புதன், 29 ஏப்ரல், 2015

ஸ்திர ராசிகளுக்கு பாக்கியஸ்தானமே பாதகஸ்தானமாகிறது.பாக்கியாதிபதியின் தசையில் பலன் எப்படி இருக்கும்?




சர ராசிகளை லக்கினமாக கொண்டவர்களுக்கு லாபஸ்தானம் பாதக ஸ்தானமகவும், ஸ்திர ராசிகளை லக்கினமாக கொண்டவர்களுக்கு பாக்கிய ஸ்தானம் பாதக ஸ்தானமாகவும், உபய ராசிகளை லக்கினமாக கொண்டவர்களுக்கு களத்திர ஸ்தானம் பாதக ஸ்தானமாகவும், இறை நிலையால் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது, மேலும் ஒருவரது ஜாதகத்தில் லக்கினம் முதல் 12 பாவகங்களும் பெரும் வலிமைக்கு ஏற்ப திசா புத்திகள் யோக பலன்களோ, அவயோக பலன்களே ஜாதகருக்கு ஏற்று நடத்துகிறது.

மேற்கண்ட கேள்வி பொதுவாக ஜாதக கணிதம் பற்றிய தெளிவு இல்லாத சூழ்நிலையில் வினவ படுவதாக "ஜோதிடதீபம்" கருதுகிறது, அதாவது பாதக ஸ்தான அதிபதியாக வரும் கிரகத்தின் திசை பாதக ஸ்தான பலனையே செய்யும் என்று கணிப்பது முற்றிலும் தவறான கணிப்பாகும், மேலும் ஒருவரது ஜாதகத்தில் எந்த ஒரு கிரகமும் தனது திசையில் பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்த வாய்ப்புள்ளது, எந்த ஒரு கிரகமும் யோகம் தரும் பாவகங்களின் பலனை ஏற்று நடத்த வாய்ப்புள்ளது, இது அவரவர் சுய ஜாதக அமைப்பில் பாவகங்களின் தொடர்பு மற்றும் வலிமை சார்ந்த விஷயம்.

இதற்க்கு உதாரண ஜாதகம் கொண்டு விளக்கம் காண்போம் :




ஜாதகர் லக்கினம் : கடகம் 
ராசி : கடகம் 
நட்சத்திரம் : ஆயில்யம் 4ம் பாதம் 

மேற்கண்ட கடக இலக்கின ஜாதகருக்கு பாதக ஸ்தானமான அமைவது லக்கினத்திற்கு 11ம் வீடான லாப ஸ்தானம் , இது ஜாதகருக்கு அதிர்ஷ்டம் மற்றும் ஜாதகர் அடையும் லாபத்தை குறிக்கும், சர லக்கினம் என்பதால் இது ஜாதகருக்கு பாதக ஸ்தானமாக செயல்படுகிறது, இதன் அதிபதி சுக்கிரன் ( இது பொதுவாக பாரம்பரிய ஜாதக கணிதம் கொண்டு பார்க்கும் பொழுது ) இந்த ஜாதகருக்கு பாதக ஸ்தான அதிபதியான சுக்கிரன் தனது திசையில் எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறார் என்பதை ஆய்வு செய்யும் பொழுது சுக்கிரன் 1,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று யோக பலன்களை வாரி வழங்குகிறார், அதாவது பாதக ஸ்தான அதிபதி பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தாமல் யோகத்தை தரும் களத்திர ஸ்தான பலனை ஏற்று நடத்துவது மிகுந்த நன்மையை தரும் அமைப்பாக கருதலாம், ஆக இந்த ஜாதகருக்கு பாதக ஸ்தான அதிபதி பாதக ஸ்தான பலனை செய்யவில்லை, வேறு எந்த கிரகம் ஜாதகருக்கு பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துகிறது என்பதை ஆய்வு செய்வோம் அன்பர்களே !

இவரது சுய ஜாதக அமைப்பின் படி, புதன்,சனி,ராகு ஆகிய கிரகங்கள் பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துகிறது, புதன் என்ற கிரகம் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்தில் அமர்ந்து இருப்பதால் பாதக ஸ்தான பலனை நடத்துகிறது என்றால், சனி பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துவது எப்படி? ராகு பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துவது எப்படி? என்ற கேள்விகளுக்கு ஜாதக கணிதம் தெரிந்தோர் மிக எளிதாக பதில் காண இயலும், எனவே இந்த ஜாதகருக்கு பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துவது பாதக ஸ்தான அதிபதியான சுக்கிரன் அல்ல, 3,12க்கு உடைய புதனும், 7,8க்கு உடைய சனியும், லக்கினத்தில் அமர்ந்த ராகு பகவானுமே பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துகின்றனர்.

 எனவே ஒருவரது ஜாதகத்தில் பாதக ஸ்தான அதிபதியின் திசாபுத்தி, பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தும் என்று ஜாதக கணிதம் செய்வது முற்றிலும் தவறான கணிப்பே அன்றி, துல்லியமான ஜாதக கணிதம் அல்ல அன்பர்களே! மேலும் ஒருவரது ஜாதகத்தில் பாதக ஸ்தானம் எனும் பாவகம் எந்த வீடுகளுடன் தொடர்பு பெறுகிறதோ அந்த வீடுகளின் பலனை ஏற்று நடத்தும் கிரகம் எதுவென்றாலும் பாதக ஸ்தான பலனை வழங்க  கூடும், அதே போன்று பாதக ஸ்தான அதிபதியான கிரகம் சுய ஜாதகத்தில் யோகம் தரும் பாவக பலனை ஏற்று நடத்தினால், பாதக ஸ்தான அதிபதியின் திசாபுத்திகள் யோக பலன்களை தர தவறுவதில்லை, எனவே ஒருவரது சுய ஜாதக வலிமையை முதலில் கருத்தில் கொண்டு, நடைபெறும் திசை மற்றும் புத்திகள் ஏற்று நடத்தும் பாவகங்களின் தன்மையை கருத்தில் கொண்டு சுய ஜாதக பலன் காண முற்படுவதே துல்லியமான ஜாதக பலன்களை எடுத்து கூற இயலும், மாறாக பாதக ஸ்தான அதிபதி, மற்றும் துர் ஸ்தான அதிபதிகள் திசை மற்றும் புத்திகள் இன்னல்களையே தரும் என்று கணிப்பது முற்றிலும் தவறான ஜாதக கணிதமே அன்றி வேறில்லை என்பது "ஜோதிடதீபத்தின் " ஆணித்தரமான கருத்தாக இங்கே பதிவு செய்கிறது.

குறிப்பு : 

எந்த ஒரு ஜாதகருக்கும் தற்பொழுது அல்லது எதிர்காலத்தில் பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தும் திசாபுத்திகள் வருமாயின், அந்த ஜாதகருக்கு பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெற்ற பாவக அமைப்பில் இருந்து 200% விகித இன்னல்கள் உண்டாகும் என்பதை கவனத்தில் கொள்க.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

செவ்வாய், 28 ஏப்ரல், 2015

சுய ஜாதகத்தில் தற்பொழுது நடைமுறையில் உள்ள திசை பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தும்பொழுது ஜாதகர் பெரும் இன்னல்கள் !


பொதுவாக சுய ஜாதகத்தில் எந்த ஒரு பாவகமும் பாதக ஸ்தான அமைப்புடன் தொடர்பு பெறுவது, ஜாதகருக்கு நல்லதல்ல, பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்ற பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை ஜாதகர் அனுபவித்தே ஆகவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளபடுவார், மேலும் சம்பந்த பட்ட பாவக வழியில் வரும் உறவுகளுடன் இணக்கம் காண இயலாமல், கருத்து வேறுபாட்டுடன், பகைமை பாராட்டும் சூழ்நிலை எதிர்பாராத வண்ணம் உருவாகிவிடும், கிழ்கண்ட ஜாதகிக்கு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்ற பாவகங்கள், தற்பொழுது நடைபெறும் திசையில் வழங்கும் பலன்களை பற்றி சற்று சிந்திப்போம் அன்பர்களே !



லக்கினம் : துலாம் 
ராசி : சிம்மம் 
நட்சத்திரம் : மகம் 3ம் பாதம் 

தற்பொழுது ஜாதககிக்கு நடைபெறும் திசை சூரியன் :  ( 06/07/2011 முதல் 05/07/2017 வரை ) ஜாதகிக்கு நடைமுறையில் உள்ள சூரியன் திசை 1,5,7,11ம் வீடுகள், சர லக்கினத்திற்கு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று ஜாதகிக்கு அவயோக பலனை வழங்கிக்கொண்டு இருக்கிறது, ஜாதகி மேற்கண்ட பாவக வழியில் இருந்து எவ்வித பாதிப்புகளை சந்திக்கிறார் என்பதை ஆய்வு செய்வோம் அன்பர்களே !

1) லக்கினம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவதும், லக்கினம் ஜாதகிக்கு கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் ராசியான துலாம் ராசியாகவும், சர காற்று தத்துவ அமைப்பில் இயகுவதாலும், ஜாதகி தனது சுய சிந்தனை மற்றும் அறிவு திறனை இழக்கிறார், பாதிக்க படுவது பதாக ஸ்தானத்துடன் என்பதால் இந்த ராசி கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஸ்திர நெருப்பு தத்துவம் என்பதாலும், ஜாதகி தனது அறிவார்ந்த செயல்களில் அவசரமும் முன்கோபமும் இருப்பதால், ஜாதகியினால் தெளிவான சிந்தனையுடன் செயலாற்ற இயலாமல், மற்றவர்களுடன் பகைமை கொண்டு தனக்கு வரும் இன்னல்களுக்கு தானே காரணமாக இருப்பது வருந்ததக்கது, சுய கட்டுபாடு இழந்து, தெளிவில்லாத சிந்தனையுடன் செய்யும் காரியங்களில் தோல்வியை சந்திக்கும் தன்மையை தரும், மேலும் ஜாதகியின் லக்கினம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு களத்திர பாவகமாக வருவதால், வாழ்க்கை துணை வழியில் இருந்தும், நண்பர்கள் மற்றும் வெளிவட்டார பழக்க வழக்கங்களில் இருந்தும் அதிக இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலையை ஜாதகியே உருவாக்கிகொள்ளும் நிலை வரலாம்.

2) பூர்வ புண்ணியம் எனும் 5ம் பாவகம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவதும், 5ம் பாவகம் ஜாதகிக்கு கால புருஷ தத்துவ அமைப்பிற்கு லாப ஸ்தானமாக வருவதாலும், ஜாதகிக்கு கிடைக்கும் அதிர்ஷ்டம் மற்றும் லாபங்களை ஜாதகியே உதறும் தன்மையை தரும், ஸ்திர காற்று மாறும் ஸ்திர நெருப்பு இரண்டும் பாதிப்பது, ஜாதகியை தனது பூர்வீக இருப்பிடத்தை விட்டு வெளியில் சென்று ஜீவனம் மேற்கொள்ளும் சூழ்நிலையை தரும், தனது குழந்தைகள் அமைப்பில் இருந்து பிரிவும், அவர்களுக்கு செய்யும் கடமைகளில் இருந்து பின்னடைவையும் தரும், மேலும் ஜாதகி பிற்போக்கு தனமான மூடநம்பிக்கைகளில் அதிக ஈடுபாட்டை தர கூடும், மற்றவர்கள் சொல்வதை ஆலோசிக்காமல், அப்படியே நம்பும் தன்மையை தரும், சுய சிந்தனை செயல்படாது, சமயோசித புத்திசாலித்தனம் ஜாதகிக்கு கைகொடுக்காது.

3) களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவதும், 7ம் பாவகம் ஜாதகிக்கு கால புருஷ தத்துவ அமைப்பிற்கு முதல் ராசியாகவும் சர நெறுப்பு தத்துவமாக அமைவதால், ஜாதகிக்கு வாழ்க்கை துணை வழியில் இருந்து அதிக இன்னல்களும், ஜாதகியால் கணவருக்கு எதிர்பாராத இன்னல்களும், துன்பங்களும் அதிகமாக ஏற்ப்படும், இந்த காலங்களில் ஜாதகியின் கணவருக்கு வரும் இன்னல்களுக்கு ஒரு அளவு இருக்காது, மேலும் மேஷ ராசியை ஜாதகி களத்திர பாவகமாக கொண்டு இருப்பது, கணவருக்கு வரும் நேரடி பாதிப்புகளையும், இன்னல்களையும் தெளிவாக காட்டுகிறது.

4​) லாப ஸ்தானம் எனும் 11ம் பாவகம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகிக்கு வேறு பாவக வழியில் இருந்து வரும் யோக வாய்ப்புகளை ( உதாரணமாக 10ம் பாவக வழியில் இருந்து வரும் தொழில் முன்னேற்றம் ) ஜாதகி உதறி தள்ளும் சூழ்நிலையை தரும், ஜாதகிக்கு உதவி செய்ய யாரும் முன் வரமாட்டார்கள், நம்பியவர்கள் ஜாதகியை ஏமாற்ற கூடும், தனது குழந்தைகள் வழியில் இருந்து சில இன்னல்களையும் துன்பங்களையும் ஜாதகி எதிர்கொள்ளும் தன்மையை தரக்கூடும், உடல் ரீதியான பாதிப்பை விட, ஜாதகிக்கு மன ரீதியான பாதிப்பே மிக அதிகமாக காணப்படும், தன்னம்பிக்கை வெகுவாக குறையும், பித்தம் சம்பந்தமான நோய்கள் ஜாதகியை தாக்கக்கூடும், வயிறு சார்ந்த பிரச்சனைகள் ஜாதகிக்கு அதிக துன்பத்தை தரும், தொழில் மூலம் வரும் லாபம் அனைத்தும் வீண் விரையம் ஆகும், மற்றவர்களை நம்பி செய்யும் காரியங்கள் யாவும் பெரிய பின்னடைவை சந்திக்கும்.

ஆக தற்பொழுது நடைமுறையில் உள்ள சூரியன் திசை ஜாதகிக்கு பாதக ஸ்தான பலனை தருவதால் மேற்கண்ட பாவக வழியில் இருந்து 200% விகித இன்னல்களை ஜாதகி அனுபவிக்கும் தன்மையை தரும், ஜாதகியின் சுய கட்டுப்பாட்டை மீறி விதியானது வெகு வேகமாக வேலை செய்யும், தான் தரவேண்டிய பாவக வழிகளில் இருந்து இன்னல்களை தங்குதடையின்றி வழங்கும் என்பதால், ஜாதகி பொறுமை காப்பதே நலம் தரும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

சனி, 25 ஏப்ரல், 2015

வரனின் ஜாதகத்தில் 5ல் ராகு என்றால் புத்திர பாக்கியம் (ஆண் வாரிசு) கிடைக்காதா ?


