சனி ஆகிய கிரகங்களாக இருப்பின், சிம்மத்திற்கு அதிபதி சூரியன் என்பதால் இங்கு அமர்ந்த ராகு பகவான்  ஜாதகரின் 12ம் பாவகத்தை 100% வலிமை பெற செய்கிறார் என்பதும் உறுதியாகிறது, ஆக 12ம் பாவகத்தில் அமரும்  ராகு பகவான் ஜாதகருக்கு தான் அமர்ந்த இடத்தை வலிமை பெறவே செய்கிறார்  என்பது கவனிக்க தக்க விஷயம்.

ஜாதகருக்கு ராகு பகவான் தனது திசையில் எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறார் ?

இந்த விஷயத்தை தான் நாம் இங்கு மிக கவனமாக ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளவேண்டும், ஏனெனில் சுய ஜாதகத்தில் ராகு 12ல் அமர்ந்து 12ம் பாவகத்தை 100% வலிமை பெற செய்கிறார் என்பதை இதற்க்கு முன் பார்த்தோம், ராகு பகவான் எந்த பாவகத்தின் பலனை தனது திசையில் ஏற்று நடத்துகிறார் என்பதே ஜாதகருக்கு அவரது திசையில் தரும் யோக அவயோக பலன்களை  நிர்ணயம் செய்யும், இந்த ஜாதகருக்கு பாவகத்தில் வலிமை பெற்ற ராகு பகவான் ( தனது திசையில் 13,5,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று 200% சதவிகித அவயோக பலன்களையே வழங்குகிறார் ) என்பது, சுய ஜாதகத்தில் ராகு பகவான் வலிமை பெற்ற போதிலும், தனது திசையில் பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துவதால், ஜாதகருக்கு யோகத்தை செய்யும் தன்மையை தனது திசையில் இழக்கிறார் என்பது  100% சதவிகிதம் உறுதியாகிறது.

எனவே அன்பர்களே ! சுய ஜாதகத்தில் ஒரு கிரகம் மிகுந்த வலிமை பெற்று இருப்பது முக்கியம் அல்ல, தனது திசையில் சுய ஜாதக அமைப்பின் படி வலிமை பெற்ற பாவகத்தின் பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே ஜாதகருக்கு யோக பலன்களும் நன்மைகளும், நவ கிரகங்கள் ஏற்று நடத்தும் பாவக வழியல் இருந்து  அனுபவிக்க இயலும் என்பதும், ஜாதகருக்கு குறிப்பிட்ட திசை யோக பலன்களை வழங்குகிறது என்று தெளிவாக எடுத்து உரைக்க இயலும் என்பதும் கவனிக்க தக்கவிஷ்யமாக  ஜோதிடதீபம் கருதுகிறது.

மேலும் சுய ஜாதகத்தில் பாதிக்க பட்ட கிரகத்தின் திசை நடைபெறும் பொழுது பாதிக்க பட்ட கிரகம் ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவகத்தின் பலனை ஏற்று நடத்தினால், நிச்சயம் ஜாதகர் பாதிக்க பட்ட கிரகம் ஏற்று நடத்தும் பாவக வழியில் இருந்து  யோக பலன்களை அனுபவிப்பர், இதில் எந்த சந்தேகமும் இல்லை, எனவே ஒருவருக்கு நடைபெறும் திசை எந்த பாவக பலனை தருகிறது என்று தெரியும் பொழுதே அந்த ஜாதகருக்கு நடைபெறும் பலன்கள் நன்மையா? தீமையா ? என்று ஜோதிடர்களால் நிர்ணயம் செய்ய இயலும், இந்த விஷயம் தெரியாத பொழுது அந்த ஜோதிடரிடம் ஆலோசனை பெரும் அன்பர்களின் நிலை விதி விட்ட வழி என்றுதான் சொல்லவேண்டும்.

பலரால் நாகதோஷம்,சர்ப்பதோஷம்,ராகுகேதுஜாதகம், என்று நிர்ணயம் செய்த ஜாதகங்களில் மேற்கண்ட சாய கிரகமான ராகு கேது கிரகம் நல்ல நிலையில் இருந்து, நன்மை தரும் அமைப்பை பெற்று இருப்பதை ஜோதிடதீபம் கண்டுணர்ந்து சம்பந்த பட்டவர்களுக்கு, தெளிவும் சரியான ஜாதக பலனையும்  எடுத்து உரைத்திருகின்றது, ஆக ராகு கேது கிரகங்கள் 1,2,5,6,7,8,12ல் அமர்ந்தாலே தோஷத்தை செய்யும் என்ற முட்டாள் தனமான வாதத்தை உடைத்து எறிந்திருக்கிறது அன்பர்களே! திருமணம் செய்ய  ராகு கேது தோஷம் என்று எந்த ஒரு ஜாதகத்தையும் ஒதுக்காமல், ராகு கேது அமர்ந்த இடத்தை வலிமை பெற செய்கிறாரா? தனது திசா புத்திகளில் நன்மையை செய்கிறாரா? என்று சுய ஜாதக ரீதியான தெளிவு பெற்று வாழ்க்கையில் நலம் பெறுங்கள் என்று ஜோதிடதீபம் வாழ்த்துகிறது .


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வியாழன், 30 அக்டோபர், 2014

ஜாதக ரீதியான கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் சரியான பதில்கள் !



கேள்வி :

எனது ஜாதகத்தில் சொந்த தொழில் செய்யும் அமைப்பு உள்ளதா? தற்போது செய்யலாமா? நிலைத்து நீடிக்குமா?

பதில் : 

சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் எனும் 10ம் வீடு லாப ஸ்தானம் எனும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஒரு சிறப்பான விஷயமே ? தாங்கள் நிச்சயம் சுய தொழில் செய்வதே சால சிறந்தது, தனிப்பட்ட முறையில் செய்யும் தொழில் நிச்சயம் வெற்றி பெரும், கூட்டு தொழில் நிச்சயம் சரிப்பட்டு வர வாய்ப்பில்லை மிகுந்த பின்னடைவை தரும்.

தற்பொழுது நடைபெறும் ராகு புத்தி தங்களுக்கு சாதகமான வகையில் 1ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று நன்மையையே செய்வதால் தொழில் துவங்க இது ஒரு உகந்த காலம், மேலும் செய்யும் தொழிலில் நர்ப்பெயரும், வளர்ச்சியும் கிடைக்கும்.

ஜீவன ஸ்தானம் என்பது மிகவும் வலிமையாக இருப்பதால் நிச்சயம் தொழில் நீடித்து நிற்கும், தொடர்ந்து வெற்றிகளை தரும்.

கேள்வி : 

எப்படிப்பட்ட தொழில்கள் எனக்கு சரியாக வரும்? உதாரணமாக டிராவல் ஏஜென்ட்டு, கமிஷன் தொழில், விளம்பரம், டிசைனிங்,  போன்றவை.

பதில் :

ஜீவன ஸ்தானம் எனும் பத்தாம் பாவகம் தொடர்பு பெறுவது, லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் என்பதால், ஜாதகர் 100% லாபம் தரும் தொழிலை தேர்ந்தெடுத்து செய்வது நலம் தரும், குறிப்பாக கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 11ம் பாவகம் 7ம் ராசியாக வருவதால், ஜாதகர் பொதுமக்கள் சார்ந்த தொழில்களை மேற்கொள்வது சால சிறந்தது, விளம்பரம், திரைப்பட துறை, பேச்சு,எழுத்து, வியாபாரம், மக்கள் தொடர்பு, வீட்டு உபகரண பொருட்கள் விற்பனை, ஆடம்பர பொருள் விற்பனை, ஜோதிடம், கலை துறை, துணி வியாபாரம், மருத்துவ பொருட்கள், மருந்து பொருட்கள் விற்பனை, இரத்தின வியாபாரம், தனது அறிவாற்றலை பயன்படுத்தி விரைவில் வெற்றி பெரும் யோக வணிக தொழில்கள், மக்கள் தொடர்பு உடைய உணவு பொருள் விற்பனை, கல்வி துறை, போன்ற தொழில்களில் வெற்றியும் , முன்னேற்றமும் உண்டாகும்.




கேள்வி :

என் கையில் காசு தங்குமா? சேமிப்பு வருமா? 

பதில் :

2ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது , தங்களின்  வருமானத்தை நிர்வகிக்க தெரியாதவர் என்பதை உறுதி படுத்துகிறது, தங்களது கையில் காசு இருந்தால் திடீர் செலவை தரும் என்பது மட்டும் உறுதி , எனவே சேமிக்கும் பழக்கத்தை கற்று கொள்வது நலம் தரும், உதாரணமாக் கையில் பணத்தை வைத்து கொள்ளாமல், வங்கியில் வரவு செலவு கணக்கை நிர்வகிப்பது சால சிறந்தது, 4ம் வீடு வலிமையாக இருப்பதால், சொத்து வீடு வண்டி வாகனம், பொருட்கள் மேல் முதலீடு செய்வது தங்களது வீண் விரைய செலவை குறைக்கும், சுய ஜாதகத்தில் எந்த பாவகம் வலிமை பெற்று இருக்கிறதோ அதன் தத்துவம் சார்ந்த விஷயங்களில் முதலீடு செய்வது, தங்களுக்கு சேமிப்பை வளர்க்கும். அல்லது வட்டிக்கு பணம் கொடுங்கள் வருமானமும் உண்டு, பணமும் விரையம் ஆகாது 6ம் வீடு மிகவும் வலிமை பெற்று இருப்பது கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் லாபம் தரும்.

கேள்வி :

எனது ஜாதகத்தில் 10ம் பாவகத்தை பற்றி சொல்லுங்கள்?