5ல் ராகு அமர பெற்ற ஆண்களின் ஜாதகங்களை பார்க்கும் பெண்ணை பெற்றவர்கள், மறு பேச்சுக்கே இடமில்லாமல் தங்களது பெண்ணை திருமணம் செய்து தர மறுக்கின்றனர், இதை 5ல் ராகு அமைய பெற்ற திருமணம் ஆகாத இளைஞர்களிடமும் அவர்களை பெற்றவர்களையும் கேட்டல் கதை கதையாக சொல்வார்கள், உண்மையில் இவர்களது ஜாதகத்தை ஆய்வு செய்யும் ஜோதிடர்கள் ராகு பகவான் உண்மையில் 5ம் பாவகத்தில்தான் அமர்ந்து இருக்கின்றாரா? 5ல் அமர்ந்த ராகு பகவான் ஜாதகருக்கு எவ்விதம் தீமையை செய்கிறார்? லக்கினத்திற்கும் கால புருஷ தத்துவ அமைப்பிற்கும் எந்த ராசியுடன் சம்பந்தம் பெறுகிறார், ராகு பாகவானால் பாதிக்க பட்ட 5ம் பாவகத்தின் பலனை தற்பொழுது நடைபெறும் திசை புத்தி ஏற்று நடத்துகிறதா? எதிர்வரும் திசை புத்தி ஏற்று நடத்துகிறதா ? என்ற கேள்விகளும் துணை கேள்விகளும் நிறைய உண்டு, ஆனால் நமது ஜோதிட அன்பர்கள் 5ல் ராகு அமர்ந்தாலே ஜாதகருக்கு "புத்திர பாக்கியம்" கிடையாது என்ற முடிவுக்கு வருவது எப்படி? என்று தெரியவில்லை.  

இவர்கள் சொல்லும் வார்த்தையை வேதவாக்காக எடுத்து கொள்ளும் பெண்ணை பெற்றவர்களின் மன நிலையும் விளங்க வில்லை, சுய ஜாதகத்தில் ஒருவருக்கு லக்கினத்தில் இருந்து 5ம் பாவகம் பூர்வ புண்ணியம் என்று வர்ணிக்கப்படும், புத்திர ஸ்தானம் இந்த பாவகத்தில் அமரும் ராகு பகவான் ஜாதகருக்கு புத்திர பாக்கியத்தை தர மாட்டார் என்று முடிவு செய்வது முற்றிலும் ஜோதிட கணித அமைப்பிற்கு முரண்பட்ட கருத்தாகவே " ஜோதிடதீபம் " கருதுகிறது, 5ல் ராகு அமைய பெற்ற ஜாதகருக்கு ஆண் வாரி உள்ள ஜாதகங்கள் நிறைய நம்மிடம் உதாரணம் உண்டு அன்பர்களே ! 

இருப்பினும் 5ல் ராகு அமர்ந்த ஜாதகத்தை குத்து மதிப்பாக "புத்திரபாக்கியம் " கிடையாது என்று ஒதுக்குவது முற்றிலும் தவறு என்றே தோன்றுகிறது, 5ல் ராகுகேதுவை பற்றி இதற்க்கு முந்தைய பதிவுகளில் ஜோதிடதீபம் மிகவும் விரிவாக ஆய்வு செய்து கட்டுரை எழுதியிருக்கிறது, குத்து மதிப்பாக 5ல் ராகு புத்திர பாக்கியம் கிடையாது என்று ஒதுக்கும் ஜோதிடர்கள் அனைவரும், முறையாக ஜோதிடகணிதம் கற்றவர்கள்தான ? என்ற கேள்வி எழுகிறது, இந்த குழப்பங்களுக்கு கிழ்கண்ட விளக்கங்களை தர " ஜோதிடதீபம் " கடமை பட்டுள்ளது.

ராகு 5ல் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் :

1) ஜாதகரின் லக்கினத்தில் இருந்து 5ம் ராசியில் ராகு அமர்ந்து இருப்பதை வைத்து 5ல் ராகு என்று முடிவு செய்வது முற்றிலும் தவறு, ஜாதகரின் 5ம் பாவகம் ஆரம்பிக்கும் பாகை முதல், பாவகம் முடிவு பெரும் பாகைக்கு உட்ப்பட்ட 5ம் பாவகத்தில் ராகு அமர்ந்து இருக்கின்றாரா? என்பதை ஜாதகரின் பாவக ஆரம்பம், மதியம், முடிவு நிலையை கருத்தில் கொண்டு நிர்ணயம் செய்யவேண்டும்.

2) 5ல் அமர்ந்த ராகு ரிஷபம், மிதுனம் ( சூரியனுடன் 16 பாகைக்குள் சேராத புதன்), கடகம் ( வளர்பிறை சந்திரன் ), கன்னி ( சூரியனுடன் 16 பாகைக்குள் சேராத புதன்) துலாம், தனுசு,மீனமாக இருந்தால் ஜாதகரின் 5ம் பாவகத்தை 100% விகிதம் வலிமை பெற செய்யும் தன்மையை ராகு இயற்கையாக பெற்று விடுவார், எனவே இந்த அமைப்பில் 5ல் ராகு உள்ள ஜாதகங்கள் அனைத்தும் புத்திர பாக்கிய யோகம் உள்ளதாகவே கருதலாம், ( பெரும்பாலும் இவர்களுக்கு ஆண் குழந்தைகளாகவே எவ்வித தடையும் இன்றி பிறக்கின்றது)

3) 5ல் அமர்ந்த ராகு மேஷம்,மிதுனம்  ( சூரியனுடன் 16 பாகைக்குள் சேர்ந்த புதன்),கடகம் ( தேய் பிறை சந்திரன் ), சிம்மம்,கன்னி  ( சூரியனுடன் 16 பாகைக்குள் சேர்ந்த புதன்), விருச்சிகம்,மகரம்,கும்பமாக இருந்தால் ஜாதகரின் 5ம் பாவகத்தை 100% விகிதம் வலிமை அற்று போக செய்யும் தன்மை ராகு பகவானுக்கு உண்டு, எனவே இந்த அமைப்பில் 5ல் ராகு உள்ள ஜாதகங்கள் அனைத்தும் புத்திர பாக்கியத்தில் தடை உள்ள ஜாதகமாக எடுத்துகொள்ளலாம், ஆனால் இது ஆண் வாரிசு என்ற அமைப்பில் மட்டுமே குறையை தரும், பெண் குழந்தை கிடைப்பதில் எவ்வித தடையும் இல்லை, ஒருவேளை ஜாதகர் தனது பூர்வீகத்தில் இருந்து வெகு தொலைவில் இருப்பின் ( 100கிமீ அப்பால் ) ஆண்வாரிசே நிச்சயம் கிடைக்கும்.

4) பெரும்பாலும் 5ல் ராகு அமர்ந்து பாதிப்பை பெற்று இருக்கும் ஜாதகர்கள், தனது பூர்வீகத்தை விட்டு வெளியில் சென்று ஜீவனம் மேற்கொள்ளும் தன்மையை பெறுகின்றனர், தனது பாரம்பரிய முறையில் இருந்து வித்தியாசமான அணுகு முறையில் ஜீவனம் மேற்கொள்ளும் தன்மையையும், தனது பாரம்பரியத்திற்கு மாறுபட்ட சிந்தனைகளையும் கொண்டவர்களாக கானபடுகின்றனர், இவர்கள் அனைவரும் தனது பூர்வீகத்தில் மிகப்பெரிய வெற்றிகளை பெற இயலவில்லை, வெளியூர் அல்லது வெளிநாடுகளிலேயே மிகப்பெரிய அந்தஸ்தையும், வெற்றிகளையும் வாரி குவிக்கின்றனர், பூர்விகத்தில் இவர்களது அறிவும் புத்திசாலித்தனமும் செயல்படுவதில் சிக்கல்கள் ஏற்ப்படுகின்றது, வெளியூரில் அல்லது வெளிநாடுகளில் இவர்களது அறிவும், புத்திசாலித்தனமும் அபரிவிதமாக வேலை செய்வது கவனிக்க தக்கது, மேலும் வெளியூர் வெளிநாடுகளில் ஜாதகர்  வசிக்கும் பொழுது 5ம் பாவக பாதிப்பு வெகுவாக குறைந்து, சிறந்த ஆண்வாரிசும் உண்டாகிறது என்பது மறுக்க இயலாத உண்மை.

5) பெரும்பாலும் குழந்தைகளே அற்ற சூழ்நிலை எப்பொழுது ஒரு ஜாதகருக்கு ஏற்ப்படுகிறது என்று காணும் பொழுது தம்பதியர் இருவரது ஜாதகத்திலும், பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகம் பாதக ஸ்தனாங்களுடன் தொடர்பு பெற்றால் மட்டுமே புத்திர பாக்கியமே இல்லாமல் போகிறது என்பது 100% விகித உண்மை, மேலும் இந்த அமைப்பை பெற்ற ஜாதகர்களும் முறையான தீர்வுகளை தேடும் பொழுது 5ம் பாவக வழியில் இருந்து யோகத்தை பெற இயலும் என்பதே ஜோதிடதீபத்தின் ஆணித்தரமான கருத்து.

குறிப்பு :

 அன்பர்களே ! 5ல் ராகு அமர்ந்தாலே குழந்தை பாக்கியம் கிடையாது என்ற குத்து மதிப்பான வாதத்தை விடுத்து சுய ஜாதகத்தில் 5ம் பாவக வலிமையை உணர்ந்து தங்களது மகளுக்கோ, அல்லது மகனுக்கோ வரன்,வது தேடுவதே சரியான தீர்வாக இருக்கும், 5ல் அமரும் ராகு நல்ல செய்தால் எவ்வித குழப்பமும் இல்லாமல் தங்களது மகளுக்கோ, மகனுக்கோ திருமணம் செய்து கொடுங்கள் அவர்களது வாழ்க்கை மென்மேலும் செழித்து ஓங்குவதையும், அவர்களுக்கு நல்ல வாரிசு அமைவதையும்,திருமணம் நடந்த சில காலங்களிலேயே கண்குளிர காணலாம், என்று ஜோதிடதீபம் அறிவுறுத்துகிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696  

சுய ஜாதகத்தில் நடைபெறும் திசா புத்திகள் யோக பலனை தரும் பொழுது ஜாதகர் என்ன செய்யலாம்? அவயோக பலனை தரும் பொழுது ஜாதகர் எதை தவிர்க்கலாம்?




ஒருவரது சுய ஜாதகத்தில் நடைபெறும் திசா புத்திகள் ஜாதகருக்கு யோக  பலன்களை தரும் பொழுது, ஜாதகருக்கு எந்த பாவக வழியில் இருந்து யோகத்தை வழங்குகிறது என்பதை தெளிவாக தெரிந்துகொண்டு வாழ்க்கையில் குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து வரும் நன்மைகளை பரிபூரணமாக அனுபவிக்கலாம், மாறாக ஜாதகருக்கு அவயோக பலன்களை தரும் பொழுது, ஜாதகருக்கு எந்த பாவக வழியில் இருந்து அவயோகத்தை வழங்குகிறது, என்பதை தெளிவாக தெரிந்து கொண்டு குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை தவிர்க்கலாம், அல்லது விழிப்புணர்வுடன் செயல்பட்டு, துன்பங்களை களைந்து, நன்மைகளை பெறலாம், பொதுவாக ஒருவரது சுய ஜாதகத்தில் நடைபெறும் திசா புத்திகள் எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்ற ஒரு விஷயம் ஜாதகருக்கு சிறந்த ஜோதிடர்கள் மூலம் ஜாதக கணிதம் கொண்டு மிக துல்லியமாக தெரிந்துகொள்ள இயலும், அதன் அடிப்படையில் தனது வாழ்க்கையை மிகவும் சிறப்பாக நடத்தி செல்வதற்குண்டான வழிமுறைகளையும், விழிப்புணர்வுகளையும் ஜாதகரால் நிச்சயம் பெற இயலும்.

கிழ்கண்ட நமது நண்பருக்கு ( அவரது விருப்பத்தின் பேரில் ஜாதக பலன்களை வலைபதிவில் பதிவு செய்கிறது "ஜோதிடதீபம் " ) ஜாதக ரீதியான பலன்களையும் & தீர்வுகளை காண்போம் :




லக்கினம் : மிதுனம் 
ராசி : மீனம் 
நட்சத்திரம் : உத்திரட்டாதி 4ம் பாதம் 

ஜாதகருக்கு உபய கற்று தத்துவமான ( கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 3ம் ராசி ) மிதுன ராசியில் லக்கினம் 22:58:48 பாகையில் ஆரம்பித்து, சர நீர் தத்துவமான கடகத்தில் 19:09:36 பாகை வரை வியாபித்து இருக்கின்றது, மேலும் ஜாதகர் இரண்டு தத்துவ அமைப்பில் லக்கினத்தின் செயல்பாடுகளை பெறுகின்றார், உபய இயக்க நிலையில் உள்ள காற்று தத்துவம், சர இயக்க நிலையில் உள்ள நீர்ததுவம். ஆக ஜாதகருக்கு சிறந்த அறிவு திறனும், நல்ல மனமும் இயற்கையாக அமைய வேண்டும்,  ஆனால் லக்கினம் எனும் 1ம் பாவகம் ஜாதகருக்கு விரைய ஸ்தானமான 12ம்  பாவகத்துடன் தொடர்பு பெற்று 12ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 2ம் ராசியான ஸ்திர மண் தத்துவமான ரிஷப ராசியில் அமைகிறது, ஆக ஜாதகருக்கு லக்கினம் பாதிக்க படுகிறது என்பது உறுதியாகிறது, இந்த இலக்கின பாதிப்பு ஜாதகருக்கு  வருமான ரீதியான பிரச்சனைகளையே தரும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜாதகருக்கு  தற்பொழுது நடைபெறும் சுக்கிரன் திசை எவ்வித பலன்களை  தருகிறது என்பதை ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே ! ஜாதகருக்கு சுக்கிரன்  திசை ( 23/09/2008 முதல் 23/08/2028வரை ) நடைமுறையில்  உள்ளது, தற்பொழுது நடைமுறையில் உள்ள சுக்கிரன் திசை ஜாதகருக்கு 2,4ம் வீடுகள் சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று யோக பலன்களை  தருவது வரவேற்க தக்க ஒரு சிறப்பு அம்சமாக கருதலாம், ஏனெனில் 2ம் வீடு ஜாதகருக்கு சிறந்த குடும்ப வாழ்க்கையையும், சிறந்த பேச்சு திறனையும், கை   நிறைவான வருமான வாய்ப்பையும் வாரி வழங்கும், 4ம் வீடு ஜாதகருக்கு சிறந்த வீடு, மண் மனை, வண்டி வாகன யோகத்தையும் வாரி வழங்கும், சிறந்த குண நலன்களுடன் ஜாதகரை திகழ செய்யும், புதிய சொத்துகள், வாகன யோகங்கள் ஜாதகருக்கு 100% விகிதம் உண்டாகும், தனது  சொந்த ஊரில் சுய  சம்பாத்தியம் மூலம் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை வாரி வழங்கும்,  தாய் மூலம் நன்மை உண்டாகும், கற்ற கல்வி ஜாதகருக்கு சிறந்த சுகபோக வாழ்க்கையை வாரி வழங்கும்.

ஆக ஜாதகருக்கு தற்பொழுது நடைபெறும் சுக்கிரன் திசை மிகவும் சிறப்பாக  இருப்பது உறுதியாகிறது, அடுத்து தற்பொழுது நடைமுறையில் உள்ள சுக்கிரன் திசையில் செவ்வாய் புத்தி ( 24/09/2014 முதல் 24/11/2015 வரை ) என்ன செய்கிறது? என்பதை ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே! 

 சுக்கிரன் திசையில் செவ்வாய் புத்தி ஜாதகருக்கு 1,3,5,6,7,11,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று, இந்த 12ம் பாவகம் ஜாதகருக்கு கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 2ம் ராசியான ரிஷபத்திலும், கால  புருஷ தத்துவ அமைப்பிற்கு 3ம் ராசியான மிதுனத்திலும் சம்பந்தம்  பெறுவது, ஜாதகருக்கு இலக்கின வழியில் இருந்து மன நிம்மதி இழப்பையும், உடல் நல பிரச்சனைகளையும், சகோதர ஸ்தான அமைப்பில் இருந்து எடுக்கும் முயற்சிகளில் பின்னடைவையும், எதிர்பாராத இன்னல்களையும், பூர்வபுண்ணிய ஸ்தான அமைப்பில் இருந்து சமயோசித செயல்பாடுகள் அற்ற நிலையையும், புத்திசாலிதனத்தில் ஏற்ப்படும் பின்னடைவையும்,  உதவிசெய்ய யாரும் அற்ற நிலையையும், எதிரி ஸ்தான அமைப்பில் இருந்து வரும்  கடன் தொந்தரவுகள், எதிரி தொல்லைகள், தனது செயல் தனக்கே எதிர்பதமாக அமையும் சூழ்நிலை, உடல் நல குறைபாடு,என்ற வகையிலும்,  களத்திர ஸ்தான அமைப்பில் இருந்து வாழ்க்கை துணை வழியில் இருந்தும்,  நண்பர்கள் வழியில் இருந்தும், கூட்டாளி மற்றும் வெளிவட்டார பழக்க  வழக்க அமைப்பில் இருந்து நிம்மதியற்ற சூழ்நிலையையும், லாப ஸ்தான அமைப்பில் இருந்து தனக்கு வரும் அதிர்ஷ்ட வாய்ப்புகளை ஜாதகர் உதறி தள்ளும் சூழ்நிலையையும், தன்னம்பிக்கை அற்ற சூழ்நிலையில் போராட்ட வாழ்க்கையை மேற்கொள்ளும் சந்தர்ப்பங்களையும், மனோ ரீதியான  போராட்டங்களையும் எதிர்கொள்ளும் சக்தி அற்ற நிலையையும், 12ம் பாவக வழியில் இருந்து வருமானம் அனைத்தையும் விரையும் ஆகும் சூழ்நிலையையும், மன நிம்மதி இழப்பு, அனைவராலும் துன்பம் மற்றும் தொல்லைகளை எதிர்கொள்ளும் தன்மையும், ஜாதகருக்கு தற்பொழுது நடைமுறையில்  உள்ள சுக்கிரன் திசை செவ்வாய் புத்தி வழங்குகிறது.

எனவே ஜாதகருக்கு தற்பொழுது நடைபெறும் சுக்கிரன் திசை யோக பலன்களையும், சுக்கிரன் திசை செவ்வாய் புத்தி அவயோக பலன்களையும்  தருவதால், ஜாதகர் செவ்வாய் புத்திக்கு ஏற்று நடத்தும் பாவகத்திர்க்கு உண்டான வழியில் இருந்து ( 1,3,5,6,7,11,12 ) அதிக அளவு இன்னல்களை அனுபவிக்கும் நிலையை தருகிறது, மேலும் 12ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு குடும்பம் மற்றும் வருமானத்தை குறிக்கும் ரிஷப ராசியிலும், வீர்யம், லட்சியம் மற்றும் சுய முயற்ச்சியை குறிக்கும் மிதுன ராசியிலும் அமைவதால், பாதிப்பின் தன்மையை ஜாதகரால் எதிர்கொள்ள இயலவில்லை, மேலும் வருமானம் என்பது ஜாதகருக்கு வெகுவாக குறையும், எடுக்கும் முயர்ச்சியும் வெற்றி பெறாத காரணத்தால், அதிக மன உளைச்சலுக்கும், போராட்ட வாழ்க்கையை எதிர்கொள்ளும் சூழ்நிலையையும் உருவாக்கும், இருப்பினும் இதன் பாதிப்பின் தன்மை 40% விகிதம்  என்பதாலும், நடைமுறையில் உள்ள சுக்கிரன் திசை யோக பலன்களை வாரி  வழங்குவதாலும், ஜாதகரின் துன்பம் சூரியனை கண்ட பனிபோல் விரைவில்  விலகும்.

ஜாதகருக்கு சுக்கிரன் திசையில் அடுத்து வரும் ராகு புத்தி  2,4ம் வீடுகள் சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று யோக பலன்களை  தருவது,   அளவில்லா வருமான வாய்ப்பையும், சொத்து சுக சேர்க்கையையும், வாரி வழங்கும், மேலும் தற்பொழுது நடைபெறும் செவ்வாய் புத்தியின்  தாக்கத்தில் இருந்து மீண்டு வரவும், சுக்கிரன் திசை, எதிர் வரும் ராகு புத்தியில் வரும் யோக பலன்களை அனுபவிக்க வடக்கு திசை வாயிற்படி கொண்ட  வீடுகளில் வசிப்பது சகல நிலைகளில் இருந்தும் முன்னேற்றம் தரும், சுக்கிரன் திசையில் முழு பலன்களையும் அனுபவிக்கும் யோகம் உண்டாகும்.

ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் பெரும்பாலான வீடுகள் பாதிக்க பட்டு இருந்த  போதிலும், தற்பொழுது நடைமுறையில் உள்ள சுக்கிரன் திசை நன்மையை வாரி   வழங்குவது வரவேற்க தக்க ஒரு அம்சமாக" ஜோதிடதீபம் "  கருதுகிறது, மேலும் ஜாதகருக்கு பாதிக்க பட்ட 12ம் பாவகம் ஸ்திர ராசியில் 6 பாகையும், உபய ராசியில் 23 பாகையும் வியாபித்து இருப்பதால், நடைபெறும் தீமையின் அளவு ஜாதகருக்கு பெரிய அளவில் இன்னல்களை தாராது என்பதை  நினைத்து மகிழ்ச்சி அடையலாம், எனவே ஜாதகர் தற்பொழுது நடைபெறும் செவ்வாய் புத்தியில் நடைபெறும் 1,3,5,6,7,11,12ம் பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை விழிப்புணர்வுடன் எதிர்கொண்டு வெற்றி அடையலாம், மேற்கண்ட பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை ஜாதகர் தவிர்க்கலாம், மேலும் விபரங்களுக்கு தனிப்பட்ட ஆலோசனை ஜோதிடதீபத்தின் மூலம் பெறுவதால் மிகுந்த நன்மை அடையலாம்.

வாழ்த்துகள் !

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வியாழன், 23 ஏப்ரல், 2015

சுய ஜாதகத்தில் அவயோக நிலை இருந்த போதிலும், ராஜயோக பலன்களை அனுபவிப்பது எப்படி ?


சுய ஜாதகத்தில் ஒருவருக்கு கேந்திர பாவகங்கள் என்று அழைக்க படும் 1,4,7,10ம் வீடுகள் கடுமையாக பாதிக்க பட்டு இருந்த போதிலும் கிழ்கண்ட ஜாதகரால், நல்ல யோக பலன்களை அனுபவிக்கும் தன்மையை தருவது ஜாதகத்தில் எது என்பதை இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே!

பொதுவாக கேந்திர பாவகங்கள் என்று அழைக்கப்படும் 1,4,7,10ம் வீடுகள் ஒருவரது சுய ஜாதகத்தில் வலிமை பெற்று அமைவது, ஜாதகருக்கு ஒரு ஸ்திரமான நான்கு கால்கள் கொண்ட நாற்காலியில் அமர்வதற்கு ஒப்பாக வர்ணிக்கலாம், நான்கு கால்களும் நல்ல நிலையில் உள்ள ஓர் நாற்காலி எப்படி நிலையான அமர்வு சுகத்தை தருகிறதோ, அதை போன்ற யோக பலன்களையும், நன்மைகளையும் கேந்திர பாவகங்கலான 1,4,7,10ம் வீடுகள் சுய ஜாதகத்தில் வலிமை பெரும் பொழுது ஜாதகருக்கு, வாரி வழங்கும்.

மேற்கண்ட கேந்திர பாவகங்கள் வலிமை அற்ற தன்மையை பெரும் பொழுது ஜாதகர் ஒரு நிலையான வாழ்க்கையை மேற்கொள்வது என்பது கேள்விக்குறியாக மாறிவிட வாய்ப்பு உண்டு, முதல் கேந்திரமான 1ம் பாவக வழியில் இருந்து ஜாதகர், நல்ல புகழ்,கீர்த்தி, ஒழுக்கம், உடல் நலம், மனநலம், நீண்ட ஆயுள், ஜாதகருக்கு வரும் இன்னல்களில் இருந்து வெளிவரும் அமைப்பு, தற்காப்பு சிந்தனை மற்றும் செயல்திறன், ஜாதகரின் விழிப்புணர்வு, சுய சிந்தனை, அறிவு சார்ந்த செயல்கள் என்ற வகையில் நன்மையை செய்யும்.

2ம் கேந்திரமான 4ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் வாழும் சொகுசு வாழ்க்கை, ஜாதகருக்கு அமையும் வீடு , சொத்து சுகம், வண்டி வாகனம், தாய் வழியில் இருந்து வரும் யோகங்கள், ஜாதகரின் நல்ல குணம், எடுக்கும் முடிவுகளில் உள்ள உறுதி, தனது தனிப்பட்ட வழிமுறையில் பயணம் செய்து, ஜாதகர் பெரும் வெற்றிகள், வாகன யோகம், நிலபுலன்கள், தன்னம்பிக்கை, சமூக ஆதரவு, எதிர்பாராமல் ஜாதகர் பெரும் அதிர்ஷ்ட வாழ்க்கையின் தன்மை, பொருள் வரவின் மூலம் ஜாதகர் பெறும் சுகபோக வாழ்க்கை என்ற வகையில் நன்மையை செய்யும்.

3ம் கேந்திரமான 7ம் பாவகம் ஜாதகருக்கு நல்ல வாழ்க்கை துணையை பெற்று தரும், சிறந்த நண்பர்கள் உதவியை பெரும் யோகத்தை தரும், நல்ல கூட்டாளிகள் மூலம் அபரிவிதமான லாபங்களை வாரி வழங்கும், பொதுமக்களின் ஆதரவின் மூலம் ஜாதகர் திடீர் அதிர்ஷ்டங்களை பெரும் யோகத்தை தரும், வெளிநாடுகளில் இருந்து வரும் லாபம், மற்றும் வெளிநாடுகளில் ஜீவனம் செய்யும் யோகத்தையும் தரும், ஏற்றுமதி இறக்குமதி தொழில்கள் மூலம் வாழ்க்கையில் அபரிவிதமான முன்னேற்றத்தை வாரி வழங்கும், மேலும் ஜாதகருக்கு பன்முக திறமையும், மக்கள் கவர்ச்சியும் உண்டாகும். மக்கள் மூலம் முன்னேற்றம் என்ற வகையில் நன்மையை செய்யும்.

4ம் கேந்திரமான 10ம் பாவகம் ஜாதகருக்கு சமூகத்தில் கௌரவம், அந்தஸ்து மற்றும் சுய மரியாதையுடன் வாழும் யோக வாழ்க்கையை உறுதி செய்யும், செய்யும் தொழில் வழியில் இருந்து ஜாதகர் நல்ல யோக பலன்களை அனுபவிக்கும் தன்மை தரும், புதிய யுக்திகள் மூலம் தான் செய்யும் தொழில் வழியில் இருந்து அபரிவிதமான முன்னேற்றத்தை வாரி வழங்கும், ஜீவன வழியில் இருந்து ஜாதகருக்கு வரும் யோக பலன்கள் அனைத்தையும் வாரி வழங்கும், அரசியலில் வெற்றி, செய்யும் தொழில் வெற்றி, பல அதிகார பதவிகளை அலங்கரிக்கும் யோகம் என்ற வகையில் நன்மையை செய்யும்.

கிழ்கண்ட ஜாதகருக்கு  கேந்திர பாவகங்கலான மேலே குறிப்பிடபட்டுள்ள, 1,4,7,10ம் வீடுகள் அனைத்தும் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அவயோக அமைப்பில் உள்ளது, இருப்பினும் ஜாதகர் தனது  வாழ்க்கையை  மிகவும் வெகு சிறப்பாக நடத்திக்கொண்டு இருப்பது ஓர் ஆச்சரியமான விஷயமே.

இந்த ஜாதகருக்கு 1,4,6,7,10,12ம் வீடுகள் அனைத்தும் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று 12ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 8ம் வீடாக வருவது  ஜாதக மேற்கண்ட பாவக வழியில் திடீர் இழப்புகளை சந்தித்த போதிலும், தற்பொழுது நடைபெறும் புதன் திசை ஜாதகருக்கு 8,11ம் வீடுகள் வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக வாழ்க்கையை வாரி வழங்கிக்கொண்டு இருக்கிறது, ஜாதகர் 8ம் பாவகத்துக்கு உரிய இன்சுரன்ஸ் துறையிலும், 3,11ம் பாவகத்துகுரிய ஏஜென்சி துறையிலும் நல்ல வருமானத்தை பெற்று கொண்டு இருக்கிறார்.

சுய ஜாதகத்தில் பாவகங்கள் பாதிக்க பட்டு இருந்தாலும், நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் பாதிக்க பட்ட பாவகத்தின் பலனை ஏற்று நடத்தாமல் இருப்பின் ஜாதகருக்கு எவ்வித இன்னல்களும் வர வாய்ப்பில்லை, மேற்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் 7பாவகங்கள் கடுமையாக பாதிக்க பட்டு இருக்கின்றது, இருப்பினும் இதற்க்கு முன் நடந்த சனி திசையும் சரி, தற்பொழுது நடைபெறும் புதன் திசையும் சரி, பாதிக்க பட்ட பாவகங்களின் பலனை ஏற்று நடத்தாத காரணத்தாலும், வலிமை பெற்ற பாவகத்தின் பலனை ஏற்று நடத்தும் காரணத்தாலும் ஜாதகருக்கு யோக பலன்களே நடைமுறையில் உள்ளது கவனிக்கத்தக்கது.

எனவே சுய ஜாதகத்தில் அவயோகங்கள் இருப்பினும் அவை நடைமுறையில் வாராமல் இருந்தால் ( நடைபெறும் திசை புத்திகள்  பாதிக்க பட்ட பாவக பலனை  ஏற்று நடத்தாமல் யிருந்தால் ) ஜாதகர் யோக பலன்களையே அனுபவிப்பதாக கருதலாம்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696 

திங்கள், 20 ஏப்ரல், 2015

சுய ஜாதகத்தில் சர,ஸ்திர,உபய ராசிகள் வழங்கும் பலாபலன்கள் !