பதில் :

4,6,10,12ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது 100% நன்மையை தரும் அமைப்பே, எனவே தாங்கள் 4ம் பாவக அமைப்பில் இருந்து வீடு,நிலம்,வண்டி,வாகனம் போன்ற விஷயங்களில் தொழில் செய்யலாம், 6ம் பாவக வழியில் இருந்து கடன் கொடுப்பது, வட்டி தொழில், பொருட்களை வாங்கி உடனடியாக லாபம் பார்க்கும் தொழில், மருந்து மருத்துவ உபகரண வியாபாரத்தில் நல்ல லாபம், மருத்துவ துறையில் கமிஷன் அடிப்படையில் தொழில் செய்ய சரியான வாய்ப்பு உண்டாகும், 10ம் பாவக வழியில் இருந்து பொதுமக்கள் சார்ந்த அனைத்து தொழிலும் மிகுந்த முன்னேற்றத்தை  தரும், வாழ்க்கை துணை வழியில் இருந்து கூட்டாக செய்யும் தொழிலும் வெற்றி பெரும், 12ம் பாவக வழியில் இருந்து ஆன்மீக வெற்றி, நீண்டகால முதலீடுகளில் நல்ல லாபம், பொருட்களின் பேரில் வட்டிக்கு பணம் தருதல், பேச்சின் மூலம் வரும் வருமானம், அரசியலில் எதிர்பாராத வெற்றி, அரசியல்வாதிகள் மூலம் லாபம் என்ற வகையில் ஜீவன பாவகம் யோகத்தை தரும்.

கேள்வி :

பங்கு மார்கெட் தொழில் நமக்கு சரி வருமா?

பதில் :

2,5,8,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, பங்கு வர்த்தக துறையில் ஈடுபட்டால், அனைத்தையும் இழக்கும் சூழ்நிலையை தரும், பங்கு வர்த்தகத்தில் ஈடுபட நிச்சயம் 5, 11ம் பாவகங்கள் நல்ல வலிமையுடன் இருப்பது அவசியம். பங்கு வர்த்தகம் தங்களுக்கு சரிப்பட்டு வராது !

கேள்வி :

தற்பொழுது ராகு கேது பெயர்ச்சி மற்றும் வரப்போகும் சனிப் பெயர்ச்சி யோக பலன்களை தருமா?

பதில் : 

தங்களுக்கு நடைபெறும் சுக்கிரன் திசை 12ம் பாவக பலனை தருவதால் ராகு கேது கோட்சார பலன்கள் எவ்வித நன்மை தீமையையும் செய்யவில்லை, ஆனால் எதிர்வரும் சனி பெயர்ச்சி தங்களுக்கு 12ம் பாவக வழியில் இருந்து 100% கோட்சார நன்மைகளை தொடர்ந்து 30 மாதங்கள் வாரி வழங்கும் என்பதால் தாங்கள் மகிழ்ச்சி கடலில் நீந்தலாம், தங்களுக்கு ஒன்று புதையல் கிடைக்க வேண்டும், அல்லது புதையலுக்கு ஈடான வருமானம் கிடக்க வேண்டும் என்பதால் இனி வரும் சனி பெயர்ச்சி தங்களுக்கு மிகுந்த யோகத்தை வாரி வழங்குகிறது என்பதே சிறப்பான விஷயம், தங்களின் 12ம் வீடு கால புருஷனுக்கு 8ம் வீடு என்பதால், தங்களுக்கு விபரீத ராஜ  யோகம் இனி வரும் காலங்களில் நடைபெறும், வாழ்த்துகள்.

கேள்வி :

வீட்டு மனை வாங்கியாச்சு. சொந்த வீடு எப்போது கட்டுவேன்?

பதில் :

சுக்கிரன் திசை குரு புத்தியில் வீடு கட்டும் யோகம் உண்டாகும்.

கேள்வி :

நான் செய்ய வேண்டிய கர்மவினை கழிப்பு பற்றி சொல்லுங்கள்.

பதில்:

வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் இன்னல்களை ஏற்று கொள்வதும், மற்றவரிடம் கவனமாக பேசுவதும், குல தெய்வத்தை முறையாக வழிபடுவதும், எதிர்பாராமல் வரும் சில இழப்புகளை தாங்கி கொள்வதும், எந்த ஒரு விஷயம் நடந்தாலும் அதை துணிவாக எதிர்கொண்டு வெற்றி பெறுவதும், தன்னம்பிக்கை இழக்காமல் தொடர்ந்து போராடுவதும் சகல நிலைகளில் இருந்தும் நன்மையை தரும், குறிப்பாக நல்ல ஆன்மீக பெரியவரிடம் தீட்சை பெறுவது யோகத்தை தரும், மற்றவர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பதே சகல நன்மையையும் வாரி வழங்கும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

செவ்வாய், 28 அக்டோபர், 2014

சுய ஜாதகத்தில் பாவக வலிமையும், தற்பொழுது நடைபெறும் திசை மற்றும் புத்திகள் தரும் பலன்களும்!

 

ஒருவரின் சுய ஜாதகத்தில் லக்கினம் முதற்கொண்டு 12 பாவகங்களின் வலிமை, அந்த ஜாதகரின் வாழ்க்கையில் நடைபெறும் யோக அவயோக பலன்களை நிர்ணயம் செய்கிறது, நடைபெறும் திசா புத்திகள் 12 பாவக பலன்களை ஏற்று நடத்தி யோக அவயோக பலன்களை அனுபவிக்க வைக்கிறது, கோட்சார கிரகங்கள் தனது கோட்சார அமைப்பில் நின்று திசா புத்திகள் ஏற்று நடத்தும் பாவகங்களுக்கு தனது வலிமை அல்லது வலிமை அற்ற பலன்களை வாரி வழங்குகிறது, இதன் அடிப்படையிலேயே ஒவ்வொரு ஜாதகரின் பலாபலன்களும் நிர்ணயம் செய்யபடுகிறது, இதை ஒரு உதாரண ஜாதகம் கொண்டு காணும் பொழுது நமக்கு மிக தெளிவாக புரியும் அன்பர்களே! 

உதாரண ஜாதகம் :


ஜாதகரின் லக்கினம் : விருச்சிகம் 
ஜாதகரின் ராசி : ரிஷபம் 
ஜாதகரின் நட்சத்திரம் : மிருகசீரிடம் 2ம் பாதம் 

இவரது சுய ஜாதக அமைப்பின்படி வலிமை பெற்ற பாவகங்கள் :

1,5,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது சுய ஜாதக அமைப்பில் 70% யோகத்தை தருகிறது.

2ம் வீடு குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 2ம் பாவக வழியில் இருந்து 50% யோக பலன்களை வழங்குகிறது.

6ம் வீடு சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 6ம் பாவக வழியில் இருந்து 100% யோக பலன்களை வழங்குகிறது.

10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 10ம் பாவக வழியில் இருந்து 70% யோக பலன்களை வழங்குகிறது.

இவரது சுய ஜாதகத்தில் வலிமை அற்று பாதிப்பை தரும் பாவகங்கள் :

4,8,11ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 8ம் பாவக வழியில் இருந்து 30% அவயோக பலன்களை வழங்குகிறது.

3,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 9ம் பாவக வழியில் இருந்து 200% இன்னல்களை தருகிறது.

12ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 12ம் பாவக வழியில் இருந்து 100% இன்னல்களை தருகிறது.

மேற்கண்ட முறையில் ஜாதகருக்கு 12 பாவக அமைப்புகளின் வலிமை மற்றும் வலிமை அற்ற நிலை காணப்படுகிறது, அடுத்து ஜாதகருக்கு தற்பொழுது நடைபெறும் திசை எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்பதை ஆய்வுக்கு  எடுத்துகொள்வோம் அன்பர்களே !

தற்பொழுது நடைபெறும் சனி திசை( 21/06/2014 முதல் 21/06/2033 வரை )  ஜாதகருக்கு இரண்டு விதமான பலன்களை தருகிறது அதாவது 1,5,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களையும், 3,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அவயோக பலன்களையும் தருகிறது, இதில் 1ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு நல்ல உடல் நலம், மன நலம் சிறந்து விளங்கும், ஜாதகரின் செயல்கள் யாவும் பெருமைக்கு உரியதாக அமையும் இலக்கின வழியில் இருந்து ஜாதகர் மிகுந்த யோகத்தை பெறுகிறார், 5ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் தனது அறிவாற்றல் மற்றும் புத்திசாலித்தனம் மூலம் மிகுந்த லாபமும், குல தெய்வத்தின் அருளாசியும் கிடைக்க பெறுகிறார், எங்கு சென்றாலும் ஜாதகருக்கு நல்ல வரவேற்ப்பு கிடைக்கும், தனது தொழில் துறையில் எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளை பெரும் யோகத்தை தரும், ஜாதகரின் புகழ் கீர்த்தி மேலோங்கும், தனது குழந்தைகள் மூலம் யோக வாழ்க்கையை பெரும் சிறப்பான நேரமிது.

 7ம் பாவக வழியில் இருந்து வாழ்க்கை துணை அமைப்பில் இருந்து உதவியும், ஆதரவும் அதிகரிக்கும், தாம்பத்திய வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும், தம்பதியர் இருவரின் சுய முயற்ச்சியால் வாழ்க்கையில் சகல நலன்களையும் பெரும் யோக காலம் இது, எடுக்கும் முயற்ச்சிகள் யாவும் நல்ல வெற்றியை குவிக்கும், எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளை கூட்டு முயற்ச்சியாக ஜாதகர் பெறுவார் என்பது உறுதியாகிறது, வெளிநாடு வெளியூர் செல்வதற்கு உண்டான யோக காலம்  இதுவென்றே  சொல்லலாம், சனி திசை சனி புத்தியில் வெளிநாடு வாய்ப்புகள் தேடிவரும் சுய ஜாதகத்தில் 7ம் பாவகம் ரிஷப ராசியில் அமைவதால் ஜாதகர் வெளிநாடு செல்வதால் நல்ல வேலை வாய்ப்பினையும், பொருளாதார முன்னேற்றத்தையும், அபரிவிதமான வருமானத்தையும் பெரும் யோகத்தை தரும், பொருளாதார ரீதியான தன்னிறைவு வாழ்க்கையை தற்பொழுது நடைமுறையில் உள்ள சனிதிசையே வாரி வழங்குகிறது.