ஒருவரின் சுய ஜாதகத்தில் பாவகங்களின் தொடர்புகளின் வழியில், திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் ஏற்று நடத்தும் நன்மை தீமை பலன்களில், சர,ஸ்திர,உபய ராசிகளுக்கு ஏற்ப நிறைய வேறுபாடுகள் உண்டு, பொதுவாக ஒருவரது ஜாதகத்தில் 12 வீடுகள் தான் தொடர்பு பெரும் பாவகங்கள் வழியில் இருந்து யோக அவயோக பலன்களை தருகிறது, இந்த 12 வீடுகளும் தொடர்பு பெரும் பாவகம், சர ராசியாக இருப்பின் விரைவான பலன்களையும், ஸ்திர ராசியாக இருப்பின் நீடித்த பலன்களையும், உபய ராசியாக இருப்பின் மேற்கண்ட இரண்டிற்கும் சம்பந்தம் இல்லாத பலன்களையும் தரும்.


குறிப்பாக ஒரு ஜாதகருக்கு நடைமுறையில் உள்ள திசை யோக பலனை தரும் நிலையில் இருக்கிறது என்று வைத்துகொண்டால், 1,4,7,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று ஜாதகருக்கு 1,4,7,10ம் வீடுகள் வழியில் இருந்து நன்மையை செய்கிறது எனில், ஜாதகருக்கு தொடர்பு பெரும் 10ம் பாவகம் சர ராசியாக இருப்பின், தான் தரவேண்டிய யோக பலன்களை திசை ஆரம்பித்த குறுகிய காலத்திலேயே வாரி வழங்கிவிடும், எடுத்துகாட்டாக ஜாதகருக்கு தொழில் முன்னேற்றம் குறுகிய காலத்தில் வெகு விரைவாக அமையும். ஜாதகருக்கு தொடர்பு பெரும் 10ம் பாவகம் ஸ்திர  ராசியாக இருப்பின், தான் தரவேண்டிய யோக பலன்களை தனது திசை முழுவதும் தொடர்ந்து ஸ்திரமாக வழங்கிகொண்டே இருக்கும், உதாரணமாக ஜாதகருக்கு தொழில் முன்னேற்றம் என்பது படிப்படியாக அமையும். ஜாதகருக்கு தொடர்பு பெரும் 10ம் பாவகம் உபய  ராசியாக இருப்பின், தான் தரவேண்டிய யோக பலன்களை மேற்கண்ட இரண்டு அமைப்பிற்கும் சாராமல் சிறிது சிறிதாக அமையும், உதாரணமாக ஜாதகருக்கு தொழில் முன்னேற்றம் என்பது எதிர்பார்த்த அளவில் இல்லாமல் குறைவான நிலையிலேயே அமையும்.

மேற்கண்ட விதி யோக அவயோக நிலை இரண்டிற்கும் பொருந்தும், இதை ஓர்  உதாரண ஜாதகம் கொண்டு காண்பது சிறப்பாக அமையும் என்று "ஜோதிடதீபம்" கருதுகிறது.


லக்கினம் : தனுசு 
ராசி : தனுசு 
நட்சத்திரம் : மூலம் 3ம் பாதம் 

ஜாதகிக்கு யோகம் தரும் பாவகங்களாக அமைவது :

1) 1,4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவதும், 
2) 2,5,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவதும்,
3) 3ம் வீடு சகோதர ஸ்தானமான 3ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவதும்.
4) 9ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவதும் ஜாதகத்தில்  யோக அமைப்பாக கருதலாம், இதில் 10ம் பாவகம் உபய ராசியாகவும், 11ம் பாவகம் சர ராசியாகவும், 3,9ம் பாவகங்கள் ஸ்திர ராசியாகவும் ஜாதகிக்கு அமைகிறது.

ஜாதகிக்கு அவயோகம் தரும் பாவகங்களாக அமைவது :

1) 6,7,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவதும்,
2) 8ம் வீடு ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவதும் ஜாதகத்தில் அவயோக அமைப்பாக கருதலாம், இதில் 8ம் பாவகம் சர ராசியாகவும், 12ம் பாவகம் ஸ்திர ராசியாகவும் ஜாதகிக்கு அமைகிறது.

ஜாதகிக்கு 10ம் பாவகம் உபய ராசியில் அமைந்து நன்மையை செய்வது குறிப்பிட்ட பாவக வழியில் சிறிய அளவிலேயே அமையும், 3,9ம் பாவகம் ஸ்திர ராசியாக அமைந்து நன்மையை செய்வதால் ஜாதகிக்கு குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து நீடித்த 80% விகித நன்மையை தொடர்ந்து பெற்ற வண்ணம் இருப்பார், 11ம் பாவகம் சர ராசியாக அமைந்து நன்மை செய்வது குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து 100% விகித நன்மையை விரைவாக குறுகிய காலத்தில் வாரி வழங்கும்.

ஜாதகிக்கு 8ம் பாவகம் சர ராசியாக அமைந்து தீமையை தருவது குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து 100% விகித இன்னல்களை குறுகிய காலத்தில் தரும், 12ம் பாவகம் ஸ்திர ராசியாக அமைத்து தீமையை தருவது குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து 75% விகித இன்னல்களை தொடர்ந்து ஸ்திரமாக தந்துகொண்டே இருக்கும்.

மேற்கண்ட யோக அவயோக பலன்கள் ஜாதகிக்கு எப்பொழுது நடைமுறைக்கு  வரும் என்பதை இனி ஆய்வு செய்வோம் .

ஜாதகிக்கு தற்பொழுது நடைபெறும் திசை சூரியன் திசை ( 13/08/2014 முதல் 13/08/2020 வரை ) 2,5,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றும், 3ம் வீடு சகோதர ஸ்தானமான 3ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றும் பலனை தருவது 11ம் பாவக வழியில் இருந்து 100% விகித யோகத்தையும், 3ம் பாவக வழியில் இருந்து 80% விகித யோகத்தையும் தரும்.

ஜாதகிக்கு அடுத்து வரும் சந்திரன் திசை ( 13/08/2020 முதல் 13/08/2030 வரை ) 9ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று 9ம் பாவக வழியில் இருந்து 80% விகித யோகத்தையும் தரும்.

ஜாதகிக்கு சந்திரன் திசைக்கு அடுத்து வரும் செவ்வாய் திசை ( 13/08/2030 முதல் 13/08/2037 வரை ) 6,7,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று 75% இன்னல்களை செவ்வாய் திசை முழுவதும் தொடர்ந்து குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து இன்னல்களை தந்த வண்ணமே இருக்கும்.

ஜாதகிக்கு செவ்வாய் திசைக்கு அடுத்து வரும் ராகு திசை ( 13/08/2037 முதல் 14/08/2055 வரை )  6,7,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று 75% இன்னல்களை செவ்வாய் திசை முழுவதும் தொடர்ந்து குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து இன்னல்களை தந்த வண்ணமே இருக்கும். எனவே ஜாதகிக்கு தற்பொழுது நடைபெறும் சூரியன் திசையும், எதிர்வரும் சந்திரன் திசையும் சரியான வயதில் நல்ல யோகத்தை தருவதால், குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து சர,ஸ்திர,உபய ராசிக்கு உற்பட்ட யோக பலன்களை அனுபவிக்கும் யோகத்தை தருவது வரவேற்க தக்கதே, தற்பொழுது நடைமுறையில் உள்ள திசையும், எதிர்வரும் திசையும் சிறப்பான நன்மைகளை செய்வதால் ஜாதகி கவலை கொள்ளாமல், தனது வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக்கொண்டு வாழ்க்கையில் நடைமுறையில், எதிர்வரும் திசை அமைப்பில் இருந்து யோக பலன்களை அனுபவிப்பதே சிறப்பானதாக "ஜோதிடதீபம்" கருதுகிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696 

வெள்ளி, 17 ஏப்ரல், 2015

சுய ஜாதகத்தில் நிகழ்கால எதிர்கால பலன்கள் காணும் பொழுது கவனிக்க வேண்டிய அம்சங்கள்!


 சுய ஜாதக ரீதியாக ஒருவரது ஜாதகத்தில் தற்பொழுது நடைமுறையில் உள்ள திசை மற்றும் புத்திகளும், எதிர்வரும் திசா புத்திகளும் தரும் பலன்கள் எவ்விதம் அமையும் என்பதை கருத்தில் கொண்டு ஜாதகர் செயல்படும் பொழுது, ஜாதகருக்கு வரும் நன்மை தீமை பலன்களை உணர்ந்து தனது வாழ்க்கையை மிகவும் சிறப்பாக அமைத்துக்கொள்ள இயலும், நன்மை நடைபெறும் பொழுது ஜாதகர் தனக்கு வரும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் காண இயலும், தீமையான பலன்கள் நடைமுறைக்கு வரும் பொழுது ஜாதகர் மிகவும் எச்சரிக்கையாகவும், விளைவு அறிந்து செயலாற்றும் வல்லமையை பெற இயலும், விதியின் பலனை அனுபவித்தே ஆகவேண்டு என்றாலும் கூட, ஜாதகர் தனது சமயோசித புத்திசாலிதன அமைப்பில் இருந்தும்,அறிவு திறன் வழியில் இருந்தும், மாற்று சிந்தனை மூலம் தனது வாழ்க்கையை சீரும் சிறப்புமாக அமைத்துக்கொள்ள இயலும்.

1) ஒருவரது சுய ஜாதகத்தில் தற்பொழுது நடைமுறையில் உள்ள திசை புத்தி மற்றும் எதிர் வரும் திசை புத்தி எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது.
2) நடைமுறையில் உள்ள திசை புத்தி மற்றும் எதிர் வரும் திசை புத்தி ஏற்று நடத்தும் பாவகங்கள் ஜாதகருக்கு எவ்வித பலன்களை வழங்குகிறது.
3) நடைமுறையில் உள்ள திசை புத்தி மற்றும் எதிர் வரும் திசை புத்தி ஏற்று நடத்தும் பாவகங்களுடன் கோட்சார கிரகங்களின் சம்பந்தம் என்ன ? கோட்சார கிரகங்கள் குறிப்பிட்ட பாவகங்களுக்கு தரும் நன்மை தீமை பலன்கள் என்ன ? என்பதை ஜோதிட கணிதம் கொண்டு தெளிவு பட தெரிந்துகொண்டால், ஜாதகர் தனது வாழ்க்கையை மிகவும் சிறப்பாக அமைத்துக்கொள்ள இயலும்.

இதை ஊர் உதாரண ஜாதகம் கொண்டு காண்போம் :



லக்கினம் : மேஷம் 
ராசி : மிதுனம் 
நட்சத்திரம் : திருவாதிரை 1ம் பாதம் 

தற்பொழுது நடைமுறையில் உள்ள திசை புத்தி புதன் திசை ஆகும் ( 04/01/2015 முதல் 04/01/2032 வரை ) இந்த புதன் திசை ஜாதகருக்கு எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்ற விஷயம் தெரிந்தால் மட்டுமே,  ஜாதகருக்கு புதன் திசை தரும் பலாபலன்களின் தன்மையை சொல்ல இயலும், ஜாதகருக்கு புதன்  8ம் பாவகத்தில் அமர்ந்து இருக்கின்றார் எனவே ஜாதகருக்கு 8ம் பாவக பலனை  தருவாரா ? அல்லது ஜாதகருக்கு 3,மற்றும் 6ம் பாவகங்களுக்கு  அதிபதியாக வருகின்றார் ( பாரம்பரிய முறைப்படி ) எனவே 3,6ம் பாவக பலனை தருவாரா? அல்லது 4ம் பாவகத்தை பார்வை செய்வதால் 4ம் பாவக பலனை தருவாரா ? இந்த கேள்விகள் அனைத்தும் பாரம்பரிய முறைபடியாலான ஜாதக பலனை காணும் பொழுது ஏற்ப்படும், ஆனால் நமது ஜோதிட முறைப்படி ஜாதகருக்கு புதன் திசை லக்கினம் எனும் 1ம் வீடும், தொழில் ஸ்தானம் எனும் 10ம் வீடும், ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று ஜீவன ஸ்தான பலனையே 100% யோக பலனாக வாரி வழங்குகிறது, இது எப்படி? என்ற கேள்விக்கு முறையான ஜோதிட கணிதம்  தெரியும் பொழுது தெளிவாகும்.

தற்பொழுது நடைபெறும் புதன் திசை ஜாதகருக்கு ஜீவன 1,10ம் வீடுகள் ஸ்தான பலனை  தருவது ஜாதகருக்கு  மிகுந்த நன்மையை வாரி வழங்கும் என்ற போதிலும், ஜாதகர் எந்த வகையில் யோக பலன்களை அனுபவிப்பார், ஜாதகர் பெரும் நன்மைகள் எப்படி பட்ட அமைப்பில்  இருக்கும் என்ற கேள்விகளுக்கு பதில் கிழ்கண்டவாறு அமையும்.

ஜாதகருக்கு புதன் திசை தொடர்பு படுத்தும் வீடுகளும் பாவக பலன்களும் :

1) 1ம் வீடு ஜாதகருக்கு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று , 1ம் வீடு மேஷம் ராசி, சர நெருப்பு தத்துவம், கால புருஷ தத்துவ அமைப்பிற்கும், ஜாதகருக்கும் லக்கினமாக அமைவதால், ஜாதகரின் உடல் நிலையம் மனநிலையும்  மிகவும் சிறப்பாக இயங்கும், நெருப்பு தத்துவம் என்பதால் ஜாதகர் தனது நடவடிக்கைகளில், நேர்மையாகவும், சுய கட்டுபாடுடன்  கூடிய  சுறுசுறுப்புடன்  திகழ்வார், தான் மேற்கொள்ளும் காரியங்கள் யாவிலும்  விரைவாகவும், அதே சமயம் சரியாகவும் செயல்படுவார், தன்னம்பிக்கையும், மன உறுதியும் ஜாதகருக்கு மிகுந்து காணப்படும், நெருப்பு தத்துவமான தொழில் நுட்ப துறைகளில் ஜாதகருக்கு வருமான வாய்ப்புகளையும், தொழில் முன்னேற்றத்தையும் வாரி வழங்கும், மேலும் சர  ராசியாக அமைவதால் ஜாதகருக்கு தரவேண்டிய யோக பலன்களை 100% விகிதம் விரைவாக வாரி வழங்கும் என்பது கவனிக்க தக்கது.

2) 10ம் வீடு ஜாதகருக்கு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று, 10ம் வீடு மகர ராசி, சர மண் தத்துவம்,  காலபுருஷ தத்துவ அமைப்பிற்கும், ஜாதகருக்கும் ஜீவன ஸ்தானமாக வருவதால், ஜாதகரின் கெளரவம் மற்றும் அந்தஸ்து மேலோங்கும், தான் செய்து வரும் தொழில் மற்றும் ஜீவன வழியில் இருந்து அபரிவிதமான முன்னேற்றங்களை வாரி வழங்கும், ஜாதகருக்கு கௌரவ பதவிகள், மற்றும் அந்தஸ்து அதிகரிக்கும், எடுக்கும் காரியங்கள் யாவும் வெற்றிமேல் வெற்றி தரும், அரசியல் ரீதியான பதவிகள் மற்றும் தொழில் ரீதியான அங்கீகாரங்கள் ஜாதகருக்கு தேடிவரும், சர  மண் தத்துவம் சார்ந்த இயக்க நிலையில் உள்ள உபகரணங்கள், பொறியியல் கருவிகள் மூலம் ஜாதகருக்கு நல்ல வருமானம் அமையும், பூமிக்கு கீழ் கிடைக்கும் விலை உயர்ந்த உலோக அலோக பொருட்கள் மூலம் ஜாதகருக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

 குறிப்பாக தற்பொழுது நடைபெறும் புதன் திசை ஜாதகருக்கு 1,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தருவதால் ஜாதகர் தனது தொழில் மற்றும் ஜீவன வழியில் வரும் நல்ல வாய்ப்புகளையும், சந்தர்ப்பங்களையும் சரியாக பயன்படுத்திக்கொண்டு, வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றத்தை பெறுவது அவசியமாகிறது, மேலும் 1,10ம் வீடுகள் சர ராசியாக அமைவதால், ஜாதகருக்கு தரவேண்டிய யோக பலன்களை 100% சதவிகிதம் விரைந்து தரும் என்பதால், தனது வேளைகளில் கண்ணும் கருத்துமாக இருந்து வெற்றிகளை குவிப்பது சிறப்பானதாக அமையும் என்று "ஜோதிடதீபம்" கருதுகிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

செவ்வாய், 7 ஏப்ரல், 2015

சுய ஜாதகத்தில் புத்திர பாவகமும், பாக்கிய ஸ்தானமும் வழங்கும் யோக நிலைகள் !




கிராமங்களில் செலவடையாக பெரியோர்கள் ஒரு பழமொழியை சொல்வதுண்டு அதாவது " சக்தியுள்ள சாமியை கும்பிடனும், புத்தியுள்ள புள்ளைய பெற்று எடுக்கணும் " என்று, மேற்கண்ட ஒரு பழமொழியின் வழியாகவே ஒருவரது ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகத்தின் வலிமையை பற்றியும், பாக்கிய ஸ்தானம் எனும் 9ம் பாவகத்தின் வலிமையை பற்றியும் நாம் தெளிவாக தெரிந்து கொள்ள இயலும், பொதுவாக கோண ஸ்தானங்கள் என்று அலைக்கபெரும், 5,9ம் பாவகங்கள் ஒருவரின் வாழ்க்கையை நிர்ணயம் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்றால் அது மிகையில்லை, இன்றைய சூழ்நிலையில் மிக முக்கிய கடமைகளான குல தெய்வ வழிபாடு, பித்ரு வழிபாட்டின் அருமையை நாம் உணராத காரணத்தினால், வாழ்க்கையில் வரும் இன்னல்களின் தன்மையை தவிர்க்க இயலாமல் அதிக அளவில் துன்பங்களுக்கும், தொல்லைகளுக்கும் ஆளாகும் சூழ்நிலையில் நெருப்பில் இட்டால் புழு போல் தவிக்கும் நிலை ஏற்ப்படுகிறது, அப்படி பட்ட இன்னல்களை அனுபவித்த போதிலும், நமது அறிவுக்கு 5,9ம் பாவக வழியில் இருந்து குல தெய்வ வழிபாடு, பித்ரு கடமையின் அருமை நமக்கு உறைப்பதில்லை.

ஒரு ஜாதகருக்கு தனது பாரம்பரிய நிலையில் இருந்து கிடைக்க வேண்டிய கீர்த்தி,புகழ்,செல்வம்,கௌரவம்,அந்தஸ்து,பொருளாதார ரீதியான முன்னேற்றம், சிறந்த யோகமுள்ள வாரிசு அமைப்பு, தான் கற்ற கல்வியின் வழியில் இருந்து ஜாதகர் தனக்கும், தன்னை சார்ந்த சமூகத்திற்கும் சிறப்பான நன்மைகளை பெரும் தன்மை, செல்லும் இடங்களில் இருந்து வரும் வரவேற்ப்பு, தமக்கு வரும் இனல்களை கண்டு  திகைக்காமல் மிக  எளிதாக கையாளும் புத்திசாலித்தனம், கலைஞயம் மிக்க செயல்திறன்கள், புத்திகூர்மை மூலம் சகல  வாய்ப்புகளையும் முறையாக பயன்படுத்தி கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் பெரும் அமைப்பு, எடுக்கும் செயல்களில் தனது சுய அறிவாற்றலை பயன்படுத்தி வாழ்க்கையில் சிறப்பான வெற்றிகளை பெரும் யோகம், கலை துறையில் பெரும் வெற்றிகள், புதிய சிந்தனைகள் மூலம் ஜாதகர் மற்றவர்களில் இருந்து தனித்து தோன்றும் சிறப்பு இயல்புகள், ஜாதகருக்கு சிறு பிரச்சனை என்றாலும் ஓடி வந்து உதவி செய்யும் உறவுகள்,நண்பர்கள்,பொதுமக்கள், தான் ஏற்று கொண்ட லட்சியத்தை செவ்வனே முடிக்கும் சரியான திட்டமிடுதல் என ஜாதகரின் சுய புத்திசாலிதனத்தை பிரகாசிக்க செய்வது பூர்வ புண்ணியம் எனும் 5ம் பாவகமே என்றால் அது மிகையில்லை.

மேலும் ஒரு ஜாதகர் தனது அறிவு திறன் மூலம் பல சாதனைகளை படைப்பதற்கும், ஆன்மீக வழியில் இருந்து மிகப்பெரிய வெற்றிகளை பெறுவதற்கும், பொதுமக்கள் போற்றும் புகழ் மிக்க பொறுப்புகளை நேர்மையாக அலங்கரிப்பதற்க்கும், ஆக்க பூர்வமான செயல்பாடுகள் மூலம் தனது  சந்ததிகளும், சமுதாயமும் மிகப்பெரிய நன்மைகளை தொடர்ந்து  பெற்ற வண்ணமே திகழ்வதற்கும் பாக்கிய ஸ்தானம் எனும் 9ம் பாவகத்தின் வலிமை  சிறப்பாக அமைவது நல்லது, தனது பெயருக்கும் புகழுக்கும் சிறிய களங்கமும் வாராமல் வாழ்க்கையில், சகல நிலைகளில் இருந்தும் முன்னேற்றம்  பெறுவதற்கு பாக்கிய ஸ்தானம் வழிவகுக்கும், எந்த ஒரு விபத்தோ, இழப்புகளோ ஜாதகரை பாதிக்கா வண்ணம் காப்பாற்றும் வல்லமை பெற்றது ஜாதகரின் பாக்கிய ஸ்தானமே, குறிப்பாக ஜாதகரை தவறான தீய பழக்க வழக்கங்களில் இருந்து காப்பதும், தற்கொலை எண்ணங்களை மனதில் இருந்து நீக்கி, புது தெம்புடனும், புத்துணர்ச்சியுடனும் சகல பிரச்சனைகளையும் எதிர்கொள்ள வைக்கும் வல்லமை பாக்கிய ஸ்தானத்திற்கு நிச்சயம் உண்டு, ஜாதகரே தன்னிலை மறந்து செயல்பட்டாலும், ஜாதகரை சார்ந்தவர்களும் அவர்களது நண்பர்கள்,உறவினர்கள் என அனைவரும் நல்லவர்களாக வந்து நின்று ஜாதகரை நல்வழிபடுத்தும் யோகம் உண்டாகும், எந்த ஒரு சூழ்நிலையையும் மிக  எளிதாக கையாளும் மிதமிஞ்சிய அறிவாற்றல் ஜாதகருக்கு இயற்கையாக அமைந்திருக்கும், 5ம் பாவகம் ஜாதகரை கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கும் தன்மையை தரும், 9ம் பாவகம் அறிவு திறனில் சிறந்து விளங்கும் வல்லமையை தந்து, செயற்கரிய பல சாதனைகளை படைக்க வைக்கும்.

கால புருஷ தத்துவ அமைப்பில் 5ம் வீடாக வரும் சிம்மம் ஸ்திர நெருப்பு தத்துவமாக நின்று சுய ஞான யோகத்தை தரும், 9ம் வீடாக வரும் தனசு உபய நெருப்பாக நின்று அனைவருக்கும் வெளிச்சத்தை தரும் ( அக இருள் நீக்கி ஞான ஒளியை வழங்கும் ) எனவே சுய ஜாதகத்தில் 5,9ம் பாவகம் வலிமை பெறுவது  சிறப்பு, வலிமை அற்ற நிலையில் இருப்பின் ஜாதகர் தனது குல தெய்வ வழிபாட்டின் மூலமும், பித்ரு கடமை மூலமும் பூர்வபுண்ணியம் மற்றும் பாக்கிய ஸ்தான வலிமையை அதிகரித்து கொள்வது சகல நிலைகளில் இருந்தும் யோகம் தரும், சக்தியுள்ள சாமியை வணங்கும் பொழுது சிறந்த புத்திரபேறு ( வாரிசு ) கிட்டும், நாம் பிறப்பில் யோகம் அற்ற ஜாதக நிலையை பெற்று இருந்தாலும் கூட, நமது வாரிசு அமைப்பை நாம் யோமுள்ள ஜாதகமாக மாற்றும் வல்லமை, குல தெய்வ வழிபாட்டிலும், பித்ரு கடமையை செய்வதின் மூலம் நிச்சயம் உண்டாகும் என்பது கவனிக்க தக்கது.


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

ஞாயிறு, 5 ஏப்ரல், 2015

திருமண தடைகளும் சுய ஜாதகத்தில் பாதக ஸ்தான தொடர்புகளும் !


இன்றைய சூழ்நிலையில் திருமணம் செய்வதென்பது சற்று கடினமான காரியமாகவே படுகிறது, இதற்க்கு நாம் பல காரணங்களை அடுக்கினாலும், சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமை அற்று காணப்படும் பொழுதே, இதை போன்ற திருமண தடைகளையும், தாமதத்தை ஜாதகரோ ஜாதகியோ எதிர்கொள்ளும் சூழ்நிலையை பெறுகின்றனர், ஒருவருக்கு திருமண வாழ்க்கை சரியான வயதில் அமையாமல் பல தடைகளையும், தாமதங்களையும் சந்தித்து, சமுதாயத்தில் விரக்தி மன நிலையுடன் ஜீவித்திருக்கும் தன்மையை சுய ஜாதக நிலையே வழங்குகிறது, எந்த ஒரு ஜாதகருக்கும் சுய ஜாதகத்தில் குடும்பம் எனும் 2ம் பாவகமும், களத்திரம் எனும் 7ம் பாவகமும் பாதிக்க படாமல் இருப்பது ஜாதகருக்கு இளம் வயதில் திருமண வாழ்க்கையை மிக சிறப்பாக நடத்தி வைக்கும், தம்பதியரின் திருமண வாழ்க்கையும் மிகவும் சிறப்பாக அமைந்து, வாழ்க்கையில் 16 வகை செல்வங்களையும் பெற்று வாழையடி வாழையாக செழித்து வாழ்வார்கள்.

இதற்க்கு மாறாக சுய ஜாதகத்தில் குடும்ப ஸ்தானமோ, அல்லது களத்திர ஸ்தானமோ, பாதிக்கப்படும் பொழுது ஜாதகரின் திருமண வாழ்க்கை கேள்விக்குறியாக மாறுகிறது, மேலும் 2,7ம் வீடுகள் பாதக ஸ்தானத்துடன் ஒருவேளை தொடர்பு பெற்றால் ஜாதகரின் நிலை அதோ கதிதான், ஏனெனில் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெரும் எந்த ஒரு பாவகமும் 200% விகித இன்னல்களை தனது பாவக வழியில் இருந்து வாரி வழங்கும், இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு விளக்கம் பெறுவோம் அன்பர்களே.

உதாரண ஜாதகம் :


லக்கினம் : மீனம் 
ராசி : விருச்சிகம் 
நட்சத்திரம் : அனுஷம் 2ம் பாதம் 

ஜாதகிக்கு மீன லக்கினம், மீன லக்கினத்திற்கு ( உபய லக்கினம் ) பாதக ஸ்தானமாக வருவது 7ம் பாவகம், இந்த ஜாதகிக்கு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் தொடர்பு பெறும் வீடுகள் 1,3,4,7,9,11,12 வீடுகள் என 7 வீடுகள் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெறுவது மேற்கண்ட வீடுகள் வழியில் இருந்து ஜாதகிக்கு 200% விகித இன்னல்களை தந்துகொண்டு இருக்கிறது, குறிப்பாக இலக்கின வழியில் இருந்து ஜாதகி சரியான சில முடிவுகளை எடுக்க இயலவில்லை, 3ம் பாவக வழியில் இருந்து சகோதர வழியில் உதவ ஆளில்லை, எடுக்கும் முயற்ச்சிகள் தோல்வி,4ம் பாவக வழியில் இருந்து தகப்பனாரின் ஆதரவில்லை, தனது பெயரில் எவ்வித சொத்து வீடு, வண்டி வாகனம் இல்லை.

 7ம் பாவக வழியில் இருந்து நல்ல நண்பர்கள் இல்லை, உறவுகளுடனும் இணக்கம் இல்லை, 9ம் பாவக வழியில் இருந்து வீண் அவ பெயர்களை சந்திக்கும் தன்மை, பெரிய மனிதர்களின் பேச்சை கேட்டு நடப்பதில்லை, பெரியவர்களுக்கு மதிப்பு மரியாதை தருவதில்லை, 11ம் பாவக வழியில் இருந்து அதிர்ஷ்டம் இல்லாத நிலை, ஜாதகிக்கு பிற்போக்கு தனமுடன் மூடநம்பிக்கையில் பற்று அதிகம், 12ம் பாவக வழியில் இருந்து ஜாதகிக்கு திருப்தியற்ற மன நிலையுடன் வாழ்க்கையை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தருகிறது.

ஜாதகிக்கு தற்பொழுது நடைபெறும் கேது திசை மேக்கண்ட பாதக ஸ்தான பலனையே ஏற்று நடத்துவது கவலைக்குரிய விஷயமாகவே படுகிறது, ஜாதகிக்கு வயது 31 முடிந்தும் திருமணம் செய்வதற்கு உண்டான சிறு அறிகுறிகள் கூட இதுவரை தென்படாத நிலைக்கு ஜாதகியின் பெரும்பாலனா பாவகங்கள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றதும், இதற்க்கு முன் நடந்த புதன் திசையும், தற்பொழுது நடைபெறும் கேது திசையும் பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தியதுமே காரணமாக அமைகிறது, ஆக ஜாதகி தனது சுய ஜாதக நிலையை உணர்ந்து தனது வாழ்க்கையை அமைத்து கொள்வதே சால சிறந்தது.