3,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பலனை தருவது ஜாதகருக்கு 3ம் பாவக வழியில் இருந்தும் 9ம் பாவக வழியில் இருந்தும் அதிக இன்னல்களை தரும், குறிப்பாக 9ம் பாவகம் சர நீர் ராசியாக இருப்பதால் மனோ ரீதியான போராட்டங்கள் ஜாதகரின் முயற்ச்சிக்கு தடையாக அமையும், உதாரணமாக ஜாதகர் எடுக்கும் முயற்ச்சிகள் ஜாதகரின் மன நிலையின் காரணமாக தடை ஏற்ப்படும், இதானால் சில நேரங்களில் ஜாதகர் அதிக மன உளைச்சலுக்கும், மன அழுத்தத்திற்கு ஆளாகும் சூழ்நிலையை தரக்கூடும், இதன் காரணமாக ஜாதகருக்கு வரும் பல அதிர்ஷ்ட வாய்புகள் தட்டி போக வாய்ப்பு உண்டு எனவே ஜாதகர், தனது மன நிலையை முறையாக ஒருமை படுத்துவது நலம் தரும், அல்லது ஜாதகர் 8,9,12ம் பாவக அமைப்பிர்க்குண்டன பிரீதி பரிகாரங்களை தேடிகொள்வது சால சிறந்தது.

தற்பொழுது நடைபெறும் சனி திசை சனி புத்தியும் (21/06/2014 முதல் 24/06/2017வரை ) 1,5,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களையும், 3,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அவயோக பலன்களையும் தருவதால் ஜாதகருக்கு 7,9ம் பாவக பலன்களே நடைமுறைக்கு வருகிறது, இந்த இரண்டு பாவகங்களுடன்  சம்பந்தம் பெரும் கோட்சார கிரகம் பற்றி ஆய்வு செய்யும் பொழுது குரு பகவான் மட்டும் 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 100% யோக பலன்களை வாரி வழங்குவதால் ஜாதகருக்கு 9ம் பாவக வழியில் இருந்தும் மிகுந்த நன்மையே நடைபெறும். ( அதாவது குரு பகவான் கடகத்தில் சஞ்சாரம் செய்யும் வரை ) ஆக ஜாதகருக்கு தற்பொழுது நடைபெறும் சனிதிசை சனி புத்தி மிகுந்த யோகத்தை தரும் காலமாகவே காணப்படுகிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

திங்கள், 27 அக்டோபர், 2014

வெளிநாடு செல்லும் யோகம் எனக்கு உண்டா ? வெளிநாட்டில் நல்ல வேலைவாய்ப்பும், பொருளாதார முனேற்றமும் பெற இயலுமா?



கேள்வி :

 ஐயா நான் பிறந்தது 20.04.1989, நேரம்:1.57 PM, இடம்: Attur......நான் 1.4 வருடமாக வெளிநாடு செல்ல காத்திருக்கிறேன். இதுவரை 20 க்கும் மேற்பட்ட ஜோதிடரை பார்த்து இருக்கிறேன்.அனைவரும் வெளிநாடு போவாய் என தெதியும் குறித்து கொடுத்துள்ளார்கள்.இதுவரை அப்படி எதுமே நடக்கவில்லை..அவர்கள் எதை வைத்து சொல்கிறார்கள் என ஜோதிடம் படிக்க ஆரம்பித்தேன்..இப்போது 4 மாதம் ஆகிவிட்டது..தயவுகூர்ந்து என்னுடைய ஜாதகத்தை உதாரணமாக எடுத்து எப்போது போவேன் என கூறும்படி கேட்டுக்கொள்கிறேன் ஐயா...நீங்கள் கூறியது போல நடக்கும் தசா புத்தியும் கோசார கிரகத்துடன் சாதகமாக தான் உள்ளது..குரு திசை சனி புத்தி,,சிம்ம லக்னம்,கன்னி ராசி,,கோசார குரு 11ல், பெயர்ச்சிக்கு பின் சனி 3ல்....






பதில் :


அன்பு தம்பி சுய ஜாதகத்தில் லக்கினத்திற்கு 7ம் பாவகமும், காலபுருஷ  தத்துவத்திற்கு 7ம் ராசியான துலாம் ராசியும் வலிமை பெற்று இருந்தால் ஜாதகருக்கு வெளிநாடு அல்லது வெளியூர் சென்று புகழ் பெரும் யோகத்தை தரும், மேலும் 7ம் வீடு சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் தொடர்பு பெரும் பொழுது ஜாதகர் வெளியூர் அல்லது வெளிநாட்டில் சிறந்த தொழில் அல்லது வேலை வாய்ப்பு அமையும், ஜாதகரின் பொருளாதார முன்னேற்றம் என்பது அபரிவிதமான வளர்ச்சியை பெரும், ஜாதகரின் வாழ்க்கையில் மிகப்பெரிய அதிர்ஷ்டமும், நண்பர்களின் ஆதரவும் பரிபூரணமாக அமையும், எனவே சுய ஜாதகத்தில் 7ம் பாவகம் ஜாதகருக்கு வெளிநாடு யோகத்தை தருகிறது, வெளிநாடுகளில் ஜாதகர் பெரும் யோக வாழ்க்கையை பற்றிய ஒரு தெளிவான முடிவை  மேற்கண்ட 7ம் பாவக வலிமையை வைத்தே நிர்ணயம் செய்து விடலாம் அன்பரே !


உனது சுய ஜாதக அமைப்பின் படி 3,7ம் விடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகத்தில் சிறந்த அமைப்பாகவே கருதலாம், குறிப்பாக 7ம் பாவகம் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு 11ம் ராசியாக வருவது தங்களுக்கு வெளிநாடுகளில் நல்ல வேலைவாய்ப்பினையும், சிறந்த எதிர்காலத்தையும் அமைத்து தரும் என்பது உறுதியாக தெரிகிறது, மேலும் தற்பொழுது நடைபெறும் குரு திசை ( 14/11/2011 முதல் 14/11/2027 வரை ) தங்களுக்கு  3,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றும், 5,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், பலனை தருவது மிகுந்த யோகமே, மேலும் சுய ஜாதகத்தில் துலாம் ராசியும் 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகுந்த நன்மையையே செய்கிறது என்பதால் தாங்களுக்கு நிச்சயம் வெளிநாடுகளில் நல்ல வேலை வாய்ப்பும், சிறப்பான அதிர்ஷ்டம் மிகுந்த யோக வாழ்க்கையும் நிச்சயம் உண்டு என்பதை மறுப்பதற்கு இல்லை.

  நடைபெறும் குரு திசையில் சனி புத்தியும் ( 01/01/2014 முதல் 15/07/2016வரை ) தனது புத்தியை 3,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று நடத்துவது சிறப்பான விஷயமே, இதில் சனி புத்தி வேறு பாவக தொடர்புகளையும் நடத்துகிறது அதாவது திடீர் இழப்பை தரும் 8ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது 100% இன்னல்களை தருகிறது, 5,9ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று 30% யோகத்தை தருகிறது, இதில் நடைபெறும் சனி புத்தி 12ம் பாவக வழியில் இருந்து அதிக தீமையை செய்வதால், தங்களின் முயற்ச்சிகள் நல்ல வாய்ப்புகள் அனைத்தும் விரையம் ஆகிறது, மேலும் 12ம் வீடு சர நீர் ராசியாக இருப்பதால் மன ரீதியான பிரச்சனைகளை எதிர்கொள்ளும் தன்மையை தருகிறது, தங்களின் வெளிநாடு பயணத்தின் முக்கிய முட்டுகட்டையாக இந்த 12ம் பாவகம் அமைகிறது.

எதிர் வரும் சுக்கிரன் அந்தரத்தில் தங்களுக்கு வெளிநாடு செல்ல 50% வாய்ப்பு இருக்கிறது, இதை தவிர்த்தல் தங்களுக்கு சனி புத்தி முடியும் வரை வெளிநாடு செல்லும் வாய்ப்பு இல்லை, சனி புத்திக்கு பிறகு வரும் புதன் புத்தியிலும் வாய்ப்பு இல்லை என்பதை மிக தெளிவாக சொல்ல முடியும்.

தங்களது சுய ஜாதகத்தில் 12ம் பாவக வழியில் இருந்து வரும் தீய பலன்களுக்கு முறையான நிவர்த்தி செய்வதும், ஜாதகத்தில் கடுமையாக பாதிக்க பட்ட 2,4,6,8,12ம் பாவகங்களுக்கு முறையான ஜோதிட ஆலோசனை பெற்று பரிகாரம் தேடிகொள்வதும் தங்களின் வெளிநாடு யோக வாழ்க்கையை தங்கு தடையின்றி வாரி வழங்கும், பொருளாதார ரீதியான வெற்றிகளை குவிக்கும், தம்பி உனது ஜாதகத்தில் 2ம் பாவகம் பாதிக்க பட்டுள்ளது, வரும் வருமானம் அனைத்தையும் வீண் செலவு செய்யும் சூழ்நிலையை தருகிறதே, இதற்க்கு சரியான தீர்வை நாடு, இல்லை எனில் உனது உழைப்பு யாவும் வீணாக போகும் வாய்ப்பு உண்டு.

மேலும் உனது சுய ஜாதக ரீதியான சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளவும், உனது சுய ஜாதக ரீதியாக முறையான தீர்வுகளை பெறவும், நேரில் வந்து முறைப்படி ஆலோசனை பெற்றுகொள் .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696                                                                                                           


சனி, 25 அக்டோபர், 2014

சுய ஜாதக ரீதியாக ஒருவர் செய்யும் பரிகாரம் பலன் தருமா ? பரிகாரம் செய்வதால் ஒருவர் யோக பலன்களை அனுபவிக்க முடியுமா ?

  


பரிகாரம் தேடுதல் என்பது, ஒருவரின் சுய ஜாதக அமைப்பை வைத்தும் கிரகங்களின் வலிமை மற்றும் வலிமை அற்ற நிலையை வைத்தும் ஜோதிடர்களால் பரிந்துரை செய்வதை ஜாதகர் முறையாக செய்து அதன்வழியில் இருந்து நன்மை பெறட்டும் என்பதாகவே இருக்கிறது, இதில் பலதரப்பட்ட வித்தியாசங்களும், முரண்பட்ட கருத்துகளும் வருவது உண்டு, இந்த கருத்து வேறுபாடுகள் ஏன் வருகிறது, உண்மையில் ஜாதகர் தேடும் பரிகாரங்கள் ஜாதகருக்கு பலன் தருகின்றதா? கேவில் வழிபாடுகள் மூலம் ஜாதகர் மேற்கொள்ளும் வழிபாடுகள் பலன் தருகின்றதா? பரிகாரம் ஒருவரின் வாழ்க்கையில் தரும் மாற்றங்கள் என்ன? என்பதை பற்றி இந்த பதிவில் சிந்திப்போம் அன்பர்களே !

சுய ஜாதக பாதிப்பு நிலை :

 ஒருவரின் சுய ஜாதகம் என்பது அந்த ஜாதகர் செய்த வினை பதிவிற்கு ஏற்ப இறை அருளால் நிர்ணயம் செய்யபடுகிறது, உதாரணமாக ஒருவரின் சுய ஜாதக வலிமை நிர்ணயம் செய்வது 12 பாவகங்களே என்றால் அது மிகையாகாது அன்பர்களே ! குறிப்பாக ஒருவரின் சுய ஜாதகத்தில் லக்கினம் எனும் முதல் பாவகம் வலிமை அற்று காணப்படுகிறது என்று வைத்துகொள்ளுங்கள், அந்த ஜாதகர் எந்த வகையில் இருந்து பரிகாரங்கள் தேடுவது ? அல்லது 12 பாவகங்களில் ஏதாவது ஒரு பாவகமோ அல்லது சில பாவகங்களோ பாதிக்க படும் பொழுது, ஜாதகர் எவ்வித பரிகாரங்களை செய்து நலம் பெறுவது என்பதை ஜோதிடர்களே நிர்ணயம் செய்கின்றனர், ஒரு தலை சிறந்த மருத்துவர் ஒருவரின் உடல் நிலை பாதிப்பை பார்த்த கணத்திலேயே முடிவு செய்ய இயலும், மேலும் பரிசோதனைகள் மூலம் சம்பந்தபட்டவருக்கு வந்திருக்கும் உடல் நல குறைபாட்டினை உறுதி படுத்தி அதற்க்கு தகுந்த சிகிச்சையை பரிந்துரைக்க முடியும், சம்பந்த பட்ட நபரை உடல் நல பாதிப்பில் இருந்து மீட்டு எடுக்க முடியும்.

இதை போன்றதே ஜோதிட பரிகாரங்களும், ஒருவரின் சுய ஜாதகத்தில் பாதிக்க பட்ட பாவகங்கள் எது என்பதை தெளிவாக தெரிந்துகொண்டு, அந்த பாவகத்திர்க்கு அதிபதியான கிரகங்களுக்கு முறையான பிரீதி பரிகாரங்களை மேற்கொள்ளும் பொழுது, ஜாதகர் குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து சுய ஜாதகத்திற்கு உற்ப்பட்டு யோக பலன்களை அனுபவிக்க இயலும், மேலும் பாதிக்க பட்ட பாவக அமைப்பு எவ்வித தத்துவ  நிலையை கொண்டு உள்ளதோ அது சார்ந்த பரிகாரங்களை மேற்கொள்வது ஜாதகருக்கு உடனடியான நன்மைகளை வாரி வழங்கும்.

குறிப்பாக பஞ்ச பூத தத்துவ அமைப்பை அடிப்படையாக கொண்டு பல திருத்தலங்கள் நமது தமிழகத்தில் இறை அருளின் கருணையினால் பல சித்தர்களாலும், ஆன்மீக பெரியோர்களாலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது, கோவில் வழிபாட்டில் மனிதனின் செயலற்ற கருமையம் உற்பட 7 ஆதாரங்களும் செயல்நிலை தூண்டப்பட்டு இயக்க நிலையை பெறுகிறது, மேலும் கிரகங்களின் ஜீவ காந்த அலைகளை உடலும் மனமும் கிரகிக்க ஆரம்பிக்கிறது, இந்த மாற்றங்கள் ஜாதகரின் வாழ்க்கையில் பல அபரிவிதமான முன்னேற்றத்தையும், இறை அருளுடன் ஒன்று கலக்கும் வாய்ப்பை வாரி வழங்குகிறது, மேலும் இந்த சூட்சம விஷயங்கள் யாவும் சரியான சில நொடிகளில் நடைபெறும் என்பதால் எவராலும் விளக்கம் தர முடியாது, அப்படியே தந்தாலும் அது கற்பனையாகவே இருக்கும், ஒவ்வொரு ஜீவன்களின் கிரகிக்கும் சக்தியை பொறுத்து கிரகங்களின் ஜீவ சக்தி கலப்பு என்பது நிகழும், உதாரணம் சொல்ல வேண்டும் எனில் நாம்  ஒரு இனிப்பு பதார்த்தை உண்கிறோம் என்று வைத்து கொள்ளுங்கள், இதை மற்றவருக்கு வார்த்தையால் விவரிக்க இயலாது, சம்பந்த பட்டவரே அந்த இனிப்பு பாதார்த்தை உண்டால் மட்டுமே அவருக்கு அது புரியவரும், இனிப்பின் தன்மை தெரிய வரும்.

கோவில் வழிபாட்டில் ஒரு ஜாதகர் நவகிரகங்களின் கிரக சக்தியுடன் உயிர் கலப்பு பெறுவது மேற்கண்ட அமைப்பிலேயே, சில நபர்களுக்கு பரிகாரங்கள் செய்தும் பலன் தராதது ஏன் ? என்ற கேள்வி வர வாய்ப்புள்ளது, இதை இந்த இடத்தில் ஜோதிடதீபம் விளக்க கடமை பட்டுள்ளேன், அதாவது மேற்கண்ட இனிப்பு பதார்த்தை வைத்தே தெளிவு படுத்துவோம்,  அன்பர்களே ! ஒரு நோய்வாய்பட்ட ஒரு நபருக்கு ( அளவுக்கு அதிகமான காய்ச்சல் ) நாம் இதே இனிப்பு பதார்த்தை கொடுக்கும் பொழுது அந்த நபரின் நாக்கு சுவை அறியும் தன்மையை பெற்று இருக்காது, அப்பொழுது அந்த நபருக்கு இனிப்பு பதார்த்தை கொடுப்பதால் எவ்வித பயனும் இல்லை, இதை போன்றதே சில நபர்களின் பரிகாரங்கள்  நிவர்த்தி பெறாத அமைப்பிற்கும், யோக பலன்கள் நடைமுறையில் பலன் தராத அமைப்பிற்கும் காரணமாகும்.

 உதாரணமாக ஒருவரின் சுய ஜாதகத்தில் பாவகங்கள் கடுமையான பாதிப்பிற்கு ( எந்த ஒரு பாவகமும் பாதக ஸ்தான அமைப்புடன் தொடர்பு பெறுவது மிகுந்த பாதிப்பை தரும் ) உள்ளாகி இருக்குமெனில் ஜாதகர் தொடர்ந்து பரிகாரங்களை  சில காலம் செய்வதால் அந்த பாதிப்பின் கடுமை குறைந்து நன்மைகளை பெறலாம், சில ஜாதகர்களை கோவில் வழிபாடு செய்ய பரிந்துரை சொல்வோம் அவர்கள், அந்த வழிபாட்டை ஒருமுறை செய்த உடனேயே யோக பலன்கள் நடைபெற வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாமாக படவில்லை, தொடர்ந்த இறை வழிபாட்டில் ஈடுபடும் பொழுது ஜாதகர் பாதிக்க பட்ட பாவக வழியில் இருந்து விரைவில் மீண்டு அதே பாவக வழியில் இருந்து யோக பலன்களை அனுபவிக்க ஆரம்பிப்பார், இதுவே பரிகாரத்தின் உண்மை நிலை, பொதுவாக பரிகாரம் என்பது சம்பந்தபட்ட ஜாதகர் யாரோ அவரே ஜோதிடர்களின் வழிகாட்டுதலின் படி தேடிகொள்வது நல்லது இதை தவிர்த்து ஜோதிடர் பரிகாரம் செய்கிறார் என்பது ஏற்புடையாதாக இல்லை.

ஒருவர் சுய ஜாதகத்தில் பாதிக்க பட்ட பாவக வழியில் இருந்து பரிகாரம் தேடிக்கொண்டு நன்மை பெற வேண்டும் என்றாலும் கூட, அவரது ஜாதகத்தில் அந்த விதி இருக்க வேண்டும், அப்படி இருந்தால் மட்டுமே அந்த ஜாதகருக்கு சரியான ஜோதிடரை நாடி சரியான பரிகாரங்களை தேடிக்கொள்ள முடியும், ஆக ஒருவரின் சுய ஜாதகத்தில் பரிகார வழியில் ஜாதகர் யோக வாழ்க்கையை பெற வேண்டும் என்றாலும் கூட  அவரது சுய ஜாதகத்தில்,  பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகமும், பாக்கியம் எனும் ஒன்பதாம் பாவகமும் சிறிதாவது நல்ல நிலையில் இருப்பது அவசியம். ஒருவர் தான் செய்யும் பரிகாரத்தில் கோவில் வழிபாடுகளுக்கு இணையான நன்மைகளையும் யோகங்களையும் பெற மாற்று வழிகளும் உண்டு, உதாரணமாக ஒருவருக்கு நான்காம் பாவகம் கடுமையாக பாதிக்க பட்டு இருக்கிறது என்று வைத்துகொள்ளுங்கள், அந்த ஜாதகருக்கு நல்ல வீடு அமையாது, சிறப்பான வாகனம் அமையாது சொத்து சுகங்கள் கிடைக்காது, நல்ல குணநலன்களுடன் ஜாதகர் இருக்க மாட்டார், முரண்பட்ட பழக்க வழக்கங்களையும், குணநலன்களையும் பெற்று இருப்பார், ஜாதகரின் பெயரில் இருக்கும் சொத்து சுகங்கள் யாவும் விரையம் அடையும்.