அல்லது அனைத்து பாவகமும் வலிமை பெற்ற ஒரு ஜாதகரை தனது வாழ்க்கை துணையாக தேர்ந்தெடுத்து தனது வாழ்க்கையை மிக சிறப்பாக அமைத்து கொள்வதே ஜாதகிக்கு அறிவு சார்ந்த விஷயமாக " ஜோதிடதீபம்  " கருதுகிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

சுய ஜாதகத்தில் ஜீவன மேன்மை ( தொழில் முன்னேற்றம் ) தரும் திசாபுத்திகள் !




ஒருவரது சுய ஜாதக அமைப்பின் படி தொழில் மற்றும் வேலை வாய்ப்பில் முன்னேற்றமும், யோகமும் தரும் திசாபுத்திகள் எது என்பதை தெளிவாக ஜாதக கணிதம் மூலம் தெரிந்துகொண்டு, அந்த கால நேரத்தில் ஜாதகர் தொழில் ரீதியான முயற்ச்சிகளை மேற்கொள்ளும் பொழுது 100% விகித வெற்றிகளை தங்கு தடையின்றி ஜாதகர் பெறலாம், பொதுவாக ஒருவரது தொழில் மற்றும் வேலைவாய்ப்பில் வரும் முன்னேற்றத்தை நிர்ணயம் செய்வது அவரது சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையையும், வலிமை பெற்ற பாவகத்தின் பலனை ஏற்று நடத்து திசாபுத்திகளே என்றால் அது மிகையில்லை, பொதுவாக சுப கிரகமான குரு,சுக்கிரன்,புதன்,வளர்பிறை சந்திரன் திசாபுத்திகளில் ஜீவன மேன்மை உண்டாகும் என்று கணிப்பதும், அசுப கிரகங்களான சூரியன்,செவ்வாய்,தேய்பிறைசந்திரன்,சனி,ராகுகேது  திசபுத்திகளில் ஜீவன முன்னேற்றம் தடைபடும், பாதிப்பை தரும் என்று முடிவு செய்வது முற்றிலும் உண்மைக்கு புறம்பான விஷயமாகவே கருதலாம்.

தொழில் மற்றும் வேலை வாய்ப்பில் முன்னேற்றமும், முன்னேற்றம் அற்ற நிலையை தருவது நவ கிரகங்களின் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் அல்ல, குறிப்பிட்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையையும், அந்த பாவக பலனை ஏற்று நடத்தும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமுமே என்றால் அது மிகையில்லை அன்பர்களே! இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு விளக்கம் தர ஜோதிடதீபம் கடமைபட்டு இருக்கிறது.

உதாரண ஜாதகம் :


லக்கினம் : சிம்மம் 
ராசி : கடகம் 
நட்சத்திரம் : பூசம் 1ம் பாதம் 

ஜாதகருக்கு சிம்ம லக்கினம், சுய ஜாதகத்தில் ஜீவனத்தை குறிக்கும் 10ம் பாவக நிலை ஆய்வு செய்யும் பொழுது 1,2,4,5,8,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று மிக வலிமையுடன் இருப்பது ஜாதகருக்கு ஜீவன வழியில் இருந்து மிகுந்த யோகத்தை தரும் அமைப்பாக கருதலாம், 1,2,4,58,10ம் வீடுகள் முறையே ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவதால், ஜாதகர் இலக்கின வழியில் இருந்து சுயமாக தொழில் செய்து வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பவர் என்பது உறுதியாகிறது, ஜாதகர் தனது அறிவின் வழியிலோ, அல்லது தனது உடல் உழைப்பின் மூலமோ ஜீவனத்தை தேடி சுயமாக தொழில் வெற்றிகளை குவிப்பார் என்பதும், தனது சுய உழைப்பின் மூலம் ஸ்திரமான தொழில் நிறுவனங்களை நிர்வாகிக்கும் தன்மையை பெறுவார் என்பதும் 1ம் பாவக வழியில் இருந்து உறுதிபடுத்த படுகிறது.

ஜாதகர் 2ம் பாவக வழியில் இருந்து நல்ல வருமான வாய்ப்பை பெறுவார் தனது பேச்சு திறனின் காரணமாக நல்ல வேலைவாய்ப்பை பெறுவதும், வரும் வருமானத்தை கொண்டு வாழ்க்கையில் தொழில் துவங்கும் தன்மையை ஜாதகருக்கு தரும், 4ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு வீடு,வண்டி,வாகனம்,நிலம்,சொத்து ஆகிய அமைப்பில் இருந்தும் நல்ல வருமானத்தை தரும், தனது பெயரில் இருக்கும் அசையும் அசையா சொத்துகள் மூலமும் ஜாதகருக்கு தொழில் அமையும், தனது பெயரிலேயே ஜாதகர் தொழில் துவங்கி செய்யலாம், தனது பெயரில் சொத்து வாங்கலாம் விற்கலாம் எனவே ஜாதகருக்கு 4ம் பாவகம் ஜீவன ஸ்தானத்துடன் தொடர்பு பெறுவது மிகுந்த யோகத்தை வாரி வழங்கும்.

5ம் பாவக வழியில் இருந்து, ஜாதகர் தான் கற்ற கல்வியின் வழியில் இருந்தும், தனது முன்னோர்களின் அறிவு திறனின் தன்மையின் வழியில் இருந்து தொழில் முன்னேற்றங்களை பெறுவார், 5ம் பாவகம் ஜீவன பாவகத்துடன் தொடர்பு பெறுவது, ஜாதகரின் புதிய சிந்தனையும், புதிய செயல்பாடுகளும், மற்ற அமைப்பில் இருந்து வேறுபடுத்தி தனித்தன்மையுடன் திகழ செய்யும், ஜாதகரின் வெற்றியும் இதன் வழியிலேயே அமையும், எவரும் பயன்படுத்தாத புதிய தொழில் முறை யுக்திகளை பயன்படுத்தி வாழ்க்கையில் ஜீவன மேன்மையை ஜாதகர் தங்குதடையின்றி பெறுவார், குல தெய்வத்தின் அருளாசிகள் ஜாதகரை எவ்வித தொல்லைகளில் இருந்தும் காப்பாற்றிவிடும் என்பது கவனிக்க தக்கது.

 8ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு திருமண வாழ்க்கையின் மூலம் ஜீவனம் மேம்படும் அமைப்பை தருகிறது, ஜாதகர் தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து நல்ல வருமான வாய்ப்பையும் தொழில் முன்னேற்றத்தையும் பெறுவார், 8ம் பாவகம் திடீர் அதிர்ஷ்டத்தை ஜீவன அமைப்பில் தருவதால், ஜாதகர் செய்யும் தொழில் அல்லது வேலை வாய்ப்பில் திடீரென முன்னேற்றத்தை பெற்று, புதையலுக்கு நிகரான சொத்து சுக சேர்க்கையை பெறுவார் என்பது வரவேற்க தக்கது, ஜாதகரின் தொழில் முன்னேற்றம் என்பது வெளிநாடுகளில் இருந்து வரும் வருமானத்தை அடிப்படையாக கொண்டதாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

  10ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் நிச்சயம் ஒரு ஸ்திரமான தொழில் முன்னேற்றத்தை பெறுவார் என்பதும், செய்யும் தொழில் அல்லது வேலை வாய்ப்பில் தொடர்ந்து வருமானத்தை பெற்றுகொண்டே இருப்பார் என்பதும் உறுதியாகிறது, ஜாதகரின் கையில் எப்பொழுதும் பணம் இருந்துகொண்டே இருக்கும், ஜீவன வழியில் இருந்து ஜாதகருக்கு நல்ல கௌரவமும், அந்தஸ்தும் கிடைத்துக்கொண்டே இருக்கும், நிலையான மதிப்பு மரியாதையுடன் நீண்ட நெடுங்காலம் ஜீவன வாழ்க்கையை செய்யும் தன்மையை தரும், ஜாதகருக்கு ஸ்திரமான மண் தத்துவம் சார்ந்த தொழில்கள் அபரிவிதமான வெற்றியை வாரி வழங்கும், பொறுமையுடன் கையாளும் தொழில்கள் மூலம் நீண்டகால தொழில் முன்னேற்றத்தை ஜாதகர் ஸ்திரமாக பெறுவார் என்பது உறுதியாகிறது.


பொதுவாக ஜாதகரின் ஜீவன பாவகத்தை ஆய்வுக்கு எடுத்துகொள்ளும் பொழுது கிடைக்கும், சுய ஜாதகரீதியான பதில்கள் மேற்கண்டவை, இனி அடுத்தது மேற்கண்ட யோக பலன்களை ஜாதகர் எப்பொழுது, எந்த எந்த கிரகங்களின் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சம காலங்களில் பெறுவார் என்பது தெரிந்தால் மட்டுமே ஜாதகர், முன் எச்சரிக்கையுடன் செயல்பட்டு தனது ஜீவன வாழ்க்கையை மேலும் சிறப்பாக அமைத்துக்கொள்ள உதவும், ஆக அவரது ஜாதகத்தில் நடைபெறும் எந்த எந்த கிரகங்களின் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்துகிறது என்பதை ஆய்வு செய்து, அதை தெளிவாக ஜாதகருக்கு உணர்த்துவதே ஒரு சிறந்த ஜோதிடனின் கடமை.

எனவே ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்தும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சம அமைப்பை இனி ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே!

ஜாதகருக்கு ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்தும் கிரகங்களின் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சம விபரங்கள் பின்வருமாறு :

1) சனி 1,5ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று ஜீவன ஸ்தான பலனை தருகிறது.
2) புதன் 4ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று ஜீவன ஸ்தான பலனை தருகிறது.
3) கேது 2,4,8,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று ஜீவன ஸ்தான பலனை தருகிறது.
4) சந்திரன் 1,5ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று ஜீவன ஸ்தான பலனை தருகிறது.

ஆக ஜாதகர் ஜீவன ரீதியான வெற்றிகளை சனி,புதன்,கேது,சந்திரன் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சம காலங்களில், தங்குதடையின்றி 100% விகிதம் பெறுவார் என்பது உறுதியாகிறது, எனவே ஜாதகர் மேற்கண்ட திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சம காலங்களில் தனது தொழில் அபிவிருத்தியை மேற்கொண்டு வாழ்க்கையில் சகல விதங்களில் இருந்தும் ஜீவன மேன்மையை பெறலாம் என்பதே "ஜோதிடதீபத்தின் " ஆலோசனை வாழ்த்துகள்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696


சாயா ( ராகு கேது ) கிரகங்களுடன் சேர்ந்த கிரகங்கள் வழங்கும் யோகபலன்கள் !


 சாயா கிரகங்களுடன் சேர்க்கை பெரும் கிரகங்கள் பெரும்பாலும் தீமையான பலன்களையே தரும் என்பது பல ஜோதிடர்களின் கருத்தாக உள்ளது, மேலும் ராகு கேது கிரகங்களுடன் தொடர்பு பெரும் கிரகங்கள் ஜாதகருக்கு அவயோக பலன்களை தருவதில் எவ்வித விதிவிலக்கும் கிடையாது என்பது ஒரு சாராரின் கருத்து, ராகு கேதுவுடன் சேர்ந்த கிரகங்கள் வழங்கும் பலன்களை நிர்ணயம் செய்யும் முன், சாயா கிரகங்கள் அமர்ந்த பாவக நிலையை கருத்தில் கொள்வது மிக துல்லியமான பலன்களை சரியாக சொல்ல உதவும், ஏனெனில் சாயா கிரகங்கள் தான் அமர்ந்த பாவகத்தின் தன்மைக்கு ஏற்ப்பவே, யோக அவயோக பலன்களை வழங்குவார்கள் என்பது கவனிக்க தக்கது, இதை ஒரு உதாரண ஜாதகம் கொண்டு காண்போம்.



லக்கினம் : சிம்மம் 
ராசி : சிம்மம் 
நட்சத்திரம் : மகம் 3ம் பாதம் 

ஜாதகி சிம்ம லக்கினம் லக்கினத்திற்கு 3,9ம் பாவகங்கள் முறையே சாயா கிரகங்களான ராகு கேது அமர்ந்திருப்பது சிறப்பான யோக நிலையை தரும் அமைப்பு, ஜாதகிக்கு விருச்சிகத்தில் 3ம் பாவகத்தில் அமர்ந்த ராகு பகவான் திடீர் அதிர்ஷ்டங்களையும், சிறந்த வாய்ப்புகளையும் வாரி வழங்குகிறார், தான் நினைக்கும் காரியங்களை நினைத்த வண்ணம் நிறைவேறும் யோகத்தை தருகிறார், விருச்சிகம் ஸ்திர  நீர் ராசியாக அமைவதால், ஜாதகியின் நிலையான மன உறுதியையும், சரியான முடிவுகளை எடுக்கும் தன்மையை வாரி வழங்குவது வரவேற்க தக்கது, மேலும் ஜாதகி விளையாட்டு துறையிலும், வியாபர துறையிலும் சிறந்து விளங்கும் வல்லமையை  தருவது ராகு பகவானே, 3ம் பாவகத்தில் அமர்ந்த ராகு பகவான் ஜாதகிக்கு 100% யோக பலன்களை தான் அமர்ந்த பாவக வழியில் இருந்து சிறப்பாக தருகிறார் என்பது இந்த ஜாதகிக்கு கிடைத்த வரபிரசாதம் என்றே சொல்லாம், மேலும் ஜாதகிக்கு சகோதர வழியில் இருந்து 100% நன்மைகள் நடைபெறும் என்பது கூடுதல் யோகமாக கருதலாம்.

9ம் பாவகத்தில் ரிஷப ராசியில் அமர்ந்த கேது பகவானுடன் சேர்ந்த கிரகங்கள் சூரியன் மற்றும் புதன் எனும் இரண்டு கிரகங்களின் தன்மையை தானே ஏற்று கேது பகவானே பலன்களை வாரி வழங்குவது கண்கூடான விஷயம், ( சுக்கிரன் ரிஷபத்தில் உள்ள 10ம் பாவகத்தில் அமர்ந்திர்ருக்கிறார் ) மேலும் கேது அமர்ந்திருக்கும் 9ம் பாவகத்தை 100% வலிமை பெற செய்து சூரியன் மற்றும் புதன் கிரகங்களின் தன்மையை தானே ஏற்று நடத்துவது ஜாதகியை கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கும் தன்மையை தரும், படிப்பில் முதல் இடத்தை ஜாதகி மிக எளிதாக கை பற்றுவார், குறிப்பாக ஜாதகியின் அறிவு திறன் மற்றவர்கள் அனைரையும் பிரமிக்க வைக்கும், தான் கற்ற கல்வியின் மூலம் அபரிவிதமான வருமான வாய்ப்பை ஜாதகி தங்குதடையின்றி  பெறுவார், சமுதாயத்தில் பெரியவர்கள் போற்றும் குணவதியாக  திகழும் தன்மையை கேது பகவான் வழங்குவது கவனிக்க தக்கது.

9ம் பாவகத்தில் அமர்ந்த சூரியன்,புதன் இரு கிரகங்களின் தன்மையை கேது பகவானே ஏற்று நடத்துவதால், சூரியன் அமைப்பில் இருந்து ஜாதகி அதிகார பதவிகளையும், நிர்வாகத்திலும் சிறந்து விளங்கும் யோகம் உண்டு, புதன் அமைப்பில் இருந்து புத்தி கூர்மையான செயல்பாடுகள் மூலம் தான் எடுத்த காரியங்களை செவ்வனே செய்து முடிக்கும் தன்மையை தரும், ஜாதகியுடன் சேரும் அன்பர்கள் அனைவரும் மிகசிறந்த பெரிய மனிதர்களும், கல்வியாளர்களும், ஆன்மீக பெரியவர்களாகவும் திகழ்வார்கள், இவர்களது ஆசியுடன் ஜாதகியின் வாழ்க்கை மிக மிக உயர்ந்த நிலைக்கு எடுத்து செல்லும் என்பது கேது பகவானால் நிகழும் யோக அமைப்பே என்றால் அது மிகையில்லை, லக்கினாதிபதி 2,11க்கு  உடையவர்களின் ( பாரம்பரிய முறைப்படி) சேர்க்கையை பெற்ற கேது பகவான் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்தில் வலிமை பெற்று அமர்ந்ததால் மேற்கண்ட யோக பலன்கள் ஜாதகிக்கு தங்குதடையின்றி நடைபெறும் என்பது மட்டும் உறுதி.

குறிப்பு :

எந்த ஒரு ஜாதகத்திலும் சாயா கிரகங்களான ராகு கேதுவுடன் சேர்ந்த கிரகங்கள் வழங்கும் பலனை நிர்ணயம் செய்யும் பொழுது, ராகுகேது ஜாதகருக்கு லக்கினத்தில் இருந்து எந்த பாவகத்தில் அமர்ந்து இருக்கின்றனர், அமர்ந்த பாவகத்திர்க்கு யோக பலனை தருகின்றனரா ? அவயோக பலனை தருகின்றனரா ? என்பதை தெளிவாக தெரிந்து கொண்டு பலன் காண்பதே,  குறிப்பிட்ட ஜாதகருக்கு சாயா கிரகங்களுடன் சேர்ந்த கிரகங்கள் தரும் பலனை மிக துல்லியமாக கணிதம் செய்ய இயலும், பொதுவாக ராகுகேதுவுடன் சேர்ந்த கிரகங்கள் தீமையை செய்யும் என்பது முற்றிலும் ஜோதிட கணித உண்மைக்கு புறம்பான விஷயமாகவே " ஜோதிடதீபம் " கருதுகிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696 

புதன், 18 மார்ச், 2015

சுய ஜாதகத்தில் ஆட்சி உச்சம் பெற்ற கிரகத்தின் திசாபுத்தி நடைமுறைக்கு வரும் பொழுது யோகபலன்களை வாரி வழங்குமா ?




 ஒருவரின் சுய ஜாதகத்தில் ராசி அல்லது அம்ச நிலையிலோ  ஆட்சி, உச்சம் பெற்று இருக்கும் கிரகங்களின் திசாபுத்திகள் நடைமுறைக்கு வரும்பொழுது, ஜாதகர் யோக பலன்களை அனுபவிப்பார், பகை நீச்சம் பெற்று இருக்கும் திசாபுத்திகள் நடைமுறைக்கு வரும்பொழுது, ஜாதகர் அவயோக பலன்களை அனுபவிப்பார், என்பது பொதுவான கருத்தாக உள்ளது, கிரகங்களின் ஆட்சி,உச்சம்,சமம்,நட்பு,பகை,நீச்ச நிலைகளுக்கும், சுய ஜாதகத்தில் தனது திசாபுத்தி காலங்களில் அவர்கள் தரும் பலாபலன்களுக்கும் சம்பந்தம் இல்லை என்பதே உண்மை.

 மேலும் கிரகங்களின் ஆட்சி,உச்சம்,சமம்,நட்பு,பகை,நீச்ச நிலைகள் யாவும் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு உண்டான வலிமை அமைப்பே அன்றி, சுய ஜாதகத்திற்கு அவர்கள் தரும் பலன் அல்ல வலிமையையும் அல்ல, ஒருவரின் சுய ஜாதக அமைப்பில் லக்கினத்தை அடிப்படையாக கொண்டே கிரகங்களின் வலிமையை நிர்ணயம் செய்ய இயலும், மேலும் 12பாவகங்களின் தன்மையை நிர்ணயம் செய்ய இயலும், பொதுப்படையாக சுய ஜாதகத்தில் நவகிரகங்கள் ஆட்சி உச்ச நிலையில் உள்ளதால் யோகத்தை செய்யும் என்று முடிவு செய்வதும், பகை நீச்சம் பெற்று உள்ளதால் தீமையை செய்யும் என்று முடிவு செய்வதும் சரியான ஜாதக கணித பலனாக இருக்க வாய்ப்பில்லை என்பதே ஜோதிடதீபத்தின் கருத்து.

மேற்கண்ட கருத்தை உறுதி செய்யும் விதத்தில் சரியான உதாரண ஜாதகம் கொண்டு விளக்கம் தர ஜோதிடதீபம் கடமைபட்டுள்ளது.

உதாரண ஜாதகம் 1



லக்கினம் : மகரம் 
ராசி : கடகம் 
நட்சத்திரம் : ஆயில்யம் 4ம் பாதம் 

இந்த மகர இலக்கின ஜாதகருக்கு தற்பொழுது நடைபெறும் சுக்கிரன் திசை மீனத்தில் உச்சம் பெற்று  தனது  திசாபுத்தி  பலன்களை 17/03/1997 முதல் 17/03/2017 வரை வழங்குகிறார், பொதுவாக இவரது ஜாதகத்தை ஆய்வு செய்யும்  அன்பர்கள் அனைவரும் 5,10க்கு உடைய சுக்கிர பகவான் திசை 3ம் பாவகமான மீனத்தில் உச்சம் பெற்று நடத்துவதால் ஜாதகருக்கு சகல நிலைகளில் இருந்தும் முன்னேற்றம் உண்டாகும் 5,10ம் பாவக வழியில் இருந்தும் 3ம் பாவக வழியில் இருந்து மித மிஞ்சிய யோக பலன்களை, மகர லக்கினத்திற்கு யோக காரனான சுக்கிரன்  வாரி வழங்குகிறார் என்ற கருத்தை பலனாக சொல்லியிருக்கின்றனர், ஜாதகரும் இதை நம்பி செய்த காரியங்கள் யாவும் தோல்வி மேல் தோல்வியே கிடைத்து இருக்கின்றது, ஜீவன வழியில் இருந்து அதிக சிரமங்கள், திடீர் சொத்து இழப்புகள், சுய தொழில் செய்யும் நோக்கத்தில்  வாங்கிய கடன் தொல்லைகள், மூட நம்பிக்கையின் பெயரில் இழந்த பொருள் இழப்புகள் என ஜாதகர் தற்பொழுது நடைபெறும் சுக்கிரன் திசை, ஜோதிடர்கள் கூறிய பலனுக்கு நேர்எதிரான பலாபலன்களை அனுபவித்து கொண்டு  இருக்கிறார், ஜாதகரின் இந்த நிலைக்கு காரணம் என்ன ?

சுய ஜாதகத்தில் சுக்கிரன் உச்ச நிலையில் இருந்தாலும் கூட, அவர் தனது திசாபுத்தி காலங்களில் ஏற்று நடத்தும் பாவக பலன்களை பற்றி தெரியாமல் பலன் கண்டதே இதற்க்கு காரணம், இந்த ஜாதகருக்கு உண்மையில் சுக்கிரன் மீனத்தில் உள்ள 2ம் பாவகத்தில் அமர்ந்து  தனது திசையில் 6,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றும், 4,10ம் வீடுகள் திடீர் இழப்பை தரும் ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றும் பலன்களை தருவது, ஜாதகருக்கு வந்த இந்த மோசமான சூழ்நிலைக்கு காரணமாக கொள்ளலாம்.

ஜாதகருக்கு 4,10ம் வீடுகள் 8ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது 4ம் பாவக வழியில் இருந்து தனது சொத்து வண்டி வாகனம் என அனைத்தையும் திடீரென இழந்து வாடும் சூழ்நிலையை தந்தது, சுக போக வாழ்க்கைக்கு ஆசைபட்டு சொத்து சுகத்தை அனைத்தையும் இழக்கும் தன்மையையும், தனக்கு உள்ள சொத்துகளை துச்சமென மதித்து, அதன் மதிப்பு தெரியாமல் ஜாதகர் அனைத்தையும் இழந்து நிற்கும் தன்மையை தந்தது, 10ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் சொந்த தொழில் செய்யும் உத்தேசத்தில் செய்த காரியங்கள் யாவும் பெரிய பின்னடைவையும், பெருத்த நஷ்டத்தையும் தந்தது, தனது முன்னோர்கள் சேர்த்து வைத்திருந்த ஜீவன கௌரவத்தையும் இழந்து, தொழில் முறையில் ஜாதகர் மிகப்பெரிய தோல்விகளை சந்தித்தார், உச்சம் பெற்ற சுக்கிரன் திசை என்று உசுபேத்திய ஜோதிடர்களின் வழிகாடுதல்களின் பெயரில் அகல கால் வைத்து மிகப்பெரிய நஷ்டங்களை ஜாதகர் சந்தித்தை இவரது நலம் விரும்பிகாளால் கூட தடுக்க இயலவில்லை, மேற்க்கண்டவை  சுக்கிரன் திசை ஜாதகருக்கு 4,10ம் வீடுகள் 8ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றதால் ஏற்ப்பட்ட 80% விகித இழப்புகள்.

ஜாதகருக்கு 6,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றதே 200% சதவிகித இன்னல்களை வாரி வழங்கியது, அதாவது ஜாதகர் 6ம் பாவக வழியில் இருந்து ஜீவனம் மேற்கொள்வதற்காக வாங்கிய கடனே  வட்டி குட்டி போட்டு கடன்தொகையை விட 10 மடங்கு அதிகரித்து நின்றது, இதன் காரணமாக ஜாதகர் தனது முன்னோர்களின் ஜீவன சொத்துகளையும், பாரம்பரிய சொத்து, பூர்வீக பூமி ஆகியவற்றை அனைத்தும் இழந்து செய்வது அறியாமல் திகைக்க வைக்க, உடல் ரீதியான பிரச்சனைகளுக்காக மருத்துவ செலவுகள் ஒருபக்கம் ஜாதகரை வேறு வழியில் இன்னல்களை வாரி வழங்கியது, 11ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் எவ்வித அதிர்ஷ்ட வாய்ப்புகளையும் பெற இயலாமல், பிற்போக்கு சிந்தனையுடனும், அறிவார்ந்த செயல்பாடுகள் இல்லாமலும், எவர் எதை சொன்னாலும் அதை உண்மை என நம்பி செய்த காரியங்களில் ஏற்ப்பட்ட பொருள் இழப்புகள் என்பதும் மிக மிக அதிகம், ஜாதகரின் சிந்தனை திறனின் செயல்பாடுகள் முடங்கியதற்கு இதுவும் ஓர் காரணமாகவே கருதலாம், ஆக உச்சம் பெற்ற சுக்கிரன் திசை ஜாதகருக்கு பாதிப்படைந்த பாவக தொடர்புகளை பெற்றதால் ஜாதகருக்கு எவ்வித யோக பலன்களையும் சுக்கிரன் திசை வழங்க வில்லை என்பதே முற்றிலும் உண்மை , பொதுவாக சுய ஜாதகத்தில் கிரகங்கள்  ஆட்சி உச்ச நிலையை கருத்தில் கொண்டு பலன் காணாமல், தனது திசாபுத்தி காலங்களில் எந்த பாவகத்தின் பலனை தருகிறது என்ற உண்மை நிலையை உணர்ந்து ஜாதக பலன் காணும் பொழுதே, சம்பந்தபட்ட ஜாதகருக்கு மிக துல்லியமான ஜாதக கணித பலன்களை சொல்ல இயலும் என்பது மறுக்க இயலாத உண்மை.

 உதாரண ஜாதகம் 2

லக்கினம் : மிதுனம் 
ராசி : மகரம் 
நட்சத்திரம் : அவிட்டம் 2ம் பாதம் 

இந்த மிதுன இலக்கின ஜாதகருக்கு மகரத்தில் நீச்ச நிலையில் அமர்ந்த குரு பகவானின் திசை 26/05/2007 முதல் 26/05/2023 வரை நடைபெறுகிறது, தற்பொழுது நடைபெறும் குரு திசை ஜாதகருக்கு 1,5,7,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று, ஜாதகருக்கு 1ம் பாவக வழியில் இருந்து நல்ல உடல் நலம், மன நலம், புகழ், வெற்றி, கீர்த்தி ஆகியவற்றை வாரி வழங்குவதுடன், ஜாதகர் தனக்கு வரும் அதிர்ஷ்ட வாய்ப்புகளை முறையாக பயன்படுத்திக்கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் பெரும் யோகத்தை தருகிறது, 5ம் பாவக வழியில் இருந்து இறை அருளின் கருணையை பரிபூரணமாக பெரும் யோகத்தையும், தனது பூர்வீகத்தில் இருந்துகொண்டே வாழ்க்கையில் சகல யோகத்தையும் பெரும் தன்மையை தருகிறது, ஜாதகரின் நுண்ணறிவு திறன் ஜாதகர் செய்யும் சுய தொழில் அமைப்பில் மிகுந்த அதிர்ஷ்டத்தை வாரி வழங்குகிறது, ஜாதகரின் புதிய சிந்தனையும் செயல்பாடுகளும், மிகப்பெரிய வெற்றி வாய்ப்பை உறுதி செய்கிறது.

7ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு வாழ்க்கை துணை வழியில் இருந்து அதிர்ஷ்ட வாய்ப்புகள் வந்து குவிந்த வண்ணம் இருக்கிறது, ஜாதகரின் நண்பர்கள் தொழில் முறை கூட்டாளிகள் மூலம் மிகுந்த அதிர்ஷ்ட வாய்ப்பையும், சிறந்த உதவிகளையும், எதிர்பாராத வருமான வாய்ப்பையும் பெரும் யோகத்தை தருவது சிறப்பான விஷயமாக கருதலாம், ஜாதகர் செய்யும் ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில் சிறந்து விளங்கும் தொழில் திறமைகளை பெற்று இருப்பது மேற்க்கண்ட 7ம் பாவக வழியில் இருந்தே என்றால் அது மிகையில்லை. 

11ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் நீடித்த அதிர்ஷ்டத்தையும், முற்போக்கு சிந்தனையுடன் அனைத்தையும் எதிர்கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் பெரும் யோகத்தை தருவது கவனிக்க தக்கது, ஜாதகர் நினைக்கும் எண்ணங்கள் யாவும் நடைமுறைக்கு வருவதும், செய்யும் காரியங்கள் யாவும் நல்ல அதிர்ஷ்ட வாழ்க்கையை தருவது 11ம் பாவக வழியில் இருந்தே, மேலும் ஜாதகருக்கு உதவி செய்ய பலர் காத்து இருப்பது வரவேற்க தக்கது, ஜாதகரின் தேவையும், ஜாதகருடைய தேவைகளையும் நிறைவேற்றும் விதத்தில், ஜாதகரை சுற்றி உள்ளவர்கள் இருப்பது 11ம் பாவகத்தின் வலிமையே, ஆக நீச்சம் பெற்ற குரு திசை ஜாதகருக்கு 1,5,7,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று, மிக பெரிய  யோக வாழ்க்கையை தனது திசையில் வாரி வழங்குவது ஆட்சி,உச்சம்,பகை,நீச்சம் என்ற வலிமையின் நடைமுறையில் வழங்கும், முரண்பட்ட பலாபலன்களின் தன்மையை மேற்கண்ட உதாரண ஜாதகம் மூலம் நாம் உணர்ந்து கொள்ள இயலும் அன்பர்களே!

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

சனி, 14 மார்ச், 2015

ராகுகேது தோஷம் சுய ஜாதகத்தில் வழங்கும் அவயோக பலன்கள் !




ஜோதிடதீபம் பொதுவாக, சாய கிரகமான ராகு கேது, சுய ஜாதகத்தில் நல்ல நிலையில் அமரும் பொழுது, ஜாதகருக்கு  தரும் யோக பலன்களை பற்றி வெகுவாக பதிவு செய்திருக்கிறது இதற்க்கு முன் எழுதிய கட்டுரைகளில், மேலும் சுய ஜாதகத்தில் ராகு கேது எங்கு அமர்ந்தால் நன்மையை செய்வார்கள் என்று சில விளக்கங்களும், கட்டுரைகளில் தெளிவுபட தெரிவித்திருக்கும், ஆனால் ராகு கேது ஒருவரது ஜாதகத்தில் பாதிப்பான பலனை தரும் அமைப்பில் அமர்ந்து இருப்பின் அவர்கள் தரும் அவயோக பலன்களை பற்றி குறிப்பிட்ட அளவிலேயே பதிவு செய்திருக்கும், இந்த பதிவில் ராகுகேது பாதிப்பை தரும் அமைப்பில் இருப்பின் ஜாதகரின் வாழ்க்கை எவ்வித இனல்களை எதிர்கொள்ள வேண்டி வரும் என்பதை சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே !

சாய கிரகங்களான ராகு கேது சுய ஜாதகத்தில் வலிமை பெற்று அமரும் பொழுது எந்த அளவிற்கு யோக பலன்களை வாரி வழங்குகிறதோ? அதை போன்றே பன்மடங்கு அவயோக பலன்களை வாரி வழங்கும் தான் அமர்ந்த நிலையில் வலிமை அற்ற தன்மையுடன் இருப்பின், பொதுவாக சுய ஜாதகத்தில் ராகு கேது பாதிப்பை தாராமல் வலிமையுடன் இருப்பது ஜாதகருக்கு மிகுந்த நலன்களை தரும், ஒருவேளை ராகு கேது பாதிப்படைந்து அமர்ந்த பாவகத்தின் பலனை நடைமுறையில் உள்ள திசை,புத்தி,அந்தரம்  மற்றும் சூட்சமம்  அல்லது எதிர்வரும்திசை,புத்தி,அந்தரம்  மற்றும் சூட்சமம் ஆகியவை ஏற்று நடத்தாமல் இருப்பின் ஜாதகருக்கு நல்லது, ஒருவேளை குறிப்பிட்ட பாவகத்தின் பலனை ஏற்று நடத்தினால், ஜாதகர் அந்த பாவக வழியில் இருந்து பெரும் அவயோக பலன்களை எந்த விதத்திலும் தவிர்க்க இயலாது அனுபவித்தே தீரவேண்டி வரும், மேலும் சாய கிரகங்களுடன் சேர்ந்த கிரகங்களின் பலா பலன்களையும் அனுபவிக்கும் தன்மையை தரும், தன்னுடன் சேர்ந்த கிரகங்களின் பலன்களையும் தானே ஏற்று நடத்த ஆரமிபித்து விடும் வல்லமை பெற்றது, இந்த  சாயா கிரகங்களான ராகு கேது  என்றால் அது  மிகையில்லை.

சரியான உதாரண ஜாதகம் கொண்டு விளக்கம் காண்போம் :



லக்கினம் : கும்பம்
ராசி : துலாம்
நட்சத்திரம் : சுவாதி 4ம் பாதம்

ஜாதகருக்கு கும்ப லக்கினம் ராகு கேது சுய ஜாதகத்தில் முறையே,  தனுசு ராசியில் உள்ள 10ம் பாவகத்தில் ராகுவும், மிதுன ராசியில் உள்ள நான்காம் பாவகத்தில் கேதுவும் அமர்ந்து, 10ம் பாவகத்தையும், 4ம் பாவகத்தையும் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாக்கும் வல்லமையை பெறுகின்றனர், இனி ஜாதகருக்கு சாயா கிரகங்கள் தரும் பலன்களை பற்றி சிந்திப்போம்.

பொதுவாக ஒருவரது சுய ஜாதகத்தில் சுக ஸ்தானம் எனும் 4ம் பாவகமும், ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகமும் பாதிப்பது ஜாதகருக்கு சம்பந்தபட்ட பாவக வழியில் இருந்து அதிக இன்னல்களை வாரி வழங்கும், மேலும் பாதிப்பிற்கு சாயாகிரகங்கள் காரணமாக அமைந்தால் ஜாதகரின் நிலை மிகவும் பரிதாப நிலைக்கு ஆளாக்கும், இந்த ஜாதகம் ஆண்  என்பதால் பாதிப்பின் தன்மை மிகவும் கடுமையானதாக அமைந்தது, உத்தியோகம் புருஷ லட்சனம் என்று சொல்வார்கள், இவரது ஜாதகத்தில் ராகு பகவான் ஜீவன ஸ்தானத்தில் அமர்ந்து ஜாதகரின் தொழில் மற்றும் வேலை வாய்ப்பை கடுமையாக பாதித்து ஜீவன வாழ்க்கையை கேள்விக்குறியாக மாற்றினார், ஜாதகருக்கு இதுவரை சரியான தொழில் அமையவில்லை, சிறு வேலைகூட கிடைக்கவில்லை, மேலும் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகம் பெற்ற தகப்பனை குறிக்கும் என்பதால், ஜாதகருக்கும் ஜாதகரின் தகப்பனாருக்கும் ஒட்டு உறவு இல்லாமல் செய்தது, தனது தகப்பனார் வழியில் இருந்து பெற வேண்டிய  எந்த ஒரு நன்மையையும் ஜாதகர் பெற இயலாமல், அதிக இன்னல்களுக்கு ஆளானார்.

 ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகம், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 9ம் ராசியாக வருவதால், ஜாதகர் எந்த ஒரு வேலையை செய்தாலும் சம்பந்தபட்ட இடத்தில் இருந்து நர்ப்பெயரோ, முன்னேற்றமோ கிடைக்கவில்லை, கிடைத்தது அனைத்தும் அவமானங்களும், துன்பமும்தான், ஜாதகரை மேற்கண்ட விஷயங்கள் வெகுவாக பாதிப்பை தந்தது, ஜீவன ரீதியான வாழ்க்கையில் ஜாதகர் இதுவரை கடுமையாக போராடிக்கொண்டு வாழ்க்கையை நகர்த்த வேண்டிய சூழ்நிலையே ஏற்ப்பட்டது, எதிர்பாராத சந்தர்ப்பங்களில் ஜாதகரின் கௌரவம் பலரால் கடுமையாக பாதிக்கபட்டது, இதனால் வேலை இழப்பு, தொழில் வெற்றி கிடைக்காமல் ஜாதகர் கடுமையான இன்னல்களுக்கு ஆளாகி, விரக்தியின் உச்ச நிலைக்கே செல்லும் தன்மையை தந்தது, ஜாதகர் தனது தகப்பனார் வழியில் இருந்து எந்த ஒரு வழிகாட்டுதலும் பெற இயலாமல், தனி ஒருவராக வாழ்க்கையில் பல போராட்டங்களை சந்திக்க வைத்தது, ஜாதகர் ஜீவன வழியில் தொடர்பு பெற்ற அன்பர்கள் யாவரும் ஜாதகரை தனது சுய லாபத்துக்காக மட்டும் பயன்படுத்தி கொண்டனர், இவருக்கு எவ்வித சிறு நன்மையையும் செய்யவில்லை என்பது கவனிக்க தக்கது.

சொத்து சுகம், வண்டி வாகனம், நிலபுலன்கள் என்ற விஷயங்களை குறிக்கும் சுக  ஸ்தானமான நான்காம் பாவகம் ஜாதகருக்கு மிதுன ராசியில் வியாபித்து, அங்கு அமர்ந்த கேது பகவான், ஜாதகரின் சுக போகமான வாழ்க்கைக்கு, வேட்டு வைத்தார், பொதுவாக 10ம் பாவகம் தகப்பனாரையும், 4ம் பாவகம் தாயரையும் குறிக்கும், இவரது ஜாதகத்தில் இந்த இரண்டு பாவகமும் கடுமையாக பாதிப்பதால், ஜாதகர் சிறுவயது முதல் 10 மற்றும் 4ம் பாவக வழியில் இருந்து நன்மை பெற இயலவில்லை, பெற்றோரை பிரிந்து ஜாதகர் தனது வாழ்க்கையை எதிர்கொள்ளும் தன்மையை தருகின்றது என்றால், ஜாதகரின் நிலை என்ன ? என்பதை அன்பர்களின் சிந்தனைக்கே விட்டுவிடுகிறது " ஜோதிடதீபம் " பெற்றோரை பிரிந்த குழந்தையின் வளர்ப்பும், வாழ்க்கையும் எவ்விதம் இருக்கும், அடிப்படையில் கிடைக்க வேண்டிய பெற்றோரின் பாசமே கிடைக்காத, இந்த ஜாதகரின் வாழ்க்கைக்கு அடிப்படை காரணமாக அமைந்தது, இவரது ஜாதகத்தில் அமர்ந்த சாயா கிரகங்களான ராகுகேது என்றால் அது மிகையில்லை.

சுக ஸ்தானமான 4ம் பாவகம் கேது பகவானால் பாதிப்படைந்ததால், ஜாதகருக்கு குடியிருக்க ஒரு நல்ல வீடு இன்னும் அமையவில்லை, சிறந்த போக்குவரத்து வாகனம் அமையவில்லை, நிம்மதியாக உறங்குவதற்கு வசதியற்ற ஒரு சூழ்நிலையில், ஜாதகர் தனது இருப்பிடத்தை அமைத்துகொள்ளும் சூழ்நிலையை தந்துள்ளது, தான் கற்ற கல்வி வழியில் இருந்தும் ஜாதகரால் பெரிய அளவில் எதையும் செய்ய இயலாவண்ணம், சந்தர்பம் மற்றும் சூழ்நிலைகள் அமைந்தது, மிதுனம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 3ம் ராசியாக அமைவதால், ஜாதகரின் முயற்ச்சிகள் யாவும் படு தோல்வியை சந்தித்தது, ஜாதகரின் மனமும் மூடநம்பிக்கையால் முடங்கி போனது, பிற்போக்கு சிந்தனைகள் ஜாதகரின் வாழ்க்கையை வெகுவாக பாதித்து ஜாதகரின் முன்னேற்றத்தை கடுமையாக பாதித்தது, உபய காற்று தத்துவம் என்பதால் ஜாதகரின் அறிவு எவ்வித பலனும் தாராமல், பயனற்று போனது, ஜாதகரின் திட்டங்கள் வெறும் கற்பனையாகவே நின்றது, நடைமுறைக்கு வாராமல், அவரது எண்ணத்திலேயே சமாதி நிலையை கண்டது, ஜாதகரின் முயற்ச்சிக்கும் தன்மை 100% விகிதம் தோல்வியை பெற்றது.

பொதுவாக சுய ஜாதகத்தில் 4,10ம் பாவகங்கள் பெற்றோரை குறிப்பதால், பெற்றவர்களின் அமைப்பில் இருந்து ஜாதகர் பெரும் யோக வாழ்க்கையின் தன்மையை இது உறுதி செய்யும், ஆனால் இவரது ஜாதகத்தில் 4,10ம் பாவகங்கள் சாயா கிரகங்களான ராகுகேது பகவானால் பாதிக்க படுவதால், ஜாதகருக்கும் ஜாதகரின் பெற்றோருக்கும், நல்ல உறவு நிலையே அற்றுபோகும் சூழ்நிலையை உருவாக்கியது, ஜாதகரின் லட்சியம், எண்ணம், அறிவு திறனின் செயல்பாடுகள், இறை அருளின் கருணை அனைத்தையும் ஏக காலத்தில் இழந்து, வாழ்க்கையில் போராட்டத்தை அதிக அளவில் சந்திக்கும் தன்மையை தந்தது, தற்பொழுது நடைபெறும் சனி திசையும் ஜாதகருக்கு 4ம் பாவக பலனை ஏற்று நடத்துவது, ஜாதகரின் வாழ்க்கையில் உள்ள இன்னல்களையும், எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் கட்டியம் கூறுகிறது, நடைபெறும் சனி திசை, ஜாதகருக்கு கேது அமர்ந்த 4ம் பாவக பலனை ஏற்று நடத்துவது, உபய காற்று தந்து அமைப்பில் இருந்து அதிக துன்பங்களையும், சுக ஸ்தான அமைப்பில் இருந்து வரும் பிரச்சனைகளையும் காட்டுகிறது, ஜாதகர் சரியான அமைப்பில் உள்ள வீட்டில் குடியிருந்தால் மட்டுமே, சனி திசை ஜாதகருக்கு 30% விகித நன்மையை செய்ய கூடும், இல்லை எனில் ஜாதகரின் வாழ்க்கை கடுமையாக பாதிப்பதை தடுப்பது குதிரை கொம்பாகவே இருக்கும்.

குறிப்பு :

(சுய ஜாதகத்தில் சாயா கிரகங்களான ராகுகேது நல்ல வலிமையுடன் அமர்ந்தால், அந்த ஜாதகருக்கு அவர்கள் தரும் யோக வாழ்க்கை என்பது அளவில்லாத தன்மையுடன் இருக்கும், ஜாதகரின் யோக  வாழ்க்கைக்கு எவராலும் தடை போட முடியாது, யோக பலனின் தன்மை முழு வீச்சில் வேலை செய்யும், சுய ஜாதகத்தில் சாயா கிரகங்களான ராகுகேது வலிமை அற்ற தன்மையில் அமரும் பொழுது ஜாதகரின் வாழ்க்கை கேள்விக்குறியாக மாறுவதை, எவராலும் தடுக்க இயலாது, குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து ஜாதகர் அனுபவிக்கும் இன்னல்களுக்கு ஒரு வரைமுறை இருக்காது, ஒருவேளை நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ராகுகேது அமர்ந்த பாவக பலனை ஏற்று நடத்தாமல், இருந்தால் ஜாதகர் தப்பித்தார், ஏற்று நடத்தினால் ஜாதகரின் கதி அதோ கதிதான்.)


வாழ்க வளமுடன்  
ஜோதிடன் வர்ஷன் 
9443355696