இந்த நிலையில் ஜாதகர் கோவில் வழிபாடுகளுக்கு நிகரான பரிகார நிவர்த்தியும், நன்மை மிகுந்த யோக பலன்களையும் பெறுவது எப்படி? ஆண்கள் ஜாதகத்தில் நான்காம் பாவகம் அன்னையை குறிக்கும் ( பெண்கள் ஜாதகத்தில் நான்காம் பாவகம் தகப்பனாரை குறிக்கும் ) ஜாதகர் தனது அன்னைக்கு தேவையான பணிவிடைகளை தவறாது செய்வதும், அவரின் பேச்சை கேட்டு தட்டாமல் நடந்து கொள்வதும் ஜாதகருக்கு நான்காம் பாவக வழியில் இருந்து வரும் அவயோக பலன்களை தடுத்து நிறுத்தி, யோக பலன்களை வாரி வழங்கும், ஜாதகர் தனது அன்னையின் உடல் நலத்தில் அக்கறை கொள்வதும், அவர்களது தேவைகளை பூர்த்தி செய்வதும், அவரின் மனம் நோகாவண்ணம் நடந்து கொள்வதும் ஜாதகரின் வாழ்க்கையில், நல்ல வீடு, வண்டி வாகனம், சொத்து சுக சேர்க்கையை வாரி வழங்கி விடும், நான்காம் பாவகம் பதிக்க பட்டு இருக்கும் ஜாதகர் அனைவருக்கும் தனது தாயின் அமைப்பில் இருந்து அதிக இன்னல்களை தரும், இருப்பினும் ஜாதகர் அப்படி வரும் இன்னல்களை மனமுவந்து ஏற்றுக்கொண்டு, தனது அன்னைக்கு நன்மையை செய்யும் பொழுது சில காலம் சிரமபட்ட போதும், அதன் பிறகு வரும் காலங்கள் ஜாதகருக்கு நான்காம் பாவக வழியில் இருந்து யோகங்களை 100 சதவிகிதம் வாரி வழங்கும்.

எனவே ஒருவரது சுய ஜாதகத்தில் பாதிக்க பட்ட பாவகம் எதுவோ அந்த பாவக வழியில் உள்ள உறவுகளிடம், நாம் நமது பாவக வலிமையை வலுபடுத்திகொள்ள இயலும், 3ம் பாதிக்க படும் பொழுது சகோதர வழியில் இருந்தும், 5ம் பாவகம் பாதிக்க படும் பொழுது தனது குழந்தைகள் வழியில் இருந்தும், 7ம் பாவகம் பாதிக்க படும் பொழுது தனது வாழ்க்கை துணை வழியில் இருந்தும், 9ம் பாவகம் பாதிக்க படும் பொழுது தனது பித்ருக்கள் வழியில் இருந்தும், 10ம்  பாவகம் பாதிக்க படும் பொழுது தனது தந்தை வழியில் இருந்தும் வரும் இன்னல்களை ஏற்றுகொள்ளும் தன்மையை ஜாதகர் பெரும் பொழுது மேற்கண்ட பாவக வழியில் இருந்து நன்மைகளை 100 சதவிகிதம் பெறலாம், இது தான் செய்த கர்ம வினை பதிவை கழித்து கொண்டு, அதன் வழியில் இருந்து யோக பலன்களை அனுபவிக்கும் சரியான மாற்று வழி எனலாம்.

முதலில் சுய ஜாதக ரீதியாக பாதிக்க பட்ட பாவகம் எதுவென்று தெளிவாக தெரிந்து கொள்வதும், அந்த பாவகத்திர்க்கு அதிபதியான கிரகம் எதுவென்று உணர்வதும் சம்பந்த பட்ட பாவக வழியில் இருந்து ஜாதகரை மீட்டு எடுக்க சரியான வழியை கடைபிடிக்க உதவும்.




 உதாரணமாக மேற்கண்ட ஜாதகத்தில் பாதிக்க பட்ட பாவகங்கள் 6,9,12 இந்த பாவகங்களுக்கு அதிபதியாக முறையே 6க்கு செவ்வாயும், 9க்கு புதனும், 12க்கு சந்திரனும் வருகின்றனர், எனவே ஜாதகர் 6ம் பாவகம் சர ராசியாக இருப்பதால் 6ம் பாவக வழியில் இருந்து 100% இன்னல்களும், 12ம் பாவகம் சர ராசியாக இருப்பதால் 12ம் பாவக வழியில் இருந்து 100% இன்னல்களும், 9ம் பாவகம் பாதக ஸ்தானமாக வருவதால் 9ம் பாவக வழியில் இருந்து 200% இன்னல்களும் அனுபவிக்கும் தன்மையை தரும் எனவே மேற்கண்ட பாவகங்கள் என்ன தத்துவ அமைப்பை பெறுகிறது, இதற்க்கு உண்டான பரிகாரம் என்ன ? என்பதை முறையாக சிறந்த ஜோதிடரிடம் ஆலோசனை பெற்று பரிகாரங்களை மேற்கொள்ளும் பொழுது ஜாதகர் மேற்கண்ட பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை தவிர்த்து, அதன் வழியில் இருந்து வரும் யோகங்களை அனுபவிக்க இயலும் அன்பர்களே! எனவே ஒருவரின் சுய ஜாதகத்தில் பாதிக்கபட்ட பாவகம் எது? அதன் அதிபதி யார்? பாதிக்க பட்ட பாவகத்தின் தத்துவம் என்ன ? என்ற விஷயங்கள் தெளிவாக தெரிந்தால் மட்டுமே ஜாதகர் மேற்கண்ட இன்னல்களில் இருந்து விடுபட்டு, யோக பலன்களை அனுபவிக்க முடியும், இல்லை எனில் ஒருவருக்கு பிரச்சனை ஒன்று, அவர் செய்த பரிகாரம் வேறொன்று என்ற நிலையை தந்துவிடும், பரிகாரம் பலன் தராமல் போகக்கூடிய வாய்ப்பு அதிகம் உண்டு.

இதையே திருவள்ளுவர் :

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.

குறள் விளக்கம் :

நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்.

எனும் குறள் வடிவில் தெளிவாக தந்திருக்கிறார்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696 

வெள்ளி, 24 அக்டோபர், 2014

ஜீவன ஸ்தானம் எனும் பத்தாம் பாவகம் வழங்கும் தொழில் மேன்மை - மேஷ லக்கினம் பாகம் 5




 கால புருஷ தத்துவ அமைப்பிற்கு முதல் ராசியான மேஷ ராசியை லக்கினமாக கொண்ட அன்பர்களுக்கு, ஜீவன ஸ்தானம் வலிமை பெற்று அமரும் பொழுது தரும் யோக பலன்களையும், வலிமை அற்று அமரும் பொழுது தரும் அவயோக பலன்களை பற்றியும் இந்த பதிவில் சிந்திப்போம் அன்பர்களே! மேஷ லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு மகரம் ஜீவன ஸ்தானம் எனும் பத்தாம் பாவகமாக அமையும், இந்த மகரம் மேஷ லக்கினதிர்க்கும் சரி, கால புருஷ தத்துவ அமைப்பிற்கும் சரி 10ம் வீடாகவே அமைகிறது, மேலும் சர மண் தத்துவ அமைப்பில் இயங்குகிறது, இந்த மகரம் மேஷ லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு 6,8,11,12ம் பாவகங்களுடன் தொடர்பு பெறாமல் இருந்தால் ஜாதகரின் ஜீவன மேன்மை மிகவும் சிறப்பாக இருக்கும் குறிப்பாக பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறாமல் இருப்பது மிகுந்த யோகத்தை தரும்.

மேஷ லக்கினத்திற்கு ஜீவன ஸ்தானம் தொடர்பு பெரும் பாவகங்களும், ஜாதகர் பெரும் நன்மைகளும்:

ஜீவன ஸ்தானம் ஒன்பதாம் பாவகத்துடன் தொடர்பு பெரும் பொழுது :

ஜாதகர் சிறந்த பேராசிரியாராக விளங்குவார், பல கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் தாளாளர், கல்வி துறையில் சிறந்து விளங்கும் மிக பெரிய  மனிதராக வலம் வரும் யோகத்தை தரும், சமுதாயத்தில் நல்ல அந்தஸ்து மற்றும் மிகுந்த நற்ப்பெயரை பெரும் யோகத்தை தரும், சிறு கல்வி நிறுவனமாக துவங்கி, மிகப்பெரிய கல்வி சாம்ராஜ்ஜியத்தை நிறுவும் தன்மை பெற்றவர்கள் எனாலாம், இந்த அமைப்பை பெற்ற அனைவரையும் நாம் ஏணியுடன் ஒப்பிடலாம், இவரது அறிவும் திறனும் மற்றவர்களுக்கு மிகப்பெரிய அளவில் வெற்றியை தரும், ஜாதகர் பொது நலவாதியாக இருப்பார், தன்னம்பிக்கையும் மன உறுதியும் ஜாதகருக்கு மிகவும் அதிகமாக காணப்படும், எந்த ஒரு சூழ்நிலையிலும் ஜாதகர் நேர்மையை விட்டுத்தர விரும்ப மாட்டார், நமது தேசத்தின் பல உயரிய விருதுகளை பெரும், உண்மையான தகுதி பெற்றவர்கள் இவர்களே என்றால் அது மிகையில்லை, தனுசு உபய நெருப்பு தத்துவ அமைப்பில் இருப்பதால், ஜாதகர் ஆன்மீகம் சார்ந்த ஜீவன வாழ்க்கையும், கல்வி துறை மற்றும் சாஸ்திரம், எழுத்து, பத்திரிகை துறையில் மிகப்பெரிய வெற்றிகளை வாரி வழங்கும்

மேற்கண்ட அமைப்பை பெரும் ஜாதகர்கள் பலர் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் நபர்களாக காணப்படுகிறார்கள், விளையாட்டு துறையில் தனி நபர் அல்லது குழுவாக செயல்படும் யோகம் பெற்றவர்கள், தனது வெற்றிக்காக  அல்லது தனது குழுவின் வெற்றிக்காக அயராது பாடுபடும் தன்மையை பெற்றவர்கள், எந்த ஒரு செயலையும் சரியான திட்டமிடுதலுடன் செய்து வெற்றி காணும் அன்பர்கள் இவர்களே ! இதை தவிர கிராமத்தில் ஊர் பெரியவர், அல்லது பஞ்சாயத்து தலைவர், தனது சமுகத்திற்கு தலைமை பொறுப்பேற்று நடத்தி செல்லும் தலைமை பதவியை அலங்கரிக்கும் நபர்கள், நகரம் அல்லது வட்டம் போன்றவற்றிற்கு தலைவர் செயலாளர், கட்சியில் நல்ல பொறுப்புள்ள பதவிகளில் சிறப்பாக செயலாற்றும் நபர்கள் அனைவரும் மேற்கண்ட அமைப்பை நிச்சயம் பெற்று இருப்பார்கள், அரசியல் ரீதியான பதவிகள் ஜாதகரை தேடிவரும், பொதுமக்களிடம் நல்ல மதிப்பு மரியாதையை பெரும் யோகம் பெற்றவர்கள் என்றால் அது மிகையில்லை.

குறிப்பு : ( பொதுமக்கள் அல்லது குழு ஆகியவற்றை சார்ந்த தொழில்களை, அல்லது  பதவிகளை அலங்கரிக்கும் தன்மை பெற்றவர்கள், இவர்கள் அனைவரும் தனித்து செயல்படுவதை விட ஜீவன அமைப்பில்  கூட்டு முயற்ச்சியில் பணியாற்றுவது சிறந்த யோகத்தை தரும்.)

ஜீவன ஸ்தானம் பத்தாம் பாவகத்துடன் தொடர்பு பெரும் பொழுது :

கால புருஷ தத்துவ அமைப்பிற்கும் லக்கினம் என்ற அமைப்பிற்கும் ஜீவன ஸ்தானமாக வருவதாலும், சர மண் தத்துவ அமைப்பாக மகரம் அமைவதாலும் , ஜாதகர் பன்முக தொழில் திறமை பெற்றவர் எனலாம், குறிப்பாக மண் தத்துவம் சார்ந்த தொழில்களில் கொடிகட்டி பறக்கும் யோகம்  பெற்றவர்கள், எவரது சுய ஜாதகத்தில் இந்த மகரம் வலுபெற்று அமர்ந்து இருக்கின்றதோ, அந்த ஜாதகர் சர நில தத்துவத்தை குறிக்கும் மனித உடலின் உள்ள உறுப்புகள் சார்ந்த ஆய்வில் சிறந்து விளங்குவார்கள், ஒரு மனிதனை பார்த்த உடன் அவர் எவ்வித உடல் ரீதியான பாதிப்பில் உள்ளார் இவருக்கு என்ன செய்தால் நலம் பெறுவார் என்பதை மிக துல்லியமாக கண்டுணர்ந்து செயல்படும் வல்லமையை இறை அருள் இவர்களுக்கு இயற்கையிலேயே கொடுத்து இருப்பது ஆச்சரியாமான ஒன்றாகவே ஜோதிடதீபம் கருதுகிறது, பல சிறந்த சித்த மருத்துவர்கள் அனைவரது ஜாதகத்திலும் மகரம் மிகவும் வலிமை பெற்று அமர்ந்து இருப்பதை காண முடிகிறது, மேலும் மருத்துவம் சார்ந்த அனைத்து துறைகளிலும் இவர்கள் சிறந்து விளங்க இந்த மகரம் வலிமை பெற்றதே காரணமாக அமைகிறது.

இது உடல் சார்ந்த அமைப்பை மற்றும் தெளிவு படுத்துவதில்லை, மண் தத்துவம் சார்ந்த அனைத்து விஷயங்களிலும் ஜாதகரை தன்னிகரற்று விளங்க வைத்துவிடுகிறது, குறிப்பாக நிலம், வீடு, வண்டி வாகனம், பல தொழில்களில் சிறந்து விளங்கும் யோகம், பல பெரிய நிறுவனங்களை சிறப்பாக நடத்தி முன்னேற்றம் காணும் வல்லமை, பல துறைகளில் சிறந்து விளங்கும் யோகம், ஜாதகர் செய்யும் தொழில்களில் தனிப்பட்ட யுக்திகளை பயன்படுத்தி வெற்றி காணும் அதி புத்திசாலித்தனம், சிறந்த அறிவாற்றல், புதிய மருந்து மற்றும் மருத்துவ உபகரணம் கண்டுபிடிக்கும் ஆற்றல், போக்கு வரத்து துறையில் சேவை சார்ந்த தொழில்களில் அபரிவிதமான வெற்றி, விவசாயம் சார்ந்த துறைகளில் எவரும் எதிர்பாராத வளர்ச்சியை பெரும் யோகம், அனைத்து விஷயங்களையும் நிர்வகிக்கும் வல்லமை, தனக்கு கிழ் வேலை பார்க்கும் அனைவரையும் தனது ஆணைக்கு கட்டுபட்டு நடக்கும் விதமான செயல்திறன், எந்த ஒரு பிரச்சனையையும் துணிவுடன் எதிர்கொள்ளும் திறனும், அதில் வெற்றி பெரும் யோகத்தையும் தரும்.

குறிப்பு : ( சுய ஜாதகத்தில் மேற்கண்ட அமைப்பு காணப்படுமாயின், ஜாதகர் எக்காரணத்தை கொண்டும் மற்றவரிடம் வேலை செய்வது, அல்லது கூட்டாக செயல்படுவது சரியானது அல்ல, ஜாதகர் செய்யும் தொழில் சிறியதாக இருந்தாலும் கூட தனித்து இயங்குவது சிறப்பான வெற்றிகளை குவிக்க உதவும், மேலும் இவர்களுக்கு அரசு துறை வேலை வாய்ப்பு என்பது எதிர்பாராத வகையில் திடீர் என கிடைக்கும்)

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

செவ்வாய், 21 அக்டோபர், 2014

காதல் திருமணம் செய்துகொள்ளும் நிலை ஒருவருக்கு ஏன் ஏற்ப்படுகிறது? காதலில் வெற்றி, காதல் திருமணத்தில் வெற்றி பெற என்ன செய்வது ?


அன்பர்களே ! 

ஒருவர் காதல் வயப்படுவதும், வயபட்ட காதலில் வெற்றி பெறுவது சுய ஜாதகத்தின் அடிப்படையிலேயே நிகழ்கிறது, இது இயற்கையின் நியதியே இயற்க்கைக்கு மாறாக எதுவும் நிகழ்வது இல்லை, பெரும்பாலும் காதல் திருமணங்கள் குறுகிய காலத்திலேயே மன வாழ்க்கையில் பிரிவை தருவதும், குறைந்த சதவிகிதத்தில் காதல் திருமணங்கள் வெற்றி பெறுவதும் சுய ஜாதகத்தின் அடிப்படையிலேயே, ஆண் பெண் இருவரின் சுய ஜாதகத்திலும் 2,7ம் பாவகங்கள் பாதிக்கபட்ட நிலையில் இருக்கும் பெருவாரியான ஜாதகங்கள் காதல் திருமணத்திலேயே முடிந்திருக்கிறது.

 இந்த காதல் திருமணம் என்ற விஷயத்திற்கு மேல் வரும் குடும்ப வாழ்க்கை என்ற நிலையை சுய ஜாதகத்தில் ஆண்களுக்கு 6ம் பாவகமும், பெண்களுக்கு 8ம் பாவகமும் நிர்ணயம் செய்கிறது, ஆண்களது சுய ஜாதகத்தில் 6ம் பாவகம் வலிமை பெரும் பொழுது ஜாதகர் தனது வாழ்க்கை துணையை உயிராக நினைத்து காப்பற்றும் வல்லமையை தரும், பெண்களது ஜாதகத்தில் 8ம் பாவகம் வலிமை பெரும் பொழுது ஜாதகி தனது கணவன் மேல் அதிக பாசமும் அன்பும் கொண்டவராகவும், கற்பு நெறியில் வழுவாமல் சிறப்பான இல்லற வாழ்க்கையையும், சிறந்த குடும்ப வாழ்க்கையையும் தருபவராக இருப்பார் என்பதிற்கு மற்று கருத்து இல்லை,

இதை ஒரு உதாரண ஜாதகம் கொண்டு காணும் பொழுதே நாம் தெளிவாக உணர முடியும்.


லக்கினம் : கன்னி 
ராசி : விருச்சிகம் 
நட்சத்திரம் : அனுஷம் 3ம் பாதம் 

ஜாதகிக்கு தற்பொழுது நடைபெறும் புதன் திசை தரும் பலன்கள் : ( 23/01/2003 முதல் 23/01/2020 வரை ) 

3,5,9,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 200% இன்னல்களை தருவது 3ம் பாவக வழியில் இருந்து அசட்டு தைரியத்தையும், சிந்திக்காமல் முட்டாள் தனமாக செயலாற்றும் தன்மையை தந்தது, 5ம் பாவக வழியில் இருந்து சுயமான சிந்திக்கும் புத்திசாலிதனத்தை மழுங்கடித்தது, ஜாதகியை காப்பற்ற யாரும் இல்லை என்ற நிலையை தந்தது, 9ம் பாவக வழியில்  இருந்து சமுதாயத்தில் மிகப்பெரிய அவ பெயரை சந்திக்கும் தன்மையை தந்தது, 11ம் பாவக வழியில் இருந்து ஜாதகி அதிர்ஷ்டம் இல்லாத துரதிர்ஷ்டம் பிடித்தவர் என்பதும், அதனை நோக்கியே ஜாதகியின் வாழ்க்கை பாதை அமைந்தது என்பதும் உறுதியானது, ஆக ஜாதகிக்கு தற்பொழுது நடைபெறும் புதன் திசை பாதக ஸ்தான வழியில் இருந்து 200% இன்னல்களை வாரி வழங்கி கொண்டு இருப்பது உறுதியாகிறது.

ஜாதகி சரியாக தற்பொழுது நடைபெறும் புதன் திசையில் ராகு  புத்தியில்  ( 20/07/2012 முதல் 07/02/2015 வரை ) தான் விரும்பிய நபரை நள்ளிரவில் தனது பெற்றோரை ஏமாற்றிவிட்டு, சுவர் ஏறி குதித்து சென்று திருமணம் செய்துகொள்ள வைத்தது, ( ஜாதகி கற்று கொண்ட நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் சிறப்பாக இதற்க்கு பயன்படுத்திகொண்டார் ) இதனால் ஜாதகியின் கல்வி பாதியிலேயே முடிவுக்கு வந்தது, இதன் பிறகு ஜாதகியின் பெற்றோர் காவல் நிலையம் மற்றும் பல்வேறு இடங்களில் அவமானபட்டது என்ற வகையில் பல இன்னல்களை தந்தது.

 உச்சகட்டமாக இவர்களின் உறவினர்களே இவர்களை ஏளனமாக பேச வைக்க காரணமாக அமைந்தது, ஜாதகி இதையெல்லாம் சிறிதும் சட்டை செய்யாமல், தனது லட்சியமே கருமம் என்று செயல்பட ஜாதகியின் 3ம் பாவகம் காரணமாக அமைந்தது, குறிப்பக ஜாதகியின் பெற்றோரை ஜாதகி மனிதராகவே மதிக்கவில்லை என்பது  இங்கே கவனிக்க வேண்டும்,  ஜாதகத்தில் தாய் தந்தையரை குறிக்கும் 10.4ம்  பாவகம் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றிருப்பது, ஜாதகியின் பெற்றோருக்கு இறந்ததிற்கு சமானமாக ஒரு நிகழ்வை ஜாதகி செய்ய வைத்தது.

இதற்க்கு பிறகு நடந்த விஷயங்கள் தான் ஜாதகியின் வாழ்க்கையில் விரக்தியின் உச்சிக்கே கொண்டு சென்றது சுய ஜாதகத்தில் 7ம் பாவகம் வலிமை பெற்று இருப்பது ஜாதகிக்கு வாழ்க்கை துணை தேடித்தந்தது, 2ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றது வாழ்நாள் முழுவதும் ஜாதகிக்கு குடும்ப வாழ்க்கை இல்லை என்பதை ஸ்திரமாக ( சிம்மம் ஸ்திர நெருப்பு தத்துவம் ) நிருபணம் செய்தது, திருமணதிற்கு பிறகு ஜாதகிக்கு வாழ்க்கை நித்தியகண்டம் பூரண ஆயுசாக மாறியது, ஜாதகியின் கணவனுக்கு ஒரு நிரந்தரமான வேலை இல்லை என்பதே  அப்பொழுதான் தெரிந்தது, மேலும் ஜாதகரின் கணவர் அவரது பெற்றோரின் தயவிலேயே ஜீவனம் செய்பவர் என்பது ஜாதகிக்கு பெரிய இடியாக தலையில் இறங்கியது, தனது பெற்றோரை மீறி எந்த ஒரு விஷயத்தையும் செயலாற்றும் தன்மை அற்றவர் என்பதும், ஜாதகியும் அவர்களையே சார்ந்து வாழும் நிலைக்கு தள்ளபட்டார், குறுகிய காலத்தில் குழந்தை கருத்தரித்தது, மருத்துவ செலவிற்கும் ஜாதகி தனது வாழ்க்கை துணையின் பெற்றோரை எதிர்பார்க்கும் சூழ்நிலையை தந்து பல அவமானங்களை சந்திக்க வைத்தது, ஜாதகியின் தரித்திரம் முழுமையாக வேலை செய்ததை மிகவும் தாமதமாக உணர்ந்தார்.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ஜாதகி 8 மாத கர்ப்பிணியாக புகுந்த வீட்டில் இருந்து பொய் காரணங்களை கூறி ராசி இல்லாதவள்  என்று விரட்டி அடிக்கபட்டர், அப்பொழுதுதான் ஜாதகி தனது விதியின் கோரபிடியை உணர்ந்தார், பிறகு ஜாதகியின் தாய் மாமன் தற்பொழுது ஜாதகிக்கு அடைக்கலம் அளித்துள்ளார், இருப்பினும் ஜாதகி இன்னும் சாகசமான வாழ்க்கைக்கு திரும்ப இயலவில்லை, ஜாதகியின் பெற்றோர் ஆதரவும் இல்லை, சென்ற இடத்திலும் வாழ இயலவில்லை, இனிவரும் காலமும் ஜாதகிக்கு நன்மையை தரும் அமைப்பில் இல்லை ஏனெனில் நடைபெறும் புதன் திசை பாதக ஸ்தான பலனை தருகிறது, இனி அடுத்து வரும் புதன் திசை குரு புக்தி ஜாதகிக்கு 3,5,9,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவக பலனையே வழுத்து நடத்துகிறது, இடையில் நடந்த ராகு புத்தி மட்டும் ஜாதகிக்கு 7,11ம் வீடுகள் லாப ஸ்தானத்துடன் தொடர்பு பெற்று சிறிது நன்மையை செய்தது, அதுவும் திசை நடத்தும் பாதக ஸ்தான பலனக்கு கட்டுபட்டே நடைபெற்றது என்பது தற்பொழுது நடைபெறும் நிகழ்வுகளில் இருந்து நாம் உணர்ந்துகொள்ளும் வாய்ப்பை ஜாதகியின் ஜாதகம் தெளிவு படுத்துகிறது.

மேற்கண்ட தீய பலன்களை ஜாதகியும், ஜாதகியை சார்ந்தவர்களும் அனுபவிக்க கரணம் என்ன ? என்பதை இனி பார்ப்போம் அன்பர்களே! முதலில் ஜாதகியின் பெற்றோர்களின் தகப்பனார் மற்றும் தாயார் அவர்களுக்கு பிறந்த பெண்  குழந்தையை சிசு கொலை செய்து இருக்கின்றனர், ஜாதகியின் பெற்றோரும் ஜாதகிக்கு முன் கருத்தரித்த கருவை, கருகலைப்பு செய்து இருக்கின்றனர், இதன் விளைவுகளை ஜாதகியின் சுய ஜாதகத்தில் 5, 9ம் வீடுகளின்  நிலையை வைத்து தெளிவாக தெரிந்துகொள்ள இயலும், 5,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம், ஜாதக ஆலோசனைக்கு வந்த ஜாதகியின் தாய் மாமாவிடம் விசாரித்து உறுதி செய்துகொண்டோம் ( ஏனெனில் ஜாதகியின் 5ம் வீடு கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ஸ்தானமாகவும் சர நில தத்துவமாக இருப்பதால் மண் தத்துவம் கொண்ட இயக்க நிலையில் இருக்கும் மனித உயிர் என்பது உறுதியாகிறது ) எனவே ஜாதகியும் ஜாதகியின் பெற்றோரும் அதிக இன்னல்களுக்கும் அவமானத்திற்கும் ஆளாக காரணம் அவர்கள் செய்த வினை பதிவே, இதற்க்கு உண்டான பலன்களையே இவர்கள் அனுபவிக்க நேருகிறது என்பதால், இதில் வருத்தப்பட ஒன்றும் இல்லை என்றே ஜோதிடதீபம் கருதுகிறது.

ஜாதகியின் காதல் ஜாதகியையும் ஜாதகியை சார்ந்தவர்களையும் எங்கு கொண்டு நிறுத்தியிருக்கிறது என்பது இதில் இருந்து நாம் தெரிந்துகொள்ள இயலும், எந்த ஒரு நன்மையும் தீமையும் அவர்கள் செய்யும் வினை பதிவிற்கு ஏற்ப்பவே நடைபெறுகிறது என்பதும் நிருபணமாகிறது. ஆக இவர்கள் இனி வரும் காலங்களிலாவது முதலில் செய்த பாவங்களை செய்யாமல் இருப்பதும், செய்த வினை பதிவிற்கு பரிகாரம் தனது மகள் பெற போகும் குழந்தையை காப்பற்றி, தனது மகளுக்கும் நன்மை செய்து வாழ்வதுமே சிறந்தது என்று ஜாதக ஆலோசனை வழங்கி அனுப்பி வைத்தோம்.

அடுத்த பதிவில் காதலில் வெற்றி பெற்று வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றத்தை பெற்ற ஜாதக அமைப்பை பற்றி பதிவு செய்கிறோம், அன்பர்களே!

பின் குறிப்பு :

 மேற்கண்ட மண் தத்துவ ரீதியல் பாவம் செய்த இவர்களுக்கே, இந்த அளவிற்கு கடுமையான அவயோக பலன்களை அனுபவிக்க நேர்ந்தது எனில், ( ராகுகேது தோஷம், செவ்வாய் தோஷம், சர்ப்ப தோஷம், நாக தோஷம், களத்திர தோஷம், கிரக சந்திப்பு, திசா சந்திப்பு, ரஜ்ஜு பொருத்தம், நட்சத்திர பொருத்தம்) என்று வகைக்கு பல தோஷங்களை சொல்லிக்கொண்டு பல பேரது வாழ்க்கையில் விளையாடிக்கொண்டு இருக்கும் போலி ஜோதிடர்களுக்கு, காற்று நீர் தத்துவ அமைப்பில் இருந்து எவ்வித சிரமங்களை அவர்களும், அவர்களது குழந்தைகளும் அனுபவிப்பார்கள் என்பது இறை நிலைக்கே வெளிச்சம், இறை அருள் அவர்களுக்கு சரியான வழியை காட்டட்டும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

ஞாயிறு, 19 அக்டோபர், 2014

ஒருவரின் சுய ஜாதகத்திற்கு துல்லியமாக ஜாதக பலன் காண்பது எப்படி ?


அன்பர்களே ! 

ஒருவரின் சுய ஜாதகத்திற்கு பலன் காண அடிப்படையில் தேவையான விஷயங்களை முதலில் காண்போம், ஒருவரின் சுய ஜாதகத்தில் நாம் பலன் காண வேண்டும் எனில் ஜாதகரின் லக்கினம் என்ன ? என்பது தெளிவாக தெரிய வேண்டும், எடுத்துகாட்டாக ஒருவரின் லக்கினம் கடகம் எனில், இந்த கடக ராசியில் லக்கினம் எனும் முதல் பாவகம் எந்தனை பாகையில் ஆரம்பிக்கிறது என்பது துல்லியமாக கண்டு உணர்வது ஜோதிடர்களுக்கு ஜாதக பலன்களை தெளிவாக கூற எதுவாக அமையும், ஏனெனில் லக்கினம் ஆரம்பிக்கும் பாகையும், மற்ற பனிரெண்டு பாவகங்கள் ஆரம்பிக்கும் பாகைகையும், முடியும் பாகையும் வைத்தே நவ கிரகங்கள் எந்த பாவகத்தில் அமர்ந்து இருக்கிறது என்பதை தெளிவாக தெரிந்து கொள்ள இயலும் .  

இதற்க்கு குறிப்பிட்ட ஜாதகரின் பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த இடம் ஆகியவை இருந்தால் மட்டுமே, நாம் அந்த ஜாதகரின் லக்கினம் ராசி மற்றும் ஜாதகர் பிறக்கும் பொழுது என்ன திசை நடந்துகொண்டு இருந்தது, தற்பொழுது எந்த திசை நடைபெற்று கொண்டு இருக்கிறது, இனிவரும் திசை ஜாதகருக்கு என்ன பலனை தரும் என்பதை பற்றி தெரிந்துகொள்ள இயலும், மேற்கண்டவை ஒருவரின் சுய ஜாதக குறிப்பில் இருந்தே நாம் தெளிவாக தெரிந்துகொள்ள முடியும், மேலும் ஜாதகர் பிறந்த நேரத்தை வைத்தே, அவரின் சுய ஜாதகம் சரியாக இருக்கின்றதா என்பதை தெளிவாக தெரிந்துகொள்ள இயலும்.

அடுத்து ஒருவரின் சுய ஜாதகத்தில் ஜாதக பலன்களை தெளிவாக தெரிந்துகொள்ள, நமக்கு 3 விஷயங்கள் தேவை, 1) ஜாதகரின்  லக்கினத்தை அடிப்படையாக கொண்டு 12 பாவகங்களின் நிலையை தெரிந்துகொள்ள வேண்டும், 2) தற்பொழுது நடைபெறும் திசை,புத்தி,அந்தரம்,சூட்சமம் 12 பாவகத்தில் எந்த பாவக பலனை  ஏற்று நடத்துகிறது,  3) அப்படி ஏற்று நடத்தும் பாவகங்களுடன் தற்பொழுது சஞ்சாரம் செய்யும் கோட்சார கிரகங்கள் எவ்வித தொடர்பை பெறுகிறது யோகம் அல்லது  அவயோக பலன்களை தருகிறதா என்பது மட்டும் தெளிவாக தெரிந்தால் போதும், ஒருவரின் சுய ஜாதகத்திற்கு சரியான ஜாதக பலன்களை சொல்விட முடியும், மேலும் நடந்த, நடந்துகொண்டு இருக்கிற, நடக்க இருக்கின்ற பலன்களை மிகவும் துல்லியமாக எடுத்து கூற இயலும், இதை ஒரு உதாரண ஜாதகம் கொண்டு காண்பது சிறப்பாக இருக்கும் என்று ஜோதிடதீபம் கருதுகிறது.

உதாரண ஜாதகம் :


லக்கினம் : விருச்சிகம் 
ராசி : கடகம் 
நட்சத்திரம் : பூசம் 3ம் பாதம் 

ஜாதக அமைப்பில் 12 பாவகங்களின் நிலை 

1,3,5ம் வீடுகள் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம்  பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 5ம் பாவக வழியில் இருந்து யோகங்களை வாரி வழங்கும்.

2,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜீவன ஸ்தான அமைப்பில் இருந்து யோக பலன்களை வாரி வழங்கும்.

7,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 11ம் பாவக வழியில் இருந்து யோக பலன்களை வாரி வழங்கும்.

4,8ம் வீடுகள் ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 8ம் பாவக வழியில் இருந்து அவயோக பலன்களை தரும்.

6,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது பாதக ஸ்தான வழியில் இருந்து அதிக அளவில் அவயோக பலன்களை தரும்.

12ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 12ம் பாவக வழியில் இருந்து அவயோக பலன்களை வாரி வழங்கும்.

ஆக மேற்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதக அமைப்பின்படி 1,2,35,7,10,11ம் பாவகங்கள் வலிமை பெற்றும். 4,6,8,9,12ம் பாவகங்கள் வலிமை குறைந்தும் காணப்படுகிறது.

அடுத்து ஜாதகருக்கு தற்பொழுது நடைபெறும் புதன் திசை ( 02/03/1998 முதல் 02/03/2015 வரை ) 2,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவக பலனை ஏற்று நடத்துவது ஜீவன ஸ்தான வழியில் இருந்து ஜாதகருக்கு யோக பலன்களை வாரி வழங்கி கொண்டு இருக்கிறது.

புதன் திசையில் தற்பொழுது நடைபெறும் சனி புத்தி ( 22/06/2012 முதல் 02/03/2015 வரை ) 2,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவக பலனை ஏற்றும் 7,11ம் வீடுகள் லாப ஸ்தான பலனை ஏற்றும் யோக பலனை வாரி வழங்கி கொண்டு இருப்பது ஜாதகருக்கு மிகுந்த அதிர்ஷ்டத்தையும், ஜீவன வாழ்க்கையில் முன்னேற்றத்தையும் தரும்.

இனி நடைபெறும் திசை மற்றும் புத்தி ஜீவன ஸ்தான பலனையும், லாப ஸ்தான பலனையும் தருவது தெளிவாக சுய ஜாதக ரீதியாக தெரிந்து விட்டது, மேலும் தற்பொழுது நடைபெறும் 10,11ம் பாவகங்களுடன் ஏதாவது கோட்சார கிரக தொடர்பு இருக்கிறதா, அப்படி தொடர்பு பெரும் கோட்சார கிரகம் 10,11ம் பாவகங்களுக்கு யோக பலனை தருகிறதா? அவயோக பலனை தருகிறதா? என்பது மட்டும் நாம் தெரிந்துகொண்டால் போதும் ஜாதகருக்கு தற்பொழுது நடைபெறும் ஜாதக ரீதியான பலன்களை தெளிவாக சொல்லிவிட முடியும், எதிர்வரும் திசை மற்றும் புத்திகள் என்ன செய்யும் என்பதையும் சொல்லிவிட முடியும், தற்பொழுது கோட்சார கிரகங்களின் தொடர்பை 10,11ம் பாவகங்கள் பெறாத  காரணத்தால் கோட்சார ரீதியான பலன்கள் ஜாதகருக்கு எவ்வித யோக அவயோக பலன்களை தரவில்லை என்பதே ஜாதக ரீதியான கோட்சார பலன்கள், ஆக மேற்கண்ட முறையிலேயே ஜாதக பலனை சரியாக சொல்ல இயலும் அன்பர்களே !

சில அன்பர்கள் எனக்கு 7ல் சனி இருக்கிறது 2ல் ராகு இருக்கிறது, 3ல் சுக்கிரன் இருக்கிறது என்று கேள்விகளை எழுப்புகின்றனர், இதற்க்கு நாம் என்னவென்று பதில் சொல்வது? மொட்டைதாசன் குட்டையில் விழுந்தான் என்ற வண்ணம் கேள்விகள் வருவது சரியான அணுகு முறையில்லை அன்பர்களே ! எந்த ஒரு ஜாதகத்திற்கும் பலன் சொல்ல வேண்டும் எனில் கிழ்கண்ட விஷயங்கள் இல்லாமல் ஜாதக பலன்கள் சொல்ல இயலாது என்பதை ஜோதிட தீபம் இங்கே பதிவு செய்ய விரும்புகிறது.

1) பிறந்த தேதி, நேரம், இடம் 
2) ஜாதகரின் லக்கினம் உற்பட 12 பாவகங்களின் வலிமை.
3) தற்பொழுது நடைபெறும் திசை,புத்தி,அந்தரம்,சூட்சமம் ஏற்று நடத்தும் பாவகங்களின் வலிமை.
4) கோட்சார கிரகங்கள் தற்பொழுது நடைபெறும் திசை,புத்தி,அந்தரம்,சூட்சமம் ஏற்று நடத்தும் பாவகங்களுடன் பெரும் தொடர்பு.

ஆகியவை வைத்து ஜாதகருக்கு ஜாதக பலன் காணும் பொழுது நிச்சயம் ஜாதகருக்கு உண்டான பலாபலன்களை மிக தெளிவாக சொல்லிவிட முடியும் அன்பர்களே !

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696